நூல்கள் சில

498 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 1, 2022, 5:23:27 AM6/1/22
to மின்தமிழ்
source:   https://www.facebook.com/photo/?fbid=3317416605214672&set=a.1440211136268571

Radhakrishnan KS

bharathi.jpg

#கரிசல்_காட்டின்_கவிதைச்சோலை #பாரதி
——————————————————-
கரிசல் காட்டின் கவிதைச்சோலை என்ற நூல் பாரதியின் நூற்றாண்டு நினைவு தொகுப்பாக வெளியிடப்பட்டு பல நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நூலில் இடம்பெற்றுள்ள படைப்பாளிகளும்,தலைப்புகளும் பின் வருமாறு

#பொருளடக்கம்
1. உண்மைக் கவி /சுப்ரமண்ய பாரதி - ராஜாஜி ... 13
2. பாரதியும் தேச பக்தியும் - தமிழ்த்தென்றல் திரு வி க ... 15
3. இதய ஒலி - பெருந்தலைவர் காமராஜர் ... 17
4. பாரதி பாதை / ... 18
பாரதியார் பற்றி அண்ணா கூறியது என்ன? - அறிஞர் அண்ணா ... 27
5. நான் கண்ட பாரதி - வ உ சி ... 28
6. கண்ணன் பாட்டு - வ வே சு ஐயர் ... 31
7. கவிதைத் திறன் - டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் ... 33
8. பாரதியும் இலக்கியமும் - ப. ஜீவானந்தம் ... 36
9. தமிழினத்தின் சொத்து - எஸ். சத்தியமூர்த்தி ... 40
10. அக்கினிக்குஞ்சு! - கலைஞர் மு. கருணாநிதி ... 41
11. தேச பக்தி - கே. பாலதண்டாயுதம் ... 60
12. பாரதியும் புதுவாழ்வும் - பரலி சு. நெல்லையப்பர் ... 64
13. சுப்பிரமணிய பாரதியார் கவிதை - தலைமை நீதிபதி
மாதவையா அனந்தநாராயணன்... 69
14. பாரதியும் பட்டிக்காட்டானும்/ ... 79
அமரகவி /பாரதி மண்டபம் - கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளை ... 80
15. பாரதி நினைவு / தோற்றுப் போனார்! - நாமக்கல் கவிஞர் ... 81
16. பாரதி கண்ட புதிய பாரதம் - டாக்டர் ம.பொ. சிவஞானம் ... 83
17. பாடல்களுக்குச் சித்திரம்... - டி.எஸ். சொக்கலிங்கம் ... 91
18. பாரதியார் நாமம் வாழ்க - பாரதிதாசன் ... 93
19. குயில் பாடிய குயில் /மகாகவி பாரதி - கண்ணதாசன் ... 96
20. பாரதியின் தாக்கம் / பாரதிக்கு மணி மண்டபம் - சோ. அழகர்சாமி,
எஸ். காசி விஸ்வநாதன் ... 99
21. பாரதி பாடல்களில் பொதுவுடைமைக் கருத்துகள் - என். சங்கரய்யா ... 104
22. தமிழச் சாதியின் அறிவுத் தலைமை பாரதி - ஆர். நல்லகண்ணு ... 111
23. யுகப்புரட்சியை இனங்கண்ட பெருங்கவிஞன் - பழ. நெடுமாறன் ... 116
24. நான் கண்ட பாரதி - எஸ். வையாபுரிப் பிள்ளை ... 122
25. பாரதியின் நகைச்சுவை - பெரியசாமி தூரன் ... 125
26. சுதந்திரக் கவிஞர் - டாக்டர் மு. வரதராசனார் ... 129
27. விசித்திரமான கவிதை / உலக மகாகவி - வ ரா ...130
28. கத்தும் குயிலோசை - அ. சீனிவாசராகவன் ... 136
29. பண்டாரப் பாட்டு - ரா. பி. சேதுப்பிள்ளை ... 141
30. திலகர் யுகத்தின் குரல் - தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் ... 144
31. புதுயுகக் கவி - பி ஸ்ரீ ... 146
32. கடையத்தில் பாரதியின் நிகழ்வுகள் ... 148
33. பாரதியின் வர்ணனை - சுப்பிரமணிய பாரதியார் ... 155
34. ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் சரித்திரச் சுருக்கம் - ச. சோமசுந்தர பாரதி ... 156
35. அமரகவி பாரதி - பேராசிரியர் டாக்டர் மா. நன்னன் ... 164
36. பாரதி ஒரு முன்னுணர் ஞானி - டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் ... 170
37. பாரதியின் சக்தி வழிபாடு - மறைந்த தவத்திரு
குன்றக்குடி அடிகளார் ... 173
38. பாரதியின் இலக்கியக் கொள்கை - ரோசிரியர் டாக்டர்
ந. சுப்புரெட்டியார் ... 176
39. என் கணவர் - திருமதி செல்லம்மாள் ... 183
40. கம்ப நிலை! பாரதியைக் கண்டேன் - குமரி அனந்தன் ... 187
41. பாரதியின் நினைவைப் போற்றுவோம் - வைகோ ... 188
42. பாரதியாரின் சர்வ சமயம் - நீதிபதி எம்.எம். இஸ்மாயீல் ... 189
43. காலம் கொடுத்த பரிசு - ஔவை டி.கே. சண்முகம் ... 200
44. எனது முதல் சந்திப்பு! - குவளை கிருஷ்ணமாச்சாரியார் ... 204
45. பாரதியாரின் நண்பர்கள் - வெ. சாமிநாத சர்மா ... 206
46. சென்றுபோன நாட்கள்
ஸ்ரீமான் ஸி. சுப்பிரமணிய பாரதி - எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு ... 210
47. இலக்கிய வீரன் - எம். ஸத்ய நாராயணா ... 220
48. பாரதி காட்டிய வழி - திருலோக சீதாராம் ... 222
49. பாரதியின் கவிதா சக்தி /
முஸ்லிம் வேடத்தில் பாரதி! - ஆர். வாசுதேவ சர்மா .. 224
50. தமிழ் நெஞ்சம் மறவா பாரதி - கே.வி. ரங்கசாமி அய்யங்கார் ... 237
51. கவிஞர் போற்றிய கவிஞர் - கம்பர் - கம்பன் அடிப்பொடி சா. கணேசன் ... 238
52. கவிச் சொல் கேளீர் - சின்ன அண்ணாமலை ... 242
53. பாரதி நோக்கில் பெண்மை - தீபம் நா. பார்த்தசாரதி ... 245
54. பாரதியும் தாகூரும் - தொ.மு.சி. ரகுநாதன் ... 250
55. நாடகப் பண்புகள் - எஸ். வி. சகஸ்ரநாமம் ... 260
56. வசன கவிதை - நா. வானமாமலை ... 264
57. பாரதியாரிடம் கரிசல் வழக்குகள் - கு. அழகிரிசாமி ... 270
58. நாம் எல்லோருமே பாரதியின் வாரிசுதான் - ஜெயகாந்தன் ... 278
59. கண்ணன் பாட்டு - எம். ராதாகிருஷ்ண பிள்ளை ... 282
60. காரைக்குடியில் பாரதியார் - வை.சு. ஷண்முகன் ... 291
61. நான் கண்ட பாரதி - தொ. பாஸ்கரத் தொண்டமான் ... 293
62. இரு கவிகள் - க. கைலாசபதி ... 299
63. பாரதியார் யாப்பிலக்கணம் நன்கு அறிந்தவர் - அ.கி. பரந்தாமனார் ... 306
64. பாரதி - சி.ஆர். ஸ்ரீநிவாசன் ... 309
65. பாரதியார் பாடல்கள் - பொ. திருகூடசுந்தரம் ... 311
66. பாரதியின் கலை இலக்கியக் கோட்பாடு - எஸ். தோதாத்ரி ... 318
67. வாஞ்சிக்குப் பயிற்சி தந்தவர் - தி.சா.ராஜு ... 331
68. பாரதியார் உவமைகள் - பேராசிரியர் டாக்டர்
நா. பாலுசாமி ... 332
69. பாரதியும் இளங்கோவும் - பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி ... 336
70. கண்ணன் பாட்டில் கற்பனை வளம் - கலைமாமணி
நாரண. துரைக்கண்ணன் ... 342
71. மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் பாரதி - வல்லிக்கண்ணன் ... 349
72. பாரதி - கி. ராஜநாராயணன் ... 352
73. பாரதியின் தத்துவமும் இன்றைய சூழ்நிலையும் - தி.க. சிவசங்கரன் ... 353
74. மாயாவாதம் மண்ணுக்குத் தேவையில்லை - தமிழருவி மணியன் ... 359
75. பாரதியாரின் ஸர்வ ஜீவ பக்தி மதம்! - பெ.சு. மணி ... 364
76. பாரதியின் கவிதை /பாரதியின் சுயசரிதை - சுஜாதா ... 369
77. பாட்டுத் தமிழில் பாரதி தமிழ் - கவிஞர் காசி ஆனந்தன் ... 373
78. பாரதியின் மரணம் எழுப்பும் கேள்விகள் - மாலன் ... 376
79. வந்தே மாதரம் கீதம் பிறந்த வரலாறு - சீனி. விசுவநாதன் ... 379
80. பாரதி நோக்கில் - கு. ராஜவேலு ... 385
81. பாரதி எனக்காக எழுதிய ஒரு பாட்டு - ச.தமிழ்ச்செல்வன் ... 392
82. எந்தையும் தாயும் மகிழ்ந்து
குலாவி இருந்ததும் இந்நாடே! - டாக்டர் எஸ். பத்மநாபன் ... 396
83. பாரதி நூல்கள் முதற் பதிப்பு - ஒரு குறிப்பு - டாக்டர் விஜயபாரதி ... 401
84. துள்ளித் திரிந்த காலத்தில் நெல்லையில் பாரதி / ... 413
மகாகவி பாரதி நினைவு தினம்/பாரதி மண்டபம்/ வழக்கறிஞர் .. 420
எட்டையபுரம் பாரதி பிறந்த இல்லமும் தலைவர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
கலைஞரும் எனது பார்வையும்... ... 443
85. பாரதியும் இதழியலும் - மணா ... 445
86. நாடும் மக்களும் நலம் பெற ஆழ்வார்கள் - பாரதி - அ. சீனிவாசன் ... 450
87. காடனும் மாடனுமாகிய தமிழரின் கருத்துருவ
விளைபொருள் பாரதி - யவனிகா ஸ்ரீராம் ... 460
88. பாரதியின் பெண்ணியப் பார்வை - சுமதி ராமசுப்பிரமணியம் ... 463
89. பாரதியின் வாழ்வில் புதுச்சேரி - பாரதி வசந்தன் ... 472
90. அன்புள்ள சி. சுப்பிரமணிய பாரதி - இரா. மோகன் ... 486
91. பாரதியின் குறும்பு - ஆர். மீனா ... 491
92. பாரதியின் கல்வியியல் தொலைநோக்கு - முனைவர் ஆ.மணவழகன் ... 494
93. புரட்சியை வரவேற்ற புதுயுகக் கவிஞர் - தி. வரதராசன் ... 496
94. கிளிபோல் பேசுக! - எம்.என். சுப்பிரமணியம் ... 500
95. பாரதி பாடல்களை மீட்டெடுத்த ஓமந்தூரார்! - எஸ்.ராஜகுமாரன் ... 501
96. பாரதியார் தப்பிச் செல்ல உதவிய
சென்னைப் பிரமுகர் - மலர்மன்னன் ... 505
97. அபூர்வ ஆவணம்: பாரதி மொழிபெயர்த்த
கலைச்சொற்களின் கையெழுத்துப் பிரதி - பொன் தனசேகரன் (இன்மதி) ... 509
98. இந்திய விடுதலையும் இளைசைக் கவிஞனும் - பாரதி கிருஷ்ணகுமார் ... 515
99. பாரதி கனவு கண்ட பாரதம் எங்கே? - பிரேமா நந்தகுமார் ... 522
100. அக்கினி குஞ்சு - முனைவர் எஸ். பாலகிருஷ்ணன் ... 525
101. பாரதியும் காங்கிரசும் - செ. திவான் ... 530
102. பாரதி ரசித்த இயற்கை - கழனியூரான் ... 543
103. பாரதி - வள்ளத்தோள் கவிதைகளில் தேசியம் - சிற்பி பாலசுப்பிரமணியம¢ ... 548
104. இரட்டைப் பிரசவம் - அப்துல் ரகுமான் ... 557
105. தூர தரிசனம் - மீரா ... 560
106. அதோ! இமயமலை வணக்கம் செலுத்துகிறது! - நா. காமராசன் ... 566

எட்டயபரம் பாரதி மண்டப திறப்புவிழா கல்கி சிறப்பிதழ்:
——————————————————-
107. என்ன சேதி? ... 569
108. மகாகவியின் ஞாபகார்த்தம் (புகைப்படங்கள்) / ... 571
இதோ ஒரு அற்புதம்! - சாஸ்திரி ... 574
109. தமிழ் வளர்க்கும் கைகள் - டி.கே.சி. ... 577
110. வாழ்க அமரகவி - ஸ்ரீமதி தங்கம்மாள் பாரதி ... 580
111. பாரதி மண்டப மாலை - சுவாமி சுத்தானந்த பாரதியார் ... 582
112. அமரகவி பாரதியார் / பாரதி கைங்காரியம் - ஸ்ரீ பெரியசாமி தூரன் .. 585
113. தவமும் பலித்ததம்மா! / ... 589
தெய்வத் தமிழ் நாட்டினிலே - கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளை ... 590
114. கவிஞர் கண்ட செல்வம் - ஸ்ரீமதி செல்லம்மா பாரதி ... 591
115. பாரதி ஒரு வித்தகச் சித்தன் / பாரதி பாட்டு - நாமக்கல்
வெ. ராமலிங்கம் பிள்ளை .. 592
116. காசியிலிருந்து மனைவிக்கு கடிதம் - பாரதி ... 599
117. தமிழருக்கு / கவிகளுக்கு ஞாபகச் சின்னம் - பாரதியார் திருவாக்கு .. 600
118. பாவலர் பாரதியார் - ச. சோமசுந்தர பாரதியார் ... 603
119. பாரதி விரும்பிய பாரதி - சுத்தானந்த பாரதியார் ... 604
120. மெருகிட்ட பாரதியார் - கி.வா. ஜகந்நாதன் ... 608
121. பாரதி மண்டப நிதி ... 612

கலைகதிர் பாரதி நூற்றாண்டு விழா சிறப்பு மலர்-கோவை.
——————————————————-
122. நன்றி மறப்பது நன்று அன்று - ஜீ. வரதராஜ் ... 626
123. கண்ணன் பாட்டு - டாக்டர் தமிழண்ணல் ... 629
124. பாரதியும் அறிவியலும் - மணவை முஸ்தபா ... 638
•••
125. பாரதி-விளாத்திகுளம் சாமிகள்
126. கட்டுரையாளர்கள் குறிப்பு ... 642

#கரிசல்_காட்டின்_கவிதைச்சோலை #பாரதி #Bharathi
#பொதிகை_பொருநை_கரிசல்
#கதைசொல்லி

கே.எஸ்.இராதா கிருஷணன்

#ksrpost
1-6-2022.

தேமொழி

unread,
Jun 6, 2022, 3:43:10 PM6/6/22
to மின்தமிழ்



mari post.jpg

பாண்டியர் வரலாறு..
இராசமாணிக்கனார் என்ற தலைப்பைப் பார்த்தவுடனே..
அடடா இந்நூல் நம்மிடம் இல்லையே ..
என்று ஆர்வமுடன் வாங்கிவந்தேன்..
வீட்டில் வந்து பிரித்துப் பார்த்தால் உள்ளே இருப்பது சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பாண்டியர் வரலாறு.
பண்டாரத்தார் எழுதிய நூல் ஏற்கனவே என்னிடம் உள்ளது.
அட்டையில் ஆசிரியர் பெயர் இராசமாணிக்கனார்.
உள்ளே சதாசிவ பண்டாரத்தார்..
என்ன பித்தலாட்டம் இது....?
கடுப்பாகி பதிப்பகத்திற்கு போன் செய்தால் ..
போகவே மாட்டேங்குது...
ஐயா சரன் புக்ஸ்..
யாருப்பா நீ..?

தேமொழி

unread,
Jun 19, 2022, 3:20:04 PM6/19/22
to மின்தமிழ்
கல்கியின் பொன்னியின் செல்வன் திறனாய்வு
 - முனைவர் சுபாஷிணி
https://youtu.be/5bryZBkAYio

தேமொழி

unread,
Jun 19, 2022, 11:24:01 PM6/19/22
to மின்தமிழ்
eat vegetables.jpg

நோய்கள் தீர்க்கும் காய்கள்

 நூலாசிரியர்
மூத்த பத்திரிகையாளர்
ப. திருமலை

வெளியீடு
மக்கள் நல பதிப்பகம்
ஹானிமன் டவர்
வடக்கு ரத வீதி
திருப்பரங்குன்றம்
மதுரை 625005.

நூல் விலை ரூபாய் 220/-

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய பயனுள்ள நூல்.

"அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும்" என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம்.

நமது ஐம்புலன்களையும் இயக்குவது நாம் உண்ணும் உணவே. என்ன சாப்பிடுகிறோம் எப்படி சாப்பிடுகிறோம் எந்த அளவுக்கு சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே நமது உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் அதற்கு உரிய உணவு நாம் எடுத்துக்கொள்ளும் காய்கறிகள் தான்.

நம்மில் பெரும்பாலானவர்கள் காய்கறிகளின் அருமையை அறிந்திருக்கவில்லை.

இந்தியாவில் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு நோய், வைட்டமின் சத்து குறைபாடு, புற்றுநோய், உடல் பருமன் போன்றவை மிக அதிகரித்து வருகின்றன.
 நோய்களில் இருந்து விடுபட ஒரே வழி நமது உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும் தான். அந்த வகையில் நாம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியது காய்கள்தான்.


தலைமுறை தலைமுறையாக சமையலுக்கு நாம் பயன்படுத்தும் காய்கள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டிருப்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.

 சங்க காலத்திலே நாம் பயன்படுத்தும் காய்கறிகள் குறித்து நம் முன்னோர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

காய்கறிகள் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் ஏற்ற ஒன்று.  காய்கறி உணவுகள் ஒரு சௌகரியமான வாழ்க்கை முறையை தர வல்லவை.

 காய்கறிகள் அருமை குறித்து குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வது மிக அவசியமாகும்.  இன்றைக்கு நம் குழந்தைகளின் விருப்ப உணவாக துரித உணவுகளே உள்ளன. பர்கர் , பீட்சா போன்ற துரித உணவுகள் வெறும் ருசியாக மட்டுமே இருக்கும். இவ்வித துரித உணவுகளில் எவ்வித சத்துக்களும் இல்லை..

எனவே இந்த கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான தலைமுறையை நாம் உருவாக்க இயலும்.

 குழந்தைகளுக்கும் பதின்ம வயது மாணவ-மாணவியர்களுக்கு காய்கறிகளின் அருமையை பெருமையை எடுத்துச் சொல்வதற்கு இந்த நூல் பெருமளவில் உதவியாக அமைந்துள்ளது.

காய்கறிகள் பயன்பாடு குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன.  ஆனால் இந்நூல் மற்ற நூல்களை விட வேறுபாடு கொண்டது . நூல்ஆசிரியர் காய்கறிகள் குறித்துச் சொல்லும்போது அதில் உள்ள சத்துக்கள், அந்த சத்துக்களால் கிடைக்கும் பயன்கள்,  அந்தக் காய்கள் யாருக்கு ஏற்புடையது,  ஆகாது என்பதை விளக்கமாக தெரிவித்திருக்கிறார்.

 அத்தோடு அந்த காய்கள் கொண்டு செய்யப்படும் இரண்டு மூன்று ரெசிபிகளை கொடுத்துள்ளார்.

இதன் மூலம் காய்கறி உணவை அனைவரும் எடுத்துக் கொள்ள தூண்டும்   ஒரு முயற்சியே ஆகும்.

குறிப்பாக ஒவ்வொரு காயும் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து தெரிவித்துள்ளார் நூலாசிரியர்.

அவரைக்காய் - சிறார்களின் நினைவாற்றல் பெருக்கும், பாகற்காய் - சர்க்கரை நோயின் எதிரி, முருங்கைக்காய் - உடலுறுப்புகள் ஆரோக்கியம்,
பீன்ஸ் - நுரையீரலுக்கு பாதுகாப்பு, சுண்டைக்காய் - இரத்தத்தில் நஞ்சு நீங்கும், பீர்க்கங்காய் - எடை குறைப்பான், குடை மிளகாய் - மூட்டுவலிக்கான மருந்து, பிராக்கொலி  - ஒரு கப்பில் ஒரு நாளுக்கான சத்து, முட்டைக்கோசு   - மூளைக்கு காவலன்,  கோவைக்காய் - உடல் சோர்வை நீக்கும் கருணைக்கிழங்கு  -  மூல நோய்க்கு கருணை காட்டும்  இப்படியான ஒவ்வொரு காய்கள் குறித்தும் அதனுடைய பயன்பாடுகள் குறித்தும் மிக அருமையாக நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.


காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலின் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

 இதனால் இதயநோய் பாதிப்புகள் விரைவாக குறையும்.  வயிறு குடல் ஜீரணப்பாதை ஆகியவற்றை சரியாக இயக்கி மலச்சிக்கலை அகற்றும் அற்புத மருந்துதான் காய்கறி.  மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு அத்தனை நோயும் விரைவில் வரக்கூடிய ஆபத்து உண்டு.

 எனவே காய்கறிகளை தவறாமல் நாம் கணிசமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்

எல்லோருக்கும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.  நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை இருப்பதில் தவறில்லை.

 ஆனால் நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட நாள் வாழ்க்கை  தானாக சாத்தியப்பட வேண்டும் என்று நம்மில் பலர் நினைக்கிறோம்.

 ஆனால் அதற்கான எள்ளளவு முயற்சியை கூட நாம் செய்வதில்லை உலகம் காற்றால் நீரால் ஆனது போன்று நமது உடல் உணவால் ஆனது.

 உணவை போற்றுதல் மூலம் நம் உடலை நாம் நன்கு காக்க முடியும்.

 இன்றைக்கு காம்போ ஆபர் மூலம் அசைவ உணவு கிடைக்கிறது என்பதற்காக வாங்கி வெளுத்துக் கட்டுகிறோம்.

 ஒரு கப் அரிசி சாதம் எடுத்துக்கொண்டால் ஒரு கப் அளவிற்கு காய்கறிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 காய்கறிகளை பிடிக்காது என்று சொல்பவர்கள் தங்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டாவது காய்கறிகளை துண்டு துண்டுகளாக்கி அதனுடன் கொஞ்சம் மோர் உப்பு மிளகுத்தூள் ஆகியவற்றை குறைவான அளவிற்கு சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சத்தான ருசியான உணவாக இருக்கும்.

 அவரைக்காய், வெள்ளைப்பூசணி,  வெண்டைக்காய்,  பீன்ஸ் கோவக்காய்,  முட்டைகோஸ்,  நூல்கோல் இதுபோன்ற காய்கறி வகைகள் வேக வைக்காமல் மிக்ஸியில் அரைத்து ஜூஸ் செய்து குடித்தால் அல்லது மோரில் கலந்து குடிக்கும் பொழுது நம் உடலில் நுண்ணூட்டச் சத்து அதிகரிக்கும்.  

 குறிப்பாக குழந்தைகளுக்கு இதுபோல் செய்து தர ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படாமல் இருக்கும் என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

 மருந்து மாத்திரைகள் நம்மை காக்கும்.  அதே நேரத்தில் மருந்து மாத்திரைகளால் அனைத்தையும் சரி செய்ய முடியும் என்று எண்ண வேண்டாம்.

நம்மை காத்துக்கொள்ள வாய்ப்புகள் இருக்கும்போது ஏன் அதை தவற விட வேண்டும்.  காய்கறிகள் நமக்கு கிடைத்த அற்புதம் வரபிரசாதம்.

எனவே காய்கறிகளை தவறாமல் தேவையான அளவு எடுத்துக் கொண்டு உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்வோம்.

------ MJ. பிரபாகர்

தேமொழி

unread,
Jun 26, 2022, 4:54:49 PM6/26/22
to மின்தமிழ்
600 ரூபாயில் 'போரும் வாழ்வும்'

வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முன்பதிவு அறிவிப்பு.

10 ரூபாய் முன்பதிவுக் கட்டணம்

வாசக தோழமைகளே,
                                             வணக்கம். சீர் வாசகர் வட்டம் முக்கியமான நூல்களை தரமான பதிப்பில் அடக்க விலையில் மக்கள் பதிப்பாக கொண்டுவரும் பணிகளைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது  அனைவரும் அறிந்ததே.

ஜனவரி மாதம் 100 ரூபாய் விலையில் வெளியிட்ட 'புதுமைப்பித்தன் கதைகள்' நூல் ஒரே வாரத்தில் 5000 பிரதிகள் விற்பனையானது. பிப்ரவரி - மார்ச்சில் நடந்த 45 - ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் ரூபாய் 150 விலையில் 12800 பிரதிகள் விற்று தமிழ்ப் பதிப்புச்சூழல் வரலாற்றில்  சாதனை படைத்தது. வாசகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரிசளிக்கப்படும் நூலாக அது உள்ளது. விற்பனையில்  25000 பிரதிகளை அந்நூல் விரைவில் கடக்க உள்ளது.

அந்தப் பணியின்போதே சீர் வாசகர் வட்டம் வெளியிடும் அடுத்த நூல் குறித்து வாசகர்களிடம் பேராவல் எழுந்தது. நவீனத் தமிழ் இலக்கியத்தை புதுமைப்பித்தனில் இருந்து தொடங்கியதைப்   உலக இலக்கியத்தை டால்ஸ்டாயிடம் இருந்து தொடங்க உள்ளோம் என்ற அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்து பணிகளைத் தொடங்கினோம். தற்போது  அந்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மூன்று தனித்தனி கெட்டி அட்டை தொகுதிகளாக உலகத்தரமான கட்டமைப்பில் ஆங்கிலப் புத்தகங்களுக்கு நிகரான நூலாக்கத்தில்  சுமார் 2500 பக்கங்கள் கொண்ட அந்நூலின் அடக்கவிலையே  900 ரூபாய் வரை வரும். புத்தகத்திலும் இந்தவிலையே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் நன்கொடைகள் திரட்டப்பட்டு முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் 600 ரூபாய் என்ற விலையில் கொடுக்க உள்ளோம். ஒருவர் எத்தனைப் பிரதிகளை வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்திற்கும் ரூ. 10 முன்பதிவுக் கட்டணம்.

இன்றுமுதல் 10 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். புத்தகம் தயாரானதும் புத்தகத்துக்கான தொகையான 600 ரூபாயையும் அஞ்சல் செலவையும் செலுத்தினால் போதுமானது. சீர் வாசகர் வட்டத்தின் இந்த அரிய முயற்சிக்கு வாசக தோழமைகள் தோள் கொடுக்க வேண்டுகிறோம்.

மொத்தம் 2000 பிரதிகளே அச்சடிக்க உள்ளதால் முன்பதிவு செய்தவர்களுக்கே முன்னுரிமை. முன்பதிவு 2000 ஐக் கடந்தால் கூடுதலாக அச்சடிக்கப்படும். இதுபோன்ற பெரிய நூல்களை 'புதுமைப்பித்தன் கதைகள்' போல இந்த விலையில் எந்நாளும் கிடைக்கச் செய்வது சாத்தியம் அல்ல. உங்கள் பிரதிக்கு முந்துங்கள்.  நன்றி.

முன்பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்கள்
கவிஞர் தம்பி - 9566331195
தினேஷ் பழனிராஜ் - 9600652285
முனைவர் கண்ணம்மாள் - 9865252105

#போரும்_வாழ்வும்
#டால்ஸ்டாய்
#டிஎஸ்சொக்கலிங்கம்
#சீர்வாசகர்வட்டம்
#மக்கள்_பதிப்பு
#whatsappshare

தேமொழி

unread,
Jun 26, 2022, 7:28:16 PM6/26/22
to மின்தமிழ்

REVIEWS:
K.S. Nair’s
December in Dacca review:
War, conflict, and India’s role in Bangladesh’s liberation

KRA Narasiah
JUNE 23, 2022

December in Dacca-
The author discusses Operation Searchlight in detail, especially why and how the hour of the operation’s launch was advanced.

Putting the spotlight on the land, air and sea battles of 1971 and the huge human costs.

To mark 50 years of the 1971 Bangladesh Liberation War, several books have appeared in the past year and  December in Dacca by K.S. Nair is a refreshing addition to the list. It makes the point that India not only achieved an “overwhelming military victory” but it also put a stop to humanitarian crimes, and importantly, “in view of the lessons from later conflicts such as Afghanistan and Iraq, India withdrew all its military forces from the new country [of Bangladesh] within weeks...”

Mr. Nair precisely analyses the reasons that led to the Liberation War in Part I of the book, titled ‘The Gathering Storm’, ending with India’s official joining of the war in the wee hours of December 3, 1971. The next two parts, ‘Navigating the Storm’ and ‘After the (First) Storm,’ describe the battles and their diplomatic and political aftermath.

Wise voices
With west and east Pakistan geographically and culturally separated, by distance, language and customs, things came to a head after the 1970 general elections when Pakistani generals resisted the transfer of power to the Awami League, which had won in the east. There were wiser voices from among the Army but they were ignored by Pakistani authorities. As it dragged its feet against convening the National Assembly, the Awami League launched a programme of non-cooperation in East Pakistan. Unable to control the momentum, and fighting the reluctance of East Pakistani armed forces officers to take action, Lieutenant General Tikka Khan launched Operation Searchlight in late March 1971 to stamp out the Bengali nationalist movement.

The author discusses the operation in detail, especially why and how the hour of the operation’s launch was advanced. This was followed by the Pakistani Army terrorising the citizens. Soon the population turned against the army and the government.

Nair states that the killings that began on March 25, 1971, sparked the Bangladesh Liberation War, led to deaths of at least a “few million” people, resulted in the creation of the Mukti Bahini supported by the Indian government, and the forming of a provisional government in exile.

Breaking news
The atrocities in East Pakistan were never covered by the international media, but a Pakistani journalist of Goan origin, Anthony Mascarenhas, broke the story first in the  Sunday Times in London on June 13, 1971, titling it ‘Genocide’. Though there were appeals to India by East Pakistanis to intervene, India had to use a greater level of diplomacy before it stepped in.

Nair brings out yet another important angle here — there were doubts in the mind of India if independent East Pakistan could become a conduit for insurgent groups.

The war effort, under the title ‘The Balloon Goes Up’, records the details, starting from December 3, 1971, when Operation Chengiz Khan was launched by Pakistan in the west, targeting Indian airbases in places like Amritsar, Ambala and Jaisalmer.

The Indian Air Force went into action, proving its commitment and efficiency; though the air engagement is described in technical details, it is easily readable. Every chapter has Nair’s notes under ‘School boy reflections,’ which will be of interest to younger readers.

The western sea front effort is narrated in detail, including the loss of INS Khukri off the coast of Diu, the first and only Indian warship to be lost in war; and how young IAF officers tracked the submarine PNS Hangor which sank the Khukri.

The narration of the well-known Operation Trident and Karachi attacks reads like a war diary. In the final chapter, Nair recalls the events that took place both militarily and politically, including the assassination of Sheikh Mujibur Rahman and later developments. Like many others, Nair rues the fact that India did not utilise the tremendous advantage it gained from the victory and does not celebrate the moment often enough.

December in Dacca; K.S. Nair, HarperCollins, ₹699.

The reviewer served under the Eastern Naval command during the Bangladesh liberation war.

தேமொழி

unread,
Jul 6, 2022, 3:05:10 AM7/6/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=1929596380571380&set=a.376926109171756


திருமதி.செல்வி அருண்குமார்
Selvi Arunkumar அவர்களின் பதிவு.

chiraappalli mavata sozhar kala thaligal ainthu-Book on Trichy District Chola Temples.jpg
வணக்கம்!

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் மற்றுமோர் புதிய படைப்பு
விரைவில்...

**************************
சிராப்பள்ளி மாவட்டச் சோழர் காலத் தளிகள் ஐந்து
**************************
சிராப்பள்ளி மாவட்டக் கோயில்கள் தொடரில்
தவத்துறையும் கற்குடியும், எறும்பியூர் துடையூர் - சோழர் தளிகள், பாச்சில் கோயில்கள், சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு, சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் ஏழு எனும் ஐந்து நூல்களை அடியொற்றி வெளியாகும்

இந்நூல் அத்தொடரின் ஆறாம் தொகுதியாக மலர்கிறது.

◾சிராப்பள்ளித் தஞ்சாவூர்ச் சாலையிலுள்ள திருநெடுங்களம்

◾ சிராப்பள்ளி முசிறிச் சாலையிலுள்ள திருவாசி

◾சிராப்பள்ளிச் சிதம்பரம் சாலையில் தவத்துறைக்கு அருகிலுள்ள நகர்

◾சிராப்பள்ளிச் சென்னை நெடுஞ்சாலையில் சமயபுரத்திற்கு அருகிலுள்ள கண்ணனூர்

ஆகிய நான்கு ஊர்களிலுள்ள நெடுங்களநாதர், மாற்றுரைவரதீசுவரர், அப்ரதீசுவரர், போசளீசுவரர், முக்தீசுவரர் கோயில்கள் குறித்த விரிவான ஆய்வுக்கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

தமிழர்களின் வரலாறு இலக்கியங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், காலக் கணிப்புடனான வரலாறு கல்வெட்டுகளிலிருந்தே பெறப்படுவதால், அவை எழுதப்பட்டிருக்கும் கோயில்களைக் காப்பாற்றுவது நம் பெரும் பொறுப்பாகிறது. திருப்பணிக்குள்ளாகும் எந்தக் கோயிலும் தமிழர் வரலாற்றுச் செல்வமான கல்வெட்டுகளையோ, சிற்பங்களையோ இழந்துவிடாதவாறு காப்பாற்றுங்கள். தமிழர் நலம் நாடுவோர் முன்னிருக்கும் தலையாய கடன் அதுதான்.

உண்மைகளைத் தேடுங்கள் வரலாறு எங்கேயோ இல்லை! இல்லாமலும் இல்லை! அது நம்மைச் சூழ நம்மிடமே உள்ளது. அது நேற்றும் இருந்தது.. இன்றும் இருக்கிறது.. நாளையும் இருக்கும்... வரலாறு ஒன்றுதான் சாசுவதமானது... வரலாறு வாழ்க்கைக்காகவே...இல்லையில்லை... வாழ்க்கைதான் வரலாறு... அதனால் வரலாறாக வாழ முயல்வோம்..

ஐந்து பழங்கோயில்களின் வளமான வரலாற்றை வழங்கும் இந்நூல்

"சிராப்பள்ளி மாவட்டச் சோழர் காலத் தளிகள் ஐந்து "

மிக விரைவில் உங்கள் கைகளில்..
அன்புடன்,
இரா.கலைக்கோவன்.
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி.
*************************
நூலின் விலை ₹.400/- + கூரியர் கட்டணம்

எனது அலைபேசி, வாட்ஸ்அப் எண். 9345111790.

நூல் தேவைப்படுவோர் மேற்கண்ட வாட்ஸ் அப் எண் மூலம் உங்கள் பெயர், முகவரி அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.

நன்றி.
செல்வி அருண்குமார்

தேமொழி

unread,
Jul 13, 2022, 6:26:18 PM7/13/22
to மின்தமிழ்
source - 
July 8, 2022

chess.jpg

நன்றி: Murali Seetharaman அவர்களின் பதிவிலிருந்து. (மிக அருமையான‌ பதிவு. 💐. அந்த புத்தகம் படிக்கும்போது இவ்வளவு சுவாரஸ்யம் நமக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே)
சுமார் 82 பக்கங்களே கொண்ட புத்தகம்! அது இப்படி ஒரு மனிதனைக் கட்டிப் போடுமா?
செஸ் - சதுரங்க விளையாட்டை இப்படி சிலாகித்து- அதே நேரம் விறுவிறுப்பாக இப்படி ஒரு புத்தகம் நான் படித்ததில்லை!
முதல் பாகம் - ஒரு "மந்தமான" பையனைப் பற்றியது! அந்தப் பையனின் தகப்பனார் ஒரு மீனவர் - ஒருநாள் புயல் அவரைக் கடலுக்குள் வாரி சுருட்டிக் கொண்டது! அனாதரவாக நின்ற இந்த "மந்த புத்தி" பையனை அந்தச் சிற்றூரின் சர்ச் பாதிரியார் ஆதரவு தந்து வளர்க்கிறார்!
மந்தமான புத்தி என்றால் அப்படி ஒரு மந்தபுத்தி அவனுக்கு! பத்து வயதான பிறகும் தன் பெயரையே மெல்ல எழுத்துக் கூட்டிப் படிக்கவே நேரமாகும் அவனுக்கு! அவ்வளவு டல்! யாரிடமும் பழக மாட்டான் - தன் வயதொத்த சிறுவர்களுடன் விளையாட மாட்டான்!
ஆனால் பாதிரியார் இட்ட வேலைகளை - சர்ச்சை சுத்தம் செய்வது, சமையலறையில் பொருள்களை ஒழுங்குபடுத்துவது எல்லாம் பிசிறில்லாமல் செய்வான்!
பாதிரியார் தினமும் மாலை வேளைகளில் உள்ளூர் நண்பர் ஒருவரோடு செஸ் விளையாடுவார் - அதைப் பாதிரியார் தோளில் சாய்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் அந்த "மந்த" பையனின் ஓரே Activity!
ஒருநாள் மாலை ஆட்டத்தினிடையே பாதிரியாருக்கு அவசர அழைப்பு - ஊரில் யாரோ மரணம் - இவர் போய் FUNERAL SERVICE செய்ய வேண்டும் - பாதிரியார் பாதி ஆட்டத்தில் வெளியே போய்விடுவார்! இவன் மீதி ஆட்டத்தை ஆடி - பாதிரியாரின் நண்பரைத் தோற்கடித்து விடுவான்!
மறுநாள் இதைக் கேள்விப்பட்ட பாதிரியாருக்கு மிகுந்த வியப்பு - இவனா? தன் பெயரை எழுதிப் படிக்கவே தடுமாறும் இவனிடம் இப்படி ஒரு திறமையா? வியந்து போவார்!
அவனை உள்ளூர் செஸ் க்ளப்புக்கு அழைத்துப் போவார் பாதிரியார்! அந்த ஊரிலேயே சிறந்த செஸ் ஆட்டக்காரனுடன் இந்தப் பையனை ஆட வைப்பார்! 3 ஆட்டங்கள். ஒன்றில் தோல்வி - அடுத்தது டிரா - அடுத்ததில் வெற்றி என்று அசத்துவான் பையன்!
பிறகென்ன - குறுகிய காலத்திலேயே பெரிய பெரிய சாம்பியன்களை எல்லாம் தோற்கடிப்பான் - பதினெட்டு வயதில் "க்ராண்ட் மாஸ்டர்" ஆகிவிடுவான்!
ஆனால் அவனது ஒரே களம் - 64 கட்டங்கள் கொண்ட செஸ் போர்டும், எதிராளியுடையதும் சேர்த்து அதன் 32 COIN களும் மட்டும்தான்! அதைத் தவிர வேறெதுவும் தெரியாது! மற்றபடி அவன் அதே "DULL BOY" தான்!
சதுரங்கத்தில் "க்ராண்ட் மாஸ்டர்"- ஆன அவன், யாருடனும் பழகாத, தன் கையையே பார்த்தபடி சிந்தனையில் தனித்து மூழ்கிப் போகும் அதே டல் ஆசாமிதான்! அறிமுகப் படுத்தினால் "ஹலோ" சொல்லக் கூடத் தெரியாது!
அந்த "க்ராண்ட் மாஸ்டர்" இப்போது கப்பலில் பயணிக்கிறான்!
இங்குதான் கதை களம் மாறுகிறது! நமது கதாநாயகன் அந்த DULL BOY அல்ல! இதோ இப்போது வரப் போகிறான்!
கப்பலில் பயணிக்கும் அந்த OTHERWISE DULL BOY ஆன க்ராண்ட் மாஸ்டருக்கும் - ஒரு பணக்காரருக்கும் பந்தயம் வைத்து செஸ் போட்டி நடக்கிறது!
அந்தப் பணக்காரர் உட்பட இன்னும் 4 அல்லது 5 பேர் ஒரு டீம்! அவர்களுக்குள் கலந்து பேசி எது நல்ல "மூவ்" என்று யோசித்து ஒரு காயை நகர்த்துவார்கள்!
நமது DULL BOY யாருடனும் பழகாமல் கப்பல் தளத்தின் ஓரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவன்- இவர்கள் யோசித்து ஒரு "மூவ்" செய்தவுடன் சட்டென்று ஓடி வந்து தனது "மூவ்" செய்து விடுவான்!
நான்கைந்து ஆட்டங்கள் அந்தக் கோடீஸ்வரர் பெட் கட்டி ஆடி இழக்கிறார்!
இது கடைசி ஆட்டம்! மிகப் பெரிய தொகையை வைக்கிறார் அந்தக் கோடீஸ்வரர் - அவருக்குத் துணையாக நான்கைந்து பேர் Vs நமது "க்ராண்ட் மாஸ்டர்"- அதுதான் அந்த DULL BOY!
ஆட்டம் கடுமையாக நிலையை நோக்கி நகர்கிறது! அந்தப் பணக்காரர் தனது PAWN ஐ உயர்த்தி உயர்த்தி 7 ஆவது கட்டத்தை எட்டிவிட்டார்! இனி ஒரே மூவ்! 8 ஆவது கட்டத்தை எட்டிவிட்டால் அந்த PAWN ஐ எந்த PIECE ஆகவும் மாற்றலாம் - QUEEN ஆகவே ஆக்கலாம்! இதோ இவரது மூவ்! நகர்த்தும் முன்பு....
இங்குதான் நமது கதாநாயகன் அறிமுகம் ஆகிறான்! இனி இவனைப் பற்றியதுதான் கதை!
"நகர்த்தாதே! எட்டாவது கட்டத்துக்கு PAWN ஐ உயர்த்தினால் QUEEN ஆக்கலாம் வாஸ்தவம்தான்! ஆனால் அடுத்த 10 ஆவது மூவில் அவன் உன்னை 'செக் மேட்' செய்துவிடுவான்"- என்று குரல் கேட்கும்!
அந்தப் பணக்காரரும் அவரது 4 ஆலோசனை கூட்டாளிகளும் வியப்புடன் திரும்பிப் பார்ப்பார்கள்!
அந்தப் புதிய மனிதன் - ஒரு பேப்பரை எடுத்து 'உனது மூவ் - எதிராளியின் மூவ்' என்று எழுதிக் குறித்து - இப்போது நீ உன் PAWN ஐ QUEEN ஆக்க ஆசைப்பட்டு 8 ஆவது கட்டத்துக்கு உயர்த்தினால் அடுத்த பத்தாவது மூவில் நீ தோற்பாய் - என்று மூவ்களை வரிசையாக எழுதிக் காட்டுவான்!
மாற்றாக வேறு மூவ் செய்தால் எப்படி ஆட்டத்தின் போக்கு திசைமாறி - எதிராளிக்கு வேறு வழி இல்லாமல் டிரா கேட்பான் என்று சில "மூவ்" களை காகிதத்தில் எழுதிக் காட்டுவான்!
அதுவரை இவர்களைப் பற்றிய அலட்சியத்துடன் கப்பல் தளத்தில் ஓரத்தில் நின்றிருந்த "க்ராண்ட் மாஸ்டர்" ஆட்டத்தின் போக்கு மாறுவதைக் கண்டு ஐந்து மூவ் ஆன உடனேயே டிரா கேட்பான்!
இப்போது இந்தப் "புதிய மனிதனை" சூழ்ந்து கொண்டு - க்ராண்ட் மாஸ்டரையே பணிய வைத்த நீ யார்?- என்று மற்றவர்கள் கேட்பார்கள்!
அந்தப் "புதிய மனிதன்" தனது வாழ்க்கையைப் பற்றிச் சொல்வான்!
"நான் ஆஸ்திரியாவில் HABSBURG EMPIRE ஆண்டபோது அரச குலத்தவர்களின் வழக்கறிஞராக இருந்தேன். அரச குடும்பம் மட்டுமல்லாது, அவர்களது மந்திரி பிரதானிகள், பிரபுக்கள் என்று முக்கியஸ்தர்களுக்கும் நாங்கள்தான் வக்கீல்!
எங்களுடைய LAW FIRM நிறைய பொதுமக்களின் வழக்குகளை எடுத்துக் கொள்ளாது! சொல்லப் போனால் சிறிய பித்தளை போர்டுதான் அலுவலக வாயிலை அலங்கரிக்கும்! அதிகம் விளம்பரப்படுத்திக் கொள்ளாத ஆனால் மிக முக்கிய க்ளையண்ட்களைக் கொண்ட நிறுவனம்!
ராஜ வம்சத்தார் - பிரபுக்கள் - மந்திரிகள் இவர்களின் சொத்துக்களை உள்நாட்டிலும் இதர ஐரோப்பிய தேசங்களிலும் பராமரிப்பது - அவற்றுக்குரிய பத்திரங்கள், ஆவணங்கள் போன்றவற்றைத் தயாரிப்பது இதிலேயே கொழுத்த வருமானம் எங்களுக்கு!
ஆஸ்திரிய ராஜ வம்சத்தார் மீது தீராப்பகை கொண்டிருந்த ஹிட்லர் ஆஸ்திரியாவைக் கைப்பற்றினார்! ராஜவம்சத்தினரும் அவரைச் சுற்றியிருந்தோரும் பலர் கொல்லப்பட்டனர் - சிலர் தப்பியோடினர்!
ஹிட்லரின் நாஜிக்கள் எங்கெல்லாம் ராஜவம்சத்தினர் சொத்துக்களை வாங்கிக் குவித்தனர் என்பதைத் துருவித் துருவி ஆராய்ந்தனர்! ஆஸ்திரியாவைக் கைப்பற்றிய ஒரே வாரத்தில் என்னை மோப்பம் பிடித்துவிட்டனர்!
எங்கெங்கே எல்லாம் அரச குடும்ப சொத்துக்கள் உள்ளன என்பதை அறிய என்னையும் - என்போன்ற இதர சில அரச குடும்ப ஆடிட்டர்கள், அட்டார்னிகள் உதவி அவர்களுக்குத் தேவை!
எனவே எங்களைச் சித்ரவதை முகாமுக்கு அனுப்பி - விஷவாயுக் கூடத்தில் சாகடிக்க விரும்பாமல் - வியன்னாவின் ஹோட்டல்களில் அறைகளில் தங்க வைத்துப் பூட்டினார்கள்!
நான்கூட ஹோட்டல் அறை என்றால் சௌகர்யம் என்று நினைத்தேன்! ஆனால் "நாஜி" க்கள் செய்திருந்த ஏற்பாடு போன பிறகுதான் தெரிந்தது!
எனது அறையின் ஜன்னலில் நெருக்கமான கம்பிகள் வலைகள் போலப் பொருத்தப்பட்டு - ஜன்னலுக்கு சற்று வெளியே உயரமான சுவரும் எழுப்பப்பட்டு இருந்தது! காற்று வரும் வசதி மட்டும் உண்டு - எதையும் காண முடியாது!
பகலா, இரவா என்பதே தெரியாது! ஹோட்டல் அறைக்குள் ஒரு மின்சார விளக்கு மட்டும் எப்போதும் எரியும்!
அறையில் ஒரு கட்டில், மெத்தை, தலையண, போர்வை, குடிநீர் குடுவை, அறையுடன் இணைந்த பாத்ரூம் டாய்லெட் - அவ்வளவுதான்!
நாள் முழுக்க சுவரைப் பார்த்தபடி - உட்கார்ந்தோ படுத்தோ கிடக்கலாம்! மற்றபடி இன்று என்ன தேதி? அழைத்து வந்து எத்தனை நாள் ஆகி விட்டது? இரவா? பகலா? எதுவும் தெரியாது!
அறையில் காலண்டர், கடிகாரம் எதுவும் கிடையாது! பூட்டிய அறைக் கதவு இரண்டு மூன்று முறை திறக்கும்! "நாஜி" சீருடை அணிந்த SS படை ஆசாமி ஒருவர் வருவார்! மாற்று உடைகள், உணவு ஆகியவற்றை வைத்துவிட்டு அறையைப் பூட்டிவிட்டுப் போய்விடுவார்! எதுவும் கேட்க மாட்டார் - எதுவும் பேச மாட்டார்!
நேரம் தெரியாது! இரவா பகலா தெரியாது! எத்தனை நாள் ஓடியது தெரியாது! படிக்க செய்தித் தாளோ, புத்தகமோ கிடையாது! யாரும் பேச்சுத் துணை கிடையாது!
நான், கட்டில், மெத்தை, போர்வை, சுற்றி 4 சுவர்கள், கம்பி வலை போட்ட ஜன்னல்! இது ஒரு வகையான மென்டல் டார்ச்சர் என்பது நாள்பட நாள்படப் புரிந்தது!
இதில் திடீரென்று - அது இரவா, பகலா, எந்தக் கிழமை என்று தெரியாத காலத்தின் ஏதோ ஒரு பகுதியில் - என்னை அவ்வப்போது "விசாரணை" க்கு அழைத்துச் செல்வார்கள்!
ஒரு நீண்ட வராந்தா - இருபுறமும் துப்பாக்கி ஏந்திய நாஜி காவலர்கள் - வராந்தாவின் முடிவில் ஜன்னல்கள் மூடப்பட்ட அறை...
அதனுள்தான் நாஜி அதிகாரிகள் தங்கள் "விசாரணை" யை நடத்துவார்கள்! சுற்றிச் சுற்றி அதே கேள்விதான் - "அரச குடும்ப சொத்துக்கள்"- ஆனால் அந்தக் கேள்விகளுக்கு ஊடாகவே மிரட்டல்கள், கொச்சையான கேள்விகள், ஆபாசமான வசைகள்.... இப்படி நிறைய!
நான் முழு விவரங்களையும் சொல்லி முடித்துவிட்டால் - எனது "உபயோகம்"- முடிந்து போனால் - பிறகு நான் காலி! அடுத்து எனக்கும் சித்ரவதை முகாம்தான்! விஷவாயுதான்!
எனவே என்னால் முடிந்தவரை "இழுத்தேன்"- மாற்றி மாற்றி பதிலளித்தேன் - "தடுமாறினேன்"- கொஞ்சம் கொஞ்சமாக "விசாரணையை" இழுக்கடித்தேன்!
இழுக்கடித்து என்ன பயன்? மீண்டும் அதே தனிமை அறை - நாலு சுவர், ஒரு கட்டில், ஒரு மெத்தை, ஒரு போர்வை...
சுவரையே வெறித்துப் பார்த்துப் பார்த்து ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்தவன் போல் ஆனேன்! நாஜி காவலன், விசாரணை அதிகாரிகள், நாலு சுவர்... இதைத் தவிர ஏதோ ஒரு அன்னிய முகமோ - அச்சடித்த எழுத்தோ கண்ணில் படாதா? - என்று ஏங்கினேன்!
அந்தப் பொன்னாளும் வந்தது!
வழக்கம்போல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்! எப்போது அழைத்துச் செல்லப்பட்டாலும் அறையில் நிற்க வைத்துவிட்டு வாசலில் நாஜி படைக் காவலன் நிற்பான்!
விசாரணை அறையில் எனக்கு உட்கார அனுமதி இல்லை - சுவரில் நின்றபடி சாய்ந்து கொள்ளலாம்! விசாரணை என்று அழைத்துச் சென்று நிற்க வைத்துவிடுவார்கள்! இரண்டு மணி நேரமோ, மூன்று மணி நேரமோ நின்றபடி இருந்தால் அதிகாரிகள் மெல்ல வருவார்கள்!
அன்றும் அப்படித்தான்! வெளியே மழை என்பது மூடிய கண்ணாடி ஜன்னலின் வெளியே தெறித்த துளிகளின் மூலம் தெரிந்தது!
சுவரில் நான்கைந்து ஈரமான கோட்கள் கழற்றி மாட்டப்பட்டு இருந்தன! அதில் ஒன்றின் காலரில் இருந்து ஒரு சிறிய நீர்த்துளி குமிழ் போல ஆகி - மெல்லக் கீழே சொட்ட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது! அது சொட்டுமா? அல்லது கோட்டுக் காலரிலேயே பரவி ஈரமாக்குமா என்று எனக்கு நானே பெட் கட்டிக் கொண்டேன்! அந்த அளவுக்கு "வெளிக் காட்சி" எதையும் இத்தனைக் காலம் காணாமல் மனம் பேதலித்து இருந்தேன்! அப்பாடா! அது சொட்டிவிட்டது!
அடுத்த கோட்டின் மேல் எனது கவனம் தாவியது! ஆஹா! என்ன இது? அதன் பாக்கெட்டில் செவ்வக வடிவில் ஏதோ ஒரு சிறிய உப்பல் தெரிந்தது! ஏதோ புத்தகமோ? இல்லை சிறை விசாரணை அதிகாரியின் டைரியா? ஏதோ ஒன்று - அதை லவட்ட வேண்டும்! எழுத்து என்பதைப் பார்த்தே எத்தனை யுகமாயிற்று!
சுவரில் கால் மாற்றி சாய்ந்து கொள்ள அனுமதி உண்டல்லவா? காவலன் வெளியில்தானே நிற்கிறான்! மெல்ல சுவரில் சாய்ந்தபடி - நகர்ந்து அந்த கோட் பாக்கெட்டில் இருந்த - ஆமாம்! புத்தகம்தான்! - அதை கவர்ந்து எனது பேன்டுக்குள் செருகி பனியன் சட்டையை நன்றாக இழுத்துவிட்டேன்!
என்ன புத்தகம் அது? எதுவாக இருந்தால் என்ன? ஏதோ ஒரு புத்தகம்! விசாரணை முடியும் வரை பேன்ட்டுக்குள் செருகிய புத்தகம் கீழே விழாமல் சமாளித்து - அறைக்குத் திரும்பி - கதவு நாஜி காவலனால் பூட்டப்பட்டதும் - கட்டிலில் ஒருக்களித்த மாதிரி படுத்து புத்தகத்தை உருவி எடுத்தேன்!
அதற்குள் எத்தனை பரபரப்பு! அது சிறுகதைகள் அடங்கிய புத்தகமா? நாவலா? கவிதையா? சிறுவர்களுக்கான ரைம்ஸ் புத்தகமா? எதுவானாலும் பரவாயில்லை! தனிமைச் சிறையில் ஒரு துணைவன்! மயான அமைதியில் காகிதம் வழியே பேசும் ஒரு துணை!
ஆர்வத்துடன் எடுத்தால்...
அடச்சே! பக்கத்துக்குப் பக்கம் செஸ்போர்டின் கட்டங்கள்! பல சாம்பியன்கள் விளையாடிய ஆட்டங்கள்! a4, e4, e4 × f5, ...Rh5, B×Ne6... இப்படி என்னென்னவோ புரியாத குறியீடுகள்! வேறொரு சந்தர்ப்பமாக இருந்தால் "சனியனை" வீசி எறிந்திருப்பேன்!
ஆனால் இப்போது எனது ஒரே துணை இதுதானே? சிறு வயதில் செஸ் விளையாடி இருக்கிறேன் - சாம்பியன் இல்லாவிட்டாலும் இந்தக் குறியீடுகளும் அதற்கான மூவ்ககளும் அவ்வளவு பரிச்சயமில்லை!
மேலும் செஸ் போர்டுக்கும் - COIN களுக்கும் எங்கே போவது? ஒரு ஐடியா!
எனக்கு வழங்கப்பட்ட போர்வையில் கட்டங்கள் இருந்தன! மடித்து மடித்து அதை 64 கட்டம் வரும் வகையில் அமைத்துக் கொண்டேன்! உதிர்ந்து கிடந்த BREAD துணுக்குகள், ரொட்டியின் சிறு துண்டுகள் இவைதான் CHESS COINS! அதை வைத்து புத்தகத்தில் போடப்பட்ட மூவ்களை ஆடிப் பார்ப்பேன்! ஆரம்பத்தில் மிகவும் சிரமமாக இருந்தது!
உணவு வழங்க நாஜி காவலன் அறைப் பூட்டைத் திறக்கும் சப்தம் கேட்டால் செஸ் புத்தகத்தை தலையணை அடியில் ஒளித்துவிடுவேன் - அவன் அறையை சுத்தம் செய்யும்போது ப்ரெட் துணுக்குகள் போய்விடும்! நான் புதிய உணவில் இருந்து சில ப்ரெட் துணுக்குகளைப் பிய்த்து CHESS COIN ஆக்கிக் கொள்வேன்! மறுபடியும் போர்வைக் கட்டங்களையே a1, a2....h1, h2 இப்படி கணக்கிட்டு புத்தகத்தில் கண்டுள்ள கேம்களை ஆடிப் பார்ப்பேன்!
இப்படியே எத்தனை நாள் - எத்தனை மாதம் கழிந்ததோ நினைவில்லை! என்னுடைய ஒரே COMPANIAN அந்த செஸ் புத்தகம்தான்!
ஒரு கட்டத்தில் போர்வை - கட்டங்கள் - ப்ரெட் துணுக்குகள் எதுவும் தேவையற்றுப் போய்விட்டது!
நானே கண்ணைமூடி அந்தப் புத்தகத்தில் போடப்பட்ட கேம்களை - அவற்றில் ஒவ்வொரு காயின் நகர்வுகளை - மனக்கண் முன்னே ஆடிப் பார்க்கத் தொடங்கி விட்டேன்!
அந்தப் புத்தகத்தில் சுமார் 200 கேம்கள் இருந்தன - எல்லாம் பெரிய பெரிய சாம்பியன்கள், க்ராண்ட் மாஸ்டர்கள் ஆடிய கேம்கள்! மனப்பாடம்! மனப்பாடம்! அத்தனையும் "மனக்கண்ணிலேயே"- கொண்டு வந்து ஆடிப் பழகினேன்!
ஆட ஆட இந்த செஸ் விளையாட்டு வெறும் பொழுது போக்கல்ல! எவ்வளவு தர்க்க ரீதியானது! கற்பனை என்பதற்கு சிறிதும் இடம் தராமல் எதார்த்தமான திட்டமிடலை அடிப்படையாகக் கொண்டது! தினமும் அனுபவித்து அனுபவித்து பெரிய சாம்பியன்களின் கேம்களை "மனக் கண்" கொண்டே ஆடினேன்!
அது என் திட்டமிடுதலை செழுமைப்படுத்தியது! எதிரி என்ன செய்வான் என்ற எதிர்பார்ப்பைக் கூர்மைப் படுத்தியது!
நாஜி அதிகாரிகள் என்னை "விசாரணைக்கு" அழைத்து - சகட்டு மேனிக்கு வளைத்து வளைத்துக் கேட்டாலும் - தடுமாறாமல் தற்காப்பாக - கோர்வையாக - அவர்கள் நம்பும் வண்ணம் - பதில் சொல்வதற்கு இந்த "மனக் கண்ணில்" ஆடிப்பார்த்த செஸ் கேம் உதவிற்று!
இப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது! எனக்கு அந்தப் புத்தகத்தில் இருக்கும் அத்தனை கேம்களும் மனப்பாடம்! ஒரு கேம் முழுவதையுமே MOVE BY MOVE என்னால் சொல்ல முடியும்! ஒரு கேமின் 12 வது மூவ் இப்படி இருந்தால் அந்த கேமின் 43 வது மூவ் இப்படித்தான் இருக்கும் என்ற அளவு மனப்பாடம்!
ஏன் நானே WHITE ? நானே BLACK என்று இரு தரப்பையும் ஆடக் கூடாது? அந்த விபரீத எண்ணமே ஆபத்தாக முடிந்தது!
கவனியுங்கள்! செஸ் போர்டு கிடையாது! நிஜமான காய்கள் கிடையாது! எதிர்ப் பக்கம் போய் உட்கார்ந்து காய் நகர்த்துவது கிடையாது!எல்லாம் உங்கள் மனதுக்குள்தான்!
என்னுடைய "வெள்ளை" காயை நானே மனதுக்குள் நகர்த்திவிட்டு - பிறகு நானே மனதுக்குள் எதிர்ப்பக்கம் நகர்ந்து எனது "வெள்ளைக்கு" எதிராக எனது "கருப்பு" காயை நகர்த்த வேண்டும்!
நானே இரண்டாகிப் போனேன்! "வெள்ளை" ஆகிய நான்! என்னையே எதிர்த்து "கருப்பு" ஆகிய நான்! இப்படியே ஒரு நாளைக்கு இரண்டு ஆட்டம்! ஒரு கட்டத்தில் இந்த வெறி அதிகமாகி எனக்குள் நானே பிளவுண்டு போனேன்!
பிறகுதான் புரிந்தது! "யாரோ இருவர்" ஆடிய ஆட்டத்தை மனக் கண்ணில் ஆடிப் பார்ப்பது என்பது வேறு! நானே "இரண்டாகி" ஆடுவது என்பது வேறு!
ஒரு கட்டத்தில் சுயநிலை இழந்து - டெலிரியம் என்னும் நிலைக்கு ஆளாகி மயங்கி விழுந்தேன்!
எத்தனை நாள், எத்தனை வாரம் மயக்கத்தில் கிடந்தேனோ?
கண் விழித்த போது....
ஒரு மருத்துவமனையில் இருந்தேன்! ஒரு மருத்துவர் மிக இனிமையான குரலில் என்னிடம் கேட்டார்:
"நீங்கள் கணித பேராசிரியரா? அல்லது ரசாயன ஆராய்ச்சியாளரா?"
"ஏன் கேட்கிறீர்கள்?"- என்றேன்.
"இல்லை ஒரு வாரமாக டெலிரியம் - a4×b5, b6- b7, Na6 ×.... என்றெல்லாம் உளறியபடி இருந்தீர்கள். கணித நிபுணரோ, வேதியியல் ஆராய்ச்சியாளரோ என்று நினைத்தோம்"- என்றார்.
நான் எனது - தனி அறைச் சிறை - விசாரணை - செஸ் புத்தகம் கடத்தியது... எல்லாம் விவரித்தேன்.
அந்த மருத்துவர் நல்ல வேளை - "நாஜி"- இல்லை! எங்கள் புகழ்பெற்ற வழக்கறிஞர் குடும்பத்தைப் பற்றியும், எனது வியன்னா உறவினர்கள் ஒரு சிலரையும் அறிந்திருந்தார்!
"இப்போது நீங்கள் தேறிவிட்டீர்கள் என்று நான் சர்டிஃபிகேட் கொடுத்தால் - நாஜிகள் உங்களை மீண்டும் ஹோட்டல் தனியறைக்குக் கூட்டிச் சென்று அடைத்துவிடுவார்கள்! எனவே நீங்கள் இன்னும் சில வாரங்கள் இங்கே நோயாளியாகவே இருங்கள்! உங்களுக்கு சித்தப்ரமை இன்னும் தெளியவில்லை! ஓ.கே.வா?" - என்று சிரித்தபடி போய்விட்டார்!
பிறகு சில தினங்களில் ஹிட்லரின் கவனம் ஆஸ்திரியாவை விட்டு - சோவியத் ரஷ்யா மீது படையெடுப்பில் திரும்பிவிட்டது! நாஜிக்கள் ஊரைக் காலி செய்துகொண்டு புறப்பட்டனர்!
நானும் விடுவிக்கப்பட்டேன்!
ஆனால் அந்த டாக்டர் ஒரு எச்சரிக்கை செய்தார்:- "இனி ஒரு முறை கூட நீ செஸ் விளையாடவே கூடாது! உனது மூளை தாங்காது! மறுபடி மயங்கி விழுந்தால் காப்பாற்றுவது கடினம்!"
"இதுதான் என் கதை"- என்று முடிப்பான் அந்தப் புதிய மனிதன்.
உடனே அந்தக் கோடீஸ்வரக் கப்பல் பயணியான பணக்காரரும் - அவரது நண்பர்களும் - "இன்னும் ஒரே ஒரு கேம் - அந்தக் 'கிறுக்குப் பிடித்த' க்ராண்ட் மாஸ்டரிடம் விளையாடி அவனை நீங்கள் தோற்கடிக்க வேண்டும்"- என்று வற்புறுத்துவார்கள்! அந்தப் புதிய மனிதன் மறுப்பான்! மீண்டும் இவர்கள் வற்புறுத்த....
மறுநாள் அந்த DULL BOY - GRAND MASTER உடன், இந்தப் "புதிய மனிதன்" - தனக்கு மருத்துவர் அளித்த எச்சரிக்கையையும் மீறி ஆடி ஜெயித்தே விடுவான்!
"இன்னும் ஒரு கேம்"- என்று பழைய ஆர்வம் - அதுவும் அசல் போர்டையும் காய்களையும் கண்ட ஆர்வம் உந்தித் தள்ள - மருத்துவரின் எச்சரிக்கையை மீறி ஆடி...
எஸ்! அதுதான் முடிவு!
அற்புதமான கதை ! செஸ் விளையாட்டின் மீது அதை அறியாதவர்களுக்கும் ஆர்வத்தைத் தூண்டும் கதை! PENGUIN வெளியீடு! வாய்ப்பு இருப்போர் வாங்கிப் படியுங்கள்! அற்புதமான ஆங்கில மொழிபெயர்ப்பு!
Manthiramoorthi Alagu
Venkatachalam Kameswaran
மற்றும் புத்தகப் பிரியர்கள், செஸ் பிரியர்கள் கவனத்துக்கு....
(படித்து சுமார் மூன்று மாதங்கள் ஆகிவிட்டது - புத்தகம் என்னிடம் இல்லை - நினைவில் இருந்தே பல பகுதிகளை தந்துள்ளேன் - எனவே அசல் புத்தகத்தைப் படிக்கும் போது சில தகவல்கள் விடுபட்டோ வேறுபட்டோ இருக்கக் கூடும்)

தேமொழி

unread,
Jul 14, 2022, 2:06:55 PM7/14/22
to மின்தமிழ்
எம். எஸ். உதயமூர்த்தி (M.S. Udayamurthy , 1928 - 2013)
அவர்களின் நூல்கள் சில இங்கு  

இப்பொழுதெல்லாம் படிக்க நல்ல பல நூல்கள் 
விலையின்றியே கிடைத்தாலும் படிக்க நேரம்தான் கிடைப்பதில்லை  😞

தேமொழி

unread,
Jul 15, 2022, 10:54:19 PM7/15/22
to மின்தமிழ்
நிறைய நூல்கள்  😃🤩🥳
https://www.ulakaththamizh.in/book_all/
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்-நூல்கள் தளம் 
புத்தக வகைகள்:

1.உரைவேந்தர் தமிழ்த்தொகை
2.மயிலை சீனி.வேங்கடசாமி
3.கருணாமிர்த சாகரம்
4.இரா.இளங்குமரனார் தமிழ்வளம்
5.திரு.வி.க
6.கவியரசன் முடியரசன்
7.ந.மு.வே.நாட்டார்
8.பாவேந்தம்
9.புலவர் குழந்தை
10.சங்க இலக்கியம்
11.முதுமொழிக் களஞ்சியம்
12.செம்மொழிச் செம்மல்கள்
13.ஐம்பெருங்காப்பியங்கள்
14.பதினெண் கீழ்க்கணக்கு
15.யாழ்ப்பாண அகராதி
16.ந.சி.கந்தையா
17.வெள்ளிவிழா பேரகராதி
18.நீதி நூல்கள்
19.உவமை வழி அறநெறி விளக்கம்
20.மறைமலையம்
21.இராசமாணிக்கனார்
22.பாவாணர்
23.தொல்காப்பியம்
24.இராகவன் நூற்களஞ்சியம்
25.தமிழக வரலாற்று வரிசை
26.சாமிநாத சர்மா
27.சோமசுந்தர பாரதியார்
28.இராமநாதன் நூல்கள்
29.தமிழ் இலக்கணப் பேரகராதி
30.குறுந்தொகை விளக்கம்
31.தேவநேயம்
32.சுப்பு ரெட்டியார்
33.வ.சுப.மாணிக்கனார்
34.அப்பாத்துரையம்
35.தொல்காப்பிய உரைத்தொகை
36.வள்ளுவ வளம்
37.பாரத வெண்பா
38.உலகில் தமிழினம்
39.சிந்து நாகரிகம்
40.வரும்புயல் நாங்கள்
41.அலைகள்
42.சிறப்பு 6 நூல்கள்
43.ஈழம் தந்த இனிய தமிழ்க்கொடை
44.கல்லாடம்
45.கல்பனா
46.நெய்தல்
47.சிறப்பு 9 நூல்கள்
48.செம்மொழிச் செல்வங்கள்
49.தமிழக வரலாற்றறிஞர்கள்
50.யாழ்ப்பாணச் சரித்திரம்
51.யுத்தத்தால் வந்த யுத்தம்
52.சாமி.சிதம்பரனார்
53.வெள்ளை வாரணனார்
54.செம்மொழி சொற்பொருட் களஞ்சியம்
55.தலைச்சொல் அடைவு
56.உலகத்தமிழ்
57.முனைவர் பொன் கோதண்டராமன்
58.பாவானர் அறக்கட்டளைச் சொற்பொழிவு-7
59.நிறுவன வெளியீடுகள்


தேமொழி

unread,
Aug 11, 2022, 12:59:27 AM8/11/22
to மின்தமிழ்
tamil learning.jpg
tamil learning2.jpg

படிமுறைத்தமிழ் மொழியியலும் பயன்பாடும்

பக்கம் எண் 366,367,368 ..

நூலைப்பற்றி ......

                     - பெருமதிப்புக்குரிய ஔவை நடராசன்
                        முன்னாள் துணைவேந்தர்
                        தமிழ்ப் பல்கலைக்கழகம்
                        தஞ்சை

படிமுறைத்தமிழ் மொழியியலும் பயன்பாடும்

கருத்துரை
புலம் பெயர்தல் என்ற நிகழ்வு உலகெங்கும் அமைந்தது.

கல்வி, வணிகம், வாழ்வியல், அரசியல், அல்லல் எனப் பல நிலைகளில் இப்போக்கு மக்களுக்கு இயல்பாகி விட்டது. '

 திரைகடல் ஓடித் திரவியம் தேடு ' என்று ஔவையார் அறிவுறுத்திய கொன்றை வேந்தன், கல்வியில் முதற்பாடமாகும் என்பது நாடறிந்தது.

 ஏதோ திரைகடலுக்கு அப்பால் பொருட்செல்வம் குவித்தது போல மக்கள் ஏங்கி அலைந்தனர்.

' சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும்
 கொணர்ந்திங்கு சேர்ப்பீர் '

என்ற பாரதியார் நெறியுரை தான் நினைக்கத்தக்கது.

புலம் பெயர்ந்தோர் தாம் சென்ற நோக்கத்துக்கு மாறாகத் தாம் பெற்ற மக்கட் செல்வங்கட்குத் தமிழ் கற்பிக்க முயல்வது மருட்சியைத் தருகிறது.

பண்பாடு, மரபு, பாட்டன் - பாட்டியார் பரிவு, உறவுமுறை இவையெல்லாம் இளம் பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டாமா என்று வினவுகின்றனர்.

இந்நிலையில் திருமுறை வகுப்பு, பரதக்கலை, தமிழ்ப்பள்ளி முதலிய மன்றங்கள் புலம் பெயர்ந்தோர் பிள்ளைகளுக்கு கற்பிக்கின்றன.

 இப்பயிற்சிகள் ஒரு பருவம் கடந்த பின்னர் இளையோருக்குக் கசந்து விடுகின்றன.

இந்நிலையில் ஐம்பாதாண்டுகளுக்குப் பின்னர் தமிழர் கட்டிய திருக்கோயில்கள் என்ன பயன்பாட்டைப் பெறும் என்று அண்மையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது,

வாழ்வில் நூற்றுக்கு மூவர் கோயிற் பணிக்காக வருவார்கள், வழிபாடு அருகி விடும் என ஆய்வேடு வந்துள்ளது.

பெருந்தகை இராசரத்தினம் எழுதிய படிமுறைத் தமிழ் நூல் இளையோர் நெஞ்சில் இலக்கணத்தின் இயல்பை, உணர்வை உணர்த்தும் சீரிய நூலாகும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொற்செறிவும். பொருட்பொலிவுடனும், அறிவியற்கோட்பாட்டின்படி அமைந்த இலக்கணப் பெருமித்ததையும் தன்னகத்தே ஒருங்கே பெற்றதோடு, நாளும் மாறிவரும் இன்றைய அறிவியல் புதுமை வாழ்வில் இளமை மாறாது - இயல்பு திரியாது பொலிவுடன் மிளிரும் பெருமை பெற்றது நம் தமிழ்மொழி.

" இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன் "

என்னும் தமிழ் விடு தூது காட்டும் தொடர்கள் அமிழ்தைவிடச் சிறந்தது நம் தமிழ் மொழி என்றுரைக்கிறது.

 உலகின் செம்மொழிகளில் தமிழ் மொழி எனத் தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் போதிலும், தமிழர்களிடையே தமிழகத்தில் தொடங்கி அயல் நாடுகளிலும் பல்வேறு சூழலால் தமிழ்ப் பயன்பாடு குறைந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ் மொழி இலக்கணத்தைக் கற்பது மிகவும் அருமை என்று பலர் கருதத்தொடங்கியுள்ளனர்.

 தொன்மையில் மட்டும் இல்லை. அதன் தொடர்ச்சியிலுமே தமிழ் வளர்ச்சி உள்ளது என்பதை இன்றைய தலைமுறையினர் உணர வேண்டிய காலம் இது.

பெருந்தகை. சு. இராசரத்தினம் அவர்களால் இயற்றப்பட்ட " படிமுறைத்தமிழ் - மொழியியலும் பயன்பாடும் " எனும் இந்நூல் ஒலியின் தோற்றம் குறித்து மிகத் தெளிவாகவும் சுருக்காமாகவும் படத்துடன் வெளியிட்டுள்ளது சிறப்பு.

 இது இந்நூலைக் கற்கும் மாணவர்களுக்கு ஒலிப் பிறப்புக்குறித்து மிக எளிதாகப் புரிய வைக்கும் என்பதில் ஐயமில்லை .

ஆசிரியரின் இந்த அறிவு முயற்சி பாராட்டுதற்குரியது.

மேலும் ஒலியன்கள், மயக்கங்கள், தமிழ்ச் சொற்களின் அமைப்பு, சொல்வகைப்பாடு, ஒட்டுக்கள், வேற்றுமை, புணர்ச்சி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடனும் தெளிவான படங்களுடனும் பல இயல்களாகப் பிரிக்கப்பட்டு மிக அழகாக எழுதப்பட்டுள்ளன.

இந்நூலில் உள்ள ஒவ்வொரு இயலும் ஆசிரியரின் புலமை முயற்சியின் தேர்ந்த வெளிப்பாடாகும்.

பயனாக்கக் கல்வியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் மிகச் சரியான முறையில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவர் என்றே துணியலாம்.

 தமிழ்மொழி இலக்கணம் குறித்த அச்சத்தை விலக்குவதற்கான கலங்கரை விளக்கு இந்நூல் என்றால் மிகையாகாது.

 தமிழ்மொழியைக் கற்கும் ஒவ்வொரு மாணவரிடமும், தமிழ் மொழியைக் கற்பிக்கும் ஒவ்வொரு ஆசிரியரிடமும் இருக்க வேண்டிய தமிழ் இலக்கணக் களஞ்சியம் இது.

இந்த நூல் எடுத்தவர்க்கு ஆர்வமூட்டும் திறம் கொண்டது.

 பெருந்தகை திரு. சு. இராசரத்தினம் அவர்கள், தொடர்ந்து மொழியியல் நூல்களைத் தமிழுலகிற்கு வழங்க வேண்டுமெனவும் 2014 ஆம் ஆண்டு தொடங்கிய இவர்தம் தொண்டு மேலும் பல ஆண்டுகள் வெற்றி வாகை பெற்றுத் தொடர்ந்து பல்லாயிரம் மாணவர்களைச் சென்றடைய வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.

கானல் நீர் போலக் காட்சியளித்தாலும்,
கால ஓட்டத்தில் நீரூற்றுக்கள் இருக்கும்
என்று நாம் விழையலாம்.

வாழ்த்துக்களோடு,

ஔவை நடராசன்

தேமொழி

unread,
Aug 12, 2022, 5:32:36 AM8/12/22
to மின்தமிழ்
source: https://www.facebook.com/Thamizhannal.Facebook/posts/pfbid02Wcm6RpSpTnHWS8U3mEzzs1WJcoPp5Vmk6t211FjaAxbonoi4NgdTbLfehrgZpiHxl

ஆகத்து 12 - தமிழண்ணல் பிறந்தநாள் நினைவாக அவர்  நூல்கள்; மின்னாக்கம் செய்யப்பட்டு, தமிழில் தேடல் வசதியுடன்...
thamizhannal books.jpg
ஆகத்து 12 - தமிழண்ணல் பிறந்தநாள் நினைவாக அவர்  நூல்கள்; மின்னாக்கம் செய்யப்பட்டு, தமிழில் தேடல் வசதியுடன்...
-------------------------------------------------------------

தேமொழி

unread,
Aug 12, 2022, 7:49:47 PM8/12/22
to மின்தமிழ்
ஜீவபந்து ஸ்ரீபால் அருளிய நூல்கள்
https://jainworld.jainworld.com/JWTamil/jainworld/sripalbooks/inner.html

#    தமிழகத்தில் ஜைனம்
#    ஆதிபகவனும் ஆச்சாரிய வினோபாஜீயும்
#    ஐந்தவித்தான் யார்?
#    திருவள்ளுவர் வாழ்த்தும் ஆதிபகவன்
#    நில உடைமை உச்சவரம்புக் கொள்கை நமது பண்டைய நாகா#கமே
#    இளங்கோவடிகள் சமயம்
#    ஜைனமும் லெனினியமும்
#    திருக்குறள் அறிவுத்துறைகள் நூலில் நயினார் கோயில்
#    ஜைன சமயத்தின் தொன்மையும் தன்மையும்
#    சமணர்மலை செல்வோம்
#    பகுத்தறி வியக்கத்தின் பழமை
#    எம்மான் கோயில்
#    கோலாப்பூர் ஜைன மடமும் ஸ்ரீ சுவாமிகள் வரலாறும்
#    விசயமங்கலம் விசயம் செய்யுங்கள்
#    பொன்னுலக நாதனின் பூவுலகத் தொண்டர்கள்
#    நற்காட்சியின் மாட்சி
#    ஜீவகாருண்ய கீதங்கள்
#    சட்டம் பேசுகிறது!
#    அருகப்பெருமானைப் போற்றும் இன்னிசைப் பாடல்கள்
#    மகாவீரர் வரலாறு
#    ஜினர் மலைகள் அல்லது அறவோர் பள்ளிகள்
#    உலகம் புகழும் பாலிடானா யாத்திரை
#    வானவில் ஆராய்ச்சி

தேமொழி

unread,
Aug 18, 2022, 2:30:23 AM8/18/22
to மின்தமிழ்
74 ஆண்டுகள் பழமையான அம்புலிமாமா
1948 ambulimama.jpg
இணைப்பில் ... பார்க்க 

மேலும் பல இங்கே https://archive.org/search.php?query=Ambulimama
Ambulimama_Tamil_1948.pdf

தேமொழி

unread,
Aug 23, 2022, 4:32:07 AM8/23/22
to மின்தமிழ்
பேரா.முனைவர் தஞ்சை இறையரசன் அவர்களின்   
" சங்ககாலப்பெயர்க் களஞ்சியம்"
- என்ற  நூலை செம்மொழித்தமிழாய்வு நிறுவனம் வெளியிட்டது.

classical tamil names.jpg

தமிழ்மக்களின் பெயர்கள் அனைத்தும் இயற்கையோடு இயைந்தவை, பெயர்ச் சொற்கள் அனைத்துமே காரணப்
பெயர்களாய்ச் சிறப்புடன் விளங்குகின்றன. 

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" (தொல் பெய. 1). 
"மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா" (தோல் உரி.96) 
என்னும் இரண்டு நூற்பாக்களும் தமிழின் தொன்மையை நிறுவுவன.  
அந்த அடிப்படையில் சங்க காலத் தமிழ் மக்களின் பெயர்களும் தமிழ் மொழியின் தொன்மையையும் சிறப்பையும் உணர்த்துவன. 

இக்களஞ்சியத்தில் சங்க கால மக்கட் பெயர்கள் சங்க நூல்களிலிருந்து தொகுக்கப் பெற்றுள்ளன. இப்பெயர்களில் 
அரசர்கள், சிற்றரசர்கள், குறுநிலத் தலைவர்கள், வள்ளல்கள், வீரர்கள், பொதுமக்கள் என அனைவருடைய பெயர்களும்
சங்க இலக்கியப் பதிப்புகளில் காணப்பெறும் புலவர் அரசர் மக்கள் பெயர்கள் அனைத்தும் அகரவரிசையில் பாடவேறுபாடுகளுடன்
குறிக்கப்பெற்றுள்ளன.

"சங்கக்காலமக்கள் பெயர்க்களஞ்சியம்"
விலை: ௹700.
செம்மொழி நிறுவனம் 


தேமொழி

unread,
Aug 23, 2022, 5:26:01 PM8/23/22
to மின்தமிழ்


A comparative grammar of the Dravidian or South-Indian family of languages.jpg

நூலுக்கான அறிமுக உரை ,
மீண்டும் கால்டுவெல்லைத் தேடி,
மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை,
திராவிட அல்லது தென்னிந்திய குடும்ப மொழிகளில் ஒப்பிலக்கணம்,
ஆய்வுக்கு உதவிய நூல்கள் மற்றும் கட்டுரைகள் பட்டியல்,
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்,
அடி குறிப்புகள்

என 966 பக்கங்களில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் தொகுப்பாக அதன் அப்போதைய இயக்குனர் செ. சரவணன் இஆப அவர்களது அணிந்துரையோடு கூடிய வகையில் மொழிபெயர்ப்பாளர் சுப்ரமணியன் அவர்களது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது டாக்டர் கால்டுவெல் எழுதிய" திராவிட அல்லது தென்னிந்திய குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூல்.

இந்த நூல் இன்று கிடைக்கப்பெற்றேன்.

ராபர்ட் கால்டுவெல் அவர்களது அரும்பெரும் ஆய்வுப் படைப்பான இந்த நூலின் சில பக்கங்களை ஆங்கிலத்தில் முன்னர் வாசித்து இருக்கின்றேன்.

ராபர்ட் கால்டுவெல் அவர்கள் தமிழ் மொழி குறித்தும் தமிழர் பண்பாடு குறித்தும் ஆய்ந்த ஐரோப்பிய அறிஞர்களில் மிக முக்கியமானவர். தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருத மொழியில் இருந்து உருவாகவில்லை என்பதைத் தனது ஆய்வுகளில் வலியுறுத்தியவர்.

இந்த நூல் மொழியியல் ஆய்வில் நாட்டம் கொண்ட அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டிய ஒன்று.
விலை இந்திய ரூபாய் 1200 /-

-சுபா

 

தேமொழி

unread,
Sep 11, 2022, 2:54:20 AM9/11/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=3432474113662628&set=a.1631001437143247


சமகால தமிழ் தமிழர் மற்றும் தமிழகம் தொடர்பான மானுடவியல் சமூகவியல் பார்வையில் வரலாற்று ஆய்வில் மிக ஆழமான விரிவான வாசிப்பு மற்றும் ஆவணச் சான்றுகளுடன் மிகச் சிறப்பான முறையில் நூல்களை உலகளாவிய வகையில் தமிழ் மொழி மட்டுமல்லாது ஆங்கில மொழியிலும் வழங்கி இருப்பவர் ஆய்வாளர் டாக்டர் ஜெயசீலன் ஸ்டீபன் அவர்கள்.

அவரது நூல்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்புரைகளின் தொகுப்பாக புதுவை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் முனைவர் பா. ரவிக்குமார் அவர்கள் முயற்சியில் வெளிவந்திருக்கிறது இந்த நூல். இதில் எனது கட்டுரை ஒன்றும் இடம்பெறுகின்றது என்பது கூடுதல் மகிழ்ச்சி. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக இந்த நூல் வெளிவந்துள்ளது.

வரலாற்றுத் துறை மாணவர்களும் ஆய்வாளர்களும், தமிழ் தமிழகம் தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வாங்கி வீட்டில் வைத்து வாசிக்க வேண்டிய ஒரு நூல்.

-சுபா

Reviews on S. Jeyaseela Stephen books.jpg
----------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Sep 12, 2022, 5:01:31 PM9/12/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=10160372966061598&set=gm.5281025698612228&idorvanity=1444591182255718


reading_marathon2022.jpg

#reading_marathon2022
#22rm034
78 வது புத்தகம்

#ஆண்டுவிழாபோட்டி2022
#நாட்டார்_வழக்கியல்

புத்தகத்தின் பெயர்:ஆணவக் கொலை சாமிகளும் பெருமிதக்கொலை அம்மன்களும் 
ஆசிரியர்:ஆ.சிவசுப்பிரமணியன் 
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் 
மொத்த பக்கங்கள்: 93 
விலை: 110

ஆசிரியர் சிவசுப்பிரமணியன் நாட்டார் வழக்காற்றியல், அடித்தட்டு மக்கள் வரலாறு ஆகிய துறைகளில் பல நூல்களை இயற்றியுள்ளார்.. நாட்டார் வழக்கியல் பற்றிய நீண்டகால ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்வதிலும் ஆர்வம் கொண்டவர்...அவருடைய நாட்டார் வழக்காற்று துறையில் இவரது பங்களிப்பினை பாராட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கியுள்ளது..2018 ஆம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருதையும் வாங்கியுள்ளார்.. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் 2019 முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது..

தமிழ்நாட்டில் "கல்வி" என்பது கிபி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலும் மிகச் சிறுபான்மையினராக இருந்த உயர் ஜாதி மக்களுக்கே கிடைத்துக் கொண்டிருந்த ஒன்று...ஜாதி, அந்தஸ்து, அரசியல், ஆதிக்கம், பொருளாதார நிலை காரணமாக கல்வியறிவு என்பது கீழ்தட்டு மக்களுக்கும், பெண்களுக்கும் மறுக்கப்பட்டே வந்திருக்கிறது.. இந்நிலையில் சாதாரண பாமர மக்கள், கிராம விவசாயிகள், பெண்கள் ஆகியோரது இலக்கிய வெளிப்பாடுகள் என்பது வாய்மொழியாக்கங்களாகவே வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது.. அவ்வாறு வாய்மொழியாக வகுத்த, வெளிப்படுத்தப்பட்ட இலக்கியங்கள் நடைமுறையில் இருந்த பழக்கவழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் ஆகியவற்றையே பெரும்பாலும் வெளிப்படுத்துவானாக இருந்தன...

அவ்வாறு எழுத்து வடிவில் உருப்பெற்ற இலக்கியங்கள் யாவும் கல்வியறிவு பெற்ற உயர் குலத்தினருடைய, எழுத்தறிவு பெற்றவர்களுடைய கருத்துக்களாக மட்டுமே இருந்திருக்கின்றன... எனவே அடிநிலை மக்களின் துன்பங்கள், அவல நிலைகள் பெரும்பாலும் அவற்றில் இடம்பெறவில்லை...

"இந்து" என்ற ஒரு பொது அடையாளம் ஆங்கிலேயர்களால் நமக்கு வழங்கப்பட்டது... அதற்கு முன்பு இந்து மதம் என்ற ஒரு அமைப்பு இல்லை...இந்து என்ற ஒற்றை அடையாளத்தை வழங்கும் முயற்சியில் கடந்தகால வரலாறு மழுங்கடிக்கப்பட்டதுடன் மறக்கடிக்கவும் பட்டிருக்கிறது...

சைவம், வைணவம் போன்ற சமய கடவுள்கள் இந்த பூமியில் ஏதோ ஒரு தீமையை அழித்து நன்மையை நிலைநிறுத்துவதற்காக தோன்றியவைகளாகவே வரலாறு கூறுகிறது... ஆனால் நாட்டார் தெய்வங்கள் மனிதர்களாக மனிதர்களுடன் வாழ்ந்தவர்கள்...

// நாட்டார் தெய்வங்கள் எல்லையை கடந்து சமூக ஆய்வுக்கான தரவுகளில் ஒன்று என்ற தகுதியைப் பெற்றுள்ளன.. சமூக ஆய்வு என்று பொத்தம் பொதுவாக கூறுவதை தவிர்க்க விரும்புவோர் அடித்தள மக்களின் வரலாறு, விளிம்பு நிலையினர் வரலாறு, வரலாற்றில் இடம் மறுக்கப்பட்டோர் வரலாறு என்ற பெயர்களில் ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்//

நாட்டார் சமயமானது பூமியை காட்டிலும் அகலம் உடையது, ஆகாயத்தை காட்டிலும் உயரமானது, கடலைக்காட்டிலும் ஆழமானது என்று கூறுகிறார் ஆசிரியர்... வாய்மொழி வழக்காறுகளான பாடல்கள், கதைகள்,சடங்குகள், நம்பிக்கைகள் என்பனவற்றுடன் நாட்டார் வழக்கு என்பது மனிதர்களுடனும் மட்டுமன்றி விலங்குகளுடனும் பறவைகளுடனும் தாவரங்களுடனும் ஐம்பூதங்களுடனும் நெருக்கமான பிணைப்பை கொண்டது என்று கூறுகிறார்...

அதிகார வர்க்கத்தின் பகைமை, பொறாமை உணர்வு, மூடநம்பிக்கைகளின் காரணமாக நரபலி, குடும்பப் பிரச்சனைகள் (மண உறவு, சொத்துரிமை, முறையற்ற பாலுணர்வு) தோற்றுவிக்கும் பகைமையுணர்வு, போரில் இறந்தவர்கள், குற்றங்கள் புரிந்தவர்கள், கொள்ளையர்கள் காமுகர்கள் ஆகியோரிடம் இருந்து பிறரை காக்கும் முயற்சியினால், ஜாதிமீறிய காதலால், குடும்ப கவுரவம் போன்ற காரணங்களால் பொதுவாக கொலை செய்யப்பட்டு இறக்கிறவர்கள் இறைவனிடம் வரம் பெற்று பழிவாங்கும் குணத்துடன் செயல்படும் தன்மை கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்... இத்தன்மையே இவர்களை தெய்வத்தன்மையின் அடையாளமாக்குகிறது.. இவர்கள் வரம் வாங்குவதே தங்களை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக தான் என்பது மக்களின் நம்பிக்கை என்கிறார்... இப்படி இருந்து தெய்வமாக்கப்பட்டவர்கள் ஏற்கனவே உள்ள தெய்வங்களுடன் இணைந்து (சுடலைமாடன் இசக்கியம்மன் போன்ற தெய்வங்களோடு துணை தெய்வங்களாக) பொதுவெளியில் வழிபாட்டிற்கு உரியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.. இவர்களின் மூலங்களை (சிறு தெய்வங்கள்) அந்த கோவில்களின் தெய்வ வழிபாடு, விழா, சடங்கு, நேர்ச்சை மற்றும் சாமியாடிகளின் ஆட்டம் முறை போன்றவற்றின் மூலம் கண்டுபிடிக்கலாம் என்று கூறுகிறார் ஆசிரியர்...

இந்நூலில் 14 கதைகள் கூறப்பட்டுள்ளன.. எல்லா கதைகளுமே ஜாதியினால் நடைபெற்ற ஆணவக் கொலைகள், பெருமையின் காரணமாக கொல்லப்பட்டு தெய்வமானவர்களின் கதைகள், திருடிய குற்றத்திற்காக கொலைகள், சொத்து அபகரிப்புக்காக செய்யப்பட்ட கொலைகள், ஆள் மாறாட்டத்தினால் செய்யப்பட்ட கொலைகள் இப்படி இருக்கின்றன...

இந்த நூலானது இரண்டு வகையான கொலையில் உதித்த தெய்வங்களை அறிமுகம் செய்கிறது... ஆணவத்தன்மை கொண்டோரின் பகைமைக்கு ஆளாகி கொலையுண்டு தெய்வமானோரை மையமாகக் கொண்டது "ஆணவக் கொலைச்சாமிகள்" குடும்பம் மானம் காத்தல் என்ற பெயரில் பெற்றோர் உடன் பிறந்தோர் ஆகியோரால் கொலைகள் ஆகி பின்னர் தெய்வமாக்கப்பட்டவர்கள் "பெருமித கொலை அம்மன்கள்"...

குடியும் மானமும் இணைந்து பார்க்கப்படும் ஒரு சமூகத்தில் மணஉறவு என்பது மானத்துடன் இணைந்து பார்க்கப்படுவதில் வியப்பில்லை...நாட்டார் தெய்வங்களாக வழிபடும் அம்மன்கள் தந்தையின் மகள்களாக வாழ்ந்தவர்கள்தான்... மகளின் உயிரா?குடியின் மானமா? என்ற முடிவை எடுப்பதில் பெண்ணின் உயிரை விட குல/குடி மானமே பெரிது என்ற முடிவுக்கு வருகிறார்கள்... இதன் அடிப்படையில் இக்கொலைகளின் நோக்கம் பெருமித உணர்வே என்பதில் ஐயமில்லை என்கிறார் ஆசிரியர்...

ஆசிரியர் குறிப்பிட்டுள்ள "மாடத்தி அம்மன்" என்ற கட்டுரையில் மாடத்தி என்ற பெண் மாடத்தி அம்மன் ஆக உருவாகி இருப்பதற்கான கதையில் கற்பனையை தவிர்த்து மீண்டும் இக்கதையை ஆராய்ந்தோமேயானால் "கணவனை பிரிந்து வாழும் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த போலி மரபுகளை மீறியதாய்" (கணவனை பிரிந்து வாழும் மாடத்தி மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்குகளில் ஈடுபடக்கூடாது என்ற மரபினை மீறி ராட்டினத்தில் ஏறி சுற்றியதாக) குற்றம் சுமத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறாள்.. (பொய் குற்றம்) இந்த கதை பொய் குற்றம் சாட்டப்பட்டு அதற்கு பலியான ஒரு அவளை பெண்ணின் சோக கதையை பறைசாற்றுவதாகவே உள்ளது...

நாட்டார் தெய்வ வழிபாடுகள் ஒரு தனிமனிதன் குறித்த உண்மை கதையாக மட்டுமல்லாமல் சமூகத்தினை பற்றி அவர்கள் சார்ந்த மக்கள் பிரிவை குறித்த உண்மையாக அமையும் பட்சத்தில், அது கடந்த காலத்தின் வரலாற்று தரவுகளையும் நமக்கு அளிக்கிறது.. ஆனால் இவற்றின் அழிவு, இந்நாளில் இந்த தெய்வங்களை வழிபட்டு வந்தோர்களுடைய பொருளாதார வளர்ச்சி, இடப்பெயர்ச்சி மற்றும் கிராமங்கள் நகரமயமாதல் போன்ற காரணங்களால் நிகழ்கிறது.. இவற்றுடன் கல்வி வளர்ச்சியும் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்.. இவை வெறும் மரபுக்கதைகள் மட்டுமல்ல பழங்கால சமூக மரபுகளைப் பற்றிய ஆவணங்கள்!!

உலக கத்தோலிக்க வழிபாட்டு மொழியாக இருந்து வந்த மொழி இலத்தின் மொழி.. ஆனால் இன்று இலத்தின் மொழியை நீக்கிவிட்டு உலகமொழிகள் அவ்விடத்தை பிடித்துக்கொண்டது.. அதுபோலவே இங்கு தாய்மொழிகளுக்கு மாற்றாக சமஸ்கிருதம் இடம்பெறுகிறது..

// இப்போக்கு வலுப்பெறும்போது சமூக ஒடுக்குமுறைகளும் ஆணவ கொலைகளும் பெருமிதக்கொலைகளுக்கும் ஆளானோரின் உண்மை வரலாறு புராண வரலாறாக மாறுதலை அடைந்து சாரம் இழந்து போய்விடும். மரபு மீறிய கலகக்காரர்களாகவும், போராளிகளாகவும், எதிர்குரல் எழுப்பியவர்களாகவும் வாழ்ந்து மறைந்தோர் புராண பாத்திரங்களாக மாறிவிடுவர்..கடந்த காலத்தில் வாழ்ந்த முன்னோர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை இன்றைய தலைமுறைக்கு நினைவூட்டி கொண்டிருந்த தெய்வம், அருள் ஆசி வழங்கும் தெய்வமாகிவிடும். நமது தெய்வத்திற்கு "வடமொழி மந்திரம்" கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சி மட்டுமே எஞ்சி நிற்கும். பெற்றதோ நாம் புரிந்து கொள்ள இயலாத சமஸ்கிருத மந்திரங்களை.. இழந்ததோ நம் கடந்தகால வரலாற்று தரவுகளை//

மதுரைவீரன் கதையில் கீழசாதியினரால் வளர்க்கப்பட்ட மதுரைவீரன் உயர் சாதி பெண்ணை மணம் முடிக்கிறான், முத்துப்பாட்டான் என்ற பிராமண இளைஞன் வாலப்பகடை என்ற அருந்ததியரின் இரு மகள்களை திருமணம் செய்து கொண்டு அவர்களுடன் வாழ்ந்து வெட்டப்பட்டு இருந்து பின் தெய்வமாகிறான். சின்னத்தம்பி போன்ற கதைகளும் சாதிப் போராட்டத்தையே கருவாகக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உயர் சாதியினர் தாழ்ந்த சாதிக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டித்தும் கொடுமைக்கு உள்ளானவர்களைப் புகழ்ந்தும் கூறுவதாக அமைந்துள்ளன....

தேமொழி

unread,
Sep 22, 2022, 10:13:24 PM9/22/22
to மின்தமிழ்
kiraa books.jpg
கவிஞர் மீராவின் அன்னம்-அகரம், கிரா நூற்றாண்டுயொட்டி கதிர் கொண்டு வரும் கிராவின் 9 தொகுதிகள்.

தேமொழி

unread,
Oct 2, 2022, 1:20:40 AM10/2/22
to மின்தமிழ்
தமிழ் இணைய நூலகம்
Tamil Digital Library

tamildigitallibrary.jpg

தமிழ் இணையக் கல்விக்கழக மின்னூலகத்தில் 
அண்ணல் காந்தி குறித்த நூல்களைப் படித்துப் பயன் பெறுக 

Mohanarangan V Srirangam

unread,
Oct 10, 2022, 10:16:34 PM10/10/22
to mint...@googlegroups.com
சமீப காலமாகப் புதிய முறையில் சில நூல்களைத் தந்துகொண்டிருக்கிறேன். ப்ளாக்கில் எழுதி அதை அப்படியே பொருளடக்கப் பக்கம் உருவாக்கி, அதிலிருந்து தனித்தனித் தலைப்புகளுக்கு ஹைப்பர் டெக்ஸ்ட் ஆக்கித் தருவது. ஒரு பக்கத்தை வைத்துக்கொண்டு சொடுக்கினால் வரிசையாக முழுநூலும் படிக்க முடியும். இதில் கூடுதல் வசதி, மொபைலில் பார்ப்பதற்கும் வசதி செய்திருப்பதால், கையில் மொபைல் இருந்தால் போதும் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்யாமல் பொருளடக்கப் பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு படிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்களின் கவனத்திற்காக -- 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் முழுமையும் விளக்கத்துடன் 



ஸ்ரீஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்நம் 


ஒன்பது துதிகளுக்கான விளக்கம் 


***

தேமொழி

unread,
Oct 12, 2022, 5:58:10 PM10/12/22
to மின்தமிழ்
நெ. து. சுந்தரவடிவேலு
N.D.Sundara Vadivelu.jpg
பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு, அக்டோபர் 12, 1912 – ஏப்ரல் 12, 1993) தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின், துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் பல காலம் சிறப்பாகப் பணியாற்றினார்.இவரது பெற்றோர் துரைசாமி முதலியார், சாரதாம்பாள் தம்பதியினர்.
1954 ஆம் ஆண்டு, சுந்தரவடிவேலு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராசருடன் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இவற்றுள் முன்னுரிமை வகிப்பது இலவசக்கல்வி மற்றும் இலவசச் சீருடைத்திட்டங்கள் ஆகியவை ஆகும்.

இவர் காலத்தில் இலவச மதிய உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளிக் குழந்தைகள் புத்தக மூட்டைகளோடு மதிய உணவுக் கட்டுச்சோற்று மூட்டைகளையும் சுமந்து சென்று கொண்டு இருந்த நிலைமை மாறியது. இலவச மதிய உணவுத் திட்டம் மூலம் மாணவர்கள் சாப்பிட்டது மட்டுமில்லாமல், இலவசக் கல்வியும் கற்றனர்.

எல்லா ஊர்களிலும் தொடக்கப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. பின்தங்கிய பல குடும்பங்களிலிருந்து மாணவர்கள் கல்வி கற்றார்கள். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி பெருகியது. ஆயிரக்கணக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை எப்படிப் பணியமர்த்துவது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு அந்நாள் முதலமைச்சரும் பொதுக்கல்வி இயக்குனரும் எடுத்த முடிவு, தமிழ்நாட்டிலே படித்துவிட்டு வேலை கிடைக்காமல் துயருற்ற பலருக்கும் வேலை கிடைக்கச் செய்தது எனலாம். ஆயிரக்கணக்கானோர் ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.

சுந்தரவடிவேலு, 1954 ஆம் ஆண்டு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவியேற்றபோது பொது நூலக இயக்குநராகவும் பொறுப்பு ஏற்றார். நூலகத்தின் தேவையை உணர்ந்த இவர் தமிழ்நாடு முழுவதும் 400-க்கும் மேலான கிளை நூலகங்களை ஏற்படுத்தினார்.

சுந்தரவடிவேலு பள்ளிக் கல்வியில் திறம்படப் பணிபுரிந்ததைப் போலவே சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயல்பட்டார். பள்ளிப்படிப்புடன் நிறுத்திவிட்டுக் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் வேலைக்குச் செல்வோர் உயர்கல்வி பெறுவதற்காகக் கல்லூரிகளில் மாலை நேரக் கல்லூரிகளை அறிமுகப்படுத்தினார். கல்லூரி ஆசிரியர்களுக்கு மறுபயிற்சி எனப்படும் படிப்பைக் கொண்டு வந்தார்.

சுந்தரவடிவேலு பெரியவர்களுக்காக 30 நூல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக 13 நூல்களை வள்ளுவர் வரிசை என்னும் தலைப்பில் எழுதி உள்ளார். பெரியார் பற்றிய அரிய நூலொன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மூன்று தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார்

[நன்றி - கட்டுரை:  https://www.muthalankurichikamarasu.com/2022/10/121020226/]

டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

தேமொழி

unread,
Nov 17, 2022, 10:44:47 PM11/17/22
to மின்தமிழ்

ramayanam.jpg
"முந்நூறு இராமாயணங்கள்" ஒரு முறை வாங்கி படித்துவிடுங்கள் !

ராமர் பாலம் தொடர்பாக படம் ஒன்று வர போவதாக சொல்லுகிறார்கள் ஏற்கனவே ராமர் கோவிலும் கட்ட தொடங்கப்பட்டு 2024 நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில்
திறப்பு விழா என்று சொல்லுகிறார்கள் இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நான் ஒரு நூலை பரிந்துரை செய்கிறேன்.

"முந்நூறு இராமாயணங்கள்" என்பது தான் அந்த நூல். தமிழில் நமக்கு தந்து இருப்பவர் தோழர் ந .வினோத் குமார் Vinod Kumar

(மூல நூல் : ஏ .கே .ராமானுஜன் 16 மார்ச் 1929 – 13 ஜூலை 1993)

86 பக்கங்களை கொண்ட நூல் . இதனை மலர் புக்ஸ் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறார்கள்
டிசம்பர் 2021 இல் முதல் பதிப்பு வெளியானது இந்த நூலை 29.01.2022 அன்றே இணையதளம் வாயிலாக
வாங்கினேன் . சில நாட்களில் படித்து விட்டு குறிப்புகளையும் எடுத்து வைத்துவிட்டேன் .ஆனால் என்ன சிக்கல் என்றால் எழுதி வைத்த குறிப்புகளை காணவில்லை .

பல ஆண்டுகாலமாக ராமர் கட்டிய பாலம் இருக்கிறது என்று நம்ப சொல்லுகிறார்கள் நம்புகிறார்கள் . என்னுடைய வீட்டில் எழுதி வைத்த குறிப்புகள் எங்கே போய் விட போகிறது என்று தேடி தேடி பார்த்து போகட்டும் என்று தேடும் முயற்சியை கைவிட்ட பிறகு எதையோ தேட போக 'முந்நூறு இராமாயணங்கள்" நூல் தொடர்பான குறிப்புகள் கிடைத்தது . அதனை தோழர்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன் .

என்ன ? நம்முடைய தோழர் இப்படி இராமாயணம் பற்றி ஏதோ எழுதி இருக்கிறார் என்று நூலை வாசிக்க தொடங்கினால் இந்தியாவின் "ஆன்மீக அரசியலை" புரிந்துக்கொள்ள இந்த நூல் வழிகாட்டுகிறது.

கேரளாவில் மலையாளிகள் இராமாயணத்தை அவர்களின் மலையாள மாதமான "கர்கிடம்" மாதத்தில் படிப்பதை ஒரு சடங்காக வைத்து இருக்கிறார்கள் .இதை படித்தால் மோட்சம் அடைய முடியும் என்று நம்புகிறார்கள் வீட்டில் படிக்கப்பட்டு வந்த இராமாயணத்தை கோவிலுக்கு கொண்டு வருகிறது வி.எச்.பி --- ஆர் .எஸ் .எஸ் ஹிந்துத்துவ அமைப்புகள் .

மெல்ல மெல்ல கர்கிடம் மாதத்தை "இராமாயண மாதம்" என்று அறிவிப்பு செய்கிறார்கள் . இந்த மாதத்தில் ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள் . இதனை கண்டித்து CPM கட்சி ஆர் .எஸ் .எஸ் - வி .எச் .பி இராமாயணத்தை வைத்து அரசியல் செய்கிறது என்று பரப்புரையை தொடங்குகிறார்கள் .

மலையாளிகள் படிக்கும் இராமாயணம் அத்யாத்ம இராமாயணம் இதை எழுதியது துஞ்சத்து ராமானுஜ எழுத்தச்சன் என்பவர் .இது கிளி ஒன்று இராமாயணம் சொல்வதை போல அமைந்து இருக்குமாம் .

இராமாயணத்தை முன்னெடுத்து சென்றதில் இசுலாமியர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு
ஆனால் ஒரு காலத்தில் பாபர் -எதிர் -ராமர் என்று வந்து நிற்கும் என்று அவர்கள் அறிந்திருக்க வாய்ப்புஇல்லை .

குறிப்பாக மலேசியாவில் "வயாங் குலிட்" என்கிற பெயரில் கூத்து வடிவில் இராமாயணம் தொடர்பான சிலவற்றை நடத்துகிறார்கள் .

ராஜஸ்தான் மாநிலத்தில் துளசிதாசர் எழுதிய இராமாயணத்தை மக்கள் படிக்கிறார்கள் . கன்னட பகுதியில் நாகச்சந்திரா என்பவர் எழுதிய இராமாயணம் ,
தமிழகத்தில் கம்பர் எழுதிய இராமாயணம் என பல்வேறு மொழிகளில் இராமாயணம் பல விதமாக உள்ளது .

தந்தை பெரியார் 1929 இல் குடியரசு இல் இராமாயணம் குறித்து எழுதுகிற போது சீ .சீனிவாசய்யங்கார் என்பவர் சொல்லும் 24 வகை இராமாயணங்களை குறிப்பிடுகிறார் . இதில் ஜைன இராமாயணம் ராமனுக்கு இருந்த மனைவிகள் குறித்தும் . புத்த இராமாயணம் ராமன் -சீதை உறவு அண்ணன் தங்கை உறவு என்றும் இருக்கிறது .

இது போன்று பல்வேறு மாநிலங்களில் , மொழிகளில் , தென் ஆசியாவில் உள்ள பல வகையான இராமாயணங்களை ஆய்வுகளை செய்து ஏ .கே .ராமானுஜன் அவர்கள் 1987 இல் பிப்ரவரி மாதம் அயல்நாட்டு பல்கலைக்கழக மாநாட்டில் பேசுவதற்கு தொகுத்தது "Three Hundred Rāmāyaṇas: Five Examples and Three Thoughts on Translation" என்று வெளியானது . இது பல அரியச் செய்திகளை உள்ளடக்கியதாக உள்ளது .

இதனை தமிழில் மொழியாக்கம் செய்து இருக்கும் தோழர் வினோத் குமார் அவர்கள் தன்னுடைய முன்னுரை யில் கூடுதல் தகவல்களை நமக்கு வழங்குகிறார் .

ஏ .கே .ராமானுஜன் அவர்களின் மறைவுக்கு பிறகு "Three Hundred Rāmāyaṇas: Five Examples and Three Thoughts on Translation" டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்தில் இடம் பெற்று இருக்கிறது . 20008 இல் ABVP டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்த கட்டுரைகளை தடை செய்யக்கோரி வன்முறை நிகழ்த்த 2011 இல் பல்கலைக்கழக நிபுணர் குழு கட்டுரை பாடத்திட்டத்தில் தொடர அனுமதி வழங்கி இருக்கிறது .அதனை தொடர்ந்து பல்கலைக்கழக கல்வி குழவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 173 பேரில் 111 பேர்
எதிராக வாக்களித்து இந்த கட்டுரை நீக்கப்பட்டு இருக்கிறது . 2005 முதல் இந்த கட்டுரையை நீக்கும் சதி திட்டம் தொடந்ததாக தோழர் வினோத் குமார் குறிப்பிடுகிறார்.

தோழர் வினோத் குமார் மொழியாக்கம் செய்து வெளியாகி இருக்கும் இந்த நூல் , டெல்லியில் ஹிந்துத்துவ சக்திகள் எதிர்த்த கட்டுரைகளை உள்ளடக்கியது .

பல்வேறு இராமாயணங்கள் இங்கே உண்டு என்பதை வரலாற்று சான்றுகளோடு சொல்லுகிறது .

அடிப்படையில் இராமாயணம் - இராமர் என இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் இராமாயணம் பற்றி பல தகவல்களை வெளிக்காட்டுகிறது .

1987 வெளிவந்த கட்டுரையை மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்து இந்த கால சூழலுக்கு (2021-2022)ஏற்றார் போல முன்னுரை தந்து மிக முக்கியமான "கருத்தியல் ஆயுதம்" ஒன்றை நமக்கு தோழர் வினோத் குமார் வழங்கி இருக்கிறார் . அவருக்கு எம் நன்றிகள்

இந்திய ஆன்மீக அரசியலை புரிந்துக் கொள்ள "முந்நூறு இராமாயணங்கள்" உதவும் . அவசியம் நூலை வாங்கி படியுங்கள் .

அ .அசோக்
15.11.2022


தேமொழி

unread,
Nov 24, 2022, 5:38:54 PM11/24/22
to மின்தமிழ்
நன்றி தோழர் கரந்தை ஜெயக்குமார் 


தோழர் கரந்தை ஜெயக்குமார்  வழங்கியுள்ள அருமையான நூல் அறிமுகம் இது 
நூலாசிரியர் முனைவர் பா.ஜம்புலிங்கம் வரும் சனிக்கிழமை திசைக்கூடலில் உரையாற்றவிருக்கிறார் 


jambulingam book.jpg


தேடிச் சோறுநிதந் தின்று – பல
     சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
     வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
     கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல – நான்
     வீழ்வே னென்றுநினைத் தாயோ?

     இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், முண்டாசுக் கவிஞனின், இந்தப் பாடல் வரிகள்தான் என் நினைவிற்கு வரும்.
காரணம், வேடிக்கை மனிதராய் வீழ்ந்துவிடாமல், இப்புவியில், தான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை, அழுத்தமாய் விட்டுச் செல்ல, இவர் மேற்கொள்ளும் முயற்சிகள்.
     
     இவரது உழைப்பு.
     இவரது தேடல்.
     ஓயாத தேடல்.
     ஆய்வியல் நிறைஞர் ஆய்வுப் படிப்பிற்காகத் தேடினார்.
     முனைவர் பட்ட ஆய்விற்காகத் தேடினார்.
     ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுவிட்டார்.
     முனைவர் பட்டமும் பெற்றுவிட்டார்.
     தான் பார்த்துக் கொண்டிருந்த பணியில் இருந்தும், வயது முதிர்வு காரணமாக ஓய்வும் பெற்றுவிட்டார்.
     ஆனாலும் தொடர்ந்து, ஓயாமல் தேடிக்கொண்டே இருக்கிறார்.
     தனது குடும்பத்திற்காகவோ,
     தான் சார்ந்த சமூகத்திற்காகவோ,
     தான் சார்ந்த இனத்திற்காகவோ,
     இவர் தேடவில்லை.
     சுத்தமாய் சுயநலமற்ற தேடல், இவரது தேடல்.
     துளியும், தன்னலமற்ற தேடல், இவரது தேடல்.
     தேடலுக்கான, இவரது ஆய்வு எல்லையும் சிறிதல்ல.

     சோழ நாடு.
     முன்பிருந்த, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்.
    எதற்காக இந்த எல்லை?
     இந்த எல்லைக்குள் எதைத் தேடினார்?
     பௌத்தத்தைத் தேடினார்.

     தமிழகத்தில் காஞ்சிபுரத்திற்கு அடுத்து, சோழ நாட்டில்தான் பௌத்தத்தின் தாக்கம் அதிகம்.
     எனவே, சோழ நாட்டில் பௌத்தத்தைத் தேடினார்.
     சோழ நாட்டு எல்லைக்குள் இவர் தேடிய பௌத்தம் எது?
     கோயில்களா?
     விகாரைகளா?
     கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள்.
     விகாரைகள், புத்த பிக்குகள் தங்கி, மதம் சார்ந்தப் பணியாற்றிய இடம்.
     பூம்புகாரிலும், நாகப்பட்டினத்திலும் புத்த விகாரைகள் இருந்திருக்கின்றன.
     ஆனால், இன்று பூம்புகாரில் மட்டுமே, விகாரையின் எச்சம் மீதமிருக்கிறது.
     புத்த கோயில்கள் இல்லை.
     புத்த விகாரைகள் இல்லை.
     புத்த சிலைகள் மட்டுமே, பரவலாய் காணக் கிடைக்கின்றன.
     எனவே, புத்தர் சிலைகளைத் தேடினார்.
     தேடிக் கொண்டே இருக்கிறார்.
     நேற்று தேடினார்
     இன்றும் தேடுகிறார்.
     நாளையும் தேடுவார்.
     தேடித் தேடி, கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்.
     நூற்றிற்கும் மேற்பட்ட ஊர்களுக்கு நேரில் சென்று புத்தர் சிலைகளைத் தேடியிருக்கிறார்.
     காடு, மேடு, வயற்காடு, ஆற்றங்கரைகள் என இன்றைய நவீனத்துவத்தின் வெளிச்சம் கொஞ்சம்கூடப் படாத சின்னஞ் சிறு கிராமங்களில் எல்லாம் சுற்றித் திரிந்திருக்கிறார்.

     பேருந்துப் பயணம்.
     வாடகை மிதிவண்டிப் பயணம்.
     இரண்டும் இல்லையேல், நடைப் பயணம்.
     அசராத பயணமே இவரது வாழ்வாகிப் போனது.

     புத்தர், புத்தர்.
     ஒரே சிந்தனை.
     19 புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்.
     புத்தரைத் தேடிப்போய், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் கண்டுபிடித்திருக்கிறார்.
     நாகையில் ஒரு புத்தர் செப்புத் திருமேனியையும் கண்டுபிடித்திருக்கிறார்.

     புத்தர் யார்?
     சமணர் யார்?
     எப்படி அறிவது?
     நெற்றியில் திலகம் இருந்தால் புத்தர்.
     உடலில் ஆடை இருந்தால் புத்தர்.
     உள்ளங்கையில் தர்மச் சக்கரம் இருந்தால் புத்தர்.
     இவையெல்லாம் இல்லாவிட்டால் சமணர்.

     தேடிக் கொண்டே இருக்கிறார்.
     கடந்த முப்பது ஆண்டுகளாகத் தேடிக்கொண்டே இருக்கிறார்.
     2017 இல் பணி நிறைவு.
     ஆனாலும் தேடிக் கொண்டே இருக்கிறார்.
     இவரது முப்பது ஆண்டுகாலத் தேடல்.
     முப்பது ஆண்டுகால கண்டுபிடிப்புகள்.
     ஒரு நூலாய் மர்ந்திருக்கிறது.

சோழ நாட்டில் பௌத்தம்
முனைவர் பா.ஜம்புலிங்கனாரின்
வாழ்வு
முழுமையாய்
முகம் காட்டுகிறது.

     நூலினைக் கையில் ஏந்தும் பொழுதே, புத்தச் செப்புத் திருமேனியைக் கைகளில் தாங்கும் ஓர் உணர்வு, உள்ளத்தே எழுந்து, பொங்கி வழிகிறது.
     நூலின் இடது பக்கங்களில் முழுமையாய் புத்தர் சிலைகள்.
     வலது பக்கங்களில், அந்தந்த புத்தர் சிலை பற்றியத் தகவல்கள்.
     தலையில்லாத புத்தர்.
     உடலின்றி, தலை மட்டுமே மீதமிருக்கும் புத்தர்.
     காலவோட்டத்தில், சமயக் காழ்ப்புணர்ச்சியுடன் சிதைக்கப்பட்ட புத்தர் சிலைகள்.
     பார்க்கப் பார்க்க, படிக்கப் படிக்க மனதை வேதனை வாட்டுகிறது.
     இவரால் கண்டுபிடிக்கப்பட்ட, மீசையுடன் கூடிய, உலகின் ஒரே ஒரு புத்தர் சிலையினைக் காணும்பொழுது, மனதில் மகிழ்ச்சி எழுகிறது.
     துபாய் புத்தரைக் கண்டுபிடித்திருக்கிறார்.

     ஒரு ஊரில் இருக்கும், இந்த புத்தர் சிலையில், காலை வேலையில், கழுத்தில் மாலை, புத்தம் புது மாலை இருந்தால், அந்த ஊரைச் சார்ந்த யாரோ, துபாய்க்குப் போகிறார்கள் என்று பொருள்.
     துபாய் புத்தர்.

     ஒரு ஊரில், இருக்கும் புத்தர் சிலையை, திருமணம் ஆகாத பெண்கள் சுற்றி வந்து, புத்தருக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
     விரைவில் திருமணம் ஆகிறது.
     திருமணத்திற்குப் பின், கணவரோடு சேர்ந்து வந்து, புத்தரோடு ஒரு புகைப்படம்.
     இரு புகைப்படங்களும் வீட்டின் சுவற்றில் இடம் பிடித்து, புத்தரின் பெருமையினை இன்றும் சொல்கின்றன.

     இந்துக்களால் வணங்கப்படும் புத்தர்.
     இந்துக்களால் போற்றப்படும் புத்தர்.
     பக்கத்துக்குப் பக்கம் சுவை கூடுகிறது.
     இதுநாள் வரை சிற்பம் என்றாலும், சிலை என்றாலும் ஒன்று என்றுதான் நினைத்திருந்தேன்.
     இந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறது, இந்த நூல்.
     புத்தர் சிற்பங்கள்.
     புத்தர் சிலைகள்.
     இந்நூலின் இரு அத்தியாயங்கள் இவை.
     கோயில் சுவர்களில், கோயிலின் கருவறையின் வெளிச் சுவற்றில் செதுக்கப் பெற்றிருப்பவை சிற்பங்கள்.
     தனியாக, முப்பரிமாண உருவத்தில் அமர்ந்திருப்பவை அல்லது நிற்பவை சிலைகள்.

     தஞ்சைப் பெரிய கோயிலில், கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோயிலில், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் இடம் பிடித்திருக்கும், புத்தர் சிற்பங்களைத் தெளிவானப் படங்களோடு, இவர் காட்டும் பொழுது வியப்பு ஏற்படுகிறது.
     இந்து கோயில்களில், பௌத்த சிற்பங்கள்.
     எத்துணைமுறை இந்த கோயில்களுக்குச் சென்றிருப்பேன்.
     ஆனால் ஒருமுறை கூட, இச்சிற்பங்களைக் கண்டதில்லையே எனும் எண்ணம் சுடுகிறது.
     காரணம், எது கண் சாதாரணக் கண்.
     எனது பார்வை மேலோட்டப் பார்வை.
     ஆனால், இவரது கண் ஆய்வுக் கண்.
     இவரது பார்வை ஆய்வுப் பார்வை.

சோழ நாட்டில் பௌத்தம்
ஒவ்வொரு பக்கத்திலும் இடம் பெற்றிருக்கும்
ஒவ்வொரு படமும் அழகு, தெளிவு.

     இந்நூலுக்காகப் புகைப்படும் எடுப்பதற்காகவே மீண்டும் ஒருமுறை பயணித்திருக்கிறார்.
சோழ நாட்டில் பௌத்தம்
நூல் என்று
எளிமையாகக் கூறிவிட முடியாது.
ஆவணம்.
சோழ நாட்டு பௌத்தம்
 பற்றிய,
அசைக்க முடியாத, மறுக்க முடியாத
ஒரு வரலாற்று ஆவணம்.
மீண்டும் சொல்கிறேன்.
இந்நூல்
இவரது வாழ்நாள் உழைப்பு.

     தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், ஒரு சாதாரண தட்டுச்சு சுருக்கெழுத்தாளராக நுழைந்து, தன்னைத் தகவமைத்துக் கொண்டு, இனி தன் வழி பௌத்த வழி என அறுதியிட்டு, உறுதியாய் முடிவெடுத்து, எம்.ஃ.பில்., ஆய்வில் பௌத்தம், முனைவர் பட்ட ஆய்வில் பௌத்தம், தன் வாழ்நாள் ஆய்வே பௌத்தம், பௌத்தம் என புத்தரின் காலடிச் சுவடுகளைத் தேடுவதையே, தன் வாழ்நாள் பணியாக சிரமேற்கொண்டு செயலாற்றிவரும்,

முனைவர் பா.ஜம்புலிங்கனாரைப்
பாராட்ட வார்த்தைகள் இல்லை.
சோழ நாட்டில் பௌத்தம்
இன்னும் பல நூறாண்டுகள் கடந்தாலும்,
முனைவர் பா.ஜம்புலிங்கனாரின்
பெயர் சொல்ல
இந்த ஒரு நூல் போதும்.
சோழ நாட்டில் பௌத்தம்
அவசியம் அனைவரும்
வாசித்து அறிய வேண்டிய,
உணர வேண்டிய வரலாற்று ஆவணம்.
படித்துப் பாருங்கள்.
புதிய பார்வை கிடைக்கும்.
புத்தம் புது புரிதல் பிறக்கும்.


சோழ நாட்டில் பௌத்தம்
படிமம்,
புது எழுத்து வெளியீடு,
2/203, அண்ணா நகர்,
காவேரிப் பட்டினம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்- 635 112
தமிழ்நாடு.
editorpu...@gmail.com
98426 47101
63742 30985

தேமொழி

unread,
Nov 29, 2022, 12:20:48 AM11/29/22
to மின்தமிழ்
சேலம் தாலந்தீர்த்த செழியன்


செழியதரையர்கள்
ஆறகழூர் அருகே உள்ள சின்னசேலம் என்ற பகுதியை தலைமையாக கொண்டு 17 ஆம் நூற்றாண்டில் செழியதரையர்கள் என்ற குறுநில தலைவர்கள் ஆட்சி செய்துள்ளனர்.
இவர்களைப்பற்றி பெரியதாக தகவல் கிடைக்கவில்லை. சின்னசேலம் சிவன் கோயிலில் இவர்களின் உருவச்சிலை உள்ளது.
தாலம் தீர்த்த செழியன் என்பது இவர் பெயர். சின்னசேலம் பகுதிக்கு அடிக்கடி வரலாற்று ஆய்வுக்கு செல்லும் போது தாகம் தீர்த்தாபுரம் என்ற ஊரை கடந்து செல்வேன். அந்த ஊர் பெயருக்கான விளக்கத்தை ஊர் மக்களிடம் கேட்ட போது யாருக்கும் தெரியவில்லை. சரி தாகம் தீர்க்க ஏரி வெட்டி கொடுத்திருப்பாங்க, அதனால் தாகம் தீர்த்தாபுரம் என பெயர் வந்திருக்க கூடும் என நினைத்தேன்.
ஆனால் இன்று சேலம் தாலந்தீர்த்த செழியன் மஞ்சரி என்ற நூல் கிடைக்கப்பெற்றேன். தாலந்தீர்த்த செழியனை பாட்டுடைத்தலைவனாக கொண்டு இந்த மஞ்சரி இயற்றப்பட்டுள்ளது.
இவர் பெயரில் உருவாக்கப்பட்ட ஊர்தான் தாலந்தீர்த்தபுரம். அந்தப்பெயர் மருவி இப்ப தாகந்தீர்த்தாபுரம் என மாறி விட்டது.
செழியதரையன் பிரபந்தங்கள் (1986)
1986ஆம் ஆண்டு வெளிவந்த ‘செழியதரையன் பிரபந்தங்கள்’ என்னும் இப்பதிப்பு நூல் ஆறு சிற்றிலக்கியங்களின் தொகுப்பு நூலாகத் திகழ்கிறது. இதில் கங்காரதச் செழியன் பேரில் திருவாணி வாது (104 விருத்தங்கள்), திருவேங்கடச் செழியன் நன்னெறி (43 கட்டளைக் கலித்துறைகள்), தாகந்தீர்த்த செழியன் கோவை (75 கட்டளைக் கலித்துறைகள் மட்டும் - குறை நூல்), கங்காதரச் செழியன் வண்ணம் (குறைநூல்), தாகந்தீர்த்த செழியன் பிள்ளைத்தமிழ் (103 பெரிய ஆசிரிய விருத்தங்கள்), அந்தாலந்தீர்த்த செழியதரையன் மஞ்சரி (காப்பு வெண்பா 1, கண்ணிகள் 395, கலிவெண்பா 1) என ஆறு சிற்றிலக்கியங்கள் குறிப்புரையுடன் இடம்பெற்றுள்ளன. அனைத்து நூல்களுக்கும் தனித்தனியாகச் சொல்லடைவு இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறு சிற்றிலக்கியங்களின் ஈற்றில் குறிப்பிடப்பெற்றுள்ள அந்தாலந்தீர்த்தான் மஞ்சரி மூலம் மட்டும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாய்வின் ஏழாம் தொகுதியில் 1978ஆம் ஆண்டு ஒரே ஏட்டின் துணையுடன் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டது. இந்தத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்பிற்கு அந்தச் சுவடியுடன் அதற்கு 40 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பெற்ற மற்றொரு சுவடியும் கிடைத்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்பில் உரையும் எழுதப்பட்டுள்ளது.
இந்த மஞ்சரி ஒன்றைத் தவிர ஏனைய ஐந்து சிற்றிலக்கியங்களும் முதன் முறையாக உரையுடன் இப்பதிப்பில் வெளியாகியுள்ளன. பாட நிர்ணம், உரை, சொல்லடைவு முதலிய பதிப்புப் பணிகளைப் புலவர் ப.வெ. நாகராசன் அவர்கள் செய்துள்ளார். பதிப்பாசிரியர் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களின் விரிவான முகவுரை ஒன்று இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளது.
நற்றிணை மூலமும் உரையும் - எடுத்துக்காட்டுப் படிவம் (1986)
கடவுள்வாழ்த்து 1, நூற்பாடல்கள் 9 ஆகப் பத்துப் பாடல்களுக்கான நற்றிணை - எடுத்துக்காட்டுப் படிவம் ஒன்று பேராசிரியர் முனைவர் த.கோ. பரமசிவம் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1986ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
இந்நூல் பின்வரும் 11 பகுதிகளைக் கொண்டதாக அமையத் திட்டமிடப்பட்டது.
1. தலைப்பு, பாட்டு எண், திணை - கூற்று
2. மூலம்
3. ஆசிரியர் பெயர்
4. பழங்குறிப்பு
5. பொருள்கோள் முறை
6. மரபு தழுவிய பொழிப்புரை
7. கருத்துரை
8. அருஞ்சொற்பொருள்
9. சிறப்புக்குறிப்பு (இறைச்சி, உள்ளுறை, பாடத்தேர்வுக் குறிப்புகள்)
10. மேற்கோளாட்சி
11. ஒப்புமை (பாடவேறுபாடு - ஒப்புநோக்கு அட்டவணை), தொடரடைவு, சொல்லடைவு
என்ற சிறந்த ஆய்வு முறையில் வெளியிடத் திட்டமிடப்பட்டு இத்திட்டப்பணி நிறைவுறாமல் எடுத்துக்காட்டுப் படிவத்தோடு நின்றுவிட்டது.
-----------------------


selam thalam theerttha sezhiyan manjari.jpg
"சேலம் தாலந்தீர்த்த செழியன் மஞ்சரி" நூலை 
தமிழ் இணையக் கல்விக்கழகம் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்:


தேமொழி

unread,
Nov 29, 2022, 4:53:21 PM11/29/22
to மின்தமிழ்


joc now in tamil.jpg

ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் Journey of a Civilization புத்தகம் தமிழில் வருகிறது. விரைவில் வெளியீட்டு நாள் அறிவிக்கப்படும். புத்தகத்தின் முன்பதிவு தொடங்குகிறது. முன்பதிவு செய்பவர்கள் தள்ளுபடி விலையில் புத்தகத்தைப் பெறலாம்.

தேமொழி

unread,
Dec 7, 2022, 12:54:05 AM12/7/22
to மின்தமிழ்
"Priya Kumari’s Leaf Talks Peace…teaches children the importance of living in harmony with nature and with all forms of life. I hope that it will contribute to a better awareness of the responsibility each of us has to protect our environment."  –​His Holiness The Dalai Lama

leaf talks.jpg
Leaf Talks Peace
$12.99 – $17.99

Words by Priya Kumari
Art by Anusha Santosh
Foreword by HH The Dalai Lama

An enchanting picture book that playfully explains Buddha’s message of interdependent origins of all life to help raise cooperative and compassionate global citizens. What the Buddha saw in a peepal leaf—cosmic harmony—has been retold lyrically by an imaginary character, Harmony—a leaf of the Bodhi tree.


Recommended Age    4-8yrs
No. Of Pages    36 pages
Language    English
Dimensions    10 x 10 inches
ISBN    9781953384232 (Paperback), 9781953384249 (Hardcover)
Binding    Paperback, Hardcover

தேமொழி

unread,
Dec 17, 2022, 3:13:51 AM12/17/22
to மின்தமிழ்
On Sat, 17 Dec 2022 at 04:44, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
“Journey of a Civilization” Book Study
Zoom live link:

--------

On Friday, December 16, 2022 at 11:26:31 PM UTC-8 drchandrabose wrote:
இந்த நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டோ, மூல நூலாகவோ கிடைக்கிறதா? 

அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை

--------

இங்கு மொழிபெயர்ப்பு நூல் குறித்த தகவல் உள்ளது 

ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் Journey of a Civilization புத்தகம் தமிழில் வருகிறது. விரைவில் வெளியீட்டு நாள் அறிவிக்கப்படும். புத்தகத்தின் முன்பதிவு தொடங்குகிறது. முன்பதிவு செய்பவர்கள் தள்ளுபடி விலையில் புத்தகத்தைப் பெறலாம்.

#RMRL #joc #indus2vaigai #IRC #indusvalleycivilization #books

joc.jpg
-------------------------------------------------
Journey of a Civilization: Indus to Vaigai Thread Bound 
Available @ 
Roja Muthiah Research Library
Bharathi Puthakalayam
&
Amazon

joc2.png

__________________________________________________________________________________________

Dr.Chandra Bose

unread,
Dec 17, 2022, 3:53:06 AM12/17/22
to mint...@googlegroups.com
தமிழில்  இந்நூல் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

இதன் மூலம் இந்நூலின் ஆய்வுத் தகவல்கள் கூடுதலான எண்ணிக்கையில் மக்களைச் சென்றடையும்.

அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a440ff43-c797-420f-9a69-6c9743604f7an%40googlegroups.com.

தேமொழி

unread,
Dec 19, 2022, 8:11:47 PM12/19/22
to மின்தமிழ்
பார்க்க:  https://www.facebook.com/photo/?fbid=10223287198473027&set=a.10202035150265104

Rajesh Kochhar Book.jpg
THANKS Bhakthavatsala Bharathi
நான் அண்மையில் வாசித்து முடித்த மிக மிக முக்கியமான நூல் இது. இதனை எழுதியவர் ராஜேஷ் கொச்சார்(Rajesh Kochhar). இவர் வானியல் சார்ந்த இயற்பியல் அறிஞர் (Astrophysicist).

ராஜேஷ் கொச்சார் அவர்கள் பெங்களூருவில் உள்ள Indian Institute of Astrophysics மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அதன் பிறகு புதுதில்லியில் உள்ள National Institute of Astrophysics, Technology and Development Studies (NISTADS) நிறுவனத்தில் இயக்குனராகப் பணியாற்றினார்.

இவர் 1995ல் Jawaharlal Nehru Fellowship யைப் பெற்றவர். 1997ல் Chicago Ac Aademy of Sciences ல் வருகைதரு அறிஞராகவும் பணியாற்றினார். இன்னும் பல நிறுவனங்களில் முக்கிய பொறுப்பேற்றிருந்தார்.

இந்த நூலில் பின்வரும் நான்கு முக்கிய கேள்விகளுக்கு விடை காண்கிறார். அவை:
1.ரிக் வேதம் ஆப்கானிஸ்தானத்தில் உருவாக்கப்பட்டதா?
2. ரிக் வேதம் குறிப்பிடும் சரஸ்வதி ஆறு கக்கார் ஆறா?(Ghaggar river)
3. ரிக் வேத கால மக்களும் ஹரப்பா மக்களும் ஒரே வகையினரா?
4. இராமரின் அயோத்தி இந்தியாவில் உள்ளதா?

இந்த நூலில் மொழியியல், இலக்கியம், இயற்கை வரலாறு, தொல்லியல், தொழில்நுட்பத்தின் வரலாறு, புவி உருவவியல்(Geophysics), வானியல் முதலான அறிவுத்துறைகளை இணைத்து ஆய்வு செய்திருக்கிறார்.

இந்த நூல் 2000ல் வெளிவந்ததாகும். இது 2015 வரை நான்கு பதிப்புகளைக் கண்டிருக்கிறது. நான் படித்த நூல் 2015 ஆம் பதிப்பு. அதன் பிறகு புதிய பதிப்புகள் வந்திருக்கலாம்.

இந்த நூலில் ராஜேஷ் கொச்சார் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தி ருக்கிறார். சில வட இந்திய அறிஞர்கள் சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று கூச்சல் போடுகிறார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இந்த நூல் அமைகிறது. இது அறிவியல் பூர்வமாகப் பேசுகிறது. இவரது முடிவுகள் வட இந்திய அறிஞர்களிடமிருந்து மாறுபடுகின்றன.

இந்த நூலினை நல்ல முறையில் யாராவது தமிழாக்கம் செய்தால் பயன் கிடைக்கும். 
Bhakthavatsala Bharathi

தேமொழி

unread,
Dec 25, 2022, 8:34:14 PM12/25/22
to மின்தமிழ்
Kalabhra Book.jpg

களப்பிரர் காலத்தின் அரசியலும், இலக்கியமும்

“இருண்ட காலத்தில் பாடல் ஒலிக்குமா? ஒலிக்கும், இருண்ட காலத்தைப் பற்றி” என்பது ஜெர்மானிய இடதுசாரிக் கவிஞரும், நாடகாசிரியருமான பெர்ட்டோல்ட் பிரெக்டின் புகழ்பெற்ற கவிதை வரிகளாகும். வரலாற்றில் இருண்ட காலங்கள் என்கிற சொற்றொடர் மிகப் பிரபலமானது. காலம் எப்படி இருளும். பூமிப்பந்து கூட முழுசாய் யாருக்கும் இருள்வதில்லை. ஒரு பக்கம் இருளிருக்கும், மறுபக்கம் ஒளியிருக்கும். அவை சுழற்சியின் கதியில் மாறிமாறி வரும். தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலம் எனும் போது பொற்காலம் என்கிற படிமமும், களப்பிரர் காலம் என்கிறபோது இருண்ட காலம் என்கிற படிமமும் இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றுக் கல்விப் புலத்தில் அறிஞர்கள் என்று சொல்லப்படுவோர் உலவ விட்டிருக்கிறார்கள்.

ஆனால் அறிஞர்கள் எனப்படுவோர் அறிஞர்களாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமா என்ன? சிந்து சமவெளியின் காளையைக் குதிரையாக்க இந்துத்துவ அறிஞர்கள் முயல்கிறார்கள். கீழடியின் தொன்மை ஆய்வை மண்போட்டு மூடி வரலாற்றை இருண்ட காலத்தில் அமிழ்த்த விரும்புகிறவர்களும் அத்தகைய அறிவு! மரபின் தொடர்ச்சியாளர்களாகவே உள்ளனர். ஓர் அரசன் காலத்துக் கல்வெட்டுக்கள், அவன் வெல்லப்பட்டு, அடுத்த அரசன் வரும்போது, அவை சிதைக்கப்பட்டு, படிக்கற்களாக, அனைவரும் மதிக்கும்படி இருந்தவை இப்போது மிதிக்கும் படி ஆகும்வகையிலான வரலாறுகள் நம் கோவில்களெங்கும் பொதிந்து கிடக்கின்றன. வேதப்பார்ப்பனர்களின் அபரிமிதமாகப் பெருகிய யாகமுறைகளும், அவற்றில் பலியாக்கப்பட்டகால் நடைகளாகிய விவசாய உற்பத்திக் கருவிகளின் அழிவையும் எதிர்த்து, வரலாற்றில் பௌத்த, சமணப் பெரு நெறிகள் எழுந்தன. அவை இந்தியப் பரப்பெங்கும் பரவின.

அவை அன்றிருந்த ஆளும் சத்திரியர்களின் அணுக்கத்தைப் பெற்று கடல் கடந்தும் வளர்ந்தன. அத்தகைய ஓர் அலை தென்னகத்தில், தென்தமிழகத்தில் பரவியதே களப்பிரர்கால ஆட்சிஎனும் வரலாறு. பாண்டிய, சேர, சோழராகிய தமிழ்நிலத்து அரசர்கள் வேத வழிப்பட்ட அரசாளுமைகளாக வீற்றிருந்த காலத்தில் களப்பிரர்கள் அவர்களை வென்று, பௌத்த, சமண வழிப்பட்ட நெறிகளைத் தழைத்தோங்கச் செய்தனர். அதனால் பின்னால் அவர்களின் சுவடுகளே வரலாற்றில் அறியப்படாவண்ணம், வரலாற்றைத் திருத்தினார்கள். அது இருண்ட காலம் என்று கதை பரப்பினார்கள். அவர்களது வரலாற்றின் சுவடுகளைச் சிதைத்தார்கள்.

6 ஆம் நூற்றாண்டு முதல் தழைத்தோங்கத் தொடங்கிய பக்தி இயக்க காலத்தில், சைவ, வைணவ சமயக்குரவர்கள், பௌத்த, சமண மடாலயங்களை அழித்துத் தம்வயப்படுத்தினர். அனல் வாதம், புனல் வாதம் என்று கதைகட்டி இலக்கியங்களை அழித்தொழித்தனர். சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்றனர். கோயில்களைத் தமதாக்கினர். கடவுளர்களை, விழாக்களை, பழக்க வழக்கங்களைத் தமதாக்கினர். ஆனால் அவற்றுக்கான மேலுறைகளில் தங்கள் சாயம்பூசினர். நூலின் அணிந்துரையில் பேரா.அருணன் சரியாகச் சுட்டுவதைப் போல வரலாற்றாளர் நீலகண்ட “சாஸ்திரி” அந்தக் காலத்தை இருண்டகாலம் என்று வரையறுத்து உலாவவிட்டது தற்செயலானதல்ல.

மேலும் அருணன் குறிப்பிடுவதைப் போல, “அது ‘இருண்ட காலமாக’ ஒரு சாராருக்கு இருந்தது. சங்ககாலத்துப் பாண்டியர் ஆட்சியில் பிராமணியவாதிகளுக்குத் தானமாக நிலங்கள் கொடுக்கப்பட்டன. அடுத்து வந்தகளப்பிர மன்னர்கள் அவற்றை ரத்து செய்துவிட்டார்கள். இதனால் ஆத்திரம் கொண்ட பிராமணியவாதிகள் பிற்காலத்தில் அவர்களைக் ‘கலியரசர்கள்’ என்று செப்பேடுகளில் பதிந்துவைத்தார்கள். அதை அப்படியே எதிரொலிக்கிறார் சாஸ்திரியார்.”ஆனால் அந்த இருண்ட காலத்தில்தான் சங்கம் மருவிய காலத்து இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் நமக்குக் கிடைக்கின்றன. ப.முருகன் எழுதிய இந்நூலின் தலைப்பே “நீதி இலக்கியங்கள்-களப்பிரர் காலத்தின் அளப்பரிய படைப்புகள்” என்று இந்த வரலாற்று அரசியலின் முக்கியத்துவத்தை வெகு அழகாக எடுத்துரைக்கின்றது.

களப்பிரர் காலத்தில்தான் கி.பி.470-ல் வச்சிரநந்தி எனும் சமண முனிவர் மதுரையில் தமிழ்ச் சங்கத்தைத் துவங்கினார் என்பதையும், தமிழ் வளர்க்கும் பணியில் ஈடுபட்டார் என்பதையும் அவர்களால் மறைக்க முடியவில்லை. களப்பிரர்கள் பாலி மொழியை ஆதரித்தனர். சமண சமயத்தைப் பேணினர். இதனால் தமிழ்மொழி ஆதரிக்கப்படாமல் வளம் குன்றி சிறந்த தமிழ் நூல்கள் தோன்றும் சூழல் அமையவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் இந்தக் காலத்தில்தான் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐம்பெரும்காப்பியங்களும், உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர குமார காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐஞ்சிறு காப்பியங்களும், திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்களும் தோன்றின.” என்று நூலின் முதல் அத்தியாயத்திலேயே முருகன் முன்வைக்கும் வாதங்கள் இந்தக் காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

சங்க இலக்கியத்துக்குச் சங்க இலக்கியம் என்கிற பெயர் கிடைக்கவே காரணமானவர்கள் களப்பிரர்கள்தான் என்று மு.வ.வின் தமிழ் இலக்கிய வரலாற்றி லிருந்து முருகன் எடுத்து வைக்கும் கருத்துகள் மிகுந்த பொருட்செறிவுள்ளவை. பதிணென் கீழ்க்கணக்கு நூல் வரிசையில் வைக்கப்பட்டுள்ள “ஆசாரக்கோவை” முழுக்க முழுக்கசமண, பௌத்தக் கருத்தியலில் இருந்து மாறித்தனித்து, வைதீக நெறி சார்ந்து வெளிப்படுத்தும் கருத்துநிலையும் ஆய்தற்குரியன. அதுபோலவே வ.உ.சி.யால் பதிப்பிக்கப்பட்ட “இன்னிலை” யைப் பதிணென் கீழ்க்கணக்கு வரிசையில் வைப்பது குறித்த விவாதங்களும் சுவையானவை. இத்தகைய வலுவான வரலாற்றுப் பின்புலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய, சுருக்கமான அறிமுகம், அவற்றின் கட்டமைப்பு, பா வகைகள், கருத்தியல் நிலைகள், வரலாற்றுத் தரவுகள், வாழ்க்கைச் சுவை நலன்கள் என்று தமக்கேயுரிய தேர்ந்ததெள்ளிய நடையில் முருகனின் இந்நூல் இலங்குகிறது. மேலும் திருக்குறள் தவிர்த்து கல்விப் புலத்தாராலேயே கைவிடப்பட்ட இலக்கியங்கள் போலான பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய ப.முருகனின் இந்நூலானது தமிழ் இலக்கிய மாணவர்களுக்கும் உதவக்கூடிய அரு நூல்.

நீதி இலக்கியங்கள்

களப்பிரர் காலத்தின் அளப்பரிய படைப்புகள்

வெளியீடு: மதுரை திருமாறன் வெளியீட்டகம்,
பழைய எண்.35, புது எண்.21, அறை எண்.3,
சாதுல்லா தெரு, தி.நகர், சென்னை-600017.
செல்பேசி: 7871780923,

பக்:140     விலை: ரூ.100/- இந்த தகவல் புலனில் பகிரப்பட்டு வருகிறது.

Mohanarangan V Srirangam

unread,
May 9, 2023, 3:42:07 AM5/9/23
to மின்தமிழ்
கண்ணில் பட்ட கனி --
சீவக சிந்தாமணி, திரு உ வே சாமிநாதய்யர் பதிப்பு, நச்சினார்க்கினியர் உரையுடன்
முதல் பதிப்பு 1887 ல் வந்திருக்கலாம். இன்றைக்குக் கிடைக்கும் பதிப்பு, நூல் அதுவே என்றாலும்
பல பதிப்புகள் கடந்து வந்திருக்கும் பிரதி. ஆனால் முதல் பதிப்பையே தேடிப் படிக்கும் தேவையும், பழக்கமும்
சில அறிஞர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் சிறப்பாகவும், பொதுவாக அனைவருக்கும்
ஒரு நல்ல செய்தி. முதல் பதிப்பு, 1887 ஆண்டுப் பதிப்பு ஆர்கைவ்ஸ் ஆர்கில் இருக்கிறது.
அதற்கான சுட்டி --


***
Reply all
Reply to author
Forward
0 new messages