தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல் வெளியீடு

563 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 1, 2022, 2:23:48 AM2/1/22
to மின்தமிழ்
dr sasikala book.jpg
நண்பர்களுக்கு இனிய செய்தி ...  
நமது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடாக மேலும் ஒரு நூல் அச்சுக்கு இன்று அனுப்பி விட்டோம்.  வரும் வார இறுதிக்குள் நூல்  கைவசம் வந்து விடும். தமிழகத் தொல்லியல் துறை ஆய்வறிஞர் முனைவர்.கோ. சசிகலா அவர்கள் எழுதிய நூல்...  
வாசிக்கக் காத்திருங்கள்...

அன்புடன் 
முனைவர் க. சுபாஷிணி 
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 

தேமொழி

unread,
Feb 3, 2022, 5:33:52 AM2/3/22
to மின்தமிழ்
https://academy.tamilheritage.org/category/thf-publication/books-thf-publication/

தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல் வெளியீடு


தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும்

drsasikala-book.jpg

தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும்
விலை: ₹150
ஆசிரியர்: முனைவர் கோ. சசிகலா
பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
மொழி: தமிழ்
வெளியீடு: 2021
வகை: கட்டுரை
பொருண்மை: தொல்லியல் , கல்வெட்டு

____________________________________________________

வரலாற்றில் பொய்கள்

dr themozhi-book.jpg

வரலாற்றில் பொய்கள்
விலை: ₹100
ஆசிரியர்: முனைவர் தேமொழி
பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
மொழி: தமிழ்
வெளியீடு: 2021
வகை: கட்டுரை
பொருண்மை: வரலாறு

____________________________________________________

கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள்

duraisuntharam-konku-natu-tholliyal-chinnangal.jpg

கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள்
விலை: ₹140
ஆசிரியர்: துரை சுந்தரம்
பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
மொழி: தமிழ்
வெளியீடு: 2021
வகை: கட்டுரை
பொருண்மை: கல்வெட்டுகள்

____________________________________________________

கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்

duraisundharam-kongu kalvettu.jpg 

கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்
விலை: ₹150
ஆசிரியர்: துரை சுந்தரம்
பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
மொழி: தமிழ்
வெளியீடு: 2021
வகை: கட்டுரை
பொருண்மை: கல்வெட்டுகள்

____________________________________________________

கீழக்கரை வரலாறு

keezhakkarai-varalaaru book.jpg 

கீழக்கரை வரலாறு
விலை: ₹285
ஆசிரியர்: எஸ். மஹ்மூது நெய்னா
பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
மொழி: தமிழ்
வெளியீடு: 2021
வகை: கட்டுரை
பொருண்மை: வரலாறு 

____________________________________________________


dr subjashini-tho-pa-book.jpg

அறியப்பட வேண்டிய தமிழகம்
விலை: ₹80
ஆசிரியர்: தொ. பரமசிவன்
பதிப்பாசிரியர்: முனைவர் க. சுபாஷிணி
பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
மொழி: தமிழ்
வெளியீடு: 2021
வகை: கட்டுரை
பொருண்மை: மானுடவியல்

____________________________________________________

நாகர் நிலச் சுவடுகள்

maya -nakar-book.jpg

நாகர் நிலச்சுவடுகள் – இலங்கை பயண அனுபவம்
விலை: ₹100
ஆசிரியர்: மலர்விழி பாஸ்கரன்
பதிப்பு:தமிழ்
மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
மொழி: தமிழ்
வெளியீடு: 2021
வகை: பயணக்குறிப்பு
பொருண்மை: ஈழம் 

____________________________________________________


sanna-thiruvalluvar-yaar.jpg

திருவள்ளுவர் யார்?  – கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்
விலை: ₹200
ஆசிரியர்: கௌதம சன்னா
பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
மொழி: தமிழ்
வெளியீடு: 2021
 வகை: கட்டுரை
பொருண்மை: இலக்கியம் 

____________________________________________________

THIRUVALLUVAR’S PROSE – CAEMMERER

Frederick-Book.jpeg 

THIRUVALLUVAR’S PROSE – CAEMMERER
விலை: 25 யூரோ
பதிப்பாசிரியர்: முனைவர் க. சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
வெளியீடு – 2019 

____________________________________________________

DER KURAL DES TIRUVALLUVER – KARL GRAUL

Karl-book.jpeg

DER KURAL DES TIRUVALLUVER – KARL GRAUL
விலை: 25 யூரோ
பதிப்பாசிரியர்: முனைவர் க. சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
வெளியீடு – 2019 

____________________________________________________

தேமொழி

unread,
Feb 15, 2022, 4:45:18 PM2/15/22
to மின்தமிழ்
THFi Publication Books.jpg



நாளை தொடங்கி நடைபெற உள்ள 45வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நமது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்கள் கிடைக்கின்றன.
இந்நூல்களை வாங்கி நமது பதிப்பகத்தை ஊக்குவித்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

--

தேமொழி

unread,
Feb 18, 2022, 4:04:03 PM2/18/22
to மின்தமிழ்


book release.jpg

 சனிக்கிழமை  மாலை - 3 நூல்கள் வெளியீடு 
(F6 - எமரால்டு & எழிலினி பதிப்பகக் கடை) இரண்டாவது நுழைவாயில்..
நேரில் வந்து கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது...

-தமிழ மரபு அறக்கட்டளை பதிப்பகப் பிரிவு.

தேமொழி

unread,
Feb 19, 2022, 3:58:24 PM2/19/22
to மின்தமிழ்

source: https://www.facebook.com/subashini.thf/posts/3270430406533667


45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில்
தமிழ் மரபு அறக்கட்டளையின் மூன்று நூல்கள் வெளியீடு கண்டன

book release.jpg
--------------------------------------------------------------------

தேமொழி

unread,
Feb 19, 2022, 9:41:38 PM2/19/22
to மின்தமிழ்
Nanaa review.jpg
ஏன் என்ற கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை நான்
என்ற எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு….
பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே…

எம்ஜிஆரும் வாலியும் இணைந்த இந்த வரிகள்
பட்டிதொட்டியெல்லாம் பிரசித்தம் என்றாலும்

இன்றும் கேள்வி கேட்பதே குற்றம் எனும்
சூழல்நிறைந்த நிலைமை….ஏனெனில்,
தலைமை அதை விரும்புவதில்லை…
அது…அரசியலோ …ஆன்மீகமோ…ஆண்ட சாதியினரோ….ஐடி கம்பெனிகளோ
பண்ணையார்களோ…எல்லாக் காம்பவுண்ட்களுக்கும் பொருந்தும் எழுதப்படாத விதி…

8000 கோடிப் பேருக்கு 5000 கோடி…மதுவந்திகளும்
2000 நோட்டுல சிப் ன்னு சொன்ன சிப்பு நடிகர் என காணொளிகள் ஒரு கட்டத்துக்கு மேல் காமெடி மீம்ஸாக பரிணாமம்  பெற்று இன்றும் காணக்கிடைக்கின்றன…
தவறான செய்திகளுக்குக் கொடுத்த  முக்கியத்துவமும் கொட்டை எழுத்து என்னும் 72 பாயிண்ட் சைஸ் எழுத்துகள்…
’தவறுக்கு வருந்துகிறோம்’ என்ற வரிகளுக்கு
பாவிக்கப்படுவதில்லை..

வரலாறு முக்கியம் அமைச்சரே என்பது
போல… ஓடும் பொதுவெளி வாழ்க்கையில்
பொய்ச்செய்திகளைச் தோலுரிக்க யாருக்கும்
நேரமில்லை.
இந்த அவசர உலகிலும்
குமரிக்கண்டம் என்னும் புனைவையும்
பிக்கோலிம் உடன்படிக்கை… சிந்து சம்வெளியின் குதிரை முத்திரை…..சரஸ்வதி நதி….
தாண்டி…வரலாற்றில் பொய்கள்…அடுத்தடுத்து எனது அபிமான நண்பர் முனைவர்  தேமொழி அவர்களின்  ஆய்வெழுத்தில்
தொடராக வந்து தோலுரிக்கப்படவேண்டும்…
( அட்டையில் ஒரு பழைய ஆவணப் பேப்பரை உரிப்பது போல)
அதற்கும் நானே ..நாணா.. அட்டைப்படம்
வடிவமைக்கப் படவேண்டும்…என்று
எனது சிற்றுரையை முடித்துக்கொண்டு…

அவரவர் பார்வையில் …’வரலாற்றில் பொய்கள்’ நூலை முழுமையாகப்
படித்துவிட்டு …கிடைக்கின்ற மெய்ப்பொருளை
புத்தக விமர்சனமாக எழுதிப் பதிவிட வேண்டி
விடைபெறுகிறேன்…
எழுத்து ஓவியன்
நாணா..

தேமொழி

unread,
Feb 20, 2022, 1:01:06 AM2/20/22
to மின்தமிழ்

release.jpg

45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில்
*தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல்கள் வெளியீடு*
யூடியூப் காணொளியாக ...
https://youtu.be/lLHt7SwUvmg
 - கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள்
 - தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும்
 - வரலாற்றில் பொய்கள்
#THFi, #BookRelease, #ChennaiBookFair2022

Iraamaki

unread,
Feb 20, 2022, 1:47:05 AM2/20/22
to mint...@googlegroups.com
வாழ்த்து, தேமொழி.
அதற்கும் நானே .நாணா.. அட்டைப்படம்
வடிவமைக்கப் படவேண்டும்…என்று
எனது சிற்றுரையை முடித்துக்கொண்டு…

அவரவர் பார்வையில் …’வரலாற்றில் பொய்கள்’ நூலை முழுமையாகப்
படித்துவிட்டு …கிடைக்கின்ற மெய்ப்பொருளை
புத்தக விமர்சனமாக எழுதிப் பதிவிட வேண்டி
விடைபெறுகிறேன்…
எழுத்து ஓவியன்
நாணா..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/7ac89c6c-ffbb-40da-a413-65490a62ec50n%40googlegroups.com.
Nanaa review.jpg

தேமொழி

unread,
Feb 20, 2022, 2:03:25 AM2/20/22
to மின்தமிழ்
மிக்க நன்றி ஐயா  😃

தேமொழி

unread,
Feb 23, 2022, 10:57:39 PM2/23/22
to மின்தமிழ்


Dr S Chandni Bi.jpg

Dr pappa.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடாக மேலும் இரு நூல்கள்...
1. விளையாடிய தமிழ்ச்சமூகம்
- முனைவர் ஆ பாப்பா
2. கல்வெட்டில் தேவதாசி
- முனைவர் சாந்தினிபீ

நாளை தொடக்கம் 45வது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் F6, 433 அரங்குகளில் கிடைக்கும்.
இந்த இரு நூல்களின் வெளியீடு வருகின்ற சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை புத்தகக் கண்காட்சியில் திட்டமிடப்பட்டு வருகிறது... உங்கள் அனைவரின் வருகை உறுதி செய்து கொள்ளுங்கள்...!

தேமொழி

unread,
Feb 25, 2022, 2:35:54 AM2/25/22
to மின்தமிழ்

suba book.jpg
கிழக்காசிய நாடுகளுக்கும் நாகப்பட்டினத்திற்குமான தொடர்புகள்,
கிழக்காசியாவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள்,  
ராஜேந்திர சோழனின் கடற்படை தாக்குதல்,
ஸ்ரீவிஜயப் பேரரசின் வணிக ஆளுமை,  
குலோத்துங்கனின் கடற்படை,  
சீனாவின் பௌத்த பிக்குகள் நாகப்பட்டினம் வந்த செய்திகள்..  
அவற்றோடு..
தமிழ்ப்பல்கலைக் கழக கடல்சார் தொல்லியல் துறை தலைவர் டாகடர்.வீ செல்வகுமார் அவர்களது அணிந்துரையுடன்...  



தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடாக  
முனைவர் க. சுபாஷிணியின் நூல்
"ராஜராஜனின் கொடை"
வெளியீடு காண்கிறது.

சென்னை புத்தகக் கண்காட்சியில்
சென்னை புத்தகக் காட்சி - விற்பனையில்
ஆழி பதிப்பகம் அரங்கம் - 433
எமரால்ட் பதிப்பகம் அரங்கம் - F6

 

தேமொழி

unread,
Feb 25, 2022, 2:58:28 AM2/25/22
to மின்தமிழ்

சென்னை புத்தகக் காட்சி - விற்பனையில்
ஆழி பதிப்பகம் அரங்கம் - 433
எமரால்ட் பதிப்பகம் அரங்கம் - F6
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்கள் 

THFi-Books.jpg
-

முனைவர் க. சுபாஷிணியின் நூல்
RajaRajanin Kodai.jpg
--

முனைவர் சாந்தினிபீயின் நூல்
Kalvettil Devathasi.jpg
--

முனைவர் ஆ பாப்பாவின் நூல்
Vilaiyadiya Thamizhch Samoogam.jpg
--

முனைவர் கோ. சசசிகலாவின் நூல் 
Thamizhnattuk Kadavularum Marabugalum.jpg
---

முனைவர் தேமொழியின் நூல் 
Varalatril Poigal.jpg
---

திரு. துரை  சுந்தரத்தின் நூல் 
Kongu Nattu Tholiyal Sinnangal.jpg 
---

திரு. கௌதம சன்னாவின் நூல் 
Thiruvalluvar Yar.jpg
---

முனைவர் க. சுபாஷிணியின் நூல் 
Ariyappadavendiya Thamizhagam.jpg
---

திருமிகு மலர்விழி பாஸ்கரனின் நூல் 
Nagar Nilachchuvadugal.jpg
------------------------




தேமொழி

unread,
Feb 25, 2022, 7:44:43 AM2/25/22
to மின்தமிழ்
invite.jpg

நாளை நடைபெறவுள்ள நமது நூல் வெளியீட்டு விழா பற்றிய நிகழ்ச்சி அறிவிப்பு. 
அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

தேமொழி

unread,
Feb 26, 2022, 12:16:01 AM2/26/22
to மின்தமிழ்
source: https://www.facebook.com/photo/?fbid=3275272042716170&set=a.1388119661431427
THFi- books release .jpg
Subashini Thf is with Pappa and 
2 others

தமிழ் மரபு அறக்கட்டளையின் 4 நூல்கள் இன்று மாலை வெளியீடு காண்கின்றன.
நூலாசிரியர் நால்வருமே பெண் வரலாற்றாய்வாளர்கள் என்ற சிறப்புடன்...

சென்னை புத்தகக் கண்காட்சி 2022
அரங்கு எண்:433
நேரம்: மாலை 6 மணி

நூல்கள்:
1.விளையாடிய தமிழ்ச்சமூகம் -நூலாசிரியர்: ஆ.பாப்பா
2. ராஜராஜனின் கொடை -நூலாசிரியர்: க.சுபாஷிணி
3. நாகர் நிலச் சுவடுகள் -நூலாசிரியர்: மலர்விழி பாஸ்கரன்
4.கல்வெட்டில் தேவதாசி -நூலாசிரியர்: எஸ்.சாந்தினிபீ

நேரில் வந்து நூல்களைப் வாங்கிக் கொள்ளலாம்.

நண்பர்களே - நமது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்களை நேரடியாக சென்னை புத்தகச் சந்தையில் சென்று பெற இயலாதவர்கள் இணையம் வழியாகவும் பெறலாம்.
நமது நூல்களை இணையம் வழி எளிதாகப் பெற

https://knightshopper.com/?fbclid=IwAR0kKGy6HafDdrsSpLxIpb39D1zCHu2k2w8Pla_bWTYqHH6MxSqDXJ7_I5o

தேமொழி

unread,
Feb 26, 2022, 4:37:25 PM2/26/22
to மின்தமிழ்
source: https://www.facebook.com/subashini.thf/posts/3275776972665677

Subashini Thf is feeling thankful with Arasu Chellaiah and 
3 others

தமிழ் மரபு அறக்கட்டளையின் நான்கு நூல்கள் வெளியீடு இன்று 45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சியைச் சிறப்பித்த தோழர்கள் முனைவர் சங்கர சரவணன், முனைவர் அரசு செல்லையா, தோழர் அ.முத்துகிருஷ்ணன், தோழர் வாஷிங்டன் சிவா, தோழர் நானா, தோழர் கோ எழில், தோழர் ஆர்.எம் பாபு, தோழர் ஆழி செந்தில்நாதன் மற்றும் இந்த சிறிய புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றி

1.jpg

2.jpg

3.jpg

10.jpg
-------------------------

தேமொழி

unread,
Feb 27, 2022, 3:30:52 AM2/27/22
to மின்தமிழ்
நேற்று கண்காட்சித்திடல் கடல் போலக்காட்சியளித்தது. வாசிப்புக்கு வசப்பட்ட உள்ளங்கள் இத்தனையா என்று உள்ளம் பூரித்துத்தான் போனது. தினம் கூட்டம் கூடிக்கொண்டே போவதாக அரங்கு அமைப்பாளர் ஒருவர் சொன்னார். 
எப்படியோ கூட்டத்தில் நீந்தி ஆழிக்கு வந்துவிட்டோம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் புத்தக வெளியீடு. தமிழ் மரபு சார்ந்த முன்னெடுப்புகளில் தெளிவான திட்டத்தோடு பாதை வகுத்துத் தொடர்ச்சியான ஈடுபாட்டைக்காட்டி வரும் அமைப்பாக தமிழ் மரபு அறக்கட்டளை வளர்ந்து வரக்காண்கிறேன். இதற்கு முதல் காரணமாக நான் நினைப்பது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தமது நேரத்தைத் தமிழுக்காகவும் தமிழாய்வுக்காகவும் செலவு செய்யத்தயாராக ஒன்று கூடியிருக்கும்  இக்குழுவின் உறுப்பினர்களைத்தாம். நேற்று அது மீண்டுமொரு முறை காட்சிப்படுத்தப்பட்டது. குழுவினர் யாவரும் பொறுப்புகளை அத்தனை அழகாக எடுத்துச்செய்தனர். 

மிக எளிமையாக ஆனால் சிறப்பாக நான்கு நூல்கள் வெளியீடு கண்டன. நான்கு பெண்ணாசிரியர்களின் நூல்களை நான்கு ஆண் ஆளுமைகள் பெருமையோடு வெளியிட நால்வர் அதைப்பெற்றுக்கொண்டு நூல்களை அறிமுகப்படுத்திப்பேசினர். மகிழ்ச்சி.
குறுகிய காலத்தில் கேட்டும் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் வந்து நூலை வெளியிட்டுத்தந்தது மனநிறைவு. திடீரென சு.வெ அவர்கள் அரங்குக்கு வந்தது இன்னொரு இன்ப அதிர்ச்சி. தமிழாய்வின் பலவேறு தளங்களில் நின்று பணிசெய்து கொண்டிருக்கும் இவ்வமைப்பு ஆய்வுலகின் மிக முக்கியமான பதிப்புத்தளத்துக்குப் பரிணமித்திருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இந்த முயற்சியின் துவக்கத்திலிருந்து இன்றைக்குள்ளாக பதிப்பகக்குழு தன்னைத்தானே திருத்தி மெருகேற்றிக்கொண்டிருப்பதை குழுவின் உறுப்பினராக நன்கறிவேன். மேலும் இக்குழு பற்பல அரிய ஆய்வுநூல்களை சிறந்த தரத்தில் பாரபட்சமற்ற நோக்கில் படைக்க வழிசெய்யும், ஆய்வுநூல் பதிப்புலகில் தனித்ததொரு இடத்தைப்பிடிக்குமென்ற நம்பிக்கை வருகிறது.
பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

நாம் போற்றும் தமிழ்
நம்மை வழிநடத்தும் 

மலர்விழி பாஸ்கரன் 



Dr.Chandra Bose

unread,
Feb 27, 2022, 3:39:21 AM2/27/22
to mint...@googlegroups.com
Gallop என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தமிழ் மரபு அறக் கட்டளையின் பதிப்புத்துறை அத்தகைய பெருந்தாவல் அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. முனைவர் சுபா, எழுத்தாளர்கள் மற்றும் சார்ந்த குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள். வேள்பாரி புதினம் தந்த பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சு.வெங்கடேசன் கலந்து கொண்டது பெருமைக்குச் சிறப்பு சேர்க்கிறது.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 1, 2022, 8:28:41 PM3/1/22
to மின்தமிழ்
Wisdom Kart THFi Books.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக வெளியீட்டு நூல்கள் அனைத்தையும்
https://wisdomkart.in/ இணையத்தளம் வழி 15 % சதவீத சலுகையுடன் வாங்கலாம் !

Use coupon " FIFTEEN" and get 15% discount on all our Tamil Heritage Foundation International Publication books
Contact: Jothi @ 9884912020

Dr. Mrs. S. Sridas

unread,
Mar 1, 2022, 10:13:58 PM3/1/22
to mint...@googlegroups.com
அன்புள்ள முனைவர் தேமொழி அவர்களுக்கு,

வணக்கம்.
இந் நூல்கள் மின்வடிவில் கிடைக்குமா? இவற்றை இறக்குமதி செய்வதாயின் நூல்களின் விலையை விடப் பத்து மடங்கு செலவாகும். 
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 1, 2022, 10:16:46 PM3/1/22
to மின்தமிழ்
விரைவில் ஆமசான் வழியாக கிண்டில்  நூல்களாக வெளியாக உள்ளது முனைவர் ஸ்ரீதாஸ் 

Dr. Mrs. S. Sridas

unread,
Mar 1, 2022, 11:39:34 PM3/1/22
to mint...@googlegroups.com
நன்றி, முனைவர் தேன்மொழி.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas



தேமொழி

unread,
Apr 14, 2022, 5:35:14 PM4/14/22
to மின்தமிழ்
Durai Sundaram Books.jpg


கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள் - ரூ 140/-
கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள் - ரூ160/-
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப்பிரிவின் வெளியீடுகள்.
இந்த நூல்களைப் பெற விரும்புவோர்
வலைப்பக்கம் சென்று நூல்களைப் பெறலாம்.
அல்லது வருகின்ற சனிக்கிழமை உடுமலைப்பேட்டையில் நடைபெறுகின்ற நூல் வெயீட்டு விழாவிலும் இந்த நூல்களை நேரடியாகப் பெறலாம்.


தேமொழி

unread,
Apr 14, 2022, 10:41:00 PM4/14/22
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப்பிரிவின் வெளியீடுகள்

இந்த நூல்களைப் பெற விரும்புவோர்
https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation
https://wisdomkart.in/books.../tamil-heritage-foundation/
வலைப்பக்கம் சென்று நூல்களைப் பெறலாம்.


@ wisdomkart
https://wisdomkart.in/books-category/tamil-heritage-foundation/


THFi Books on sale.jpg

-----------------------------------

@ commonfolks
THFi Books on sale 2.jpg
-----------------------------------

தேமொழி

unread,
Apr 20, 2022, 1:47:28 AM4/20/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=3316165541960153&set=a.1388119661431427


இவ்வாரம் சனிக்கிழமை மாலை கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள் என்ற தலைப்பில் அமைந்த தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல் திறனாய்வு நடைபெற உள்ளது. அனைவரும் பங்கேற்க தயாராகுங்கள். அதற்கு முன்னர் இந்நூலை வாங்கி வாசித்து விட்டால் திறனாய்வில் பங்கெடுக்கவும் கேள்விகள் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளவும் அது உதவும்.

நூல் விலை: ரூ160/- மட்டுமே.

நூலைப் பெற

https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation

https://wisdomkart.in/books.../tamil-heritage-foundation/

நூல் விலை: ரூ160/- மட்டுமே

durai sundaram book kongu inscriptions.jpg
----------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Apr 22, 2022, 1:49:45 AM4/22/22
to மின்தமிழ்
Durai Sundaram Books.png

நண்பர்களே.

இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஆவணப்படுத்தப்படாத வரலாற்று சின்னங்களையும் கல்வெட்டுகளையும் ஊர் ஊராக, கிராமங்களில், வயல்களில் மற்றும் பல்வேறு இடங்களில் தேடி கண்டுபிடித்து அவற்றை கட்டுரைகளாக தொடர்ந்து எழுதி வந்தவர் மறைந்த வரலாற்றாசிரியர் துரை சுந்தரம் அவர்கள். அவரது இரண்டு நூல்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பக வெளியீடாக வந்துள்ளன.

நூல்களின் விலை மிகக் குறைவு.
நூல்களை வாங்கி தமிழ்நாட்டில் கொங்குப் பகுதியின் வரலாற்று சிறப்புகளை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுங்கள்.

பல்வேறு விஷயங்களை நாம் தொடர்ச்சியாக பேசுகிறோம்.
ஆனால் சிரமப்பட்டு ஆய்வு செய்து ஊர் ஊராக தேடிச் சென்று நமது ஆய்வாளர்கள் உருவாக்கிய நூல்களை வாங்கிக் கொள்வதற்கு நாம் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்தக் குழுவில் உள்ள எத்தனை பேர் இந்த இரண்டு நூல்களை வைத்திருக்கின்றீர்கள்? இதுவரை வாங்க வில்லை என்றால் இன்றைய வாங்க முயற்சி மேற்கொள்ளுங்கள்.

இணையம்வழி ஆர்டர் செய்தால் உங்களை நூல் வீடு தேடி வந்து சேரும்.

https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation

-- சுபா 
#whatsappshare

தேமொழி

unread,
May 20, 2022, 2:42:11 AM5/20/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=3340540589522648&set=a.1388119661431427

 · 8m  · 

suba book.jpg
நாம் எழுதிய நூலுக்கு பாராட்டுரைகள் வரும் போது மகிழ்ச்சி அல்லவா..? 
------
Financial management for non financial managers என்ற நூலை 30 ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன். சிறப்பான தகவல்கள் அடங்கியது. அதிலிருந்தே வரலாற்றாசிரியராக படித்து வராமல் வரலாற்றின் மீது கொண்ட காதலால் வரலாற்றை தேடி அறிந்து நம்முடனும் பகிர்ந்துகொள்ளும் ஆர்வலர்கள் அறிஞர்கள் இவர்களது கருத்து மிகவும என்னை ஈர்க்கும். அந்த வகையில் நமது குழுமத்தில் வழக்கறிஞர் காந்தி..furniture கடை அதிபர் மாரி ராஜன்.. கணினி அறிஞர் தேமொழி போன்றோர் பகிரும் வரலாற்றுத் தரவுகள் மிகவும் என்னை ஈர்க்கும்.. நானும் கட்டிடம் சார்ந்த தொழில் செய்யும் ஒரு வரலாற்று ஆர்வலர்.

இந்த வகையில் பேராசிரியர் நா கண்ணன் --கணினி முனைவர் சுபாஷினி அவர்கள் நிறுவிய நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் தோற்றமும் வளர்ச்சியும் வியக்கத்தக்கது.. பரந்து விரிந்து பல்வேறு அறிஞர்களையும் உள்ளடக்கி இன்றைய மற்றும் நாளைய பன்னாட்டு இளைஞர்களுக்கு நமது தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ் வரலாற்று ஏற்றத்தையும் பகிர்ந்தளித்து தன்னலமில்லாத சிறந்த சமுதாய வளர்ச்சி பணியினை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

என்னை பொருத்தவரை ராஜராஜன் ஒரு உன்னதத்தின் உச்சியை உடனடியாக நமக்குள் எழுப்பும் தீப்பொறி.

டாக்டர் சுபாஷினி எழுதிய ராஜராஜனின்கொடை மற்றும் தேமொழியின் வரலாற்றில் பொய்கள் நூல்களை புத்தகக் கண்காட்சியில் வாங்கி இருந்தும் படிப்பதற்கு தாமதமாகிவிட்டது ‌. டாக்டர் சுபாஷினியின் ராஜராஜனின் கொடை நூல் அவரது கணினி பின் புலம் காரணமாக லேஅவுட் திட்டமிடல் - செயல்படுத்தல் எதிர்கால சிந்தனை போன்றவைகளுடன் மிக அருமையாக வெளிவந்திருக்கிறது... இதனை "மாற்றுரைத்து" சொக்கத்தங்கம் என வியக்கிறார் நமது பெருமதிப்பிற்குரிய தஞ்சைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் செல்வகுமார் அவர்கள்.. அப்படி என்ன எழுதி இருக்கிறார்கள் என்று பார்க்க படிக்கத் துவங்கினால் பிரமித்துப் போகிறோம்... ராஜராஜனின் கொடை அண்மைக்கால ஆய்வு அறிஞர்களின் பெரும் கொடையை உள்ளடக்கிய சிறப்பான முன்னெடுப்பு.. இனி அந்த நூலைப் பற்றிய எனது பார்வையை பகிர்ந்து கொள்கிறேன்.

ராஜராஜனின் கொடை.. எளிமையான தலைப்பில் தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவுனர் டாக்டர் சுபாஷிணியின் கருத்தாழம் கொண்ட ஆய்வுப் பேழை. செய்வன திருந்தச் செய் என்ற கொள்கை பிடிப்பில் தீவிரமானவராய் ஒளிர்கிறார். கணினி சார்ந்த ஆய்வுப் பட்டம் பெற்ற சுபாஷிணி‌ - முனைவர் தேமொழி போன்றோரின் பார்வை - விருப்பு வெறுப்பற்ற - சுத்திகரிக்கப்பட்ட - தமிழ் கூறும் நல்லுலகம் சார்ந்த சமகால வரலாற்று பார்வை. பதிப்புரையிலேயே அசத்துகிறார் முனைவர் தேமொழி. அணிந்துரையில் அருமையான கருத்துக்களை உதிர்க்கிறார் தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் செல்வகுமார் அவர்கள்.

உலகத்தமிழ் மாநாட்டை ஒட்டி டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் நிறுவப்பட்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் தமிழக வரலாற்றிற்கு பெரும் பங்களிப்பை ஈந்துள்ளது. குறிப்பாக மதிப்பிற்குரிய பேராசிரியர் முனைவர் ராஜவேல் அவர்கள். முனைவர் ஜெயக்குமார் ‌, முனைவர் செல்வகுமார் காலஞ்சென்ற எனது அருமை நண்பர் அதியமான் ஆகியோரின் பங்களிப்பு போற்றத் தகுந்தது.. அதிலும் டாக்டர் ஜெயக்குமார் அவர்களின் நாகப்பட்டினம் புத்த விகாரம் குறித்த கடல் சார்ந்த ஆய்வுத் தகவல்கள் மிகவும் சிறப்பானவை. சிங்கப்பூரில் நடந்த தமிழக வரலாற்று ஆய்வு மாநாட்டுக் குறிப்புகள் " நாகப்பட்டினம் - சுவர்ணதீபம்" என்ற தொகுப்பாக ஆங்கிலத்தில் வெளியானதில் டாக்டர் ஜெயக்குமார் அவர்களின் சூடாமணி விகார ஆய்வுக் கருத்துகளும் அடக்கம். அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல் களஞ்சியமான இத்தகைய ஆய்வு கருத்துக்கள் பலரையும் சென்று சேரவில்லையே என்ற கவலை என்போன்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு இருந்து வந்தது.. அதனை துடைத்தெறிந்து கடந்த 30 ஆண்டுகளுக்குள் தமிழக வரலாறு - குறிப்பாக சோழ வரலாறு - அதிலும் ராஜராஜன் - ராஜேந்திரன் -குலோத்துங்கன் ஆகிய மன்னர்களின் பௌத்தம் சார்ந்த கொடைகளை தேர்ந்தெடுத்து அவை அடங்கிய பெரிய லெய்டன் - சிறிய லெய்டன் செப்பேடுகளை - அவை பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ள நெதர்லாந்து பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் ஆய்வு செய்து அருமையான புகைப்படங்களுடன் சுவைமிக்க வரலாற்றுத் தரவுகளை நமக்காக தொகுத்து பகிர்ந்துள்ளார் டாக்டர் சுபாஷிணி அவர்கள்.

பொ.ஆ. 1006ல் ஸ்ரீவிஜய வணிக குழுக்களின் பௌத்தமத வழிபாட்டிற்காக நாகப்பட்டினம் அருகே ஆனைமங்கலம் என்ற கிராமம் இறையிலியாக ராஜராஜனால் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவிஜய அரசர்கள் அங்கு ஒரு புத்த விகாரம் எழுப்பி வழிபட்டனர். ஸ்ரீவிஜயம் மற்றும் சீன வணிகர்கள் நாகப்பட்டினம் பின் இலங்கை என பௌத்த யாத்திரை மேற்கொண்டனர். ஆயினும் ஸ்ரீவிஜய மன்னர்கள் சீனப் பேரரசரிடம் சோழ மன்னர் பரம்பரை தங்களுக்குள் அடங்கியது என்ற வகையில் திரித்துக் கூறிய தகவல்கள் மாமன்னன் ராஜேந்திர சோழனின் செவிகளை எட்டியது. எனவே 1018ல் ஸ்ரீவிஜயத்தின் மீது படை எடுத்து அதனை சோழப்பேரரசின் சிற்றரசாக ஒடுக்கினான். இதற்கான கல்வெட்டு ஆதாரம் தமிழகத்தில் கிடையாது. ஆனால் சீன வரலாற்று பதிவுகளில் உள்ளது.

இவை போன்ற புதிய தரவுகளை சாஸ்திரி - பண்டாரத்தார் போன்ற அறிஞர்களுக்கு பிறகு வரலாற்றறிஞர் மகாலிங்கம்‌ TN ராமச்சந்திரன் மயிலை சீனி வேங்கடசாமி முனைவர் ஜெயகுமார் போன்றோரின் அண்மைக்கால ஆய்வுகளை தொகுத்து எடுத்து சிறப்பாக வழங்கியுள்ளார் டாக்டர் சுபாஷிணி அவர்கள். தொடர்ந்து தமிழகம் வந்து இத்தகைய லெய்டன் செப்பேடுகள் கண்டிப்பாக தமிழகம் வந்து சேர வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக தொல்லியல் துறை அமைச்சரிடம் கொடுத்து அது தமிழக அரசு மானிய கோரிக்கை அரசாணையாக இடம் பெற்றுவிட்டது.. தொடர்ந்து நெதர்லாந்து அரசும் காலனியாதிக்க நாடு வேறு நாட்டிலுள்ள தனது கலைச்செல்வத்தை முறையாக உறுதி செய்தால் கோரிக்கை விடுக்கும் நாட்டிற்கு கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்துள்ளது நமக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

பன்னாட்டு அமைப்பான தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவுனர் டாக்டர் சுபாஷிணி அவர்களின் செய்வன திருந்தச் செய் என்ற கோட்பாட்டினால் லெய்டன் செப்பேடுகள் ஒரு நாள் சென்னை வந்து சேரும் என்பதில் நமக்கு ஐயமில்லை... டாக்டர் சுபாஷிணி அவர்கள் வருடிப் பார்த்து மகிழ்ந்த அந்த செப்பேடுகளை ஆயிரமாண்டு இன்ப நினைவலைகளுடன் நாமும் வருடி பார்க்கும் நாள் இதோ வந்து கொண்டே இருக்கிறது. அவரது எழுத்திற்கும் செயல்பாட்டிற்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்  சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 

[பொன்னியின் செல்வன் குழும தோற்றுநர் திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களது பதிவு.]

குறிப்பு: நூலை வாங்க விரும்புவோர் இணையம் வழி பெறலாம்: -https://www.commonfolks.in/books/d/rajarajanin-kodai 
----------------------------

Joseph Patrick

unread,
Jun 7, 2022, 10:32:38 AM6/7/22