ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 22 December 2025 அகரமுதல
(வெருளி நோய்கள் 851-855: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 856-860
குழிப்பந்தாட்ட ஊர்தி(golf cart) மீதான அளவுகடந்த பேரச்சம் குழி யாட்ட ஊர்தி வெருளி.
ஆட்ட ஊர்தி வெருளி(Gelandelimophobia) உள்ளவர்களுக்குக் குழியாட்ட ஊர்தி வெருளி வர வாய்ப்புள்ளது.
00
-857. குழிப்பந்தாட்ட வெருளி – Golfphobia
குழிப்பந்தாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் குழிப்பந்தாட்ட வெருளி.
வளைகோலாட்ட வெருளி(hockey phobia) உள்ளவர்களுக்குக் குழிப்பந்தாட்ட வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
குழிப்பேரி(peach) என்னும் பழத்தின் நிறம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குழிப்பேரி நிற வெருளி.
Persi என்பது குழிப்பேரிப் பழமாகும். Persico என்றால் குழிப்பேரி நிறமாகும்.
00
குளவி தொடர்பான வரம்புகடந்த பேரச்சம் குளவி வெருளி.
sphḗx என்னும் பழங்க கிரேக்கச் சொல்லின் பொருள் குளவி. இச்சொல்லில் இருந்து உருவானதே Sphekso.
00
குளியலறை வடிகுழி/ குழிசி (bathroom sink) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குளியலறை குழிசி வெருளி.
காண்க: அலம்புக் குழிசி வெருளி(Chufxishophobia/Shuicaophobia)
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5