நச்சுமரம்

23 views
Skip to first unread message

paramasivan esakki

unread,
Aug 20, 2015, 12:54:40 AM8/20/15
to mint...@googlegroups.com
      • Inline image 1
  1. William Blake
    Poet
  2. William Blake was an English poet, painter, and printmaker. Largely unrecognised during his lifetime, Blake is now considered a seminal figure in the history of the poetry and visual arts of the Romantic Age. Wikipedia
  3. BornNovember 28, 1757, Soho, London, United Kingdom
  4. DiedAugust 12, 1827, Westminster, United Kingdom
  5. SpouseCatherine Blake (m. 1782–1827)


நச்சுமரம்
=============================================ருத்ரா

(வில்லியம் ப்ளேக்கின் "பாய்ஸன் ட்ரீ")


அந்த பிம்பத்தின் மீது 
பலமாக குத்தினேன்.
அது நொறுங்கி சிதலம் ஆனது.
இத்தோடு தொலைந்தாய்!
உன்னை எவ்வளவு ஆசையாய்
அந்த மொசக்குட்டி போல‌
மடியில் கிடத்தினேன்.
ஓ!நண்பனே..போ..போய் விழு.
மரணக்குழியில்...மடி..மக்கு..
கவலையில்லை!

அடுக்கு அடுக்குகளாய் பிம்பங்கள்.
இதோ ஒன்று.
இங்கு எல்லாவற்றையுமே
தின்று தீர்த்துவிட்ட வெறி எனும்
எதிரியின் உருவகம்.
என் கைகளில் புலிநகங்கள்
முளைக்கவில்லை
அதை கொன்று கிழிக்க!
எப்படி அதன் மீது
எனக்கு ஒரு கருணைப்பொழிவு?
அது பாருங்கள்
ஒரு இமயம் அளவுக்கு
பனி பூசிய ரோஜாவாய் என் முன்னே!
அது எப்படி?

ஆம் 
அச்சங்களில் தினமும் அதற்கு
நீர் வார்க்கிறேன்.
இந்த உலகில் இரவு பகலாக‌
பெருகும் கண்ணீர் எல்லாம்
இந்த அச்சத்தின் கங்கோத்ரியா?
எனது பாக்கெட்டில் வைத்திருந்த‌
சூரியக்கைக்குட்டைகள் கொண்டு
அதைத் துடைத்து துடைத்து
அசடு வழிந்திருக்கிறேன்.
புன்னகைகளால் ஒத்தடம் கொடுக்க‌
எனக்கு அந்த‌
தூங்குமூஞ்சி மரத்தின்
"பஞ்சு மிட்டாய்ப்"பூக்கள் தான் கிடைத்தன.
இங்கு தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள‌
எத்தனை "ஜிகினா" வனங்களும்
மயிற்பீலிகளும் புல்லாங்குழலும் இருக்கின்றன!

இரவிலும் பகலுமாய்
அந்த அசுரத்தனமான ஈடன் மரம்
கிடு கிடுவென வளர்கிறது.
"இதோ உன் சுடர்மிகு அருங்கனி"
கட கட வென சிரிக்கும்
அவன் கோரைப்பற்களில் கூட‌
கோடிப் பிரகாசம்.
உனக்கே உனக்கா?..இல்லை
அது எனக்கே எனக்கா?
குரூரம் என்பது...அவ்வளவு பெரிய‌
"குளோப் ஜாமா"?

எனது அந்த வனம் பெரிய நந்தவனம்..
நட்சத்திர பூத்தையல் போட்டது போல்
படர்ந்த கரும்பட்டு சால்வையில்
இரவு போர்த்திக்கிடந்தது.
பூமித் துருவப்பகுதியின்
அந்த சதைப்பிடித்தகன்னத்தில்
வருடும் அந்த நிழலின்
அந்த சல்லாத்திரைக்குள்
ஒரு சவக்களையும் இருந்தது.
தேவ முணுணுப்பு 
"வெட்டு வெட்டு" என்றது.
மறுநாள் காலை 
மாதாகோவில் மணியோசைக்கு
கட்டுப்ட்டு மரம் வெட்டப்பட்டது.
அடேய்!என்ன கொக்கரிப்பு?
எனக்குள் ஒரு மகிழ்ச்சியின் 
பொங்குமாங்கடல்.
சைத்தானிய நச்சு இனிப்பே வென்றது.
ஆம்..
வேரோடு வெட்டியும்
அதற்கும் கீழே வேர் பாய்ச்சியவன்..
ஓஹ்ஹ்ஹ்ஹ்ஹோ..
சிரிக்கிறான்!

====================================================================

அன்பின் திரு.நா.கணேசன் அவர்களே !
நீங்கள் குறிப்பிட்ட‌
"டைகரின்" தீக்கண்களுக்குள் 
தீக்குளிக்கப்புகுமுன் 
இந்த நச்சின் நந்தவனம் 
குறுக்கிட்டு விட்டது.

வழக்கம்போல் இது
இது
மொழிபெயர்ப்பு தான்
ஆனால் 
மொழிபெயர்ப்பு இல்லை.
("என்னத்தே கன்னையாக்கள்"வாழ்க)

==============================================================



தேமொழி

unread,
Aug 21, 2015, 1:06:27 AM8/21/15
to மின்தமிழ்


On Wednesday, August 19, 2015 at 9:54:40 PM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
      • Inline image 1

நச்சுமரம்
=============================================ருத்ரா

(வில்லியம் ப்ளேக்கின் "பாய்ஸன் ட்ரீ")

நானும் இந்தக் கவிதையை மொழிபெயர்த்தேன் கவிஞர் ருத்ரா 

அடுத்து இந்த இழையில் பகிர்ந்து கொள்கிறேன் 

(திரு. கணேசன் அடுத்து புலியை மொழிபெயர்ப்பேன், சரியா? )

தேமொழி

unread,
Aug 21, 2015, 1:10:19 AM8/21/15
to மின்தமிழ்

சினமென்னும் நச்சுமரம் …

  • Friday, August 21, 2015

– தேமொழி.

 

நச்சு மரமொன்று

–வில்லியம் ப்ளேக்


சினம் கொண்டேன் ஆருயிர் நண்பனிடம்

சீறினேன், கொட்டினேன் மனக்குமுறலை

குறைந்ததே சினம், மறைந்ததே மாயமென!!!

சினம் கொண்டேன் பிறவிப் பகைவனிடம்

சீறவழியில்லை, குமைந்தேன் மனதிற்குள்

குறையாத மனச்சுமையோ வளர்ந்தது வஞ்சமென !!!


அச்சமெனும் நீரூற்றியே வளர்த்தேனதை நாளும்

கண்ணீர்விட்டே வளர்த்தேன் இரவுபகலாய் நானும்

குரூரப் புன்னகை எனும் கதிரொளிபெற்று

குன்றாத வஞ்சகமே சூழ்ச்சியென துளிர்த்தது


அருமையாக வளர்ந்தது இரவுபகலாக

ஆப்பிளாகக் கனிந்தது அருஞ்சுவையாக

பட்டது அது பகைவனின் கவனத்திலும்

நட்டது நானென்று நன்கறிவான் அவனும்


கள்ளமனதுடன் நுழைந்தான் தோட்டத்தில்

காரிருளில் சிக்கிவிட்டான் என்பொறியில்

புலர்ந்தபொழுதில் கண்டேனவனை, நச்சுக்கனி

வீழ்த்திய மரமாய் வீழ்ந்திருந்தான் மரத்தின்கீழே


லண்டனில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் வில்லியம் பிளேக் (1757 – 1827) அவர்கள் எழுதிய “பாய்சன் ட்ரீ” என்ற கவிதை.

மொழிபெயர்ப்பு: தேமொழி


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆



William Blake1

A Poison Tree

–William Blake

I was angry with my friend:
I told my wrath, my wrath did end.
I was angry with my foe:
I told it not, my wrath did grow.

And I watered it in fears,
Night and morning with my tears;
And I sunned it with smiles,
And with soft deceitful wiles.

And it grew both day and night,
Till it bore an apple bright.
And my foe beheld it shine.
And he knew that it was mine,

And into my garden stole
When the night had veiled the pole;
In the morning glad I see
My foe outstretched beneath the tree.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=60928


Reply all
Reply to author
Forward
0 new messages