கல்வெட்டுகளில் ஔவையார்

158 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 20, 2017, 10:02:41 PM4/20/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Banukumar Rajendran
கல்வெட்டுகளில் அவ்வையார் என்னும் பெயர் எங்கிருக்கிறது என்று பார்த்தால் அவை இருக்குமிடம் சமணர் குகைக் கல்வெட்டுகளில் தான் என்பது அறிந்து சிந்திக்கத் தக்கது.

ஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால்:

”தமிழ் மொழியின் சிறப்பிற்கும் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது போன்றே வடமொழியிலும் தமிழக ஜைன அறவோர்கள் இலக்கியங்களும், தத்துவக் கலைகளும், தர்க்க நூல்களும், நீதி நூல்களும் இயற்றி வளம்பெறச் செய்துள்ளனர். குறிப்பாக குந்தகுந்தாச்சாரியார், சமந்தபத்திராசாரியார், அகளங்க தேவர், ஜின சேனாசாரியார், குணபத்திராசாரியார், வித்தியாநந்தி, புஷ்பதந்தர், மகாவீராசாரியார், நேமிசந்திர சித்தாந்த சக்கரவர்த்தி, மல்லிசேனர், வீரநந்தி, சமயதிவாகரவாமன முனிவர், வாதீப சிம்மர் போன்று பலராவர். இச்சான்றோர்கள் அனைவரும் தமிழகத்திலே பிறந்து வளர்ந்த வாழ்ந்து-துறவறம் பூண்டு, வடமொழி-தமிழ் மொழியில் மேதைகளாகத் திகழ்ந்தவர்கள். மேலே கண்ட வாதீப சிம்மர் தாம் இயற்றிய க்ஷத்திரசூடாமணி என்னும் வடமொழி நூலில் ராஜராஜ சோழனைப் புகழ்ந்துள்ளார்.

தமிழக மலைக்குகைளில் விளங்கும் பள்ளிகளில் காணும் கல்வெட்டுச் செய்திகளில் பொறிக்கப் பெற்றுள்ள சில அறவோர்களின் பெயர்களையும், மகளிர் துறவியர்களில் பெயர்களையும் இங்கே தருகின்றேன். இப்புனிதப் பெயர்களை அறிந்தால் நம் உள்ளம் பூரிப்படையும்.

1. அச்சணந்தி ஆசாரியர் 2. அரிட்டநேமி பொ¢யார் 3. அஷ்ட உபவாசி பட்டாரர் 4. பத்திரபாகு 5. சந்திரகாந்தி ஆசாரியார் 6. தயாபாலர் 7. தர்மதேவ ஆசாரியார் 8. ஏலாச் சாரியார் 9. குணகீர்த்தி படாரர் 10. குணசேனர் 11. குணவீரர் 12. குணவீரக் குரவடிகள் 13. இளையபடாரர் 14. இந்திரசேனார் 15. கனகநந்திப் பொ¢யார் 16. கனகசந்திர பண்டிதர் 17. பலதேவர் மாணாக்கர் கனக வீரர் 18. குரந்தி கனக நந்தி படாரர் 19. குரந்தி தீர்த்த படாரர் 2. குருக்கள் சந்திர கீர்த்தி 21. மகாநந்தி 22.மலையத்துவசர் 23. மல்லிசேனப் பொ¢யார் 24. மல்லி சேன வாமானாச்சாரியார் 25.மதிசாகரர் 26. மெளனி படாரர் 27. மிங்கை குமன் 28. முனிசர்வ நந்தி 29. ஆசான் ஸ்ரீபாலன் 30. மாகணந்திபட்டாரர் 31. அரையங்காவிதி சங்க நம்பி 32. நாக நந்தி 33. நால்கூர் அமலநேமி படாரர் 34. நாட்டிய படாரர் 35.பரவாதி மல்லிபுஷ்ப சேன வாமனா சாரியார் 36. பார்ஸ்வ படாரர் 37. பட்டினி படாரர் 38. பூராண சந்திரர் 39. புஷ்ப சேன வாமனா சாரியார் 40. சாந்திவீர குரவர் 41. ஸ்ரீ நந்தி 42. ஸ்ரீமலைக்குளம் ஸ்ரீவர்த்தமானார் 43. உத்த நந்தி அடிகள் 44. வாதிராசர் 45. வச்சிர நந்தி 46. வேலிகொங்கரையர் புத்தடிகள் 47. விசாகாசாரியார் 48. வேலிகெங்கரையர் யுத்தடிகள் 47. விசாகாசாரியார் 48. வினய பாசுர குருவடிகள் 48. திருக்குரண்டி பாதமூலத்தான் 50. குணசாகரர் 51. பவணந்தி 52. வீரசேனார் 53. நேமிசந்திரர் 54. அகளங்கர் 55. அபயநந்தி 56. வீரநந்தி ஆசாரியார் 57. இந்திர நந்தி 58. குணபத்திர மாமுனிவர் 59. வசுதேவசித்தாந்த பட்டாரகர்.

மகளிர் துறவிகள் (ஆரியாங்கனைகள்):-

1. அரிட்டநேமி குரத்தியார் 2. அவ்வையார் 3. குணம் தாங்கிச் குரத்தியார் 4. இளநேகரத்துக் குரத்தியார் 5. கவுந்தியடிகள் 6. கனகவீரக் குரத்தியார் 7. கூடல் குரத்தியார் 8. மம்மை குரத்தியார் 9. மிழலூர் குரத்தியார் 10. நல்கூர் குரத்தியார் 11. அரிஷ்டநேமி பட்டாரர் மாணாக்கி பட்டினி குரத்தி அடிகள் 12. பேரூர் குரத்தியார் 13.பிச்சைக் குரத்தியார் 14. பூர்வ நந்தி குரத்தியார் 15. சங்கக் குரத்தியார் 16. திருவிசைக் குரத்தியார் 17. ஸ்ரீவிசயக் குரத்தியார் 18. திருமலைக் குரத்தியார் 19. திருப்பருத்திக் குரத்தியார் 20. திருச்சாரணத்துக் குரத்தியார். மேலும் பலர் உள்ளனர்.

செங்காயபர் என்ற ஜைன முனிவர் தவமியற்றிய 
புகழி மலையும் சேரமன்னர் சேவையும்

கருவூரிலிருந்து எட்டு மைல் தூரத்தில் புகழிமலை அல்லது ஆறுநாட்டான் மலை என்ற வரலாற்றுச் சிறப்பமைந்த மலை என்று உள்ளது.

அம் மலைக்குகையில் செங்காயபர் என்ற ஜைன முனிவர் தவமியற்றி வந்தார். அம்முனிவா¢ன் பெருமையையும் பேரறிவையும் அறிந்த சேரமன்னர் இளங்கடுங்கோ அப்புனித மலைக்குச் சென்று செங்காயப முனிவரைத்தா¢சித்து அறவுரை, கேட்டு மகிழ்ந்தான். அத்துடன் முனிவர் தங்குமிடத்தில் பாழியமைத்துப் படுக்கையும் செதுக்கி வைத்தான்.

இச்செய்தி அறிந்து சங்ககால மன்னர்களும் அங்கு சென்று அம்முனிவரை வணங்கி அறங்கேட்டு வந்தனர்.”

------------------------

சமணர்கள் ஏன் தொடக்கப்பள்ளிக் கல்விக்கு தங்கள் குரத்தியார் அவ்வையார் ஆத்திசூடி இயற்றினார் என்பது விளங்கும். தேவாரத்தில் ஆத்தி (அ) தாதகி மலரை எங்கணும் சிவன் சூடுவதாக இல்லை.
அதன் காரணத்தை ஆய்ந்துள்ளேன்.

இந்தியாவின் மிகப்பழைய சமயம் சமணம் என்பார்கள். அதன் ஸப்ஸ்றேற்றம் பண்புகள் 
வேதம் உருவான பின்னர், அதாவது வட இந்தியாவில் திராவிட, முண்டா மொழிகள் மாறி
ஆரிய மொழிகளுக்கு மாறியபின்னர், மெதுவாக மீண்டும் தலைய்டுக்கிறது. அதன் முதற்
பதிவுகள் மக்களின் பிராகிருதம், பாலி, அர்த்தமாகதி என்றாகி, தமிழ், கன்னடம் என்ற
த்ராவிட மொழிகளுக்கு இலக்கணம், இலக்கியம் தரத் தொடங்கினது சமணம் (உ-ம்: தொல்காப்பியர், திருவள்ளுவர்) ...
வினைக் கோட்பாடு, துறவறம், புலாலுண்ணாமை, ... சமண சமயம் இந்தியாவில் உருவாக்கினவை.
பழமையான சாதி எதிர்ப்பையும், வேத வேள்விகளில் பசுக் கொலை தடுப்பையும் 
சமண நூல்களில் காணலாம். உ-ம்: திருக்குறள், அருங்கலச்செப்பு,
பிராகிருத நூல்களிலும் உண்டு. வேளாண் வேதம் எனப் போற்றப்படுபவை.

பார்சுவநாதர், மகாவீரர் இருவரும் தான் வரலாற்றுக்காலத்தில் வாழ்ந்த தீர்த்தங்கரர்கள்
என்பது சமணர் கொள்கை. மற்றவர்கள் வரலாற்றுக்கு முந்தையோர்.

முதலாம் மில்லினெயத்தில் வாழ்ந்த ஔவையார் சமணர் என்பர். அவர் சொல்லும் கடவுள்வாழ்த்து
பார்சுவநாதருக்கு உரியது என்பது ஆத்தி மரத்தைக் குறிப்பிடுவதால் அறியலாகும். பிண்டி (அசோகு)
மகாவீரருக்கு உரியது. துளசி பெருமாளுக்கு, வில்வம், கொன்றை சிவனுக்கு.

சமண சமயத்தவர் தமிழ் இலக்கியங்கள் எனக் கருதப்படுவனவற்றில்
ஒரு முக்கியமான நூல் பள்ளிச் சிறுவர்கள் தமிழ் கற்கத் தொடங்கும் ஆத்திசூடி.

ஆத்திசூடியில் வரும் கடவுள்வாழ்த்து யாருக்குப் பாடியுள்ளார் ஔவையார் எனப் பார்ப்போம்.
”ஆத்திசூடி அமரும் தேவர் பார்சுவநாதர்” கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

ஆத்தி சூடி அமரும் தேவர் பார்சுவநாதர்:


Aathichoodi Amarum Paarsvanathar 2014 Tamil Conf Germany


Published 2014
SHOW MORE


This is an article presented for a Tamil conference in Germany (2014). It shows the Theerthankarar in the first verse  of Aathichoodi, as worshipped by Auvaiyar, traditionally considered a Jain author of the First Millennium A.D is 23rd Theerthankara, Paarshvanaatha. 

ஆத்திசூடி அமரும் தேவர் பார்சுவநாதர்
டாக்டர் நா. கணேசன்
தமிழ்ச் சமணர்களின் இதழான ‘முக்குடை’, (சென்னை) அச்சான ஆய்வுக் கட்டுரை.


Language Tamil
Collection opensource

-----------------------------

முக்குடை இதழில் அச்சானமைக்கு எனக்கு வந்த கடிதம்:



N. Ganesan


தேமொழி

unread,
Apr 20, 2017, 10:44:35 PM4/20/17
to மின்தமிழ்
மையில நனைச்சி பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்லே... என்று பாடியதன் அடிப்படையில் தொடர்ந்தால் கல்லிலெழுத்து கிடைத்துள்ளது.

ஔவை என்பது சமயங்கடந்த  பொதுவான ஒரு பெயராக இருப்பது தெரிகிறது. 

சங்கத் தமிழ் மூன்றும் தா என்று துங்கக் கரிமுகத்துத் தூமணியிடம்  கேட்ட நல்வழி  ஔவை சமணராக இருக்க வாய்ப்பில்லை.  

நல்வழி ஔவையும் ஆத்திச்சூடி ஔவையும் வெவ்வேறானவரா ?

..... தேமொழி 

N. Ganesan

unread,
Apr 20, 2017, 10:54:29 PM4/20/17
to மின்தமிழ்
2017-04-20 19:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மையில நனைச்சி பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்லே... என்று பாடியதன் அடிப்படையில் தொடர்ந்தால் கல்லிலெழுத்து கிடைத்துள்ளது.

ஔவை என்பது சமயங்கடந்த  பொதுவான ஒரு பெயராக இருப்பது தெரிகிறது. 

சங்கத் தமிழ் மூன்றும் தா என்று துங்கக் கரிமுகத்துத் தூமணியிடம்  கேட்ட நல்வழி  ஔவை சமணராக இருக்க வாய்ப்பில்லை.  

நல்வழி ஔவையும் ஆத்திச்சூடி ஔவையும் வெவ்வேறானவரா ?


ஆம். கமலநாதனுக்கு எழுதிய மறுமொழியில் பார்க்கவும்.

ஆத்திசூடியின் சில நூற்றாண்டு பின்னர் காப்பி ஆகிய கொன்றைவேந்தன், நல்வழி சைவ ஆசிரியர்.

நா. கணேசன்

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Apr 20, 2017, 10:58:47 PM4/20/17
to மின்தமிழ்

2017-04-20 19:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மையில நனைச்சி பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்லே... என்று பாடியதன் அடிப்படையில் தொடர்ந்தால் கல்லிலெழுத்து கிடைத்துள்ளது.

ஔவை என்பது சமயங்கடந்த  பொதுவான ஒரு பெயராக இருப்பது தெரிகிறது. 

சங்கத் தமிழ் மூன்றும் தா என்று துங்கக் கரிமுகத்துத் தூமணியிடம்  கேட்ட நல்வழி  ஔவை சமணராக இருக்க வாய்ப்பில்லை.  

நல்வழி ஔவையும் ஆத்திச்சூடி ஔவையும் வெவ்வேறானவரா ?


ஆம். கமலநாதனுக்கு எழுதிய மறுமொழியில் பார்க்கவும்.

ஆத்திசூடியின் சில நூற்றாண்டு பின்னர் காப்பி ஆகிய கொன்றைவேந்தன், நல்வழி சைவ ஆசிரியர்.

நா. கணேசன்


கொன்றைவேந்தன், நல்வழி, ... போன்ற நூல்களின் ஆசிரியர் (சைவர்) இயற்பெயர் தெரியாமல் இருக்கலாம்.
ஆத்திசூடி வழிநூலாக கொன்றைவேந்தன் இருப்பதால் “அவ்வையார்” என்ற பெயர் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.
அகத்தியர், வள்ளுவர், ... போல, அவ்வை பெயரிலும் பல நூல்கள். பல்வேறு கால கட்டங்களில் உருவானவை.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Apr 21, 2017, 9:42:57 AM4/21/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Banukumar Rajendran
ஆத்திசூடி அமரும் தேவர் என ஔவையாரின் ஆத்திசூடி தொழுதெழும் பார்சுவநாதர் சிற்பங்களில் இருவகை இருக்கிறது:
(1) 5 தலை, (அ) பல தலை நாகங்கள் மட்டும் உள்ள பார்சுவநாதர்.
(2) 1 தலை, (அ) பல தலை நாகங்கள் + ஆத்தி மலர் அல்லது தளம் உள்ள பார்சுவநாதர்.

நான் காட்டியது (2)-ஆம் வகை.
சிற்பம் 1, 2, 3 & சித்திரம் 4 (பக்கம் மூன்று, நான்கில்) காணலாம்:

ஆயிரம் மலர்கள், இதழ்கள், தளங்கள் அதன் மே ஒரு நாகபாம்பு காட்டுவது யோகத்தில் ஆழ்ந்தவர் என்பதன் ஒரு குறியீடு:

ஸூரி என்று தியானத்தில் ஆழ்ந்த தீர்த்தங்கரர்களுக்கு 2000 வருஷமாய் சமணர்கள் அழைக்கும் பெயர். இதனை அவர்கள் வடிவுடன் ஆழ்வார் என்று மொழியாக்கம் செய்து கல்லிலும், செம்பிலும் பொறித்தனர். ஸூரி (ஆழ்வார்) இரண்டுமே பின்னர் ஸ்ரீவைஷ்ணவம் நாலாயிரம் பாடிய பெரும்புலவர்க்கு எடுத்தாண்ட பெயர்கள். ஸ்ரீ, மற்றும் மணிப்பிரவாளநடை வேத இலக்கியங்களை மேற்கோள் காட்ட சமணத்தில் இருந்து உபயவேதாந்த ஆச்சார்யர்கள் ஸ்ரீவைஷ்ணவத்தில் பெற்றனர்.

நா. கணேசன்

nkantan r

unread,
Apr 21, 2017, 10:15:57 AM4/21/17
to மின்தமிழ்
i think அவ்வையார் simply implies a matron அவ்வை + யார் (a viguthi to show respect); i was told that with the exception of kamba ramayanam -- even here there are many tamil pandits who claim certain stanzas are not of kamban style and are certainly insertions -- many of the tamil literature cannot be pinned on a particular authorl certainly avvaiyar is a "generic" name of elderly woman author?

regards
rnkantan

Suba

unread,
Apr 21, 2017, 11:59:06 AM4/21/17
to மின்தமிழ்
2017-04-21 4:02 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
கல்வெட்டுகளில் அவ்வையார் என்னும் பெயர் எங்கிருக்கிறது என்று பார்த்தால் அவை இருக்குமிடம் சமணர் குகைக் கல்வெட்டுகளில் தான் என்பது அறிந்து சிந்திக்கத் தக்கது.

ஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால்:

”தமிழ் மொழியின் சிறப்பிற்கும் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது போன்றே வடமொழியிலும் தமிழக ஜைன அறவோர்கள் இலக்கியங்களும், தத்துவக் கலைகளும், தர்க்க நூல்களும், நீதி நூல்களும் இயற்றி வளம்பெறச் செய்துள்ளனர். குறிப்பாக
​​
குந்தகுந்தாச்சாரியார், சமந்தபத்திராசாரியார், அகளங்க தேவர், ஜின சேனாசாரியார், குணபத்திராசாரியார், வித்தியாநந்தி, புஷ்பதந்தர், மகாவீராசாரியார், நேமிசந்திர சித்தாந்த சக்கரவர்த்தி, மல்லிசேனர், வீரநந்தி, சமயதிவாகரவாமன முனிவர், வாதீப சிம்மர் போன்று பலராவர். இச்சான்றோர்கள் அனைவரும் தமிழகத்திலே பிறந்து வளர்ந்த வாழ்ந்து-துறவறம் பூண்டு, வடமொழி-தமிழ் மொழியில் மேதைகளாகத் திகழ்ந்தவர்கள். மேலே கண்ட வாதீப சிம்மர் தாம் இயற்றிய க்ஷத்திரசூடாமணி என்னும் வடமொழி நூலில் ராஜராஜ சோழனைப் புகழ்ந்துள்ளார்.

​நான் வாசித்தவரையில்  
குந்தகுந்தாச்சாரியார் தமிழகத்தில் பிறந்தவர் அல்ல.
இவர் இன்றைய  கர்நாடகாவிலிருந்து வந்து பொன்னூர் பகுதியில் தங்கி பல வடமொழி தமிழ் மொழி நூற்களை எழுதியவர்.

இவரைப்பற்றிய நமது மரபு வெளியீடு உள்ளது.

சுபா



 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

N. Ganesan

unread,
Apr 21, 2017, 8:36:45 PM4/21/17
to மின்தமிழ், vallamai


On Friday, April 21, 2017 at 8:59:06 AM UTC-7, Dr.K.Subashini wrote:


2017-04-21 4:02 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
கல்வெட்டுகளில் அவ்வையார் என்னும் பெயர் எங்கிருக்கிறது என்று பார்த்தால் அவை இருக்குமிடம் சமணர் குகைக் கல்வெட்டுகளில் தான் என்பது அறிந்து சிந்திக்கத் தக்கது.

ஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால்:

”தமிழ் மொழியின் சிறப்பிற்கும் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது போன்றே வடமொழியிலும் தமிழக ஜைன அறவோர்கள் இலக்கியங்களும், தத்துவக் கலைகளும், தர்க்க நூல்களும், நீதி நூல்களும் இயற்றி வளம்பெறச் செய்துள்ளனர். குறிப்பாக
​​
குந்தகுந்தாச்சாரியார், சமந்தபத்திராசாரியார், அகளங்க தேவர், ஜின சேனாசாரியார், குணபத்திராசாரியார், வித்தியாநந்தி, புஷ்பதந்தர், மகாவீராசாரியார், நேமிசந்திர சித்தாந்த சக்கரவர்த்தி, மல்லிசேனர், வீரநந்தி, சமயதிவாகரவாமன முனிவர், வாதீப சிம்மர் போன்று பலராவர். இச்சான்றோர்கள் அனைவரும் தமிழகத்திலே பிறந்து வளர்ந்த வாழ்ந்து-துறவறம் பூண்டு, வடமொழி-தமிழ் மொழியில் மேதைகளாகத் திகழ்ந்தவர்கள். மேலே கண்ட வாதீப சிம்மர் தாம் இயற்றிய க்ஷத்திரசூடாமணி என்னும் வடமொழி நூலில் ராஜராஜ சோழனைப் புகழ்ந்துள்ளார்.

​நான் வாசித்தவரையில்  
குந்தகுந்தாச்சாரியார் தமிழகத்தில் பிறந்தவர் அல்ல.
இவர் இன்றைய  கர்நாடகாவிலிருந்து வந்து பொன்னூர் பகுதியில் தங்கி பல வடமொழி தமிழ் மொழி நூற்களை எழுதியவர்.

இவரைப்பற்றிய நமது மரபு வெளியீடு உள்ளது.

சுபா



குந்தகுந்தரைப் பற்றிய செய்திகள் நன்கு புலப்படவில்லை. துறவியர் ஆனதால் பூர்வாசிரமத்தைச் சொல்லவில்லை போலும். மேலும் பல நூல்கள் அழிந்தும்விட்டன.


”[ராமலிங்க வள்ளலாரின் ஆளுமை, அவரது தரிசனம் ஆகியவற்றில் உள்ல சமண பாதிப்பு மிக முக்கியமான ஒன்ரு. சமணத்துக்கும் சைவத்துக்கும் ஒரு கருத்துப் போர் தமிழில் நடந்தது. சைவம் சமணத்தின் பல அம்சங்களை உள்ளிழுத்துக்கொண்டு புதிய வடிவம் எடுத்தது. குறிப்பாக சைவ உணவு போன்ற வழக்கங்கள். சைவ சித்தாந்தத்திலும் சமண பாதிப்பு அதிகம். வள்ளலார் சைவத்தில் இருந்து அதன் ஆழத்தில் உள்ள சம்ண கோட்பாடைந் எருங்கிச் செல்ல முயன்றார். அதுவே அவரது சோதி தரிசனம். அதை முன்வைத்து தமிழ் சித்தர் மரபை அவர் நிராகரிக்கத்தலைப்பட்டபோது அவரது முதன்மைச் சீடர்களான தொழுவூர் வேலாயுத முதலியார் போன்ரவர்களே அவரை கைவிட்டார்கள்]

தமிழ் நாட்டில் உள்ள பல ஆலயங்கள் சமண ஆலயங்களாக இருந்தவை. உதாரணமாக நாகராஜா கோயில் [நாகர்கோயில்]. அது சமணர்களால் கைவிடப்பட்டு நெடுங்காலமானபின் இந்துகோயிலாக ஆக்கப்படது. அங்குள்ள அனந்தகிருஷ்னன் சிலை என்பது பார்ஸ்வநாதர்தான். அதேபோல பழனி கூட சமணக் கோயிலாக இருக்கலாம். ஆண்டிக்கோலத்தில் முருகன் என்ற கருத்தே சமணத்தில் இருந்து வந்ததுதான். பழனிக்கு சொல்லபப்டும் ஆவினன்குடி என்ற பெயர் கீழே உள்ள இன்னொரு முருகன் கோயிலுக்குச் சொந்தமானது. முருகன் அங்கே சமணத்துறவிக் கொலத்தில்தான் இருக்கிறார்

 
சமணர்களால் உருவாக்கபப்ட்டவையே எல்லா பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும். வள்ளுவரும் சமணரே– அல்லது சமணர்களுக்கு முன்னோடியான ஆசீவக மதத்தைச் சேர்ந்தவர். சங்க இலக்கியங்களிலேயே ஆசீகவக கருத்துக்கள்  ஏராளமாக உள்ளன. தமிழ்நாட்டில் சம்ணத்தின் தொன்மை வீச்சு ஆகியவை இன்னும் முழுதாக ஆராயபப்டவில்லை”

 

Kunda Kunda Aacharya (Konda Kunda) Thapo Boomi - Konakondala, Ananthapur


குந்த குந்தர்:

ஆச்சாரியர் குந்தகுந்தர், தென்னகத்தில் ஜைன இலக்கிய மறுமலர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களுள் தலையாயவர் ஆவார்.ஜைன இலக்கிய வரலாற்றில் மிகவும் போற்றப்பெறுபவரும்,மூலசங்கத்தின் முதன்மை தலைவரும்,திருக்குறளின் ஆசிரியர் எனப்படுபவரும் இவரே.இவரது மரபுவழி பல்வேறு பகுதிகளிலும் பரவியது.திகம்பர் முனிகள் தங்களை குந்தகுந்தரின் மரபுவழியினர் எனக் குறிப்பிடுவதை பெரும்பேறாக கருதினர்.இவர் ஜைன திருநூல் தொகுதியை முதன்மையினை நிறுவி நாடெங்கும் பரவச்செய்தவர் என சிரவண பெளிகுளக்கல்வெட்டு சாசனங்கள் தெரிவிக்கின்றன.இவரது நூல்கள் பின் வந்த பல ஆச்சாரியார்களால் பெரிதும் போற்றப்பட்டு மேற்கோள் காட்டப்படுகின்றன.ஜைன சமயத்தினரின அனைத்து உட்பிரிவினராலும் இவரது நூல்கள் போற்றி பயில படுகின்றன.குறிப்பாக இவரது சமயசாரம் அனைவரும் கருத்துடன் பயிலுகின்றனர்.

மற்ற ஜைன அறவோர்கள் போன்று இவரும் தன் வரலாற்றை தெரிவிக்கவில்லை. இவர் கல்வெட்டுகளில் பல பெயர்களில் குறிப்பிடபடுகிறார்.கொண்டகுந்தா ,குந்த குந்த என்ற பெயர்களே காணப்படுகின்றன.இவரது நூலகளுக்கு உரை எழுதிய தேவசேனர் (கி.பி 1133) ஜெயசேனர் (கி.பி. 1050) ஆகியோர் இவரை பத்மநந்தி என்று குறிப்பிடுகின்றனர்.பதிநான்காம் நூற்றாண்டிற்க்கு பிற்பட்ட நூல்களில் வக்ரக்கீரிவர் ,கிருத பிஞ்சர் ,ஏலாச்சாரியார் , உமாசுவாமி ஆகிய பெயர்களும் காணப்படுகின்றன.பாரச அணுவெக்கா, போதபாகுடா ஆகிய இவரது நூல்களுக்கு முடிவில் முறையே குந்த குந்தா, பதரபாகு சீடன் என தெரிவித்துள்ளனர்.இவரது பெயர்கள் பற்றிய வழிவழி கதைகள் பின் வந்த உரையாசிரியர்களால் பரப்பப்பட்டுள்ளன .மேலும் இவர் பல அதிசயங்கள் புரிந்ததாகவும் அதிசயத் திறமைகள் பல கொண்டவரெனவும் தெரிவிக்கின்றனர்.

இவரது பெயர் திராவிட தொடர்பு உடையதால் இவர் தென்னகத்தை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் நிறுவப்பட்டுள்ளது.F.W.தாமஸ் ,குந்தகுந்தா எனும் பெயர் கன்னட நகர் அல்லது கிராமம் ஒன்றினைக் குறிக்கலாம் எனக் கருத்து தெரிவித்து அப்பகுதியில் இருந்ததால் குந்த குந்தாச்சாரியர் (குந்த குந்தாவை சார்ந்த ஆச்சாரியர்) எனப் பெயர் பெற்று விளங்கினார் எனக் குறிப்பிடுகிறார்.பாலசந்திரர்(கி.பி 1176) இந்திரநந்தி (கி.பி.10 நூற்றாண்டு) போன்றோர் இவர் கொண்ட குந்தா என்னும் ஊரினை சார்ந்தவர் என எழுதி உள்ளனர்.இன்றும் இதே பெயரில் குண்டக்கல் ரயில் நிலையத்திற்க்கு அருகில் 4 அல்லது 5 மைல் தொலைவில் ஒரு கிராமம் உள்ளது.இதற்க்கு அருகிலுள்ள குகை ஒன்றில் தவம் இயற்றியதாக தெரிகிறது.மற்றொரு மரபு இவரை 'நந்தி குன்று' டன் தொடர்பு படுத்துகிறது.

இவர் தமிழகத்தை சார்ந்தவர் என்பது திராவிட பட்டாவெளிகள் மூலம் தெரிகிறது.இவை தென்பாடலிபுரத்திலிருந்த ஜைன சங்கத்தின் தலைவராக நியமிக்க பட்டார் எனத் தெரிவிக்கின்றன.இந்த பகுதியே இன்று திருப்பாபுலியூர் எனப்படுகிறது.சுமார் கி.மு முதல் நூற்றாண்டு முதல் ஜைன சங்கம் இருந்த மயிலாப்பூருடன் தொடர்பு உடையவர் என்றே தெரிவிக்கபடுள்ளது(prof.A.சக்ரவர்த்தி ,திருக்குறள் 1949).இங்கு தான் திருக்குறள் இயற்றி தனது சீடர் திருஉள்ளம் நயினார் மூலம் மதுரையில் அரங்கேற்றினார் என்பர்(காஞ்சிபுரம்.தி.அனந்தநாத நயினார் 1932 ) பின்னர் வடஆற்க்காடு மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள பொன்னூர் மலைக்கு சென்று தவம் இயற்றி தம் வாழ்நாளின் கடைசி பகுதியை அங்கு கழித்தார்.இம்மலையில் அவரது திருவடிகள் செதுக்கப்பட்டு உள்ளன.இம்மலை அனைத்திந்திய ஜைனர்களாலும் போற்றப்படுகிறது.....(தொடரும்)

-பேரா.சிரே.தன்யகுமார் அவர்களின் ஜைனவியல் கட்டுரைத் திரட்டு நூலில் இருந்து....பேராசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல....

உங்களுடன் பகிர்ந்து கொள்வது ஆதிராஜ்...

 
 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Apr 26, 2017, 11:57:42 PM4/26/17
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com


On Friday, April 7, 2017 at 7:39:37 PM UTC-7, siva siva wrote:
வலி மிகும் இடங்களில் ஓர் ஐயம்!

/6. ஓரெழுத்து வலியின் முன்
பூ+பறித்தான்= பூப்பறித்தான்/

திருக்குறள் - 127
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.



சோ = சிறை என்ற பொருள். சோகாப்பர் என்பதும் நாகாக்க என்பதுபோல இக்குறளில் உள்ளது.

நாகாத்தல், சோகாத்தல் போல இன்னோர் உதாரணம்: ஆகாத்தல்.


சூடுதல் = சூழ்தல்
--------------

ஔவையார் பள்ளிக் குழந்தைகளுக்காகப் பாடிய நூல் ஆத்திசூடி. அதனை ஆத்திச்சூடி என்றெழுதுதல் இல்லை. பூச்சூடி என்பது போல,
ஆத்திச்சூடி என்றால் பொருள் மாறுபடும்.

சூழ்தல் - என்பது சூடுதல் என்றும் வரும். சீலைக்குச் சூடி என்றே ஒரு பெயர் (பிங்கலந்தை)..
வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும் பாண். 409) - இங்கே, உலகத்தைச் சூழும் வானம் என வருகிறது.
அரங்கம் = island, துருத்தி = land projection when a river bends. (Cf. துருத்தி, பூந்துருத்தி - தேவாரத் தலங்கள்).
ஆற்றில் உள்ள அரங்கத்தை ஆறு சூடிய அரங்கம் எனலாம். ஆறு இருபுறமும் சூழ்ந்த அரங்கம் (தீவு).

சூடகம் - கை வளையல். மணிக்கட்டைச் சூழுதலால் சூடகம். இது எல்லா திராவிட மொழிகளிலும் உண்டு.
சூடகம் cūṭakam, n. perh. சூடு¹- +. [T. sūḍigamu, K. sūḍaga, Tu. cūḍaga.] Bracelet; கைவளை. பாடகத் தரவமுஞ் சூடகத் தோசையும் (பெருங். வத்தவ. 12, 210). சூடகத்து ஓசை எனக் கொங்குவேளிர் பாடுவது போல, சூடிய என்பதைச் சூழ்ந்த என்ற பொருளில் சீவக சிந்தாமணிப் பாடலும் இருக்கிறது:

  ஞாயில் சூடிய நன்னெடும் பொன்னகர்க்
  கோயில் வட்டமெல் லாங்கொங்கு சூழ்குழல்
  வேயி னன்னமென் றோளியர் தோன்றியங்
  காயி னார்பரி யாள மடைந்ததே.

   (இ - ள்.) ஞாயில் சூடிய நல் நெடும் பொன் நகர் - மதிலை உடுத்த அழகிய பெரிய பொன்னகரிலே; கோயில் வட்டம் அங்கு எல்லாம் - கோயில் உள்ள இடம் எல்லாம் ; கொங்கு சூழ்குழல் வேயின் அன்ன மென் தோளியர் தோன்றி ஆயினார் - மணஞ் சூழுங் குழலையும் வேயனைய மெல்லிய தோளையும் உடைய மகளிர் தோன்றித் தேவியர் ஆயினார்; பரியாளம் அடைந்தது - ஒழிந்த சுற்றமும் வந்தது.
   (வி - ம்.) ஞாயில் - மதிலுக்கு ஆகுபெயர். கொங்கு - மணம். வேயின் அன்ன என்புழி இன்சாரியை தவிர்வழி வந்தது. வேய் அன்ன என்க. பரியாளம் - பரிவாரம்.

பெருங்கதை, சிந்தாமணி போன்ற சமண நூல்களில் சூடுதல் = சூழ்தல் என்பதை உணர்ந்தால் ’ஆத்தி சூடி அமர்ந்த தேவன்’ என்பது ’ஆத்தி சூழ்ந்து அமரும் தேவன்’
என பார்சுவநாத தீர்த்தங்கரரைக் குறிப்பது விளங்கும். இங்கே ஒற்றுமிகக்கூடாது என்பது வெள்ளிடைமலை.

ஆத்தி (=தாதகி) 23-ம் தீர்த்தங்கரரின் தீக்ஷாதரு. அதனால் போலும், சிவபிரான் திருமேனியில் தரிப்பதாக
ஆத்தி/தாதகியை தேவாரம் பாடுதல் இல்லை. ஒட்டக்கூத்தர் காலத்தில் தான் இது மாறுகிறது. பின்னர் திருப்புகழில்.

ஆத்தி சூடிய, அதாவது சூழ்ந்த தேவன் என தீர்த்தங்கரர் ஓவியங்களாயும், பழைய சிற்பங்களாகவும் நூற்றுக்கணக்கில் உள்ளன. கர்நாடகச் சிற்பம்
(ஆர்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சிகாகோ) தருகிறேன்:
Jaina Tirthankara Parshvanatha with Serpent Hood Seated in Meditation (Dhyanamudra), 12th century






















































சூடுதல் = சூழ்தல். சிந்தாமணிப்பாடலை நான் முன்பு ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதியபோது பார்க்கவில்லை. அவ்வாய்வுக் கட்டுரை சென்னையில்
பலகாலமாக தமிழ்ச் சமணர்கள் நடாத்தும் முக்குடை இதழில் அச்சான கட்டுரை. இச்செய்தியும் சேர்த்தவேணும்.

நா. கணேசன்

- hide quoted text -

 

யா காவாராயினும் நா காக்க - மக்கள் வேறெவற்றைக் காவாவிடினும் நாவையாவது காத்துக் கொள்க; காவாக்கால் சொல்லிழுக்குப் பட்டுச் சோகாப்பர் - அதைக் காவாவிடின் சொற்குற்றப்பட்டுச் சிறைத் தண்டம் அடைவர். - பாவாணர்

"தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோ அரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த 
சேவகன்" (சிலப். ஆய்ச்சியர் குரவை)

"ஆனிரை தாங்கிய குன்றெடுத்தான் சோவின்
அருமை யழித்த மகன்". (நான்மணி, 2.)

சோமே லிருந்தொரு கோறா வெனின் " (சி.சி.மறைஞான தேசிகர் உரை.)
சோ மேல் இருந்து கோல் தா - இது பழைய மரபுத் தொடர்.

ஆகாத்தல் - என்றும் உள்ளது:
ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கையோர் கொடும்பாடு இலனை - சிலம்பு
 
நா. கணேசன்
 
பூப்பறி என்பது போல நாக்காக்க என்று வரவேண்டாமோ?

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



2009-07-22 13:39 GMT-04:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:

ஒற்றிலக்கணம்
தொகுப்பு: இலந்தை இராமசாமி
********
வல்லெழுத்து மிகும் இடங்கள்
=====================


1. சுட்டு அ, இ

இவற்றின் முன் க ச த ப முதலாக உடைய சொற்கள் வந்தால் மிகும்.

அ+குடம்= அக்குடம்

2. வினா
எ+குடம் = எக்குடம்

.........


1.வலிமிகும் இடங்கள் இன்னுஞ்சில
============================

...

6. ஓரெழுத்து வலியின் முன்

பூ+பறித்தான்= பூப்பறித்தான்






-- 
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

dorai sundaram

unread,
Apr 27, 2017, 12:27:04 AM4/27/17
to mintamil
அருமையான புதிய செய்திகளை நிறையத்
தெரிந்துகொண்டேன். (சேமிப்பிலும் சேர்த்துக்கொண்டேன்).
வழங்கியோருக்கு நன்றி.
சுந்தரம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 27, 2017, 9:38:36 AM4/27/17
to மின்தமிழ், vallamai, sirpi balasubramaniam, Erode Tamilanban Erode Tamilanban, S. V. Shanmukam, Dr. Krishnaswamy Nachimuthu


On Wednesday, April 26, 2017 at 9:27:04 PM UTC-7, dorai sundaram wrote:
அருமையான புதிய செய்திகளை நிறையத்
தெரிந்துகொண்டேன். (சேமிப்பிலும் சேர்த்துக்கொண்டேன்).
வழங்கியோருக்கு நன்றி.
சுந்தரம்.


மணிமேகலையிலும், (முதல்) கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டாரும் ஆத்தியைப் பாடுகின்றனர்:

”தண்கொடை மானதன் மார்புதோய்
  தாதகி மாலையின் மேல்விழும்
கண்கொடு போம்வழி தேடுவீர்
  கனகநெ டுங்கடை திறமினோ.” - கலிங்கத்துப்பரணி.

நாகர்கோவிலில் Plenary Session-ல் திருக்குறளில் கவரிமா பேப்பர் ப்ரெஸெண்ட்டேஷன்,
கோவையில் சந்திப்போம்!

நா. கணேசன்

 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Apr 27, 2017, 1:43:44 PM4/27/17
to vallamai, மின்தமிழ், sirpi balasubramaniam, Erode Tamilanban Erode Tamilanban, S. V. Shanmukam, Dr. Krishnaswamy Nachimuthu
<அவ்வையார் ஆத்திசூடி இயற்றினார்?

எந்த அவ்வை, எந்த ஆண்டு இயற்றினார்?

27 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 6:38 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Apr 27, 2017, 7:55:47 PM4/27/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, dorai sundaram

5/27/2014

திராவிட மொழிகளில் தான் ழகரம் இருக்கிறது. ழகரம் டகரம் ஆகும். கோழி கோடி, சோழர்:சோடர்,
சூழ்தல்:சூடுதல் (ஆத்தி சூழ்ந்த தேவர் ஆத்திசூடி என ஔவைக் குரத்தியார் பாடியுள்ளார்.
வலிமை பெற்ற கை வலக்கை (right hand),வலிமை தாழ்ந்த/இழிந்த கை இடக் கை (Left hand).
இழ்- என்னும் தாதுவேர் இடம், இடாகினி என்ற சொற்களை அளிக்கிறது. ரிக்வேதம்
முதல் சுலோகத்திலேயே உள்ள இரு த்ராவிடச் சொற்களில் ஒன்று ஈழே
”அக்நிம் ஈழே” என்றுதான் ரிக்வேதம் தொடங்குகிறது. இழிதல், இழைதல் என்றால்
வெறும் prayer என்று பொருளில்லை. implore - மன்றாடி வேண்டுதல், காலில் விழுந்து வேண்டுதல்
என்னும் பொருள் உண்டு. அதே சுலோகத்தில் ரத்நம் என்ற தமிழ்ச் சொல்லும் உண்டு.
அரத்தம் என்றால் சிவப்பு, ரத்தம். ரத்தம் போன்ற கல்- அரதநம். கான்/கானம் என்ற சொல்
காநந என்று வழங்குதல் போல, அரதந  என்னும் தமிழ்ச்சொல்லும், இழி-தல் தாழ்ந்து, இழைந்து
வேண்டுதல் என்பது ஈழே என்றும் ரிக்வேதம் தொடங்குகிறது.


--------------------------

Example A:
புறநானூறு 35:
நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்

 உரை: நளி யிரு முந்நீர் ஏணியாக - நீர் செறிந்த பெரிய கடல்
எல்லையாக; வளி யிடை வழங்கா - காற்று ஊடு போகாத; வானம் 
சூடிய மண்  திணி  கிடக்கை - வானத்தைச்  சூடிய  மண்செறிந்த 
உலகத்தின்கண்; தண் தமிழ்க் கிழவர் - குளிர்ந்த தமிழ்நாட்டிற் 
குரியராகிய;

--------------
Example B:

வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும் பாண். 409). 
நச்சினார்க்கினியர் உரை தருகிறார்:
409-10. புலவு கடல் உடுத்து வானம் சூடிய மலர்தலை உலகத்துள்ளும்-புலால்நாற்றத்தையுடைய கடல்சூழ்ந்த ஆகாயங்கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரில் விசேடித்தும்,

உவேசா:
"வானஞ் சூடிய மலர்தலை யுலகத்து". (பெரும்பாண். 409)
வான்கவிந்த வையகமெல்லாம்" (நாலடி.பொறை.10)

Example C:
மேகங்கள் சூடிய(=கவிந்த)  மலை:

ஐங்குறுநூறு 209:
அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்று
யான்அவர் மறத்தல் வேண்டுதி யாயின்
கொண்டல் அவரைப் பூவின் அன்ன
வெண்டலை மாமழை சூடித் 
தோன்றல் அனாதுஅவர் மணிநெடுங் குன்றே.

Reply all
Reply to author
Forward
0 new messages