கவிஞர் விக்கிரமாதித்யன்

13 views
Skip to first unread message

Eskki Paramasivan

unread,
Nov 20, 2025, 9:15:58 AM (3 days ago) Nov 20
to மின்தமிழ்
கவிஞர் விக்கிரமாதித்யன் 
_______________________________

ஓட்டாஞ்சல்லியை வைத்து
தவளை விளயாட்டு.
நெல்லை டவுண்
நயினார் குளத்தில்.
சிந்துபூந்துறை ஆற்றங்கரை
பன‌ங்குட்டிகளோடு
உரையாடல்.
கூடவே "கயிற்றரவு" சிறுகதையுள்
தத்துவ விளக்கு மாத்துக்கு
பட்டுக்குஞ்சலம் கட்டும்
மலச்சிக்கல் சொல் விளையாட்டுகள்.
சிறுகதை புரட்சி வேந்தன்
புதுமைப்பித்தனின்
எழுத்துப்புரட்டல்கள்.
போலித்தனமும் மொக்கைத்தனமும்
அவரிடம் செம மாத்துகள் வாங்கும்
அற்புதச்சொல்லாடல்கள்.
அய்யா!விக்கிரமாத்தன் அவர்களே.
உங்கள் கவிதைகளில்
உருண்டு புரண்டால்
குறுக்குத்துறையின்
குறுக்கு வெட்டுத்தோற்றத்தில்
அந்த திருனவேலி இலக்கிய மயக்கம்
பளிங்கு நீர்க்குமிழிகளாய்
பதநி நுங்கு காக்டெயிலாய்
படம் விரிப்பதை
எங்கள் சிந்தனை சினிமா கொட்டாய்களால்
நிறுத்தவே முடியாது!
_________________________________
சொற்கீரன்
Reply all
Reply to author
Forward
0 new messages