http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5554
Front page news and headlines today
இந்த ஆண்டு இதுவரை வந்துள்ள 106 படங்களில், 20 படங்கள் மட்டுமே லாபத்தை
ஈட்டியுள்ளன. எட்டுப் படங்கள் நஷ்டமில்லாமல் தயாரிப்பாளர்களை
காப்பாற்றியுள்ளது. 450 கோடி ரூபாய் முதலீட்டில் 102 படங்கள் தயாராகி
வருகின்றன. இதில், 68 படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகின்றன. பல
தயாரிப்பாளர்கள் சினிமாவில் நஷ்டமடைந்து ஒதுங்கும் நிலையில், புதிய
தயாரிப்பாளர்கள் 450 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். கறுப்பு பணம்
வைத்திருப்போர் திரையுலகத்தில் புகுந்து விட்டனரோ என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.
திரைப்படத் தயாரிப்பு செலவுகள் அதிகரித்து விட்டது. நடிகர், நடிகைகள்
சம்பளம் கோடிக்கணக்கில் உயர்ந்து விட்டது. திருட்டு “விசிடி’ புழக் கம்
அதிகமாகி விட்டதால், தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவோரின் எண்ணிக் கை
குறைந்து விட்டது.படங்கள் நினைத்த மாதிரி ஓடவில்லை என்று கூறி பிரபல
தயாரிப்பாளர்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி வருகின்றனர். ஆனால், எதைப்
பற்றியும் கவலைப்படாமல், நூற்றுக்கும் மேற்பட்ட புதிய தயாரிப் பாளர்கள்,
தற்போது களமிறங்கியுள்ளனர். புதுப்பட பூஜை தினம், தினம் தொடர்ந்து
கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 31 படங்கள் பூஜை போடப்
பட்டுள்ளன.இதில், பல தயாரிப்பாளர்கள் கறுப்பு பணத்தை சினிமாவில் முதலீடு
செய்து, கணக்கில் கொண்டு வந்து விடுகின்றனர்.
திரையுலகில் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து நஷ்டமடைந்தாலும் மாறாக
வினியோக உரிமை, ஆடியோ உரிமை,”டிவி” சேனல்களுக்கு வழங்கப்படும் உரிமை என
வருவாய் கணக்கு காண்பித்து கறுப்பு பணத்தை இந்த வழியில் வெள்ளை பணமாக
மாற்றும் முயற்சியும் நடக்கிறது. முன்னணி நடிகர்கள் சிலர் பாதிப் பணத்தை
கறுப்பு பணமாகவும், பாதியை வெள்ளையாகவும் வாங்குகின்றனர். மேலும், சில
நடிகர்கள் படத்தில் நடித்துக் கொடுப்பதற்கு ஈடாக பினாமி பெயரில் சொத்
துக் களை வாங்கிக் கொள்கின்றனர்.சில கோடிகளில் தயாரிக்கப்படும்
படத்திற்கு பல கோடிகள் லாபம் வருவதாக கணக்கு காட்டுகின்றனர். இவ்வாறு
கறுப்பு பணம் வெள்ளையாகி அதற்கு பிறகு முறையாக வரிக் கணக்கு
காட்டப்படுகிறது.
சினிமா சம்பந்தப்பட்டவர்களில் பலர் அசையா சொத்துக்களாக வாங்கிப்போட்டு,
பிறகு வேண்டுமென்றே பிரம்மாண்டமாக படம் தயாரித்து கையை சுட்டுக்
கொள்வதாகவும், கணக்கு காண்பிக்கின்றனர். இன்னும் சிலர் வேறு,வேறு
பெயர்களில் தயாரிப்பு கம்பெனிகளை துவங்கி அவர்களாகவே மூடுவிழா நடத்தி
விடுகின்றனர். இப்படி செய்வதால் அதிகளவு வருமான வரி கட்டுவதிலிருந்தும்
தப்பித்துக் கொள்கின்றனர்.சிலர் குடும்ப உறுப்பினர்களை கொண்டு அறக்கட்டளை
மற்றும் சமூக சேவை செய்வதாக கூறி வரிச் சலுகையும் பெற்று விடும் நிலையும்
உள்ளது. இப்படி திரைத்தொழிலில் பம்மாத்து வேலைக்கு பல வழிகள் சாதகமாக
உள்ளதால், சினிமாவின் மீது கறுப்பு பணப் பேர்வழிகளின் பார்வை
பதிந்துள்ளதால் தான் படத் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
என்றும் கூறப்படுகிறது.
புதுப்படத்தை கட்டுப்பாடின்றி அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டு பத்து
நாட்கள் ஓடினாலே போதும்,போட்ட பணத்தை எடுத்து விடலாம் என்று கணக்கு
போட்டு, கட்டுப்பாடின்றி கூட்டுக் கொள்ளை அடிக்கும் விதமாக இஷ்டத்திற்கு
டிக்கெட் விலையை உயர்த்தி விடும் நிலையும் தொடர்கிறது.சினிமாவில் புரளும்
கோடிக்கணக்கான கறுப்பு பணத்தை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய
பொறுப்பில் இருப்பவர்களும் கண்டும் காணாதது போல் இருந்து
விடுகின்றனர்.அந்தக் காலத்தில் ஒரு சினிமா தயாரிப்பாளர், இயக்குனர்,
வினியோகஸ்தர் என திரைத்துறையைச் சார்ந்த எவராவது ஒருவரை நம்பி பல
குடும்பங்கள் பிழைத்தன. இன்று, கறுப்பு பண கலாசாரத்தால் சினிமா
தொழிலாளர்களுக்கு சம்பளத்தில் கூட கறாராக இருந்து கொள்ளும் நிலை உள்ளது.
நலிந்தவர்களுக்கு உதவும் எண்ணம் இல்லை.
இதுகுறித்து திரையுலகத்தை சேர்ந்த அனுபவஸ்தர் ஒருவர் கூறுகையில்,
“”கறுப்பு பணம் புழங்கும் இடமாக திரையுலகம் மாறி வருகிறது. நலத் திட்ட
உதவிகள், கல்வி, திருமண உதவி என செய்து வந்த காலம் மலையேறி விட்டது,”
என்றார்.தமிழகம் முழுவதும் எத்தனையோ பள்ளிகள், மேற்கூரை, விளக்கு வசதி,
கரும்பலகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றன. சினிமா துறையில்
புழங்கும் பல நூறு கோடி கறுப்புப் பணத்தை இதுபோன்ற கல்விச் சேவைக்கு
திருப்பி விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள்
விரும்புகின்றனர். படத்திற்கு தமிழ் பெயர் வைத்தால் கேளிக்கை வரி விலக்கு
அளிப்பது போன்ற சலுகைகளை விட, அந்தப் பணத்தைக் குழந்தைகளின் கல்விக்குப்
பயன்படுத்தலாம்.
———————————————————————————————————————————————–
1. இங்கு தயாரிப்பாளர்கள் எனும்போது, அரசியல்வாதிகளும், அதிலும் ஆளும்
அரசியல்வாதிகளாக, உள்ளார்கள். அத்தகைய அதிகாரம் கொண்டவர்களின் மீது என்ன
நடிவடிக்கை எடுக்க அதிகாரிகள் துணிவர்?
2. பல தொழிலதிபர்களும் உள்ளார்கள். ஏன் கல்லூரி வைத்து வியாபாரம்
செய்யும் முதலைகளே இதில் பணம் கொட்டுகின்றன.
3. நடிகை-நடிகர்களே தயாரிப்பாளர்களாக, அவர்களது உறவினர்கள் அவ்வாறு
ஈடுபடும்போது, ஊழல் இன்னும் அதிகமாகும். இதைத் தவிர “பினாமி” கோஷ்டி
வேறு!
4. ஊழல், லஞ்சம், வரி ஏய்ப்பு இல்லாமல் கருப்புப் பணம் வராது. ஆகவே இதில்
ஊறித்திளைக்கும் சினிமாகாரர்கள் (அதாவது நேரிடையாக மரைமுகமாக அத்துறையில்
ஈடுபடும் அனைவரும்) எப்படி சமூகத்தை – நாட்டைத் திருத்த முடியும்? ஆனால்
அவர்கல்தாம் எல்லா விழயங்களைப் பற்றியும் பேச வந்து விடுகிறார்கள்!
5. பணம், அதிகாரம், பலம் இவற்றைப் பயன்படுத்தி சாம-தான-தண்ட-பேத
யுக்திகளையும் புகுத்தி அரசாங்க அதிகாரிகளைத் தாக்கினால் அவர்கள் என்ன
செய்வார்கள்? கணக்கு எழுதுகின்றவர்கள் (Chartered Accoubtants etc)
அவ்வாறே எழுதுவார்கள்; நிதிநிலை அறிக்கையும் (Balance sheets) அவ்வாறே
சமர்ப்பிக்கப் படும்; வங்கி அதிகாரிகளும் உதவுவர்; பிறகென்ன?
6. அரசாங்க அதிகாரிகள் சபலமுள்ளவர்கள் என்றால், மற்ற தாக்குதல்களும்
உள்ளன. அதில் அவர்கள் படுத்துவிடுவார்கள். எப்படி அசையும்-அசையா
சொத்துகள் உள்ளனவோ, புலன்களால் உணரும்-உணராமல் இருக்கும் பொருட்கள்
(tangible and intangible goods and services) உள்ளனவோ அம்மாதிரியே பல
விஷயங்கள் உள்ளன.
7. நலத் திட்ட உதவிகள், கல்வி, திருமண உதவி என செய்து வந்த காலம் மலையேறி
விடவில்லை, அவையெல்லாம் தமக்குள் செய்து கொல்லப் படுகின்றன. எல்லாமே
“நமக்கு நாமே திட்டங்கள்தாம்”.
8. |சினிமா துறையில் புழங்கும் பல நூறு கோடி கறுப்புப் பணத்தை இதுபோன்ற
கல்விச் சேவைக்கு திருப்பி விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கல்வியாளர்கள் விரும்புகின்றனர்” – இதேன்ன கூத்து? அவர்களே படம்
எடுக்கிறார்கள், கல்லுரிகளும் வைத்திருக்கிறார்களே?
9. பொது மக்கள், குறிப்பாக நடுத்தர குடும்பத்தினர், மாத வருவாய்
உள்ளவர்கள், ஓய்வு பெற்றவர்கள் இவர்களிடமிருந்துதான் “சேமிப்பு” என்ற
முறையில் பணம் வெளிவரும். ஆகையால்தான் இவர்களைத்தான் எல்லாஒரும்
தாக்குவார்கள். வங்கிகள் வட்டிவிகிதத்தைக் குறைப்பது, வீடுகளில் திருட்டு
பயத்தை ஏற்படுத்துவது, தங்கத்தை வாங்கத் தூண்டுவது, நிலத்தை வாங்கத்
தூண்டுவது, அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏற்றி அதன் மூலம் கொள்ளை
அடிப்பது முதலியன அவர்களின் செயல்முறை நெறியாக (modus operandi) உள்ளது.
10. ஆகவே, மக்கள் முதலில் இத்தகைய “ஊழல் சுழற்ச்சியில்”
ஈடுபட்டுள்ளவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களைத் தனிமைப் படுத்தும்
வேலையைச் செய்யவேண்டும். அரசியல்வாதிகள்-சினிமாத்துரையினர்-கல்லுரி/
தொழிற்சாலை அதிகாரிகள்-அரசு அதிகாரிகள்-இடைத்தரகர்கள்-என நீளும் இந்த
இனத்தை கட்டுப்படுத்தி, ஒழித்தால்தான் நல்ல முடிவு ஏற்படும்.
குறிச்சொற்கள்: ஊழலிற்கு புதுவடிவம் தரும் சினிமாதுறை, சினி-ஊழல், சினிமா
ஊழல், சினிமாதுறையில் கருப்புப்பணம், நடிக-நடிகையர் தயாரிப்பாளர்கள்
கூட்டு, வரி ஏய்ப்பு
http://liberalizationprivatizationglobalization.wordpress.com/2009/11/08/கறுப்பு-பணத்துடன்-களமிறங/