வைகாசி 18, 2047 (31.05.2016)
செவ்வாய் மாலை 1730 மணி.
சாவகச்சேரியில் இருந்து தெற்காகத்
தனங்களப்பு நோக்கும் சாலை.
கிழக்கே சாலையைத் தழுவிக்
கரைமோதும் உவர்க் கடல்.
யாழ்ப்பாணக் கடனீரேரியின்
உள்நீட்டமான கச்சாய்க் கடல்.
நெடிய கால்கள்.
மென்சிவப்புக் கால்கள்,
செங்கால்கள்.
தவம் செயும் தவத்தோர் ஒரு காலில் நிற்பர்.
பூநாரைகள் ஒற்றைக் காலில் நின்றன.
மற்றக் காலை மடித்து
நிற்கும் காலில் ஊன்றினவோ?
தீயின் தழல் எடுத்து,
சாயம் வரக் குழைத்து,
தூரிகை மயிர் சிதற,
சிறகை இறகுகளாக விரிக்க,
இக்கால ஓவியர் போல
இறகு நுனிகளைத் தழல் வண்ணமாக்கி
("செந்தழல் புரை திருமேனி...." என்பார் திருப்பள்ளியெழுச்சியில் மாணிக்கவாசகர்)
சிறகின் இடையைச் சாம்பல் நிறமாக்கி
கொள்ளை அழகைக் காட்சியாக்கும்
இயற்கையின் பெரும் பெற்றி.
பனங்கிழங்கைப் பிளக்குக
இரு பாதிகளையும் சொண்டுகளாக்குக.
கூர்முனையை ஒடித்து வளைக்க.
வெண் சாயத்தைக் கிழங்குக்கும்
கருஞ் சாயத்தைக் கூர்முனைக்கும்
தடவுக.
நீருள் துழாவி உணவு கொள்ளும்
அழகைக் காட்சியாக்கும
இயற்கையின் பெரும் பெற்றி.
எட்டிக் கால் வைத்துத்
தாவித் தாவி
நடக்கும் நடை அழகா?
உணவுக்குக் குனிந்து கொறிக்க
வளையும் கழுத்து அழகா?
இறகை உதறிச் சிறகை விரித்து
வண்ணக் கலவையாய்ப் ஒருசேரப்
பறக்கும் பூநாரைகள் அழகா?
கண்கள் இமைக்கவில்லை.
எண்ணம் கலையவில்லை
நினைவு மயங்கி நின்றேன்.
உள்ளம் ஒடுங்கி நின்றேன்.
கச்சாய்க் கடலின் கரையெங்கும் நாரைகள்.
சார்ந்த செந்நெல் வயலெங்கும் நாரைகள்.
தென்துருவக் கரையோர நாடுகளான
தென் ஆரிபிக்கா தென்அமெரிக்கா நாடுகளில்
இக்காலம் உறைபனிக் குளிர்க் காலம்
பூமிப் பந்தின் நடுக்கோட்டை நோக்கித்
வெப்ப வலையத்தை நோக்கி,வலசையாகத்
தென்கண்ட நாரைகள் பெயரும் காலம்.
அவைதான் இவையோ?
Flamingo Common name
Phoenicopterus Generic name
சத்திமுற்றப் புலவரின் பாடல்
தனிப்பாடல் திரட்டில் வரும்
செங்கால் நாரைகளோ பூநாரைகள்?
"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்..."
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பூநாரைகள் கூட்டம் கூடு கட்டிக் குஞ்சு பொரித்து வாழ்தலை நேரில் கண்டு படம் பிடித்து அவை பற்றி எழுதிய எனது கட்டுரை இணைப்பிலே;

2016-06-02 9:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
On Wednesday, June 1, 2016 at 10:15:52 PM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:பூநாரைகள் கூட்டம் கூடு கட்டிக் குஞ்சு பொரித்து வாழ்தலை நேரில் கண்டு படம் பிடித்து அவை பற்றி எழுதிய எனது கட்டுரை இணைப்பிலே;
நனிநன்றி, கல்பட்டு நடராஜன் ஐயா. உங்கள் கட்டுரை படித்தேன். http://kalpattaarpakkangkal.blogspot.com/2013/02/17.html
மா. கிருஷ்ணன் “White Stork" பற்றிய ‘நாராய் நாராய் செங்கால் நாராய்” பாடல் மொழியாக்கத்தை (ஆங்கிலம்) அனுப்புகிறேன்.அரிய ஆவணம் அஃது.காந்தளகம் சச்சிதானந்தம் பார்த்தது ஃப்லெமிங்கோ பறவை அன்று. அது Painted Stork தான்.
The Journey: From Flamingo City to Rann Of Kutch’s Anda Bet Island.
While the Flamingos of Sewri might be renowned all over Bombay, they’re actually Lesser Flamingos, found in India and migrate within the country itself. Flocks of Greater Flamingos, however, start descending into Flamingo City to an island called Anda Bet, in the Greater Rann of Kutch which is the largest nesting site of the species in the country. In 2011, around 10 lakh flamingos were recorded in the island. They settle down in the month of October only .
Flamingos are fussy, and breed in ideal conditions only. The level of water and availability of food are all take into account before the swarm of pink decides to settle down. However, since their last migration in 2011, the flamingos have disappeared and have not made any more arrivals. Although they are known to breed once every three years, their sudden disappearance is a cause of concern, experts believe. Another cause of worry in the Rann of Kutch salt marsh is that greater flamingos are occasionally electrocuted when they sit on 1000-watt electric cables near their breeding areas – only recently, 139 such deaths were recorded. Fingers are crossed as we hope that the majestic swarm of pink makes an appearance this year.

Greater Flamingo, Image source – clementfrancis.com

~NG
கல்பட்டு நடராஜன் ஐயா. உங்கள் கட்டுரை படித்தேன். http://kalpattaarpakkangkal.blogspot.com/2013/02/17.html
வைகாசி 18, 2047 (31.05.2016)
செவ்வாய் மாலை 1730 மணி.
சாவகச்சேரியில் இருந்து தெற்காகத்
தனங்களப்பு நோக்கும் சாலை.
கிழக்கே சாலையைத் தழுவிக்
கரைமோதும் உவர்க் கடல்.
யாழ்ப்பாணக் கடனீரேரியின்
உள்நீட்டமான கச்சாய்க் கடல்.
நெடிய கால்கள்.
மென்சிவப்புக் கால்கள்,
செங்கால்கள்.
தவம் செயும் தவத்தோர் ஒரு காலில் நிற்பர்.
மஞ்சள் மூக்கு நாரைகள்
பறக்கும் மஞ்சள் மூக்கு நாரைகள் அழகா?
கண்கள் இமைக்கவில்லை.
எண்ணம் கலையவில்லை
நினைவு மயங்கி நின்றேன்.
உள்ளம் ஒடுங்கி நின்றேன்.
கச்சாய்க் கடலின் கரையெங்கும்
மஞ்சள் மூக்கு நாரைகள்
சார்ந்த செந்நெல் வயலெங்கும்
மஞ்சள் மூக்கு நாரைகள்
Painted Stork
Mycteria leucocephala
நேற்றைய பதிவில் பூநாரைகள் / செங்கால் நாரைகள் எனத் தவறாக எழுதினேன். உடனே அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஆய்வாளர், என் அருமை நண்பர் பொள்ளாச்சி பேரா. முனைவர் நா. கணேசன் அவர்கள் மின்தமிழ்க் குழுமத்தில் பின்வரும் குறிப்பை எழுதினார்.
அன்பார்ந்த சச்சிதானந்தம் ஐயா,
இந்தப் பறவைகள் Painted Stork எனப்படுபவை. இவை வலசை போகாத பறவைகள். https://en.wikipedia.org/wiki/Painted_stork
Mycteria leucocephala - பறவையியற்பெயர்.
இங்கே பாருங்கள்: https://www.google.com/search…
செங்கால் நாராய் என சத்திமுற்றப் புலவர் பாடுபவை White Stork இவை குமரியில் இருந்து இமயத்திற்கு வலசை செல்பவை.
இப்பாடல் பற்றி நிறைய திரு. தியடோர் பாஸ்கரனிடம் பேசியுள்ளேன். https://en.wikipedia.org/wiki/White_stork
அ. மாதவையா மகன், இயற்கையாளர் மா. கிருஷ்ணன் செங்கால் நாரை இதுவென விரிவாக எழுதியுள்ளார். திரு. தி. பாஸ்கரன் மூலமாக, மா. கிருஷ்ணனின்
https://en.wikipedia.org/wiki/Madhaviah_Krishnan மொழிபெயர்ப்பை ஒருமுறை தேடிப் பிடித்தேன்.
அச்சாகாத பாடல் அது. மின்தமிழ் குழுமத்தில் குறிப்பு எழுதினேன். செங்கால் நாரை வலசை போகும் நாடுகள்:
https://en.wikipedia.org/wiki/White_stork… தென்னிந்தியாவில் செங்கால் நாரைகள் (வலசை செல்பவை) வருமிடங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றன.
நா. கணேசன்
வடமாகாணச் சுற்றுச் சூழல் அமைச்சர் என் கெழுதகை நண்பர், திரு. ஐங்கரநேசன் முகநூலில் என்னைத் திருத்தினார்.
Ayngaranesan Ponnudurai
Dear Sir, This is not a Flamingo [poonaarai]- This is known as Painted stork = manchal mookku naarai. Flamingo = Poonaarai
அன்னாருக்கும் கணேசனாருக்கும் நன்றி.
தொலைவில் இருந்து பார்த்தேன். கைப்பேசியில் படமாக்கினேன். சாயம், ஓவியம், தூரிகை என Painted Stork ஆக என் குறிப்பிலும் எழுதினாலும் நினைவு மயக்கத்தில் பூநாரை எனத் தவறாக எழுதினேன். பொறுத்தருள்க.
கிருஷ்ணன்,
சிங்கை