நம்மாழ்வார் மோட்சம்

238 views
Skip to first unread message

shylaja

unread,
Jan 6, 2010, 9:54:17 AM1/6/10
to minT...@googlegroups.com, நம்பிக்கை - Nambikkai
ராப்பத்து!
 
இந்தப் பத்து நாளும் இரவு நேரக் கோலாகலங்கள்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் ஓதப்படுகிறது! நூறு நூறு பாசுரங்களாக பத்து நாட்கள் ஓதப்படுகின்றன.

அதன் பின்னர் நம்மாழ்வார் மோட்சம்!

இறுதி நாளில் நம்மாழ்வாரின் மற்றைய மூன்று பிரபந்தங்களும் இராமானுச நூற்றந்தாதியும் ஓதப்படுகின்றன
திருமங்கையாழ்வார் காலத்தில் அரங்கனின் திருவோலை ஆழ்வார் திருநகரிக்கு அனுப்பப்பட்டு அங்கே மதுரகவி ஆழ்வாரால் நிலைநிறுத்தப்பட்ட நம்மாழ்வாரின் திருமுன்பு அவ்வோலை படிக்கப்படும்.

நம்மாழ்வார் அங்கிருந்து வந்து திருவரங்கத்தில் இத்திருவிழா முழுதும் அரங்கனுடன் வீற்றிருந்து பின் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

ஆளவந்தாருக்குப் பிறகு.....
இராமானுசர் காலத்தில் . திருவரங்கன் திருக்கோயிலிலேயே நம்மாழ்வாரை எழுந்தருளிவித்தார் இராமானுசர்.

நம்மாழ்வாரும் அரங்கனுமாய் அமர்ந்து இவ்விழாவை நடத்தும்படி செய்தார். அப்போதிலிருந்து அரங்கனின் திருவோலை திருவரங்கத்தில் இருக்கும் நம்மாழ்வார் திருமுன்பே படிக்கப் பட்டு திருவிழா தொடங்குகிறது
21ம் நாள் நம்மாழ்வாரின் மற்றைய மூன்று பிரபந்தங்களும் இராமானுஜ நூற்றந்தாதியும் அடங்கிய 1000 பாசுரங்கள் ஓதப்படுகின்றன. இப்படியாக இந்த 21 நாட்களும் தமிழ் வேதமான நாலாயிர திவ்ய பிரபந்தம் ஓதப்படுகின்றன.
 
இன்று  இன்னும் சிலமணி நேரங்களில்  நம்மாழ்வார் மோட்சம் கண்கொள்ளாக்காட்சியாக உங்களுக்கு தொலைக்காட்சிப்பெட்டியில் வரப்போகிறது!ஆமாம் சங்கரா டிவி சேனலில் வரும் இன்றிரவு நேரடி ஒளிபரப்பு ஸ்ரீரங்கமிருந்து.!
சங்கரா தொலைக்காட்சி நிலையம் இங்கு இருப்பதால்  பின்னணிவர்ணனை குரல்கொடுக்க  திருவரங்கப்ரியா  கிளம்பிவிட்டாள்.
  நம்மாழ்வாரை,அரங்கனைக்கண்குளிரக்கண்டு புண்ணியம் எய்துக! என் குரலையும் கேட்டு நாளை கருத்து சொல்லுங்க! நன்றி


--
ஷைலஜா

///

மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்*இவ்
வையந் தன்னொடும் கூடுவ  தில்லையான்*
ஐயனே! அரங்கா! என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டாழிந்தேன் என்தன்  மாலுக்கே’’எத்தி றத்திலும் யாரொடும் கூடும்*அச்
சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்*
அத்தனே! அரங்கா! என்ற ழைக்கின்றேன்*
பித்த னாயொழிந்தேன் எம்பி ரானுக்கே
//////

meena muthu

unread,
Jan 6, 2010, 10:02:57 AM1/6/10
to mint...@googlegroups.com, நம்பிக்கை - Nambikkai
திருவரங்கப்ரியாவின்(பக்திப்பரவச)குரலை கேட்கவும் கொடுத்துவைத்திருக்கவேண்டுமோ...!வாழ்த்துகள் ஷைலு :)


2010/1/6 shylaja <shyl...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Reply all
Reply to author
Forward
0 new messages