முதன்முறையாக ஷுக்கள் பெற்றதில் மாணவர்கள் மகிழ்ச்சி

16 views
Skip to first unread message

CHAIRMAN MANICKA VASAGAM GOVERNMENT AIDED MIDDLE SCHOOL

unread,
Sep 25, 2021, 5:18:12 AM9/25/21
to

Thanks & Regards,

L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam Middle School,
Devakottai.630 302.
Sivagangai Dist.
TamilNadu.
WHATSAP  : 08056240653



 மாணவர்கள் அரசின் விலையில்லா பொருள்களை பயன்படுத்தி படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும் - துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேண்டுகோள்

தமிழக அரசின் விலையில்லா ஷுக்கள் ,புத்தக பை ,காலணிகள் ,கலர் பென்சில்கள் ,கணித உபகரண பெட்டி வழங்குதல்

முதன்முறையாக  ஷுக்கள் பெற்றதில் மாணவர்கள் மகிழ்ச்சி


தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா ஷுக்கள் ,புத்தக பை ,காலணிகள் ,கலர் பென்சில்கள் ,கணித உபகரண பெட்டி பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம்   வழங்கப்பட்டது.

                         
                தமிழக பள்ளி கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள்  ஷுக்கள் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தனர்.  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம்
விலையில்லா ஷுக்கள் ,புத்தக பை ,காலணிகள் ,கலர் பென்சில்கள் ,கணித உபகரண பெட்டி ஆகியவற்றை தேவகோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காலைலிங்கம் வழங்கி பேசுகையில் , நாங்கள் படிக்கும் காலத்தில் மிகவும் சிரமமான சூழ்நிலையில் படித்தோம்.ஆனால் இப்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அனைத்து விதமான பொருள்களும் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.சத்துணவு சரிவிகித உணவாக வழங்கப்படுகிறது.மாணவர்கள் அரசின் சலுகைகளை பயன்படுத்தி நல்ல முறையில் கல்வி கற்கவேண்டும் என்று பேசினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலக கேஷியர் கருப்புசாமி முன்னிலை வகித்தார்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்து மீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.முதன்முறையாக மாணவர்கள் ஷுக்கள் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தனர்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் விலையில்லா ஷுக்கள் ,புத்தக பை ,காலணிகள் ,கலர் பென்சில்கள் ,கணித உபகரண பெட்டி ஆகியவற்றை தேவகோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காலைலிங்கம் வழங்கி வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலக கேஷியர் கருப்புசாமி முன்னிலை வகித்தார்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்து மீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.

 

 





IMG_5868.JPG
IMG_5873.JPG
IMG_5879.JPG
IMG_5880.JPG
IMG_5851.JPG
IMG_5853.JPG
IMG_5896.JPG

தேமொழி

unread,
Sep 26, 2021, 5:50:26 PM9/26/21
to மின்தமிழ்
1school supply.JPG
இந்த முடிவுக்காகவே ஆட்சியில் இருக்கும் அரசை எவ்வளவும் பாராட்டலாம் 

//கடந்த ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 65 லட்சம் விலையில்லா புத்தகப் பைகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில், முன்னாள் அதிமுக முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து குறித்து, முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்ட போது, இந்த புத்தக பைகளை வாங்க 13 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இது மக்களின் வரிப்பணம், 13 கோடி ரூபாய் இருந்தால் அதை பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வேறு திட்டம் செயல்படுத்துவேன். அந்த புத்தகப்பையில் அவர்களின் படமே இருந்துவிட்டுப் போகட்டும், என பெருந்தன்மையுடன் பேசி விட்டுக்கொடுத்தார்.//

source -
Reply all
Reply to author
Forward
0 new messages