மண்ணின் குரல்: மார்ச் 2016:திருப்பாச்சேத்தி அரிவாள்

67 views
Skip to first unread message

Suba

unread,
Mar 5, 2016, 3:55:36 AM3/5/16
to மின்தமிழ், Dr.Subashini
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 




தமிழகத்தின் திருப்பாச்சேத்தி என்னும் ஊர் நீண்ட காலமாக அரிவாள் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற ஒரு ஊர். சிவகங்கை சுதந்திரப் போராட்டத்தின் போது இப்பகுதியில் இருக்கும் கொல்லர்கள் மூலமாகத்தான் இங்கு போர் ஆயுதங்கள் செய்யப்பட்டன. மருது பாண்டியர்கள் சிவகங்கையை ஆண்ட சமயத்தில் வெள்ளையர்களை எதிர்த்து செய்த போரில் பயன்படுத்திய ஈட்டிகள், வீச்சு அரிவாள்கள், வெட்டுக்கத்திகள், பாதுகாப்பு கேடயங்கள் போன்றவை  திருப்பாச்சேத்தியில் தான் தயாரிக்கப்பட்டன. 

தமிழகத்தில் தற்சமயம் புழக்கத்தில் உள்ள அரிவாள் வகைகள் காடுகளை வெட்ட, விவசாயப் பணிகளுக்காக, தேங்காய் மட்டையை உரிக்க என்பதோடு கிராமிய கோயில்களில் நேர்த்திக் கடன் சார்த்த என வெவ்வேறு வகைகளில் பயன்பாட்டில் இருக்கின்றன. அரிவாள் என்றால் உடன் நம் சிந்தனையில் தோன்றுவது திருப்பாசேத்தி அரிவாள் அல்லவா? அந்த  திருப்பாச்சேத்தி பகுதியில் சந்தைச்சாலையில் இருக்கும் ஒரு அரிவாள் செய்யும் பட்டறையில் அரிவாள் செய்யப்படுவதை இந்த விழியப் பதிவில் காண்போம். 

கால மாற்றத்தில் திருப்பாச்சேத்தி அரிவாள் தொழிலும் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் வன்முறை கலாச்சாரத்தில் பயன்படும் வகையில் இருப்பதாலும்  தற்சமயம்  அரிவால் பட்டறை நடத்துபவர்கள் சில கட்டுப்பாடுகளையும்  மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகின்றது.  பட்டறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலையும் பாதுகாப்பான முறையில் அமையவில்லை. கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக்கு அருகிலேயே மணிக்கனக்காக உட்கார்ந்து தான் உருவாக்கும் அரிவாள் ஒவ்வொன்றையும் தட்டி தட்டி செம்மையாக்கும் பனியில் ஈடுபடும் தொழிலாலர்களின் நிலை வருத்தப்படக்கூடிய வகையில் தான் இருக்கின்றது. இவ்வகை தொழிலாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு வசதிகள்  அமைய வேண்டியதை வலியுறுத்த வேண்டியதும் இது தொடர்பாக விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டியதும் அவசியமே.

ஏறக்குறைய 6 நிமிடப்  பதிவு இது. 

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2016/03/blog-post.html
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=iXl05N8wnJQ&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

நன்றி: திருமதி.யோகலட்சுமி, டாக்டர்.மலர்விழி மங்கை

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Suba

unread,
Mar 5, 2016, 4:19:41 AM3/5/16
to மின்தமிழ், Dr.Subashini
திருப்பாச்சேத்தி அரிவாள் செய்வது பற்றிய பதிவை தமிழ் மரபு அறக்கட்டளை  வலைப்பக்கத்தில் இணைக்க வேண்டும் என்று 2014 தமிழகம் சென்றிருந்த போது நினைத்திருந்தேன். நேரம் போதாத காரணத்தினால் அது அமையவில்லை. சகோதரர் காளைராசன் அவர்கள் கொடுத்திருந்த முதல் பட்டியலில் அது இருந்தாலும் செய்து முடிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டும் முன்னராகவே நான் நமது த.ம.அ வின் மதுரை பொறுப்பாளர் இணைப்பேராசிரியர் டாக்டர். மலர்விழி மங்கை அவர்களுக்கு கொடுத்திருந்த பட்டியலில் இணைத்திருந்தேன். 

மதுரை பயணத்தின் இரண்டாம் நாள் மதியம்  மணலூர் புனிதாவோடு நானும் மலர்விழியும் திருப்பாச்சேத்தி சென்று சந்தைச்சாலையில் நடந்து அங்கிருந்த ஒரு பட்டறையில் இந்தப் பதிவை செய்தோம்.

சந்தைச் சாலையில் அச்சமயம் காய்கறி வியாபாரிகள் நிறைய காய்கறிகள் விற்பனைக்கு போட்டிருந்தனர். திருப்பாச்சேத்தி உயிரோட்டமுள்ள ஒரு கிராமம் என்றே எனக்கு மனதில் பட்டது. அதிக நேரம் இல்லாததால் உடன் பதிவை செய்து விட்டு புறப்பட்டு விட்டோம். நேரத்தை கணக்கிட்டு செயல்படுத்துவதில் மலர்விழி என் மனம் புரிந்து நடப்பவர் என்று நிச்சயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். டாக்டர். மலர்விழியின் சரியான திட்டமிடுதலால் அன்று ஒரு சில நல்ல பதிவுகளை செய்து முடித்தோம்.  அவரை இவ்வேளையில் பாராட்ட வேண்டும். 

சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.





அரிவாள் காய்ச்சப்படுகின்றது


பட்டறையின் உரிமையாளர்


பேட்டியின் போது


இணைப்பேராசிரியர் டாக்டர்.மலர்விழி மங்கை


பட்டறையில் தொழிலாளி

பட்டறையில்

சுபா














Innamburan S.Soundararajan

unread,
Mar 5, 2016, 4:33:53 AM3/5/16
to mintamil, Dr.Subashini
திருப்பாச்சேத்தி உயிரோட்டமுள்ள கிராமமாக இருப்பதற்கும், அந்தவூர் அரிவாள் பிரபலமாக இருப்பதற்கும் காரணம் க்வாலிட்டி கெளரதை.

இனம் கண்டு கொண்டதால் ஒரு பாடல்.

'வேல் விழியை அறிந்த யாம் கண்டுகொண்டோம்.
 மலர் விழி அறி வாளின் வீச்சை.

நான் பதவிசு என்கிறார் அசையா மடந்தை. அதான் இத்துடன் ஓடி விடுகிறேன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

yesu rajan

unread,
Mar 5, 2016, 4:44:03 AM3/5/16
to mintamil
என்னதான் அரிவால் கையில் வைத்திருந்து ஓங்கி காண்பித்தாலும் முகம் காட்டி கொடுத்து விடுகிறது

சம்பந்தமில்லாத பொருள் கையில் வச்சிருங்காங்க என்று :)

யேசுராஜன்

yesu rajan

unread,
Mar 5, 2016, 4:45:20 AM3/5/16
to mintamil
திருப்பாசேத்திக்கு முன்னால் மடப்புரம் காளி கோவில் உள்ளதே அங்கு சென்றீர்களா

மிக பிரசித்தி பெற்ற கோவில்

yesu rajan

unread,
Mar 5, 2016, 4:47:04 AM3/5/16
to mintamil
/அரிவால்// அல்ல அரிவாள் தட்டச்சு பிழைக்கு மன்னிக்கவும்

Suba

unread,
Mar 5, 2016, 4:54:03 AM3/5/16
to மின்தமிழ்
2016-03-05 10:45 GMT+01:00 yesu rajan <yesura...@gmail.com>:
திருப்பாசேத்திக்கு முன்னால் மடப்புரம் காளி கோவில் உள்ளதே அங்கு சென்றீர்களா

மிக பிரசித்தி பெற்ற கோவில்

​இலை அன்று சாத்தியப்படவில்லை. பட்டியலில் இருக்கின்றது. 
வரும் டிசம்பர் அங்கே இருப்பேன். 

சுபா

Innamburan S.Soundararajan

unread,
Mar 5, 2016, 5:35:23 AM3/5/16
to mintamil
🏃அறி வாள் தட்டச்சு பிழை அல்ல! 

Singanenjam Sambandam

unread,
Mar 5, 2016, 9:10:00 AM3/5/16
to mint...@googlegroups.com
கண்டு மகிழ்ந்தேன்.....மிக்க நன்றி......இடையே நீங்கள்  அடுப்பு எனும்  சொல்லை பயன் படுத்துகீரீகள்.  தெற்கே  எனக்கு தெரியாது, எங்கள் பக்கம் இவை உலை (கொல்லன் உலை) என்று அழைக்கப்படுகின்றன. 

வில் பட்டை என அவர்கள் சொல்வது வாகனங்களின் spring plates.It's a hardened steel alloy,
 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 5, 2016, 10:39:19 AM3/5/16
to mintamil

வணங்கம்.

அருமையானதொரு பதிவு. 
திருப்பாச்சேத்தி அருகில் உள்ள ஆவரங்காடு கிராமம் வெட்டு குத்து இவற்றிற்குப் பேர்போனது.  கொலைகளில் பயன்படுத்தப்பெற்ற அனைத்து ஆயுதங்களும் திருப்பாச்சேத்தியில் தயாரிக்கப்பட்டவை.
எனவே தயாரிப்பில் இருந்தவர்கள் கொலை வழக்குகளில் முக்கிய சாட்சிகளாகக் காவல்நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அழைந்தே நொடித்துப் போயினர்.
தொழிலும் தேய்ந்து போனது.
ஊரெங்கும் இருந்த பட்டரைகள் இப்போது ஒன்றிரண்டாக உள்ளன.

On 05-Mar-2016 2:25 pm, "Suba" <ksuba...@gmail.com> wrote:
>
> வணக்கம்.
>
> தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 
>
>
> ​
>

> தமிழகத்தின் திருப்பாச்சேத்தி என்னும் ஊர் நீண்ட காலமாக அரிவாள் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற ஒரு ஊர். சிவகங்கை சுதந்திரப் போராட்டத்தின் போது இப்பகுதியில் இருக்கும் கொல்லர்கள் மூலமாகத்தான் இங்கு போர் ஆயுதங்கள் செய்யப்பட்டன. மருது பாண்டியர்கள் சிவகங்கையை ஆண்ட சமயத்தில் வெள்ளையர்களை எதிர்த்து செய்த போரில் பயன்படுத்திய

கைத்துப்பாக்கிகள் (மின்தமிழில் துப்பாக்கிக் கவுண்டர் இழை) ஈட்டிகள், வீச்சு அரிவாள்கள், வெட்டுக்கத்திகள், பாதுகாப்பு கேடயங்கள் போன்றவை  திருப்பாச்சேத்தியில் தான் தயாரிக்கப்பட்டன. 


>
> தமிழகத்தில் தற்சமயம் புழக்கத்தில் உள்ள அரிவாள் வகைகள் காடுகளை வெட்ட, விவசாயப் பணிகளுக்காக, தேங்காய் மட்டையை உரிக்க என்பதோடு கிராமிய கோயில்களில் நேர்த்திக் கடன் சார்த்த என வெவ்வேறு வகைகளில் பயன்பாட்டில் இருக்கின்றன. அரிவாள் என்றால் உடன் நம் சிந்தனையில் தோன்றுவது திருப்பாசேத்தி அரிவாள் அல்லவா? அந்த  திருப்பாச்சேத்தி பகுதியில் சந்தைச்சாலையில் இருக்கும் ஒரு அரிவாள் செய்யும் பட்டறையில் அரிவாள் செய்யப்படுவதை இந்த விழியப் பதிவில் காண்போம். 
>
> கால மாற்றத்தில் திருப்பாச்சேத்தி அரிவாள் தொழிலும் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் வன்முறை கலாச்சாரத்தில் பயன்படும் வகையில் இருப்பதாலும்  தற்சமயம்  அரிவால் பட்டறை நடத்துபவர்கள் சில கட்டுப்பாடுகளையும்  மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகின்றது.  பட்டறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலையும் பாதுகாப்பான முறையில் அமையவில்லை. கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக்கு அருகிலேயே மணிக்கனக்காக உட்கார்ந்து தான் உருவாக்கும் அரிவாள் ஒவ்வொன்றையும் தட்டி தட்டி செம்மையாக்கும் பனியில் ஈடுபடும் தொழிலாலர்களின் நிலை வருத்தப்படக்கூடிய வகையில் தான் இருக்கின்றது. இவ்வகை தொழிலாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு வசதிகள்  அமைய வேண்டியதை வலியுறுத்த வேண்டியதும் இது தொடர்பாக விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டியதும் அவசியமே.
>
> ஏறக்குறைய 6 நிமிடப்  பதிவு இது. 
>
> விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2016/03/blog-post.html
> யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=iXl05N8wnJQ&feature=youtu.be
>
> பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
>
> நன்றி: திருமதி.யோகலட்சுமி, டாக்டர்.மலர்விழி மங்கை
>
> அன்புடன்
> முனைவர்.சுபாஷிணி
> [தமிழ் மரபு அறக்கட்டளை] ​
>

N. Kannan

unread,
Mar 6, 2016, 3:22:51 AM3/6/16
to மின்தமிழ்
அன்பின் சுபா:

இப்பதிவு என்னை நீண்ட நனவிடைதொய்தலுக்கு இட்டுச் சென்றது. குழந்தையாய் முக்குலத்தோருடன் வாழ்ந்த போது எப்போது வெட்டு, எப்போது குத்து என்று இருக்கும். எல்லோர் வீடுகளிலும் ஒரு கத்தியாவது பாதுகாப்பிற்கு இருக்கும். நீங்கள் முன்பொரு பதிவில் காட்டிய ஓர் வாக்கிங் ஸ்டிக் கத்தி என் தாத்தா அறையிலிருக்கும். நீளமாக, ஒல்லியாக, வாக்கிங் ஸ்டிக் உறைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும். சில நேரம் வன விலங்குகளிடமிருந்து பாது காத்துக் கொள்ளவும் ஆயுதம் தேவைப்பட்டது. காலங்கள் மாறிவிட்டன. 'தேவர் மகன்' படத்தில் கமல் கடைசிக் காட்சியில் சொல்வது போல், "போங்கடா! இந்த கத்தி, அரிவாளைப் போட்டுட்டு போய் படிங்கடா!" என்பது போல் அடுத்தடுத்த தலைமுறை கல்வி கேள்விகளில் இறங்கிவிட்டது என்று நம்புகிறேன். திருப்பூவண வாழ்வு ஏதோ பூர்வ ஜென்மம் போலுள்ளது!

கொல்லன் உலையைப் பார்த்துக் கொண்டு நிற்பது பள்ளிச் சிறுவர்களின் பொழுது போக்கு!

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்! 
அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் 
வெந்து தணிந்தது காடு !

நா.கண்ணன்

2016-03-05 17:19 GMT+08:00 Suba <ksuba...@gmail.com>:



இணைப்பேராசிரியர் டாக்டர்.மலர்விழி மங்கை

​ஐயோ! இவங்க யாரு! :-)

க.>​
 

Innamburan S.Soundararajan

unread,
Mar 6, 2016, 3:58:08 AM3/6/16
to mintamil
சுபாஷிணியிடம் ஒரு அவசரக்கோரிக்கை.
முன்பொரு பதிவில் காட்டிய ஓர் வாக்கிங் ஸ்டிக் கத்தி..,

ஒரு காலகட்டத்தில் நாம் நன்றாகவே தமிழில் எழுதி வந்த காலகட்டத்தில், சைகிளில் அமர்ந்தபடியே மாங்காய் அடிப்பதை பற்றி, அதற்கு தாத்தாவின் வாக்கிங் ஸ்டிக் கத்தி உதவியதை பற்றி ஒரு அருமையான [எல்லாரும் அப்படித்தான் சொன்னார்கள்.] கட்டுரையை மின் தமிழில் வடித்திருந்தேன். தற்காலம், அது காணக்கிடைக்கததால், மனம் வெறிச்சு என்று கிடக்கு. கொஞ்சம் தேட உதவி தேவை என்று எஸ்.ஓ.எஸ்.
இ.


--

Malarvizhi Mangay

unread,
Mar 6, 2016, 10:27:39 AM3/6/16
to mint...@googlegroups.com

கண்ணன் அவர்களே எப்புடி எங்க entry.
That's Dr.Suba.But i could 'nt expect this shock. Now l consider as a women's day
gift for me from our beloved THF.
Thanks a lot.

Reply all
Reply to author
Forward
0 new messages