உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு -2026; அங்கோர் வாட் - கம்போடியா-13/11/2026- 18/11/2026

6 views
Skip to first unread message

தேமொழி

unread,
12:10 AM (16 hours ago) 12:10 AM
to மின்தமிழ்
‘தெள்ளமுதின் மேலான முத்திக் கனியே என் முத்தமிழே’
என மூத்தவளாம் தமிழன்னையை கொண்டாட,அவள் புகழ் பாட,உங்கள் கவித்துவ சிறப்பை உலகெங்கும்  பரவச் செய்ய,அங்கோர் தமிழ்ச் சங்கம் மீண்டும் உங்களை  கம்போடியா அழைக்கிறது.அங்கோர் தமிழ்ச் சங்கம் மற்றும் கம்போடியா கலை மற்றும் பண்பாட்டுத் துறை இணைந்து நடத்தும் இந்நிகழ்வில் மாநாட்டுப்  பங்கேற்புச் சான்றிதழ்கள் அங்கோர் தமிழ்ச் சங்கம், கம்போடியா  கலை மற்றும் பண்பாட்டுத் துறைச் சார்பாக வழங்கப்படுகிறது.
இதுவரை 2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இரு உலகக் கவிஞர் மாநாடுகளை  நடத்தி சிறப்புப் பெற்றது நம் அங்கோர் தமிழ்ச் சங்கம்.மீண்டும் மூன்றாவது உலகக் கவிஞர் மாநாட்டை சிறப்புற நடத்த முடிவு செய்துள்ளது.
நவம்பர் 13.11.2026 முதல் 18.11.2026 வரை,முதல்  இரு நாட்கள் மாநாடு மற்றும் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
13.11.2026 சியம் ரீப் நகரம் வந்தடைதல்.
14.11.2026 முதல் நாள் மாநாடு
15.11.2026 இரண்டாம் நாள் மாநாடு
16.11.2026  அங்கோர்வாட் மற்றும் முக்கிய வரலாற்று நினைவிட சுற்றுலா.
17.11.2026 நாம் குல்லென் அருவி சுற்றுலா
18.11.2026 பயண நிறைவு மற்றும்  புறப்பாடு.
இந்த மாநாட்டிற்கானக் கட்டணம்  சுமார் 450 அமெரிக்க டாலர்கள்.விமானக் கட்டணம்  இதில் சேர்க்கப்பட மாட்டாது.உணவு,தங்குமிடம்,சுற்றுலா ஆகியவை மட்டுமே 450 டாலர் கட்டணத்தில் சேரும். அனைவரும் வந்து சிறப்புடன் இம்மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்தி தர வேண்டுகிறோம்.நன்றி.
த.சீனிவாசராவ்
தலைவர்
அங்கோர் தமிழ்ச் சங்கம்
கம்போடியா.

Cambodia1.jpg
Cambodia2.jpg
Cambodia3.jpeg
Cambodia4.jpeg
````````````````````````````````````````````
Reply all
Reply to author
Forward
0 new messages