2. வேந்தனும் வருணனும்
http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=296&pno=144
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
என்று தொல்காப்பியம் (பொருள். அகத்திணையியல், நூற்பா. 5) கூறுகிறது. இதில் கூறப்பட்ட வேந்தன், வருணன் என்னும் தெய்வங்கள் எவை? அத்தெய்வங்களின் வரலாறு என்ன? சிலர் கருதுவது போல அத்தெய்வங்கள் ஆரியத் தெய்வங்கள்தானா? என்பதை ஆராய்வோம்.
தீம்புனல் உலகமாகிய மருத நிலத்தின் தெய்வம் வேந்தன் என்றும், பெருமணல் உலகமாகிய நெய்தல் நிலத்தின் தெய்வம் வருணன் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது. எனவே தொல்காப்பியர் காலத்தில் இந்த இரண்டு தெய்வங்களும் தமிழர்களால் வணங்கப்பட்டனர் என்பது தெரிகின்றது. பிற்காலத்திலே இந்த இரண்டு தெய்வங்களும் மறக்கப்பட்டு மறைந்து போயின.
வேந்தன் - இந்திரன்
தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள், மிகமிகப் பிற்காலத்தில் இருந்தவர்கள். இவ்வுரையாசிரியர்களில் இளம்பூரணர் முற்பட்டவர். நச்சினார்க்கினியார் முதலிய ஏனையோர் பின்னும் பிற்காலத்தவர். பிற்காலத்து உரையாசிரியர்களாகிய இவர்கள் வேந்தன் என்பதற்கு இந்திரன் என்று பொருள் எழுதி யிருக்கிறார்கள். எனவே, இவர்கள் தொல்காப்பிய வேந்தனை, இந்திரன் என்று கூறுகின்றனர். அதாவது திராவிடருடைய வேந்தன் என்னும் தெய்வம், ஆரியருடைய இந்திரன் என்று கூறப்படுகிறான். திராவிட ஆரிய கலாசாரக் கலப்பு ஏற்பட்ட பிற்காலத்தில் ஆரிய இந்திரன், திராவிட வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டான். இது, தொல்காப்பியர் காலத்துக்கு மிகமிகப் பிற்காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சி. ஆகையினால்தான், மிக மிகப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் வேந்தன் என்பதற்கு இந்திரன் என்று பொருள கூறினார்கள்.
திராவிட ஆரிய கலாசாரக் கலப்பு கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் (அசோக சக்கரவர்த்தி காலத்தில்) தொடங்கிற்று என்று கருதலாம். ஆரிய கலாசாரக் கலப்பு ஏற்படாத மிகப் பழைய காலத்தில், திராவிடராகிய தமிழ; வணங்கிய மருதநிலக் கடவுளாகிய வேந்தன் என்னும் தெய்வம், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட திராவிட - ஆரியக் கலாசாரக் கலப்பின் காரணமாக ஆரியரின் இந்திரனோடு இணைக்கப்பட்டு, இந்திரன் என்னும் பெயரினால் வழங்கப்பட்டது. பிறகு, பையப் பையப் பழைய வேந்தன் என்னுந் தெய்வம் மறக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய இந்திரன் வழிபடப் பட்டான். சங்க காலத்துக்குப் பிறகு, சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இந்திரனும் மறக்கப்பட்டு மறைந்து போனான்.
வேந்தன் என்னுஞ் சொல், வேந்து, வேந்தமை என்னும் சொல்லடியாகத் தோன்றி அரசர்களின் தெய்வம் என்னும் பொருளில் வழிபடப்பட்டது என்று கருதலாம். ஆளுகை சம்பந்தப்பட்ட இத்தெய்வம் அரசர்களின் தெய்வமாக இருந்தது போலும். தீம்புனல் உலகமாகிய மருத நிலத்திலே அதாவது ஆற்றங்கரைகளிலும் ஏரிக்கரைகளிலும் மக்களுடைய நாகரிகம் தோன்றி வளர்ந்தது என்று சரித்திரங் கூறுகிறது. ஏனென்றால், ஆற்றங்கரையும் ஏரிக்கரையுமாகிய நீர் வளமுள்ள மருதநிலத்திலேதான் உணவுப் பொருள்கள் பயிராயின. உணவு முட்டுப்பாடின்றிக் கிடைத்த இவ்விடங்களிலே மக்களின் நாகரிகம் தோன்றி வளர்ந்ததைச் சரித்திரக்காரர்கள் எல்லோருங் கூறுகிறார்கள். இது உலகத்திலே எல்லா நாடுகளிலும் நிகழ்ந்த நிகழ்ச்சி. இந்த முறைப்படித்தான் தமிழ் நாட்டிலும் மருத நிலங்களில் உணவுப் பொருள்கள் அதிகமாக விளைந்தன.
உணவு உற்பத்தி இருந்தாலும் அமைதியும் ஒழுங்கும் மக்களிடத்தில் நிலைபெற்றால்தான் மனித சமூகம் நாகரிகமாக வாழ முடியும். மக்கள் சமூகத்திலே அமைதியையும் ஒழுங்கையும் உண்டாக்கினவர், ஆதி காலத்தில் பெரும்பாலும் அரசர் தான். ஆகவே தமிழ் நாட்டு அரசர்கள் வேந்தன்மையை (ஆட்சி முறையை) நடத்தினார்கள். வேந்தன்மைக்குத் தெய்வம் வேந்தன். இந்த வேந்தனாகிய தெய்வத்தை தான் பழந்தமிழகத்தின் மருத நிலமக்கள் தெய்வமாக வணங்கினார்கள். அதனால் தான் தொல்காப்பியர் மக்களிடத்தில் இருந்த இந்தத் தெய்வ வழிபாட்டைத் தம்முடைய தொல்காப்பியத்தில் கூறினார்.
தொல்காப்பியர் காலத்துக்கு மிகப் பிற்பட்ட காலத்தில், பல நூற்றாண்டுக்குப் பிறகு, திராவிட - ஆரியக் கலாசாரக் கலப்பு (இணைப்பு) ஏற்பட்டது. இந்தக் கலாசாரக் கலப்பு முக்கியமாகத் தெய்வ வழிபாட்டிலே ஏற்பட்டது. திராவிட தெய்வ வழிபாட்டை ஆரியரும் ஆரிய தெய்வ வழிபாட்டைத் திராவிடரும் பையப் பைய ஏற்றுக் கொண்டனர். திராவிடருடைய தெய்வங்களாகிய சிவன், மாயோன் முதலிய தெய்வங்களுடன் ஆரியருடைய உருத்திரனும் விஷ்ணுவும் இணைக்கப்பட்டது போல, வேந்தன் என்னும் திராவிடத் தெய்வத்துடன் இந்திரன் என்னும் ஆரியத் தெய்வம் இணைக்கப்பட்டது. இவ்விதத் திராவிட - ஆரிய கலாசாரக் கலப்பு ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், சந்திரகுப்த மௌரியனும் அவன் பேரனான அசோக சக்கரவர்த்தியும் அரசாண்ட காலத்தில் தொடங்கியிருக்கக்கூடும். இவ்வாறு வேந்தன் என்னும் தெய்வத்துடன் இந்திரன் என்னும் தெய்வம் இணைக்கப்பட்டு வழிபடப்பட்டது. பின்னர் சில நூற்றாண்டுக்குப் பிறகு இரு தெய்வங்களும் மறக்கப்பட்டு மறைந்து போயின.
வேந்தன் தெய்வம் இந்திரனாக்கப்பட்டது மூன்று ஆரிய மதத்தினரின் தொடர்பினால் என்பது தெரிகிறது. பௌத்தர் ஜைனர் வைதீகர் ஆகிய மூன்று ஆரிய மதத்தாரின் தொடர்பினால் தமிழரின் வேந்தன், இந்திரனாக்கப்பட்டான். பௌத்த ஜைன மதங்களின் சிறு தெய்வங்களில் இந்திரனுக்கு முதன்மையான இடம் உண்டு. அது போலவே வேதத்தை முதன்மையாகக் கொண்ட வைதிக மதத்தாருக்கும் இந்திர வழிபாடு உண்டு. ஆனால், வைதிக மதத்தார் இந்திரனை யாகஞ் செய்து வழிபட்டனர். பௌத்த ஜைன மதத்தார் தங்களுடைய இந்திரனை யாகத்தினால் வழிபடவில்லை. மூன்று ஆரிய மதத்தாருக்கும் உடன்பாடான இந்திரன், தமிழரின் வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டுத் தமிழரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், தமிழர் ஏற்றுக்கொண்டு வழிபட்ட இந்திரன் பௌத்த இந்திரனாகத் தெரிகிறான். கடைச்சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்ற இந்திர விழாவிலே, இந்திரன் யாகஞ் செய்து பூசிக்கப் படவில்லைதிருவிழா செய்து பூசிக்கப்பட்டான். அந்த இந்திர விழாவில் பௌத்தருடைய ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்திர விழாவை, ஒரு ஆண்டு சோழ அரசன் நிறுத்தினபடியினாலே, பௌத்தத் தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் சினம்கொண்டு அந்நகரத்தை அழித்தது என்று மணிமேகலை என்னும் பௌத்த நூல் கூறுகிறது. எனவே, தமிழ் நாட்டில் தமிழர் பிற்காலத்தில் வழிபட்ட இந்திரன் வைதீக மதத்து ஆரிய இந்திரன் அல்லன் என்பது தெரிகிறது.
பௌத்த மதத்தில் இந்திரனுக்கு முக்கிய இடம் உண்டு. இந்திரன் பௌத்த மதத்தையும் பௌத்த தருமத்தையும் உலகத்தில் நிலைநிறுத்துகிறான் என்பது பௌத்தர் கொள்கை. மணிமேகலை முதலிய சிறு தெய்வங்களை உலகத்திலே ஒவ்வொரு இடத்தில் அமர்த்திப் பௌத்த மதத்தை அவன் காத்து வருகிறான் என்று பௌத்த மத நூல்கள் கூறுகின்றன. பௌத்தம், ஜைனம், வைதீகம் என்னும் மூன்று ஆரிய மதங்களுக்கும் உடன்பாடாகிய இந்திரன், பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டு வழிபடப்பட்டான் என்பதும், ஆனால் அவன் பௌத்தமத இந்திரனாகக் கருதப்பட்டான் என்பதும் தெரிகின்றன. பிற்காலத்தில் இந்திரனும் வேந்தனும் ஒரே தெய்வமாகக் கற்பிக்கப்பட்ட போதிலும், ஆரியக் கலப்பு ஏற்படுவதற்கு முன்னர் தமிழர் வணங்கிய மருதநிலக் கடவுள் வேந்தன் என்று பெயர் பெற்றிருந்தது என்பது தொல்காப்பியத்திலிருந்து தெரிகிறது.
-----------------
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திருமதி தேமொழிபெரியவர் மயிலை சீனி வேங்கடசாமி போல் ஒருவர் தனி மனிதநாக எளிமையில் ஏழ்மையில் இருந்து கொண்டு காட்டிய திறனுடைய அவர்தம் அறிவுடைமையுடன் கூடிய படைப்புகளை வாதத்தை எதிர்கொள்ளத் தகுதி இல்லாத ஓர் பேர் நிறுவன இருக்கைவழி பெறும் செல்வாக்கினால் அதன் வழி விளைந்த தன்முனைப்பால் அவர் சார்ந்த அரசியல் தனை துச்சாமக நினைத்து தமிழகத்து அன்னாளைய பெரும்புள்ளிகள் பலர் இவரை ஒதுக்கி வைத்தனர் என்றாலும் தகுதி இருந்தலும் உண்மை மெய் நிலை படைபுகலின் அருமை தெரிந்தொர் உண்ர்ந்தொர் மறைமுகமாக அவர்தம் நூல்களுக்கு ஆதரவு அளித்தனர் இவர்பற்றி நன்கறிந்த அண்ணா அவர்களும் தான் நடத்திய உலக்த்தமிழ் மாநாட்டில் கவுரவித்த பல தமிழறி ஞர்கலில் ஒருவராய்த்திகழ்ந்தார்இவர்தம் உண்மையான திறனறிந்து தான் (அரசியல் சார்பு எனக்கூறிவிட டியாது) அயிரோப்பிய தமிழறிஞர் கமீல் சுவலபில் (செகோசுலெவக்கியா= பொதுவுடைமை நாடு) அய்யங்க்கள் நீக்க எனும் போர்வையிலும் பொருளாதார உதவிக்கும் அவரிடம் நேர ரடி வீட்டிற்கெ வந்து பாடங்க்கள் கற்றுசென்றார் என்பார் என் தந்தையார் திமுக அரசும் அவர்தம் நூல்களை அரசுடையாக்கி அவர்குடும்பத்தினருக்கு உதவி செய்தனர்
--
147-150
2. வேந்தனும் வருணனும்
திராவிட வருணனும் ஆரிய வருணனும்
இனி வருணனைப்பற்றி யாராய்வோம். வருணன், பெருமணல் உலகமாகிய நெய்தல் நிலமக்கள் வணங்கிய தெய்வம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியங் கூறுகிற வருணன், இக்காலத்தில் பலரும் தவறாகக் கருதுவதுபோல, வைதீக ஆரியர் வழிபட்ட வருணன் அல்லன், தொல்காப்பியம் கூறுகிற வருணனை வைதீக மதத்தாரின் வேதத்தில் கூறப்படுகிற வருணன் என்று கருதுவது பெரும் பிழையாகும். தமிழர் வணங்கிய வருணன் ஆரியக் கடவுள் அல்லன். ஆரிய வேதத்தில் கூறப்படுகிற வருணன் திராவிடக் கடவுளாகிய வருணனே. ஆய்த்தோய்ந்து பாராமல் மேற்போக்காகப் பார்க்கிறவர்களுக்கு வருணன் ஆரியர் தெய்வம் என்று தோன்றினாலும் ஆதிகாலத்தில் அது ஆரிய தெய்வம் அன்று. ஆரியர் அயல் நாட்டிலிருந்து இந்தியா தேசமாகிய பாரத தேசத்தில் புகுந்த போது, வட இந்தியாவில் வாழ்ந்திருந்த திராவிடருடன் கலக்க வேண்டியவரானார்கள். அக்காலத்து வடநாட்டுத் திராவிடருக்கும் புதிதாக வந்த வேதகால ஆரியருக்கும் அந்தத் தொடக்கக் காலத்திலே கலாசாரக் கலப்பு ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட கலப்பினாலே வடநாட்டில்வாழ்ந்திருந்த திராவிடரின் தெய்வமாகிய வருணனை ஆரியர் தங்களுடைய தெய்வமாக ஏற்றுக் கொண்டனர். ஏற்றுக்கொண்டு அத்தெய்வத்தைப் பற்றி இருக்கு வேதத்தில் பாடி வைத்தார்கள்.
அக்காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்துவந்த திராவிட இனத்தாருக்கு அசுரர் என்று பெயர் இருந்தது. அசுரர்களில் ஒரு பிரிவினர் நாகர் என்பவர். நாகர் ஆதிகாலத்தில் தமிழ் நாட்டிலும் இருந்ததைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். அசுரரும் அவரில் ஒரு பிரிவினரான நாகரும் வருணன் என்னும் தெய்வத்தை வழிபட்டனர். வருணன் முக்கியமாகக் கடல் தெய்வமாகக் கருதப்பட்டான். திராவிடர் அக்காலத்தில் பெரிய கடல் வாணிகராக இருந்தனர். அவர்கள் வருணனை முக்கியமாக வணங்கினார்கள். வேதகாலத்து ஆரியர் வட இந்தியாவில் நுழைந்தபோது அவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஏற்பட்ட கலாசாரத் தொடர்பினால், ஆரியர் திராவிட வருணனைத் தம் தெய்வமாக ஏற்றுக் கொண்டனர். ஆனால், வருணன் வணக்கம் ஆதியில் ஆரியர்களுக்குரியதன்று. இவை எல்லாம் ஆராய்ச்சி யாளர்கள் கூறுகிற செய்திகள்.
எனவே, திராவிடராகிய தமிழர் ஆதிகாலத்தில் வருணனைக் கடல் தெய்வமாக வழிபட்டது வியப்பன்று. தமிழர் வணங்கிய திராவிட இனத்துக் கடவுளாகிய வருணனைத்தான் தொல்காப்பியர் தமது இலக்கணத்தில் கூறினார். மேலும், கடற் கரையில் வாழ்ந்த நெய்தல் நிலத்துத் தமிழர், வருணனை வணங்கியதாகக் கூறுகிறார். அந்த வருண வணக்கமும் திராவிட முறைப்படி செய்யப்பட்டது.
சினைச்சுறவின் கோடு நட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்.
என்று பட்டினப்பாலையில் (அடி. 86-87) கடல் தெய்வமாகிய வருணன் வணக்கம் கூறப்பட்டிருக்கிறது. நச்சினார்க்கினியரும் இதை நன்கு விளக்கிக் கூறுகிறார்: `இனி நெய்தல் நிலத்தில் நுளையர்க்கு வலைவளந்தப்பின் அம்மகளிர் கிளையுடன் குழீஇக் சுறவுக்கோட்டுப் பரவுக்கடன் கொடுத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படும் என்றார்’ (தொல், பொருள் - அகத்திணை - 5ஆம் சூத்திர உரை)
ஒருவகைச் சுறா மீனின் வாய்ப்புறத்தில் நீண்ட கோடு (கொம்பு) உண்டு. அது நான்கு அடி நீளம் வரையில் நீண்டு வளர்வதும் உண்டு. தட்டையாக நீண்டு வளர்ந்துள்ள சுறாமீன் கோட்டில் இருபுறங்களிலும் முள்ளுகள் உண்டு. இந்தச் சுறாமீன் கோட்டை நட்டுத் தமிழ்நாட்டு நெய்தல் நிலமக்கள் வருணனை வணங்கினார்கள். ஆரியர் தங்கள் வருணனை இவ்விதமாக வணங்கவில்லை. வருணனை முதலில் போற்றிப் பாடிய ஆரியர் பிறகு அத்தெய்வத்தை இகழ்ந்து பாடியதாகவும் தெரிகிறது.
தமிழ்நாட்டுக் கப்பல் வாணிகரும் வருணனை வணங்கினார்கள். தமிழ்நாட்டு வாணிகன் ஒருவன் இலங்கைத் தீவின் தென்கோடியில் இருந்த தேவநுவர என்னும் ஊரில் (காலி என்னும் ஊரில்) கடல் தெய்வமாகிய வருணனுக்கு ஒரு கோவில் கட்டினான் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன.
எனவே, தொல்காப்பியம் கூறுகிற தமிழரின் வருணன், ஆரியர் வணங்கிய வருணனைக் கடனாகப் பெற்ற தெய்வம் அன்று. ஆதிகாலத்தில் இருந்து திராவிட இனத்தார் வழிபட்டு வந்த வருணனைத் தமிழர் வணங்கினார்கள். அத்தெய்வத்தைத்தான் தொல்காப்பியர் கூறினார். இவற்றையெல்லாம் ஆராயாமல், ஆரிய வேதத்தில் வருணன் கூறப்படுகிறபடியால், அந்த வருணனைத் தமிழர் ஏற்றுக்கொண்டு வணங்கினார்கள் என்று கூறுவதும், வருணனைக் கூறுகிற தொல்காப்பியம், ஆரிய திராவிடர் கலப்பு ஏற்பட்ட பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல் என்று கூறுவதும் ஆழ்ந்து பாராமல் மேற் போக்காகக் கூறுகிற போலி யாராய்ச்சியாகும். எனவே, இந்திரன் வருணன் என்னும் தெய்வங்களைக் கூறுகிற தொல்காப்பியம் பிற்காலத்து நூல் என்று சிலர் கூறுவது ஏற்கத்தக்க தன்று.
வருணன் வணக்கம் தமிழ்நாட்டில் மறைந்து போனதற்குக் காரணம் பௌத்த மதம். பௌத்த மதத்தின் கடற் காவல் தெய்வமாக மணிமேகலா தெய்வம் கூறப்படுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலைக் காவியம் முதலிய தமிழ் நூல்களும் புத்த ஜாதகம் முதலிய பௌத்தமத நூல்களும் மணிமேகலா தெய்வத்தைக் கூறுகின்றன. பௌத்த மதம் தமிழ் நாட்டுக்கு வந்தபோது, தமிழரின் கடல் தெய்வமாகிய வருணன் இடத்தை மணிமேகலா தெய்வம் பிடித்துக் கொண்டது ஆகவே, வருணன் பையப்பைய நாளடைவில் மறக்கப்பட்டு மறைந்து போனான். பின்னர் மணிமேகலா தெய்வமும் மறக்கப்பட்டு மறைந்து போயிற்று.
இதுகாறுங் கூறியவற்றால், இந்திரன் வருணன் வழிபாட்டைக் கூறுகிற தொல்காப்பியம் ஆரிய - திராவிடர் கலாச்சாரக் கலப்பு ஏற்பட்ட பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல் என்று சிலர் தவறாகக் கூறுவது பொருந்தாது, ஏற்கத்தக்கதன்று என்பது விளக்கப்பட்டது. மேற்பார்வைக்கு மெய்போலத் தோன்றுகிற இப்பொய்க் கூற்றைத் தவறான, உண்மைக்கு மாறுபட்ட பொய்ச் செய்தி என விலக்கித் தள்ளுக.
--------------
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இதன் வாயில் இருந்து வெளியே 4 அடி வரையிலுமான ஒரு கோடு அதாவது தந்தம் போல இருக்குமாம். இக் கோட்டின் இருபுறங்களிலும் முள்போன்றவை இருக்குமாம்.@ தேமொழி அக்காமயிலை ஐயா ஏதோ ஒருவகையான சுறாமீனைக் குறிப்பிடுகிறார்.
| Sawfish Temporal range: Eocene–Recent[1] | |
|---|---|
| Longcomb sawfish, Pristis zijsron | |
| Scientific classification | |
| Kingdom: | Animalia |
| Phylum: | Chordata |
| Class: | Chondrichthyes |
| Subclass: | Elasmobranchii |
| Superorder: | Batoidea |
| Order: | Rhinopristiformes |
| Family: | Pristidae Bonaparte, 1838 |
| Genera | |
Anoxypristis White & Moy-Thomas, 1941 | |
Sawfish struggles to stay afloat
K. S. Sudhi KOCHI:, JUNE 04, 2012
http://www.thehindu.com/news/national/sawfish-struggles-to-stay-afloat/article3487007.ece
மேலும் படங்கள்: https://www.google.com/search?q=Sawfish+india&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwjV2aef3bfVAhWK3oMKHRu4AFAQ_AUICygC&biw=1920&bih=974
| Sawfish Temporal range: Eocene–Recent[1] | |
|---|---|
| Longcomb sawfish, Pristis zijsron | |
| Scientific classification | |
| Kingdom: | Animalia |
| Phylum: | Chordata |
| Class: | Chondrichthyes |
| Subclass: | Elasmobranchii |
| Superorder: | Batoidea |
| Order: | Rhinopristiformes |
| Family: | Pristidae Bonaparte, 1838 |
| Genera | |
Anoxypristis White & Moy-Thomas, 1941 | |
//பட்டினப்பாலையில் (அடி. 86-87) கடல் தெய்வமாகிய வருணன் வணக்கம் கூறப்பட்டிருக்கிறது.//
மன்னிக்கவும். இந்தப் பாடல் வரிகள் மடலேறுதல் குறித்தவை. இது எப்படி வழிபாடு, கடவுள், வருணன் என்றெல்லாம் ஒப்பிடப்படுகிறது என்றுப் புரியவில்லை. அதிலும், இங்கு வர்ணிக்கப்படுவது கைக்கிளை மடலேறல்.
நடுகல்லின் அரண் போல
நெடும் தூண்டிலின் காழ்
சேர்த்திய குறுங்கூரை குடி நாப்பண்
நிலவு அடைந்த இருள் போல
வலை உணங்கும் மணல் முன்றில் (78-83)
வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த
வெண் கூதாளத்துத் தண் பூங்கோதையர்
சினைச் சுறவின் கோடு நட்டு
மனை சேர்த்திய வல் அணங்கினான்
மடல் தாழை மலர் மலைந்தும்
பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்
(84-89)
தென்னை ஓலையால் பின்னி, ஒழுங்காக வரிசைப்படுத்தி, கூர்மையான அடிபாகத்தை ஊன்றி, நடுகல்லுக்கு அமைக்கப்பட்ட அரண் போல நீண்ட தூண்டிலின் உறுதியுடன் இணைக்கப்பட்ட (மீண்டும் பிரிக்கும் வகையிலான) குறுகிய கூரை பல குடும்பங்கள் இணைந்து மகிழ்வோடு சிரித்து வாழும் நேரத்தில், குடி நிலவு அடைந்த இருள் அடைந்து ஒளி மெலிந்துக் குன்றுவது போல,
அவ்வீடுகளின் முன்னால் (சென்று)
(நீர்நிலை) கரையில் இருக்கும் தாழ்ந்த வெண்கூதாளம்
என்ற செடியின் மலர்கள் நிறைந்த கொடிகளை காலில் அணிந்த ஆண்கள், குளிர்ந்த பூப்போன்ற
கோதையரை (எண்ணி) வளைந்த சூள்கொண்ட சுறா (அல்லது) போன்ற மூங்கில் (அல்லது) மரக்கிளையை
நட்டு, தங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உடலில் சாம்பல் பூசி, உருவம் மாறி ஆடி, தங்கள்
இணையின் பெயரை உரக்கக்கூவி (மடலேறுதல்) அவர்களை தாழ்மைபடுத்திப் கூச்சலிட்டு, பலவிதமான
கொடுமையான வார்த்தைகளினால் பழிகூறி, உள்ளம் பிழிய சபித்து..
இப்படியாக, அப்பாடல் தொடர்கிறது.
காதலை ஏற்காத அல்லது காதலிப்பதாக நம்பி ஏமாந்த அல்லது ஏமாற்றிய, காதலனை வெறுத்து ஒதுங்கிய பெண்ணின் வீட்டுக்கு முன் சென்று, அவர்களை அவமதிக்கும் விதத்தில் ஆண்கள் செய்யும் செயல். இப்படியெல்லாம் செய்து விடுவோம் என்று முன்கூட்டியே அப்பெண்ணுக்கும், அவளின் தோழிகளுக்கும் எச்சரிக்கை விடுத்து, மிரட்டியே திருமணம் செய்வதும் உண்டு.
மடலேறுதல் பற்றி அறிய:
பலே
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி
நடுகல்லின் அரண் போல
நெடும் தூண்டிலின் காழ்
சேர்த்திய குறுங்கூரை குடி நாப்பண்
நிலவு அடைந்த இருள் போல
வலை உணங்கும் மணல் முன்றில் (78-83)
வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த
வெண் கூதாளத்துத் தண் பூங்கோதையர்
சினைச் சுறவின் கோடு நட்டு
மனை சேர்த்திய வல் அணங்கினான்
மடல் தாழை மலர் மலைந்தும்
பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்
(84-89)
தென்னை ஓலையால் பின்னி, கூர்மையான அடிப்பாகத்தை வரிசையாக ஊன்றி, நடுகல்லுக்கு (இறந்தவர்களுக்கான நினைவு கல்) அமைக்கப்பட்ட அரண் போல, நீண்ட தூண்டில் போன்ற உறுதியான கொடிகளால் இணைக்கப்பட்ட (மீண்டும் பிரிக்கும் வகையிலான) குறுகிய கூரைக் கொட்டகையை, பல குடும்பங்கள் இணைந்து மகிழ்வோடு வாழும் குடியில், (குறிப்பிட்ட) பெண் வசிக்கும் வீட்டின் எதிரில் உள்ள மணல் திட்டில், நிலவு அடையும் நேரத்தில் அமைத்து, அக்குடியினரின் பெருமை மங்கி, இருள் அடையும் வகையில்,
(நீர்நிலையின்) கரையில் கிடைக்கும் தாழ்ந்த (கீழான) வெண்கூதாளம் என்ற மலர்கள் நிறைந்தக் கொடிகளைக் காலில் அணிந்த ஆண், குளிர்ந்த பூப்போன்ற அக்கோதையை (எண்ணி) வளைந்த சூள்கொண்ட சுறா எலும்பு (அல்லது) அவ்வடிவிலான மூங்கில் (அல்லது) மரக்கிளையை (நடுகல்லுக்குப் பதிலாக) போல நட்டு, தம் அடையாளம் தெரியாத அளவுக்கு உடலில் சாம்பல் (அல்லது) சேறு பூசி, (மடலேறுதல்) அப்பெண்ணின் பெயரை உரக்கக்கூவி, அவளை தாழ்மைபடுத்திப் கூச்சலிட்டு, பலவிதமான கொடுமையான வார்த்தைகளினால் பழிகூறி, உள்ளம் பிழிய சபித்து,
என்று வருகிறது. இதில் வருணன் எங்கு வருகிறாரோ?
உயிரியலில் அணங்கு (Nymph) எனப்படுவது, படிப்படியாக உருமாற்றத்துக்கு உட்படும் சில முதுகெலும்பிகளில், கருமுட்டையில் தொடங்கி, பால் முதிர்ச்சி அடைந்து முதிர்நிலையை அடையும்வரை தோன்றும் பல இடை வளர்நிலைகளைக் குறிக்கும். முக்கியமாக முழுமையற்ற உருமாற்றத்துக்கு உட்படும் பூச்சிகளின் விருத்தியின்போது இந்த அணங்குப்பூச்சிகள் உருவாகும்.
காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஒரு குடியிருப்பு
பறழ்ப் பன்றி பல் கோழி
உறைக் கிணற்றுப் புறச்சேரி
ஏழகத் தகரொடு சிவல் விளையாட (75-77)
A Community in Kāviripoompattinam
In a city neighborhood with ring
wells, pigs with piglets, various
kinds of fowl and rams along
with partridges, play together.
Notes: பொ. வே. சோமசுந்தரனார் உரை – சேரிப்புறம் என்பது புறஞ்சேரி என்று முன் பின்னாக மாறி நின்றது.
Meanings: பறழ்ப் பன்றி – pigs with piglets, பல் கோழி – different kinds of fowl, உறைக் கிணற்று – with ring wells, புறஞ்சேரி – neighborhood in the city, neighborhood near the city (சேரிப்புறம் – புறஞ்சேரி என்று முன் பின்னாக மாறி நின்றது according to Po. Ve. Somasundaranar’s commentary), ஏழகத் தகரொடு – with rams, male goats, male sheep, சிவல் – கவுதாரி, partridge, விளையாட- played
பரதவர்களின் இருப்பிடம்
கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி
நடுகல்லின் அரண் போல
நெடும் தூண்டிலின் காழ்
சேர்த்திய குறுங்கூரை குடி நாப்பண்
நிலவு அடைந்த இருள் போல
வலை உணங்கும் மணல் முன்றில் (78-83)
Where Fishermen Live
In the settlement where fishermen
live, small-roofed huts surrounded
by long fishing rods resting on
them appear like memorial stones
surrounded by spears stuck in the
ground with rows of shields hanging
on them.
The front yards with fishing nets
drying in the sand appear like the
moon and its dark spots.
Notes: பட்டினப்பாலை 78 – கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி நடுகல்லின் அரண் போல, பட்டினப்பாலை 167 – காழ் ஊன்றிய கவி கிடுகின், முல்லைப்பாட்டு 41 – பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து, பெரும்பாணாற்றுப்படை 119-120 – எஃகம் வடிமணிப் பலகையொடு நிரைஇ. அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண் மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல், பட்டினப்பாலை 82-83 – நிலவு அடைந்த இருள் போல வலை உணங்கும் மணல் முன்றில்.
Meanings: கிடுகு நிரைத்து – placing shields in rows, எஃகு ஊன்றி – planted spears on the ground, நடுகல்லின் – like memorial stones, அரண் – protection, fences, போல – like, நெடும் தூண்டிலின் காழ் சேர்த்திய – with the long fishing rods resting, குறுங்கூரை – small roofs, குடி நாப்பண் – in the middle of a settlement, நிலவு அடைந்த இருள் – like the darkness in the moon, வலை உணங்கும் – nets are left to dry, மணல் முன்றில் – on the sand in the front yards
பரதவர்களின் வழிபாடும் விளையாட்டும்
வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த
வெண் கூதாளத்துத் தண் பூங்கோதையர்
சினைச் சுறவின் கோடு நட்டு
மனை சேர்த்திய வல் அணங்கினான்
மடல் தாழை மலர் மலைந்தும்
பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்
புன் தலை இரும் பரதவர்
பைந்தழை மா மகளிரொடு
பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது
உவவு மடிந்து உண்டு ஆடியும் (84-93)
Fishermen Worship the Ocean God
Fishermen wear garlands braided
with flowers the of white koothalam
plants growing at the bases of thālai
trees with aerial roots.
They plant horns of pregnant sharks,
pray to the powerful god, wear thālai
flowers and drink palmyra palm liquor
that were offered to their god.
Instead of going to fish in the vast, cold
ocean during full moon, the dark
fishermen with dry hair, eat desired food
and play with their dark-skinned women
wearing wearing fresh leaf garments.
Means: வீழ் – hanging low, having aerial roots, தாழை – thālai trees, தாள் – stems, தாள் தாழ்ந்த – base part, வெண் கூதாளத்து – of white koothalam flowers, convolvulus ipome, a three-lobed nightshade vine, தண் பூங்கோதையர் – those wearing the cool flower garlands, சினைச் சுறவின் – of pregnant horned sharks, of pregnant swordfish, கோடு நட்டு – they plant the horns, மனை சேர்த்திய – in the house, வல் அணங்கினான் – for the powerful god, Varunan, மடல் தாழை – thālai trees with fronds, Pandanus odoratissimus, மலர் மலைந்தும் – wearing the flowers, பிணர் – scaly, பெண்ணை – female palmyra palm trees, பிழி மாந்தியும் – drinking liquor, புன் தலை – head with parched hair, இரும் பரதவர் – dark fishermen, big fishermen, பைந்தழை – green leaves, fresh leaves, மா மகளிரொடு – with their dark women, பாய் இரும் பனிக்கடல் – spread dark cold ocean, வேட்டம் செல்லாது – not going to fish, உவவு – full moon day, மடிந்து – not doing their work, உண்டு ஆடியும் – ate and danced
இதன் பெயர் வாள்சுறா. வாள் போல் இருப்பதால்.இன்னொன்றும் இருக்கிறது: கொம்பன் சுறா. Hammerhead shark.இதன் தலையின் கோடும் வழிபடப்பட்டிருக்கிறது. கொம்பன் சுறா (அ) கோட்டுச் சுறா என்பது இது.--------------------மகரம் (Mugger) என்பது முதலை. சிந்து மக்கள் வருணனின் சின்னமாகக் கொண்டனர். சிந்துக் காலத்திலும்,அதன் அழிவின் பின்னர் 2000 ஆண்டுகளும் மகரம் வழிபடப்பட்ட போது வருணன் இரவுக்கும், வானுக்கும்உரிய பெருங்கடவுளாக இருந்திருக்கிறான்.வருணனின் நிலை கடலுக்கு என சுருங்கிய காலம் சங்க காலம். கிபி. முதல் மூன்று நூற்றாண்டுகளில்சுறா மீன்களை வருணன் வாகனமாக/சின்னமாக பாவிக்க தொடங்குகின்றனர்.
//பிரகாஷ் காணும் பொருள்:
பெண்ணைப் பிழி மாந்தியும் = அப்பெண்ணின் பெயரை உரக்கக்கூவி, அவளை தாழ்மைபடுத்திப் கூச்சலிட்டு, பலவிதமான கொடுமையான வார்த்தைகளினால் பழிகூறி, உள்ளம் பிழிய சபித்து,//
இல்லை. ஒவ்வொரு வார்த்தைக்குமான தற்போதைய முகவரிகள்:
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8E%E0%AE%83%E0%AE%95%E0%AF%81
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF
http://agarathi.com/word/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF
உணங்கும் - மெலிந்த
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
http://agarathi.com/word/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF
//பிரகாஷ் காணும் பொருள்:
பெண்ணைப் பிழி மாந்தியும் = அப்பெண்ணின் பெயரை உரக்கக்கூவி, அவளை தாழ்மைபடுத்திப் கூச்சலிட்டு, பலவிதமான கொடுமையான வார்த்தைகளினால் பழிகூறி, உள்ளம் பிழிய சபித்து,//
இல்லை. ஒவ்வொரு வார்த்தைக்குமான தற்போதைய முகவரிகள்:
பிரகாஷ் காணும் பொருள்:பெண்ணைப் பிழி மாந்தியும் = அப்பெண்ணின் பெயரை உரக்கக்கூவி, அவளை தாழ்மைபடுத்திப் கூச்சலிட்டு, பலவிதமான கொடுமையான வார்த்தைகளினால் பழிகூறி, உள்ளம் பிழிய சபித்து,
On Wednesday, August 2, 2017 at 6:39:11 AM UTC-7, N. Ganesan wrote:இதன் பெயர் வாள்சுறா. வாள் போல் இருப்பதால்.இன்னொன்றும் இருக்கிறது: கொம்பன் சுறா. Hammerhead shark.இதன் தலையின் கோடும் வழிபடப்பட்டிருக்கிறது. கொம்பன் சுறா (அ) கோட்டுச் சுறா என்பது இது.--------------------மகரம் (Mugger) என்பது முதலை. சிந்து மக்கள் வருணனின் சின்னமாகக் கொண்டனர். சிந்துக் காலத்திலும்,அதன் அழிவின் பின்னர் 2000 ஆண்டுகளும் மகரம் வழிபடப்பட்ட போது வருணன் இரவுக்கும், வானுக்கும்உரிய பெருங்கடவுளாக இருந்திருக்கிறான்.வருணனின் நிலை கடலுக்கு என சுருங்கிய காலம் சங்க காலம். கிபி. முதல் மூன்று நூற்றாண்டுகளில்சுறா மீன்களை வருணன் வாகனமாக/சின்னமாக பாவிக்க தொடங்குகின்றனர்.என்ன சொல்ல முயல்கிறீர்கள் திரு. கணேசன்?"வருணன் மேய பெருமணல் உலகமும்"என்று கூறிய தொல்காப்பியம் கிபி. முதல் மூன்று நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது என்றா?
..... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தொல்காப்பியர் காலம்:
பொருந்தல் அகழாய்வில் கிடைத்த தமிழி எழுத்துப் பொறிப்பு, நடன காசிநாதன் அவர்களின் கணிப்புப்படி, மூன்றாம் படிநிலை ஆகும். ஐராவதம் மகாதேவன் அவர்களின் கணிப்புப்படி, இரண்டாம் படிநிலை ஆகும் (Source : Hindu Newspaper Dated 29.8.2011, Palani Excavation triggers fresh depate) அதாவது இந்த எழுத்துப் பொறிப்பு அசோகர் பிராமி அல்லது ஜம்பை கல்வெட்டின் வரிவடிவ நிலையாகும். பொருந்தல் அகழாய்வில் கிடைத்த தமிழி எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு என கணிக்கப் பட்டுள்ளது. ஆக இதன்மூலம், கி.மு. 5ம் நூற்றாண்டு அளவில், மூன்றாம் படிநிலை (தமிழி-3) எழுத்துப் பொறிப்புகள், தமிழகத்தில் புழக்கத்தில் இருந்துள்ளன என்பது உறுதியாகிறது.
இதே காலகட்டத்தில் வாழ்ந்த தொல்காப்பியர் அவர்கள், மெய்யெழுத்துக்கள் புள்ளி பெறும் எழுத்துச் சீர்திருத்தத்தை தொடங்கினார் எனலாம். மூன்றாம் படிநிலைக்குப் பின்னர் தான், புள்ளியிடும் எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கியது என்பதால், புள்ளியிடும் எழுத்துச் சீர்திருத்தத்தை தொடங்கிய தொல்காப்பியர் அவர்கள், மூன்றாம் படிநிலை (தமிழி-3) எழுத்துப் பொறிப்புகள், தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த காலத்தில்தான் வாழ்ந்திருக்க வேண்டும். அதற்கு முன் அவர் வாழ்ந்திருக்க முடியாது.
ஆகவே மூன்றாம் படிநிலை தமிழி எழுத்து, தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த, கி.மு. 5ம் நூற்றாண்டு தான் தொல்காப்பியர் காலம் என்பது மிகவும் பொருந்துகிறது. கி.மு. 5ம் நூற்றாண்டிலேயே மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியிடும் எழுத்துச் சீர்திருத்தத்தை தொல்காப்பியர் தொடங்கி விட்டார் எனினும், அது கி.மு. 3ம் நூற்றாண்டுக்குப் பின்னர் தான் நடைமுறைக்கு வந்தது எனலாம். பண்டைய காலத்தில் புதிய சீர்திருத்தங்கள் செயல்பாட்டுக்கு வர பல நூற்றாண்டுகள் ஆகும் என்பது வரலாற்றுப் படிப்பினை ஆகும். அதனால்தான் தொல்காப்பியரால் தொடங்கப்பட்ட, புள்ளியிடும் எழுத்துச் சீர்திருத்தம், நடைமுறைக்கு வர பல நூற்றாண்டுகள் ஆகியது எனலாம்.
இதே காலகட்டத்தில் வாழ்ந்த தொல்காப்பியர் அவர்கள், மெய்யெழுத்துக்கள் புள்ளி பெறும் எழுத்துச் சீர்திருத்தத்தை தொடங்கினார் எனலாம். மூன்றாம் படிநிலைக்குப் பின்னர் தான், புள்ளியிடும் எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கியது என்பதால், புள்ளியிடும் எழுத்துச் சீர்திருத்தத்தை தொடங்கிய தொல்காப்பியர் அவர்கள், மூன்றாம் படிநிலை (தமிழி-3) எழுத்துப் பொறிப்புகள், தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த காலத்தில்தான் வாழ்ந்திருக்க வேண்டும். அதற்கு முன் அவர் வாழ்ந்திருக்க முடியாது.
ஆகவே மூன்றாம் படிநிலை தமிழி எழுத்து, தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த, கி.மு. 5ம் நூற்றாண்டு தான் தொல்காப்பியர் காலம் என்பது மிகவும் பொருந்துகிறது. கி.மு. 5ம் நூற்றாண்டிலேயே மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியிடும் எழுத்துச் சீர்திருத்தத்தை தொல்காப்பியர் தொடங்கி விட்டார் எனினும், அது கி.மு. 3ம் நூற்றாண்டுக்குப் பின்னர் தான் நடைமுறைக்கு வந்தது எனலாம். பண்டைய காலத்தில் புதிய சீர்திருத்தங்கள் செயல்பாட்டுக்கு வர பல நூற்றாண்டுகள் ஆகும் என்பது வரலாற்றுப் படிப்பினை ஆகும். அதனால்தான் தொல்காப்பியரால் தொடங்கப்பட்ட, புள்ளியிடும் எழுத்துச் சீர்திருத்தம், நடைமுறைக்கு வர பல நூற்றாண்டுகள் ஆகியது எனலாம்.
--
இந்தத் தமிழ் மிகவும் நன்றாகப் படிக்க வருகிறது "..மூரததி ஆசாரி".. ஆசாரி என்ற சொல் எப்பொழுதிலிருந்துவழக்கிற்கு வந்தது என்றறிந்தால், அதற்குமுன் இவ்வெழுத்து பதிந்திருக்க இயலாது.மேலும், இவ்வெழுத்துக்கள் படிக்க மிகவும் எளிதாக இருப்பதால், இவை தற்காலத்தியவையாக [சில நூற்றாண்டுகளுக்குமுன்னதாக] என்றே கருதுகிறேன். துரை சுந்தரம் அவர்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார் என்று அறியவிரும்புகிறேன்.
2017-08-03 20:04 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
//இந்தத் தமிழ் மிகவும் நன்றாகப் படிக்க வருகிறது "..மூரததி ஆசாரி".. ஆசாரி என்ற சொல் எப்பொழுதிலிருந்து
வழக்கிற்கு வந்தது என்றறிந்தால், அதற்குமுன் இவ்வெழுத்து பதிந்திருக்க இயலாது.மேலும், இவ்வெழுத்துக்கள் படிக்க மிகவும் எளிதாக இருப்பதால், இவை தற்காலத்தியவையாக [சில நூற்றாண்டுகளுக்கு
முன்னதாக] என்றே கருதுகிறேன். துரை சுந்தரம் அவர்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார் என்று அறியவிரும்புகிறேன்.//
//Panel with Kama and Rati, anonymous, anonymous (rejected attribution), c. 1700 - c. 1800 //
இவ்வெழுத்துக்கள் படிக்க மிகவும் எளிதாக இருப்பதால், இவை தற்காலத்தியவையாக [சில நூற்றாண்டுகளுக்குமுன்னதாக] என்றே கருதுகிறேன்.
NG > புள்ளி தமிழில் வருவது கி.பி. 2-ம் நூற்றாண்டு. அக் காலத்தது தொல்காப்பியம்.
கீழுள்ள படத்தில் எழுத்துக்களில் புள்ளியில்லை இது கிமுவில் செதுக்கிய படைப்பா?
On Thursday, August 3, 2017 at 5:44:29 PM UTC-7, தேமொழி wrote:NG > புள்ளி தமிழில் வருவது கி.பி. 2-ம் நூற்றாண்டு. அக் காலத்தது தொல்காப்பியம்.கீழுள்ள படத்தில் எழுத்துக்களில் புள்ளியில்லை இது கிமுவில் செதுக்கிய படைப்பா?:-)19-ஆம் நூற்றாண்டு நூல்களைப் பாருங்கள். புள்ளி இருக்கா என்று தெரியும். ஏன் அவ்வாறு என அறியதொல்லியலார் நூல்கள்.
நல்ல கலைப்படைப்பை சங்கரமூர்த்தி ஆசாரி யாழ்ப்பாணத்தில் படைத்துள்ளார்.ஸிமெட்ரிக்காக அனங்கனின் வாகனம் மகரத்தின் நான்கு கால்கள் இரண்டாக்கிவிட்டார். ரதியின் கிளிக்கு 2 கால்கள் தான் என்பதால்.மேலும்,
வருணன் - வேதத்தில் உள்ள கடவுள். தமிழ்ப் பெயர் அல்ல. வருணனுக்கு மகரம் வாகனம் என ஏராளமான
சான்றுகள் உண்டு. மகரம் சிற்பங்களிலும் வருணனுடன் 2300 வருடமாக ஏராளமான இடங்களில் காட்டப்பட்டுள்ளான்.
வருணனின் மகரம்: (மூன்றாவது ஓவியம்).
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
சங்க கால மோதிரம் தங்கத்தில் வெள்ளலூரில் கிடைத்தது.
அதில் மகரம் உண்டு.
On Wednesday, August 30, 2017 at 11:28:32 PM UTC-7, தேமொழி wrote:
On Tuesday, August 29, 2017 at 9:09:29 AM UTC-7, kalai wrote:வணக்கம்.Palaeontologists have identified the largest 'sea dragon' of its kind in the fossil record, after discovering the mislabelled remains of an ancient ocean dweller from 200 million years ago.
The specimen, the largest representative of the Ichthyosaurus genus on record, was a kind of marine reptile commonly taken to be a swimming dinosaur – but which actually emerged 250 million years back, before the dinosaurs reigned.
இணைப்பில் உள்ள படத்தில் இருப்பது சிம்சுமாரத்தின் படிமம் எனக் கருதலாமா ?
கருத முடியாது.Ichthyosaurus is a "connecting link" between reptiles and fishesIchthyosaurus (Greek: fish, and lizard)- ichth: means in Greek = fish as in Ichthyology - study of fish;- Saurus/sauros: means in Greek = lizard)Ichthyosaurus is a marine reptile which lived approximately "200 million to 190 million years ago" during the Early "Jurassic Period".Modern humans have only been around for about 2.5 million years at most.That's about 60 million years between people and dinosaurs!However, our species, Homo sapiens, did not exist until about 0.25 million years ago (250,000 years).இது போன்ற ஐயம் உங்களுக்கு எழுந்தால் கிடைத்த விலங்கின் வாழ்நாளில் மனித இனம் தோன்றிவிட்டதா?அப்படியே தோன்றியிருந்தாலும் கடந்த 10,000 ஆண்டுகள் போல... மொழி போன்றவற்றை மனித இனம் பயன் கொள்ளத் துவங்கி தெரிந்தவனவற்றை மொழி வடிவில் ஆவணப்படுத்தப்படும் காலகட்டத்தில் இது அமைகிறதா என்று படிப்படியாக கேள்விகள் கேட்டு விடையறிய முயலுங்கள்.மனித இனமே கண்ணால் காணுமுன் புவியில் அழிந்துவிட்ட ஒரு விலங்கு சிம்சுமாரமாக, அவ்வாறு மனிதர்கள் பெயரிட்டு குறிப்பிடும் ஒன்றாக இருந்திருக்க வழியில்லை.சிம்சுமாரம் என்பதாக .... நான் எண்ணுவது ... வாய்ப்பகுதி நீண்ட ஒரு விலங்கு1. இது கங்கையில் வாழ்ந்த டால்பின் வகையாகவும் இருக்கலாம்,2. கங்கை பகுதியில் வாழ்ந்த Gharials முதலையாகவும் இருக்கலாம் https://en.wikipedia.org/wiki/Gharial3. A "saw fish" that has a characteristic long, narrow, flattened rostrum or extension on their snout ஆகவும் இருக்கலாம்இவை யாவற்றுக்கும் உள்ள ஒற்றுமை குறுகி- நீண்ட- தட்டையான- வாய்ப்பகுதி.இந்த விலங்கு எது அனா குறிப்பதில் குழப்பமும் உள்ளது என்று எண்ணுகிறேன்.திரு கணேசன் Gharials முதலை, வருணன் என மாறியது என்று சொல்லும் பொழுது,
சினைச்சுறவின் கோடு நட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்.என்று சுறாவின் கோட்டை வருணன் என வணங்கியதாகக் காட்டும் பட்டினப்பாலை பாடலை கவனத்தில் கொள்ளத் தேவை இருக்கிறது.வடஇந்தியாவை வசிப்பிடமாகக் கொண்ட Gharials முதலை வருணனாக வழிபட்டதைவிடசுறாவின் கோடுதான் தமிழகத்திற்கு பொருத்தமாக உள்ளது.
ref: https://en.wikipedia.org/wiki/Gharial#/media/File:Gavialis_gangeticus_Distribution.png
சுறாவின் கோடை வருணன் என வழிபட்டதற்கு இலக்கியச் சான்று உள்ளது.
முதலை என்பதற்கு இலக்கியச் சான்று உள்ளதா????
வெறும் நீண்ட வாய் உருவ ஒற்றுமையை மட்டும் கொண்டு அது முதலை என்று காட்டப்படுகிறதா ....
அல்லது இலக்கியச் சான்று உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்,
வருணன் - வேதத்தில் உள்ள கடவுள். தமிழ்ப் பெயர் அல்ல. வருணனுக்கு மகரம் வாகனம் என ஏராளமானசான்றுகள் உண்டு. மகரம் சிற்பங்களிலும் வருணனுடன் 2300 வருடமாக ஏராளமான இடங்களில் காட்டப்பட்டுள்ளான்.வருணனின் மகரம்: (மூன்றாவது ஓவியம்).சங்க கால மோதிரம் தங்கத்தில் வெள்ளலூரில் கிடைத்தது.அதில் மகரம் உண்டு.நா. கணேசன்.... தேமொழிஅன்பன்
கி. காளைராசன்
On Tuesday, January 24, 2017, தேமொழி <jsthe...@gmail.com> wrote:கீழ்காணும் பாடல்கள் கிடைத்த இடம் >>> http://gangavatharan.blogspot.com/2014/04/contd.htmlBala Kanda : Sarga 43IntroductionGanga descends to Earth by the extraordinary efforts of Bhageeratha. Shiva agrees to the alighting of Ganga on His head, from where she is released into a lake called Bindusarovar and from there she flows in seven courses. On land Bhageeratha ushers her up to netherworld dug by his ancestors where heaps of ashes of his grandparents are there, and she enters accordingly to inundate those mounds of ashes according salvation to the souls.* * *ஸர்க்கம் – 43கங்காவதரணம்मत्स्य कच्छप संघैश्र्च शिंशुमार गणैस्तथा |पतद्भिः पतितैश्र्चान्यैर्व्यरोचत् वसुंधरा ||१८||மத்ஸ்யகச்ச3ப ஸங்கை4ஶ்ச ஶிம்ஶுமார க3ணைஸ்ததா2 |பதத்3பி4: பதிதைஶ்சாந்யைர் வ்யரோசத வஸுந்த4ரா ||The earth then verily shone forth with the shoals of fish, schools of tortoises, and scores of porpoises and other aquatic beings that have already fallen and that were still falling in step with the spates of Ganga.மீன்கள், ஆமைகள், முதலைகள் கூட்டம் கூட்டமாக அதனுடன் விழுந்தன. நீர்வாழ் மற்ற பிராணிகளும் கங்கையில் கலந்து விழுந்ததால், பூமி அழகு மிகுந்து காணத் தகுந்ததாயிற்று.* * *शिंशुमारोरगगणैर् मीनैरपिच चंचलैः |विद्युद्भिरिव विक्षिप्तै राकाशमभवत्तदा ||२३||ஶிம்ஶுமாரோரகககணைர் மீநைரபி ச சஞ்சலை: |வித்3யுத்3 பி4ரிவ விக்ஷிப்தை ராகாஶமப4வத்ததா3||At that time, with the falling and rising of scores of porpoises and reptiles, even with the wriggling fishes, the sky became flashy as though flashes of lightning are strewn over it.துள்ளி திளைத்தபடி வீழ்ந்து கொண்டிருந்த முதலை-பாம்பு-மீன் கூட்டங்களால் கங்கை நீர் வீழ்ச்சி, மின்னலின் ஒளிச்சிதறல்கள்களுடன் தோன்றும் ஆகாயம் போல் விளங்கியதுபார்க்க சமஸ்கிரத அகராதி >>> http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/app/macdonell_query.py?qs=%E0%A4%B6%E0%A4%BF%E0%A4%82%E0%A4%B6%E0%A5%81%E0%A4%AE%E0%A4%BE%E0%A4%B0&searchhws=yes1) शिंशुमार (p. 162) simsu-maNra porpoise (V.2).கடற்பன்றி(கடல்+பன்றி) (Porpoises,mereswine) என்ற கடல்விலங்குhttps://ta.wikipedia.org/s/jqb <<< தமிழ் விக்கிஉருவ ஒற்றுமை அதிகம் என்பதால் Porpoises மற்ற
வாரணம் = கடல். வாரணன் - கடலோன்.
கடல்மீனாகிய சுறாவின் கோடு (முதுகெலும்பு) வாரணனுக்கு அடையாளமாகக் கொள்ளப்பட்டது.
கடைக்கழகத்திற்குப் பின்புகூடத் தமிழர் வாரித் துறையில், தேர்ந்திருந்தமையும், தமிழரசர் நாவாய்ப்படை வைத்திருந்தமையும்,
“காந்தளூர்ச்1 சாலை கலமறுத் தருளி...
முரட்டொழிற் சிங்களர் ஈழமண் டலமும்... 2
முந்நீர்ப் பழந்தீவு பன்னீ ராயிரம்
திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்”
என்று முதலாம் இராஜராஜசோழன் (985) மெய்க்கீர்த்தியும்,
“அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வர்ம்ம
னாகிய கடாரத் தரசனை வாகையம்
பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத்து....
தேனக்க வார்பொழில் மாநக்க வாரமும் 3
தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும் 4
மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பர கேசரி”
என்று இராஜேந்திர சோழன் (1012) மெய்க்கீர்த்தியும் கூறுவதாலும், 13ஆம் நூற்றாண்டுவரை பாண்டியரும் சோழரும் ஈழத்தொடு வைத்திருந்த போர்நட்புத் தொடர்பினாலும் அறியப்படும்.
ஆகவே, வாரணன் என்னும் பெயரே வருணன் என்று வடமொழியில் திரிக்கப்பட்டதென்க.
_______________________________________________________________________
1. காந்தளூர் - மேல்கரையில் ஓர் ஊர்.
2. ஈழம் - இலங்கை
3. நக்கவாரம் - Nicobar
4. கடாரம் - பர்மா
தொடக்க காலத்தில் இயற்கையின் அச்சந் தரும் செயல்களே மனிதனை கடவுள் நெறிக்கு இட்டுச் சென்றது என்பது மானிடவியலாளர் சிலரின் கருத்தாகும். மனிதன் தன் ஆற்றல் ஓர் வரம்புக்குட்பட்டது என்பதை உணர ஆரம்பித்த நிலையில், கடவுள் கோட்பாடு உருவாகியது என்பர். தன் அறிவுக்கும், ஆற்றலுக்கும் முறையே புலப்படாத உட்படாதவற்றின் மீதான அச்சம் காரணமாக மனிதன் முதலில் இயற்கையை வழிபடத் தொடங்கி பின்னர் கடவுள் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினான். அவை வழிபாட்டு மரபாய் மாறியது.
அவ்வடிப்படையில் பண்டைய தொல்காப்பிய காலத் தமிழ்ச்சமூக தெய்வக் கோட்பாடுகள் ஐநில மக்கள் வாழ்வியலுக்கேற்ப உருவாகி இருக்கின்றன. அவை இன்றைய மத நிறுவனங்கள், பெரும் சடங்குகள் அடிப்படையிலான இறைவழிபாடுகளைப் போல அன்று இருந்திருக்கவில்லை.
தெய்வம்
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (தொல். நூ. 951)
என்பது தொல்காப்பியம்.
ஐந்திணைகளாகப் பகுக்கப்பட்டிருந்த பண்டைத் தமிழகத்தில் குறிஞ்சிக்குச் ‘சேயோன்’ என்ற முருகனும், முல்லைக்கு ‘மாயோன்’ என்ற திருமாலும், மருதத்திற்கு ‘வேந்தன்’ என்று குறிப்பிடப்படுகின்ற இந்திரனும், நெய்தலுக்கு வருணன் (வாரணன் என்று அழைப்பர்) என்ற தெய்வமுமாக நானிலக் கடவுளைத் தொல்காப்பியர் வெளிப்படுத்துகின்றார்.
பாலை நிலத்திற்குக் கொற்றவையும் (காளி என்றும் அழைப்பர்) தெய்வமாய் இருந்துள்ளது. வேறு கடவுளைப் பற்றியோ, மத நிறுவனத்தைப் பற்றியோ குறிப்புகள் இல்லை.
போர் மரபில் வழிபாடுகளும், நம்பிக்கைகளும்
பண்டைய காலப் போர்மரபில் வழிபாட்டுச் சடங்குகள் நிகழ்ந்துள்ளதைத் தொல்காப்பியம் உறுதி செய்கிறது.
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று
இருமூன்று வகையிற் கல்லொடு புணர|| (தொல். நூ. 1006)
என்று தொல்காப்பியம், போர்க்களத்தில் இறந்துபட்ட வீரரை நினைத்து நடுகல் நட்டு வழிபட்ட முறையை குறிப்பிடுகின்றது. சங்க இலக்கியங்களிலும் இத்தகு நடுகல் வழிபாட்டு முறையைக் காண முடிகின்றது. குறிப்பாக குறிஞ்சித் திணையில், மலையும் மலை சார்ந்த வாழ்வில் ஆநிரை கவர்தல், மீட்டலில் ஈடுபட்டு, வீரமரணம் அடைந்தவர்களுக்கே ‘நடுகல்’ நட்டு வழிவழியாக வழிபாடு நிகழ்ந்திருக்கின்றது.
நடுகல் வழிபாட்டு முறை பல்வேறு இடங்களில் காணப்பட்டுள்ளது. “இறந்தவனது ஆன்மாவை சில சடங்குகள் மூலம் ஓர் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைக்கலாம். அங்குள்ள ஒரு பொருளில் நுழைந்து கொள்ளச் செய்யலாம் என்ற நம்பிக்கை உலகமெங்கும் பண்டைய மக்களின் பண்பாட்டில் காணப்படுகிறது” என்பர். புறநானூற்றிலும் (பா. 265, 264, 232, 329) சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குக் கல்லெடுத்து வந்து வழிபட்ட செய்தியைக் காண முடிகிறது. சிலம்பில் வஞ்சிக் காண்டத்தில் விஞ்சி நிற்கும் வழிபாட்டுச் செய்திகளும் காதைகளின் பெயர்களும், நடுகல் வழிபாட்டு மரபை உணர்த்தும். மேலும்,
“வெற்றி சிறப்பின் வெவ்வாய் வேலன்” (தொல். நூ. 1004) என்ற அடிகள் போருக்கு செல்லும் போது வெற்றி கருதி சிவந்த வாயினையுடைய வேலனை வழிபட்டதையும், “மாயோன் மேய மன்பெறு சிறப்பின்” (தொல். நூ. 1006: 9) மாயோனைத் தெய்வமாகக் கொண்ட மண்ணின் சிறப்பினை எண்ணியும் கரந்தை வீரர்கள் போருக்குச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, “உடல்வேந் தடுக்கிய உன்னநிலையும்” (தொல். நூ. 1006:8) போருக்குச் செல்லும் போது நல் நிமித்தம் பார்ப்பதையும் கரந்தை வீரர்கள் கொண்டிருந்தனர் என்பார் தொல்காப்பியர். “உன்னமென்பது ஒரு மரம். நல்லதாயின் தளிர்த்தும் தீயதாயின் உலறியும் அது நிமித்தங் காட்டு மெனலால், அதைக் கண்டு அதனொடு சார்த்தி நிமித்தம் பார்க்கும் குறிப்பு நுவலப்பட்டது” (தி.சு.பாலசுந்தரம் உரை. பக் 265) என்பர். மேலும், தாம் வழிபடுகின்ற தெய்வம் ஊரைக் காக்கும் என்ற நம்பிக்கை தொல்காப்பியர் கால மக்களின் நம்பிக்கையாக இருந்ததை, “வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப” (தொல். நூ. 1367) என்ற நூற்பாவின் அடிகள் உணர்த்துகின்றன.
பேய் பற்றிய நம்பிக்கை
தொல்காப்பியர் காலத்தே மக்களிடத்தே பேய்கள் பற்றிய நம்பிக்கை இருந்திருக்கிறது. “பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்” (தொல். நூ. 1025) பேஎத்த மனைவி ஆஞ்சியானும்” (தொல். நூ. 1025) என்ற அடிகளின் வழியாக, போரில் இறந்துவிட்ட அல்லது விழுப்புண்பட்ட வீரர்களை பேய்கள் நின்று பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும், பழந்தமிழக மக்களின் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் ஃ துறந்த ஒழுக்கங் கிழவோற் இல்லை” (தொல்.நூ.1081) என்ற நூற்பாவில் ‘ஓரை’ என்ற சொல்லிற்கு பல பொருட்களை குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, நாழிகை, விளையாட்டு, முகூர்த்தம், ராசி என்று குறிப்பிடுகின்றனர். “நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்” (தொல்.1060) என்ற நூற்பாவில் ‘புள்’ என்ற சொல்லிற்கு முன்னர் பறவை யென்றும், பிற்காலத்தே சகுனம் என்றும் குறிப்பிடுவர். இதன் வழி, பொதுவாக பண்டைய மக்களிடம் ‘நிமித்தம்’ பார்க்கும் வழக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது. பண்டைய காலத்தில் ‘நிலையாமை’ கருத்துக்களும், ஊழ்வினை நம்பிக்கையும் இருந்துள்ளதையும் அறிய முடிகிறது.
கடவுள்
“காமப்பகுதி கடவுளும் வரையார்” (தொல். நூ. 1029) என்ற நூற்பாவில் காமக் குறிப்பை வைத்து இலக்கியம் பாடுகின்ற பொழுது தேவரிடத்தும் மக்களிடத்தும் வரையார் என்று உரையாசிரியர் விளக்கம் தருகின்றனர். மேலும்,
“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றுங் (தொல். நூ. 1034)
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல். நூ. 1034) என்று கொடிநிலை, கந்தழி, வள்ளி-மூன்று துறையும் கடவுள் வாழ்த்தோடே பொருந்தி வரும் என்றும், “அமரர்கண் முடியும் அறுவகை யானும்” (தொல். நூ. 1027) என்று, தேவர் நிலைமையில் வைத்து வாழ்த்துதற்குரிய அறுவகை நிலையான சான்றோர், புலவர், வேந்தர், ஆன், மழை, உலகம் என அறுவகையில் வாழ்த்துதல் மரபெனவும் தொல்காப்பியர் சுட்டுகின்றார். இவை கடவுளை வாழ்த்தும் வகைப் பற்றிய குறிப்பாகும். இதன் வழி கடவுளை பாடும் மரபை பண்டையோர் கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது.
திணைத் தெய்வங்கள் வழிவழி வணங்கப்பெற்று, காலவோட்டத்தில் தமிழர் வழிபாட்டு மரபில் மாற்றங்கள் நிகழ்ந்து புறச்சமயங்கள் வந்து கலந்து கலப்பு வழிபாட்டு மரபு தோன்றிவிட்டது. ‘தெய்வம்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் ஒன்பது இடங்களில் இடம்பெற்றுள்ளன. ‘இறை’, ‘இறைவன்’ என்ற சொற்கள் பண்டைய காலத்தில் தலைவனை குறிக்கும் சொல்லாகவும் காணப்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழிலக்கியங்களில் ‘சமயம்’ என்ற சொல்லே இல்லை. அதற்குப் பிற்பட்ட நூல்களில் தான் சமயம், மதம் என்ற சொற்கள் காணப்படுகின்றன. எனவே, சங்க காலத்தில் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பினும் அவர் சிவன், திருமால் போன்ற கடவுளர்களை வழிபட்டாலும் சைவ சமயம், வைணவ சமயம் போன்ற சமயப்பற்று வேறூன்றவில்லை என்பது தெரிகின்றது.
‘தெய்வம்’ என்பது கருப்பொருளிலேயே கூறப்பட்டுள்ளது. கருப்பொருளானது நிலத்தில் காலத்தால் கருக்கொள்ளும் பொருளாகும். இவை தோன்றி நின்று மறைவனவே யாகும். இதன் மூலம் ‘தெய்வம்’ என்று குறிப்பிடப்படுவது இறந்த முன்னோர்களே எனக் கருதவும் இடமுண்டு. தெய்வ வழிபாடே அன்றி நிலையான ‘கடவுள்’ என்ற கொள்கைப் பற்றி தொல்காப்பியத்தில் எங்கும் சுட்டப்பெறவில்லை என்பது ஆராயத்தக்கதாகும்.
ஐந்திணைத் தெய்வம் பற்றி பலர் விளக்கம் தந்திடினும் தேவநேயப்பாவாணர் தெளிவுறச் சுட்டுகின்றார்.
‘குறிஞ்சி நிலத்து மக்கள் தம் தெய்வத்தை தீயின் கூறாகக் கொண்டதால் சேந்தன் (சிவந்தவன்) சேயோன் என்று பெயரிட்டு அழைத்தனர். முல்லைநிலத்து மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக முதற்கண் மழையே இருந்ததால் முகிலையே தெய்வமாகக் கொண்டு ‘மால்’ என்று தம் தெய்வத்திற்கு பெயரிட்டு வழிபட்டனர். மருத நிலத்து மக்கள் இவ்வுலகில் தீவினையை விட்டு நல்வினை செய்து வாழும் கொள்கை கொண்டோராக, இம்மையில் வேந்தனாக அறவாழ்க்கை நடத்தினால், மறுமையில் தேவர் கோனாய்ப் பிறப்பான் என்ற கொள்கை கொண்டு தேவர்கோனைத் தேவர் ‘வேந்தன்’ என்றனர். மேலும், உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத மழையானது விண்ணிலிருந்து பொழிகிறது. இவ்விண்ணுலக வேந்தனே ‘இந்திரன்’ ஆயினான். நெய்தல் நிலத்து மக்கள் கடலை நம்பியே வாழ்க்கை நடத்தியதால் தம் தெய்வத்தைக் கடல் தெய்வமாகவே கொண்டு அதற்கு ‘வாரணன்’ அல்லது ‘வருணன்’ என்று பெயரிட்டு வணங்கினர். பாலை நிலத்து மக்களின் வாழ்வு வறட்சியும், போர்க்களங்களும், பிணங்களும், பிணந்திண்ணிப் பேய்களும் கொண்டதால் பேய்களுக்குத் தலைவியாகிய ‘காளி’யை தெய்வமாகக் கொண்டனர். இத்தகைய ஐந்நிலத்து மக்களும் தம் வாழ்வியலோடு ஒன்றி வந்த இயற்கையை பொருத்தி தெய்வத்தை தோற்றுவித்தனர். மேற்கூறிய கருத்தை தேவநேயர் தமிழர் மதம் நூலில் தெளிவுற குறிப்பிடுகின்றார்.
மேலும், பண்டைய தமிழரின் தெய்வ வழிபாட்டு முறைகளுக்குக் காரணமாக 1. அச்சம், 2. முற்காப்பு, 3. நன்றியறிவு, 4. பாராட்டு, 5. அன்பு, 6. கருதுகோள், 7. அறிவு வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இறை வழிபாடு தோற்றம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.
‘தீயும், இடியும் போன்ற பூத இயற்கைக்கும், பாம்புபோலும் நச்சுயிரிக்கும், இறந்தோராவிகட்கும், பேய்கட்கும் அஞ்சிய அச்சத்தால் தெய்வ வணக்கம் முதற்கண்ணாகத் தோன்றியது. கொள்ளை நோய், பஞ்சம், இயற்கை சீற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குமாக முற்காப்பு அடிப்படையில் அச்சம் தோன்றியது. இவை தெய்வங்களின் சீற்றத்தால் நேர்பவையென எண்ணி அச்சம் கொண்டனர். மேலும், உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத கதிரவன், மதி, மரம், ஆ, இன்ன பிறவற்றையும் தெய்வமாக நன்றியறிவின் பொருட்டு வணங்கினான். மறவனையும், மழை வரவழைத்தும், பழுக்கக் காய்ச்சிய பொன்னைக் கையிலேந்தியும், தீயோரைச் சாவித்தும், சினத்தால் ஊரினை எரித்தும், உடன்கட்டை ஏறியும், கடுங்கற்பைக் காத்தப் பத்தினிப் பெண்டிற்கும்; கல்நட்டு விழாவெடுத்தது பாராட்டே ஆகும். இவ்வடிப்படையிலும் தெய்வம் தோற்றம் பெற்றது. அரசன் இறந்த பின்னர் அன்பு மிகுதியால் அவனை வழிபட்டதும், கண்ணால் காணும் இயற்கைக் கூறுகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் தெய்வங்கள் கருதுகோளின் அடிப்படையிலும் தோற்றம் பெற்றன. அதுமட்டுமன்று அறிவு வளர்ச்சி பெற்ற பின்னர் மறுமையும், கடவுள் உண்மையும் கண்டு நம்பிக்கையின் அடிப்படையிலும் ‘தெய்வம்’ தோன்றிற்று என்று தேவநேயப்பாவாணர் அவர்கள் பழந்தமிழரிடம் உருவாகிய ‘தெய்வம்’ பற்றிய சிந்தனையை பற்றி விளக்குவதைக் காண முடிகிறது. இத்தகைய வழிபாட்டு முறையே பழந்தமிழரின் வழிபாட்டு முறையாம். மேற்கூறப்பட்டவையே தொல்காப்பியம் குறிப்பிடும் வழிபாட்டு முறையாம்.
இதன் வழியாக, தொல்காப்பிய காலப் பழந்தமிழகத்தில் நில அடிப்படையில் கடவுள் கோட்பாடுகள் தோன்றியிருப்பினும் நிலைத்த மதமோ, சமயமோ தொல்காப்பியத்தில் காணப்படவேயில்லை. இடைக்காலச் சூழலே மதங்கள் தோன்றுவதற்குரிய காலமாக இருந்துள்ளன எனலாம். இதன் வழி நிலத்திற்கு ஏற்ப உருவ வழிபாடு, இயற்கை வழிபாடு ஆகிய இரண்டும் பழந்தமிழகத்தில் இருந்துள்ளன என்பதும் போர் மரபில் வழிபாடுகளும் நம்பிக்கைகளும் தோன்றியிருக்கின்றன என்பதும் தொல்காப்பியத்தில் காணும் வழிபாட்டு மரபு கோட்பாடுகளாம்.
சான்றெண் விளக்கம்
1. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, திசு.பாலசுந்தரம் உரை.
2. தமிழர் மதம், தேவநேயப்பாவாணர்.
3. நடுகற்களும் நம்பிக்கைகளும், நா. வானமாமலை (ஆராய்ச்சி மலர்)
- பா.பிரபு, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
--