நீச்சல் கலை

324 views
Skip to first unread message

Sathish S

unread,
Jul 30, 2010, 7:52:44 AM7/30/10
to mint...@googlegroups.com

கிணறு ஒவ்வொரு கிராமத்து இளைஞனும் அவனது சிறுவயதில் நீச்சல் கற்க தந்தையுடனே இல்லை மாமாவுடனோ இல்ல ஊர்ல இருக்கிற அண்ணன்களுடனோ சென்று நீச்சல் பழகி இருப்பார்கள் இன்று நாம் என்ன தான் வளர்ந்து பெரிய ஆள் ஆனாலும் அன்று கற்ற நீச்சல் இன்றும் மறக்காது. சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் கற்பது இவை இரண்டும் ஒரு முறை கற்றால் வாழ்வில் மறக்காத கலைகள் ஆகிவிடும். கிராமத்தில் சைக்கிள் ஓட்டத்தெரியதா ஆட்கள் கூட இருப்பார்கள் ஆனால் நீச்சல் தெரியாத ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நான் எனது 10வயதில் நீச்சல் கற்றேன். எனது ஊர் காவிரி ஆற்றிற்குப் பக்கத்தில் இருந்ததால் ஆற்று நீச்சமும் தெரியும். நான் எப்படி நீச்சல் கற்றேன், நான் எப்படி டைவ் அடிததுப்பழகினேன், ஆற்றீல் எதிர் நீச்சல் எப்படி அடித்தேன், வேகமாக இழுத்துச் செல்லும் தண்ணீரில் எப்படி நீந்தி கரையேறுவது என நினைத்தேன். கிராமத்தில் உள்ளவர்கள் எப்பவுமே தண்ணீரைக்கண்டால் பயமில்லாமல் குதிப்பார்கள் ஆனால் நகரத்தில உள்ளவர்கள் அய்யோ எனக்கு நீச்சல் தெரியாது என்பார்கள். அதுவும் இல்லாமல் உலகில் மிகச்சிறந்த உடற்பயிற்சிகளில் நீச்சல் கலையும் ஒன்று என்று படித்த ஞாபகம். நீச்சல் கலையைப்பற்றிய எனது பதிவு.

நீச்சல் கற்பது எப்படி?
நீச்சல் கற்க நிச்சயமாக நன்கு நீச்சல் தெரிந்த நபர் வேண்டும். அவரின் உதவியுடன் தான் கற்க முடியும். முதலில் அவர் தனது கைகால்களை எவ்வாறு அசைக்கிறார் என பார்க்கவேண்டும். காலும் கையும் தண்ணீருக்குள் இருக்கும் தலைமட்டும் மேலே தூக்கி கை, கால்களை மெதுவாக ஆட்டியபடி மிதப்பார் இதை நன்கு கவனித்துவிட்டு நாம் தண்ணீரில் இறங்க வேண்டும். தண்ணீருக்குள் இறங்குவதற்கு முன் கிராமத்தில் புரடை(சுரைக்காயை ஒரு 2 மாதம் காய வைத்தால் அதற்கு பெயர் புரடை) கட்டுக்கொண்டு இறங்குவார்கள் இப்ப எல்லாம் லாரி டியூப்பில் காற்றை நிரப்பி அதற்குள் அமர்ந்து கொள்கிறார்கள். ஒரு இரண்டு நாட்கள் உதவியுடன் இறங்கினால் மூன்றாம் நாள் தைரியம் வந்து நாமும் மெதுவாக இறங்கி கை, கால்களை அசைக்கும் போது நன்கு நீச்சல் தெரிந்தவர் நமது அரைநான் கயிறை பிடித்துக்கொண்டு பின்னால் வருவார். ஒரு இரண்டு முறை பிடித்து விட்டு மூன்றாவது முறை விட்டு விட்டு பிடிப்பார். அடுத்த நாள் இந்தபக்க சுவரையும் அந்தப்பக்க சுவரையும் பிடித்து செல்ல வேண்டும் இவ்வாறு ஒரு ஒருவாரம் சென்றால் அழகாக நீச்சல் கற்றுக்கொள்ளலாம்.

இந்த வகை நீச்சல் கிணறு, நீச்சல்குளம், ஏரி, கோயில் குளத்திற்கு மட்டுமே பொருந்தும்.

ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது எப்பபொழுதும் தண்ணீர் செல்லும் பக்கமாகதான் செல்ல வேண்டும். எதிர் திசையில் செல்வதை எதிர் நீச்சல் என்பர் இது மிகவும் கடினமான ஒன்று. ஆற்றிற்கும் ஒரு நல்ல அனுபவமிக்க நீச்சல் தெரிந்த நண்பருடன் செல்லவேண்டும். ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது கால்களை விட இரண்டு கைகளில் ஒவ்வவொரு கையையும் முன்புறம் தூக்கி தண்ணீரை பின்னுக்கு கொண்டு வரைவேண்டும் அப்பொழுது நாம் முன்னுக்குச்செல்வோம். கைகளை எந்த அளிவிற்கு வீசுகிறோமோ அந்த அளவிற்கு நாம் முன்னிற்குச் செல்லலாம். ஆற்று நீச்சல் கற்க குறைந்தது 15 நாட்கள் ஆகும். கைகளை வீசும் போது சுழல் இருந்தாலும் நாம் எளிதாக தப்பிக்கலாம். கடல் நீச்சல் பற்றி நான் இப்பபோது தான் விபரம் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

நீச்சலின் பயன்கள் :
1. நீச்சல் என்பது ஒரு வகையான கலை மட்டும்லல நல்ல உடற்பயிச்சியும் தான்.
2. தினமும் 1 மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் உடலில் உள்ள ஊளைச் சதைகள் குறையும்.
3. கை, கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும்.
4. நன்கு பசி எடுக்கும். கை, காலை குடைச்சல் மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
5. இரத்த ஓட்டம் சீராகிறது.
6. நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும்.
7. நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.
8. சிறந்த முதலுதவிக்கலையாகவும், தற்காப்புக்கலையாகவும் விளங்குகிறது.
9. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க நீச்சல் உதவுகிறது.
10. ஒரே நேரத்தில் தசை, இருதயம், என அனைத்துப்பகுதிகளும் இயங்குகிறது

எனது வேண்டுகோள் :
குழந்தைகள் படிக்கும்போது பள்ளிகளில் நீச்சல் கட்டாயப்பாடமாக்கவேண்டும். இல்லையேல் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நீச்சல் கண்டிப்பாக கற்றுத்தரவேண்டும்.
நோயற்ற சமுதாயத்தை உருவாக்க நீச்சல் கலையும் உதவும்.

--
Sathish.....

Geetha Sambasivam

unread,
Jul 30, 2010, 7:57:02 AM7/30/10
to mint...@googlegroups.com
நல்ல இடுகை. பல வருடங்கள் என் கணவர் கிணற்றில் ஏதானும் விழுந்துட்டால் தானே இறங்கிப் போய் எடுத்துட்டு வருவார். அப்புறம் தான் வடக்கே சென்றதும், அந்தப் பழக்கம் விட்டுப் போச்சு. இப்போத் தண்ணீரில் இறங்கினால் என் மாமியார் கூட நீச்சல் அடிப்பாங்க. 1999-ம் வருஷம், 74 வயதில் கங்கையில் திரிவேணி சங்கமத்தில் அவங்க நீச்சலடிக்கும்போது வாயைப் பிளந்து கொண்டு பார்த்துட்டு இருந்தேன்.

2010/7/30 Sathish S <sat1...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Jul 30, 2010, 7:40:22 PM7/30/10
to mint...@googlegroups.com
எங்க ஊர் பக்கம் ‘கமலைக் கிணறு’ என்று இருக்கும். உண்மையில் ஆழமான பெரும் குழியில் இருக்கும் சின்ன நீச்சல் குளமது. எல்லாப் பசங்களும் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார்கள். குளிக்க வருகிறாயா? என்று ஒருவன் கேட்க பயத்துடன், ஆம் என்று சொல்ல. அடுத்த நிமிடம் தொபுக்கடீர்! யாரு என்னைக் கிணற்றில் தள்ளி விட்டு விட்டனர். அப்புறம் நீச்சல் அதுவாக வந்துவிட்டது :-))
 
நீச்சல் ஒரு அற்புதமான உடற் பயிற்சி. தினம் நீச்சல் அடித்தால் உடலுக்கு நல்லது. நமது எல்.ஏ.சுவாமிநாதன் வீட்டுக் கொல்லையில் நீச்சல்குளம் உண்டு. அதிர்ஷ்டசாலி!
 
க.>
 


 
2010/7/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jul 30, 2010, 7:46:43 PM7/30/10
to mint...@googlegroups.com
மேலும் எதிர்நீச்சல் வலுவையும், துணிவையும், ஆக்கத்தையும் கூட்டும்.
'கவலைக்கிணறு?' இங்கு, கவலை, மாடு கட்டி, நீர் இறைக்கும் பெரிய
பாத்திரத்தைக் குறிக்கும். நானும் அந்தப்பக்கத்து ஊரில், இப்படி
ஊறியிருக்கிறேன்.
இன்னம்பூரான்

2010/7/31 N. Kannan <navan...@gmail.com>:

ananda rasa thiruma

unread,
Jul 30, 2010, 7:57:03 PM7/30/10
to mintamil
குந்தாணி நீச்சல், உள் நீச்சல், ஒரே முக்கில் அடி மண் எடுப்பது, அடுத்த கரைக்குப் போய்த் திரும்ப நடக்கும் போட்டிகள் இவை எல்லாம் சிறுவயதோடு போய்விட்டன. என் பிள்ளைகளுக்கு நீச்சல் தெரியாது. கற்றுக்கொள்ள நீர் நிலைகளும் இன்று இல்லை. நேரமும் இல்லை.
ஆராதி

2010/7/31 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Jul 30, 2010, 8:02:56 PM7/30/10
to mint...@googlegroups.com
எனக்கு ஜல்லிக்கட்டை பிடிக்காது. கலித்தொகை, ஏறு தழுவி, தலைவியை கவர்வது
பற்றிச்சொல்லும். நீச்சலுக்கும், இந்த ஆற்றல் உண்டு.

இன்னம்பூரான்

2010/7/31 ananda rasa thiruma <aara...@gmail.com>:

jmms

unread,
Jul 31, 2010, 12:25:29 AM7/31/10
to mint...@googlegroups.com


எனது வேண்டுகோள் :
குழந்தைகள் படிக்கும்போது பள்ளிகளில் நீச்சல் கட்டாயப்பாடமாக்கவேண்டும். இல்லையேல் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நீச்சல் கண்டிப்பாக கற்றுத்தரவேண்டும்.
நோயற்ற சமுதாயத்தை உருவாக்க நீச்சல் கலையும் உதவும்.

 நீச்சல் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிய வேண்டிய ஒன்று..

போன வாரம்தான் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு அருவியாக சென்று குளிக்க வைத்தேன்.

 ஒவ்வொன்றும் 3 கிமீ நடந்து மலையேறி நல்ல பயிற்சியும்..



பாறையிலிருந்து குதித்து ஒரே ஆட்டம்தான்..

எங்களையும் குதிக்க சொல்லி நாங்களும் குதித்து..

( பாதுகாப்பானது ).

தண்ணீர் தான் எத்தனை சுகம் குழந்தைகளுக்கு ?..


--
சாந்தி

 Forgive everyone everything.

http://punnagaithesam.blogspot.com/ =============================



s.bala subramani B+ve

unread,
Jul 31, 2010, 6:23:54 AM7/31/10
to mint...@googlegroups.com
நீச்சல் கடலிலும் நான் சொல்லி தருகிறேன்
தமிழகத்தில் கிட்டத்தட்ட 300 குளியாளிகள்
 இருகிறார்கள் avargaludan தொடர்பில்இருக்கிறேன்
இந்த அளவு வேறு மாநிலங்களில்
இல்லை.
 
snorkling,scuba diving with compressed air and oxygen amd skin diving
 
அகட்டி மற்றும் வேம்பாருக்கு
வருவதாக இருந்தால் அழைத்து செல்ல நான் தயார்.
 
இப்பொழுது குளியாளிகள் தேவையாக இருக்கிறது
 
அன்புடன்
 
சிவ.பாலசுப்ரமணி B+ve
 
இன்றும்  சுமுனவிற்கு வெள்ளை அணு  குருதி appolo cancer  hospitalil  கொடுத்தேன்
B+Ve தேவை படுகிறது
 
 
 
 


 
2010/7/31 jmms <jmms...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve

Tthamizth Tthenee

unread,
Jul 31, 2010, 6:33:50 AM7/31/10
to mint...@googlegroups.com
குழந்தை கருவில் இருக்கும்போது  பனிக்குடத்தில் உள்ள நீரில் தான் இருக்கிறது
 
அதை  ஒட்டியே  குழந்தைகளாக இருக்கும் போதே தைரியமாக  தண்ணீரில் இட்டு  நீச்சல் பயிற்சியை அளிக்கிறார்கள் மேல் நாட்டவர்
 
நாம் பயப்படுகிறோம்
 
குழந்தைகள் நீச்சலை மிக எளிதாக  கற்றுக்கொள்ளும்
குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி மிகவும்  அவசியமானது
 
 ஓடத்தில்  சென்றுகொண்டிருந்த ஒருவர் ஓடக்காரனைப் பார்த்து  உனக்கு ராமாயணம் தெரியுமா, மஹாபாரதம் தெரியுமா  என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்
 
அவனும் தெரியாது என்று சொல்லிக்கொண்டே வந்தான்
 
ஒரு கட்டத்தில்  ஓடக்காரன்  அவரைப் பார்த்து  உங்களுக்கு  நீச்சல் தெரியுமா  என்றான்
 
அதற்கு அவர் தெரியாது  என்றார்
 
அப்போது  அந்த ஓடக்காரன் கவலைப்படாதீர்கள்  நான் உங்களைக் காப்பாற்றுகிறேன்
 
ஓடத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்றான்
 
நீச்சல்  மிகவும் அவசியம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
31-7-10 அன்று, s.bala subramani B+ve <sunke...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Innamburan Innamburan

unread,
Jul 31, 2010, 6:38:15 AM7/31/10
to mint...@googlegroups.com
'இன்றும் சுமுனவிற்கு வெள்ளை அணு குருதி appolo cancer hospitalil கொடுத்தேன்
B+Ve தேவை படுகிறது...'

நல்ல காரியம் செய்தீர்கள், பாலு. எனக்குக்கூட தத்க்ஷணமே உமக்கு தொடர்பு
கொடுத்ததில் மகிழ்ச்சி. நான் ஏற்கனவே சொன்ன இடங்களில் விசாரிக்க
சொல்லவும், அவர்களை.

2010/7/31 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:
>

s.bala subramani B+ve

unread,
Jul 31, 2010, 7:04:47 AM7/31/10
to mint...@googlegroups.com
நவீன முறையில்
3 நாட்களுக்கு ஒரு முறை நாம் ஒரு மணிநேரம் நம்
குருதியிலிருந்து வெள்ளை அணுக்கள்  இயந்திரத்தின்
மூலம் கொடுக்கலாம்.
சென்னையில் குருதி கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடரலாம்
 

ananda rasa thiruma

unread,
Jul 31, 2010, 7:45:11 PM7/31/10
to mintamil
சோவியத் நாடு என்னும் பெயரில் அன்றைய சோவியத் ருஷியாவிலிருந்து தமிழில் ஓர் செய்தித்தாள் வெளிவந்து கொண்டிருந்தது. அதில் ஓர் இதழில் அந்நாட்டில் நீர்த் தொட்டிகளில் மகப்பேற்றை நிகழ்த்துவதாகவும் அதனால் அந்தக் குழந்தைகள் நல்ல எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றும் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.
அன்புடன்
ஆராதி

Geetha Sambasivam

unread,
Aug 1, 2010, 2:09:41 AM8/1/10
to mint...@googlegroups.com
சோவியத் நாடு என்னும் பெயரில் அன்றைய சோவியத் ருஷியாவிலிருந்து தமிழில் ஓர் செய்தித்தாள் வெளிவந்து கொண்டிருந்தது.//

நிறையப் புத்தகங்களே வந்து கொண்டிருந்தன. கதைப்புத்தகங்களும் வரும்.

2010/8/1 ananda rasa thiruma <aara...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages