அபிதான சிந்தாமணி எனும் பொக்கிஷம்.

98 views
Skip to first unread message

Raja sankar

unread,
Sep 29, 2012, 12:02:12 PM9/29/12
to minT...@googlegroups.com
நாள்காட்டியிலே தேதிகிழிக்கும் போது இன்று கர்ப்போட்டம் என போட்டிருக்கும். சில காலண்டர்களின் பின்பு கர்ப்போட்டம் என்றால் மழைவரும் என எழுதியிருக்கும். ஆனால் கர்ப்போட்டம் என்பது என்ன அதை எப்படி கணிக்கிறார்கள். நானும் பல பஞ்சாங்களிலே தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. ஆனால் பக்கத்திலே வாங்கின அபிதான சிந்தாமணியை புரட்டிக்கொண்டிருக்கும் போது இது கிடைத்தது.

கற்போட்டம் --(கர்ப்போட்டம்) இது ஓர் மழைக்குறி. ஆனி மாதத்திற்குக் கர்ப்போட்டம் நாள் - 1 1/2, ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை மாதம் ஒன்றுக்கு நாட்கள் - 2 1/4 ஆக மாதம் ஐந்திற்கு நாட்கள் 11 1/4. மார்கழி மாதத்திற்கு நாள் - 1. தை மாத முதல் வைகாசி வரை மாதம் 5 க்கு மாதம் 1- க்கு நாழிகை -12 ஆக நாள் - 1 ஆக கர்ப்போட்ட நாட்கள் 13 3/4. இவை பூராட நட்சத்திரத்தில் சூரியன் வரும் நாட்களாம். “பானு தனுவிற் பதின் மூன்றேமுக்கான் மேல், ஆனிக்கு கர்ப்போட்டமறுகாலாம்-- மானேகேள், நண்டு முதற்றேள்ளவு நாலரைநான்மாகாணி கொண்டதனுவுக் கொன்றே கூறு”. கர்ப்போட்ட காலங்களில் வானத்தில் இந்திரவில், மேகம், பரிவேடம், என்பவற்றுள் ஒன்றாயினும் இருப்பின் அவ்வவ்மாதங்களில் மழையுண்டு. அதிகமழை பெய்தால் அற்பமழை. ஒன்றுமிலாதிருக்கின் மழையில்லை.

அருமையான விளக்கம் இல்லையா? இதிலே கடைசி வரி ”அதிகமழை பெய்தால் அற்பமழை” என்பது தவறாக இருப்பது போல் தெரிகிறது ஆனால் எதைக்கொண்டு சரிபார்ப்பது? இந்த விவரங்களுக்கே நூறு வருடங்களுக்கு முன்பு பதிப்பித்த நூல் தேவைப்படுகிறது. இந்த விவரங்கள் சரஸ்வதி மகாலிலே செல்லரித்துக்கொண்டிருக்கும் ஓலைச்சுவடிகளிலே கன்னிமாரா நூலகத்திலே இருக்கும் நூல்களில் ஏதேனும் ஒன்றிலோ இருக்கலாம் எப்படி தேடுவது?

அனைத்தும் கணினியில் ஏற்றப்பட்டு யுனிகோடில் மாற்றப்பட்டால் மட்டுமே இது சாத்தியம். பல ஆயிரம் பேர் சிலவருடங்கள் உழைத்தால் மட்டுமே சாத்தியம். என்று அக்காலம் வரப்போகிறதோ இல்லை தமிழின் செல்வங்கள் இப்படியே அழியப்போகிறதோ?

ராஜசங்கர்
(Rajasankar)
Reply all
Reply to author
Forward
0 new messages