பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே

179 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
Jan 17, 2011, 9:20:51 PM1/17/11
to மின்தமிழ்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே!

 
Posted by Picasa
சிதம்பரம் தேரோட்டத்துக்குத் தயாராகக் காத்திருக்கும் தேர். தேரில் நடராஜர் அமர்ந்தபின்னர் படம் எடுக்கத் தடை. இது முதல்நாளே எடுத்தது. சென்ற திங்கள் 20-ம்தேதி ஆருத்ரா தரிசனவிழாவுக்கான ஏற்பாடுகளில் சிதம்பரம் மூழ்கி இருந்தது. நாங்கள் மதியமே எங்கள் தீக்ஷிதர் வீட்டிற்குச் சென்றோம். ஆருத்ரா தரிசனம் ஈசன் தனது எல்லையில்லாத் தாண்டவத்தை தாருகாவனத்து ரிஷிகள் அறியவும், பின்னர் உமைக்கு அறைக்குள்ளேயும் ஆடிக்காட்டியது. ஆடிக்கொண்டே அவன் சிதம்பரம் வந்திருக்கிறான். அந்த அதி அற்புதக் காட்சி தான் ஆருத்ரா தரிசனம். தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க ஈசன் பிக்ஷாடனராக வந்ததும், அதன் பின்னர் நடந்ததும் அறிந்தவையே.பிட்சாடனர் பற்றிய புராணக்கதைக்கு இங்கே பார்க்கவும்.

அந்த பிக்ஷாடனக் கோலத்தில் ஈசன் அன்று கிளம்பிக்கொண்டிருந்தான். சாதாரணப் பிச்சைக்காரனா என்ன?? உலகத்துக்கே ராஜாவாச்சே?? அதனால் நாதசுரக்காரர்கள் மல்லாரி வாசிக்க, தங்கப் பல்லக்கில், தங்கத் திருவோட்டை ஏந்திக்கொண்டு குறுநகை விளங்க, எதுக்கு அந்தச் சிரிப்பு?? உங்களை எல்லாம் வாழ வைக்கும் பிச்சையே நான் போடறது தானே? இதிலே எனக்குப் பிச்சைபோட வந்துட்டீங்களோனு கேட்கும் சிரிப்பு. சிரிப்பு முகத்தில் விளங்க சிதம்பரம் வீதிகளில்கொட்டும் மழையில் பிச்சை எடுக்கக் கிளம்பினான் ஐயன். அவனுடைய திருவோட்டில் அன்று பிச்சை இடும் பாக்கியமும் கிடைத்தது. பிச்சை வாங்கிக்கொண்டு தான் மறுநாள் நர்த்தன சுந்தர நடராஜாவாக வீதிவலம் அழகாய் அலங்கரிக்கப் பட்ட தேரில் வரப் போகிறான். பிக்ஷாடனர் வீதி வலம் வந்து உள்ளே சென்றதும், ராஜா ஊர்வலம் வரும் முன்னர் ஊர் நிலவரத்தையும், பாதுகாப்பையும் பரிசோதிக்கச் சந்திரசேகரர் நடு இரவில் ஒரு அவசரப் பார்வை பார்த்து எல்லாம் சரியாய் இருக்கா? காலம்பர ராஜா வந்து தேரில் உலா வரப் பிரச்னை இல்லையேனு பார்த்துட்டுப் போகிறார். அதுக்கு அப்புறமாய் மறுநாள் அதிகாலையிலே சித்சபையில் இருக்கும் நடராஜா தீவட்டிகள் முழு வீச்சில் ஒளி வீசிப் பிரகாசிக்க,கொம்பு, எக்காளம், பேரிகை, சங்கு, பறை, மேளம், கொட்டு, உடுக்கை, நாதஸ்வரம் அனைத்தும் முழங்க ஆடிக்கொண்டே சிவகாமி பின் தொடர கீழச் சந்நிதியின் விட்ட வாசல் வழியாக வெளியேறி ஆடிக்கொண்டே சென்று தேரில் அமர்கிறார்.

பித்துப் பிடித்த கூட்டம் தன்னை மறந்து ஆடுகிறது. அந்தக் காட்சிகளை எல்லாம் படம் எடுக்க முடியலை. ஏனெனில் நடராஜாவுக்கு எதிரே அவர்கள் ஆடுகிறார்கள். அவர்களைப் படம் எடுத்தால் நடராஜாவும் சேர்ந்து வருவார். அதோடு மாணிக்கவாசகருக்கு நடந்த, நடக்கும், நடந்து கொண்டிருக்கும் சிறப்பு வழிபாடுகளும் இதில் அடங்கியது. தேவாரம் ஓதும் ஓதுவார்கள் முன்னே தேவாரம், குறிப்பாய் மாணிக்க வாசகரின் திருவாசகப் பாடல்கள், சேந்தனாரின் பல்லாண்டு, திருஞாநசம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழாரின் பெரியபுராணப்பாடல்களை இடைவிடாமல் ஒலிபெருக்கியில் பாடிக்கொண்டே இருக்கிறார்கள். அன்றைய கட்டளை எவருடையதோ அவர்கள் முன்னிலையில் நிறுத்தப் பட்டு எந்த விஐபிக்கும் முன்னுரிமை இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்க ஏதுவாக நடந்த இந்த மாபெரும் விழாவின் வர்ணனை தொடரும்.

Geetha Sambasivam

unread,
Jan 17, 2011, 9:23:41 PM1/17/11
to மின்தமிழ்
ஏற்கெனவே படிச்சவங்க மன்னிக்கவும். 

2011/1/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>



Astrologer Vighnesh சென்னை

unread,
Jan 17, 2011, 9:43:40 PM1/17/11
to mint...@googlegroups.com
இதாக் டெஸ்டா. ஆ இவ்வளவு ஈசியா கண்டுபிடிக்கறாப்லே இருக்கே.. நீங்களே பதில் சொல்லிபுட்டதுனாலே அதே பதில் தான். ஏற்கனவே படித்தாகிவிட்டது.
அது சரி ஏன் தனி இழையா ஆரம்பித்துங்க
K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrovighnesh.com


2011/1/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>
ஏற்கெனவே படிச்சவங்க மன்னிக்கவும். 

2011/1/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

rajam

unread,
Jan 17, 2011, 9:43:36 PM1/17/11
to mint...@googlegroups.com
நன்றி, கீதா! எனக்கெல்லாம் எப்போ அங்கே போக முடியும்?! உட்கார்ந்த இடத்திலிருந்தே உங்கள் வழியே உணர்ந்தறிய இது ஒரு நல்ல வாய்ப்பு! தொடருங்கள். படிக்கக் காத்திருக்கிறேன்.
அன்புடன்,
ராஜம்

Subashini Tremmel

unread,
Jan 18, 2011, 5:03:12 AM1/18/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
பகிர்வுக்கு நன்றி திருமதி.கீதா.


 
2011/1/18 Geetha Sambasivam geetha...@gmail.com


பித்துப் பிடித்த கூட்டம் தன்னை மறந்து ஆடுகிறது. அந்தக் காட்சிகளை எல்லாம் படம் எடுக்க முடியலை.
மக்கள் பித்து பிடித்து ஆடுவதை எனது அனுபவத்தில் தைப்பூச திருவிழாவின் போது பினாங்கில் பார்த்திருக்கின்றேன்.  இந்த ஆட்டத்தில் பல வகை. கரகாட்டம், சிலம்பாட்டம்,காவடியாட்டம் என ஏற்பாடு  செய்யபப்ட்டு பயிற்சி எடுத்து ஆடும் குழுவினர் சிலர்.
 
இதனை விட ஒரு சிலர் தன்னை மறந்து ”சாமி வந்து” ஆடுவதும் உண்டு. இந்த சாமி வந்து ஆடுதல் எனக்கு எப்போதும் சந்தேகத்தை ஏற்படுத்தும். சிலர் உண்மையிலேயே தன்னை மறந்து ஏதோ ஒரு சக்தியின் ஆக்ரமிப்பில் சில நேரம் இருப்பர். நாக கன்னிகை வந்து ஆடும் சில பெண்களை இப்படி பார்த்திருக்கின்றேன்.  இப்படி நிகழும் போது அசாத்தியமான உடல் அசைவுகள் வெளிப்படும். வித்தியாசமான குரலில் ஒலி எழுப்புவர். இது சாதாரணமாக முடியாதவை.  ஒரு சிலர் தங்கள் உடலில் சாமி வந்தது போல நாடகம் செய்வர். இது போலி என்பது தெரியும்.  சர்வ சாதாரணமாக நான்கு பேருக்கும் முன்னர் நடனமாட கூச்சப்படும் மக்கள் கூட்டமான ஓரிடத்தில் இப்படி நடைபெறுவதில் தயக்கமின்றி  எடுத்துக் கொள்கின்றனர். 
 
சாமி வந்து ஆடுவதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது. போலியும் இருக்கின்றதா என்ற உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்களேன்.
 
-சுபா

Geetha Sambasivam

unread,
Jan 18, 2011, 6:00:19 AM1/18/11
to மின்தமிழ்

பிச்சைப்பாத்திரம் ஏந்தி வரப் போறார்!

Posted by Picasa
தேர்களில் நடராஜர் தேரையும், சுப்ரமணியர் தேரையும் முன் பதிவில் பார்த்தோம். இது அம்மன் தேரும், பிள்ளையார் தேரும், சற்றுப் பின்னால் சண்டேஸ்வரர் தேரும் இருக்கிறது. நாங்க ஊர்ப்பக்கம் போகிறதுனு முடிவானபோது சிதம்பரம் போகும் எண்ணம் இல்லை. நேரே மாயவரம் போகத் தான் இருந்தோம். அபி அப்பா கிட்டே சொல்லி அறைக்கு ஏற்பாடு செய்யச் சொல்லலாம் என்று நம்ம ரங்க்ஸ் சொன்னார். அபி அப்பா கிட்டே சொல்றதும், தினத்தந்தி, மாலைமலர், தினமலர்னு எல்லாத்திலேயும் செய்தியா வரதும் ஒண்ணுதான்னு எனக்குத் தோணினதாலே வேண்டாம், போய் அவரைப் பயமுறுத்திக்கலாம்னு சொல்லிட்டேன். இண்டர்நேஷனல் லெவல்லே நாம மாயவரம் போகிறது விக்கி லீக்ஸில் வரக்கூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கு. ஆனால் திடீர்னு சிதம்பரம்னு முடிவானதும், மாயவரத்துக்கு டிக்கெட் வாங்கிட்டுச் சிதம்பரத்தில் இறங்கினோம்.

சிதம்பரத்தில் எப்போவுமே தங்கும் இடம் கிடைப்பது பிரச்னை. நாங்க அதிகம் அங்கே தங்கியதும் இல்லை. பக்கத்தில் வைத்தீஸ்வரன் கோயில் வந்துடுவோம். ஆனால் இப்போ திருவிழா பார்க்கணுமே. தீக்ஷிதர் கிட்டே சொல்லித் தங்க ஏற்பாடு பண்ணச் சொல்லி இருந்தோம். அவரும் பண்ணிட்டேனு சொன்னார். அதனால் தைரியமாச் சிதம்பரம் இறங்கினோம். இரண்டுநாள் கழிச்சுத் தான் மாயவரம் போகணும். ரயிலில் தான் break of journey avail பண்ணும் வசதி உண்டேன்னு விடாப்பிடியா டிக்கெட்டில் எண்டார்ஸ்மெண்ட் வாங்கணும்னு நான் சொல்ல, ரங்க்ஸ் வேண்டாம் வா போனாப்போகட்டும்னு பெருந்தன்மையா ரயில்வேக்கு விட்டுக்கொடுக்கக் கடைசியில் நான் மட்டும் விடாப்பிடியாய்ப் போய்க் கேட்கலாம்னு ஸ்டேஷன் மாஸ்டர் ரூமுக்குப் போனேன்.

அவர் நாங்க வந்த ரயிலை வழியனுப்பப் போயிருந்தார். சரி, வழியனுப்பிட்டு வரட்டும்னு காத்திருந்தேன். ஸ்டேஷன் மாஸ்டர் வந்தார். அவர் கிட்டே விஷயத்தைச் சொன்னேன். அவரும் உதவுகிறேன்னு சொல்லிட்டு டிக்கெட்டைக் கொடுங்கனு கேட்டார். சரினு கொடுத்தேன். உடனே என்னை ஒரு பார்வை பார்த்தார் பாருங்க, என்ன இது அல்பம்! என்ற தோரணை அவர் முகத்திலே பளிச்சிடவே எனக்குக் கோபம் பொங்கியது. சற்று நேரத்தில் ரசாபாசம் ஆகியிருக்குமோனு தோணும்போது படம் முடியற சமயத்திலே தலையைக் காட்டுகிற தமிழ் சினிமா போலீஸ் மாதிரி நான் கோவிக்க ஆரம்பிக்கப் போற சரியான சமயத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார். அது நாளைக்கு! வர்ட்டா???

தொடரும்!




Geetha Sambasivam

unread,
Jan 18, 2011, 6:08:23 AM1/18/11
to mint...@googlegroups.com
நன்றி அம்மா.  இந்த வருடம் எதிர்பாராமல் போக நேர்ந்தது.  நினைச்சுக் கூடப்பார்க்க முடியாமல் இருந்தது.

2011/1/18 rajam <ra...@earthlink.net>
நன்றி, கீதா! எனக்கெல்லாம் எப்போ அங்கே போக முடியும்?! உ



Geetha Sambasivam

unread,
Jan 18, 2011, 6:09:38 AM1/18/11
to mint...@googlegroups.com
மின் தமிழில் இப்போத் தான் போடுகிறேன் விக்னேஷ் சார், அது வேறே ஐடியிலே வேறே குழுமம்! இது வேறே ஐடி, குழுமம் மின் தமிழ்.

2011/1/18 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>
இதாக் டெஸ்டா. ஆ இவ்வளவு ஈசியா கண்டுபிடிக்கறாப்லே இருக்கே.. நீங்களே பதில் சொல்லிபுட்டதுனாலே அதே பதில் தான். ஏற்கனவே படித்தாகிவிட்டது.
அது சரி ஏன் தனி இழையா ஆரம்பித்துங்க
K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrovighnesh.com




360.gif

Geetha Sambasivam

unread,
Jan 18, 2011, 6:18:45 AM1/18/11
to mint...@googlegroups.com
சாமி ஆடுதல் பற்றி எனக்கும் சொல்லத் தெரியலை சுபாஷிணி.  பொதுவாக அது அதீத உணர்வுப் பிரவாகத்தின் வெளிப்பாடு என்றே தோன்றுகிறது.  ஆனாலும் எனக்குத் தெரிந்து மெலட்டூர் பாகவத மேளாவின் போது நேரில் பார்த்த காட்சி இது.  பிரஹலாதன் சரித்திரம் நாட்டிய நாடகமாக ஆடப்பட்டது.  அதிலே நரசிம்மனாக நடித்தவர் ஒரு மாசமாக நரசிம்ம ஸ்வாமிக்கு விரதம் இருந்தே அன்றைய தினம் வேஷம் கட்டுவார். வேஷம் கட்டியதும் அவரருகே கூட எவராலும் போக முடியாது.  அன்று முழுதும் பச்சைத் தண்ணீர் அருந்த மாட்டாராம்.

நரசிம்மமாகத் தோன்றி ஹிரண்யனைக் கிழிக்கும் சமயம் அவருக்கு சாமி வந்துவிட்டது.  நிஜமாகவே கர்ஜிக்க ஆரம்பித்தார்.  நான் முதல் முறையாகப் பார்த்ததால் கொஞ்சம் பயந்தே போனேன்.  ஆனால் விழா ஏற்பாடு செய்தவர்கள் பயப்படாமல் கற்பூர ஆரத்தி காட்டி அவரை நாலுபேராகப் பிடித்துக் கூட்டிச் சென்றார்கள்.  என்றாலும் திமிறிக்கொண்டே தான் சென்றார். அவர் சுய நிலைக்கு வர இரண்டு நாள் பிடிக்கும் என்றனர்.

இன்னொரு சமயம் மாஸ்டர் ஸ்ரீதராக இருந்து நாடகத்துறைக்கு வந்த ஸ்ரீதரின் ஆதிசங்கரர் நாடகம். இங்கே அம்பத்தூரில் தான் நடந்தது.  குழந்தைகளோடு போயிருந்தோம்.  அதிலே ஆதி சங்கரருக்குக் கை போய் நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் பாடும்போது  அவரின் சீடரான பத்மபாதரின் உடலிலேயே நரசிம்மர் ஆவிர்ப்பவித்தார் என்று காட்டும்போது நடித்தவர் மட்டுமில்லாமல் பார்க்க வந்திருந்த சிலருக்கும் நரசிம்மர் உடலில் வந்துவிட்டார் என்று  பார்த்தோம்.  பின்னர் ஒவ்வொருத்தராய்க் கூட்டிச் சென்று அவர்களை அமைதிப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.  மற்றபடி இது உளவியல் படித்தவர்கள் தான் விளக்கிச் சொல்லமுடியும் என்று நினைக்கிறேன்.  இந்த இரண்டுமே நான் நேரில் கண்ட நிகழ்வுகள்.

2011/1/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>
பகிர்வுக்கு நன்றி திருமதி.கீதா.


 
சாமி வந்து ஆடுவதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது. போலியும் இருக்கின்றதா என்ற உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்களேன்.
 
-சுபா
 
--

meena muthu

unread,
Jan 18, 2011, 6:45:11 AM1/18/11
to mint...@googlegroups.com
2011/1/18 rajam <ra...@earthlink.net>
நன்றி, கீதா! எனக்கெல்லாம் எப்போ அங்கே போக முடியும்?! உட்கார்ந்த இடத்திலிருந்தே உங்கள் வழியே உணர்ந்தறிய இது ஒரு நல்ல வாய்ப்பு! தொடருங்கள். படிக்கக் காத்திருக்கிறேன்.

ஆமா! இதே இதே நானும் சொல்லிக்கிறேன் :) கீதாக்கு கோடி புண்ணியம்! 

meena muthu

unread,
Jan 18, 2011, 6:47:34 AM1/18/11
to mint...@googlegroups.com
அடடா என்ன சஸ்பென்ஸ்!

2011/1/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>

LK

unread,
Jan 18, 2011, 6:49:48 AM1/18/11
to mint...@googlegroups.com
இது என் வாழ்வில் நிகழ்ந்தது. எனது திருமணம் முடிந்த அடுத்த நாள் , எங்கள் பழக்கம்படி பாலிகை கரைத்து முடிந்தவுடன் , அதை நடுவில் வைத்து , கும்மி அடிக்கும் பழக்கம் உண்டு. இது முடிந்தவுடன், என் தாயரின் மேல் ஆஞ்சநேயர் சுவாமி வந்தார். அது வரைக்குமோ இல்லை இதற்க்கு பின்னரோ என் அம்மாவிற்கு சாமி வந்தது இல்லை இது வரைக்கும்.

அன்று எதனால் நிகழ்ந்தது என்றும் தெரியவில்லை

2011/1/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com

Innamburan Innamburan

unread,
Jan 18, 2011, 8:09:38 AM1/18/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
எனக்கு தெரிந்த பல விஷயங்களை பிறகு தான் எழுத வேண்டும். சிலவற்றை எப்படி சொல்வது என்று தயக்கம். எனினும், சாலியமங்கலம் பாகவத மேளாவை பற்றி, இங்கு எழுதியிருக்கிறேன். 80 வயதான ஓய்வு பெற்ற மத்திய வருமான வரி அதிகாரி, (குழந்தைப்பருவத்தில் பிரஹ்லதானாக நடிக்கத் தொடங்கியவர்) தான் ஶ்ரீ நரஸிம்ஹர். என்னுடன் சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்தவர், அதிகாலை 2 மணிக்கு ஸ்னானம் செய்யப்போய்விட்டார். காலை 4 மணி அவதாரம். வழி விலகி, கைக்கட்டி நின்று கொண்டிருந்தோம். அவதாரத்தின் ஆவேசம் கட்டுக்கடங்கவில்லை. இத்தனைக்கும் இது நாடகம். காலை ஆறு மணிக்கு, இயல்பாக, என்னுடன் அமர்ந்து, காஃபி குடித்து விட்டு, பேரனின் தோளில் சாய்ந்து கொண்டு, தளர்ந்த நடையில் இல்லம் திரும்பினார். உளவியலும் உண்டு. அதற்கு மேலும் உண்டு. 
Man, the Known; Man, the Unknown; Man, the Unknowable.

இன்னம்பூரான்
18 01 2011

Tthamizth Tthenee

unread,
Jan 18, 2011, 8:26:22 AM1/18/11
to mint...@googlegroups.com
சாமி வந்து ஆடுவதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது. போலியும்
இருக்கின்றதா என்ற உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்களேன்.
-சுபா
 
சௌபாக்கியவதி  சுபாஷிணிட்ரெம்மல்  அவர்களே  மிகவும் நுணுக்கமான கேள்வி
 
ஆனால்  இதற்கு விஞ்ஞான பூர்வமான   பதிலைக் கூறினால்!    பல ஆன்மீகவாதிகளின்   மனது புண்படும்
 
அதுமட்டுமல்ல  இன்னமும் உண்மையா !   பொய்யா  !  என்று  ஒரு புதிராய் இருக்கும்  ஒரு   விளக்கம்  இதனுள்ளே  இருக்கிறது.
 
 
நான் சொல்லுவேன்  !  ஆனால்  அதை    என்னாலேயே  நம்பமுடியாது!
 
ஆங்கிலத்தில்   Subject     என்று சொல்வார்கள்  அப்படி Subject  ஆக  இருக்கும் பல செய்திகளுக்கு  ஏதேனும் ஒரு முடிவு  சொல்லலாம்
 
ஆனால்  subjective   என்று   நினைத்தால்  அதற்கு முடிவே கூற முடியாது
 
 ஏன் இவ்வளவு  பீடிகை போடுகிறேன் என்றால்
 
என் வாழ்க்கையிலே  நானே இப்படிப்பட்ட நிகழ்வை சந்தித்து  இன்று வரை  அது உண்மையா  பொய்யா  என்று குழம்பிக்கொண்டிருக்கிறேன்
 
ஆமாம்  என்னுடைய பதினோராவது  வயதில்  திடீரென்று  என் தகப்பனார் இறந்து போனார்
 
அவருடைய  காரியங்களெல்லாம் முடிந்து   ஆறு மாதம் ஆகி இருக்கும்
 
எங்கள் வீட்டுக்கு  எதிர் வீட்டில் இருந்த ஒரு பெண்மணி  அடிக்கடி எங்கள் வீட்டுக்கு  வருவார். என் தாயாருக்கு  ஆறுதல் சொல்வார்
 
ஒரு நாள்  அந்தப் பெண்மணி  பேசிக்கொண்டிருந்த போதே  திடீரென்று   எழுந்து ஆட ஆரம்பித்தார். அவருடைய  ஆட்டம் எந்த அளவுக்கு   இருந்ததென்றால் 
 
ஒரு சாதாரண   பெண்மணியால் அந்த அளவுக்கு  ஆட முடியாது, அது மட்டுமல்ல
 
வீட்டின் மேல் விதானம்  தலையில் முட்டும் அளவுக்கு  எகிறி குதிக்கிறார்
 
அப்படி ஆடிக்கொண்டே  அவர் சொன்னார்   நான்தான்  நரசிம்மப் பெருமாள் வந்திருக்கேன்
 
நீ எதுக்கும்ம் கவலைப்படாதே  இனிமே  நான் உங்க குடும்பத்துக்கு துணை இருப்பேன்
 
உன்னோட மூத்த பொண்ணுக்கு    தானாகவே  வந்து பொண்ணு கேப்பாங்க
தானாவே  எல்லாம் அமையும்.   பல இஒடத்திலேருந்து  பணம் வரும், கல்யாணம் தடைப்படாமே  நடக்கும். இன்னும் மூணு மாசத்திலே கல்யாணம் முடிஞ்சு  உன் பொண்ணு  அவளோட  புகுந்த வீட்டுக்கு போயிடுவா  என்றெல்லாம்  சொல்லிகொண்டே  போனார்.
 
அவர்   சொன்ன அத்தனையும்   நடந்தது!
 
நான் அவர்  ஆட ஆரம்பித்த வுடன்  ஓடிப்போய் என் அம்மாவின் பின்னால் நின்றவன்தான்,அங்கேயே பயந்து போய் நின்றிருந்தேன்
 
அத்தனையும் கவனித்துக்கொண்டு
 
ஆனால்  அவர்கள் சொன்ன ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவர் சொன்னது  போலவே நடந்தது ஆச்சரியம்தான்
 
ஆனால்  இன்று வரை  எனக்கு ஒரு கணிப்பு  உண்டு
 
மனிதனின் மனது  இந்தப் ப்ரபஞ்சத்தோடு  தொடர்பு கொண்டது
அப்படி  ப்ரபஞ்சத்தில் ஏதோ  ஒரு  உணர்வலை  நம் மனதை, அல்லது  மூளையை  ஆக்ரமிக்கும் போது  நாம்  அந்தத் தொடர்பினால்  உள்ளுணர்வுகள் தூண்டப்பட்டு  சில  உண்மைகளை  சொல்ல நேரிடுகிறது
 
இதை  ஆவேசம்  என்றும் கொள்ளலாம்
 
 
ஆனால்  மனிதர்களுக்கு  அவர்களுக்குரிய  சக்தியை மீறி  இது போன்ற நேரங்களில் அவர்களுக்கு  அதீத சக்தி வருகிறது என்பது உண்மை
 
அந்த அதீத சக்தி  நம்  உடலின் உணர்வுகளையோ,  நரம்புகளையோ,  தூண்டி விடுகிறது
 
அப்படிப்பட்ட தூண்டுதலின் விளைவாக  நாம் சாமி வந்து ஆடுகிறோம்   என்பது  என்னுடைய கருத்து.
 
ஆனால்  மேலும் ஆராய  இதில் மிகவும் அதிகமான செய்திகள் இருக்கின்றன
 
ஆராய்வோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/1/18 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Geetha Sambasivam

unread,
Jan 18, 2011, 11:21:22 PM1/18/11
to மின்தமிழ்

பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தாரே!

ஸ்டேஷன் மாஸ்டர் டிக்கெட்டை வாங்கிப் பார்த்ததுமே ஏமாந்துட்டார். ஹிஹிஹி, நாங்க ஏதோ தொலைதூரத்திலே இருந்து வரோம்னு நினைச்சிருக்கார். சென்னையிலிருந்து வரோம்னதும், அடுத்து மாயவரம் மிஞ்சிப்போனால் ஒரு மணிநேரம் தான் இறங்கி இருக்கணும், சிதம்பரம்னதும் அவர் சொன்னது குறைந்த பக்ஷம் ஆயிரம் கிமீ பயணத்திலே ஐந்நூறு கிலோமீட்டராவது பயணம் செய்தால் தான் நடுவில் பயணத்தை நிறுத்திக்கொண்டு இறங்கிப் பின் நாலு நாட்கள் ரயில்வே அநுமதியோடு இறங்கிய இடத்தில் இருந்து நான்காம் நாள் ஏற முன்பதிவு கிடைக்கும்னும் இந்த அல்ப விஷயத்துக்கெல்லாம் கிடைக்காது என்றும் சொன்னார். நான் என்னமோ வெங்காயம் தான் காணாமல் போச்சாக்கும்னு நினைச்சேன் என்பதே அவர் சொல்ல விரும்பி இருப்பார். கேவலம் வெங்காயம் நூறு ரூபாய் விக்கும்போது சிதம்பரம்-மாயவரம் பதினைந்து ரூபாய்க்கு வந்துட்டாளேனு பார்த்தார். அதை ஒண்ணும் வெளியே காட்டிக்காமல் முகத்தைச் சாதாரணமா வச்சுண்டு வெளியே வந்து விட்டேன். வேறே வழி?? அசடு வழிந்தேன்.

ஊருக்குப் போவது மட்டுமே முடிவு செய்திருந்தோமே தவிர சிதம்பரம் பயணம் கிளம்ப இரண்டு நாட்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டு தீக்ஷிதரிடமே தங்குமிடத்துக்கும் சொல்லி இருந்தோம். சாதாரண நாட்களிலேயே சிதம்பரத்தில் தங்குமிடம் கிடைப்பது அரிது. பக்கத்தில் வைத்தீஸ்வரன் கோயிலோ, ,மாயவரமோ போனால் வசதியாய்த் தங்கலாம். வசதியாய் தரிசனம் செய்ய இயலாது. ஆகையால் தீக்ஷிதர் காட்டி இருந்த அறை கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் சரினு போய்த் தங்கிட்டோம். ஒருமுறை நிகழ்வுகளை எங்களுக்குச் சொல்லிவிட்டு, அன்று மாலை நடராஜர் தரிசனம் பொன்னம்பலத்தில் செய்து வைக்கிறதைச் சொல்லி எங்களை வரச் சொல்லி இருந்தார்.

அறையில் போய் ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் மாலை நாலரை அளவில் கோயிலுக்குக் கிளம்பினோம். கீழவீதியிலேயே தீக்ஷிதர் வீட்டுக்கு எதிரேயே அறை இருந்ததால் எல்லாவற்றுக்கும் வசதியாகவும் இருந்தது. எங்கள் வீட்டில் எல்லாருக்கும் சிதம்பரம் கட்டளை இருப்பதால் பொன்னம்பலம் தரிசனமும், சிதம்பர ரகசியம் தரிசனமும் கனகசபையிலே இருந்தே பார்க்க முடியும். அதே சலுகையை தேரோட்டத்துக்கு முன்னர் ஸ்வாமி புறப்பாடிலும், தேரோட்டத்தின் போதும், அதன் பின்னர் ஸ்வாமி ஆயிரங்கால் மண்டபவருகையின் போதும், அபிஷேஹம், ஆருத்ரா தரிசனம் போதும் எதிர்பார்க்க முடியாது என்பதை தீக்ஷிதர் ஏற்கெனவே குறிப்பால் உணர்த்தி இருந்தார். இவை எல்லாம் அன்றைய கட்டளை தாரர்களை முன்னிறுத்திச் செய்யப் படும். கட்டளைக்காரர்கள் பச்சையப்ப முதலியார் குடும்பத்தினர்.

மார்கழி மாசம் ஆரம்பத்தில் இருந்தே மாணிக்க வாசகருக்குச் சிறப்பான வழிபாடுகள் நடக்கும். ஈசன் அந்தணர் வடிவில் வந்து மாணிக்கவாசகர் சொல்லச் சொல்லத் திருவாசகம் முழுதும் எழுதி முடித்துக் கடைசியில், "வாதவூரான் சொல்ல தில்லைச் சிற்றம்பலத்தான் எழுதியது" எனக் குறிப்பிட்டுக் கைச்சாத்து வைத்து அதைப் பொன்னம்பலப் படிகளில் வைத்திருந்தார். மறுநாள் ஈசன் வழிபாட்டுக்கு வந்த தீக்ஷிதர்கள் அதைக்கண்டு வியந்து அடிகளாரிடம் கேட்க, அடிகளாருக்கு அப்போது தான் நடத்தியது ஈசன் திருவிளையாடல் எனப் புரிந்தது. திருவாசகத்தின் பொருளை விளக்கும்படி தில்லை வாழ் அந்தணர்கள் கேட்டதுக்குச் சிற்றம்பலம் வந்து சொல்வதாய்ச் சொன்ன மணிவாசகர், சிற்றம்பலத்துக்கு வந்ததும், "திருவாசகத்தின் பொருள் இதுவே!' எனக்கூறி சிற்றம்பலத்தின் உள்ளே சென்று அனைவரும் காண ஈசனோடு ஐக்கியமானார். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற நாள் திருவாதிரைத் திருநாள் என்ற ஐதீகம். ஆகவே மார்கழி மாதம் முழுதும் மாணிக்க வாசகர் ஒவ்வொரு கால வழிபாட்டின் போதும் சிற்றம்பத்தில் எழுந்தருளுவார். மாணிக்கவாசகருக்குத் தனிச் சந்நிதி உண்டு. மாணிக்கவாசகரின் பதிகங்கள் ஓதுவார்களால் பாடப்பெறும்.

21 பதிகங்கள் பாடப்பட்டு 21 முறை தீபாராதனை எடுக்கப் படும். இதிலே மாணிக்கவாசகர் ஈசனுக்கு எடுப்பதாகவும் ஐதீகம். இவை முடிந்ததும் மாணிக்கவாசகருக்கும், ஆநந்த நடராஜருக்கும் அடுக்குதீபாராதனை, கற்பூர ஆரத்தி காட்டப்படும். ஆகவே நாங்கள் சென்ற 20-ம்தேதி மாலை அதைப் பார்த்துவிட்டுச் செல்லும்படி தீக்ஷிதர் கூறி இருந்தார். நாங்கள் கோயிலுக்குச் சென்றபோது மாலை வழிபாடு இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆகவே முதலில் நடராஜர், சிவகாமசுந்தரி தரிசனம் காணச் சென்றிருந்தோம். அங்கே நடராஜரும், சிவகாமி அம்மையும் பட்டுத்துணிகளால் மூடப்பட்டு முகம் மட்டுமே தெரியும்படி அமர்ந்திருந்தார்கள். இது என்ன???

நேத்திக்குப் பார்த்தது ஆநந்த நடராஜரின் தேரும், பிள்ளையார் தேரும், இப்போது பார்ப்பது சிவகாமசுந்தரியின் தேரும், சுப்ரமண்யர் தேரும்.


தொடரும்!






Geetha Sambasivam

unread,
Jan 20, 2011, 6:19:09 AM1/20/11
to மின்தமிழ்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே! தொடர்ச்சி!

அலங்கார வளைவில் பழம்,காய்களால் அலங்காரம், கிழக்குக் கோபுர வாசல். இந்த வாசல் வழியாகவே சித்சபையிலிருந்து நடராஜர் ஆடிக்கொண்டே வெளியே வந்து விட்ட வாசல் வழியாகப் போய்ப் பின்னர் கீழ சந்நிதியில் நிற்கும் தேரில் ஏறி வீதி வலம் வருகிறார்.
ஆருத்ரா தரிசனத்துக்குத் தயாராவது சிதம்பரம் மட்டுமில்லாமல் நடராஜரும் தயாராகிறார். அந்தச் சமயத்தில் எந்த தீக்ஷிதரின் முறையோ அவரோடு சேர்த்து எட்டுப் பேர் நடராஜரின் அலங்காரங்களுக்கும், ஒவ்வொரு கால வழிபாட்டுக்கும் தயாராகின்றனர். முக்கிய ஆசாரியர் நடராஜரின் வழிபாட்டுக்கு மட்டுமே இருந்தாலும் அவர் மேற்பார்வையிலேயே அனைத்துக் காரியங்களும் நடைபெறுகின்றன. நடராஜர், சிவகாமி அம்மையின் நகைகள் அனைத்தும் ஒரு பெட்டியில் வைத்துப் பெட்டகத்தில் இருப்பவை இந்த விழாவுக்காக வெளியே எடுக்கப் படும். இவற்றில் நளச் சக்கரவர்த்தி போட்ட நகைனு சொல்றாங்க. அவற்றிலிருந்து, பல்லவர்கள், சோழ, பாண்டியர்கள், அடுத்து வந்த விஜயநகர அரசர்கள், பாண்டிய நாயக்க வம்சத்தவர், செட்டிநாட்டரசர்கள், தனவந்தர்கள், வணிகப் பெருமக்கள் எனப் பலர் போட்டவைகளும் உண்டு. அவற்றிலிருந்து பொறுக்கி எடுக்கப் பட்ட ராஜ அலங்காரத்துக்கு உரிய 228 ஆபரணங்கள் இந்த அலங்காரத்துக்குத் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. சும்மாவா பின்னே?? நாட்டியம் அன்றோ நடக்கப்போகிறது? அதுவும் ஆடப்போவது இவ்வுலகுக்கே அரசன் அன்றோ? ஆகவே ஒரு அரசனை எவ்வாறு அலங்கரிப்பார்களோ அத்தனை கவனத்தோடு அலங்கரிக்கப் படுகிறார் நடராஜர்.

இதை எட்டு தீக்ஷிதர்கள் சேர்ந்து செய்கின்றனர். இந்த எட்டுப்பேரிடமும் எட்டுச் சாவிகள் இருக்கும் . எட்டுச் சாவிகளையும் போட்டால் தான் நகைப்பெட்டகம் திறக்கும். இல்லை எனில் திறக்காது. இது இப்போது இருக்கும் 200க்கும் மேற்பட்ட தீக்ஷிதர்களுக்குள்ளே மாறி மாறி வரும். இந்த அலங்காரம் செய்யும்போது திரை போடுவத்தில்லை. ஒரு பெரியப் பட்டு வேஷ்டியால் நடராஜரை முகம் மட்டும் தெரியும்படி மூடி விடுகின்றனர். உள்ளே அலங்கரிப்பது வெளியே இருக்கும் மற்ற தீக்ஷிதர்களுக்குத் தெரியாததோடு நமக்கும் தெரியாது. சொல்லப் போனால் தாங்கள் அலங்கரிப்பது எவ்வாறு அமையும் என அலங்கரிக்கும் தீக்ஷிதர்களே அறிய மாட்டார்கள் என்றும் சொல்கின்றனர். சிவகாமசுந்தரியும் அவ்வாறே பட்டுப் புடைவையால் மூடப்பட்டிருந்தாள். நாங்கள் கனகசபைக்குப் போய் தரிசனம் பண்ணி, அர்ச்சனை முடித்துக் கொண்டு ரகசியம் பார்க்கவேண்டிக் காத்திருந்தோம். எல்லோரும் ரகசியத்திற்குச் சென்றும் தீப ஆராதனையைக் காட்டிவிட முடியாது. எல்லா தீக்ஷிதர்களும் பொன்னம்பலத்தின் உள்ளே சென்று அர்ச்சனை செய்யலாம். நடராஜருக்குத் தீப ஆராதனை காட்டலாம். சிவகாமசுந்தரி, சந்திரசேகரர், குஞ்சிதபாதம், சந்திரமெளலீஸ்வரர், ஸ்வர்ணகாலபைரவர் , என அனைத்துத் திருமேனிகளுக்கும் தீபாராதனை காட்டலாம்.

ஆனால் ரகசியத்தை மூடி இருக்கும் திரையை விலக்கிவிட்டு ரகசியத்திற்கு தீப ஆராதனை காட்டுவது அன்றைய தினம் எந்த தீக்ஷிதர் பொறுப்பில் நடராஜர் இருக்கிறாரோ அவரால் மட்டுமே முடியும். அதே போல் ரத்தின சபாபதியையும், (மரகத லிங்கம்) அவர் மட்டுமே பெட்டியில் இருந்து வெளியெ எடுத்து அபிஷேஹம் செய்து, தீபாராதனை காட்ட முடியும். ஆகவே அந்தக் குறிப்பிட்ட தீக்ஷிதர் வரும்வரைக்கும் காத்திருந்து (அவர் காலவழிபாடுகளின் போது மட்டுமே வருவார். மற்ற நேரம் ஜபித்துக்கொண்டு அமர்ந்திருப்பார். நியமங்கள் அதிகம்.) அவர் வந்ததும், அவரிடம் வேண்டுகோள் விடுத்து ரகசிய தரிசனம் செய்து கொண்டு கோவிந்தராஜப்பெருமாள், புண்டரீகவல்லித்தாயார், மற்றும் சரபர், ஊர்த்துவ தாண்டவேஸ்வரர் போன்றவர்களை எல்லாம் தரிசித்துக்கொண்டு கோவிந்தராஜரின் ராஜகோபுரத்துக்கு எதிரே வந்து அமர்ந்தோம்.

சற்று நேரத்தில் மாலை வழிபாடு ஆரம்பிக்கும். எங்கள் கட்டளை தீக்ஷிதருக்கு அன்றைக்கு வழிபாட்டுக்கு வேண்டிய உதவிகள் செய்யும் பொறுப்பு என்பதால் எங்களிடம் சொல்லிவிட்டுக் கூட்டம் இன்றைக்கு அதிகமாய் இருக்கும். உங்களால் நிற்க முடிஞ்சால் உள்ளே வாருங்கள், இல்லை எனில் 21வது தீபாராதனைக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். நாங்களும் காத்திருந்தோம். முதலில் நாதஸ்வரம், மேள,தாளத்தோடு கட்டளைக்காரர்கள் சென்று மாணிக்க வாசகரை அழைத்துவிட்டுப் பின்னர் உள்ளே சென்று ஈசனிடம் அநுமதியும் வாங்க, மாணிக்கவாசகர் ஜாம், ஜாமென்று பல்லக்கில் பிரகாரத்தில் ஊர்வலம் வந்துவிட்டுப் பின்னர் நடராஜர் முன்னே சென்று நின்றார். இதுவரை மற்றப் பதிகங்களைப் பாடிக்கொண்டிருந்த ஓதுவார்கள், இப்போது குறிப்பிட்ட மாணிக்கவாசகரின் பதிகங்களை ஒவ்வொன்றாய்ப் பாட ஆரம்பிக்க ஒவ்வொரு பதிகமும் பாடி முடித்ததும் ஒரு தீபாராதனை எடுக்கப் பட்டது.

இன்று வரையிலும் மின்சாரத்தில் இயங்கும் மணிகளோ, தாரை, தப்பட்டைகளோ இல்லாமல் எல்லாமே இயல்பான முறையில் இயங்கும் மணியாகவும், மனிதர்கள் பயன்படுத்தும் கொம்பு, எக்காளம், பேரிகை, கொட்டு, மிருதங்கம் தவில், நாதஸ்வரம் போன்றவையும் முழங்க காண்டாமணியைச் சங்கிலியில் இணைத்து நாலு பேர் பிடித்து இழுத்து அடித்தார்கள். 20 தீபாராதனை முடிந்ததும் 21 கடைசி தீபாராதனை. கோவிந்த ராஜரின் சந்நிதிக்கு எதிரே நின்றவண்ணம் நாங்களும் அதைத் தரிசனம் செய்துகொண்டோம். கூட்டம் ஆடவில்லை, அசங்கவில்லை. ஒரு தள்ளு,முள்ளு கிடையாது,. ஒருத்தரை ஒருத்தர் முந்துவதோ, இடிப்பதோ இல்லை. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டாற்போல் அமர்ந்திருந்தவர்கள் அமர்ந்திருக்க, நின்றிருந்தவர்கள் நின்றவண்ணமே தரிசனம் செய்ய அனைவரும் அமைதியான முறையில் தரிசனம் செய்தோம்.

இதை ஒவ்வொரு முறை சிதம்பரம் செல்லும்போதும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இப்போது பெரிய விழா. இப்படியான ஒரு விழாவில் கூட நிதானமும், ஒழுங்கையும் கடைப்பிடித்த மக்களையும், அவ்வப்போது இரவு, பகல் பார்க்காமல் நிஜமாகவே தூங்காமல் தெருக்களையும், கோயில் பிராகாரங்களையும் சுத்தம் செய்த சுகாதாரப் பணியாளர்களையும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த என்று ஏற்படுத்தி இருந்த போலீசுக்கு வேலையே வைக்காத பொதுமக்களையும், பொதுமக்களைக் காட்டுத்தனமாய் விரட்டாமல் மென்மையாகவும் அன்பாகவும், மரியாதையாகவும் நடத்திய போலீசாரையும் எத்தனை பாராட்டினாலும் போதாது, போதவே போதாது.

முக்கியமாய்ச் சுகாதாரப் பணியாளர்கள் இரவு, பகல் பார்க்காமல் வேலைசெய்தது ஆச்சரியமாய் இருந்தது. அதே போல் எந்த விஐபிக்கும் முன்னுரிமை கொடுக்காமல் அவரவர் அவரவரால் இயன்றவரைக்கும் அருகே சென்று பார்க்கும்படியாகவும் அமைந்தது. இறைவனின் பல்லக்கு, தேரோடு செல்லும் உரிமை ஓதுவார்கள், வேதம் ஓதுபவர்கள், வாத்திய விருந்தளிப்பவர்கள், கட்டளைதாரர்கள் மட்டுமே. மற்றச் சிலப்பொதுமக்கள் செல்ல முடிந்தால் கூட்டத்தைத்தாங்க முடிந்தால் செல்லலாம். தடையில்லை. எனினும் எங்கே இருந்து பார்த்தாலும் எவ்வளவு தொலைவாய் இருந்தாலும் நடராஜர் காட்சி அளிக்கிறார். அதை விட வேறு என்ன வேண்டும்?



தொடரும்!










meena muthu

unread,
Jan 20, 2011, 7:03:40 AM1/20/11
to mint...@googlegroups.com
 நாங்கள் கொடுத்துவைத்தவர்கள் கீதா! 

காத்திருக்கிறேன்.

2011/1/20 Geetha Sambasivam <geetha...@gmail.com>

kalairajan krishnan

unread,
Jan 20, 2011, 7:04:15 AM1/20/11
to mint...@googlegroups.com
அம்மையீர் கீதா அவர்களுக்கு வணக்கம்,
தங்களது கட்டுரையில் அருளாறு பாய்ந்து ஓடுகிறது!
நன்றியுடையேன்,

நடராஜர் காட்சி அளிக்கிறார். அதை விட வேறு என்ன வேண்டும்?

எனக்கு அலங்காரம் இல்லாத தில்​லை நடராஜர் படம் இருந்தால் வேண்டும்!

அன்பன்
கி. காளைராசன்


On 1/20/11, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
> பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே!

> தொடர்ச்சி!<http://sivamgss.blogspot.com/2011/01/blog-post_02.html>
>
> <http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TSBgxf3HZ8I/AAAAAAAAD-E/5jnVs2Cer_s/s1600/DSC00489.JPG>அலங்கார

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil


--
​திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/

அன்னதானம் ​செய்வோம், கண்தானம் ​செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் ​கொள்கிறார்,

Innamburan Innamburan

unread,
Jan 20, 2011, 7:16:58 AM1/20/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
ஒவ்வொரு தரிசனமும் எனக்கு கிடைத்த மாதிரி அல்ல. கிடைத்தது. நன்றி, கீதா.
இன்னம்பூரான்

2011/1/20 kalairajan krishnan <kalair...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Feb 11, 2011, 12:12:25 AM2/11/11
to மின்தமிழ்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே! தொடர்ச்சி
DSC00491.JPG

தேரை இழுக்கக்காத்திருக்கும் தேர் வடம். தேர் மரச் சக்கரங்களிலேயே ஓடி இருக்கிறது. இப்போது சில வருடங்களாக இரும்புச் சக்கரங்களுக்கு மாற்றி இருக்கின்றனர். என்றாலும், தேர் இன்னமும் மனிதர்கள் பிடித்து இழுத்துத் தான் ஓட்டுகின்றனர். ஹைட்ராலிக் பிரஷர் கொடுத்து ஓட்டுவது இல்லை. எல்லாம் பழமை, இனிமை.


தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிக்ஷாடனராய் வந்த ஈசன் ஆடிய ஆட்டத்தை முதலில் ரிஷிகளே பார்த்தார்கள். அதன் பின்னர் அம்பிகை ஈசனிடம் கேட்க அவளுக்கு மட்டும் தனியாக திரு உத்தரகோசமங்கையில் அறைக்குள் ஆடிக்காட்டினாராம். இவரின் இந்த ஆட்டத்தை மனதில் நினைத்துக்கொண்டு, சிவ பஞ்சாக்ஷரத்தை உள்ளே நிறுத்தி அஜபா ஜபம் செய்துகொண்டிருந்த மஹாவிஷ்ணு உள்ளேயே சிவனும், சக்தியும் இணைந்ததையும், அதன் மூலம் பிறந்த கந்தனையும் கண்டு ஆநந்திக்கவே மிகவும் கனம் அதிகம் ஆகிவிட்டதாம்.

ஆதிசேஷனுக்குப் பரமாத்மாவைத் தாங்கமுடியாமல் என்ன இது? திடீர்னு இத்தனை கனம் கனக்கிறாரே எனக் கேட்க விஷ்ணுவும் தான் கண்டதை விண்டு சொல்ல, தாமும் காணவேண்டும் என்று ஆதிசேஷன் விரும்ப சிதம்பரம் செல்லுமாறு அவரைப் பணித்த விஷ்ணு, தாமும் நடராஜர் ஆட்டத்தை நேரிலே மற்றொரு முறை காண விரும்பி அங்கே வந்தாராம். ஆகவே சித் சபை நடராஜர் மறுநாள் தாருகாவனத்து ஆட்டத்துக்குத் தயாராக அலங்காரம் செய்துகொண்டிருக்க, இங்கே பிக்ஷாடனக் கோலத்தில் ஈசனின் பிக்ஷாடனத் திருமேநிக்கு அலங்காரங்கள் முடிந்து வீதி உலாவுக்குத் தயாரானார்.

இம்மாதிரி விழாக்களில் நாதஸ்வரக் காரர்கள் இசைக்கும் மல்லாரி ராகம் இசைக்க, பிக்ஷாடனர், சாதாரணமானவரா? தங்கப் பல்லக்கிலே கிளம்பிட்டார் வீதிகளிலே பிச்சை எடுக்க. கையிலே தங்க ஓடு. பிக்ஷையைச் சுமக்கக் கூடவே குண்டோதரன். அமர்க்களமாய்க் கிளம்பிக் கீழ வாசலில் கோபுரத்துக்கு நேர் எதிரே ஆயிரங்கால் மண்டபம் செல்லும் பிரஹாரத்தில் நின்று இசையைப் பருகிக்கொண்டிருந்தார்.

வெளியே மழை சக்கைப் போடு போட்டுக்கொண்டிருந்தது. மார்கழி மாசம் பொதுவாய் மழை இருக்காது. ஆனால் இந்த வருஷமோ தினம் தினம் மழை. நாங்கள் அம்பத்தூரை விட்டுக்கிளம்பிக் காரில் ரயில் நிலையம் ஏறும்போதும் மழை கொட்டியது. சிதம்பரத்தில் மழை இல்லையேனு நினைச்சோம். ஆனால் சாயந்திரம் நாலு மணிக்குப் பிடிச்ச மழை ஆறு மணிக்கு மேலாகியும் நிற்காமல் பெய்தது. கோவிந்தராஜரின் ராஜகோபுரத்துக்கு எதிரே தான் எங்கள் தீக்ஷிதரின் இருப்பிடம். அங்கே நாங்கள் அமர்ந்தவண்ணம் மழை பெய்கிறதே, நாளைத் தேரோட்டம் எப்படி நடக்குமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தோம். அதற்கேற்றாற்போல் மின்சாரம் நின்றது. எங்கும் இருட்டுச் சூழ்ந்தது. உள்ளே ஆயிரக்கணக்கான ஜனங்கள் மாணிக்கவாசகரின் பதிகங்களைக் கேட்டுக்கொண்டும், தீப ஆராதனையைப் பார்த்துக்கொண்டும் இருந்தனர். அங்கிருந்து முணுக்கென்று ஒரு சின்னச் சப்தம் கூட வரவில்லை. அழகான அகல்விளக்குகளின் ஒளியில் தீப ஆராதனையைப் பார்ப்பதும் ஒரு விதத்துக்குக் கொடுத்து வைச்சிருக்கணுமே. தீபத்தின் ஒளியில் இயற்கையான சூழலில் நடந்த அந்தத் தீபாராதனை மொத்தம் 21-ல் கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேல் மின்சாரம் இல்லாமலேயே நடந்தது.

உள்ளே சென்ற மக்கள் எவரும் பதறி அடித்துக்கொண்டு வெளியே வரவில்லை. உள்ளே இருந்து எந்தவிதமான புகாரும் இல்லை. வெளியே இருளில் அமர்ந்திருந்த நாங்கள் தான் கவலைப்பட்டோம். ஆனால் எங்கள் தீக்ஷிதர் அதெல்லாம் கவலைப்படவே வேண்டாம். இது அவனோட திருவிழா அவனே நடத்திப்பான், அவனுக்குத் தெரியாததா என்று கூறிவிட்டார். யாருக்கும் எந்தவிதமான பதட்டமும் இல்லை என்பதும் ஆச்சரியமாய் இருந்தது. ஏனெனில் மழையின் வேகம் அப்படி இருந்தது. சற்று நேரத்தில் ஜெனரேட்டர்கள் வரவழைக்கப்பட்டுத் தேவையான இடங்களுக்கு மட்டும் மின்சாரம் வந்தது. எங்களை பிக்ஷாடனரைப் போய்க் கட்டாயம் தரிசிக்கவேண்டும் என்றும், பிக்ஷாடனருக்கு எங்களால் முடிந்த பணம் போட்டுவிட்டு விபூதிப் பிரசாதம் வாங்கிக்கொள்ளுமாறும் எங்கள் தீக்ஷிதர் கூறவே நாங்களும் சென்றோம். பிக்ஷாடனர் இன்னும் வீதிக்குச் செல்லவில்லை. அங்கேயே இருந்து பாடலை ரசித்துக்கொண்டிருந்தார்.

பிக்ஷாடனரின் அலங்காரம் மிக மிக எளிமையாக இருந்தது. கையில் திருவோடு. உதட்டில் குமிண் சிரிப்பு. காரணம் சொல்லத் தெரியாமலேயே எனக்கு அழுகை வந்தது. படிச்ச எல்லா ஸ்லோகங்களும், பாடல்களும் மறந்து போகப் பித்துப் பிடித்தவள் மாதிரி பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றேன். சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை. இது என்ன கோலம்? எதற்காக இது? அவன் பிச்சை எடுப்பதா? அதை நாமும் பார்க்கிறோமே, அவனுக்குப் பிச்சையும் போடுகிறோமே, நாமெல்லாமே அவன் போட்ட பிச்சை தானே என்றெல்லாம் நினைத்துக்கொண்டேன். கைகள் நடுங்க என் கணவர் கொடுத்த பணத்தை வாங்கிப் போட்டுவிட்டுச் சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு பிக்ஷாடனர் அங்கிருந்து நகரப் போகிறார் என்று புரிந்ததும், மீண்டும் உள்ளே வந்தோம். திருஞானசம்பந்தர், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி"யதின் பொருளும் புரிய ஆரம்பித்தது. உள்ளே கடைசி தீபாராதனை நடக்கப் போகிறது என்பதற்கு அறிகுறியாக ஓதுவார்களின் குரல் ஓங்கி ஒலிக்க, அதற்கும் மேல் காண்டாமணி கணீர் கணீர் என அடிக்க, நாங்கள் உள்ளே சென்று நிதானமாயும், செளகரியமாயும் தீபாராதனையைப் பார்த்துக்கொண்டு திரும்பி வந்தோம்.

மறுநாள் காலை தேரை எங்கே இருந்துபார்க்கலாம் என்று கேட்டதற்கு சித்சபையில் இருந்து நடராஜர் ஆடிக்கொண்டே வந்து தேரில் ஏறுவார் என்றும், அதைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருக்கும் என்றும் கூறிய தீக்ஷிதர் அதைப் பார்க்கச் செளகரியமான இடத்தையும் குறிப்பிட்டார். கூட்டம் உள்ளே முதல்நாள் இரவில் இருந்தே சென்று தங்க ஆரம்பித்திருந்தது. ஆகவே உள்ளே வந்தால் வெளியே மீண்டும் வர ரொம்பவே கஷ்டமாய் இருக்கும் என்பதால் பார்க்கும் தூரத்தில் இருந்து பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுச் சொன்னார். அதற்கேற்றாற்போல் கோயிலில் சித்சபையைச் சுற்றியும் கோவிந்தராஜர் சந்நிதி இருக்கும் மேடையிலும் மக்கள் கூட்டம்.

எல்லா வீதிகளிலும் கடைகள் போட்டிருந்தனர். அக்கம்பக்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. சாரி, சாரியாக மக்கள் வந்தனர் என்பதைக் கண்கூடாய்ப் பார்த்தோம். ஆடிக்கொண்டே வரும் நடராஜர் தேரில் ஏறித் தேரில் வலம் வந்துவிட்டுப் பின்னர் மீண்டும் ஆடிக்கொண்டே கோயிலுக்கு வந்து ஆயிரக்கால் மண்டபத்துக்குப் போய் அங்கே அபிஷேஹம் முடிந்து, மறுபடி ஆடிக்கொண்டே சென்று சித்சபையில் அமர்வது தான் ஆருத்ரா தரிசனம். ஆருத்ரா நக்ஷத்திரமும் பெளர்ணமியும் கூடிய தினத்தில் நடராஜர் தில்லையம்பலத்தில் வந்து அமர்ந்து ஆநந்த நடராஜராகத் தன் ஆட்டத்தைத் தொடங்கியதாய் ஐதீகம். நிற்காத மழையில் தேர் எப்படி ஓடுமோ என்று கவலை பிறந்தது. எட்டு மணி அளவில் ஒரு பெரிய இடி முழக்கத்துடன் மழை கொஞ்சம் நின்று தூற்றல் மட்டும் போட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் சாப்பிட்டுவிட்டு எங்கள் அறைக்கு வரும்போது மணி பத்தாகிவிட்டது.

விடுதியின் உதவியாளிடம் காலை சீக்கிரம் போக வெந்நீர் வேண்டும் என்று சொல்ல அவரும் நாலரை மணிக்கெல்லாம் தயாராகிவிடும் என்று உறுதி அளித்தார். அவ்வளவில் மறுநாளை எதிர்பார்த்துப் படுத்தோம்.






தொடரும்!









DSC00491.JPG

Geetha Sambasivam

unread,
Feb 11, 2011, 12:14:23 AM2/11/11
to மின்தமிழ்
தாமதமான இடுகைக்கு மன்னிக்கவும். 

2011/2/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே! தொடர்ச்சி


தேரை இழுக்கக்காத்திருக்கும் தேர் வடம். தேர் மரச் சக்கரங்களிலேயே ஓடி இருக்கிறது. இப்போது சில வருடங்களாக இரும்புச் சக்கரங்களுக்கு மாற்றி இருக்கின்றனர். என்றாலும், தேர் இன்னமும் மனிதர்கள் பிடித்து இழுத்துத் தான் ஓட்டுகின்றனர். ஹைட்ராலிக் பிரஷர் கொடுத்து ஓட்டுவது இல்லை. எல்லாம் பழமை, இனிமை.



தொடரும்!










Geetha Sambasivam

unread,
Feb 13, 2011, 11:07:45 PM2/13/11
to மின்தமிழ், இல்லம் (your HOME)

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே! தொடர்ச்சி!


அன்று கொட்டும் மழையில் கூட பிக்ஷாடனர் வீதிவலம் வந்திருக்கிறார். அதன் பின்னர் மறுநாள் தேரில் ஏறப் போகும் நடராஜருக்குத் தேர் ஓடும் வீதிகள் அனைத்தும் செளகரியமாய் இருக்கானு பரிசோதனையைச் சந்திரசேகரர் நட்ட நடுராத்திரியில் வீதிவலம் வந்து எல்லாத்தையும் செக் பண்ணுகிறார். முழிச்சுண்டு இருந்து அவற்றை எல்லாம் பார்க்கணும்னு நினைச்சுட்டு இருந்த நான் நல்லாத் தூங்கிட்டேன். காலையில் நாலு மணிக்கே கொட்டுக் கொட்டுனு எழுந்த ரங்க்ஸ் லாட்ஜின் பணியாளரிடம் வெந்நீர் போடச் சொல்ல, அவரும் கீசரை ஆன் செய்தார். அந்தச் சத்தத்தில் நான் விழித்துக்கொண்டேன். ரங்க்ஸ் காப்பி சாப்பிட வரியானு கேட்க, இந்த அஜந்தா படியில் ஏறி, இறங்கும் அசெளகரியத்தை நினைத்து நான் காப்பியைத் தியாகம் செய்தேன். ரொம்பச் சொல்லிப் பார்த்துட்டு அவர் மட்டும் காப்பி சாப்பிடப்போனார். நான் அவர் வரதுக்குள்ளே குளிச்சுத் தயாராகலாம்னு நினைச்சால் கதவை யாரோ தட்டறாங்க. யார்னு கேட்டால் லாட்ஜின் பணியாளர். கதவைத் திறக்கலாம்னு பார்த்தா அது தானே பூட்டிக்கொள்ளும் பூட்டு. பூட்டிக்கொண்டிருக்கு போல! அடக் கடவுளே, இப்போ என்ன செய்யறது? சாவியும் உள்ளே இல்லை இருக்கு? உள்ளே இருந்து திறக்கும் முறை தெரியாதே? குழப்பத்துடன் இங்கே இருந்து நான் திறக்க, வெளியே இருந்து அந்த ஆள் திறக்கப் பத்து நிமிடப் போராட்டத்துக்குப் பின் கதவு திறந்தது. என்ன விஷயம்னு கேட்டால் காப்பி வாங்கித் தரவா? சார் போறச்சே சொல்லிட்டுப் போனார் என்கிறார். வந்த கோபத்தில் பேசாமல் கதவைச் சார்த்திக்கொண்டு பூட்டை நீக்கிட்டுத் தான் உள்ளே வந்தேன். எதுக்கும் ரங்க்ஸ் வந்ததுமே குளிக்கப் போலாம்னு உட்கார்ந்திருந்தேன். அவர் வந்ததும் கதவு புராணம் பாடிட்டுக் குளிக்கப் போனேன். அப்புறம் இரண்டு பேரும் குளிச்சுத் தயாரானதும் நாலரை மணி போல் கோயிலுக்குக் கிளம்பினோம்.  மழை சுத்தமாய் நின்று போயிருந்தது  முதல் நாள் ஒரு பெரிய இடி இடித்தது.  அப்புறம் ஒரு மின்னல் விண்ணின் ஒரு கோடியில் இருந்து மறுகோடிக்கு ஓடியது.  அவை போய்ச் சேதி சொன்னதோ என்னமோ தெரியலை.  வருணன் வர்ஷிக்கவில்லை.  நிறுத்திக்கொண்டான்.

இவ்வளவு சீக்கிரமாப் போறோமே, செருப்பு வைக்கும் இடம் திறந்திருக்குமா? கோயிலில் யாரு இருப்பாங்க? தெருவில் நடமாட்டம் இல்லையேனு யோசிச்சுக்கிட்டே போனேன். நாங்க இருந்த பகுதியில் தான் நடமாட்டம் குறைவு. கொஞ்சம் தள்ளிப் போனதும், தேர்முட்டிக்கு முன்னால் ஆரம்பிச்சுச் சாரி சாரியாக மக்கள் கோயிலுக்கு உள்ளே போய்க்கொண்டிருந்தார்கள். அட? இவ்வளவு பேரா போறாங்க? ஆச்சரியமாய் இருந்தது. போகும் வழியிலேயே திறந்திருந்த ஒரு கடையில் காப்பியும் சாப்பிட்டுவிட்டு இருவரும் கீழவாசலுக்குப் போனோம். செருப்பு வைக்கும் இடம் திறந்திருந்தது. அப்போது வரையிலும் செருப்பு ஒரு ஜோடிக்கு ஒரு ரூபாய் தான் வசூலித்துக்கொண்டிருந்தார். ஆனால் இரவு ஒன்பது மணிக்குள்ளாகச் செருப்பை எடுத்துக்கொண்டுவிடவேண்டும். இல்லை எனில் மறுநாள் தான் எடுக்க முடியும். அக்கம்பக்கம் சுற்று வட்டாரமெல்லாம் அன்றும், மறுநாளும் பள்ளி, அலுவலகம் விடுமுறை. போக்குவரத்தெல்லாம் திசை திருப்பப் பட்டிருந்தது. மிகச் சிறப்பான ஏற்பாடுகள் நகராட்சியால் செய்யப் பட்டிருந்தது என்பதை மறுக்கவே முடியாது. முக்கியமாய் முதல்நாள் கோபுரவாசலிலும், சிவகங்கைக்கரையிலும் இருந்த திடீர்க்கடைகளில் போட்ட மிளகாய் பஜ்ஜி, பக்கோடா போன்ற தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அங்கேயே மக்கள் போட்டிருந்த குப்பையை மறுநாள் காலை நாலு மணிக்குள்ளாக அகற்றிச் சுத்தம் செய்ததோடு இல்லாமல் ப்ளீச்சிங் பவுடர், கொசுமருந்து போன்றவை அடித்துச் சுத்தமும் செய்திருந்தனர். எல்லாக் கடைகளும் திறந்து எல்லாக் கடை வாசலிலும் நடராஜரின் படமும், பூரணகும்பமும், ஆரத்தியும் கற்பூர ஆரத்தி, தேங்காய் உடைத்தல் மண்டகப்படி செய்பவர்கள் அதற்கான ஏற்பாடுகள் என்று சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தனர். பெரிய பெரிய மோப்ப நாய்கள், கிட்டத்தட்ட நானூறு போலீஸார் உள்ளே இருந்தனர். மெடல் டிடெக்டர் பொருத்திக்கொண்டிருந்தார்கள். நாங்க பாட்டுக்குப் போனோம். ஒண்ணும் சொல்லலை. வழியைப் போகிறவங்களுக்கு ஒண்ணு, வரவங்களுக்கு எதிர்த்திசைனு பிரிக்கக் கயிறு கட்டிட்டு இருந்தாங்க.

நடராஜர் சித்சபையில் இருந்து வெளியே வரும் கோபுரம் பழங்கள்,காய்களால், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கே போய் நிற்கலாம் என்றால் கூட்டம் அதைத் தாண்டி வந்து விட்டது. ஆயிரங்கால் மண்டபம் செல்லும் வழியெல்லாம் இரண்டு பக்கமும் வழிவிட்டு ஜனங்கள், ஜனங்கள், ஜனங்கள். உள்ளே போகலாமோ என யோசித்தால் எல்லாரும் உள்ளே போகவேண்டாம் நெரிசல் இருக்காதென்றாலும் லேசில் வெளியே வரமுடியாது. ரொம்பக் கஷ்டம் என்றார்கள். எங்கள் தீக்ஷிதரும் அதுதான் சொல்லி இருந்தார். அவர் சொன்னது கீழவாசலுக்கு எதிரே இருக்கும் கிணற்றில் சுற்றிப் போட்டிருக்கும் பெரிய மேடையில் நின்று கொண்டு பார்க்கலாம். உள்ளே இருந்து படிகளில் ஏறிவரும்போதும் பார்க்கலாம். பின்னர் விட்டவாசல் வரை போறதையும் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தார். தீக்ஷிதருக்கு என் கணவர் ஐம்பது வருஷப் பழக்கம் என்றாலும் இந்த விஷயத்தில் தெரிஞ்சவங்க யாராய் இருந்தாலும் முன்னுரிமை கிடையாது. அவங்க குடும்பத்தின் மற்ற நபர்கள் கூட இப்போ நாங்க பார்க்கிறாப் போல் தான் பார்த்தாகணும்.

சித்சபையில் அன்றைய தினம் யார், யாருக்கு வேலை இருக்கிறதோ அவங்களும் நடராஜருக்கு அலங்காரம் செய்யும் எட்டு தீக்ஷிதர்களும், தலைமை ஆசாரியரும், மற்றும் அன்றைய கட்டளைக்காரர்களுமே தான் அருகே இருக்க முடியும். மற்றத் தொண்டர்களில் இயன்றவர்கள் கூடவே செல்கின்றனர். அதுக்குத் தனி பலமும், திறமையும் வேண்டும் என்றாலும் யாரும், யாரையும் தடுப்பது என்னமோ இல்லை. கிட்டப்போய்ப் பார்க்கிறதெல்லாம் நம்ம திறமை, சாமர்த்தியம். ஆனாலும் உள்ளே செல்வதில் உள்ள சில ஆபத்துக்களை நினைத்து அதைத் தவிர்த்தோம். கிணற்று மேடையில் இருந்து எதிரே சித்சபையும் உள்ளே நடக்கும் ஆராதனைகளும், அங்கே ஏற்றி இருந்த தீவட்டி வெளிச்சத்தில் தெரிந்தது. சற்று நேரத்தில் கொட்டுக் கொட்டுவதில் தெரிந்த வித்தியாசமும், ஜனக்கூட்டத்தின் பரபரப்பும் நடராஜர் வெளியே வரும் நேரம் வந்துவிட்டதை உணர்த்தியது. உள்ளே இருந்து வந்த பிள்ளையார் ரொம்பவே வேகமாய் வெளியே போய் அவரோட தேருக்குப் போய் விட்டார். இதே போல் சுப்ரமணியரும்.

கொம்பு வாத்தியத்தின் ஓசையும், எக்காளத்தின் ஓசையும், சங்கின் முழக்கமும் அதிகரித்தது. முதலில் தீவட்டிக்காரர்கள் பெரிய திருவாச்சி போன்ற தீவட்டிகளில் எண்ணெய் ஊற்றி எரிய எரிய அதை எடுத்துக்கொண்டு ஓடி வந்தனர். நடராஜர் சுற்றிலும் நெருப்பின் நடுவே ஆடுகிறார் அல்லவா? அதைச் சுட்டும் விதமாக இது! நடராஜரைச் சுற்றிக் காணப்படும் திருவாச்சியே அக்னி ரூபம் என்பார்கள். கிட்டத் தட்ட அதே மாதிரியில் திருவாச்சியில் தீபங்களை ஏற்றிக்கொண்டு தீவட்டிக்காரர்கள் ஒரு தாளலயத்தோடு ஓடி வர, அம்மன் திருவாச்சிக்கும் அவ்வாறே எடுத்துக்கொண்டு வேறொரு குழு வந்தது. அம்மனோடு சிறியது.

வாத்தியக்குழு அடுத்து வர, பின்னர் வேதகோஷங்கள் முழங்க வேதியர்கள் வந்தனர். அவர்களுக்குப் பின்னால் தேவார, திருவாசகங்கள் ஓதும் குழுவினர் வர, பொதுமக்களில் சிலர் ஆடிப்பாடிக்கொண்டு வந்தனர். நடராஜர் சித்சபையில் இருந்து எந்தவாசல் வழியாக இறங்கினார் என்பதை இங்கிருந்தே சொல்ல முடியவில்லை. ஆனால் கூட இருந்த மக்கள் இடப்பக்கமாய் இறங்கிப் பிராஹாரம் சுற்றிக்கொண்டு வெளியே வருவார் என்றனர். ஆகவெ அதுமாதிரியே சுற்றிவருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. சற்று நேரத்தில் கூட்டத்தினரின் "ஹாஹா"காரம் உச்சகட்டத்தில் எழுந்தது. பலரும் ஆடிக்கொண்டிருந்தனர். காணக்கிடைக்காத காட்சி. ஆனால் கண்டிப்பாய்க் காமிரா தடை செய்யப் பட்டிருந்ததால் அந்தக் காட்சிகளை எல்லாம் எடுக்க முடியவில்லை. ரொம்பவே வருத்தம்.

கட்டளைக்காரர்கள் அனைவரும் சிறப்பான அலங்காரத்தில் நடராஜரைப் பார்த்த வண்ணமே பாடல்கள் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் பின்னாலேயே நடந்து வர, நடராஜரின் பல்லக்கில் ஆட்டமான ஆட்டம்! அது என்ன ஆட்டம், என்ன ஆட்டம்? ஆடிக்கொண்டு நடராஜர் வந்தார்.

மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரமனாட
கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
குழந்தை முருகேசனாட
ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
அட்ட பாலகருமாட
நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
விரைந்தோடி ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

முதல் நாள் போலவே இன்றைக்கும் கண்ணீர் வந்தது. ஒரு நிமிடம் இந்த ஆட்டத்தை நிறுத்திவிட்டானென்றால் என்ன ஆகும்?? நாம் வாழ, அவன் ஆடுகிறானே? நேற்று நாம் வாழப் பிச்சை எடுத்தான். இன்று நாம் வாழ அவன் ஆடுகின்றான். அந்த ஆட்டத்தில் தானே நம் இயக்கமே இருக்கிறது! கண்ணார, மனமாரக் கண்டோம் காட்சியினை. மெல்ல மெல்ல மெதுவாகத் தான் செல்கின்றார்கள். அதோடு இருபக்கமும் இருக்கும் மக்கள் பார்க்கும் வண்ணம் வசதியாக இப்படியும், அப்படியும், இடமும், வலமும் பல்லக்குத் திரும்பித் திரும்பித்தான் செல்கிறது. விட்ட வாசலுக்குப் போனதும் கூட்டமெல்லாம் தேர்முட்டிக்கு ஓடியது. கூட்டத்தில் செல்லவேண்டாம் என்று நாங்கள் சற்று நேரம் நின்றுவிட்டுப் பின்னர் வெளியே செல்லலாம் என்று தோன்றியபோது வெளியே வந்தோம். என்ன ஆச்சரியம்! அருகே இருந்து பார்க்கமுடியலையே என்ற என் வருத்தத்தைப் புரிந்து கொண்டாற்போல் எங்கள் எதிரே கோபுரவாசலில் இருந்த கடையின் மண்டகப்படியை ஏற்ற வண்ணம் நடராஜர் ஆடிக்கொண்டிருந்தார். ஆஹா, மீண்டும் அதிசயக் காட்சி. அங்கேயே நின்றுவிட்டோம். பின்னர் பத்து நிமிஷம் கழிச்சு நடராஜர் தேருக்குப் போனார். நாங்கள் சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டுக் கூட்டம் குறைந்ததும் தீக்ஷிதர் வீடு நோக்கிப் போனோம்.

தேர் முதலில் அவர்கள் வீடு இருக்கும் பக்கம் தான் வரும் என்றும், பின்னர் தெற்கு வீதி வழியாக மேலவீதிக்குப் போய் வடக்கு வீதிக்கு ஈசான்யமூலைக்கு வரும்போது மாலை நாலு மணிக்கு மேல் ஆகும் என்றும் தீக்ஷிதர் தெரிவித்தார். ஈசான்யமூலையில் தேர் திரும்பும்போது பார்ப்பது நன்மை பயக்கும் என்றும் ,மாலை நாலு மணி அளவில் அங்கே போய்ப் பார்க்குமாறும் கூறினார். மேலும் அப்போது சிறிது நேரம் கழித்து அவர்கள் வீட்டு வாசலில் நடராஜர் மண்டகப்படிக்கு அரை மணி நேரம் நிற்பார் என்றும் தேரை அருகே இருந்து பார்க்கலாம் எனவும், முடிந்தால் வடமும் பிடிக்கலாம் என்றும் கூறினார். ஆகவே அவசரம் அவசரமாய்க் காலை ஆகாரத்தை முடித்துக்கொண்டோம். மீண்டும் அறைக்கு மேலே செல்லக் கணவர் விரும்ப நானோ மேலே ஏறமாட்டேன் என்று சொல்லிவிட்டு நிவேதா பதிப்பகம் போட்டிருந்த புத்தகக் காட்சிக்குப் போய்விட்டேன். மேலே போய்விட்டு அங்கிருந்து காமிராவை எடுத்துக்கொண்டு வந்தார். தேர்வரும்பாதையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்மணிகளையும், சிறுவன் ஒருவனையும் படம் எடுக்கப் போனால் தீக்ஷிதர்கள் நாலைந்து பேர் தேர்விழாமல் எடுக்கவேண்டும் என்று சொல்ல, கொஞ்சம் யோசித்துவிட்டு ஒரு மாதிரியாகக் கோலம் போடுவதை மட்டும் எடுத்துக்கொண்டேன். தேர் கொஞ்சம் நகர்ந்திருந்தது. யாரானும் மெதுவா நடந்தா, தேர் மாதிரி ஆடி, அசைந்து வரா பாரும்பாங்க. அது நிஜம் என்பதை நிரூபிப்பது போல் தேரின் தொம்பைகள் ஆட, கொடி பறக்க தேர் குலுங்கக் குலுங்க மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தது.



தொடரும்!





Swarna Lakshmi

unread,
Feb 14, 2011, 9:27:45 AM2/14/11
to mint...@googlegroups.com
very nice Geetha, feel like going there right away. happy to see the traditions followed methodically.
 
thanks
swarna


From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Cc: இல்லம் (your HOME) <il...@googlegroups.com>
Sent: Mon, 14 February, 2011 9:37:45 AM
Subject: [MinTamil] Re: பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே

kalairajan krishnan

unread,
Feb 15, 2011, 4:10:19 AM2/15/11
to mint...@googlegroups.com
எங்கள் எதிரே கோபுரவாசலில் இருந்த கடையின் மண்டகப்படியை ஏற்ற வண்ணம்
நடராஜர் ஆடிக்கொண்டிருந்தார். ஆஹா, மீண்டும் அதிசயக் காட்சி. அங்கேயே
நின்றுவிட்டோம்.

நேரில் சென்று நின்று வணங்குவது போல் உள்ளது,
நன்றியுடையேன்
அன்பன்
கி.காளைராசன்


--

​திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/

அன்னதானம் ​செய்வோம், கண்தானம் ​செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்

Geetha Sambasivam

unread,
Feb 15, 2011, 6:08:19 AM2/15/11
to மின்தமிழ், இல்லம் (your HOME)
கிளம்பிச் சற்று தூரம் வந்த தேர் திடீரென நின்றது. என்னனு பார்த்தால் சேந்தனாரின் திருப்பல்லாண்டுக்காக நடராஜர் நின்றிருக்கிறார். சேந்தனாரின் திருப்பல்லாண்டு பாடியதும் தேர் மீண்டும் கிளம்பியது. சேந்தனார் கதையும், ஆருத்ரா தரிசன நிகழ்வும் அடுத்த பதிவில் வரும். தேர் மெல்ல மெல்ல நகர்ந்து, நகர்ந்து வந்து கொண்டிருந்தது. எல்லா வீடுகளிலும் வாசலில் பெரிய பெரிய கோலங்கள் போட்டு, நடராஜர் படத்தையும் பூரண கும்பமும் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு ஆங்காங்கே தீபாராதனை எடுத்தார்கள். மண்டகப்படி இருக்கும் இடங்களில் மட்டுமே தேர் நிறுத்தப் படுகிறது. மக்கள் உற்சாகமாய் அந்தப் பெரிய வடத்தைப் பிடித்து இழுத்துக் கீழவீதியின் நடுவில் இருக்கும் எங்கள் கட்டளை தீக்ஷிதர் ஆன ராமலிங்க தீக்ஷிதர் வீட்டருகே வந்து நின்றபோது மணி ஒன்பதைத் தொட்டு விட்டது.

அங்கே சில கடைகளில் மண்டகப்படி விசேஷ வழிபாடுகள் நடந்தன. தேர் வடம் கீழே கிடந்தது. வடத்தினருகே சென்று நடராஜரைப் பார்த்தோம். அப்ப்பா! எவ்வளவு உயரம்! வடத்தைத் தொட்டுப் பார்த்தாலே எவ்வளவு கனம் என்றும் புரிந்தது. ஆனாலும் தேரை இழுத்தவர்கள் உற்சாகத்தோடு இழுத்தார்கள். எதிரே தேவார, திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டுக்கொண்டிருந்தன. மக்கள் அனைவருமே நடராஜரைப் பார்த்தவண்ணம் பின்னாலேயே சென்றனர். தேருக்குப் பின்னால் இருந்தவர்கள் தவிர மற்றவர்கள் தேரின் முன்னே நடராஜரைப் பார்த்த வண்ணமே சென்றனர். என்றாலும் அந்தக் கூட்டத்திலும் நெரிசல் ஏற்படாமல் சமாளித்தனர். மக்கள் கூட்டமும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தது. தேர் தெற்கு வீதிக்குத் திரும்பும் வரை காத்திருந்துவிட்டு நாங்கள் வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போயிட்டு வரலாம் என்று கிளம்பினோம்.

உள்ளே ஆட்டோ எதுவும் வராதாகையால் அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு நடந்தே சென்று பேருந்து பிடித்து வைத்தீஸ்வரன் கோயில் போய்ப் பிரார்த்தனைகளையும், தரிசனத்தையும் கட்டளை வைத்திருக்கும் குருக்களையும் பார்த்துவிட்டுப் பின்னர் சிதம்பரம் திரும்பினோம். மாலை ஈசான்ய மூலைக்கு வர நாலுமணி ஆகும் என்று தீக்ஷிதர் சொல்லி இருந்ததால் அறைக்குச் சென்று ஓய்வு எடுத்துக்கொள்ளப்போனோம். ரங்க்ஸ் நல்லாத் தூங்கிவிட்டார். எழுந்திருக்கும்போது, (எங்கே? பிடிச்சு உலுக்கவேண்டி இருந்தது!) நாலரைக்கும் மேல் ஆகவே, தேர் நிலைக்கு வந்திருக்குமோனு நினைச்சேன். அது போலவே கீழே இறங்கியதும் ஒருவரைக் கேட்டதுக்கு 3 மணிக்கே நிலைக்கு வந்தாச்சுனு சொல்லிட்டுப் போகவே ஒரு குருக்ஷேத்திரம் மீண்டும் ஆரம்பிக்க இருந்தது. அவசரம் அவசரமா ரங்க்ஸ் என்னோட முகத்தையே பார்க்காமல் எதிரே தீக்ஷிதரைப் பார்க்கப் போயிட்டார். வேறு வழியில்லாமல் நானும் பின்னாலேயே போனேன். தீக்ஷிதர் மனைவி, மருமகள், குழந்தைகள் எல்லாம் எங்கேயோ போய்க்கொண்டிருக்க அவரைக் கேட்டதில் தேர் வடக்குத் தெருவையே இன்னும் தாண்டலை என்றும் ஈசான்ய மூலைக்கு வர ஐந்தரை மணியாவது ஆகும் என்றும் வடக்குத் தெருவில் ஒரு மண்டகப்படியில் நிற்பதாயும் சொல்லிவிட்டு அவங்க வீட்டிலே எல்லாரும் அங்கே தான் போறதாகவும் எங்களையும் போகச் சொன்னார். தேர் நிலைக்கு வந்ததும் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் கால பூஜைகள் நடக்கும் என்றும் மீண்டும் மாணிக்கவாசகர் வந்து பதிகம் ஓதுவதும் நடக்கும் என்றும் கூறிவிட்டு அதன் பின்னரே நடராஜர் உள்ளே வருவார் என்றும் உள்ளே வரும்போதும் ஆடிக்கொண்டே வருவார். வந்துவிட்டு நேரே ஆயிரங்கால் மண்டபத்துக்குப் போவார் என்றும் அன்றிரவு பூராவும் லக்ஷார்ச்சனை நடக்கும் என்றும் கூறினார். நடராஜரை எங்கே இருந்து பார்த்தால் சரியாய் இருக்கும் என்பதை உள்ளே போய்ப் பார்த்துக்கோங்க, கூட்டம் இருப்பதால் சரியாய்ச் சொல்ல முடியாது. ஆயிரங்கால் மண்டபத்துக்குள்ளே வந்துவிட்டால் வெளியே வரது கஷ்டம். என்றும் கூறினார்.

அப்பாடி! இப்போ தைரியமா ரங்க்ஸ் என்னைப் பார்க்க நான் அசடு வழிந்தேன். இரண்டு பேரும் கீழவீதியும் வடக்கு வீதியும் சேரும் இடத்துக்குச் சென்றோம். அங்கே ரங்க்ஸ் படிக்கும்போது குடி இருந்த வீடு, (மாறவே இல்லையாம், அப்படியே இருக்குனு சொன்னார்) பாநுசேகரன் என்பவர் வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்தோம். ஏற்கெனவே பலர் இருந்தார்கள். அதோடு அங்கே பாடசாலை வேறே நடக்கிறது. அந்த மாணவர்கள், வெளி ஊர்ப் பாடசாலைகளில் இருந்து வந்திருந்த வைதீகர்கள் என்று ஒரே கூட்டமாய்த் தான் இருந்தது. காலையை விட இப்போது கூட்டம் அதிகரித்திருந்தது பார்த்ததுமே புரிந்தது. என்றாலும் திண்ணையில் கொஞ்சம் போல் இருந்த இடத்தில் நான் மட்டும் உட்காரப் போனப்போ அவங்க எழுந்து எங்களுக்கு இடம் விட்டுவிட்டு வெளியே போய் உட்கார்ந்தாங்க.

சற்று நேரத்தில் தேர் ஈசான்ய மூலைக்கு வந்து திரும்பியது. தேர் ஆடிய ஆட்டமும், குலுங்கிய குலுங்கலும் நமக்குப் பயத்தைக் கொடுக்கிறது. மேலே அமர்ந்திருக்கிறவர்கள் சற்றும் கலங்காமல் அமர்ந்திருந்தனர். அவங்களுக்குக் கீழே இன்னொரு தட்டில் விஸ்வகர்மா வகுப்பினர் அமர்ந்திருக்கின்றனர். தேரின் பொறுப்பு முழுதும் அவர்களுடையதே. பல்வேறு வேலைகளும் செய்யும் விஸ்வகர்மாக்களில் ஸ்தபதிகள், ஆசாரிகள், தச்சர்கள், கொல்லர்கள் என்று பலரும் அமர்ந்து வருகின்றனர். தேரின் பாதுகாப்பு மட்டுமில்லாமல் கீழே மண்டகப்படிக்காரர்கள் கொடுக்கும் நிவேதனத்தை வாங்கி மேலே கொடுப்பதும், மேலே உள்ள தீக்ஷிதர்களில் ஒருவர் அதை வாங்கி அன்றைய வழிபாடு செய்யும் தீக்ஷிதரிடம் கொடுத்து நிவேதனம் செய்து தீபாராதனை காட்டிப் பின்னர் கீழே மீண்டும் அவர்களிடம் கொடுப்பதும், அவங்க வாங்கி மண்டகப்படிக்காரங்களிடம் ஒப்படைப்பதும் என்று இருபக்கமும் அமர்ந்திருப்பவர்களுக்கும் சரியான வேலை. அன்று பூராவும் உணவருந்துவதில்லை. திரவ ஆகாரமாய் எடுத்துப்பார்கள் போல. கீழே இறங்குவது என்றால் அவசரமான காரியங்களுக்கு மட்டுமே தவிர்க்க முடியாது என்றால் மட்டுமே. இல்லை எனில் இறங்குவதும் இல்லை. ஆட்கள் மாறுவதும் இல்லை. இவங்க எல்லாம் ஆருத்ரா தரிசனம் தேதிக்கு ஒருமாதம் முன்னாடியே தேர்ந்தெடுக்கப் பட்டு அதற்கென நியமங்களோடு இருப்பவர்கள். கண்டிப்பாக வேறு ஆட்கள் வருவதில்லை. தேரின் மேலே நடராஜருக்கு அருகே மட்டும் வழிபாடு செய்யும் தீக்ஷிதர் குடும்பத்தின் சிறு பிள்ளைகள் உட்கார்த்தி வைக்கப்படுகிறார்கள். பழக்கம் ஆவதற்காக.

தேர் ஈசான்ய மூலையைக் கடந்ததும் எல்லாரும் தேர் முட்டியை நோக்கிப் பாயக் கூட்டத்தில் மாட்டிக்கவேண்டாம் என்று நாங்கள் சிவகாமசுந்தரியின் தேரைப் பார்த்துவிட்டு வடக்கு வாசலை நோக்கி நடையைக் கட்டினோம். அங்கிருந்து செருப்பைத் தூக்கிக் கையில் வைத்துக்கொண்டு சிவகங்கைக் கரையோரமாய்க் கீழ வாசலுக்கு ஏற்கெனவே பலர் போய்க்கொண்டிருந்தார்கள். அட, நாம் தான் சாமர்த்தியம்னு நினைச்சால், நமக்கும் மேலே இல்லை இருக்காங்கனு நினச்சவாறே நாங்களும் செருப்பைத் தூக்கிக்கொண்டு போனோம். அதுக்குள்ளே சிவகங்கைக் கரை வரையும், கடைகள், கடைகள், கடைகள். எல்லாம் இன்றும், நாளையும் மட்டுமே அநுமதிக்கப்படுகின்றன. என்றாலும் மனசுக்கு உறுத்தலாய்த் தான் இருந்தது. ஒரே நல்லவிஷயம் உடனுக்குடன் சுத்தம் செய்யப் படுவது தான்.

கீழவாசலில் வெளியே போய்ச் செருப்பு வைக்குமிடத்தில் செருப்புகளை ஒப்படைத்தோம். இப்போ செருப்புக்கு ஆறு ரூபாய் என்றும் நாளை மாலை வரை எப்போ வேண்டுமானாலும் வாங்கிக்கலாம் என்றும் இரவிலும் திறந்திருக்கும் என்றும் கடைக்காரர் சொன்னார். உள்ளே போனால் எப்போ வெளியே வருவாங்கனு சொல்ல முடியாதே அதனால். நாங்கள் உள்ளே போகும்போதே ஆயிரங்கால் மண்டபம் செல்லும் வழியிலேயே க்ரில் போட்டுத் தடுத்து ஒரு மண்டபம் ஒன்றின் இடிந்த பாகங்கள் காணப்பட்டது. அந்த க்ரில்லுக்குள் புகுந்து அங்கிருந்த மேடையில் அமர்ந்து விட்டோம். நடராஜர் நுழையும் வாசலுக்கு அருகே இருந்தது அது. நடராஜர் நுழைந்தால் நம்மைப் பார்க்காமல் போகமுடியாது. அதுக்குள்ளே பக்கத்தில் இருந்தவங்க, நடராஜர் வர எட்டு மணி ஆகும் போய்ச் சாப்பிடறதுன்னா சாப்பிட்டு வாங்கனு சொன்னாங்க. இவருக்கு சர்க்கரையே பசி வந்துட்டா மயக்கம் வரப் போறதேனு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. ஆனால் அவரோ பசியே இல்லைனு சொல்லிட்டார். இப்போ வெளியே போய்ச் சாப்பிடப்போனா திரும்பி வரதுக்குள்ளே இங்கே வேறு யாரேனும் உட்கார்ந்திருப்பாங்க. கூட்டம் வரவர ஜாஸ்தியாயிட்டே இருக்கு. அப்புறம் உள்ளே நுழைய முடியாமப் போயிடும்னு அவரோட எண்ணம். சரினு உட்கார்ந்துட்டோம். வழியிலே இருக்கும் கடைகளை எல்லாம் காவலர்கள் அப்புறப்படுத்திக்கொண்டே இருந்தனர். திடீரென நாதஸ்வரம் சத்தம்.

என்னனு பார்த்தா ஆசாரியர் நடுவில் வர சுற்றி மற்ற தீக்ஷிதர்கள் வர, கையில் வெள்ளிக் கோல் ஒன்றைப் பிடித்துக்கொண்டு கோவில் ஊழியர் ஒருவர் பின் தொடர அனைவரும் ஆயிரங்கால் மண்டபம் வழியாய் ஊர்வலம் போல் வந்தனர். ஆசாரியர் நடராஜரிடம் அநுமதி வாங்கப்போகிறாராம். இவர்தான் நாளைக்கு ஆருத்ரா அபிஷேஹம் செய்யப் போகிறார். ராஜாவுக்கு அபிஷேஹம், அலங்காரம் செய்யப் போறவர் எப்படி இருப்பார்னு ராஜா பார்த்து ஓகேனு சொல்லணுமே! அதுக்கு! அவர் போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் மாலைக் கட்டளைக்காரகள் சென்றனர். மீண்டும் பரபரப்பு. சரி நடராஜர் தான் வராராக்கும்னு பார்த்தா மாணிக்கவாசகர் பல்லக்கில் அவசரம் அவசரமாத் தேரை நோக்கிப் போனார். இப்போத் தான் போறார். இன்னும் கொஞ்சம் நேரமாகும்னு உள்ளூர்க்காரங்க சொன்னாங்க. ஒன்பதும் ஆயிற்று, பத்து மணியும் ஆயிற்று. தீவட்டி பிடிக்கிறவங்க தீவட்டித் திருவாசியோடு தேருக்குப் போனாங்க.

வேக வேகமாய்ப் பிள்ளையார் ஓட்டமாய் ஓடி வந்து மறைந்தார். அதன் பின்னே அதே வேகத்தோடு சுப்ரமணியரும் வர, அரை மணியில் தீவட்டி ஒளி திருவாசியாக மாற்றப்பட்டு வேகமாய் ஓடிவர, நடராஜர் வரப் போகிறார் என்பது புரிய உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து பார்க்க வசதியான இடத்துக்குப் போனேன். மக்கள் கைதட்டி ஆர்ப்பரித்துக்கொண்டே ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வர, நடராஜர் பல்லக்கில் ஆடி ஆடி வந்தார். அட, அந்தப் பக்கம் இல்லை பார்க்கிறார் என்று நான் நினைத்த அதே கணம் பல்லக்கு என் பக்கம் திரும்பிற்று. பார், பார், நன்றாய்ப் பார் என்ற வண்ணமே இன்னொரு ஆட்டம். அவர் ஆட்டத்துக்கு இடம் கொடுத்துக்கொண்டே மக்கள் சென்றனர். பல்லக்கோடு ஓடிக்கொண்டே பல்லக்கு திரும்பும் இடத்துக்கு வந்து மற்றொரு முறை பார்த்தேன். இப்போது இன்னும் அருகே, மிக மிக அருகே. கண்ணுக்கு எட்டாத செளந்தரியக் காட்சி! திரும்பத் திரும்ப அங்கேயே நடராஜரையே பார்த்ததில் பின்னால் சிவகாம சுந்தரி வருவதையே மறந்தும் போனேன். அதுக்குள்ளே என் கணவர் சிவகாமசுந்தரியைப் பாருனு என்னைப் பிடித்து இழுக்கவே ஒரு கணம் திரும்பியதில் சிவகாமி தெரிந்தாள். நன்றாய்ப் பார்ப்பதற்குள்ளாக பல்லக்கு நகர்ந்துவிட்டது. நடராஜர் முன்னாலே போய்விட்டாரே? எல்லாருமே பின்னால் ஓட்டமாய் ஓடினார்கள். ஆயிரங்கால் மண்டபத்திலோ கேட்கவே வேண்டாம். எல்லாரும் இடம் முன்பதிவு செய்துகொண்டு அமர்ந்திருந்தார்கள். நாங்கள் பார்க்கும்போதே ஆயிரக்கணக்கானவர்கள் அமர்ந்திருந்தனர். இப்போ இன்னும் கேட்கவே வேண்டாம். லக்ஷார்ச்சனை பார்க்கவேண்டாம், காலை அபிஷேஹத்துக்கு வரலாம் என்று முடிவு செய்து கொண்டோம். பசி வயிற்றை அப்போது தான் கிள்ளியது.

வெளியே வந்தால் மணி பதினொன்றரை. இந்த நேரம் யார் நமக்குச் சாப்பாடு கொடுப்பாங்க? தீக்ஷிதர் வீட்டில் பாலாவது வாங்கிச் சாப்பிடலாம் என்றால் இந்த நேரம் போய் அவங்க வீட்டுப் பெண்களை எழுப்புவதா? மனம் குழம்பியது. ஆனால் அங்கிருந்த உணவு விடுதிகள் அனைத்துமே திறந்திருக்க, எல்லாவற்றிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. வழக்கமாய்க் காபி, டிபன் சாப்பிடும் உணவு விடுதிக்குப் போனால் வெளியே ஐம்பது பேர் காத்திருப்பில். உள்ளே இடம் பார்த்துப் பார்த்துப் பார்த்து அநுமதித்துக்கொண்டிருந்தனர் எங்களை உள்ளே விட ஒரு மணி நேரமாவது ஆகும் போலிருந்தது. சூபர்வைசரிடம் பார்சல் கொடுக்க முடியுமா என்றால் இந்த மூன்று நாட்களும் பார்சல் சேவையே கிடையாது என்றுவிட்டார். அங்கேயே காத்திருக்கலாம் என்று ரங்க்ஸ் சொல்ல, வேண்டாம்,போகலாம் என்று நான் சொல்ல, எதிரே இன்னொரு உணவு விடுதி.

அங்கே போய்ப் பார்க்கலாம் என்று நான் கிளம்ப அரை மனசாய் அவரும் வந்தார். அங்கேயும் கூட்டம் தான். ஒருத்தர் வெளியே வருவதைக் கண்டு உள்ளே இடம் இருக்கானு கேட்டதுக்கு நாற்காலி காலினா போய் உட்காருங்க. உணவு எப்போத் தயாரோ அப்போ வரும். நான் ஒரு மணி நேரம் காத்திருந்தேன்னு சொல்லிட்டுப் போனார். நாங்க முழிச்சிட்டு நின்னப்போ ஒருத்தர் கூப்பிட்டு இரண்டு இடம் இருக்கு வாங்கனு உட்காரச் சொன்னார். உட்கார்ந்தாச்சு. சாப்பிட ஏதானும் கிடைக்குமா? அதுக்குள்ளே தட்டு நிறைய ஊத்தப்பம்(சாதா தான், சிதம்பரத்தில் நோ வெங்காயம்) எடுத்துட்டு ஒருத்தர் வர, பசிக்குப் பனம்பழம்னு நான் அதைக் கேட்க, எங்களுக்கு முன்னால் காத்திருப்பவர்களுக்குனு அவர் போக, எங்க எதிரே இருந்த ஒரு அம்மா, எழுந்து போகாதீங்க, இந்த ஊத்தப்பம் தான் எல்லாருக்கும். தொட்டுக்கத் தான் ஒண்ணும் கிடையாது. நாங்க வெறும் ஊத்தப்பம் தான் சாப்பிட்டுட்டுப் போறோம்னு சொன்னாங்க. சட்னி அரைக்கறாங்களாம் நேரம் ஆகுமாம். அதுக்குள்ளே இன்னொரு செட் ஊத்தப்பம் வர, இப்போ எங்களுக்குக் கொடுத்தார் சூபரவைசர். நான் முதல்லேயே ரெண்டு வாங்கிக்க எப்படி இருக்குமோனு நினைச்ச ரங்க்ஸ் ஒண்ணு போதும்னுட்டார். எப்படிச் சாப்பிடப் போறோம்னு நினைச்சால், வத்தக் குழம்பு இருக்கு வேணுமானு கேட்டார். ஆஹா, சரினு சொல்லிச் சாப்பிட்டோம். அப்புறம் ரங்க்ஸும் இன்னொண்ணு கேட்டுச் சாப்பிட்டார். மூன்றாவதுக்குத் தடா! அடுத்து வரவங்களுக்குக் கொடுக்கணுமே. ஒருத்தருக்கு ரெண்டு தான்! அதுக்கு மேலே கேட்டால் நோ தான்! :)))) அர்த்த ராத்திரியானாலும் சரி, பரவாயில்லைனு காப்பி வாங்கிச் சாப்பிட்டுட்டு வந்து ரூமிலே படுக்கும்போது பனிரண்டரைக்கும் மேலே ஆச்சு.

படங்கள் நன்றி கூகிளார். நான் எடுக்க முடியவில்லை! :(

தொடரும்






coral shree

unread,
Feb 15, 2011, 6:29:13 AM2/15/11
to mint...@googlegroups.com
கீதா, நகைச்சுவையுடன், பக்தி ரசத்தையும் கலந்து.....அருமை போங்கள்..........

2011/2/15 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

Geetha Sambasivam

unread,
Feb 16, 2011, 4:09:37 AM2/16/11
to mint...@googlegroups.com
பின்னூட்டமிட்டுப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி. தனித்தனியாய்ச் சொல்ல முடியவில்லை. 

2011/2/15 coral shree <cor...@gmail.com>
கீதா, நகைச்சுவையுடன், பக்தி ரசத்தையும் கலந்து.....அருமை போங்கள்..........



தொடரும்






--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

Geetha Sambasivam

unread,
Feb 16, 2011, 4:41:05 AM2/16/11
to மின்தமிழ், இல்லம் (your HOME)

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே!

அன்று படுக்கும்போதே ஒரு மணி ஆகிவிட்டிருந்தது. ஆனால் படுத்த சற்று நேரத்திற்கெல்லாம் அறைவாசலில் கதவை யாரோ தட்டினார்கள். யாருனு பார்த்தால் அறைப் பணியாளர். வெந்நீர் தயாராகிவிட்டதாம். கொண்டு வந்துவிட்டார். மணியைப் பார்த்தால் இரண்டரைதான் ஆகி இருந்தது. ஒரு மணி நேரம் கூடத் தூங்கவில்லை. ஆனால் இப்போ விட்டால் அப்புறமாய்க் குளிக்க வெந்நீர் கிடைக்குமோ கிடைக்காதோ! ஊர் விட்டு ஊர் வந்து குளிர்ந்த நீரில் குளிச்சு திடீர்னு உடல்நலக்கேடு வந்தால் என்ன செய்யறது? வெந்நீரை வாங்கிக்கொண்டு நான் குளிக்கப் போனேன். அதுக்குள்ளே இன்னொரு வாளி வெந்நீரையும் கொண்டு வர, வாங்கி வச்சுக்க வாளி இல்லாமல் திரும்ப அனுப்பினோம். அப்புறமாய் அவரும் குளிச்சுத் தயாரானதும் இருவருமாய்க் கோயிலுக்குக் கிளம்பினோம். அப்படியும், இப்படியுமா மணி நாலை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தக் காலை வேளையில் தெருவில் நடமாட்டம் இருக்குமானு நினைச்சுப் போனால் மக்கள் சாரி சாரியாகக் கோயிலுக்குப் போய்க்கொண்டிருந்தனர். திறந்திருந்த ஒரு ஹோட்டலில் காபி மட்டும் குடித்துவிட்டு நாங்களும் உள்ளே சென்றோம். ஆயிரங்கால் மண்டபத்தில் லக்ஷார்ச்சனை முடிந்து அபிஷேஹம் ஆரம்பித்து இருந்தது. முதன்முதல் விபூதி அபிஷேஹம் செய்தனராம். அது பார்க்க முடியவில்லை.

மெல்ல மெல்ல கூட்டத்தில் நுழைந்து நாங்கள் மெதுவாக முன்னேறினோம். ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் அனைத்துத் தரப்பிலிருந்தும் பார்க்க வசதியாக வைக்கப்பட்டிருந்தார். தெற்குப் பார்த்தே வைத்திருந்தனர். தெற்குப் பார்த்து வைப்பதன் கோட்பாடு என்னனு சிலரைக் கேட்டேன். பதில் இன்னும் கிடைக்கவில்லை. அருகே சிவகாம சுந்தரியும் இருக்க அபிஷேஹம் நடந்து கொண்டிருந்தது. பெரிய பெரிய அண்டா, தவலைகளில் பால் லிட்டர் லிட்டராய் இருந்தது. கிழக்கு வாசலுக்கு அருகேயே நாங்கள் சென்று அங்கிருந்து ஆயிரங்கால் மண்டபத்தின் சமீபம் சென்று அபிஷேஹத்தைப் பார்க்கும் வண்ணம் வசதியாக நின்று கொண்டிருந்தோம். கொஞ்சம் முயன்றால் முன்னால் சென்று அமர்ந்து கொண்டிருப்பவர்களிடையே சென்று அமரலாம். ஆனால் கீழே அமர்ந்து கொள்வதில் எனக்கு இருந்த சிரமமும், உள்ளே அருகே சென்றுவிட்டால் பின்னர் திரும்ப வெளியே வருவதில் இருந்த பிரச்னையும் சேர்ந்து யோசிக்க வைத்தது. யாரும், யாரையும் தடுப்பதில்லை. போக ஆசைப்படுபவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

பெரிய குடங்களில் பால் நிரப்பப் பட்டு அபிஷேஹம் நடந்து கொண்டிருந்தது. பால் அபிஷேஹம் செய்யும்போதே அபிஷேஹப் பால் சேகரிக்கப் பட்டு, இன்னொரு வாசல் வழியாகக் காத்திருக்கும் பக்தர்களுக்கு உடனடியாக விநியோகிக்கப் பட்டது. எங்களுக்கும் பிரசாதமாக ஒருத்தர் வாங்கி வந்த பால் கிடைத்தது. கிட்டத் தட்ட அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பால் அபிஷேஹத்தைப் பார்த்தோம். ஐந்தரை மணிக்கும் மேலாகியும் பால் அபிஷேஹம் நிறைவுறவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. குடத்தின் கனம் தாங்க முடியாமல் ஆசாரியருக்குக் கை நழுவிக் கொண்டிருந்தது. ஆனாலும் சமாளித்துக்கொண்டு அபிஷேஹத்தைச் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தார். பக்தர்கள் தேவார, திருவாசகங்களை ஓதிக்கொண்டும், வேத கோஷங்கள் செய்து கொண்டும், பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தனர். இரவு தூக்கமில்லாமையால் அதற்கு மேல் அந்த மண் தரையின் சில்லிப்பில் நிற்கமுடியாமல் எனக்கு வீசிங் வரும்போல் இருந்ததால் திரும்பினோம். தீக்ஷிதர் வீட்டுக்கு வந்துவிட்டோம். அங்கே தீக்ஷிதர் சந்தன அபிஷேஹம் முடிந்ததும் வருவதாய்ச் சொல்லி இருந்தார். அவருக்காகக் காத்திருந்தோம். தீக்ஷிதர் வீட்டுப் பெண்மணிகள் வீட்டில் நிவேதனம் செய்த களியை உண்ணக் கொடுத்தனர். கோயிலில் இருந்தும் பிரசாதம் வரும் என்றார்கள். அன்று கோயிலிலும் களிதான் நிவேதனம். அனைவருக்கும் கொடுக்கிறார்கள். பின்னர் ஆருத்ரா தரிசனத்தின் மகிமை பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அதன் பின்னர் தரிசனம் முடித்துவிட்டுக் கிளம்பினோம். கீழே ஆருத்ரா தரிசன மகிமையும் நடராஜப் பத்தும்.

பிக்ஷாடனராக தாருகாவனத்தில் ஆடிய ஈசன், அதன் பின்னர் ஈசனின் கணங்கள் என்று சொல்லப் படும் தில்லை வாழ் அந்தணர்களின் வேண்டுகோளின்படி தில்லைச் சிற்றம்பலம் வந்து சேர்ந்து பொன்னம்பலத்தில் தன் நடனத்தைத் தொடங்கிய நாள் திருவாதிரைத் திருநாளாகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

இருபத்து ஏழு நட்சத்திரங்களிலே, இரண்டே இரண்டு நட்சத்திரத்துக்கு மட்டுமே "திரு" என்ற அடை மொழி உண்டு. அது சிவனுக்கே உரிய "திரு"வாதிரை நட்சத்திரமும், விஷ்ணுவுக்கு உரிய "திரு"வோண நட்சத்திரமும் ஆகும். அதிலும் சிவபெருமானை "ஆதிரையான்" என்றே அழைப்பார்கள். ஆதிரை நட்சத்திரம் ஆனது வான சாஸ்திரத்திலும், சோதிடத்திலும் பேசப் படும் 6-வது நட்சத்திரம் ஆகும். தற்கால வான இயல் அறிவின்படி இதை "ஓரியன் குழு"வில் சொல்லப் படுகின்றது. இந்த ஓரியன் குழுவில் 5 நட்சத்திரங்கள் முக்கியமாய்ச் சொல்லப் படுகின்றது. அவற்றில் மிகுந்த ஒளியுள்ள நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமே ஆகும். வடகிழக்குத் திசையில் காணப்படும் இந்த நட்சத்திரம் எப்போதும் மற்ற நான்கு நட்சத்திரங்களுடனேயே காணப்படும்.

இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்தத் திருவாதிரை நட்சத்திரம் மாதா மாதம் வந்தாலும், மார்கழியில் வரும் திருவாதிரைக்குத் தனிச் சிறப்பு. ஆடவல்லான், தன் பிரபஞ்ச நாட்டியத்தை அன்றே ஆடியதாய்க் கூறுவார்கள். அதிலும் சிதம்பரத்தில் இதற்குத் தனியான மகிமை. சிதம்பரத்தில் முக்கியமான திருவிழா, மார்கழித் திருவாதிரைத் திருவிழா என்றே சொல்லலாம். மற்ற நாட்களில் கோயிலுக்கு உள்ளே இருக்கும் நடராஜர் அன்று வீதியில் உலா வருவார். அதோடு அல்லாமல் நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகங்களும் நடக்கும். இந்த ஆதிரைச் சிறப்பு நாள் விழாவாய்க் கொண்டாடப் பட்டதைப் பரிபாடல் என்னும் சங்கப் பாடலில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகின்றது.


ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

ஆதிரை நன்னாள் மட்டுமின்றி "அம்பா ஆடல்" என்னும் பாவை நோன்பினையும் சிறப்பித்துக் கூறுகின்றது மேற்கண்ட பாடல். ஆதிரை நாளில் நடராஜர், சிவகாமி, பிள்ளையார், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் தான் வீதி உலாச் செல்வார்கள். வானில் தென்படும் அந்த ஐந்து நட்சத்திரக் கூட்டமும் மேற்கண்டவாறே சொல்லப் படுகின்றது. மிக்க ஒளியுடன் திகழும் திருவாதிரை நட்சத்திரத்தை "ஆடவல்லான்" என்றே சொல்கின்றனர் ஆன்மீகப் பெருமக்கள். மார்கழி மாதம் 11 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் 9-ம் நாள் அன்றுகாலையில் நடைபெறும் தேர் ஓட்டத்துக்குப் பின் மாலையில் ஆயிரக் கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு நள்ளிரவில் லக்ஷார்ச்சனை முடிந்ததும் ஆரம்பித்துக் காலை வரையில் இந்தத் திருவாதிரை அபிஷேகம் நடக்கின்றது. அதன் பின்னர் ஆடலரசன் தரும் காட்சியே "ஆருத்ரா தரிசனம்" என்று சொல்லப் படுகின்றது. இந்தச் சமயம் ஈசானமூலையில் ஆருத்ரா நட்சத்திரம் எப்போதும் இல்லா வகையில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்றும் சொல்லப் படுகின்றது. ஆங்கிலக் கணக்கின்படி டிசம்பர் 15-தேதிக்குப் பின்னர் ஜனவரி 15 தேதிக்குள் வரும் ஒரு நாள் தான் திருவாதிரை நாள் ஆகின்றது. முழு நிலவு ஒளி ஊட்டும் பெளர்ணமி தினத்தன்று சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும்போது இந்த உற்சவம் அதிகாலையில் நடைபெறுகிறது. அந்த நேரம் வானில் தென்படும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதீத பிரகாசத்தை உணர்ந்தவர்கள் ஈசனின் திருக்கூத்து அப்போது நடைபெறுவதாயே உணர்கின்றனர்.

மேலும் ஈசனின் கணங்கள் ஆன தில்லைவாழ் அந்தணர்கள் ஈசனின் வழிபாட்டுக்கெனத் தில்லை வந்தவர்கள் கூத்த பிரானின் ஆடலைக் காணமுடியாமல் ஏங்கியதாயும், கூத்தனை வேண்டியதன் பேரில் நடராஜர் திருவாதிரை அன்றே சிதம்பரம் வந்து கோயில் கொண்டதாயும் ஐதீகம். ஆகவே இந்த அபிஷேஹம் முடிந்ததும், எட்டு மணியில் இருந்து பனிரண்டு மணி வரையிலும் நடராஜருக்கு அலங்காரங்கள் செய்து, சிவகாம சுந்தரி உடன் வர, நடராஜர் மீண்டும் ஆநந்த தாண்டவம் ஆடிக்கொண்டே தில்லைக் கோயிலின் சிற்றம்பலத்தில் கோயில் கொண்டருளுகிறார். அதுவே ஆருத்ரா தரிசனம் என்றழைக்கப்படுகிறது. தாவித் தாவி ஆடுவது தாண்டவம், ஆண்களுக்கு மட்டுமே உரியது. இசையும், நளினமும் சேர்ந்த்து லாஸ்யம், பெண்களுக்கு உரியது. ஆகவே நடராஜரின் தாண்டவம் வேகத்தோடும், தாளத்தோடும் காணப்படும். அதுவே சிவகாமி அம்மை நளினமாகவும், மென்மையாகவும் ஆடுவாள்.

மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீ
மறைநான்கின் அடிமுடியும்நீ
மதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ
மண்டலமிரண்டேழும்நீ,
பெண்ணும்நீ ஆணும்நீ, பல்லுயிர்க்குயிரும்நீ,
பிறவும்நீ ஒருவநீயே,
பேதாதிபேதம்நீ பாதாதிகேசம்நீ
பெற்றதாய் தந்தைநீயே,
பொன்னும் பொருளும்நீ யிருளும்நீ
ஒளியும்நீ போதிக்கவந்தகுருநீ,
புகழொணாக் கிரகங்க ளொன்பதும்நீயிந்த
புவனங்கள் பெற்றவனும்நீ
எண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என்
குரைகளார்க் குரைப்பேன்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 1


மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை
சிவகாமியாட,

மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,

குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட

குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 2

கடலென்ற புவிமீதில் அலையென்றவுரு
கொண்டு கனவென்ற வாழ்வைநம்பிக்,
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்த நித்தம்,
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி
ஓயாமலிரவு பகலும்,
உண்டுண் டுறங்குவதைக் கண்டதேயல்லாது
ஒருபயனடைந்திலேனைத்,
தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்
தாபரம் பின்னலிட்டுத்,
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனை யிவ்வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளா
திருப்பதுன் னழகாகுமோ,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 3

பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணந்
தம்பனம் வசியமல்ல,
பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச
மதுவல்ல சாலமல்ல,
அம்பு குண்டுகள் விலக மொழியுமந்திரமல்ல
ஆகாய குளிகையல்ல,
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல,
அரியமோ கனமுமல்ல,
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிசி,
கொங்கணர் புலிப்பாணியும்,
கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாங்
கூறிடும் வைத்தியமுமல்ல,
என்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
ஏதுளது புகலவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 4

நொந்துவந்தேனென்று ஆயிரஞ் சொல்லியும்
செவியென்ன மந்தமுண்டோ ,
நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்ற
பின் நோக்காத தந்தையுண்டோ ,
சந்தமுந் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ ,
தந்திமுகனறு முகன் இருபிள்ளை யில்லையோ
தந்தைநீ மலடுதானோ,
விந்தையும் சாலமும் உன்னிடமிருக்குதே
வினையொன்று மறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே
வேடிக்கையிது வல்லவோ,
இந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லும்
இனியுன்னை விடுவதில்லை,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 5

வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
வாஞ்சை யில்லாத போதிலும்,
வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதிலும்,
மொழியெகனை மொகனையில் லாமலே
பாடினும் மூர்க்கனே முகடாகினும்,
மோசமே செய்யினும் தேசமேகவரினும்
முழுகாமியே யாகினும்,
பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ,
பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ
பாலனைக் காக்கொணாதோ,
எழில்பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்தநீ
யென்குறைகள் தீர்த்தல் பெரிதோ,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 6

அன்னை தந்தைக ளென்னை யீன்றதற்
கழுவனோ அறிவிலாத தற்கழுவனோ,
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
ஆசை மூன்றுக் கழுவனோ,
முன்பிறப் பென்னவினை செய்த னென்றழுவனோ
என்மூட வறிவுக் கழுவனோ,
முன்னிலென் வினைவந்து மூளுமென்றழுவனோ
முத்திவரு மென்றுணர்வனோ,
தன்னைநொந் தழுவனோ உன்னை நொந்தழு
வனோ தவமென்ன வென்றழுவனோ,
தையலர்க் கழுவனோ மெய்வளர்க் கழுவனோ
தரித்திர திசைக்கழுவனோ,
இன்னமென்னப் பிறவி வருமோ வென்றழு
வனோ யெல்லாமுரைக்க வருவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 7

காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ
கன்னியர்கள் பழிகொண்டனோ,
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்
தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ,
தாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ,
தந்தபொரு ளிலையென்றனோ,
தானென்று கெர்வித்துக் கொலைகளவு
செய்தனோ தவசிகளை யேசினனோ,
வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ,
வானவரைப் பழித்திட்டனோ,
வடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ
வந்தபின் என் செய்தனோ,
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ
எல்லாம் பொறுத்தருளுவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 8

தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன
தன்பிறவியுறவு கோடி,
தனமலை குவித்தென்ன, கனபெய, ரெடுத்
தென்ன, தாரணியையாண்டு மென்ன,
சேயர்களிருந் தென்ன குருவா யிருந்தென்ன
சீடர்களிருந்து மென்ன,
சித்துபல கற்றென்ன, நித்தமும் விரதங்கள்
செய்தென்ன நதிகளெல்லாம்,
ஓயாது மூழ்கினும் என்னபலன் எமனோலை
ஒன்றைக் கண்டு தடுக்க,
உதவுமோ இதுவெலாம் சந்தையுற வென்று
தான் உன்னிருபாதம் பிடித்தேன்,
யார்மீது வுன்மன மிருந்தாலு முன்கடைக்,கண்
பார்வை யதுபோதுமே,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 9

இன்னமுஞ் சொல்லவோ உன்மனங்கல்லோ
இரும்போ பெரும்பாறையோ,
இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ
இதுவுனக் கழகுதானோ,
என்னை மோகமோ இதுவென்ன சோபமோ
இதுவேவுன் செய்கைதானோ,
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ
ஆனாலும் நான் விடுவனோ,
உன்னைவிட் டெங்கு சென்றாலும் விழலாவனோ
நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலை
யுற்றுப்பார் பெற்றவையோ,
என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும்
இனியருளளிக்க வருவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 10

சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு
சந்திரன் சூரியனிவரை,
சற்றெனக் குள்ளாக்கி ராசிபனி ரெண்டையும்
சமமாய் நிறுத்தியுடனே,
பனியொத்த நட்சத்திரங்க ளிருபத்தேழும் பக்குவப்
படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும்
வெட்டிப்பலரையும் அதட்டியென்முன்,
கனிபோலவே பேசிக் கெடுநினைவு நினைக்கின்ற
கசடர்களையுங் கசக்கி
கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத்
தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி
இனியவள மருவுசிறு மணவை முனுசாமி யெனை
யாள்வதினி யுன்கடன்காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 11


 
Posted by Picasa
தூர்தர்ஷன் பாரதியில் சிதம்பரம் பற்றிய டாகுமெண்ட்ரி படம் யாமினி கிருஷ்ணமூர்த்தி நாட்டியம் ஆடி எடுத்தது ஒளிபரப்பினாங்க. அதில் இருந்து ஒரு காட்சி மட்டும் இங்கே பார்வைக்கு. யாமினி அன்று ஆடியபோது தாண்டவத்துக்கும், லாஸ்யத்துக்கும் உள்ள வேறுபாடு நன்கு புரிந்ததோடு, யாமினி கண்ணிலோ, மனசிலோ தெரியாமல் ஈசன் மட்டுமே தெரிந்தார். அற்புதமான ஆட்டம்.








Reply all
Reply to author
Forward
0 new messages