பஞ்சபட்சி சாஸ்திரம்

187 views
Skip to first unread message

Kesaven Thirumalai Numbakkam

unread,
Dec 16, 2009, 11:17:16 PM12/16/09
to mintamil digest subscribers

பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன?

14 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை அல்லது பவுர்ணமி வருகிறது.இந்த இருநாட்களிலும் சூரியனும் சந்திரனும் முழுவலிமையடைகின்றன.இந்து ஜோதிடப்படி சூரியன் ஆத்மாக்காரகன் எனவும் சந்திரன் மனக்காரகன் எனவும் அழைக்கப்படுகிறது.

பூமியில் பிறக்கும் மனிதன் 14 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் பிறக்கிறான்.அது வளர்பிறை பிரதமை என வைத்துக்கொள்வோம்.அவனது பிறந்த நட்சத்திரம் அசுவினி என வைத்துக்கொள்வோம்.அவனது அசுவினி வளர்பிறையில் வருவதால் பஞ்சபட்சி சாஸ்திரப்படி அவனது பட்சி ஆந்தை வருகிறது.
ஆந்தையின் குணம் என்ன?
அது இரவில் மட்டுமே வெளிவரும்.ஆக, அந்த மனிதனுக்கு பட்டம்,பதவி எல்லாமே இரவில்தான் கிடைக்கும்.தனது பட்சி ஆந்தை என அவன் அறிந்தால்,அவன் ஒருவரிடம் உதவி கேட்டுச்செல்ல வேண்டிய நேரம் இரவு மட்டுமே! பகலில் அவன் உதவி கேட்டால் அந்த உதவி கிடைக்காது.
அவனுக்குஒரு மாதத்தில் (தமிழ்மாதத்தில்) வளர்பிறைகாலமான 14 நாட்களில் காரியங்கள் வெற்றியடையும்.அந்த 14 நாளில் ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் அவனது பறவை(பட்சி)யான ஆந்தைக்கு மரணபட்சிநாளாக அமைகிறது.அந்த நாளில் அவன் செய்யும் எந்த சுபகாரியமும் படுதோல்வியடையும்.மீதி 13 நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சுமார் 1 1/2 மணி நேரம் அரசபட்சி நேரமாகிறது.அந்த நேரத்தில் அவன் ஒரு சர்வாதிகாரியை சந்தித்தாலும் காரிய வெற்றி உண்டாகிறது.
இந்த பஞ்சபட்சி நேரத்தைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பயன்படுத்துகிறார்கள்.அவர்களது அரசபட்சிநேரம் பல சமயங்களில் ராகுகாலத்திலோ, எமகண்டத்திலோ யதார்த்தமாக அமைந்துவிடுகிறது.இதைத் தான் அந்த அரசியல்வாதிகள் “நான் ராகு காலத்தில் மனுத்தாக்கல் செய்தேன்” என பகுத்தறிவு பகலவன்கள் போல பீற்றிக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை பகுதியில் வாழும் ஜோதிடர்கள் பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நிபுணர்களாக இருக்கிறார்கள்

Tthamizth Tthenee

unread,
Dec 18, 2009, 12:45:29 PM12/18/09
to mint...@googlegroups.com
திரு கேசவன் திருமலை  நம்பாக்கம் அவர்களே
மிக அருமையான  ஒரு செய்தியைத் தொட்டிருக்கிறீர்கள்
தொடர்ந்து  எழுதுங்கள்  மிகவும் பயனுள்ள  செய்தி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
17-12-09 அன்று, Kesaven Thirumalai Numbakkam <tnke...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

N. Kannan

unread,
Dec 18, 2009, 9:47:30 PM12/18/09
to mint...@googlegroups.com
2009/12/17 Kesaven Thirumalai Numbakkam <tnke...@gmail.com>:

> வைத்துக்கொள்வோம்.அவனது அசுவினி வளர்பிறையில் வருவதால் பஞ்சபட்சி சாஸ்திரப்படி
> அவனது பட்சி ஆந்தை வருகிறது.
> ஆந்தையின் குணம் என்ன?
> அது இரவில் மட்டுமே வெளிவரும்.ஆக, அந்த மனிதனுக்கு பட்டம்,பதவி எல்லாமே


இது போன்ற நம்பிக்கை அமெரிக்க இந்தியப்பழங்குடியினரிடையே உண்டு.
சமீபத்தில் ஒரு ஆங்கிலப்படத்தில் இந்தப் பஞ்சபட்சி சாஸ்திரம் சாதுர்யமாக
எடுக்கப்பட்டிருக்கும்.

க.>

Reply all
Reply to author
Forward
0 new messages