மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பகுதி 7

941 views
Skip to first unread message

rajam

unread,
Jan 7, 2011, 10:48:46 PM1/7/11
to மின்தமிழ், Narayanan Kannan, Subashini Tremmel, Nagarajan Vadivel, Vinodh Rajan


மணிமேகலை: உதயகுமரன்
வெட்டுண்ட பின்
-------------------------------------------------------

போன பகுதியில் ...
உதயகுமரன் நள்ளிரவில்
மணிமேகலையைத் தேடி ஊர்
அம்பலத்துக்கு
வந்ததையும்,
காயசண்டிகையைத்
தேடிவந்த காஞ்சனன் தவறாக
உதயகுமரனை வாளால்
வெட்டிக் கொன்றதையும்
பார்த்தோம். இந்தப்
பகுதியில் அதற்குப் பின்
நடந்த நிகழ்ச்சிகளைப்
பார்ப்போம்.


மணிமேகலையும்
கந்திற்பாவையும்
----------------------------------------
உதயகுமரனை
வெட்டிவீழ்த்திய கையோடு
காஞ்சனன் காயசண்டிகையைத்
தன்னுடன்
கூட்டிக்கொண்டு
வான்வழியில் போக நினைத்து
அவள் இருக்கும் இடத்தை
நோக்கிப் போகிறான்.
அப்போது அங்கே தூணில்
இருக்கும் பாவை ஒன்று
அவனைத் தடுத்து உண்மையில்
என்ன நடந்தது என்பதை
விளக்குகிறது.

காயசண்டிகை வடிவத்தில்
இருப்பவள் உண்மையில் அவன்
மனைவியான காயசண்டிகை
இல்லை; அவள் மணிமேகலை.
உண்மைக் காயசண்டிகை தன்
பசி நோய் தீர்ந்து வான்
வழியே சென்றபோது விந்திய
மலைக்கு மேலே போனதால்
விந்தாகடிகை அவளை
விழுங்கிவிட்டாள்.

இந்த விவரத்தைக்
காஞ்சனனுக்குச் சொல்லிய
கந்திற்பாவை அவனைக்
கைம்மைத் துயர்
கொள்ளவேண்டாம் என்று
சொல்கிறது. உதயகுமரன் தன்
ஊழ்வினையால் இறந்தான்
என்றும், அப்படியே
ஆனாலும் காஞ்சனன்
ஆராயாமல் உதயகுமரனைக்
கொன்றதால் காஞ்சனனையும்
வினையின் பயன் தொடரும்
என்றும் சொல்கிறது. இது
கேட்டுக் காஞ்சனன்
மிகவும் வருந்தி அந்த
இடத்தை விட்டுப் போகிறான்.

முதியாள் ("சம்பாபதி")
கோயிலின் உட்புறத்தில்
கிடந்த மணிமேகலைக்கு
நள்ளிரவில் நடக்கும்
இதெல்லாம் காதில்
படுகின்றது. அவள் உடனே
எழுந்து காயசண்டிகையாக
இருந்த தன்
மாறுவடிவத்தைக்
களைகிறாள்; பழையபடி
மணிமேகலை ஆகிறாள்.

உதயகுமரன் வெட்டுண்டு
கிடப்பதைப் பார்த்துத்
துடிக்கிறாள். பழைய
கதைகளைச் சொல்லிப்
புலம்புகிறாள். பழைய
பிறவியில் இராகுலன்
இறந்தபோது தான் தீயில்
புகுந்ததைச் சொல்கிறாள்.
இந்தப் பிறவியில்
மலர்வனத்தில்
உதயகுமரனைப் பார்த்து
அவன்மேல் தன் உள்ளம்
போனதால் மணிமேகலா தெய்வம்
தன்னை
மணிபல்லவத்தீவுக்கு
எடுத்துச் சென்றதைச்
சொல்கிறாள்.
மணிபல்லவத்தில்
மாதவனின் பீடிகை மூலம்
தன் பிறப்பையும் அவன்
பிறப்பையும்
உணர்ந்துகொண்டதைச்
சொல்கிறாள். தான்
காயசண்டிகை வடிவு
எடுத்தது ஏன் என்றும்
சொல்கிறாள். வெட்டுண்டு
கிடக்கும் அவனைக் "காதல"
என்று அழைத்துப்
புலம்புகிறாள்.

"பிறந்தோர் இறத்தலும்
இறந்தோர் பிறத்தலும்
அறம் தரு சால்பும் மறம்
தரு துன்பமும்
யான் நினக்கு உரைத்து
நின் இடர்வினை ஒழிக்க-க்
காயசண்டிகை வடிவானேன்,
காதல!"

[சுருக்கமான பொருள்:
பிறந்தவர்கள்
இறந்துபோவதும்,
இறந்துபோனவர்கள்
மீண்டும் பிறப்பதும் அறம்
தரும் அமைதியினாலும் மறம்
தரும் துன்பத்தினாலும்
என்ற உண்மையை உனக்குச்
சொல்லி உன்னைத் துன்பம்
தரும் வினையிலிருந்து
காப்பாற்றுவதற்காகவே
காயசண்டிகை வடிவம்
கொண்டேன், காதலனே!]

ஒரு விஞ்சையனின்
("காஞ்சனனின்") மயங்கிய
வெகுளியால் உன் கொடிய
வினைப்பயன் உருவெடுத்து
வர, இப்படி இறந்துபோனாயோ
என்று கொதிக்கிறாள்.
அழுது ஏங்கிப்
பெருமூச்சு விட்டு அவன்
பக்கம் போக
எழுந்திருக்கிறாள்.

"போகாதே, போகாதே, அல்லி
மாலையணிந்த அவனிடம்
போகாதே!" என்று ஒரு குரல்
கேட்கிறது. அந்தக் குரல்
தொடர்கிறது ...

"நினக்கு இவன் மகனாத்
தோன்றியதூஉம்
மனக்கு இனியாற்கு நீ
மகளாயதூஉம்
பண்டும் பண்டும் பல்
பிறப்பு உளவால்
கண்ட பிறவியே அல்ல காரிகை!
தடுமாறு பிறவித் தாழ்தரு
தோற்றம்
விடுமாறு முயல்வோய்!
விழுமம் கொள்ளேல்!"

[சுருக்கமான பொருள்:
உனக்கு இவன் கணவனாக
அமைந்ததும் நீ இவனுக்கு
மனைவியாக ஆனதும் முன்னே
பல பல பிறவிகளில்
நடந்ததுதான்; இந்தப்
பிறவியில் மட்டுமில்லை.
மாறி மாறி வரும்
பிறவிகளில்
அழுந்துகின்ற
துன்பத்திலிருந்து
விடுபட முயலும் நீ ...
இதற்காகத் துயரம்
கொள்ளாதே!]

அப்படிச் சொன்ன குரல்
அங்கே அந்தப் பொதியிலில்
இருக்கும் தெய்வத்தின்
குரல் என்று மணிமேகலை
உணர்கிறாள். தன் பழைய
பிறப்பைப் பற்றித்
தெரியுமா என்று கேட்கிறாள்.

அதன் பிறகு அந்தத்
தெய்வம் அவளுக்குப் பழைய
பிறவியின் செய்திகளைச்
சொல்கிறது. பழைய
பிறவியில் இராகுலன்
அவனுடைய சமையல்காரனை
("மடையனை") வாளால்
வெட்டிக் கொன்றதனால்தான்
அந்தப் பிறவியில்
திட்டிவிடம் தீண்டி
இறந்தான் என்றும் இந்தப்
பிறவியில் காஞ்சனனால்
வெட்டுண்டு இறந்தான்
என்றும் சொல்கிறது.

இனி, மணிமேகலைக்கு
என்னென்ன நடக்கும்
என்பதையும் அந்தத்
தெய்வம் சொல்கிறது.
உதயகுமரன் இறந்தது
கேட்டுச் சோழ அரசி
மணிமேகலையைச் சிறையில்
வைப்பாள்; பிறகு அறவண
அடிகள் சொல்லைக்கேட்டு
விடுவிப்பாள்; மணிமேகலை
ஆபுத்திரனைப் பார்க்க
அவனுடைய நாட்டுக்குப்
போவாள்; அவனோடு மீண்டும்
மணிபல்லவம் போவாள்;
தீவதிலகை முலம்
ஆபுத்திரன் தன்
பழம்பிறப்பை உணர்வான்;
அதன் பிறகு அவன்
தன்னுடைய நாட்டுக்குத்
திரும்புவான்; மணிமேகலை
வஞ்சி நகரத்துக்குப்
போவாள்; அங்கே பல
சமயத்தவர் சொல்லும்
வாதங்களையும் கேட்பாள்;
அந்த வாதங்களினால்
தளராமல் மறுமொழியும்
சொல்லுவாள்.

இப்படி எதிர்காலத்தில்
நடக்கப்போவதைச்
சொல்லிவிட்டுத் தான்
அங்கே தூணில் உறையும்
துவதிகன் என்பதையும்
தெரிவிக்கிறது.

தன் இறுதிக் காலம் வரை
தனக்கு நிகழக்
கூடியவைகளைச் சொல்லுமாறு
மணிமேகலை கேட்கிறாள்.
துவதிகனும் சொல்கிறான்.
மணிமேகலை காஞ்சியில் போய்
அறம் செய்வாள்; அங்கேயே
உயிர் நீங்குவாள்; அதன்
பின் உத்தர மகத நாட்டில்
போய்ப் பல பிறவிகள்
எடுப்பாள். அந்த எல்லாப்
பிறவிகளும் அவளுக்கு
ஆண்பிறவியாகவே அமையும்.
அவ்ள் அருளறத்தை விடாமல்
கடைப்பிடித்துத்
தலைச்சாவகன் ஆகிச் சார்பு
அறுப்பாள்.

"கச்சி முற்றத்து நின்
உயிர் கடை கொள
உத்தர மகதத்து உறு
பிறப்பெல்லாம்
ஆண் பிறப்பு ஆகி அருள்
அறம் ஒழியாய்
மாண்பொடு தோன்றி மயக்கம்
களைந்து
பிறர்க்கு அறம் அருளும்
பெரியோன் தனக்கு-த்
தலைச் சாவகனாய்ச் சார்பு
அறுத்து உய்தி"

இறுதியாக, மணிமேகலா
தெய்வம் ஏன் அவளை
மலர்வனத்திலிருந்து
எடுத்துக்கொண்டுபோய்
மணிபல்லவத்தில் வைத்தாள்
என்பதையும் விளக்குகிறான்.

இதையெல்லாம் கேட்டு
மணிமேகலைக்குத் துயரம்
நீங்குகிறது.
வலையிலிருந்து தப்பித்த
மயில் போல மனத்தின்
மயக்கம் நீங்குகிறது.


சோழ அரசியும் மணிமேகலையும்
--------------------------------------

உதயகுமரன் இறந்தது சோழ
அரசனுக்குத் தெரிகிறது.
அவன் உதயகுமரனை ஈமத்தில்
வைக்கும்படியும்
மணிமேகலையைச் சிறை
செய்யும்படியும் கட்டளை
இடுகிறான்.

உதயகுமரனின் தாயான சோழ
அரசியோ கலங்குகிறாள்.
வாசந்தவை என்னும் ஒரு
மூதாட்டி அவளுக்கு
அறிவுரை சொல்கிறாள் ...
"மன்பதை காக்கும் மன்னன்
முன்னால் துன்பம்
கொள்ளாதே" என்று.

அரசி மணிமேகலையை
வஞ்சிக்க நினைக்கிறாள்.
அரசனிடம் போய் ...
"பிக்குணிக்கோலம்
கொண்டவள் மேல் மனம்
வைத்தவனுக்கு
("உதயகுமரனுக்கு") அரசியல்
தெரியவில்லை. அறிவு
நிறைந்த அந்தப்
பெண்ணுக்குச்
சிறைக்கூடம் தகுதியான
இடம் இல்லை. அவளைச்
சிறையிலிருந்து வெளியே
விடவேண்டும். அவள்
என்னோடு இருக்கட்டும்.
அவள் தன்னுடைய ஓடு
("பிச்சைப் பாத்திரம்")
எடுத்துப் போனாலும்
யாரும் தடுக்கப் போவது
இல்லை" என்று சொல்லி
மணிமேகலையை விடுதலை
செய்து தன்
இருப்பிடத்திற்குக்
கூட்டிப் போகிறாள்.

அதன் பிறகுதான் அரசியின்
வஞ்சம் உண்மையான உருவம்
எடுக்கிறது.

மணிமேகலை
பைத்தியக்காரியானால்
ஊரார் அவளை அடிப்பார்கள்
(அல்லது, "கல் எறிவார்கள்")
என்று நினத்து அவளுக்கு
மயக்க மருந்து
கொடுக்கிறாள். மணிமேகலை
பழம்பிறப்பு உணர்ந்தவள்
அதனால் அந்த மருந்து அவளை
மயக்கவில்லை.

அடுத்து, அரசி
ஒருகாமுகனைக் கூப்பிட்டு
மணிமேகலையிடம் போய் அவள்
உடலைக் கெடுத்து அதைப்
பலருக்கும்
தெரிவிக்கும்படிச்
சொல்லுகிறாள். மணிமேகலையோ
மணிமேகலா தெய்வம் கொடுத்த
மந்திரத்தை ஓதி ஓர் ஆண்
போல இருக்கிறாள்.
காமுகனுக்குக் குழப்பம்.
ஆடவர் அணுக முடியாத
இடத்தில் எப்படி ஓர்
ஆண்மகன் வந்தான் என்று
குழம்புகிறான். நரகத்
துயர் செய்யும் அரசியின்
எண்ணம் அவனுக்குப்
புரியவில்லை. அந்த
இடத்தை விட்டுப்
போய்விடுகிறான்!

அதன் பின், அரசி
மணிமேகலையைப்
புழுக்கறையில்
அடைக்கிறாள். மணிமேகலையோ
இன்னொரு மந்திரத்தால்
("ஊண் ஒழிக்கும் மந்திரம்")
உடம்பு வாடாமல்
இருக்கிறாள்.

இதையெல்லாம் பார்த்து
அரசிக்கு வியப்பு!
பொருமுகிறாள்;
நடுங்குகிறாள்;
தவச்செல்விக்குத் தான்
சிறுமை செய்ததை அவளிடமே
சொல்லிப்
பொறுத்துக்கொள்ளும்படி
வேண்டி வணங்குகிறாள்.

தன்னைக்
கொடுமைப்படுத்திய
அரசியிடம் விவேகம்
பேசுகிறாள் மணிமேகலை!

போன பிறவியில் இராகுலன்
இறந்தபோது தான் தீயில்
புகுந்ததைச் சொல்லி,
அப்போது இந்த அரசி
இராகுலனுக்காக
எங்கேயிருந்து அழுதாள்
என்று கேட்கிறாள்! பிறகு
பொருள் நிறைந்த
சொற்களைச் சொல்கிறாள்.

"உடற்கு அழுதனையோ?
உயிர்க்கு அழுதனையோ?
உடற்கு அழுதனையேல் உன்
மகன்தன்னை
எடுத்துப் புறங்காட்டு
இட்டனர் யாரே?
உயிர்க்கு அழுதனையேல்
உயிர் புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால்
தெரிந்து உணர்வரிய(து);
அவ்வுயிர்க்கு அன்பினை
ஆயின், ஆய்தொடி,
எவ்வுயிர்க்காயினும்
இரங்கல் வேண்டும்"

[சுருக்கமான பொருள்: (உன்
மகனுடைய) உடலுக்காக
அழுதாயோ? உயிருக்காக
அழுதாயோ? உடலுக்காக
அழுதாய் என்றால் ... உன்
மகனை எடுத்துப் போய்ப்
புறங்காட்டில் ("மயானம்")
வைத்தது யார்? உயிருக்காக
அழுதாய் என்றால் ... (போன)
உயிர் எந்த இடத்தில்
புகும் என்பதை அதன்
செய்கைகளினால்
தெரிந்துகொள்ள முடியாது.
அந்த உயிர்மேல் உனக்கு
அன்பு உண்டானால் எந்த
உயிர்மேலும் இரக்கம்
காட்டவேண்டும்.]

இப்படிச் சொல்லி, ஏன்
உதயகுமரனுக்குக்
கள்ளத்தனமாய்க் காஞ்சனன்
வஞ்சனை செய்தான் என்றும்
விளக்குகிறாள். (இதைத்
துவதிகன் சொல்ல மணிமேகலை
கேட்டிருந்தாள், இல்லையா.)

போன பிறவியில் சமையல்
செய்யக் காலம் தாழ்த்து
வந்த சமையல்காரன் தன்
பதட்டத்தினால் சமையல்
கலங்களைக் கீழே போட்டுத்
தானும் விழுந்தான்.
அதனால் இராகுலன் ஒரு
முனிவனுக்கு உணவு படைக்க
முடியவில்லை. சினம் கொண்ட
இராகுலன் அந்தச்
சமையல்காரனை வாளால்
வெட்டி வீழ்த்தினான்.
அந்தக் கொடிய வினைதான்
இந்தப் பிறவியில்
உதயகுமரனைக் காஞ்சனன்
வாளால் வெட்டி வீழ்த்தியது!

இதைச் சொல்லிவிட்டு, அரசி
தனக்குச் செய்த
கொடுமைகளிலிருந்து தான்
பிழைத்தது எப்படி
என்றும் விளக்குகிறாள்.
அதோடு, தான் ஏன் அந்தரம்
செல்லும் மந்திரம் ஓதித்
தப்பித்துப் போகவில்லை
என்பதையும்
தெரிவிக்கிறாள்.

"அந்தரம் சேறலும் அயல்
உருக் கோடலும்
சிந்தையில் கொண்டிலேன்
சென்ற பிறவியில்
காதலன் பயந்தோய்
கடுந்துயர் களைந்து
தீதுறு வெவ்வினை
தீர்ப்பது பொருட்டால்"

[சுருக்கமான பொருள்:
அந்தரத்தில் எழுந்து
போவதையும் இன்னொருவர்
வடிவம் கொள்வதையும் நான்
நினைக்கவில்லை. (ஏன்
என்றால்), போன பிறவியில்
இருந்த என் காதலனை
(இந்தப் பிறவியில்) பெற்ற
உன்னுடைய கொடுமையான
துயரத்தை நீக்கி,
தீமையைக் கொடுக்கும்
கொடிய வினைகளையும்
தீர்ப்பதற்காகவே.]

தொடர்ந்து வேறு சில உலக
நிகழ்ச்சிகளயயும்
எடுத்துச் சொல்லி, காமம்,
கொலை, கள், களவு, பொய் என்ற
இவை உலகத்தோருக்குத்
துன்பம் தருவன என்பதால்
இவைகளைத் துறக்கவேண்டும்
என்று அறிவுறுத்துகிறாள்.

"மன்பேர் உலகத்து
வாழ்வோர்க்கு இங்கு இவை
துன்பம் தருவன துறத்தல்
வேண்டும்;
கற்ற கல்வி அன்றால் காரிகை;
செற்றம் செறுத்தோர் முற்ற
உணர்ந்தோர்;
மல்லல் மா ஞாலத்து
வாழ்வோர் என்போர்
அல்லல் மாக்கட்கு இல்லது
நிரப்புநர்;
... ... செல்லுலகு அறிந்தோர்
வருந்தி வந்தோர் அரும்பசி
களைந்தோர்;
துன்பம் அறுக்கும்
துணிபொருள் உணர்ந்தோர்
மன்பதைக்கு எல்லாம் அன்பு
ஒழியார்"

[சுருக்கமான பொருள்: இந்த
மிகப் பெரிய உலகத்தில்
வாழுகின்ற மக்களுக்கு
இவையெல்லாம் துன்பம்
தருவன. அதனால் அவற்றைக்
கைவிடவேண்டும்.
(இல்லாவிட்டால்) ஒருவர்
கற்ற கல்விக்கு அழகு
இல்லாமல் போய்விடும்.
பகைமையைப் பகைத்தவர்களே
முழுவதும் உணர்ந்தவர்கள்.
அல்லல் படுகின்ற
மக்களுக்கு அவர்களுக்கு
இல்லாததைக் கொடுத்து
அந்தக் குறையை நிறைவு
செய்கிறவர்கள்தான்
வளப்பம் நிறைந்த இந்தப்
பெரிய உலகத்தில்
உண்மையாக வாழ்கிறவர்கள்.
வருந்தி வந்தவர்களுடைய
கொடிய பசியைப்
போக்குகிறவர்களே
இனிமேல் தாங்கள்
போகப்போகிற உலகத்தை
அறிந்தவர்கள். துன்பத்தை
அறவே நீக்கும் துணிவான
பொருளை உணர்ந்தவர்கள்
உலகத்தில் உள்ள எந்த
உயிருக்கும் அன்பு
காட்டுவதைக்
கைவிடமாட்டார்கள்.]

மணிமேகலை இப்படி ... "ஞான
நன்னீரை" நன்கு தெளித்து
அரசியின் செவிமுதல்
வார்க்கிறாள். வார்த்து,
மகன் இறந்த துயரம்
நெருப்பாக மனமே விறகாக
அரசியின் உள்ளத்தைச்
சுட்டுக்கொண்டிருக்கிற
வெம்மையான தீயை
அவித்துவிடுகிறாள்!

அரசியும்
தேற்றாங்கொட்டையினால்
தெளிந்த நீரைப் போலத்
தெளிவு பெறுகிறாள்.
பகைமையை நினைக்காத மனம்
கொண்டவளாய் ...
மணிமேகலையைத் தொழுகிறாள்!

மணிமேகலை
திடுக்கிடுகிறாள்! அரசி
அப்படித் தன்னைத் தொழுததை
அவளால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை!

"காதலற் பயந்தோய்;
அன்றியும் காவலன்
மாபெரும் தேவி! என்று
எதிர் வணங்கினள்"

[சுருக்கமான பொருள்: "என்
காலதலனைப் பெற்ற தாய்!
அதோடு, மன்னனின்
பட்டத்துக்குரிய தேவி!"
என்று சொல்லி எதிர்
வணக்கம் செய்தாள்.]


சித்திராபதி, மாதவி,
சுதமதி, அறவண அடிகள்
இவர்கள் அரசியைப் பார்க்க
வருதல்
------------------------------------------------------------------------
----------------------

உதயகுமரன் பற்றிச்
சித்திராபதி
கேள்விப்படுகிறாள். தன்
சூழ்ச்சியால்
மணிமேகலையின்பின்
போனவன் வாளால்
வெட்டுப்பட்டு இறந்தான்
என்று கேட்டு நெஞ்சு
நடுங்குகிறாள்; மெய்
வருந்துகிறாள்; மாதவி
மகளைச் சிறையிலிருந்து
மீட்க வேண்டி அரசியிடம்
வந்து அவள் கால்களில்
விழுகிறாள். இதற்குமுன்
யாரும் படாத துன்பம் தான்
பட்டதாகச் சொல்கிறாள்.
மாதவி மாதவர் பள்ளியுள்
புகுந்ததும் அரங்கத்தில்
ஆடவேண்டிய கூத்தி
மணிமேகலை பிச்சைப்
பாத்திரம் ஏந்தியதும்
நாடகக் கணிகையர்க்குத்
தகுதியில்லாத செயல்கள்
என்றும் அவை சிரிக்கத்
தகுந்தவை என்றும் சொல்லி
வருந்துகிறாள்.

உதயகுமரன் இறந்தது
மட்டுமில்லாமல் அந்த
ஊருக்கு இன்னொரு துயரமும்
வரக்
காத்துக்கொண்டிருக்கிறது
என்கிறாள். அதாவது ... அந்த
ஊரைக் கடல்கொண்டு போகும்
என்ற இந்திர சாபம் ஒன்று
உண்டு என்றும்
மணிமேகலைக்குத் துன்பம்
வந்தால் மணிமேகலா தெய்வம்
அந்தச் சாபம்
பலிக்குமாறு
செய்துவிடுவாள் என்றும்
தான் அஞ்சுவதாகச் சொல்லி,
மணிமேகலையைத் தன்னுடன்
தன் வீட்டுக்கு
அனுப்பிவிடுமாறு
கேட்கிறாள்.

அரசி அதற்கெல்லாம் செவி
சாய்க்கவில்லை.
சித்திராபதியின்
வாழ்க்கையைப் பழித்துச்
சொல்லி மணிமேகலை தன்னிடமே
இருப்பாள் என்று
சொல்லிவிடுகிறாள்.

இதற்குள் ... மாதவியும்
உதயகுமரனைப் பற்றிக்
கேள்விப்பட்டு, சுதமதி
அறவண அடிகள் இவர்களுடன்
அரசியிடம் வருகிறாள்.

அறவண அடிகளைக் கண்ட அரசி
அவருடைய பாதங்களை
வணங்குகிறாள். அவர்
இருப்பதற்கு ஏற்ற
இருக்கையை அமைத்து
அவருடைய பாதங்களைத்
தூய்மை செய்தபின் தன்
மகிழ்ச்சியைத்
தெரிவிக்கிறாள்.

"யாண்டு பல புக்க நும்
இணையடி வருந்த, என்
காண் தகு நல் வினை நும்மை
ஈங்கு அழைத்தது;
நாத் தொலைவு இல்லை;
ஆயினும் தளர்ந்து
மூத்தது இவ்-யாக்கை; வாழ்க,
பல்லாண்டு!"

[சுருக்கமான பொருள்: பல
ஆண்டுகள் ஆகி
முதிர்ந்துவிட்ட தங்கள்
இணையடிகள்
வருந்தும்படியாகத்
தங்களை இங்கு வர அழைத்தது
என்னுடைய நல்வினையே!
(தங்கள்) நாவிற்குத்
தளர்ச்சி இல்லை. ஆனாலும்,
இந்த உடல் முதுமையினால்
தளர்ந்து போனது. பல
ஆண்டுகள் வாழவேண்டும்.]

அறவண அடிகள்
மறுமொழியாகச் சொல்கிறார்.

"பிறந்தார் மூத்தார்
பிணிநோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே"

[சுருக்கமான பொருள்:
பிறப்பது, மூப்பது,
நோயால் பிணிக்கப்படுவது,
இறப்பது இவையெல்லாம்
இயல்பானவைதான்.]

தொடர்ந்து, அரசிக்கு 12 வகை
"நிதானங்கள்," நல்வினை,
தீவினை இவைகளுக்கு
விளக்கம் கொடுத்து,
அரசியோடு பிற பெண்களும்
நல்ல அறத்தைப்
போற்றவேண்டும் என
அறிவுரை சொல்கிறார்.

மறுபிறப்பு உணர்ந்த
மணிமேகலையிடம் அவள் பிற
(சமய) அறங்களையெல்லாம்
கேட்டு வந்த பிறகு
அவளுக்குத் தானே இவை
(நிதானங்கள் போன்ற)
எல்லாவற்றையும்
விளங்கச் சொல்லுவதாக
உறுதி கொடுக்கிறார்.


மணிமேகலையின் உறுதி
-----------------------------

அதன் பின் மணிமேகலை ஒரு
முடிவு செய்கிறாள்.

"தேவியும் ஆயமும்
சித்திராபதியும்
மாதவர் நன்மொழி மறவாது
உய்ம்மின்;
இந்நகர் மருங்கின் யான்
உறைவேன் ஆயின்
மன்னவன் மகற்கு இவள்
வரும் கூற்று என்குவர்;
ஆபுத்திரன் நாடு
அடைந்ததன் பின்னாள்
மாசு-இல் மணிபல்லவம்
தொழுது ஏத்தி
வஞ்சியுள் புக்கு
மாபத்தினி தனக்கு
எஞ்சா நல்லறம் யாங்கணும்
செய்குவல்;
எனக்கு இடர் உண்டு என்று
இரங்கல் வேண்டா,
மனக்கினியீர்"

[சுருக்கமான பொருள்:
அரசன் தேவியும்
ஆயத்தாரும்,
சித்திராபதியும் மாதவர்
(அறவண அடிகள்) சொன்ன நல்ல
மொழிகளை மறக்காமல்
அதன்படி நடந்து
கடைத்தேறுங்கள். இந்த
நகரத்தில் நான்
இருந்தால் ... "மன்னன்
மகனுக்கு வந்த கூற்று
இவள்" என்று சொல்வார்கள்.
நான் ஆபுத்திரன்
நாட்டுக்குப் போய் அதன்
பின்
மணிபல்லவத்துக்கும்
போய்த் தொழுதுவிட்டு,
வஞ்சிக்குப் போய்
மாபெரும் பத்தினிக்குக்
(கண்ணகிக்குக்)
குறையில்லாத நல்லறத்தை
எல்லா இடங்களிலும்
செய்வேன். என் மனத்துக்கு
இனியவர்களே, எனக்கு இடர்
உண்டாகுமோ என்று
கவலைப்படவேண்டாம்!]

எவ்வளவு பொறுப்போடு
பேசுகிறாள்! சில நாட்கள்
முன் மனம் நெகிழ்ந்த
குழந்தையா இவள்?

அதன் பின், அவர்கள்
எல்லாரையும்
வணங்கிவிட்டு, அந்தி
மாலையில் போய் உலக அறவி,
முதியாள் ("சம்பாபதி")
குடிகை, ஒளி நிறைந்த தூண்
(துவதிகன் இருக்கும்
தூண்) ... எல்லாவற்றையும்
வலம்வந்து ... வானமே
வழியாகப் பறந்து போகிறாள்.


மணிமேகலை ஆபுத்திரன் நாடு
அடைதல்
----------------------------------------------

வான் வழியே போன
மணிமேகலை ...இந்திரனின்
மருமானுடைய
("புண்ணியராசனுடைய")
நகரத்தின் வெளியே உள்ள
ஒரு சோலையின் உள்ளே
இறங்குகிறாள். அங்கே
வாழ்ந்துவருகிற
மாதவனுடைய இரண்டு
அடிகளையும் வணங்கி, "இந்த
நகரத்தின் பெயர் என்ன?
இந்த நகரத்தை ஆளுகிற
மன்னவன் யார்? " என்று
கேட்கிறாள்.

மாதவன் சொல்கிறான்.

"நாகபுரம் இது; நன்னகர்
ஆள்வோன்
பூமிசந்திரன் மகன்
புண்ணியராசன்
ஈங்கு இவன் பிறந்த
அந்நாள் தொட்டும்
ஓங்குயர் வானத்துப்
பெயல் பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம் பல
தரூஉம்
உள் நின்று உருக்கு(ம்)
நோய் உயிர்க்கு இல்"

[சுருக்கமான பொருள்: இது
நாகபுரம். இந்த நல்ல
நகரத்தை ஆள்கிறவன்
பூமிசந்திரனின் மகன்
புண்ணியராசன். இங்கே
இவன் பிறந்த நாள் முதல்
மழை பெய்வது தவறவில்லை.
மண்ணும், மரமும் பல
வளங்களைத்
தந்துகொண்டிருக்கின்றன.
உயிர்களை உருக்கித்
தொல்லைப்படுத்தும் நோய்
இல்லை.]

என்ன அருமையான செய்தி
கிடைக்கிறது மணிமேகலைக்கு!

அதே நேரத்தில், மன்னன்
புண்ணியராசன் தன்
குழாத்தோடு அதே சோலைக்கு
வருகிறான். தரும சாவகனின்
அடியிணைகளை வணங்குகிறான்.
மணிமேகலையைப்
பார்க்கிறான்!

இப்படித்தான் மணிமேகலை
மறுபிறவி எடுத்திருக்கிற
ஆபுத்திரனைப்
பார்க்கிறாள்!

(விவரங்கள் அடுத்த
பகுதியில்.)

+++++++++++++++++++++++++++++++++++++

தாய் தந்தையரின் துயரக்
கதையைக் கேட்டுக்
கண்ணீர் சிந்த, அந்தக்
கண்ணீரால் மலரின் தூய்மை
கெட்டது என்று தூய புது
மலர் பறித்து வருவதற்காக
மலர்வனம் போன மெல்லியல்
பெண்ணுக்கு எத்தகைய
மாற்றம் -- மிகச் சில
நாட்களில்!

இதை எழுதும்போது என்
நெஞ்சு பிசைகிறது; தொண்டை
அடைக்கிறது; கண்ணும்
கசிகிறது.ம்


இந்தக் காதைகளில்
அக்காலத்தில் இருந்த
பழக்க வழக்கங்கள் பலவும்
தெரியவருகின்றன.
எடுத்துக் காட்டாக,
இதற்கென்றே இருக்கும்
ஒருமூதாட்டி அரசியிடம்
வந்து "மன்னன் முன்னால்
உன் துயரத்தைக் காட்டாதே"
என்று அறிவுரை சொல்வது,
ஒருவரை ஒருவர்
பார்க்கும்போது எப்படி
அழைப்பது, எப்படி
வாழ்த்துவது -- இந்த
மாதிரிச் செய்திகள்.

தாய்ப்பாசத்தால்
மணிமேகலைக்குக் கொடுமை
செய்த சோழ அரசி அவள் சொன்ன
அறிவவுரை கேட்டு உடனே
திருந்துகிறாள்.
மணிமேகலயின் காலில்
விழவும் தயங்கவில்லை!
அரசியின் சமயச் சார்பு
பற்றிக் காப்பிய
ஆசிரியர்
வெளிப்படையாகச்
சொல்லவில்லை. ஆனாலும் ...
அவள் புத்தவழி நின்ற,
வயது முதிர்ந்த அறவண
அடிகளை அன்போடு மென்மையாக
நலம் உசாவும் முறையும்,
அவர் பாதங்களைத் தூய்மை
செய்து தன் இரு கைகளால்
வணங்கித் தொழுவதும்
அவளுடைய மிக உயர்வான
பண்பட்ட மனப்பாங்கைக்
காட்டுகிறது.

Highly sophisticated!

இப்படிப் பல.

பிற பின்னர்.

அன்புடன்,
ராஜம்



















karuannam annam

unread,
Jan 8, 2011, 4:26:17 AM1/8/11
to mint...@googlegroups.com


2011/1/8 rajam <ra...@earthlink.net>







 மாதவனின் பீடிகை மூலம் தன் பிறப்பையும் அவன் பிறப்பையும் உணர்ந்துகொண்டதைச் சொல்கிறாள். தான் காயசண்டிகை வடிவு எடுத்தது ஏன் என்றும் சொல்கிறாள்.  வெட்டுண்டு கிடக்கும் அவனைக் "காதல" என்று அழைத்துப் புலம்புகிறாள்.

"பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும்
யான் நினக்கு உரைத்து நின் இடர்வினை ஒழிக்க-க்
காயசண்டிகை வடிவானேன், காதல!"
 
முற்பிறப்பு தெரிந்துவிட்டால் எவ்வளவு சிக்கல்! தெரியாமல் இருப்பது இனிது. ஆனால் பல சாமியார்களுக்கும் பூசாரிகளுக்குமிந்த முற்பிறப்பு,  அடுத்த பிறவி தானே பொருள் செய்யும் வழியாக அமைகிறது. 



"கச்சி முற்றத்து நின் உயிர் கடை கொள
உத்தர மகதத்து உறு பிறப்பெல்லாம்
ஆண் பிறப்பு ஆகி அருள் அறம் ஒழியாய்
பெண்ணின் உய்வுக்கு முதல் நோக்கம் அடுத்தபிறவியல் ஆணாகப் பிறக்க ஆவன செய்ய வேண்டும் என்பது இன்றைய நோக்கில் நெருடலானது. வள்ளுவப் பெரியோன் இதனை எல்லாம் தவிர்த்து விட்டார்.
அன்புடனும் நன்றியுடனும்
சொ.வினைதீர்த்தான். 
 

Vinodh Rajan

unread,
Jan 8, 2011, 4:52:10 AM1/8/11
to rajam, மின்தமிழ், Narayanan Kannan, Subashini Tremmel, Nagarajan Vadivel
ராஜம்.. மிக்க நன்றி :)

கதை மிகவும் விறு விறுப்பாக செல்கிறது.

சில சந்தேகங்கள்.

சம்பாபதி, என்பது என்ன தெய்வம் ? அதைப்பற்றி ஏதேனும் குறிப்புகள் உள்ளதா ?

மணிமேகலா தெய்வத்தைப்போல அக்கால மக்கள் வணங்கிய தேவதைகளில் ஒன்றா ?

கந்திற்பாவையும் அதைப்போன்றே சிறு தெய்வங்களில் ஒன்றா ?

//தொடர்ந்து, அரசிக்கு 12 வகை "நிதானங்கள்," நல்வினை, தீவினை இவைகளுக்கு விளக்கம் கொடுத்து, அரசியோடு பிற பெண்களும் நல்ல அறத்தைப் போற்றவேண்டும் என அறிவுரை சொல்கிறார்.//

ராஜம்.. மணிமேகலையின் இந்த பகுதியை தயவு செய்து இதை விரிவாக எழுத முடியுமா ?

துவாதச நிதானங்கள் புத்த மதத்தின் முக்கியமான கோட்பாடுகளில் ஒன்று.

இவற்றிண்டையும் உள்ள சார்பு, சார்பின் தோற்றம் என்று அழைப்பெறும் ”பிரதீத்ய சமுத்பாதம்”.

இந்த பன்னிரு நிதானங்கள் ஒன்று தோன்ற தொடர்ச்சியான அனைத்தும் தொன்றும். ஒன்று அழிய அனைத்தும் அழியும். இப்படி இந்த நிதானங்கள் தொடர்பை அற்று விட்டால், நிர்வாண மோக்ஷத்தை அடையாலம்.

ஒன்றைச்சார்ந்து மற்றொன்று உள்ளது, எதற்கும் தன்னிச்சையான இருப்பு கிடையாது.

இதுவே புத்த மதத்தின் சாரம்.  

//உதயகுமரன் தன் ஊழ்வினையால் இறந்தான் என்றும், அப்படியே ஆனாலும் காஞ்சனன் ஆராயாமல் உதயகுமரனைக் கொன்றதால் காஞ்சனனையும் வினையின் பயன் தொடரும் என்றும் சொல்கிறது//

இதை புத்த கரும கொள்கையின் படி விவரிக்கலாம்.

ஹேது - பிரத்யயம் என்ற கோட்பாடு ஒன்று உள்ளது.

ஹேது - காரணம் ; பிரத்யயம் - சூழல்.

கர்மவினை அதன் பலனைத் தர, ஹேது-பிரத்யயம் இரண்டும் சேரும் போது தான்.. கர்ம விபாகம் நிகழும்.

ஒரு விதை, முளைக்க நீர், காற்று முதலிய சூழ்நிலை வேண்டுமல்லவா ? இல்லையேல் விதை முளைக்காது.

அது போல, நாம் செய்த வினை பயனைத்தர அதற்கான சூழல் வேண்டும். அதற்கான சூழல் அமையும் போது, கர்ம விபாகம் நிகழ்கிறது.

உதயகுமாரனின் முன்வினைப்பயன் = ஹேது
அவன் காஞ்சனனை சந்திதது = பிரத்யயம்.

இவ்வாறு ஹேதுவும் அதற்கான பிரத்யமும் ஒன்று சேர, அவன் முன்வினைப்பயன் பலன் தந்தது .

~~~~~~

சாவகன் 

//தரும சாவகனின்//

//  தலைச்சாவகன் //

புத்தருடைய சீடர்களை ஶ்ராவகர்கள் (சிராவகரர்கள்) என்றும் சமஸ்கிருதத்தில் அழைப்பர்.

பாளியில், இது “ஸாவகர்” (ஸா < ஶ்ரா) என்று ஆகும். 

பொதுவாக, இது புத்த தர்மத்தை கேட்டு பிக்ஷு ஆனவர்களையும் குறிக்க பயன்படலாம்.

(கிருஹஸ்தராக இருந்து தர்மத்தை பின்பற்றுபவர்கள் உபாசகர்கள்)

தலைச்சாவகன் = புத்தருடைய தலைமை சீடர்களில் ஒருவர்.

தர்ம சாகவன் = புத்த பகவான்.

இது இவ்வாறிருக்க.

சாவகம் என்பது ஜாவகம் என்பது தத்பவ வடிவம் என்று எண்ணுகிறேன்.

V


karuannam annam

unread,
Jan 8, 2011, 4:58:08 AM1/8/11
to mint...@googlegroups.com

போன பிறவியில் இராகுலன் இறந்தபோது தான் தீயில் புகுந்ததைச் சொல்லி, அப்போது இந்த அரசி இராகுலனுக்காக எங்கேயிருந்து அழுதாள் என்று கேட்கிறாள்! பிறகு பொருள் நிறைந்த சொற்களைச் சொல்கிறாள்.

"உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ?
உடற்கு அழுதனையேல் உன் மகன்தன்னை
எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே?
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வரிய(து);
அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின், ஆய்தொடி,
எவ்வுயிர்க்காயினும் இரங்கல் வேண்டும்"

 அந்த உயிர்மேல் உனக்கு அன்பு உண்டானால் எந்த உயிர்மேலும் இரக்கம் காட்டவேண்டும்.

மிக அருமையான கருத்து. 

"மன்பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை
துன்பம் தருவன துறத்தல் வேண்டும்;
கற்ற கல்வி அன்றால் காரிகை;
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்;
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர்
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர்;
... ... செல்லுலகு அறிந்தோர்
வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர்;
துன்பம் அறுக்கும் துணிபொருள் உணர்ந்தோர்
மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார்"
வாழ்தல் என்றால் என்ன என்பதற்கு அருமையான விளக்கம். 

அல்லல் படுகின்ற மக்களுக்கு அவர்களுக்கு இல்லாததைக் கொடுத்து அந்தக் குறையை நிறைவு செய்கிறவர்கள்தான் வளப்பம் நிறைந்த இந்தப் பெரிய உலகத்தில் உண்மையாக வாழ்கிறவர்கள். துணிவான பொருளை உணர்ந்தவர்கள் உலகத்தில் உள்ள எந்த உயிருக்கும் அன்பு காட்டுவதைக் கைவிடமாட்டார்கள்.]
 

 
"யாண்டு பல புக்க நும் இணையடி வருந்த, என்
காண் தகு நல் வினை நும்மை ஈங்கு அழைத்தது;
நாத் தொலைவு இல்லை; ஆயினும் தளர்ந்து
மூத்தது இவ்-யாக்கை; வாழ்க, பல்லாண்டு!"

வாழ்த்துவதற்கு வயது வேண்டும் என்பதில்லை என்பதற்கு ஒரு சான்று. 

 "பிறந்தார் மூத்தார் பிணிநோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே"

 இவையெல்லாம் இயல்பானவைதான்.]


மறுபிறப்பு உணர்ந்த மணிமேகலையிடம் அவள் பிற (சமய) அறங்களையெல்லாம் கேட்டு வந்த பிறகு அவளுக்குத் தானே இவை (நிதானங்கள் போன்ற) எல்லாவற்றையும் விளங்கச் சொல்லுவதாக உறுதி கொடுக்கிறார்.
நிதானங்கள் எவை என்பது பிற்பாடு சொல்லப்படுகிறத அம்மா? 


 தாய் தந்தையரின் துயரக் கதையைக் கேட்டுக் கண்ணீர் சிந்த, அந்தக் கண்ணீரால் மலரின் தூய்மை கெட்டது என்று தூய புது மலர் பறித்து வருவதற்காக மலர்வனம் போன மெல்லியல் பெண்ணுக்கு எத்தகைய மாற்றம் -- மிகச் சில நாட்களில்!

இதை எழுதும்போது என் நெஞ்சு பிசைகிறது; தொண்டை அடைக்கிறது; கண்ணும் கசிகிறது

பெண்ணுக்குள் உள்ள பேராற்றல் சூழ்நிலைகளால் வெளிப்படுத்தலை மண்மகள் அறியா வண்ணச் சீறடி கண்ணகி முன்பே காட்டிவிடுகிறாள்.
நன்றி.

Geetha Sambasivam

unread,
Jan 8, 2011, 8:36:23 AM1/8/11
to mint...@googlegroups.com
அருமையான பாடம். நன்றி அம்மா.

2011/1/8 rajam <ra...@earthlink.net>


மணிமேகலை: உதயகுமரன் வெட்டுண்ட பின்
-------------------------------------------------------

போன பகுதியில் ... உதயகுமரன் நள்ளிரவில் மணிமேகலையைத் தேடி ஊர் அம்பலத்துக்கு வந்ததையும், காயசண்டிகையைத் தேடிவந்த காஞ்சனன் தவறாக உதயகுமரனை வாளால் வெட்டிக் கொன்றதையும் பார்த்தோம். இந்தப் பகுதியில் அதற்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.


இப்படிப் பல.

பிற பின்னர்.

அன்புடன்,
ராஜம்



















--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Raja sankar

unread,
Jan 8, 2011, 9:21:02 AM1/8/11
to mint...@googlegroups.com
வினோத்,

//கர்மவினை அதன் பலனைத் தர, ஹேது-பிரத்யயம் இரண்டும் சேரும் போது தான்.. கர்ம விபாகம் நிகழும்.

ஒரு விதை, முளைக்க நீர், காற்று முதலிய சூழ்நிலை வேண்டுமல்லவா ? இல்லையேல் விதை முளைக்காது.

அது போல, நாம் செய்த வினை பயனைத்தர அதற்கான சூழல் வேண்டும். அதற்கான சூழல் அமையும் போது, கர்ம விபாகம் நிகழ்கிறது.
//

அப்படியானால் கர்மவினை தானாகவே நடக்காதா? பிரத்யயம் இல்லாவிட்டால் என்ன நடக்கும்? பிரத்யயம் இல்லாமல் பார்த்துக்கொண்டால் வினை என்னவாகும்?

//ராஜம்.. மணிமேகலையின் இந்த பகுதியை தயவு செய்து இதை விரிவாக எழுத முடியுமா ?
//
அன்பின் ராஜம்,

என்னுடைய வேண்டுகோளாகவும் எடுத்துக்கொள்ளவும். 




ராஜசங்கர்



2011/1/8 Vinodh Rajan <vinodh...@gmail.com>

?????? ?????

unread,
Jan 8, 2011, 9:35:28 AM1/8/11
to mint...@googlegroups.com
Nope. Karma cannot give its Phala on its own. Everything is interdependent.

You cannot stop Pratyaya :-)

A Karma Bija can wait for the correct Pratyaya over innumerable amount of lifetimes to give its Vipaka.

V


Raja sankar

unread,
Jan 8, 2011, 9:38:56 AM1/8/11
to mint...@googlegroups.com

அப்படி என்றால் மோட்சத்தின் போது என்ன நடக்கிறது? கர்மவினையின் பலனை பூரணமாக அனுபவித்தவுடன் தான் மோட்சமா? 

//A Karma Bija can wait for the correct Pratyaya//

பிரத்யயம் காத்திருக்கும் என்றால் என்ன அர்த்தம் என்று தான் புரியவில்லை :-)))

ராஜசங்கர்



2011/1/8 ?????? ????? <vinodh...@gmail.com>

?????? ?????

unread,
Jan 8, 2011, 9:46:54 AM1/8/11
to mint...@googlegroups.com
இருவினையை கடந்தவர்களுக்கே மோக்ஷம் :-)

அங்கூலிமாலா அப்படித்தான் நிர்வாண நிலை அடைந்தான்.

V

Raja sankar

unread,
Jan 8, 2011, 9:55:25 AM1/8/11
to mint...@googlegroups.com
வினோத்,

அதைக்கேட்கவில்லை. எப்படி கடப்பது என சொல்கிறது என்று தான் கேட்கிறேன். கர்ம ஒழிப்பு பற்றிய பவுத்த கருத்தை சொல்ல முடியுமா?

ராஜசங்கர்



2011/1/8 ?????? ????? <vinodh...@gmail.com>
இருவினையை கடந்தவர்களுக்கே மோக்ஷம் :-)

அங்கூலிமாலா அப்படித்தான் நிர்வாண நிலை அடைந்தான்.

V

--

?????? ?????

unread,
Jan 8, 2011, 10:15:55 AM1/8/11
to mint...@googlegroups.com
விபாகம் நிகழாத கர்ம பீஜங்களை அறுக்க இயலும். துவாதச நிதானங்களின் தொடர்பை அறுத்தால், சம்சார தொடர்பு அற்று விடுகிறது. சம்சார தொடர்பு அற்ற நிலையில், கர்மமும் அற்றுவிடுகிறது.

V



Raja sankar

unread,
Jan 8, 2011, 10:19:10 AM1/8/11
to mint...@googlegroups.com
விபாகம் நிகழ்ந்த பின் தான் கர்மங்களை அகற்ற இயலும் அது எல்லா நிதானங்களின் தொடர்பை அழித்தாலும் சரி இல்லையென்றாலும் சரி. அப்படித்தானே? 

ததாகதரே இதைப்பற்றி பேசியிருக்கிறாரா? இல்லை இது பின்பு வந்த கருதுகோளா?

ராஜசங்கர்



2011/1/8 ?????? ????? <vinodh...@gmail.com>
விபாகம் நிகழாத கர்ம பீஜங்களை அறுக்க இயலும். துவாதச நிதானங்களின் தொடர்பை அறுத்தால், சம்சார தொடர்பு அற்று விடுகிறது. சம்சார தொடர்பு அற்ற நிலையில், கர்மமும் அற்றுவிடுகிறது.

V



?????? ?????

unread,
Jan 8, 2011, 10:32:32 AM1/8/11
to mint...@googlegroups.com
//விபாகம் நிகழ்ந்த பின் தான் கர்மங்களை அகற்ற இயலும் அது எல்லா நிதானங்களின் தொடர்பை அழித்தாலும் சரி இல்லையென்றாலும் சரி. அப்படித்தானே?//

இல்லையே.

நான் கூறியதை படியுங்கள்.

//விபாகம் நிகழாத கர்ம பீஜங்களை அறுக்க இயலும்.//

விபாகம் நிகழாததால் தான் அது கர்ம “பீஜம்” (விதை)

ஒருவர் அருக நிலையை எய்திய கனமே, பீஜ கர்மங்கள் அழிந்து விடுகின்றன. அவருக்கு வேறு பிறவியே கிடையாது. 

விபாக கர்மம் தன் பலனை உடனே தந்துவிடுகிறது. 

ஆக, நிர்வாணம் அடையும் போது கர்மங்கள் முற்றிலும் அழிந்துவிடுகின்றன. 

திரிபிடகத்தின் ரத்தின சூத்திரில் இது காணபப்டுகிறது.

V




devoo

unread,
Jan 8, 2011, 10:36:10 AM1/8/11
to மின்தமிழ்

எல்லாம் அழகான தர்க்க ரீதியில் அமைந்த விளக்கம்;
அனைத்துக்கும் களம் அமைத்துத்தரும் ஈசுவர தத்துவத்துக்கு மட்டும்
பகுத்தறிவு ஏனோ இடம் தருவதில்லை


தேவ்

?????? ?????

unread,
Jan 8, 2011, 10:41:36 AM1/8/11
to mint...@googlegroups.com
Ratana Sutta ( < Ratna Sutra)

[...]

"Their past (kamma) is spent, their new (kamma) no more arises, their mind to future becoming is unattached. Their germ (of rebirth-consciousness) has died, they have no more desire for re-living. Those wise men fade out (of existence) as the flame of this lamp (which has just faded away). 

[...]

Raja sankar

unread,
Jan 8, 2011, 10:56:50 AM1/8/11
to mint...@googlegroups.com
வினோத்,

பன்னிரெண்டு நிதானங்களை பின்பற்றினால் நிர்வாணம் அப்போது எல்லாம் அழிந்து மறுபிறவி இல்லாத நிலையை அடைகிறார். 

பீஜம் இருக்கும் வரை நிர்வாணம் கிடையாது சரியா? அப்போது விபாகம் நிகழுமா இல்லையா என்பதும் தெரியாது அப்படித்தானே? 

பதஞ்சலி, சமாதியை, பீஜ சமாதி, நிர்பீஜ சமாதி என பிரிக்கிறார். பீஜ த்தில் வகையும் உண்டு. அதனால் கேட்கிறேன். யோக சூத்திரங்களில் இருப்பதற்கு விளக்கவுரையாக அது இருக்கலாம் அல்லவா? 

ராஜசங்கர்



2011/1/8 ?????? ????? <vinodh...@gmail.com>
//விபாகம் நிகழ்ந்த பின் தான் கர்மங்களை அகற்ற இயலும் அது எல்லா நிதானங்களின் தொடர்பை அழித்தாலும் சரி இல்லையென்றாலும் சரி. அப்படித்தானே?//

V




Raja sankar

unread,
Jan 8, 2011, 11:01:19 AM1/8/11
to mint...@googlegroups.com
கூடவே இன்னொன்றும்,

ஒரு பிறவியில் அடைந்த நிலைகள் அடுத்த பிறவிக்கு வருமா? ஒருவர் பத்து நிதானங்களை அடைந்து பின் அடுத்த பிறவி எடுத்தால் அதில் மீண்டும் ஒன்றில் இருந்து ஆரம்பிக்கவேண்டுமா? 

கீதையில் அப்படி இல்லை. மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டியதில்லை என்று சொல்கிறது. 

ராஜசங்கர்



2011/1/8 Raja sankar <errajasa...@gmail.com>

?????? ?????

unread,
Jan 8, 2011, 11:05:17 AM1/8/11
to mint...@googlegroups.com
பதஞ்சலியின் காலக்கட்டம் என்னவோ ?

பல்வேறு தர்க்கநிலைகளை கூறும் திரிபிடகத்தில் (வைதீகம், ஜைனம், ஆஜீவகம், லோகாயதம் இன்னும் சில) யோகமார்கத்தை ஒரு தனி மார்கமாக(தர்சனம்) கூறி இருப்பதாக (நான் அறிந்தவரையில்) தெரியவில்லை.

யோக முறைகள் அனைத்தும் தர்சனங்களின் அங்கமாக இருந்திருக்கின்றன.

பின்னர் பல்வேறு தர்சனங்களில் உள்ளவற்றை தொகுத்து விரித்து சேர்ர்து, ஒரு தனி மார்கமாக செய்து இருக்கலாம்..

V


?????? ?????

unread,
Jan 8, 2011, 11:10:27 AM1/8/11
to mint...@googlegroups.com
//ஒரு பிறவியில் அடைந்த நிலைகள் அடுத்த பிறவிக்கு வருமா? ஒருவர் பத்து நிதானங்களை அடைந்து பின் அடுத்த பிறவி எடுத்தால் அதில் மீண்டும் ஒன்றில் இருந்து ஆரம்பிக்கவேண்டுமா?//

நிதானங்கள் அடைய வேண்டிய நிலை இல்லை.

அவை நிகழ்ச்சிக்கான காரணங்கள். நிகழ்வு எவ்வாறு தோன்றுகின்றது என்பதற்கான முறை. 

ஒன்றை அறுக்க மற்றவையும் உடனே அறுகின்றன. அது தான் “பிரதீத்ய சமுத்பாதம்”.

ராஜம், அந்த பகுதியை விரித்து எழுதும் போது இன்னும் புரியும்.

V

Raja sankar

unread,
Jan 8, 2011, 11:12:13 AM1/8/11
to mint...@googlegroups.com

அப்படி பார்த்தால் நியாய,வைசேடிக தர்சனத்தையும் ஒரு பிரிவாக எடுக்க முடியாது தான். :-)) சாங்கிய-யோகம், ஸஈஸ்வர-நீரீஸ்வர யோகம் என அதிலேயும் நிறைய உண்டு. 

பதஞ்சலி சொல்வதற்கும் புத்தர் சொல்வதற்கு ஒரே வேறுபாடு கடவுள் எனும் கருதுகோள். ஆதியில் எல்லாம் எப்படி வந்தது என்பதில் தான் சிக்கல். உலகோற்பத்தி பற்றி பவுத்த கருதுகோள் பார்த்தால் சொல்வது புரியும். 

ராஜசங்கர்



2011/1/8 ?????? ????? <vinodh...@gmail.com>
பதஞ்சலியின் காலக்கட்டம் என்னவோ ?

V


?????? ?????

unread,
Jan 8, 2011, 11:14:40 AM1/8/11
to mint...@googlegroups.com
//அமைத்துத்தரும் ஈசுவர தத்துவத்துக்கு மட்டும்//

ஏன் ஈஸ்வரன் இல்லை.. இருக்கிறாரே !!!

வஸ²வர்தீ ஸர்வத⁴ர்மேஷு தேந த⁴ர்மேஸ்²வரோ ஜிந: :-)

V


?????? ?????

unread,
Jan 8, 2011, 11:20:07 AM1/8/11
to mint...@googlegroups.com
கர்ம வினைகளை அறுத்தால் தான் பிறவியில்லை என்று எல்லா இந்திய தர்ஶனங்களும் தான் கூறுகின்றன.

அது எவ்வாறு என்பதில் தான் வேறுபாடு :-)

V

devoo

unread,
Jan 8, 2011, 11:39:35 AM1/8/11
to மின்தமிழ்
>> வஸ²வர்தீ ஸர்வத⁴ர்மேஷு தேந த⁴ர்மேஸ்²வரோ ஜிந:<<

Discussion is not about dharmEshwara.
Who is lOkEshwara ?

Buddha's view on GOD -

When Ananthapindika, a wealthy young man met the Buddha at the bamboo
groove at Rajagriha, the Buddha spoke to him clearly about his views
on the existence of God and the real cause behind the creation of
beings in this world. These views of the Buddha are summarized in the
following manner:

1. If God is the maker of all living things, then they all should have
to submit to His power silently. They have to be like the vessels
produced by the potter, without any individuality of their own. If
that is so, how can they all practice virtue?

2. If this world is indeed created by God, then there should be no
such thing as sorrow or calamity or evil, for all the pure and impure
deeds must come from Him.

3. If that is not the case then there must be some other cause besides
God which is behind Him, in which case He would not be self-existent.

4. It is not convincing that the Absolute has created us, because that
which is absolute cannot be a cause. All things here arise from
different causes. Then can we say that the Absolute is the cause of
all things alike? If the Absolute is pervading them, then certainly It
is not their creator.


dev

rajam

unread,
Jan 8, 2011, 1:10:48 PM1/8/11
to mint...@googlegroups.com
"மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பகுதி 7" -- க்குப் பின்னூட்டம் தந்த எல்லாருக்கும் மிகவும் நன்றி!
நல்ல கேள்விகள் கிளம்பியிருக்கின்றன, மிகவும் நல்லது! காப்பியத்தில் ஆசிரியர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை மட்டும் என் சிற்றறிவுக்கு எட்டியவரை சொல்லப் பார்க்கிறேன்.
1. சம்பாபதி யார்? கந்திற்பாவை யார்? வேறு என்ன சிறு தெய்வங்களை வழிபட்டார்கள், அல்லது வழிபடவில்லை?
2. 12 வகை "நிதானங்கள்" யாவை?
3. வினகள் பற்றி.
கூடிய விரைவில் இந்தக் கேள்விகளுக்குக் காப்பியத்திலிருக்கும் கருத்துக்களை எடுத்துச் சொல்கிறேன்.
மணிமேகலையில் காணும் "வினை பற்றிய கருத்துக்கள்" என்பது பற்றியே நிறைய எழுதலாம். பழவினை, ஊழ்வினை, நல் வினை, தீ வினை -- இப்படிப் பல நிலையில் பல செய்திகள் பரவலாகக் கிடைக்கின்றன. நூல் கோத்தாற்போல் அடிப்படைக் கருத்தும் இழையோடுவதுபோல் தெரிகிறது.
நேரம் கிடைக்கும்போது உங்களுடன் அந்தச் செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.
மீண்டும் ... உங்கள் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி!
அன்புடன்,
ராஜம்


N. Kannan

unread,
Jan 8, 2011, 6:48:12 PM1/8/11
to mint...@googlegroups.com
மணிமேகலை கதையின் அதிர்ச்சி என்னவெனில் அவள் இன்னும் பற்பல பிறவிகள்
(அனைத்திலும் ஆண் என்பதைக் கவனிக்க!!) எடுத்து பின்னரே கரை ஏறுவதாகச்

சொல்கிறது.

அப்படியெனில், அவளின் சிறப்புத்தான் என்ன? சித்திரம் பேசுகிறது! மணிமேகலா
தெய்வம் வரங்கள் தருகின்றது! தூணில் மறந்திருக்கும் தெய்வம் எதிர்காலம்
சொல்கிறது...இப்படி ஒன்று மாற்றி ஒன்று என்று எல்லாம் அவளுக்கு உதவுவதின்
காரணம் என்ன? அவள் தெய்வப்பிறவி என்று நினைத்தேன். இவ்வளவிற்குப் பிறகும்
அவள் பலப்பல ஜென்மங்கள் எடுத்தே கரை ஏற வேண்டுமெனில்
அலுப்புத்தட்டுகிறது.

எங்கள் ஆழ்வார்கள் பாடமே எனக்கு எளிதாகப் படுகிறது. என்னதான் பெரிய
குற்றம் (வினை) செய்திருப்பினும், கோர்ட்டு மரண தண்டனை அளித்தாலும்
குடியரசுத்தலைவர் கருணை விடுதலை அளிப்பதில்லையா? அதுபோல், ஈஸ்வரன் நமக்கு
விடுதலை அளிக்கிறான் (பிறவிச் சுழற்சியிலிருந்து) என்பதே எண்ணச் சுகமாக
உள்ளது.

க.>

2011/1/9 Raja sankar <errajasa...@gmail.com>:

rajam

unread,
Jan 8, 2011, 7:51:15 PM1/8/11
to mint...@googlegroups.com
விவரம் தெரிந்தவர்கள்
கண்ணனுக்கு மறுமொழி
சொல்லட்டும். இடையில் ஒரே
ஒரு சிறு கருத்து
மட்டும் சொல்லி
இப்போதைக்கு
விலகிக்கொள்கிறேன்.

மணிமேகலையையோ, வேறு
யாரையுமோ, "தெய்வப் பிறவி"
என்று ஒரு "பட்டம்
சூட்டிச்சொல்வது" தவறு
என்று எனக்குப் படுகிறது.
"தெய்வப் பிறவிக்கு" என்ன
definition?

மணிமேகலைக் காப்பிய
ஆசிரியர் மணிமேகலையை ஒரு
"தெய்வப் பிறவி" என்று
சொல்லவேயில்லை! நாமாக
ஏதாவது ஒரு
எதிர்பார்ப்பை
வைத்துக்கொண்டால் ...
ஏமாறுவது நாமே!


பலவேறு காலங்களில் ... பல
வேறு "சமயங்கள்" ... வெவ்வேறு
வகைகளில் ... உலக
வாழ்க்கையின்
சிக்கல்களுக்கு விடை காண
முயன்றதாகத்தான் இந்தக்
கோட்பாடுகளை நான்
புரிந்துகொள்கிறேன்.
மற்றபடி ... எது அரிது, எது
எளிது என்பதெல்லால்
அவரவர் பிறந்து வளர்ந்து
வாழும் காலச் சூழலைப்
பொருத்து
உருவாக்கிக்கொள்ளும்
நம்பிக்கைகளைப்
பொருத்தது என்று
எனக்குப்படுகிறது.

அன்புடன்,
ராஜம்


> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

N. Kannan

unread,
Jan 8, 2011, 8:23:00 PM1/8/11
to mint...@googlegroups.com
மணிமேகலை காப்பியம் பல்வேறு கேள்விகளை என்னுள் எழுப்புகிறது.

மணிமேகலை ஒரு நாட்டிய மாதுவின் பெண். அவள் தாய் கற்புடன் ஒருவனையே
நினைந்திருந்தாலும், அவளது பாட்டி மணிமேகலையை பொது மகளாக்கவே
விரும்புகிறாள். எனவே அவளுக்கு பெரிய சிறப்பென்று ஏதும் கிடையாது.

சரி, போன பிறவியைப் பார்த்தாலும், மூன்று தாரங்களில் ஒன்று. தற்கொலை
செய்து கொண்டு இறக்கின்ற பிறவி.

இப்படிப்பட்ட ஜீவனுக்கு ஆபுத்திரனின் அக்ஷய பாத்திரம் வருவானேன்?
மணிமேகலா தெய்வம் மந்திர சக்திகள் தருவதேன்? கடைசிவரை
எல்லாத்தெய்வங்களும் வருந்தி, வருந்தி உதவுவதேன்? அதற்கான விடை கதையில்
இல்லை. சினிமாப்படங்களில் கதாநாயகனும், நாயகியும் எல்லாச் சூழலிலும்
தப்பிவிடுவர். ஏனெனில் கதை நகர்வதற்கு அவர்கள் வேண்டும். இது அவ்வாறான
வெறும் காப்பிய உத்தி மட்டும்தானா? இல்லையே! பௌத்த காவியமாச்சே! பௌத்த
தத்துவங்களுக்கு ஒளி விளக்கு போல் இருக்க வேண்டிய காப்பியமாச்சே!!

அவளுக்கு எந்தப் பூர்வஜென்மப் புண்ணியமும் கிடையாது, தெய்வங்கள் சும்மா
உதவுகின்றன என்பதை பௌத்தம் எப்படி விளக்க முற்படுகிறது?

மகாபாரதம் அப்படி இல்லை. இதே பூர்வஜென்ம வினைகள்தான் காரியத்தை அங்கும்
நடத்துகின்றன. ஆயினும் அங்கொரு சூத்திரதாரி இருக்கிறான். விதியை
மாற்றுகிறான். அவன் கிருபைக்கு ஆளோனேருக்கு எப்படி பாடுபட்டும்
உதவுகிறான். உம்.

1. பஞ்சவர்க்கு பாதம் புண்பட நடந்ததைச் சிலப்பு மிக அழகாக வருணிக்கிறது.
2. விதிகளின் படி பாண்டவ. கவுரவர்கள் பூண்டோடு அழிய வேண்டியது. ஆனால்
பாஞ்சலி செய்த சரணாகதி இவர்களைக் காக்கிறது. ஏன் பாண்டவர்கள் அழிபடவில்லை
எனும் கேள்வி வரும் போது பூர்வாச்சாரியர்கள் மிக நுணுக்கமான ஒரு பதிலைச்
சொல்கின்றனர், “பாஞ்சாலியின் விரிந்த கூந்தலைக் காணச்சகிக்காதவன், அவள்
வெற்று நெற்றியை எப்படிச் சகிப்பான்!” என்பது.
3. பாரத யுத்தத்தின் களப்பலியாக உயிர் கொடுக்கும் அரவான், இறுதிவரை என்ன
கண்டான் போர்க்களத்தில் (அவன் தலை வெட்டப்பட்டு நிற்கிறது)? என்று
கேள்விக்கு, இவர் போர் செய்தார், இவர் பராக்கிரமம் இப்படி என்றெல்லாம்
பதில் வரும் என்று எதிர்பார்த்தால், அவன் சொல்கிறான், நான் பார்த்தது
கிருஷ்ணனின் சுதர்சனம் ஒன்றையே. அதுவே எல்லோரையும் அழித்தது!` என்று.

இதுதான் இந்திய மரபு. ஆனால் மணிமேகலை காப்பியத்தில் வினைப்பயன்,
முற்பிறவி எல்லாம் வருகிறது. மணிமேகலை சிறப்புப் பெறுவதற்கான காரணம் என்ன
என்பது சொல்லப்படவில்லை (உங்கள் கதை கேட்டதன் படி). இதுவே இந்து மரபாக
இருந்தால், இறைவனின் நிர்ஹேதுவான கிருபை என்று சொல்லிவிடுவார்கள்.
அப்பதிலும் இங்கு இல்லை!

எனவே நட்டாற்றில் விட்ட அபலையாக கதாநாயகி நிற்கிறாள் என்று படுகிறது.

இது என் வாசிப்பு மட்டுமே. பிழை என் பக்கல்லில் இருக்க வாய்ப்புண்டு.

க.>

2011/1/9 rajam <ra...@earthlink.net>:

Nagarajan Vadivel

unread,
Jan 8, 2011, 8:31:58 PM1/8/11
to mint...@googlegroups.com
Prajnatara, the twenty seventh patriararch, an East Indian priestly class (Brahmin) ventured into South India and acquired as a disciple the third son of the pallava king   The third son's name is Bhoditara which was eventually changed to Bodhidharamtara
pranatara died in 457 CE with a final injuction given to Bodhidhartma to go to China he left for China The travel time was approximately three years and he reached canton in 527
He was the founder of Zen and also he introduced martial arts.
Therefore there is a need to study the Zen as a form of Tamil Buddhism


http://zenmirror.blogspot.com/2010/04/bodhi-dharma-action-figure.html


Nagarajan

bodhidharma.jpg
2011/1/9 rajam <ra...@earthlink.net>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
bodhidharma.jpg

N. Kannan

unread,
Jan 8, 2011, 9:16:27 PM1/8/11
to mint...@googlegroups.com
Professor Sahib:
 
Tstuomu Kambe, Former Professor of University of Tokyo, Physics has traced Bodhidhrma's travel route in an elegant way based on Chinese chronicles. He is attending this conference in Chennai. I'm pretty excited seeing him. Prof.Rajam's excellent notes on Manimegalai throws so much of light on Silk Road by Sea (unless we finally endup by describing 'savagam' as a metaphysical world of Buddha ;-) which compliments Prof.Kambe's research. 
 
The general understanding of famous Zen master, based on Chinese chronicles is that he was from the South.The kingdom where Bodhi-Dharma was born is recorded as "香至" in Chinese literature. it is likely that 香至 is pronounced as "Kang-zhi". This is close to "Kanchi" (-puram), an old capital town in the state Tamil-Nadu of south India. 

Bodhidharma was said to be the son of a Brahmin king in southern India. After achieving enlightenment, he became the 28th successor to Shaka Nyorai (the Historical Buddha).
<source: http://www.aisf.or.jp/~jaanus/deta/d/daruma.htm>  We need to find out who was that Brahmin Pallava king? In Vaishnava chronicles 'Alavandar' a brahmin was a Chola king. So in Tamilnadu Brahmins wer king as well (which is unusual).
 
But this north Indian connection is new!! Well..who knows if Aputran a son of a north Indian could be the hero of a Tamil epic. Probably, there is no such Naorth-South division as we see now existed then.
 
Thank you for this notes. So you are still interested in Martial Arts :-))
 
Kannan

 
2011/1/9 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Nagarajan Vadivel

unread,
Jan 8, 2011, 9:33:23 PM1/8/11
to mint...@googlegroups.com

He was a Brahman by birth and the third son of King Simhavarman
Varmak kalai is an indigenous living practice of Tamil medicine linked to Tamil Buddhism
Bhodidhara line of Buddhism is more psychological,  dealing with thought rather than feeling.  There is no pensive posture but only action. 
Action without reaction
Nagarajan


2011/1/9 N. Kannan <navan...@gmail.com>

rajam

unread,
Jan 8, 2011, 9:38:03 PM1/8/11
to mint...@googlegroups.com
> சரி, போன பிறவியைப்
> பார்த்தாலும், மூன்று
> தாரங்களில் ஒன்று. தற்கொலை
> செய்து கொண்டு
> இறக்கின்ற பிறவி.
>
> இப்படிப்பட்ட ஜீவனுக்கு
> ஆபுத்திரனின் அக்ஷய
> பாத்திரம் வருவானேன்?
> மணிமேகலா தெய்வம் மந்திர
> சக்திகள் தருவதேன்?
> கடைசிவரை
> எல்லாத்தெய்வங்களும்
> வருந்தி, வருந்தி
> உதவுவதேன்? அதற்கான விடை
> கதையில்
> இல்லை.

உண்டு, உண்டு.
தொடக்கத்திலேயே
சொல்லியிருந்தேன், அது பல
இழைகளில் தப்பிப்போச்சு
போல!


போன பிறவியில் ... அவள்
சாதுசக்கரன் என்ற
முனிவனுக்கு உணவு படைக்க
முயன்று அது முயலாமல்
போனது. மடைக்கலம் உடைத்த
மடையனை இராகுலன்
வெட்டிக் கொன்றதால்.
பிறகு ... அவள்
தீக்குளிக்கும்போது
சாதுசக்கரனை உணவு
அருத்தும் நினைவில் உயிர்
இழந்ததால்தான் இந்தப்
பிறவியில் அவளுக்கு
அமுதசுரபி கிடைக்கிறது.

N. Kannan

unread,
Jan 8, 2011, 9:42:34 PM1/8/11
to mint...@googlegroups.com
My reservation on Indian origin of martial arts still holds. Varma is
not Martial arts per se. I've seen Shaolin monks performing martial
arts in Beijing China. That was an unbelievable experience. I do not
see any such art ever existed in Tamilnadu. Our guys are more for
vettaruval culture :-))

Kannan

2011/1/9 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
>

Nagarajan Vadivel

unread,
Jan 8, 2011, 9:49:09 PM1/8/11
to mint...@googlegroups.com
I disagree.  Varmakkalai is an indigenous practice of Tamils documented enough and available in palm leaf.  There are many families in Kannyakumari district having the oral knowledge.  I remember a Ph.D dissertation submitted to the Madras University.  The doctor who gave speech therapy to M.G.R Dr.Rajamani is a varma medical practitioner
Nagarajan



2011/1/9 N. Kannan <navan...@gmail.com>
My reservation on Indian origin of martial arts still holds. Varma is

N. Kannan

unread,
Jan 8, 2011, 9:53:20 PM1/8/11
to mint...@googlegroups.com
Sir

Varma medical practice is Naturopathy. During our last THF field trip
we met a Doctor from Nagerkoil area. An excellent Naturopath. We
published his interview in THF site.

But Varma medical practice and methods are far too different from
Shaolin Martial art per se. That's my point.

Kannan

ps. We're diverting this thread, Rajam mame may complain ;-)

2011/1/9 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

--

N. Kannan

unread,
Jan 8, 2011, 9:53:56 PM1/8/11
to mint...@googlegroups.com
2011/1/9 rajam <ra...@earthlink.net>:

>
> போன பிறவியில் ... அவள் சாதுசக்கரன் என்ற முனிவனுக்கு உணவு படைக்க முயன்று அது
> முயலாமல் போனது. மடைக்கலம் உடைத்த மடையனை இராகுலன் வெட்டிக் கொன்றதால். பிறகு
> ... அவள் தீக்குளிக்கும்போது சாதுசக்கரனை உணவு அருத்தும் நினைவில் உயிர்
> இழந்ததால்தான் இந்தப் பிறவியில் அவளுக்கு அமுதசுரபி கிடைக்கிறது.
>

சரி, சரி..மாணவரை பெஞ்சில் ஏற்றுங்கள் :-))

இறக்கும் தருவாயில் என்ன நினைவிற்கு வருகிறதோ அது நம் அடுத்த பிறவிக்கு
வித்தாகும் என்பது பழைய இந்து நம்பிக்கை. பரத முனிவர் மானாகப் பிறந்தது
இப்படியான ஒரு பந்தத்தால்தான்!

ஆனாலும் என் கேள்வி இன்னும் அப்படியே நிற்கிறது. அத்தனை தெய்வங்களும்
வலிந்து மணிமேகலைக்கு உதவும் அளவிற்கு அவள் செய்த புண்ணியம் என்ன?
அருகனின் அருள் பெறுவதற்கான புண்ணியம் என்ன செய்தாள்? இப்பிறவில்
அருகனின் அருள் பெற்ற பின்னும் பல பிறவிகள் மாறி, மாறி ஆனாகப் பிறந்து
ஒரு வழியாக பிறப்பறுப்பதேன்? அருகனின் அருள் மட்டும் இவள் சுழற்சி விதியை
மாற்றும் வல்லமை பெறவில்லையா? இப்படி...

அக்ஷயபாத்திரம் பெற்றவர்களுக்கு தெய்வம் உதவும் என்று வேண்டுமானால்
சொல்லிக் கொள்ளலாம்.

இத்தெய்வங்கள் யாது? இவை பௌத்த தெய்வங்களா இல்லை இந்துத்தெய்வங்களா?
இவைகளுக்கும் அருகனுக்குமுள்ள தொடர்பு என்ன? இப்படிக் கேள்விகள் நீளும்.

க.>

Nagarajan Vadivel

unread,
Jan 8, 2011, 10:01:17 PM1/8/11
to mint...@googlegroups.com
Sir,
I dont know how to elucidate further on Varmakkalai.  I don't see a link to Naturopathy.  May be a contemporaneity shade of practice.  Somehow in MINTamil I see the posts and see the wires (threads) but most of the time I get shocks.  May be I am ignorant of toching the wrong wires.  Yes just like a maze running rat in a psychological lab shocks teach me the way where exit gate lies.
Thanks
Nagarajan

N. Kannan

unread,
Jan 8, 2011, 10:08:21 PM1/8/11
to mint...@googlegroups.com
Hello Prof.

You don't go any wrong here. You see a link from your perspective, me
sitting here in the far east find no link of any sort from what I see
here as Martial arts. The varma points of immobilizing a person
(legendary "Indian" film depiction) is not practiced in Martial ars
here. It is still consider as Buddhist art for its composure and
philosophy. However, the art form is so very different from
Varmakkalai of Tamilnadu. I have never seen a trace of the elaborate
labyrinth of Martial arts in Tamilnadu. I'm yet to be corrected by
proper references. Website stories are more on a fantasy.

Kannan

2011/1/9 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

?????? ?????

unread,
Jan 8, 2011, 11:08:11 PM1/8/11
to mint...@googlegroups.com
//இறக்கும் தருவாயில் என்ன நினைவிற்கு வருகிறதோ அது நம் அடுத்த பிறவிக்கு
வித்தாகும் என்பது பழைய இந்து நம்பிக்கை//

பௌத்த் நம்பிக்கையும் அது தான்

//ஆனாலும் என் கேள்வி இன்னும் அப்படியே நிற்கிறது. அத்தனை தெய்வங்களும்
வலிந்து மணிமேகலைக்கு உதவும் அளவிற்கு அவள் செய்த புண்ணியம் என்ன? //

”ஏது” ”நல்லேது” என்று மணிமேகலையில் தேடினால் உங்களுக்கு விளக்கங்கள் கிட்டலாம் கண்ணன் :-)

இங்கு ராஜம் தருவது "Abridged" Version அதனால் சில செய்திகள் விட்டுப்போயிருக்கலாம். 

//அருகனின் அருள் பெறுவதற்கான புண்ணியம் என்ன செய்தாள்? இப்பிறவில்

அருகனின் அருள் பெற்ற பின்னும் பல பிறவிகள் மாறி, மாறி ஆனாகப் பிறந்து
ஒரு வழியாக பிறப்பறுப்பதேன்? அருகனின் அருள் மட்டும் இவள் சுழற்சி விதியை
மாற்றும் வல்லமை பெறவில்லையா? இப்படி.//

அருகனோ ? :-)

கண்ணன், பகவானிடம் இருந்து நேரடியாக தர்ம உபதேசம் பெறுவது அளவில்லா சுகம் உடையது இல்லையா ? அதையே அவர்கள் பெற முனைகிறார்கள்.

இதே பிறவியில் பிறப்பறுப்பது சாத்தியமே. இருந்தும், பகவானிடம் இருந்து நேரிடையே உபதேசம் பெற்று பிறவி அறுக்க விரும்புவுதாக தெரிகிறது.

துஷித லோகத்தில் நேரடியாக, (வரப்போகின்ற புத்தரான) மைத்திரேயரிடம் உபதேசம் பெற வேண்டும் என்று நோக்கோடு, முயற்சி செய்து தியான நிலைகள் பல அடைந்து “துஷித” லோகத்தில் பிறப்பெய்தியவர்களும் உண்டு. புத்தத்துவம் எய்தாத போதிசத்துவரிடம் உபதேசம் பெறுவதே பாக்கியமாக கருதக்கூடிய நிலையில், ஸம்யக்ஸம்போதி அடைந்த திரைலோக்ய நாயகர் தர்மேஸ்வரரான பகவானுடைய திருமுகத்தில் இருந்து ஸ்வயம் தர்மோபதேசம் பெறுவது எவ்வளவு பாக்கியம் !!

V

N. Kannan

unread,
Jan 8, 2011, 11:18:34 PM1/8/11
to mint...@googlegroups.com
2011/1/9 ?????? ????? <vinodh...@gmail.com>:
> அருகனோ ? :-)

ஓ! அவர் சமணத் தெய்வமோ? ஒரே குழப்பம் சாமி!

இப்ப நீங்க பேசற ஜார்கன் புதுக்குழப்பத்தைத் தருகிறது!
பௌத்தக் கடவுளர் படிநிலை என்பது இந்துப்படிநிலை போல், ஆனால் வேறு
பெயர்களில் இருப்பதாகப் படுகிறது!

மணிமேகலைக் காவியம் எப்படியும் சுவாரசியமாக உள்ளது. இது சிலம்பிற்கு
மூப்பு என்று சொல்வாருமுண்டு. கிரேக்க பாதிப்புத் தெரிகிறது.
மணிமேகலையின் சபலம் மிக இயல்பாக இருக்கிறது. சாமானியனின் வாழ்வு
பேசப்படுகிறது. அதே நேரத்தில் `விட்டலாச்சார்யா` விஷயமும் இருக்கு ;-)

தத்துவார்த்தமாக அறிய வேண்டுமெனில் மூலத்துள் மூழ்க வேண்டும். சரிதான்.
ஓசிச் சாப்பாட்டில் லொள்ளை சொல்லக்கூடாது என்கிறீர்கள் :-) புரிகிறது
:-)))

க.>

Raja sankar

unread,
Jan 8, 2011, 11:43:01 PM1/8/11
to mint...@googlegroups.com
அன்பின் கண்ணன்,

முன்னொரு இழையில் சொல்லியிருந்தது போல் நீங்கள் இப்போது என்ன நிலை இருக்கிறது அதே போல் முன்பும் இருந்திருக்கும் என நினைத்து அதன் மூலம் ஒரு முடிவுக்கு வருகிறீர்கள். 

என்னுடைய நினைவில் இருக்கும் ஒரு உதாரணம். சிலப்பதிகாரத்தில் கோட்டை கொத்தளங்களில் வைக்கப்பட்டிருக்கும் பொறிகளை பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஈயத்தை காச்சி ஊற்ற, நெய்யை காச்சி ஊற்ற, மேலேறி வருபவர்களை பறவை போல் கொத்தி கீழே தள்ள என பல பொறிகள் இருந்தாக படித்திருக்கிறேன். அவை பற்றி வேறு எதிலேயும் ஆதாரம் காண இயலாது. நீங்கள் சொல்வது படி பார்த்தால் அந்த பகுதிகள் பொய்யாக இருக்குமா?  (அது சிலம்பு தான் என நினைக்கிறேன், வேறு ஏதேனும் காப்பியமாக கூட இருக்கலாம்)

இன்றைக்கு ஷோலின் துறவிகள் செய்வது பிரமிப்பாக இருக்கிறது. ஆமாம். ஆனால் அவர்கள் அதை தொடர்ந்து தலைமுறைகளாக செய்து வருகிறார்கள் அல்லவா? கேரளத்தின் வர்ம முறைகளை கற்று தரும் ஆசான்கள் தான் இன்றைக்கும் தற்காப்பு கலைகளுக்கும் ஆசான். களிரி முறைகள் போல் ஷோலின் முறைகள் இருக்கா. இங்கு ராஜராஜனின் காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்ச்சியை சேர்த்து பாருங்கள். களரி கலை உச்சத்தில் இருந்த போது இங்கிருந்து போய் அவர்களை வென்று விட்டு வருவது என்றால் சும்மாவா? 

இதே போல் வளரி என்றொரு ஆயுதம். வெகு காலம் புழக்கத்தில் இருந்ததாக சொல்கிறார்கள். பூமராங் போன்ற ஆயுதம். ஆனால் இன்றைக்கு? வளரியின் பல வகைகள் பற்றியும் குறிப்பு உண்டு ஆனால் இன்றைக்கு அதை செய்ய தெரிந்தவர்கள் யாரும் கிடையா. அதே போல் கவண் கல், வயலில் பறவைகளை விரட்ட பயன் படும் ஒன்று(பெயர் டக்கென வரமாட்டேன் என்கிறது), தட்டை வடிவமாக இருக்கும் கல்லை வெகுதூரம் எறிவது. 

இதேபோல் சொல்லிக்கொண்டே போலாம். உங்களுக்கு உதவியாக இருக்குமானால் சொல்லுங்கள் ஒரு அட்டவணையே போட்டுவிடலாம். முன்பு இருந்தவைகளை தேடிப்பிடிப்பது இயலாத காரியம். வயிறா இல்லை கலையா என்று வந்த போது பெரும்பாலானோர் வயிற்றையே தேர்ந்தெடுத்தனர். இல்லை கலைதான் முக்கியம் என்று தேர்ந்தெடுத்தவர்களின் கலைகள் தான் இன்றைக்கு இன்னும் உயிருடன் இருக்கிறன. 

ராஜசங்கர்

2011/1/9 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Jan 9, 2011, 12:14:35 AM1/9/11
to mint...@googlegroups.com
அன்பரே:

என்னைத் தவறாகக் காண்கிறீர்கள். உங்களுக்கு கீழைத்தேசத்தின் மார்ஷியல்
ஆர்ட் என்றால் என்ன என்பது தெரியாது. ஏனெனில் நீங்கள் வாழ்வது
இந்தியாவில். எனவே இங்குள்ள களரி, வர்மக்கலை இவையே கீழை நாடுகளின்
மார்ஷியல் ஆர்ட்ஸ்ஸாக மாறியது என்று சொல்லமுடிகிறது. எனது கேள்வி, நாம்
ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்பதே. தற்போது நடைமுறையில் உள்ள மார்ஷியல்
ஆர்ஸ்ஸின் கூறுகளை நான் தமிழகத்தில் காணவில்லை.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும்

அதாவது எந்த மரபும் தன் இருப்பை ஏதாவதொரு எச்சத்தால் தக்க
வைத்திருக்கும். மார்ஷியல் ஆர்ட்ஸ்ஸின் எச்சம் என்னால் காண இயலவில்லை.

இப்படிச் சொல்வதால் இந்தியாவில் ஒன்றும் இல்லை என்று சொல்ல வரவில்லை.
இந்திய சண்டைக்கலைகள் நிறைய இருந்திருக்கும். அது பற்றி நம் இதிகாச,
புராணங்கள் பேசுகின்றன.

கீழை நாடுகளில் மார்ஷியல் ஆர்ட்ஸ் வாழும் கலையாக இன்றும் உள்ளது. அங்கு
உள்ளோர் பௌத்தம் எனும் தத்துவத்தைப் பெரும்பாலும் பொதுவாழ்வில் கைவிட்ட
பின்பும்.

இந்திய சண்டைக்கலைகள் பற்றிய அட்டவணை தயார் செய்யலாம். யோக முறைகள் போல
அதற்கு விளக்கப்படமும் கிடைத்தால் எனது மாணவர் ஹுஸைனி போன்றோர்
பயன்படுத்துவர்.

கண்ணன்

2011/1/9 Raja sankar <errajasa...@gmail.com>:

Hari Krishnan

unread,
Jan 9, 2011, 1:07:23 AM1/9/11
to mint...@googlegroups.com


2011/1/9 Raja sankar <errajasa...@gmail.com>

என்னுடைய நினைவில் இருக்கும் ஒரு உதாரணம். சிலப்பதிகாரத்தில் கோட்டை கொத்தளங்களில் வைக்கப்பட்டிருக்கும் பொறிகளை பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஈயத்தை காச்சி ஊற்ற, நெய்யை காச்சி ஊற்ற, மேலேறி வருபவர்களை பறவை போல் கொத்தி கீழே தள்ள என பல பொறிகள் இருந்தாக படித்திருக்கிறேன். அவை பற்றி வேறு எதிலேயும் ஆதாரம் காண இயலாது. நீங்கள் சொல்வது படி பார்த்தால் அந்த பகுதிகள் பொய்யாக இருக்குமா?  (அது சிலம்பு தான் என நினைக்கிறேன், வேறு ஏதேனும் காப்பியமாக கூட இருக்கலாம்)

The references in Silappathikaram are very slender as compared to the details given in Kamba Ramayanam.  If one gets into Bala Kandam, Sundara Kandam and the later half of Yudhdha Kandam, references to such contraptions, missiles and giant catapults for throwing rocks and devices for pouring boiling oil, crevices which were used as watch tower and for firing burning lances are a plenty.  And Mahabharata contains a number of references to ballistic misslies and grenades.  In a few battle scenes, one can see the enemy rank throwing a grenade, soldiers of the other side catching them while they are still in air and throwing them back on the former group, on many, many occasions.

Since I am at Chennai now, I am not able to give direct references.  Anyway, Kannan's student Husaini should be aware of a lot more details, first hand from the epics.  He is not going to need them.  


--
அன்புடன்,
ஹரிகி.

N. Kannan

unread,
Jan 9, 2011, 2:38:02 AM1/9/11
to mint...@googlegroups.com
2011/1/9 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> The references in Silappathikaram are very slender as compared to the
> details given in Kamba Ramayanam.  If one gets into Bala Kandam, Sundara
> Kandam and the later half of Yudhdha Kandam, references to such
> contraptions, missiles and giant catapults for throwing rocks and devices
> for pouring boiling oil, crevices which were used as watch tower and for
> firing burning lances are a plenty.  And Mahabharata contains a number of
> references to ballistic misslies and grenades.  In a few battle scenes, one
> can see the enemy rank throwing a grenade, soldiers of the other side
> catching them while they are still in air and throwing them back on the
> former group, on many, many occasions.

Hari ji

It would be interesting if these devices are properly studied, modeled
and tested by our IITs.
National Geographic has a special channel for History.
They talk about all assault methods including that of Chinse, Wiking etc.
Very rarely one sees Indian examples. Our depiction in serials are a
bit exaggerated.
I wish I've a million US$ and sit with you to produce this documentary :-)

Kannan

> Since I am at Chennai now, I am not able to give direct references.  Anyway,
> Kannan's student Husaini should be aware of a lot more details, first hand
> from the epics.  He is not going to need them.
>
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--

Hari Krishnan

unread,
Jan 9, 2011, 9:10:39 AM1/9/11
to mint...@googlegroups.com


2011/1/9 N. Kannan <navan...@gmail.com>

It would be interesting if these devices are properly studied, modeled
and tested by our IITs.
National Geographic has a special channel for History.
They talk about all assault methods including that of Chinse, Wiking etc.
Very rarely one sees Indian examples. Our depiction in serials are a
bit exaggerated.
I wish I've a million US$ and sit with you to produce this documentary :-)


Dear Kannan,

It has been a passion with me to study the various designs of bows and shapes of arrows and the ways in which an arrow and astra differ; apart from how a bow could be used to shoot several hundred arrows in one bunch.  There were short range arrows that were used against an enemy standing at a distance of less than 3 feet and only Drona seemed to have mastered this art.  We see him using these short range arrows against Dhritadhyumna, when the latter jumps on to his chariot and starts fighting Drona from behind the charioteer's seat.  Apart from these, there were banned weapons (arrows) which too had been used in cases of emergencies.  These included the buffalo, deer and other animal's horns with a handle.  I have written about this in one of my Thendral series of articles.

Rama's lifting of Shiva Dhanus and Arjuna's stringing of the special bow to hit the revolving target over head, by looking at its reflection in water placed below the target are two instances to note.  The way Rama and Arjuna lift the respective bows were more a matter of skill than a matter of strength.  The Warriror's bow was very much different from the shape of the Hunter's Bow.  Hunter's bow need to be light and a be a mere D shaped one, because he had to carry it and run after animals.  The Warrior, who usually used his bow from the chariot (advantage of elevation) could have a heavier bow with steel spring bowstrings.  His bow was something like a J at both ends, which projected and curved forwards.  This portion had the name கழுந்து.  குதை was the name of the mid-portion where the arrow was normally fitted.  If you accidentally happen to put a foot over a walking stick lying on the ground, at the handle point, you could have noticed that the walking stick springs up by itself.  This was the principle that was used to lift heavier bows.  (I have a line by line support from the Text of both Ramayana and Mahabharata for each and everyone of the conclusions I have arrived at.)  If the குதை where the arrow was fitted (while the bottom of the bow was planted on earth (or the platform of chariot and held in place by the toe) then naturally the குதை had to be at shoulder level of the bowman and therefore his bow had to be double his height, at least.  The description of such weapons need to be taken seriously and studied in its appropriate background.  

Therefore, what our painters and film people have designed for us as bows of those days has a very limited vision and lack imagination, based on information.  What can aid our understanding is ancient art and architecture alone.  Those artists had at least had the opportunity to see a real weapon and that way, a study of weaponry from sculptures is, in my opinion, is of utmost importance, if we are really serious about the subject.  Now, let me give you three photographs that I shot in Somnathpur.

The first is Mahavishnu, holding his Sarnga.  The second is a close up of Sarnga.  The third is a war scene, depicting a foot soldier holding a bow in one hand. Take a closer look at all the three pictures. Look at the string section.  And the flower like carvings between the bow and the string.  And now, I understood what the description 'Arjuna's bow contained 108 lotuses on its surface.  The sculptor must have given a rough version of the real bow.  This gives a clue as to how bows were used for shooting arrows in a bunch.  

The friend who accompanied me had a hearty laugh, to the extent of hurting my conviction, as he phoo phooed my theory.  I don't believe in arguing and establishing myself and so I preferred to wear a brave smile as he laughed me off. I am convinced that I can support what I feel with the support of the Text and the sculptures.  But then.  In a world that respects convocation gowns and Doctoral degrees, my passionate pursuit of 40 years and more has no place.  And I don't need grants either in dollars or in rupees.  I will continue to do what I do and leave it for posterity to come to its own conclusions about the validity or otherwise of my studies.  

Don't you already hear a bunch of bah!s from many corners?  Let them keep mocking.  I have my passion to pursue.  

Thanks for your time.  
DSCF0685a.jpg
DSCF0686a.jpg
DSCF0705a.jpg

N. Kannan

unread,
Jan 9, 2011, 6:10:05 PM1/9/11
to mint...@googlegroups.com
Hello Hari Ki:

Interesting reading. You are right in your conclusions. Scuptures help
a lot. This multiple arrow shooting needs to be tested based on a
model. NatGeo History channel guys do that.

What I meant in my last mail was to have good amount of money to
prepare a documentary of that sort. Thanks for sharing your thoughts.
Have a good time in Chennai.

Kannan

2011/1/9 Hari Krishnan <hari.har...@gmail.com>:

devoo

unread,
Jan 14, 2011, 10:32:00 AM1/14/11
to மின்தமிழ்
புறநானூறு 19ஆம் பாடலில் "இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய
பெருங்கல் அடார்" என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. "பெரும்புலியைப்
படுக்கும் (வீழ்த்தும்) வேட்டுவன் எந்திரமறிந்து கொளுத்திய பெரிய கல்லை
உடைய இடியை ஒக்கும் அடார்" என்று பழைய உரை பொருள் கூறுகிறது (பக்கம் 50,
புறநானூறு மூலமும் பழைய உரையும், உ.வே.சா. நூலகப் பதிப்பு, சென்னை - 41,
1971). இன்றும் இந்த அடார் என்ற வெடிகுண்டு வட ஆர்க்காடு மாவட்டத்தில்
காட்டுப் பன்றிகளைக் கொல்வதற்கு வேட்டுவக் குடியினரால் பயன்படுத்தப்பட்டு
வருகிறது. எனவே, ஐரோப்பியர்கள் தொடர்பினால்தான் நம்மிடையே நவீன ஆயுதங்கள்
புழங்கத் தொடங்கின என்று எண்ணுவது தவறாகும்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20606236&format=print


தேவ்

> 2011/1/9 N. Kannan <navannak...@gmail.com>


>
> > Hello Prof.
>
> > You don't go any wrong here. You see a link from your perspective, me
> > sitting here in the far east find no link of any sort from what I see
> > here as Martial arts. The varma points of immobilizing a person
> > (legendary "Indian" film depiction) is not practiced in Martial ars
> > here. It is still consider as Buddhist art for its composure and
> > philosophy. However, the art form is so very different from
> > Varmakkalai of Tamilnadu. I have never seen a trace of the elaborate
> > labyrinth of Martial arts in Tamilnadu. I'm yet to be corrected by
> > proper references. Website stories are more on a fantasy.
>
> > Kannan
>

> > 2011/1/9 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Jan 15, 2011, 2:38:20 AM1/15/11
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
ராஜம் அம்மா,
இத்தொடரின் ஏனைய பகுதிகளும் மரபு விக்கியில் இணைக்கப்பட்டுள்ளன. இங்கே 7ம் பகுதி வரை உள்ள தொகுப்பைக் காணலாம்.

இந்தத் தொடரில் எனக்கு சில கேள்விகள்.
 
"தேற்றாங்கொட்டையினால் தெளிந்த நீரைப் போலத் தெளிவு பெறுகிறாள். " இதில் தேற்றாங்கொட்டை என்பதன் பொருள் விளக்கம் தர முடியுமா?
 
இப்பகுதியில் குறிப்பிடப்படும் புண்ணியாரசன் வாழும் நாகபுரம் என்பது நாகர்கள் பற்றிய ஒரு பகுதியில் குறிப்பிட்டிருந்தீர்களே - அம்மக்கம் வாழும் ஊர் தானா? அல்லது வேறு ஒரு நகரமா?
 
அன்புடன்
சுபா
2011/1/8 rajam <ra...@earthlink.net>


மணிமேகலை: உதயகுமரன் வெட்டுண்ட பின்
-------------------------------------------------------

போன பகுதியில் ... உதயகுமரன் நள்ளிரவில் மணிமேகலையைத் தேடி ஊர் அம்பலத்துக்கு வந்ததையும், காயசண்டிகையைத் தேடிவந்த காஞ்சனன் தவறாக உதயகுமரனை வாளால் வெட்டிக் கொன்றதையும் பார்த்தோம். இந்தப் பகுதியில் அதற்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.


மணிமேகலையும் கந்திற்பாவையும்
----------------------------------------
உதயகுமரனை வெட்டிவீழ்த்திய கையோடு காஞ்சனன் காயசண்டிகையைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு வான்வழியில் போக நினைத்து அவள் இருக்கும் இடத்தை நோக்கிப் போகிறான். அப்போது அங்கே தூணில் இருக்கும் பாவை ஒன்று அவனைத் தடுத்து உண்மையில் என்ன நடந்தது என்பதை விளக்குகிறது.

காயசண்டிகை வடிவத்தில் இருப்பவள் உண்மையில் அவன் மனைவியான காயசண்டிகை இல்லை; அவள் மணிமேகலை. உண்மைக் காயசண்டிகை தன் பசி நோய் தீர்ந்து வான் வழியே சென்றபோது விந்திய மலைக்கு மேலே போனதால் விந்தாகடிகை அவளை விழுங்கிவிட்டாள்.

இந்த விவரத்தைக் காஞ்சனனுக்குச் சொல்லிய கந்திற்பாவை அவனைக் கைம்மைத் துயர் கொள்ளவேண்டாம் என்று சொல்கிறது. உதயகுமரன் தன் ஊழ்வினையால் இறந்தான் என்றும், அப்படியே ஆனாலும் காஞ்சனன் ஆராயாமல் உதயகுமரனைக் கொன்றதால் காஞ்சனனையும் வினையின் பயன் தொடரும் என்றும் சொல்கிறது. இது கேட்டுக் காஞ்சனன் மிகவும் வருந்தி அந்த இடத்தை விட்டுப் போகிறான்.

முதியாள் ("சம்பாபதி") கோயிலின் உட்புறத்தில் கிடந்த மணிமேகலைக்கு நள்ளிரவில் நடக்கும் இதெல்லாம் காதில் படுகின்றது. அவள் உடனே எழுந்து காயசண்டிகையாக இருந்த தன் மாறுவடிவத்தைக் களைகிறாள்; பழையபடி மணிமேகலை ஆகிறாள்.

உதயகுமரன் வெட்டுண்டு கிடப்பதைப் பார்த்துத் துடிக்கிறாள். பழைய கதைகளைச் சொல்லிப் புலம்புகிறாள். பழைய பிறவியில் இராகுலன் இறந்தபோது தான் தீயில் புகுந்ததைச் சொல்கிறாள். இந்தப் பிறவியில் மலர்வனத்தில் உதயகுமரனைப் பார்த்து அவன்மேல் தன் உள்ளம் போனதால் மணிமேகலா தெய்வம் தன்னை மணிபல்லவத்தீவுக்கு எடுத்துச் சென்றதைச் சொல்கிறாள். மணிபல்லவத்தில் மாதவனின் பீடிகை மூலம் தன் பிறப்பையும் அவன் பிறப்பையும் உணர்ந்துகொண்டதைச் சொல்கிறாள். தான் காயசண்டிகை வடிவு எடுத்தது ஏன் என்றும் சொல்கிறாள்.  வெட்டுண்டு கிடக்கும் அவனைக் "காதல" என்று அழைத்துப் புலம்புகிறாள்.

"பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும்
யான் நினக்கு உரைத்து நின் இடர்வினை ஒழிக்க-க்
காயசண்டிகை வடிவானேன், காதல!"

[சுருக்கமான பொருள்: பிறந்தவர்கள் இறந்துபோவதும், இறந்துபோனவர்கள் மீண்டும் பிறப்பதும் அறம் தரும் அமைதியினாலும் மறம் தரும் துன்பத்தினாலும் என்ற உண்மையை உனக்குச் சொல்லி உன்னைத் துன்பம் தரும் வினையிலிருந்து காப்பாற்றுவதற்காகவே காயசண்டிகை வடிவம் கொண்டேன், காதலனே!]

ஒரு விஞ்சையனின் ("காஞ்சனனின்") மயங்கிய வெகுளியால் உன் கொடிய வினைப்பயன் உருவெடுத்து வர, இப்படி இறந்துபோனாயோ என்று கொதிக்கிறாள். அழுது ஏங்கிப் பெருமூச்சு விட்டு அவன் பக்கம் போக எழுந்திருக்கிறாள்.

"போகாதே, போகாதே, அல்லி மாலையணிந்த அவனிடம் போகாதே!" என்று ஒரு குரல் கேட்கிறது. அந்தக் குரல் தொடர்கிறது ...

"நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம்
மனக்கு இனியாற்கு நீ மகளாயதூஉம்
பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால்
கண்ட பிறவியே அல்ல காரிகை!
தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்
விடுமாறு முயல்வோய்! விழுமம் கொள்ளேல்!"

[சுருக்கமான பொருள்: உனக்கு இவன் கணவனாக அமைந்ததும் நீ இவனுக்கு மனைவியாக ஆனதும் முன்னே பல பல பிறவிகளில் நடந்ததுதான்; இந்தப் பிறவியில் மட்டுமில்லை. மாறி மாறி வரும் பிறவிகளில் அழுந்துகின்ற துன்பத்திலிருந்து விடுபட முயலும் நீ ... இதற்காகத் துயரம் கொள்ளாதே!]

அப்படிச் சொன்ன குரல் அங்கே அந்தப் பொதியிலில் இருக்கும் தெய்வத்தின் குரல் என்று மணிமேகலை உணர்கிறாள். தன் பழைய பிறப்பைப் பற்றித் தெரியுமா என்று கேட்கிறாள்.

அதன் பிறகு அந்தத் தெய்வம் அவளுக்குப் பழைய பிறவியின் செய்திகளைச் சொல்கிறது. பழைய பிறவியில் இராகுலன் அவனுடைய சமையல்காரனை ("மடையனை") வாளால் வெட்டிக் கொன்றதனால்தான் அந்தப் பிறவியில் திட்டிவிடம் தீண்டி இறந்தான் என்றும் இந்தப் பிறவியில் காஞ்சனனால் வெட்டுண்டு இறந்தான் என்றும் சொல்கிறது.

இனி, மணிமேகலைக்கு என்னென்ன நடக்கும் என்பதையும் அந்தத் தெய்வம் சொல்கிறது. உதயகுமரன் இறந்தது கேட்டுச் சோழ அரசி மணிமேகலையைச் சிறையில் வைப்பாள்; பிறகு அறவண அடிகள் சொல்லைக்கேட்டு விடுவிப்பாள்; மணிமேகலை ஆபுத்திரனைப் பார்க்க அவனுடைய நாட்டுக்குப் போவாள்; அவனோடு மீண்டும் மணிபல்லவம் போவாள்; தீவதிலகை முலம் ஆபுத்திரன் தன் பழம்பிறப்பை உணர்வான்; அதன் பிறகு அவன் தன்னுடைய நாட்டுக்குத் திரும்புவான்; மணிமேகலை வஞ்சி நகரத்துக்குப் போவாள்; அங்கே பல சமயத்தவர் சொல்லும் வாதங்களையும் கேட்பாள்; அந்த வாதங்களினால் தளராமல் மறுமொழியும் சொல்லுவாள்.

இப்படி எதிர்காலத்தில் நடக்கப்போவதைச் சொல்லிவிட்டுத் தான் அங்கே தூணில் உறையும் துவதிகன் என்பதையும் தெரிவிக்கிறது.

தன் இறுதிக் காலம் வரை தனக்கு நிகழக் கூடியவைகளைச் சொல்லுமாறு மணிமேகலை கேட்கிறாள். துவதிகனும் சொல்கிறான். மணிமேகலை காஞ்சியில் போய் அறம் செய்வாள்; அங்கேயே உயிர் நீங்குவாள்; அதன் பின் உத்தர மகத நாட்டில் போய்ப் பல பிறவிகள் எடுப்பாள். அந்த எல்லாப் பிறவிகளும் அவளுக்கு ஆண்பிறவியாகவே அமையும். அவ்ள் அருளறத்தை விடாமல் கடைப்பிடித்துத் தலைச்சாவகன் ஆகிச் சார்பு அறுப்பாள்.

"கச்சி முற்றத்து நின் உயிர் கடை கொள
உத்தர மகதத்து உறு பிறப்பெல்லாம்
ஆண் பிறப்பு ஆகி அருள் அறம் ஒழியாய்
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு-த்
தலைச் சாவகனாய்ச் சார்பு அறுத்து உய்தி"

இறுதியாக, மணிமேகலா தெய்வம் ஏன் அவளை மலர்வனத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய் மணிபல்லவத்தில் வைத்தாள் என்பதையும் விளக்குகிறான்.

இதையெல்லாம் கேட்டு மணிமேகலைக்குத் துயரம் நீங்குகிறது. வலையிலிருந்து தப்பித்த மயில் போல மனத்தின் மயக்கம் நீங்குகிறது.


சோழ அரசியும் மணிமேகலையும்
--------------------------------------

உதயகுமரன் இறந்தது சோழ அரசனுக்குத் தெரிகிறது. அவன் உதயகுமரனை ஈமத்தில் வைக்கும்படியும் மணிமேகலையைச் சிறை செய்யும்படியும் கட்டளை இடுகிறான்.

உதயகுமரனின் தாயான சோழ அரசியோ கலங்குகிறாள். வாசந்தவை என்னும் ஒரு மூதாட்டி அவளுக்கு அறிவுரை சொல்கிறாள் ... "மன்பதை காக்கும் மன்னன் முன்னால் துன்பம் கொள்ளாதே" என்று.

அரசி மணிமேகலையை வஞ்சிக்க நினைக்கிறாள். அரசனிடம் போய் ... "பிக்குணிக்கோலம் கொண்டவள் மேல் மனம் வைத்தவனுக்கு ("உதயகுமரனுக்கு") அரசியல் தெரியவில்லை. அறிவு நிறைந்த அந்தப் பெண்ணுக்குச் சிறைக்கூடம் தகுதியான இடம் இல்லை. அவளைச் சிறையிலிருந்து வெளியே விடவேண்டும். அவள் என்னோடு இருக்கட்டும். அவள் தன்னுடைய ஓடு ("பிச்சைப் பாத்திரம்") எடுத்துப் போனாலும் யாரும் தடுக்கப் போவது இல்லை" என்று சொல்லி மணிமேகலையை விடுதலை செய்து தன் இருப்பிடத்திற்குக் கூட்டிப் போகிறாள்.

அதன் பிறகுதான் அரசியின் வஞ்சம் உண்மையான உருவம் எடுக்கிறது.

மணிமேகலை பைத்தியக்காரியானால் ஊரார் அவளை அடிப்பார்கள் (அல்லது, "கல் எறிவார்கள்") என்று நினத்து அவளுக்கு மயக்க மருந்து கொடுக்கிறாள். மணிமேகலை பழம்பிறப்பு உணர்ந்தவள் அதனால் அந்த மருந்து அவளை மயக்கவில்லை.

அடுத்து, அரசி ஒருகாமுகனைக் கூப்பிட்டு மணிமேகலையிடம் போய் அவள் உடலைக் கெடுத்து அதைப் பலருக்கும் தெரிவிக்கும்படிச் சொல்லுகிறாள். மணிமேகலையோ மணிமேகலா தெய்வம் கொடுத்த மந்திரத்தை ஓதி ஓர் ஆண் போல இருக்கிறாள். காமுகனுக்குக் குழப்பம். ஆடவர் அணுக முடியாத இடத்தில் எப்படி ஓர் ஆண்மகன் வந்தான் என்று குழம்புகிறான். நரகத் துயர் செய்யும் அரசியின் எண்ணம் அவனுக்குப் புரியவில்லை. அந்த இடத்தை விட்டுப் போய்விடுகிறான்!

அதன் பின், அரசி மணிமேகலையைப் புழுக்கறையில் அடைக்கிறாள். மணிமேகலையோ இன்னொரு மந்திரத்தால் ("ஊண் ஒழிக்கும் மந்திரம்") உடம்பு வாடாமல் இருக்கிறாள்.

இதையெல்லாம் பார்த்து அரசிக்கு வியப்பு! பொருமுகிறாள்; நடுங்குகிறாள்; தவச்செல்விக்குத் தான் சிறுமை செய்ததை அவளிடமே சொல்லிப் பொறுத்துக்கொள்ளும்படி வேண்டி வணங்குகிறாள்.

தன்னைக் கொடுமைப்படுத்திய அரசியிடம் விவேகம் பேசுகிறாள் மணிமேகலை!

போன பிறவியில் இராகுலன் இறந்தபோது தான் தீயில் புகுந்ததைச் சொல்லி, அப்போது இந்த அரசி இராகுலனுக்காக எங்கேயிருந்து அழுதாள் என்று கேட்கிறாள்! பிறகு பொருள் நிறைந்த சொற்களைச் சொல்கிறாள்.

"உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ?
உடற்கு அழுதனையேல் உன் மகன்தன்னை
எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே?
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வரிய(து);
அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின், ஆய்தொடி,
எவ்வுயிர்க்காயினும் இரங்கல் வேண்டும்"

[சுருக்கமான பொருள்: (உன் மகனுடைய) உடலுக்காக அழுதாயோ? உயிருக்காக அழுதாயோ? உடலுக்காக அழுதாய் என்றால் ... உன் மகனை எடுத்துப் போய்ப் புறங்காட்டில் ("மயானம்") வைத்தது யார்? உயிருக்காக அழுதாய் என்றால் ... (போன) உயிர் எந்த இடத்தில் புகும் என்பதை அதன் செய்கைகளினால் தெரிந்துகொள்ள முடியாது. அந்த உயிர்மேல் உனக்கு அன்பு உண்டானால் எந்த உயிர்மேலும் இரக்கம் காட்டவேண்டும்.]

இப்படிச் சொல்லி, ஏன் உதயகுமரனுக்குக் கள்ளத்தனமாய்க் காஞ்சனன் வஞ்சனை செய்தான் என்றும் விளக்குகிறாள். (இதைத் துவதிகன் சொல்ல மணிமேகலை கேட்டிருந்தாள், இல்லையா.)

போன பிறவியில் சமையல் செய்யக் காலம் தாழ்த்து வந்த சமையல்காரன் தன் பதட்டத்தினால் சமையல் கலங்களைக் கீழே போட்டுத் தானும் விழுந்தான். அதனால் இராகுலன் ஒரு முனிவனுக்கு உணவு படைக்க முடியவில்லை. சினம் கொண்ட இராகுலன் அந்தச் சமையல்காரனை வாளால் வெட்டி வீழ்த்தினான். அந்தக் கொடிய வினைதான் இந்தப் பிறவியில் உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் வெட்டி வீழ்த்தியது!

இதைச் சொல்லிவிட்டு, அரசி தனக்குச் செய்த கொடுமைகளிலிருந்து தான் பிழைத்தது எப்படி என்றும் விளக்குகிறாள். அதோடு, தான் ஏன் அந்தரம் செல்லும் மந்திரம் ஓதித் தப்பித்துப் போகவில்லை என்பதையும் தெரிவிக்கிறாள்.

"அந்தரம் சேறலும் அயல் உருக் கோடலும்
சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில்
காதலன் பயந்தோய் கடுந்துயர் களைந்து
தீதுறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால்"

[சுருக்கமான பொருள்: அந்தரத்தில் எழுந்து போவதையும் இன்னொருவர் வடிவம் கொள்வதையும் நான் நினைக்கவில்லை. (ஏன் என்றால்), போன பிறவியில் இருந்த என் காதலனை (இந்தப் பிறவியில்) பெற்ற உன்னுடைய கொடுமையான துயரத்தை நீக்கி, தீமையைக் கொடுக்கும் கொடிய வினைகளையும் தீர்ப்பதற்காகவே.]

தொடர்ந்து வேறு சில உலக நிகழ்ச்சிகளயயும் எடுத்துச் சொல்லி, காமம், கொலை, கள், களவு, பொய் என்ற இவை உலகத்தோருக்குத் துன்பம் தருவன என்பதால் இவைகளைத் துறக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறாள்.

"மன்பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை
துன்பம் தருவன துறத்தல் வேண்டும்;
கற்ற கல்வி அன்றால் காரிகை;
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்;
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர்
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர்;
... ... செல்லுலகு அறிந்தோர்
வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர்;
துன்பம் அறுக்கும் துணிபொருள் உணர்ந்தோர்
மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார்"

[சுருக்கமான பொருள்: இந்த மிகப் பெரிய உலகத்தில் வாழுகின்ற மக்களுக்கு இவையெல்லாம் துன்பம் தருவன. அதனால் அவற்றைக் கைவிடவேண்டும். (இல்லாவிட்டால்) ஒருவர் கற்ற கல்விக்கு அழகு இல்லாமல் போய்விடும். பகைமையைப் பகைத்தவர்களே முழுவதும் உணர்ந்தவர்கள். அல்லல் படுகின்ற மக்களுக்கு அவர்களுக்கு இல்லாததைக் கொடுத்து அந்தக் குறையை நிறைவு செய்கிறவர்கள்தான் வளப்பம் நிறைந்த இந்தப் பெரிய உலகத்தில் உண்மையாக வாழ்கிறவர்கள். வருந்தி வந்தவர்களுடைய கொடிய பசியைப் போக்குகிறவர்களே இனிமேல் தாங்கள் போகப்போகிற உலகத்தை அறிந்தவர்கள். துன்பத்தை அறவே நீக்கும் துணிவான பொருளை உணர்ந்தவர்கள் உலகத்தில் உள்ள எந்த உயிருக்கும் அன்பு காட்டுவதைக் கைவிடமாட்டார்கள்.]

மணிமேகலை இப்படி ... "ஞான நன்னீரை" நன்கு தெளித்து அரசியின் செவிமுதல் வார்க்கிறாள். வார்த்து, மகன் இறந்த துயரம் நெருப்பாக மனமே விறகாக அரசியின் உள்ளத்தைச் சுட்டுக்கொண்டிருக்கிற வெம்மையான தீயை அவித்துவிடுகிறாள்!

அரசியும் தேற்றாங்கொட்டையினால் தெளிந்த நீரைப் போலத் தெளிவு பெறுகிறாள். பகைமையை நினைக்காத மனம் கொண்டவளாய் ... மணிமேகலையைத் தொழுகிறாள்!

மணிமேகலை திடுக்கிடுகிறாள்! அரசி அப்படித் தன்னைத் தொழுததை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

"காதலற் பயந்தோய்; அன்றியும் காவலன்
மாபெரும் தேவி! என்று எதிர் வணங்கினள்"

[சுருக்கமான பொருள்: "என் காலதலனைப் பெற்ற தாய்! அதோடு, மன்னனின் பட்டத்துக்குரிய தேவி!" என்று சொல்லி எதிர் வணக்கம் செய்தாள்.]


சித்திராபதி, மாதவி, சுதமதி, அறவண அடிகள் இவர்கள் அரசியைப் பார்க்க வருதல்
----------------------------------------------------------------------------------------------

உதயகுமரன் பற்றிச் சித்திராபதி கேள்விப்படுகிறாள். தன் சூழ்ச்சியால் மணிமேகலையின்பின் போனவன் வாளால் வெட்டுப்பட்டு இறந்தான் என்று கேட்டு நெஞ்சு நடுங்குகிறாள்; மெய் வருந்துகிறாள்; மாதவி மகளைச் சிறையிலிருந்து மீட்க வேண்டி அரசியிடம் வந்து அவள் கால்களில் விழுகிறாள். இதற்குமுன் யாரும் படாத துன்பம் தான் பட்டதாகச் சொல்கிறாள். மாதவி மாதவர் பள்ளியுள் புகுந்ததும் அரங்கத்தில் ஆடவேண்டிய கூத்தி மணிமேகலை பிச்சைப் பாத்திரம் ஏந்தியதும் நாடகக் கணிகையர்க்குத் தகுதியில்லாத செயல்கள் என்றும் அவை சிரிக்கத் தகுந்தவை என்றும் சொல்லி வருந்துகிறாள்.

உதயகுமரன் இறந்தது மட்டுமில்லாமல் அந்த ஊருக்கு இன்னொரு துயரமும் வரக் காத்துக்கொண்டிருக்கிறது என்கிறாள். அதாவது ... அந்த ஊரைக் கடல்கொண்டு போகும் என்ற இந்திர சாபம் ஒன்று உண்டு என்றும் மணிமேகலைக்குத் துன்பம் வந்தால் மணிமேகலா தெய்வம் அந்தச் சாபம் பலிக்குமாறு செய்துவிடுவாள் என்றும் தான் அஞ்சுவதாகச் சொல்லி, மணிமேகலையைத் தன்னுடன் தன் வீட்டுக்கு அனுப்பிவிடுமாறு கேட்கிறாள்.

அரசி அதற்கெல்லாம் செவி சாய்க்கவில்லை. சித்திராபதியின் வாழ்க்கையைப் பழித்துச் சொல்லி மணிமேகலை தன்னிடமே இருப்பாள் என்று சொல்லிவிடுகிறாள்.

இதற்குள் ... மாதவியும் உதயகுமரனைப் பற்றிக் கேள்விப்பட்டு, சுதமதி அறவண அடிகள் இவர்களுடன் அரசியிடம் வருகிறாள்.

அறவண அடிகளைக் கண்ட அரசி அவருடைய பாதங்களை வணங்குகிறாள். அவர் இருப்பதற்கு ஏற்ற இருக்கையை அமைத்து அவருடைய பாதங்களைத் தூய்மை செய்தபின் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறாள்.

"யாண்டு பல புக்க நும் இணையடி வருந்த, என்
காண் தகு நல் வினை நும்மை ஈங்கு அழைத்தது;
நாத் தொலைவு இல்லை; ஆயினும் தளர்ந்து
மூத்தது இவ்-யாக்கை; வாழ்க, பல்லாண்டு!"

[சுருக்கமான பொருள்: பல ஆண்டுகள் ஆகி முதிர்ந்துவிட்ட தங்கள் இணையடிகள் வருந்தும்படியாகத் தங்களை இங்கு வர அழைத்தது என்னுடைய நல்வினையே! (தங்கள்) நாவிற்குத் தளர்ச்சி இல்லை. ஆனாலும், இந்த உடல் முதுமையினால் தளர்ந்து போனது. பல ஆண்டுகள் வாழவேண்டும்.]

அறவண அடிகள் மறுமொழியாகச் சொல்கிறார்.

"பிறந்தார் மூத்தார் பிணிநோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே"

[சுருக்கமான பொருள்: பிறப்பது, மூப்பது, நோயால் பிணிக்கப்படுவது, இறப்பது இவையெல்லாம் இயல்பானவைதான்.]

தொடர்ந்து, அரசிக்கு 12 வகை "நிதானங்கள்," நல்வினை, தீவினை இவைகளுக்கு விளக்கம் கொடுத்து, அரசியோடு பிற பெண்களும் நல்ல அறத்தைப் போற்றவேண்டும் என அறிவுரை சொல்கிறார்.

மறுபிறப்பு உணர்ந்த மணிமேகலையிடம் அவள் பிற (சமய) அறங்களையெல்லாம் கேட்டு வந்த பிறகு அவளுக்குத் தானே இவை (நிதானங்கள் போன்ற) எல்லாவற்றையும் விளங்கச் சொல்லுவதாக உறுதி கொடுக்கிறார்.


மணிமேகலையின் உறுதி
-----------------------------

அதன் பின் மணிமேகலை ஒரு முடிவு செய்கிறாள்.

"தேவியும் ஆயமும் சித்திராபதியும்
மாதவர் நன்மொழி மறவாது உய்ம்மின்;
இந்நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின்
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர்;
ஆபுத்திரன் நாடு அடைந்ததன் பின்னாள்
மாசு-இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி
வஞ்சியுள் புக்கு மாபத்தினி தனக்கு
எஞ்சா நல்லறம் யாங்கணும் செய்குவல்;
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா,
மனக்கினியீர்"

[சுருக்கமான பொருள்: அரசன் தேவியும் ஆயத்தாரும், சித்திராபதியும் மாதவர் (அறவண அடிகள்) சொன்ன நல்ல மொழிகளை மறக்காமல் அதன்படி நடந்து கடைத்தேறுங்கள். இந்த நகரத்தில் நான் இருந்தால் ... "மன்னன் மகனுக்கு வந்த கூற்று இவள்" என்று சொல்வார்கள். நான் ஆபுத்திரன் நாட்டுக்குப் போய் அதன் பின் மணிபல்லவத்துக்கும் போய்த் தொழுதுவிட்டு, வஞ்சிக்குப் போய் மாபெரும் பத்தினிக்குக் (கண்ணகிக்குக்) குறையில்லாத நல்லறத்தை எல்லா இடங்களிலும் செய்வேன். என் மனத்துக்கு இனியவர்களே, எனக்கு இடர் உண்டாகுமோ என்று கவலைப்படவேண்டாம்!]

எவ்வளவு பொறுப்போடு பேசுகிறாள்! சில நாட்கள் முன் மனம் நெகிழ்ந்த குழந்தையா இவள்?

அதன் பின், அவர்கள் எல்லாரையும் வணங்கிவிட்டு, அந்தி மாலையில் போய் உலக அறவி, முதியாள் ("சம்பாபதி") குடிகை, ஒளி நிறைந்த தூண் (துவதிகன் இருக்கும் தூண்) ... எல்லாவற்றையும் வலம்வந்து ... வானமே வழியாகப் பறந்து போகிறாள்.


மணிமேகலை ஆபுத்திரன் நாடு அடைதல்
----------------------------------------------

வான் வழியே போன மணிமேகலை ...இந்திரனின் மருமானுடைய ("புண்ணியராசனுடைய") நகரத்தின் வெளியே உள்ள ஒரு சோலையின் உள்ளே இறங்குகிறாள். அங்கே வாழ்ந்துவருகிற மாதவனுடைய இரண்டு அடிகளையும் வணங்கி, "இந்த நகரத்தின் பெயர் என்ன? இந்த நகரத்தை ஆளுகிற மன்னவன் யார்? " என்று கேட்கிறாள்.

மாதவன் சொல்கிறான்.

"நாகபுரம் இது; நன்னகர் ஆள்வோன்
பூமிசந்திரன் மகன் புண்ணியராசன்
ஈங்கு இவன் பிறந்த அந்நாள் தொட்டும்
ஓங்குயர் வானத்துப் பெயல் பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்
உள் நின்று உருக்கு(ம்) நோய் உயிர்க்கு இல்"

[சுருக்கமான பொருள்: இது நாகபுரம். இந்த நல்ல நகரத்தை ஆள்கிறவன் பூமிசந்திரனின் மகன் புண்ணியராசன். இங்கே இவன் பிறந்த நாள் முதல் மழை பெய்வது தவறவில்லை. மண்ணும், மரமும் பல வளங்களைத் தந்துகொண்டிருக்கின்றன. உயிர்களை உருக்கித் தொல்லைப்படுத்தும் நோய் இல்லை.]

என்ன அருமையான செய்தி கிடைக்கிறது மணிமேகலைக்கு!

அதே நேரத்தில், மன்னன் புண்ணியராசன் தன் குழாத்தோடு அதே சோலைக்கு வருகிறான். தரும சாவகனின் அடியிணைகளை வணங்குகிறான். மணிமேகலையைப் பார்க்கிறான்!

இப்படித்தான் மணிமேகலை மறுபிறவி எடுத்திருக்கிற ஆபுத்திரனைப் பார்க்கிறாள்!

(விவரங்கள் அடுத்த பகுதியில்.)

+++++++++++++++++++++++++++++++++++++

தாய் தந்தையரின் துயரக் கதையைக் கேட்டுக் கண்ணீர் சிந்த, அந்தக் கண்ணீரால் மலரின் தூய்மை கெட்டது என்று தூய புது மலர் பறித்து வருவதற்காக மலர்வனம் போன மெல்லியல் பெண்ணுக்கு எத்தகைய மாற்றம் -- மிகச் சில நாட்களில்!

இதை எழுதும்போது என் நெஞ்சு பிசைகிறது; தொண்டை அடைக்கிறது; கண்ணும் கசிகிறது.ம்


இந்தக் காதைகளில் அக்காலத்தில் இருந்த பழக்க வழக்கங்கள் பலவும் தெரியவருகின்றன. எடுத்துக் காட்டாக, இதற்கென்றே இருக்கும் ஒருமூதாட்டி அரசியிடம் வந்து "மன்னன் முன்னால் உன் துயரத்தைக் காட்டாதே" என்று அறிவுரை சொல்வது, ஒருவரை ஒருவர் பார்க்கும்போது எப்படி அழைப்பது, எப்படி வாழ்த்துவது -- இந்த மாதிரிச் செய்திகள்.

தாய்ப்பாசத்தால் மணிமேகலைக்குக் கொடுமை செய்த சோழ அரசி அவள் சொன்ன அறிவவுரை கேட்டு உடனே திருந்துகிறாள். மணிமேகலயின் காலில் விழவும் தயங்கவில்லை! அரசியின் சமயச் சார்பு பற்றிக் காப்பிய ஆசிரியர் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனாலும் ... அவள் புத்தவழி நின்ற, வயது முதிர்ந்த அறவண அடிகளை அன்போடு மென்மையாக நலம் உசாவும் முறையும், அவர் பாதங்களைத் தூய்மை செய்து தன் இரு கைகளால் வணங்கித் தொழுவதும் அவளுடைய மிக உயர்வான பண்பட்ட மனப்பாங்கைக் காட்டுகிறது.

 Highly sophisticated!

இப்படிப் பல.

பிற பின்னர்.

devoo

unread,
Jan 15, 2011, 2:59:41 AM1/15/11
to மின்தமிழ்
> தேற்றாங்கொட்டை என்பதன் பொருள் விளக்கம் தர முடியுமா?<


http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88


தேவ்

On Jan 15, 1:38 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> ராஜம் அம்மா,
> இத்தொடரின் ஏனைய பகுதிகளும் மரபு விக்கியில் இணைக்கப்பட்டுள்ளன.

> இங்கே<http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%...>7ம்

> ...
>
> read more »

Geetha Sambasivam

unread,
Jan 15, 2011, 3:00:53 AM1/15/11
to mint...@googlegroups.com
தேற்றாங்கொட்டை, the nut of strychnos.

நீரைத் தெளிய வைக்க உதவும் ஒரு கொட்டை.


http://tinyurl.com/69zvhzt
[Open in new window]



2011/1/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>
ராஜம் அம்மா,
இத்தொடரின் ஏனைய பகுதிகளும் மரபு விக்கியில் இணைக்கப்பட்டுள்ளன. இங்கே 7ம் பகுதி வரை உள்ள தொகுப்பைக் காணலாம்.

இந்தத் தொடரில் எனக்கு சில கேள்விகள்.
 
"தேற்றாங்கொட்டையினால் தெளிந்த நீரைப் போலத் தெளிவு பெறுகிறாள். " இதில் தேற்றாங்கொட்டை என்பதன் பொருள் விளக்கம் தர முடியுமா?
 
இப்பகுதியில் குறிப்பிடப்படும் புண்ணியாரசன் வாழும் நாகபுரம் என்பது நாகர்கள் பற்றிய ஒரு பகுதியில் குறிப்பிட்டிருந்தீர்களே - அம்மக்கம் வாழும் ஊர் தானா? அல்லது வேறு ஒரு நகரமா?
 
அன்புடன்
சுபா


















--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

rajam

unread,
Jan 17, 2011, 2:50:43 AM1/17/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அன்பின் சுபா,
இத்தொடரின் பகுதிகளை மரபு விக்கியில் இணைத்தமைக்கு மிகவும் நன்றி! !
"தேற்றாங்கொட்டை" பற்றித் தேவ் + கீதா குறிப்புத் தந்துவிட்டார்கள் (விக்கித் தொடுப்பு). அவர்களுக்கு நன்றி!
இப்பகுதியில் குறிப்பிடப்படும் புண்ணியாரசன் வாழும் நாகபுரம் என்பது நாகர்கள் பற்றிய ஒரு பகுதியில் குறிப்பிட்டிருந்தீர்களே - அம்மக்கம் வாழும் ஊர் தானா? அல்லது வேறு ஒரு நகரமா?
 
1.
நாம் முதலில் பார்த்த நாகர்கள் வேறு. அவர்களைப் பற்றி "நக்க சாரணர் நாகர்" என்றும் அவர்கள் வாழும் இடம் "மலை" என்றும் மட்டுமே தெரிகிறது. அந்த மலைப் பகுதி எது என்று மணிமேகலையில் விளக்கம் இல்லை. எனக்கும் அது பற்றித் தெளிவு இல்லை.

2.
அந்த நாகர்களைப் பார்த்தவன் பெயர் சாதுவன். அவன் வாணிகம் செய்யும் மக்களோடு கப்பலில் போனபோது கப்பல் உடைந்துபோனதால் நாகர்கள் வாழும் மலையில் போய்ச் சேருகிறான். கடல் அலைகள் அவனை அப்படி அங்கே கொண்டு சேர்க்கின்றன.
3. புண்ணியராசன் வாழும் / ஆட்சி செய்துவரும் ஊர் நாகபுரம். இது சாவக நாட்டில் உள்ளதாக மணிமேகலை சொல்லுகிறது.
மேலும் விவரங்கள் கிடைத்தால் கட்டாயமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.
அன்புடன்,
ராஜம்


Innamburan Innamburan

unread,
Jan 17, 2011, 12:03:26 PM1/17/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
நான் அளவிலா மகிழ்ச்சியுடன் அறித்ன்ஹு கொண்டது அதிகம். நன்றி, ராஜம்.
இன்னம்பூரான்

2011/1/17 rajam <ra...@earthlink.net>

Innamburan Innamburan

unread,
Jan 17, 2011, 12:04:58 PM1/17/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
'அறிந்து' இந்த இழையில் தட்ட்ச்சு பிழை இருக்கக்கூடாது.


2011/1/17 Innamburan Innamburan <innam...@googlemail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages