671. கருந்துளை வெருளி – Melanoheliophobia
கருந்துளை குறித்த வரம்பற்ற பேரச்சம் கருந்துளை வெருளி.
கருந்துளை அல்லது கருங்குழி (Black Hole) என்பது, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி முதலான எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதி. இந்த எல்லை நிகழ்வெல்லை (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருந்துளை/கருங்குழி என்கின்றனர். இது குறித்த பேரச்சமே கருந்துளை வெருளி.
00
672. கரும்பறவை வெருளி – Kotsyfiphobia
கரும்பறவை(blackbird) குறித்த வரம்பற்ற பேரச்சம் கரும்பறவை வெருளி.
பறவை வெருளி உடையவர்களுக்குக் கரும்பறவை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
Kotsyfi என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கரும் பறவை.
00
673. கரும்பூனை வெருளி – Mavrogatphobia
கரும்பூனைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கரும்பூனை வெருளி.
நம் நாட்டில் பூனை குறுக்கே வருவதைத் தீக்குறியாகக் கருதுகின்றனர். மேனாடுகளில் கருப்புப் பூனையையப் பார்ப்பதைத் தீங்கு நேருவதன் அறிகுறியாகக் கருதுகின்றனர்.
Mavrogat என்பது விளையாட்டு ஒன்றில் கருப்புப் பூனை ஒன்றிற்குச் சூட்டிய பெயர்.அதுவே Mavrogat என்றால் கருப்புப் பூனை என்றாயிற்று.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5