தமிழ்மக்களிடம் நீதி கேட்டு ஓர் திறந்த கடிதம் - திருப்பரங்குன்றம்

12 views
Skip to first unread message

தேமொழி

unread,
Dec 16, 2025, 11:15:56 PM (2 days ago) Dec 16
to மின்தமிழ்
சமணத் திருப்பரங்குன்றம்

- Dr.கனக.அஜிததாஸ்

திசை என எடுத்துக் கொண்டாலும் குன்றத்தின் எத்திசை நோக்கினும் தொல்சமணத் தமிழனின் அடையாளங்கள்

அடி, உச்சி எனக் கொண்டாலும் குன்றின் அடிவாரத்திலும் அதன் உச்சியிலும் தொல் சமணத் தமிழன் அடையாளங்கள்

அந்ததமிழனின் உரிமையை மறந்து குன்றத்தின் உடைமை எனதே எனப் பேசுவது எவர் எழுதிய சட்ட நூலின் அற நூலின் அடிப்படையில் ?

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு

சட்ட நூலில் முதலும் முதன்மையானதுமான சட்ட விதியன்றோ, இதுவன்றோ?

நல்லறத்தை நீதியை நியாயத்தை நிலை நாட்ட உள்ளோர் இதை மனனம் செய்துகொண்டு செயல் படுத்திட எழுதப்பட்டதள்ளவோ இது?

கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில்

சங்ககாலத்திலிருந்தே திருப்பரங்குன்றத்தில் சமணம் சிறப்புற விளங்கி இருக்கின்றது இதற்கு உறுதியான காலத்தால் அழிக்க இயலா சான்றுகள் பல உள்ளன

திருப்பரங்குன்றத்தில் பல்வேறு பகுதிகளில் சமணர்கள் வழிபாட்டுத் தலத்தையும் உறைவிடத்தையும் அமைத்திருக்கின்றனர்

1-குன்றத்தின் மேற்குக் கோடி உச்சி
வடக்குப் பார்த்த நிலையில் உள்ள இயற்கையான குகைத்தளசங்க காலத்து சமணப் பள்ளி
மூன்று தமிழ் -பிராமி கல்வெட்டுகள் மற்றும் கற்படுக்கைகள்
பொ.ஊ.மு (கி.மு) இரண்டாம் நூற்றாண்டு முதலாம் நூற்றாண்டு தமிழ் பிராமி கல்வெட்டுகள்

2-வடப் பக்கம் மலை அடிவாரம் பழனி ஆண்டவர் கோயில் பின்புறம் உள்ள சுனைப் பகுதி
கி-பி 9 ஆம் நூற்றாண்டு தீர்த்தங்கர சிற்பங்கள் - மகாவீரர் ,பார்ஸ்வனாதர் பாகுபலி
கி-பி 9 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு

3-மலையின் தென்பகுதி உச்சி
பழனி ஆண்டவர் கோயில் அருகில் உள்ள படிகள் வழியே செல்ல வேண்டும் தமிழ் பிராமி கல்வெட்டு (மு நகர ஐ மூஸா கதி),  
பார்ஸ்வனாதர் -பாகுபலி சிற்பங்கள் -முற்காலப் பாண்டியர் கால சிற்பங்கள்

4-தெற்குப் பக்கம் - உமையாண்டவர் கோயிலாக மாற்றம் பெற்ற -முற்காலப் பாண்டியர் காலத்து (8 ஆம் நூற்றாண்டு) சமணக் குடைவரை.  இதில்பிற்காலப் பாண்டியர் காலத்தை (13 ஆம் நூற்றாண்டை) சார்ந்த அர்த்த நாரீஸ்வரர் சிற்பம்

பரங்குன்றில் இவ்வளவு தொன்மையான அடையாளங்களைக்கொண்ட மற்றொரு சகோதரனின் உரிமையை சமண சகோதரன் உரிமையை மறந்து யாவும் எனதே எனில் இதில் அறம் எங்கே ? நீதி,நேர்மை எங்கே ?

பரங்குன்றில இவ்வளவு தொன்மையான அடையாளங்களைக்கொண்ட அவனுக்கென ஒரு கல் தூண்கூட உரிமையில்லை,யாவும் எமதே எனில் என்ன நீதி பரிபாலனம் ?

குன்றத்தில் இன்று பயன் கொள்போருடைய உரிமையை, சமணத் தமிழர் மறுக்கவில்லை இடத்தைக் கேட்கவில்லை. குன்றத்தின் பல பகுதிகளில் தவமிழைத்து வடக்கிருந்து (சல்லேகனை) உயிர் நீத்த சமண மாமுனிவர்களை வணங்கிட, சமண இல்லறத்தார் நிறுவிய ஒரு கல் தூண் அவர் உரிமை பொருள் அல்லவா? வர்த்தமான மகாவீர பிறவா நிலை எய்திய நாளன்று அவர் நினைவாக எங்கும் மோட்ச தீபம் ஏற்றும் வழக்கம் தீபாவளியாக மலர்ந்ததன்றோ. தீப வழிபாடு சமண வழிபாட்டின் முக்கிய அங்கம். அறியாமை இருளைப் போக்கி நல் ஞானத்தை நான் பெற வேண்டும் என எண்ணிட தீபம் ஏற்றுவது சமணத்தின்தொல் வழிபாட்டு முறை இன்றும் சமண ஆலயங்களில் இந்த கருத்தொடுதான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது .

இன்று அடிப்படை இன்றி சிக்கலில் ஆட்படுத்தப்பட்ட அந்த கற்றூண் குன்றத்தில் உள்ள தொன்மையான ஆதாரங்களின் அடிப்படையில் சமணத்தமிழர்கள் சமண இல்லற நெறியினர் தம் வழிபாடுகளில் வடக்கிருந்து உயர் பிறப்புற்ற, பிறவா நிலை அடைந்த முனிவர்களை எண்ணி பெருவிளக்கேற்றி வழிபாடு செய்ய நிறுவப்பட்ட ஒன்று என்பதில் என்ன ஐயம்? நியாயம் கிடைக்குமா?

Dr.கனக.அஜிததாஸ்

பேரா. கனக. அஜிததாஸ் (ஆசிரியர், முக்குடை) அவர்களின் கடிதம் இணைப்பில் . . . 
Dr. Kanaka Ajithadas1.jpg
Dr. Kanaka Ajithadas2.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages