திருமலையில் அமைதியாக சாமி கும்பிடுவது எப்படி

270 views
Skip to first unread message

Dhivakar

unread,
Dec 14, 2010, 5:03:56 AM12/14/10
to minT...@googlegroups.com
திருமலை வேங்கடத்தானை அமைதியான முறையில் வரிசையில் சென்று அமைதியான முறையில் கர்ப்பக்கிருகத்துள் நுழைந்து அமைதியான முறையில் ஆண்டவனை தரிசித்து அவன் அருளை ஆனந்தமாகப் பெறுவது எப்படி?

இப்படிக் கேட்டால் ‘அட போங்க சார்.. ஜோக் அடிக்காதீங்க’ என்பார்கள் விவரம் தெரிந்த அநேகம்பேர். ஆனால் கொஞ்சம் சீரியஸாகவே இதைப்பற்றி சமீபத்தில் திருப்பதியில் தேவஸ்தானத்தார் சார்பில் திருப்பதியில் ஒரு செமினாரே நடந்தது. இந்த செமினாருக்கு அடியேனையும் அழைத்திருந்தார்கள் என்றாலும் சில பல காரணங்களால் செல்லமுடியவில்லை. ஆனாலும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட முக்கிய விஷயங்கள் பற்றிய முழுத்தகவலும் நம்மிடையே வந்துள்ளதால் அவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கூட்டத்தில் முக்கிய புள்ளி விவரங்களோடு சில பொறுப்புள்ள அதிகாரிகள், ஒரு சில பெருமக்கள் பேச்சு விவரம்,

திரு அஜய கல்லம் (முன்னாள் செயல் அதிகாரி, தி.தி.தே): தற்போதுள்ள கர்ப்பக்கிருகத்தில் சில மாற்றங்களை செய்யவேணும்.

ஒரு பக்கமே வழி என்பதால் கூட்டம் தரிசிக்க இயலாமல் தள்ளாடுகிறது. இரண்டு பக்கங்களிலும் வழி செய்யப்படவேண்டும். 

ஆகமவிதிமுறைகள் என்பது கர்ப்பகிருக மாற்ற விஷயத்தில் குறுக்கிட்டால், காலத்துக்கேற்ப சாந்தி முறைகள் செய்துகொள்ளலாம். கோயிலே பல மாற்றங்களை காலவாக்கில் சந்தித்துள்ளது.

கர்ப்பக்கிருக ஆலயத்தில் உள்ள ஊழியர்களுக்கு, அவர் என்னதாம் கஷ்டப்பணிகளை மேற்கொண்டவராயினும், பக்தர்களை மதிக்கும் பண்பாடு காட்டாயமாக கற்றிருக்கவேண்டும். பக்தர்களை இழுப்பது, அவர்களைத் தள்ளுவது, திட்டுவது போன்றவை நிறுத்தப்படவேண்டும்.

கோயிலில் தினம் 60000 பக்தர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான் எனும் பட்சத்தில் வி.ஐ.பி. பக்தர்களுக்கு, அவசியப்பட்டலொழிய, முக்கியத்துவம் தராமல் இருக்கவேண்டும். தரிசன் வேளைகளை நாள் முழுதும் வைத்திருக்கமுடிந்தால் இன்னமும் எளிதாகும்.

திரு சௌந்தரராஜன், ஆந்திர மாநில ஆலயக் காப்பாளர், சில்கூர்(ஹைதராபாத்)பாலாஜி கோயில் நிர்வாகி:
கூட்டங்களைக் குறைக்க திருப்பதியில் உள்ள பல தலங்கள் (முக்கியமாக சீனிவாசமங்காபுர வேங்கடவர்), சில்கூர் பாலாஜி, ஏலூர் வேங்கடவர், விஜயநகரம் அருகே உள்ள திருவேங்க்டவர், மதுரை சீனிவாஸர், ஒப்பிலா அப்பன் போன்ற கோயில்களையும் தி.தி.தே சமான அந்தஸ்து கொடுத்து பூஜை விதானங்கள், கல்யாண கைங்கரியங்கள் போன்றவை நடத்தவும் வழி வகை செய்தால் கால் பங்கு திருமலை கூட்டம் குறையும். திருவேங்கடவனுக்கு சமானமானவன் இந்த கோயில்களில் இருக்கும் பகவான் என்று தி.தி.தே செய்தி மீடியா மூலம் பரப்புதல் அவசியம்.

திரு கிருஷ்ணாராவ், இன்றைய செயல் அதிகாரி:

ஆகமமுறைகளில் எந்த மாற்றத்தையும் ஜீயர்கள் முதல் கோயில் அர்ச்சகர் வரை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். ஆகையினால் கர்ப்பக்கிருக மாற்றத்துக்கு வழி இல்லை.

லகு தரிசனம் (தூரத்தில் நின்று தரிசிக்கும் முறை) என்பது பக்தருக்கு திருப்தியாக இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ரூ.300 டிக்கட் தரிசனம் உடனடியாக வந்து போவதற்கு வசதி இருந்தாலும், அவர்கள் கோயில் வாசல் வரும்போது பொது தரிசனத்தோடு கலந்து விடுவதால் அவர்களும் திருப்தியில்லாமல் இருக்கிறார்கள். இப்போதைய சூழ்நிலையில் எங்களால் செய்யமுடிந்தது இவ்வளவுதான். கூட்ட நெரிசல் என வரும்போது எங்களால் முடிந்த அளவு போராடுகிறோம். வி.ஐ.பி தரிசங்கள் கூட கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம்.

கர்ப்பக்கிருக பகுதியில் ‘தானியங்கி நகரும் மேடை’ ஒன்று ஜனவரி மாதத்தில் பரிசோதனை முறையில் அமைக்க உள்ளோம்.இதன்படி கர்ப்பக்கிருகத்தில் ஒரு முறை கூட்டம் நுழைந்தால் அந்த மேடை ஒரு சுற்று சுற்றி அதுவாகவே பக்தர்களை வெளிக்கொணர்ந்து விடும். இதனால் ஊழியர்களின் கெடுபிடிகள் கர்ப்பக்கிருகத்தில் வெகுவாகக் குறையும். ஆனால் நடைமேடையில் ஏறும்போதும், இறங்கும்போதும் எச்சரிக்கையாக இருப்பதறகும், பக்தர்களை கையாள்வதற்கும் அவர்களுக்குப் பயிற்சி தரப்படும். இது பரிசோதனை முறைதான்.பொது பக்தர்கள் நீண்டநேரம் காக்கவைக்காமல் இருப்பதற்கு தற்சமயம் 15000 வரை கொடுக்கப்பட்டு வரும் 300 ரூபாய் டிக்கெட்டுகள் பத்தாயிரம் வரை குறைக்கப்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------
இது போக இன்னமும் தங்கும் வசதிகள், கட்டண பூஜை விதானங்கள், கல்யாணங்கள் என எல்லாவித விஷயங்களும் அலசப்பட்டன. அவை பற்றிய விஷயங்களை நான் இங்கு எழுதவில்லை. 

தனிப்பட்ட முறையில் அடியேனால் திருமலை செல்லும் பக்தருக்கு சில ஆலாசனைகள்.

1. முடிந்தவரை உங்கள் பயணத் திட்டங்களை திங்கள் முதல் வெள்ளி என வாரகாலத்தில் வைத்துக் கொள்ளுங்கள். லீவு நாள் எனப் பார்த்து சனி, ஞாயிறன்று அத்தனை மக்களும் எல்லாப்பகுதியிலிருந்தும் வருவதால் ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளது. அங்கே காவல் காப்பவர்கள் ஒருவேளை தேவர்களே ஆனாலும் கூட கூட்ட நெரிசலை அதுவும் சின்னஞ்சிறிய ஏழுமலையில் ஒன்றும் கட்டுப்படுத்தமுடியாது
.
2. முடிந்தவரை, ஏஜென்சி மூலம் அல்லாமல் நீங்களே நேரில் திருப்பதி-திருமலை சென்று, முடிந்தால் ரூ 300 டிக்கெட்டை வாங்கிச் செல்லுங்கள். ஒரு சில நாட்கள் தவிர ஏனைய வாரநாட்களில் நிம்மதியாகவே தரிசனம் காணமுடியும்.ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்தில் தரிசனம் கிடைக்கும்
.
3. எக்காரணம் கொண்டும் ஏஜெண்டுகளுக்கு லஞ்சம் கொடுத்து (300 ரூ டிக்கெட் சில சமயம் 1000 வரை விற்கப்பட்டு, உங்களை கோயில் வாசல் கும்பலோடு வசதியாக கலக்கவிடுவார்கள்)ப் போக வேண்டாம். டெம்ப்ட் செய்வார்கள். நாமும் கும்பலைப் பார்த்து பயந்துபோவோம். தவிர்க்கப்பார்க்கவும்.

முடிந்தவரை சிபாரிசுகளை எடுத்துச் செல்லாமல், திருவேங்கடவனை மட்டுமே சிபாரிசாகக் கொண்டு செல்லுங்கள். நிச்சயம் திருப்தியான தரிசனம் கிடைக்கும். அங்கே தங்கிப் பாருங்கள். இயற்கை சூழ்நிலைகள் உங்களைப் பரவசப்படுத்தும்.

திருமலையாண்டவன் தரிசனம் என்பது எத்தனைதான் சிரமப்பட்டாலும் தனிப்பட்ட அளவில் எல்லோருக்குமே திருப்திகரமானதாகத்தான் இருக்கும் .அதுதான் திருமலையாண்டான் ஸ்பெஷாலிடி. அவன் தனிப்பட்ட ஒவ்வொருவர்களின் சாமி. HE KNOWS YOU, SO NOT TO WORRY.

kalairajan krishnan

unread,
Dec 14, 2010, 5:39:07 AM12/14/10
to mint...@googlegroups.com
ஐயா திவாகர் அவர்களுக்கு வணக்கம்,

தங்களது வழிகாட்டுதலுக்கு நன்றியு​டை​யோம்,
அன்பன்
கி.கா​ளைராசன்



--
​திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/

அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

Tthamizth Tthenee

unread,
Dec 15, 2010, 12:06:18 AM12/15/10
to mint...@googlegroups.com
முடிந்தவரை சிபாரிசுகளை எடுத்துச் செல்லாமல், திருவேங்கடவனை மட்டுமே சிபாரிசாகக் கொண்டு செல்லுங்கள். நிச்சயம் திருப்தியான தரிசனம் கிடைக்கும்
 
சத்தியமான வார்த்தை
 
எனக்கு அது போல் பல அனுபவங்கள் உண்டு
 
ஏழுமலையனுக்கு மட்டுமில்லை
 
எந்தக் கோயிலானாலும்  தெய்வமே எனக்கு அருபுரிந்து நீங்கள்தான்  தரிசனம் தரவேண்டும்  என்று வேண்டிக்கொண்டு கிளம்புவேன்\\நிச்சயம் ஏதாவதொரு வகையில் அருமையன தரிசனம்  கிடைக்கும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/12/14 kalairajan krishnan <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Dhivakar

unread,
Dec 15, 2010, 2:13:03 AM12/15/10
to mint...@googlegroups.com
திரு காளைராஜன்,
இது வழிகாட்டுதல் அல்ல.. ஆலோசனைதான்.
நன்றி
அன்புடன்
திவாகர்

2010/12/14 kalairajan krishnan <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Dhivakar

unread,
Dec 15, 2010, 2:24:53 AM12/15/10
to mint...@googlegroups.com
தற்சமயம் முக்கியமான ஊர்களில் 50 ரூபாய் டிக்கெட் மற்றும் 100 ரூபாய் தங்குமிடங்களுக்கான முன்பதிவு வசதிகள் உள்ளன. திருப்பதி செல்லும் பக்தர்கள் முன்கூட்டியே பயணதிட்டங்களை வைத்திருக்கும் பட்சத்தில் இந்தவகையிலான முன்பதிவு நிச்சயம் பயனளிக்கும். 

மலை மேல் தங்கும்போது அங்குள்ள மற்ற இடங்களையும் ஒருமுறையாவது பார்த்து வரவும். முக்கியமாக ஸ்ரீவாரு பாதம், சிவலிங்க தரிசனம் (சிலாதோரணம்), ஆகாசகங்கா தீர்த்தம் போன்ற இடங்கள் பார்க்கவும். ஜீப் கள் ஏராளமாக உள்ளன. வாடகையும் அவ்வளவாக இருக்காது. இரண்டு மணிநேரத்தில் முடிவடையும்.

தி

2010/12/15 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Dec 15, 2010, 6:29:45 AM12/15/10
to mint...@googlegroups.com
திருப்பதிக்கு செல்வோர்
 
அலமேலுமங்காபுரம் சென்று அலமேலு மங்கை நாச்சியாரை தரிசனமும் முடித்து  திரும்புவது வழக்கம்
 
ஆனால்  அதற்கும் மேலே  ஆமாம் திருப்பதிக்கும் மேலே  செல்லும் பாதை உள்ளது
அந்த வழி சென்றால் ஸ்ரீனிவாசபுரம்  என்னும் இடம் உள்ளது  அங்கே கல்யாணவெங்கடேசப் பெருமாள் கோயில் உண்டு, அவரை  ஸ்ரீனிவாசருக்கு அண்ணன் என்பார்கள்
 
அவரையும் தரிசனம் செய்துகொண்டு, அப்படியே  இன்னும் சற்று மேலேறினால் மலை முடியும் இடத்தில்   பதினைந்து படிக்கட்டுகள் கொண்ட ஓரு மண்டபம் உள்ளது, அங்கே  ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதம் பீடத்தில் உள்ளது, ஸ்ரீனிவாசன்  அங்கே தான் வந்து நின்றானாம் சொல்வார்கள், அந்த பாதங்களையும் தரிசிக்கலாம், அப்படியே  திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின்  மேற்புற தரிசனமும்  செய்யலாம் ,ஆமாம் அங்கிருந்து பார்த்தால் திருப்ப்பதி கோயிலின் முழு அமைப்பும் தெரியும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/12/15 Dhivakar <venkdh...@gmail.com>

LK

unread,
Dec 15, 2010, 6:31:48 AM12/15/10
to mint...@googlegroups.com
அய்யா நீங்கள் சொல்வது நித்யக் கல்யாணப் பெருமாள் கோவிலா ??

2010/12/15 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com

Geetha Sambasivam

unread,
Dec 15, 2010, 6:50:22 AM12/15/10
to mint...@googlegroups.com
மலை மேல் தங்கும்போது அங்குள்ள மற்ற இடங்களையும் ஒருமுறையாவது பார்த்து வரவும். முக்கியமாக ஸ்ரீவாரு பாதம், சிவலிங்க தரிசனம் (சிலாதோரணம்), ஆகாசகங்கா தீர்த்தம் போன்ற இடங்கள் பார்க்கவும். ஜீப் கள் ஏராளமாக உள்ளன. வாடகையும் அவ்வளவாக இருக்காது. இரண்டு மணிநேரத்தில் முடிவடையும்.//

நாயுடு முதல்மந்திரியாய் இருந்தப்போ இங்கே எல்லாம் போய்ப் பார்த்தோம். அப்போ 50ரூ டிக்கெட் தான் ஒரே மணி நேரத்தில் அருமையான தரிசனம். ஜருகண்டி எல்லாம் சொல்லவில்லை.  சீக்கிரம்போங்கனு கெஞ்சி அனுப்பினாங்க. :(



2010/12/15 Dhivakar <venkdh...@gmail.com>
தற்சமயம் முக்கியமான ஊர்களில் 50 ரூபாய் டிக்கெட் மற்றும் 100 ரூபாய் தங்குமிடங்களுக்கான முன்பதிவு வசதிகள் உள்ளன. திருப்பதி செல்லும் பக்தர்கள் முன்கூட்டியே பயணதிட்டங்களை வைத்திருக்கும் பட்சத்தில் இந்தவகையிலான முன்பதிவு நிச்சயம் பயனளிக்கும். 

மலை மேல் தங்கும்போது அங்குள்ள மற்ற இடங்களையும் ஒருமுறையாவது பார்த்து வரவும். முக்கியமாக ஸ்ரீவாரு பாதம், சிவலிங்க தரிசனம் (சிலாதோரணம்), ஆகாசகங்கா தீர்த்தம் போன்ற இடங்கள் பார்க்கவும். ஜீப் கள் ஏராளமாக உள்ளன. வாடகையும் அவ்வளவாக இருக்காது. இரண்டு மணிநேரத்தில் முடிவடையும்.


karuannam annam

unread,
Dec 15, 2010, 7:59:17 AM12/15/10
to mint...@googlegroups.com
முதலில் வரிசை எல்லாம் ஒழுங்காகச் செல்கிறது. ஆனால் நெருங்கும் இடத்தில் பல வரிசைகளையும் ஒழுங்கு முறையின்றிக் கூட்டமாகக் கலக்கவிட்டு நெருக்கடி, தள்ளுமுள்ளு ஆகிவிடுகிறது.
ஏதாவது ஆலோசனை கொடுத்து ஒழுங்கு செய்தால் தங்களுக்குப் புண்ணியம் திரு திவாகர்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

Tthamizth Tthenee

unread,
Dec 15, 2010, 8:05:15 AM12/15/10
to mint...@googlegroups.com
ஆமாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

kalairajan krishnan

unread,
Dec 15, 2010, 9:01:23 AM12/15/10
to mint...@googlegroups.com
ஆமாம் ஆமாம்,  ஐயா திவாகர் அவர்கள் அன்பு ​செய்ய ​செய்ய ​வேண்டும்,
அ​னைவருக்கும் இல்லாவிட்டாலும்
மூத்​தோருக்கு மட்டுமாவது முடிந்தவ​ரை ​செய்யவும்,

​பெருமாள் முன் நின்று ​கொண்டு பிடித்துத் தள்ளும் அந்த அலுவலர் நடுவில் நின்று ம​றைக்காமல் இருந்தா​லே ​போதும்
திரும​லையானின் திருவடித் தரிசித்து மகிழ்ந்து உய்யலாம்,

திருப்பூவணப் புராணம் ​தெளிவாகக் கூறுகிறது,
அவ​னை அண்டிய அடியார் மனம் ​​​​நோகும்படி இலக்குமி​தேவி நடந்து ​கொண்டதால், அத்தேவி​யை​யே அவன் விளக்கி​வைத்தான் என்று,

திரு​வேங்கடவனுக்கு முகவரி யிடப் ​பெற்ற கடிதங்கள்
தங்கள் வழியாக அனுப்பப் படுகின்றன,

திரு​வேங்கடவனின் திருவரு​ளைச் சிந்தித்து
அன்பன்
கி,கா​ளைராசன்

Dhivakar

unread,
Dec 15, 2010, 11:49:15 AM12/15/10
to mint...@googlegroups.com
>>ஏதாவது ஆலோசனை கொடுத்து ஒழுங்கு செய்தால் தங்களுக்குப் புண்ணியம் திரு திவாகர்.<<

திரு அஜய கல்லம் அங்கே சொன்னதில் பாதி அடியேன் அவருக்கு எடுத்துச் சொன்னதன் விவரம்தான். (அஜய் கல்லம் தற்சமயம் இங்கே உள்ள துறைமுகத்தின் தலைவர்)ஆதி காலத்தில் வெறும் தனி ஒருவனாக திருவேங்கடவன் நின்றுகொண்டு வானமே கூரையாக சந்திரனும் சூரியனும் இரண்டு பக்கத்தில் தரிசனம் செய்வதை சிலப்பதிகாரத்தில் தமிழில் எடுத்துச் சொல்லியதையும், ஆகம விதிகளின் படி திருவேங்கடக்கோவில் அமையவில்லை என்பதை மிகப்பலமாக எடுத்துச் செல்லவேண்டும் என்பதையும் சில ஆதாரங்களோடு விவரித்தேன். கர்ப்பக்கிருக வெளிவாசலை நிச்சயம் இந்தக் காலத்துக்கு ஏற்றபடி மாற்றம் செய்தல்வேண்டிய அவசியமும், தற்போது 60000 பக்தர்கள் என்பது பிற்காலத்தின் ஒருலட்சம் தாண்டும் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படவேண்டும் அதற்காக வெளிப்பக்க கர்ப்பக்கிருகத்தில் மாற்றம் அவசியம் என்பதையும் எடுத்துச் சொன்னேன். ஆனால் ஆகமக் காரணங்களை முன்னுறுத்தி இந்த யோசனை ஆதியிலேயே நிராகரிக்கப்பட்டது. ஆனால் பழமை வாய்ந்த ஆயிரம்கால் மண்டபத்தை சில வருடங்களுக்கு முன்பு இடிக்கும்போது இந்த ஆகம விஷயத்தைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டார்கள் என்பது பார்க்கவேண்டிய விஷயம். ஆக.. அந்த வேங்கடவனே வந்து ஆலோசனை கொடுத்தாலும் இதற்கெல்லாம் செவி சாய்க்க மாட்டார்கள்.

கூட்ட நெரிசலுக்கு முக்கால்வாசிக் காரணம் நம் மக்களிடம் உள்ள அவசரக்குணம்தான் காரணம். எதற்கு என்னவென தெரியாமலே வரிசையிலே நிற்பவர்கள் திடீரென குழுமமாக முன் வந்து முந்திக்கொண்டும் தள்ளிக்கொண்டும் முன்னேறுவது சர்வ சகஜம்.

இந்த தானியங்கி நகரும் மேடை கர்ர்ப்பக்கிருகத்தில் ஏதோ சில நல்லது செய்யும் போலத் தெரிகிறது. பொருத்திருந்து பார்க்கவேண்டும்.

2010/12/15 karuannam annam <karu...@gmail.com>
முதலில் வரிசை எல்லாம் ஒழுங்காகச் செல்கிறது. ஆனால் நெருங்கும் இடத்தில் பல வரிசைகளையும் ஒழுங்கு முறையின்றிக் கூட்டமாகக் கலக்கவிட்டு நெருக்கடி, தள்ளுமுள்ளு ஆகிவிடுகிறது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Dhivakar

unread,
Dec 15, 2010, 11:58:27 AM12/15/10
to mint...@googlegroups.com
மூத்தோருக்கு அங்கே கோயில் வாசலிலிருந்து செல்வதற்கு சௌகரியம் உண்டு, மாற்றுத் திறனாளிகளும் கோபுர வாசலிலிருந்தே செல்லலாம். கட்டணம் இல்லை (என நினைக்கிறேன்).Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Tthamizth Tthenee

unread,
Dec 15, 2010, 9:32:09 PM12/15/10
to mint...@googlegroups.com
இல்லை கட்டணம் கிடையாது  ஆனால் 70 வயதுக்கு மேற்பட்டிருக்க வேண்டுமாம்
 
அதே போல கைக்குழந்தையை வைத்திருக்கும் தம்பதியருக்கு கட்டணம் இல்லாமல்  அனுமதித்தார்கள்
 
அதே போல பக்தர்கள் காத்திருக்கும் அறையில் உட்கார்ந்திருந்த போது இலவச ப்ரசாதம்  குழம்பு சாதம் வழங்கினர்
 
எல்லோரும் அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடி குறைந்த அளவு பக்தர்கள்  மட்டுமே வாங்கிக்கொண்டு  மற்றவர்களுக்கு இல்லாமல் செய்துவிட்டனர்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 


 
2010/12/15 Dhivakar <venkdh...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Dec 15, 2010, 10:03:50 PM12/15/10
to mint...@googlegroups.com
என்னதான் சொல்லுங்க மூத்தோருக்கு அமெரிக்க அரசு தரும் போற்றுதல் உடைய செயல்முறை இங்கு இல்லை.  நான் அமெரிக்கா வந்தபோது க்ளீவ்லண்டில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த தீனன் அவர்கள் அங்குள்ள டால்ஃபின் காட்சிக்கு அழைத்துச் சென்றார்.  கூட்டம் கண்டு அச்சம் கொள்ள வேண்டாம் நான் முது குடிமகன் இங்கே எங்களுக்குத் தனி வழி தனி மரியாதை என்று அழைத்துச் சென்றார். 
அமெரிக்கா முதியவர் உலகு
65 வயதுக்கு மேல் 25% மற்றும் 75 வயதுக்கு மேல் 15% 100 வயதுக்கு மேல் வாழும் மக்கள் தொகை 3,00.000 என்றும் கணக்கு உண்டு.
ஒரு சோகத்தகவல் (ஆண்களுக்கு)
அந்நாட்டில் அதிக வயது உயிர் வாழ்வோர் பெண்கள் (இங்கே தினம் தாலியைத்தொட்டு ஆண்டவனே அவரக் கூப்பிடருதுக்கு முன்னால் என்னக் கூப்பிட்டுக்கோ என்று உரியும் பயனில்லை ஆண்கள் முன்னே பெண்கள் பின்னே)

அமெரிக்காவின் சொத்தில் 75% 65 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் கையில்
வெங்கடேசப் பெருமாள் (அமெரிக்காவிலும் இருக்கும்) தன் அருட் பார்வையைத் திருப்பதியில் செலுத்தி மூத்த குடிமகன்களுக்கு அருள் பாலிக்க வேண்டும்.
நாகராசன்


2010/12/16 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 18, 2010, 8:52:03 AM12/18/10
to mint...@googlegroups.com
திருப்பதி வேங்கடத்தான் கோயிலுக்குச் செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் இவை. நான் 2002ம் ஆண்டு சென்றிருந்தேன். நீங்கள் குறிப்பிடுவது போல அது ஒரு வார நாள். அதனால் அவ்வளவாக கூட்டமில்லை. தமிழ் நாடு அரசாங்க சுற்றுலா துறை ஏற்படுத்தியுள்ள பஸ் பயணம் தான் மேற்கொண்டேன். அலுப்புரும் பயணம் தான் அது. ஆனாலும் கோயிலை அடைந்த பின்னர் அந்த அலுப்பு மறைந்தே விட்டது. அதோடு சுவாமி தரிசனமும் எந்த பிரச்சனையுமின்றி அமைந்தது. சுவாமி தரிசனத்துக்கு 100 ரூபாய் டிக்கட் வாங்கியிருந்தேன். ஆக சற்று நின்று இறை தரிசனத்தை நன்றாக செய்ய முடிந்தது.
 
-சுபா

2010/12/14 Dhivakar <venkdh...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages