உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research -IATR)

187 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 25, 2024, 12:37:08 AMFeb 25
to மின்தமிழ்
தமிழர்கள் கவனத்திற்கு ஒரு திறந்த கடிதம் : 

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research -IATR)
என்ற பெயரில் உலகளாவிய தமிழ் மாநாடுகள் நடத்தும் ""போட்டி மாநாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தமிழர் கடமை"". 

மீண்டும் தமிழர்களைக் குழப்பும் வகையில் "உலகத் தமிழ் மாநாடு"  குறித்த அறிவிப்புகள் தொடங்கியுள்ளன.  

12 ஆவது உலகத் தமிழ் மாநாடு அறிவிப்பு – மொரிசியசு
 இது ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) கொடுத்த  அறிவிப்பு
https://keelainews.com/world-tamil-manadu/22/02/2024/

12 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சென்னை
உலகத்தமிழ் ஆராய்ச்சிமன்றம் சார்பில், அடுத்தாண்டு மே மாதம், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 12வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மூன்று நாள் மாநாடு நடக்க உள்ளது.
https://m.dinamalar.com/detail.php?id=3537507

***இந்த இரு பிரிவுகளில்  யார் "உலகத் தமிழ் மாநாடு"  என்பதை நடத்தச் சட்டப்படி உரிமை உள்ளவர்????***
'உலகத் தமிழாராய்ச்சி மன்றம்' (International Association of Tamil Research -IATR) என்ற அமைப்பின் உரிமையாளர் யார் என்பதை முதலில் தமிழர்களுக்குத் தெளிவு படுத்துங்கள்

ஏன் இந்தக் குளறுபடிகள்?

தகுதி உள்ளவர் மட்டுமே ஒன்றில் தொடங்கி 12 வரை உலகத் தமிழ் மாநாடுகள் என்ற தொடர் வரிசைக்கு உரிமை கொண்டாட முடியும் எனத் தெளிக. 

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்று அமைப்பின் பெயர் இருந்தாலும், இதுவரை நடத்தப்பட்ட மாநாடுகள்  யாவும்  "உலகத் தமிழ் மாநாடு"   என்ற பெயரில் மட்டுமே  நடத்தப்பட்டது.  மாநாட்டு மலர்களும் "உலகத் தமிழ் மாநாட்டு மலர்" என்றுதான் வெளியிடப்பட்டன. 
ulagath thamizh maanaadu.png
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  என்ற பெயரில் மாநாடுகள் முன்னர்  நடத்தப்படவில்லை என்பது தெளிவாகக் காட்டும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்ற பெயரில் மாநாடு நடத்துவது சரியா என்று. 

இப்பொழுது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்த முற்படும் பிரிவால் "உலகத் தமிழ் மாநாடு"   என்ற பெயரில்  அதிகாரப்பூர்வமாக நடத்த முடியுமா? அதற்குத் தக்க உரிமை உள்ளதா?

இல்லையெனில் இவர்கள் 12 ஆவது என்ற மாநாட்டு வரிசை எண்ணைப் பயன்படுத்தவும்  தகுதி அற்றவர்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  

தகுதி அற்றவர்கள் வேறு பெயரில் ஒன்று அடுத்து இரண்டு என்று தொடருங்கள். 

தமிழ்நாட்டு அரசு இந்த இரு பிரிவினருக்குமே எந்த வகையிலும் மாநாட்டிற்கான  ஆதரவும் நிதி உதவிகளும் செய்வது சரியல்ல. 

விக்கிப்பீடியா பதிவுகளும் உலகத் தமிழ் மாநாடு என்ற தலைப்பில் மட்டுமே இருக்க வேண்டும்.  

முதலில் உண்மை எது போலி எது என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். 

அதன் பின்னர் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தட்டும், மக்களும், அரசும், ஆய்வாளர்களும், தமிழர்களும் ஆதரிக்கட்டும்.  

சென்ற முறையிலிருந்து இந்த நிலை நகைப்பிற்கு இடமாக உள்ளது. 

தமிழர் நலம் நாடும் 
முனைவர் தேமொழி 
  



இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 25, 2024, 9:30:59 AMFeb 25
to mint...@googlegroups.com
தேமொழி அம்மைாருக்குப் பாராட்டுகள்,
மொரிசியசு நாட்டில் நடத்த உள்ள அமைப்பே உண்மையான அமைப்பு. அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால் குழப்பம் தொடர்கிறது. 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e37fbc1d-4161-4108-ae0c-9911dd882eaen%40googlegroups.com.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

தேமொழி

unread,
Mar 2, 2024, 3:39:34 PMMar 2
to மின்தமிழ்
ref :  https://www.facebook.com/viruba/posts/pfbid02bYSrbWFcjVCHX1KhLwZvE2qwWLnb2KzqAGxgtNMkse2nXJdhNcYmJVbwuKpweKszl


// உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்று அமைப்பின் பெயர் இருந்தாலும், இதுவரை நடத்தப்பட்ட மாநாடுகள் யாவும் "உலகத் தமிழ் மாநாடு" என்ற பெயரில் மட்டுமே நடத்தப்பட்டது. மாநாட்டு மலர்களும் "உலகத் தமிழ் மாநாட்டு மலர்" என்றுதான் வெளியிடப்பட்டன. //
International Association of Tamil Research (IATR) என்பதன் தமிழ் - உலகத் தமிழாராய்ச்சி மன்றம். இவ்வமைப்பானது ஈழத்தைச் சேர்ந்த தனிநாயக அடிகளாரினால் 1952-1966 இடைப்பட்ட காலத்தில் ஆங்கில மொழியில் நடாத்தப்பட்ட Tamil Culture ஆய்விதழின் தொடர்ச்சி ஆகும். Tamil Culture ஆய்விதழின் அடிநாதமென்பது தமிழ்மொழிக்குரிய சிறப்பான விடயங்களை ஆங்கிலத்தில் உலகிற்குக் கொண்டுசெல்லுதலாகும். 1950களில் ஆங்கிலமொழியில் எழுதப்பட்ட இந்திய வரலாறுகளில் தமிழ் மொழி, இனம் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்காத ஒரு இருட்டடிப்பு நிகழ்ந்துகொண்டிருந்தவேளையில் தமிழ் தொடர்பான உண்மைகளை உலகிற்கு உரத்துச் சொல்லவேண்டிய தேவையின்பொருட்டு Tamil Culture ஆங்கிலத்தில் ஆராய்ச்சிபூர்வமான கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது. இவ்விதழில் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வந்த உலகளாவிய ஆராய்ச்சியாளர்களையும் தமிழைப் பல்கலைக்கழங்களில் கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர்களையும் ஒரே குடையின்கீழ் ஒருங்கிணைத்து நேரடியான கருத்துப் பரிமாற்றம் நிகழ்வதற்குரிய களமாக உலகத் தமிழாராய்ச்சி மன்றம் செயலாற்றத் தொடங்கியது. 1966 ஆண்டில் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் நடைபெற்றபோது ''தமிழ்த்துறைகளின் உலக ஆராய்ச்சிக் கருத்தரங்கு'' எனுந் தலைப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது, இது IATR இன் உத்தியோகபூர்வ வெளியீடு.
மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் ''Proceedings of the First International Conference Seminar of Tamil Studies'' என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டன. 1966 மாநாட்டின்போது IATR அமைப்பானது வெளியிட்டவை அனைத்துமே ஆங்கிலத்திற்றான். 6 ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழில் வாசிக்கப்பட்டன, எனினும் தமிழில் ஆய்வுத் தொகுதி எதுவும் தனியாக வெளியிடப்படவில்லை. தனிநாயக அடிகளாரின் சிந்தனையே தமிழ் ஆராய்ச்சியினை(Tamil Studies) மையமாகக்கொண்டதுதான். முதலாவது மாநாட்டின்போது ஆராய்ச்சிப் பெறுமதிமிக்க ஒன்பது நூல்களும் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் மாநாட்டு நினைவு மலர் என்று எதுவும் தமிழில் வெளியிடப்பட்டதான தகவல்கள் எதையும் நான் இன்னமும் பார்வையிடவில்லை.
1968 ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போதுதான் ''உலகத் தமிழ் மாநாடு - விழா மலர்'' வெளியிடப்படும் வழக்கம் தொடங்கப்பட்டது. ஆனால் இவ்விழா மலரினை IATR அமைப்பு வெளியிடுவதில்லை. மாறாக மாநாட்டினை நடாத்துவதற்கு பொருளுதவியும் அரவணைப்பும் தந்த அரசின் வெளியீடாகவே இது காணப்படுகிறது. இதற்கு ஆய்வுப் பெறுமதி இருப்பதில்லை. அரச பிரதானிகளினதும் ஆதரவாளர்களினதும் ஆக்கங்கள் பெரும்பாலும் இடம்பெறும், ஒருசில ஆய்வுக் கட்டுரைகளும்கூட இடம்பெற்றுள்ளன. இவ்விழா மலரானது பல நிறத்தில் சித்திரப் படங்களுடன் கூடியவாறு, வழுவழுப்பான தாளில் உயரிய தயாரிப்பான ஒன்றாகும். பெரும் எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு மாநாட்டிற்கு வருகிறவர்கள் அனைவருக்கும் கிடைக்கூடியவாறு இம்மலர் வழங்கப்படும். மாநாட்டினை நடத்தும் கட்சியின் புகழ்பரப்பும் ஒரு வெளியீடு. அதில் ஆராய்ச்சி இல்லையென்பதாலேயே அதன் தலைப்பிற்கூட ''ஆராய்ச்சி'' இடம்பெறுவதில்லை.
இவ்வாறான மலர்களையே கட்டுரையாளர் தே மொ ழி தந்துள்ளார். IATR அமைப்பு வெளியிடாத இம்மலர்களை IATR இற்கு உரித்துடையதாகக் காட்டுதல் ''வரலாற்றில் பொய்கள்'' பக்கங்களில் இடம்பெறவேண்டிய ஒன்றாகும்.
legitimate IATR 2010 ஆண்டிலேயே இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது.
ஆராய்ச்சி நிறுவனமான உலகத் தமிழாராய்ச்சி மன்றத்திற்கு தமிழ் ஆராய்ச்சியே செய்திராத மாரிமுத்துவைத் தலைமை தாங்க வைத்தல் என்பதே legitimate IATR இல்லையென்பதற்கான சான்று.
போலிக்குழுக்களில் எதற்குமே IATR இன் தாற்பரியம் தெரியாது. legitimate IATR என்று எவரும் இல்லை. ஆகையால் இப்போலிக்குழுக்கள் எதுவுமே நீதிமன்றத்திற்கும் செல்வும் மாட்டார்கள். மற்றவர்கள் IATR பெயரில் இயங்குவதற்குத் தடையும் வாங்கமாட்டார்கள்.
மலின முனைவர்கள் காட்டில் மழை - இரண்டு இடங்களிலும் கட்டுரை படித்தோம் என்று பெருமை பேசலாம்.
இப்பதிவைச் செய்திருப்பவர் secretary at Tamil Heritage Foundation என்பதாலும் இவ்வமைப்பினைச் சேர்ந்த பலரும் 2010 இற்குப் பின்னர் நடைபெற்ற போலி மாநாடுகளை ஆதரித்து அம்மாநாடுகளில் கட்டுரை படித்துள்ளார்கள் என்பதாலும், இப்பதிவுக்கான நுண் அரசியலை விளங்கிக்கொள்வதற்கு காலம் கொஞ்சம் தேவைப்படத்தான் செய்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------
எனது மறுமொழி:
தே மொ ழி
Viruba Kumaresan முதலில் "என் கருத்து தனிப்பட்ட முறையில் வைக்கப்பட்ட ஒன்று. தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் சார்பில் வைக்கப்படவில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறேன்".
International Association of Tamil Research (IATR) பெயரை வைத்து போட்டித் தமிழ் மொழி மாநாடுகள் ஏற்புடையதல்ல என்பதுதான் என் கருத்தின் அடிப்படை நோக்கம்.
////இப்பதிவைச் செய்திருப்பவர் secretary at Tamil Heritage Foundation என்பதாலும் இவ்வமைப்பினைச் சேர்ந்த பலரும் 2010 இற்குப் பின்னர் நடைபெற்ற போலி மாநாடுகளை ஆதரித்து அம்மாநாடுகளில் கட்டுரை படித்துள்ளார்கள் என்பதாலும், இப்பதிவுக்கான நுண் அரசியலை விளங்கிக்கொள்வதற்கு காலம் கொஞ்சம் தேவைப்படத்தான் செய்கிறது. ///
இதை அரசியல் நோக்கம் என்ற கோணத்தில் ஆராய முற்பட்டது வியப்பளிக்கிறது.
என்ற நூலைப் பதிவிறக்கம் செய்து படிக்கவும்.
****இந்நூலின் அடிப்படையில் என் கருத்தை முன் வைத்தேன்****
உண்மையில் 'வரலாற்றில் பொய்கள்' என்ற என் நூலை மறுபதிப்பு செய்தால் 'உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளையும்' அந்நூலில் இணைத்துவிடலாம் என்றுதான் தோன்றுகிறது.
கருத்துப் பகிர்வுக்கு நன்றி.





தேமொழி

unread,
Mar 2, 2024, 4:26:34 PMMar 2
to மின்தமிழ்

தேமொழி

unread,
Mar 3, 2024, 3:36:23 AMMar 3
to மின்தமிழ்
தொடர்ச்சி . . .  

Viruba Kumaresan
தே மொ ழி தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளைக் கோலாகலமாக்கி, மக்கள் கொண்டாட்டமாக்கித் தமிழ் ஆராய்ச்சியைப் பின்தள்ளிய நுண்அரசியலுக்கு வயது ஐம்பதற்கும் மேல். திராவிடக் கூரைக்குக் கீழேதான் தமிழ் ஆராய்ச்சி இருக்கவேண்டும் என்ற எண்ணமுடையோர் திட்டத்தின் தொடர்ச்சியே இப்போலி மாநாடுகள்.
// International Association of Tamil Research (IATR) பெயரை வைத்து போட்டித் தமிழ் மொழி மாநாடுகள் ஏற்புடையதல்ல என்பது // நல்ல எண்ணம்தான். போலி மாநாடுகளை நடத்துகிறவர்களுடன் இணைந்து அம்மாநாடுகளில் கலந்துகொண்டு சிறப்பித்துப் பெருமைப்படுத்தியவர்களின் குழாத்துடன் நெருங்கிய ஒருவராக நீங்கள் உள்ளீர்கள் என்பதைக் கூறிய என்னுடைய கடைசிப் பந்திக்கே நீங்கள் முக்கியத்துவம் கொடுத்துப் பதிலளித்ததில் தெரிகிறது உங்கள் அனைவரது பதற்றமும் உளக்கிடக்கையும்.
உங்கள் கருத்தின் அடிப்படை நோக்கத்திற்காக நீங்கள் எவ்வாறு எதிர்காலத்தில் செயற்படப்போகிறீர்கள்? எவ்வளவு காலத்திற்குச் செயற்படப் போகிறீர்கள்? என்ன தீவிரத்துடன் செயற்படப் போகிறீர்கள்? என்பனவற்றை அவதானிப்பதற்கும், விளங்கிக்கொள்வதற்கும் காலம் கொஞ்சம் தேவைப்படத்தான் செய்கிறது என்பதில் தவறில்லையே.


தே மொ ழி
Viruba Kumaresan /// நீங்கள் முக்கியத்துவம் கொடுத்துப் பதிலளித்ததில் தெரிகிறது உங்கள் அனைவரது பதற்றமும் உளக்கிடக்கையும்.////
உங்கள் கற்பனை உங்கள் விருப்பம்.
அதை ஏற்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.
எனக்கு எந்தப் பதற்றமும் இல்லை. நான் யாருக்கும் ஆதரவு அளித்தோ எதிர்த்தோ சார்ந்தோ அந்தப் பதிவை இடவுமில்லை.
அடிகளார் உயிருடன் இருந்தவரை - உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில்தான் 1, 2, 3, 4, 5 என்ற மாநாடுகளும் நடந்தன. பின்னரும் அவ்வாறுதான் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
மாநாட்டு மலர்களும் (ஆய்வு இதழ்கள் அல்ல, மாநாட்டு மலர்கள். . . அடிகளார் மறைந்த பின்னர் நடந்த 6ஆவது கோலாலம்பூர் மாநாடு உட்பட -) உலகத் தமிழ் மாநாட்டு மலர் என்றுதான் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அயல்நாட்டு மலரைக் கூட திராவிடக் கட்சிகள்தான் வெளியிட்டதா?
(பார்க்க நூலில் பக்கம்: 52 - 69 & 87-88)

அடிகளார் வகுத்த பாதையில், அதே விதிகளுடன் அதே வரிசையைத் தொடர சட்டப்படி உரிமை, அனுமதி உள்ளவர், IATR என்று மாநாட்டு வரிசை எண்ணைப் பயன்படுத்தித் தொடருங்கள்.
மற்றவர்கள் அடிகளார் முன்னெடுப்பைச் சீர் குலைக்காமல் விலகிவிடுங்கள், குழப்பம் ஏற்படுத்தாதீர்கள். ஏகப்பட்ட பொருண்மை தமிழில் உண்டு அவற்றில் ஒன்றை எடுத்து உலகளாவிய மாநாடுகள் நடத்திக் கொள்ளுங்கள். அதுவே நீங்கள் தமிழுக்குச் செய்யக் கூடிய தொண்டு என்பது எனது அந்தக் கண்டிப்பான பதிவு.
இது போன்ற "குழப்பத்தைக் கண்டிக்க தமிழர் எவருக்குமே உரிமையும் கடமையும் உள்ளது".
ஆனால் கண்டிக்கும் என் மீது குற்றம் காணும் உங்கள் பின்னணியில் இருப்பது யார் என்பதுதான் எனக்கு இப்பொழுது வியப்பாக இருக்கிறது.

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Mar 3, 2024, 10:33:16 AMMar 3
to mint...@googlegroups.com
இதன் தொடர்பில் முன்னர் நான் எழுதிய கட்டுரை இப்போதும் பொருந்தும். தகவலுக்காக மீள்பதிவு : 

அடுத்தடுத்து இரு தமிழ் மாநாடுகள் எதற்கு?

முதல்வர் ஒன்றிணைக்க வேண்டும்!

உலகத் தமிழாராய்ச்சி மன்றம்  என்னும் ஒரே ஓர் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி இரு வேறு அணியினர் வரும் சூனிலும்சூலையிலும் உலகத்தமிழ் மாநாடுகள் நடத்துகின்றனர்ஏன் இந்த முரண்போக்கு என்பதை முன்பே கேட்டிருந்தோம்.

பொதுவாகவே உலக மாநாடுகள் என்றாலே மகிழ்ச்சி அடைவதைவிட எரிச்சல் அடைவதே மிகுதி என்பதாக மாநாடு நடத்துநர்களின் போக்கு உள்ளது. கடந்த முறை சிக்காக்கோவில் நடைபெற்ற 10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு கூடத் தமிழாராய்ச்சியாளர்களுக்குக் குறைந்த அளவு பங்களித்துத் தம் நிதிவசதியைப் பெருக்குவதற்காகத் தமிழர் மாநாடாக நடந்ததை நாமறிவோம்இப்போது இரு வேறு அணியினர் புறப்பட்டு ஆராய்ச்சியாளர்களைக் குழப்பிக் கொண்டுள்ளனர்.

“யார் வேண்டுமென்றாலும் அல்லது எந்த அமைப்பு வேண்டுமென்றாலும் உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தலாம். ஆனால், ஒரே அமைப்பின் பெயரில் ஏட்டிக்குப் போட்டியாக மாநாடுகள் நடத்துவது  இந்த அமைப்பைத் தோற்றுவித்த தனிநாயக அடிகளாருக்கும் அமைப்பில் முன்நின்ற அறிஞர்களுக்கும் இழுக்கு தேடுவதாகும். ஒரு மாநாடு முடிந்ததும் அடுத்த மாநாடு குறித்து முடிவெடுத்து முறையாக அறிவிப்பதே செல்லத்தக்கதாகும். எனவே, பத்தாவது மாநாட்டுப் பொதுக்குழு தேர்ந்தெடுத்த முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையிலான குழுவினர்தான் உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் உண்மைப் பொறுப்பாளர்கள். எனவே, இவர்கள் எடுக்கும் முடிவே சரி. மாற்றுக் கருத்து இருந்தால் இக்குழுவில் தெரிவிக்க வேண்டுமேயன்றிப் போட்டிக் குழுவை உருவாக்கக் கூடாது. “ என அகரமுதல இதழில் (06.11.2022) “திருவள்ளுவரை இழிவு படுத்தும் சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்!” என்னும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். எனினும் முனைர் மு.பொன்னவைக்கோவிடம் ஒன்றுபட்டு நடத்துவதே சிறப்பு என வலியுறுத்தி வந்தோம்.

சார்சாவில் நடத்துவதாக இருந்த மாநாட்டினர் அங்கு நடத்த இயலாமல் மலேசியாவில் நடத்த உள்ளனர். சிங்கப்பூரில் நடத்துவதாக இருந்த மாநாட்டினர் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு இடம் தேடி வருகின்றனர். இப் பொழுது திடீரென்று பொன்னவைக்கோ தலைவர் என்ற முறையில் பொதுச்செயலரிடம் மட்டும் கலந்து பேசி இதுவரை செல்லாது என்ற கூறிவந்த அணியினருடன் “உங்கள் மலேசியா மாநாட்டுடன் இந்த மாநாட்டுப் பேராளர்களையும் இணைத்து நடத்துங்கள்” எனக் கேட்டுள்ளார். அதன் தலைவர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

தமிழ்நாட்டரசிடம் பொருளுதவி கேட்டதாகவும் இரு வேறு அணியாகப் பிளவு பட்டுள்ளதாலும் அரசே உலகத் தமிழ் மாநாட்டை நடத்தும் திட்டத்தில் இருப்பதாலும்  அதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டோம். பொருளன்றி ஓரணுவும் அசையாது என்பதால் தனியாக நடத்துவதைக் கைவிட்டு இணையும் முடிவிற்குத் தாமாகவே வந்துள்ளார். ஆனால், சிக்காகோ மாநாட்டின் பொழுது நம் அரசிடம் பெற்ற உரூபாய் ஒரு கோடித் தொகையை வைத்துச் சிறப்பாக மாநாட்டை நடத்தலாமே எனப் பிற உறுப்பினர்கள் கருதுகின்றனர். சென்னையில் அல்லது சென்னையருகில் உள்ள ஏதேனும் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றால் ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சான் சாமுவேல் தன் வளாகத்தை மாநாட்டிற்குத் தர இசைவதால் அங்கேயே நடத்தலாம் என்கின்றனர். இணையும் முடிவு நல்ல முடிவுதானே என்று தெரிவித்தால்,  அதை அறிவித்த முறை சரியில்லை என்றும் “நீங்களே நடத்துங்கள் என்று சொல்லாமல் இணைவோம் வாருங்கள்” என்று அழைத்திருக்கலாம் என்றும் பிறர் கருதுகின்றனர்.

இந்த இடத்தில் உலகத்தமிழராய்ச்சி மன்றம் குறித்துக் காண்போம்.

ஈழத் தமிழறிஞர் தனிநாயகம் அடிகளார் (1913-1980) உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை(International Association of Tamil Research, IATR) 1964-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் பாரிசு நகரைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கினார். அப்போது, இதன் நோக்கமாக,”உலகம் முழுவதும் தமிழ் ஆய்வை மேற்கொண்டு, சிதறிக் கிடக்கின்ற சிறு நிறுவனங்களின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துதல், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் பொதுவானவற்றைப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல், பிறநாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழைப் பாடமாக அமைத்தல், அப்பல்கலைக்கழகப் பேராசிரியர்களைத் தமிழாய்வில் ஈடுபடச் செய்தல், தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழிலக்கியம், தமிழ்ச் சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி பல்கலைக்கழகத் தொடர்புகளை ஏற்படுத்துதல்” எனக் கூறப்பட்டது.

இந்நோக்கத்திற்கமைவாக, இரண்டாண்டுகட்கு ஒருமுறை பல்வேறு நாடுகளில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்துவதையும் இலக்காகக் கொண்டனர். இதன்படி முதல் உலகத் தமிழ் மாநாடு 1966-இல் கோலாலம்பூரில் நடத்தப் பெற்றது.  தொடர்ந்து சென்னை (1968), பாரிசு (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987), மொரீசியசு (1989), தஞ்சாவூர் (1995), கோலாலம்பூர் (2015), சிக்காகோ (2019) ஆகிய நகரங்களில் பத்து மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

உ.த.ஆ.மன்றத்தினைப் பதிவு செய்யாமையால் வங்கிக் கணக்கு தொடங்கப்படவில்லை; இதனால் நிதி ஆதாரம் இல்லை; எனவே பிறரைச் சார்ந்தே இயங்க வேண்டி இருந்தது. இதனால், தஞ்சாவூரில் நடைபெற்ற. எட்டாவது மாநாட்டில் வெளியிட்ட  மலரின் 870 படிகள் நூலகங்களுக்கு வழங்கப்பட்டதற்குரிய தொகையாகிய உரூ. 12.18 இலட்சம் தொகை, தமிழ் நாட்டரசின் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திடம் (International Institute of Tamil Studies) ஒப்படைக்கப் பட்டது. இக்குறையைப் போக்க 2016இல் இந்தியாவில் World Tamil Research Association என்ற பெயரில் பதிவு செய்யப்பெற்றது. இதன் பின் சிக்காகோவில் நடைபெற்ற மாநாட்டில் (2019) தமிழ்நாடு அரசு உருபாய் ஒரு கோடி நன்கொடை வழங்கியது. மாநாட்டின்  இறுதி நாளன்று கொடுக்கப்பட்ட இத் தொகை கட்டுரையாளர்களின் போக்குவரத்துச்செலவு, தங்குமிடச் செலவு போன்றவற்றிற்கு உதவியாக அவர்களுக்கு உரியவாறு அளிக்கப்படவில்லை.

இப்பொழுது பதினொன்றாவது மாநாட்டில் தொடக்கத்தில் குறிப்பிட்ட முரண் நேர்ந்துள்ளது.

60 ஆண்டுகளில் 30 மாநாடுகள் நடைபெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இது வரை 10 மாநாடுகள்தான் நடைபெற்றுள்ளன என்பதே  இவ்வமைப்பின் செயற்பாட்டுக் குறைபாட்டை உணர்த்தும்.

பொதுவாகத் தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட்டாலே கட்சி வண்ணம் பூசப்பட்டுக் குறை சொல்லப்படுகிறது. யார் ஆட்சியில் நடந்தாலும் ஆளுங்கட்சி மாநாடாகவே சொல்லப்படுகின்றது.

இவ்வாறு குறைசொல்லாத அளவிற்கு அமைப்பைக் கொண்டு செல்ல வேண்டும். மாண்புமிகு முதல்வர் மு.க.தாலின் சந்து செய்து(இணக்குவித்து) ஒரே மாநாடாக நடத்தச் செய்து தொடக்கவுரை ஆற்ற வேண்டும். தமிழ்நாட்டரசின் தற்போதைய தமிழ், தமிழர் நலப்பணிகளையும் மேற்கொண்டு திட்டமிட்டுள்ள பணிகளையும் உலகத் தமிழாராய்ச்சியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சி யமைச்சர், தலைமைச் செயலர், செயலர் ஆகியோரும் பங்கேற்க வேண்டும். முதல்வர் தமிழார்வலரான தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு மூலம் ஒன்றுவிக்கும் பணியைச் செய்யலாம். இதெல்லாம் அரசின் வேலையா எனக் கருதாமல் தமிழால் ஒன்று படவேண்டியவர்கள் பிளவுபடக்கூடாது என்பதாலும்  தமிழன்பர்களின் நலன் கருதியும் இதில் கருத்து செலுத்த வேண்டும்.

இப்போதைய ஈரமைப்புகளின் தலைவர்களுக்கு மாற்றாகப் புதிய ஒருவரைத் தலைவராக அரசே அமர்த்தலாம். புதிய தலைவர், செயலர் பழிவராத வண்ணம் நேர்மையாகவும் ஆராய்ச்சியைப் பரப்பும் ஈடுபாட்டுடனும் தமிழ்வளர்ச்சியில் நாட்டம் கொண்ட தமிழறிஞர்களாகவும் இருக்க வேண்டும்.   இம்மன்றத்தில் உள்ள செம்மொழி விருதாளர்கள் முனைவர் ப.மருதநாயகம், முனைவர் இ.சுந்தரமூர்த்தி போன்றவர்களைத் தலைவராகத் தேரந்தெடுக்கச் செய்யலாம். செயலர்களையும் மாற்ற வேண்டும்.  மாற்றப்படுபவர்கள்  விரும்பினால் புதிய அமைப்பின் வேறு பொறுப்பிற்கு வரலாம். இவ்வாறு முதல்வர் தலையிட்டு உலகத்தமிழ் மன்றத்திற்குப் புத்துணர்ச்சி தர வேண்டும். மன்ற நிதியிலிருந்து ஒரு பங்கும் தமிழ்நாட்டரசு பொருளுதவியில் இருந்து மறு பங்கும் கொண்டு மாநாட்டைச் சிறப்பாக நடத்தச் செய்ய வேண்டும்.

ஒருவேளை அதற்கான வாய்ப்பு அமையாவிட்டால் முனைவர் மு.பொன்னவைக்கோ பொதுஅரங்க மாநாட்டைக் கைவிட்டு இணையத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட வேண்டும். இணையவழியிலும் கருத்தரங்கத்தை நடத்தலாம்.

உலகத்தமிழ் மன்றம் இனிமேல் மாநாடுகள் நடத்துவதைக் கைவிட்டு இணையவழி ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடும் பணியில் ஈடுபடவேண்டும்; இணைய வழி உரையரங்கங்களை நடத்த வேண்டும். ஈராண்டிற்கொரு முறை ஆராய்ச்சி மலரை அச்சிதழாக வெளியிடலாம்.

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

 வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு (திருவள்ளுவர், திருக்குறள் 612).

[ஒரு செயலைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணி இடையில் விட்டுவிடாதே. அவ்வாறு வினையைக் கைவிடுபவரை உலகமும் கைவிடும்.]

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

10.04.2054 +++ 23.04.2023


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 3, 2024, 5:46:37 PMMar 3
to மின்தமிழ்
நன்றி ஐயா. உங்களின் இந்த மடல் நினைவிருக்கிறது.

/// பொதுவாகத் தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட்டாலே கட்சி வண்ணம் பூசப்பட்டுக் குறை சொல்லப்படுகிறது. யார் ஆட்சியில் நடந்தாலும் ஆளுங்கட்சி மாநாடாகவே சொல்லப்படுகின்றது.///
நீங்கள் குறிப்பிடுவது உண்மைதான் ஐயா.  
நல்ல நோக்கில் உடன்பாட்டிற்குக் கொண்டுவர முயன்றாலும் எடுபடாது, மாறாகப் பழிதான் வந்து சேரும்.  
நேற்று எனக்குக் கருத்துரைத்தவர் அவ்வாறுதான் கீழ்க்காணும் வகையில் குற்றம் கூறுகிறார். 

/// தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளைக் கோலாகலமாக்கி, மக்கள் கொண்டாட்டமாக்கித் தமிழ் ஆராய்ச்சியைப் பின்தள்ளிய நுண்அரசியலுக்கு வயது ஐம்பதற்கும் மேல். திராவிடக் கூரைக்குக் கீழேதான் தமிழ் ஆராய்ச்சி இருக்கவேண்டும் என்ற எண்ணமுடையோர் திட்டத்தின் தொடர்ச்சியே இப்போலி மாநாடுகள்.////


நீங்கள் சுட்டியது  போல மாநாட்டுக்குப் பொருள் கிடைக்கும் வழியை  அடைத்தால் எல்லாம் சரியாகும், தமிழ் ஆய்வாளர்களும் மாநாடுகளைப் புறக்கணிக்க  வேண்டும்.  
இணைந்து மாநாடு  நடத்த அழைக்கப்படும்  நிறுவனங்கள், மற்றும் அரசுகள் (தமிழ்நாட்டு அரசு, அயல்நாட்டு அரசுகள்) சட்டப்படி நீங்கள்தான் IATR என்ற  தகுதியைக் காட்டும் சான்று இருந்தால் மட்டும் உங்களுடன் இணைந்து செயல்படுவோம், இல்லாவிட்டால் இயலாது என்று  கட்டுப்பாடு விதிக்க வேண்டும். 

யார் உண்மையான IATR என்பதற்கு சட்டத்தீர்வுதான் சரியான நிலையான தீர்வு. 

தேமொழி

unread,
Mar 4, 2024, 2:38:26 AMMar 4
to மின்தமிழ்
themozhi - tamail conference - SBS Radio.png

World Tamil Research Conference: Advocating for Unity - SBS
https://www.sbs.com.au/language/tamil/en/podcast-episode/world-tamil-research-conference-advocating-for-unity/z8pmi2424
In an effort to shed light on this issue, Kulasegaram Sanchayan engages in dialogue with Dr. Themozhi, Secretary of the Tamil Heritage Foundation
-----
On Saturday, February 24, 2024 at 9:37:08 PM UTC-8 தேமொழி wrote:

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Mar 4, 2024, 5:21:17 PMMar 4
to mint...@googlegroups.com
மிக்க நன்றி அம்மா.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 10, 2024, 4:58:32 PMMar 10
to மின்தமிழ்
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமும்
தனிநாயகம் அடிகளாரின் தமிழ்க் கனவும்!


சோம. இளங்கோவன்.


உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்ற உயர் எண்ணம் கொண்ட அமைப்பு, அதன் பெயரில் உள்ளவாறு, ’உலக’ அளவிலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விப்புலங்களில் மாண்புடன் இயங்கி, உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளைச் சீரிய ஆராய்ச்சி முறைமையோடு நடத்திட வேண்டும் என்பதே, அதனைத் தோற்றுவித்த தவத்திரு தனிநாயக அடிகளாரின் மாபெரும் தமிழ்க் கனவு.

அவரது அயராத உழைப்பும் உலகளாவிய தமிழ்க் கனவும், இன்று எந்த நிலையில் உள்ளது?

1967-இல் அறிஞர் அண்ணா அவர்கள், அறிஞர்களையும் மக்களையும் ஒருங்கிணைத்துச் சீரும் சிறப்புமாக நடத்திக்காட்டிய 2ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் நானும் பங்கேற்றிருந்தேன். உலகெங்கிலும் பெறப்பட்டிருந்த ஆராய்ச்சிக்கட்டுரைகளைப் படித்துத் திறனாய்வு செய்து, அறிஞர் அண்ணாவே அவற்றின் மீதான ஆய்வுக் குறிப்புகளை எழுதி, ஒரு தொகுப்புரையாக வெளியிட்டிருந்தார். இங்கிலாந்து நாட்டின் அறிஞர் பேராசிரியர். ஆஷர் அவர்கள், “இது போல் ஓர் ஆய்வுத் தொகுப்புரை இவ்வளவு சிறப்பாக இதுவரை எழுதப்பட்டதில்லை, இனியும் எழுதப்படுமா என்பது ஐயப்பாடு தான்” என்று அறிஞர் அண்ணாவின் தொகுப்புரைக்குச் சிறப்புக் குறிப்பு எழுதினார்.

தமிழாராய்ச்சிக் களம் மற்றும் தமிழுணர்ச்சிக் களம் என்று இரு களங்களாக நடந்தேறிய அந்த இரண்டாம் மாநாட்டில், ஆய்வறிஞர்கள் ஆராய்ச்சியில் மகிழ்ந்தது போலவே, பொதுமக்களும் கலை & வரலாற்று நிகழ்ச்சிகளில் மகிழ்ந்தனர். விழி-செவி-மனம் மூன்றனுக்கும் முத்தமிழ் மகிழ்வையூட்டிய இம்மாநாடு, இனிவரும் மாநாட்டுக்கெல்லாம் திசைகாட்டியாகத் திகழ்ந்தது; திகழ்கின்றது; திகழும்!

2ஆம் உலகத் தமிழ் மாநாட்டைப் போலவே, அமெரிக்காவில் சிகாகோவில் 10ஆம் மாநாட்டைப் பொலிவுற நடத்திட நாங்கள் நினைத்தோம். ஆறு மாதங்களாகத் தொடர்ந்து வாரா வாரம் திட்டமிடல் கூட்டங்கள் ஏற்பாடு செய்து, பல பணிகளை ஒருங்கிணைத்தோம். அதில் கடின உழைப்பினை நல்கிய நண்பர்கள் யாவருக்கும், இந்நேரத்தில் மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல ஆண்டுகளாக உலகப் புகழ் பெற்ற பல பல்கலைக்கழகங்களுடன் தொடர்பு கொண்டு, கல்வியாளர்கள் பலரைச் சிகாகோ அழைத்து  வந்து, ஒரு சிலரை ஆர்வேர்டு பல்கலைக்கு அழைத்துச் சென்று, இப்படிப் பெருங் கல்விப்புலங்களில் நாங்கள் இசைவு பெற்றிருந்தோம். அமெரிக்காவின் சிகாகோ, பெர்க்லி, பென்சில்வேனியா, ஆர்வேர்டு பல்கலைக்கழகங்கள், மற்றும் செருமனியின் கொலோன் பல்கலைக்கழகம் என்று ஒரு சீரிய கல்விப்புலமே தமிழ்மாநாட்டுக்கு ஒத்துழைக்க ஆயத்தமாய் இருந்தது. விழாக் குழுவினரும் அயராது ஏற்பாடுகளைச் செய்து கொண்டேயிருந்தனர்.

ஓரளவுக்கு எல்லாம் கைகூடி வந்துவிட்டது என்று மகிழ்வுடன் இருந்த போது, நாங்கள் அமர்த்திய கல்விக்குழு(Academic Committee) பொறுப்பாளர்களே திரைமறைவு வேலைகளில் ஈடுப்படத் துவங்கினர். எங்களுக்கு வேண்டியவர்கள் என்று நாங்கள் நம்பினவர்களே, தங்கள் உண்மை முகத்தைக் காட்டத் துவங்கினர். சீரிய பல்கலைக்கழகங்கள் யாவும், ஆய்வுத்தாள் வரைமுறைகளை அறிவியல் முறைமையுடன் வகுக்க முற்பட்ட போது, அதற்குக் கடும் எதிர்ப்பை இவர்கள் தெரிவித்தனர். “தங்களுக்கு விருப்பமான பழம்பெருமைத் தலைப்புகளையே ஆய்வுத் தலைப்புகளாகத் தெரிவு செய்வோம், அதில் பல்கலைக்கழகங்கள் தலையிடலாகாது” என்று அகவை முதிர்ந்த தமிழர் ஒருவர், பல்கலைக்கழகப் பேராசிரியர்களை அவமானப்படுத்தினார்.

ஆய்வுகள், அறிவியல் நெறிமுறையில் இயங்க வேண்டுமேயன்றித் தற்பிடித்தமான போலிப்பெருமை முறைகளில் இயங்கக் கூடாது என்று இப்பெரும் பல்கலைக்கழகங்கள் நயம்பட எடுத்தியம்பின. உலகக் கல்விப் புலங்களில் கடைப்பிடிக்கப்படும் ஆய்வு நெறிமுறைகளை ஒப்புநோக்கி, மாநாட்டின் ஆய்வுகளை உலகத் தரத்துக்கு ஆற்றுப்படுத்த முயன்றன.

ஆனால், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இயங்கிய தற்பிடித்தக் குழுவின் செவியில், செவ்விய முறைமைகள் ஏதும் ஏறவில்லை. அறிவியலின் பாற்பட்டு ஆய்வுகள் நடக்காது என்று தெரிந்தவுடன், மேற்கண்ட சீரிய பல்கலைக்கழகங்கள் யாவும் ஒதுங்கிக் கொண்டன. மாநாட்டுக் குழுவின் அதிகாரம், உண்மையான தமிழ்ப்பற்றாளர்களிடமிருந்து திசை திருப்பப்பட்டு, இரண்டு மூன்று தனிப்பட்ட பேர்களிடம் மாட்டிக் கொண்டுவிட்டது. மாநாட்டு ஏற்பாடுகள் செய்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, மாநாட்டுக்குப் பல்லாண்டுகளாகக் கனவு கண்டு உழைத்த பொன்விழா கண்ட சிகாகோ தமிழ்ச் சங்கம், அதன் தலைவர்கள், அலுவலர்கள், துவக்க நாள் முதலே ஏற்பாடுகள் செய்து வந்த மாநாட்டுக் குழு, அதன் ஒருங்கிணைப்பாளரான நான் – இப்படி உண்மையாகப் பணி செய்தோரெல்லாம் ஓரங்கட்டப் பட்டோம். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் இரண்டு மூன்று பேர் மட்டுமே தன்னிச்சையாக முடிவெடுத்துத் தங்களின் சொந்த விருப்பமான தலைப்புகளையே கொண்டுவர முனைந்தனர்.  அதற்கு எனது நெருங்கிய நண்பர்களே துணை போனது பெரும் வேதனை.  பாதிக்கிணறு தாண்டி, மீதிக் கிணற்றில் தள்ளாடும் நிலை. அமெரிக்காவில் எப்படியாவது விழா நடந்தால் போதும் என்றாகிவிட்டது.
 
அண்ணா, பலப்பல நாட்டு அறிஞர்களைச் சென்னைக்கு அழைத்து வந்து உலக மாநாடு நடத்தினார். நாமோ, பத்து உலகளாவிய அறிஞர்களையாவது அழைத்து வந்து நடத்தினால் தான், அது பெயரளவிற்கேனும் ’உலக’ மாநாடு ஆகும் என்று சொன்னோம். ஆனால், அதிகாரம் கைவரப் பெற்றோர், சென்னையிலுள்ள தங்கள் நட்பு வட்டத்துக்கு மட்டுமேயான பங்கேற்பாக அதைச் சுருக்கி, “உலகத்” தமிழ் மாநாடு என்பதனைச் சென்னைத் தமிழ் மாநாடு என்பது போல் குறுக்கி விட்டனர் என்பதே பெருஞ்சோகம்.

இப்படியாகக் குறுகிவிட்ட மாநாட்டில், உலகப் பெரும் அறிஞர்கள் யாரும் ஈடுபாடு காட்டவில்லை. தரமான ஆய்வுக்கட்டுரைகளும் வரவில்லை. “யார் இவர்கள்? “ என்று ஒதுங்கி விட்டனர்.  தமிழ்ப் பெரும் பற்றாளர்கள் சிலர், அவர்களுக்குத் தெரிந்த உலக அறிஞர்களைத் தனிப்பட்ட முறையில் அழைத்தும், நாள்தோறும் பல மின்னஞ்சல்கள் அனுப்பிக் கட்டுரைகள் நல்கச் சொல்லியும், தமிழ் மாநாட்டின் மானம் காக்க இயன்றவரை முயன்றோம். பல கட்டுரைகள் வந்தன - ஆனால் அறிஞர்களிடமிருந்து அல்ல, பொதுவான தமிழர்களிடம் இருந்து மட்டுமே. அதிலும், உலகப் பல்கலைக்கழகங்களில் நிரம்பியுள்ள தமிழரல்லாத அயலகத் தமிழறிஞர்களிடமிருந்து ஒரு கட்டுரை கூட வரவில்லை. ஆய்வுக் கட்டுரைகள் மீதான திறனாய்வு எப்படி நடத்தப்பட்டது என்ற விவரங்கள் கூடப் பலருக்கும் தெரியாது. அனைத்தும் நட்பு வட்ட மூடு மந்திரமாகவே செய்யப்பட்டது. திரை மறைவில் தான் கட்டுரைகள் அரங்கேறின.

கடைசி வரை, கட்டுரைகள் மாநாட்டின் இணையத்தில் பதிவேற்றப்படவே இல்லை. அரங்க ஆய்வுக்கு வந்த நடுவர்களுக்குக் கூட, ஆய்வுத் தாள்கள் முன்கூட்டிக் காண்பிக்கப்படவே இல்லை. கண்துடைப்பாக, மாநாடு தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் தான், நடுவர்களுக்கு வெறும் ஆய்வுச் சுருக்கங்கள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களுள் பல பேர் விமானம் ஏறி விட்டபடியால், சுருக்கம் கூட அவர்களுக்குக் கைக்குக் கிட்டவில்லை. அமெரிக்காவில் வந்திறங்கி மாநாட்டுப் பந்தலில் தான், நடுவர்கள் ஆய்வுச் சுருக்கத்தையே காணவேண்டிய அவலநிலை ஆகிப்போனது. (அதிலொரு கட்டுரையில், உலகப் பெரும் தமிழறிஞரான கமில் சுவெலபில் படத்திற்குப் பதிலாக, கால்பந்தாட்ட வீரர் சுவெலபில் படத்தை, அவர்களின் நட்பு வட்டக் கட்டுரையாளர் ஒருவர் இட்டிருந்தார். அதை அப்படியே மாநாட்டில் வழங்கப் போய், பொதுமக்களே நகைக்கும்படியான அவலமும் ஏற்பட்டது.)

மாநாட்டில் வழங்கப்பட்ட சான்றிதழில், மாநாட்டை நடத்தும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற இலச்சினைக்குப் பதிலாக, வேறொரு நிறுவனமான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இலச்சினையிட்டுப் பிழையாக வழங்கிப் பிறகு மீள்பெற்றதெல்லாம் பெருஞ்சோகம்). வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சிகாகோ தமிழ்ச் சங்கமும், மாநாடு நல்லபடி நடந்தால் போதும் என்ற அளவிலே, வேறுவழியின்றி இத்தகைய அதிகாரவெறி பிடித்த சிலரின் கட்டுப்பாட்டில் மொத்தமும் விட்டுவிட்டனர். எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டிய நிலை.

பொருளாதாரத்திற்குப் பெருமுனைப்பு செய்து, ஊர் ஊராகச் சென்று பொருள் ஈட்டினர். அவர்களுக்கும், கொடை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், தன்னார்வலப் பணியாளர்களுக்கும் மிகவும் நன்றி. தமிழரல்லாத அறிஞர் பெருமக்கள் வராவிட்டாலும், ஆர்வலர்கள் பலர் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் வந்திருந்து, விருந்தினர்களாகப் பங்கேற்றது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. நாங்கள் எங்களுக்குத் தெரிந்த உலகப்பேராசியர்கள் ஒரு சிலரைத் தனிப்பட்ட முறையில் அழைத்து வந்து ஆய்வுகளுக்குத் தலைமை ஏற்கச் செய்தோம். விழா சிறப்பாகவே நடந்தேறியது. ஆய்வு மாநாடாக அல்லாமல், தமிழர்கள் தமிழர்களுக்காக நடத்திய விழாவாக நடந்து முடிந்தது.

ஆய்வுக் குழுவின் தலைவரான அய்யா டான்சிறீ மாரிமுத்து, அவரால் முடிந்த மட்டும் மீட்டெடுக்கப் பார்த்தார். ஆனால், அவருக்கே தெரியாமல், ஆட்சிமன்றக் குழுவில் புதிய (நட்புவட்ட) உறுப்பினர் சேர்க்கையும், அங்கே வந்திருந்த செயற்குழு உறுப்பினர்களுக்குக் கூடச் சொல்லாமல் திடீர் ஆட்சி மன்றக் கூட்டமும் கூட்டப்பட்டது என்று அய்யா மாரிமுத்து சொன்னார்.  புதிய தலைவர், புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.  அதிகார ஆசை மட்டுமே இம்மாநாட்டில் அரங்கேறியது.

உலகத் தமிழ் மாநாட்டின் தந்தை தவத்திரு தனிநாயக அடிகளார் கண்ட கனவு என்பதோ வேறு!
1. தமிழை உலக மயமாக்க வேண்டும்;
2. உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழைக் கொலுவிருக்கச் செய்ய வேண்டும்;
3. தமிழரல்லாத அயலகத் தமிழறிஞர் ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் இருத்தி, அவர் மூலமாக அயலகச் சான்றோர்களின் ஆதரவைத் தமிழியலுக்குப் பெற்றுத் தர வேண்டும்;
4. ஈராண்டுக்கு ஒருமுறை, உலகத் தமிழ் மாநாடுகளை உலக ஆய்வுத் தரத்திலே அறிவியல் முறைமையில் நடாத்தி,
5. அதன் பெயரில் உள்ளது போலவே, அதை ‘உலகத்’ தமிழ் மாநாடாக, உலகமெல்லாம் தமிழியலை நிலைபெறச் செய்ய வேண்டும் என்பதே!

சென்று முடிந்து சோகங்களை விடுவோம். பத்தாம் மாநாட்டின் பிழைகளில் பாடம் படிப்போம். இனியேனும், அடிகளாரின் உலகத் தமிழ்க் கனவை நனவாக்குவோம். அஃதே அன்னைத் தமிழுக்கு நம்மாலான நற்பணி!

11வது மாநாட்டில் இதற்கு ஆவண செய்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

[இணைப்பில் சில தகவல்கள் . . . ]
Kalaignar Karunanidhi Speech - Ulaga Tamizh Maanaadu 3 - 1970 Paris-1.pdf
Arignar Anna Speech at 2nd Conference 1968-1.pdf
ICSTS#2 Proceedings-1.pdf

தேமொழி

unread,
Mar 11, 2024, 12:21:10 AMMar 11
to மின்தமிழ்
SBS.jpg
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: ஏன் இரண்டு பட்டிருக்கிறது?
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு. தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research - IATR), இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.

கடந்த வருடம் பதினோராவது உலகத் தமிழாராய்ச்சி ஒரே மாதத்தில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்டன, அடுத்த வருடமும் இரண்டு இடங்களில் நடப்பதற்குத் திட்டமிடப் பட்டு வருகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளின் ஒழுங்கமைப்பாளர்களின் கருத்துகளை எடுத்து வர முனைகிறார் குலசேகரம் சஞ்சயன்.
__________________________________________________

சரியான நடைமுறை ஏதுவாக இருக்கும் என்றால் . . .
பிளவு நிலை என்ற (International Association of Tamil Research - IATR) மாநாட்டின் திருப்புமுனை 10 ஆம் உலகத் தமிழ் மாநாடு என்பதால் . .
அதில் இறுதியாக யார் தலைவர் என்று இறுதியில் முடிவெடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதோ  அதுவே செல்லும்.  
"அமைப்பின் விதிகளின்படி நடந்திருந்தால்" முடிவெடுத்தால் அவ்வாறுதான் அமையும்.

இன்று வெளியான  மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்களின் பதிவைப் படித்த பிறகு தோன்றுவது  . . .  
சிகாகோ மாநாட்டின் இறுதியில் எடுக்கப்பட்ட  அதிகாரப்பூர்வமான முடிவை வெளிக்கொணர்ந்து பொதுவெளியில் வைக்க வேண்டும்.
அடுத்த மாநாடு என்று அறிவிப்பில் இருப்பவரின்  நடவடிக்கைதான், அவர்களின் முன்னெடுப்புதான் ஏற்கத்தக்கதாகவும் இருக்கும்.  

ஆய்வு அரங்கம், பொது அரங்கம் என இரண்டும் மாநாட்டின் பகுதியாக இருப்பதில் எந்த ஒரு சிக்கலும் இருக்கப் போவதில்லை.
மாநாட்டின்  முதல் இரண்டு நாள் ஆய்வு, அடுத்து இறுதிநாளில் பொது அரங்கம் கலைநிகழ்ச்சிகள் என்று இருப்பது வழக்கமாகக் கொள்ளலாம்.
ஆனால் மாநாட்டையே இரு பிரிவாகப் பிரித்து நடத்துவோம்  என்பது ஏற்கத் தக்கதல்ல.

சிக்காகோவில்  நடந்த பத்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான இறுதி அறிக்கை வைத்திருப்பவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
https://www.icsts10.org/plenary-session/

அதில் தேர்வு செய்து அறிவிக்கப்பட்ட குழுதான் தொடர்ச்சியாக  International Association of Tamil Research - IATR வரிசை எண்ணையும், இலச்சினையையும்   பயன்படுத்த விதிகளின்படி உரிமை உள்ளவர்கள்.  
போலி பிரிவைத் தமிழ் ஆய்வாளர்களும் உலகத் தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும்.

அடுத்து வரும் மாநாடு குறித்த முடிவெடுக்கும் வாக்குரிமையில்  செயற்குழுவில் இருப்பவர்கள் எவ்வளவு காலம் குறைந்த அளவு பதவியில் இருந்திருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இடைவெளிகளில் உள்நுழைந்து சீர்குலைக்கக் கூடிய முடிவை வைக்கும் வாய்ப்பைக் குறைக்க வேண்டும்.

SBS வானொலியும் குலசேகரம் சஞ்சயன் அவர்களும் இதில் எடுத்த முயற்சி பாராட்டிற்குரியது  
இரு பிரிவினரும் தன்நிலை விளக்கம் கொடுப்பதில் இருந்தே ஓரளவு முடிவுக்கு வர முடிகிறது என்றாலும் எழுத்தால் பதிவு செய்யப்பட்ட ஆவணம் தக்க சான்றாக அமையும் என்பதில் ஐயமில்லை. 

தேமொழி 
__________________________________________________

Dr.K.Subashini

unread,
Mar 11, 2024, 11:41:50 AMMar 11
to மின்தமிழ்
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தொடர்பான அண்மைய கால நடவடிக்கைகள் தமிழார்வலர்கள் வருந்தத்தக்க வகையில் தான் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.

தமிழறிஞர் தனிநாயகம் அடிகள், பேரா.வி.ஐ.சுப்பிரமணியன், பேரா. கமில் சுவாலபில் போன்ற உலகத் தமிழறிஞர்களின் பெரும் முயற்சியின் அடிப்படையில் உருவானதுதான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமும் அதன் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும்.

1968ஆம் ஆண்டு மாநாட்டின் தொடர்பில் தனிநாயகம் அடிகளாரால் தொகுத்து வெளியிடப்பட்ட Tamil Studies Abroad - A symposium என்ற நூலும் அதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் தமிழ் ஆய்வுகள் எவ்வகையில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகின்றன. அதில் இடம்பெறுகின்ற Tamil Studies Elsewhere என்ற பேராசிரியர் தனிநாயகம் அடிகளின் கட்டுரை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு எவ்வகை இலக்கை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்கு ஒளிவிலக்காய் திகழ்கிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ”உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - ஏற்பாட்டுக் குழு” என்று கூறிக்கொண்டு செயல்படுகின்ற இரண்டு அமைப்புகள் தங்களுக்குள் போட்டா-போட்டி போட்டுக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன.

தங்கள் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை வாசிக்கப்பட்டால் போதும் என நினைப்போருக்கு இந்த அமைப்பு இப்படிச் சீர்குலைந்து போவது பற்றி பெரிய கவலைகள் ஏதும் இருக்கப்போவதில்லை. ஆனால் ஆழமாக தனிநாயகம் அடிகளும் ஏனைய தமிழறிஞர்களும் எதற்காக இவ்வமைப்பைத் தோற்றுவித்தனர் என்பதை அறிந்து செயல்படுவோருக்கு இது மிகுந்த வேதனையைத் தான் தருகின்றது.

இரண்டு அமைப்புகள் தாங்களே ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு’ அமைப்பின் பொறுப்பாளர்கள் எனக் கூறுகின்றனர். இரண்டு குழுக்களிலுமே ஜனநாயகப் போக்கு இல்லை.

2018ஆம் ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற மாநாட்டிற்கு நான் சென்றிருந்த போது இதன் உறுப்பினர் பாரத்தை தரமுடியுமா? இந்த பாரம்பரியமிக்க ஆய்வுக்குழுவில் நானும் உறுப்பினராக விரும்புகிறேன் எனக் கேட்டேன். ஆனால் இதன் நிர்வாகக் குழுவில் உள்ளோர் ஒருவர் கூட மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டும் அதற்கான வெப் லிங்கையோ அல்லது உறுப்பினர் பாரத்தையோ தரவில்லை.

கடந்த ஆண்டு மாநாடு ஷார்ஜாவில் என்றும் பின்னர் துபாயில் என்றும் ஒரு குழுவினர் செயல்பட்டனர். என்னை கருத்தரங்க கட்டுரைகள் தேர்வுக்குழுவில் இணைந்து செயலாற்ற அழைத்த போது அப்போதும் கேட்டும் கூட உறுப்பினர் பாரம் கிடைக்கவில்லை. ஆயினும் 250 கட்டுரை சுருக்கங்களை வாசித்து அதில் ஆய்வுத்தரமிக்கவற்றை தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன். ஆனால் மாநாடு அதன் போக்கில் மாற்றத்தை நிகழ்த்தி மலேசியாவில் நிகழ்த்தப்பட்டது.

மற்றுமொரு குழு சிங்கையில் நடத்துகின்றோம் என அறிவித்து பின்னர் மற்ற குழுவினர் நடத்திய அதே மாதத்தில் தமிழ்நாட்டிலேயே நிகழ்த்தி முடித்தது.

அதே குழப்பம் இந்த ஆண்டும் தொடர்கின்றது.

தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் எதற்காக இந்த அமைப்பை உருவாக்கினார்? Tamil Studies Abroad - A symposium என்ற நூல் குறிப்பிடும் நோக்கங்கள் என்ன? இது எத்தகைய ஆய்வுகளை உள்ளடக்க வேண்டும் என்ற புரிதல் 2 குழுக்களுக்குமே இருக்கின்றதா?

எத்தனை ஆய்வாளர்களை இந்த அமைப்பு இணைத்துக் கொண்டு செயல்படுகின்றது? மாறிவரும் தமிழ்மக்களின் சூழலுக்கேற்ப அறிவியல், வணிகம், கணினி, இயந்திரத்துறை, புலம்பெயர்வு போன்ற துறைகளுக்கு எந்த அளவிற்கு இந்த மாநாடு முக்கியத்துவம் அளிக்கின்றது?
இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

எண்ணிக்கையில் எத்தனை பேர் வந்தார்கள் என்பது ஒரு அறிவார்ந்த ஆய்வு மாநாட்டிற்கு முக்கியமல்ல. எத்தகைய ஆய்வுத் தரமுள்ள ஆய்வு மலர் வெளியிடப்பட்டது? எத்தகைய கணமான உரைகள் நிகழ்ந்தன? அவை எத்தகைய புதிய ஆய்வுப் பாதைகளை உருவாக்கின என்பது தான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுக்குத் தேவையானது.

இந்த 2 குழுக்களின் நிர்வாகத்தினருமே தங்களின் தனிப்பட்ட உரிமை போல இந்த ஆய்வு அமைப்பை வழிநடத்துவதை விட்டு இதன் தொடக்க கால நோக்கத்தை மனதில் கொண்டு ஆய்வுத்திறன் மிக்க புதிய தலைமைத்துவத்துடன் இதனை சீரமைக்க வேண்டும். ஜனநாயகத்துடன் ஆய்வாளர்கள் தங்களை உறுப்பினர்களாக்கிக் கொள்ளவும் இந்த அமைப்பு சீரிய முரையில் செயல்பட கருத்துக்களை வழங்க வாய்ப்பளிக்கவும் வேண்டும்!

-க.சுபாஷிணி
11.03.2024

Reply all
Reply to author
Forward
0 new messages