காணொளி: உரைகளை மீறி நிற்கும் உண்மைக் குறள் - கவிஞர் முத்துநிலவன்

23 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 18, 2026, 2:19:42 PM (8 days ago) Sep 18
to மின்தமிழ்

kavignr muthunilavan .jpg
உரைகளை மீறி நிற்கும் உண்மைக் குறள்  
-  கவிஞர் முத்துநிலவன்
https://www.youtube.com/watch?v=qGkGEAGytjs

தேமொழி

unread,
Sep 18, 2026, 11:40:24 PM (7 days ago) Sep 18
to மின்தமிழ்
“தமிழாயிரம்” காணொலித் திட்டத்தில் எனது உரை – இணைப்புடன்

தமிழ்நாடு அரசின் பெருமைக்குரிய ஓர் அங்கமான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்   அருமையானதொரு பணியை முன்னெடுத்திருக்கிறது.

“தமிழாயிரம்” எனும் தலைப்பில் ஆயிரம் காணொலிகளைத் தயாரித்து உலகத் தமிழரிடம் வழங்குவது என்பதே அது!

36 நிமிடத்தில் முடியும் காணொலி காணவும் கேட்கவும் கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக:
https://youtu.be/qGkGEAGytjs?si=mPo49CzzsVUs96mF

இனி அவர்கள் தந்திருக்கும் குறிப்பு இதோ:
-------------------------------------------

"உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ளும் தமிழ் உயர்கல்விக் கான உலகளாவிய புதுமைத் திட்டம் (தமிழாயிரம் - தமிழியல் காணொலிக் குவை)

International Innovative Learning Programe for Tamil (IILPT)

இலக்கணம், இலக்கியம் (சங்க இலக்கியம் முதல்  நவீன இலக்கியம் வரை), நாட்டுப்புறவியல், திருக்குறள், பழங்குடியினவியல், காப்பியம், தொல்லியல் எனத்  
தமிழியல் வகைமைகளுள் பாட வல்லுநர்களைக் கொண்டு எளிய நடையில் காணொலிகள் அமையும்.

உலகலாவிய நிலையில் அனைவரும் கற்பதற்கான  தேவைகளை நிறைவு  செய்யக்கூடியதாகவும், உலகளாவிய தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள், உயர்கல்வி  
பயிலும் மாணவர்கள், போட்டித் தேர்வர்கள்,  ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும்   பயனுள்ளதாகவும் அமையும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் "தமிழாயிரம்" (IILPT) திட்டத்தின் கீழ்,  திருக்குறளுக்குக் காலந்தோறும் எழுதப்பட்ட  உரைகளைக் கடந்து நிற்கும்  அதன் மெய்யான பொருளையும் சமூக உண்மையையும் எடுத்துரைக்கிறார்  கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்.

தமிழார்வலர்கள், மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் திருக்குறளைப் புதிய கோணத்தில்  அணுக உதவும் சிறப்பான உரை. இதன் முதல் காணொலியாக  நமது மதிப்பிற்குரிய  முனைவர் வீ.அரசு அவர்களின் உரை   முதல்நாள் வெளியானது.

தொடர்ந்து இரண்டாவதாக இதோ நமது உரை! தொடர்ந்து பார்த்து   உ.த.ஆ.நி.வலையொளியில் இணைந்து தொடர்ந்து வாருங்கள் நண்பர்களே!

அறிஞர்கள் - படைப்பாளிகளின் உரைவரிசையில் நமது புலவர் கும.திருப்பதி, முனைவர் மகா.சுந்தர், எழுத்தாளர் அண்டனூர் சுரா உள்ளிட்ட நம் நண்பர்கள் பலரின் உரைகளும் வருகின்றன.

(எனது மற்றோர் உரையும் உண்டு!திட்டமிட்டபடி பிறகு வரும்)

நிறுவனத்தின் திட்ட முதன்மையர் முனைவர் நா.சுலோசனா அவர்கள்  எடுத்த விடா முயற்சியின் வெற்றியிது! ஒளிப்பதிவு முதல் படத்தொகுப்பு மற்றும் தேவையான படங்களைச் சேர்க்கும் பணியை மிக நேர்த்தியாகச் செய்திருக்கும்  உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நண்பர்கள் திருமிகு ஈரம், திருமிகு சபரி உள்ளிட்ட பலரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு எனது அன்பும் நன்றியும்

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை, செப்டம்பர் 19, 2026

Reply all
Reply to author
Forward
0 new messages