மயிர் என்ற சொல் ஏன் தவிர்க்கப்படுகிறது?

520 views
Skip to first unread message

Oru Arizonan

unread,
Sep 14, 2014, 10:34:37 PM9/14/14
to mint...@googlegroups.com
"தலையின்றிழிந்த மயிரனையர் தன்
நிலையின்றிழிந்தக் கடை."

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்"

மேற்கண்ட இரண்டு குறள்களிலும் செந்நாப்போதார் "மயிர்" என்ற சொல்லைக்
கையாண்டு இருக்கிறார்.

தற்பொழுது "மயிர்" என்ற சொல் தவிர்க்கப்பட்டு, "முடி" என்ற சொல்
கையாளப்படுகிறது. முடி என்றால் என் நினைவுக்கு வருவது "மணிமுடி"தான்.

இடக்கரடக்கல் காரணமாக "மயிர்" என்ற சொல் தவைக்கப்படுகிறதா? அப்படி ஏன்
தற்காலத்தில் அது தவிர்க்கப்பட வேண்டும்?

அதுபோல "தோல்" என்ற சொல்லும் தவிர்க்கப் படுகிறது. "சருமம்" என்ற சொல்லே
கையாளப்படுகிறது.

மின்தமிழ் உடன்பிறப்புக்களே! தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

--
*பணிவன்புடன்,*
*ஒரு அரிசோனன் *

Geetha Sambasivam

unread,
Sep 14, 2014, 11:30:49 PM9/14/14
to மின்தமிழ்
மயிர் என்னும் சொல்லைத் திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் காணலாம்.  நான் கூடிய வரை மயிர் என்னும் சொல்லையே பயன்பாட்டில் வைத்திருக்கிறேன்.  அதே போல் தோல் என்றும் சொல்லுகிறேன். தோல் வியாதி, தோலின் மென்மை என்று தான் அதிகமாக எழுதுவேன்.  இவை தவிர்க்கக் கூடிய சொல்லாக மாறியது எப்போது எனத் தெரியவில்லை. :))))))

வாழ்த்த வயதில்லை;  வணங்குகிறேன் என்று புதிதாக ஒரு கோஷம் கிளம்பி உள்ளது போல் இதுவும் கிளம்பி இருக்கும். ஏகன், அநேகன், ஆன அந்த இறைவனையே வாழ்த்தும்போது  சாதாரண மானிடரை வாழ்த்த வயது எதற்கு? 

Innamburan S.Soundararajan

unread,
Sep 14, 2014, 11:41:41 PM9/14/14
to mint...@googlegroups.com

Tthamizth Tthenee

unread,
Sep 14, 2014, 11:53:18 PM9/14/14
to mint...@googlegroups.com
வாழ்த்த வயது வேண்டாம் மனது இருந்தால் போதும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Sep 14, 2014, 11:54:06 PM9/14/14
to மின்தமிழ்
மானுடவியலார் ஆய்வின்படி மயிர் உயிர் உள்ள வளர்க்கூடிய மனித உறுப்பு என்றும் இறைவனுக்குக் காணிக்கை அளிப்பவர்கள் ரத்தம் அளிப்பது என்ற ஒப்ப்ந்தஎதுக்கு அடுத்து மயிரையே காணிக்கையாக அளித்தனர்

உதிர்ந்த மயிர் என்பது உயிரற்றது எனவே அதை இழிந்ததாக மக்கள் கருதினர்.  உடலில் எல்லாப் பாகங்களிலிலும் மயிர் வளர்ந்தாலும் தலையிலுள்ள மயிரே உயர்ந்ததாகக் கருதி முடி காணிக்கை செய்வதுண்டு

இறந்தவர்களுக்குச் சடங்கு செய்யும்போது மீசையை மழிப்பதும் நீத்தாருக்கு அளிக்கும் காணிக்கையே

பெண்ணுக்கு மட்டும் முடியை மழிப்பது விதவைக் கோலத்தில் மட்டுமே.  அதுவரை பெண் தன் கூந்தலை மற்றவர்களுக்குக் கவர்ச்சியூட்டாமல் வளர்க்கலாம்

ஒரு ஆய்வு பெண் கூந்தலை வளர்ப்பது அவர்கள் குமுகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்கிறர்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே

முடியை நெருக்கமாக வெட்டிக்கொள்வது கட்டுப்பாட்டைக் குறிப்பது.  ராணுவ வீரர்கள் மாணவர்கள் தலை முடியைப் பார்க்கவும்

நீண்ட முடியை வளர்ப்பவர்கள் குமுகத்தை ஒதுக்கியவர்கள்.  மொட்டையடித்தவர்களும் அவ்வாறே

குடுமி வைப்பதற்கும் விளக்கம் உண்டு.  வட்டமான குடுமி பிரம்மச்சரியத்தைக் குறிக்கும்

மேலும் அதிகத் தகவல்கள் தேடினால் கிடைக்கும்

மதஎசுஇந்திரன்

மதஎசுஇந்திரன்

On Mon, Sep 15, 2014 at 9:11 AM, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:

Dev Raj

unread,
Sep 15, 2014, 12:10:47 AM9/15/14
to mint...@googlegroups.com
'மவனே’ என்பதுகூட மிரட்டலுக்கான சொல்லாகி
விட்டது சென்ற நூற்றாண்டிலிருந்து  :))

தேவ்

S NEELAKANTAN

unread,
Sep 15, 2014, 12:28:28 AM9/15/14
to mintamil
மலையாளத்தில் "மயிர்" என்ற வார்த்தை ஒரு கேட்ட வார்த்தையாக உபயோகபடுத்துவார்கள் . இதன் தாக்கம் என்னவோ தமிழில் வந்திருக்கும் அதனால் தான் என்னவோ  இதை தமிழர்களும் தவிர்க்கிறார்கள் என்பது என்னுடைய கணிப்பு.தவறாகவும் இருக்கலாம் 

" போடா மயிரே " இப்படி மலையாளத்தில் ஒருவனை மென்மையாக திட்டுவதற்கு உபயோகிக்கும்  வார்த்தை 

செம்பூர் நீலு ( நீலகண்டன் )

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Oru Arizonan

unread,
Sep 15, 2014, 12:32:35 AM9/15/14
to mint...@googlegroups.com
//" போடா மயிரே " இப்படி மலையாளத்தில் ஒருவனை மென்மையாக திட்டுவதற்கு உபயோகிக்கும்  வார்த்தை //

மலையாளத்தில் "மயிர்" என்ற சொல் ஏன் அப்படி விளக்கப் படுகிறது என்ற காரணத்தை அறிவேன். எனினும் நாம் மலையாளிகள் அல்லவே!  ஒரு சில ஆண்டுகள் வரை கையாண்ட "மயிர்", "தோல்" என்ற சொற்கள் எப்படி வேண்டாதவை ஆகிப் போயின?  
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

seshadri sridharan

unread,
Sep 15, 2014, 12:11:44 PM9/15/14
to mintamil
நான் நேரே கண்ட காட்சி ஒரு தெரு ஓரக்குடித்தனக்காரத் தந்தை தன் மகனுடன் சண்டையிடும் போது ''நீ என் மயிருக்கு சமம் '' என்று வசைபாடியபடி தன் கைலிக்குள் கைவிட்டு கையால் தன் அடிவயிற்றின் மயிர்கற்றையை பிடுங்கி foo என்று ஊதிப் பறக்க விட்டான். இது தானோ காரணம் மக்கள் மயிர் என்றால் நினைவு படுத்திக்கொள்வது இதனால் தானோ அவர்கள் மயிர் என்ற சொல்லைத் தவிர்ப்பது. ஆனால் நான் விடாப்பிடியாக முடி என்றால் உச்சியைத் தான் குறிக்கும் மயிரைக் குறிக்காது என்று சொல்லி எப்பேர்பட்ட ஆளானாலும் மயிர் என்றசொல்லைத்தான் பயன்படுததுகிறேன். அதோடு நான் ஒரு தமிழ் உணர்வாளன் என்பதால் முடி என்ற சொல்லைத் தவிர்த்து  எல்லோரையும் மயிர் என்ற சொல்லையே பயன்படுத்த வற்புறுத்தி வருகிறேன்.

சேசாத்திரி   

2014-09-15 8:04 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:

dr.ponmudi

unread,
Sep 15, 2014, 10:23:20 PM9/15/14
to mint...@googlegroups.com
//"தலையின்றிழிந்த மயிரனையர் தன் 
நிலையின்றிழிந்தக் கடை." //

இதில் 'தலையின்றிழிந்த' என்பதற்கு, 'தலையில்லாமல் இழிந்த' என்பது பொருளாகும்.

'தலையின் இழிந்த' என்றிருக்கவேண்டும். அப்படியிருந்தால், 'இன்' என்னும் ஐந்தாம்வேற்றுமையுருபின் பொருள் வெளிப்படும். அப்போது, 'தலையிலிருந்து இழிந்த' என்பது பொருளாகும்.

'தலையி னிழிந்த' என இவ்விடத்தில் புணர்த்தவுந்தேவையில்லை. ஏனெனில் மயிர் எதிலிருந்துநீங்கியதென்பதைவிடவும், அது நீங்கியதென்பதையே இங்கு வலியுறுத்திச்சொல்லவேண்டும்.

'தலையினிழிந்த' என்பது 'தலையின்' என்பதைச்சிறப்பித்துச்சொல்வது, 'தலையின் இழிந்த' என்பதோ 'இழிந்த' என்பதைச்சிறப்பித்துச்சொல்வது.

(தலையிலிருந்து நீங்காதவரை மயிர் தேவைப்படுவதாயிருக்க, நீங்கியதும் தேவையற்றதாகிவிடுகிறது)

'நிலையின்றிரிந்தக்கடை' என்பதிலும் புணர்ச்சி தேவையில்லை.

நிலையிலிருந்துதிரியாமல் வேறெதிலிருந்துதிரியப்போவதில்லை. அப்படி இன்னொன்றுமிருக்குமானால், நிலையிலிருந்தென்பதை குறிப்பிட்டுச்சொல்லும்படியாக் புணர்த்திச்சொல்வது தேவையாயிருக்கும்.

எனவே, 'நிலையின் திரிந்தக் கடை' என்பதே சரி.

N. Ganesan

unread,
Sep 15, 2014, 10:40:54 PM9/15/14
to mint...@googlegroups.com

On Monday, September 15, 2014 7:23:20 PM UTC-7, dr.ponmudi wrote:
எனவே, 'நிலையின் திரிந்தக் கடை' என்பதே சரி.

தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர் 
நிலையி னிழிந்தக் கடை
 
Oru Arizonan

unread,
Sep 15, 2014, 11:09:48 PM9/15/14
to mint...@googlegroups.com
என் பிழையைத் திருத்தியமைக்கு நன்றி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Sep 16, 2014, 3:26:01 AM9/16/14
to mint...@googlegroups.com
just as skin, nail are dead cells, so is the hair;  (growing or lengthening is not because it is alive!) remember the simple scientific fact and then one need to remember that the socalled nourishing shampoos on application are all not nourishing!

rnkantan
Reply all
Reply to author
Forward
0 new messages