சித்தர்களைத் தத்துவார்த்தமாக எப்படிப் புரிந்து கொள்வது என்பதில் ஒரு
தெளிவின்மை இருக்கிறது. மேற்சொன்ன சிவவாக்கியர் பாடல் தெளிவாக அத்வைத
நிலை பற்றிப் பேசுகிறது. உள்ளிருக்கும் நாதனைக் கண்ட பின் அவனுக்கு குண
நலன்கள் கொடுத்து, ஒரு கற்சிலையாக அதாவது மூர்த்தியாக ஏன் வழிபட
வேண்டும்? என்று கேட்கிறது இப்பாடல். வேடிக்கையாக இருக்கிறது! காலத்தால்
பிற்பட்ட இப்போக்கு உண்மையில் வேத வழிபாட்டை முன் வைப்பது போல் படுகிறது.
வேத நெறியில் "தெய்வம்" என்பதை ஒளி வடிவமாக பார்த்தனர். மேலும்,
தெய்வங்களுக்கு நாம் செய்யும் நிவேதனங்கள் அக்னி எனும் நெருப்பின் வழியாக
எடுத்துச் செல்லப்படுகிறது என்பதும் வேத வழியே! எனவே வேத நெறியில் உருவ
வழிபாடு என்பது கிடையாது.
ஆகமங்கள் வேறுன்றத் தொடங்கிய இந்தியாவில் இறைவனுக்கு கோயிலமைத்து, உருவ
வழிபாடுகள், உற்சவங்கள் அமைத்து வழிபடும் முறை வருகிறது. இதன் பின்னுள்ள
தத்துவம் என்னவெனில்? உள்கிடக்கும் (கடவுள்) இறைவனே வெளியிலும் உள்ளான்
என்பது. அவனை உள்ளேயும் காணலாம். அற்புதமான குணநலன்கள் கொண்ட
மூர்த்தியாகவும் காணலாம். மூர்த்தங்களுக்குப் பின்னால் புராண, இதிகாசக்
கதைகள் தேவைப்படுகின்றன. அப்போதுதான் உருவத்திற்குப் பொருள் வரும்.
'கண்ணனெனும் கருந்தெய்வம்' என்று சொல்லும் போது கண்ணனின் பெருமைகள்
பற்றிய கதைகள் தேவை. பாகவதம் தேவைப்படுகிறது!
சித்தர்கள் பேசுவது யோகவழி. ஆனால் முனிவர்களும், யோகிகளும் 'ஹரி, ஹரி'
என்று தொழும் பேரரவம் கோயிலில் கேட்பதாகச் சொல்வது பக்தி. பக்தி
தோன்றியது தென்னகத்தில், அங்கேயே இதற்கான எதிர்க்குரலும்
ஒலித்திருக்கிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது?
சித்தர்கள் பக்தி மார்க்கத்தை ஏற்காததேன்?
> பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
> இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
> பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
> பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!
இதுகூட வெளியில் சமூகச் சமன்பாடு பற்றிப் பேசுவது போல் தோன்றினாலும்,
தத்துவார்த்தமாக அத்வைதமே பேசுகிறது!
சித்தர்கள் உளக்கிடக்கை என்னவென்று யாராவது "ஆசார்ய ஹிருதயம்"
எழுத்தியிருக்கிறார்களோ?
கண்ணன்
> பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
> இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
> பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
> பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!இதுகூட வெளியில் சமூகச் சமன்பாடு பற்றிப் பேசுவது போல் தோன்றினாலும்,
தத்துவார்த்தமாக அத்வைதமே பேசுகிறது!
ஒருவர் இந்தப் பாடலில் உள்ள "பணத்தி" என்பது சாதியைக் குறிக்கவில்லை என்கிறார். அது எனக்குப் புதிதாக இருக்கிறது."பார்ப்பனத்தி" என்றால் "ன" வந்து "பனத்தி" இருக்க வேண்டும். ஆனால், இங்கு இருப்பது "ண" உள்ள "பணத்தி". எனவே, இது பார்ப்பன சாதியைக் குறிக்கவில்லை என்கிறார்.
ஆக..
மகமாயி என்பவளே அவள்தான்
என்றுதானே சொல்ல வருகிறீர்கள்..?
_____________________
உண்டுதான் ஆனாலும்..
எங்கள் திருவார்த்தையான்/திருவாத்தான்/வாக்கியார்
பாடியதை உற்றுணர வேண்டும் .
"பறைச்சி ஆவதேதடா பணத்தி ஆவதேதடா..?
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ..???
இங்கே பணத்தி என்பதற்கு
பாணன்/பணத்தி என்று பொருள்.
பிராமனர் (கழகத் தமிழில் சொல்வதானால்
பார்ப்பனன்/பார்ப்பனத்தி என்றுதானே வரும்..?)
பிழை என்றால்.. திருத்தி உதவுங்கள்...
பிராமனன் என்பது ஜாதிப்பெயரே கிடையாது.
இருபிறப்பாளனுக்கு ஏது/எதற்கு ஜாதி..?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஒருவர் இந்தப் பாடலில் உள்ள "பணத்தி" என்பது சாதியைக் குறிக்கவில்லை என்கிறார். அது எனக்குப் புதிதாக இருக்கிறது."பார்ப்பனத்தி" என்றால் "ன" வந்து "பனத்தி" இருக்க வேண்டும். ஆனால், இங்கு இருப்பது "ண" உள்ள "பணத்தி". எனவே, இது பார்ப்பன சாதியைக் குறிக்கவில்லை என்கிறார்.