அறிவை வளர்த்துக் கொள். இது ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு கூறும்
அறிவுரை. உங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளிக்கு, கல்லூரிக்கு
அனுப்புங்கள். நாங்கள் அவர்களின் அறிவை வளர்த்து விடுகிறோம். இது
திருட்டுக் கயவாளி ஆசிரிய கொள்ளைக்கூட்டங்களின் பொய்யுரை. அறிவை
வளர்த்துக்கொள்ள ஒருவன் பல ஆண்டுகள் பள்ளி சென்று,
புத்தகங்கள் பல படித்து, பாடங்கள் பல பயின்று, தேர்வுகள் பல
எழுதி, பட்டங்கள் பல பெறவேண்டுமா? தேவையில்லை. சிந்திக்கும்
திறனிருக்கிறதா உன்னிடம்? அது போதும். நான் காட்டும் வழியில்
சிந்தித்துப் பார். வளரும் உன் அறிவு.
கேள்வி: ஒன்றைப்பற்றி என் அறிவை வளர்த்துக் கொள்வது எப்படி?
பதில்: ஒன்றைப்பற்றி அறியப்பட வேண்டியவைகளை அறியும்போது
அதைப்பற்றிய உன் அறிவு வளரும்.
ஒன்றைப்பற்றி உன் அறிவை வளர்த்துக்கொள்ள அறியப்பட வேண்டியவைகள்:
1. அதன் பாகங்கள் எவை?
2. அதிலிருப்பது, மற்ற எதிலிருக்கிறது?
3. அதனோடு இணைந்திருப்பவைகள் எவை?
4. அதைப் பாதிப்பவைகள் எவை?
5. அதன் உருக்கள் எவை?
6. அதற்குப் பதிலாக இருக்கும் மாற்றுகள் எவை?
7. அதனால் ஏற்படும் பயன்கள் எவை?
உன்னைப்பற்றி உன் அறிவை வளர்த்துக்கொள்ள அறியப்பட வேண்டியவைகள்:
1. உன் பாகங்கள் எவை?
2. உன்னிடமிருப்பது, மற்ற எவரிடம் இருக்கிறது?
3. உன்னோடு இணைந்திருப்பவர்கள் யார்?
4. உன்னைப் பாதிப்பவைகள் எவை?
5. உன் உருக்கள் எவை?
6. உனக்குப் பதிலாக இருப்பவர்கள் யார்?
7. உன்னால் ஏற்படும் பயன்கள் எவை?
என்னைப்பற்றி உன் அறிவை வளர்த்துக்கொள்ள அறியப்பட வேண்டியவைகள்:
1. என் பாகங்கள் எவை?
2. என்னிடமிருப்பது, மற்ற எவரிடம் இருக்கிறது?
3. என்னோடு இணைந்திருப்பவர்கள் யார்?
4. என்னைப் பாதிப்பவைகள் எவை?
5. என் உருக்கள் எவை?
6. எனக்குப் பதிலாக இருப்பவர்கள் யார்?
7. என்னால் ஏற்படும் பயன்கள் எவை?
ஒரு ஆணைப்பற்றி உன் அறிவை வளர்த்துக்கொள்ள அறியப்பட வேண்டியவைகள்:
1. அவன் பாகங்கள் எவை?
2. அவனிடமிருப்பது, மற்ற எவரிடம் இருக்கிறது?
3. அவனோடு இணைந்திருப்பவர்கள் யார்?
4. அவனைப் பாதிப்பவைகள் எவை?
5. அவன் உருக்கள் எவை?
6. அவனுக்குப் பதிலாக இருப்பவர்கள் யார்?
7. அவனால் ஏற்படும் பயன்கள் எவை?
ஒரு பெண்ணைப் பற்றி உன் அறிவை வளர்த்துக்கொள்ள அறியப்பட
வேண்டியவைகள்:
1. அவளின் பாகங்கள் எவை?
2. அவளிடமிருப்பது, மற்ற எவரிடம் இருக்கிறது?
3. அவளோடு இணைந்திருப்பவர்கள் யார்?
4. அவளைப் பாதிப்பவைகள் எவை?
5. அவளின் உருக்கள் எவை?
6. அவளுக்குப் பதிலாக இருப்பவர்கள் யார்?
7. அவளால் ஏற்படும் பயன்கள் எவை?
“மெய்ப்பொருள் அறிவல்ல! மெய்ப்பொருள் காண்பது தான் அறிவு!” எப்பொருள்
யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள் எண் : 423)
ஒரே விஷயத்தை பல விதங்களில் கூறமுடியும். கூறிய விதம் புதிது என்பதால்
கூறிய விஷயமும் புதிது என்று அர்த்தமல்ல. ஒன்றைப் பற்றி மேற்கூறிய
விஷயங்களை வெவ்வேறான வார்த்தைகளைக்கொண்டு வெவ்வேறான புதிய விதங்களில்
கூறமுடியும். ஒன்றைப் பற்றி ஒரு விஷயத்தை ஒருவர் புதுவிதமாகக்
கூறினாலும், அவர் கூறும் விஷயம் புதிதுதானா என்பதை
எண்ணிப்பார்க்கவேண்டும். அறியப்படும் விஷயமும் பொருளுக்குப் பொருள்
மாறுபடுகிறதா என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்! அறியப்படும் விஷயங்கள்
பொருளுக்குப் பொருள் மாறக்கூடியதல்ல. You will discover the same laws of
nature in anything and everything!
மின் தமிழ் அறங்கத்திலே இந்த பட்டி மன்றத்தை நடத்துவது என் விருப்பம்.
அறிவு என்றால் (என்ன?)
எது அறிவு, எவையெல்லாம் அறிவல்ல?
அறிவை: அடைந்தவர் என்ன என்ன செய்வார்?
எந்த எந்த செயல்கள் ஒருவரை அறிவில்லாதவராக அடையாளம் காட்டும்? ஒருவர்
அறிவுள்ளவரா அல்லது அறிவில்லாதவரா என்று அடையாளம் காட்ட பத்து வினாக்கள்
எழுதுங்கள். அதன் பதில்களிலிருந்து ஒருவரின் அறிவு அளவை கணக்கிட
உதவவேண்டும்.
அறிவு குறைந்தவர் மற்றும் அறிவில்லாதவர் இவர்களைப் பற்றிய் சிறு கதைகள்
மற்றும் சிரிப்புகள....