தொல்லியல் அகழாய்வு கண்டுபிடிப்புகள்

741 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 19, 2020, 5:52:52 PM6/19/20
to மின்தமிழ்
2600 ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தையின் எலும்புக்கூடு: கொந்தகை அகழாய்வில் கிடைத்தது

----------


தேமொழி

unread,
Jun 23, 2020, 12:32:13 AM6/23/20
to மின்தமிழ்
source - https://www.hindutamil.in/news/tamilnadu/560472-keeladi-earthen-kiln-found.html

இந்து தமிழ் திசை: 

கீழடியில் நெருப்பு மூலம் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்கூட அமைப்பு கண்டுபிடிப்பு


கீழடி அகழாய்வில் நெருப்பு மூலம் பொருட்கள் தயாரிக்கும் 13 அடி நீள தொழிற்கூட அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.


[...] 

 கீழடியில் 13 அடி நீள தொழிற்கூட அமைப்பு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதன் அருகே நெருப்பு மூலம் இரும்பு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பொருட்கள் தயாரித்ததற்கு அடையாளமாக கருப்பு நிற சாம்பல் துகள்கள் இருந்தன.

கீழடி, அக்காலத்தில் தொழில் நகரமாக இருந்ததற்கான ஆதாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

Sathivel Kandhan Samy

unread,
Jun 23, 2020, 3:55:24 AM6/23/20
to mint...@googlegroups.com
நித்தம் ஒரு புதிய செய்தி நம்மை வியப்பிலாழ்த்துகிறது.   தமிழகமெங்கும் இத்தைகைய தொல்லியல் எச்சங்கள் இருக்கின்றன.  இவைகளையும், மணல் குவாரி, கல் குவாரி, விட்டுமனைகளாக்குதல் போன்ற செய்ல்களால் அழிக்கப்படுமுன் கண்டறியப்பட்டு காத்தல் வேண்டும்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/00a24d42-8255-4020-b703-9c80ae2cc630o%40googlegroups.com.

தேமொழி

unread,
Jul 3, 2020, 11:56:57 PM7/3/20
to மின்தமிழ்
Rare memorial pillar with Tamil Brahmi inscriptions found near Madurai
Published:2020-07-03
Read more at:


CHENNAI: A rare memorial pillar with 2,000-year-old Tamil Brahmi inscriptions was found on the premises of Ekanathan Mutt in Kinnimangalam, a village near Madurai. 

The inscriptions in three lines read, “Ekan Athan Kottam”, which means the region or territory of Ekan Athan, preferably a king or chieftain of the region. Even though ‘Athan’ is a common name that appears in many Brahmi inscriptions found in Tamil Nadu, this is the first time ‘Kottam’ appears on an inscription slab. 

It was a potsherd with a Brahmi letter found on the premises which led the team of heritage experts to the memorial pillar with Brahmi inscriptions. 

The discovery attains significance as it lies close to Keeladi and Kongar Puliyankulam, another famous Brahmi site in Madurai.
 
“The name Atan occurs in Tamil-Brahmi inscriptions frequently. This was probably part of a memorial pillar erected for Ekan Atan. This inscription could be dated more than 2,000 years,” said K T Gandhirajan, a rock art expert who with C Rajavel and S Ananthan discovered the memorial pillar. 

Tamil Nadu has a vibrant tradition of erecting memorial stones for heroes since time immemorial. The memorial stones with Tamil Brahmi inscriptions found in Pulimankombai and Thathapatti are considered the oldest (300BC) found in the region. 

Memorial stones with figures have been discovered from many parts of the state later. Memorial stones broadly refer to all kinds of monuments erected for the dead people (hero stones, sati stones and religious commemoration, nisitikai) as well as animals and birds. 

Senior epigraphist V Vedachalam said it’s a “rare discovery.” 

“Even though Tamil-Brahmi inscriptions have been discovered in many places in and around Madurai, this memorial pillar with Tamil-Brahmi inscriptions is significant.” said Vedachalam. “It’s better if the state archaeology department conducted more excavations in the region,” he added. 

The team also identified a slab with vatteluthu (a syllabic alphabet used for writing Tamil and Malayalam) inscriptions on the same premises. 

“The vatteluthu inscription was found on a stone slab. It reads, ‘Iraiyiliyaga Ekanatan Pallippatai Mandali Intar.’ It perhaps refers to some donation to the burial temple of Ekanathan in the later period,” said Gandhirajan. 

Further research is necessary to understand the importance of these inscriptions and the history of the village. 

தேமொழி

unread,
Jul 4, 2020, 5:53:57 AM7/4/20
to மின்தமிழ்
source - https://www.bbc.com/tamil/india-53290412

தமிழர் வரலாறு: கீழடி அகவாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் - முக்கிய தகவல்கள்


ஒரு மணி நேரத்துக்கு முன்னர்


  • கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாநில தொல்லியல் துறை நடத்திவரும் ஆறாம் கட்ட அகழாய்வில் இதுவரை நான்கு எடைக் கற்கள் கிடைத்துள்ளன. கீழடி பகுதி தொழிற்கூடமாக இருந்திருக்கலாம் என்ற கருத்திற்கு இவை வலுச் சேர்ப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    கீழடியிலும் அதனை ஒட்டியுள்ள அகரம், கொந்தகை, மணலூர் பகுதிகளிலும் மாநில தொல்லியல் துறை தற்போது அகழாய்வுகளை நடத்திவருகிறது. இது கீழடி பகுதியில் நடந்துவரும் ஆறாவது கட்ட அகழாய்வாகும்.

    இதில் கொந்தகை பகுதி ஈமக் குழிகள் அமைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அகரம் பகுதி மக்கள் வாழ்ந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

    கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள், தற்போது மீண்டும் தொடங்கி நடந்துவருகின்றன. அதில், கீழடி பகுதியில் வெட்டப்பட்ட ஆய்வுக் குழி ஒன்றில், இரும்பு உலை போன்ற அமைப்பு ஒன்றும் வெளிப்பட்டது.

    கீழடியில் நடந்துவந்த அகழாய்வில் ஜூன் 20ஆம் தேதியன்று 1.53 மீட்டர் ஆழத்தில் ஒரு எடை கல் கண்டெடுக்கப்பட்டது. இந்த எடைக் கல் கறுப்பு நிறத்தில் உருளை வடிவில் இருந்தது.

    இதன் அடிப்பாகம் தட்டையாக இருந்தது. ஏதன் மேல் பகுதி பளபளப்பாக்கப்பட்டிருந்தது. இதன் பதினெட்டு கிராம். இதன் உயரம் 20.74 மி.மீட்டராகவும் அகலம் 23.59 மி.மீட்டராகவும் இருந்தன. இதனுடன் இரும்பு, தாமிரப் பொருட்கள் கிடைத்தன.

  • ஜூன் 25ஆம் தேதியன்று 1.22 மீட்டர் ஆழத்தில் ஒரு எடைக் கல் கண்டெடுக்கப்பட்டது.இதுவும் கறுப்பு நிறத்தில் பளபளப்பாக்கப்பட்டு, உருளை வடிவில் இருந்தது. இதன் எட்டு கிராம். இதன் உயரம் 16.40 மி.மீட்டராகவும் அகலம் 18.80 மி.மீட்டராகவும் இருந்தது. இதனுடன் இரும்புப் பொருள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கீழடி அகழாய்வு
    Image captionகீழடியின் முந்தைய அகழாய்வுகளில் தொழிற்கூடம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. (கோப்புப்படம்)

    ஜூன் 24ஆம் தேதியன்று 1.5 மீட்டர் ஆழத்தில் 150 கிராம் எடையுடைய எடை கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் கறுப்பு நிறத்தில் பளபளப்பாக்கப்பட்டு, உருளை வடிவில் இருந்தது. இதன் நீளம் 41.26 மி.மீட்டராகவும் அகலம் 47.11 மி.மீட்டராகவும் இருந்தன. இதனுடனும் ஒரு இரும்புப் பொருள் கிடைத்தது.

    ஜூலை 3ஆம் தேதியன்று நடந்த அகழாய்வில், 1.45 மீட்டர் ஆழத்தில் 300 கிராம் எடையுள்ள எடைக் கல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் கறுப்பு நிறத்தில் பளபளப்பாக்கப்பட்டு, உருளை வடிவில் இருந்தது. இதன் நீளம், அகலம் ஆகியவை 57.78 மி.மீட்டராக இருந்தன. இந்த எடை கல்லுடன் இரும்பு, செம்பு, கண்ணாடியிலான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

  • ஆகவே இதுவரை 8, 18, 150, 300 கிராம் எடையுடைய நான்கு எடைகற்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்தப் பகுதியில் அடுப்புக் கரி நிறைய இடங்களில் கிடைத்துள்ளது. 0.61 மிமீ ஆழத்தில் உலை ஒன்று இருந்த தடயமும் கிடைத்துள்ளது.

    தற்போது கண்டறியப்பட்டுள்ள உலை அமைப்பு, இக்குழிகளில் கிடைத்துள்ள இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் ஆகியவை இப்பகுதி தொழில் கூடமாக செயல்பட்டிருக்கலாம் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.

    எடைக் கற்கள் மூலம் இப்பகுதியில் வணிகமும் நடைபெற்றிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    "இந்த எடை கற்களின் அளவு 8 கிராமிலிருந்து 300 கிராம் வரைதான் என்பதால், உலோகப் பொருட்களை எடைபோட இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்" என்கிறார் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்கும் மாநில தொல்லியல் துறையின் இணை இயக்குனர் சிவானந்தம்.

    தற்போது தமிழ்நாட்டில் கீழடி, கொந்தகை, அகரம், கொடுமுடி என பல இடங்களில் மாநில தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வுகள் நடந்துவருகின்றன..



Sathivel Kandhan Samy

unread,
Jul 4, 2020, 7:17:33 AM7/4/20
to mint...@googlegroups.com
மின் தமிழ் மடலாடல் குழுவினருக்குத் தேவைப்படும் அல்லது ஆர்வமூட்டும் பல தகவல்களை சேகரித்துத் தரும் தங்களுக்கு நன்றி. 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 5, 2020, 11:33:57 PM7/5/20
to மின்தமிழ்
source - https://www.hindutamil.in/news/tamilnadu/562848-the-discovery-of-a-mineral-inscription-near-sivaganga.html

சிவகங்கை அருகே தாது பஞ்சகால கல்வெட்டு கண்டுபிடிப்பு



இ.ஜெகநாதன்
05 Jul 2020 


சிவகங்கை அருகே இடையமேலூர் ஊருணியில் கண்டெடுக்கப்பட்ட தாது பஞ்சகால கல்வெட்டுடன் தொல்லியல் ஆய்வாளர் கா.காளிராசா.

சிவகங்கை

சிவகங்கை அருகே இடையமேலூரில் தாது பஞ்ச கால கல்வெட்டைக் கொல்லங்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் புலவர் கா.காளிராசா கண்டுபிடித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ''இந்தக் கல்வெட்டு இடையமேலூரில் கங்காணி ஊருணி (எ) கங்கா ஊருணிக் கரையில் உள்ள விநாயகர் கோயில் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இது இரண்டரை அடி உயரம், ஒன்றரை அடி அகலம் உடையது. மொத்தம் 13 வரிகள் எழுதப்பட்டுள்ளன.

அதில் ‘உ’ எனத் தொடங்கி 1877-ம் ஆண்டு மேற்படி ஊரிலிருக்கும் பெரி.மு.நா. நாச்சியப்பன் ஆதிமூல கடவுளர் பேருக்கு வெட்டி வைத்திருக்கும் சண்முக நதி தெப்பக் குளத்திலிருந்து தண்ணீர் பெறுகிற கால்வாய் மேலடி சொல்வார்க்கு திருத்திக் கொடுத்தது தாது வருஷம்’ என எழுதப்பட்டுள்ளது.

மேலும் அந்தக் கல்வெட்டில் எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றன. 10 மற்றும் 11-ம் வரிகள் மிகவும் தேய்ந்து தெளிவில்லாமல் உள்ளன. தமிழ் ஆண்டுகளில் தாது ஆண்டு பத்தாவது ஆண்டாகும். தாது ஆண்டான 1876-77இல் ஏற்பட்ட பஞ்சம் சென்னை மாகாணத்தில் தலைவிரித்து ஆடியது. தாது பஞ்சத்தை சென்னை மாகாணப் பஞ்சம் என்றே அழைக்கின்றனர். இப்பஞ்ச காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தனர். இதில் மக்கள் கொத்துக் கொத்தாக உணவின்றி இறந்தனர்.

கல்வெட்டில் சொல்லப்படுகிற நாச்சியப்பன் என்பவர் இலங்கை கண்டியை ஒட்டிய பகுதியில் தொழில் செய்து வந்துள்ளார். அதில் கிடைத்த வருவாயில் சொந்த ஊரில் ஊருணியை அமைத்துள்ளார். இத்தகவலை அவரது வம்சாவளியினரும், ஊர்மக்களும் தெரிவிக்கின்றனர்.

மேலும் தாது பஞ்ச காலத்தில் மழையில்லாததால் விவசாயம் பொய்த்துப் போனது. வறுமையில் இருந்த ஊர் மக்களுக்கு ஊருணியை வெட்டும் வேலையை வழங்கி வாழ்வாதாரத்தை அவர் பாதுகாத்து இருக்கலாம். தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்வதற்கான கால்வாயை ஊர்ச்சபை (அ) ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்பது இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. மேலும் தாது பஞ்சகால கல்வெட்டு கிடைத்திருப்பது இன்றைய ஊரடங்கு சூழலில் மக்களின் துன்பத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது'' என்று கூறினார்.



தேமொழி

unread,
Jul 13, 2020, 4:32:36 PM7/13/20
to மின்தமிழ்
source  - https://www.hindutamil.in/news/tamilnadu/563884-melmalaiyanur-called-as-rajendra-chozha-nallur-1.html

 11 Jul 2020

மேல்மலையனூருக்கு 'ராஜேந்திரசோழ நல்லூர்' எனப் பெயர்; கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதாக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் தகவல் 

melmalaiyanur-called-as-rajendra-chozha-nallur
கோயிலில் உள்ள கல்வெட்டைக் கண்டறிந்த உதவிப் பேராசிரியர் ரமேஷ்.

விழுப்புரம்

மேல்மலையனூருக்கு பாண்டியர் ஆட்சிக்காலத்தில் 'ராஜேந்திரசோழ நல்லூர்' என்ற பெயர் வழங்கப்பட்டுளதாக, இராஜ நாராயண பெருமாள் கோயில் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதாக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள இராஜ நாராயணப் பெருமாள் கோயிலில் தென்புற அதிட்டானத்தில் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளதாக விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

"கண்டறியப்பட்ட இக்கல்வெட்டில் மூன்றாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 30-வது ஆட்சியாண்டில் அதாவது, கி.பி. 1298-ம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சோழர் ஆட்சி முடிந்து, பாண்டியர் ஆட்சி வந்தபோது இக்கோயில் கட்டப்பட்டதைத் தெரிவிக்கின்றது.

கல்வெட்டில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தின் பல்குன்றக் கோட்டத்தில், உத்தம சோழ வளநாட்டில் சிங்கபுர நாட்டில் மலையனூர் அமைந்திருந்ததைக் குறிப்பிடுகிறது. மலையனூர் என்ற பெயர் பாண்டியர் காலத்தில் வழங்கப்பட்டதைக் கல்வெட்டு கூறுகிறது.

மேலும், 'ராஜேந்திரசோழ நல்லூர்' என்ற பெயரும் மலையனூருக்கு இருந்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இவ்வூரைச் சேர்ந்த மாடமுடையான் காமன் பெருங்கன் எதிரி சோழ பல்லவரையன் என்பவர், இராஜ நாராயண பெருமாள் கோயில் கட்டியதைக் கல்வெட்டு கூறுகிறது.

'சிங்கபுரம்' என்பது தற்போது 'சிங்கவரம்' என்று அழைக்கப்படுகிறது. கல்வெட்டின் மூலம் பாண்டியர் காலத்தில் பெருமாள் கோயில் கட்டப்பட்டதையும் அக்காலத்தில் இருந்த நாட்டுப் பிரிவுகள் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. சோழர் காலம் தொடங்கி பாண்டியர் காலத்திலும் தற்காலம் வரை மலையனூர் என்ற பெயர் 1000 ஆண்டுகளாக தற்போது வரை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது".

இவ்வாறு ரமேஷ் தெரிவித்தார்.

தேமொழி

unread,
Aug 11, 2020, 1:32:18 AM8/11/20
to மின்தமிழ்
source - https://www.bbc.com/tamil/india-53707779

கீழடியில் கிடைத்தது போன்று விழுப்புரத்தில் 
பெரிய செங்கற்கள்? - அகழாய்வு நடத்த கோரிக்கை
8 ஆகஸ்ட் 2020


விழுப்புரத்தில் கிடைத்த தொல்லியல் பொருட்கள்

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அடுத்த சங்கராபரணி ஆற்றங்கரையோரம் அமைத்துள்ளது கொடுக்கூர் கிராமம்.

இங்கே தனி நபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் செங்கல் சூளை கற்களுக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பூமிக்கடியில் பழமையான முதுமக்கள் தாழி, மதுக்குடுவை, எலும்புகள், பானை ஓடுகள், கீழடியில் கிடைக்கப்பெற்றது போன்று பெரிய செங்கற்கள் கிடைத்துள்ளன.

பழங்கால பொருட்கள் கிடைத்ததையடுத்து இப்பகுதி மக்கள் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு வந்த விழுப்புரம் அரசுக் கல்லூரி உதவி பேராசிரியரும், அகழ்வாராய்ச்சி ஆய்வாளருமான ரமேஷ் கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் கைப்பற்றி, தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் கிடைத்த தொல்லியல் பொருட்கள்

கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் குறித்து பிபிசி தமிழுக்கு விளக்கமளித்த விழுப்புரம் அரசுக் கல்லூரி உதவி பேராசிரியரும், அகழ்வாராய்ச்சி ஆய்வாளருமான ரமேஷ், "பழமைவாய்ந்த கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ள மண் பானைகள், தாழிகள், எலும்புகள், மதுக் குடுவைகள் கிடைத்துள்ளது. இங்கே கிடைக்கப்பெற்ற மதுக்குடுவையைப் போன்று ஆதிச்சநல்லூரிலும் கிடைத்திருக்கிறது. ஆனால் இங்கே முழுமையாக கிடைக்கவில்லை, பாதி மட்டுமே கிடைத்துள்ளது. மேலும் பழங்கால கட்டடங்கள் இருந்ததற்கு அடையாளமாக பெரிய செங்கற்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் கிடைத்துள்ளது‌. குறிப்பாக, கருப்பு மற்றும் சிவப்பு வடிவிலான பானைகள் கிடைத்திருப்பதன் மூலம் இவைகள் 2000 ஆண்டுகள் முற்பட்ட சங்ககாலத்தை சார்ந்தது என்பது தெரிகிறது. இதில் மேற்கொண்டு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டால் எழுத்து பொறிக்கப்பட்ட அல்லது குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது," என்றார்.

விழுப்புரத்தில் கிடைத்த தொல்லியல் பொருட்கள்

மேலும், தொடர்ந்து பேசிய அவர், "இதுகுறித்து தொல்லியல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது‌. தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்களை அங்கேயே பாதுக்காக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இதனை தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்தால் விழுப்புரம் அரசு கல்லூரியில் பாதுக்கப்படும். மேலும் இதுகுறித்த தகவல், தமிழக தொல்லியல் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது," எனத் தெரிவித்துள்ளார் ரமேஷ்.

கிடைக்கப்பெற்ற தொல்லியல் பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் கிடைத்த தொல்லியல் பொருட்கள்

"கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கப் பெற்ற மண் குடுவைகள் இரண்டாயிரம் ஆண்டுகள் அல்லது கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கக்கூடும். கீழடியில் கிடைக்கப்பெற்றதை போல் பெரிய செங்கற்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால், இங்கே அகழாய்வு நடத்த வேண்டும். மேலும், கிடைத்த தொல்லியல் பொருட்கள் தொடர்பாக தமிழக தொல்லியல் துறை இயக்குனர் உதயச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் ஒரு வார காலத்தில் தொல்லியல் பொருட்கள் கிடைத்த இடத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்," என தெரிவித்துள்ளார் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.

தேமொழி

unread,
Sep 3, 2020, 5:16:14 PM9/3/20
to மின்தமிழ்
kalvettu.jpg

தமிழக தொல்லியல் துறையின் புதிய மைல்கல்லாக தங்களிடம் உள்ள கல்வெட்டுப்படிகளை (estampages)  புகைப்படங்களாக தங்களது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (  https://www.tnarch.gov.in/ )
inscriptions online என்ற பக்கத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

வலைத்தளத்தின் இணைப்பு  (link ) :

அந்தப்பக்கத்தில் மாவட்டம் - வட்டம் - ஊர் - எந்த இடத்தில் உள்ள கல்வெட்டு (கோவிலா, பாறையா போன்ற வரையறைகள்) ஆகிய தகவல்களின் அடிப்படையில் தேடிப் பார்க்கும் வசதியுடன் வடிவமைத்துள்ளனர்.

தேவைப்படுவோர் மேலே உள்ள இணையதள இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

படியெடுத்து அனுப்பிய ஆய்வாளர்களுக்கு மிக்க நன்றிகள்

 நன்றி : தமிழ்நாடு தொல்லியல்துறை

#வாட்சப் 

தேமொழி

unread,
Sep 4, 2020, 11:49:57 PM9/4/20
to மின்தமிழ்
source - https://www.nakkheeran.in/special-articles/special-article/donate-erippattanam-lake-discovery-10th-century-chola-inscription

ஏரிக்கு ஏரிப்பட்டணம் தானம்! -10 ஆம் நூற்றாண்டு சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!  

03/09/2020 

kallakurichi chola inscription.jpg 

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரவளூர் அருகிலுள்ள புரசைப்பட்டு என்ற கிராமத்தில் சில நடுகற்கள் உள்ளன என்ற தகவலறிந்து வரலாற்று ஆய்வாளர்கள் ந.சுதாகர், சி.பழனிச்சாமி, ராஜா மற்றும் குமரவேல் இராமசாமி ஆகியோர் நடுகற்களை ஆவணப்படுத்தும் நோக்கில் அங்கு சென்று ஆய்வு செய்தனர். 

சோழர் கால சிற்பமைவு கொண்ட ஒரு நடுகல்லும் அதனருகில் அழகிய சோழர் கால எழுத்தமைதி கொண்ட தனி கல்வெட்டும் இருந்தன. கல்வெட்டு படித்து ஆய்வு செய்த போது அது சோழமன்னன் முதலாம் பராந்தகனின் 15 -ஆவது ஆட்சி ஆண்டைச் சேர்ந்தது என்பதும் அவ்வூரைச் சேர்ந்த அரச அதிகாரியொருவர் அங்கு ஒரு ஏரியை வெட்டி அதன் பராமரிப்பு செலவுக்காக ஏரிப்பட்டி தானம் கொடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தகவல் இருப்பதையும் அறிந்தனர்.

இக்கல்வெட்டு குறித்து கல்வெட்டு அறிஞர் முனைவர் பூங்குன்றன் கூறும்போது, பல்லவர்களின் ஆட்சியில் இந்தப் பகுதி பெரும்பான்மையாக மேய்ச்சல் சார்ந்த நடுகல் சமுதாயமாகவும் இனக்குழு தலைவர்களின் ஆதிக்கத்திலும் இருந்திருக்கிறது. சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிய பின்னர், இங்கு பல்வேறு நிர்வாகம் சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டனர். குறிப்பாக அளவில் அதிகமான ஏரிகளும் குளங்களும் வெட்டப்பட்டன. பல்லவர் காலத்தில் ஏரிகள் வெட்டப்பட்ட சான்றுகள் இருந்தாலும் அவை அவர்களின் கற்றளிகளுக்கு அருகிலோ நகரங்களுக்கு அருகிலோதான் பெரும்பாலும் அமைத்தனர். ஆனால் பத்தாம் நூற்றாண்டிற்கு பிறகு குறிப்பாக முதலாம் பராந்தகன் காலத்தில் விவசாயம் சார்ந்த பணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இதுபோன்ற பல ஏரிகள் வெட்டப்பட்டது. இதற்கான சான்றுகள் விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் கல்வெட்டுகளில் நிறையக் கிடைக்கின்றன. 

'பொரவளூர்' என நிகழ்கால பெயர்கொண்ட இவ்வூரின் தொன்மைப் பெயர் புறைவேளூர் என்பதையும், இந்த ஊர் பண்டைய வாணகோப்பாடி நாட்டின் பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது எனவும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அதன் நிலவியல் அமைப்பும் தொன்மையும் இன்றளவும் மாறாமல் உள்ளதை பார்க்க முடிகிறது. 
kallakurichi chola inscription2.jpg 

இக்கல்வெட்டில் "பெரிய செறு ஏரிப்பட்டி" என்ற வாசகம் ஓர் செறிவு மிக்க சொல்லாட்சியாக இங்கு பயின்று வந்துள்ளது. சங்க இலக்கியங்களில் நன்கு பண்படுத்தி உழவுக்கும் வேளாண்மைக்கும் தகுதியாக இருக்கும் நிலத்தினைக் குறிப்பதற்கு 'செறு' என்ற சொல்லினை புறநானூறு, ஐங்குறுநூறு பாடல்களில் புலவர்கள் எடுத்தாண்டுள்ளனர். ஓராயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும், தான் கொடுத்த ஏரிப்பட்டி தானத்தின் வளத்தை குறிப்பிட எவ்வளவு எளிமையான அதேசமயம் செறிவு மிக்க சொல்லினை அவர்கள் கல்வெட்டில் பயன்படுத்தியுள்ளனர் என நினைக்கும் போது ஆச்சரியம் மேலிடுகிறது. மேலும் வடதமிழகத்தில் நிலத்தினை குறிக்க பேச்சுவழக்கில் 'கொல்ல/கொல்லை' சொற்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். அந்தச் சொல்லும் சங்க இலக்கியங்களில் நிலத்தினை குறிக்கும் சொல்லாகவே பயின்று வந்துள்ளன. 

ஆகவே, இங்கு கிடைத்துள்ள எட்டு நடுகற்கள் மற்றும் ஏரி கல்வெட்டு ஆகியவை வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், சங்க சொற்களை தாங்கி நிற்கும் கல்வெட்டும், வட்டாரவழக்கு சொல்லும் கல்வெட்டும் ஓரிடத்தில் கிடைப்பது மொழியில் ஆய்விற்குப் பயன்படும் ஓர் முக்கிய ஆவணம் என்பதில் ஐயமில்லை என்றார்.
---- 

தேமொழி

unread,
Sep 5, 2020, 12:56:41 AM9/5/20
to மின்தமிழ்
source - https://www.bbc.com/tamil/arts-and-culture-54003469

கிண்ணிமங்கலத்து கல்வெட்டுகள் சொல்வது என்ன? பழங்கால படைப்புகள் பற்றிய பிரமிப்பூட்டும் தகவல்கள்
முரளிதரன் காசி விஸ்வநாதன்
பிபிசி தமிழ்
3 செப்டெம்பர் 2020

மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலத்தில் உள்ள ஒரு கோயிலில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள பள்ளிப்படைகளிலேயே இதுதான் பழமையானதாக இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


TN ARCHEOLOGY DEPT1.jpg

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் அமைந்திருக்கிறது கிண்ணிமங்கலம். இந்த ஊரில் உள்ள ஏகநாதர் அனந்தவள்ளி அம்மன் கோயிலில் கடந்த சில நாட்களாக வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன.

காலத்தால் பழமையான இந்த கல்வெட்டில் தமிழியில் (தமிழ் பிராமி) எழுதப்பட்டிருக்கிறது. ஒரு எண்பட்டைத் தூணில் கிடைத்திருக்கும் இந்தக் கல்வெட்டில், 'எகன் ஆதன் கோட்டம்' என்ற வார்த்தைகள் கிடைத்துள்ளன.

அடுத்ததாக, வட்டெழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. இதில் 'இறையிலி ஏகநாதன் பள்ளிப்படை மண்டளியீந்தார்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு கி.பி. 7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

தமிழில் இதுவரை கிடைத்த கல்வெட்டுகளில் 'பள்ளிப்படை' என்ற வார்த்தை இடம்பெற்ற பழமையான கல்வெட்டாக இது இருக்கலம் என மாநில தொல்லியல் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

TN ARCHEOLOGY DEPT2.jpg

இதற்குப் பிறகு அந்தக் கோயில் வளாகத்தில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மதுரையை விஜயரங்க சொக்கநாதன் ஆண்ட காலத்தில் கி.பி. 1722ல் இந்தக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. மிகவும் விரிவாக அமைந்திருந்த இந்தக் கல்வெட்டில் 43 வரிகள் இடம்பெற்றிருந்தன.

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் பெயர்களை வரிசையாகப் பட்டியலிட்டிருக்கும் இந்த கல்வெட்டு, அந்த கோயிலை பள்ளிப்படை சமாதி எனக் குறிப்பிட்டு, குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு உரிமையானது என கூறுகிறது.

"இதுவரை தமிழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், நடுகற்களில் சமண படுகைகளில்தான் கிடைத்திருக்கின்றன. முதல் முறையாக ஒரு தூணில் அந்த எழுத்துகள் கிடைத்திருக்கின்றன. தவிர, தமிழி எழுத்துகளில் புள்ளி வைக்கும் முறை கிடையாது. ஆனால், இங்கு கிடைத்திருக்கும் 'அதன் ஏகன் கோட்டம்' என்ற வார்த்தைகளில் நான்கு இடங்களிலுமே புள்ளிகள் இருக்கின்றன.

ஆகவே இது பிற்காலத் தமிழியாக இருக்கலாம். இதுவரை கிடைத்த தமிழி கல்வெட்டுகளில் ஆனைமலை கல்வெட்டில்தான் முதன்முதலில் புள்ளி இருந்தது. 'ட்' என்ற ஒரு எழுத்தின் மேல் இந்தப் புள்ளி அமைந்திருந்தது. ஐராவதம் மகாதேவன் அதனை கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் குறிப்பிட்டார். இந்தக் கல்வெட்டும் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்" என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குனரும் ஆய்வாளருமான சொ. சாந்தலிங்கம்.

இதுதவிர, கோட்டம் என்ற சொல் இதில் இடம் பெற்றிருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழி கல்வெட்டில் இதுவரை கோட்டம் என்ற சொல் இதுவரை இடம்பெற்றதில்லை. பூலாங்குறிச்சி வட்டெழுத்துக் கல்வெட்டில்தான் முதன்முதலாக கோட்டம் என்ற சொல் இடம்பெற்றிருக்கிறது. ஆகவே கோட்டம் என்ற சொல் இடம்பெற்ற முதல் தமிழி கல்வெட்டும் இதுதான்" என்கிறார் சாந்தலிங்கம்.

'இறையிலி ஏகநாதன் பள்ளிப்படை மண்டளியீந்தார்' என்ற வட்டெழுத்துக் கல்வெட்டில் இடம்பெற்றிருக்கும் பள்ளிப்படை என்ற சொல், அந்த இடம் பள்ளிப்படை கோவிலாக, அதாவது மறைந்தவர்களின் சமாதி மீது எழுப்பப்பட்ட கோவிலாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

"திருச்சுழியில் உள்ள சுந்தர பாண்டிய ஈஸ்வரன் பள்ளிப்படைதான் இதுவரை கிடைத்ததிலேயே பழைய பள்ளிப்படையாக கருதப்பட்டு வந்தது. இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால், இந்த கல்வெட்டை வைத்து இதனை பள்ளிப்படை என்று கொண்டால், இதுதான் பழமையான பள்ளிப்படையாக இருக்கும்" என்கிறார் சாந்தலிங்கம்.

மூன்றாவது கல்வெட்டான கி.பி. 1722 ஆண்டைச் சேர்ந்த விசயரங்க சொக்கநாதன் கால கல்வெட்டில் வரிசையாக நாயக்க மன்னர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, பாண்டிய மன்னர்களின் பெயரான நெடுஞ்செழியன் பெயரும் பராந்தகப் பாண்டியன் பெயரும் இடம்பெற்றிருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது. "விடையாவும் நெடுஞ்செழியன் பராந்தக பாண்டிய ராசாகளின் பட்டயத்தில் கண்டபடி" என்று இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது.

TN ARCHEOLOGY DEPT3.jpg

நெடுஞ்செழியன் என்ற பெயருடன் சங்ககால பாண்டியர்கள் மூவர் இருந்துள்ளனர். பராந்தக பாண்டியனின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. இந்த மன்னர்களைப் பற்றி 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த விசயரங்க சொக்கநாதனுக்கு எப்படித் தெரிந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

"இந்த இடம் தொடர்பான பட்டயங்கள் ஏதும் இருந்திருக்கலாம். அந்த பட்டயங்களில் இந்த மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கலாம். அதை வைத்து விசயரங்க சொக்கநாதன் இந்த மன்னர்களின் பெயர்களையும் கல்வெட்டில் பொறித்திருக்கக்கூடும்" என்கிறார் அழகப்பா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் வருகைதரு பேராசிரியரான சு. ராஜவேலு.

புகழ்பெற்ற வேள்விக்குடி செப்பேட்டில், சங்ககாலத்தில் வழங்கப்பட்ட நிலத்தை 1000 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுகளைக் காண்பித்து திரும்பப் பெற்ற செய்தி இடம்பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ராஜவேலு.

தற்போது இந்த இடத்தில் உள்ள ஏகநாதர் கோவில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இங்குள்ள 1942ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டிலும் அந்த இடம் ஜீவசமாதி என்றே குறிப்பிடப்படுகிறது.

---

தேமொழி

unread,
Sep 9, 2020, 4:47:30 AM9/9/20
to மின்தமிழ்
source - https://www.newindianexpress.com/good-news/2020/aug/27/sivakasi-1200-year-old-rock-cut-temple-discovered-on-riverbank-2188824.html

Sivakasi: 1,200-year-old rock-cut temple discovered on riverbank

The three-chambered historical site is on banks of Arjuna River at Sivakasi’s M Pudhupatti village; no idols, statues of god identified so far

27th August 2020 

By Express News Service

VIRUDHUNAGAR: A three-chambered rock-cut temple, believed to be 1,200 years old, has been identified on the banks of the Arjuna River at Sivakasi’s M Pudhupatti village. The structure, cut into the side of a block of limestone, was covered in thickets and debris until a week ago when residents in the locality chanced upon it. 

Though archaeologists identified the structure as a rock-cut temple, no idol, statue, or relief of gods or goddesses has so far been identified inside the temple’s three chambers -- the garbhagriha (sanctum sanctorum), ardhamandapam, and maha mandapam. A 20-feet long limestone mound marks the entrance to it. There are traces of cement on the walls and in the ceiling.

Archeologists believe these might have been part of the repair carried out by devotees around 100 years ago. At several places inside the structure, the limestone is falling apart; there is a massive hole in the ceiling of the maha mandapam. Retired assistant director of the State Archeology Department Dr C Santhalingam said, “The temple is unique in three aspects.

First: It is a Sandhara-type of temple. There is no identified Sandhara-type rock-cut temple in India”. These temples have a circumambulatory passage (pradakshinapath) around the shrine. Not all temples have these passages, said sources. “Second: The temple has two circumambulatory passages; this is very rare. While one passage moves in a clockwise direction from the ardhamandapam, the second one is adjacent to the mahamandapam,” he added. 

“Third: The temple is carved entirely out of limestone,” he said. The stone is considered an inferior type owing to its features. “This is the reason why there is no artistic design, sculpture, or carving in the temple. However, there are niches on both the sides of the entrance to the garbagriha. Moreover, there is a stone naga statue in the garbagriha,” said Santhalingam. The residents might have placed it there over a century ago to offer worship. The interior of the structure and the surrounding riverbank were cleaned by the local body.

‘From the Pandian Era’
The temple belongs to the early-Pandian era, around 8th century CE. It is similar to the Valli cave temple in Tiruchendur, which is carved out of sandstone, a rock similar in features to limestone, Santhalingam said. 

---

தேமொழி

unread,
Sep 14, 2020, 8:29:42 PM9/14/20
to மின்தமிழ்
source - https://www.express.co.uk/news/uk/1334875/archaeology-news-shipwreck-found-salcombe-devon-rare-treasure-copper-tin-spt

Archaeology breakthrough: 3,000-year-old ‘rare’ British shipwreck’s incredible treasure 
 Sep 12, 2020   
ARCHAEOLOGISTS were thrilled when they uncovered the remains of a 3,000-year-old shipwreck and brought its valuable cargo to the surface.  

The vessel, carrying copper and tin ingots used to make weapons and jewellery, sank off the coast near Salcombe in Devon and is thought to date back to 900BC. It was discovered by the South West Maritime Archaeological Group after a team of amateur researchers brought its cargo to the surface. The goods – 259 copper ingots and 27 of tin – were believed to be destined for Britain but collected from several different sources in Europe.

The discovery – which is one of the oldest ever – revealed the high level of sophistication maritime trade in Europe had reached, even in ancient times.

The find as a whole is testimony to the incredible seafaring capabilities of prehistoric Britons.

A bronze sword and three gold wrist bracelets, known as torcs, were also found at the spot, but the main body of the ship is thought to have perished.

A Bronze Age settlement is known to have existed close to where the wreck was found – the boat was probably attempting to land there when disaster struck just 300 yards from the shore.

The waters around this stretch of the Devonshire coast are notoriously treacherous.

Researchers theorised it was likely to have been powered with paddles and had a crew of around 15.

Engineer Jim Tyson, who took part in the dives, said in 2010: “You have something in your hands that had not seen the light of day in 3,000 years.

“The last person to do so must have died in the shipwreck.

“It shows definite communications and trade – these people were trading as we would these days.”

The British Museum took charge of the artefacts and valued them before giving the team a sum, which was not disclosed.

Experts at the University of Oxford are analysing the cargo to establish its exact origins.

Ben Roberts, a Bronze Age expert, told the Sunday Telegraph: “It is an incredibly exciting find.

“What we have here is really, really good evidence of trade. We don't get many shipwreck sites.

“It is very rare to get a snapshot of this level of activity. It is very possible there were also animals and people going across the Channel too.

“We hardly ever get to see evidence of this cross Channel trade in action. It is a huge amount of cargo.''

Devon’s coast is full of shipwrecks both old and new that have washed up over the years.

The nearby Salcombe Cannon wreck, which is protected, previously yielded Europe's largest collection of 17th-century Moroccan gold coins.

Another vessel dating back to the Bronze Age had earlier been discovered in Salcombe but was only found to hold 53 artefacts.

The team got their first hint about the latest ancient haul when small pieces of copper were found on the seabed.

---

K R A Narasiah

unread,
Sep 14, 2020, 8:55:09 PM9/14/20
to minT...@googlegroups.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 22, 2020, 1:04:20 PM9/22/20
to மின்தமிழ்
source  - https://www.hindutamil.in/news/tamilnadu/582205-rural-archeology-should-also-be-encouraged-to-know-archeology-archaeologists-demand.html


தொல்குடிகளை அறிய ஊரகப் பகுதி தொல்லியல் ஆய்வுகளையும் ஊக்கப்படுத்த வேண்டும்: தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை 

கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வரும் நிலையில், நகர நாகரிகங்களைச் சுற்றியே அகழாய்வு நடத்திக்கொண்டிருக்காமல் தொல்குடிகள் வாழ்ந்த ஊரகப் பகுதிகளுக்கும் அகழாய்வுப் பணிகளை நகர்த்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் தமிழ் மண்ணின் வரலாற்றையே திருத்தி எழுத முடியும் என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.

இந்திய வரலாறானது பெரும்பாலும் நகர நாகரிகங்களை மையப்படுத்தியே எழுதப்பட்டு வருகிறது. சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கி இன்றைய கீழடி நாகரிகம் வரை இதுதான் யதார்த்தம். இதற்குக் காரணம், இந்தியத் தொல்லியல் ஆய்வில் இருக்கும் மேட்டுக்குடி பார்வைதான். ராஜராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம்காட்டும் தொல்லியல் ஆர்வலர்கள், சோழ ராஜ்ஜியத்தில் குறுநில மன்னர்களாய்க் கோலோச்சிய கோப்பெருஞ்சிங்கன் போன்ற குறுநில மன்னர்களைப் பற்றியும் அவர்கள் ஆட்சி செய்த தொல்குடிகள் பற்றியும் அறிந்து கொள்ள அவ்வளவாய் ஆர்வம் காட்டுவதில்லை.

ராஜராஜனின் தாய் வானவன் மாதேவி மலைய மான்கள் என்ற தொல்குடியில் பிறந்தவர். கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி மழவராயர் குலத்தில் பிறந்தவர். ராஜராஜனைப் பற்றியும் கண்டராதித்தனைப் பற்றியும் தெரிந்தவர்களுக்கு தொல்குடிகளான மலைய மான்கள் குலத்தையும் மழவராயர் குலத்தையும் பற்றி எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது.

இது குறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசிய தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ஜெ.ஆர்.சிவராம கிருஷ்ணன், ''தொல்குடிகள்தான் அரசுகள் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்தவர்கள். இந்தியத் தொல்லியல் துறையும் மாநிலத் தொல்லியல் துறையும் இதுவரை ஆகழாய்வு செய்திருக்கும் அரிக்கன்மேடு, கொற்கை, அழகன்குளம், பூம்புகார் உள்ளிட்ட அனைத்து இடங்களுமே சங்க காலத்தில் வர்த்தக மண்டலங்களாக இருந்தவை.

அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் தலைநகரங்கள் போல் இருந்தவை. இவைதான் அரசின் கருவூலங்கள். ஆனால், ஒரு அரசின் தோற்றம், உருவாக்கம் என்பது தொல்குடிகளில் இருந்துதான் தொடங்கியது. இதை உணர்ந்துதான் இப்போது சீனா, எகிப்து, சுமேரியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் தொல்குடிகளைப் பற்றிய ஆய்வுகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அங்கெல்லாம் இப்போது ஊரகத் தொல்லியல் ஆய்வுகள் அதிகளவில் நடக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை ஏ.எல்.பாஷ்யம், ரோமிலா தாப்பர், செண்பகா லட்சுமி, விமலா பெக்லே போன்றவர்கள்தான் தொல்குடிகளின் பூர்விகத்தைத் தேடி ஊரகத் தொல்லியல் ஆய்வுகளை நடத்தியவர்கள். பாட்டாளி மக்களின் தொன்மை வரலாற்றை இந்தியாவில் பதிவுசெய்தவர்கள். ஆனால், தனிப்பட்ட ஆய்வாளர்கள் இத்தனை ஆர்வம் காட்டினாலும் மத்திய - மாநில தொல்லியல் துறைகள், ஊரகத் தொல்லியல் ஆய்வு குறித்து இன்னும் போதிய புரிதல் இல்லாமலே இருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை நகரப் பண்பாட்டுத் தாக்கம் இல்லாத சங்க காலத்து ஊர்கள் ஏராளம் இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் நாங்கள் அப்படியான 375 ஊர்களை அடையாளம் கண்டு ஆய்வுகளை நடத்தி இருக்கிறோம். இந்த ஊர்களில் இருந்து சங்க காலத்து ஆயுதங்கள், மக்கள் பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்கள், தமிழ் எழுத்துகள் உள்ளிட்டவற்றைக் கண்டெடுத்திருக்கிறோம்.

இங்கெல்லாம் நமது தொல்லியல் துறையினர் இன்னும் முழுமையாக ஆய்வுகளை மேற்கொண்டால் இந்தப் பகுதிகளில் வாழ்ந்த தொல்குடிகளின் வரலாற்றை முழுமையாக அறிய முடியும். இதையெல்லாம் இப்போது அங்கு வசிக்கும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் சங்ககாலப் பெருமை கொண்ட ஊரில் நாமும் வாழ்கிறோம் என்ற உணர்வை அந்த மக்களுக்கு ஊட்ட முடியும். இதன் மூலம் தேசப்பற்றை வளர்ப்பதுடன் தொல்குடிகளின் பண்பாடு, கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும் முடியும்.

தமிழை வளர்த்தவர்கள் தொல்குடிகள்தான். புறநனூற்றில் வரும் சங்ககாலப் புலவர்கள் 400 பேரில் தொண்ணூறு சதவீதம் பேர் ஊரகப்பகுதிகளில்தான் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களின் பெயரால் அழைக்கப்பட்ட கிராமங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. இதன் மூலம் சங்க காலத்தில் கிராமங்களிலும் வளமான கல்வியறிவு இருந்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது.

இத்தனை சிறப்புகள் இருந்தும் ஊரகத் தொல்லியல் ஆய்வுகள் குறித்து நாம் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். ஊரகத் தொல்லியல் ஆய்வுகள் குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டுமே இப்போது தன்னார்வத்தில் அவ்வப்போது ஆய்வுகளை நடத்தி வருகிறது. புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் கா.ராஜன், பழநி அருகே பொருந்தல் என்ற கிராமத்தில் நடத்திய ஊரகத் தொல்லியல் ஆய்வில் கி.மு. 490-ம் ஆண்டைச் சேர்ந்த நெல்மணியைக் கண்டுபிடித்தார். இப்படி ஒரு சிலர் மட்டுமே தங்களது சுயமுயற்சியில் ஊரகத் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற ஆய்வுகள் ஊருக்கு ஊர் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், கீழடி, கொடுமணல் எனக் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் மீண்டும் மீண்டும் நிதி ஒதுக்கித் தொல்லியல் ஆய்வுகள் தொடரப்படுகின்றன. அதுவும் தேவையான ஒன்றுதான் என்றாலும் அதற்கு நிகராக ஊரகத் தொல்லியல் ஆய்வுகளையும் ஊக்கப்படுத்த வேண்டிய நேரம் இது. இதற்காக ஒரு கிராமத்துக்கு 3 லட்ச ரூபாய் ஒதுக்கினாலே போதுமானது. இப்படிச் செய்வதன் மூலம் தொல்குடிகளைப் பற்றிய மேலும் பல வரலாற்று உண்மைகளை நாம் அறியமுடியும்.

ஏனென்றால் விவசாய உற்பத்தியில் தொடங்கி இரும்புத் தொழிற்சாலைகளைக் கண்டது வரை அனைத்தையும் நமக்குச் சொல்லிக் கொடுத்தவர்கள் தொல்குடிகள்தான். அதுமாத்திரமல்ல... பண்டமாற்று வர்த்தகத்தையும் அதன் மூலம் அந்நியச் செலாவணி ஈட்டுவதையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே படித்து வைத்திருந்தவர்கள் நம் தொல்குடிகள்.

நாகரிகத் தொட்டில்களாக விளங்கிய நம் தொல்குடிகளைப் பற்றி முழுமையான அகழாய்வுகள் நடத்தப்பட்டால்தான் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி என்று சொல்லப்படும் தமிழ்க் குடியின் வரலாறு முழுமை பெறும்'' என்றார். 

---



தேமொழி

unread,
Sep 24, 2020, 1:20:11 AM9/24/20
to மின்தமிழ்
source - https://www.nakkheeran.in/special-articles/special-article/message-13th-century-ad-inscription

கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..!
23/09/2020 

madurai-pandian-kalvettu.jpg 
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு,  மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன், வழக்கறிஞர் மோ.நாகபாண்டியன், வி.சிவகுமார் ஆகியோர் தே.கல்லுப்பட்டி பகுதியில் மேற்கொண்டிருந்த கள ஆய்வின்போது, அக்னீஸ்வரர் கோயில் பட்டர் கி.செல்லப்பா, ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் பழமையான ஒரு கல்வெட்டு இருப்பதாக கொடுத்த தகவலின்பேரில் அக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தனர். 

இதுகுறித்து இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, உதவிப் பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன் ஆகியோர் கூறியதாவது,

“தே.கல்லுப்பட்டியின் அடையாளமாகத் திகழ்வது தேவன்குறிச்சி மலை. இம்மலையின் வடகிழக்குப் பகுதியில் ஈஸ்வரப்பேரி என்ற கண்மாய் உள்ளது. மலைச்சரிவில் இயற்கையாக அமைந்த பாறையை வெட்டி இக்கண்மாய்க்கு மடை அமைத்துள்ளனர். இதில் நீர் வெளியேற மூன்று கண் மடை அமைப்பு உள்ளது. இதன் முதல் கண்ணில், தரையில் பதிக்கப்பட்டுள்ள 3 அடி நீளமும், 1 அடி அகலமும் உள்ள ஒரு கல்லில் 7 வரிகள் கொண்ட கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது. 
madurai-pandian-kalvettu2.jpg
நீர் வழிந்தோடும் இடத்தில் இருந்ததால் இக்கல்வெட்டின் பல சொற்கள் அழிந்தநிலையில் உள்ளன. ஸ்வஸ்திஸ்ரீ எனத்தொடங்கும் இக்கல்வெட்டு பாடல் போன்ற வடிவில் அமைந்துள்ளது. ‘கலிங்கத்தரையர் பெயர் கொண்ட பெருங்குன்றைப் பெரியகுளம்’ என கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் இக்கண்மாய் மற்றும் மடை கலிங்கத்தரையரால் கி.பி.13ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகக் கருதலாம். கலிங்கத்தரையர் என்பவர்கள் பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் கி.பி.12, 13 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த குறுநிலத் தலைவர்கள் ஆவர். கல்வெட்டில் சொல்லப்படும் கலிங்கத்தரையர் இப்பகுதியில் இருந்த குறுநிலத் தலைவராக இருக்கலாம். இக்கண்மாய் அமைத்த அவருடைய  சிறப்பை கல்வெட்டு விவரிக்கிறது. இதில் மன்னர் பெயர் அழிந்துள்ளது. கல்வெட்டில் கார் கொண்ட நிறத்தான், இன்னோசை, கடலிடத்தே போன்ற சொற்களும் வருகின்றன. 

இம்மடையின் மேற்கு பகுதியில் உள்ள பாறையில் திரிசூலம், சூரியன், சந்திரன், பாண்டியரின் செண்டுக்கோல் ஆகியவை கோட்டோவியமாக செதுக்கப்பட்டுள்ளன. மடையை அமைத்து கொடுத்து, சந்திரனும் சூரியனும் இருக்கும் வரைக்கும் இந்த தர்மம் நிலைத்திருக்கும் என்பதன் அடையாளமாக இச்சின்னங்கள் இடப்பட்டுள்ளன.

தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோயிலில் உள்ள முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த துண்டுக் கல்வெட்டுகளில் இவ்வூர்  செங்குடி நாட்டு பெருங்குன்றத்தூர் எனவும், இங்குள்ள குன்று பெருங்குன்றம் எனவும், இவ்வூர் கண்மாய் பெரியகுளம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இக்கல்வெட்டில் ‘பெருங்குன்றைப் பெரியகுளம்’ என சொல்லப்படுகிறது. சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் எழுத்தமைதியே இதிலும் காணப்படுகிறது. எனவே இக்கல்வெட்டு கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்” இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
---

தேமொழி

unread,
Sep 24, 2020, 8:24:36 PM9/24/20
to மின்தமிழ்
source - https://www.bbc.com/tamil/sri-lanka-54266251

இலங்கையில் பாண்டியர் கால நாணயங்கள்: மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் கண்டெடுப்பு

23 செப்டெம்பர் 2020

pandiyas.JPG

மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் உள்ள அல்பேர்ட் என்பவரின் காணியில் வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, நிலத்தைத் தோண்டியபோது கடந்த வெள்ளிக்கிழமை இந்த நாயணக்குற்றிகள் கிடைத்துள்ளன.

இந்த நாணயங்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், 1904 நாணயக் குற்றிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாகவும் மன்னார் - நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் பி. புவனம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, காணி உரிமையாளர் கொடுத்த தகவலின்பேரில் அங்கு சென்ற நானாட்டான் பிரதேச சபை உப தவிசாளர், அந்த நாணயங்களை முருங்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

தற்போது அந்த நாணயக்குற்றிகள் அனைத்தும் மன்னார் நீதிமன்றின் ஊடாக, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லயனல் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

உப தவிசாளர் புவனம் தகவல்
குறித்த நாணயங்களை தான் பார்த்ததாகவும், அவற்றின் ஒரு பக்கத்தில் இரண்டு மீன்கள் எதிரெதிராகக் காணப்படுவதாகவும், மற்றைய பக்கத்தில் மான் அல்லது நந்தி போன்றதொரு உருவம் காணப்படுவதாகவும் நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் பி. புவனம் பிபிசி தமிழிடம் கூறினார்.

"அல்பேர்ட் என்பவர், தனது காணியை 14 வருடங்களுக்கு முன்னர் குளத்து மண்கொண்டு நிரப்பியுள்ளார். அந்தக் காணியில் வீடொன்றை அமைப்பதற்காக நிலைத்தைத் தோண்டும் வேலைகள் கடந்த வாரம் நடந்து கொண்டிருந்தன. அப்போதுதான் வெள்ளிக்கிழமை பகல் 1.00 மணியளவில் குறித்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்த நாணங்கள் குறித்த காணியில் இருந்ததா? அல்லது அந்த காணியில் கொட்டப்பட்ட குளத்து மணலில் இருந்ததா? எனத் தெரியவில்லை.

கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் - மண் பாத்திரமொன்றில் இருந்திருக்க வேண்டும். நிலத்தைத் தோண்டும் போது அந்தப் பாத்திரம் உடைந்திருக்கும் என்று நம்புகிறோம். ஏனென்றால், அந்த நாணயக் குற்றிகளுடன் உடைந்த பாத்திரத்தின் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன" என, உப தவிசாளர் புவனம் மேலும் கூறினார்.

குறித்த நாணயங்களின் தற்போதைய பணப் பெறுமதி எவ்வளவு என கணக்கிடப்பட்டு, அந்தத் தொகையில் அரைவாசியை, குறித்த காணியின் உரிமையாளருக்கு அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கவுள்ளதாகவும் நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் தெரிவித்தார்.

---

தேமொழி

unread,
Sep 26, 2020, 4:15:05 AM9/26/20
to மின்தமிழ்
kalvettukku govintha.jpeg

வரலாறு  கூறும்  கல்வெட்டு...  கோவிந்தா .. கோவிந்தா 

சத்திரம் - கல்லணை செல்லும் வழியில் உள்ள உத்தமசீலி என்னும் ஊரில் உள்ள பெருமாள் கோவில்.

படம்-  கீர்த்திவர்மன்; தகவல் -மாரிராஜன் 

#WhatsappSharing 
----

தேமொழி

unread,
Sep 29, 2020, 6:54:26 PM9/29/20
to மின்தமிழ்
Tamil Nadu: Adhichanallur pipeline  structure hints at ancient habitation
Sep 28, 2020



MADURAI: A pipeline structure having 21 pipes fitted continuously was found at Adhichanallur in Tuticorin district, where the state archaeology department is on an endeavour to find a  habitation site. This is considered to be one of the oldest archaeological sites in the country. 
The archaeology department started its excavation on the site on May 25, and is expected to go on till September 30. One of the first excavations in the country was conducted in Adhichanallur in 1876, following which excavations were done in 114 acres of protected land on this site in 1902 and in 2004. As a large number of burial urns were unearthed at the site, it was concluded that Adhichanallur was an ancient burial site. 
Now, the archaeologists led by excavation director J Baskar and archaeological officer Loganathan and students of archaeology are on the endeavour to find the habitation site in the area. The interesting fact is that the pipeline structure is longer than those found in Keeladi in Sivaganga. 
Baskar said that the recent findings help prove that Adhichanallur had a habitation site as well as a burial site. As early excavationists had only concentrated on the burial urns and the things found along with them, it was believed that it was an ancient burial site. 
Now, 76 trenches have been unearthed and they have found a lot of evidence to show that this also had a habitation site. While the pipeline is a major finding, other things that the archaeologists have found here, to show that people also lived here, are roof tiles, pottery with Tamil Brahmi inscriptions and graffiti, smoking pipes and also games, which look like chess.



தேமொழி

unread,
Oct 13, 2020, 12:34:54 PM10/13/20
to மின்தமிழ்
source - https://www.dinamani.com/tamilnadu/2020/oct/13/மதுரையில்-400-ஆண்டுகள்-பழைமைவாய்ந்த-நடு-கல்-கண்டெடுப்பு-3483899.html
hero  stone.jpg

மதுரையில் 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடு கல் கண்டெடுப்பு
13 அக்டோபர் 2020

மதுரை நெல்பேட்டை அருகே கண்டறியப்பட்டுள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுக்கல்.

மதுரை: மதுரை நெல்பேட்டை அருகே போரில் உயிா்நீத்த வீரன் நினைவாக அமைக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடு கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரின் மைய பகுதியான நெல்பேட்டையிலிருந்து முனிச்சாலை செல்லும் சாலையின் வலதுபுறமுள்ள அரசமரத்தின் அடியில் சதிக்கல் எனப்படும் நடு கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்த நடு கல்லை, அப்பகுதி பொதுமக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனா்.

இந்த நடு கல்லை கண்டறிந்த கோயில் கட்டடக் கலை மற்றும் கல்வெட்டாய்வாளா் ப. தேவி அறிவுச்செல்வம், தொல்லியல் ஆய்வாளா் கோ. சசிகலா ஆகியோா் கூட்டாகக் கூறியது:

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளும்போது, முனிச்சாலை பகுதியில் உள்ள நடு கல் எனப்படும் சதிக்கல் கண்டறியப்பட்டது. பழங்காலத்தில் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தவா், குலத்துக்காக, நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்பவா்களின் நினைவாக நடு கல் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

தற்போது கண்டறியப்பட்ட இந்த நடு கல், போரில் உயிா்நீத்த வீரனுடன் அவனது மனைவியும் தீயேந்துதல் எனப்படும் உடன்கட்டை ஏறுதல் மூலம் உயிரிழந்ததன் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இது நடு கல் அல்லது சதிக்கல் என்றழைக்கப்படுகிறது.

நீண்ட செவ்வக வடிவ பலகை கல்லில் இரண்டு உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. சிற்பத்தின் ஆடை அணிகலன்கள் மற்றும் தலைக்கோலம் போன்றவற்றை கொண்டு ஆய்வு செய்தபோது, இது ஏறத்தாழ 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது என்பதும், நாயக்கா் காலத்தைச் சோ்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது.

போரில் இறந்த வீரன் தனது வலது கையில் ஓங்கிய வாளுடன் காட்சியளிக்கின்றான். இடது கையில் குறுவாளைப் பற்றிக்கொண்டு இடது தொடை மீது வைத்துள்ளான். கால்கள் இயக்க நிலையில் காட்டப்பட்டுள்ளன. வீரன் முகம் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. அருகில் அவனது மனைவி உயிா்நீத்த மங்கையாக நிற்கிறாள். இருவருக்கும் இடதுபுறத்தில் பக்கவாட்டு கொண்டையலங்காரம் காட்டப்பட்டுள்ளன.

காதுகளில் குண்டலங்களும், கைகளில் வளைகளும் இருவரும் அணிந்துள்ளனா். மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோல பழைமையான நடு கல் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், மதுரை நகரின் மைய பகுதியில் நடு கல் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்றனா்.

தேமொழி

unread,
Oct 13, 2020, 2:44:16 PM10/13/20
to மின்தமிழ்

மதுரை அருகே, கிராம காவல்பணியை குறிக்கும் அரியவகை கல்வெட்டு கண்டெடுப்பு 
asiriyam inscription.gif
மதுரை அருகே கி.பி.13-ம் நூற்றாண்டை சேர்ந்த கிராம காவல்பணியை குறிக்கும் அரியவகை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.


மேலும் காணொளியாக .. 
அரியவகை ஆசிரியம் கல்வெட்டு முதல் முதலாக மதுரையில் கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டத்தில் முதன் முதலாக கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை ஆசிரியம் கல்வெட்டை, வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் மதுரை விமான நிலையம் அருகே கூடல் செங்குளம் கண்மாயில் கண்டுபிடித்துள்ளனர். கூடல் செங்குளத்தைச் சேர்ந்த முதுகலை வரலாற்றுத் துறை மாணவர் ரஞ்சித் குமார், இந்த ஊரில் உள்ள கண்மாயில் ஒரு கல்வெட்டு இருப்பதாகக் கொடுத்த தகவலின் பேரில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் முனைவர் து.முனீஸ்வரன், முனைவர் லட்சுமணமூர்த்தி ஆகியோர் அக்கல்வெட்டை ஆய்வு செய்தனர். தொடர்ந்து இக்கல்வெட்டு வாயிலாக, மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் ஊரவர், நாட்டவர், சிற்றரசர், படைப்பிரிவினர் ஆகியோர் அந்தந்தப் பகுதிகளில் படைகளை உருவாக்கி மக்களை பாதுகாத்து வந்துள்ளனர். மதுரையில் கி.பி.13-14-ம் நூற்றாண்டுகளில் கிராமங்களில் இருந்த நிலச்சுவான்தாரர்கள் அவ்வூர் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் ஊர் பாதுகாப்புக்கென பாடிகாவல் நியமித்துக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. பாடிகாவல் செய்வோர் குளம் வெட்டுதல், பாசனத்தை முறைப்படுத்தி வழங்குதல், கோவில் நிர்வாகம், பொது நிகழ்வுகளை முன்னெடுத்தல் ஆகிய உரிமைகளையும் பெற்றிருந்தனர். பாதுகாப்புத் தந்து காவல் செய்யும் பாடிகாவல் உரிமை எந்த ஊருக்கு யார் பெற்றுள்ளார்களோ அவர்கள் அதை உறுதிப்படுத்தி அறிவிப்பதை ஆசிரியம் கொடுத்தல் என்கிறார்கள். ஆசிரியம் என்ற சொல்லுக்கு பாதுகாப்பு தருதல், அடைக்கலம் தருதல் என்று பொருள். இச்சொல் ஆசிரயம், ஆச்சரயம், ஆஸ்ரீயம் என மாறுபட்ட உச்சரிப்புகளுடன் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் 75-க்கும் மேற்பட்ட ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகம் கிடைக்கும் இவ்வகை கல்வெட்டுகள் சிலவரிகள் கொண்டதாகவும், தனி பலகை கற்களில் பொறிக்கப்பட்டும் காணப்படுகின்றன. பாடிகாவல் முறையில், கிராமத்தை ஒரு குறிப்பிட்ட குழுவினர் காவல் காத்து வருவதை அனைவருக்கும் அறிவிக்கும் வகையில், கல்வெட்டை ஊரின் எல்லையிலோ, மையப்பகுதியிலோ, கோயில்களிலோ, நட்டு வைப்பது வழக்கம். கூடல் செங்குளம் கண்மாயில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, 3½ அடி நீளம், 1½ அகலமுள்ள கற்பலகையில், ‘பாடி நகரத்தேவர் கண்டிய தேவராஸ்ரீயம்’ என 5 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்லின் மேல்பகுதி உடைந்தநிலையில் உள்ளதால் இதன் முதல் வரி சிதைந்துள்ளது. இதில் சொல்லப்படும் பாடி கொம்பாடியாக இருக்கலாம். கொம்பாடி எனும் ஊர் இக்கண்மாயின் தென்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கொம்பாடி என்ற நகரத்துக்கு கண்டியதேவர் என்பவர் பாடிகாவலாக இருந்ததை உறுதிப்படுத்தி ஆசிரியம் கொடுத்துள்ளதை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இதன் கீழ்ப்பகுதியில் முக்காலி மீது பூர்ணகும்பமும், இருபக்கமும் குத்து விளக்குகளும் பொறிக்கப்பட்டுள்ளன. இது மதுரை மாவட்டத்தில் முதன்முதலாக கண்டெடுக்கப்பட்ட அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு என வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன் தெரிவித்தார்  

 

தேமொழி

unread,
Oct 15, 2020, 12:48:31 AM10/15/20
to மின்தமிழ்
dr. ravi.jpg

புதிய சாலைப் பணிக்காக மூடப்படும் சோழா் கால சுடுமண் பொருள்கள்
தினமணி-15/10/2020 
https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2020/oct/15/புதிய-சாலைப்-பணிக்காக-மூடப்படும்-சோழா்-கால-சுடுமண்-பொருள்கள்-3485314.html

விக்கிரவாண்டி-தஞ்சாவூா் புதிய சாலைப் பணிக்காக, கும்பகோணம் அருகிலுள்ள சோழன்மாளிகை கிராமத்திலுள்ள சோழா் காலச் சுடுமண் பொருள்கள் மூடப்பட்டு வருகின்றன.

விக்கிரவாண்டி-தஞ்சாவூா் புதிய சாலைப் பணிக்காக, கும்பகோணம் அருகிலுள்ள சோழன்மாளிகை கிராமத்திலுள்ள சோழா் காலச் சுடுமண் பொருள்கள் மூடப்பட்டு வருகின்றன.

விக்கிரவாண்டி - கும்பகோணம் இடையே சாலை விரிவாக்கமும், கும்பகோணம் - தஞ்சாவூா் இடையே புதிய புறவழிச்சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கும்பகோணத்திலிருந்து சோழன்மாளிகை கிராமத்தின் வழியாக புதிய சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்பணியால் சோழன்மாளிகை பகுதியில் சாலை அமைக்கும் இடங்களில் ஏராளமான பழைமையான கட்டுமானப் பொருள்கள், மண் ஓடுகள், மண்பாண்டங்கள், உறை கிணறுகள் ஆகியவை மூடப்பட்டு வருகின்றன.

இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த தமிழ் ஆா்வலா்கள் பிரபு, கலியபெருமாள், தீந்தமிழன் உள்ளிட்டோா், சாலை அமைக்கும் இடங்களில் காணப்படும் சோழா் கால கட்டுமானங்களைப் படமாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனா்.

இதைத்தொடா்ந்து திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவரும், தொல்லியல் ஆய்வாளருமான ரவி, தனது மாணவா்களுடன் சோழன்மாளிகையில் புதன்கிழமை கள ஆய்வு செய்தாா்.

அப்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்களைப் பாா்வையிட்ட ரவி, பின்னா் தெரிவித்தது:
பல்லவா்களின் ஆட்சிக்குப் பிறகு, கி.பி. 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில் ஆதித்த சோழன் ஆட்சிக்காலத்தில் பழையாறையைத் தலைநகராகக் கொண்டு சோழா்கள் ஆட்சி செய்தனா். பழையாறை அருகேதான் இந்த சோழன்மாளிகை கிராமம் உள்ளது.

இங்கு கண்டெடுக்கப்பட்ட சுடுமண் புகைப்பான், பெண்கள் அழகுபடுத்த உதவும் அழகு சாதனம், உறைகிணறு போன்ற சுடுமண் செங்கற்கள் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் சோழா்கள் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தப் பொருள்கள் அனைத்தும் மண்ணில் புதையுண்டு கிடந்தது. தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால், சில பொருள்களை எடுக்க முடிந்தது. பல பொருள்கள் சாலையில் மூடப்பட்டு வருகின்றன.

இந்தப் பொருள்களைக் கொண்டு இடைக்கால சோழா்களின் நாகரிகப் பண்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம். இடைக்காலச் சோழா் ஆட்சியில் இப்பகுதி முழுவதும் அரண்மனை, வழிபாட்டுத் தலங்கள் போன்றவை இருந்துள்ளன. இங்கு காணப்படும் சோழா்களின் சுடுமண் பொருள்கள் மூலம், இப்பகுதியில் சோழா்களின் ஆட்சி செயல்பாடுகளை வரலாற்று ஆய்வுகள் மூலம் மேலும் தெரிந்து கொள்ள முடியும் என்றாா் ரவி. 
---
Reply all
Reply to author
Forward
0 new messages