யானே பெருந்தமிழன்; நல்லேன்; நானே பெரிது.

626 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 5, 2015, 9:27:45 AM6/5/15
to mintamil, maza...@googlegroups.com, muththamiz, vallamai, housto...@googlegroups.com
தமிழை பல அடைமொழிகள் இட்டு அழைக்கிறோம். செந்தமிழ்; பைந்தமிழ்,வண்தமிழ்,ஒண்தமிழ், கன்னித்தமிழ் என்று சிறப்புச்சொற்களைச் சேர்த்துச்சொல்கிறோம். தமிழ் மூன்றாகப்பிரிந்து இயல்,இசை,நாடகம் என்ற முத்தமிழாயிற்று. முதலாழவர்களில் ஒருவராகிய பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் தமிழுக்கு மேலும் சிறப்பான ஒரு அடைமொழியிட்டு அழைக்கிறார்.

13.6.2015 சனிக்கிழமையன்று காரைக்குடி த.மு.எ.ச.கலை இலக்கியக்கூட்டத்தில் “நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் தமிழ்ச்சுவை” என்ற பொருளில் உரையாற்ற வாய்ப்பு அமைந்துள்ளது. அதற்காக இணையக் கடலில்  மூழ்கியுள்ளேன். ஆழ்வார் தந்த நன்முத்து “ஞானத் தமிழ்” என்ற அடைமொழி. தமிழை ஞானத்தமிழ் என்று சொல்லுவதோடு அவர் நின்றுவிடவில்லை. தமிழை ‘இருந்தமிழ்’ என்றும் தன்னைப் ‘பெருந்தமிழன்’ என்றும் சொல்லிக்கொண்டும் பெருமையடைகிறார்.

தமிழ் அறிவூட்டும் ஆற்றல் உள்ளது. தமிழால் தான் கடைத்தேற முடியும். உய்தியளிக்கவல்லது. கற்றவரின் அறிவை நேர்மையான நெறியில் செலுத்தும் தன்மை தமிழுக்கு உண்டு. ஆதலால் ஞானத்தமிழ் என்கிறார். பூதத்தாழவார் பாடல்கள் திவ்விய பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதி என்ற பெயரில் அமைந்துள்ளன. அவ்வந்தாதியின் முதல் வெண்பாவிலேயே தமிழுக்கு அடைமொழி தந்துவிடுகிறார்.

அன்பே தகழியா, ஆர்வமே நெய்யாக
இன்புஉருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானசுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.
அன்பும், அது ஈனும் ஆர்வமுடைமையும், உருகும் சிந்தையையும் அளித்தது தமிழ். அதனால் நாரணற்கு ஞானஒளி விளக்கு என்னால் இயற்ற முடிந்தது என்கிறார் ஆழ்வார் பெருமான். தமிழ்மொழியை அறிந்திராவிட்டால், படித்திராவிட்டால் எனக்கு அறிவு வளர்ந்திருக்காது: ஞானச்சுடர் விளக்கை ஏற்றியிருக்க முடியாது என்பதே பூதத்தாழ்வாரின் உள்ளக்கருத்து.

இக்கருத்துக்கு எழுபத்து நாலாம் பாடலில் மேலும் அசைக்க முடியாத உறுதி சேர்க்கிறார் ஆழ்வார். “இருந்தமிழே உன்னால் இருந்தேன்” என்ற தமிழ்விடு தூது ஆசிரியருக்கு வழிகாட்டியாக “இருந்தமிழ்” என்ற சொல்லாட்சியும் “பெருந்தமிழன் யானே” என்ற மட்டிலாப்பெருமையையும் இப்பாடலில் காணக்கிடைக்கின்றன.

“யானேதவம்செய்தேன்; ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
யானேதவம் உடையேன்; எம்பெருமான் - யானே
இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது!”

”நானே சிறந்த தமிழன்; தமிழனாக இருப்பதனால் நல்லவன் ஆனேன்; முயன்ற தவத்தை என்றும் கைக்கொண்டுள்ளேன். சிறந்த - பெரிய தமிழிலே நல்ல பாமலை உன் திருவடிகளிலே சூடத்தக்கதாகக் கூறினேன்” என்பதே இப்படலின் பொருள் அல்லவா!

“யானே பெருந்தமிழன்; நல்லேன்’ என்று ஆழவார் கூறும் பெருமிதம் நெஞ்சைக்கவர்கிறது. எல்லோரும் அவ்வாறு சொல்லிக்கொள்ள முடியுமா? தமிழர் பண்பாட்டினை மறந்தவர்கள் அவ்வாறு சொல்லிக்கொள்ள முடியாது.

இவ்விரு பாடல்கள் நமக்குத் தருகின்ற அறிவுரைகள்,”தமிழை விரும்பிப்படியுங்கள்: அறிவு பெறலாம்! தமிழர் பண்பை மறவாதீர்கள்; சிறந்த தமிழராக வாழ்லாம்! நல்ல தமிழர்களாகவும் வாழலாம்!” என்பதே.
மேலும் என்னைக் கவர்ந்த பாடல்கள் சிலவற்றைக் குறித்துவைத்துள்ளேன். நன்பர்கள் கருத்தறிந்து பகிர்ந்துகொள்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Innamburan S.Soundararajan

unread,
Jun 5, 2015, 10:33:56 AM6/5/15
to vall...@googlegroups.com, mintamil, maza...@googlegroups.com, muththamiz, housto...@googlegroups.com
அன்பார்ந்த சொ.வி. அவர்களுக்கு,
எங்கள் அடுத்த இலக்கிய மன்றத்துக்கு தலைப்பு இதுவே. நீங்கள் விஷயதானம் செய்து விட்டீர்கள்.
நன்ரி,

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jun 5, 2015, 1:20:02 PM6/5/15
to mint...@googlegroups.com
அன்புள்ள திரு.சொ.வினைதீர்த்தான் அவர்களே

பூதத்தாழ்வார் பாடிய வரிகள் "தமிழை முன்னிறுத்தி தமிழை தன்னில் நிறுத்தி இருந்தமிழ் பெருந்தமிழ் என்று பெருமிதம் கொள்ளுவதை படிக்கும்போது நம் தொன்மையின் நுட்பம் புரிகிறது.நாம் "தமிழ்க்கடவுள்" என்று தான் சிவனையும் முருகனையும் வழிபடுகிறோம்.தமிழை கடவுள் நிலைக்கு கொண்டு செல்லும்போது
அது "ராமனாய் இருந்தால் என்ன? ராவணனாய் இருந்தால்"என்ற சிந்தை தான் நம் கம்பர் உள்ளிட்ட ஆழ்வார் மற்றும் எல்லா சான்றோர்களுக்கும் உள் நினைப்பாய் தோன்றி இருக்கிறது.அதிலும் கம்பனை எடுத்துக்கொண்டால் அவன் பார்வைக்கு யாருமே வில்லனாகத் தோன்றியதில்லை.எல்லோரையும் (வில்லன்களையும் தான்) தன் தண்டமிழ் எனும் மயிற்பீலிகளால் தான் வருடியிருக்கிறான்.இதுவே கம்பனின் மிக மிக உயர்ந்த எழுத்து நாகரிகம்.ராவணன் நாலு வேதங்களிலும் கரை தேர்ந்தவன் எப்படி
தமிழ் (திராவிடச்சாயை) மன்னன் போன்ற தோற்றம் பெற்றான்.தமிழ்க்கடவுள் சிவனின் "யாழ் அடி" போற்றியவன்.
ஆழ்வார்களின் தமிழ் நடை பற்றி கேட்கவே வேண்டாம்."அமுதும் தேனும் எதற்கு?""ஆண்டாள் பாசுரம் கேட்கும் போது.எனவே இங்கு
பக்தி இலக்கியம் பெரும்பாலும் "தமிழ்ப்பக்தி"இயக்கமாகவே இருக்கிறது.உங்கள் உரை தமிழ்ச்சுவை பெற்ற ஆன்மீக உரையாய்
அமைந்தது கண்டு நான் பெரு வியப்பு அடைந்தேன்.பெரு மகிழ்ச்சி யுற்றேன்.பாராட்டுகள்.

அன்புடன் ருத்ரா
- show quoted text -

Oru Arizonan

unread,
Jun 5, 2015, 2:36:22 PM6/5/15
to mintamil
2015-06-05 10:20 GMT-07:00 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
//தமிழை கடவுள் நிலைக்கு கொண்டு செல்லும்போது -- அது "ராமனாய் இருந்தால் என்ன? ராவணனாய் இருந்தால்"என்ற சிந்தை தான் நம் கம்பர் உள்ளிட்ட ஆழ்வார் மற்றும் எல்லா சான்றோர்களுக்கும் உள் நினைப்பாய் தோன்றி இருக்கிறது.//

மதிப்பிற்குரிய ருத்ரா அவர்களே,
இந்த சிந்தனையுடன் நான் வேறுபடுகிறேன்.  
திருமூலரும்,
"என்னை இறைவன் நன்றாகப் படைத்தனன் 
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!" 
என்று இயம்பிச் சென்றிருக்கிறார்.

இதுகண்டு தமிழில் இறைவன்மீது காவியம், பக்திப்பாடல்கள் செய்த அனைவருமே தமிழன், தமிழ்மொழி என்ற பெருமிதத்துடனேதான் அணுகியிருக்கிறார்கள்.  இறைவனைத் துதித்தேத்த மனிதன் செப்பும் மொழி தமிழே என்று மார்தட்டியிருக்கிரார்கள்.

திருமூலரோ இறைவனுக்கு எந்தமொழியில் துதிக்கப்படுவதைவிட தமிழில் துதிக்கப்படுவதே சாலச்சிறந்தது என்று கருதிய "தனை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!' என்று பகர்ந்திருக்கிறார்.

கம்பநாட்டாரும் இராமனைத் திருமாலின் அவதாரமாகவே தனது இராமகாதையில் காட்டியிருக்கிறார்.  எனவே, "இராமனை இருந்தாலென்ன, இராவணனாய் இருந்தால் என்ன?" என்ற சிந்தை அவர்களிடம் இருந்திருப்பதாக அவரது இராமகாதையில் ஒருவரிகூட்ட காட்ட முடியாது.

அப்படியிருக்க, நாரணனையே துதித்துப் பாடிய ஆழ்வார்கள் அவ்வாறு உட்கருத்துடன் செயல்பட்டிருப்பர்கள் என்பதை எவராலும் ஏற்க இயலாது என்பதைத் தங்கள் முன்வைக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 
 

Oru Arizonan

unread,
Jun 5, 2015, 2:46:42 PM6/5/15
to mintamil
//ராவணன் நாலு வேதங்களிலும் கரை தேர்ந்தவன் எப்படி  தமிழ் (திராவிடச்சாயை) மன்னன் போன்ற தோற்றம் பெற்றான்.  தமிழ்க்கடவுள் சிவனின் "யாழ் அடி" போற்றியவன்.//

இராவணன் படைக்கும் கடவுளான பிரம்மனின் [பரம்பொருள் அல்ல] கொள்ளுப் பெயரன்.  இராவணப் பிரம்மா என்று புகழ் பெற்றவன்.  அவ்வமயம் "நவ வியாகரண [ஒன்பது இலக்கணம் கூறும்] பண்டிதர்களில்" அவனும் ஒருவன்.  

அகந்தையால் சிவனாரின் கயிலையையே புரட்ட முற்படும்போது, அவரின் கட்டைவிரலால் அமுக்கப்பட்டுப் புதையுண்டு சிறிது நேரம் தனது அகந்தையழிந்து தனது வயிற்றைக் கிழித்து, குடலை உருவி சாமவேதத்தை இசைத்து அருள் பெற்றான்.

அந்தணனாகப் பிறப்பெடுத்தாலும் மனிதரை உண்ட அவன் அரக்கனே.  எனவே, "எப்படி  தமிழ் (திராவிடச்சாயை) மன்னன் போன்ற தோற்றம் பெற்றான். " என்று நீங்கள் கேட்டிருப்பது சரியான ஒன்றே!  ஒரு அரக்கனைத் தமிழன் என்று போற்று ஏத்துவதும் தமிழின் சாபக்கேடுதான்.

அரக்கர்கள் அனைவருமே சிவபக்தர்கலாகத்தான் காட்டப்படுகிறார்கள்.  தவம் செய்து வரம் பெரும் அவர்கள், அதனால் விளைந்த செருக்கால் அழிந்து போகிறார்கள்.

அவ்வளவே!

Oru Arizonan

unread,
Jun 5, 2015, 2:49:04 PM6/5/15
to mintamil
//பாடல்கள் நமக்குத் தருகின்ற அறிவுரைகள்,”தமிழை விரும்பிப்படியுங்கள்: அறிவு பெறலாம்! தமிழர் பண்பை மறவாதீர்கள்; சிறந்த தமிழராக வாழ்லாம்! நல்ல தமிழர்களாகவும் வாழலாம்!” என்பதே.
மேலும் என்னைக் கவர்ந்த பாடல்கள் சிலவற்றைக் குறித்துவைத்துள்ளேன். நன்பர்கள் கருத்தறிந்து பகிர்ந்துகொள்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்//

தங்கள் தமிழ்ப்பற்றுக்கும், தமிழ்ப்பற்றை வளர்க்கத் தாங்கள் மேற்கொண்டுவரும் தமிழ்த் தொண்டுக்கும் தலைசாய்த்து வணங்குகிறேன், ஐயா!

வேந்தன் அரசு

unread,
Jun 5, 2015, 8:26:08 PM6/5/15
to vallamai, mintamil, maza...@googlegroups.com, muththamiz, housto...@googlegroups.com


5 ஜூன், 2015 ’அன்று’ 9:27 முற்பகல் அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:

தமிழை பல அடைமொழிகள் இட்டு அழைக்கிறோம். செந்தமிழ்; பைந்தமிழ்,வண்தமிழ்,ஒண்தமிழ், கன்னித்தமிழ் என்று சிறப்புச்சொற்களைச் சேர்த்துச்சொல்கிறோம். தமிழ் மூன்றாகப்பிரிந்து இயல்,இசை,நாடகம் என்ற முத்தமிழாயிற்று. முதலாழவர்களில் ஒருவராகிய பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் தமிழுக்கு மேலும் சிறப்பான ஒரு அடைமொழியிட்டு அழைக்கிறார்.

நச்சினேன் 

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 5, 2015, 11:10:11 PM6/5/15
to vallamai, mintamil, maza...@googlegroups.com, muththamiz, housto...@googlegroups.com
இனிய நண்பர்கள் இ.ஐயா, திரு ருத்ரா, திரு மோகனரங்கன், திரு அரிசோனன், திரு வேந்தன் அரசு ஆகியோரது இனிய ஊக்கமூட்டும் சொற்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து மாலிய நெறி, தமிழர் நெறி குறித்த சில பாசுரங்களையும் எண்ணங்களையும் அடுத்துப்பகிர்ந்துகொள்கிறேன்.
நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2015-06-05 20:03 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:

N. Kannan

unread,
Jun 6, 2015, 12:36:18 AM6/6/15
to மின்தமிழ்
2015-06-05 21:27 GMT+08:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
அதற்காக இணையக் கடலில்  மூழ்கியுள்ளேன். ஆழ்வார் தந்த நன்முத்து “ஞானத் தமிழ்” என்ற அடைமொழி. தமிழை ஞானத்தமிழ் என்று சொல்லுவதோடு அவர் நின்றுவிடவில்லை. தமிழை ‘இருந்தமிழ்’ என்றும் தன்னைப் ‘பெருந்தமிழன்’ என்றும் சொல்லிக்கொண்டும் பெருமையடைகிறார்.

மிக நல்ல சிந்தனைகள். நல்ல தொடர். தொடர்க.

ஆழ்வார்களின் சொல்லாட்சியில் வரும் தமிழ் அடைமொழிகளை அடுக்குகிறார் வேளுக்குடி கிருஷ்ணன். இத்தொடுப்பு உதவும்:


தமிழ்ச் சமயச் சரிதத்தை கூர்மையாக கவனித்தால் சங்கம் தொடங்கி தமிழை முன்வைத்து நகர்ந்தது வைணவம் என்பது புரியும். தாங்கள் மேற்கோள் காட்டிய, “ அன்பே தகழியா, ஆர்வமே நெய்யாக” என்பதில் வரும் “ஆர்வம்” என்பது சங்கப் பயன்பாடு. அதன் பொருள் பக்தி என்று விளக்கியவர்கள் ஆழ்வார்கள். இதை இ.பா கணையாழி கட்டுரை ஒன்றில் விளக்கியிருக்கிறார். க.பார்த்தசாரதி என்பாரின் முனைவர் பட்ட ஆய்வேடு இத்தொடர்புகளை மிக விரிவாக எடுத்துச் சொல்கிறது. ஏன்? தொ.பரமசிவம் அவர்களின் ஆய்விலும் தமிழுக்கும் வைணவத்திற்குமுள்ள ஆழமான தொடர்பு விளக்கப்படும். ஏதோவொரு காரணத்தினால் சைவம் என்றால் தமிழ் என்பது போன்ற மாயத்தோற்றம் தமிழ் மனதில் குடிகொண்டு விட்டது. தமிழின் ஆழத்தைச் சொல்லும் ஆழ்வார் பாசுரத்தைக் கவனியுங்கள்:

கதவு மனமென்றும் காணலா மென்றும், குதையும்
வினையாவி தீர்ந்தேன், - விதையாக நற்றமிழை
வித்தியென் உள்ளத்தை நீவிளைத் தாய்,
கற்றமொழி யாகிக் கலந்து.

தமிழை எங்கு கொண்டு செல்கிறார் பாருங்கள். கதவு போல் மனமானது சம்சாரத்திற்கும், ஆன்மீகத்திற்கும் வழிவிட்டு அலைக்கழித்துக் கொண்டிருக்கும் போது தமிழ் மொழியை எனக்களித்து, அதன் மூலம் ஞானம் பெறச் செய்து உய்வித்தாய் என்கிறார். அவன் ஆழ்வாருள் தமிழ் மொழியாகப் பிரவேசிக்கிறான் என்கிறார், நல்ல தமிழை நம் உள்ளத்தில் விதைத்தால் இறைமை தானாக உட்புகும் என்பது பொருள்.

வைணவம் தமிழை எங்கு கொண்டு நிறுத்தியிருக்கிறது என்பதைக் கம்பனின் சொல்லால் கேட்போம்

கொடிஎடுத் துக்கொண்டு நின்றேன் இனிக்கொடுங் கூற்றினுக்கோ
அடிஎடுத் துக்கொண்டென் பால்வர லாகுங்கொல் ஆரணத்தின்
படிஎடுத் துக்கொண்ட மாறன்என் றால்பது மக்கரங்கள்
முடிஎடுத் துக்கொண்ட அந்தணர் தாள்என் முடிஎனவே

வேதத்தின் முன்செல்க மெய்யுணர்ந் தோர்விரிஞ் சன்முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின்முன் செல்க குணம்கடந்த
போதக்க டல்எங்கள் தென்குரு கூர்ப் புனிதன் கவிஓர்
பாதத்தின் முன்செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே

மெய் உணர்ந்தோர் ஓதுவது வேதம். அது அந்தணர் தொழில்.  அந்த அந்தணர்கள் மாறனின் திருவாய்மொழி என்று சொன்னால் தங்கள் தாமரை போன்ற கரங்களை சென்னியில் வைத்து வணங்குவர் என்கிறார். பொருள் எளிது. அன்றைய சமூகச் சூழலில் அந்தணர்களின் இடம் மிக உயர்வானது. அரசர்கள் கூட வணங்கும் தகுதியுடையோர். தேவ பாஷை என்று சங்கத்தை முன் வைப்போர். ஆனால் அவர்கள் திருவாய்மொழி எனும் சொல் கேட்டால் மெய்சிலிர்த்து கை கூப்புவர் என்றால் என்ன பொருள்? தமிழின் சிறப்பை யார் தமிழ் மண்ணில் முன்வைத்தது?

அதற்கு அடுத்த பாட்டில் வைணவ சம்பிரதாயத்தைச் சொல்கிறார். அந்தணர்கள் வேதம் ஓதிக்கொண்டு இறைவன் பின்னால் செல்வர். ஆனால் இறைவனோ போதக்கடலான எங்கள் தென்குருகூர்ப் புனிதன் தமிழ் கவிதையின் மேல் காதல் கொண்டு அதைத்தொடர்வான் என்கிறான்.

திருமழிசை நற்றமிழை வித்தி என் உள்ளத்தில் பக்தி எனும் விதை விதைத்தாய் என்கிறார். கம்பரோ, தமிழின் பின் செல்லும் கடவுள் பெருமாள் என்கிறார்.

தமிழை எங்கு வைக்கிறார்கள் தமிழர்! இது அறிந்தன்றோ ‘நாத்திகம் பேசிய பாரதிதாசன்’ வைணவம் என்று வரும் போது இதமாகப் பேசுகிறார்.

முத்தியோ சிலரின்
சொத்தென இருக்கையில்

இத்தமிழ் நாடுஇருந்தவப்
பயனாய்

இராமானுசனை ஈன்ற
தன்றோ?

இந்நாடு வடகலை ஏனென
எண்ணித்

தென்கலை ஈன்று திகழ்ந்த
தன்றோ?


மிகச்சரியான புரிதல்! 

தமிழ் மக்கள் தங்கள் சமய வரலாறைச் சரியாக வாசிக்கவில்லையோ? என்ற வருத்தம் எனக்கு வருவதுண்டு. ஒரு நாத்திகருக்குப் புரிவது “ஆத்திகம் பேசும்” ஆத்திகர்களுக்குப் புரிவதில்லை. என்ன செய்வது.

தாங்கள் ஆழ்வார்களில் தோய்ந்து சங்க மரபை மீட்டெடுத்துத்தாருங்கள்!

நா.கண்ணன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 6, 2015, 4:54:13 AM6/6/15
to mint...@googlegroups.com
அருமை!

--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Mohanarangan V Srirangam

unread,
Jun 6, 2015, 5:18:33 AM6/6/15
to min tamil
யாருக்கு அருமை சொல்றீங்க. வெறுமன அருமைன்னு வருது :-)


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Malarvizhi Mangay

unread,
Jun 6, 2015, 5:36:48 AM6/6/15
to mint...@googlegroups.com

கண்ணன் ஐயா உங்கள் வைணத் தமிழின் நேர்த்தியைப்
படிக்கப் படிக்கத் தமிழைப் பக்திமொழியெனப் பகன்றதன்
சூட்சுமம் புரிந்தது.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 6, 2015, 5:40:33 AM6/6/15
to mint...@googlegroups.com
On 6/6/15, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
> யாருக்கு அருமை சொல்றீங்க. வெறுமன அருமைன்னு வருது :-)

இணைய ஆழ்வார் திரு கண்ணன் பதிவில் தமிழும் ஆழ்வார்களும் குறித்த
கருத்தும் இராமனுசன் பெருமை பற்றிய பாரதிதாசன் வரிகளும் கவர்ந்தன.

நன்றி.
சொ.வி.

Bala Sundara Vinayagam

unread,
Jun 6, 2015, 6:14:05 AM6/6/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, mutht...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, maza...@googlegroups.com
இருந்தமிழ் என்றால் என்ன பொருள்? அதைச் சொல்லுங்கள் ! 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 6, 2015, 6:19:08 AM6/6/15
to mintamil, vallamai, முத்தமிழ், maza...@googlegroups.com, housto...@googlegroups.com


On 06-Jun-2015 3:44 pm, "Bala Sundara Vinayagam" <balasundar...@gmail.com> wrote:
>
> இருந்தமிழ் என்றால் என்ன பொருள்? அதைச் சொல்லுங்கள் ! 
>

> 13.6.2015 சனிக்கிழமையன்று காரைக்குடி த.மு.எ.ச.கலை இலக்கியக்கூட்டத்தில் “நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் தமிழ்ச்சுவை” என்ற பொருளில் உரையாற்ற வாய்ப்பு அமைந்துள்ளது.

சொல்வதைக் கேட்கத் தாங்கள் காரைக்குடிக்கு வரவேண்டுமே:) :))

தேமொழி

unread,
Jun 6, 2015, 6:25:00 AM6/6/15
to mint...@googlegroups.com, balasundar...@gmail.com
இரு = பெருமை (The great)

இருந்தமிழ் - பெருமை மிக்க தமிழ்


இருந்தமிழ்  The great Tamil ....  implying its excellence and copiousness.


..... தேமொழி

Bala Sundara Vinayagam

unread,
Jun 6, 2015, 6:25:11 AM6/6/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, mutht...@googlegroups.com, minT...@googlegroups.com, maza...@googlegroups.com, housto...@googlegroups.com
தமிழ்த்தலைவன் என்ற பேர் பேயாழ்வாருக்குண்டு.  அளித்தவர் இராமானுர் திருவந்தாதி ஆசிரியர். இந்த அந்தாதி நாலாயிரத்திவ்ய பிரபந்தத்துக்குள்ளே அடக்கப்பட்டவொன்றாகும். அடக்கிய பின் நாலாயிரத்துக்கும் மேலான பாடலகளாயின :-)  ஆச்சாரிய வணக்கம் வைணவத்தில் கட்டாயமென்பதால் அப்படி செய்யப்பட்டது. ஆச்ச்சாரியர்களைப்போற்ற அவ்வந்தாதியை எழுதினார் திருவரங்கத்து அமுதனார். திருவரங்கத்து வாயிலிலே இராமானுஜரை மறித்துத் தடுத்தவர் இவர் என்பது வியப்பான செய்தி.

தமிழ்த்தலைவன் சபா என்று பேயாழ்வார் சபையொன்று பல்லாண்டுகளாக மயிலாப்பூரில் இயங்கி வருகிறது. பேயாழ்வாரின் அவதாரஸ்தலம் மயிலாப்பூர். அதையேன் அவருக்களிதார் அமுதனார்? பூதத்தாழ்வார்தானே தன்னைப் பெருந்தமிழன் என்றார்? என்பது ஒரு நல்ல கேள்வி.

இருந்தமிழ் என்ற சொல்லை இருவர் பயன்படுத்திருக்கின்றனர். ஒருவர் பூதத்தாழ்வார்; மற்றவர் தன் பெயரை மறைத்துக்கொண்டு சொக்கநாதருக்கு இரகசியமாக தமிழ் விடு தூது அனுப்பிய மதுரைக்காரர்.. இரகசியம் ஏனென்றால் எழுதிய பாடலகளை ஒளித்துவைத்துவிட்டார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே வெளியில் தெரிந்தது.  ஏன் அப்படி செய்தாரென்றால் அஃதொரு நீண்ட வரலாறு.

இருந்தமிழ் என்றால் என்ன பொருள்? Please tell me.

வீரமாமுனிவர், தமிழில் கொடுந்தமிழும் உண்டு என்று சொல்லி, அததமிழுக்கு இலக்கணமும் வரைந்தவர். அவ்வகை நீங்கள் சொல்லவில்லை.

Dev Raj

unread,
Jun 6, 2015, 10:05:24 AM6/6/15
to mint...@googlegroups.com
On Friday, 5 June 2015 11:46:42 UTC-7, oruarizonan wrote:
அரக்கர்கள் அனைவருமே சிவபக்தர்கலாகத்தான் காட்டப்படுகிறார்கள்.  தவம் செய்து வரம் பெரும் அவர்கள், அதனால் விளைந்த செருக்கால் அழிந்து போகிறார்கள்.

பிரகலாதனும், வீடணனும், விருத்திரனும் அரக்கர்களே !
மாவலியும் அப்படியே. மாலவன் அவனது வாயில்காப்போனாக
நிற்கிறார்


தேவ்

Bala Sundara Vinayagam

unread,
Jun 6, 2015, 11:37:26 AM6/6/15
to mint...@googlegroups.com, balasundar...@gmail.com
நன்றி.  நானும் இருந்தமிழ் என்ற‌ சொல்லின் பொருளை ஒருவர் விளக்கப்படித்ததாக நினைவு. மீண்டும் பெறின் இங்கு பதிகிறேன்..

Bala Sundara Vinayagam

unread,
Jun 6, 2015, 12:07:32 PM6/6/15
to mint...@googlegroups.com
வைணவப்பார்வையில் ஆழ்வார்களின் பாசுரங்களின் நோக்கம் வேறு.  தமிழின் மீது பக்தியையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்துவதன்று.  தமிழ் தமக்கு ஒரு ஊன்றுகோலாக இருந்தது என்று பொருள் பட அவர்கள் எழுதுவதாகவே கொள்ளவேண்டும்.  எதற்கு ஊன்றுகோள் ? அவர்கள் தங்கள் முழுமுதற்கடவுளை அடைய. எனவே தமிழை வெகுவாகப்புகழ்வது பாசுரங்களின் நோக்கத்தைப் பின் தள்ளுவதாகும். எதுவும் தமக்கும் தம் இறைவனுக்கும் தடையாகி இருப்பின் தாம் தூக்கியெறியத் தயாரென்றும் சொல்வார்கள். அஃது எதுவாக இருந்தாலும் அவர்களுக்குத்தேவையில்ல; தமிழென்ன, குடுமியும் வேள்வியுமே தடையாக இருப்பின் தூக்கியெறியத்தயார் என்று தொண்டரப்பொடியாழ்வார் அறுதியிட்டுச்சொல்வதை திருமாலையில் படிக்கலாம்.

அதே சமயம்: தமிழறிஞர்கள், வைணவரல்லாதவர்கள், வைணவருள்ளும் இருக்கும் தமிழறிஞர்கள் தாங்கள் தமிழறிவுக்காகப்படிக்கும் போது - இவர்களே பாசுரங்களின் ஞானத்தமிழைப்பற்றியும் இருந்தமிழைப்பற்றியும் புளகாகிதமடையலாம்; இறும்பூதெய்யலாம்.

கருநாநிதி ஆழ்வார்கள் பாசுரங்களைத் தமிழுக்காக மெச்சி ஒரு மேடையில் பேசியிருக்கிறார். அண்மையில் கல்கி பேட்டியில் மாணிக்கவாசகரைப்போற்றுகிறேன்அவர் தமிழுக்குச்செய்த சேவைக்காக என்றார்.அவர் ஒரு நாத்திகர்.

நாத்திகரும் ஆத்திகரும் மட்டுமில்லாமல் பிறமதத்தினரும் ஆழ்வார்களையும் தேவாரமூவரையும் படிக்கலாம்; போற்றலாம். தமிழுக்காக. போப் தமிழுக்காக மட்டுமில்லாமல் பக்தியின் ஆழ்மையையும் கண்டு தெளிந்து வியப்புற்று திருவாசகத்துக்கு அடிமையான கதை தெரியுமல்லவா?

இத்தெளிவு அவசியமென நினைக்கிறேன். எனவே சரியான சமயத்தில் யான் செய்த எச்சரிக்கையாக இஃது எடுத்துக்கொள்ளப்படவேண்டும். இல்லாவிட்டால், ஆழ்வார் பக்தர்கள் மனங்கள் நோகலாம்.

Malarvizhi Mangay

unread,
Jun 6, 2015, 1:00:47 PM6/6/15
to mint...@googlegroups.com

இருந்த தமிழ்..

இருக்கின்ற தமிழ்,

இருக்கவிருக்கும் தமிழ் _

இப்படியுங் கொள்ள விழைவு.

--

Dev Raj

unread,
Jun 6, 2015, 4:07:57 PM6/6/15
to mint...@googlegroups.com
On Saturday, 6 June 2015 09:07:32 UTC-7, Bala Sundara Vinayagam wrote:
......அவர்கள் தங்கள் முழுமுதற்கடவுளை அடைய. எனவே தமிழை வெகுவாகப்புகழ்வது பாசுரங்களின் நோக்கத்தைப் பின் தள்ளுவதாகும். எதுவும் தமக்கும் தம் இறைவனுக்கும் தடையாகி இருப்பின் தாம் தூக்கியெறியத் தயாரென்றும் சொல்வார்கள். அஃது எதுவாக இருந்தாலும் அவர்களுக்குத்தேவையில்ல; ....


இதற்கு அருளிச்செயலிலிருந்து உதாரணம் தர முடியுமா ? 


தேவ்

N. Kannan

unread,
Jun 7, 2015, 4:05:36 AM6/7/15
to மின்தமிழ்
மலர்! இருந்தமிழ் எனும் சொல் கேட்டவுடன் கம்பன் எவ்வளவுதூரம் ஆழ்வார்கள் அடியொட்டி இராமாயணம் எழுதியுள்ளான் என்பது புரியும். இருந்தமிழ் என்றார் ஆழ்வார். அவன் என்றுமுள தமிழ் என்கிறான். இது மணவாள மாமுனிகள் வைணவர்களும், மற்றவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் "சங்கதம் என்றுமுள" என்று சொன்னால் தமிழும் அத்தகையதே. அதற்கு அகத்தியம் என்று பெயர் இருப்பினும், அது அவரால் உருவாக்கப்பட்டதன்று என்று தெளிவு படுத்துகிறார். வைணவத்தில் அந்தணர்களின் ஆளுமை கூடும் போது மீண்டும் தேவபாஷைக்குத்தாவிவிடும் அபாயமுண்டு என அறிந்து அவர் விளக்கமாக என்றுமுள தமிழ் என்கிறார். இதை எப்படியோ பாரதிதாசன் உள்வாங்கி இருக்கிறார். ஆச்சர்யம்!

நா.கண்ணன்

பிகு: இதையெல்லாம் விரிவாக விளக்கத்தக்கவர் நம் அரங்கனார். இந்தத் தமிழ்ப் புரட்சியை மூல நூல்களின் உசாத்துணையோடு விளக்க வல்லவர் அவர். அவர் தனியாகப் புத்தகம் எழுத வேண்டும் என்பது என் ஆசை!
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Kannan

unread,
Jun 7, 2015, 4:10:23 AM6/7/15
to மின்தமிழ்
ஐயா! நான் ஆழ்வார்க்கு அடியன். அவ்வளவுதான். ஆழ்வார்கள் பற்றி யார் பேசினாலும் எனக்கு இனிக்கிறது. இராமகாதை எங்கு நடந்தாலும் அங்கு ஆஞ்சநேயர் இருப்பாராம். அது போல் இது!  என்னை ஒருவர் இங்கு குரங்கு என்று சொல்லி மகிழ்ந்தார். எனவே பொருந்துமென்றே தோன்றுகிறது!

நா.கண்ணன் 

Bala Sundara Vinayagam

unread,
Jun 7, 2015, 4:22:29 AM6/7/15
to mint...@googlegroups.com
/இருந்தமிழே உன்னால் இருந்தேன். இமையோர் 
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்//


இது உ வே சாவைச் சுண்டியிழுத்த கண்ணி. தமிழ் விடு தூதுலிருந்து.

பூதத்தாழ்வார் பாசுரம் ஏற்கனவே போடப்பட்டுள்ளது.

இவ்விரண்டிலும் எப்பொருளில் சொல்லப்பட்டது என்றதுதான் கேள்வி. நாமே பொருளைக்கொடுக்கலாம். அதை நான் கேட்கவில்லை.

Bala Sundara Vinayagam

unread,
Jun 7, 2015, 4:57:28 AM6/7/15
to mint...@googlegroups.com
இக்கேள்வியை திரு கண்ணனிடம் வைத்திருக்க வேண்டும். அவர் தன்னை ஆழ்வார்க்கடியன் என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் எழுதுவதிலிருந்து திரு மோகன் ரங்கன் எழுதுவதிலிருந்து, இவாளெல்லாம் ஆழ்வார் பாசுரங்களில் படித்து - மதுரைப்பாஷையில் - பழந்தின்று கொட்டை போட்டவர்கள். அடியேன் சிறிய ஞானஸ்தன் ஆழ்வார்களைப் பொறுத்தவரை.  என் கருத்து: ஆழ்வார்கள் தமக்கும் பெருமாளின் திருவடிகளைப்பற்ற எதுவும் தடையாக இருக்குமானால் அதை-அவற்றைத் தூக்கியெறியத் அவர்கள் தயங்கியதே இல்லை. இதைவைத்த்ப்பார்க்கும்போது, தமிழை அவர்கள் ஒரு கருவியாகத்தான் பயன்படுத்தினார்களே ஒழிய, இறைவனுக்குக் நிகராகக்கொள்ளவில்லை. நிகரென்றால் அஃதொரு தடையாகும். அதை விலக்கியிருப்பர் என்பது.

இது சரியா இல்லையா என்பதை இங்கெழுதிக்கொண்டிருக்கும் ஆழ்வார்க்கடியர்கள் எவரேனும் சொல்லலாம்.

என்னிடமிருந்து இப்படி:

தோண்டர்டிப்பொடியாழ்வார் வாழ்க்கையில் அடிபட்டவர்.  மிகவும் நொந்தவர். கீழ் விழுந்து மீண்டெழுந்து இறுதியாகத்தான் திருவரங்கனை அடைந்தவர்.  அவர் பாசுரங்களில் அவர் பட்ட படும் வேதனைகள் வெளித்தெரியும்.  

இவர் ஒரு பிராமண வகுப்பில் பிறந்தவர். முன்குடுமிச் சோழிய பிராமணர். சோழநாட்டைச்சேர்ந்தவர் என்று பொருள்.

பிராமணருள் பலவகை: ஒருவகை ஆன்மிகத்தையே சட்டை பண்ணாது.  சப் சலேகா என்பது இவர்தம் வாழ்க்கைக்கொள்கை. பிறப்பால், வளர்ப்பால் இருக்கலாம். ஏனெனில் தொட்டில் பழக்கம் நிழல் போலத் தொடர்லாம். மற்றபடி இல்லை. இவர்கள் நம் பார்வையில் இப்போதில்லை.

ஆன்மிக வழிப்பட்டோரில் இருவகை:

ஒன்று: பிராமண வழி ஆன்மிகத்தை ஒரு கருவியாக வைத்துக்கொண்டு இறைநிலையடைவோர். பரம்ஞானிகள் நிலையை அடையும் போது - ஆளவந்தார் மாற்னேரி நம்பிகளுக்குக் கூறியது போல - பரம் ஞானிகளுக்கு ஜாதிகள் கிடையா இவர்களுக்கு. வஞ்ச முக்குறும்புகளுக்குள் ஜாதி உணர்வும் ஒன்று என்பார் திருவரங்கத்து அமுதனார். கூரேசாழ்வாரை விவரிக்கும்போது வஞ்ச முக்குறும்புகளைக் கடந்தவர் என்பார்.
இவர்கள் ப்ரம ஞானிகள் ஆவதற்கு அவர்கள் வாழ்க்கை முறை உதவியிருக்கும். ஆனால் அதை ஓர் ஏணிபோல எடுத்து பரமஞானிகள் நிலையடைதல். பின்னர் அவர்கள் நம்முடன் இல்லை. ஏணியும் இல்லை.

இரண்டாவது: ஏணியை முதுகில் கட்டிக்கொண்டே மேலேறுவர். ஏணி என்பது ஒரு உசாத்துணை மட்டுமே.  இவர்கள் ஏணி உதவுவதற்குப் பதிலாக, பாரமாக இருந்து அவர்கள் பயணத்தைத் தடுக்கும். புன்யனின் பில்கிரிம் பாவமூட்டையைச்சுமந்து மலையேறுவது போல.  இப்படிப்பட்டோருக்கு ஞானச்செருக்காக அது வந்து தொடர்ந்து இடராக இருக்கும். இப்படிப்பட்ட ஒருவரை நம்பிள்ளை பார்த்து ஒதுங்கியதாக, அவர் தன் படியின் அவதாரிகையில் சொல்கிறார்.. இப்படிப்பட்ட பலர் வாழ்க்கையில் உண்டு. அது நம்க்கு ஈண்டு தேவையில்லை.

தொண்டரிப்பொடியாழ்வார் பிராமணத்துவத்தை தன்னோடு கொண்டவர். அதே நேரத்தில் அதை தனக்கு இடையூறாக  ஆக்கவில்லை. அப்படியாகுமேயாயின் எனக்கு அது தேவையில்லை. அதை நான் வீசிவிடத்தயார். எனக்குத்தேவை அரங்கன் மட்டுமே.

படியுங்கள்:

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண மைதன்னை
ஒளித்திட்டேன். என்கண் இல்லை; நின்கணும் பத்தன் அல்லேன்;
களிப்பதுஎன் கொண்டு? ந,ம்பீ! கடல் வண்ணா! கதறுகின்றேன்;
அளித்து எனக்கு அருள் செய், கண்டாய், அரங்கமாநகருளானே!

ஊர் இலேன்; காணி இல்லை; உறவு என்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாதா மூலம் பற்றினேன்; பரம மூர்த்தி!
காரொளி வண்ணனே! என் கண்ணனே! கதறுகின்றேன்.
ஆர் உளர்? களை கண் அம்மா! அரங்க மா நகருளானே!

மனத்தில் ஒர் தூய்மை இல்லை; வாயில் ஓர் இன்சொல் இல்லை;
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவினி விளிவன்; வாளா
புனத்துழாய் மாலையானே! பொன்னி சூழ் திருவரங்கம்
எனக்கு இனிக் கதி என் சொல்லாய்? என்னை ஆளுடைய கோவே!

Like him other Alwaars (mostly Nammaazhvaar, Thirumangai, Kulasekarar, Thirumazhiyisai cursed themselves if they find their egos intefering and, in case of Kulasekarar, wealth, power and pomp interfering, and in all others, various kinds of pleasure interefering.  

Language is a tool.  If you find it beautiful and aetsthetic, it affords pleasure too.  If it is a pleasure, it will definitely interfere.  Azhwaars were aware of hurdles coming from all kinds of pleasures. They couldn't have rated Tamil more than a tool.

Dev Raj

unread,
Jun 7, 2015, 5:25:16 AM6/7/15
to mint...@googlegroups.com
On Sunday, 7 June 2015 01:57:28 UTC-7, Bala Sundara Vinayagam wrote:
இவர் ஒரு பிராமண வகுப்பில் பிறந்தவர். முன்குடுமிச் சோழிய பிராமணர். சோழநாட்டைச்சேர்ந்தவர் என்று பொருள்..........
தொண்டரிப்பொடியாழ்வார் பிராமணத்துவத்தை தன்னோடு கொண்டவர். அதே நேரத்தில் அதை தனக்கு இடையூறாக  ஆக்கவில்லை. அப்படியாகுமேயாயின் எனக்கு அது தேவையில்லை. அதை நான் வீசிவிடத்தயார். எனக்குத்தேவை அரங்கன் மட்டுமே.

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண மைதன்னை
ஒளித்திட்டேன். என்கண் இல்லை; நின்கணும் பத்தன் அல்லேன்;
களிப்பதுஎன் கொண்டு? ந,ம்பீ! கடல் வண்ணா! கதறுகின்றேன்;
அளித்து எனக்கு அருள் செய், கண்டாய், அரங்கமாநகருளானே!
 

அனல் ஓம்புதலும், அரங்கனிடம் பக்தியும் இடையூறுகள் , 
அவை தமக்குத் தேவையில்லை என்றா கூறுகிறார் !


தேவ்

Nagarajan Vadivel

unread,
Jun 7, 2015, 5:32:07 AM6/7/15
to மின்தமிழ்

2015-06-07 14:27 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
முன்குடுமிச் சோழிய பிராமணர். சோழநாட்டைச்சேர்ந்தவர் என்று பொருள்.

​அருள் கூர்ந்து சரிபார்க்கவும்.  முன்குடுமிச் சோழியர்கள் சேரநாட்டைச் சேர்ந்தவர்கள்.  அவர்களே மேற்குக் கரை வழியாக வடமேற்கு இந்தியாவில் இருந்து சேரநாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர்கள்.  திராவிட ஆச்சாரத்தைக் கடைப்பிடிக்காமல் கெளட பிராமணர்கள் போல் கட்டுப்பாடில்லாமல் சேரநாட்டின் அனைத்துப்பிரிவிலும் கலந்துவிட்டவர்கள்.
நவகேடி

Bala Sundara Vinayagam

unread,
Jun 7, 2015, 6:05:01 AM6/7/15
to mint...@googlegroups.com
மோகனரங்கன் என்ற ஒருவர் ஒரு வைணவ வலைப்பதிவை வைத்து வைணவத்தைப்பற்றி விளக்கி வருகிறார். அவர் எழுத்துக்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன. அது தாங்கள்தான் என்று நினைத்தேன்.

On Sunday, 7 June 2015 14:58:21 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
.>..அவர் எழுதுவதிலிருந்து திரு மோகன் ரங்கன் எழுதுவதிலிருந்து, இவாளெல்லாம் ஆழ்வார் பாசுரங்களில் படித்து - மதுரைப்பாஷையில் - பழந்தின்று கொட்டை போட்டவர்கள்.>>>

ஐயா! திரு கண்ணனைத் தாங்கள் இவ்விதம் சொல்லலாம். ஆனால் எனக்குப் பொருந்தாது, ஏனெனில் நான் வைணவன் இல்லை. உலகின் பல மதங்கள், பல தத்துவங்களில் ஆழமாக ரசித்துத் தோய்ந்தவன். அவ்வளவே. அவ்வவற்ரின் நிறைகுறைகள் மனித குலப்பொதுவிற்கு என்ன நன்மை செய்திருக்கிறது என்று கற்பது என் நோக்கம். விட்டால் அரேபியப் பண்பாட்டின் தத்துவப் பங்களிப்பு பற்றியும் முழுத் தோய்வுடன் விளக்க முடியும். ஸ்ரீதாயுமானவர் பற்ரியும் இங்கு எழுதியுள்ளேன். எனக்கு மிகவும் ஈடுபாடு என்பது விவேகாநந்தர் சிந்தனை ரீதியிலான ஹிந்து மத விளக்கங்களில். பல மதங்கள், அவற்ரின் கட்டமைப்புகள் பற்ரிக் கற்கும் போது ஆழ்வார்கள் காட்டிய மார்க்கம், அளித்த சமுதாயச் சிந்தனைகள், தந்த தத்துவத் தெளிவுகள், மனித குலப் பொதுவிற்கு நன்மை பயப்பன என்று கருதுவதால், அதைப் பற்ரி சிறிது விரிவாக எழுதியிருக்கிறேன் இணைய வெளிகளில். வைணவ குலப் பிறப்பு என்பது தொட்டில் முதல் அதில் பரிச்சயத்தைத் தந்தது என்பதும் உண்மை. அது வைத்து நான் பெரிதும் வீர வைணவன் என்றெல்லாம் அபிப்ராயம் கொண்டு விடாதீர்கள். என்னுடைய அக்கறையும், மதமும் என்பது மனிதம். உலகப் பொது மானிடத்தின் ஆக்க பூர்வமான பங்களிப்புகள் எங்கெங்கு உண்டோ அவற்ரின்பால் கற்பதில் ஈடுபாடு. அவ்வளவே.

தங்களுடைய கருத்துகள் ஆழ்வார்கள் பாசுரங்களைப் பற்ரியவை மிகவும் ரசிக்கத்தக்க விதத்தில் இருப்பதைப் பார்க்கிறேன். தாங்கள் ஏன் தங்களுக்குப் பட்ட விதத்தில், அது விமரிசனமோ, வித்யாசமான பார்வையோ எதுவானாலும், ஓரிழை ஆரம்பித்து எழுதக் கூடாது? இது ஓர் அபிப்ராயம் மட்டுமே. அறிவுரை என்று முனியாதீர்கள். உங்களுடைய கருத்தாடல்கள், ஆங்கிலத்தில், சுய நிலை விளம்பல் பற்ரிப் படித்தேன். அதில் உண்மை இருக்கிறது. என்னை மிகவும் யோசிக்க வைத்தது. நன்றி ஐயா.

***


2015-06-07 14:27 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:

--

Meenavan M

unread,
Jun 7, 2015, 6:17:18 AM6/7/15
to mint...@googlegroups.com
அன்புடையீர் ! வணக்கம்.ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்காற் பட்டோர் எழுதிய அனைத்தும் இனியவை.தான் பேசுவதற்காக அடுத்தவரைத் தூண்டிவிட்டுக் கருத்துக்கள் சேர்க்கும் கலையறிந்தவர் சொ.வி.
சூளாமணி.முத்தொள்ளாயிரம்,க்ம்பராமாயணம்,வில்லியின் ம்காபாரதம் போன்றவற்றை நானும் இம்
மேடையில் பேசியிருக்கிறேன்.கூட்ட முடிவில் அவர்கள் கேட்கும் வினாக்களும் ந்ம்மைத் திகைக்க
வைக்கும்.இப்படி வந்தால் என்ன சொல்லலாம் என்பதை நம் வாயிலாக அறிய முற்படுகின்ற ஒருவகை
முயற்சியே இது.
வில்லிக்குச் சாற்று கவி தரவந்த அவர் புதல்வர் வ்ரந்தருவார் பாடிய பாடல்களில் ஒன்று

பொருப்பிலே பிறந்துதென்னன் புகழிலே கிட்ந்து சங்கத்து
இருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே கிடந்து கற்றோர் நினைவிலே நடந்துஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்

இதில் திருஞான சம்பந்தர் செய்த செயலும் திருமால் செய்த செயலும் கூறப்பட்டிருப்பது அற்புதம்
தமிழை உண்ர்ச்சி பூர்வமாகப் படிக்க விரும்பினால் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் படியுங்கள்.
அதிலும் திருமங்கை மன்னன் பாசுரங்களையும் ஆண்டாள் நாச்சியார்  அருளிய பாசுரங்களையும்
ஓதி இன்புறுக என்பார் என் குருநாதர் த்மிழ்க்கடல் இராய.சொ.அவர்கள்
மீனவன்

Mohanarangan V Srirangam

unread,
Jun 7, 2015, 6:25:15 AM6/7/15
to min tamil
2015-06-07 15:35 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
மோகனரங்கன் என்ற ஒருவர் ஒரு வைணவ வலைப்பதிவை வைத்து வைணவத்தைப்பற்றி விளக்கி வருகிறார். அவர் எழுத்துக்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன. அது தாங்கள்தான் என்று நினைத்தேன்.

வலைப்பதிவுதான் ஐயா. அதில் வைணவ வலைப்பதிவு என்று இருக்கிறதா தெரியாது. ஸ்ரீபகவத் விஷய அனுபவம் என்னும் பெயரில், இணையத்தில் நான் எழுதும் வைணவ சித்தாந்த சம்பந்தமான எழுத்துகளை அந்த ப்ளாக்கில் சேமிக்கின்றேன். தாங்கள் அதைப் பார்க்க நேர்ந்தால் தங்கள் அபிப்ராயங்களையும் எனக்குத் தெரிவியுங்கள்.

***


Bala Sundara Vinayagam

unread,
Jun 7, 2015, 6:26:37 AM6/7/15
to mint...@googlegroups.com
இருக்கலாம். சோழிய என்ற பொருள் சோழநாட்டிற்கும் வருமென்பது என் கேள்வி. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது பழமொழி.  சோழியச்செட்டியார்கள் உண்டல்லவா ? One of them said to me: We are from that part of TN; hence, the sooziya for us.


தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், சுவாமிமலைக்கு அருகே 5 கி.மீ. தொலைவில் இருக்கும், திருமண்டங்குடி. தான் தொண்டரடிப்பொடியாழ்வாரின் அவதார தலம்.  அவர் காலத்தில் இது சோழநாட்டில் இருப்பதால் இவர் சோழநாட்டுக்காரர் என்பவர் உண்டு. எங்கும் இவ்வூர் அந்தணர்கள் சேரநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்று எழதப்பட்டு யான் காணவில்லை. நம்பூதிர்களுக்கு முன் குடுமி என்பதால் சேர நாடோடு இணைக்க வாய்ப்புண்டு இவரை.  

இவர் அங்கிருந்து திருவரங்கத்தில் வந்து குடியேறி கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு நந்தவனம் அமைத்து பூக்கள் திருவரங்கத்து அளிக்கும் கைங்கர்யம் செய்துவந்தார்.  இவர் காலத்தில் திருமங்கையாழ்வார் திருவரங்கத்து ஜீயராகி, அக்கோயிலைப் புத்த மதத்தவரின் தாக்குதலிலிருந்து  kakka கோயிலைச்சுற்றிப் பெருமதில்களை (இன்றுமுள) எழுப்பினார். அப்படி எழுப்பும்போது, இவரின் நந்தவனம் குறுக்கிட, அங்கிருந்த ஒருவர் திருமங்கையாழ்வாரிடம், இந்த வனம் ஒரு அரங்கனின் ஆத்ம‌ பக்தரால் உருவாக்கப்பட்டு பேணப்படுகிறது. அவர் இங்கு வந்த காரணமே அரங்கனருகில் இருக்கவே என்றதும், ஆழ்வார் (ஜீயர் திகைத்து அஃதை அழிக்காமல் சுற்றிக்கட்டுக என்றார். அந்த நந்தவனம் இன்றிருக்கா என்று தெரியாது.  இரு ஆழ்வார்களும் சந்தித்துப் பேசியதாக எந்த நிகழ்வுமில்லை. ஒருவேளை, ஜீயர் ஒரு வி ஐ பி. ஆனால், விப்ரநாராயாணர் ஒரு பாமர பக்தர் என்பதால் (ஆழ்வாரனது பிற்பாடு) அது நிகழ வாய்ப்பில்லை எனலாம். மேலும், தன்னை அனைத்து ஆழ்வார்களுக்கும் கீழாக வைத்த்ப்பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து பெருமால் பக்தர்களில் கால்களுக்கும் கீழே வைத்துப்பார்ப்பதால், இவர் திருமங்கையாழ்வாரைத் தூரத்திலிருந்தே தரிசித்து (என்னே அற்புதமான பாக்யம் இவருக்கு ! Fantastic gift from his God to be close to Thirumangaialvaar! ) மகிழ்ந்திருக்கலாம்.  Please note he called himself Tondaradippodi.

N. Kannan

unread,
Jun 7, 2015, 9:54:04 AM6/7/15
to மின்தமிழ்
2015-06-07 18:05 GMT+08:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
மோகனரங்கன் என்ற ஒருவர் ஒரு வைணவ வலைப்பதிவை வைத்து வைணவத்தைப்பற்றி விளக்கி வருகிறார். அவர் எழுத்துக்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன. அது தாங்கள்தான் என்று நினைத்தேன்.

அவரே, அவரே! இங்கு ஸ்ரீவைஷ்ணவத்தைப் பற்றி மூல கிரந்தங்களை வைத்துப் பேசும் தகுதியுடைய பெருமகனார் இவர் ஒருவரே. மற்ற படி நானெல்லாம், பெருமாளுக்குச் சூட்டிய மாலையை பட்டாச்சார்யர் தரும் போது பெருமாளே ஆலிங்கனம் செய்து கொள்கிறார் என்று நம்பும் அசடுகள்!

நா.கண்ணன் 

Dev Raj

unread,
Jun 7, 2015, 10:11:26 AM6/7/15
to mint...@googlegroups.com
On Sunday, 7 June 2015 03:26:37 UTC-7, Bala Sundara Vinayagam wrote:
......இவர் அங்கிருந்து திருவரங்கத்தில் வந்து குடியேறி கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு நந்தவனம் அமைத்து பூக்கள் திருவரங்கத்து அளிக்கும் கைங்கர்யம் செய்துவந்தார்.  இவர் காலத்தில் திருமங்கையாழ்வார் திருவரங்கத்து ஜீயராகி, அக்கோயிலைப் புத்த மதத்தவரின் தாக்குதலிலிருந்து  kakka கோயிலைச்சுற்றிப் பெருமதில்களை (இன்றுமுள) எழுப்பினார். அப்படி எழுப்பும்போது, இவரின் நந்தவனம் குறுக்கிட, அங்கிருந்த ஒருவர் திருமங்கையாழ்வாரிடம், இந்த வனம் ஒரு அரங்கனின் ஆத்ம‌ பக்தரால் உருவாக்கப்பட்டு பேணப்படுகிறது. அவர் இங்கு வந்த காரணமே அரங்கனருகில் இருக்கவே என்றதும், ஆழ்வார் (ஜீயர் திகைத்து அஃதை அழிக்காமல் சுற்றிக்கட்டுக என்றார். அந்த நந்தவனம் இன்றிருக்கா என்று தெரியாது.  இரு ஆழ்வார்களும் சந்தித்துப் பேசியதாக எந்த நிகழ்வுமில்லை. ஒருவேளை, ஜீயர் ஒரு வி ஐ பி. ஆனால், விப்ரநாராயாணர் ஒரு பாமர பக்தர் என்பதால் (ஆழ்வாரனது பிற்பாடு) அது நிகழ வாய்ப்பில்லை எனலாம். மேலும், தன்னை அனைத்து ஆழ்வார்களுக்கும் கீழாக வைத்த்ப்பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து பெருமால் பக்தர்களில் கால்களுக்கும் கீழே வைத்துப்பார்ப்பதால், இவர் திருமங்கையாழ்வாரைத் தூரத்திலிருந்தே தரிசித்து (என்னே அற்புதமான பாக்யம் இவருக்கு ! Fantastic gift from his God to be close to Thirumangaialvaar! ) மகிழ்ந்திருக்கலாம்.  Please note he called himself Tondaradippodi.


தவறான தகவல்கள் . ஆழ்வார்களுள் காலத்தால் பிற்பட்டவர் திருமங்கையாழ்வார்.
இவர் ஜீயராகவில்லை. இவர் திரு அரங்கத்தில் மதில் திருப்பணி செய்ய முற்படுகையில்
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அமைத்த நந்தவனம் குறுக்கிட அதை வளைத்து மதில்
கட்டியதாக வரலாறு. 


தேவ்

N. Kannan

unread,
Jun 7, 2015, 10:49:34 AM6/7/15
to மின்தமிழ்
2015-06-07 18:17 GMT+08:00 Meenavan M <meen...@gmail.com>:
பொருப்பிலே பிறந்துதென்னன் புகழிலே கிட்ந்து சங்கத்து
இருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே கிடந்து கற்றோர் நினைவிலே நடந்துஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்

இதில் திருஞான சம்பந்தர் செய்த செயலும் திருமால் செய்த செயலும் கூறப்பட்டிருப்பது அற்புதம்.

உங்களைப் போன்றோர் இன்னும் நிறைய எழுத வேண்டும். ஆழ்வார்கள் இன் தமிழ்க்கவிகள். சங்கத்தமிழ் மாலை முப்பதும் என்று ஆண்டேளே சொல்வது போல் சங்கக்கவிகள். அவர்களை முழுமையாய் அறியாமல் தமிழ் உள்ளத்தை அறிய முடியாது.


தமிழை உண்ர்ச்சி பூர்வமாகப் படிக்க விரும்பினால் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் படியுங்கள்.
அதிலும் திருமங்கை மன்னன் பாசுரங்களையும் ஆண்டாள் நாச்சியார்  அருளிய பாசுரங்களையும்
ஓதி இன்புறுக என்பார் என் குருநாதர் த்மிழ்க்கடல் இராய.சொ.அவர்கள்

பாசுரங்கள் வெறும் உணர்ச்சிப்பனுவல்கள் என்றே தமிழ் கற்றோரால் விமர்சிக்கப்படுகிறது. அது மிகத்தவறு. நாலாயிர திவ்யப் பிரபந்தம் பெரும் ஞானக்கருவூலம் என்பதைத் தமிழ் மக்களுக்கும் பிற மாநிலத்தோருக்கும், உலகிற்கும் காட்டவே நாதமுனிகள் தொடngகி மணவாள மாமுனிகள் வரை ஒரு பெரும் இயக்கமே தமிழ் மண்ணில் செயல்பட்டிருக்கிறது. என்ன இவ்வுரையாசிரியர்கள் அனைவரும் வடமொழிப் புலமை கொண்டதாலும், அக்காலத்து ஆன்றோர் மொழியாக (அனைத்திந்திய அளவில்) சங்கதம் இருந்ததாலும் அவர்கள் மணிப்பவளத்தைக் கைக்கொண்டனர்.

இப்போது காலம் மாறிவிட்டது. தூய தமிழில் பேசுவது வழக்கில் வந்துவிட்டது. எனவே ஆச்சாரியர்கள் உரையை தூய தமிழ்ப்படுத்தி எல்லோருக்கும் உணர்த்த வேண்டியது இருமொழி கற்ற புலவரின் கடமை. ஈடு வியாக்கியானத்தைத் தமிழ்ப்படுத்திய புருஷோத்தம நாயுடு அவர்களின் தமிழும் வடமொழி கலந்தே இருக்கிறது. இங்குள்ள ஒருவரால் அதைச் செய்ய முடியும். எப்படி மணவாள மாமுனிகளை, "மாறன் திருவாய் மொழிப்பொருளை மாநிலத்தோர் அறியும் படி" உரைக்க அவர் ஆசான் வரம் வாங்கினாரோ, அது போல் இவருக்கும் அப்படியொன்று நடந்தால் பாக்கியம்.

நா.கண்ணன் 

N. Kannan

unread,
Jun 7, 2015, 10:56:03 AM6/7/15
to மின்தமிழ்
2015-06-07 18:26 GMT+08:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
இருக்கலாம். சோழிய என்ற பொருள் சோழநாட்டிற்கும் வருமென்பது என் கேள்வி. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது பழமொழி.  சோழியச்செட்டியார்கள் உண்டல்லவா ? One of them said to me: We are from that part of TN; hence, the sooziya for us.


பிராமண வகை தொகைகள் பற்றி இங்கு முன்பொருவர் விரிவாக எழுதியிருக்கிறார். பெரியவாச்சான் பிள்ளையிலிருந்து பல பெரும் உரைக்காரர்கள் சோழ நாட்டவரே. சோழியன் என்பது தமிழ் மண்ணைச் சேர்ந்த பிராமணர்களே. சங்கம் பகலும் முக்கோற்பகவர் இவர்களே. ஆழ்வார்களில் சேரகுல இளவல் குலசேகரர் ஒருவரே. நம்மாழ்வாருக்கு மலையாளப் பரிட்சயம் நிச்சயம் இருந்திருக்கும் என்பது என் ஊகம் (இதனாலேயே ஆதிசங்கரருக்கு இவரைப்பற்றி தெரிந்திருக்க வேண்டும் (vice versa ) என்பது என் ஊகம் . ஏனெனில் மிக அதிகமாக மலைநாட்டுத்திருத்தலங்கள் பற்றிய பாசுரங்கள் இவர் தொகுப்பிலேயே உள்ளன!

நா.கண்ணன் 

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 8, 2015, 1:23:11 AM6/8/15
to mint...@googlegroups.com, vallamai
On 6/7/15, Meenavan M <meen...@gmail.com> wrote:
/அன்புடையீர் ! வணக்கம்.ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்காற் பட்டோர் எழுதிய
அனைத்தும் இனியவை.தான் பேசுவதற்காக அடுத்தவரைத் தூண்டிவிட்டுக்
கருத்துக்கள் சேர்க்கும் கலையறிந்தவர் சொ.வி./

இனிய சொற்களுக்கு நன்றி. இவ்விழை ஆரம்பித்ததின் நோக்கம் அதுவேயாகும்.
வந்திருக்கும் பின்னூட்டங்களிலிருந்து அந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறது
என்பது தெரியவரலாம். பங்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. தொடர்ந்து
பங்களிக்க வேண்டுகிறேன்.

/சூளாமணி.முத்தொள்ளாயிரம்,கம்பராமாயணம்,வில்லியின் மகாபாரதம் போன்றவற்றை
நானும் இம் மேடையில் பேசியிருக்கிறேன்.கூட்ட முடிவில் அவர்கள் கேட்கும்
வினாக்களும் நம்மைத் திகைக்க வைக்கும்.இப்படி வந்தால் என்ன சொல்லலாம்
என்பதை நம் வாயிலாக அறிய முற்படுகின்ற
ஒருவகை முயற்சியே இது./

காரைக்குடி த.மு.எ.ச. இலக்கிய அரங்கின் பிதாமகன் தாங்கள். தங்களின்
பங்களிப்பு இங்கு எல்லோராலும் உச்சிமீது வைத்துக்கொண்டாடப்படுவது.

Dhivakar

unread,
Jun 8, 2015, 2:07:46 AM6/8/15
to vallamai, மின்தமிழ்
//அவரே, அவரே! இங்கு ஸ்ரீவைஷ்ணவத்தைப் பற்றி மூல கிரந்தங்களை வைத்துப் பேசும் தகுதியுடைய பெருமகனார் இவர் ஒருவரே. மற்ற படி நானெல்லாம், பெருமாளுக்குச் சூட்டிய மாலையை பட்டாச்சார்யர் தரும் போது பெருமாளே ஆலிங்கனம் செய்து கொள்கிறார் என்று நம்பும் அசடுகள்!//

அன்புள்ள டாக்டர் கண்ணன்,

நீங்கள் நம் ரங்கனாரை உயர்த்திப் பேசியதில் எனக்கும் உவப்பானதுதான். அது உங்கள் பண்பு.

அதே சமயத்தில் தங்களைத் தாழ்த்தி 'அசடுகள்' என உவமையாகக் காட்டியிருப்பது வருத்தமாக இருக்கிறது,

பெருமாள்  தரும் மாலையை பட்டர் அணிவிக்கும்போது பெருமாளே அணிவிப்பதாக நீங்கள் மட்டும் இல்லை. நானும் இன்னும் பல்லாயிரம் பேர்களும் அந்த நினைப்பு வகையில் அடங்குவர். ஆண்டாள், திருமங்கை மன்னர், குலசேகரப் பெருமான் போன்ற ஆழ்வார்களும் அடங்குவர். எளிமையான பக்திக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இறைவனும் இதை விரும்புவதாக நம்மாழ்வாரும் மாணிக்கவாசகரும் எடுத்துரைக்கிறார்கள்.

உவமையை மாற்றி எழுதுங்கள்.


 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Jun 8, 2015, 2:13:58 AM6/8/15
to min tamil, vallamai
2015-06-08 11:37 GMT+05:30 Dhivakar <venkdh...@gmail.com>:
//அவரே, அவரே! இங்கு ஸ்ரீவைஷ்ணவத்தைப் பற்றி மூல கிரந்தங்களை வைத்துப் பேசும் தகுதியுடைய பெருமகனார் இவர் ஒருவரே. மற்ற படி நானெல்லாம், பெருமாளுக்குச் சூட்டிய மாலையை பட்டாச்சார்யர் தரும் போது பெருமாளே ஆலிங்கனம் செய்து கொள்கிறார் என்று நம்பும் அசடுகள்!//

அன்புள்ள டாக்டர் கண்ணன்,


அதே சமயத்தில் தங்களைத் தாழ்த்தி 'அசடுகள்' என உவமையாகக் காட்டியிருப்பது வருத்தமாக இருக்கிறது,


உவமையை மாற்றி எழுதுங்கள்.

Dhivakar


நான் திவாகர் கட்சி. மிகச்சரியான வார்த்தை. நன்றி திவாகர் ஐயா.

***

N. Kannan

unread,
Jun 8, 2015, 4:42:09 AM6/8/15
to மின்தமிழ்
2015-06-08 14:07 GMT+08:00 Dhivakar <venkdh...@gmail.com>:
பெருமாள்  தரும் மாலையை பட்டர் அணிவிக்கும்போது பெருமாளே அணிவிப்பதாக நீங்கள் மட்டும் இல்லை. நானும் இன்னும் பல்லாயிரம் பேர்களும் அந்த நினைப்பு வகையில் அடங்குவர். ஆண்டாள், திருமங்கை மன்னர், குலசேகரப் பெருமான் போன்ற ஆழ்வார்களும் அடங்குவர். எளிமையான பக்திக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இறைவனும் இதை விரும்புவதாக நம்மாழ்வாரும் மாணிக்கவாசகரும் எடுத்துரைக்கிறார்கள்.

உவமையை மாற்றி எழுதுங்கள்.

ஆலிங்கனம் என்று எழுதியிருக்கிறேன் ;-)

ஆண்டாள் பாவம்தான்!!

ஞானம் காணாது ஸ்வாமி! ஒரே நம்பிக்கை, பயணத்துணைவனாக எங்கள் திருமோகூர் காளமேகம் வரும்போது reformat செய்தால் உண்டு.

மற்றபடி, பக்தர்களைச் சீண்டும் எண்ணமில்லை. என் நிலை சொன்னேன். 

நா.கண்ணன்  

Bala Sundara Vinayagam

unread,
Jun 8, 2015, 9:12:13 AM6/8/15
to mint...@googlegroups.com

ஆழ்வார்களைப்பொறுத்தவரை கிட்டத்தட்ட அவர்கள் பற்றி வரும அனைத்து தகவல்களையும் லெஜன்ட்ஸ் (Legends) என்றுதான் எடுக்க வேண்டும்.  அதில் மரபாக (Traditional beliefs, also called Vaishnava Sampradaya, which include practices based on such legendary beliefs) வரும் கருத்துக்களை நாம் ஏற்றுப்பேசுகிறோம். ஆழ்வார்களது சரித்திரங்களை ஒரு வரலாற்றாராய்ச்சியாளன் என்ற நிலையிலிருந்து எவருமே எழுதவில்லை.  ஏனென்றால், அவர்களது ஆராய்ச்சியின் முடிவு மரபு வழியாகச் சொல்லப்பட்டு ஏற்று மகிழ்ந்த வரலாற்றுக்கு மாறாக இருந்துவிட்டால் பக்தர்கள் மனம் நோவர்.  பக்தர்கள் விரும்புவதெல்லாம், அவர்கள் மத நாயகர்களைப்பற்றிய விதந்தோதும் கற்பனைக்குமெட்டா செயல்களும் சொற்களுமாம்.  இஃதெல்லாம் வரலாற்றைத் தாரா; மாறாக, புகழ்ப்பாடும் வரலாறு ஹாகியோக்ராஃபியையே தரும்.  அவர்களுக்கு அதுதான் வேண்டும். இதில் மு ராகவையங்கார் எழுதிய ஆழ்வார்கள் காலநிலை என்ற நூலைச்சேர்க்கக்கூடாது. அவர் ஒரு தமிழறிஞர். பாசுரங்களின் சொல்ல்ப்பட்டவைகளை வைத்து ஒரு ஊகங்களாக அவர் ஆழ்வார்கள் காலங்களை ஆராய்ந்தார்.  நான் பேசுவது வரலாற்றாய்ச்சியாளர்கள்.  ((இஃது அரசியல் நாயகர்களுக்கும் பொருந்தும். அண்ணாவை “”சி ஐ ஏ ஏஜண்ட்”” என்று சேஷன் தன் சுய சரிதையில் குறிப்பிட்டதால் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறை தாக்கப்பட்டது.)

 

திருமங்கையாழ்வார் காலத்தால் பிந்தியவர் அவரைக் கடைக்குட்டி ஆழ்வார் என்று சொல்வது மரபு.  தொண்டரிப்பொடியாழ்வாரின் நந்தவனம் திருமங்கையாழ்வார் மதில்கள் கட்டியபோது இருந்தது என்றால், இருவருக்கும் காலம் வெகுதூரமில்லை; சமகாலத்தவர் இல்லையென்றாலும்.  ஒரு நந்தவனம் அதைப் பேணுவோர் தலைமுறை தலைமுறையாக இருந்தாலொழிய தொடராது.  கேட்பாரற்று அழிந்துவிடும். திருமலையில் இராமானுஜரின் தாய்மாமன் கட்டிய நந்தவனம் இன்றும் பேணப்படுகிறது.  அப்படி தலைமுறை தலைமுறையாகப் பேணியிருந்தால், பல தலைமுறைகளுக்கு முந்தியவர் தொண்டரடிப்பொடியாழ்வார்; இல்லாவிட்டால், அவ்வளவு காலதூரம் இருக்காது. அது சரி, இன்று அந்த நந்தவனம் இருக்கின்றதா? திருச்சிக்காரர்கள் எங்கே?

 

திருமங்கையாழ்வார் திருவரங்க மடத்து ஜீயரா இல்லை என்று அம்மடத்து வரலாற்றையறிந்து ஆதாரத்துடன் சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன்.  இல்லையென்றால், நான் கேட்டது கேட்டதுதான்; மாற்றமில்லை.

 

சைவ மடங்கள் (ஆதினங்கள்); பிள்ளைகளைத் தவிர எவரையும் தலைவராக ஏற்கா. எ.கா. மதுரை சைவ மடத்தலைவராக நித்தியானந்தா தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் எழுந்த எதிர்ப்புக்களிடையே மதுரை ஆதினம் பத்திரிக்கையாளர்களிடம் இராஜசேகரன் என்ற நித்தியானந்தா சைவப்பிள்ளை வகுப்பைச்சேர்ந்தவர் என்பதற்கு தாசில்தாரின் கொடுத்த ஜாதிச்சான்றிதழைக் காட்டினார். அவ்வளவு ஜாதிப்பற்றுடையது அம்மடங்கள். சங்கரமடங்கள் பற்றி அனைவரும் அறிந்ததே. 

 

வைணவ மடங்கள் பிராமணரல்லாதோரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளும். அதற்கு முதல்படி வைத்தவர் இவ்வாழ்வார். வைணவர்கள் இராமனுஜர், ஆளவந்தார் வழி இவை வந்தவையாதலால், பரம ஞானிகளுக்கு ஜாதிகள் இல என்பதே கொள்கை.   ஜீயர்கள் பரம ஞானிகள். அவர்களுக்கு சாதிகள் கிடையா. அதைத்தகர்க்கும் முயற்சிகளுக்கு இறைவனருள் இல்லையென்பது என் நம்பிக்கை..

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 8, 2015, 9:21:17 AM6/8/15
to mint...@googlegroups.com, vallamai
தமிழ் மொழியின் பங்கு குறித்து நண்பர்கள் எழுதியுள்ளனர். ஆழ்வார்களின்
மொழி திருமாலின் சுடரடியை அடைய ஒரு சாதனம் என்பதில் இருவேறு கருத்தில்லை.

ஆழ்வார்களின் நோக்கம் நாராயணுடைய துயர்அறு சுடரடியையை அடைவதே. ஆழ்வார்
”இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னார்”.

இங்கே இரண்டு விஷ்யங்கள். 1.நாராயணனுடைய திருவடி 2.இருந்தமிழ் நன்மாலை.
இவற்றில் நாராணனுடைய திருவடி எல்லையொன்று இலாதது. உண்டென்றால் உண்டு.
இல்லையென்றால் இல்லை. எனவே தெளிந்து அடைவதென்பது எல்லோராலும் இயலாத
ஒன்று. கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் என்பார்கள்.
ஆனால் ஆழ்வார் சொன்ன தமிழ்மாலை, அமுத மொழிகள், சொற்கள் நற்பேறால் நம்
கைகளில் உள்ளது. நமக்கு கிடைத்துள்ளது. மாலிய நெறியில் இலாது பிற
சமயங்கள் பின்பற்றுவாரும் தம்தம் தெய்வங்களுக்கும் இச்சொற்களை ஏற்றி உணர
வழிவகுப்பது.
அம்மொழி அறிவு விளக்கேற்றவல்லது. அந்த மொழியாலே தான் அறிவு பெற்றேன்
என்கிறார் ஆழ்வார்.

எனவே நம் கைகளில் கிடைத்துள்ளதால், அவரவரே படித்து அறிய வழி வகுப்பதால்
மொழி அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்பது என் கருத்து.
நன்றி.

Bala Sundara Vinayagam

unread,
Jun 8, 2015, 9:40:10 AM6/8/15
to mint...@googlegroups.com
நான் எழுதியதை உள்வாங்கவேண்டும்.  இவர் மட்டுமன்று. அனைத்து ஆழ்வார்களும் தங்களுடன் வந்த அனைத்தையும் அவை இடையூர்களென்றால் விட்டுவிடத்தயாரென்றார்கள்; விட்டார்கள். ஒவ்வொரு ஆழ்வாரும் அவர்கள் பிறப்பு வளர்ப்புகளுக்கேற்ப பெற்றார்கள் (material inheritances). குலசேகரர் பெற்றது அரசப்பதவி; அரணமனைச்சுகங்கள்; சிலர் ஒன்றுமே பெறவில்லை; விடுவதற்கு ஒன்றுமில்லை. எல்லாருக்கும் - பெற்றாலும் பெறாவிட்டாலும் - விடுவதற்கு இருந்தது: ஈகோ. அதைவிட பெரும் மனப்போராட்டமே நடாத்தினார்கள் என்பதை நம்மாழ்வாரின் திருவாய்மொழி அவர் நெஞ்சொடு கிளத்தலிலும், திருமங்கையாழ்வார் வதிரியில் பாடிய பாடல்களும் சொல்லும்.  திருமழிசையாழ்வாரின் இறுதிப்பாடல் கண்ணீரை வரவழைக்கும். விட்டேன் விட்டேன் என்று அதனால் என்ன பயனென்றும் அப்பாடல் சொல்லும். அஃது உங்களுக்காக இங்கே. அடியில்.  இவ்வாறு தொண்டரிடிப்பொடியாழ்வார் பெற்றதாக அவர் கருதியது பிராமண சமயச்சடங்குகள் என்று அவர் கருதி  பாடலில் எழுதுகிறார். He has inherited his brahminism and if they proved to be hindrances to him in his pilgrim's progress towards Srirangan, he is all too willing to cast off them.  He has a point there we must note. i.e. according to me. Brahminims in so many become a fertile fodder to feed their egos.  Nambillai saw such a person within the premises of the temple he was on a visit; and turned his face away from that person.  When his shisya asked why, he explained as I wrote. 

We see, today brahmins fight for brahminical identities, don't we ?

ஆழ்வார்கள் அமானுஷ்யர்கள். எனவே நம் பார்வைகளும் அதற்குத்தக்கவாறு மாறினால்தான் அவர்களைப்புரிதல் முடியும். அவர்கள் பல ஜாதிகளில் பிறந்திருந்தாலும் all of them converged on a single purpose of becoming worthy of Perumal's Grace and Love.  THEY BECAME. By reading them, w/o ego, we, too can become - so says a friend of mine who is deep in the religion.  Not I நான் ஒரு பார்வையாளன் மட்டுமே.

இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெயவம்
இனி அறிந்தேன் எம் பொருமாள்! உன்னை - இனி அறிந்தேன்:
காரணன் நீ: கற்றவை நீ: கற்பவை நீ: நல் கிரியை
நாரணன் நீ; நன்கு அறிந்தேன் நான்.

It is the concluding stanze of his Nanmugan Tiiruvanthathi containing about 100 songs.  The entire book should be read to grasp the electrifying effect of this conclusion.

Dev Raj

unread,
Jun 8, 2015, 10:49:36 AM6/8/15
to mint...@googlegroups.com
On Monday, 8 June 2015 06:12:13 UTC-7, Bala Sundara Vinayagam wrote:

திருமங்கையாழ்வார் திருவரங்க மடத்து ஜீயரா இல்லை என்று அம்மடத்து வரலாற்றையறிந்து ஆதாரத்துடன் சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன்.  இல்லையென்றால், நான் கேட்டது கேட்டதுதான்; மாற்றமில்லை.


எந்த மடத்து வரலாற்றை ஆராயச்சொல்கிறீர்கள் ?
மங்கை மன்னர் ஜீயரானார் எனும் புதிய தகவலைத் 
தருவது நீங்கள்தான். அதற்கான ஆதாரம் தரும் பொறுப்பு
உங்களுடையதே.

மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
ஊன் அமர் வேல் கலிகன்றியாகக் குமுதவல்லியாரோடு
காட்சி தருகிறார் -



இவர் எப்போது ஊனமர் வேலை விடுத்துத் திரிதண்டமேந்தும் ஜீயரானார் ? 

உடையவர் காஞ்சியை விடுத்துத் திருவரங்கம் சென்ற உடனேயே ஆலயம் உடையவரின் மேற்பார்வைக்கு
வந்துவிடவில்லை. கூரத்திலிருந்து ஆழ்வான் அங்குபோன பின்னர் ஆலயத் திறவுகோலை ஓர்
உபாயத்தால் பெற்று அதன்பின் உடையவரிடம் அளிக்கிறார். பிறகு திருவரங்கச் செல்வம்
உடையவரால் சீர் பெறுகிறது. அதற்குமுன் ஜீயர் நிர்வாகம் அக்கோயிலுக்கு இருந்ததில்லை.


தேவ்

Nagarajan Vadivel

unread,
Jun 8, 2015, 1:25:06 PM6/8/15
to மின்தமிழ்

2015-06-08 19:10 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
He has inherited his brahminism and if they proved to be hindrances to him in his pilgrim's progress towards Srirangan, he is all too willing to cast off them.  He has a point there we must note. i.e. according to me. Brahminims in so many become a fertile fodder to feed their egos.  Nambillai saw such a person within the premises of the temple he was on a visit; and turned his face away from that person.  When his shisya asked why, he explained as I wrote. 

​Azhlvaras' history for the purpose of creating a linearity and continuity was artificially elongated to make the earthly life of azhlvars extended over 100 years.  The compilation of the songs of all the azhvars into an anthology was an ex post facto activity. Consolidating the utterings into Dravida veda was the sole purpose of the vaishnava saints and acharyas.  The over enthusiastic saivaites systematically liquidated Buddhism, Jainism and Vaisnavism.  What is remaining as vaishnavism is not the totality but only a part.  Many vaishnavites of yester years are forgotten and the true story of liberating the temple worship from the hands of few a  still remains as untold story.  
navakedi​

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 8, 2015, 2:46:27 PM6/8/15
to mintamil, vallamai
நாடு நலம் வாழ வேண்டும் என்ற நோக்கம் ஆழ்வார்களின் ஆழ்மனதிலிருந்து வெளிப்படுகிறது எனலாம்.. நாட்காலை நீராடி நெய்யுண்ணாமால், பாலுண்ணாமல், மையிட்டு எழுதாமல், மலரிட்டு முடியாமல், செய்யாதன செய்யாமல், புறம்பேசமல் நெறியுடன் திருமாலைப் பாடிப்பரவினால் நாடெல்லாம் தீங்கின்றி மும்மாரி பெய்து நீங்காத செல்வம் நிறையும் என்பது ஆண்டாள் நாச்சியாரின் உறுதிமொழி.

ஆலயங்கள்தோறும் பெருமாள் முன்னர் நாளும் ஓதப்படுகிற பாடல்! ஒன்றுக்கு இரண்டு முறை சாற்றப்படுகிற பாடல்! திருப்பாவை முப்பதின் மகுடமன்ன வேண்டுதல் பாசுரம். அனைவரும் அறிந்த பாசுரம்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!

ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற அருந்தமிழ்ச் சான்றோர்கள் எல்லாம் நாடு நன்றாக வளம் பெற்று வாழ வேண்டும்; உலகம் அமைதியுடன் செழித்து உயர்ந்து வாழ் வேண்டும் என்றே ஆண்டவனை எண்ணிப் போற்றி உருக்கமுடன் பாடியுளளனர். 
ஆண்டாளின் மூன்றாவது பாசுரமான மேற்கண்ட செய்யுளில் அமைந்துள்ள பொருளை எண்ணிப் பார்த்தால் உண்மையான பக்தர்களின் உள்ளக்கருத்தை உணரலாம்.
உயர்ந்து வளர்ந்து இந்த உலகத்தை ஓரடியால் அளந்து ஒன்றாக்கியவன் திருமால். பாவையை அலங்கரித்து நீராடி நெறியுடன் அந்தத் திருமாலின் பெயரைப் பக்திமல்கச் சொன்னால் ஆண்டாள் நாச்சியார் காட்டுகிற நன்மைகள் அற்புதமானவை.
‘நாடு முழுவதும் தீங்கில்லாமல் வாழும்; மற்றாங்கே மாதம் மூன்று முறை மழைபெய்யும்; அதனால் தண்ணீர் தட்ட்ப்பாடே ஏற்படாது. செந்நெற்பயிர் செழித்து வளரும். அந்தப்பயிர் வளர்ந்திருக்கும் வயல்களிலே நெல்     பயிருக்கு இடையே மீன்கள் துள்ளித்திரியும். வயல்களில் மலர்ந்திருக்கும் குவளை மலர்களிடையே தேனை அருந்திவிட்டு வண்டுகள் ஆனந்தமாக உறங்கிக்கொண்டிருக்கும். மக்களும் வீட்டிலிருந்துகொண்டு தங்கள் பசுக்களைக் கறப்பார்கள். அப்பசுக்கள் குடம்குடமாக கறந்தளிக்கும் வள்ளல்களாகத் திகழும்;
இவ்வாறு என்றும் குறையாத செல்வம் நாட்டிலே நிறைந்திருக்கும். நாம் உலகளந்த உத்தமன் பேர் பாடி நீராடுவோம்’ என்கிறார் ஆண்டாள்.
’வான் முகில் வழாது பெய்க; மலிவலம் சுரக்க; மன்னன் கோன்முறை அரசு செய்க; குறைவிலாது உயிர்கள் வாழ்க’ என்ற சைவச் சான்றோரின் வேண்டுகோளும் நாடு வாழவேண்டும் என்றே உரைக்கிறது.

Bala Sundara Vinayagam

unread,
Jun 8, 2015, 2:52:08 PM6/8/15
to mint...@googlegroups.com
பெருமிதப்படுதல், மார்தட்டுதல் -  அசிங்கமான சொற்கள்.  மற்றவர்களுக்கிருக்கலாம்.  திருமூலரோ மற்றவர்களோ தமிழுக்கு முதலிடம் கொடுத்திருக்கலாம். முதலிடம் கொடுத்தல் என்பது இறைவனுக்கு இரண்டாமிடம் என்றுதான் முடியும். ஆழ்வார்களிடம் இது செல்லாக் காசு. அவர்கள் தமிழை முதலில் வைக்கவில்லை.  இன் தமிழ் மாலை சூடினேன் என்றால், தமிழ் ஒரு அழகு மொழி; அதை நான் கருவியாககொண்டு என் இறைவனைப்பாடினேன் என்று பொருள். அதே நேரத்தில்,அத்தமிழை வைத்து பந்தா காட்டி சித்து விளையாடி மகிழவில்லை. அருணகிரிநாதரும் வில்லிபுத்தூராரிடம் செய்ததது போல.  கடுந்தமிழையோ, கொடுந்தமிழையோ, அலங்காரச் செருக்குத் தமிழையோ அவர்கள் எழுதவில்லை. சமஸ்கிருதத்தில் மேதாவிகளாக விளங்கி நூல்கள் யாத்த ஆழ்வார்களும் தமிழ்ப்பாக்களில் வடசொற்களைத் திணிக்கவில்லை.  அப்படியே வேண்டுமாயின் அவற்றைத் தமிழ் ஒலிக்கேற்ப மாற்றிப்பாடினார்கள்.  

உண்மையில் நிலவிய செருக்குத் தமிழ் வகைகளைப்பார்த்து இவற்றையே நாமும் எழுதி மக்களை விரட்டினால், எப்படி பெருமாள் பக்தியை மக்களுக்குச் சொல்வது என்று மனவுறுத்தலினாலே அவர்கள் எளிய தமிழை எழுதினார்கள். சிலர் தமிழில் இயற்கையாக அழகு மிளிர்ந்திருக்கலாம். ஆனால், that was not a conscious act. When a thing become conscious, ego envelops it.  Beware of pleasure Tamil !

The first and foremost point to note, in analysing Prabandam is: It is a reaction against the kinds of Tamil which created a wedge between common masses and the God's worship. 

மேற்சொன்ன இரு சொற்களும் ஈகோ இருப்பவனிடமிருந்தே உருவாகும்.  ஈகோவை மிதித்து அழித்தவர்களாதலாலே அவர்கள் ஆழ்வார்கள்.  

இராமர் திருமாலில் அவதாரம் என்பதை கம்பர் வழிமொழிந்தார். அவரே புதிதாகச் சொன்னாரெனறில்லை.

எந்த உட்கருத்தும் ஆழ்வார்களுக்கில்லை. ஒரே கருத்து அது மறைமுகமாக இல்லை. அது:

....திருமாலே முதலும் முடிவுமான பரம்பொருள்.  வேறு தெய்வமில்லை...

ஆண்டாள் முதற்கொண்டு அனைத்து ஆழ்வார்களுக்கும் இதுவே தேர்ந்த முடிவு. God is second to none. according to Azhwaars.

பிரபந்தத்தை ஆழ்ந்து படித்தோர் மறுக்க முடியாது. 

On Saturday, 6 June 2015 00:06:22 UTC+5:30, oruarizonan wrote:
2015-06-05 10:20 GMT-07:00 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
//தமிழை கடவுள் நிலைக்கு கொண்டு செல்லும்போது -- அது "ராமனாய் இருந்தால் என்ன? ராவணனாய் இருந்தால்"என்ற சிந்தை தான் நம் கம்பர் உள்ளிட்ட ஆழ்வார் மற்றும் எல்லா சான்றோர்களுக்கும் உள் நினைப்பாய் தோன்றி இருக்கிறது.//

மதிப்பிற்குரிய ருத்ரா அவர்களே,
இந்த சிந்தனையுடன் நான் வேறுபடுகிறேன்.  
திருமூலரும்,
"என்னை இறைவன் நன்றாகப் படைத்தனன் 
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!" 
என்று இயம்பிச் சென்றிருக்கிறார்.

இதுகண்டு தமிழில் இறைவன்மீது காவியம், பக்திப்பாடல்கள் செய்த அனைவருமே தமிழன், தமிழ்மொழி என்ற பெருமிதத்துடனேதான் அணுகியிருக்கிறார்கள்.  இறைவனைத் துதித்தேத்த மனிதன் செப்பும் மொழி தமிழே என்று மார்தட்டியிருக்கிரார்கள்.

திருமூலரோ இறைவனுக்கு எந்தமொழியில் துதிக்கப்படுவதைவிட தமிழில் துதிக்கப்படுவதே சாலச்சிறந்தது என்று கருதிய "தனை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!' என்று பகர்ந்திருக்கிறார்.

கம்பநாட்டாரும் இராமனைத் திருமாலின் அவதாரமாகவே தனது இராமகாதையில் காட்டியிருக்கிறார்.  எனவே, "இராமனை இருந்தாலென்ன, இராவணனாய் இருந்தால் என்ன?" என்ற சிந்தை அவர்களிடம் இருந்திருப்பதாக அவரது இராமகாதையில் ஒருவரிகூட்ட காட்ட முடியாது.

அப்படியிருக்க, நாரணனையே துதித்துப் பாடிய ஆழ்வார்கள் அவ்வாறு உட்கருத்துடன் செயல்பட்டிருப்பர்கள் என்பதை எவராலும் ஏற்க இயலாது என்பதைத் தங்கள் முன்வைக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 
 

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 8, 2015, 2:53:32 PM6/8/15
to mintamil, vallamai
நாடு நலம் வாழ வேண்டும் என்ற நோக்கம் ஆழ்வார்களின் ஆழ்மனதிலிருந்து வெளிப்படுகிறது எனலாம்.. நாட்காலை நீராடி நெய்யுண்ணாமால், பாலுண்ணாமல், மையிட்டு எழுதாமல், மலரிட்டு முடியாமல், செய்யாதன செய்யாமல், புறம்பேசமல் நெறியுடன் திருமாலைப் பாடிப்பரவினால் நாடெல்லாம் தீங்கின்றி மும்மாரி பெய்து நீங்காத செல்வம் நிறையும் என்பது ஆண்டாள் நாச்சியாரின் உறுதிமொழி.

ஆலயங்கள்தோறும் பெருமாள் முன்னர் நாளும் ஓதப்படுகிற பாடல்! ஒன்றுக்கு இரண்டு முறை சாற்றப்படுகிற பாசுரம்! திருப்பாவை முப்பதின் மகுடமன்ன வேண்டுதல் பாசுரம். அனைவரும் அறிந்த பாடல்!

Bala Sundara Vinayagam

unread,
Jun 8, 2015, 3:12:20 PM6/8/15
to mint...@googlegroups.com
I agree with that part which says there was no post pf Jeeyar - a post that dates from Acharyaas only.  All Alzwars predated Acharyas.  The temple was in existence before Acharyaas.  When there was no mutt there but only the temple, Thirumangai lived.  He took over the temple; or asked to take care of it.  It was a time of Buddhists threatening the temple. He, as the caretaker of the temple, protected it by erecting the massive walls - which still stand today, protecting it from land grabbers.  For finance, he was said to have stolen the golden statue of Buddha from the vihara in Nagappatinam.  It was he who repulsed all attempts of Brahmins to prevent Nammazhwar paasurams from being chanted in the temple.  Being a warrior by birth and inheritance, his majestic demeanor made people take him seriously. He was a born ruler.  He succeeded in bringing Thiruvaymozhi into Srirangam temple riding roughshod over the Brahminical anti-sentiments.  They said a low caste Sadagopan is unworthy to sing about our God. Hence, these songs were unfit to enter our temple. Thirumangai's glare silenced them. 

By these brave acts, he is worthy to be called more than a Jeeyar. So, we may be happy to call him the Defender and Protector of Srirangam from the Buddhists.  I admit he wasn't a Jeeyar. You may like to admit he was a great Hero in Vaishnavite history.

N. Kannan

unread,
Jun 8, 2015, 10:00:27 PM6/8/15
to மின்தமிழ்
அன்பின் பாலா:

நிறையச் சேதிகள் தருகிறீர்கள். சிந்தனையைத் தூண்டுகிறீர்கள். ஆழ்வார் சரிதம் என்பதைப் பல்வேறு கோணங்களில் காண முடியும். ஆழ்வார்கள் அனைவருக்கும் சங்கதம் தெரிந்திருக்க வேண்டும். இருப்பினும் அவர்கள் வேதத்தின் சாரத்தைத் தமிழில் தந்ததோடு, வேத மறை பொருளை வெளிச்சம் போட்டுக்காட்ட தமிழ் மொழியைத் தெரிவு செய்தனர். அம்மட்டே தமிழ் மொழி சிறப்புப் பெறுகிறது. நீங்கள் மிக அழகாகச் சுட்டிக்காட்டியபடி, தமிழனுக்கு பரம் பொருள் பற்றி இனிமேலும் குழப்பம் வந்துவிடக்கூடாது என்பது போல் ஞானமும், பக்தியும் கலந்து பாசுரங்கள் யாத்தனர். வேதாந்த தேசிகர் சுட்டுவது போல், “தெளியாத மறை நிலங்கள், பாசுரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்” என்பதே சேதி. இதை நன்குணர்ந்த ஆச்சார்யர்கள் ஆழ்வார்களை முன்வைத்து தமிழ் மொழி மறுமலர்ச்சி செய்தனர். சங்கதம் இருந்த உயர் பீடத்தை தமிழுக்கு அளித்தனர். அது இன்றுவரை பெரும் புரட்சி. சைவத்தால் அதை இன்றளவும் செய்யமுடியவில்லை என்பதே உண்மை. ஆனால் தமிழகம் இக்கதையை அப்படியே மாற்றிப்போட்டு வைணவம் என்பது சங்கதம் சார்ந்தது என்பது போல் காட்டிவிட்டது மாபெரும் சரித்திரப்பிழை. இதை நான் தொடர்ந்து சொல்வதால் எனக்கு பகைமை கூடுவதைக் கண்கூடாகக் காண்கிறேன். இங்கு பலரும் அதை உணர்வர். “நேர்படச் சொல்” என்கிறான் பாரதி. என்னத்த நேர்படச் சொல்வது? ஏற்றுக்கொண்டால்தானே!

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Dev Raj

unread,
Jun 8, 2015, 11:48:02 PM6/8/15
to mint...@googlegroups.com
On Sunday, 7 June 2015 01:57:28 UTC-7, Bala Sundara Vinayagam wrote:
.......என் கருத்து: ஆழ்வார்கள் தமக்கும் பெருமாளின் திருவடிகளைப்பற்ற எதுவும் தடையாக இருக்குமானால் அதை-அவற்றைத் தூக்கியெறியத் அவர்கள் தயங்கியதே இல்லை. இதைவைத்த்ப்பார்க்கும்போது, தமிழை அவர்கள் ஒரு கருவியாகத்தான் பயன்படுத்தினார்களே ஒழிய, இறைவனுக்குக் நிகராகக்கொள்ளவில்லை. நிகரென்றால் அஃதொரு தடையாகும். அதை விலக்கியிருப்பர் என்பது.
இது சரியா இல்லையா என்பதை இங்கெழுதிக்கொண்டிருக்கும் ஆழ்வார்க்கடியர்கள் எவரேனும் சொல்லலாம்.


ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வை
ஆழ்வார்கள் வலியுறுத்தினர். எதையும் அவர்கள் தூக்கி எறியச்
சொல்லவில்லை -

சொல்லுந் தனையும் தொழுமின், விழுமு டம்பு
செல்லுந் தனையும் திருமாலை, - நல்லிதழ்த்
தாமத்தால், வேள்வியால், தந்திரத்தால், மந்திரத்தால்,
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று.

தமிழையும் அவர்கள் தூக்கி எறியவில்லை;
முக்தி பெற்றோர் வாழும் வைகுந்தத்திலும்
திருப்பல்லாண்டு முழங்குவதாகவே பாடியுள்ளனர் -

நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே !


தேவ்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 9, 2015, 12:47:40 AM6/9/15
to mintamil, vallamai
”நாடுசெழிக்கணும்; நல்ல மழை பொழியணும் ” என்ற நம் நாட்டுப்புற பாட்டனிலிருந்து வைணவ, சைவசமய பெருமக்கள் வரை தமிழகச்சான்றோர் அனவருடைய வேண்டுதலெல்லாம் நாடு வாழ்வேண்டும், மக்கள் நல்வாழ்வு வாழவேண்டுமென மனதார விரும்பும் நெறியாகவுள்ளது காணக்கிடைக்கிறது.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Dev Raj

unread,
Jun 9, 2015, 1:01:36 AM6/9/15
to mint...@googlegroups.com
On Monday, 8 June 2015 19:00:27 UTC-7, N. Kannan wrote:
........ சங்கதம் இருந்த உயர் பீடத்தை தமிழுக்கு அளித்தனர். அது இன்றுவரை பெரும் புரட்சி. சைவத்தால் அதை இன்றளவும் செய்யமுடியவில்லை என்பதே உண்மை. ஆனால் தமிழகம் இக்கதையை அப்படியே மாற்றிப்போட்டு வைணவம் என்பது சங்கதம் சார்ந்தது என்பது போல் காட்டிவிட்டது மாபெரும் சரித்திரப்பிழை. இதை நான் தொடர்ந்து சொல்வதால் எனக்கு பகைமை கூடுவதைக் கண்கூடாகக் காண்கிறேன். இங்கு பலரும் அதை உணர்வர். “நேர்படச் சொல்” என்கிறான் பாரதி. என்னத்த நேர்படச் சொல்வது? ஏற்றுக்கொண்டால்தானே!


குறை சொல்பவர் அதே போக்கில்தான் செல்வர், அவர்களை மாற்ற முடியாது;
அதற்கான தேவையும் இல்லை.

*அடியே னுள்ளான்* உடலுள்ளான் அண்டத் தகத்தான் புறத்துள்ளான்,
படியே யிதுவென் றுரைக்கலாம், படியன் அல்லன் பரம்பரன்,
கடிசேர் நாற்றத் துள்ளாலை இன்பத் துன்பக் கழிநேர்மை,
ஒடியா இன்பப் பெருமையோன் உணர்வி லும்ப ரொருவனே.

எனும் பாசுரத்தின் முதல் சீர்கள் பிரம சூத்திர உரை எழுதுகையில் 
பேரறிவாளியான உடையவருக்கும் எத்தனை தூரம் உதவின என்பதை 
வைணவர் மறைக்காமல் பதிவு செய்துள்ளனர்.

தமிழனின் சிந்தனை சங்கதத்தை வளப்படுத்தியுள்ளது

’ஒடியா இன்பப் பெருமையோன்’ எண்ணி எண்ணி இன்புறத்தக்க
அருமையான பெயர். 


தேவ் 


 

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 9, 2015, 1:23:24 AM6/9/15
to mintamil
விளக்கங்களுக்கு நன்றி திரு கண்ணன்,திரு தேவ் ஐயா.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Meenavan M

unread,
Jun 9, 2015, 8:56:13 AM6/9/15
to mint...@googlegroups.com
அன்புடையீர்
திருமுறையில் சம்பந்தர் தம் பதிகங்களின் திருக்கடைக் காப்புச் செய்ய்ள்களில் தமிழைச் சிறப்பித்துப் பாடுவார்.அத்தகைய தமிழில் யான் சொல்லிய பாடல்கள் பத்தையும் சொல்வார் என்ன பயன் பெறுவ்ர் என்பதையும் சொல்லுவார் இதே போக்கு பெரியாழ்வார் பாசுரங்களிலும் காண்லாம்.
சம்பந்தர் பதிகம்
தலம்மல்கிய புனற்காழியுள் தமிழ்ஞான சம்பந்தன்
நிலம்மல்கிய புக்ழால்மிகு நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடல்இவை ப்த்தும்மிக வல்லார்
சிவம்மல்கிய செல்வன்அடி சேர்வர்சிவ கதியே

பாரார் விடையான் பனையூர் மேல்
சீரார் தமிழ்ஞான சம்பந்தன்
ஆராத சொல்மாலைகள் ப்த்தும்
ஊர் ஊர் நினைவார் உயர்வாரே

இவை போல நிறையச் சொல்லலாம்.

இது போலவே பெரியாழ்வார் பாசுரங்களிலும் உள்ளன.யார் முதலில் சொன்னார் என்பதற்கு நான் வரவில்லை.

பெரியாழ்வார் பாசுரம்

அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
ஆமையுமானவனே. ஆயர்கள்நாயகனே.
என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகவாடுகவென்று
அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ்
இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்
எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே

இதுபோல நிறையச் சொல்லாம்.சமயஞ் சார்ந்தோர் தமிழ்மொழியை ஓர் ஊடகமாகக் கொண்டனர் என்பது உண்மை
சிவன் கோவில் விழாக்களில் வேதங்களை முன் ஓதிச்; செல்வர்.தேவாரம் பின்னே பாடிச் செல்வர்.
திருமால் ஆலயங்களில் தமிழ் முன்னே செல்ல் வேதங்கள் பின்னே செல்லும். இங்கு த்மிழுக்கே முதன்மை

திரும்ழிசை ஆழ்வார் பாடிய பாடல்.தன் சீடன் கணிகண்ணன் என்பானை வேந்தன் நாடு கடத்திய காலை
கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா துணிவுடனே செந்நாப் புலவன்
யான் சொல்கின்றேன் நீ உன்றன் பைநாகப் பாய் சுருட்டிக் கொள் என்று பாடப் பெருமாளும் பாம்புப் படுக்கையைச்
சுருட்டிக் கொண்டு புறப்படக கண்ட வேந்தனின் வேண்டுகோளுக்கிணங்கி ஆழ்வார் பெருமாளை நோக்கி நீ உன்றன்
பைநாகப் பாய்விரித்துப் படு என்றதும் பெருமாள் படுத்துக் கொண்டார் என்பர்.அதனால்தான் பெருமாளைச் செந்தமிழ் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்ட்லே என்றழைத்தனர்.எனவே எப்படி இருப்பினும் தமிழ் உணர்வோடு
கலந்த மொழி என்பதை அறியலாம். - மீனவன்

Nagarajan Vadivel

unread,
Jun 9, 2015, 9:45:30 AM6/9/15
to மின்தமிழ்
ஆழ்வார்கள் பன்னிருவரும் பல்லவ சோழ பாண்டிய சேர நாட்டைச் சேர்ந்தவகள் என்பதால் அவர்களின் படைப்பு தொகுக்கப்பட்டபோது அவற்றை ஒரு வைணவப் பாரம்பரியமாக உருவாக்கி அதற்கு திராவிட வேதம் என்ற பெயரைச் சூட்டினர்.  தொடக்கத்தில் பல்லவ காலத்தில் வைணவ சைவ முரண்பாடுகள் முகிழ்த்தன என்றாலும் இறுதிக்கட்டத்தில் கடசி ஆழ்வாரான ஆண்டாள் காலத்தில் வைணவமும் சைவமும் தங்கள் எல்லைகளை நேர்த்தியாக அமைத்துக்கொண்டனர்

மற்றபடி தமிழ்ப் பக்திமார்க்கம் தமிழை அடிப்படையாகக் கொண்டு சைவ சித்தாந்த வடபுலச் சங்கதக் கலப்பு வராதவரை சீர்மையாக இருந்தது

நவகேடி

Malarvizhi Mangay

unread,
Jun 9, 2015, 1:20:19 PM6/9/15
to mint...@googlegroups.com

நானிலப் பகுப்பு,திணைக்கோர்
தெய்வம் /அப்பவே துவங்கியாச்சு
இந்த அக்கப் போர்.

Oru Arizonan

unread,
Jun 9, 2015, 2:46:55 PM6/9/15
to mintamil


2015-06-09 5:56 GMT-07:00 Meenavan M <meen...@gmail.com>:
// தமிழ் உணர்வோடுகலந்த மொழி என்பதை அறியலாம். - மீனவன்//

தமிழை சைவமும் வைணவமும் எப்படிப் போற்றி இறை உணர்வுடன் கலந்து வளர்த்தன என்பதை வளர்த்தன என்பதை அழகுற விளக்கிய மீனவன் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

இறை உணர்வைப் பெருக்கிக்கொள்ள ஒரு மொழி தேவை.  அந்த மொழி மூலம்தான் நாம் இறைவனைத் தொழுகின்றோம்.  வேதங்களும் அதையே வழிமொழிகின்றன.  அவ்வகையில் தமிழ் உணர்வோடுகலந்து இறைவனை ஏத்தவும், அவனுடன் ஒன்று கலக்கவும் வழியாக அமைகிறது என்பதை எண்ணும்போது, இறைவனும் தமிழும் ஒன்றே என்ற உணர்வும் ஏற்படுகிறது.

Nagarajan Vadivel

unread,
Jun 9, 2015, 9:16:18 PM6/9/15
to மின்தமிழ்

2015-06-09 23:54 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
இறை உணர்வைப் பெருக்கிக்கொள்ள ஒரு மொழி தேவை.  அந்த மொழி மூலம்தான் நாம் இறைவனைத் தொழுகின்றோம்.  வேதங்களும் அதையே வழிமொழிகின்றன.

​இறையியல் மறைசார் வழிபாட்டில் மொழி ஒரு முக்கியப் பங்குவகிப்பதாகக் கருதினாலும் மானுடவியல் அறிஞர்கள் மனிதன் கடவுளுடன் கலந்துரையாடும்போது தன் தாய்மொழியைப் பயன்படுத்தாமல் ஒரு இனம்புரியாத பொருள் விளங்காத மொழியைப் பயன்படுத்துவதாகவே குறிப்பிட்டுள்ளனர்

விவிலியத்தில் மதகுருமார்கள் வழிபாட்டின்போது இறைவனிடம் பேசும்போது இப்படி ஒன்றும் விளங்காத மொழியில் பேசுகிறார்கள்.  அதுவே இன்றளவும் கர்த்தரை வழிபடும்போது பயன்படுகிறது.  ஆகமக் கோவில்களிலிலும் அதுபோன்றே மனிதனுக்குப் புரியாத ஒலியையே வேதமந்திரமாகச் சொல்லி வழிபடுகின்றனர்

தமிழ் மொழியில் மட்டும் சைவ வைணவப் பக்தி காதலாகிக் கசிந்துரிகிக் கண்ணீர் மல்க இறைவனுடன் ய்ரையாடல் என்பதால் பக்திப்பாடல்கள் மனதை உருக்கும் தமிமொழிப் பாடல்களாக உருவானது.  தமிழ்ச் சைவக்கோவில்கள் சைவ சித்தாந்த ஆகமக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் இறைவனைப் போற்றுவதும் வணங்குவதும் சமஸ்கிரிதத்துக்கு மாறியது.  இதை எதிர்த்து சைவக்கோவில்களின் வணக்கத்துகுரிய மொழியாகத் தமிழ் இருக்கவேண்டும் என்று தொடங்கப்பட்டதே சுய மரியாதை இயக்கம்.  அது தடம் மாறி தமிழுக்குப் போராடுவதற்குப் பதிலாக பிராமணர்களை எதிர்க்கும் அரசியல் ஆயுதமாக மாறிப்போனது

தமிழ்க் கடவுளுக்குத் தமிழில் வணங்க தமிழ் வேண்டும் என்று முதலில் முயற்சி செய்தவர்கள் ஆதி சைவர்களும் ஆழ்வார்களுமே

நவகேடி​

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 9, 2015, 9:25:55 PM6/9/15
to mintamil
பேராசிரியருக்கு வணக்கம் 

2015-06-10 6:46 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

விவிலியத்தில் மதகுருமார்கள் வழிபாட்டின்போது இறைவனிடம் பேசும்போது இப்படி ஒன்றும் விளங்காத மொழியில் பேசுகிறார்கள்.

Nagarajan Vadivel

unread,
Jun 9, 2015, 9:29:33 PM6/9/15
to மின்தமிழ்

2015-06-10 6:55 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
சுமேரு போன்று இதுவும் பழந்தமிழின் வடிவமாக இருக்கலாம்.
அவர்கள் பேசும் மொழியின் ஒலிவடிவம் கிடைக்குமா?

​அதையெல்லாம் அப்படியே தள்ளிவிட்டு நம்ம ஊரில் மறப்பெண்டிர் குலவை இடுவதை ஆராய்சி செய்யுங்கள் காளை ஐயா.  ​
​நவகேடி​

N. Kannan

unread,
Jun 9, 2015, 10:04:35 PM6/9/15
to மின்தமிழ்
2015-06-10 9:16 GMT+08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

தமிழ்க் கடவுளுக்குத் தமிழில் வணங்க தமிழ் வேண்டும் என்று முதலில் முயற்சி செய்தவர்கள் ஆதி சைவர்களும் ஆழ்வார்களுமே

இதை நான் விரிவாக என் பாசுரமடலில் அலசியுள்ளேன். சங்கதம் ஆன்றோர் மொழியாக, தெய்வ மொழியாக கற்பிக்கப்பட்டு பாமரனிடமிருது இறைமை கைமாறிப்போன வேளையில் தாய் மொழி வழிபாடு அவசியமாகத் தேவைப்பட்டது. அதை ஆழ்வார்கள் செப்பமாகச் செய்தார்கள். இதன் சூட்சுமம் உணர்ந்து ஆச்சார்யர்கள் மெருகேற்றினர். 

இதை நாம் ஐரோப்பிய லத்தின் - ஜெர்மன் மொழி மறுமலர்ச்சிக்கு ஒப்பிடலாம். மார்டின் லூதர் முதன்முறையாக தேவாலய மொழியாக மக்கள் பேசும் ஜெர்மன் இருக்கலாம் என்று சொன்னார். திருச்சபை உடைந்தது. ஆனால் நம் ஆச்சார்யர்கள் மிகச்சாமர்த்தியமாக சங்கதத்தமிழ் பிளவு ஏற்படா வண்ணம் இதைக் கையாண்டது பாராட்டற்குரியது. 

ஆனால் அது பொதுவான இந்தியப்பாரம்பரியம் என்றும் சொல்லலாம். பௌத்தம் உயர்வுற்ற போது இந்துக்கடவுளர் அனைவரும் வெவ்வேறு பெயர்களில் அங்கிருந்தனர். சமணம் சைவமாக மறுயுரு பெற்ற போது (சில கூறுகள் எனக்கொள்க) சமணக்கடவுளர் சைவமாயினர் (ஐயனார் வகையறா). சமீபத்திய என் களப்பணியில் இதைக் கண்கூடாக விஜயமங்கலத்தில் கண்டேன். பின் பௌத்தம் அழிந்து வைணவம் தோன்றிய போது (மறுமலர்ச்சி என வாசிக்கவும்) புத்தரே ஒரு அவதாரமாகிப் போனார்.

இந்தியர்களுக்கு எதுவுமே அந்நியமல்ல. ஐக்கியம் முக்கியம். நாகூர், வேளாங்கன்னியே சாட்சி.

நா.கண்ணன்

N. Kannan

unread,
Jun 9, 2015, 10:05:14 PM6/9/15
to மின்தமிழ்
ஆமென்!
வழிமொழிகிறேன்.

நா.கண்ணன் 

Malarvizhi Mangay

unread,
Jun 10, 2015, 1:02:37 AM6/10/15
to mint...@googlegroups.com

பாவம் காளைராசன் ஐயா.அதற்குள் ஆமென் போடுவதா?
குறைந்த பட்சம் அது பைபிளின் மூலமொழி வடிவமான
ஹீப்ரு  மொழியாக இருக்க வாய்ப்புள்ளது என்ற நல் ஊகத்தையாவது அவருக்கு வழங்கலாமே!

--

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 10, 2015, 1:52:28 AM6/10/15
to mintamil, vallamai
தொழுமின் நீர்; கொடுமின்;கொண்மின்!!

முனைவர் ராஜம் அவர்கள் சங்ககாலத்தில் சாதி, தீண்டாமை வேற்றுமை இருந்ததில்லயென விளக்கம் எழுதியுள்ள அருமையான நூல் அண்மையில் மணற்கேணி பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். ஆனால் ஆழ்வார்கள் காலத்தில் சாதி வேறுபாடுகள் இருந்துள்ளன. தொண்டரடிப்பொடியாழ்வார் காலத்தில் பலர் சாதி வேற்றுயைப் பாராட்டி வந்துள்ளனர். பழக்கவழக்கங்கள் காரணமாகச் சாதிவேற்றுமையை ஒரு ஆச்சாரமாக-ஒழுக்கமாக-தூய நடத்தையாக அவர்களில் பலர் என்ணினர். ஆதலால் சாதி வேற்றுமை பாராட்டுதலும் ஒழுக்கந்தான் என்று அவர்கள் கூறினர்.; அதற்கு கேடு சூழ்வது ஒழுக்கநெறியைச் சிதைப்பது எனக்கருதினர்.

இந்த வேண்டாத வேற்றுமையை ஒழிக்கவேண்டுமென்றால் விப்ரநாராயனர் என்னும் தொண்டரடிப்பொடியாழ்வார் பாடியுள்ள பாசுரம் தமிழர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் குடிகொள்ள வேண்டிய பாடலாகும்.
அப்பாடல்தான் கீழ் வருவது:

பழுதுஇலா ஒழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழிகுலத்தவர்கள் ஏனும் எமடியார்களாகில்
தொழுமின்நீர் கொடுமின்; கண்மின்! என்று நின்னோடு
வழிபட அருளினாய்போல்; மதில்திரு அரங்கத்தானே.

“குற்றமற்ற நடத்தையையுடைய, நான்கு மறைகளையும் பல கலைகளையும் கற்றுணர்ந்தவர்களே! உங்களுக்கு ஒரு உண்மையை உரைக்கின்றேன். கேளுங்கள்!
நீங்கள் நினைக்கிறபடி இழிகுலத்தவர்களானாலும் அவர்கள் எமது அன்பர்களாயிருந்தால் அவர்களை நீங்கள் வணங்குங்கள். விலக்கி வெறுக்க வேண்டாம். அவர்களுக்கு வேண்டுவனவற்றைக்கொடுங்கள்; அவர்கள் அன்பைப் பெறுங்கள். அல்லது கொள்வினை கொடுப்பினை செய்துகொண்டு ஒரு சாதியினராயாக ஆகிவிடுங்கள்” என்று கூறி மதில்கள் சூழ்ந்த திருவரங்கத்து அண்ணல் அவரடியார்களையும் அவரோடு ஒத்து வணங்கும் அருளை வழங்கிய கருணையைப் போற்றுகிறார்.

திருமாலின் உத்தம அடியார்கள் எவராயினும் அவர்கள் உண்டு மிச்சமானஎச்சில் உணவைக்கொடுத்தாலும் புனிதமானது என்பது தொண்டரடிப்பொடியாழ்வார் கருத்து. ‘தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் என்பார் ஆகில் ஊனக்காரர்கள் ஏனும் போனகம் செய்த சேடம் தருவரேல், புனிதம் அன்றே” என்பது அவர் மொழி.

இவ்வாறு மேலே சுட்டிய இரண்டு பாசுரங்களில் ஒன்று சமபந்தி உணவை வலியுறுத்துகிறது; அடுத்தது கொள்வினை கொடுப்பினையைக் குறித்து உரைக்கிறது. சங்க காலத்தில் சாதி வேற்றுமையில்லை என்கிற முனைவர் திருமிகு ராஜம் அவர்களின் நூல் கருத்தை நோக்குகிற போது இவை தமிழர் நெறி என்று உணரலாம்.

மேலும் நான் “வானுளார் அறியலாகா வானவா என்பாராகில், தேனுலாம் துளப மாலை சென்னியாய் என்பாராகில்’ என்பதனை விரிவு செய்துகொள்ள விரும்புகிறேன். நாங்கள் தன்னேரில்லாத பெருந்தமிழர் என்பவரெல்லாம், பாரத நாடு பழம்பெரும் நாடு; நாமதன் புதல்வர் என்று கூறிக்கொள்பவரெல்லாம் “கொடுமின்;கொள்மின்!!” என வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி.
சொ.வினைதீர்த்தான். 








அன்பு

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 10, 2015, 2:05:51 AM6/10/15
to mintamil, vallamai
தொழுமின் நீர்; கொடுமின்;கொண்மின்!!

முனைவர் ராஜம் அவர்கள் சங்ககாலத்தில் சாதி, தீண்டாமை வேற்றுமை இருந்ததில்லையென விளக்கம் எழுதியுள்ள அருமையான நூல் அண்மையில் மணற்கேணி பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். ஆனால் ஆழ்வார்கள் காலத்தில் சாதி வேறுபாடுகள் இருந்துள்ளன. தொண்டரடிப்பொடியாழ்வார் காலத்தில் பலர் சாதி வேற்றுயைப் பாராட்டி வந்துள்ளனர். பழக்கவழக்கங்கள் காரணமாகச் சாதிவேற்றுமையை ஒரு ஆச்சாரமாக-ஒழுக்கமாக-தூய நடத்தையாக அவர்களில் பலர் எண்ணினர். ஆதலால் சாதி வேற்றுமை பாராட்டுதலும் ஒழுக்கந்தான் என்று அவர்கள் கூறினர்.; அதற்கு கேடு சூழ்வது ஒழுக்கநெறியைச் சிதைப்பது எனக்கருதினர்.

இந்த வேண்டாத வேற்றுமையை ஒழிக்கவேண்டுமென்றால் விப்ரநாராயணர் என்னும் தொண்டரடிப்பொடியாழ்வார் பாடியுள்ள பாசுரம் தமிழர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் குடிகொள்ள வேண்டிய பாடலாகும். அப்பாடல்தான் கீழ் வருவது:

பழுதுஇலா ஒழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழிகுலத்தவர்கள் ஏனும் எமடியார்களாகில்
தொழுமின்நீர் கொடுமின்; கொண்மின்! என்று நின்னோடு
வழிபட அருளினாய்போல்; மதில்திரு அரங்கத்தானே.
“குற்றமற்ற நடத்தையையுடைய, நான்கு மறைகளையும் பல கலைகளையும் கற்றுணர்ந்தவர்களே! உங்களுக்கு ஒரு உண்மையை உரைக்கின்றேன். கேளுங்கள்!
நீங்கள் நினைக்கிறபடி இழிகுலத்தவர்களானாலும் அவர்கள் எமது அன்பர்களாயிருந்தால் அவர்களை நீங்கள் வணங்குங்கள். விலக்கி வெறுக்க வேண்டாம். அவர்களுக்கு வேண்டுவனவற்றைக்கொடுங்கள்; அவர்கள் அன்பைப் பெறுங்கள். அல்லது கொள்வினை கொடுப்பினை செய்துகொண்டு ஒரு சாதியினராயாக ஆகிவிடுங்கள்” என்று கூறி மதில்கள் சூழ்ந்த திருவரங்கத்து அண்ணல் அவரடியார்க ளையும் அவரோடு ஒத்து வணங்கும் அருளை வழங்கிய கருணையைப் போற்றுகிறார்.

திருமாலின் உத்தம அடியார்கள் எவராயினும் அவர்கள் உண்டு மிச்சமான எச்சில் உணவைக்கொடுத்தாலும் புனிதமானது என்பது தொண்டரடிப்பொடியாழ்வார் கருத்து. ‘தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் என்பார் ஆகில் ஊனக்காரர்கள் ஏனும் போனகம் செய்த சேடம் தருவரேல், புனிதம் அன்றே” என்பது அவர் மொழி.

இவ்வாறு மேலே சுட்டிய இரண்டு பாசுரங்களில் ஒன்று சமபந்தி உணவை வலியுறுத்துகிறது; அடுத்தது கொள்வினை கொடுப்பினையைக் குறித்து உரைக்கிறது. சங்க காலத்தில் சாதி வேற்றுமையில்லை என்கிற முனைவர் திருமிகு ராஜம் அவர்களின் நூல் கருத்தை நோக்குகிற போது இவை தமிழர் நெறி என்று உணரலாம்.

மேலும் நான் “வானுளார் அறியலாகா வானவா என்பாராகில், தேனுலாம் துளப மாலை சென்னியாய் என்பாராகில்’ என்பதனை விரிவு செய்துகொள்ள விரும்புகிறேன். 

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 10, 2015, 7:40:19 AM6/10/15
to mintamil, vallamai
இலக்கிய கூட்டத்தில் உரையாற்றுவது தொடர்பாக நான்கு பதிவுகள் இட்டுள்ளேன். முதல் பதிவு தவிர மற்ற மூன்று பதிவுகள் குறித்து பின்னூட்டங்கள் குறைவு/ இல்லை. நண்பர்கள் பார்த்து இயன்றால் கருத்துக்கள் இடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

N. Ganesan

unread,
Jun 10, 2015, 8:23:46 AM6/10/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Wednesday, June 10, 2015 at 4:40:18 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
இலக்கிய கூட்டத்தில் உரையாற்றுவது தொடர்பாக நான்கு பதிவுகள் இட்டுள்ளேன். முதல் பதிவு தவிர மற்ற மூன்று பதிவுகள் குறித்து பின்னூட்டங்கள் குறைவு/ இல்லை. நண்பர்கள் பார்த்து இயன்றால் கருத்துக்கள் இடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

இந்தியாவின் பழைமையான சமூக அமைப்பைப் பாடும் ஆழ்வார் பாடல் போல பக்தி இலக்கியங்களிலும்,
இரு செம்மொழிகளின் இலக்கியங்களிலும் அதன் தொடக்கங்களில் இருந்து காண்கிறோம்.
தருமபுர உரை இன்னும் விளக்கமாக இருக்கிறது.
தொண்டரடிப்பொடியாழ்வார் போலவே சைவத் திருமுறைகளிலும் பாடியுள்ளனர், உ-ம்:

பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவன வலைத்தளத்தில் உள்ள மொழிபெயர்ப்பும்,
தமிழ் திருமுறைப் பாடலும் பாருங்கள். முழுப் பதிகமும் படித்தால் 
கடைசிப் பாடலின் பொருளும், தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரமும்,
அக்கால சமூக நிலையும் விளங்கும்.

{$} சங்கநிதி, பதுமநிதி இரண்டும் தந்து
giving me one of the nine treasures of Kupēraṉ which is in the form of a conch and another which is in the form of a lotus (both of them).

ஆளத் தரணியொடு வான் தருவரேனும்
though they may give the right to rule over this earth and the heaven.

(1) மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
we will not esteem those wealths of the donors who die without being permanent.

மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லர்ஆகில்
if they are not fit to be the devotees of mātēvar
[[Mātēvar - Civaṉ; it is a corruption of Makātēvaṉ]]

அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழுநோயர்ஆய்
even if they be lepers who have all the parts of the body rotten and diminished.

ஆ உரித்து
flaying a dead cow.
தின்று
eating its flesh.

உழலும் புலையரேனும்
even if they are people of low caste, wandering everywhere.

கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர்ஆகில்
and if they happen to cherish with love Civaṉ who concealed in his long caṭai Kaṅkai.

அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே
they are definitely gods to whom we pay obeisance.
[[Variant reading: (1) மங்கினார்அவர்]]

---------------------------------------------------------------------------------------

நா. கணேசன்

Malarvizhi Mangay

unread,
Jun 10, 2015, 9:41:09 AM6/10/15
to mint...@googlegroups.com

ஆழ்வார்களின் தமிழ் ஆளுகையும் ஆர்வமூட்டலும் வியக்க
வைக்கிறது  ஐயா.பக்தியிலக்கியம் அன்னைத்தமிழின்மீது
அயராதபற்றினையும் இறையின்பத்தையும் நமக்குத்தரும்
என்பதை உங்களுடைய. பதிவுகள் எடுத்துரைக்கின்றன.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 10, 2015, 9:52:09 AM6/10/15
to vallamai, mintamil
நம்மாழ்வார் பாடல்கள் பலவும் நான் குறிப்பிட்ட தொண்டரடிப்பொடியாழ்வர் பாசுரக் கருத்தினை எடுத்துக்காட்டுகின்றன.
“நம்பனை ஞாலம் படைத்தவனைத் திருமார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியாந்தன்னை
கும்பி நாகர்கள் ஏத்துவரேனும் அவர்கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறும் எம்தொழுகுலம் தாங்களே

திருமாலை யார் தொழுதாலும் அவர் பல பிறப்பிலும் தான் தொழத்தக்கவர் என்பது ஆழ்வார் குறிப்பு. மேலும் அவர்
மேலும் கூறுகிறார்:
“வலம்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள்என்று உள்
கலந்தார் அடியார்தமடியார் எம்அடிகளே”
திருமாலுக்கு அன்புபூண்ட அடியார்க்கு அடியார் - அந்த அடியாருக்கு அடியாரின் அடியார் - யாராயிருந்தாலும் சரிஅவர்களே எம்தலைவராவார்; எம்மால் வணங்கப்படும் அடியார் என்கிறார் நம்மாழ்வார்.
இந்தச் சிறந்த பாசுரங்களின் பண்பை அறிந்த எந்தத் தமிழரும் மக்களிடம் வேற்றுமை பாராட்டமாட்டார்கள்.

ஆழ்வாரின் பாடல்கள் வைணவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் அனைவரும் வேறுபாடுகள் இல்லாதவர்கள் என்ற கருத்த உணர்த்துகின்றன. இத்தகைய கர்த்தினை எல்லா மதச் சான்றோர்களும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். அவரவர் பாடல்களிலும் போதனைகளிலும் புகன்றிருக்கின்றனர். ஒவ்வொரு சமயத்துள்ளும் ஒற்றுமை தோன்றினால் அவ்வொற்றுமை பலருள்ளும் பரவி மக்கள் சமுதாயத்தில் ஒற்றுமை மலராதா?

நான் தொண்டரடிப்பொடியாழ்வாரின் சொற்களை
“வானுளார் அறியலாகா வானவா என்பாராகில், தேனுலாம் துளப மாலை சென்னியாய் என்பாராகில்’ என்பதனை விரிவு செய்துகொண்டு “நாங்கள் தன்னேரில்லாத பெருந்தமிழர்” என்பவரெல்லாம், “பாரத நாடு பழம்பெரும் நாடு; நாமதன் புதல்வர்” என்று கூறிக்கொள்பவரெல்லாம் “கொடுமின்;கொள்மின்!!” என வேண்டிக்கொள்கிறேன்.
மேற்கண்ட கருத்துக்குறித்து எழுதவே நண்பர்களைக் கேட்டுக்கொண்டுள்ளேன் திரு கணேசன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2015-06-10 17:47 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

இந்தியாவின் பழைமையான சமூக அமைப்பைப் பாடும் ஆழ்வார் பாடல் போல பக்தி இலக்கியங்களிலும்,
இரு செம்மொழிகளின் இலக்கியங்களிலும் அதன் தொடக்கங்களில் இருந்து காண்கிறோம்.
{$} சங்கநிதி, பதுமநிதி இரண்டும் தந்து...... அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 10, 2015, 10:05:10 AM6/10/15
to mintamil
2015-06-10 19:11 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

ஆழ்வார்களின் தமிழ் ஆளுகையும் ஆர்வமூட்டலும் வியக்க
வைக்கிறது  ஐயா.பக்தியிலக்கியம் அன்னைத்தமிழின்மீது
அயராதபற்றினையும் இறையின்பத்தையும் நமக்குத்தரும்
என்பதை உங்களுடைய. பதிவுகள் எடுத்துரைக்கின்றன.


இனிய சொற்களுக்கு மிக்க நன்றி திருமிகு மலர்விழி மங்கை.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 10, 2015, 12:31:26 PM6/10/15
to vallamai, mintamil
”எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்கும்”

அடடா!
அருமை.
பகிர்வுக்கு மிக்க நன்றி திரு கணேசன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2015-06-10 21:05 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அன்பின் சொ.வி. ஐயா,

பள்ளிகள், கோவில்கள் போன்றவற்றில் நிகழும் இலக்கியக் கூட்டங்களில்
நம்மாழ்வாரின் இப் பாசுரங்களும் இடம் பெற்றால் சிறக்கும். 

எனது முனைவர் பட்ட ஆய்வேட்டில் இப்பதிகத்தில் ஒருபாட்டை முகப்பில்
கொடுத்திருந்தேன்.   ஏ. கே. ராமானுஜன் மொழிபெயர்ப்பில். பல எஞ்சினீரிங் பேராசிரியர்கள் 
தமிழ் என்ற சொல்லையே இங்கு கேட்டிராதவர்கள். அவர்களுக்கு நம்மாழ்வார் பாசுரம் தந்தேன்.

நா. கணேசன்


திருவாய் மொழி 
இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்
3532என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய 
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை 
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய் 
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?             (1)
  


  


  


  
ஏர்வு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைப் 
பார் பரவு இன் கவி பாடும் பரமரே             (5)
  
3537இன் கவி பாடும் பரம் கவிகளால் 
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று 
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை 
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே             (6)
  
3538வைகுந்த நாதன் என வல்வினை மாய்ந்து அறச் 
செய் குந்தன் தன்னை என் ஆக்கி என்னால் தன்னை 
வைகுந்தன் ஆகப் புகழ வண் தீம் கவி 
செய் குந்தன் தன்னை எந் நாள் சிந்தித்து ஆர்வனோ?             (7)
  
3539ஆர்வனோ ஆழி அங்கை எம் பிரான் புகழ் 
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் 
ஏர்வு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைச் 
சீர்பெற இன் கவி சொன்ன திறத்துக்கே?             (8)
  
3540திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம் திருமாலின் சீர் 
இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ 
மறப்பு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை 
உறப் பல இன் கவி சொன்ன உதவிக்கே?             (9)
  
3541உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில் 
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப் 
பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு 
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே             (10)
  
3542இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு 
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன் 
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப் பத்தும் 
எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே             (11)
  
-

N. Ganesan

unread,
Jun 10, 2015, 1:35:48 PM6/10/15
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, June 10, 2015 at 6:41:09 AM UTC-7, malarmangay64 wrote:

ஆழ்வார்களின் தமிழ் ஆளுகையும் ஆர்வமூட்டலும் வியக்க
வைக்கிறது  ஐயா.பக்தியிலக்கியம் அன்னைத்தமிழின்மீது
அயராதபற்றினையும் இறையின்பத்தையும் நமக்குத்தரும்
என்பதை உங்களுடைய. பதிவுகள் எடுத்துரைக்கின்றன.


நன்றி, திருமதி. மலர்விழி. சங்க இலக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தையும்
மிக ஆழமாக தெரிந்தெடுத்துப் பாடியுள்ளனர் சான்றோர்கள். இந்தியாவின்
பண்டைச் சமுதாய அமைப்பு ’உணவு பிரமிட்’ போன்றவற்றால் ஜாதிகள்
கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதை மாற்ற வெளிநாட்டு சமயங்களும்
(உ-ம்: கிறித்துவ சமய போதகர்கள்), பெரியார், அம்பேத்கார், காந்தி அண்ணல்,
.... நமக்குள்ளே பார்த்தால் அப்பர், ஆழ்வார், ராமானுஜர், வள்ளலார், ... என்று
பலர் தோன்றியதாலும், வேளாண்மை சமுதாயத்தில் இருந்த உயர்நிலை
மாறி ஐடி காண்ட்ரேக்ட்கள், ரியல் எஸ்டேட் என்று மாறுவதால் 2000 ஆண்டு
பாரத சமுதாயம் மாறிவருகிறது. 

பழைய வேளாண் சமூக அமைப்பைக் கூறும் நற்றிணைப் பாடல் ஒன்றும்
அதன் மொழிபெயர்ப்பும் பாருங்கள். உபநிஷதங்களிலும் இச் செய்தி உண்டு.
மாதவச் சிவஞான யோகிகள் உபநிஷதத்தை அப்படியே தமிழ்ச் செய்யுள்
ஆக்கித் தந்துள்ளார்கள். சங்கப் பாடல்களும், அவை காட்டும் சமூக அமைப்பும்
அறிய 

சங்க இலக்கியத்தில் தமிழ்ச் சமூகத்தில் ரிலிஜன் எப்படி பெண்-அரசன் - தலித் என்னும்
முப்புள்ளிகளால் இயங்கியது என பேரா. ஜார்ஜ் ஹார்ட் விளக்கியுள்ளார். அதுகொண்டு
சங்க இலக்கியம் முழுதும் புரிகிறது. பின்னர் நற்றிணைப் பாடல் போலவே, கோவை
(முதல் கோவையாகிய பாண்டிக்கோவை) தலைவி பாணனை கல்லால் எறிவதன்
காரணம் எல்லாம் பார்த்தால் மேலும் பண்டை தமிழர் வாழ்க்கை. கிழார்கள் - பாணர் தொடர்புகள்,
தலைவி வாயில் மறுப்பது ஏன்? - எனவெல்லாம் சிந்திக்கலாம். படிக்கலாம்.

கிறித்துவம், பெரியார், காந்தி, அரசியல் சட்டங்கள், வேளாண் தொழில் அழிந்து புதுச் சமூக
உருவாக்கம் - இவற்றால் இப் பண்டைச் சமுதாயம் இந்தியாவில் மாறிவருகிறது.
உணவு பிரமிட் மாற்றம் இதில் முக்கியம். செல்வன் போன்றோர் சமையல் விளக்கம்,
ப்லஸ் பக்தி இலக்கிய விளக்கம் (ஆழ்வார், பாரதி) இதனைக் காட்டுகிறது. நல்ல மாற்றங்கள்
வந்துகொண்டுள்ளன.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 10, 2015, 1:36:08 PM6/10/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Wednesday, June 10, 2015 at 6:52:07 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
நம்மாழ்வார் பாடல்கள் பலவும் நான் குறிப்பிட்ட தொண்டரடிப்பொடியாழ்வர் பாசுரக் கருத்தினை எடுத்துக்காட்டுகின்றன.
“நம்பனை ஞாலம் படைத்தவனைத் திருமார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியாந்தன்னை
கும்பி நாகர்கள் ஏத்துவரேனும் அவர்கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறும் எம்தொழுகுலம் தாங்களே


ஆம், சொ.வி. ஐயா. ஆழ்வார் பாடல்கள், நாயன்மார் பாடல்கள்
ஒரே காலகட்டத்தில் எழுந்தவை. அப்பர் இவர்களில் மூத்தவர்.
ஆழ்வார்கள் நாயன்மார்களுக்கு சற்று காலத்தால் பின் தோன்றினவர்கள்.
தொண்டரடிப்பொடி பாடலுக்கு விளக்கம் சைவத் திருமுறைகளில்
இவைபோலுள்ள பாடல்களையும் ஒப்பிட்டால் நன்கு புரிந்துகொள்ளலாம்,
தருமபுர ஆதீனம் புலவர்களைக் கொண்டு எழுதுவித்த உரை இணையதளத்தில்
கிடைக்கிறது. சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள மாணிக்கவாசகருக்கு
இரண்டு நூற்றாண்டு முற்பட்ட, அப்பர் சம்பந்தர் காலத்தில் வாழ்ந்த
பாண்டியன் நெடுமாறன் (அரிகேசரி) பாடிய பாண்டிக் கோவை
(350 பாடல்கள் கிடைத்துள்ளன) - அவற்றிலும், பின்னர் வந்த திருக்கோவையார்,
தஞ்சைவாணன்கோவை, வெங்கைக்கோவை, ..... என்றும் பார்க்கவேண்டும்.

இன்று பெரியார், காந்தி, எல்லோருக்கும் கல்வி, செல்வ வளர்ச்சி,
வேளாண்மை சிதைவு, தொழில் (ஐ.டி, ..) வளர்ச்சி பல மாற்றங்கள்
வந்து மேலைநாடுகள் போன்ற சமூகம் உருவாகிறது. சமயப்பொறை,
அச்சு, இதழியல், ஜாதிகளின் உணவுப் பிரமிட் முறை மாற்றம், ... எல்லாம்
நல்ல எதிர்காலத்தை உருவாக்கிவருகிறது. அனைத்து ஜாதியினரும்
அர்ச்சகர் பெருங்கோயில்களில் ஆகலாம், தமிழில் அர்ச்சனை செய்யலாம்
என்பதெல்லாம் அனைத்து தரப்பினராலும் (உ-ம்: ஆர் எஸ் எஸ், ...) ஏற்கப்பட்டுள்ளது.
சர்ச், மசூதி போல, கோயில்களில் ஆகமம், வேதம் படிக்கும் எல்லா ஜாதி குழந்தைகளும்
நல்ல படிப்புடன் அர்ச்சகர் ஆகமுடிகிற போது, கோர்ட்கள் அதனை அங்கீகாரம்
செய்கிறபோது - ஹிந்துயிஸம் நல்ல வளர்ச்சி அடையும்.

நா. கணேசன்
 

திருமாலை யார் தொழுதாலும் அவர் பல பிறப்பிலும் தான் தொழத்தக்கவர் என்பது ஆழ்வார் குறிப்பு. மேலும் அவர்
மேலும் கூறுகிறார்:
“வலம்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள்என்று உள்
கலந்தார் அடியார்தமடியார் எம்அடிகளே”
திருமாலுக்கு அன்புபூண்ட அடியார்க்கு அடியார் - அந்த அடியாருக்கு அடியாரின் அடியார் - யாராயிருந்தாலும் சரிஅவர்களே எம்தலைவராவார்; எம்மால் வணங்கப்படும் அடியார் என்கிறார் நம்மாழ்வார்.
இந்தச் சிறந்த பாசுரங்களின் பண்பை அறிந்த எந்தத் தமிழரும் மக்களிடம் வேற்றுமை பாராட்டமாட்டார்கள்.

ஆழ்வாரின் பாடல்கள் வைணவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் அனைவரும் வேறுபாடுகள் இல்லாதவர்கள் என்ற கருத்த உணர்த்துகின்றன. இத்தகைய கர்த்தினை எல்லா மதச் சான்றோர்களும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். அவரவர் பாடல்களிலும் போதனைகளிலும் புகன்றிருக்கின்றனர். ஒவ்வொரு சமயத்துள்ளும் ஒற்றுமை தோன்றினால் அவ்வொற்றுமை பலருள்ளும் பரவி மக்கள் சமுதாயத்தில் ஒற்றுமை மலராதா?

N. Ganesan

unread,
Jun 10, 2015, 1:36:09 PM6/10/15
to mint...@googlegroups.com, vallamai
அன்பின் சொ.வி. ஐயா,

பள்ளிகள், கோவில்கள் போன்றவற்றில் நிகழும் இலக்கியக் கூட்டங்களில்
நம்மாழ்வாரின் இப் பாசுரங்களும் இடம் பெற்றால் சிறக்கும். 

எனது முனைவர் பட்ட ஆய்வேட்டில் இப்பதிகத்தில் ஒருபாட்டை முகப்பில்
கொடுத்திருந்தேன்.   ஏ. கே. ராமானுஜன் மொழிபெயர்ப்பில். பல எஞ்சினீரிங் பேராசிரியர்கள் 
தமிழ் என்ற சொல்லையே இங்கு கேட்டிராதவர்கள். அவர்களுக்கு நம்மாழ்வார் பாசுரம் தந்தேன்.

நா. கணேசன்


திருவாய் மொழி 
இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்
3532என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய 
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை 
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய் 
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?             (1)
  
3533என் சொல்லி நிற்பன் என் இன் உயிர் இன்று ஒன்றாய் 
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து 
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என் 
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே?             (2)
  
3534ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என் 
நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி 
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என் 
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ?             (3)
  
3535அப்பனை என்று மறப்பன் என் ஆகியே 
தப்புதல் இன்றி தனைக் கவி தான் சொல்லி 
ஒப்பிலாத் தீவினையேனை உய்யக்கொண்டு 
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே?             (4)
  
3536சீர் கண்டுகொண்டு திருந்து நல் இன்கவி 
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில் 

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 11, 2015, 2:28:11 AM6/11/15
to vallamai, mintamil, housto...@googlegroups.com, muththamiz, maza...@googlegroups.com
ஒரு பெண்கொடியை வதைசெய்தான் எனும் சொல்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஆண்டாள் நாச்சியாரின் திருமொழியில் எண்ணிப்பார்க்கதக்க பாடல்.

“மதயானை போல்எழுந்த  மாமுகில்காள்! வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்! பாம்பு அணையான் வார்த்தைஎன்னே!
கதியென்றும் தான்ஆவான்; கருதாது ஓர் பெண்கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையத்தார் மதியாரே!

இச்செய்யுளில் ‘ஓர் பெண்கொடியை வதைசெய்தான் எனும் சொல்’ என்ற சொற்றொடர் குறிப்பிடத்தக்கது. தமிழர் நெறியை உணர்த்துவது. பெண்ணுக்குத் துன்பம் விளைத்தல் பெரும் குற்றமாகச் சமுதாயம் கருதியதைத் தெரிவிப்பது. “திருவேங்கடத்தானிடம் தூதுசெல்லும் மேகங்களிடம் அவளுக்குக் கருணைபுரியும் நல்ல செய்தியொன்றும் அவன் உரையாதிருந்தானாயின், அது அவனுக்கே பழியுண்டாக்கும். தன்னையே நம்பியிருக்கும் ஒரு பெண்கொடிய வதைசெய்தான் என்னும்சொல் பிறந்துவிடும். இதைவிட வேறு பழிச்சொல் இல்லை.” என்கிறாள் தலைவி. சமுதாயம் முன்பாக நாணவேண்டிய நிலை தன் அன்புக்குரியவனுக்கு வந்துவிடக்கூடாதே என்ற பதைபதைப்பும் வெளிப்படுகிறது.

தமிழ்ச்சமுதாயம் மதித்தது என்னவென்றும் வெறுத்து ஒதுக்கியது என்னவென்றும் பாடல் மூலம் அறியலாம், பெண் போற்றப்படவேண்டியவள்; கொண்டாடத்தக்கவள். அவளுக்கொரு தீங்கென்றால் சமுதாயம் பொறுத்துக்கொள்ளாது; மதிக்காது. அவ்வாறு துன்பம் விளைப்பது தீராப்பழிச்சொல்லுக்கு ஆளாக்கிவிடும். அகப்பாடல் உணர்த்தும் சமுதாயக்கருத்து எண்ணிப்பார்த்து உணரவேண்டியது.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 11, 2015, 8:12:27 AM6/11/15
to mintamil
கருத்துக்கும் பாசுர மடல் சுட்டிக்கும் நன்றி திரு கண்ணன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

shylaja

unread,
Jun 11, 2015, 10:01:18 AM6/11/15
to சொ. வினைதீர்த்தான், vallamai, mintamil, housto...@googlegroups.com, muththamiz, maza...@googlegroups.com
நாச்சியார் திருமொழிப்பாடல்  அதன் விளக்கம்  சிறப்பாக  உள்ளது. வாரணம் ஆயிரம் பாடலுக்குக்கூட  நல்லபொருள் உண்டு..முன்பு குழுமத்தில் நான் எழுதினேன் என நினைக்கிறேன்.
--
 
அன்புடன்
ஷைலஜா

/

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 11, 2015, 12:34:10 PM6/11/15
to shylaja, vallamai, mintamil, housto...@googlegroups.com, muththamiz, maza...@googlegroups.com
நன்றி திருமிகு ஷைலஜா.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

N. Kannan

unread,
Jun 11, 2015, 10:25:55 PM6/11/15
to மின்தமிழ்
On 11 June 2015 at 20:12, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> wrote:
கருத்துக்கும் பாசுர மடல் சுட்டிக்கும் நன்றி திரு கண்ணன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


நன்றி அன்பரே!

ஆண்டாள் ஒருத்தி போதும், நம்மையெல்லாம் பரந்தாமனிடம் இட்டுச் செல்ல. இதமான தாய். கைகோர்த்து நடக்கப்பழகுவோம். உங்களைப் போன்றோர் இந்த அருந்தவத் தமிழ்ச்செல்வி பற்றி அதிகம் பேச வேண்டும். அரிதான தாய்!

நா.கண்ணன் 

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 14, 2015, 2:44:51 AM6/14/15
to mintamil, maza...@googlegroups.com, housto...@googlegroups.com, vallamai
குறிப்பிட்டவாறு 13.6.2015 மாலை த.மு.எ.க.ச சார்பில் காரைக்குடி, மகரிஷி வித்யாமந்திர் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் “நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் தமிழ்ச்சுவை” என்ற தலைப்பில் சிறபுரையாற்றினேன். வேங்கடவனுக்குப் பல்லாண்டு பாடியுள்ள காப்பியக்கவிஞர் அண்ணன் மீனவனார் முன்னிலை வகித்து மிக்க மகிழ்ச்சி. பேராசிரியர்கள் திரு கார்மேகம்,திரு ஆறு.மெய்யாண்டவர்,திரு தெட்சணாமூர்த்தி,நண்பர்கள் திருமிகு மாரியப்பன்,இரகுபதி,பிரபு,சதீஸ்ராஜா மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். முனைவர் திரு நாகநாதன் தன் இன்துணை தமிழாசிரியை திருமிகு கலைவாணி,பிள்ளைகளுடன் கலந்துகொண்டது மகிழ்ச்சியளித்தது.
தலைமைவகித்த எழுத்தாளர் திரு ஜனநேசன் தன் உரையில் திவ்வியபிரபந்தம் காலச்சூழல்,பாவகைகள்,நோக்கம் குறித்துச் சிறப்பாக உரைத்தார்.

என்னுடைய உரையில் நான் ஏற்கனவே இங்கு முகநூலில் பகிர்ந்துகொண்ட முதலாழ்வார்கள்,ஆண்டாள் நாச்சியார், தொண்டரடிப்பொடியாழவர் பாடல்கள் குறித்த 5 கருத்துக்களுடன் பெரியாழ்வார்,நம்மாழ்வார்,மதுரகவியாழ்வார், திருப்பாணாழ்வார் பாசுரங்கள் வழியாக 7 கருத்துக்களும் ஆக 12 கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டேன். அவற்றைச் சுருக்கமாக எதிர்வரும் பதிவுகளில் பகிர்ந்துகொள்கிறேன்.

பிறகு நண்பர்கள் கலந்துரையாடல் சிறப்பாக அமைந்தது. கருத்துக்களைக் கோர்வையாகச் சொல்லியமைக்கும் தொகுத்து நேர்த்தியாகக் கூறியமைக்கும் நண்பர்கள் என்னுரையைப் பாராட்டி வாழ்த்தினார்கள். திரு அங்கமுத்து நன்றிகூற கூட்டம் நிறைவுற்றது. நிகழ்வினைச் செயலர் திரு அழகர்சாமி, தலைவர் திரு நாகராசன் சிறப்பாகச்செய்திருந்தனர். சில படங்கள் பகிர்ந்துள்ளேன்.
நன்றி.
IMG_4729.JPG
IMG_4731.JPG
IMG_4733.JPG
IMG_4738.JPG
IMG_4743.JPG
IMG_4754.JPG
IMG_4761.JPG

N. Kannan

unread,
Jun 14, 2015, 5:12:46 AM6/14/15
to மின்தமிழ்
2015-06-14 14:44 GMT+08:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
என்னுடைய உரையில் நான் ஏற்கனவே இங்கு முகநூலில் பகிர்ந்துகொண்ட முதலாழ்வார்கள்,ஆண்டாள் நாச்சியார், தொண்டரடிப்பொடியாழவர் பாடல்கள் குறித்த 5 கருத்துக்களுடன் பெரியாழ்வார்,நம்மாழ்வார்,மதுரகவியாழ்வார், திருப்பாணாழ்வார் பாசுரங்கள் வழியாக 7 கருத்துக்களும் ஆக 12 கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டேன். அவற்றைச் சுருக்கமாக எதிர்வரும் பதிவுகளில் பகிர்ந்துகொள்கிறேன்.

மிகவும் மகிழ்வாக இருக்கிறது ஐயா! மின்தமிழ், நம் பண்பாட்டைச் சரியாப் புரிந்து கொள்ள உதவும் ஊடகம். மின்ஞானம் என்பது கூட்டுறவால் விளைவது. நாங்களும் உங்கள் உரையில் பங்கேற்றம் என்பதுவே மகிழ்ச்சி. நீங்கள் பேசியதை எங்களுக்கும் சொல்லுங்கள். “
 
​​
குள்ளக்குளிர குடைந்து நீராடு” என்று இதைத்தான் ஆண்டாள் சொல்கிறாள்.

நா.கண்ணன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 14, 2015, 9:31:13 AM6/14/15
to mintamil, vallamai, housto...@googlegroups.com, maza...@googlegroups.com

வணக்கம் .
ஐயா உள்ளூரில் இருந்தும் என்னால் வர இயலாமல் போனது.

On 14-Jun-2015 12:14 pm, "சொ. வினைதீர்த்தான்" <karu...@gmail.com> wrote:
>
> குறிப்பிட்டவாறு 13.6.2015 மாலை த.மு.எ.க.ச சார்பில் காரைக்குடி, மகரிஷி வித்யாமந்திர் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் “நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் தமிழ்ச்சுவை” என்ற தலைப்பில் சிறபுரையாற்றினேன்.

கற்றலின் கேட்டல் நன்று .
தங்களது உரையைப் பதிவு செய்தால் கேட்டுப் பலனடைவேன்.

வேங்கடவனுக்குப் பல்லாண்டு பாடியுள்ள காப்பியக்கவிஞர் அண்ணன் மீனவனார் முன்னிலை வகித்து மிக்க மகிழ்ச்சி. பேராசிரியர்கள் திரு கார்மேகம்,திரு ஆறு.மெய்யாண்டவர்,திரு தெட்சணாமூர்த்தி,நண்பர்கள் திருமிகு மாரியப்பன்,இரகுபதி,பிரபு,சதீஸ்ராஜா மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். முனைவர் திரு நாகநாதன் தன் இன்துணை தமிழாசிரியை திருமிகு கலைவாணி,பிள்ளைகளுடன் கலந்துகொண்டது மகிழ்ச்சியளித்தது.
> தலைமைவகித்த எழுத்தாளர் திரு ஜனநேசன் தன் உரையில் திவ்வியபிரபந்தம் காலச்சூழல்,பாவகைகள்,நோக்கம் குறித்துச் சிறப்பாக உரைத்தார்.
>
> என்னுடைய உரையில் நான் ஏற்கனவே இங்கு முகநூலில் பகிர்ந்துகொண்ட முதலாழ்வார்கள்,ஆண்டாள் நாச்சியார், தொண்டரடிப்பொடியாழவர் பாடல்கள் குறித்த 5 கருத்துக்களுடன் பெரியாழ்வார்,நம்மாழ்வார்,மதுரகவியாழ்வார், திருப்பாணாழ்வார் பாசுரங்கள் வழியாக 7 கருத்துக்களும் ஆக 12 கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டேன். அவற்றைச் சுருக்கமாக எதிர்வரும் பதிவுகளில் பகிர்ந்துகொள்கிறேன்.
>
> பிறகு நண்பர்கள் கலந்துரையாடல் சிறப்பாக அமைந்தது. கருத்துக்களைக் கோர்வையாகச் சொல்லியமைக்கும் தொகுத்து நேர்த்தியாகக் கூறியமைக்கும் நண்பர்கள் என்னுரையைப் பாராட்டி வாழ்த்தினார்கள். திரு அங்கமுத்து நன்றிகூற கூட்டம் நிறைவுற்றது. நிகழ்வினைச் செயலர் திரு அழகர்சாமி, தலைவர் திரு நாகராசன் சிறப்பாகச்செய்திருந்தனர். சில படங்கள் பகிர்ந்துள்ளேன்.
> நன்றி.
>
> சொ.வினைதீர்த்தான்
>
>

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 14, 2015, 9:37:43 AM6/14/15
to mintamil
மிக்க நன்றி அன்பிற்கினிய திரு கண்ணன். பலகருத்துக்களை புரிந்துகொள்ள உதவுவது நம் மின்தமிழ் நண்பர்கள் தொடர்பும் அவர்கள் பதிவுசெய்கிற எண்ணமும் என்பது உண்மை. அந்த உறவு தருகின்ற உந்துதல் பகிர்ந்துகொள்ளத் தூண்டுகிறது. கூடியிருந்து குளிர வாய்ப்பளிக்கும் குழுமம் எங்கள் புகல் என்று சொல்லுவதில் மகிழ்கிறேன்.
தங்கள் ஊக்கத்தால் தொடர்ந்து சில கருத்துக்கள் பகிர்ந்துகொள்கிறேன்.
நன்றி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2015-06-14 14:42 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
மிகவும் மகிழ்வாக இருக்கிறது ஐயா! மின்தமிழ், நம் பண்பாட்டைச் சரியாப் புரிந்து கொள்ள உதவும் ஊடகம். மின்ஞானம் என்பது கூட்டுறவால் விளைவது. நாங்களும் உங்கள் உரையில் பங்கேற்றோம் என்பதுவே மகிழ்ச்சி. நீங்கள் பேசியதை எங்களுக்கும் சொல்லுங்கள். “

N. Kannan

unread,
Jun 14, 2015, 10:08:53 AM6/14/15
to மின்தமிழ்
2015-06-14 21:37 GMT+08:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
கூடியிருந்து குளிர வாய்ப்பளிக்கும் குழுமம் எங்கள் புகல் என்று சொல்லுவதில் மகிழ்கிறேன்.

இது மின் தமிழுக்கான சான்றிதழ். பாதுகாத்து வைக்க வேண்டும்.
 
ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்றதோர் உணர்வு. கற்றோர் சொல் கேட்கும் பொழுது.
​.

​நா.கண்ணன்



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Malarvizhi Mangay

unread,
Jun 14, 2015, 11:10:15 AM6/14/15
to mint...@googlegroups.com

கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்.

--

Malarvizhi Mangay

unread,
Jun 14, 2015, 11:11:53 AM6/14/15
to mint...@googlegroups.com

கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்.

Dev Raj

unread,
Jun 14, 2015, 1:29:13 PM6/14/15
to mint...@googlegroups.com
திரு. வினைதீர்த்தான் அவர்கள் இழை தொடங்கி ஒரு வாரம்போல்
ஆகி விட்டது; பராங்குசர் பாடிய “பாலேய் தமிழர்” குறித்து
ஏதேனும் சொல்வாரா, பார்த்தேன் . புலப்படவில்லை.

மாலே! மாயப் பெருமானே ! மாமாயனே !! என்றென்று
மாலே யேறி மாலருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவைபத்தும் வல்லார்க் கில்லை பரிவதே !

இப்பாடல் குறித்தும் அவர் விளக்கம் தரலாம்


தேவ்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 14, 2015, 2:31:10 PM6/14/15
to mintamil
பால்ஏய் தமிழர் சொற்றொடர் நான் முன்பு அறிந்ததில்லை. இன்று தங்கள் அன்பால் அறிந்துகொண்டேன் திரு தேவ். திராவிட வேதா தளத்தில் கண்டதை பிற நண்பர்கள் காண எடுத்துக்கொடுத்துள்ளேன்.

மாலே மாயப் பெருமானே மாமா யனே என்றென்று

மாலே யேறி மாலருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்

பாலேய் தமிழ ரிசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்

பாலே பட்ட இவைபத்தும் வல்லார்க் கில்லை பரிவதே. (2953)

 

பதவுரை

மாலே

-

பெரியோனே!

மாயம் பெருமானே

-

ஆச்சரியகுணநிதியே!

மா மாயனே

-

மஹத்தான ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவனே!

என்று என்று

-

என்று இங்ஙனம் பல விதங்களான திருநாமங்களைச் சொல்லி

மாலே ஏறி

-

பித்தம் பிடித்து

மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன்

-

ஸர்வேச்வரனது க்ருபையினால் பொருந்தப்பெற்ற திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்

பால் ஏய் தமிழர்

-

(அருளிச்செய்ததான) பாலுக்குச் சமானமான இனிமையுள்ள தமிழில் வல்லவர்களென்ன

இசைகாரர்

-

இசையறிந்து பாடவல்லவர்களென்ன

பத்தர்

-

பக்திமான்களென்ன ஆகிய இவர்களல்லாரும்

பரவும்

-

கொண்டாடும்படியமைந்த

ஆயிரத்தின் பால்

-

ஆயிரம் பாட்டினுள்

பட்ட

-

தோன்றின

இவை பத்தும்

-

இந்தப் பத்துப்பாட்டையும்

வல்லார்க்கு

-

ஓதவல்லவர்களுக்கு

பரிவது இல்லை

-

யாதொரு துக்கமும் உண்டாகமாட்டாது.

 தமிழ்ச்சுவை, இசை, பக்தி என வேண்டியவர் வேண்டியதையளிக்கும் கற்பகத்தரு நம்மாழவார் பாடல்! அடடா! இதனை அண்டியவருக்கு என்றும் இன்பமே.

நன்றி திரு தேவ்.

சொ.வினைதீர்த்தான். 

Oru Arizonan

unread,
Jun 14, 2015, 4:26:58 PM6/14/15
to mintamil
பகிர்வுக்கும், படங்களுக்கும் நன்றி, வினைதீர்த்தான் அவர்களே!

தங்களுடன் காரைக்குடியில் இல்லையே என்ற ஏக்கம், தங்கள் பதிவைப் பார்த்து ஒருவாறு நீங்கியது.
ஒரு அரிசோனன் 

Malarvizhi Mangay

unread,
Jun 15, 2015, 5:23:05 AM6/15/15
to mint...@googlegroups.com

தங்களது பதிவுகளும் பால் ஏயன்னவே சொ.வி ஐயா.

--
Reply all
Reply to author
Forward
Message has been deleted
0 new messages