இந்தப் பதிவில் கீதையின்
அத்தியாயம் – 9 - ரகசியமான அறிவு
அத்தியாயம் – 10 - பூரணத்தின் வைபவம்
அத்தியாயம் – 11 - விஸ்வரூபம்
அத்தியாயம் – 12 - பக்தித் தொண்டு
ஆகியவற்றில் உள்ள வாழ்வியல் கருத்துக்களைக் காண இருக்கிறோம்.
சுவர்க்கு லோகத்தில் சுகத்தை அனுபவிப்பார்கள். அவ்வாறு சுகத்தை அடைந்த பின்னர், அதன் தன்மை தீர்ந்தவுடன் மீண்டும் இந்த மரண உலகில் வீழ்கின்றனர், புலன்களின் இன்பத்திற்காக வேத தர்மத்தை கடைபிடிப்பவர்கள் பிறப்பு இறப்பு எனும் சுழலில் மீண்டும் வீழ்கின்றனர்.
தற்காலிக இலாபங்களுக்காக தேவர்களை வழிபடுவோர், ஜடவாழ்வில் வீழ்கின்றனர். விரும்பிய இலக்கை அடைவது இல்லை. தனது ஜட ஆசையை நிறைவேற்ற விரும்பினால் அதனை பரம புருஷரிடமே பிபார்த்தனை செய்வது சிறந்தது.
முன்னேர்க்களை வழிபடுவோர் முன்னோர்களிடமே செல்வர். பூதங்களை வழிபடுவோர் பூதங்களிடையே இருப்பர்.
கிருஷ்ண உணர்வில் உள்ள பக்தன் கிருஷ்ன உலகத்தையே அடைகின்றான்.
பகவத்கீதை 9.20 — ஸ்வர்க லோகத்தை அடைவதற்காக, வேதங்களைப் பயின்று ஸோம ரஸத்தை அருந்துபவர்கள், என்னை மறைமுகமாக வழிபடுகின்றனர். இதன் மூலமாக அவர்கள் பாவ விளைவுகளிலிருந்து தூய்மையடைந்து, புண்ணியமான இந்திர லோகத்தில் பிறவியெடுத்து, அங்கே தேவ சுகங்களை அனுபவிக்கின்றனர்.
பகவத்கீதை 9.21 — ஸவர்க லோகத்தில் அத்தகு பரந்த சுகத்தை அனுபவித்துவிட்டு, தங்களது புண்ணியங்களின் பலன்களை தீர்ந்தவுடன், அவர்கள் மீண்டும் இந்த மரண உலகில் வீழ்கின்றனர். இவ்வாறாக, புலனின்பத்திற்காக வேத தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள், பிறப்பு இறப்பினையே அடைகின்றர்.
பகவத்கீதை 9.22 — ஆனால் எனது திவ்ய ரூபத்தின் மீது தியானம் செய்துகொண்டு, களங்கமற்ற (அனன்ய) பக்தியுடன் என்னை நித்தியமாக வழிபடுபவர்களுக்கோ, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், அவர்களிடம் இருப்பவற்றை காத்தும் நான் பாலிக்கின்றேன்.
பகவத்கீதை 9.23 — மற்ற தேவர்களை நம்பிக்கையோடு வணங்கும் பக்தர்கள், உண்மையில் என்னை மட்டுமே வழிபடுகின்றனர். குந்தியின் மகனே, ஆனால் அத்தகு வழிபாடு தவறான வழியில் செய்யப்படுவதாகும்.
பகவத்கீதை 9.24 — எல்லா யாகங்களின் தலைவனும் அனுபவிப்பாளனும் நானே. எனவே, எனது உண்மையான தெய்வீக இயற்கையை அங்கீகரிக்காதவர்கள் வீழ்ச்சியடைகிறார்கள்.
பகவத்கீதை 9.25 — தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களிடையே பிறப்பவர்; முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களிடம் செல்வர்; பூதங்களை வழிபடுபவர்கள் பூதங்களிடையே பிறப்பர்; மேலும், என்னை வழிபடுபவர்கள் என்னுடனே வாழ்வர்.
பகவத்கீதை 9.26 — அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு ஓர் இலையோ, ஓரு பூவோ, ஒரு பழமோ, நீரோ அளித்தால் அதனை நான் ஏற்கின்றேன்.
நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் கிருஷ்ணருக்கு படைக்க வேண்டும்
உண்ணும் உணவை கிருஷ்ணருக்கு படைத்த பின்னரே உண்ண வேண்டும்
எதையெலாம் கொடுக்கிறாயோ, அதையெலாம் கிருஷ்ணருக்கு அர்பணமாக கொடுக்க வேண்டும்.
ஜபமாலையில் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபம் செய்வதன் மூலம் கிருஷ்ணடனும் தொடர்புடனயே இருக்க முடியும்.
பகவத் கீதை என்ன சொல்கிறது?
பகவத்கீதை 9.27 — குந்தியின் மகனே, எதையெல்லாம் நீ செய்கின்றாயோ, எதையெல்லாம் நீ உண்கின்றாயோ, எதையெல்லாம் நீ படைக்கின்றாயோ, எதையெல்லாம் நீ கொடுக்கின்றாயோ, எந்த தவங்களையெல்லாம் நீ செய்கின்றாயோ, அதனை எனக்கு அர்ப்பணமாக செய்வாயாக.
பகவான் அனைத்து உயிர்களினும் வீற்றிருக்கின்றார் உயிர்களின் ஆரம்பமும் நடுவும் இறுதியும் பகவானே ஆவார்.
ஆதித்தியர்களில் பகவான் விஷ்னுவாகவும், சோதிகளில் பிரகாசிக்கும் சூரியனாகவும் நட்சத்திரங்களில் நிலவாகவும் பகவான் உள்ளரர்.
வேதங்களின் சாம வேதமாகவும், தேவர்களில் இந்திரனாகவும், புலன்களில் மனமாகவும், உயிர்வாழிகளில் உயிர் சக்தியாகவும் பகவான் பரிணமிக்கிறார்.
இருத்திரர்களில் சிவனாகவும், யஷ ரஷர்களில் குபேரனாகவும், நெருப்பாகவும், மேருமலையாகவும் உள்ளார்.
புரோகிதர்களில் பிருகஷ்பதியாக சேனாதிபதிகளில் கார்த்திகேயனாகவும், நீரித்தேக்கங்களில் சமுத்திரமாகவும், பகவான் உள்ளார்
மரங்களில் அரசமரமாகவும் ரிஷிகளில் நாரதராகவும், கந்தர்வர்களில் சித்ரதன் சித்தர்களில் கபில் முனியாகவும் பகவான் இருக்கிறார்.
பகவத் கீதை என்ன சொல்கிறது?
பகவத்கீதை 10.20 — அர்ஜுனா, எல்லா உயிர்களின் இதயங்களிலும் வீற்றிருக்கும் பரமாத்மா நானே. எல்லா உயிர்களின் ஆரம்பமும் நடுவும் இறுதியும் நானே.
பகவத்கீதை 10.21 — ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஜோதிகளில் பிரகாசிக்கும் சூரியன்; மருந்துகளில் நான் மரீசி; நட்சத்திரங்களில் நான் நிலவு.
பகவத்கீதை 10.22 — வேதங்களில் நான் ஸாம வேதம்; தேவர்களில் நான் ஸ்வர்க மன்னனான இந்திரன்; புலன்களில் நான் மனம் உயிர்வாழிகளில் நான் உயிர் சக்தி (உணர்வு).
பகவத்கீதை 10.23 — எல்லா ருத்ரர்களிலும் நான் சிவபெருமான்; யக்ஷ, ராக்ஷசர் களில் நான் செல்வத்தின் இறைவன் (குபேரன்); வசுக்களில் நான் நெருப்பு(அக்னி); மலைகளில் நான் மேரு.
பகவத்கீதை 10.24 — அர்ஜுனா, புரோகிதர்களில், தலைவரான பிருஹஸ்பதியாக என்னை அறிந்துகொள், சேனாதிபதிகளில் நான் கார்த்திகேயன்: நீர்த் தேக்கங்களில் நான் சமுத்திரம்.
பகவத்கீதை 10.25 — மகா ரிஷிகளில் நான் பிருகு; சப்தங்களில் நான் திவ்யமான ஓம்காரம்; யாகங்களில் நான் திருநாம ஜபம்; அசையாதன வற்றில் நான் இமயமலை.
பகவத்கீதை 10.26 — எல்லா மரங்களில் நான் ஆலமரம்; தேவ ரிஷிகளில் நான் நாரதன்; கந்தர்வர்களில் நான் சித்ரரதன்; சித்தர்களில் நான் கபில முனி.
பகவத்கீதை 10.27 — குதிரைகளுள், அமிர்தத்திற்காகக் கடலை கடைந்தபோது தோன்றிய உச்சைஷ்ரவா என்று என்னை அறிவாயாக. பட்டத்து யானைகளில் நான் ஐராவதம்; மனிதர்களில் நான் மன்னன்.
பகவத்கீதை 10.28 — ஆயுதங்களில் நான் வஜ்ராயுதம்; பசுக்களில் நான் சுரபி; இனவிருத்தியாளர்களில் நான் காமதேவனான மன்மதன்; சர்ப்பங்களில்(பாம்புகளில்) நான் வாஸுகி.
பகவத்கீதை 10.29 — நாகங்களில் (பல தலையுடைய பாம்புகளில்) நான் அனந்தன்; நீர்வாழினங்களில் நான் வருண தேவன்; முன்னோர்களில் நான் அர்யமா; நீதிபதிகளில் நான் மரணத்தின் அதிபதியான எமன்.
பகவத்கீதை 10.30 — தைத்ய அசுரர்களில், பக்தியில் சிறந்த பிரகலாதன் நான்; அடக்கி ஆள்பவற்றில் நான் காலம்; மிருகங்களில் நான் சிங்கம்; பறவைகளில் நான் கருடன்.
பகவத்கீதை 10.31 — தூய்மைப்படுத்துபவற்றில் நான் வாயு; ஆயுதம் தரித்தவர்களில் நான் இராமன்; மீன்களில் நான் மகர மீன்; பாயும் நதிகளில் நான் கங்கை.
பகவத்கீதை 10.32 — எல்லாப் படைப்புகளின் ஆதியும், அந்தமும், நடுவும் நானே, அர்ஜுனா, அறிவில் நான் ஆத்மாவைப் பற்றிய அறிவு; விவாதிப்போரில் நான் முடிவான உண்மை.
பகவத்கீதை 10.33 — எழுத்துக்களில் நான் முதல் எழுத்தாகிய ‘அ ‘; கூட்டுச் சொற்களில் நான் த்வந்த்வ. தீராத காலமும் நானே; படைப்பாளிகளில் நான் பிரம்மா.
பகவத்கீதை 10.34 — நானே எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் உருவாகுபவை அனைத்திற்கும் உற்பத்தியாளனும் நானே. பெண்களின் புகழ், அதிர்ஷ்டம், அழகிய பேச்சு, ஞாபக சக்தி, அறிவு, உறுதி மற்றும் பொறுமையும் நானே.
பகவத்கீதை 10.35 — ஸாம வேத மந்திரங்களில் நான் ப்ருஹத் ஸாமம்; கவிதைகளில் நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கஷீர்ஷ(நவம்பர்-டிசம்பர்); பருவங்களில் நான் மலர்கள் நிறைந்த வசந்த காலம்.
பகவத்கீதை 10.36 — ஏமாற்றுபவற்றில் நான் சூது; ஒளிர் பவற்றில் நான் தேஜஸ். நானே வெற்றி, நானே தீரச்செயல், நானே பலவான்களின் பலம்.
பகவத்கீதை 10.37 — விருஷ்ணி குலத்தவர்களில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் நான் அர்ஜுனன்; முனிவர்களில் நான் வியாசர்; பெரும் சிந்தனையாளர்களில் நான் உஷனா.
பகவத்கீதை 10.38 — அடக்கியாளும் முறைகளில் நான் தண்டனை. வெற்றியை நாடுபவர்களில் நான் நீதி இரகசியங்களில் நான் மௌனம் ஞானிகளில் நான் ஞானம்.
பகவத்கீதை 10.39 — மேலும், அர்ஜுனா, இருக்கும் எல்லா உயிர்வாழிகளையும் உற்பத்தி செய்யும் விதை நானே, அசைபவை மற்றும் அசையாதவற்றில் நான் இன்றி இருக்கக்கூடியது ஒன்றும் இல்லை.
பகவத்கீதை 10.40 — எதிரிகளை வெல்வோனே, என்னுடைய தெய்வீகத் தோற்றங்களுக்கு எல்லையே இல்லை. நான் உன்னிடம் கூறியவை அனைத்தும் எனது விரிவான வைபவங்களின் ஓர் உதாரணமே.
பகவத்கீதை 10.41 — அழகான, புகழத்தக்க வைபவங்கள் அனைத்தும், என்னுடைய தேஜஸின் சிறு பொறியிலிருந்து தோன்றுபவையே என்பதை அறிவாயாக.
பகவத்கீதை 10.42 — ஆனால், இதனை விவரமாக அறிவதன் தேவை என்ன அர்ஜுனா? என்னுடைய சிறு அம்சத்தின் மூலமாக, நான் இந்த பிரபஞ்சம் முழுவதிலும் புகுந்து அதனைத் தாங்குகின்றேன்.
பகவானின் விஸ்வரூபத்தை தரிசித்த பிறகு, அர்ஜூனனின் நிலை
பகவானின் விஸ்வரூபத்தை கண்டவுடன் அர்சுனன் மகிழ்ச்சி அடைந்தான்; பின்னர் பயமும் அர்சுனனனை ஆட்கொண்டது, எனவே மீண்டும் பகவானின் விஸ்வரூபத்தை விட்டு சாதாரண தெய்வீக வடிவைக் காட்ட வேண்டினான்,
அர்ஜூனனுக்கு காட்டிய தெய்வீக ரூப நிலை!
முதலில் நான்கு கரங்கள் உடைய நாரயணராகத் தோன்றினார். பின்னர் இரண்டு கரங்கள் உடைய உருவைக் காட்டினார்.
பகவத் கீதை என்ன சொல்கிறது?
பகவத்கீதை 11.45 — இதுவரை நான் என்றுமே கண்டிராத விஸ்வரூபத்தைப் பார்த்த பிறகு, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் அதே சமயத்தில் பயத்தினால் எனது மனம் குழம்புகின்றது. எனவே, தேவர்களின் இறைவனே, அகிலத்தின் அடைக்கலமே, ஏன் மீது கருணைக் காட்டி மீண்டும் தங்களது தெய்வீக ரூபத்தைக் காட்டி அருள்புரிவீராக.
பகவத்கீதை 11.50 — திருதராஷ்டிரரிடம் சஞ்ஜயன் கூறினான்: புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணர், அர்ஜுனனிடம் இவ்வாறு பேசிய பிறகு, நான்கு கரங்களை உடைய தனது சுய உருவையும் இறுதியில் இரண்டு கரங்களுடனான உருவையும் காட்டி, அச்சமுற்று இருந்த அர்ஜுனனை உற்சாகப்படுத்தினார்.
பகவத்கீதை 11.51 — கிருஷ்ணரை அவரது உண்மையான உருவில் கண்டபோது, அர்ஜுனன் கூறினான்: ஓ ஜனார்தனா, மனிதனைப் போன்று தோன்றக்கூடிய மிகவும் அழகான இந்த உருவத்தைக் கண்டு, எனது மனம் தற்போது அமைதியடைந்துள்ளது, நான் எனது சுய இயல்பினை மீண்டும் அடைந்துள்ளேன்.
பகவத்கீதை 11.52 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதன்பு அர்ஜுனா, இப்போது நீ பார்க்கும் எனது இந்த உருவம் காண்பதற்கு மிகவும் அரியதானது. பிரியமான இந்த உருவத்தை தரிசிப்பதற்கான வாய்ப்பை தேவர்களும் எப்போதும் நாடுகின்றனர்.
பகவானை தரிசிக்க தேவையான தகுதி.
பகவானை பக்தித் தொண்டினால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
கலப்படமற்ற பக்தித் தொண்டினால் மட்டுமே பகவானைக் காணவும், புரிந்து கொள்ளவும் முடியும்.
பகவானை சென்றடைய தேவையான தகுதி:
தூய பக்தித் தொண்புனை கடைப்பிடித்து, பலனை எதிர்பாராமல் பலனில் இருந்து விடுபட்டு, பகவானுக்காகச் செயல்பட வேண்டும்.
பகவத் கீதை என்ன சொல்கிறது?
பகவத்கீதை 11.53 — உனது தெய்வீக கண்களால் நீ காண்கின்ற இந்த உருவம், வேதங்களைக் கற்பதாலோ, கடுந்தவங்களைச் செய்வதாலோ, தானங்களைக் கொடுப்பதாலோ, வழிபாடு செய்வதாலோ புரிந்துகொள்ளப்படக் கூடியது அல்ல. என்னை உள்ளபடி உணர்வதற்கு இந்த வழிகள் உதவாது.
பகவத்கீதை 11.54 — எனதன்பு அர்ஜுனா, உன் முன் நிற்கும் என்னை, கலப்பற்ற பக்தித் தொண்டினால் மட்டுமே இதுபோன்று நேரடியாகக் காணவும் புரிந்து கொள்ளவும் முடியும். இவ்வழியில் மட்டுமே என்னைப் பற்றிய உண்மையின் இரகசியங்களிலே உன்னால் நுழைய முடியும்.
பகவத்கீதை 11.55 — எனதன்பு அர்ஜுனா, எவனொருவன், எனது தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ, பலன்நோக்குச் செயல்கள் மற்றும் மனக்கற்பனைகளின் களங்கங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளானோ, எனக்காக செயல்படுகிறானோ, என்னை தனது வாழ்வின் பரம இலக்காக வைத்துல்லானோ, மற்றும் எல்லா உயிர்களிடத்திலும் நண்பனாக உள்ளானோ, அவன்நிச்சயமாகஎன்னைவந்தடைகின்றான்.
பக்தியின் நான்கு நிலை
மனம், அறிவை இறைவன். மீது ஈடுபடுத்தல்
பக்தி யோகத்தின் ஒழுக்க தெறிகளைப் பின்பற்றுதல்.
பகவானுக்காக மட்டுமே செயல்படுதல்
செயலின் விளைவுகளை பகவானுக்கு தியாகம் செய்தல்.
பகவத் கீதை என்ன சொல்கிறது?
பகவத்கீதை 12.8 — முழுமுதற் கடவுளான என்மீது உனது மனதை நிறுத்தி, உன்னுடைய முழு அறிவையும் என்னில் ஈடுபடுத்துவாயாக. இவ்வாறு நீ எப்போதும் என்னிலேயே வாழ்வாய் என்பதில் ஐயமில்லை.
பகவத்கீதை 12.9 — செல்வத்தை வெல்பவனான எனதன்பு அர்ஜுனா, உனது மனதை என்மீது பிறழாது நிலைநிறுத்த முடியாவிடில், பக்தி யோகத்தின் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவாயாக. என்னை அடைவதற்கான விருப்பத்தினை இதன் மூலம் விருத்தி செய்வாயாக.
பகவத்கீதை 12.10 — பக்தி யோகத்தின் விதிகளை உன்னால் பயிற்சி செய்ய முடியாவிடில், எனக்காக மட்டும் செயலாற்ற முயல்வாயாக. ஏனெனில், எனக்காக செயல்படுவதன் மூலம் நீ பக்குவ நிலைக்கு வந்தடைவாய்.
பகவத்கீதை 12.11 — ஆனால், என்னைப் பற்றிய இத்தகு உணர்விலும் உன்னால் செயலாற்ற முடியாவிடில், உனது செயலின் எல்லா விளைவுகளையும் தியாகம் செய்து, ஆத்மாவில் நிலைபெற முயற்சி செய்.
பக்தித் தொண்டினை பின்பற்றி பகவானையே பரம இலக்காக வைத்துச் செயல்படுபவர், பகவானின் மீது மிகுந்த நம்பிக்கை கொள்பவர் அவரே பகவானுக்கு மிகவும் பிரியமானவமாவார்,
பகவத் கீதை என்ன சொல்கிறது?
பகவத்கீதை 12.20 — பக்தித் தொண்டு என்னும் இந்த அழிவற்ற பாதையைப் பின்பற்றி, என்னை பரம இலக்காக வைத்து நம்பிக்கையுடன் தன்னை ஈடுபடுத்துபவர்கள், எனக்கு மிகமிகப் பிரியமானவர்கள்.
இன்று கற்றுக் கொண்டது என்ன?
பகவானையே வழிபட வேண்டும்
செயல்கள் அனைத்தையும் பகவானைக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.
இவ்வுலகம் முழுமையும் பகவானின் வைபகங்களே ஆகும், இதை உணர வேண்டும்
பக்தித் தொண்டின் மூலமே பகவானை அடைய முடியும்.
வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவை
பகவானுக்காக அனைத்தையும் அர்பணம் செய்து விட்டு செயல்கூளைச் செய்ய வேண்டும்.
பக்தித் தொண்டினை மேற்கொள்ள வேண்டும்
உலகில் உள்ள அனைத்தையுமே பகவானின் வைபவம் என உணர்ந்து செயல்பட வேண்டும்.
பகவத்கீதை 9.20 — ஸ்வர்க லோகத்தை அடைவதற்காக, வேதங்களைப் பயின்று ஸோம ரஸத்தை அருந்துபவர்கள், என்னை மறைமுகமாக வழிபடுகின்றனர். இதன் மூலமாக அவர்கள் பாவ விளைவுகளிலிருந்து தூய்மையடைந்து, புண்ணியமான இந்திர லோகத்தில் பிறவியெடுத்து, அங்கே தேவ சுகங்களை அனுபவிக்கின்றனர்.///
பகவத்கீதை 9.20 — ஸ்வர்க லோகத்தை அடைவதற்காக, வேதங்களைப் பயின்று ஸோம ரஸத்தை அருந்துபவர்கள், என்னை மறைமுகமாக வழிபடுகின்றனர். இதன் மூலமாக அவர்கள் பாவ விளைவுகளிலிருந்து தூய்மையடைந்து, புண்ணியமான இந்திர லோகத்தில் பிறவியெடுத்து, அங்கே தேவ சுகங்களை அனுபவிக்கின்றனர்.