கொலஸ்ட்ரால் பற்றி தெரிந்துகொள்வோம்

528 views
Skip to first unread message

Sathees Kumar

unread,
Feb 17, 2011, 12:25:52 AM2/17/11
to panb...@googlegroups.com, mint...@googlegroups.com, kadhalf...@googlegroups.com


Join Only-for-tamil

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol

80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.

கொலஸ்ட்ராலின் தன்மைகள்

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.

கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.

நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.

எது நல்ல கொலஸ்ட்ரால்?

LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த LDL  – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு  Atherosclerosis  என்று பெயர்.

ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)


கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.


Total Cholesterol <—>200 mgm%
மொத்த கொலஸ்ட்டிரால்

LDL Cholesterol <—>100 mgm%
குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்

VLDLCholesterol <—>30 mgm%
மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்

Triglycerides <130 mgm%
முக்கிளிசரைடுகள்

HDLP Cholesterol <50 mgm %
மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்


மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.

குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு  நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.


கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்

பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)

எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.

ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.

இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.

கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.

பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.

ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.

அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.

ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.

இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.


ஒமேகா 3 உள்ள உணவுகள்


மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்

ஒமேகா 6 உள்ள உணவுகள்

சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.


எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?


நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.


கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம்
நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:


· சீரான உடற்பயிற்சி

· உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.

· புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.

· மது அருந்துவதைத் தவிர்ப்பது

· அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.

· அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.

· பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .

· யோகாசன பயிற்சி செய்வது,

· தியானப் பயிற்சி செய்வது .



நன்றி :- சாய்பாபா V  (Only For Tamil Yahoo group)



  With Regards,

2E3DED62F9833651641083B7D1962CAF.png





Scan.jpg
2E3DED62F9833651641083B7D1962CAF.png

sharadha subramanian

unread,
Feb 17, 2011, 3:12:59 AM2/17/11
to mint...@googlegroups.com
கொலஸ்ட்ரால் ப்ற்றியத்கவலகளுக்கு,நன்றீ,என் கணவருக்கு,tryglycyrides அதிகமுள்ள்த் 500 என் மாமியாருக்கு850 மாத்திரை சாப்பிட்டுவ்ருகிறார்கள் ஆனால் இத் ஜெனெடிக் ப்ரொப்லெம் என்றும் சொல்கிறார்கள,ஆனால் நித்ம் ந்டைப்யிற்சிசெய்கிறார் no oil substance,intake,takingmore fibre contentvegetables only boiled no oil at all 
From: Sathees Kumar <satheesk...@gmail.com>
To: panb...@googlegroups.com; mint...@googlegroups.com; kadhalf...@googlegroups.com
Sent: Thu, 17 February, 2011 10:55:52 AM
Subject: [MinTamil] கொலஸ்ட்ரால் பற்றி தெரிந்துகொள்வோம்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Scan.jpg
2E3DED62F9833651641083B7D1962CAF.png

Nagarethinam

unread,
Feb 17, 2011, 12:05:46 PM2/17/11
to மின்தமிழ்
கொலஸ்ட்ராலைப் பற்றி தெரிந்து கொள்வதோடு சிறிது மருந்துகளைப் பற்றியும்
த்ரிந்து கொள்வது நலம்.

டாக்டர்களில் சிலர் நல்ல இதயம் கொண்டாவர்களும் இல்லாமல் இல்லை. ஒரு புகழ்
பெற்ற கார்ப்பொரேட் ஹாஸ்பிடலெனப்படும் கொள்ளைக் கூட்டத்திலும் ஒரு நல்ல
டாக்டர்.

கொலஸ்டாலுக்கு தர்ப்படும் மருந்து கிட்னியை கெடுக்கிறது.
உங்களுக்கு இதய நோயில் போகவேண்டுமா இல்லை கிட்னி ரூட்டிலா என்றார்.

இநத நோயை வருமுன் காப்பது நல்லது.
உட்ற்பயிற்சி பலன் தருமானால் விடாமல் தொடரலாம்.
ஆயுர்வேதா சித்தா யுனானி இவற்றில் பலன் தரும் மருத்துவர்களையும்
மருத்துவ சாலைகளையும் கண்டு, பலன் அடைந்த பிறகு இவற்றை இந்த தளத்திலே
குறிப்பிடலாம்.

எனக்குத் தெரிந்து திருவண்ணாமலையில் சித்த வைத்தியர் திரு
ராமச்ச்ந்திரன் அவர்கள் வைத்தியம் நல்ல பலன் தருவதுமட்டுமில்லை, இலவச
இணைப்பாக அலோபதி மருந்தில் வரும் உபத்திரவங்கள் இல்லை.

இதே போல, ஆயூர் வேத வைத்திய சாலை -திருகச்சூர் அருகில் உள்ள வைத்திய மடம்
- 45 நிமிட பயணம்.
இரண்டு பக்கமும் செய்ல் இழந்த பக்க வாத நோயாளிகள் ஒரே வாரத்தில்
நட்க்கச்செய்வதாக அறிந்தோம்.

அங்கே - முடியும் முடியாதுஎன்று சொல்லிவிடுவார்கள். அலோபதி, திருப்பதி
கைவிட்ட கேஸ்கள் அங்கே சரியாகியிருக்கிறது.
டக்கென்று பலன் கிடைக்காது, மரருந்துகளை விடாமல் ஆறுமாதமோ அதற்கு மேலாகவோ
சாப்பிட்டு வரவேண்டும்.

On Feb 17, 10:25 am, Sathees Kumar <satheeskumar.r...@gmail.com>
wrote:
>   [image: Join Only-for-tamil]
>
> *கொலஸ்ட்ரால் என்றால் என்ன?*


>
> கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில்
> உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol
>
> 80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol)
> உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus
> cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது.
> சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள்
> ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு
> கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது
> கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும்
> செயல்படுகிறது.
>

> *கொலஸ்ட்ராலின் தன்மைகள்*


>
> கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து,
> அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின்
> வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால்
> இன்றியமையாததாக இருக்கிறது.
>
> கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு
> தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும்
> கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி,
> இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.
>
> கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி
> ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான்
> (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.
>
> நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும்
> தேவைப்படுகிறது.
>

> *எது நல்ல கொலஸ்ட்ரால்?*


>
> LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL
> ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
>
> இந்த LDL  – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து
> (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு
> Atherosclerosis  என்று பெயர்.
>
> ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால்
> இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது.
> இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும்
> (Lipoprotein)
>

> *
> கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.*

> *கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்*

> *
> ஒமேகா 3 உள்ள உணவுகள்*


>
> மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள்,
> அரிசி தவிட்டு எண்ணெய்
>
> ஒமேகா 6 உள்ள உணவுகள்
>
> சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும்
> விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.
>

> *
> எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?*


>
> நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை
> தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை
> பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.
>

> *கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம்
> நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:*


>
> · சீரான உடற்பயிற்சி
>
> · உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.
>
> · புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.
>
> · மது அருந்துவதைத் தவிர்ப்பது
>
> · அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.
>
> · அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.
>
> · பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது
> .
>
> · யோகாசன பயிற்சி செய்வது,
>
> · தியானப் பயிற்சி செய்வது .
>

> *நன்றி :- சாய்பாபா V  (Only For Tamil Yahoo group)*
>
>   *With Regards,*
>
> [image: 2E3DED62F9833651641083B7D1962CAF.png]
>
>  Scan.jpg
> 45KViewDownload
>
>  2E3DED62F9833651641083B7D1962CAF.png
> 1KViewDownload

சாதிக் அலி

unread,
Feb 17, 2011, 1:10:25 PM2/17/11
to mint...@googlegroups.com
அருமையான பதிவு... மிக உபயோகமான குறிப்புகள்... நன்றி...

2011/2/17 Sathees Kumar <satheesk...@gmail.com>



Join Only-for-tamil

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
-----------  அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

Scan.jpg

rajam

unread,
Feb 17, 2011, 1:52:41 PM2/17/11
to mint...@googlegroups.com
கொலெஸ்டெரால் (cholesterol) பற்றி நானும் கொஞ்சம் சொல்லிக்கிறேனே...
முதலில் இந்த இழையைத் தொடங்கி, விவரங்களைப் பகிர்ந்துகொண்டவர்களுக்கு நன்றி.
மிகவும் முக்கியமான ஒரு குறிப்பு: நம்மவர்களுக்கு, அதாவது இந்தியக் குருதி ஓடும் உடலினர்க்கு, இந்தக் கொலெஸ்டெரால் அளவு பற்றிச் சோதனை செய்வதில் பெரும்பாலான மருத்துவர்கள் குறிப்பிட்ட ஒன்றைச் சோதிக்கமாட்டார்கள் -- அதற்கு நிறையச் செலவு ஆகும் என்று.  அது என்ன?  
ஹோமோசிஸ்டைன் (homocysteine), லைபோ ப்ரோட்டீன் (lipoprotein) என்ற இரண்டின் அளவும் என்ன என்று பார்ப்பது.

இவைகளின் அளவு மிகுதியாக இருப்பது கெடுதலாம்.
(2000-ஆம் ஆண்டில், என் அம்மாவுக்கு அவர்களுடைய 81-ஆம் வயதில் stroke வந்து கீழே விழுந்து ... என்னென்னவோ கண்றாவி ஆகும் வரை நான் என்னைப் பற்றிக் கவலைப்படாமல் இங்கே திரிந்துகொண்டிருந்தேன். அதுதான் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு எல்லாம் உண்டே! மதுரையில் இருந்தபோதே நீச்சல், ஆட்ட பாட்டம் எல்லாம் பழக்கம்தானே!) 
அம்மா பட்ட பாட்டைப் பார்த்துத் திடீரென்று பயம் வந்தது. அதனால் ... மருத்துவரிடம் போய்ச் சோதித்துக்கொள்ள நினைத்துப் போய்ப் பார்த்தபோது திகைப்பு! முதலில் மருத்துவர் பார்த்துவிட்டு எல்லாம் நல்லா இருக்கிறதாச் சொன்னார். பிறகு நான் திரும்பத் திரும்ப ... "எங்கள் வீட்டில் 4 தலைமுறைக்கு stroke வந்து பாடுபட்டது வழக்கம். அந்தப் பரம்பரையிலிருந்து நான் தப்பிக்கவேண்டும் எனக்கு உதவிக்கு ஆள் இல்லை" என்று விடாப்பிடியாகச் சொன்னதின்பேரில் மருத்துவர் இன்னும் பல தனிச் சோதனைகள் (குருதி அழுத்தம் + சாதாரண கொலெஸ்டெரால் அளவு + ஹோமோசிஸ்டைன் (homocysteine), லைபோ ப்ரோட்டீன் (lipoprotein) அளவு) செய்ததில் இந்தக் கடைசிகளின் அளவு மிகுதி (164 mg) என்று "கண்டுபிடித்தார்!"
அதற்கப்புறம் folic acid, niacin மாத்திரைகள் தந்தார்.
அதன் பிறகு நான் செய்ததும் பயனும்:
-------------------------------------------
1. மருத்துவர் சொன்ன  folic acid, niacin அளவில் பாதியைத் தான் எடுத்துக்கொண்டேன்.
2. பால், தயிர் சாப்பிடுவதை நிறுத்தினேன். எப்போதுமே பாலடைக்கட்டி (cheese) ரொம்பச் சாப்பிட்டதில்லை. அதனால் அது கவலையில்லை. எண்ணெய்ப் பொருள்களும் ரொம்பச் செய்ததில்லை. அதுவும் கவலையில்லை.
3. அது வரை ... வாரத்தில் 2 ~ 3 நாளில் மட்டும் சாப்பிட்டுவந்த ஓட்ஸ் (rolled oats, steel-cut oats) ... என் தினசரி உணவு ஆனது. தினமும், அரிசிக்குப் பதில் ஓட்ஸ் சாப்பிடத் தொடங்கினேன்.
4. கெடுதி செய்யும் அந்த இரண்டும் (homocysteine, lipoprotein) ...  பிறகு படிப் படியாக ... 164 mg-லிருந்து ... 88 mg, 69 mg என்று குறைந்துவிட்டன -- ஓர் ஆண்டுக்குள்ளேயே. அதோடு ... HDL 85, LDL 73 என்றும் ஆச்சு.
குறிப்பு:
--------
1. நான் பொதுவாகவே ... வெள்ளை அரிசியை எப்போதும் பயன்படுத்தியதில்லை. சர்க்கரைப் பொருள்களும் பிடிக்காது. No "sweets."
2. நிறைய நிறைய -- காயும் பழமும் சாப்பிடுவேன்.
3. கொட்டைவகைப் பருப்புக்களில் ஏதாவது ஒன்றை (nuts) -- வேர்க்கடலை, வால்நட் (walnut), பாதாம் பருப்பு (almonds), hazelnut, brazil nut, ... அது இது என்று இங்கே கிடைக்கும் எல்லாமும் -- தினமும் சிறிதளவு சாப்பிடுவேன்.
4. காலப்போக்கில் காலில் ஒரு தசை நார் (tendon) பழுதுபட்டுவிட்டதால், ஓர் ஆண்டுக் காலமாக உடற்பயிற்சிக் களத்துக்குப் போக முடியவில்லை. (ஆனால் அதற்கு முன் தினமும் ஏதாவது உடற்பயிற்சி செய்திருக்கிறேன். வார இறுதி நாட்களில் குறைந்தது 2 மணி நேரம் உடற்பயிற்சிக் களத்தில் பயிற்சி செய்வேன். அங்கே நான் ஒருத்திதான், அதுவும் என் வயதுக்காரர்களில், இந்தியப் பெண். இந்திய ஆடவர்களும் அங்கே குறைவுதான். அவர்கள் என்னை ஒரு விதமாக முறைத்துப் பார்ப்பார்கள்!!)
5. அண்மையில், 15 நாட்களுக்கு முன், வந்திருந்த அமெரிக்கத் தோழி சொன்னது: அவளுடைய கொலெஸ்டெரால் அளவு 250க்கும் மேலே போனதாம். இறைச்சி உணவை விலக்கினாளாம். பால், தயிர், பாலடைக் கட்டியும் சாப்பிடவில்லையாம். காய், பழங்கள் சாப்பிடத் தொடங்கினாளாம். ஓட்ஸ் சாப்பிடத் தொடங்கினாளாம். (அதுவரை மாட்டிறைச்சியும் பிறவகை ஊணவுகளூம் மட்டுமே அவள் உணவாக இருந்தது. நான் போனால் மட்டுமே என்னுடன் சேர்ந்து காய்கள் போன்றவை சாப்பிடுவாள்.) சில மாதங்களில் மட மட என்று அவளுடைய கொலெஸ்டெரால் அளவு 200க்குக் குறைந்ததாம்.
+++++++++++++++++++
நாம் செய்யக் கூடியது என்ன?
1. ஓட்ஸ் சாப்பிடலாம் -- பால், தயிர் கலக்காமல். இதைத் தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. விரைவில் கொலெஸ்டெரால் அளவு சீர்ப்படும்.
2. காய், பழங்கள் சாப்பிடலாம். காய்களில் குறிப்பாக ... புரோக்கலி (broccoli), முட்டைக்கோசு நல்லது. வாயுத் தொல்லை தரும் என்று பயந்தால் இஞ்சி, பூண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.
3. ஏகப்பட்ட எண்ணெயில் வறுக்காமல் சமையல் செய்து சாப்பிடலாம்.
4. ஒரு நாளை உணவின் பகுதிகளை வரையறுத்துக்கொள்ளலாம். இந்த அளவு உணவு சத்துக்காக (ஓட்ஸ் போல), இந்த அளவு உணவு சுவைக்காக (வறுத்தவை, பொரித்தவை) என்று திட்டமிட்டுச் சாப்பிடலாம்.
5. உடற்பயிற்சி செய்யலாம்.
++++++++++++++++++++++
நலமுடன் வாழ்க!
அன்புடன்,
ராஜம்

rajam

unread,
Feb 17, 2011, 4:48:40 PM2/17/11
to mint...@googlegroups.com
இன்னும் சில எளிமையான உணவுக் குறிப்புக்கள் (கெட்ட கொலெஸ்டெராலைக் குறைக்கவும் மற்ற சில நலத்துக்காகவும்):
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1. ஆரஞ்சுப் பழத்துடன் தொடர்பு உடைய "கிரேப் பழம்" (grapefruit) மிகவும் நல்லது. அதன் தொலி / தோல் மிகவும் நல்லது. செயற்கை உரம் போடாமல் வளர்ந்த பழத்தின் எல்லாப் பகுதிகளையும் (கொட்டையும்) பயன்படுத்தலாம்.
2. நல்ல ஆரஞ்சுப் பழத்தின் தோலைத் தூரப்போடாமல் துவையல் செய்து சாப்பிடலாம். துவையல் செய்யும்போது சர்க்கரை சேர்க்காமல் இருப்பது நல்லது.
3. நம்ம ஊர் நெல்லிக்காய், சுண்டைக்காய், பாவக்காய், நாவல் பழம், இது மாதிரிக் காய் / பழம் சாப்பிடலாம்.
4. இளநீர், பனை நொங்கு சாப்பிடலாம். நிறையவே சாப்பிடலாம், கிடைத்தால்! :-)
5. தேங்காய் கெடுதல் இல்லை. அது நல்லதுவே! தேங்காயினால் கெட்ட கொலெஸ்டெரால் மிகுந்துபோகாது. மிருகக் கொழுப்புத்தான் கெட்ட கொலெஸ்டெராலின் அளவைக் கூடுதல் ஆக்கும். தேங்காயில் இருப்பது தாவரக் கொழுப்பு. அது சாப்பிடுகிறவர்களுடைய உடம்பின் சதைப் பிடிப்பைத்தான் அதிகமாக்கும்; அதனால் ஊளைச் சதை போடலாம். ஆனால் அது கெட்ட கொலெஸ்டெராலின் அளவைக் கூடுதல் ஆக்காது. எனவே பயமில்லை. உடற்பயிற்சியினால் உடலின் ஊளைச் சதையைக் குறைக்கலாம்! :-)
6. சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கவேண்டாம். சாப்பிடுவதற்கு 20 மணித்துளிகளுக்கு முன்னால் அல்லது சாப்பிட்ட பிறகு 20 மணித்துளிகளுக்கு  அப்புறம் தண்ணீர் குடிக்கலாம்.
7. நிறைய ... தண்ணீர் குடிக்கவேண்டும். ஒரு நாளில், ஒரு மணி நேர இடைவெளி விட்டு விட்டு, எட்டு அவுன்சு (ounce) அளவு தண்ணீர் குடிக்க முடிந்தால் நல்லது. அந்த அளவு செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை; முடிந்த அளவு செய்யலாம்.
8. உறைபனித் தண்ணீர் (ice water) கெடுதல்தான் செய்யும்! ஏனா? இந்த ஐஸ் தண்ணி ... நாம் சாப்பிட்ட உணவில் இருக்கும் கொழுப்புக்களை அப்படியே வயிற்றில் உறையவைத்துவிடும், இல்லையா? அப்பொ ... நாம் சாப்பிட்ட சாப்பாட்டில் இருந்த கொழுப்பு நம்ம உணவுக் குழாய்களில் உறைந்துகொண்டுவிடும், இல்லையா? அதனால் ... சுடு நீர் அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதே நல்லது. 
9. பாவக்காய் சமைக்கும்போது அதன் கசப்பைக் கொல்லும் வகையில் சமைக்கவேண்டாம்! பாவக்காயின் சத்தே அதன் கசப்பில்தான் இருக்கு. அதை மறைக்க ஏகப்பட்ட எண்ணெயும் சர்க்கரையும் போட்டுச் சமைத்தால் ... அந்தப் பாவக்காயின் உண்மைச் சத்து எங்கே போகும்?
10. வேப்பங்கொழுந்தைச் சுவைக்கலாம்! இப்பொ ... வேப்ப மரங்கள் தளிர்க்கும் நேரம்.

சாதிக் அலி

unread,
Feb 17, 2011, 3:53:18 PM2/17/11
to mint...@googlegroups.com, rajam
மிக்க நன்றி ராஜம்... அற்புதமான பதிவு...நீங்கள் எழுதியது எனக்கு மிகவும் பயன்படும் என்று நம்புகிறேன்... வாழ்த்துக்கள்..

2011/2/17 rajam <ra...@earthlink.net>

கொலெஸ்டெரால் (cholesterol) பற்றி நானும் கொஞ்சம் சொல்லிக்கிறேனே...
முதலில் இந்த இழையைத் தொடங்கி, விவரங்களைப் பகிர்ந்துகொண்டவர்களுக்கு நன்றி.

rajam

unread,
Feb 20, 2011, 2:16:33 AM2/20/11
to சாதிக் அலி, mint...@googlegroups.com
கொலெஸ்டெரால் பற்றிய ஒரு சிறு விவர நூலை மடலில் இணைத்து அனுப்பப் பார்த்தேன்; ஆனால் அது வண்ணப் படங்களுடன் இருப்பதனால் ... அதன் அளவினால் (13MB) ... அனுப்ப முடியவில்லை.
என் இணைய தளத்தில் போட்டிருக்கிறேன். விருப்பம் இருந்தால் அங்கேயிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்:

Ramesh

unread,
Feb 22, 2011, 1:51:07 AM2/22/11
to mint...@googlegroups.com
Site down aa irukku madam.

2011/2/20 rajam <ra...@earthlink.net>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

--

Thanks and regards,

Ramesh Lakshmipathy


Lead me from the unreal to the truth;
Lead me from darkness to the light;
Lead me from death to immortality.

rajam

unread,
Feb 22, 2011, 11:33:20 AM2/22/11
to mint...@googlegroups.com, Ramesh
என் வலப்பதிவகத்தின் நுழைவாயில் இங்கே: http://letsgrammar.org/
அங்கே நுழைந்து விருப்பமுள்ள பகுதிகளுக்குப் போய்ப் பார்த்து, விரும்பிய கோப்புக்களைத் தரவிறக்கிக்கொள்லலாம்.
எடுத்துக்காட்டாக: http://www.letsgrammar.org/miscel.html 
சில கோப்புக்களின் அளவு பெரியது என்பதால் உங்கள் கணினிக்குள் இறங்கத் தடை இருக்குமோ என்னவோ தெரியவில்லையே?

Innamburan Innamburan

unread,
Feb 22, 2011, 12:30:32 PM2/22/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
'சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை.' ஆதாரம் அளிக்கவும்.
இன்னம்பூரான்
22 02 2011

2011/2/22 rajam <ra...@earthlink.net>


>
> என் வலப்பதிவகத்தின் நுழைவாயில் இங்கே: http://letsgrammar.org/
> அங்கே நுழைந்து விருப்பமுள்ள பகுதிகளுக்குப் போய்ப் பார்த்து, விரும்பிய கோப்புக்களைத் தரவிறக்கிக்கொள்லலாம்.
> எடுத்துக்காட்டாக: http://www.letsgrammar.org/miscel.html
> சில கோப்புக்களின் அளவு பெரியது என்பதால் உங்கள் கணினிக்குள் இறங்கத் தடை இருக்குமோ என்னவோ தெரியவில்லையே?
>
> On Feb 21, 2011, at 10:51 PM, Ramesh wrote:
>
> Site down aa irukku madam.
>
> 2011/2/20 rajam <ra...@earthlink.net>
>>
>> கொலெஸ்டெரால் பற்றிய ஒரு சிறு விவர நூலை மடலில் இணைத்து அனுப்பப் பார்த்தேன்; ஆனால் அது வண்ணப் படங்களுடன் இருப்பதனால் ... அதன் அளவினால் (13MB) ... அனுப்ப முடியவில்லை.
>> என் இணைய தளத்தில் போட்டிருக்கிறேன். விருப்பம் இருந்தால் அங்கேயிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்:
>> (http://www.letsgrammar.org/miscel.html)
>>
>> On Feb 17, 2011, at 12:53 PM, சாதிக் அலி wrote:
>>
>> மிக்க நன்றி ராஜம்... அற்புதமான பதிவு...நீங்கள் எழுதியது எனக்கு மிகவும் பயன்படும் என்று நம்புகிறேன்... வாழ்த்துக்கள்..
>>
>> 2011/2/17 rajam <ra...@earthlink.net>
>>>
>>> கொலெஸ்டெரால் (cholesterol) பற்றி நானும் கொஞ்சம் சொல்லிக்கிறேனே...
>>> முதலில் இந்த இழையைத் தொடங்கி, விவரங்களைப் பகிர்ந்துகொண்டவர்களுக்கு நன்றி.
>>

செல்வன்

unread,
Feb 22, 2011, 2:11:58 PM2/22/11
to mint...@googlegroups.com
ராஜம் அம்மா சொல்வது சரியான தகவலே.

தாவர உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை.பால்,முட்டை,மாமிசம் போன்ற உணவுகளைலேயே கொலஸ்ட்ரால் உள்ளது.

நம் உண்ணும் உணவில் உள்ல கலோரி சத்தில் செலவானது போக மீதமானதை கொலஸ்ட்ராலாக நம் உடல் சேர்த்து வைக்கிறது.அதை தமிழில் கொழுப்பு என்கிறோம்.தாவரங்கள் கொலஸ்ட்ராலை உருவாக்குவதில்லை.மிருகங்கள் தான் உண்டாக்கும்.அதனால் தாவர உணவில் கொலஸ்ட்ரால் இல்லை.ஃபேட் தான் உள்ளது.(அதையும் தமிழில் கொழுப்பு என தான் சொல்லுவோம்)

2011/2/22 Innamburan Innamburan <innam...@gmail.com>



--
செல்வன்

கள் விற்கும் உரிமையை மக்களிடம் இருந்து பறித்து
பெருவணிகர்களுக்கு கொடுக்கும் கழகங்களை புறக்கணிப்போம்
கொங்குநாடு முன்னேற்ற பேரவைக்கு ஓட்டளிப்போம்

www.holyox.blogspot.com


rajam

unread,
Feb 22, 2011, 1:58:59 PM2/22/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
"இருக்கிறது" என்பதற்கு
ஆதாரம்?

>>> unsub...@googlegroups.com


>>> For more options, visit this group at http://groups.google.com/
>>> group/minTamil
>>
>>
>> --
>> --
>> Thanks and regards,
>> Ramesh Lakshmipathy
>> Lead me from the unreal to the truth;
>> Lead me from darkness to the light;
>> Lead me from death to immortality.
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
>> may like to visit our Muthusom Blogs at: http://
>> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
>> send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-

>> unsub...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/
>> group/minTamil
>>

>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
>> may like to visit our Muthusom Blogs at: http://
>> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
>> send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-

>> unsub...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/
>> group/minTamil
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-

> unsub...@googlegroups.com

rajam

unread,
Feb 22, 2011, 2:14:56 PM2/22/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
"சைவ உணவு" என்பதை
விடுத்து ... "தாவரக்
கொழுப்பு" vs. "மிருகக்
கொழுப்பு" என்று தேடினால்
நல்லது.

தாவரக் கொழுப்பு கெட்ட
கொலெஸ்டெரால் உண்டாக்குமா?


On Feb 22, 2011, at 9:30 AM, Innamburan Innamburan wrote:

>>> unsub...@googlegroups.com


>>> For more options, visit this group at http://groups.google.com/
>>> group/minTamil
>>
>>
>> --
>> --
>> Thanks and regards,
>> Ramesh Lakshmipathy
>> Lead me from the unreal to the truth;
>> Lead me from darkness to the light;
>> Lead me from death to immortality.
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
>> may like to visit our Muthusom Blogs at: http://
>> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
>> send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-

>> unsub...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/
>> group/minTamil
>>

>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
>> may like to visit our Muthusom Blogs at: http://
>> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
>> send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-

>> unsub...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/
>> group/minTamil
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-

> unsub...@googlegroups.com

Innamburan Innamburan

unread,
Feb 22, 2011, 3:37:46 PM2/22/11
to mintamil, Innamburan Innamburan
தேங்காயெண்ணையில் இல்லாத கொலெஸ்டெராலா?

2011/2/22 rajam <ra...@earthlink.net>:

>>>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send


>>>> email to minT...@googlegroups.com
>>>> To unsubscribe from this group, send email to

>>>> minTamil-u...@googlegroups.com


>>>> For more options, visit this group at
>>>> http://groups.google.com/group/minTamil
>>>
>>>
>>> --
>>> --
>>> Thanks and regards,
>>> Ramesh Lakshmipathy
>>> Lead me from the unreal to the truth;
>>> Lead me from darkness to the light;
>>> Lead me from death to immortality.
>>>
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>>> visit our Muthusom Blogs at:

>>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send


>>> email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to

>>> minTamil-u...@googlegroups.com


>>> For more options, visit this group at
>>> http://groups.google.com/group/minTamil
>>>

>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>>> visit our Muthusom Blogs at:

>>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send


>>> email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to

>>> minTamil-u...@googlegroups.com


>>> For more options, visit this group at
>>> http://groups.google.com/group/minTamil
>>

>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>> visit our Muthusom Blogs at:

>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send


>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to

>> minTamil-u...@googlegroups.com

rajam

unread,
Feb 22, 2011, 3:41:57 PM2/22/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
அதில் (தேங்காயெண்ணெயில்)
எவ்வளவு "கெட்ட
கொலெஸ்ட்டெரால்" இருக்கு?

> unsub...@googlegroups.com

செல்வன்

unread,
Feb 22, 2011, 3:54:18 PM2/22/11
to mint...@googlegroups.com
தேஙாய் எண்னையில் துளி கூட கொலஸ்ட்ரால் இல்லை.

எந்த தாவர உணவிலும் கொலஸ்ட்ரால் இல்லை.

ஆனால் தேங்காய் எண்னையில் சாச்சுரேட்டட் ஃபேட் இருக்கு.நம் உடல் அதை எளிதா கொலஸ்ட்ராலா கன்வர்ட் செய்துக்கும்


2011/2/22 rajam <ra...@earthlink.net>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

rajam

unread,
Feb 22, 2011, 4:47:16 PM2/22/11
to mint...@googlegroups.com
உண்மைதான்! நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு, அடர்த்திக் கொழுப்பு, கரையும் கொழுப்பு, நல்ல கொலெஸ்டெரால், கெட்ட கொலெஸ்டெரால் ... இவைகளுக்கு இடையில் உள்ள வேறுபாடு நிறையப் பேருக்குத் தெரிந்திருக்காது. 
இந்தக் கட்டுரையும் நல்ல கருத்துக்கள் தரும்:

Innamburan Innamburan

unread,
Feb 22, 2011, 4:52:37 PM2/22/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
'ஆனால் தேங்காய் எண்னையில் சாச்சுரேட்டட் ஃபேட் இருக்கு.நம் உடல் அதை
எளிதா கொலஸ்ட்ராலா கன்வர்ட் செய்துக்கும்.'
அடியேனும் அதையே பகர்ந்தேன்.

22 02 2011

> www.holyox.blogspot.com
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>

rajam

unread,
Feb 22, 2011, 4:56:03 PM2/22/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
என்ன மாதிரி கொலெஸ்ட்ரால்
என்று சொல்லவில்லையே?
எந்த அளவு என்றும்
சொல்லவில்லையே?

நெய்யைவிடவா தேங்காய்
எண்ணெய் மோசமான

கொலெஸ்ட்ராலை

உண்டாக்கும்? அல்லது
அதிகமாக்கும்?

>>>> unsub...@googlegroups.com


>>>> For more options, visit this group at http://groups.google.com/
>>>> group/minTamil
>>>

>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
>>> may like to visit our Muthusom Blogs at: http://
>>> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
>>> send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to minTamil-

>>> unsub...@googlegroups.com


>>> For more options, visit this group at http://groups.google.com/
>>> group/minTamil
>>
>>

>> --
>> செல்வன்
>>
>> கள் விற்கும் உரிமையை
>> மக்களிடம் இருந்து
>> பறித்து
>> பெருவணிகர்களுக்கு
>> கொடுக்கும் கழகங்களை
>> புறக்கணிப்போம்
>> கொங்குநாடு முன்னேற்ற
>> பேரவைக்கு ஓட்டளிப்போம்
>>
>>
>>
>>
>>
>>
>>
>> www.holyox.blogspot.com
>>
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
>> may like to visit our Muthusom Blogs at: http://

>> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
>> send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-

>> unsub...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/
>> group/minTamil
>>

>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
>> may like to visit our Muthusom Blogs at: http://
>> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
>> send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-

>> unsub...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/
>> group/minTamil
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-

> unsub...@googlegroups.com

Reply all
Reply to author
Forward
0 new messages