முயல், ஆமை கதையின் ‪#‎லேட்டஸ்ட்_வெர்ஷன்‬ ..

152 views
Skip to first unread message

Engr.Sulthan

unread,
Nov 18, 2015, 8:27:30 AM11/18/15
to
 

முகநூலில் என் பக்கத்தில்....

முயல், ஆமை கதையின் ‪#‎லேட்டஸ்ட்_வெர்ஷன்‬ ......
முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.
‪#‎நீதி‬ : தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!
வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!
தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.
‪#‎நீதி2‬ : நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!
கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!
காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).
ஒன்... டூ... த்ரீ...
முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!
அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!
‪#‎நீதி3‬ : நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
இன்னும் கதை முடியவில்லை மக்களே.!
ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?
ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!
‪#‎நீதி4‬ : டீம் வொர்க் வின்ஸ்!
‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.
இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை. நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!
வாழ்க்கையில்
முயலும் ஜெயிக்கும்,
ஆமையும் ஜெயிக்கும்.
‪#‎முயலாமை‬ மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் ‪#‎அனுபவம்‬ .
முயலாமல் தோற்றால் ‪#‎அவமானம்‬ .
வெற்றி நிலையல்ல,
தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!!
நண்பர் அனுப்பியது, மனதை தொட்டதால் பகிர்கிறேன்....!!

Engr Sulthan

12278298_10207164872612681_1301044648_n.jpg

Sundaramurthy Murthy

unread,
Nov 20, 2015, 6:42:56 AM11/20/15
to sangavi sundramurthy, Devanathan Sundiramoorthy, Saranya Subramanien, Abu Shivam, Vanmathi sampath, Jayanthi Vetriselvam, adhi, Jaisankar Sankar, Ezhil Arasan, Niranjana Harikrishnan, krithika nagarajan, nadane64, PERIYA ALAGAPPAN HARISH, HARISH ALAGAPPAN, Jain Muthu, Kamal Prashad, BK Lenine, mint...@googlegroups.com, Jayanthi Rajkumar, THIRU

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

12278298_10207164872612681_1301044648_n.jpg

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 20, 2015, 7:44:40 AM11/20/15
to mint...@googlegroups.com, sangavi sundramurthy, Devanathan Sundiramoorthy, Saranya Subramanien, Abu Shivam, Vanmathi sampath, Jayanthi Vetriselvam, adhi, Jaisankar Sankar, Ezhil Arasan, Niranjana Harikrishnan, krithika nagarajan, nadane64, PERIYA ALAGAPPAN HARISH, HARISH ALAGAPPAN, Jain Muthu, Kamal Prashad, BK Lenine, Jayanthi Rajkumar, THIRU
ஆங்கிலத்தில் பவர் பாயிண்ட் பிரசண்டேசனாக இந்த முய லாமை பதிவைப்படித்துள்ளேன்.
ஆனால் இந்தத் தமிழ் பதிவு வெகு அருமை. பகிர்வுக்கு நன்றி சுல்தான் ஐயா.

பிற நண்பர்களுக்கு,
வணக்கம். என்னுடைய முகநூல் பக்கம்:
Fb:Vino Vinaitheerthan
https://web.facebook.com/vinaitheerthan.vino.3
நண்பர்களைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நட்பாக விருப்பம்.
மிக்க நன்றி.


--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Rukmani Seshasayee

unread,
Nov 24, 2015, 5:17:23 AM11/24/15
to mint...@googlegroups.com
கதை மிகச் சிறப்பாக உள்ளது.பகிர்வுக்கு நன்றி.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 
Reply all
Reply to author
Forward
0 new messages