Re: [தமிழ் மன்றம்] Re: [தமிழ் உலகம்] கோவில் - கோயில் எது சரி?

52 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Jan 1, 2014, 10:43:41 AM1/1/14
to தமிழ் மன்றம், thami...@googlegroups.com, mintamil, Sivakumar M A, adi...@shaivam.org, Raji M, resp...@shaivam.org, mylai rathnavelu
அன்பு நிறை சிங்கை கிருஷ்ணன் 
மற்றும் இவ்விழையில் நல்ல கருத்துகள்  வைத்து சிறப்பித்தோர்களுக்கு,
,
தமிழ் இயலில் காணும் நூற்பாக்கள் மொழியானது மிகவும் எல்லையற்று 
தனியாரின் மனம் போனவாக்கினில் யெல்லாம் சிதறிச் சென்றுவிடாமல் 
ஓர் கட்டுப்பாட்டினுக்குள் சென்றால்தான் நன்கமையும் எனும் கருத்தில் 
உருவாகுவையே                                                                                       

இலக்கியம் கண்டபின் இயல் தோன்றுதல் வரலாறு என்பதனை நன்கே அறிவீர் 

மக்கள் வாய்வழி அமைந்துவிடும் சொற்களின் புணர்வுகள் யாவற்றையும்
நூற்பாக்களின் உட்புகுத்தவே பல்வேறு காலங்களில் இயலாசிரிரியர்கள்தொடர்ந்து
முயன்று வந்துள்ளனர்

அதான்று இயலாசிரியர் அவற்றின் உரைகாரர் இவர்களிடை சிலபோது கருத்து
வேறுபாடுகள் வந்துள்ளதும் அறிவீர்கள்
(வீரசோழியம் ழகரம் டகரமா அல்லது ளகரமாக மாறுமா?  என்பதில்)
புணர்வு விதிகள் யாவும் மக்கள் வாய்வழி புணரும் வழியில் மட்டுமல்லமல்
மொழியில் பொருள் கோள் நிலையிலும் ஐயம் தோன்றாமல் நிற்கவும் வழிவகுக்க
வேண்டும் என்பதால் சிலபொது 

வழு அமைதி / போலி / இலக்கணப்போலி / எனவெல்லாம் காட்டிச் சென்றுள்ளனர் 

திருவாளர் சாமிநாதன் அவர்கள் காட்டிய நூற்பா மிகச் சரியானதே
முரண்பாடுகள் என திவாகர் காட்டியதை யு ம் அவரே இடைப்போலி யெனவும் காட்டியுள்ளார் 

வல்லமை இணைய தளத் தில் இதற்காகவே ஒர் கருத்தினை  வைத்தேன் ஆங்கே

நூற்பா ஏதும் காட்டாமல் இயல்பாக எளிதாக ஒர்  சொல் புணர்வு எப்படி அமைய முடியும்
எனும் கருத்தினை வைதுள்ளேன்  இதுவேதான் ஆயிரம் ஆயிரம்ஆண்டுகளாக மக்கள் பயன் 
கொண்டு வந்துள்ள வழி என புள்ளியல் வழி 90  (+ 1150எடுத்துக்காட்டுகள் வைத்தேன்
 
நகல் காண்க 

கோயில் - கோவில்

கோ + இல் = கோயில்
கோ இறைவன் = கடவுள்
கோ = இறை = நாடாளும் மன்னன்
என 'கோ' விற்கு இரு பொருள்கள்  உள்ளன அறிவோம்

இல்= வாழும் இடம் = இல்லம் 

கோவில்:இச்சொல் இறைவனை வழிபடும் இடம் என்னும்
பொருளில் வழங்குதல் ஏனோ இந்நாள் நன்கே பரந்துள்ளது. 
எனினும் மேற்காட்டிய இருவித பயன்பாடுகளில் கோயில்
என யகர இகரம் (யி) இட்டு எழுதுதலே பிழை அற்றதாகும் 

இச்சொல் நிலைமொழி யின்  'ஓகார' த்துடன் வருமொழியின்
இல் லின் 'கரம்' சேரும் புணர்வில் 'இ' யின் இணைஒலியான
(அணித்ததான)  'யி' கரம்தன் இயல்பாக  வரமுடியுமே அன்றி
'வி' என இதழ் குவியும் சேய்மை ஒலியாக வருவது இயைபு
உடையது ஆகாதது காணலாம்

மேலும் 
கோயில் எனும் சொல்தான் நம் இலக்கிய நூல்களில் யாங்கணும்
காண்கின்றோம் சங்க நூல்களிலும் சிலம்பு மணிமேகலை முதல்
பிற்கால நூல்கள் வரை யாவற்றிலும் / கோவில் என எவ்விடத்திலும்
காணாது / கோயில் எனும் சொல்தான் தெள்ளத் தெளிவாக நூறு
சதம் பயனில் உள்ளமை காணமுடிகின்றது. இணைப்பில் உள்ள இரு
கோப்பினைக் காண்க. அதனில் வைத்துள்ள 90 எடுதுக்காட்டுகள்
அல்லாமல் இறைவழிபாட்டு திரு மறை நூல்களாம் 12 சைவத் திரு
முறைகள் ஆழ்வார்களின் 4000 திவ்யப் பிரபந்த பாசுரங்களை நோக்க
ஆங்கெல்லாம் கோயில் எனும் சொல்லே பயன் கொள்ளப்படவும்
அந்த 1150 இடங்களில் யாங்கணும் கோவில் என காணவே இல்லை
என்பதும் உணரப்பட்டது. சைவம் வைணவம் எனும் இரு மரபுகளின்
தலையாய தலங்களாம் தில்லை திருவரங்கம் இரண்டும் கோயில்
எனத்தான் குறிக்கப் படுகின்றனதும் அறிவோம் அல்லவா?
 
எனவே நாம் இனி கோயில் எனவே வழுவின்றியே எழுதுவோமே 
XX கோவில் XX எனும் சொல் பயன்பாட்டினைத் முற்றிலும் தவிர்ப்போம்


நூ தா லோ சு
மயிலை 

சங்க நூல்கள் (2).docx
இடைக்கால நூல்கள் (1).docx

Krishnan S

unread,
Jan 1, 2014, 8:35:33 PM1/1/14
to mint...@googlegroups.com
அன்பாந்த திரு,நூ தா லோ சு அவர்களுக்கு,
வணக்கம்.
புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாகுக.
மிக்க நன்றி தங்களின்  விரிவான  விளக்கத்திற்கு.

  பொதுவாக, கோயில் போன்ற மயக்கம் தரும் சொல் தமிழில் பல இருக்கின்றன்.
  எனக்கும் இந்த ‘ கோயில் ‘ மயக்கம் தரும் சொல்லாக பல காலம் இருந்தது.
  ஆகையால்தான் கோயிலை இணையத்தில் வெளியிட்டேன்.

சிங்கப்பூர், மலேசியாவில் முன் போன்று தமிழ் பள்ளிகள் இல்லை.
 அது ஒர் பழங்கனவாய் ஆகிவிட்டது என்பது எம்போன்றவர்களுக்கு இன்னும்
அந்த காயத்தின் வடுவும், வலியும் உண்டு. இன்றைய சூழ்நிலையில்...,
 பிறர் சொல்வது இருக்கட்டும்..., நம்மவர்களே “தமிழ்” தேவையா என்றும்
தேவையில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். இலக்கணம், இலக்கியம்
சொல்லிக்கொடுக்கக்கூடிய தமிழ் பள்ளிகள் இல்லை.
 (முதுமொழி அல்லது பல்கலைகளில் இருக்க்லாம்)
ஆக கோயில் போன்ற மயக்கம் தரும் சொல்லுக்கு விளக்கம் தர இனி வரும்
தமிழ் சமுதாயத்திற்கு, தமிழ் மக்களுக்கு இல்லாமற் போனாலும் வியப்புக்குரிய
செய்தி அல்ல.
நன்றி, வணக்கம்
அன்புடன்
கிருஷ்ணன்
சிங்கை





2014/1/1 N D Logasundaram <selvi...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

அன்பொடு
கிருஷ்ணன்,

சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

N D Logasundaram

unread,
Jan 2, 2014, 12:16:33 AM1/2/14
to mintamil, Krishnan S
அன்பு மிகு திருவாளர் சிங்கை கிருஷ்ணன் அவர்களுக்கு ,

தங்களைப்பற்றியும் தங்கள் நீண்ட கால தமிழ் பணி பற்றியும் மிக நன்றாகவே அறிவேன் அய்யா.

கோயில் பற்றி வேறொருவர் கருத்து எனக் காட்டும் போதே  தெரிந்து கோண்டென்
ஐயம் நீக்கவே இந்த இடுகை என்று.  மிக்க பயனுள்ளதாக அமையவே மடலாடலிலும் வைத்துள்ளீர்கள்
நல்ல எண்ணம் வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர்க 

சிங்கை யில் மட்டுமல்ல இங்கு தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசுவது ஏதொ தகாத செயல் என
தோ ன்று ம்படி சூழ்நிலைகள் மாறி வருகின்றன இவை பல ராலும் தீவிர முயற்சியால் 
மாற்றப்பட வேண் டும் 

அன்புடன் 
நூ தா லோ சு               


2014/1/2 Krishnan S <krishna...@gmail.com>

Anbu Jaya

unread,
Jan 2, 2014, 1:41:50 AM1/2/14
to mint...@googlegroups.com
 
மிக்க நன்றி நு தா லோ சு ஐயா.
பழைய இலக்கியங்களை மதுரைத் திட்டத்துக்காக தட்டச்சு செய்யும்போது, பலமுறை "கோயிலை"த்தான் கண்டிருக்கிறேன். அது தவறு என்று சிலர் கூறும்போது தமிழை பள்ளியில் ஒரு பாடமாக மட்டுமே படித்த என்போன்றவர்களுக்குக் குழப்பம் உண்டாகிறது.
உங்கள் விளக்கத்திற்கு மீண்டும் நன்றி
 
அன்புடன்,
அன்பு ஜெயா
 
 


2014/1/2 N D Logasundaram <selvi...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages