
அவ்வையாரும் ஒரு சித்தர் என்ற கருத்து ஒரு காலத்தில் பரவலாகப்
பேசப்பட்டது என்று நினைவு. சரியா?
எம்.டி.ஜெயபாலன்
On May 28, 5:46 pm, RKS <sathishas...@gmail.com> wrote:
> Sent to you by RKS via Google Reader: பெண் சித்தர்கள்....சில கேள்விகள்...
> via சித்தர்கள் இராச்சியம் by nore...@blogger.com (தோழி) on 5/27/10
> Things you can do from here:
> - Subscribe to சித்தர்கள் இராச்சியம் using Google Reader
> - Get started using Google Reader to easily keep up with all your
> favorite sites
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்த சிந்துஜா என்னும் பெண் வந்து, நான் முன்பின் அறியாத ஸ்ரீசக்கரம்மா என்னும் சித்தரைப் பற்றி அறிந்து கொள்ள உதவியதை, இன்று ஸ்ரீசக்கரம்மா என்னும் பெண் சித்தர் என்மேல் அருள் கொண்டு தானே வந்து தன்னைப் பற்றிக் கூறியதைப் போல் உணர்ந்தேன்,
அதன் பிறகு மக்களுக்கு தரிசனம் அளிக்க ஆரம்பித்தார், புன்னகையோடு காட்சிதரும் அவரின் பரித்த ஓசையுடனானன அந்த சிரிப்பே அருளாக வழங்கப்பட்டது
இவரை அடையாளம் கண்டவர் மைலாப்பூரைச் சேர்ந்த மருத்துவர், மனித நேயர், மருத்துவக் குலச் செம்மல் நஞ்சுண்ட ராவ், அவர்களின் நாட்குறிப்பை வைத்துதான் இந்த ஸ்ரீசக்கர சித்தரின் பல விவரங்களை சேகரித்திருக்கின்றனர்
இல்லையெனில் இவரைப் பற்றிய விவரங்கள் எப்போது வெளிவந்திருக்கும் என்றே தெரியாது
இந்த ஸ்ரீசக்கரம்மா அவர்கள் சிவ பூஜையும் ,ஸ்ரீசக்கர பூஜையும் செய்வார்கள்,
மஹா பெரியவா ஸ்ரீமத் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இந்தக் கோயிலுக்கு விஜயம் செய்திருக்கிறார், தியானம் செய்திருக்கிறார் என்பது விசேஷச் செய்தி,
காயத்ரீ மந்திரம் போல் ஸ்ரீசக்ரம்மாவைப் பற்றி மந்திரம் ஒன்று உள்ளது
”ஓம் குரு தேவ்யை ச: வித்மஹே பரப்ரும்மைச; தீமஹி
தன்னோ அனந்தம்பா ப்ரசோதயாத்:”
திருவான்மியூரில் கலாக்ஷேத்திரா அவன்யூவில் உள்ள பாம்பன் ஸ்வாமிகள் கோயில் பக்கத்தில் சக்கரை அம்மா கோயில் இருக்கிறது,அந்தக் கோயிலில் ஸ்ரீசக்கரை அம்மா என்கிற இந்த சித்தரின் தியான மண்டபமும் அவருடைய அதிஷ்டானமும் உள்ளது
இந்த பெண் சித்தரின் பூர்வாஸ்ரமப் பெயர் அனந்தம்பாள்
சித்தரான பிறகு அவர்கள் ஸ்ரீ சக்ரம்மா என்று அழைக்கப் பட்டார், முதலில் ஸ்ரீசக்கர என்று அழைக்கப்பட்டு பின்னர் ஸ்ரீசக்கரையாக மறுவி ,அதன் பின்னர் ஸ்ரீ சக்கரம்மா நிலைத்தது, சிறுவயதில், உடைந்த சிவலிங்கத்தை தன் கால் எலும்பை உடைத்து சரிசெய்ய முயற்சித்திருக்கிறார், அவர்கள் பத்தாண்டுகள் உணவு அருந்தவில்லை, நீரும் அருந்தவில்லை வானில் பறக்கும் சித்தி பெற்றவர் என்று சொல்கிறார்கள்
பௌர்ணமி நாட்களிலும் திருவாதிரை நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் கூடும் கோயில் இது,
திரு வி கல்யாணசுந்தரம் அவர்கள் ”உள்ளொளி” என்னும் நூலில் இந்த சித்தரைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்
திரு வீ க அவர்கள் கல்லூரியின் மாடியில் உலாவிக்கொண்டிருக்கும் போது சித்தர் ஸ்ரீசக்கரம்மா வானத்திலிருந்து பறந்துவந்து நின்றார் என்று குறிப்பிட்டிருக்கிறார்
அவரைப் பற்றிய ஒரு பாடல்
”திருவான்மியூர் செய்த தவம் என்ன தாயே
குருவாய் அருள் காட்ட குடி கொண்டாய் நீயே”
பக்தி வந்தி சேருமிடம் பக்தர் மனம் சொக்குமிடம்
அக்கம்பக்கம் மட்டுமின்றி அகிலம் வந்து நிற்குமிடம்
புண்ணியத்தின் மொத்த வரி புரிந்தவர்க்கு சொர்க்க புரி
சன்னிதிக்கு வந்துவிட்டால் சகலருக்கும் சொர்க புரி
அனந்தம் என்றால் கணக்கில்லை அருளுக்கும் கணக்கில்லை
மனதாறப் பேசுகின்ற மகிமைக்கும் கணக்கில்லை
எண்ணிக்கையில் அடங்காத எத்தனை -பேர் நன்மைபெற்றார்
பன்னிரண்டு சுற்று வந்து பல குறையும் தீரக்கண்டார்
இளமையான வயதினிலே என்ன இது துறவறமா
வெயில் மழையும் பார்க்காமல் வெட்ட வெளி அனுபவமா
பத்தாண்டும் உணவில்லை பக்கம் யாரும் செல்லவில்லை
என்ன இது என்ன என்றே ஏங்காத மனிதரில்லை
மானுடம் பறந்து வந்து மாடியிலெ நிற்குமா
மற்றவர்க்கு சொன்னாலும் மனித மனம் நம்புமா
வானில் பறக்கின்ற சித்தி பெற்ற தேவீ நீ
வாழ்க்கையில் பறப்போர்க்கு வழிகாட்ட தேவை நீ
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/5/30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>: