மனித கஷ்டம் > --இராமச்சந்திர கவிராயர்.

87 views
Skip to first unread message

Krishnan S

unread,
Jul 9, 2009, 7:18:18 PM7/9/09
to tamil_ulagam, mint...@googlegroups.com
----Original Message-----
> From: Hari Krishnan [mailto:harikris@...]

> ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
> அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக
> மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
> வழியினிலே கடன்காரர் மறித்துக் கொள்ள
> சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
> தள்ளவொண்ணா விருந்துவர சர்ப்பம் தீண்ட
> கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
> குருக்களோ தட்சிணைகள் கொடு என்றாரே.
>
> --இராமச்சந்திர கவிராயர்.
>
''''''''''''''
வீட்டிலே பசு கன்றை ஈன்றது. அதைப் பார்க்கப் போகும் போது மழை பெய்தது. மழை பெய்ததால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததது. வீட்டிலே பணியாளனுக்கு (அகத்து அடியாள் - மாமி இல்லை) உடல் நிலை சரியில்லாமல் போனது. நிலத்தில் வேலை செய்யும் ஆள் இறந்து போனான். அதனாலே, மழை பெய்த ஈரம் காய்வதற்கு முன் விதைத்து விடலாம் என்று விதை நெல்லை எடுத்துக் கொண்டு போனால், வழியிலே கடன்காரன் மறித்துக் கொண்டான். அந்தச் சமயத்தில் யாரோ இறந்து போன செய்தியை (சா ஓலை) எடுத்துக் கொண்டு ஒருவன் வீட்டுக்கு வந்தான். வீட்டில் இருந்தவரைப் பாம்பு கடித்துவிட்டது. அரசனிடமிருந்து நில வரி கட்டச் சொல்லி Demand note வந்தது. இதற்கு நடுவில் குருக்கள் (ஆசிரியர், அகத்து வாத்தியார் - கோயில் குருக்கள் இல்லை) தட்சணை வேண்டும் என்று வந்து நின்றார்.

இவருக்கு வீட்டில் வேலை செய்ய ஆள், நிலத்தில் வேலை செய்ய அடிமை, நில வரி கட்டும் தகுதி எல்லாம் இருக்கிறது. குருக்களுக்கு தட்சணை கொடுப்பதுதான் துன்பத்தின் உச்சமாகப் போய்விட்டது! சர்ச் பார்க் கான்வென்டில் வறுமையைப் பற்றி கட்டுரை எழுதச் சொன்னார்களாம். குழந்தை எழுதியது. There lived a man. He was poor. His wife was poor. His children were poor. And his chauffeur was also poor.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
http://singaporekovilgal.blogspot.com/

Hari Krishnan

unread,
Jul 10, 2009, 1:47:04 AM7/10/09
to minT...@googlegroups.com


2009/7/10 Krishnan S <krishna...@gmail.com>

இவருக்கு வீட்டில் வேலை செய்ய ஆள், நிலத்தில் வேலை செய்ய அடிமை, நில வரி கட்டும் தகுதி எல்லாம் இருக்கிறது. குருக்களுக்கு தட்சணை கொடுப்பதுதான் துன்பத்தின் உச்சமாகப் போய்விட்டது! சர்ச் பார்க் கான்வென்டில் வறுமையைப் பற்றி கட்டுரை எழுதச் சொன்னார்களாம். குழந்தை எழுதியது. There lived a man. He was poor. His wife was poor. His children were poor. And his chauffeur was also poor.


அடேங்கப்பா! இதையெல்லாம் கூடவா வைத்திருக்கிறீர்கள்!  எழுதிய எனக்கே மறந்துபோய்விட்டது.  ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் மன்ற மையத்தில் (ஃபோரம் ஹப்) எழுதி, அதன் பின்னர் அகத்தியரில் இட்ட நினைவிருக்கிறது.  இதன் பிரதிதான் என்னிடத்தில் இல்லாதிருந்தது.  

அகத்தியரில் நான் எழுதியிருந்த சில மஹாபாரத நிகழ்வுகள், திருக்குறள் விளக்கங்கள் போன்றவையும் என்னிடம் இல்லை.  சிலவற்றை முயன்று தேடியும் எனக்குக் கிட்டவில்லை.  உங்களிடம் ஏதேனும் உண்டா?  உண்டியல் குலுக்கிவிட்டேன்! :-))
--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Jul 10, 2009, 7:08:52 AM7/10/09
to மின்தமிழ்

On Jul 9, 6:18 pm, Krishnan S <krishnan.sin...@gmail.com> wrote:
> ----Original Message-----
> > From: Hari Krishnan [mailto:harikris@...]
> > ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
> > அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக
> > மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
> > வழியினிலே கடன்காரர் மறித்துக் கொள்ள
> > சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
> > தள்ளவொண்ணா விருந்துவர சர்ப்பம் தீண்ட
> > கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
> > குருக்களோ தட்சிணைகள் கொடு என்றாரே.
>
> > --இராமச்சந்திர கவிராயர்.
>

இப்பாட்டை வைத்து, ஒருவர் எழுதியுள்ள கதை:
http://srisagajan.blogspot.com/2007/12/blog-post_6977.html

கணேசன்

Krishnan S

unread,
Jul 10, 2009, 10:04:04 AM7/10/09
to minT...@googlegroups.com
அன்புள்ள திரு, ஹ்ரிகிருஷ்ணன் அவர்களுக்கு,
வணக்கம் அய்யா.
இணையத்தில் இணைந்த காலத்தில் ஆர்வத்தின் காரணமாக
எனக்கு பிடித்த மட்லைகளை Floppy -இல் சேமித்து வைத்திருந்தேன்.
அதற்கு பல முறை எழுத்துரு மாறியது.
அப்போதெல்லாம் மாற்றி வைத்தேன்.
Floppy மறைந்து வந்த சமயம் குறுந்தகடு, tumd drive இடம் மாறினேன்.
இதில் பல காணாது போய்விட்டது.
மீண்டும் பார்க்கிறேன். தாங்கள் குறித்த மகாபாரதம்,குறள்
இருப்பின் நிச்சியம் நினைவில் நிலழாடும்.
அன்புடன்,
கிருஷ்ணன்


2009/7/10 Hari Krishnan <hari.har...@gmail.com>



--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/
Reply all
Reply to author
Forward
0 new messages