அடுக்கடுக்கான உட்பொருள் விளக்கம். அந்தாதி முறைப்படி, பாமாலை என்பதை
நிருவும் வண்ணம் வேறெங்கிருந்தும் எடுக்காமல் ஆழ்வார்கள்
ஸ்ரீசூக்தியிலிருந்து பேசுவது பெரியோர் சிறப்பு. அத்தனையும் அத்துபடியாக
இருந்தால் ஒழிய இது செய்முறைப்படாது. அவர்களது database பெரியது. It's an
interconnected network. க்ஷண நேரத்தில், மின்னல் பரவுவது போல், வேத
சூத்திரங்களுக்கும், ஆழ்வார் ஸ்ரீசுக்திக்கும், ஸ்ரீமத்
இராமாயணத்திற்கும் பாயும் அழகு, கேட்டுப் பரவசித்தால் ஒழிய அறிய
மாட்டாது.
இவ்வளவும் பேசிவிட்டு வித்யா கர்வமென்பது துளிக்கூட வாராது, 'அடியேன்'
எனும் பாவம் கொள்ளும் போது ஈகோ வெட்கப்பட்டு ஓடோடிவிடும்.
என்னவொரு சம்பிரதாயம்! என்னவொரு வித்யை!
இதுவொரு "தாமரைப் புரட்சி" என்று நான் அழைக்கிறேன்.
அரங்கத்தில் நிகழ்ந்த தாமரைப்புரட்சி!!
வாழ்க, வாழ்க!
க.>
பிகு: மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்காதே என்பது போல் அமலங்களாக
விழிக்கும் பெரிய கண்களைப் பற்றிப் பேசும் போது, யாதப்பிரகாசரை நினைப்பதே
நெஞ்சைச் சுடுகிறது.
கண்ணழகில் மயங்கிப் போகவைத்ததற்கு, நன்றியும் வணக்கமும்.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
On Mar 27, 1:32 pm, Thirumalai Vinjamoor Venkatesh
ரெ.கா.
On Mar 27, 4:32 pm, Thirumalai Vinjamoor Venkatesh
<vinjamoor_venkat...@yahoo.com> wrote:
> நேற்று "கண்ணன்" இழையில் அடியேன் கூறியிருந்த "கப்யாஸம்" பற்றிய இடுகை இதோ. மன்னிக்கவும் சற்றே பெரியது.
>
> "கவர்ந்த கண்கள்" என்ற இந்த தலைப்பை உபயோகிக்க, மானசீகமாக சாண்டில்யன் அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுகிறேன். இத்தலைப்பு அவர் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினத்தின் தலைப்பு. இதில், பிள்ளை உறங்காவில்லிதாசரை, இராமநுசர் எவ்வாறு அரங்கனின் திருக்கண்களைக் காட்டி நல்வழிப்படுத்தினார் என்ற வரலாற்றை சுவையாகச் சொல்லியிருப்பார். முதலில் தன் மனைவின் கண்களால் கவரப் பட்டு,
> வெறும் "வில்லி" யாக இருந்தவர், எவ்வாறு திருவரங்கனின் "கரியவாகிப் புடைபரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி, நீண்ட அப் பெரியவாய கண்கள்"-ஆல் கவரப்பட்டு, இராமநுசரை சரணடைந்து உய்ந்து போனார் என்று வெகு சுவையாகச் சொல்லியிருப்பார்.
>
> com/invite/
Thirumalai Vinjamoor Venkatesh wrote:
(மன்னிக்கவும் ஆய்த எழுத்தை எப்படி தட்டுவது என்று தெரியவில்லை)
q = ஃ
Hope this helps,
ng
.//ஆழ்பொருள்.... "அவன் திருக்கண் திறந்து பார்த்தால் போதும்" அனைத்து சாபங்களும் நீங்கும் என்பதுதான். இதுபற்றியே நாம் முன்னரே பார்த்த கோதையின் வார்த்தை ... " செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ..... அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்து" என்றாள்//
செங்கண்மால் திருக் கண்கள் எப்போதாவது மூடியிருக்குமா ?
மனிதன் எப்போதும் குறை சொல்வான் தான் போய் இடித்துவிட்டு ,மேஜை இடித்து விட்டது என்பான்
கண் படும் படி நிற்க அந்த வித்தையை இன்னும் சொல்லிகொடுங்கள் வேங்கடேஷ்!
மிக அருமையான விளக்கங்கள் ! தொடருங்கள் !
நன்றி
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
நேற்று "கண்ணன்" இழையில் அடியேன் கூறியிருந்த "கப்யாஸம்" பற்றிய இடுகை இதோ. மன்னிக்கவும் சற்றே பெரியது.
"கவர்ந்த கண்கள்" என்ற இந்த தலைப்பை உபயோகிக்க, மானசீகமாக சாண்டில்யன் --
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

மிக அருமையான விளக்கங்கள் ! தொடருங்கள் !>
தங்களுக்கு அடியேனுடைய நன்றியும் வந்தனங்களும்
அடியேன்
வேங்கடேஷ்
Thirumalai Vinjamoor Venkatesh wrote:
> கணேசன் சார்,
>
> மிக்க நன்றி. வேலை செய்கிறது. இதோ..... ஃ
>
> அடியேன்
> வேங்கடேஷ்
>
இதெல்லாம் வந்ததற்கு அடிப்படை வரலாற்றை எழுதுவேன்.
அதில் என் பங்கு அணிற்பங்காகவும் உண்டு.
ஸ்ரீமதி கமலம் கூட்டொலிகள் (diphthongs) தட்டெழுத ஒருமுறை கேட்டார்.
ஐ = ai, ஔ = au.
யூனிகோட் வருவதன் முன், ஹார்வர்ட் - கியோட்டா ஸ்கீம் வந்தது,
அதில் தமிழ் எழுத்துக்கள் சேர்த்தப்பட்டன. உம்:
See CTamil (Univ. of Paris, list owner: Jean-Luc Chevillard)
discussions:
http://www.services.cnrs.fr/wws/info/ctamil
“
A frequently used scheme for translitteration of Tamil is:
a A i I u U e E ai o O au K
k G c J T N t n p m y r l v Z L R n2 (See Here for variants) “
http://www.services.cnrs.fr/wws/arc/ctamil/2002-04/msg00004.html
Pl. note that t is used by Indologists for , what is normally written
as "th" by Tamils. Since we Tamils don't have the aspirated letters
of Sanskrit etc., we just use "th" (I discussed this long ago with
Muthu,
while forming Anjal translit. scheme). Now Muthu's anjal sceheme
is almost univeraslly used in e-kalappai, nhm, ..... editors.
-----------
பேரா. செல்வா தமிழின் ஒலிப்பு முக்கியத்துவத்தை விளக்கி வருகிறார்,
பலரும் ஆங்கிலக்கல்வி, உரோமன்/ஆங்கில எழுத்தைக் கொண்டு
தமிழ் வாசிக்கும் நிலை. இந்நிலையில் agam, azhagu, piRagu, mugappu,
idugai, ... என்றெல்லாம் எழுதுதல் கன்னடம், தெலுங்குக்குப் பொருத்தமே
தவிர, தமிழுக்குச் சற்றும் பொருந்தாது. akam, azhaku, piRaku, makappu,
idukai என்றோ, aham, azhahu, piRahu, muhappu, iduhai, என்றோ *தமிழை*
ஆங்கில எழுத்தில் எழுத வேண்டும். நா. கண்ணன் தொல்காப்பியத்தில்
“செந்தமிழ் சிவணிய நிலங்கள்” என்றால் என்றால் என்ன? என வினவினார்.
மதறாஸை விட்டுவிடுங்கள், ‘தி ஹிந்து’ பேப்பரில் பிற மாநில ஜர்னலிஸ்ட்ஸ்
எழுதும் தமிழ் வார்த்தை மரபு தமிழுக்குப் பெரிய ஊறும், தீங்கும் ஆகும்.
செந்தமிழ் சிவணிய மரபு: பாண்டி நாட்டிலும், கொங்கிலும், இலங்கையிலும்
காணலாம். அவர்கள் எழுதும் வார்த்தைகளில் ஆங்கில எழுத்தில்
உயிரெழுத்துக்களின் இடைப்பட்ட ககரம் ஒருவகை ஹகர ஒலி.
Fricative sound for intervocalial -k-, something like -h- sound.
Hence, see http://noolaham.net (Note: *not* http://noolagam.net :) )
For Tamil to survive into the future, it's essential that
intervocalical -k-
is written in English script as -k- or -h-, definitely not as -g-.
will give a long essay with what linguists like late lamented Zvelebil
say on this.
முதலில் கல்யாண், முத்து, ... எல்லாம் மதறாஸ் மரபில்தான்
agam, azhagu, piRagu, mugappu, idugai, ... என்றெழுதிக்
கொண்டிருந்தார்கள். பிழையைச் சுட்டிக் காட்டினேன், பிறகு திருத்தம்
வந்தது.
மேலும் விரிவாகப் பின்னர்,
நா. கணேசன்
//மேலே எழுதியவை அனைத்தும், காஞ்சீபுரம் மஹாவித்வான்
அண்ணங்கராச்சார்யாரின் விளக்கத்தை அடியொற்றியே அமைந்தது.//
பலமுறை படித்தும் போதுமென்று தோன்றவில்லை.
இதுபோல் தொடர்ந்து எழுதுங்கள்.
எம்பெருமானது திருமேனி பஞ்சோபநிஷத் மயமானது என்பர்;
எம்பெருமானாரது திருமேனி த்ரமிடோபநிஷத் மயமானது.
//அழறலர் தாமரை//
இச்சொல் ‘பங்கஜம்’ என்பதற்கு நிகரானது;
அழறு – சேறு – பங்கம் (Pankam)
சேற்றில் முளைத்த செந்தாமரை - பங்கஜம்.
//இந்தச் சூடுதான் இராமாநுசரை இவ்வளவு வெறியுடன் பலப்பல உதாரணங்களுடன்
யாதவப்ரகாசருக்கு மறுப்பெழுத வைத்தது.//
இதில் உண்மை இருக்கலாம்;ஆயினும் ‘தயைக ஸிந்து’,
‘காரேய் கருணை’ என்னும் விசேஷணங்களுக்குச்சேரப் பொருள் கொள்வதே
முறையானது.
பிற்காலத்தில் யாதவரையும் அவர் கருணையோடு ஆட்கொண்டார்.
பரந்த மனம் கொண்ட பாஷ்யகாரர், அருளிச்செயலை அறியாதாரும் அதில் புதைந்து
கிடக்கும் பொருளைச் சுவைக்கும் வண்ணம் வடமொழி என்னும் ஊடகம் வழியே அதை
வெளி உலகுக்கு அறிவித்தார் என்பதே உண்மை. ஓசைப்படாமல் செய்த ஓர் அரிய
தமிழ்ப்பணி.
தேவ்
devoo wrote:
> Mar 27, 1:32 pm, Thirumalai Vinjamoor Venkatesh
>
> //மேலே எழுதியவை அனைத்தும், காஞ்சீபுரம் மஹாவித்வான்
> அண்ணங்கராச்சார்யாரின் விளக்கத்தை அடியொற்றியே அமைந்தது.//
>
> பலமுறை படித்தும் போதுமென்று தோன்றவில்லை.
> இதுபோல் தொடர்ந்து எழுதுங்கள்.
> எம்பெருமானது திருமேனி பஞ்சோபநிஷத் மயமானது என்பர்;
> எம்பெருமானாரது திருமேனி த்ரமிடோபநிஷத் மயமானது.
>
> //அழறலர் தாமரை//
>
> இச்சொல் ‘பங்கஜம்’ என்பதற்கு நிகரானது;
> அழறு – சேறு – பங்கம் (Pankam)
அளறு - செந்தமிழ்ச் சொல்.
அழறு - என்ற பேச்சுவழக்கை ஆழ்வார் பயன்படுத்துகிறார்.
கண்ணாலம் என்கிறாளே ஆண்டாள்,
ஆத்தாளை என்பார் அபிராமி பட்டர்.
எளிய மக்களுக்கு தாம் துய்த்த இறையின்பைத் தர
முக்கியமான இடங்களில் மக்கள்வழக்கை
வழங்குகின்றனர்.
அன்பிணை
நா. கணேசன்
அடடா! அத்திருவடி சம்மந்தம் இருப்பதே பெரிய பேரு அல்லவா? பரனூர் அண்ணா
சொல்வார், சும்மா வந்து கியூவிலே நில்லு அது போதும்ன்னு. அதுதான் நம்ம
கேஸு ;-) நினைச்சாலே சுகமா இருக்கு.
> இதில் உண்மை இருக்கலாம்;ஆயினும் ‘தயைக ஸிந்து’,
> ‘காரேய் கருணை’ என்னும் விசேஷணங்களுக்குச்சேரப் பொருள் கொள்வதே
> முறையானது.
> பிற்காலத்தில் யாதவரையும் அவர் கருணையோடு ஆட்கொண்டார்.
அதை மனத்தில் கொண்டுதான் நான் எழுதினேன். யாதவர் அப்படிச் சொல்லும் போது
பின்னால் நின்று கொண்டிருந்த பாஷ்யக்காரரின் சுடு கண்ணீர் யாதவரின்
முதுகில் படுகிறது. யாதவர் உடனே, உமக்கு என் வியாக்கியானத்தில் இஷ்டம்
இல்லையோ? என்கிறார். நெஞ்சு சுடும் போது சுடு கண்ணீர் வரும்.
ஆனந்தபாஷ்யம் செய்யும் போது குளிர் கண்ணீர் வரும். எம்பெருமானார்
நெஞ்சைச் சுட்ட அவ்வருணனையை மீண்டும், மீண்டும் நாம் ஏன் எழுதுவானேன்?
என்பதே என் விண்ணப்பம்.
தாசன்
கண்ணன்
"தெள்ளிய தமிழ் மாலைகள் ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே"
செய்ய தமிழ் மாலைகள் தெளிய ஓதி, தெளியாத மறை நிலங்கள்
தெளிகின்றோமே - ஸ்வாமி தேசிகன்.
இவர் உடையவருக்கு சுமார் 130 ஆண்டுகளுக்குப்பின்
தோன்றியவர்;ஆனால் உள்ளத்தால் உடையவரோடு வாழ்ந்தார்.
‘ஸங்கல்ப ஸூர்யோதயம்’ என்னும் நாடகம் எழுதினார்.
அதில் உடையவரும் ஒரு பாத்திரம்; அதில் தம்மையும்
அவருக்குச் சீடனாக்கிக் கொண்டு, தொண்டுகள் செய்வதாக
அமைத்தார். உடையவர் காலத்தில் பிறந்து அவருக்கு அணுக்கத் தொண்டு செய்யும்
பேறு கிட்டாத குறையை இதன் மூலம் தீர்த்துக் கொண்டார்.
இல்லறத் துறவியாக வாழ்ந்த இம்மாமனிதர்,
‘யதிப்ரவர பாரதீ ரஸபரேண நீதம் வய:’-
’துறவியற்கிறைவரின் உரைகளில் சுவை காண்பதில்
என் இளமை கழிந்தது’ என்று தம்மைப் பற்றிக் கூறிக்கொள்கிறார்.
நீங்கள் தற்போது எழுதிவரும் இப்பகுதி அச்சுவையை மின்தமிழ்
அரங்கிற்கு அளித்து வருகிறது.
நாலாயிரம் குறித்து இவர் அருளிய ‘நிகம பரிமளம்’ தற்போது
மறைந்து விட்டது ஒரு பெரிய குறைதான்.
தேவ்
அளறு - செந்தமிழ்ச் சொல்.//
ஆம் நண்பரே,
நினைவுக்கு வருகிறது -
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்தளறாயிற்றே.
ஆயிழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளறு அழுந்தி
மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று
தேவ்
மேலும் விரிவாகப் பின்னர்,
நா. கணேசன்//
நீங்கள் பல இழைகளில் இதுபோலவே கூறி வருகிறீர்கள்.
உங்களுக்கு நேரமின்மையால் பல கருத்துக்களும் முழு வடிவம் பெறாமல்
பாதியில் நிற்கின்றன; மின்பரப்பில் உங்கள் பங்களிப்பும், அனுபவமும் மிக
அதிகம்.அனைத்தையும் தொகுத்துச் சுவைபட வழங்கினால் நன்றாக இருக்கும்.
தேவ்
தேசிகன் பற்றி அவ்வப்போது எழுதுங்கள். அவர் எழுதிய அளவிற்கு வேறு யாரும்
எழுதியதில்லை என்று நினைக்கிறேன். அவரது நூல்களெல்லாம்
கணக்கிடப்பட்டுவிட்டனவா? 'நிகம பரிமளம்' கிடைக்க வாய்ப்பே இல்லையா?
நானறிந்தவரையில் வைணவ நூல்கள் பதிப்பிக்கப்பட்டு குடும்பச் சொத்தாக
பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. திருவாய்மொழி ஓலைச்சுவடிகளை பெர்லின்
நூலகத்தில் கூட பார்த்திருக்கிறேன்.
க.>
தேசிகன் பற்றி அவ்வப்போது எழுதுங்கள். //
நீங்கள் ஆர்வத்துடன் கேட்பது மகிழ்ச்சி தருகிறது.
இவர் சுமார் 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
அவற்றில் 32 வைணவக்கோட்பாட்டின் நுட்பங்களை விளக்குகின்றன.
‘ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்’ தலையாயது.
இதை முறையாகப் பாடம் கேட்கும் வழக்கம் இன்றளவும்
நீடித்து வருகிறது.
‘யாதவாப்யுதயம்’ பெருங்காப்பியம்;கண்ணபிரானின் வரலாறு.
அப்பைய தீக்ஷிதர் அவர்களையும் இது கவர்ந்தது.
‘பாதுகா ஸஹஸ்ரம்’ ஆயிரம் பாக்கள் கொண்டது.
எம்பெருமானின் திருவடி நிலைகளது பெருமை கூறுவது.
ஒரே இரவில் இதை ஸ்வாமி அருளினார் என்று கூறப்படுகிறது.
இது உருவான இடம் திருவரங்கம்.
‘ஸங்கல்ப ஸூர்யோதயம்’ ஓர் அருமையான நாடகம்.
அங்கதச் சுவை நிரம்பியது.மாந்தரிடம் காணப்படும் பாசாங்குத்தனத்தையே
பாத்திரங்களாகப் படைத்து
நகைச்சுவை மிளிர விவரிக்கிறார். தெரியாததைத் தெரிந்ததாகக்
காட்டிக் கொள்வது; நன்கு தெரிந்ததையும் தெரியாததுபோல் மறைப்பது இவை
எக்காலத்திலும் இருந்து வருவது நமக்குப்
புரிகிறது. ஆடம்பரத்தையும், ஆரவாரத்தையும் இவர் எவ்வளவு தூரம்
வெறுக்கிறார் என்பதும் தெற்றென விளங்குகிறது.
இவர் மீது மரியாதை கூடுகிறது.
‘ஹம்ஸ ஸந்தேசம்’ – இதுவும் ஓர் அழகிய காவியம்.
இது காளிதாஸரின் மேக ஸந்தேசத்தை அடியொற்றியது
என்று கூறுவர்.ஆனால் இவர்தம் தனித்தன்மை அந்நூலிலிருந்து
இக்காவியத்தை மிகவும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
பிறவற்றை மேலும் விரிவாகக் கூறுவேன்.
தேவ்
ஆகா!
சுவைக்கக் காத்திருக்கிறோம்.
தத்வத்ரயசாரம் அண்ணா சொல்லி முதன்முறை கேட்டதன் பாதிப்பு இன்னும்
நீங்கவில்லை. என்ன ஆழம், என்ன அலசல். அப்பப்பா!
அண்ணா சொல்வது சரி, வைணவத்திற்கு கோட்டை கட்டிவிட்டார் தேசிகன்.
க.>