காமதேனுவும் கற்பகத் தருவும்

719 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
May 30, 2011, 2:56:56 PM5/30/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
ராஜம் அம்மா வேறொரு இழையில் காமதேனு பற்றி தகவல் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார்கள்.  தஞ்சைக்கு அருகிலே ஒரு கிராமத்தில் ஒரு ஐயனார் கோயிலில் நான் பார்த்த காமதேனு சிலை ஒன்றின் படத்தை இங்கே இணைத்திருக்கின்றேன். இந்த இழையில் காமதேனு பற்றிய தகவல்களை வழங்குங்களேன்.

kamadenu.jpg
அன்புடன்
சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
kamadenu.jpg

Tthamizth Tthenee

unread,
May 30, 2011, 3:10:23 PM5/30/11
to mint...@googlegroups.com
“வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி”
 
திருப்பாற்கடலை வாசுகி என்னும் பாம்பை மத்தாக உபயோகித்து தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது
 
அதிலிருந்து வெளிப்போந்தவை  கற்பக விருட்ஷம், காமதேனு போன்றவை என்பர்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
2011/5/31 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

kamadenu.jpg

coral shree

unread,
May 30, 2011, 10:27:38 PM5/30/11
to mint...@googlegroups.com
ஆம் சுபா. நன்றி.

2011/5/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>

மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

kamadenu.jpg

rajam

unread,
May 30, 2011, 11:23:49 PM5/30/11
to mint...@googlegroups.com
தனி இழை தொடங்கி காமதேனு படமும் கொடுத்த சுபாவுக்கும், புராணச் செய்தி கொடுத்த தேனீயாருக்கும் பவளஸ்ரீக்கும் (தனி மடலில்) மிகவும் நன்றி!
கேள்விகள்:
-------------
1. முதல் முதலில் எங்கே (எந்தப் புராணத்தில், இலக்கியத்தில்) காமதேனு, கற்பகத் தரு பற்றிச் சொல்லுகிறார்கள்?
2. புராணச்செய்தியின் மூலம் தருவீர்கள? எந்தப் புராணம்? இலக்கிய வரிகள் என்ன? -- இவை போன்றவும் பிற விவரங்களும் தெரிந்தால் உதவியாக இருக்கும்.
3. காமதேனுவுக்கு இப்படிப் பெண்ணின் உடல் உறுப்புக்களும், ... குஞ்சலத்துடன் இரட்டைப் பின்னல், பொட்டு, குண்டலங்கள், பிற நகைகள், ... எல்லாம் அமைந்த உருவத்தைப் படைத்தது யார்? எப்போது அப்படி உருவாக்கினார்கள்?
4. மடுவும் முலைகளும் (சொல்லாட்சி தவறில்லை என்று எழுதினேன். அவையோருக்கு objection என்றால் மன்னிக்கவும்; "மார்பகம்" என்று மாற்றிப் படித்துக்கொள்ளவும்) ஒரே பிறவிக்குச் சேர்ந்து இருப்பது முரண்பாடு அல்லவா? அதை ஏன் யாரும் சரி செய்யவில்லை?
4. காமதேனு ஒரு முனிவரிடம் வளர்ந்ததாக எங்கேயோ படித்த நினைவு. அப்படி அது/அவள் ஒரு முனிவரிடம் வளர்ந்தது உண்மையா? அப்படியானால் வளர்த்த முனிவர் யார்?
5. காமதேனு யாருக்கு வாகனம்? ஏன்? இதைப் பற்றிப் புராணச் செய்தி உண்டா?
6. "கேட்டது எல்லாம் தரும்" காமதேனு என்ற நம்பிக்கை எப்போது யாரால் தொடங்கப்பட்டது?
7. கற்பகத் தருவையும் காமதேனுவையும் சேர்த்தே சொல்லுவது வழக்கமானால், அது ஏன்? கேட்டதை எல்லாம் கொடுக்கும் படிவங்கள் இரண்டு ஏன்? ஒன்றால் மட்டும் அதைச் செய்ய முடியாதா?
இன்னும் பல கேள்விகள் மற்றவர்களுக்கு இருந்தாலும் கேட்டு விளக்கம் தேடுவோம்.
மீண்டும் நன்றி!
அன்புடன்,
ராஜம்

On May 31, 2011, at 7:57 AM, coral shree wrote:

ஆம் சுபா. நன்றி.

2011/5/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>
ராஜம் அம்மா வேறொரு இழையில் காமதேனு பற்றி தகவல் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார்கள்.  தஞ்சைக்கு அருகிலே ஒரு கிராமத்தில் ஒரு ஐயனார் கோயிலில் நான் பார்த்த காமதேனு சிலை ஒன்றின் படத்தை இங்கே இணைத்திருக்கின்றேன். இந்த இழையில் காமதேனு பற்றிய தகவல்களை வழங்குங்களேன்.

Nagarajan Vadivel

unread,
May 30, 2011, 11:55:45 PM5/30/11
to mint...@googlegroups.com
kamadhenu1.jpg

rajam

unread,
May 31, 2011, 12:04:33 AM5/31/11
to mint...@googlegroups.com
நன்றி, பேராசிரியர் ஐயா!
நேரம் ஒதுக்கிப் படித்து நினைவில் இருத்திவைத்துக்கொள்ளவேண்டிய விவரங்கள்.
அன்புடன்,
ராஜம்

coral shree

unread,
May 30, 2011, 11:35:26 PM5/30/11
to mint...@googlegroups.com
அம்மா, இந்தத் தகவல்கள் குறித்து விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறேன் அம்மா. விரைவில் வருகிறேன்.நன்றி.

2011/5/30 rajam <ra...@earthlink.net>

Hari Krishnan

unread,
May 31, 2011, 2:05:13 AM5/31/11
to mint...@googlegroups.com

2011/5/31 rajam <ra...@earthlink.net>

1. முதல் முதலில் எங்கே (எந்தப் புராணத்தில், இலக்கியத்தில்) காமதேனு, கற்பகத் தரு பற்றிச் சொல்லுகிறார்கள்?

என்ன அக்கா இது!  காமதேனுவைக் குறிப்பிடாத புராணம் ஏதாவது இருக்கிறதா என்ன?  கற்பகத் தருவைப் பேசாத காப்பியமும் உண்டா?  தரு என்று சொன்னாலே, கற்பகத் தருவையும், தேவலோகத்தையும் குறிப்பதாகத்தானே பல செய்யுள்கள் அமைந்துள்ளன?

2. புராணச்செய்தியின் மூலம் தருவீர்கள? எந்தப் புராணம்? இலக்கிய வரிகள் என்ன? -- இவை போன்றவும் பிற விவரங்களும் தெரிந்தால் உதவியாக இருக்கும்.

அநேகமாக எல்லாப் புராணங்களிலும் இருக்கின்ற கதை.  வசிஷ்டரிடமிருந்து விஸ்வாமித்திரர் பறித்துக்கொள்ள முயன்ற கதைதான் கம்பராமாயணத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறதே!  இந்தப் பசுவைப் பிடித்துச் செல்ல முயன்ற அஷ்ட வசுக்களில் ஒருவரான த்யோ, சாபத்தால் சந்தனுவுக்கும் கங்கைக்கும் பிறந்தார்.  தேவவிரதன்.  பின்னாளில் பீஷ்மர்.  (மற்ற ஏழு வசுக்களும் குற்றத்துக்கு நேரடித் தொடர்பற்றவர்கள் என்பதால், பிறந்தவுடனேயே கங்கையில் எறியப்பட்டு, சாப விமோசனம் பெற்றார்கள்.)  

சபலை என்றும் சொல்வார்கள்.  காமதேனுப் பசுவுக்கு ஒரு மகள் உண்டு.  நந்தினி.  (பெங்களூர் முழுக்க நந்தினி பால்தான்.)

3. காமதேனுவுக்கு இப்படிப் பெண்ணின் உடல் உறுப்புக்களும், ... குஞ்சலத்துடன் இரட்டைப் பின்னல், பொட்டு, குண்டலங்கள், பிற நகைகள், ... எல்லாம் அமைந்த உருவத்தைப் படைத்தது யார்? எப்போது அப்படி உருவாக்கினார்கள்?

இதெல்லாம் பிற்கால ஓவியர்களின் கற்பனை.  இலக்கியச் சான்று ஏதும் இல்லை.  ராவணனுக்கு சிம்மெட்ரிக்கலாக பத்துத் தலைகளை வரைகிறார்கள்.  இரண்டு டைமென்ஷன் படத்தில் அப்படித்தான் செய்ய முடியும்.  ஆனால், ஜப்பானில் செய்யப்பட்ட ராமாயண அனிமேஷன் படத்தில், ராவணனை மிக அழகாகச் சித்திரித்திருந்தார்கள்.  அவன் தசக்ரீவன்--பத்துக் கழுத்தன் என்ற முக்கியமான குறிப்பை விட்டு விட்டு நம்மவர்கள், ஒரு கழுத்தில் பத்துத் தலைகளைத் தொங்க விடுகிறார்கள்.  அதுவும் unbalanced.  ஒரு பக்கம் நான்கு; மறுபக்கம் ஐந்து தலைகள்!   இப்படி ஒருத்தன் இருந்தா, எப்படி நடந்து போவான் என்று நினைத்துக் கொள்வதுண்டு.  

ஆனாலும் அந்த ஜப்பான் அனிமேஷன் ராமாயணத்தில் ராவணனின் பத்துத் தலை, பத்துக் கழுத்து அமைப்பு வெகு நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தது.  

பசு என்றாலே பெண்.  தெய்வப் பசு.  தேவலோகப் பசு.  பெண் சிநேகிதி, பெண் ரசிகை என்பது போல எம்ஃபஸிஸ் தேவைப்பட்டவர்களின் கற்பனை, ஐடை, குஞ்சலம், மார்பகம் எல்லாம்.  (இஸ்லாத்தில் இதுபோன்ற ஒரு பசு உண்டு.  அதற்குத்தான் மார்பகங்கள் உள்ளதாகக் காட்டுகிறார்கள்.  நம் புராணங்களில், மடிதான் உண்டு.  கூந்தல், குஞ்சலம் தோடு தொங்கட்டான், மார்பகம் என்று எதையும் யாரும் வர்ணிக்கக் காணோம்.
 
4. மடுவும் முலைகளும் (சொல்லாட்சி தவறில்லை என்று எழுதினேன். அவையோருக்கு objection என்றால் மன்னிக்கவும்; "மார்பகம்" என்று மாற்றிப் படித்துக்கொள்ளவும்) ஒரே பிறவிக்குச் சேர்ந்து இருப்பது முரண்பாடு அல்லவா? அதை ஏன் யாரும் சரி செய்யவில்லை?

சிற்பிகள், ஓவியர்கள் கற்பனைக்கு ஏற்பட்ட முட்டுப்பாடு.  இஸ்லாத்தின் தாக்கமும் பிற்காலத்தில் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு.
 
4. காமதேனு ஒரு முனிவரிடம் வளர்ந்ததாக எங்கேயோ படித்த நினைவு. அப்படி அது/அவள் ஒரு முனிவரிடம் வளர்ந்தது உண்மையா? அப்படியானால் வளர்த்த முனிவர் யார்?

என்னங்கக்கா!  வசிஷ்டர், விஸ்வாமித்திரர் கதை ராமாயணத்திலும் பாரதத்திலும் உண்டாச்சே!  (ஆனால் வசிஷ்டர் வளர்த்தது நந்தினியை என்று மங்கலாக நினைவு.  சரிபார்க்க வேண்டும்.)
 
5. காமதேனு யாருக்கு வாகனம்? ஏன்? இதைப் பற்றிப் புராணச் செய்தி உண்டா?

யாருக்கும் வாகனமில்லை.  தேவலோகப் பசு.  அவ்ளதான்.
 
6. "கேட்டது எல்லாம் தரும்" காமதேனு என்ற நம்பிக்கை எப்போது யாரால் தொடங்கப்பட்டது?

எப்ப அதுக்கு காம-தேனு என்று பேர் வச்சாங்களோ அப்பவே இந்த நம்பிக்கையும் கலந்துதானே இருந்திருக்கிறது?  காம=விரும்பிய (தைத் தரும்) தேனு=பசு.  தொட்டுல்ல போட்டு பேர் வச்சதுமே நம்பிக்கையும் வந்தூட்சி.
 
7. கற்பகத் தருவையும் காமதேனுவையும் சேர்த்தே சொல்லுவது வழக்கமானால், அது ஏன்? கேட்டதை எல்லாம் கொடுக்கும் படிவங்கள் இரண்டு ஏன்? ஒன்றால் மட்டும் அதைச் செய்ய முடியாதா?

ம்ம்ம்?  அப்போ காமதேனுவுக்கு இரண்டு சகோதரியர் உண்டு; இந்த மூன்று பசுக்களும் ஒரே மாதிரியான தன்மையுடையவை என்பதும், நந்தினி என்ற மகள் உண்டு, அதுவும் இப்படிப்பட்டதே என்பது எதற்காம்?  Variety is the spice of life!

(காமதேனுவின் சகோதரியர் பெயர் தொண்டைல மாட்டிட்டு நிக்குது.  ஞாபகம் வந்தா சொல்றேன்.  இல்லாட்டி, உ வே ரங்க கனபாடிகள் சொல்வார்!)

--
அன்புடன்,
ஹரிகி.

Innamburan Innamburan

unread,
May 31, 2011, 2:26:58 AM5/31/11
to mint...@googlegroups.com
உ வே ரங்க தாத்தாச்சாரியர் ஸ்வாமிகள்
B06.gif

Hari Krishnan

unread,
May 31, 2011, 2:43:16 AM5/31/11
to mint...@googlegroups.com

2011/5/31 Innamburan Innamburan <innam...@gmail.com>

உ வே ரங்க தாத்தாச்சாரியர் ஸ்வாமிகள்

பேச்சு இலர் எப்படி தாத்தா ஆசாரி ஆக முடியுங்ணே!
B06.gif

Innamburan Innamburan

unread,
May 31, 2011, 4:12:45 AM5/31/11
to mint...@googlegroups.com
தாடி தான் கனம்! எப்டி கனபாடி ஆக முடியும்? உங்க பாயிண்டோ மேட். வேணும்னா, அவர் நல்ல மனது கருதி, ஶ்ரீரங்கமோஹனரங்க 'தத்து' தாத்தாச்சாரியார் எனலம்.

2011/5/31 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
B06.gif

rajam

unread,
May 31, 2011, 4:18:47 AM5/31/11
to mint...@googlegroups.com
On May 31, 2011, at 11:35 AM, Hari Krishnan wrote:

2011/5/31 rajam <ra...@earthlink.net>
1. முதல் முதலில் எங்கே (எந்தப் புராணத்தில், இலக்கியத்தில்) காமதேனு, கற்பகத் தரு பற்றிச் சொல்லுகிறார்கள்?

என்ன அக்கா இது!  காமதேனுவைக் குறிப்பிடாத புராணம் ஏதாவது இருக்கிறதா என்ன?  கற்பகத் தருவைப் பேசாத காப்பியமும் உண்டா?  தரு என்று சொன்னாலே, கற்பகத் தருவையும், தேவலோகத்தையும் குறிப்பதாகத்தானே பல செய்யுள்கள் அமைந்துள்ளன?

என்னப்பா தம்பி இது! இந்த மாதிரியெல்லாம் சொன்னால் ... "காலத்தைச் சொல்லு" "கணக்கைச் சொல்லு" என்று பிடுங்குவோர் உளரே, அறியீரோ! அவர்களுக்கு ஏற்ற மறுமொழி கூற அல்லவோ அக்கா வேண்டியது?!
முதல் முதல் புராணம்; அதன் காலம் -- தெரிந்து சொல்லும் கடமை (சுமை?) எனக்கு. தேடுக, உதவுக!

2. புராணச்செய்தியின் மூலம் தருவீர்கள? எந்தப் புராணம்? இலக்கிய வரிகள் என்ன? -- இவை போன்றவும் பிற விவரங்களும் தெரிந்தால் உதவியாக இருக்கும்.

அநேகமாக எல்லாப் புராணங்களிலும் இருக்கின்ற கதை.  வசிஷ்டரிடமிருந்து விஸ்வாமித்திரர் பறித்துக்கொள்ள முயன்ற கதைதான் கம்பராமாயணத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறதே!  இந்தப் பசுவைப் பிடித்துச் செல்ல முயன்ற அஷ்ட வசுக்களில் ஒருவரான த்யோ, சாபத்தால் சந்தனுவுக்கும் கங்கைக்கும் பிறந்தார்.  தேவவிரதன்.  பின்னாளில் பீஷ்மர்.  (மற்ற ஏழு வசுக்களும் குற்றத்துக்கு நேரடித் தொடர்பற்றவர்கள் என்பதால், பிறந்தவுடனேயே கங்கையில் எறியப்பட்டு, சாப விமோசனம் பெற்றார்கள்.)  
கதை மூலம் எனக்குத் தெளிவு கொடுத்தது. நல்லது.

சபலை என்றும் சொல்வார்கள்.  
சபலைக்கும் "சவலை"க் குழந்தைக்கும் தொடர்பு உண்டா? வேர்ச்சொல் திறனாய்வாளர் கணேசர் இதற்கு முடிவு சொல்லுவாரோ என்னமோ! சொன்னாலும் ... ஆப்கானிஸ்தானுக்கும் சிந்துவுக்கும் இலெமூரியாவுக்கும் என்னை இழுக்கவேண்டாம். என் கால் ஒத்துழைக்காது.

காமதேனுப் பசுவுக்கு ஒரு மகள் உண்டு.  நந்தினி.  (பெங்களூர் முழுக்க நந்தினி பால்தான்.)
நந்தினிப் பாலை விட்டுவிட்டு சோயாப் பால் குடியுங்கள்; காமதேனுவுக்கும் நல்லது, நந்தினிக்கும் நல்லது. தாய்ப்பசுவை ஏமாற்ற வைக்கோலால் செய்த, பொய்க் கன்னுக்குட்டிக்கும் நல்லது. சினைப்படாத, ஈனாத, பசு பால் கொடுக்கவேண்டி, அதன் பிறப்பு உறுப்பில் அரைத்த மிளகாயைத் திணித்து அதுக்குப் பிரசவ வலி உண்டாக்குவார்கள் என்றும், அதனால் ஏமாந்த பசு ... வைக்கோல் கன்னுக்குட்டியை நக்கி இந்த மனிதர்களுக்காகப் பால் கொடுக்கும் என்றும் கேள்வி. பசுவைத் தெய்வமாகப் போற்றும் தமிழகத்திலேயே இந்தக் கொடுமை என்றால் ...? அமெரிக்காவிலோ கேட்கவே வேண்டாம்.
பசுவைக் கொடுமைப்படுத்தாதீர்கள் உங்கள் பால்/காப்பிக்காக .
சரி, அது போகட்டும். நான் என்ன சமூக சீர்திருத்தவாதியா? இல்லை. எனவே விடுக.
நம்ம தலைப்புக்கு வருவோம். காமதேனுவுக்கு மகள் நந்தினி. சரி. ஏன் அப்படி ஒரு மகள் தேவை? அவளே எல்லாத்தெயும் கொடுக்கிறப்பொ ... அவளுக்கு ஒரு மகள் என்னத்துக்கு? என்ன கதை? சொல்லுங்கள், கேட்கிறேன்.

3. காமதேனுவுக்கு இப்படிப் பெண்ணின் உடல் உறுப்புக்களும், ... குஞ்சலத்துடன் இரட்டைப் பின்னல், பொட்டு, குண்டலங்கள், பிற நகைகள், ... எல்லாம் அமைந்த உருவத்தைப் படைத்தது யார்? எப்போது அப்படி உருவாக்கினார்கள்?

இதெல்லாம் பிற்கால ஓவியர்களின் கற்பனை.  இலக்கியச் சான்று ஏதும் இல்லை.  ராவணனுக்கு சிம்மெட்ரிக்கலாக பத்துத் தலைகளை வரைகிறார்கள்.  இரண்டு டைமென்ஷன் படத்தில் அப்படித்தான் செய்ய முடியும்.  ஆனால், ஜப்பானில் செய்யப்பட்ட ராமாயண அனிமேஷன் படத்தில், ராவணனை மிக அழகாகச் சித்திரித்திருந்தார்கள்.  அவன் தசக்ரீவன்--பத்துக் கழுத்தன் என்ற முக்கியமான குறிப்பை விட்டு விட்டு நம்மவர்கள், ஒரு கழுத்தில் பத்துத் தலைகளைத் தொங்க விடுகிறார்கள்.  அதுவும் unbalanced.  ஒரு பக்கம் நான்கு; மறுபக்கம் ஐந்து தலைகள்!   இப்படி ஒருத்தன் இருந்தா, எப்படி நடந்து போவான் என்று நினைத்துக் கொள்வதுண்டு.  

ஆனாலும் அந்த ஜப்பான் அனிமேஷன் ராமாயணத்தில் ராவணனின் பத்துத் தலை, பத்துக் கழுத்து அமைப்பு வெகு நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தது.  

பசு என்றாலே பெண்.  தெய்வப் பசு.  தேவலோகப் பசு.  பெண் சிநேகிதி, பெண் ரசிகை என்பது போல எம்ஃபஸிஸ் தேவைப்பட்டவர்களின் கற்பனை, ஐடை, குஞ்சலம், மார்பகம் எல்லாம்.  (இஸ்லாத்தில் இதுபோன்ற ஒரு பசு உண்டு.  அதற்குத்தான் மார்பகங்கள் உள்ளதாகக் காட்டுகிறார்கள்.  நம் புராணங்களில், மடிதான் உண்டு.  கூந்தல், குஞ்சலம் தோடு தொங்கட்டான், மார்பகம் என்று எதையும் யாரும் வர்ணிக்கக் காணோம்.

ஓவியர்களின் கற்பனை மகா கண்றாவி. சகிக்கலை. பெண்களைத் தலை குனியவைக்கிற வடிவம். அயல்நாட்டவருக்கு ஏன் கிளுகிளுச் சிரிப்பு உணடாகாது?
 
4. மடுவும் முலைகளும் (சொல்லாட்சி தவறில்லை என்று எழுதினேன். அவையோருக்கு objection என்றால் மன்னிக்கவும்; "மார்பகம்" என்று மாற்றிப் படித்துக்கொள்ளவும்) ஒரே பிறவிக்குச் சேர்ந்து இருப்பது முரண்பாடு அல்லவா? அதை ஏன் யாரும் சரி செய்யவில்லை?

சிற்பிகள், ஓவியர்கள் கற்பனைக்கு ஏற்பட்ட முட்டுப்பாடு.  இஸ்லாத்தின் தாக்கமும் பிற்காலத்தில் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு.
இஸ்லாத்தின் தாக்குதல் எனக்குத் தெரியாது. தெரிந்தவர்களிடம் கேட்டுப்பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

4. காமதேனு ஒரு முனிவரிடம் வளர்ந்ததாக எங்கேயோ படித்த நினைவு. அப்படி அது/அவள் ஒரு முனிவரிடம் வளர்ந்தது உண்மையா? அப்படியானால் வளர்த்த முனிவர் யார்?

என்னங்கக்கா!  வசிஷ்டர், விஸ்வாமித்திரர் கதை ராமாயணத்திலும் பாரதத்திலும் உண்டாச்சே!  (ஆனால் வசிஷ்டர் வளர்த்தது நந்தினியை என்று மங்கலாக நினைவு.  சரிபார்க்க வேண்டும்.)
தம்பிக்கே "மங்கலாக நினைவு" என்றால் ... வயது முதிர்ந்த, அதுவும் இலக்கியத்தை வேணும்-னே விலக்கிவிட்ட, அக்காவுக்கு எப்படி இருக்கும்? சரிபார்த்த பிறகு சொல்லுங்கள். தெரிந்துகொள்ள ஆவல்.
 
5. காமதேனு யாருக்கு வாகனம்? ஏன்? இதைப் பற்றிப் புராணச் செய்தி உண்டா?

யாருக்கும் வாகனமில்லை.  தேவலோகப் பசு.  அவ்ளதான்.

அப்றம் ஏன் அது / அவள் வாகனம் கோயில்களில் இருக்கு? தேவலோகச் சாமான்கள் எல்லாமா கோயில்லெ இருக்கு? இவ / இது மட்டும் ஏன் இருக்கா / இருக்கு, அதுவும் வாகனம் போல?

6. "கேட்டது எல்லாம் தரும்" காமதேனு என்ற நம்பிக்கை எப்போது யாரால் தொடங்கப்பட்டது?

எப்ப அதுக்கு காம-தேனு என்று பேர் வச்சாங்களோ அப்பவே இந்த நம்பிக்கையும் கலந்துதானே இருந்திருக்கிறது?  காம=விரும்பிய (தைத் தரும்) தேனு=பசு.  தொட்டுல்ல போட்டு பேர் வச்சதுமே நம்பிக்கையும் வந்தூட்சி.
வயிறு குலுங்க, நெஞ்சு நிறையச் சிரித்து மகிழ்ந்தேன். அதுக்குத்தான் ஹரி கிட்டப் பேசணும்-னுங்றது. சோர்ந்து போன மனசும் துள்ளத் தொடங்கும்!

7. கற்பகத் தருவையும் காமதேனுவையும் சேர்த்தே சொல்லுவது வழக்கமானால், அது ஏன்? கேட்டதை எல்லாம் கொடுக்கும் படிவங்கள் இரண்டு ஏன்? ஒன்றால் மட்டும் அதைச் செய்ய முடியாதா?

ம்ம்ம்?  அப்போ காமதேனுவுக்கு இரண்டு சகோதரியர் உண்டு; இந்த மூன்று பசுக்களும் ஒரே மாதிரியான தன்மையுடையவை என்பதும், நந்தினி என்ற மகள் உண்டு, அதுவும் இப்படிப்பட்டதே என்பது எதற்காம்?  Variety is the spice of life!
அதெல்லாம் ஒத்துக்க மாட்டேன். சரியான காரணம் வேண்டும், இலக்கியச் சான்றோடு. -- ஏன் 2 சகோதரியர்? அப்பொ ... ஒரிஜினல் படைப்பில் குறை உண்டோ?

(காமதேனுவின் சகோதரியர் பெயர் தொண்டைல மாட்டிட்டு நிக்குது.  ஞாபகம் வந்தா சொல்றேன்.  இல்லாட்டி, உ வே ரங்க கனபாடிகள் சொல்வார்!)
அது / அவர் கைகள் ... இப்பொ ரூபாய் நோட்டுகளை எண்ணிக்கொண்டிருக்கும், பாவம். இலக்கியம், ஆன்மிகம் எல்லாம் இந்த நொடியில் அந்த மூளைக்கு ஒரு நச்சு.

--
அன்புடன்,
ஹரிகி.
அன்புடன்,
ராஜம்

Geetha Sambasivam

unread,
May 31, 2011, 4:25:49 AM5/31/11
to mint...@googlegroups.com
மதுரையிலே மீனாக்ஷிக்குக் காமதேனு வாகனம் உண்டு.  அன்னிக்கு சுந்தரேசருக்குக் கற்பக விருக்ஷம் வாகனமாக அமையும்.

2011/5/31 rajam <ra...@earthlink.net>

On May 31, 2011, at 11:35 AM, Hari Krishnan wrote:

2011/5/31 rajam <ra...@earthlink.net>
1. முதல் முதலில் எங்கே (எந்தப் புராணத்தில், இலக்கியத்தில்) காமதேனு, கற்பகத் தரு பற்றிச் சொல்லுகிறார்கள்?

Hari Krishnan

unread,
May 31, 2011, 5:07:03 AM5/31/11
to mint...@googlegroups.com

2011/5/31 rajam <ra...@earthlink.net>

4. மடுவும் முலைகளும் (சொல்லாட்சி தவறில்லை என்று எழுதினேன். அவையோருக்கு objection என்றால் மன்னிக்கவும்; "மார்பகம்" என்று மாற்றிப் படித்துக்கொள்ளவும்) ஒரே பிறவிக்குச் சேர்ந்து இருப்பது முரண்பாடு அல்லவா? அதை ஏன் யாரும் சரி செய்யவில்லை?

சிற்பிகள், ஓவியர்கள் கற்பனைக்கு ஏற்பட்ட முட்டுப்பாடு.  இஸ்லாத்தின் தாக்கமும் பிற்காலத்தில் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு.
இஸ்லாத்தின் தாக்குதல் எனக்குத் தெரியாது. தெரிந்தவர்களிடம் கேட்டுப்பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

இஸ்லாத்தில் சொல்லப்படும் பசுவின் பெயர் புராக்.  அதற்குப் பெண் முகமும், இறக்கைகளும் உண்டு.  இங்கே பார்க்கவும்: 

நம்முடைய பாரம்பரியமான காமதேனு வடிவங்களுக்குப் பெண் முகம் கிடையாது.  உடலெங்கும் பல்வேறு தேவர்கள் சித்திரிக்கப்பட்டிருப்பார்கள்.  (கண்ணில் இன்னார், காதில் இன்னார், முன் வலது காலில் இன்னார், இடதில் இன்னார், பின்னங்கால்கள், முதுகு அல்லது உடற் பகுதிகளில் இன்னின்னார் என்று நிறைய விவரங்கள் உண்டு நம்முடைய பாரம்பரியப்படி தீட்டப்பட்டுள்ள காமதேனு சித்திரங்கள் இங்கே:

மஹாபாரதம் ஆதி பர்வத்தில், அஷ்ட வசுக்கள் வசிஷ்டருடைய தேனுவை வலிந்து பிடிக்கும் காட்சியில் இன்னும் நிறைய விவரங்கள் வருகின்றன.  இடத்தைப் பிடிக்கச் சற்று அவகாசம் தேவை.  அதுவரையில் இவற்றைப் பார்க்ககவும்: 

இங்கே பெண் முகமும், மார்பகங்களும் உடையதாகவும், இரண்டுமே இல்லாததாகவும்--இரண்டு விதத்திலும்--காமதேனு சித்திரிக்கப்பட்டிருக்கிறது,  நான் பார்த்த (எனக்கு ஓர் ஓவிய நண்பர் உண்டு. தற்போது கனடாவில் வசிக்கும் ஆர் எஸ் மணி ஓவியர், மூன்று மொழிக் கவிஞர், புகைப்படக்காரர், பாடகர், சுமார் 18 இசைக்கருவிகளை வாசிப்பவர்.... எல்லாமே.  அவரிடம் இந்தக் காமதேனுவின் சித்திரத்தைத் தீட்டச்சொல்லிக் கேட்டிருந்தார்கள்.  எங்கே என்ன தேவதை என்பதையெல்லாம் பார்த்துப் பார்த்து வரைந்துகொண்டிருக்கையில் பார்த்திருக்கிறேன்.  பாரம்பரியமான சித்திரங்களில் பெண் முகமும் கொங்கைகளும் கிடையாது.)

காமதேனுவின் பிறப்பிலிருந்து பற்பல விவரங்கள் விக்கியில் உள்ளன.

காமதேனுவுக்கு சுரபி என்றும் பெயர்.  மஹாபாரதத்தில் இப்போதைக்கு அகப்பட்ட இடம் இது:

குறிப்பிட்ட பத்தி: 

And Krodha gave birth to nine daughters, all of wrathful disposition. And their names were Mrigi, Mrigamanda, Hari, Bhadramana, Matangi, Sarduli, Sweta, Surabhi, and the agreeable Surasa blessed with every virtue. And, O foremost of men, the offspring of Mrigi are all animals of the deer species. And the offspring of Mrigamanda are all animals of the bear species and those called Srimara (sweet-footed). And Bhadramana begot the celestial elephants, Airavata. And the offspring of Hari are all animals of the simian species endued with great activity, so also all the horses. And those animals also, that are called Go-langula (the cow-tailed), are said to be the offspring of Hari. And Sarduli begot lions and tigers in numbers, and also leopards and all other strong animals. And, O king, the offspring of Matangi are all the elephants. And Sweta begat the large elephant known by the name of Sweta, endued with great speed. And, O king, Surabhi gave birth to two daughters, the amiable Rohini and the far-famed Gandharvi. And, O Bharata, she had also two other daughters named Vimala and Anala. From Rohini have sprung all kine, and from Gandharvi all animals of the horse species. And Anala begat the seven kinds of trees yielding pulpy fruits. (They are the date, the palm, the hintala, the tali, the little date, the nut, and the cocoanut.) And she had also another daughter called Suki (the mother of the parrot species). And Surasa bore a son called Kanka (a species of long-feathered birds). And Syeni, the wife of Aruna, gave birth to two sons of great energy and strength, named Sampati and the mightyJatayu. Surasa also bore the Nagas, and Kadru, the Punnagas (snakes). And Vinata had two sons Garuda and Aruna, known far and wide. And, O king of men, O foremost of intelligent persons, thus hath the genealogy of all the principal creatures been fully described by me. By listening to this, a man is fully cleansed of all his sins, and acquireth great knowledge, and finally attaineth to the first of states in after-life!

ஆனால் நாம் தேடும் சுரபி இது இல்லை என்று தோன்றுகிறது.  கொஞ்ச நேரத்தில் மீண்டும் வருகிறேன்.

பாற்கடலைக் கடைந்தபோது உண்டானவள் காமதேனு.  

Nagarajan Vadivel

unread,
May 31, 2011, 5:29:53 AM5/31/11
to mint...@googlegroups.com
http://www.google.com/search?tbm=isch&hl=en&source=hp&biw=1366&bih=561&q=kamadhenu+pictures&gbv=2&aq=7&aqi=g6&aql=&oq=kamadhenu

நம்முடைய பாரம்பரியமான காமதேனு வடிவங்களுக்குப் பெண் முகம் கிடையாது.  உடலெங்கும் பல்வேறு தேவர்கள் சித்திரிக்கப்பட்டிருப்பார்கள்.  (கண்ணில் இன்னார், காதில் இன்னார், முன் வலது காலில் இன்னார், இடதில் இன்னார், பின்னங்கால்கள், முதுகு அல்லது உடற் பகுதிகளில் இன்னின்னார் என்று நிறைய விவரங்கள் உண்டு
kamadhenu.jpg

Nagarajan

2011/5/31 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
kamadhenu.jpg

கி.காளைராசன்

unread,
May 31, 2011, 8:31:30 AM5/31/11
to mint...@googlegroups.com

திருப்பூவணப் புராணத்தில் காம​தேனு,

426      ஊனநீங்குமையர்கையிலுள்ளொருமையோடுகோ

தானநல்கினோர்கணீடுதரையிலின்பமருவியே

தீனமின்றிவாழ்ந்துபின்றிருந்தருந்தவத்தினா

லானகாமதேனுவின்றனமுகநன்கருந்துவார்

1902ஆம் ஆண்டு கும்பாபி​ஷேகம் ந​டை​பெற்ற ​போது ​செய்யப்​பெற்ற திருப்பூவணம் ​கோயிலில் உள்ள காம​தேனு​வைப் படம் எடுத்து  ள்​ளோம்.  அ​தையும் இங்​கே வி​ரைவில் இ​ணைத்து ​வெளியிடுகின்​றேன்.

அன்பன்

கி.கா​ளைராசன்

Reply all
Reply to author
Forward
0 new messages