#WhatsappShare
அன்புள்ள அப்பாக்கள்-6
தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற பெருவிருப்புடையவன் அடியேன். அவருடைய பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டாலும் இந்த அன்புள்ள அப்பாக்கள் வரிசையில் கீழ்க்காணும் செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கருதினேன்.
' புத்தியோட பொழச்சுக்கோ' என்று அறிவுறுத்தும் அநேகருக்கு அப்பால் இப்படி ஓர் அப்பா! இவர்களாலேதான் இவ்வுலகம் காலையில் கதிரவனையும் மாலையில் இருளையும் நிலவையும் , மண்ணில் மழையையும் காண்கிறோம்!
இதோ மணவை முஸ்தபா அவர்கள் தன்னுடைய தந்தை சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். நமக்கும் அது சற்று கேட்கிறது!
........ "அறிவியல் தமிழில் நூல்களை அதிகம் கொண்டு வரவேண்டும் என்ற என்னுடைய ஆர்வம் ஒரு புறமிருக்க, என்னுடைய தந்தை தனது 102 ஆவது வயதில் மரணப்படுக்கையில் இருக்கும்போது என்னை அழைத்து,
" உன்னுடைய வருமானத்தில் பாதி உனக்காகவும் பாதி சமுதாயத்திற்காகவும் பயன்பட வேண்டும் " என்றும்,
" உன்னுடைய நேரத்தில் பாதி உனக்காகவும் பாதியை பொதுநலனுக்காகவும் செலவழிக்க வேண்டும் " என்றும் கேட்டுக் கொண்டார். அதன்படியே நடந்து வருகிறேன். "
-- மணவை முஸ்தபா.
மா. பாரதிமுத்துநாயகம்