1. சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 716-721 ++ 2. தோழர் தியாகு எழுதுகிறார் 115 : ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (1)

15 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 28, 2023, 6:14:46 PM5/28/23
to thiru thoazhamai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, muthun...@gmail.com, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsw...@gmail.com, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, limra...@gmail.com, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, antony louis, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, palanic...@gmail.com, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, chitr...@gmail.com

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 716-721


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன் 
     29 May 2023      அகரமுதல(தமிழ்ச்சொல்லாக்கம் 709- 715 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 716-721

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. 
கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

716. Cells – அணுக்கூடுகள்

எல்லா உயிரினுடம்புகளும் மிக நுண்ணிய சிற்றறை அல்லது அணுக்கூடுகளால் (Cells) ஆக்கப்பட்டுள்ளன. அவை வொவ்வொன்றும் ஒரு வித்துடன் கூடிய முதற்பிண்டமாக இருக்கின்றது.

மேற்படி நூல் : முன்னுரை பக்கம் – 4

717. Muscles – தசைத் திரள்கள்

தனசத் திரள்கள் எலும்போடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. அவை சுருங்குவதனால் எலும்புகள் அசைந்தியங்குகின்றன. இடுப்பிற்குமேல் கழுத்துவரையுள்ள உடம்பில் மேற்பொந்து ஒன்றும் கீழ்ப்பொந்து ஒன்றும் இருக்கிறது. இரண்டையும் நெஞ்சின் குறுக்காகவுள்ள நீண்ட தசைத்திரள் ஒன்று Diaphragm. பிரிக்கின்றது. மேற் பாகம் மார்பென்றும் கீழ்ப்பாகம் வயிறென்றும் உலக வழக்கில் குறிக்கப்படும்.

மேற்படி நூல்       :               உடல் நூல் (1934)

உடலின் பொது அமைப்பு, பக்கம் – 6

718. Heart – நெஞ்சப்பை

மார்பின் நடுவில் இடப்பக்கத்தில் இருதயமென்னும் நெஞ்சப் பை (Hearts) அமைந்திருக்கினறது. சுவாசப் பை (lungs) இரண்டும் இருதயத்திற்கு இடப்பக்கமும் வலப்பக்கமுமாக அமைந்திருக்கின்றன. வயிற்றின் மேல் பாகத்தில் வலது பக்கத்தில் நுரையீரல் (Liver) அமைந்திருக்கின்றது. இடது பக்கத்தில் மேல் வயிறு அமைந்திருக்கின்றது. இவ்விரண்டிற்கும் கீழே சுருண்டிருக்கும் குடர் உள்ளது. வாயில் நின்று இரைக்குழலானது மேல் வயிற்றுக்குள் செல்லுகிறது. அதினின்று அது குடர்க்குள் போகின்றது. உணவானது இக்கருவிகளில் சீரணமாகின்றது. மேல் வயிற்றிற்கு இடப்பாகம் மண்ணிரல் (Spleen) என்னும் சிறுகருவி இருக்கின்றது.

மேற்படி நூல்       :               நூல் உடல்நூல் (1934)

உடலின் பொது அமைப்பு பக்கங்கள் – 67

719. Windpipe – காற்றுக்குழல்

720. Gullet – இரைக்குழல்

721. Larynx – குரல் வளை

வாயின் பின்புறத்திலிருந்து தொண்டை வழியாகச் சுவாசப் பைக்கு ஒரு குழல் செல்கிறது. அதற்குக் காற்றுக் குழல் (Windpipe) என்று பெயர். அதற்குப் பின்னேதான் இரைக்குழல் (Gullet) செல்கின்றது. காற்றுக் குழலின் மேற்பகுதி குரல் வளை (Larynx)யெனப்படும்.

மேற்படி நூல்       :               நூல் உடல்நூல் (1934)

உடலின் பொது அமைப்பு பக்கங்கள் – 7

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

++

தோழர் தியாகு எழுதுகிறார் 115 : ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (1)

 


ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்      29 May 2023      அகரமுதல(தோழர் தியாகு எழுதுகிறார் 114: முத்துக்குமார் குறித்த கலைவேலு கட்டுரை – தொடர்ச்சி)

ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (1)

1.       எழுபத்தைந்து ஆண்டு முன்பு 1948 சனவரி 30 மாலை 5.17 – தில்லியில் பிருலா மாளிகையில் அனைத்து மத வழிபாட்டுக் கூட்டத்துக்காகப் புல்வெளியில் நடந்து வந்து கொண்டிருந்த 78 வயது முதியவர் காந்தியாரை இந்துமத  வெறியன் நாதுராம் கோட்சே மிக அருகிலிருந்து சுட்டுக் கொலை செய்தான். ஆர்எசுஎசு இந்துத்துவக் கோட்பாடுகளால் கொலை வெறி கொண்டவன் கோட்சே என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. காந்தி கொலை வழக்கில் கோட்சேக்கும் நாராயண் ஆபுதேக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. கோபால் கோட்சே வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்று பதினாறாண்டுக் காலம் சிறையில் கழித்து விடுதலையாகி விட்டான். சதித் திட்டத்தில் தலைமைப் பங்கு வகித்த சாவர்க்கார் நீதிமன்றத்தில் விடுதலை வாங்கி விட்டார். கோட்சேயுடன் தூக்கில் தொங்கியிருக்க வேண்டியவர் இன்று இந்திய நாடாளுமன்றத்தில் படமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

2.      இது கடந்தகாலக் கதைதான் என்றால் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்க வேண்டா. ஆனால் காவித் திகிலியம் நாளது வரை தொடர்ந்து வெறியாட்டம் போடுகிறது. இந்திய வரலாற்றில் படுமோசமான திகிலியச் செயலாகிய பாபர் மசூதி இடிப்பை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. மசூதி இடிப்பு குற்றம்தான் என்று சொல்லி விட்டு குற்றவாளிகளிடமே அந்த இடத்தைக் கொடுத்து இராமர் கோயிலும் அரசே கட்டிக் கொடுக்கச் சொல்லும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை வாங்குவதற்கு மயக்குப்பொறி(Honey trap) கூட பயன்படுத்தப்பட்டது. வெட்கக் கேடு!

3.      ஆர்எசுஎசு வெறும் திகிலிய அமைப்பு மட்டும்தான் என்றால் அதனை வெல்வது அவ்வளவு கடினமில்லை. அது நச்சுப் பாம்பு என்று தெரிந்து கொண்டால் போதாது, பத்துத் தலைப் பாம்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சங்(கப்)பரிவார் என்று ஒரு கூட்டமே உள்ளது. பசுரங் குதல், விசுவ இந்து பரிசத்து, இந்து முன்னணி, சேவா பாரதி, ஏபிவிபி, பிஎம்எசு என்று எத்தனையோ முகங்கள்! எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் அரங்கில் பாரதிய சனதா கட்சி! அனைத்துக்கும் வழிகாட்டுவது இந்துத்துவம் என்ற நச்சுக் கொள்கை. வருண தருமம், மனு தருமம், வைதிகம், பிராமணியம் என்று பல பரிமாணங்கள்!

4.      இந்தக் கொள்கையைச் செயலாக்க வோட்டரசியலும் வேட்டரசியலும் இரட்டை வழிகள். இரண்டும் ஒன்றுக்கொன்று துணை. சமூக நல்லிணக்கத்தைக் குலைத்து மதம், சாதியின் பெயரிலான மோதல்களைத் தூண்டி அரசியல் ஆதாய வேட்டையாடுவது ஆர்எசுஎசு வழி. இந்துக்களின் வாழ்வுக்கு ஆபத்து என்ற பொய்க் கதையாடலை வளர்த்து, இசுலாமியருக்கும் கிறித்துவர்களுக்கும் எதிரான வெறுப்புணர்வை மூட்டி, இந்துக்களின் ஒரே பாதுகாவலன் பாசக என்று படங்காட்டி வாக்கு வேட்டை ஆடுவது. முசுலிம் என்றால் காசுமீர், காசுமீர் என்றால் பாகித்தான்! இவற்றை எதிர்ப்பதுதான் தேசபக்தி! மதவெறி சார்ந்த இந்தியத் தேசிய வெறியைக் கிளப்பி வாக்கு வேட்டை ஆடுவது, மக்களை மத அடிப்படையில் இருதுருவமாகப் பிரிக்கும் துருவப் பிரிப்பு (polarization) அரசியல் உத்தி! கடைசியாக உ.பி. தேர்தலில் யோகி ஆதித்தியநாத்து வென்றது இப்படித்தான்.

5.      ஆர்எசுஎசு நச்சுக் கருத்துகளை உறுதியாக மறுதலித்து, உழைக்கும் மக்கள் சாதிமதங்கடந்து ஒன்றுபடுவதற்கு அறிவுத் தளத்தில் வழிகாட்டும் பெருமக்களைப் படுகொலை செய்து திகிலூட்டுவதும் ஆர்எசுஎசு உத்தியே. கோவிந்த பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கவிரி இலங்கேசு இவர்களைக் கொன்றதும் கோட்சேயின் ஆர்எசுஎசு தோட்டாக்கள்தாம் என்பதில் ஐயமில்லை.   

ஆர்எசுஎசு காவித் திகிலியத்துக்கு அந்தக் கும்பலிலிருந்து வெளியேறிய முன்னாள் சங்கிகள் தரும் அகச் சான்றுகள் சிலவற்றை நாளை பார்ப்போம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல்
 86--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

தேமொழி

unread,
May 28, 2023, 7:05:47 PM5/28/23
to மின்தமிழ்
///718. Heart – நெஞ்சப்பை

மார்பின் நடுவில் இடப்பக்கத்தில் இருதயமென்னும் நெஞ்சப் பை (Hearts) அமைந்திருக்கினறது. சுவாசப் பை (lungs) இரண்டும் இருதயத்திற்கு இடப்பக்கமும் வலப்பக்கமுமாக அமைந்திருக்கின்றன. வயிற்றின் மேல் பாகத்தில் வலது பக்கத்தில் நுரையீரல் (Liver) அமைந்திருக்கின்றது.///

வயிற்றின் மேல் பாகத்தில் வலது பக்கத்தில் "கல்லீரல்"  (Liver) அமைந்திருக்கின்றது

இந்த வரியில் கல்லீரல் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் !!!!

------

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jun 18, 2023, 3:52:25 PM6/18/23
to மின்தமிழ்
 நன்றி அம்மா.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/503d948b-083e-45a8-9846-a4ca7edba795n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages