1. இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. வெருளி நோய்கள் 1151-1155: இலக்குவனார் திருவள்ளுவன்

0 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 18, 2026, 5:39:52 PM (2 days ago) Feb 18
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

வெருளி நோய்கள் 1151-1155: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1146-1150: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1151-1155

  1. சேலாப்பழ வெருளி – Kerasiphobia

சேலாப்பழம் (Cherry) பற்றிய அளவுகடந்த பேரச்சம் சேலாப்பழ வெருளி.
சேலாப்பழத்தில் கொடிய நச்சுப்பு(சயனைடு) உள்ளது. ஒவ்வொரு கல்(கிராம்) விதையிலும் 0.17 கல்(கிராம்) நச்சுப்பு உள்ளது இருப்பதால், புதியதாக உடைக்கப்பட்ட பருப்பு ஒன்று அல்லது இரண்டு உட்கொண்டாலே உயிரை எடுக்கும். பருப்பின் அளவைப் பொறுத்து நச்சுத்தன்மை அளவும் மாறுபடும். பக்க விளைவுகளும் உண்டு. எனவே, இதனை மிகுதியாக உட்கொள்ளக் கூடாது. சேலாப்பழம் மீது வெருளி கொள்கின்றனர்.
Kerasi என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சேலாப்பழம்(cherry)
00

  1. சேற்று வெருளி-Blennophobia/Myxophobia

சேறு குறித்த பேரச்சம் சேற்று வெருளி.
blénnos என்னும் பழங்கிரேக்கச்சொல்லிற்கும் myso என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் சகதி அல்லது சேறு எனப் பொருள்.
slime(சகதி) என்பதை slim எனத் தவறாகப் பொருள் புரிந்து எழுதப்பட்டதைப் படித்து நான் முன்னர் மெலிவு வெருளி எனத் தவறாகக் குறிப்பிட்டிருப்பேன். இப்பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது. இதனைப் படிப்பவர்கள் அந்த இடங்களில் திருத்திக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
00

  1. சொகுசு உந்து வெருளி – Limophobia

சொகுசு உந்து(luxury vehicle) மீதான அளவுகடந்த பேரச்சம் சொகுசு உந்து வெருளி.
சொகுசு என்பது தமிழ்ச்சொல்லே. சொக்கவைத்தல், மயங்க வைத்தல் எனப்பொருள். எனவேதான் மயங்க வைக்கும் அழகுடையவனைச் சொக்கன் என்றனர். சொக்குதல் அடிப்படையிலான சொகுசு என்றால் அழகு, நேர்த்தி, சிறப்பு முதலான பொருள்கள் உள்ளன. பிறரைத் தன் மயமாக்குபவனை அவன் சொக்குப்பொடி போட்டுவிட்டான் என்பர். எனவே, பகட்டான தோற்றமும் ஏந்து(வசதி)களும் உடைய உந்து சொகுசு உந்து எனப்படுவது பொருத்தமானது.
00

  1. சொல்லாடல் வெருளி – Laliophobia/ Lalophobia

அமைப்புகளில் அல்லது மன்றங்களில் கலந்து பேசி உரையாடும் சொல்லாடல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சொல்லாடல் வெருளி
lal என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சொல்லாடல் என்று பொருள்.
உரை வெருளி(Glossophobia), பேச்சு வெருளி(sermophobia) காண்க.
00

  1. சொற்கள் வெருளி – Verbaphobia / Verbophobia / Logophobia

சொற்கள் மீதான அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் சொற்கள் வெருளி.
வார்த்தை வெருளி – Logophobia என்கின்றனர். எண்ணத்தின் வார்ப்பாக உருவாகும் வார்த்தையும் தமிழ்ச்சொல்லே. எனினும் ஒரே பொருளில வெவ்வேறு சொற்கள் வேண்டா.
நாம் சில நேரம் சொல்லியிருப்போம் அல்லது பிறர் சொல்லக் கேட்டிருப்போம், ஏதேனும் பெயரைக் குறிப்பிட்டு, இந்தப் பெயரைக் கேட்டாலே பிடிக்கவில்லை என்று. இக்காரணமில்லா வெறுப்பு அளவுகடந்து போகும் பொழுது வெருளியாகிறது.
சொல் என்பது வெறும் பொருளால் மட்டும் அச்சம் தருவதல்ல. உணர்ச்சியுடன் இணைந்து அச்சம் தருவது. சொல் ஏமாற்றம் தந்தாலோ துன்பம் தந்தாலோ அதிர்ச்சி தந்தாலோ வரக்கூடிய வெருளிதான். தலைவி தன்னை மறந்துவிட்டதாகக் கூறும் பொழுது தலைவன் வேதனையில் இருப்பதை உணர்த்தும் பாடல் உள்ளது.
அவளா சொன்னாள் இருக்காது அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது நம்ப முடியவில்லை இல்லை இல்லை
உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா
உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா
எனச் ‘செல்வம்’ திரைப்படத்தில் வாலி எழுதிய பாடல் இடம் பெறும். இதுபோல் திரைப்படத்தில் பல காட்சிகள் உள்ளன. இவற்றைச் சொல் வெருளியை விளக்குவதாக எடுத்துக் கொள்ளலாம்.
நெடுஞ்சொல் வெருளி (Hippopotomonstrosesquippedaliophobia/ Sesquipedalophobia), பெயர் வெருளி (Onomatophobia/Nomatophobia) ஆகியன இவ்வகையினவே.
ஒரே பொருளுடைய வெவ்வேறு சொற்களைத் தனித்தனிச் சொற்களாக வைகப்படுத்த வேண்டா என்பதால் ஒன்றாகவே குறித்துள்ளேன்.
logo என்னும் கிரேக்கச் சொல்லிறகும் verbo என்னும் இலத்தீன் சொல்லுக்கும் பொருள் சொல்.
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5

++

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : இலக்குவனார் திருவள்ளுவன்



திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம்

தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள்

பொதுத்தலைப்பு:

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் –   நிறைவுரை 1

அன்புள்ள அவையோருக்கு வணக்கம்.

  “இன்றைய மன்பதைச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்”என்னும் பொதுப்பொருண்மையில் 22 தலைப்புகளில் இதுவரை உரையாற்றி உள்ளனர். இன்றைய மன்பதையை ஆட்டிப்படைக்கும் சிக்கல்களைத் தேர்ந்தெடுத்துக் கவிஞர் செவ்வியன்  தொடர் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். கவிஞர் செவ்வியன் இப்பொழிவுகளில் இடம் பெற்ற தலைப்புகளில் முன்னரே உரை ஆற்றியுள்ளார் அல்லது எழுதி உள்ளார். எனவே, தாமே முழுமையாகப் பேசக்கூடிய கருத்தாழம் உள்ளவராக இருப்பினும் பிறரது கருத்துகளையும் அறியச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இப்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார் எனக் கருதுகிறேன். நிறைவுரை ஆற்ற என்னை அழைத்த கவிஞர் செவ்வியன் அவர்களுக்கும் அன்றில் இறைஎழிலன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கவிஞர் செவ்வியன் தெரிவு செய்துள்ள இச்சிக்கல்களை ஆராய்ந்து தீர்த்தாலே நாடு நலம் பெறும் மக்கள் வளம் பெறுவர்.

  முதலில் அனைவரின் பேச்சுகளையும் அறிந்து அதற்கேற்ப என் கருத்துகளைப் பதியலாம் என எண்ணியிருந்தேன். அக்கருத்துகொண்டிருந்த கவிஞர் செவ்வியன், பின்னர் இவ்வாறு உரைகளின் அடிப்படையில் உரையாற்றும் பொழுது வெட்டியும் ஒட்டியும் அமைவதாக நிறைவுரை அமையுமேன்றி, என்னுடைய கருத்துகளை அறிய  வாய்ப்பிருக்காது; ஆதலின்  தலைப்புகளின் அடிப்படையிலான என் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டினார். ஆதலின், அதற்கிணங்க இத் தொடர்  சொற்பொழிவில் ஆற்றிய உரைகளின் தலைப்புகள் பற்றிய என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.தமிழ்ப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பல்வேறு இதழ்கள் நடத்தி அவற்றின் வழியே தமிழ்ப்பணிகள்ஆற்றியவர்.  இன்றைய தலைப்புகள் குறித்து  அருடைய கருத்துகள் இன்றும் பொருந்துவனவாக அமையும் வகையில் நாட்டில் மாற்றம் ஏற்படாமல் உள்ளது. அவற்றில் சிலவற்றையும் நான் இடையிடையே படித்துக் காட்ட உள்ளேன்.

  இத் தொடர் சொற்பொழிவுகளில் இடம் பெற்ற தலைப்புகள் வருமாறு : –

பொதுத்தலைப்பு: இன்றையச் சமூகச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்

1. (01.09.2012)  தொடக்க விழா

2. (08.09.2012) ஆசிரியர் – நிருவாகம் – பெற்றோர் – மாணவர் உறவுகள்

 3.(15.09.2012) தமிழகத்தில் ஆட்சிமொழியும் பயிற்று மொழியும் ஒன்றியத்தோடு தொடர்புடைய மொழி

4. (22/09/12) இந்திய ஒன்றியமும் மாநிலத் தன்னாட்சியும்

5. (29/09/12) கல்வி அரசு பள்ளி வழியாதனியார் பள்ளி வழியா?

6. (06.10.12) குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஏன்எந்த வழியில்?

7. (13/10/12) கல்வி அருகமைப் பள்ளி மூலம்சமச்சீர்க்கல்வி ஏன்எவ்வாறு?

8. (20/10/12) பொதுநல்வாழ்வு – அரசின் போக்கும் மக்களின் கடமையும்

9.(27/10/12) ஊழலும் கையூட்டும் : அரசின் கட்சிகள்அரசு ஊழியர்கள்,பொதுமக்கள்

10.(03/11/12) விலை ஏற்றமும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புப் போராட்டமும்

11. (10.11.12)  இலவயங்கள் – விலையில்லாப் பொருள்கள் – பண்பாடு – ஒழுக்கம- முயற்சி ஆகியவற்றின் அழிவு -அரசியல் கட்சிகள் எதிர்த்துப்போராடாதது

12. (17.11.12) இட ஒதுக்கீடும் சலுகைகளும் சாதி மத அடிப்படையிலாபொருளியல் அடிப்படையிலா?

13. ( 24.11.12) வேலையில்லாத் திண்டாட்டம் உண்மையா?  பொய்யாஉண்மையெனில் தீ்ர்வு என்ன?

14. (01.12.12)  சாதி வெறியும் தீண்டாமை ஒழிப்பும் – பெரியாரின் பங்கு – இவை ஒழியக் காரணங்கள் எவைதீர்வு எவ்வாறு?

15. (08.12.12) உற்பத்தி: பொதுத்துறை – கூட்டுறவுத் தறை – தனியார் துறை- உற்பத்தித் தேவையை நிறைவு செய்யவா?  ஆதாயம்(இலாபம்) ஈடடவாஆதாயம் எனில் ஆதாய விழுக்காட்டை வரையறுப்பது யார்?

16. (15.12.12) இயற்கை வளங்கள் கொள்ளை – காரணம் யார்அரசாதனியார்களா?

17. (22.12.12) முனைப்புவாதமும்(தீவிரவாதமும்) வன்முறையும் ஏன்எப்போதுதீர்வுக்கு என்ன வழி?

18. (29.12.12) பண்பாட்டுச் சீரழிவுக்குப் பொறுப்பு :திரைப்படம் – சின்னதிரை – விளம்பரம் – தணிக்கைத் துறை – பெற்றோர் மரபுவழிப் பண்பாட்டைக் காப்பாற்றுதவற்கான போராட்ட வடிவம் என்ன?

19. (05.01.2013)  இன்றைய  குமுகாய அமைப்பில் மண முறிவுகள் – குடும்பச் சீரழிவுகள் – காரணம் என்னதீர்வு என்ன?

20. 12.01.13 அரசியல் கட்சிகள் – சாதியக்கட்சிகள் – மதக்கட்சிகள் ஆகியவற்றின் பெருக்கம் வளர்ச்சியின் அறிகுறியாசீரழிவா?  இந்தியக் கூட்டரசில் எத்தனைக்கட்சிகள் இருக்க வேண்டும்மாநிலக் கட்சிகள் தேவைதானா?

21. 19.01.13  ஆட்சி நிருவாகமும் தேர்தல்முறையும் : அழிவுக்குக் காரணம் அரசியல் கட்சிகளாஅரசுப் பணியாளர்களாவாக்காளர்களா?

22. (26.01.2013) நிறைவு விழா

  தொடக்கமாக நான் ஒரு கருத்தைத் தெரிவிக்க விழைகிறேன்.

 மொழிப்போர் ஈகியருக்கான வீர வணக்க நாள்நடைமுறைக்கிணங்க நேற்று (சனவரி 25)  நிகழ்த்தப்பட்டாலும் உண்மையில் இன்றுதான் வீர வணக்க நாள். முதலில் துக்க நாளாக அறிவிக்கப்பட்டதும் சனவரி 26ஆம் நாளைத்தான். இன்றுதான் இந்தி எதிர்ப்புப் போரில் உயிரிழந்தவர்களுக்கு,  ஈகியருக்கு வணக்கம் செலுத்த வேண்டிய நாள்.  வரலாற்றில் துக்கநாளாக அறிவிக்கப்பட்ட இந்த நாளில் தொடர்பொழிவின் நிறைவு நிகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால்தொடர் பொழிவுகளில் இந்தி எதிர்ப்புப் போரைப்பற்றியோ தமிழ்க்காப்புப்போர் பற்றியோ ஒரு பொழிவும்  அமைக்காதது வியப்பாய் இருக்கிறது. மன்பதைக்குத் தேவையான சிக்கல்கள்பற்றி நன்கு ஆராய்ந்து தலைப்புகள் தந்த,  மொழிப்போர் குறித்து நூல் எழுதிய கவிஞர் செவ்வியன் அவர்கள் ஏன் இதை விட்டு விட்டார்  என்று தெரியவில்லை. இருப்பினும்,  ஆட்சி மொழிபயிற்றுமொழிஒன்றிய மொழி குறித்தும் கல்வி குறித்தும் தலைப்புகள் உள்ளமையால் அவை பற்றிய தலைப்புகளில் இந்தி முதன்மை குறித்தும் தமிழ்க்காப்பு குறித்தும் காணலாம்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages