காசி பிராமணர்கள்

70 views
Skip to first unread message

Prof.V.Nagarajan

unread,
Nov 21, 2010, 12:04:45 PM11/21/10
to mint...@googlegroups.com
Click Me!
 
காசி பிராமணர்கள் அறிவுஜீவிகள் என்று அறிப்படக் காரணம் காசி கல்வி கேள்வியில் சிறந்து குறிப்பாக சமஸ்கிரித ஞானம் கொண்டவ்ர்கள் நிறைந்த நகரம் என்று பன்னெடுங்காலமாக் கருதப்பட்டதே.
 
சுமார் 3 மில்லியன் மக்களுக்குமேல் வாழும் நகரில் கற்றறிந்தோர் விழுக்காடு 67க்கு மேல்
 
சமஸ்கிரித அறிவை மேம்படச் செய்ய பல்கலைக் கழகங்களும் சமஸ்கிரிதப் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனங்கள் நிறைந்து நடுவன் அரசின் தாராள நிதி உதவியுடன் வளமாக இருப்பது வறுமையில் வாடும் தமிழ் மொழி ஆர்வலர்களுக்குப் பொறாமையை ஏற்படுத்தக்கூடும்
 
காசி மன்னரால் காசி ராஜா டிரஸ்ட் என்ற நிறுவனம் புராணங்களைப் பதிப்பிக்கும் பணியில் பன்னெடுங்காலமாக ஈடுபட்டு வருகிறது.  மூன்றாம் பதிப்பை வெளியிடும்போது அந்நிறுவனத்தில் உள்ள சமஸ்கிரிதப் பண்டிதர்கள் கணினிப் பயன்பாட்டில் பாண்டித்யம் பெற்று கணினி அடிப்படியில் சொற்பட்டியலை உருவாக்கி விளக்கம் எழுத ஆரம்பித்தனர்
 
அவ்வப்போது இது தொடர்பாக சில வழிகாட்டுதல்களை அவர்களுக்கு அளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது 
 
அக்காலகட்டத்தில் நவீனத் தொழில் நுட்பம் பயன்பாட்டில் இருந்த போது குருவின் காலடி அமர்ந்து அவர் வாயால் பாடம் கேட்டுப் பயிலும் வேதப்பாடசாலைகள் குறைய ஆரம்பித்தன
 
1975-ல் 159க்குமேல் இருந்த வேதப் பாடசாலைகள் குறைந்து ஆயிரத்துக்கும் குறைவான மாணவ்ர்களே படிக்கும் நிலையை அடைந்துவிட்டது.
 
வேத அப்பியாசம் செய்து பொறுமையுடன் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியகளைவிட மிக அதிக அளவில் பல்வேறுபட்ட பிராமணர்கள் அங்கே இருக்கிறார்கள்
 
நான் மறந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனைக் காசி மன்னரின் அழைப்பின் பேரில் காசிக்கு அழைத்து சென்றபோது இவ்வகை உயர்வகைப் பிராமணர்கள் வேதம் ஓதும் நிகழ்ழ்சியில் கலந்து கொண்டேன் தலைமை ஏற்றவர் தமிழ் நாட்டில் பிறந்து காசியில் வாசம் செய்யும் கணபாடிகள்.  அவர் தலைமியில் நான்கு வேதங்களையும் இசையுடன் வேத விற்பன்னர்கள் பாடிக்காட்டினர்
 
காசியில் இவர்களைப்போன்று வேதம் ஓதுவோர் மிகமிகக் குறைவே
 
காசியில் வந்து குவியும் கணக்கிலா பக்தர்கள்,  ஆயிரக்கணக்கான சாவதற்கென்றே நடமாடும் வயதான மனிதர்கள், சாரி சாரியாக அனுமன் கட் நோக்கிப் பயனிக்கும் பின ஊர்திகளில் மேல்புறம் மீளாத்துயிலில் இருப்போருக்கும் சேவை செய்ய மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு 
 
  1. மந்திரம் சொல்லும் பிராமணர்
  2. ஈமக்கிரியை செய்யும் பிராமணர்
  3. கோவில் பூசை செய்யும் பிராமணார்
  4. புனித யாத்திரை வந்தவர்களுக்கு உதவும் பிராமணர் இத்யாதி இத்யாதி என்று
பலவிதமான பிராமணர்கள் வாழ்வாதாரத்துக்காகப் பணிபுரிகிறார்கள்
 
வேதசாரத்தை விளக்கும் விற்பன்னர்களைவிட பூஜை புணஸ்கார தொழில்நுட்பவியலார்களே அதிகம்.  அவர்களே வேத நியமங்களை மனப்புத்தகத்தில் இருந்து எடுத்து பாமரர் மனம் நிறைய மந்திரம் சொல்லி முடிப்பவர்கள்.  அவர்கள் வேதத்துக்கும்  மக்களுக்கும் இடையே பாலமாகப் பயன்படுபவர்கள்
 
ஆயினும் அவர்கள் வேத அறிவில் கரை கண்டவர்கள் என்று சொல்ல முடியாது
புலமையைவிட பாமரர்களிடம் இருந்து பணம் பறிக்கும் திறமை அதிகம் என்று சொல்லப்படுவதுண்டு
 
அவர்களில் மிகச் சிலரே சமஸ்கிரிதத்தில் முழுமையான புலமை வாய்ந்தவர்கள்.  பெரும்பாலானோர் வேதத்தைன் ஓதுவாரே ஒழிய ஓதும் மந்திரங்களுக்கு அர்த்தம் என்ன என்று தெரியாதவர்கள்.  பெரும்பாலும் மதச்சடங்குகளைச் செய்வதும் முன்னோர் கற்பித்த வேத உச்சாடனம் செய்வதும் அச்சில் உள்ள ஹிந்தியில் உள்ள புத்தகங்களை விற்பதுமே அவர்களின் அன்றாட வேலை
 
கேட்போருக்கு அர்த்தம் தெரியாது என்பதால் அவர்கள் மனப்பாடம் செய்ததை அப்படியே ஒப்புவிப்பதும் உண்டு
 
(இங்கே வடபழனிக் கோவிலுக்கு சமஸ்கிரித அறிஞர் ஜமதக்னி சென்ற்போது அங்கே இறைவனுக்கு மந்திரம் ஓதுபவர் ஈமக்கிரியைக்கான மந்திரம் ஓதுவதைக் கண்டு அவரைக்கூப்பிட்டுச் சொல்ல அவர் தான் சொல்லுவதே சர் என்று பிடிவாதம் பிடிக்க அவர் சமஸ்கிரித சுலோகங்களைச் சொல்லி விளக்கியதாகச் சொன்னார்)
 
ஆகவே காசியில் பெரும்பாலும் சாஸ்திரம் சொல்லும் சாஸ்திரிகள் சமஸ்கிரிதப் பண்டிதர்களைவிடப் பலமடங்கு அதிகம்
தொடரும்
அடுத்து காசியின் சமஸ்கிரிதச் சிறப்பு
நாகராசன்
 
FREE Animations for your email - by IncrediMail! Click Here!
grad.jpg
SENDER_EMAILradius@@consultancy@gmail@@com.png
benaras4.jpg
benaras1.jpg
benaras5.jpg
image.gif
imstp_animation_butterflies_en_020908.gif

Geetha Sambasivam

unread,
Nov 21, 2010, 7:57:19 PM11/21/10
to mint...@googlegroups.com
99-ம் ஆண்டு காசிக்குச் சென்றோம். தமிழ்நாட்டை விடவும் அங்கே நன்கு படித்த சம்ஸ்கிருத அறிவு நிறைந்தவர்கள் பலரும் இருக்கிறதைக் கண்கூடாய்க் கண்டோம். இவர்களில் கன்னடம் பேசும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அதிகம். இப்போ தெரியலை.

2010/11/21 Prof.V.Nagarajan <radius.co...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

benaras1.jpg
benaras5.jpg
SENDER_EMAILradius@@consultancy@gmail@@com.png
benaras4.jpg
imstp_animation_butterflies_en_020908.gif

Astrologer Vighnesh சென்னை

unread,
Nov 21, 2010, 9:36:13 PM11/21/10
to mint...@googlegroups.com
இப்பவும் அப்படியே தான் இருக்கிறது. நான் ரெண்டு வாரத்துக்கு முன் போயிருந்தேன்.  ஹனுமான் காட் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. தசாஸ்வமேத் காட் பகுதியில் நாட்டுக்கோட்டை சத்திரம் இருக்கும் பகுதியில் கொஞ்சம் தமிழ்ர்கள் வசிக்கும் பகுதி.
சமஸ்கிருத ஞானத்தில் அதிக படித்தவர்கள் அதிகம். மதன் மோகன் மாளவியா காலத்திலிருந்து இதை போற்றி வருகிறார்கள். பெனாரஸ் ஹிந்து யுனிவர்ஸிட்டி இங்கே தான் உள்ளது. நான் பலமுறை சென்று வருவதால் இதைப் பத்தி இங்கே பதில் இட்டேன். நன்றி
கே.வீ.விக்னேஷ் சென்னை

2010/11/22 Geetha Sambasivam <geetha...@gmail.com>

99-ம் ஆண்டு காசிக்குச் சென்றோம். தமிழ்நாட்டை விடவும் அங்கே நன்கு படித்த சம்ஸ்கிருத அறிவு நிறைந்தவர்கள் பலரும் இருக்கிறதைக் கண்கூடாய்க் கண்டோம். இவர்களில் கன்னடம் பேசும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அதிகம். இப்போ தெரியலை.

2010/11/21 Prof.V.Nagarajan <radius.co...@gmail.com>
 
K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrolovighnesh.com
skype: astrovighnesh

RRavi Ravi

unread,
Nov 22, 2010, 3:18:38 AM11/22/10
to mint...@googlegroups.com
காசி பிராமணர்கள் அறிவுஜீவிகள் என்றால்
மற்ற பிராமணர்கள் முட்டாள்களா ?

2010/11/22 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com

இறந்த பின்னும்
  இயற்கையை ரசிக்க

   ண் தானம் செய்வோம் !!!!!
 
விஜயராகவன்

unread,
Nov 22, 2010, 4:18:58 AM11/22/10
to மின்தமிழ்
On Nov 21, 6:04 pm, "Prof.V.Nagarajan" <radius.consulta...@gmail.com>
wrote:

>
> காசியில் இவர்களைப்போன்று வேதம் ஓதுவோர் மிகமிகக் குறைவே

அதே கேஸ்தான் தமிழ்நாட்டிலேயும். கடந்த 100 வருடங்களில் வேதப்பயிற்சி,
வேதப்பாடசாலைகள் போன்றவை பிராமணர்களாலேயே பெருமளவில் உதாசீனப்பட்டு
விட்டன. 200 வருடங்கள் முன் 95% பிராமணர்களுக்கு குறைந்த அளவிலோ,
அதிகமாகவோ வேதப்பயிற்சி இருக்கும். தற்காலத்தில் அது 0.005% தான்
இருக்கும். வேதங்கள் வாய்வழியாக வருபவையால், பல வேத சாகைகள் மறைகின்றன.

ஐரானிகலாக 'மறை'என்பது புதிய அர்த்தம் கொள்கிறது. மறை
பிராமணர்களிடமிருந்தே மறைகின்றன. அதற்கு பிராமணர்கள் தங்களைத் தவிர
யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

விஜயராகவன்

Geetha Sambasivam

unread,
Nov 22, 2010, 4:23:14 AM11/22/10
to mint...@googlegroups.com
ஒரு விதத்தில் சரினு சொல்லலாம்.  உங்க கேள்வியின் அர்த்தம் எப்படி இருந்தாலும் காசியில் சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் போன்றவற்றின் அடிப்படையும், அதன் உள் பொருளும் எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு எடுத்துச் சொல்லிச் செய்ய வைப்பார்கள்.  இங்கே தமிழ்நாட்டில் தெரிஞ்சாலும் நேரம் இல்லை, நேரம் இருந்தாலும் சொல்வதில்லை.  அங்கே ஒவ்வொரு சடங்குக்கும் ஏன், எதுக்கு, எப்படி என்பது விலாவரியாகச் சொல்லப் படுகின்றது.  மேலும் இதை எல்லாம் பிராமணர்கள் மட்டுமே படிக்கணும்னு பநாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம் ஒரு போதும் சொன்னதும் இல்லை.  நம் முன்னாள் பிரதமர் லால்பஹாதூர் சாஸ்திரி இப்படி சாஸ்திரங்களில் கரை கண்டு சாஸ்திரிப் பட்டம் வாங்கியவர் தான், பிறப்பால் பிராமணர் அல்ல.

2010/11/22 RRavi Ravi <erae...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 22, 2010, 4:23:42 AM11/22/10
to mint...@googlegroups.com
சரியே/ :(

2010/11/22 விஜயராகவன் <vij...@gmail.com>

N. Kannan

unread,
Nov 22, 2010, 5:10:56 AM11/22/10
to mint...@googlegroups.com
விஜயராகவன்:

மாநிலம் தழுவிய இயக்கங்களின் தாக்கம் எல்லா சமூகங்களிலும் இருக்கும்.
அவ்வகையில் கழகங்களின் தாக்கம் பிராமணர்களிடமும் உண்டு. வேதம் ஓதுதல்
என்பது கொரியாவில் விவசாயம் செய்வது போல. State subsidy/sponsorship
இருந்தால் மட்டும் நடக்கும். சங்க காலம் தொட்டு தமிழ்க் குமுகாயம் 1%
குறைவான ஒரு குடியை வேதம் கற்றல், ஓதுதல் போன்ற தொழிலுக்கு என சிறப்பாக
வைத்திருந்து பாதுகாத்து வந்தது. அவர்களுக்காக சதுர்வேத மங்கலமென
கிராமங்களையே அரசுகள் கொடுத்தன. கட்டக் கடைசியாக ஊட்டுப்பிறை நடந்தது
60களில் எனலாம். அதுவரை வேதம் ஓதுதல் அரசு கவனிப்புப் பெற்ற ஒரு தொழில்.
ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே பிராமணர்களின் கவனம் வெகுவாகச்
சிதறிவிட்டது. ஆயினும் வேத அப்பியாசம் என்பது இந்தியாவிலிருந்து போகாது.
தமிழ்நாடு ஒரு காலத்தில் வேதாந்த விசாரங்களில் சிறப்புற்று இருந்தது.
இப்போது அது மெல்ல, வேதங்களை மதிக்கும், சநாதன தர்மங்களை மதிக்கும்
மாநிலங்களுக்கு நகர்ந்துவிட்டது. கர்நாடக மாநிலத்தில் ஒரு மாபெரும் வேத
பாடசாலை இருப்பதாக அறிகிறேன். பிற மாநிலங்களிலும் இருக்கும். தமிழ்
நாட்டிலும் காமகோடி, பரனூர் பெரியவர்களின் கவனிப்பில் வேதபாடம்
ஓடிக்கொண்டு இருக்கிறது. ஜெ.ஜெ. காலத்தில் கோயில் குருக்களுக்கு limited
syllabus வேத பாராயணம் ஆதரிக்கப்பட்டது. இப்போது கருணாநிதியைக் கேட்டால்
சரியென்றுதான் சொல்லுவார். ஆனால், அவர் சார்ந்த கழகத்தின் இமேஜ் அதற்கு
இடம் கொடுக்காது. உலகில் எல்லாம் வரும் போகும். எல்லாம் ஒரு சுழற்சி
அவ்வளவுதான்.

க.>

2010/11/22 விஜயராகவன் <vij...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Ganesan

unread,
Nov 22, 2010, 7:47:49 AM11/22/10
to மின்தமிழ்

On Nov 22, 3:23 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> ஒரு விதத்தில் சரினு சொல்லலாம்.  உங்க கேள்வியின் அர்த்தம் எப்படி இருந்தாலும்
> காசியில் சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் போன்றவற்றின் அடிப்படையும், அதன் உள்
> பொருளும் எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு எடுத்துச் சொல்லிச் செய்ய
> வைப்பார்கள்.  இங்கே தமிழ்நாட்டில் தெரிஞ்சாலும் நேரம் இல்லை, நேரம்
> இருந்தாலும் சொல்வதில்லை.  அங்கே ஒவ்வொரு சடங்குக்கும் ஏன், எதுக்கு, எப்படி
> என்பது விலாவரியாகச் சொல்லப் படுகின்றது.  மேலும் இதை எல்லாம் பிராமணர்கள்
> மட்டுமே படிக்கணும்னு பநாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம் ஒரு போதும் சொன்னதும்
> இல்லை.  நம் முன்னாள் பிரதமர் லால்பஹாதூர் சாஸ்திரி இப்படி சாஸ்திரங்களில் கரை
> கண்டு சாஸ்திரிப் பட்டம் வாங்கியவர் தான், பிறப்பால் பிராமணர் அல்ல.
>

பிறப்பால் மாத்திரம் ஒருவருக்கு வேதம் கற்கலாம் என்பது
இனிமேலும் நிற்காது - சட்ட பூர்வமாக. திருவரங்கத்தில்
ஸ்ரீமான்தாங்கிகள் (சீமாந்தாங்கிகள்) கௌசிக புராணம்
படிப்போரை சிவிகையில் துக்கிச் செல்லும் மரியாதை
இணையாணையர் ரத்து செய்துவிட்டதாக செய்திகள்
வந்தன.

வேத பாடசாலைகள் கணினிமயம் ஆகவேண்டும்.
இணையத்தில் வேத, ஆகம பாடங்கள் கிரந்த
எழுத்தில் உரையுடன் இடம்பெற வேண்டும்.
விரும்புவோர் ஹிந்து மத சாஸ்திரங்கள், வேதங்கள்,
உபநிஷதங்கள், ... படித்துக்கொள்ள வாய்ப்பு
இந்திய, மாநில சர்க்கார்கள் நிதியுதவியுடன்
செய்யவேண்டும். இந்தியப் பல்கலைக்கழகங்கள்
மட்டுமல்ல, ஏராளமான ஐரோப்பிய, அமெரிக்க,
ஜப்பான் பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள்
இந்த ப்ராஜக்டுகளுடன் சேர்ந்து தம் உழைப்பையும்,
அறிவாற்றலையுல் அளிக்க முன்வருவர்.
பல பௌத்த, சமண நூல்களும் வடமொழிகளில்
தாம் உள்ளன, அவற்றை கிரந்தத்தில் எழுதிப்
படிக்க இயலும்.

நா. கணேசன்

kalairajan krishnan

unread,
Nov 22, 2010, 7:54:17 AM11/22/10
to mint...@googlegroups.com
வணக்கம்
இ​றைவன் திருவருளாள் காசி ​செல்லும் வாய்ப்பு கி​டைத்துள்ளது,

1-1-2011 மற்றும் 2-1-2011  ஆகிய இரு தினங்கள் அங்​கே இருக்க வாய்ப்பு உள்ளது,

நானும் எனது நண்பனும் ​செல்கி​றோம்,

இந்த இரண்டு நாட்களில் நாங்கள் அங்​கே
வழிபட ​வேண்டிய ​தெய்வங்கள்
வழிபாட்டு மு​றைகள்
அறிந்த அன்பர்கள் அன்​புடன் கூறி உதவிடுமாறு
​வேண்டுகி​றேன்

அன்பன்
கி.கா​ளைராசன்

--
​திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/

அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

Geetha Sambasivam

unread,
Nov 22, 2010, 9:53:04 AM11/22/10
to mint...@googlegroups.com
வழிபாட்டு முறைகள் உங்கள் செளகரியம்போல!

2010/11/22 Geetha Sambasivam <geetha...@gmail.com>
இரண்டு நாட்கள் போதவே போதாதே? என்றாலும் காசி விஸ்வநாதர் ஆலயம், அன்னபூரணி ஆலயம், விசாலாக்ஷி ஆலயம், பைரவர் ஆலயம்(இது காசி யாத்திரையில் கடைசியில் வரும்) போன்றவையும், துளசிதாசரின் ராமாயணக்கண்காட்சியும், பநாரஸ் ஹிந்து பல்கலைக்கழகமும் பார்க்கவேண்டிய இடங்கள். ஹநுமான் காட்டிலும், கேதார் காட்டிலும் தமிழிலே பேசினாலே புரிந்துகொள்வார்கள். கேதார் காட் கோயில் திருப்பனந்தாள் காசி மடத்தால் நிர்வகிக்கப் படுகிறது.  தங்கும் வசதிகளும், சாப்பாடு வசதிகளும் உண்டு. கங்கை இப்போது கொஞ்சம் வேகத்தைக் குறைத்துக்கொண்டிருப்பாள்.  குளிர் இருக்கும்.  குளிருக்குப் பாதுகாப்பான உடைகள் எடுத்துச் செல்லவும்.

2010/11/22 kalairajan krishnan <kalair...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Nov 22, 2010, 12:00:53 PM11/22/10
to mint...@googlegroups.com
ஒரு விழுக்காடு மட்டும் அந்தணர்கள் என்ற விதி சமுதாய அமைப்பில் 99 விழுக்காடு மேலே வரக்கூடாது என்று ஏற்பாடு செய்யப்பட்ட தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. .
 பிராமணர்கள் என்ற வகுப்பு மற்றவர்களும் மேலே வந்து அவர்களைப்போல் ஆக உதவுவதற்காக உருவானகுழு.  அது பின்னாளில் ஒரு சாதியாக உயர் சாதியாகத் தங்களை நிலைநாட்டிக்கொண்டு வழிமாறிப்போனது

ஒரு பிராமணனிமன் மகன் பிரமணனாகத்தான் இருக்கவேண்டும் என்றும் கீழ் நிலையில் இருப்பவன் பிராமணம் கற்றால் பெற்றால் பிராமணன் ஆகக்கூடாது என்று எங்கே உள்ளது என்று ஸ்வாமி விவேகானந்தர் கேள்வி எழுப்புகிறார்.  சாதி பற்றிய அவர் கருத்து இணைப்பில்
கோவில் அர்ச்சகர்களாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சட்டமே இங்கே இருக்கிறது. 
பூஜை செய்பவர்கள் எல்லாம் பிராமணர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பது எல்லாரும் பிராமணர்கள் ஆகவேண்டும் என்ற ஸ்வாமி விவேகானந்தரின் கருத்துக்கு மாறாக பிராமணர்களை ஒழித்தே சமூகநீதி காக்கமுடியும் என்ற தவறான தர்க்கவாதத்தில் இருப்பதே இன்றைய நிலை
ஒரு விழுக்காடு பிராமணர்கள்மேலும் எண்ணிகையில்  உயரவேண்டும் என்பதற்குப் பதிலாக அந்த ஒரு விழுக்காடு இருப்பவர்களையும் தாழ்த்தவேண்டும் என்ற கொள்கைநிலைக்கு சமூகநீதிகாக்கும் அரசு வந்துவிட்டது.  அதுவே சமூகநீதி என்று வாதாட வரிந்துகட்டி நிற்பது நிதர்சன உண்மை
நாகராசன்

2010/11/22 N. Kannan <navan...@gmail.com>

--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv
casteproblems.pdf

செல்வன்

unread,
Nov 22, 2010, 12:11:55 PM11/22/10
to mint...@googlegroups.com
With all due respects, வருணாசிரமப்படி பிராமனனாக இருப்பது பெரிய சலுகை அல்ல. அது ஏழ்மையில் உழலும் தொழில்களை கட்டிகொண்டு அழவேண்டிய ஒரு வருணம்.வேதகாலத்தில் பிறந்திருந்தால் வைசியனாக பிறப்பது நல்லது.ஷத்திரியன் என்றால் போர் செய்யணும்,பிராமணன் என்ரால் ஏழ்மையில் உழலணும்.சூத்திரன் என்றால் தீண்டாமை.

இந்த அழகில் எல்லோரும் வேறு பிராமணனாவதா?எனக்கெதுக்கு அந்த தண்டனை?:-)யார் ஆகணுமோ அவர்கள் ஆகிகொள்ளுங்கள்...உஞ்சவிருத்தியும், மணியாட்டுவதும், வேத பாராயணமும் தான் முழுநேர தொழில் என்ரால் நம்மால் ஆவாது:-)

2010/11/22 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

--
செல்வன்

கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்

காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்

நம்பற்குரியர் அவ்வீரர் - தங்கள்

நல்லுயிர் ஈந்தும் கொடியினை காப்பர்

www.holyox.blogspot.com

Geetha Sambasivam

unread,
Nov 22, 2010, 7:29:01 PM11/22/10
to mint...@googlegroups.com
பிராமணர்கள் என்ற வகுப்பு மற்றவர்களும் மேலே வந்து அவர்களைப்போல் ஆக உதவுவதற்காக உருவானகுழு.  அது பின்னாளில் ஒரு சாதியாக உயர் சாதியாகத் தங்களை நிலைநாட்டிக்கொண்டு வழிமாறிப்போனது//

உண்மை ஐயா, ஆனால் இது ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் ஏற்பட்டது. :(((((((((( அவர்கள் பிரித்தாள நினைத்ததும் செய்த முதல் வேலை விவசாயத்திலும், கோயில்களில்  கை வைத்தது தான். அது இன்றளவும் தொடர்கிறது. இன்று விவசாயமும் மோசமான நிலையில் இருக்கிறது.  விவசாயம் செய்யவோ, விவசாயக் கூலிக்கு ஆட்களோ முன்வராத நிலை.கட்டிடத் தொழிலாளர்களை பிஹார், மேற்கு வங்கத்திலிருந்து வரவழைத்துப் புதிய தலைமைச் செயலகம் கட்டப் படுவதையும் அறிந்திருப்பீர்கள்!

2010/11/22 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
ஒரு விழுக்காடு மட்டும் அந்தணர்கள் என்ற விதி சமுதாய அமைப்பில் 99 விழுக்காடு மேலே வரக்கூடாது என்று ஏற்பாடு செய்யப்பட்ட தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. .
 பிராமணர்கள் என்ற வகுப்பு மற்றவர்களும் மேலே வந்து அவர்களைப்போல் ஆக உதவுவதற்காக உருவானகுழு.  அது பின்னாளில் ஒரு சாதியாக உயர் சாதியாகத் தங்களை நிலைநாட்டிக்கொண்டு வழிமாறிப்போனது

ஒரு பிராமணனிமன் மகன் பிரமணனாகத்தான் இருக்கவேண்டும் என்றும் கீழ் நிலையில் இருப்பவன் பிராமணம் கற்றால் பெற்றால் பிராமணன் ஆகக்கூடாது என்று எங்கே உள்ளது என்று ஸ்வாமி விவேகானந்தர் கேள்வி எழுப்புகிறார்.  சாதி பற்றிய அவர் கருத்து இணைப்பில்
கோவில் அர்ச்சகர்களாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சட்டமே இங்கே இருக்கிறது. 
பூஜை செய்பவர்கள் எல்லாம் பிராமணர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பது எல்லாரும் பிராமணர்கள் ஆகவேண்டும் என்ற ஸ்வாமி விவேகானந்தரின் கருத்துக்கு மாறாக பிராமணர்களை ஒழித்தே சமூகநீதி காக்கமுடியும் என்ற தவறான தர்க்கவாதத்தில் இருப்பதே இன்றைய நிலை
ஒரு விழுக்காடு பிராமணர்கள்மேலும் எண்ணிகையில்  உயரவேண்டும் என்பதற்குப் பதிலாக அந்த ஒரு விழுக்காடு இருப்பவர்களையும் தாழ்த்தவேண்டும் என்ற கொள்கைநிலைக்கு சமூகநீதிகாக்கும் அரசு வந்துவிட்டது.  அதுவே சமூகநீதி என்று வாதாட வரிந்துகட்டி நிற்பது நிதர்சன உண்மை
நாகராசன்

Geetha Sambasivam

unread,
Nov 22, 2010, 7:33:21 PM11/22/10
to mint...@googlegroups.com
பிராமணர்கள் வெறும் உஞ்சவிருத்தி மட்டும் செய்து கொண்டு கோயிலில் மணி ஆட்டிக்கொண்டும் வேத பாராயணம் செய்து கொண்டும் மட்டும் இருக்கவில்லை. உங்களால் முடியவில்லை என்றால் யார் வற்புறுத்துகின்றார்கள்?? கோயிலில் மணி ஆட்டுவது ஒன்றும் சுலபமான வேலையும் இல்லை.  கருவறைக்குள் நின்று கொண்டு அந்த அடுக்கு தீபாராதனைத் தட்டை எல்லா அடுக்குகளும் ஏற்றப் பட்டுத் தூக்கிப் பார்க்கவேண்டும்.  மணியையும் தூக்கிப் பார்க்கவேண்டும்.  அதற்கு உரிய பலம் இருப்பது அப்போது தான் தெரியும்.

ஆயுதப் பயிற்சி அளித்து வந்ததும் பிராமண ஆசான்களே.  இப்போதும் ராணுவத்தில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்களிலும், ராணுவ மருத்துவத்தில் இருப்பவர்களும் பிராமணர்களைக் காண முடியும்.

2010/11/22 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Nov 22, 2010, 9:07:48 PM11/22/10
to mint...@googlegroups.com

2010/11/22 Geetha Sambasivam <geetha...@gmail.com>

பிராமணர்கள் வெறும் உஞ்சவிருத்தி மட்டும் செய்து கொண்டு கோயிலில் மணி ஆட்டிக்கொண்டும் வேத பாராயணம் செய்து கொண்டும் மட்டும் இருக்கவில்லை. உங்களால் முடியவில்லை என்றால் யார் வற்புறுத்துகின்றார்கள்?? கோயிலில் மணி ஆட்டுவது ஒன்றும் சுலபமான வேலையும் இல்லை.  கருவறைக்குள் நின்று கொண்டு அந்த அடுக்கு தீபாராதனைத் தட்டை எல்லா அடுக்குகளும் ஏற்றப் பட்டுத் தூக்கிப் பார்க்கவேண்டும்.  மணியையும் தூக்கிப் பார்க்கவேண்டும்.  அதற்கு உரிய பலம் இருப்பது அப்போது தான் தெரியும்.

நான் அந்த தொழிலை குறை சொல்லவில்லை.அதில் வருமானம் இல்லை என தான் கூறுகிறேன்.அது ஒரு அடித்தட்டு தொழில்.அதில் மரியாதை இருக்குமே ஒழிய கையில் காசு,பணம் சேராது.அதை செய்தால் வீட்டில் வறுமை மட்டுமே தாண்டவமாடும்.கோயில்களில் பூசாரிகளுக்கு மிக குறைந்த சம்பளமே அளிக்கபடுகிறது.

ஆயுதப் பயிற்சி அளித்து வந்ததும் பிராமண ஆசான்களே.  இப்போதும் ராணுவத்தில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்களிலும், ராணுவ மருத்துவத்தில் இருப்பவர்களும் பிராமணர்களைக் காண முடியும். 

ஆயுத பயிற்சி அளித்தாலும் பரிசாக நெல்மூட்டையை கொடுத்தாலும் வாங்கிகொள்ள வேண்டும்.பெரும் செல்வத்தை கொடையாக கேட்க கூடாது.எந்த காலத்திலும் ஆயுதத்தை கையில் எடுத்து பிராமணன் போராட கூடாது.மகாபாரதத்தில் ஆயுதம் ஏந்திய துரோணரை பீமன் கடுமையாக இகழ்வதில் இருந்து இதை அறியலாம்.

இதன்மூலம் நான் சொல்லவருவது வருணாசிரமம் நிலவிய காலகட்டத்தில் பிராமனனாக இருப்பது Not Fun என்பதே.ஷத்திரியனாக இருந்தால் எந்த போர்க்களத்திலும் உயிர் பிரியலாம்.வைசியனாக இருந்தால் மட்டுமே சற்று நிம்மதியாக இருக்கலாம் என்பதே.

Nagarajan Vadivel

unread,
Nov 22, 2010, 9:59:24 PM11/22/10
to mint...@googlegroups.com
பிராமணம் என்பதும் பிராமணர்களும் வேறுபட்ட கருத்துருக்கள்.
பிராமணம் என்பது இறையுணர்வுடன கலந்து இவ்வுலக வாழ்வின் சுக துக்கங்களை ஒதுக்கி வாழும் பண்பு.  பிராமண வாழ்வு பொருள் உலகைவிட அருளுஉலகை ஆராதிக்கும் பாங்கினைக் கொண்டது.  பிராமணம் சட்டத்துக்கெல்லாம் அப்பாற்பட்டது
எங்கே பிராமணன் சுயநலம் கருதாது அன்பும் அறிவும் கொண்டு அதை மற்றவகளுக்குச் சென்றடையச் செய்கிறானோ அங்கு ஆணியமும் பெண்ணியமும் இறை உணர்வுடன் நல்வழியில் வாழுகிறதோ அங்கு
ராணுவத்துக்கும் காவல்துறைக்கும் என்ன வேலை இருக்க முடியும்?.  அவர்கள் ஒரு அரசாங்கத்தின் நிழலில் வாழவேண்டும் என்ற நியதி உண்டா? அவர்களை ஆட்சி செய்யவேண்டும் என்பதற்கான தேவை என்ன?
எல்லாரும் நல்லவராக உயர்ந்தோராக கடவுளின் குழந்தையாக வாழும் இடமே பிராமணம் வாழும் இடம். சத்ய யுகத்தில் சொன்ன திராவிட இயக்கம் கலியுகத்தில் வாய்மொழிந்த ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மானுடத்தின் உயர்நிலை அதுவே
நம் காலப்பரிமானச் சக்கரத்தில் மஹாபாரத காலத்தில் வாழ்ந்த அனைவரும் பிராமணர்கள் என்ற நிலையில் இருந்த நிலை பிறழ்ந்து சமுதாயச் சிந்தனைச் சீரழிவால் பிளவுப்பட்ட மனிதம் மீண்டும் சுழன்று அனவரும் பிராமனர்களே என்ற நிலையை அடைய முடியும் என்பதே ஸ்வாமி விவேகானந்தரின் கருத்து.  காலச் சக்கரம் மீண்டும் சுழன்று அனைவரும் ஒன்றே குலம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயர்நிலை எய்தினால் நீங்கள் நினக்கும் அவல நிலையில் இருந்து பிராமணம் துயிலெழுந்துஎல்லாரும் பிராமணகளாய் வாழும் இடமாக இச்சமுதாயம் விளங்கும் என்று நம்புங்கள் செல்வன்
நாகராசன்

2010/11/23 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Nov 22, 2010, 10:09:59 PM11/22/10
to mint...@googlegroups.com

2010/11/22 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

எங்கே பிராமணன் சுயநலம் கருதாது அன்பும் அறிவும் கொண்டு அதை மற்றவகளுக்குச் சென்றடையச் செய்கிறானோ அங்கு ஆணியமும் பெண்ணியமும் இறை உணர்வுடன் நல்வழியில் வாழுகிறதோ அங்கு
ராணுவத்துக்கும் காவல்துறைக்கும் என்ன வேலை இருக்க முடியும்?.  அவர்கள் ஒரு அரசாங்கத்தின் நிழலில் வாழவேண்டும் என்ற நியதி உண்டா? அவர்களை ஆட்சி செய்யவேண்டும் என்பதற்கான தேவை என்ன?
எல்லாரும் நல்லவராக உயர்ந்தோராக கடவுளின் குழந்தையாக வாழும் இடமே பிராமணம் வாழும் இடம். சத்ய யுகத்தில் சொன்ன திராவிட இயக்கம் கலியுகத்தில் வாய்மொழிந்த ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மானுடத்தின் உயர்நிலை அதுவே

ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி ஆட்சியில் கூட இப்படி ஒரு பொற்காலம் நிலவியிருக்குமா என்பது சந்தேகமே ஐயா.

பொதுவாக மனிதர்கள் அனைவரையும் உத்தமர்களாக கருதும் சித்தாந்தங்கள் தோல்வியையே தழுவும்.மனிதன் என்பது குரங்கு வம்சாவளியை போன்ற கீழான அற்ப இனம்.அதற்கு உயர்ந்த குனங்கள் எதுவும் கிடையாது.மிருக இயல்பே மனித இயல்பு என்பதை அறிந்து தனிநபர்களின் சுயநலனை அங்கீகரித்து அதன் மூலம் பொதுநலனை மேம்படுத்த முயலும் சித்தாந்தங்களே வெற்றி அடையும்.

Nagarajan Vadivel

unread,
Nov 22, 2010, 10:14:47 PM11/22/10
to mint...@googlegroups.com
லேகியம் சாப்பிடும்போது குரங்கை நினத்துச் சாப்பிடக்கூடாது என்று சொல்லுவார்கள். 
டார்வினின் குரங்கும் நம் குரங்கும் ஒன்றல்ல குரங்காக இருந்து இறைநிலை அடைவதும் இறைநிலையில் இழிவாக நடந்து 184000 பிறவிகாளில் ஒன்றான குரங்கு நிலையை மனிதன் அடைவதும் இங்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட சித்தாந்தம்
நாகராசன்

2010/11/23 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Nov 22, 2010, 11:52:06 PM11/22/10
to mint...@googlegroups.com
.எந்த காலத்திலும் ஆயுதத்தை கையில் எடுத்து பிராமணன் போராட கூடாது.மகாபாரதத்தில் ஆயுதம்
 
 ஆமாம் உண்மை
பிராமணன்  தன் அறிவை வைத்து,   நுணுக்கமான சக்திகளை வைத்து, நேர்மையான  தவ வலிமைகளை வைத்து,  போராட வேண்டும்
 
ஆயுதம் ஏந்த வேண்டிய அ்சியமே வரக் கூடாது  பிராமணனுக்கு  என்பதையே அப்படிக் கூறினர்
 
” உண்மையாக தன் குல தர்மங்களை  கடைப்பிடிக்கும் ப்ராமணனுக்கு  ஆயுதமே  தேவையில்லை, அவனுடைய ப்ரம்ம தேஜஸ், ப்ரம்ம சக்தியே  ஆயுதமாகும்“
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
2010/11/23 செல்வன் <hol...@gmail.com>
.எந்த காலத்திலும் ஆயுதத்தை கையில் எடுத்து பிராமணன் போராட கூடாது.மகாபாரதத்தில் ஆயுதம்

செல்வன்

unread,
Nov 23, 2010, 12:19:56 AM11/23/10
to mint...@googlegroups.com
நாகராஜன் வடிவேல் ஐயா,

உலகை படைத்த மகாசக்தி முன் மனிதனும், கொசுவும்,குரங்கும், கிருமியும் ஒன்றே.மனித பிறவி அற்பமானது.குரங்கை விட எவ்விதத்திலும் அது மேலானதல்ல.முக்தி என ஒன்று இருந்தால் அது ஆண்டவன் கருணையாலேயே சித்திக்கும்.நம் கையில் ஏதுமில்லை.புராணம்,இதிகாசம் இதைப்பற்றி என்ன சொல்லுகிறது என ஒரு அளவுக்கு மேல் எனக்கு தெரியாது.நான் சொல்லுவது என் கருத்து மட்டுமே.

நன்றி தேனி ஐயா

prakash sugumaran

unread,
Dec 5, 2010, 5:41:38 AM12/5/10
to mint...@googlegroups.com
கோவில் அர்ச்சகர்களாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சட்டமே இங்கே இருக்கிறது. 
பூஜை செய்பவர்கள் எல்லாம் பிராமணர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பது எல்லாரும் பிராமணர்கள் ஆகவேண்டும் என்ற ஸ்வாமி விவேகானந்தரின் கருத்துக்கு மாறாக பிராமணர்களை ஒழித்தே சமூகநீதி காக்கமுடியும் என்ற தவறான தர்க்கவாதத்தில் இருப்பதே இன்றைய நிலை
 
தமிழ் நாட்டில் தொடங்கப்பட்ட அணைத்து சமயத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்ற திட்டத்தோட நிலைமை பாத்தா வேற யாரும் கருவரைக்குள்ள நுழையவே முடியாதுன்னு புரிஞ்சிக்கலாம்.. சுப்ரீம் கோர்ட்ல இந்த திட்டம் வர கூடாதுன்னு சொன்னவங்க தாக்கல் செய்த மனுவுல இருந்தது என்னன்னா " பிராமணங்கள தவிர வேற யாராவது சாமிய தொட்ட தீட்டு ஏற்பட்டு.. சிலையில இருந்து சாமி வெளி ஏறிடும்.. அதனால கோவில்களோட புனிதம் போயிடும்.."
 
இந்த ஒரு விஷயத்த தவிர பிரமாணங்க ரொம்பவே நல்ல குணம் உள்ளவங்கதான்

2010/11/23 செல்வன் <hol...@gmail.com>
நாகராஜன் வடிவேல் ஐயா,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
prakash sugumaran

விஜயராகவன்

unread,
Dec 5, 2010, 6:55:49 AM12/5/10
to மின்தமிழ்
On Dec 5, 11:41 am, prakash sugumaran <prakash...@gmail.com> wrote:
>
> தமிழ் நாட்டில் தொடங்கப்பட்ட அணைத்து சமயத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்ற
> திட்டத்தோட நிலைமை பாத்தா வேற யாரும் கருவரைக்குள்ள நுழையவே முடியாதுன்னு
> புரிஞ்சிக்கலாம்.. சுப்ரீம் கோர்ட்ல இந்த திட்டம் வர கூடாதுன்னு சொன்னவங்க
> தாக்கல் செய்த மனுவுல இருந்தது என்னன்னா " பிராமணங்கள தவிர வேற யாராவது சாமிய
> தொட்ட தீட்டு ஏற்பட்டு.. சிலையில இருந்து சாமி வெளி ஏறிடும்.. அதனால கோவில்களோட
> புனிதம் போயிடும்.."
>
> இந்த ஒரு விஷயத்த தவிர பிரமாணங்க ரொம்பவே நல்ல குணம் உள்ளவங்கதான்

ப்ரகாஷ்

தமிழ்நாட்டு கோவில்களில் 10-15% கோவில்களில்தான் பிராமணர்கள்
அர்ச்சகர்களாக உள்ளனர்.

அர்ச்சகர்களுக்கு பின்னால் தேவஸ்தான் போர்ட் இதைப்பற்றி முடிவு
செய்கிறது. தேவஸ்தான் போர்ட் அங்கத்தினர்கள் பிராமண கமிட்டி இல்லை.
தேவஸ்தான போர்டுகள் அரசு துறையான இந்து மத சம்பந்த மந்திரியின் கீழ்
இயங்குகிரது. எல்லோரும் இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் அடி பணிகிறனர்.

ஒரு சட்டரீதியான ஜனநாயக அமைப்பான இந்தியாவில் பல தளங்கள், பல அமைப்புகள்
சேர்ந்து உள்ளன.நீங்கள் சொல்லுவது (சில) கோவில்களில் நடப்பதென்றால்,
அதற்கு இந்த எல்லா அமைப்புகளும், முறைகளும் காரணம். பிராமணர்கள் தங்கள்
அடாவடி செய்தே அர்ச்சகர்களாக உள்ளனர் என்றால், அது மிகை. சிலரின்
அடாவடிக்கு தேவைக்கு மேலான சக்தியை கொடுக்கின்றீர்

விஜயராகவன்

செல்வன்

unread,
Dec 5, 2010, 10:24:41 PM12/5/10
to mint...@googlegroups.com

2010/12/5 prakash sugumaran <praka...@gmail.com>

தமிழ் நாட்டில் தொடங்கப்பட்ட அணைத்து சமயத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்ற திட்டத்தோட நிலைமை பாத்தா வேற யாரும் கருவரைக்குள்ள நுழையவே முடியாதுன்னு புரிஞ்சிக்கலாம்.. சுப்ரீம் கோர்ட்ல இந்த திட்டம் வர கூடாதுன்னு சொன்னவங்க தாக்கல் செய்த மனுவுல இருந்தது என்னன்னா " பிராமணங்கள தவிர வேற யாராவது சாமிய தொட்ட தீட்டு ஏற்பட்டு.. சிலையில இருந்து சாமி வெளி ஏறிடும்.. அதனால கோவில்களோட புனிதம் போயிடும்.."
 
இந்த ஒரு விஷயத்த தவிர பிரமாணங்க ரொம்பவே நல்ல குணம் உள்ளவங்கதான்

கோர்ட்டில் மனுதாக்கல் செய்தவர்கள் உலகின்/தமிழ்நாட்டின் அனைத்து பிராமணர்களின் பிரதிநிதிகளா?

மற்றபடி இதை ஏன் கோர்ட்டுகளில் இப்படி போட்டு உழப்பி கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. இதில் வழக்கு தொடரவும், விவாதிக்கவும் என்ன இருக்கு? எந்த தொழிலையும், எந்த ஜாதியும் செய்யலாம் என்பது குழந்தைக்கும் தெரியும்.இதுக்குமா வழக்கு, விவாதம் எல்லாம்?
--
செல்வன்

சுதந்திர தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து

ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர்

மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்

தாவில் வானுல கென்னத் தகுவதே.

www.holyox.blogspot.com

prakash sugumaran

unread,
Dec 8, 2010, 2:14:31 AM12/8/10
to mint...@googlegroups.com
Pettition filed by Aathi Sivachariyargal Union in Supreme Court
Against The Govt of Tamil Nadu. This Union is functioning from
Madurai.

தமிழ்நாட்டு கோவில்களில் 10-15% கோவில்களில்தான் பிராமணர்கள்
> அர்ச்சகர்களாக உள்ளனர்.

is not the real Statistics. i will try to bring the exact details.

Reply all
Reply to author
Forward
0 new messages