மணி மகுடம்

1,369 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 27, 2020, 4:57:51 AM4/27/20
to மின்தமிழ்


தினசெய்தி நாளிதழில் இன்று (27.04.2020) வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 32)


‘‘இசையச் செய்யும் இசை..!’’

ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்


மன்னர் சரபோசி கல்லூரியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றுகிற பொழுது புரட்சித் தலைவர் தன் குழுவினரைக் கொண்டு `இன்பக்கனவு' என்ற நாடகம் நடத்த வந்தார். அப்போது புரட்சித் தலைவரிடம் நெருக்கமாக இருந்த கவிஞர் முத்துக்கூத்தன் என்னை அழைத்துப் போனார். மாணவப் பருவத்திலேயே என்னை அறிந்தவர் புரட்சித் தலைவர். என் மாணவன் பஞ்சநதி ஈசன் புரட்சித் தலைவரை கண்டால் போதும் என்று தவம் கிடந்தவன். ஓதுவார் மகன் இனிய இசை வளத்தால் எவரையும் பாடி ஈர்த்தவன். அவனையும் உடனழைத்துச் சென்றேன். ``அவ்வை மாணவனா நீ?'' என்று சொல்லி, ``ஒரு பாட்டு பாடு'' என்றார் பொன்மனச் செம்மல் அவனிடம்.

`உலகிற்கு ஒன்றாய் நின்றவன் நீ' என்ற இரண்டாம் தொடரை எடுத்து உரக்கப் பாடி, `ஓசை ஒலியெலாம் ஆனாய் நீ' என்று முடித்தான். மெய் மறந்து நின்ற புரட்சித் தலைவர் தன் பையில் இருந்து 100 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் கொடுத்தார். என்னைப் பார்த்து உங்கள் கல்லூரிக்குப் பேச வருகிறேன் என்று சொன்னார். அத்துடன், ``அது என்ன ஓசை, ஒலி?'' என்று கேட்டார் எனக்கு உடம்பெல்லாம் வியர்த்தது.

அண்ணா, ஓசை என்றால் அலை ஓசை, ஒலி என்றால் வானொலி என்று கூறினேன்.

இசை உலகத்தில் சப்தம், நாதம் என்று சொல்வார்களாம். தமிழ்தான் என் தலையைக் காத்தது. இரண்டும் மயங்கி வருவதும் உண்டு என்று சொன்னேன். அதனை வாழ்நாள் முழுவதும் அவர் மறந்தது இல்லை.

இந்த நிலையில், 21/12/1978 அன்று புரட்சித்தலைவர் சென்னை இசைக் கழகத்தின்(சங்கீத வித்வத் சபை) 52ஆவது மாநாட்டை தொடங்கி வைத்து ஆற்றிய உரையைப் படிக்கலாம்...

‘‘இசைக் கலைக்குத் தொண்டு செய்யும் விற்பன்னர்களும் இசைக் கலையை இல்லத்தில் வளர்க்கும் தாய்மார்களும் நல்ல இசையை ரசனையுடன் பாராட்டிப்போற்றும் பெரியோர்களும் இங்கு இசை விழாவைத் தொடங்கி வைக்கக் கூடியிருக்கிறீர்கள். இத்தகைய மேலோர் குழுமிய அவையில் நிகழவிருக்கும் இசை விழாவைத் தொடங்கி வைக்குமாறு என்னை அழைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த விழாவைத் தொடங்கி வைப்பது உண்மையில் நானல்ல; நீங்கள்தான்!

இறைவனின் தேரை இழுப்பதற்காக, அவ்வூர் மரபுப்படி குறிப்பிட்ட ஒருவரையோ அல்லது அமைச்சர் ஒருவரையோ அழைப்பார்கள் அவரும் தேரின் வடத்தைத் தொடுவார். அதை ஒருவர் தூக்குவதுகூட எளிதல்ல. ஊர் மக்கள் ஒன்று கூடித் தேரை இழுத்து, ஊர்வலம் சுற்றி மீண்டும் தேரை நிலைக்குக் கொண்டு வருவார்கள். ஆனால், ஏடுகளிலே வெளிவரும். ‘‘அமைச்சர் அல்லது ஒரு பிரமுகர் தேரை இழுத்தார்'' என்று. அதுபோல உங்களில் ஒருவனாக, இசையை, இசை மேதைகளை ஆராதிக்கும் முதற்தொண்டனாக, இந்தப்பணியில் ஈடுபட வாய்ப்பளித்துள்ளீர்கள். தமிழகத்தின் முதல்வர் என்பதற்காக அல்லாது, இசை, இசையோடு தொடர்பு கொண்ட நாடகம், மற்றும் நுண்கலைகள் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட ஒரு ரசிகன் என்ற முறையிலும் இந்த உயர்வு எனக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

இந்த இசைக் கழகம் பொன்விழாச் சிறப்புப் பெற்று, இப்பொழுது 52ஆவது விழாவை எட்டியிருக்கிறது. 52 என்ற எண்ணின் கூட்டுத் தொகை ஏழு. இசை, ஏழு ஸ்வரங்களில் உண்டாவது. ஆகையால், இந்த விழா இசையோடு எவ்வளவு நயமாக ஒட்டியிருக்கிறது என்பதை இதிலேயே உணர்ந்து நான் ரசிக்கிறேன். ‘‘ஏழிசையாய் - இசைப் பயனாய் நின்றவன்'' என்று நம் முன்னோர்கள் வழிபாட்டில் கூறியுள்ளார்கள். அந்த ஏழு இங்கேயும் இருக்கிறது. நாத உபாசனை என்பார்கள் பெரியோர்கள். இசை மூலமாக இறைவழிபாடு செய்வது என்று அதற்குப் பொருள்.

இறைவழிபாடு என்றால், இறைமைக் குணங்களைக் கைக்கொண்டு வழிப்படுதல் என்றும் பொருள் கொள்ளலாம். மனிதன் மனிதனாக வாழ்ந்தால் அவன் கடவுளின் வாரிசாகக் கருதப்படுவான். அந்த மனிதத் தன்மையை அடைவதற்குத் தன்னைப்போல் பிறரை நினைக்கும் குணம் தேவை. எல்லாம் ஒன்று என்ற எண்ணம் உண்டாக வேண்டும். இசை ஒன்றுதான் ‘‘ஒன்ற'' வைக்கும் ஆற்றல் கொண்டது பாடுகின்றவர் கருதியோடு ஒன்றும்போது, மற்றவர்கள் அவரோடு ஒன்றிவிடுகிறார்கள். சுருதி கொஞ்சம் கலைந்தால்கூட ஒன்றுகிற நிலை கலைந்துவிடும். உருகிப் பாடும்போது கண்களில் நீர் மல்குவதைக் காண்கிறோம். இது தனக்காக உகுக்கும் கண்ணீரலல. மற்றவருக்காக மற்றவரின் மனத்தில் நிலையான ஆனந்தத்தை ஏற்படுத்த உகுக்கின்ற கண்ணீர்!

‘‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி'' - என்ற செய்யுள் வரியை நாம் கேட்டிருக்கிறோம். கண்ணனைக் காதலனாக – சேவகனாக – சற்குருவாக – சீடனாக – காதலியாகக் கூட பாவித்துப் பாடினார்கள். அந்த பாவம் ஐக்கியமடைந்த ஆன்மாவின் புனித சங்கமத்தில் உருவாகும் உன்னத நிலை. நாத உபாசனை (இசை வழிபாடு) இருக்கிறதே, இதில் எந்த விதமான பேதத்திற்கும் இடம் கிடையாது. மனம் உள்ளவர்களின் மனங்களையெல்லாம் ஈர்க்கும் ஆற்றல், அதாவது இசையவைக்கும் சக்தி கொண்டது அந்த இசை.

நாத உபாசனை என்று சொல்வதோடு -

‘நாதயோகம்' என்றும் சொல்வார்கள்.

‘பூதங்கள் ஒத்துப் புதுமை தரல் விந்தையெனில்

நாதங்கள் சேரும் நயத்தினுக்கு ஈடாமோ.'' என்றார் பாரதியார்.

நாதங்கள் சேரும் நயம்தான் நாத யோகம். அத்தகைய புனிதமான பேரானந்த மண்டலத்திற்கு நம்மை அழைத்துப் போகும் நல்லிசை - மரபுவழி இசையாகும்; அதாவது கருநாடக சங்கீதமாகும். பொதுவாக – இசை நம்முடைய தமிழ்க் குடும்பங்களில் ஒன்றிப் போன ஓர் அம்சம் ஆகும். சின்னஞ் சிறு குழந்தையைத் தூங்கவைக்க, தாய் குழந்தையைத் தொட்டிலில் போட்டுத் தாலாட்டுப் பாடுவது வழக்கம்.

அக்கால இலக்கியத்தைப் பார்த்தாலும் இசையினுடைய முக்கியத்துவம் நமக்குப் புலப்படுகிறது. அன்று வாழ்ந்த பாணர்கள் மன்னர்களைக்கண்டு யாழ் மீட்டி, இசை பாடித் தம் திறமைக்கு ஏற்ப அன்பளிப்பாகப் பொன்னும் மணியும் பெற்று வீடு திரும்புவார்களாம்.

வழியிலே பாலை நிலங்கள், காடுகள், ஆகியவற்றைக் கடந்து வரும்போது - அவர்களைக் கள்ளர்கள் வழிமறித்துக் கொள்ளையடிக்க முயலுவார்களாம். அந்தப் பாணர்கள் இனிமையான பாடல்களைப் பாடி, அந்தக் கள்ளர்களையும் மயக்கி, அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்றுவிடுவார்களாம்.

கோயில்களில் மங்கல விழாக்களில் நாதசுரம் இசைப்பது தமிழர்களுடைய வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இந்த நாதசுரம் மங்கல விழாவுக்கே உரியது.

மங்கல இசைக்கு என்று தனியாகவும், மற்றைய நிலையை வெளிப்படுத்த வேறு வகையாகவும் வாத்தியங்களை வகுத்தக் கையாண்டவர்கள் நம் மூதாதையர்கள்.

அக்காலத்திலிருந்து நாட்டியம் தனிச் சிறப்புப் பெற்று வந்திருக்கிறது. இசை, காதால் கேட்டு அனுபவிப்பது, நாட்டியமோ கண்ணால் பார்த்ததும் காதால் கேட்டும் அனுபவிப்பது.

தமிழ் நூலான சிலப்பதிகாரத்தில் இசையையும் நாட்டியத்தையும் பற்றிய எண்ணற்ற விசேடக் குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. நாட்டியம் மகேசனைத் தொழுவதற்கும் மன்னர்களை மகிழ்விப்பதற்கும் பயன்பட்டது. நாட்டியமாடுவதற்கென்றே ஒரு பகுதியினர் இருந்த காலம் அது. பிற்காலத்தில் அந்த அற்புதக் கலை எல்லோருக்கும் பொதுவாகப் பரவி, இன்னார்தான் ஆட வேண்டும் என்ற நிலை மாறி, ஆடற்கலையில் வல்லவர்களாக எல்லோருமே ஆகலாம் என்ற அளவுக்கு, விரிவடைந்திருக்கிறது.

ஏன் அப்படி..!

காதில் இன்பத் தேனைப் பாய்ச்சுகிறது இசை! அந்த இசையின் ஒலி இதயத்தில் எதிரொலிக்கிறது!

அதோடு உடல் முழுவதும் பரவுகிறது. ஒவ்வொரு நரம்பையும் தட்டி எழுப்புகிறது!

பரவசம் ஊட்டுகிற ஓர் அபூர்வ மின் சக்தியாகி, நம்முடைய உடலின் ஒவ்வோர் அணுவையும் தீண்டி, ஒருவிதப் புதுமைக் கிளர்ச்சியை-மலர்ச்சியை-நெகிழ்ச்சியை-பூரிப்பை உண்டாக்கி விடுகிறது. நம்மிடமுள்ள எல்லாவற்றையுமே தன்வசப்படுத்திக் கொண்டுவிடுகிறது. சோர்வு உற்சாகமாகிறது... கவலை களிப்பாக மாறுகிறது...

கோபம் சாந்தமாகிறது... பகைமை நட்பாகிறது.

ஆழ்வார் பாசுரங்களில் ஒன்று நினைவுக்கு வருகிறது.

‘‘கோவிந்தன் குழல் ஊதின போது

மட மயில்களோடு மான்பிணைப் போல

மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ,

உடைநெகிழ, ஓர் கையால் துகில் பற்றி

ஒல்கி, ஓடரிக்கண் ஓட நின்றனரே!'' - என்று பாடுகிறார். குழலின் மெல்லோசை தருகின்ற பரவச நிலையை இப்படிச் சுவை ததும்ப வருணிக்கிறார் ஆழ்வார்.

‘‘நாதமே முக்கலை-நாதம் மூவெழுத்து

நாதமே முக்குணம்-நாதமே முப்பொருள்

நாதம் மூவுலகாகி விரித்து-

நாதமாம் பரத்தில் லயித்தது பாரே.

நாதம் பரத்தில் லயித்திடும் அதனால்

நாதம் அறிந்திடப் பரமும் அறியலாம்'' - இது ஓர் அகவல் பாடல்.

மேற்சொன்னவாறு மூன்று மூன்றாக விவரிக்கபட்ட இந்த நாதத்தின் மும்மூர்த்திகளாகத் திகழ்ந்தவர்கள் தியாகராசர், தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரும் ஆவார்கள். இவர்கள் மூவருமே ஆரூரைச் சார்ந்தவர்கள். ஆனாலும் ஓரூரைச் சேர்ந்தவர்கள் அல்லர். இந்தியத் துணைக்கண்டம் முழுவதற்கும், உலகத்தில் இசையை ரசிக்கின்றோர் வாழ்கின்ற அத்தனை இடங்களுக்கும் சொந்தமானவர்கள் இவர்கள். அறிவியல் துறையிலே மிக உயர்ந்து நிற்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில்கூட நமது இசைக் கலைஞர்கள் நமது கருநாடக இசையை முழக்கிப் புகழ்பெற்றுத் திரும்புகிறார்கள். இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் அண்ணல் காந்தியடிகளின் உள்ளத்தை உருகவைத்ததையும், ஐக்கிய நாடுகள் சபையிலே பலநாட்டு மக்களின் ரசனையையும் ஒன்றுபடுத்தி அவர்களால் புகழப்பட்டதையும், நாம் அறிவோம்! நம் இசை நாடு கடந்த, கடல் கடந்த ஒரு கலையாகும். அதுபோலவே, காலம் கடந்தும் நிலைத்து நிற்பதாகும்.

இசையாகிய தேனைப் பருகுவதற்கு அடிப்படை வடிவம். அந்த வடிவத்தைக் கீர்த்தனைகளாக்கி வழங்கிய மேலோர்கள் இந்த மும்மூர்த்திகள். முற்காலத் தமிழகச் சிறப்புக்கும், பண்பாட்டு மேன்மைக்கும், சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்கள் காரணமாக இருந்தது போல, பழம்பெரும் கருநாடக இசையின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் இந்த இசை - மூவேந்தர்கள் அடித்தளம் அமைத்துத் தந்திருக்கிறார்கள். ஆனால், இவர்களின் பாடல்கள் வடமொழியிலும் தெலுங்கு மொழியிலும் அமைந்திருக்கின்றன. அவற்றைக் கேட்கும்போது மனம் உருகினாலும், அந்த உருக்கம் அவற்றின் பொருளையும் நாம் அறிந்து கொள்ளும்போது இன்னும் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

‘‘தமிழ்த் தியாகய்யா'' என்று போற்றப்படும் பாபநாசம் சிவன், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், கோபாலகிருஷ்ண பாரதியார், முத்துத்தாண்டவர் முதலானவர்களின் பாடல்களைப் பாடக் கேட்கும்போது, இசையின் இனிமையோடு, பொருளையும் சுவைக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

சிலர் தமிழில் இந்த இசைப்பாடல்கள் அமைந்தால் அவற்றின் சிறப்பு குன்றிவிடுமோ என அய்யப்படுகிறார்கள். தமிழ் மொழி எந்த மொழிக்கும் புனிதத்தில் குறைந்ததில்லை. நம் தமிழகத்தில் பிறந்து, தமிழிலேயே பாசுரங்கள் இயற்றிய பன்னிரு ஆழ்வார்கள் வழங்கியுள்ள தேவாரத்திற்கும் தனிப்பட்ட சிறப்பும் பெருமையும் உண்டு என்று தெய்வத்தொண்டில் ஈடுபட்ட ஆன்றோர்களும் கூறியுள்ளார்கள்.

‘‘ ‘செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி' என்கையாலே, தமிழ் மறைகளும் மிகமிகத் தொன்மையானவை. வடமொழி மறை ஒன்று சம்ஸ்கிருத வேதத்தைச் சொல்வது, தமிழ் மறைகள் என்றென்றும் உண்டு என்று நினைத்தேதான் சொல்லப்படுகிறது. நான்கு வேதங்களுக்கு ஆறு அங்கங்கள், எட்டு உபாங்கங்கள் இருப்பதுபோல, நம்மாழ்வார் பணித்த தமிழ் மறைக்குத் திருமங்கையாழ்வார் பாடியருளிய ஆறு அங்கங்களும் மற்றைய எட்டு ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்களும் அமைந்திருக்கும்'' என்று சிறப்பு மிகுந்த எம்பார் விஜயராகவாச்சாரியார் கூறியிருக்கிறார்.

இசை, மொழியைக் கடந்தது என்றாலும், சொந்த மொழியில் பாடல்கள் அழகாகப் பாடப்படும்போது அவற்றின் பொருளையும் சேர்த்து அனுபவிக்க முடிவதால், இனிமை - ரசனை அதிகமாகிறது. கீர்த்தனைகள் ஆனாலும், பாடல்களானாலும் சொற்களுடைய அழகும், பாவமும் தெரியும்படியாகப் பாடவேண்டும். ஒரு சில இசைப் பேரறிஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு பாடும்போது சொற்கள் உருவிழந்து போகின்றன என்பது, ரசிகர்கள் பலரும் சொல்லிக்கொள்ளும் குறையாகும். ஆனால், தமிழ்ப்பாடல்களையும் கீர்த்தனைகளையும் சொற்களுடைய அழகு சிறிதும் குறையாமல் நயமாகத் திருமதி கே.பி.சுந்தராம்பாள், திருமதி டி.கே.பட்டம்மாள் முதலானவர்கள் பாடக் கேட்டு ரசித்திருக்கிறேன்.

இந்த விழாவிலே பாராட்டப் பெறும் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்கூட தெலுங்கிலே கீர்த்தனைகளை இவ்வாறு அழகுடன் பாடுவதை நான் பலமுறை கேட்டு அனுபவித்திருக்கிறேன். ரசித்து மகிழாதவர் இல்லை.

இசை, மொழிக்கு அழகு தருவது மட்டுமல்லாமல், அதனுடைய வளர்ச்சிக்கும் உதவ வேண்டும் என்பதே என் ஆசை. மதுரையிலே தமிழ் வளர்க்கும் பல்கலைக் கழகத்தில் இசை ஆராய்ச்சிக்கும் ஒரு பகுதியை நிறுவியிருப்பது, இத்தகைய ஆர்வத்தினால்தான் என்று இங்கே நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.''

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

- ஔவை நடராசன்,
தொடர்புக்கு: thamiz...@gmail.com



Sathivel Kandhan Samy

unread,
Apr 27, 2020, 6:13:15 AM4/27/20
to mint...@googlegroups.com
'நலமிக்க நலலார் சொல் கேட்க'  படிக்க வழி வகுத்து தந்தமைக்கு நன்றி.  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/72124e8f-f2f6-4bb9-adbe-dcbc06d38abd%40googlegroups.com.

தேமொழி

unread,
May 4, 2020, 1:14:54 AM5/4/20
to மின்தமிழ்
source - https://www.facebook.com/permalink.php?story_fbid=4376795205667699&id=283386165008644&__tn__=K-R

தினசெய்தி நாளிதழில் இன்று (04.05.2020) வெளியான கட்டுரை
===============================================

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 33)

‘‘மன அமைதிக்கான வரப்பிரசாதம் இசை..!’’

ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்

சென்னையில் ஓர் இலங்கை மாணவர் சிவபாலன் இசைக்கல்லூரியில் இடம் கேட்டு வந்தபோது, ``ஒரு பாட்டு பாடு'' என்றார் புரட்சித்தலைவர், விழித்த மாணவனிடம், ``ஓசை, ஒலி'' என்ற பாடலை பாடச் சொன்னார்.

``ஓசை ஒலியெலா மானாய் நீயே

உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே

வாச மலரெலா மானாய் நீயே

மலையான் மருகனாய் நின்றாய் நீயே

பேசப் பெரிது மினியாய் நீயே

பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே

தேச விளக்கெலா மானாய் நீயே

திருவையா றகலாத செம்பொற் சோதீ.''

- என்ற பாடலை சிவபாலன் இனிமையாகப் பாடியதை மிகவும் லயித்துக் கேட்டு மகிழ்ந்தார் புரட்சித்தலைவர்.

குறிப்புரை: `ஓசை, ஒலி' என்பன, `சத்தம், நாதம்' என்னும் பொருளுடையன. `வெற்றோசையும் பொருளோசையும்' என ஓசை இருவகைப்படும். அவற்றுள், வெற்றோசையை `ஓசை' என்றும், பொருளோசையை `ஒலி' என்றும் பொருள்பட நாவுக்கரசர் தேவாரத்தில் அமைந்தது.

சிவபாலனால் என் சிறப்பு பன்மடங்கு உயர்ந்தது. அவருடைய நினைவலைகள் எவ்வளவு நீண்டன என்று வியந்தேன். இந்தநிலையில் புரட்சித்தலைவரின் இசை உரையை வாசிக்கலாம்.

‘‘நாதப்பிரும்மம்'' என்பார்கள். இதிலிருந்து அதற்குண்டான தனி மதிப்பை நாம் அறிய முடியும். ஓசையை உண்டாக்கும் சக்திதான் காற்று. வசந்த காலத்திலும் காற்று வீசுகிறது. கடல் குமுறிக் கொந்தளிக்கும் காற்று வீசுகிறது. முன்னதற்குத்தான் தென்றல் என்று பெயர். பின்னதற்குப் பெயர் புயல் அல்லவா..!

ஸ்வரம், சுருதி, ராகம் இவை மூன்றும் நாதத்தின்... அதாவது ஓசையின் நல்லிசைக்குரிய ஜீவ அம்சங்கள், ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் இவை ஏழும் இசையின் ஸ்வரங்கள். இந்த ஏழையும் தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

தேவாரம், திருவாய்மொழிப் பாடல்களுக்குப் பலவகையான பண்கள் உள்ளன. அந்தப் பண்களுக்கு ஏற்ற இராகங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.

எடுத்துக்காட்டாகச் சிலவற்றைச் சொல்லலாம். தமிழில் உள்ள பண்ணான நட்டபாடைக்குரிய இராகங்கள் நாட்டை...

இந்தளம் - மாளவ கௌளை.

தக்கேசி - காம்போதி.

கௌசிகம் - பைரவி.

குறிஞ்சி - அரிகாம்போதி.

இந்தப் பண் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று விரைவில் எல்லாப் பண்களுக்கும் உரிய இராகங்களை அறியும் வாய்ப்பு ஏற்படக்கூடும் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டுக்கு என்று ஒரு பண்பு இருக்கிறது. அதேபோல கருநாடக இசைக்கும் ஒரு பண்பு இருக்கிறது. தமிழ்மறையான திருக்குறளில் கூறப்பட்டுள்ள நீதி முறைகள் எல்லாமே தமிழ்ப் பண்புகள் அன்புடைமை, அருளுடைமை, அடக்கமுடைமை, வாய்மை இப்படி எத்தனையோ பண்புகள்.

அவ்வாறே, கருநாடக இசைக்கும் பல இலக்கணங்கள் உண்டு. மனித இலக்கணம் போல இசைக்கும் இலக்கணம் இருக்கிறது. குறிப்பிட்ட கட்டுக்கோப்பைத் தாண்டக் கூடாது என்று வரம்பு உண்டு. சுதியோடு சேர்ந்து பாடவேண்டிய அவசியம் உண்டு தாளம் தவறக்கூடாது. இப்படிப்பட்ட விதிகள் ஏராளம். அவை அனைத்தையும் அறிந்து, தெளிந்து முறைப்படி கடைப்பிடிக்கவேண்டும். ஆதலால் இதற்கு மிகவும் `சாதகம்' தேவை அதாவது பயிற்சி வேண்டும். பயிற்சியில் முதிர்ச்சி பெறுவதற்குப் பொறுமை வேண்டும். ஆர்வமும் ஈடுபாடும் அசைவிலாத ஊக்கமும் அனைத்துக்கும் மேலாக பக்தியும் வேண்டும்.

இராகங்களுக்கு எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவைக்கு மாதர் திலகங்களின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.

கல்யாணி - பைரவி

நீலாம்பரி - ஜகன்மோகினி

வசந்தா - இப்படிப் பலப்பல. இதற்கு என்ன காரணமாக இருக்கும்!

`விண்' என்ற உத்தரத்தில் அன்பு என்கிற தாம்பு இட்டு, `மண்' என்ற தொட்டிலிட்டு, `கண்வளராய்' என்று கனிவோடும் கருணையோடும் அக்கறையோடும் ஆர்வத்தோடும் அன்போடும் அரவணைப்போடும் `இன்னிசை' என்றும் செல்வச் சேயைத் தாலாட்டிச் சீராட்டும் தாய்க்குலத்தினர் அல்லவா அவர்கள்! அதனால்தான் பெரும்பாலான இராகங்களின் பெயர்களில் அவர்கள் கொலுவிருக்கிறார்கள்.

பாட்டோடு பண் இணைய வேண்டும். இது மிகவும் முக்கியமாகும். திருவள்ளுவர் இதை ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார்:

``பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்!'' என்கிறார்.

தாட்சண்யம் என்பார்களே, அகல் இல்லாதபோது, கண் இருந்தும் பயனில்லை என்ற கருத்தைச் சொல்லவந்தவர், உவமையாகப் பண் பற்றிச் சொல்லுகிறார். ``பாடலோடு இணையாவிட்டால் பண் என்ன ஆகும்?'' என்று கேட்கிறார்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே `டென்ஷன்' எனப்படும் உணர்ச்சி வேகம் நிறைய இருக்கிறது. எல்லாத் துறைகளிலுமே பொறுப்புள்ளவர்களுக்குப் பொதுவாக ஏற்படும் பரபரப்பு நிலை இது!

இப்படிப் பரபரப்பான நிலை உண்டாவதால் உடல் நிலை பாதிக்கப்படும் என்றும், மனத்தை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர்கள் சொல்வதுண்டு. இதற்கு ஒரு வரப்பிரசாதம் போன்றதுதான் இன்னிசை.

``துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா.''

என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். இயற்றியிருக்கிறார் என்று நான் சொல்லவில்லை. அது செய்யுளாக மட்டுமாக இருந்தால் அப்படிச் சொல்லலாம். இசையோடும் இணைந்திருப்பதால் `பாடியிருக்கிறார்' என்று குறிப்பிட்டேன்.

தமிழிலே மாபெரும் கவிஞர்கள் பல கவிதைகளை இயற்றியிருக்கிறார்கள். அவர்களின் கவிதைகள் இசையுடன் பாடப்படும்போதுதான் உயிர் பெற்று உலவும் நிலை பிறக்கிறது.

நந்தனார் கீர்த்தனையை அனுபவிக்கிறோம். மாபெரும் கவிஞரான கோபால கிருஷ்ண பாரதியார் சுடர்விட்டுத் திகழ்கிறார்.

`சின்னஞ் சிறு கிளியே' என்ற கவிதை இசையோடு ஒலிக்கிறது-மகாகவி பாரதியார் ஒளி வீசுகிறார்.

`தமிழுக்கு அமுதென்று பேர்!'-இசையோடு ஒலிக்கிறது-பாவேந்தர் காட்சி அளிக்கிறார்.

தத்துவப் பாடல் ஒன்று, பாடப்படுகிறது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை நம்முன்னே காட்சி அளிக்கிறார்!

இப்படி, கவிஞர்களின் படைப்புகள் இசையோடுகலக்கும் போது, அவற்றிற்கும் அவற்றைப் படைத்தவர்களுக்கும் புகழ் உண்டாகிறது.

``ஆன்ம வெளியில் மூழ்கித் திளைப்போர்க்கு

அச்ச முண்டோடா!

மனமே!

தேன்மடை இங்கே திறந்தது கண்டு

தேக்கித் திரிவமடா!'' என்கிறார் பாரதியார்.

``தேன்மடை திறந்து விட்டது, தேக்கி மகிழ்ந்து ஆடுவோம்'' என்றால், என்ன தேன் அது! இசைத்தேன்! இனிமை மயமான சங்கீதத் தேன் அது!

நான் எனது மிகச் சிறிய பிராயத்திலேயே இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த நாடகக் கம்பெனியில் என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியவன். அந்தக் காலத்தில் நாடகம் என்றால், வள்ளித் திருமணம், சம்பூர்ண இராமாயணம், மகாபாரதம், சத்தியவான் சாவித்திரி, நந்தனார் என்பவை போன்ற இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடகங்களாகத்தான் இருக்கும். மேடையிலே எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தரம்பாள், சுப்பையா பாகவதர் போன்றவர்கள் அற்புதமான பாடல்களை விரிவாகப் பாடி மக்களைக் கவர்வது வழக்கம். புகழ்பெற்ற நாடகங்கள் எல்லாம் இசைக்கு முதலிடம் தரும் நாடகங்களாகத்தான் இருக்கும். என்னுடைய `தொழில் வாழ்க்கை'யை நாடகக் கம்பெனிகள் மூலம் தொடங்கியதால் எனக்கும் இளம்பிராயத்திலிருந்தே இசையை ரசிப்பதில் அளவற்ற ஆர்வம் இயல்பாகவும், சூழ்நிலை உதவியாலும் ஏற்பட்டிருந்தது; இசையில் பாண்டித்யம் இல்லாவிட்டாலும் நான் இசையை ரசிப்பதன் மூலம் அமைதியைப் பெற விரும்புகிறேன்.

உண்மையிலேயே கருநாடக இசையின் அடிப்படையில் அமைந்த அழகான சுத்தமான பாடல்களை படங்களில் அமைக்கச் செய்து நான் ரசித்து அனுபவித்து வந்திருக்கிறேன். கருநாடக இசை பின்னுக்குப் போய் விட்டது என்றும், மெல்லிசை என்ற பெயரில் மலிவான இலக்கணச் சுத்தமில்லாத பாட்டுக்கள் புகழ் பெற்றுவிட்டன என்றும் பலரும் இன்று குறை சொல்லுகிறார்கள். ஆனால், எனக்குத் தெரியும் ஒரு காலத்தில் பல திரைப்படங்கள் வெற்றியடைந்ததற்கு அவற்றினுடைய கருநாடக இசை மரபின்படி அமைக்கப்பட்ட பாட்டுக்களே காரணம் ஆகும் என்பது; இன்றும் நம்மில் பலர், பாபநாசம் சிவனின் பாட்டுக்களைத் தியாகராஜபாகவதர் திரைப்படங்களிலே பாடியதை, எவ்வளவு ரசனையோடு கேட்டு மகிழ்கிறோம் என்பது எனக்குத்தெரியும்.

இன்று திரைப்படங்களிலும் அத்தகைய நல்ல இசை இடம் பெறுவதற்கு அடிப்படையான ஆர்வமும் எண்ணமும் கொண்டு, திரைப்பட இசை இயக்குநர்கள் சிலர் அம்முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த இடத்தில் ஒரு செய்தியைக் குறிப்பிட விரும்புகின்றேன். மேலை நாடுகளிலும்கூட இந்தப் பிரச்சினை இருக்கின்றது. ‘வெஸ்டர்ன் கிளாசிக்கல் மியூசிக்' என்ற இசையின்பால் மக்களுக்கு உள்ள விருப்பம் குறைந்து ‘பாப் மியூசிக்' போன்ற நாகரிக இசையில் மக்கள் அதிகமாகக் கவனம் செலுத்துகிறார்கள் என்ற குறையை அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள். அதேபோல இன்று நம்முடைய குடும்பங்களிலும் இசைக்கு உள்ள ரசனை, ஓரளவு மாறுபட்டிருக்கின்றது. இதை நாம் எச்சரிக்கையோடு கவனித்தாக வேண்டும்.

எந்த ஒரு கலையும் ஆற்றின் நீரோட்டம் போல ஓடிக்கொண்டிருக்க வேண்டும். தேங்கிப் போனால் அதனுடைய அழகும், இனிமையும் குறைந்து போய்விடும். இந்தக் கருத்து இசைக்கும் பொருந்தும் நம்முடைய மக்கள் துரிதமான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார்கள். நிதானமாகவும், நீண்டநேரம் கவனம் செலுத்தியும் நுட்பமாகவும் கலைகளை ரசிக்க அவர்களுக்குப் பொழுது இருப்பதில்லை. ஒரு காலத்தில் இசைப் பேரறிஞர் இராஜரத்தினம் பிள்ளை போன்றவர்கள் ஒரு ராகத்தை இரவு முழுவதும் விடிய விடிய நாதசுரத்தில் வாசிப்பார்கள். கிராமங்களில் பல கோயில்களில் இரவு ஒரு மணி வரையில் சங்கீதக் கச்சேரி நடப்பதுண்டு.

ஆனால், இன்று சங்கீத சபாக்களில் நிகழும் மேடைக் கச்சேரிகள் மூன்று மணி நேரத்திற்கு மேல் இருப்பதில்லை. வானொலியில் இசைக் கச்சேரியை ஒலிபரப்பும்போது ஒன்றரை மணி நேரம்தான் ஒளிபரப்பப்படுகிறது. அதிலும் நல்ல பாடகர்களைச் சேர்ந்தாற்போல் பாடவிடாமல் நேரத்தை இரு பிரிவாகப் பிரித்துத் தந்து பாடச்சொல்கிறார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். டெலிவிஷனில் அதே இசைக்கச்சேரி முக்கால் மணிநேரந்தான் இடம் பெறுகிறது. ஆகவே, இன்று நல்ல இசையையும் கூடச் சுருக்கமாகவும், அதே சமயத்தில் இனிமையாகவும் கேட்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். மெல்லிசை இன்று மக்களிடையேயும், இளம் சமுதாயத்தினரிடையேயும் பிரபலமாக இருப்பதற்கு இதுதான் காரணம். நம்முடைய கருநாடக இசையை அழகான, சுருக்கமான வடிவத்தில், இனிமை குறையாமல் பாடச் செய்தால், அது அனைத்து மக்களையும் கவரமுடியும்; இளம் சமுதாயத்தினரிடையேயும் பிரபலமாக இருப்பதற்கு இதுதான் காரணம். நம்முடைய கருநாடக இசையை அழகான, சுருக்கமான வடிவத்தில், இனிமை குறையாமல் பாடச் செய்தால், அது அனைத்து மக்களையும் கவரமுடியும்; இளம் சமுதாயத்தினரையும் ஈர்க்க முடியும்.

‘கலாசாரம்' என்ற சொல்லைத் தமிழில் ‘பண்பாடு' என்னும் சொல் பண்-பாடு என்று பிரிந்து அழகான மற்றொரு பொருளையும் தருகிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கையில் முதலிடம் பெற்ற அரிய தன்மை இந்தப் ‘பண்பாடு' ஆகும். அதோடு, நுண்கலைகளின் காவலராகத் திகழ்ந்த அவர்கள் பண்-பாடுவோரைப் பாராட்டிப் போற்றுகின்ற பண்பாட்டைக் கொண்டவர்கள்!

அந்தப் பண்பாட்டைக் கடைப்பிடிக்கின்ற நான் பண்-பாடுவோரோடு கலந்து மகிழவும் இசையோடு நெஞ்சை இசையச் செய்யவும் ஒரு நல்வாய்ப்பு அளிக்கப்பட்டதற்கு, எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க இசை, வாழ்க தமிழ், வாழ்க அண்ணா நாமம்.''

தேமொழி

unread,
May 14, 2020, 10:14:40 PM5/14/20
to மின்தமிழ்


தின செய்தி நாளிதழில் இன்று (11.05.2020) வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 34)

‘‘பணத்தைவிடப் பாராட்டு மகிழ்ச்சியை அளிக்கிறது...!’’

ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்

===============================

வாழ்வு, கலை, பண்பாடு, ஒழுக்கம், இலக்கியம் என்பனவற்றை ஒரு வரிசையாகக் கருதும் வழக்கம் தமிழ் மக்களிடம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. கலையால் பண்பாடும் பண்பாட்டால் ஒழுக்கமும் வளர வேண்டும் என்று ஒரு கருத்து எப்போதும் இருந்தது.

கலை மனம் கொண்டவர்கள், உணர்வின் உயர்ந்த நிலையை உணர்ந்தவர்கள் என்பதாலும் அந்த உணர்வு மனித நேயத்துடன் பின்னிப் பிணைந்ததென்றும், அறிஞர்கள் கருதுவார்கள்.

தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் தோல்வியடைந்த பின்னர் வந்த கழக ஆட்சி என்று நாம் கருதினாலும், பேரறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி எனத் தொடர்ந்து வந்தவர்கள் அனைவரும் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர்கள் என்பதோடும், அவர்கள் இயல்பாகக் கலை மனம் கொண்டவர்களாகவே திகழ்ந்தார்கள்.

கலை மனம் உடையவர்களுக்கு வாழ்வு, பண்பாடு, இலக்கியம், கவிதை, நாகரிகம் முதலிய கூறுகளையெல்லாம் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் பெரிதாக இருக்கும். அந்த வகையில்தான் கலை உணர்ச்சி என்பது பொதுவாக அனைவரின் மனத்தை ஈர்ப்பது என்றாலும், அந்தத் துறையிலேயே தங்களுடைய வாழ்வைக் கழித்தவர்களுக்குக் கலையின் ஆர்வமும், பெருமிதமும், பாராட்டும் வாழ்க்கையில் ஒரு தனிச்சிறப்பை உருவாக்கித் தந்திருக்கிறது.

அந்த வகையிலேதான், கலை வாழ்வு என்பது, நுணுக்கமான வாழ்வு என்பது பற்றிச் சொல்லாமல், நடிப்பு என்பது, ஒரு வாழ்வில் நடப்பது போன்ற இடர்ப்பாடான ஒரு கலை என்று யாரோ ஒருமுறை எழுதியிருந்தார்கள். அதற்கு விளக்கம் சொல்ல வந்தபோது, நடிப்பது வேறு, நடப்பது வேறு, என்பதை இரண்டாகப் பிரித்துப் பார்த்துக் கொள்கிற வாய்ப்பு மிகவும் அரிதாகத்தான் அமையும்.

நடிப்பின் மீது, கைக்கொள்கிற பேரார்வம், நடிகர் தன் உள்ளத்திலிருந்து எடுத்துச் சொன்னாலும்கூட, இது நடிப்புதானோ என்று எண்ணுகிற ஒரு மயக்கம் ஏற்படுவது இயல்பாகும்.

இந்திப் படங்களைப் பார்த்த நாட்களில், என் மனத்தைக் கவர்ந்தவர்கள் ராஜ்கபூரும், நர்கீஸ் என்ற நடிகையும் ஆவார்கள். அவர்கள் இருவரின் படங்களைப் பார்த்தபோது, இருவரும் நடிப்பதாகவே நான் நினைக்கவில்லை. வேறொரு இல்லத்தில் நடப்பதை அல்லது வாழ்வில் நடப்பதைத்தான் அவர்கள் நடத்திக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றே நான் நினைத்தேன்.

நர்கீஸும், ராஜ்கபூரும் நாட்டு மக்களின் நெஞ்சங்களில் மிகப்பெரிய செல்வாக்கான பெருமிதத்தோடு இருந்தார்கள். ஏன், சோவியத் நாட்டிற்கு அவர்கள் இருவரும் சென்று திரும்பிய பிறகு, சோவியத் நாட்டு மக்களில் பலர் தம்முடைய மக்களுக்கு ராஜ்கபூர், நர்கீஸ் என்ற பெயரையே இட்டு மகிழ்ந்தார்கள் என்று நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், திடுமென்று, ஒருநாள் நடிகர் ராஜ்கபூரும், நர்கீஸும் பிரிந்துவிட்டார்கள் என்பது மட்டுமில்லை, ராஜ்கபூர் நடிப்பு என்பது வேறு, வாழ்வு என்பது வேறு என்பதைத் தெரிந்து கொள்ளாமல் மக்கள் மயங்குகிறார்கள். எனவே, நர்கீஸ் ஒரு நடிகை அவ்வளவுதான் என்று சொன்னார்.

இது ஒரு பெரிய திடுக்கீட்டை மக்களுக்கு அந்த நாளில் ஏற்படுத்தியதை நான் நினைக்கிறேன். ஏனென்றால், கலை வாழ்வு என்பது அவ்வளவு நெளிவு, வளைவு உடையது. இதில், தான் நடித்த காட்சிகளில் எல்லாம் தன்னை நல்லவனாகவே, உயர்ந்தவனாகவே காட்டி, அதுபோன்ற வாழ்க்கையைத்தான் தாம் முடிந்த வரையில் நடத்த வேண்டும் என்று முயன்று அந்தத் தோற்றந்தான் மக்களுக்கு முன்னால் எப்போதும் இருக்க வேண்டும் என்பதில் ஆர்வத்தோடு முயன்று வெற்றி பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமை புரட்சித்தலைவர் அவர்களைத்தான் சாரும். எனவே, அவர் கலையைப் பற்றியும், நடிகர்கள் படும் துயரைப் பற்றியும், அவர்களுக்கு ஏற்படுகிற மகிழ்ச்சி எப்படிப் பாராட்டுகளால் பெருகியது பற்றியும் அவர் குறிப்பிட்டுப் பேசிய இந்தப் பேச்சை நாம் காணலாம்.

1981-ஆம் ஆண்டு நடைபெற்ற கலைமாமணி விருது வழங்கும் விழாவில் புரட்சித் தலைவர் ஆற்றிய உரை...

‘‘சிறுவயதில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் எனக்கு இங்கே நினைவுக்கு வருகின்றன. இதுவரை எங்கும் சொல்லாத நிகழ்ச்சிகள் எல்லாம் எனக்கு நினைவுக்கு வருகின்றன. அவற்றைச் சொல்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

இங்கே டி.கே.சம்பங்கி பொற்கிழி வாங்கினார்கள். அவர்களை இன்று எத்தனை பேருக்குத் தெரிந்திருக்க முடியும்? பலருக்கு ஞாபகம் இருக்காது. ‘மைனர் ராஜாமணி' என்னும் படத்தை டைரக்டர் ராஜா சாண்டோ இயக்கிக் கொண்டிருந்த சமயத்தில் நடிப்புலகில் எனது ஆசானாகத் திகழ்ந்த காளி என்.ரத்தினம் என்னை ராஜா சாண்டோ அவர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வாய்ப்புத் தருமாறு கூறினார். அப்போது ராஜா சாண்டோ கூறினார்; ‘‘உன்னைவிடச் சிறந்த நடிகர் ஒருவரை அந்த வேடத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டேன். அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம்'' என்று குறிப்பிட்டார். அந்தப் பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அந்த நடிகர்தான் டி.கே.சம்பங்கி. மங்கள கானசபா என்ற ஒரு சபையை அவர் நிறுவியிருந்தார். அந்தச் சபையைக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் விலைக்கு வாங்கி என்.எஸ்.கே. நாடக மன்றமாக ஆக்கினார். இந்தச் செய்தி பலருக்குத் தெரியாது.

இங்கே இளையவர்களுக்குப் பாராட்டுத் தரும்போது முதியவர்கள் நினைக்கலாம். ‘நாங்கள் எங்கோ கிடக்கிறோம் இந்த இளைஞர்கள் சுகமாகத்தானே இருக்கிறார்கள் இவர்களுக்கு ஏன் பாராட்டு என்று! அதே நேரத்தில் இளைஞர்கள் நினைக்கலாம். இந்த முதியவர்களுக்கெல்லாம் எதற்குப் பாராட்டு? அவர்கள்தான் ஆண்டு முடித்து விட்டார்களே! எங்களைப் போன்ற இளைஞர்களைப் பாராட்டினால் எங்களுக்கு அது ஊக்கம் தருவதாக அமையும் என்று!'

‘‘இங்குச் சிலரைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டியிருக்கிறார்கள். இன்னும் பாராட்டப்பட வேண்டியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இங்குச் சில சகோதரிகளை நானே பேசச் சொன்னேன். தங்களது அனுபவங்களைத் தங்களுக்கு ஏற்பட்ட சூழ்நிலைகளைச் சொல்ல வேண்டும் என நான் விரும்பினேன். சில அனுபவங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சிக்கல்கள் ஆகியவற்றை அவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லும்போது தவறான பாதையில் போகும் மற்றவர்களுக்கு அது எச்சரிக்கையாக இருக்கும்.''

இங்கே எம்.ஆர்.வாசவாம்பாள் கலைமாமணி விருது பெற்றார்கள். மிகச்சிறந்த ஆர்மோனியக் கலைஞரான இவர் பங்கு பெறும் நாடகத்தைப் பார்ப்பதற்கு மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு டிக்கெட் வாங்கிய காட்சியை நான் கண்டிருக்கிறேன். இத்தகைய புகழ் பெற்ற கலைஞர் பலர் இருந்திருக்கின்றனர்.

கலைஞர்கள் தாங்கள் பாராட்டப்படும்போது அவர்களுக்குக் கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு ஈடுயிணை கிடையாது. ஒரு கோடி ரூபாய் கொடுக்கும்போதுகூட ஏற்படாத அந்த மகிழ்ச்சி, பாராட்டப்படும்போது அவர்களுக்கு உண்டாகிறது. பாராட்டுப் பெறும்போது, அது அவர்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கையை அவர்களுக்கு அளித்து மேலும் மேலும் உழைக்க வைக்கிறது. இங்கே ஒரு சிறு பையன் விருது வாங்கினான். அவனது தந்தைதான் சுருளிராஜன். மக்களை எல்லாம் தமது நகைச்சுவை நடிப்பில் சிரிக்க வைத்த பெருமை அவருக்கு உண்டு. இன்று அவர்தம் மனைவியைக் கண்ணீர் வடிக்கவைத்துச் சென்றுவிட்டார்.

நகைச்சுவை நடிகர் என்னத்தே கண்ணையா இங்கே விருது பெற வந்தார்கள். அவர்களைப் பார்த்து நான் கேட்டேன். இன்னும் என்னத்தே கண்ணையா தானா என்று? மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்ற கலைஞர்கள் தங்கள் சொந்த வாழ்வில் மகிழ்ச்சியோடு வாழ்கின்றார்களா என்றால், அதற்கு உத்தரவாதம் தரப்படவில்லை. இங்கே ஒன்றை நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். ஆடை அலங்காரம் செய்தாலும் என்னதான் சுவையான உணவு உண்டாலும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சி கொஞ்சநேரம் இருக்கும். ஆனால், கலை உணர்வு கொண்டிருந்தால் கண்ட காட்சியைப் பிறகு எண்ணி எண்ணி மகிழலாம்.

இங்கே விருது பெற்ற பன்மொழிப் புலவர் அறிஞர் அப்பாதுரையார் பற்பல நூல்களை எழுதியுள்ளார். அவரது நூல்கள் எல்லாம் படித்து இன்புறத்தக்கது. படிப்போரை அந்நூல் புதுமையில் ஆழ்த்துகின்றன. கலைஞன் என்பவன் மனிதனில் இருந்து பிரித்து வைப்பதற்குரிய சொல்லாகும். கலையை யாரும் விலை பேச முடியாது; விலை பேசவிடக்கூடாது.

ஒருவன் நடப்பதைப் பார்த்து, என்ன அழகாக நடக்கிறான் பார் என்கிறோம். சிரிப்பதைப் பார்த்து என்ன அழகாகச் சிரிக்கிறான் பார் என்கிறோம். அழகாக உடை உடுத்தியிருப்பதைப் பார்த்து என்ன அழகாக உடை உடுத்தியிருக்கிறான் பார் என்கிறோம். சிலர் மனைவியைச் சமாதானப்படுத்துவதற்காகக் கோபத்தில்கூட நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் என்று கூறுவார்கள். பிறருக்கு மகிழ்ச்சியூட்டப் பிறரை நிம்மதிப்படுத்த கலை பயன்படும் என்பதற்கு இவை எல்லாம் எடுத்துக்காட்டுகளாகும்.

கலை உணர்வுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பவர்களிடத்தில் ஏற்றத் தாழ்வு உணர்ச்சி தோன்ற முடியாது. சாதி, மதபேதங்கள் தலை காட்ட முடியாது. கட்டுப்பாடு, ஒழுங்கு, நேர்மை, பண்பாடு ஆகியவற்றுடன் நடந்து கொள்வதும் கலைதான். மதங்கள் பல இருந்தாலும் அவை போதிக்கும் கோட்பாடுகள் ஒன்றுதான். சைவ மதமாயினும், வைணவ மதமாயினும், புத்த மதமாயினும், சமண மதமாயினும் அந்தந்த மதத்தினர் தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ள கொள்கை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை மீறி நடந்தால் மதத்திற்கு விரோதமான செயலாகிவிடும்.

மனித சமுதாயத்தில் தமிழினத்துக்கென ஒரு மரபு, பண்பாடு, பழக்க வழக்கம் உள்ளன. அதை மீறி நடப்பவர்கள் தமிழர் அல்லர் தமிழ்ச் சமுதாயத்துக்குச் சொந்தக்காரர் அல்லர். கலைஞர்கள் பண்பாட்டிற்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது கலை வெற்றி பெறும். அப்படி இல்லாவிட்டால் அவர்களது கலை, கலைவாணர் சொல்லியது போல அது கூட்டத்தைக் கலைக்கும் கலையாக ஆகிவிடும்.

கலையை வயிற்றுப் பிழைப்புக்காகப் பயன்படுத்தக்கூடாது, கலையை விலைபேச வேண்டும் என்ற முறையிலே கலைஞர்கள் நடந்துகொள்ளக் கூடாது. கலையைக் கலையாக மதித்து கலைக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்தான் இங்கே இன்று பாராட்டுப் பெற்றிருக்கிறார்கள். நமது ஆளுநர் அவர்கள் இங்கே கலைஞர்களைப் பாராட்டிப் பேசினார்கள். அவர்களது உரையிலிருந்து, அவர்கள் தமிழை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தமிழ்க் கலையை அறிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

எத்தனையோ கலைஞர்கள் நல்ல நிலைக்கு வந்தும் இன்றும் கஷ்டப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நடிகர் சங்கத்தைப் பலப்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் உறுதியாகிறது. அதற்கு அரசும் தன்னாலான உதவிகளைச் செய்யும். இங்குத் திறக்கப்பட்டுள்ள கலை மேதைகளின் படங்களை வைக்க மன்றக் கட்டடத்தில் இடம் போதவில்லை என்று செயலாளர் குறிப்பிட்டார். நான் அவருக்கு விளையாட்டாக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நீதிமன்றக் கட்டடம் சிறிது. ஆனால், தீர்ப்பு பெரிது. இதைச் சொல்லி நான் ஏமாற்றுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.

கட்டடம் கட்டுவதற்கான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். அழியாத கலைக்கு ஒரு நல்ல கட்டடம் கட்ட எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும்.''

தேமொழி

unread,
May 18, 2020, 5:18:48 PM5/18/20
to மின்தமிழ்
source-https://www.facebook.com/permalink.php?story_fbid=4437264706287415&id=283386165008644&__tn__=K-R

தின செய்தி நாளிதழில் இன்று (18.05.2020) வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 35)

‘‘மன்னாதி மன்னனுக்கும் மனம் மாறும்..!’’

ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்

===============================

நாகரிகம் வளர்ந்த நிலையில, உலகம் தழுவியதைக் காட்டுவதுதான் மக்களாட்சி என்று அனைவரும் போற்றுகின்றனர். பட்டத்து யானை ஓடி வந்து மாலையிட்டால் போதும் மன்னனாகிவிடலாம் என்று நம்பினர். மன்னனோடு உடன் இருக்க வாய்ப்புக் கிடைத்ததால் மன்னனுக்குப் பிறகு ஒழித்து விடலாம் என்கிற மமதை மனம் கொண்டவர்களும் தம் கையில் ஆதிக்க ஆட்சியை நடத்தி முடித்ததையும் உலக வரலாற்று ஏடுகளில் காண முடியும்.

ஆனால், எளிய மக்களால், எல்லோரும் திரண்டு நின்று, தங்கள் நெஞ்சில் நின்றவனைத் தலைவராகத் தெரிவு செய்தனர். மக்கள் எந்த மனநிலையில் தேர்வு செய்தார்கள் என்பதை இன்றுவரை எவராலும் தெளிவான முடிவு சொல்ல முடியவில்லை. மக்களாட்சி அமைந்த பிறகும், மன்னவர் ஆட்சியில் இருந்து வந்த மரபுரிமைக் கறையும், ஆதிக்கப் போக்குக் கொண்ட மமதையாளர்களின் சிலந்தி மனம் என்ற குறையும் சேர்ந்தே பின்னி வந்தன.

மைய அரசு, மாநில அரசு என்று எவையும் இந்தக் குறைகளைப் போக்கிக்கொள்ள முடியவில்லை. மரபு வாய்ப்பில்லாதவர்கள், உடனிருந்த நண்பர்களையும் பழகி வந்த சுற்றத்தாரையும் குற்றத்தாரையும் பல்லக்கு சுமந்தவர்களையும் பங்காளிகளாகச் சேர்த்தனர். இந்தக் கதையோ, அனைத்து நாடுகளிலும் அமைந்ததுதான்.

புரட்சித்தலைவரின், உடல் திடுமென நலிவடையத் தொடங்கியதும் சுற்றிச் சூழ்ந்தவர்கள் அவரைப் பல நிலைகளில் பற்றிக் கொண்டு வழிநடத்தினார்கள். காட்டிய இடத்தில் கையெழுத்திட்டால், பாலும் தேனும் நாட்டில் ஓடும் என்றும் குறிப்பிட்டார்கள். இந்த நிலையில், உயரிய அலுவலர்கள் இருந்தபோதிலும்கூட, தங்களால் தடுக்க முடியவில்லையே என்று தவித்தார்கள்.

மன்னாதி மன்னனுக்கும்கூட, மனமாறுபாடும் மறதியும் அடிக்கடி வாட்டி வதைத்தன. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழாவில், திடுமென அழைத்து மாவீரருக்குக் கோடி ரூபாய் மக்கள் முன்னால் வழங்கினால் என்ன என்று கேட்டார். அப்படி ஊரறியச் செய்ய முடியாது என்று அவர் மனத்துக்கு மாற்றத்தைத் தருவதற்குச் சில மணி நேரம் பிடித்தன.

இந்தச் சூழ்நிலையில்தான், திடுமென எனக்கு ஒரு பதவி மாற்றம் வந்தது. வேடிக்கை என்னவென்றால், தமிழ் வளர்ச்சிச் செயலாளரை மாற்றம் செய்ய வேறு எங்கும் வாய்ப்புக் கிடையாது. ஏன் மாற்றினார்கள்? எப்படி மாற்றினார்கள்? பிறகு என்னைத் தொடர்ந்து வந்த பெருந்தகையாளர்கூட இந்த மாற்றம் ஏன், எப்படி நடந்தது என்றுதான் என்னைக் கேட்டார்கள். எவருக்கும் தெரியவில்லை. மர்ம யோகி கதையாக முடிந்தது.

நோயும், நலிவும் நம்மைப் பற்றிப் படரும் என்று புரட்சித் தலைவர் நினைத்ததேயில்லை. ஒருமுறை என்னைப் பார்த்து, சர்க்கரை ஒரு நோயா? என்று வாதுமை அல்வாவை உருட்டி என் வாயில் இட்டார். இதோ பாருங்கள் நான் இரண்டு உருண்டைகளை உண்ணுகிறேன் என்று என் அருகில் உட்கார்ந்து உண்டார். நான் மறுநாள் என் மருத்துவரிடத்தில், இதனைக் கூறினேன். முதலமைச்சர் மாபெரும் மக்கள் தொண்டர். பொன்மனச்செம்மல், மருத்துவரில்லை என்று கூறி நகைத்தார். மூன்றாவது மாதம் சர்க்கரை நோய் மிகுந்து நான் மருத்துவமனையில் உடன்சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டேன். புரட்சித் தலைவர் மனம் துடித்து வினவினார்.

எனவே, வாழ்க்கையில் ஒரே நிலையில் இருப்பது என்பது, எளிதானது இல்லை. இருபத்தேழு ஆண்டுகள், சிறையில் இருந்து திரும்பிய தென்னாப்பிரிக்க அதிபர், நெல்சன் மண்டேலா, ஐந்தாண்டுகளுக்கு மேல் தமக்கு இந்தப் பதவி தேவையில்லை. எனக்கு நலிவு வரலாம். வயது முதிர்வால் மறதி வரலாம். இவையிரண்டும் மக்களாட்சியைக் குலைக்கும் என்று கூறினார் என்பர். தள்ளாடித் தடுமாறி மக்களாட்சி தவித்தபடியே எங்கும் வடிவெடுத்தன.

இந்த நிலையில், ஒரு மருத்துவர் மாநாட்டில், அவர் பேசியதைத் தொடர்ந்து படிக்கலாம்.

‘‘அனைத்திந்திய அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் கழகம் 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது விரிவாக்கம் அடையப்போகிறது என்றார்கள். எத்தனை ஆண்டுகள் என்று கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். அன்று நான் கொடுத்தது ரூ.50 ஆயிரம். இன்று ரூபாய் இலட்சத்துக்கு சமம் என்று கூறினார். அன்று நான் மட்டும் கொடுக்கவில்லை. டாக்டர் ராமமூர்த்தியும் கொடுத்து இருக்கிறார். அப்போது அவர் மருத்துவர். நான் கலைஞன். சாதாரண நடிகராக இருந்த நான் கொடுத்தாலும் அதைக்கொடுக்கச் செய்வதில் பங்கு கொண்டவர் டாக்டர் நடராஜன்.

ஆண்டுகள் பல கடந்தாலும் இன்று மீண்டும் இந்த கட்டடக் கால்கோள் விழாவில் கலந்து கொள்கிறேன். நல்லதை எண்ணினால் அது விரிவடையும்போது அதில் பங்குகொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என்பது தெரிகிறது.

இங்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்தக் கட்டடத்துக்காக ஒரு பிரிவை ஏற்படுத்தும்போது அந்தப்பிரிவுக்கு ஆகும் செலவான ரூ.3 இலட்சத்தை சென்னை செரீப் திரு சிவந்தி ஆதித்தன் அவர்கள் அளிக்கிறார். அந்தப்பிரிவுக்கு அவரது தந்தை பெயரை வைக்க வேண்டும் என்று நானும் அவரும் விரும்புகிறோம்.

நான் அதிகமாகக் கவலைப்படுவது புறநகர்ப் பகுதியைப் பற்றியும் கிராமம்புறப் பகுதியைப் பற்றியும்தான். அந்தப் பிற்பட்ட பகுதிகள் கிராமப்புற பகுதிகள் எப்படி இருக்கிறது என்பதை அங்கு வாழும் மக்களை நன்கு கவனித்தால் தெரியும் மருத்துவர்கள் படித்து பட்டம் பெறுகிறார்கள் நிபுணர்கள் தகுதி வாய்ந்தவர்களுக்குப் பட்டம் அளிக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருக்கு மருத்துவம் அளிக்க வேண்டுமோ, அங்குப் போக மறுக்கிறார்கள். இது வேதனைக்குரியது. தலைக்குனிவை ஏற்படுத்துகிறது.

பக்கத்தில் இருப்பவர்களுக்கு நோய் இல்லாமல் இருந்தால்தான், நோய் பரவாமல் இருக்கும். கிராம மக்கள் வேலைக்கும் பொருளுக்கும் ஏங்கிக் கிடந்து நகரத்துக்கு வருகிறார்கள். இதைத் தடுக்க வேண்டாமா? தடுக்க என்ன செய்கிறோம் வேலைவாய்ப்பைக் கொடுக்கிறோம். வேலை வாய்ப்பைக் கொடுத்தால் போதாது நோயைத் தடுக்க வேண்டும். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

என் வாழ்க்கையில் நடந்ததைச் சொல்ல வேண்டும். என் வாழ்க்கைத் துணைவிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு காச நோய் வந்தது. அவர் இப்போது உயிரோடு இல்லை. அப்போது பி.ஏ.எஸ் பவுடர் என்பதுதான் கண்கண்ட மருந்து. வேறு நல்ல மருந்துகள் கிடையாது. ஆணி ஊசி ஏற்றிக் காற்று ஏற்றுவார்கள். தமிழகத்தில் யார் பெரிய மருத்துவராக இருந்தாரோ அவர்தான் என் மனைவிக்குச் சிகிச்சை அளித்தார். கேவிட்டி இருந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டது. மறுபடியும் வந்தது. இனி ஆபரேஷன் செய்ய முடியாது என்று கூறிய அந்த மருத்துவர், உங்கள் மனைவி இன்னும் 3 மாதம்தான் உயிரோடு இருப்பார். அதற்குள் என்ன விரும்புகிறாரோ அதை வாங்கிக் கொடுங்கள் என்றார். அதன் பிறகு ஒரு அறுவைச் சிகிச்சை டாக்டர் வந்தார். அவர் விசேஷ நிபுணர் அல்ல. இந்தப் பெண் சாகப்போகிறது நான் சிகிச்சை அளிக்கிறேன் என்று அவர் கூறினார்.

நிபுணர் கொடுத்த தவணை 3 மாதம்தான். எனவே, சரி சிகிச்சை செய்துவிட்டுப்போகட்டும் என்று நான் விட்டுவிட்டேன். அந்த சர்ஜன் சிகிச்சை அளித்த பிறகு ஓர் ஆண்டு உயிரோடு இருந்தார். என் மனைவியை மறுபடியும் அந்த நிபுணரிடம் அழைத்துச் சென்று இனி என்ன செய்வது? என்று கேட்டேன். நன்றாக இருக்கிறார். என்ன மருந்து கொடுக்கிறீர்களோ அதையே தொடர்ந்து கொடுங்கள் என்றார்.

என் மனைவி 18 ஆண்டுக் காலம் அதன் பிறகு உயிரோடு இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அந்த நோய் தீர்ந்தது. பின்பு வேறு நோயினால் மரணம் அடைந்தார். நான் அந்த நிபுணரைக் குற்றம் சொல்லவில்லை. சட்டப்படி அவர் படித்த திறமைக்கேற்ப இதைச் செய்தால், இந்த ஆபத்து வரும். உயிர் போய்விடும் என்ற ஆய்வைச் சொல்லி இருக்கிறாரே தவிர, அவர் தவறு செய்தார் என்று சொல்ல உரிமை இல்லை. இதுபோல அனுபவத்தில் பலவற்றைத் தெரிந்து கொள்கிறோம்.

நான் துப்பாக்கியால் சுடப்பட்டபோது, உயிரோடு திரும்பி வருவேனா என்பதே சந்தேகமாக இருந்தது. அப்போது எனக்குச் சிகிச்சை அளித்த டாக்டர் வேணுகோபால், நான் படத்தில் திரும்ப நடிக்க வேண்டும். காயத் தழும்புகள் இருக்கக்கூடாது என்று கருதி, கழுத்தில் சுருக்கம் விழும் இடத்தில் தழும்பு தெரியாதபடி ஆபரேஷன் செய்தார். இப்படிப்பட்ட மருத்துவர்கள் வேண்டும்.

அமைச்சர் ஹண்டே மருத்துவ அனுபவம் உள்ளவராக இருப்பதால் எனக்கு மிக உதவியாக இருக்கிறார். இவ்வளவு மாநிலங்களில் இருந்து வந்து இருக்கிறீர்கள். உங்கள் எல்லோரையும் பார்க்கும்போது இந்தியாவைப் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. உங்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். குழந்தைகள் நோயைத் தீர்ப்பதற்கு நோய் வராமல் தடுப்பதற்கு இத்தனை ஆண்டுகளில் வகை செய்வோம் என்ற திட்டத்தைத் தர வேண்டும்.

இந்தக் கட்டடத்துக்கு நானும் ஒரு கடமையைச் செய்யலாம் என்று கருதுகிறேன். என் சொந்தப் பொறுப்பில் ரூ.1இலட்சமும், அரசின் சார்பில் ரூ.5 இலட்சமும் அண்ணா பெயரால் அந்தப் பிரிவை உருவாக்கத் தருகிறேன். நாட்டைக் காப்பாற்றுங்கள். நோயை விரட்டுங்கள், மனத்தைப் பண்படுத்த உதவுங்கள்..!''

தேமொழி

unread,
May 25, 2020, 11:12:52 PM5/25/20
to மின்தமிழ்
source - https://www.facebook.com/permalink.php?story_fbid=4465545693459316&id=283386165008644&__tn__=K-R


தினசெய்தி நாளிதழில் இன்று (25.05.2020) வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 36)

‘‘பாமரரைப் படிக்க வைத்த பத்திரிகையாளர்..!’’

ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்

-----
திரைப்படம் போல உலகத்தைக் கவரும் ஊடகத்தை விஞ்சுவதற்கு எந்த ஊடகமும் இல்லை. ஒரு திரைப்படம் வெற்றி பெற்றது என்றால், ஒரு கோடி மக்களின் உள்ளங்களைக் கவர்ந்துவிட்டது என்பது பொருள். எனவே, திரைப்படத்தினுடைய வலிமையையும், எல்லையையும் ஆழமாகத் தெரிந்து திரையுலகத்தில் புரட்சி நடிகராகப் பொன்மனச் செம்மல் திகழ்ந்த தனிப்பெருமை அவருக்கு உரிமையாகும்.

எதையும் மக்கள் மனத்தை நேர்முகமாகத் தொடும்படியாக எடுத்துச் சொல்ல வேண்டும். அழகாகச் சொல்வதும், அடுக்கிச் சொல்வதும், ஆழ்ந்த பொருள் ததும்பச் சொல்வதும் பேரறிஞர் அண்ணாவுக்கு முடிந்தது. வேறு எவராலும் அந்தப் போக்கை முழுமையாகப் பின்பற்ற முடியாது. அண்ணாவின் பேச்சு, எவ்வளவு ஆழமானது என்பதை அடிக்கடி தம்பி காளிமுத்து சொல்லிக் காட்டுவார்.

“மன மருள் கொண்ட பறவைகள் கூட்டமாகப் பாமரர் மயங்கியிருந்தபோது, அறிவுத் தெளிவு என்ற ஆலோலம் கேட்டு, அங்குமிங்கும் பறவைகள் பறப்பது போல மக்கள் மனமும் பகுத்தறிவுப் பண் கேட்டுத் தம் சிந்தனைச் சிறகுகளை விரிக்க வேண்டும்” என்று போகிற போக்கில் அண்ணா பொதுக்கூட்டத்தில் உதிர்த்த உரைகள் ஒப்பற்றவை.
“எண்ணாத் துறைகளிலெல்லாம் நாடி, எழில்படவே எடுத்துரைத்த எங்கள் அண்ணாத்துரைக்கு ஈடுன்றோ” என்று பாவேந்தர் ஒரு தொடரை ஓர் அணிந்துரையில் எழுதியிருந்தார்.

மக்களாட்சி என்பது தேர்தலில் வென்றவர்களையும், தேர்வெழுதி வந்தவர்களையும், தீர்ப்பு சொல்லி நிலைத்தவர்களும் என்ற மூன்று கால்களைக் கொண்ட முக்காலி போலத் தோன்றினாலும் நான்காவது காலாகச் செய்தித்தாள் உலகம் தான் சிறப்போடு திகழ்வது. நாளிதழ்களை எழுத்தெண்ணிப் படிப்பதும், தன்னுடைய பேச்சும், கருத்தும், தன்னுடைய ஒளிப்படமும் சரியாக வந்ததா என்பதை மிக நுணுக்கமாகக் கவனிக்கிற திறமை புரட்சித்தலைவரிடம் இருந்தது. காவல் துறையினர் நடத்திய ஒரு கூட்டத்தில், தான் அமர்ந்திருந்தபோது, மூன்றாவது இடத்தில் இருந்தவரை விலக்கிவிட்டு, கேமராக்காரர் தன் கோணத்தை முன்பக்கமாக மட்டுமே வளைந்து எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதைப் புகைப்பட நிபுணர்கள் பாராட்டிக் குறிப்பிடுவார்கள்.
நான், புதுத் தில்லியில், வானொலியில் பணியாற்றியபோது, ஒலிபரப்பில் விடியல் நிகழ்ச்சி காலை 5.45 மணிக்குத் தொடங்கும். ஆங்கிலச் செய்தி, 6.30 மணிக்குத் தொடங்கியதாக நினைவு. செய்தி வாசிப்பவர், மெல்வின் டிமெல்லோ என்ற பெயருடையவர். செய்தி உலகத்தின் சிகரமாகத் திகழ்ந்தவர். நேரு பெருமகனாருக்குப் பெரிதும் வேண்டியவர். காலை 5.55க்கு திடுமென்று நேரு அவர்களே வானொலி நிலையத்திற்கு வந்து டிமெல்லோவிடமிருந்து வாசிக்கும் செய்தித்தாளை வாங்கித் திருப்பியதைக் கண்டு நாங்கள் பெரிதும் வியந்தோம். அதே நிலையில், அ.இ.அ.தி.மு.க. இயக்கம் தொடங்கிய பிறகு, தென்னகம் இதழ், நடந்தபோதும், தம் சார்பான இதழ் தொடர்ந்தபோதும், ஒவ்வொரு முறையும் கேட்டுத் தெளிவடைந்து புரட்சித்தலைவர் திருத்தம் சொன்னதைப் பலர் கூறியிருக்கிறார்கள்.

செய்தியாளர்களுக்கு விருந்து தருவதும், தகவல்களைத் தெரிந்து கொள்வதும், அவருக்கு மிகவும் பிடித்தமான செயல்களாக இருந்தன.
“தந்தி வந்தால், அந்த நாளில் அச்சப்படுவோம். இப்போது தந்தி வந்தால்தான் நம் தளர்ச்சியே நீங்கும்” என்று ஒருமுறை குறிப்பிட்டார். அந்த வகையில், எளிமைக்கு இருக்கிற வலிமையைக் காட்டுவதற்காகவே பிறந்த நாளிதழ் தான் தினத்தந்தி.

அகரத்தில் அண்ணாவைத் தொடங்கினால், அடுத்த நெடிலாக அமைந்த பெயர் ஆதித்தனார் பெயராகும். பெருந்தகை ஆதித்தனார், இங்கிலாந்தில் பயின்றவர். உலகநாடுகள் பலவற்றை அறிந்தவர்.
நாளிதழ்கள் எப்படிக் கருத்துகளைச் சுருக்கென்று எடுத்துச் சொல்ல வேண்டும்; தேநீர் கடையில் நின்று கொண்டிருப்பவர் ஆர்வத்தோடு பக்கங்களைப் புரட்டுகிறபோது தன்னைச் சுற்றியும் நாட்டிலும் நடைபெறுவதைக் காட்ட வேண்டும் என்பதற்காக எளிமையாகத் தமிழை எடுத்துக்காட்டி நாளிதழ் வரலாற்றில் வைர மகுடத்தைத் தினத்தந்தி தனக்கென அணிந்திருக்கிறது.

பெருந்தகை ஆதித்தனார் மீது, பேரன்பு கொண்டவர் புரட்சித்தலைவர். ‘‘சினிமாவுக்குச் செல்வாக்கிருக்கிறது. சில நேரங்களில் சினிமாவுக்கே தினத்தந்திதான் செல்வாக்கைச் சேர்க்கிறது” என்று அண்ணல் சிவந்தியை அரவணைத்துக் கொண்டு புரட்சித்தலைவர் மகிழ்ந்து பேசியது நினைவுக்கு வருகிறது.
“ஆமாம் ஔவை, நீங்கள் கல்லூரியில் ஆசியராக இருந்தீர்களே, ஏன் பத்திரிகை ஆசிரியராகப் போகக்கூடாது? நான் ஒரு நாளிதழ் தொடங்கப்போகிறேன்” என்று ஒருமுறை புரட்சித் தலைவர் கேட்டார். அண்ணா, ஒரு கதை சொல்வார்கள் என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

“ஒரு பெரிய கோடீஸ்வரன், தன் பணத்தை எப்படிச் செலவு செய்வது என்று பலமுறை முயன்றான். கிண்டிக்குப் போய்க் குதிரை மீது பணத்தைக் கட்டினான். கோடி பல கோடியாயிற்று. பிறகு போய் நூற்பாலைகளைத் தொடங்கினான். முதலீட்டைவிட முப்பது மடங்கு ஆதாயம் கிடைத்தது. என்ன செய்வது என்று பார்த்தான். ஒரு நாளிதழ் தொடங்குங்கள் என்று நண்பர்கள் சொன்னார்களாம். தொடங்கி, மூன்று மாதங்கள் நடத்தினான். தண்ணீராகக் கோடிகள் கரைந்தன. நாளிதழ் நின்றுவிட்டது” என்று சொன்னேன்.
“அப்படிச் சொல்லக்கூடாது. சென்னைக்கே புகழ் தருகிற வகையில், இந்து பத்திரிக்கையும், தினத்தந்தியும் இல்லையா?” என்றார் புரட்சித்தலைவர்.

திராவிட இயக்கத்தில், நூற்றுக்கணக்கான ஏடுகளைத் தொடங்கினார்கள். தொடர முடியாமல் நின்று விட்டன. இப்படிப் பார்த்தால், இதழ் நடத்துவது எவ்வளவு கடினம் என்று காணலாம்.
தில்லியில், ஒருமுறை செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டு வந்தவர்களுக்குப் பதில் சொல்லி வந்தார். ஒரு நிருபர், புரட்சித்தலைவரைப் பார்த்து, நீங்கள் ஓர் ஆங்கில நாளிதழை நடத்துங்கள் என்று கூறினார். புரட்சித்தலைவர் புன்னகைத்தபடி, “இருக்கிற புகழைக் குறைக்கவா? அதிகப்படுத்தவா?” என்றார். பத்திரிகை என்பது அது ஒரு தனி அரசாங்கம் போல என்று கூறியது அப்போது ஆங்கில இதழ்களில் பெரிய எழுத்துகளில் செய்தியாக வெளிவந்தது.

இவ்வாறு, ஊடக உலகத்தின் நுணுக்கங்களையெல்லாம் தேர்ந்து தெளிந்தவராகப் புரட்சித்தலைவர் விளங்கினார். தான் விரும்பிப் படிக்கும் இதழ்களில் தலையங்கங்களைக் கூர்ந்து படித்துப் பிறரைப் படிக்கச் சொல்லிக் கேட்டு, உடனுக்குடன் மறுப்பு சொல்லவோ, விளக்கம் சொல்லவோ தயங்கமாட்டார்.

ஒரு வார இதழில், ‘வாழ்விக்கும்போது முதுமை தலைகாட்டுகிறது’ என்று எழுதியிருந்தார்கள். தொலைபேசியில் புரட்சித்தலைவர் சொன்னார். “அது முதுமை அல்ல, புதுமை” என்று மாற்றிவிடுங்கள் என்றார். இப்படிப் பொன்னான நினைவுகள் நினைக்க நினைக்க வந்து செல்கின்றன.
‘இதயம் பேசுகிறது’ மணியனோடு அவர் பேசிக்கொண்டிருந்தபோது, நண்பர் உதயமூர்த்தியும் இருந்தார். அப்போது, ஏன் மெயில் பத்திரிகையை நிறுத்திவிட்டார்கள். அதுபோல, ‘லிபரேட்டர்’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி தொடங்கிய தாளும் நின்றுவிட்டது. உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று கேட்டார். இரண்டு பேரும் வியந்தபடி பார்த்தார்கள். நான் அதுவரை சர். ஏ. இராமசாமி முதலியாரின் மகன், டாக்டர் கிருஷ்ணசாமி ‘லிபரேட்டர்’ என்ற தாள் தொடங்கி நடத்தியதை எப்போதே படித்திருந்தேன். புரட்சித்தலைவருடைய நினைவு எவ்வளவு படர்ந்தது என்பது மலைக்க வைக்கிறது. அதே நேரத்தில், திடுமென்று கலைஞர் இரவு பதினோறு மணிக்கு எங்கே இருப்பார் தெரியுமா? என்று கேட்டார். எல்லோரும் திடுக்கிட்டோம். முரசொலி அலுவலகத்தில் புரூஃப் பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி விழித்திருப்பதனால் தான் முரசொலி நாளிதழ் வெற்றி பெற்றது என்று சொன்னது மறக்க முடியாதது.

அந்த வகையில், அமைந்த ஓர் உரைதான் இங்கே இணைந்திருக்கிறது...

24.05.1987 அன்று சென்னையில் நடைபெற்ற தினத்தந்தியை நிறுவிய சி.பா. ஆதித்தனாரின் முழு உருவச்சிலையைத் திறந்து வைத்துப் புரட்சித் தலைவர் ஆற்றிய உரை...

‘‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே! என்னை வழி நடத்திச் செல்லும் பெரியோர்களே! என் இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புக்களே!
மறைந்த பெரியவர் சி.பா.ஆதித்தனார் அவர்களுடைய சிலையைத் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆதித்தனார் அவர்களுடைய வாழ்க்கையே தமிழ் வாழ்க்கை ஆகும். இலண்டனில் படிக்கும் போதே தமிழ் ஏடுகளுக்கு நிருபராகப் பணியாற்றி வந்தார். நாட்டு விடுதலை இயக்கத்தை ஆதரித்தார். அப்போது ‘தமிழன்’ என்ற வார இதழ் தொடங்கினார். யுத்தக் காலம் ஆனதால், காகிதப் பஞ்சம் வாட்டியது. அப்போதே கையால் செய்த காகிதத்தில் ‘தமிழன்’ ஏட்டை வெளியிட்டார்.

பின்னர்த் தமிழில் நாளேடு தொடங்கினார். மாவட்டத் தலைநகரங்களில் மாலை நேர நாளேடுகளை முதன் முதலாகத் தொடங்கியவர். எழுதப்படிக்கத் தெரியாத ஏழை மக்கள் எழுத்துக்கூட்டிப் படிக்கத்தக்க வகையில் எளிய தமிழில் ‘தினத்தந்தி’ பத்திரிகையை நடத்தினார்.
எந்த ஒரு செய்தி ஆனாலும் அதனைக் கதை போலச் சொல்வது என்ற வாடிக்கையை முதலில் கையாண்டவர், ஆதித்தனார்.

பல கல்வி நிலையங்களை விட ஆதித்தனார் நடத்திய பத்திரிகைகளால் எழுத்து அறிவு, படிப்பு அறிவு பெற்றவர்கள் ஏராளம். அவர் ஐம்பத்தி இரண்டாம் வருடத்தில் மேல் - சபை உறுப்பினராக இருந்தபோது, கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பதைத் தடுக்கத் தனிநபர் மசோதா (சட்டம்) கொண்டு நிறைவேற்றினார்.

மொழிப் பிரச்சினையில் அறிஞர் அண்ணா எடுத்த முயற்சிகளுக்கு ஆதித்தனார் துணை நின்றார். தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டில் அரசியல் மாற்றம் நிகழ்ந்த நேரத்தில் அறிஞர் அண்ணா அவர்களுக்கு ‘தினத்தந்தி’ பத்திரிக்கை வாயிலாக முழு ஆதரவையும் அளித்தார். தமிழ்நாடு சட்டமன்றச் சபாநாயகராகத் திறமையாகச் செயலாற்றினார். அமைச்சராக இருந்து தனது நிருவாகத் திறமையைக் காட்டினார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்த பெருமை அவருக்கு உண்டு. ஆதித்தனார் அவர்கள் நிறுவிய ‘தினத்தந்தி’ நாளேடு அவருடைய சீரிய குறிக்கோள்களுக்காக இன்றும் பணி ஆற்றி வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆதித்தனார் அமைத்த நிறுவனங்களை, அவரது புதல்வர் சிவந்தி ஆதித்தன் அவர்கள் கட்டிக்காத்து வருவதுடன் மெச்சத்தகுந்த வகையில் வளர்த்தும் வருகிறார். சிவந்தி ஆதித்தன் அவர்களுடைய தீவிர முயற்சியால் இன்று அவருடைய தந்தையின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகிறது.
அமரர் ஆதித்தனாருடைய இந்தச் சிலை நமக்கு எல்லாம் உழைப்பையும், தமிழ்ப் பற்றையும் நினைவூட்டிக்கொண்டு இருக்கும் என்று நம்புகிறேன். இந்த விழாவுக்கு என்னை அழைத்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆதித்தனாரின் நினைவுக்கு என் அஞ்சலியைச் செலுத்தி, அவருடைய உருவச் சிலையை மகிழ்ச்சியுடன் திறந்து வைக்கிறேன். இன்று முதல் ஆரிஸ் சாலை ஆதித்தனார் சாலை என்று அழைக்கப்படும். அண்ணா நாமம் வாழ்க!''


தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

தேமொழி

unread,
Jun 4, 2020, 1:32:28 AM6/4/20
to மின்தமிழ்
source - https://www.facebook.com/permalink.php?story_fbid=4497642633582955&id=283386165008644&__tn__=K-R

தின செய்தி நாளிதழில் இன்று (01.06.2020) வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 37)

‘‘பொன்மனத்துக்கு புகழ் சேர்த்த வெள்ளையானை விருது..!’’

ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்

-----

நான் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் பணியாற்றியபோது, எனக்கு வேடிக்கையான ஒரு சிந்தனை தோன்றியது. அதை வேடிக்கை என்று சொல்லக்கூடாது. புரட்சித்தலைவர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் பற்றி தொடக்கம் பெற்ற நாளில் பேசியபோது, இவ்வளவு பரந்து விரிந்த இடத்தில், தமிழகத்துக்குப் பெருமை தருகின்ற வகையில், ஒரு யானையும் எடுப்பான குதிரையும்கூட வாங்கி நாள்தோறும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சுற்றிவருமாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னார். ஏதோ பேச்சு வந்தபோது அப்படி குறிப்பிட்டார்களே தவிர, அதைப் பற்றிய நினைவை பிறகு தொடரவில்லை. சாரணர் இயக்க மாபெரும் அணிவகுப்பில், வெள்ளி யானை விருது பெற்ற நிகழ்ச்சியை படித்ததால் இந்த நினைவு வந்தது.
எனினும், நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குப் பத்தாண்டுகள் கழித்து வந்தபோது, செட்டிநாட்டரசருக்குக் கடிதம் எழுதி, ஓர் அழகிய பந்தயக் குதிரையைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டுமென்றும், அதேபோல, கேரள மாநில முதலமைச்சருக்கு மடல் எழுதி, ஒரு யானையைப் பரிசாகத் தர வேண்டுமென்றும் கேட்டிருந்தேன்.

பணியாற்றுபவர்களுக்கே போதிய சம்பளம் தர முடியாத இடரான நிலையில், ஆனை கட்டி வைத்து பல்கலைக்கழகத்தில் ஒரு கவளம் கூட தர முடியாத கவலை உருவாக வேண்டுமா என்று சொல்லி அந்த எண்ணத்தை அப்படியே விட்டுவிட்டேன். இளைஞர்களை, பள்ளி மாணவர்களை, கல்லூரி மாணவர்களை ஓர் அணிவகுப்பாக நிறுத்திக் காண்பதில் புரட்சித்தலைவருக்கு மனத்தில் பெரிய மகிழ்ச்சி விளையும்.
புரட்சித்தலைவர் தன் வாழ்க்கையில் வருந்தியதாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும் என்றால், இளம் பருவத்தில் பள்ளியில் கல்வி பயில முடியாமல், அரிய வாய்ப்பை இழந்துவிட்டேன் என்றுதான் பலமுறை சொல்லி வருந்தினார். எனவே, பள்ளி மாணவர்கள் அணிவகுத்து நிற்கும் காட்சியைக் காணும்போது அவருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்படும். பள்ளி மாணவர்கள் சாரணர் இயக்கத்தில் சேர்ந்து அவர்களுக்கே அமைந்த சீருடை அணிந்துகொண்டு அணிவகுப்பு நடத்துவதைக் கண்டு அவர் பெரிதும் மகிந்தார்.
புரட்சித்தலைவருக்கு இளைஞர்கள் மீது பெரிய விருப்பம். அதுவும் பள்ளி மாணவர்களைப் பார்த்தால், அவர்கள் மீது பரிவைக் கொட்டுவார். நூற்றுக் கணக்கான பள்ளிப் பிள்ளைகளுக்கு ஏன் கல்லூரி மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கில் கல்விக் கட்டணம் கட்டியதை நான் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். மாணவர்களைப் போலவே, மரஞ்செடி கொடிகளையும், வீட்டு, வன விலங்குகளையும் விரும்பி வளர்க்கும் பழக்கம் அவருக்கிருந்தது.
யானையின் தலைமேல் அமர்ந்துகொண்டு புரட்சித்தலைவர் நடித்துப் பாடிய 'நல்ல நேரம்' திரைப்படத்தை ஒருமுறை நினைவுகூர்ந்தார்.

யானை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று ஒருமுறை கேட்டார். தமிழ் இலக்கியத்தில் அதிகமாகப் பேசப்பட்ட உயர்ந்த விலங்கு யானைதான். யானையின் மந்தைகளையே மன்னர்கள் வைத்திருந்ததாகவும், புலவர்களுக்கு யானையைப் பரிசளித்ததாகவும் பாடல்கள் உள்ளன. அண்டிரன் என்ற வேந்தன் நாட்டில், “ஓர் இளம் பிடி பத்துச் சூலு ஈனுமோ” என்றே புறநானூற்றில் ஒரு வரி உண்டு. அண்மையில் ஒரு நகைச்சுவையான செய்தியைப் படித்தேன் என்று அவரிடம் சொன்னேன்.

ஒரு சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. அந்த சர்க்கஸில் பெரிய யானை ஒன்று, துடிப்பான இளைஞன் கட்டளையிட யானை அதற்கு இணங்கி, வலம் வந்ததும், மண்டியிட்டதும் துதிக்கையால் மாலையிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. அப்போது, ஒரு பள்ளி மாணவன் கேட்டானாம், இந்த யானை இப்படி இளைஞன் சொல்வதைக் கேட்கிறதே, இது எதனால் என்று வினவினான்.
ஜப்பானியச் சிறுவன், மனிதன் அவ்வளவு ஆற்றலுடையவன், அவனைவிட எத்தனை மடங்கு பெரிய விலங்கைக்கூட அவன் கட்டுப்படுத்திவிடுவான். அதற்கு இந்தக் காட்சிதான் ஒரு சாட்சி என்று சொன்னான். சீன நாட்டு சிறுவன், யானையைக் கட்டுப்படுத்துபவன் கையில் ஒரு மின் கம்பி இருக்கிறது. அந்த மின் கம்பி யானையின் அருகில் வர வர அதன் உடல் நடுங்கும், மதம் ஒடுங்கும். அப்போது, எந்த ஆணையிட்டாலும் அது கேட்டுப் பணியும் என்று சொன்னான். ஆனால், இந்திய நாட்டு இளைஞனைக் கேட்டபோது அவன் சொன்ன விடை, எல்லோரையும் வியக்க வைத்தது. யானை பெரிய விலங்கே தவிர, தன்னுடைய ஆற்றலைத் தெரியதாத விலங்கு அது. தன்னுடைய பலம் மட்டும் தெரிந்திருந்தால், சர்க்கஸ் இங்கே நடக்குமா என்று கேட்டானாம்.
இந்தப் பொருளில் இல்லையென்றாலும் யானையின் இயல்பை ஒரு திருக்குறள் காட்டுகிறது என்று கூறியபோது, புரட்சித்தலைவர் அந்தக் குறளைத் திருப்பிச் சொல்லச் சொன்னார். அந்தக் குறள்,
வலியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலி தாக்குரின் (திருக்குறள் 599)

அப்போது அவர் கேட்ட வினா, யானைக்கும் புலிக்கும் போர் நடந்தால், யானை வெல்லுமா? புலி யானையைக் கொல்லுமா? எது வெல்லும் எதைக் கொல்லும் என்று புலவர்களே மாறி மாறி குறிப்பிட்டார்கள் என்று நான் சொன்னேன்.

இவ்வளவும் நீட்டிச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், சாரணர் இயக்கத்தில் நடைபெற்ற அணிவகுப்பைப் புரட்சித்தலைவர் கண்டு பேசிய உரையைத்தான் நாம் தொடர்ந்து படிக்க இருக்கிறோம்.

புரட்சித்தலைவருக்குச் சாரணர் இயக்கத்தின் மாபெரும் விருதான 'வெள்ளை யானைப் பரிசை' அவருக்கு அந்த அணிவகுப்பு நிறைவில் வழங்கினார்கள். யானை வடிவம் கொண்ட சங்கிலியை அணிந்து கொண்ட புரட்சித்தலைவர், யானையைப் பற்றி நினைவு கூர்ந்து பேசியதோடு மட்டுமல்லாமல், சாரணர் இயக்கத்தின் கடமை, திறமை, நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு, நம்பிக்கை நல்லெண்ணம் இவைகளை வற்புறுத்திப் பேசினார்.

அந்த உரை...

‘‘தியாகம் செய்கிறவர்கள், தியாகத்திற்கு மட்டும்தான் சொந்தக்காரர்கள் என்கிற வரலாறு மாற்றப்படும்போதுதான் சாரணர் இயக்கத்தின் முதல் கொடி பறக்கவிடப்படும். எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ, தகுதி உள்ளவர்கள் எனக்கு வெள்ளி யானை பரிசு அளித்துள்ளனர்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை இருக்கும்போது என்ன விலை மறைந்த பிறகு என்ன விலை என்று தெரியாது. ஆனால், இந்த வெள்ளி யானையைத் தந்திருப்பதன் மூலமாக என் கடமைக்கு ஒரு பாலம் அமைத்து, நான் செல்லும் பாதையை எச்சரிக்கையாக, சரியாகச் செல்ல வேண்டும் என்று தரப்பட்டது என்று கருதுகிறேன். எனக்கு அளிக்கப்படும் பரிசுப் பொருட்களை உடனே சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடுவேன்.

ஆனால், இங்கு அளிக்கப்பட்ட வெள்ளி யானைப் பரிசை மட்டும் இன்னும் கழற்றவில்லை. இதனால் இதற்கு எவ்வளவு மரியாதை தருகிறேன் என்பதை அறியலாம். இதனால், மற்றவற்றிற்கு மரியாதை இல்லை என்று பொருள் அல்ல. அறிவாற்றலும், கடமை ஆற்றலும் உணர்த்துவதால் இதனைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அப்படியே வைத்துள்ளேன்.
இந்தியா ஒரு நாடு என்பதும், அனைவரும் ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் உங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நாம் அனைவரும் ஒருகுலம் என்பதைக் காட்டும் வகையில் இங்கே பரவியுள்ளார்கள். இங்கே இளைஞர்களாக உள்ள நீங்கள் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சாரணர் இயக்கத்தில் 4 ஆண்டுக் காலத்தில் 70 ஆயிரத்திலிருந்து ஒன்றரை இலட்சம் பேராக உயர்ந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். அது மட்டுமல்ல இந்தியா முழுமையும் கணக்கிட்டுப்பார்த்தால் 7 இலட்சம் பேர் உள்ளனர். இதில் இந்த ஒன்றரை இலட்சம் எந்த விகிதாசாரம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இது பெருமைக்குரியது என்றாலும் அனைத்து மாநிலங்களிலும் இதைப் பின்பற்றவேண்டும் என்பதுதான் நம் ஆசையாகும். நடை, நடத்தை என்பதை நாம் பிரித்துப் பார்க்கக்கூடாது. நடைதான் நடத்தையாகிறது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் நடை ஒழுங்காக இல்லை என்றால் அவர் குடித்துவிட்டார் என்கிறோம்.

குடித்துவிட்டார் என்றால் நடத்தை கெட்டவர் என்கிறோம். அதுபோல, ஒழுங்காக நடைபோடுவதும் ஒழுங்காகப் பணியாற்றுவதும், நாட்டில் உள்ள அனைவருடைய இன்றியமையாத கடமை-பொறுப்பு என்பதை உணரவேண்டும்.
இன்னொன்றையும் சொல்கிறேன். நாம் பிறரைத்தான் விமர்சனம் செய்கிறோமோ தவிர நம்மை அல்ல. தன்னைத்தானே விமர்சனம் செய்து கொள்வதில்லை. முதலில் நம்மைத் திறனாய்வு செய்த பின்னர்தான் மற்றவர்களைத் திறனாய்வு செய்யவேண்டும். அதுபோல நம்மை வலிவாக-உறுதியாக வைத்துக்கொண்டால்தான் மற்றவர்களுக்கு ஆலோசனைக் கூறமுடியும்.

ஓடுவதிலும், தாண்டுவதிலும், நீந்துவதிலும், எங்கு உதவி தேவையோ அங்கே உதவி தரும் வகையில் கயிற்றின் உதவியினால் பள்ளத்திலிருந்து மேலே வரவும், இங்கேயுள்ள சாரண சாரணியர் ஒவ்வொருவரும் பழக்கப்படுகிறீர்கள். உங்களை நான் பணிந்து கேட்டுக்கொள்வேன். எந்த வயதிலும் இந்தப் பயிற்சியை தேகப் பயிற்சியை நல்ல பழக்கத்தை கைவிட்டு விடாதீர்கள் என்பதுதான். நான் இன்னொன்றையும் கூறுவேன். நாட்டு மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்த்தால், சாரணர் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதை அதிகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குழந்தைகள் அதில் ஈடுபட வேண்டும். அதனால்தான் நாங்கள் உதவி செய்கிறோம். இந்த எண்ணிக்கை வளர வேண்டும் என்பதுதான் என் ஆசை.
பெரியவர்கள் சொல்ல முடியாததை ஒரு மாமன்னன் இளம் வயதில் சொன்னான் என்று தமிழ் இலக்கியத்தில் சொல்லுவார்கள். அதுபோல் நீங்கள் அதிகமான பேர்களுக்கு கல்லாத முதியோர்களுக்கு கல்வி சொல்லிக்கொடுக்க வேண்டும்.
எனக்குத் தங்க யானை தர வேண்டும் என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. விரும்பினார். வேண்டுமானால் கிடைத்தால் போட்டுக் கொள்ளலாம். தமிழகத்தில் ஏழைக் குடிமக்களுக்கு இன்னும் தங்கத்தாலி கொடுக்க முடியவில்லை. அதை நினைவுப்படுத்தத்தான் வேறு வகையில் நினைவுபடுத்தினார் என்று நினைக்கிறேன். அவருக்குச் சொல்லிக்கொள்வேன். எங்களால் ஆன கடமையைச் செய்வோம் அதை அதிகப்படுத்துவோம். உருவத்தில் சிறிய - கருத்தில் பெரிய யானையைத் தந்தார்கள். துணிந்து சொல்லுங்கள் என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. கூறினார். அண்ணாவின் கொள்கைப்படி எங்கள் கடமையைத் தொடருவோம்.''


தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

தேமொழி

unread,
Jun 12, 2020, 11:51:07 PM6/12/20
to மின்தமிழ்
source - https://www.facebook.com/permalink.php?story_fbid=4528226630524555&id=283386165008644&__tn__=K-R


தின செய்தி நாளிதழில் இன்று (08.06.2020) வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 38)
‘‘புரட்சித்தலைவரின் இலட்சியக் கனவு..!’’


ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்

-----

புரட்சித்தலைவர், தாம் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தபோது கொண்டாடப்பட்ட பெருவிழாக்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை.

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை அந்த ஆண்டு முழுவதும் அந்த விழாவை எங்கும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வம் ததும்ப நிகழ்ச்சிகளை உருவாக்கினார். புரட்சித்தலைவருக்கு பெருந்துணையாக இருந்தவர் தியாகச் செம்மலாகத் திகழ்ந்த அறிஞர் கா.திரவியம் ஆவார். தலைமைச் செயலாளராக அமர்ந்திருந்து அவர் அரசாணை வெளியிட்டதை நினைவுகூர்கிறேன். அரசாணையை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுத்தெண்ணிச் செதுக்கி அழகுபடுத்திய பெருமை தலைமைச் செயலாளரின் தனிச் சிறப்பாக இருந்தது. அந்த ஆணையின் படி வருமாறு:


உலக வரலாற்றில், வேறு எந்தக் கவிஞருக்கும் ஓர் ஆண்டு முழுவதும் அவர் பிறந்து வளர்ந்த மாநிலத்தில் மட்டுமின்றிப் பிற பாரதம் அளாவிய பிற மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் நூற்றாண்டு விழா இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடப்படவில்லை என்று பிறர் பேசும்  பெருமிதம் புரட்சித்தலைவருக்கு எப்போதும் உடன் இருந்தது.

தமிழக அரசு நிதி நல்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் உன்னதமான நூற்றாண்டு விழா மலரை வெளியிட உயர்ந்த அறிஞர் குழு அமைத்து ஏற்பாடு செய்தார். முப்பதுக்கு மேற்பட்ட அயல் மொழிகளில் அந்த மொழிகளின் வடிவமைப்பிலும், அவற்றின் மொழிபெயர்ப்பாக அயல் நாட்டு தூதர்களின் வாழ்த்துச் செய்தி இடம்பெற வேண்டும் என்று விரும்பினார். அவர் விருப்பத்தைத் துணை வேந்தர் சை.வே.சிட்டிபாபு சிறப்பாக நிறைவேற்றியதை எவரும் மறக்க முடியாது.

நூற்றாண்டு மலருக்கு வாழ்த்துரை வழங்கிய புரட்சித்தலைவர் எழுதிய தொடர்களை அவ்வாறே காணலாம்.
நாம் புகழ்ந்து பாராட்டுகின்ற தனிச்சிறப்புகளுக்கு மகாகவி பாரதியார் முற்றிலும் தகுதி வாய்ந்தவர். தாம் வாழ்ந்த காலத்துக்கு மட்டுமின்றித் தனக்குப் பின்னால் வரும் தலைமுறைகளுக்கும் மேன்மை பெற்றுத்தரும் கவிதைத் தொண்டினை ஆற்றியவர் மகாகவி பாரதியார்.
இந்தியப் பெருநாட்டு மக்களனைவரும் சிறப்பாகத் தமிழக மக்கள் மொழிப் பற்றும், நாட்டுப் பற்றும் பெற்று சிறப்பானக் கல்வி கற்றுச் செம்மையான வாழ்வு நடத்த வேண்டும் எனப் பாரதியார் கண்ட கனவுகளை நனவாக்கும் பொறுப்பு தமிழ்ச் சமுதாயத்துக்கும் நமது அரசுக்கும் என்றும் உண்டு. அப்பணியே என் இலட்சியப் பாதையாகும்.

அறிவியலில் வளர்ச்சி பெற்றிருக்கும் மேற்கு நாடுகளுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் நமது மாநிலம் முன்னேற வேண்டும் என்பதே, பாரதியாரின் நெஞ்சக் கனலாகக் கொழுந்துவிட்டெரிந்தது. இலக்கியச் சுவையும் கவிதை அழகும் பெரிதாக இருந்தன என்றாலும், அவரிடம் சமுதாய முன்னேற்றத்தையே முழுமுதல் குறிக்கோளாகக் கொண்டு தான் வாழ்ந்த காலத்து மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பினார்.

சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை பேணுதல், அயராது உழைத்தல், நாட்டின் நலனை முன்னிறுத்தல், குறுகிய சிறுமைகளை வேரறுத்தல், அச்சத்தை அகற்றுதல் போன்ற மானிடத்தின் முக்கியப் பொருண்மைகளில் மகாகவிக்கு இருந்த ஆழமான நம்பிக்கை நம்மை எப்போதும் எழுச்சிபெறச் செய்யும்.
பாரதியார் பெயரால் பல்கலைக்கழகம் கண்டோம். எட்டையபுரத்தில் பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைத்தோம், மகளிருக்காகத் தனிப் பல்கலைக்கழகம் உருவாக்க முற்பட்டுள்ளோம் என்று இப்படி எங்கும் எதிலும் எப்போதும் பாரதியின் எண்ணங்களைப் பரப்புவதை இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறோம்.

இந்த வாழ்த்துரையை, அவர் பலவகையில் ஆட்சியில் நிறைவேற்றினார்.
பாரதியாரின் வாழ்வில் புரட்சி, புதுமை, பெண்ணுரிமை, பாரத அன்னை வழிபாடு, பராசக்தி ஆராதனை முதலிய அனைத்தியல்புகளையும் வங்க மாநிலத்திலிருந்தே அவர் பெற்றார். பாரதியாரின் முதல் கவிதை, வங்கமே நீ வாழி என்ற பாடல்தான் என்று சுதேசமித்திரனில் வெளிவந்தது.
நூற்றாண்டு விழாவின், சிறப்பாகத்தான் மேற்கு வங்க மாநிலக் கொல்கத்தா மாநகரில், ராஷ்பிகாரி அவென்யு அருகில் விவேகானந்தர் பூங்காவின் அருகில் ஏரிச்சாலை என்று அழைக்கப்பட்டிருந்த தெருவின் பெயர் கவி பாரதி சாரணி என்று மாற்றப்பட்டதோடு தமிழக அரசு வழங்கிய முழு உருவ வெண்கலச் சிலையைக் கல்கத்தாவில் நிறுவியதை புரட்சித்தலைவர் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் ஜோதிபாசு வந்திருந்தும் அவர் விழாவில் பேசவில்லை.


புரட்சித்தலைவர் பேசினால் போதும் என்று மகிழ்ந்தார். புரட்சித்தலைவர் தமிழில் பேசியதை வங்க மொழியில் மொழிபெயர்க்க இருவர் முயன்றும் திணறினார்கள். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாமா என்று கேட்டதற்கு ஆங்கிலம் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.

கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் மிகச் சிறப்பு வாய்ந்த பெருமைக்குரிய தமிழ்ச் சங்கமாகும். பாரதியார் பாடல்களைக் கட்டுரைகளைப் பழந்தமிழர் ஆராய்ச்சி நூல்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும், வங்காளத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்ட பெருமை கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தைச் சாரும்.

கொல்கத்தா அறிஞர்கள் ப.நா.தியாகராஜன், மு.சீனிவாசன், கவிஞர் கா.சு.மணியம், கோபாலசுந்தரம், வெங்கடேசுவரன், இராமன், நாராயணசாமி முதலியோர் கண்ட நெடுநாள் கனவு கொல்கத்தாவில் அன்று நிறைவேறியது. கொல்கத்தா தமிழ் மக்கள் திரண்டு கண்கலங்க கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
அந்த விழாவில் புரட்சித்தலைவர் பேசிய உரைதான் தொடர்கிறது...

‘‘நான் வணங்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே! என்னை வழிநடத்திச் செல்லும் பெரியோர்களே! என் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புக்களே!
அஸ்திவாரம் உறுதியாக இருந்தால்தான் அதன்மீது கட்டப்படும் கட்டடம் உறதியாக இருக்கும். அப்படித்தான் வங்கம், தமிழகம் இரண்டும் காலங்காலமாக அன்பாலும், பாசத்தாலும் பிணைந்திருக்கின்றன. இந்த இணைப்பு இதயங்களின் கலப்பு தொடர்ந்திருக்க வேண்டும். இந்த இணைப்பு மேம்போக்காக இல்லாமல் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுவதாக அமைதல் வேண்டும்.

இதயத்திலிருந்து எழுகிற எண்ணங்கள்தான் எப்பொழுதும் நிலைக்கும். பாரதியாரின் கவிதைகளும் நிலைப்பதற்கு அவைகள் இதயத்தின் குரலாக இருந்ததுதான் காரணம். ஆகவேதான் பாரதி, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறான்.
மேற்குவங்க அரசின் பலமான அஸ்திவாரமும் அதன்மீது எழுப்பப்பட்டிருக்கிற தமிழக அரசின் அன்பளிப்பான பாரதி சிலையும் இரு மாநிலங்களின் இணைப்புகளாக இதய ஒற்றுமையைக் காட்டுகின்றன.
பாரதியார் தமது கருத்துகளை ஒரு மதத்திற்காகச் சொல்லவில்லை. ஒரு மாநிலத்திற்காக சொல்லவில்லை, உலகத்திற்காகச் சொன்னார். உலகம் முழுவதற்குமாகச் சொன்னதால்தான் மகாகவி பாரதியாராக இங்கே வாழ்ந்தார். அவரது வாழ்க்கையில் அவர் எத்தனையோ உதாரணங்களைச் சொல்லியிருக்கிறார். குறிப்பாக அவர் சொன்னதை நான் இங்கே எடுத்துக் காட்ட வேண்டியது எனது பெரும் கடமை என எண்ணுகின்றேன்.

மனிதர்களுக்குள்ளேதான் சாதியைப் பற்றிச் சொல்லுகின்றார்கள். ஆனால், மிருகங்களைக்கூட சாதி வாரியாக நாம் பிரித்துவிட்டோம் என்று அவர் குறிப்பிடுகின்றார். பார்ப்பனப் பாம்பு, பறப் பாம்பு என்று பாம்புகளில் கூட பிரிவினையை சாதியை ஏற்படுத்திவிட்டோம் என்று அவர் குறிப்பிடுகின்றார். ஏறத்தாழ 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார் என்பதை எண்ணும்போதுதான் அந்தக் காலத்தில் இருந்த மக்கள் எவ்வளவு நம்பிக்கையோடு இருந்தார்கள். அவர்கள் மத்தியில் சொல்லும் பொறுப்பினை அன்று பாரதியார் ஒருவரால்தான் பெற முடிந்தது. என்பதை எண்ணும்போது அதுதான் மகாகவி பாரதியார் என நம்மால் பாராட்டப்பட வேண்டிய தகுதி உடையவராகிறார்.

மாதச் சம்பளம் பெற முடியாத நடந்து போகக்கூடச் சக்தியற்ற தையல் போடாத சட்டையைப் போட்டுக்கொள்ள முடியாத நிலையில் இருந்த ஒருவர் பணத்தைச் சம்பாதிக்கச் செல்லாமல், ‘ஏதோ பாட்டை எழுதினோம். அதனால் புகழ் அடைந்தோம்' என்று அதைப்பற்றி மட்டும் கவலைப்படாமல் நாட்டைப் பற்றி சமுதாயத்தைப்பற்றி அவர் அக்கறை காட்டினார். அதற்காக எழுதினார் என்றால், நாம் நினைத்து நினைத்துப் பாராட்டி அஞ்சலி செலுத்த வேண்டிய ஒருவராக பாரதியார் நம்முன் நின்று கொண்டிருக்கின்றார்.

எல்லா மதத்தினரும் அவரைக் கோபித்துக் கொண்டார்கள். எங்கும் அவருக்கு வேலை கிடையாது. கொடுக்கப்பட்ட இடத்திலும் அதற்கு எச்சரிக்கையும் சம்பளக் குறைவும்தான் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக பிரிட்டிஷ் ஆதிக்கம் அவரைத் துரத்திப் பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்தது. இவ்வளவுக்கும் இடையில்தான் புரட்சிகரமானக் கருத்துகளை நாட்டில் பரப்பினார் என்பது, இரவீந்தரநாத தாகூர் அவர்கள் கவிதை எழுதும்போது பாராட்டினார் என்பதையும், வந்தே மாதரம் கீதத்தை உருவாக்கியபோது அவர்தான் முதலில் அதை எழுதி மக்கள் மத்தியிலே தமிழகத்தில் பரப்பினார் என்பதையும் நான் எடுத்துச் சொன்னால் அதைக் கேட்கின்றவர்கள் அதிசயிக்க மாட்டார்கள். என்றாலும் தங்கள் உள்ளத்திலே கேட்காமல் இருக்கமாட்டார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

இன்றை தினம் நாம் சொல்லுகிறோம் விதவையைத் திருமணம் செய்யலாம் என்று அன்று பேசவே முடியாது. ஆனால், அன்றைய தினம் அவர் அதற்காகப் போராடினார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டுமென்று வாதாடினார். பெண்களை யாருக்கும் அடிமையாக்கக் கூடாது என்று அவர் சொன்னார். எல்லாவற்றுக்கம் மேலாக ஒருவன் பட்டினி கிடந்தால் கூட இந்த உலகத்தையே அழிக்க வேண்டும் என்று சொன்ன ஒரே ஒருவர் பாரதியார் மட்டும்தான். அந்தக் குறிப்பிடத்தக்க ஒருவர், இந்தியா முழுமைக்கும் என்றும் சொந்தம் என்று சொன்னால் உலகத்திலே இருக்கின்றவர்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் தெரிந்து கொள்ளட்டும். ஆனால், வங்காளத்திலே, வங்காளத் தலைநகரத்திலே இப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்படும் என்று இன்று அறியும்போது, இந்தியா எந்த அளவிற்கு மாநிலத்திற்கு மாநிலம் தொடர்பு வைத்திருக்கிறது என்பதையும், அண்ணன், தம்பியாக இருக்கிறோம் என்பதையும் இங்கே மற்றவர்கள் சொன்னதை நான் அடையாள பூர்வமாக ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல, தலைவணங்குகிறேன், என்று கூற விரும்புகிறேன்.

சில ஆஸ்தீக நம்பிக்கையுள்ளவர்களுக்கு மழை வருவது ஒரு நல்ல அடையாளம் என்று சொல்வார்கள். அதிலும் வறட்சிப் பாகத்திலிருந்து வந்திருக்கின்ற நான் இங்கே மழை பொழிவதைப் பார்க்கும்போது பெருமகிழ்ச்சி அடையத் தவறமாட்டேன். இந்தப் பெயரை வைக்கும் போதே மழைத் தூற்றல் போடுகிறது என்றால், இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் நாம் எவ்வளவு வளமாக வாழ முடியும் என்பதற்கு இதை அடையாளமாகக் கொள்ள முடியும் என்று கருதுகின்றேன்.
அவருடைய கொள்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அந்தக் கொள்கையைப் பின்பற்றினால், அன்றி இந்தியாவிற்கே விமோசனமில்லை என்பதைச் சொல்லி, இத்தகைய வாய்ப்பைத் தந்ததற்காக முதலமைச்சர் அவர்களுக்கும், குழுவினருக்கும் என் நன்றியைக் கூறி, வாழ்க பாரதி நாமம், அண்ணா நாமம் என்று சொல்லி விடை பெறுகிறேன்.''

தேமொழி

unread,
Jun 18, 2020, 12:38:12 AM6/18/20
to மின்தமிழ்
source - https://www.facebook.com/permalink.php?story_fbid=4559757074038177&id=283386165008644&__tn__=K-R


தின செய்தி நாளிதழில் இன்று (15.06.2020) வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 39)

‘‘சத்துணவுத் திட்டம் சமுதாயப் புரட்சித்திட்டம்..!’’


ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்

-----

உயிர்களின் பசியொழிப்பே மணிமேகலை வலியுறுத்தும் பேரறமாகும். இவ்வறத்தை இந்நூல்போல் வற்புறுத்தும் வேறு நூல் தமிழில் இல்லை. பசியின் கொடுமை மிகப் பெரிது. குடிமை, பெருமை, கல்வி, நாண், தோற்றம் என்ற நல்லவை யாவும் பசித்தீ முன் அழிந்தொழியும். எதனைத் துறந்த துறவியும் பசியைத் துறத்தல் முடியாது. பசி, யாரையும் வாட்டிப் பண்பு திரிக்கும் ஆதலின்,
‘‘பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர்
இசைச்சொல் அவனைக் கென்நா நிமிராது'' (1239-40)

‘‘மண்டிணி ஞானத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே'' (1254-5)
என்று சோற்றுக்கொடையின் சிறப்பும் அக்கொடையாளியரின் உலகப் புகழும் இந்நூலால் பறைசாற்றப்படுகின்றன. சோற்றை ஆருயிர் மருத்துவர் என்றம் சாத்தனார் புகழ்வர். பசி நோயிலிருந்துதான் ஏனைப்புற நோய்களும் அகநோய்களும் பிறப்பன. உடற்பிணி மருத்துவர்களாலும், அகப்பிணி அறிஞர்களாலும் சமுதாயக் கேடுகள் ஒழியமாட்டா. எனை நோய்க்கும் பிறப்பிடமாம் பசிப்பிணி தீர்க்கும் அற மருத்துவர்கள் சமுதாயத்திற் பெருக வேண்டும்.
‘‘மக்கள் தேவர் எனவிரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன்
பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்
தவப்பெரு நல்லறம் சாற்றினர்'' (1421-4)
எனப் பழுத்த துறவி அறணவர் உயிர்வாழும் உலகிற்கெல்லாம் பொதுவறம் சாற்றுவர். தனியாகும் பசியொழிக்கப் பாடுபடுதல் வேண்டும். அதன் ஒழிப்பை முதற்கடமையாக அரசும் எண்ண வேண்டும். ஓருயிர் பசித்துக்கிடத்தல் கூடாது, கூடாது. வரப்புயர என்றாற்போல் பசியொழிய என்றால் ஏனைத் தீயவை தீயெல்லாம் ஒழியும் என்பதுவே சாத்தனார் சமுதாயக்கொள்கை.
‘‘பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வன்னும் சுரக்கென'' (70-1)
முரசோன் விழா அறைகின்றான். பசி நீங்கப் புறப்பிணி நீங்கும்; புறப்பிணி நீங்க அகப்பகை நீங்கும் என்று சாத்தனார் நாட்டிற்கு வழி காட்டுவர். மக்கட்கு அடிப்படை வேண்டுகை உணவு, உடை, வீடு என்ற மூன்றுமே என்றும், அவற்றை எவ்வகையானும் அமைத்துக் கொடுப்பதுவே நல்லரசின் முதற் கடன் என்றும் இன்று பல்லரசுகளும் ஒப்புக் கொள்கின்றன. அக்கடனைச் செவ்வண் முடித்துக் குடிப்பசி களையப் பாடுபடுகின்றன.
‘‘அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவா திதுகேன் மண்ணுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டதில்......'' (3383-5)
சாத்தனார் பன்னூறு ஆண்டுகட்கு முன் கண்டு காட்டிய கனவு இது; அறுதியிட்டுரைத்த அறம் இது. மக்கட்கும் அரசுகளுக்கும் காட்டிய வழி இது. தமிழ்ப் புலவன் கண்ட கனவு அறிவியல் பெருகிய இவ்விருபதாம் நூற்றாண்டிலும் கனவாகவே நிற்கின்றது. உயிர் பசி நீங்கும் நனவுதான் என்றோ?
என்று வ.சுப.மாணிக்கம் எழுதினார்.
“பசிக்கிறவனுக்கு மீனைக் கொடுக்காதே அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடு” என்றும் “சோறு போட்டுச் சோம்பேறியாக்காதே” - பொன்மனச் செம்மல் சத்துணவுத் திட்டம் கொண்டு வந்த பொழுது இப்படியெல்லாம் சிலர் பழிப்புரை பேசினார்கள். அவர்களுக்கெல்லாம் ஒட்டு மொத்தமாக இந்தச் சத்துணவுத் திட்டம் மிகப் பெரிய பொருளாதாரத் திட்டம் என்றோ நான் ஓர் அரசியல் மேதை என்றோ உலகிற்குச் சொல்லவோ இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. என்னுடைய இளம் பருவத்தில் பசியின் கொடுமையை அனுபவித்தவன். என் தாய் பத்துப்பாத்திரம் தேய்த்துக்கூடப் பசியாற உணவும் படிப்பும் கொடுக்க இயலவில்லை. இந்தக் கொடுமையைக் கணிசமான அளவில் குறைக்க வேண்டும் என்கிற இலட்சியத்தை நிறைவேற்றவே இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தேன். இது என் ஈரமான இதயத்தின் வெளிப்பாடேயன்றி என் அரசியல் சாணக்கியத்தனம் இல்லை.
இதனால் அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை இழப்பு என்றாலும் எனக்குக் கவலையில்லை” என்று விளக்கமளித்தார் வள்ளல்.
வறுமையை ஒழிப்போம் என்றுதான் நான் தொடங்கினேன். ஆனால், வறுமையைக் காட்டிலும் என்னையும் என் கட்சியையும் ஒழித்துவிட்டார்கள் என்று அமெரிக்க குடியரசுத் தலைவர் ரீகன் குறிப்பிட்டார். ஆனால், புரட்சித்தலைவருக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான். கொடிது கொடிது இளமையில் வறுமை என்பதை நெருப்பு வரியாகத் தவித்த துயரம் புரட்சித் தலைவர் நெஞ்சத்தை கலக்குவதாகும். அந்தக் கலக்கத்தில் பிறந்ததுதான் சத்துணவுத் திட்டம்.
இளம்பிள்ளைகள் பசியில்லாமல் பட்டினியில்லாமல் மகிழ்ச்சியோடு படித்து முன்னேற வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்திற்காகத்தான் சத்துணவுத் திட்டத்தை நான் தொடர்கிறேன் என்று பலமுறை உருக்கமாகக் கூறுவார்கள். பசியைப் போக்குவதில் அவருடைய கை எந்தத் திசை நோக்கியும், எந்தத் தொலைவைக் கடந்தும் நீளும் கரமாகும். கொடுத்துச் சிவந்த கரம், கோடிக்கணக்கான இளம்பிள்ளைகளுக்கு கிடைத்த வரம். அந்த வகையில், தன்னைத் தாயாகவும், தந்தையாகவும் எண்ணி உருக்கத்தோடு ஆற்றிய உரைகள் பல.
அவற்றில் ஒரு கட்டுரையைத்தான் நீங்கள் படிக்க இணைத்திருக்கிறேன்.


திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில் 01/07/1982 அன்று நடைபெற்ற இலவச சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து புரட்சித்தலைவர் ஆற்றிய உரையில்...
‘‘இன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த நிகழ்ச்சி வெறும் விளம்பரத்திற்காகவோ நாங்கள் எத்தகைய திட்டங்களையெல்லாம் அறிமுகப்படுத்துகிறோம் பார்த்தீர்களா என்று சொல்லி மக்களுடைய தேவைகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு என்னென்ன அவசியத் தேவை இருக்கின்றனவோ அவைகளை அலட்சியப்படுத்திவிட்டு, அவர்களைத் திசை திருப்பி விடுவதற்காகவோ இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. நடத்தப்படவில்லை என்பதை முதலிலே நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் பேசுவதாக இருந்தாலும் எங்கள் கட்சிக்காரர் பேசுவதாக இருந்தாலும்கூட அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அந்தக் குழந்தைகளை, இன்றைய நாட்டின் சூழ்நிலையில் நீங்கள் அனுப்பாதீர்கள். காரணம், அவர்கள் திணிக்கின்ற, ஒருவரையொருவர் வேறுபடுத்துகின்ற கருத்துகளை அந்தப் பசுமையான உள்ளத்தில் பதிய வைத்துவிடக் கூடாது என்பதுதான்.
இந்தக் குழந்தைகள் உணவுக்கு வகையில்லை என்பதை மட்டுமல்ல, உணர்வுக்கும்கூட - நல்ல உணர்வுக்கும்கூட - இந்த நாட்டுக்குத் தேவையான சமத்துவ உணர்வுகளுக்குக் கூட தகுதிக் குறைந்தவர்களாக வளர்க்கப்படுவார்களேயானால் எதிர்காலத்தில் இந்த நாட்டின் நிலைமை என்னவாகும் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
குழந்தையிலேயே ஒழுங்காக, ஒழுக்கமாக, சுத்தமாக, சீர்மையாகத் தூய்மையாகத் துப்புரவாகத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு உபதேசம் செய்யாமல் நடைமுறைப் பழக்கவழக்கங்கள் அவர்களுக்குச் சிறுபருவத்திலேயே வந்தாக வேண்டும். அப்படிப்பட்ட நிலைமையை உருவாக்க வேண்டுமென்பதுதான் எங்கள் ஆசை. பசியையும் போக்க வேண்டும், பண்பையும் வளர்க்க வேண்டும்.
கட்சியைத் தயவு செய்து தள்ளி வையுங்கள். 60 இலட்சம் ஏழைக் குழந்தைகளுடைய வயிற்றைப் பாருங்கள். அவர்கள் வாழ்வைப் பாருங்கள். இராமச்சந்திரனைப் பார்க்காதீர்கள். அவர் எந்தக் கட்சி என்ற பார்க்காதீர்கள். எதிர்க்கட்சியா? எதிரிக்கட்சியா என்று தயவு செய்து கவனிக்காதீர்கள். தமிழகம், தமிழ் மக்கள், அதில் இருக்கின்ற வறுமைக்கோட்டிற்குக் கீழேயுள்ள வேலையில்லாமல் இருக்கின்ற ஒரு வேளை உணவு கூட நிம்மதியாகக் கொடுக்க முடியாமல் இருக்கின்ற அந்த வறுமைக் கோட்டிற்குக் கீழேயுள்ள தாய்மார்கள். கண்ணீர் வடிக்கிறார்களே, அதைத் துடைக்கின்றோம் என்கிற நிலைமையில் ஒத்துழைக்க முன்வாருங்கள் என்று நான் சொல்லிக்கொள்வேன்.
குழந்தைகளுக்குச் சொந்தக்காரர்கள் வேலைக்குப் போவார்களேயானால் என் குழந்தை இப்போது என்ன செய்து கொண்டிருக்கும் உணவுக்கு என்ற அந்த நினைப்பே இல்லாமல் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள்தான் அந்தக் குழந்தையும் ஒரு காலத்தில் இந்த நாட்டின் முதலமைச்சராக வரலாம். ஏன்? குடியரசுத் தலைவராகவே வரலாம். அப்படிப்பட்ட குழந்தைகள் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள். அவர்கள் கொடுக்கின்ற வரிப்பணம், நாம் கொடுக்கின்ற வரிப்பணம் அவர்களுக்கு உணவாகப் போகிறது. ஆகவே, அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அங்கே சாப்பிடுகிறவர்கள் என்கின்ற எண்ணத்தோடு உரிமையோடு நிம்மதியோடு இருக்கின்ற நிலைமையை உருவாக்க முயலுகிறோம்.
இந்த நல்ல காரியத்துக்கு யாரும் எதிர்ப்புச் சொல்ல முடியாது. நியாயமும் இல்லை. காரணமும் இல்லை. ஆகவே, இதுவரை எதிர்ப்புக் கருத்துகள் அதிகமாகச் சொல்லப்படவில்லை. நடக்குமா என்றுதான் சந்தேகப்படுகிறார்களே தவிர, இது நடக்கக் கூடாதது. வேண்டாதது என்று யாரும் சொல்லவில்லை. ஆகவே, நடத்த முடியும் என்பதைத் திட்டமிட்டுக் காண்பித்துவிட்டோம்.
நான் உண்மையிலேயே பெருமைப்படுகின்றேன். இந்த உணவையும் கொடுத்துப் பண்பையும் கொடுத்துக் குழந்தையிலிருந்து அவர்களுக்கு உடற்பயிற்சியையும் கற்றுக் கொடுத்தோமானால் எதிர்கால சந்ததிகள் எந்த நாட்டு விளையாட்டுக்காரர்களோடும் போட்டி போடக் கூடிய அளவுக்கு அவர்கள் வளர முடியும்.
அறிவியிலிலே அவ்வாறு போட்டிபோட வேண்டுமென்றாலும் அங்கே போட்டிபோட அந்தத் திறமையைப் பெற முடியும் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லி, அங்கே தூரத்திலே கை ஆட்டுகிறவர்களுக்கு என் நன்றியைச் சொல்லி இந்த வாய்ப்பைத் தந்ததற்கு நான் நன்றி கூறி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க என் தாய் எனக்கு இந்த ஆயுளைத் தந்ததற்காக என் அன்னையை நான் வணங்கி இது வெற்றி பெறவேண்டும். இது மக்களுக்கு நல்லதாக அமைய வேண்டும் என்று கூறி இதைத் தொடங்கி வைக்கின்றேன்.''
வள்ளற் பெருமான் பசியால் ஏற்படும் முப்பத்தாறு துன்பங்களை பட்டியலிட்டு எழுதியிருப்பதைப் படிக்கும்போது நம் நெஞ்சம் உருகும். பசியாற்றுவதற்காகவே சத்திய தரும சாலையை தொடங்கிய பெருமை வள்ளலார் வடலூரில் தொடங்கிய அமைப்பாகும். அன்று தொடங்கிய பசியாற்றுவித்தல் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

தேமொழி

unread,
Jun 29, 2020, 2:06:31 AM6/29/20
to மின்தமிழ்
source - https://www.facebook.com/permalink.php?story_fbid=4595677637112787&id=283386165008644&__tn__=K-R

தின செய்தி நாளிதழில் இன்று (22.06.2020) வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 40)

‘‘எளியோர் கண்ணீரைத் துடைப்பதில் இறைவன் இருக்கிறான்..!’’


ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்

-----

நூற்றிரண்டு ஆண்டுகள் வாழ்ந்த நுண்ணறிவாளர் மூதறிஞர் பேராசிரியர் அடிகளாசிரியரவர்கள் உரை நூல்கள், பதிப்பு நூல்கள், படைப்பிலக்கிய நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் என்ற வகையில் அறுபத்தெட்டு நூல்களைப் படைத்த அறிஞராவார். அத்தகைய அறிஞர் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் மேல் இயற்றிய இலக்கியத்தின் பெயரே ‘பல்துறைப் பலவினம்' என்பதாகும். அச்சுவாகனம் ஏறாத இவ்விலக்கியத்தைப் பற்றிய பல்வேறு சிந்தனைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் அவர்கள், தமிழ்மொழிக்குச் செய்துள்ள தொண்டுகளுள் மாபெருந் தொண்டாக அமைந்திருப்பது தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவியதாகும். அவர் அவ்வாறு நிறுவிய தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சுவடிப்புலத்தில் அவரும் பேராசிரியராகப் பணியாற்றினார். புரட்சித் தலைவரின் சத்துணவுத் திட்டத்தைக் கேட்டுப் பெரிதும் நெகிழ்ந்தார். சிறார்களுக்கு அன்னமிடுவதே சீரிய பணி என்றும் உருகினார். புரட்சித் தலைவரைப் போற்றிய பேராசிரியரின் நூல்கள் 2019ஆம் ஆண்டில் நாட்டுடமையாக்கப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழியல் துறை பேராசிரியர் முனைவர் ஆர்.சிவபெருமான் புரட்சித் தலைவர் நூற்றாண்டு மலரில் இதனைக் குறித்துள்ளார்.

‘‘அற்றார்தம் அழிபசியைத் தீர்த்தல் தானே
அரும்பொருளை வைக்கின்ற இடமா மென்ற
கற்றார்சொல் திருக்குறளைக் கற்றாய் போலும்,
கருணைமிகும் எம் அமைச்ச! இராமச் சந்திர!
அற்றாரின் அழிபசியை மதியத் தின்கண்
அகற்றுதற்கு நீயெண்ணி, அருமை சான்ற
உற்றார்போல் நல்லுணவை உண்பிக் கின்றாய்;
உலகத்தில் பண்ணன் இன்றும்
உதித்திட்டானோ!”

மேற்பாடலின் கீழ் குறிப்பு என்னுந் தலைப்பின் கீழ் அடிகளாசிரியரவர்கள், ‘‘தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களை இதுவரை நான் கண்டதில்லை. அவர்களும் என்னைப் பார்த்ததில்லை. எனினும், அவர்கள் செய்து வரும் அரும் பணிகளை எண்ணி மகிழ்வேன். அவ்வெண்ணமே இப்பாடலை எழுதத் தூண்டிற்று. இங்கே பண்ணன் என்பான் சிறுகுடிக்கிழான்பண்ணன் என்பவனாவான். இவன் பெரிய உணவுக் கொடையாளி; இவனைச் சிறப்பித்துச் சோழன் கிள்ளிவளவனே பாடியுள்ளார்'' என்று எழுதியுள்ளார்.

இந்தநிலையில், 18.07.1982 அன்று சென்னை இராஜாஜி மண்டபத்தில் நடைபெற்ற முசுலிம் மகளிர் சேவா சங்கத்தினர் ஏழை விதவைப் பெண்களுக்கு உதவி வழங்கும் விழாவில் புரட்சித்தலைவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதியைக் காண்போம்

‘‘இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை நான் மனதாரப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இங்கே நபிகள் (ஸல்) அவர்களைப் பற்றி மாண்புமிகு அமைச்சர் கிருஷ்ணசாமி கூறினார்கள்.

இசுலாத்தின் ஈகைப் பண்பு மிக உயர்ந்த கொள்கையாகும். உருவ வழிபாடற்ற ஒரு முறையைக் கடைப்பிடிக்கும் இசுலாமிய சமுதாயம் எந்த அளவு ஒற்றுமையாக இணைந்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது.

திருக்குரானில் சொல்லப்பட்டிருக்கிறதை ஒன்றிரண்டை நான் குறிப்பிடுவது எனக்கு நினைவுபடுத்திக் கொள்வதாக அமையும். மறந்தவர்களுக்கும் நினைவுபடுத்துவதாக அமையும் என நான் கருதுகிறேன்.

ஒவ்வொருவரும் தனது சொத்தில் மொத்தத்தில் என்று நான் அடைமொழியாகச் சேர்த்துக் கொள்கிறேன். இரண்டரை சதவிகிதத்தை ஏழை, எளியவர்களுக்கு ஒதுக்கித் தரவேண்டும் என்பது ஒரு சித்தாந்தமாகக் கூறப்பட்டிருக்கிறது.

நோன்பிருப்பதை வெறும் நோன்பு என்று மட்டும் எடுத்துக்கொள்ளாமல் அவர் உண்ணாமலிருக்கும் பகல் நேர உணவான அந்த வேளை உணவு இன்னொருவருக்குப் பயன்படப்போகிறது என்கிற சித்தாந்தத்தை நாம் மறந்துவிடக்கூடாது. நாங்கள் இசுலாமிய சமுதாயத்தைப் பாராட்டக் காரணம் ஏழை பணக்காரன் என்பது இயற்கையாக ஆண்டவன் படைப்பில் இல்லை. அவரவர் பொறுப்புதான். அவரவர் செய்கின்ற துணிச்சலான காரியத்தினால்தான் அந்த இடத்தை எய்துகிறார்கள். அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் சட்டப்படி ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். ஒரு இசுலாமியனாக இருப்பானானால் அதைச் செய்தாக வேண்டும் என்றிருப்பதை எண்ணி எண்ணிப் பாராட்ட வேண்டும்.

அந்தக் கொள்கையைச் சொன்னவர்களுக்குக் கடைப்பிடிப்பவர்களுக்கு, கடைப்பிடித்து வருபவர்களுக்குத் தலைகுனிந்து கைக்கூப்பி வணக்கம் தெரிவிக்க விரும்புகிறோம். இங்கே ஏழைகளுக்குத் துணிகள் கொடுக்க இருக்கிறார்கள். மானத்தை மறைக்க இலவசமாகத் துணிகள் கொடுக்க இருக்கிறார்கள். என்றைக்கு அவரவர்களால் வாங்க முடிகிறதோ அன்றுதான் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு அடையாளமே தவிர, இன்னொருவருடைய கையை எதிர்பார்த்து வாழும் வரையில் இந்தியா பரிபூரண சுதந்திரம் அடைந்ததாக யாருமே சொல்ல மாட்டார்கள்.

அமரர் காந்தி சொன்னதில்லை. நேரு சொன்னதில்லை, இந்திராகாந்தி அம்மையாரும் சொன்னதில்லை. லால்பகதூர் சாஸ்திரி சொன்னதில்லை. அபுல்கலாம் ஆசாத் சொன்னதில்லை. மூதறிஞர் இராஜாஜி சொன்னதில்லை. அய்யா அவர்கள் சொன்னதில்லை. அமரர் அண்ணா சொன்னதில்லை. இதை நான் எதற்காகக் குறிப்பிடுகிறேனென்றால், இந்த வாய்ப்பை நாம் பெற்றாக வேண்டும்.

எந்த ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நம்பிக்கைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் சமத்துவத்தோடு, சரி நிகராக வாழ்க்கையிலே ஒரு மனிதன் அவசியத் தேவைகளையாவது பிறருடைய தயவில்லாமல் பெற்று வாழ்கின்ற நிலைமையை உருவாக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அந்தக் கடமையை இன்னும் யாரும் முழுமையாகச் செய்துவிடவில்லை என்பதை இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.
இங்கே மாண்புமிகு அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் பேசும்போது, 63 இலட்சம் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கும் காரியத்தை முதலமைச்சர் செய்துள்ளார் என்று சொன்னார். யாருடைய பணம்? என்னுடைய தனிப்பட்ட பணமல்ல. மக்களுடைய பணம், மக்களுடைய வரிப்பணத்திலிருந்து, மக்களுக்குச் செலவு செய்கின்ற பணம் இதை உண்டு வளருகின்றவர்கள் எந்த ஒரு தனிமனிதனுக்கும் கட்டுப்பட்டவர்களல்ல கட்டுப்பட வேண்டியவர்களல்ல. அவர்கள் நன்றிக்கடன் செலுத்த எந்தத் தனிப்பட்ட மனிதனையும் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்தப் பணம் தமிழக மக்களுடைய பணம் என்றால் தமிழக மக்கள் தமிழ்நாட்டின் சொத்து. எனவே, தமிழ்நாட்டிற்குத்தான் இந்தக் குழந்தைகள் வளர்ந்து எதிர்காலத்தில் நன்றியைச் செயல் மூலம் காண்பிக்க வேண்டுமே தவிர, யாருக்கும் அடிமையாகக் கைகட்டி நன்றி காட்டவேண்டிய அவசியமில்லை. நாங்கள் ஒரு குழு அமைத்திருப்பது உங்களுக்குத் தெரியும். அதில் ஒரு செய்தி வந்திருக்கிறது. 12, 13 வயதுச் சிறுவர்கள் சில வீட்டில் வேலை செய்கிறார்கள். எதற்கு வேலை செய்கிறார்கள் என்றால், சம்பளத்திற்காக அல்ல. ஒரு வேளைச் சாப்பாட்டிற்காக, தாய் தந்தையர்கள் வேலைக்குப் போகும்போது ஒரு வேளை உணவுக்காக வேறு வீடுகளுக்கு அனுப்புகிறார்கள்.

இந்த வயதில் ஒரு வேளை உணவுக்காக வேலை செய்துகொண்டு எங்களுக்கு எங்கே சாப்பாடு என்று கேட்கிறார்களாம். இல்லை உங்களுக்கு இல்லை. குழந்தைகளுக்குத்தான் என்று சொன்னால், நீங்கள் எம்.ஜி.ஆரிடம் சொல்லுவதில்லை. எம்.ஜி.ஆரிடம் சொல்லுங்கள், எங்களுக்கும் சாப்பாடு கிடைக்கும் என்கிறார்களாம்.

இதை நான் குறிப்பிடக் காரணம் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பெரியது. ஆனால், அரசுக்கு இருக்கும் சக்தி மிகமிகச் சிறியது.

ஒரு கொள்கையை எடுத்து நிறைவேற்றும்போது திட்டங்களைப் பிரித்துப் பார்க்க முடியாது. முஸ்லிம் சமுதாயக் குழந்தைகள் பகலில் உண்ணக்கூடாது என்று சொன்னால், அவர்களுக்காக மாற்றி வைக்க வேண்டியிருந்தது. மாலை 7 மணிக்கு மேல் அவர்களுக்குச் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.

அதற்காக அந்தத் தாய்மார்கள் சமையல் செய்பவர்கள் 3 மணி நேரம் அதிகமாக இருந்து அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விட்டு செல்ல வேண்டி இருக்கிறது. அதற்காக அவர்கள் ஓவர்டைம் கேட்கவில்லை. கேட்கமாட்டார்கள்.

ஆனால், இப்போது எங்கு பார்த்தாலும் ஒரு நாட்டிற்குத் தொண்டு செய்பவர்கள் வேலை செய்யும்போது பல பிரச்சினைகளில் ஏலம் போடுகிறார்கள். தன்னுடைய கடமையை ஏலம் போடுகிறார்கள். தன்னுடைய நாட்டிற்குச் செய்ய வேண்டிய தியாக உணர்வை விலை பேசுகிறார்கள்.

அவைகளையெல்லாம் நீக்க வேண்டுமானால் படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சாதாரண மக்களுக்கு அல்ல, அப்படிப்பட்ட பணியிலிருப்பவர்களுக்குக் கூட எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். இன்றைக்கு
500 தாய்மார்களுக்குத் துணிகளை இந்த அமைப்பு வழங்க இருக்கிறது. 100 ஆண்டுக்காலம் பணி செய்யும் அமைப்பு இதனைச் செய்கிறது என்றால், இதிலும் பாதிப்பங்கு சுமார் 20 லிருந்து 30 ஆயிரம் ரூபாயைத் தமிழக அரசு ஏற்றுக் கொடுக்கிறது.

கொடுக்கிறது என்றால், இந்தத் தாய்மார்களுக்கு மாதம் 15 ரூபாய் தருகிறது என்றார்கள். அந்தப் பணத்துடன் அரசு முதியோர்களுக்குத் தரும் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொடுங்கள் என்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சொன்னேன். உடனே மற்றவர்கள், சங்கத்திலிருப்பவர்களுக்கு 50 ரூபாய் எங்களுக்கு 35 ரூபாய் 25 ரூபாய்தானா என்று போட்டிக்கு வந்துவிடக்கூடாது.

சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு ஒரு ரூபாய், 2 ரூபாய்கூட கிடைக்கலாம். இருக்கின்ற சூழ்நிலையை வைத்து, நமக்கிருக்கிற சக்தியை வைத்து வாழ்க்கையை எப்படி நடத்திக் கொள்ள வேண்டுமோ அப்படி நடத்திச் செல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று அமரர் அண்ணா எங்களுக்குச் சொன்னதன் விளைவாகத்தான் இன்றைய தினம் முசுலிம் பெரியவர்களைச் சந்திக்கும்போது நெஞ்சாரத் தழுவ முடிகிறது. அது ஒரு மதத்தினுடைய கோட்பாடு-நம்பிக்கையாக இருந்தாலும் அது எங்களுக்கும் பொருந்துகிறது. ஏனென்றால், எங்களுக்கும் ‘ஒன்றேகுலம்தான் ஒருவனே தேவன்தான்'.

எங்கெங்கே அன்பைக் காணுகிறோமோ, பண்பைக் காணுகிறோமா அங்கெல்லாம் இறைவனைக் காணுகிறோம். ஆகவேதான், ஒரு மனிதன் வேறுபட்ட உணர்ச்சிக்கு காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாக இடமில்லாமல் இருக்க வேண்டுமென்றால், உணவு பிரச்சினை இருக்கக்கூடாது. இருக்க வீடில்லை என்ற பிரச்சினை இருக்கக்கூடாது. செய்ய தொழில் இல்லை என்ற பிரச்சினை இருக்கக்கூடாது.
அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 லிருந்து வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கும் இந்த உணவுத் திட்டத்தை நகரத்திற்கும் விரிவாக்க திட்டமிட்டிருக்கிறோம். நாம் ஆரம்பித்திருக்கிற திட்டம் ஆங்காங்கே செயல்படும் அனுபவத்தை வைத்து நகரங்களிலும் செயல்படுத்த இருக்கிறோம்.

சில இடங்களில் தாய்மார்கள், ஏழைக் குழந்தைகளையும் அனுப்பிவிட்டுப் பெரியவர்களும் வந்து அமர்ந்து விடுகிறார்கள். இந்தத் துயரத்தையும் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஏழை, பணக்காரன் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டு, சாதி மதத்திற்கு அப்பாற்பட்டுக் காரியத்தைச் செய்தால் மற்ற மாநிலமும் சத்துணவுத் திட்டத்தினைப் பின்பற்றும்.''


தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

தேமொழி

unread,
Jun 29, 2020, 2:19:26 AM6/29/20
to mint...@googlegroups.com
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்
என்ற தலைப்பில் 
ஔவை நடராசன்,  மேனாள் துணைவேந்தர்
அவர்கள் எழுதும் கட்டுரை 
மின்தமிழ் ›மணி மகுடம்
என்ற இந்த இழையில் 
கட்டுரை எண் 32 இல்  இருந்துதான் துவங்குகிறது. 
அப்பொழுதுதான் நான் இக்கட்டுரைகள் குறித்து அறிந்து படிக்கவும் பகிரவும்  துவங்கினேன் 

இதற்கு முன் எழுதப்பட்ட கட்டுரைகளைக்  குறித்து அறியும் ஆர்வம் ஏற்பட்டதில், 
கோரிக்கையை ஏற்று முனைவர் அருள்  ஐயா அவர்கள் மின்தமிழுக்கு அனுப்பி வைத்தார்கள்
 இழையில் இணைப்பாக உள்ளது. 

இந்த இழையைத் தொடர்வோருக்காக அதன்  சுட்டியும்  இணைத்துள்ளேன் 
இணைப்பிலும் கட்டுரைகளைக் காணலாம். 
நன்றி 
MGR - mannathi mannan - mani magudam 1- 31 attachment.docx

தேமொழி

unread,
Jun 29, 2020, 2:31:57 AM6/29/20
to mint...@googlegroups.com


தின செய்தி நாளிதழில் இன்று (29.06.2020) வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 41)

‘‘ஈரமும் வீரமும் இணைந்த புரட்சித்தலைவர்..!’’


ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்

-----


அப்போது மழைக் காலங்களில் இயற்கை சீறியபோதெல்லாம் ஏழை எளிய மக்கள் இன்னல்களுக்கு இரையானார்கள். வெள்ள நீரில் மக்கள் தவிக்கும் நிலை உருவானால் வினாடியும் தாமதிக்காமல், அரசு என்ன செய்யப் போகிறது என்று காத்திராமல், ஏதோ திருமண வீடுபோல புரட்சித்தலைவரின் வீட்டில் சமையல் தொடங்கிவிடும். ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சமைத்து, அவற்றை அண்டா அண்டாவாக நிரப்பி அல்லற்பட்டவர்களுக்கு நேரடியாகக் கொண்டு சென்று, பொட்டலங்களாகக் கட்டி வழங்காமல், விருந்துபோல பரிமாறிச் சாப்பிடச் சொல்லி அவர்கள் பசியாறுவதைக் கண்டு மகிழ்ந்தவர் மக்கள் திலகம். இந்தச் செயற்பாடுகளைப் பின்னணியில் இருந்து மேலாண்மை செய்தவர் அருளாளர் ஆர்.எம்.வீ.
அப்பொழுதெல்லாம் ‘மழை பெய்து வெள்ளம்' என்றால் அங்கே புரட்சித்தலைவர் சாப்பாடு போடுவது என்பது நிலையான நிகழ்ச்சியாகவே ஆகிவிட்டது. அதைப் போலவே எங்குக் குடிசைகள் தீப்பற்றி எரிந்தாலும் அங்கே உடனே உணவு உள்ளிட்ட உதவிகளைச் செய்ய புரட்சித்தலைவர் தவறியதே இல்லை.
அந்நாளில் மலிந்திருந்த ரிக்‌ஷாத் தொழிலாளர்களுக்கு மழைக் கோட்டு வழங்கியவர் வள்ளல் எம்.ஜி.ஆர். என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதன் பின்னணி சுவையானது என்று அருளாளர் விளக்கியதை எழுத்துச் செம்மல் இராணி மைந்தன் வரைந்து காட்டியதை அப்படியே எடுத்தாள்கிறேன்.
ஒருநாள் புரட்சித்தலைவர் காரில் போய்க் கொண்டிருந்தார். மழைக் காலம் அது. வழியில் ஒரு நெகிழ்ச்சியான காட்சியைக் கண்டார். ரிக்‌ஷாவில் அமர்ந்து செல்பவர் மழையில் நனையாமல் இருக்கையின் மேலிருந்த படுதாவுக்குள் பத்திரமாக இருக்க, ரிக்‌ஷாவை ஓட்டிச் செல்லும் தொழிலாளி சொட்டச் சொட்ட நனைந்து சென்ற காட்சி புரட்சித்தலைவரைத் துணுக்குற வைத்தது.
வீட்டுக்குள் சென்றதும் தன் தமையனார் எம்.ஜி.சக்கரபாணியிடம் தான் கண்ட காட்சியை உருக்கமாக விவரித்தார்.
‘‘ரிக்‌ஷாக்காரன் மழையில் நனையாமல் எப்படி வண்டி ஓட்ட முடியும்?'' என்று இயல்பாகக் கேட்டார் சக்கரபாணி.
‘‘ஏன்... இதற்கு வேறு வழியே இல்லையா?'' என்று துடிப்போடு எம்.ஜி.ஆர். கேட்க, நகைச்சுவையோடு பேசுவதில் வல்லவரான அவருடைய அண்ணன், ‘‘ரிக்‌ஷாக்காரன் மழைக்கோட்டு போட்டுக் கொண்டா ஓட்டுவான்'' என்று பேச்சுவாக்கில் சொல்ல, எம்.ஜி.ஆருக்குப் பொறி தட்டியது.
மழையில் நனையாமல் ரிக்‌ஷா ஓட்ட ரிக்‌ஷாத் தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வழங்குவது என்ற எண்ணம் அந்த வினாடியே அவர் மனத்தில் உருவாகிவிட்டது.
உடனே, அருந்துணைவரான ஆர்.எம்.வீயை அழைத்துத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். ஆர்.எம்.வீக்கோ, சட்டென்று ஏதும் புரியவில்லை. ‘‘மழைக்கோட்டு தயாரிக்க எவ்வளவு செலவாகும் என்று விசாரியுங்கள். புதுமையாக ஏதும் செய்ய முடியுமா என்றும் யோசியுங்கள்'' என்றார் புரட்சித்தலைவர்.
புரட்சித்தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்துப் பழகிவிட்ட ஆர்.எம்.வீ. உடனே செயலில் இறங்கினார். சிக்கனமாக இதைச் செய்ய முடியுமா என்று விசாரித்தார். கருத்து வேகமும், கணக்கிடும் திறமையும் கொண்ட ஆற்றலாளர் ஆர்.எம்.வீ.
பிளாஸ்டிக் என்ற பொருள் அறிமுகமாகியிருந்த நேரம் அது. தேவி தியேட்டர் அதிபர் இராஜகோபால் செட்டியாரின் சகோதரர்கள் அப்போது பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கியிருந்தார்கள். அவர்களிடம் ஆர்.எம்.வீ. உடனே விசாரித்தார். அந்நாளில், பத்து ரூபாய்க்குள் ஒரு பிளாஸ்டிக் மழைக்கோட்டை தயாரிக்க முடியும் என்று தெரிய வந்தது. புரட்சித்தலைவரிடம் சொன்னார். கிட்டத்தட்ட ஆறாயிரம் மழைக்கோட்டுகள் தயாராயின. நுங்கம்பாக்கம் ஏரிப் பகுதியில் இப்போது வள்ளுவர் கோட்டம் அமைந்த இடத்தில் மிகப்பெரிய பந்தலிட்டு ரிக்‌ஷாத் தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வழங்கி மகிழ்ந்தார். இப்படியெல்லாம் நெஞ்சின் ஈரத்தை ஊற்றாகக் கொண்டிருந்தார் புரட்சித்தலைவர். பின்னாளில், அவர் முதலமைச்சராக மாறி அரசாண்ட பெருமிதம் அனைவரும் அறிந்தது.
முதலமைச்சராக இருந்த, புரட்சித்தலைவர் நலிந்த நிலையில் இருந்தபடியே, வழங்கிய விடுதலை விழாச் செய்தி, குறிப்பிடத்தக்கது.


1987ஆம் ஆண்டு விடுதலைத் திருநாளையொட்டி நியூயார்க் நகரிலிருந்து அவர் வெளியிட்ட விடுதலை விழாச் செய்தியின் ஒரு பகுதி...
‘‘நான் வணங்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே! என்னை வழிநடத்திச் செல்லும் பெரியோர்களே! என் இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புக்களே! இந்தியச் சுதந்திரத் திருநாளையொட்டி உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலை பெற்ற இந்தியா இன்று தனது நாற்பதாண்டு நிறைவை விழாவாகக் கொண்டாடுகிறது. இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்கள் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அர்ப்பணித்த இலட்சக்கணக்கான தியாகிகளுக்கு இந்நாளில் நமது அஞ்சலியைக் காணிக்கை ஆக்குவது நமது நீங்காக் கடமை ஆகும்.
சுதந்திர இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய சக்தியாக எழுந்து வருகிறது. சமாதான சகவாழ்வு என்கிற மிகப்பெரிய குறிக்கோளுக்கு நமது நாடு குரல் கொடுத்து வருகிறது. கடந்த நாற்பதாண்டுகளில் விவசாயம், தொழில் வளர்ச்சி, கல்வி, பாசனம், மின்உற்பத்தி, போக்குவரத்து போன்ற எல்லாத் துறைகளிலும் பெருத்த முன்னேற்றம் கண்டுள்ளோம். என்றாலும் வறுமை, அறியாமை, சமூகக் கொடுமைகள், வேலையின்மை போன்ற தீமைகளுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்.
மைய, மாநில அரசுகள் நிறைவேற்றும் வளர்ச்சித் திட்டங்கள் சரிவரச் செயல்படச் செய்வதும், அவற்றின் பயன் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வது நமது ஆக்கப்பூர்வமான கடமைகள் ஆகும்.
ஒற்றுமையும், முயற்சியும், உழைப்பும் இல்லாமல் முன்னேற்றம் இல்லை என்பதை முன்னேறிய நாடுகளின் வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
இந்நிலையில், நமது ஒன்றுபட்ட சக்தியின் வலிமையைக் குலைக்கும் வகையில் மதவெறியும், சாதிவெறியும், வன்முறைவெறியும் ஆங்காங்கே தலைதூக்கி வருகின்றன. இந்தத் தீய சக்திகளை அடியோடு ஒழிக்க நாம் தொடர்ந்து போராட வேண்டும். இந்தப் போராட்டத்தின் வெற்றியில்தான் நாட்டின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்த ஆண்டு விடுதலை விழாவை ஓரளவு நிம்மதியுடன் கொண்டாடும் நிலை உருவாகியுள்ளது எனலாம்.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக மக்கள் உள்ளத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இது நமக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருகிறது.
இந்நிலை காண, அண்ணாவின் பெயரால் அமைந்த தமிழக அரசு சிறிதும் தொய்வின்றி கடந்த சில ஆண்டுகளாகப் பெரு முயற்சி செய்து வந்ததைத் தமிழகம் அறியும்.
நமது உள்ளத் தவிப்பை உணர்ந்த இந்தியப் பிரதமர் அன்னையார் அவர்கள், தீவிர முயற்சி எடுத்து அயராது பேச்சுவார்த்தை நடத்தி ஓர் உடன்பாடு கண்டுள்ளார். மாபெரும் தேசமான இந்தியாவின் தலைவராகவும், நடுநிலை நாடுகளின் நாயகராகவும், உலக சமாதானக் காவலராகவும் நின்று, பெரும் பொறுப்பை ஏற்று இந்திய-இலங்கை உடன்பாடு கண்டதன் வாயிலாக நமது பிரதமர் அவர்கள் மிகப்பெரிய சரித்திரச் சாதனை நிகழ வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. இந்த உடன்பாட்டின் காரணமாக இந்துமாக்கடல் பகுதியில் அமைதிக்கு உத்தரவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் விளைவாகத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு இலங்கைத் தமிழ்ப்பகுதிகளில் அமைதி ஏற்படுவதையும், அங்குள்ள மக்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி வருவதையும் கண்டு தமிழக மக்கள் பெரிதும் நிம்மதி அடைய வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களைச் சமஉரிமை படைத்தவர்களாக நடத்துவதுதான் இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு உத்தரவாதமாக இருக்கும் என்பதை அங்குள்ள பெரும்பான்மையினர் உணரவேண்டும். மாபெரும் தேசமான இந்தியாவின் நல்லெண்ண முயற்சிக்கு வலிவு சேர்ப்பதே இலங்கையில் வாழ்கின்ற சிங்களர்-தமிழர் ஆகிய அனைவரின் கடமை என்பதையும் இந்நேரத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்த உணர்வுகளோடு தமிழக மக்கள் கூடுதல் உற்சாகத்துடன் நாட்டுக்கான கடமைகளை ஆற்றிட முன்வர வேண்டும். வளர்ச்சித் திட்டங்களையும், சமூக நலத் திட்டங்களையும் வெற்றியுடன் நிறைவேற்றி சீரான வளர்ச்சிக்கு வழிகாட்டும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. சாதி மதப் பூசல்கள், வன்முறைகள், தலைகாட்டாத வகையில் அமைதிப் பூங்காவாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
தேசிய ஒருமைப்பாட்டு முயற்சிகளுக்கு வலிவு சேர்க்கிற பணிகளில் தமிழ்நாடு ஆர்வமுடன் ஒத்துழைப்பு நல்கி வருகிறது. இதே நிலையைத் தொடர்ந்து கட்டிக் காத்திட உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் நாடுகிறேன்.
வன்முறை, வெறித்தனம், வதந்தி பரப்புதல், மக்களைப் பிளவுபடுத்தல் இவற்றையே நோக்கமாகக் கொண்டுள்ள சீர்குலைவுச் சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்போம் என்று இன்று நாம் அனைவரும் சபதம் ஏற்றிடுவோம்!
கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும், ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்.
நாடு இன்றிருக்கும் சிக்கலான சூழ்நிலையில் சிறுபான்மை மக்களின் நலனைக் காத்தும், ஏழை, எளிய மக்களின் உள்ளக் கிடக்கைகளுக்கு உருவம் கொடுத்தும், பயங்கரவாதத்தை எதிர்த்தும், அந்நியச் சக்திகளின் தீய எண்ணங்களை முறியடித்தும், தனது அயராத உழைப்பாலும், சிறந்த இராஜதந்திரத்தாலும் இந்திய நாட்டைக் கட்டிக்காத்துவரும் நமது பிரதமர் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவிப்போம்.
இத்திருநாளில் தேசிய ஒற்றுமை ஓங்கவும், அனைத்து முயற்சிகளுக்கும் நாம் துணையாக நின்று நாட்டையும் மக்களையும் உயர்த்துவோம்.
‘உழைப்பவரே உயர்ந்தவர், உழைப்பே உயர்வு தரும்’ எனும் மூலமந்திரத்தை மனத்தில் இருத்தி, ‘உழைப்பால் நாட்டை உயர்த்திட வாரீர்’ என அனைவரையும் அன்புக் கரங் கூப்பி விடுதலைத் திருநாள் வாழ்த்து கூறி மகிழ்கிறேன்.
வாழ்க சுதந்திரம்! வாழ்க தமிழ்நாடு! வெல்க இந்தியா!
அண்ணா நாமம் வாழ்க!''


தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

தேமொழி

unread,
Jul 7, 2020, 12:52:51 AM7/7/20
to மின்தமிழ்
source - https://www.facebook.com/permalink.php?story_fbid=4659728770707673&id=283386165008644&__tn__=K-R

தின செய்தி நாளிதழில் இன்று (06.07.2020) வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 42)

‘‘தாய்க்குலம் செய்த தனித்தவம்..!’’


ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்

===============================


ஆயிரம் பணிகள் இருந்தாலும், சில நேரங்களில், தம் சிந்தனையை சிறு குறிப்பில் பறிகொடுத்துவிடுகிற பழக்கம் புரட்சித்தலைவருக்கு உண்டு. ஒரு முறை நடந்ததை நினைவுகூர்கிறேன். முதலமைச்சரின் செயலாளராக மூத்த ஆட்சிப்பணி அலுவலரான இலட்சுமி நாராயணன் பணியாற்றிய காலமது. எதிலும் படாமல் அகலாது, அணுகாது சிறந்த பணியாற்றியவர். ஆமாம், மகன் என்றால், மகளையும் குறிக்கும். அதுதான் சட்டம் என்கிறார் செயலாளர். அதென்ன திருக்குறள்?
‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாய்' என்பதில் ‘‘ஏன் மகள் என்று சொல்லக்கூடாது?'' என்று கேட்டார். நான் மருண்டு போய் நின்றேன். ‘‘ஈன்ற பொழுதில் மகள் என்று தாயிடம் சொன்னால் அம்மம்மா நான் பட்ட இந்த வேதனையை என் மகளும் பெறக்கூடாது என்ற தாயின் கனிவு ததும்ப மகன் என்றிருந்ததால், மகளுக்கு அந்த பாடில்லை என்று நினைத்தாளாம். அதனால்தான், மகள் என்று சொல்லவில்லை என்று கூறுவார்கள்'' என்று சொன்னேன். ‘‘தாயின் பரிவு அப்படித்தான். நன்றாகச் சொன்னீர்கள்'' என்று பரிவோடு அழைத்து, என் முதுகில் தட்டினார். ‘தாயின் மனம், அப்போதுகூட எவ்வளவு கனிவான மனம்' என்று கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்துக் கொண்டார். ‘‘என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய தாய்மார்களே...'', என்று கூட்டத்தில் அழைக்கும் வழக்கம் அரசியல் தலைவர்களிடம் புரட்சித் தலைவர்தான் முதன் முதலில் தொடங்கினார்.
தாய்மார்கள் எந்த முறையீடுகளைச் சொன்னாலும், அவர் மனம் நெகிழ்ந்துபோய் உடனே செய்து முடிப்பார். தாய்க்குலம் என்ற சொல்லே அவரால்தான் அடிக்கடி கூறப்பட்டது.
தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றிப் பயணம் செய்வதற்கு உதவும் வண்ணம், மகளிர் மட்டும் என்னும் சிறப்புப் பேருந்துகள் கூட ஒரு தாயின் முறையீட்டால் பிறந்தது.
சென்னையில் சாலிக்கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்திற்கு அவர் இட்ட பெயர் அவரது தாயாரின் பெயர்தான். அடையாறில் இருந்த அவரது திரைக் கூடத்தின் பெயரும் சத்யா நிறுவனம்.
தாயை மையப்படுத்திய பாடல் காட்சிகளைக் கொண்டுதான் படிப்பிடிப்பைத் தொடங்கினார். தமிழில் தொடங்கிய வார இதழுக்கு அவர் இட்ட பெயர் ‘தாய்'. இப்படி அன்னைமார் நிகழ்ச்சியில், நெஞ்சம் உருகிய நிகழ்ச்சியாக இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.
மயிலாடுதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. மக்கள் வெள்ளம் அலைமோதியது. எல்லையில்லாத மக்கள் கூட்டத்தில் இடிபாட்டுக்கிடையில் மேடை அருகே தாய்மார் இருவர் காத்திருந்தனர். அவர்கள் இரட்டையர்கள். ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்கள். இதில் கொடுமை என்னவென்றால், இருவரும் ஒரே மாதிரி குறை உடைய மாற்றுத் திறனாளிகள்.
இருவருக்கும் கால் ஊனம். கைகளை ஊன்றி தவழ்ந்தபடியே, மேடை அருகே வந்துவிட்டனர். மக்களின் வாழ்த்துகளை ஏற்றவாறு, கையசைத்தபடியே மேடைக்கு புரட்சித்தலைவர் வந்தார். தள்ளுமுள்ளு தாங்காமல் மக்கள் முண்டி வந்தனர். அந்தப் பெரும் நெரிசலில் இருவரும் சிக்கிக் கொண்டனர். இதை எப்படியோ எம்.ஜி.ஆர் கவனித்துவிட்டார். உதவியாளர்களிடம் சொல்லி அவர்களை எப்படியாவது அழைத்து உடனே மேடைக்கு கீழே அமர வைத்தார். அவர்களுக்கு உணவும், குழந்தைகளுக்கு பாலும் தரச் சொன்னார். அந்தத் தாய்மார்கள் இருவரும் புரட்சித்தலைவரிடம், ‘‘எங்கள் கஷ்டத்தை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்'' என்று கண்ணீர் மல்க சொன்னார்கள்.
கூட்டத்தில் பேசி முடித்ததும் அவர்களைக் காண்பதற்காக மேடையில் இருந்து இறங்கினார். அந்தத் தாய்மார்கள், ‘‘வறுமையால் துன்பப்படுகிறோம், எங்களுக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தால் நாங்கள் தையல் தொழில் செய்து பிழைத்துக்கொள்வோம். அதற்கு உதவி பண்ணுங்க'' என்று கெஞ்சும் குரலில் கேட்டனர். உடனே, இரண்டு தையல் மெஷின்களை புரட்சித்தலைவர் வாங்கி வரச் சொன்னார்.
தன்னிடம் உதவி வேண்டுபவர்கள் தெளிவாகச் சொல்லாவிட்டாலும் அவர்களது தேவை என்ன என்பதை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு உதவும் பொன்மனம் படைத்தவர் புரட்சித்தலைவர். உடனே, தையல் மெஷின்களை வாங்கி வருமாறு சொன்ன மறுகணம் ஓடோடிச் சென்ற உதவியாளர்களை திரும்ப அழைத்து, ‘‘காலில் மிதித்து தைக்கும் மெஷின் இல்லை. கையில் இயக்கி தைக்கும் மெஷின்'' என்று தெளிவாகச் சொல்லி அனுப்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு புது தையல் மெஷின்கள் காரில் வந்து இறங்கின. பிறகு, தையல் மெஷின்களை அவர்களுக்கு எம்.ஜி.ஆர். வழங்கினார்.
அதைப் பெற்றுக் கொண்ட இருவரும் கண்ணீருடன், ‘‘ஐயா, நீங்க கண்கண்ட தெயவம்'' என்றனர். அவர்களோடு தம் கண்ணீரையும் துடைத்துக் கொண்டு, ‘‘நான் சாதாரண மனுஷன்தாம்மா, தெய்வம் இல்லை. இந்த நிலைமையிலும் உழைத்துப் பிழைக்கணும்னு நினைக்கிற நீங்க நல்லா இருக்கணும்!'' என்று சொல்லி வாழ்த்திவிட்டு, அவர்களுக்கு ஒவ்வொருவர் கையிலும் ரூ.2,000 அன்பளிப்பாகக் கொடுத்தார்.
எத்தனையோ நிகழ்ச்சிகள் இவ்வாறு நடந்தன. தாய்மாரிடம் காட்டிய பரிவுக்கு வேறொரு நிகழ்ச்சியையும் நண்பர்கள் கூறினர். புரட்சித்தலைவரின் நெருங்கிய நண்பரும் படத் தயாரிப்பாளருமான சாண்டோ சின்னப்பா தேவரின் இல்லத் திருமணம் கோவையில் நடைபெற்றது. அதில் புரட்சித்தலைவர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசளித்துவிட்டு வந்தார்.
இது நடந்துக்கொண்டிருக்கும்போதே திடீரென தனது உதவியாளர்களைப் பார்த்தார். கூட்டத்தில் குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி விட உதவியாளர்களை மீண்டும் பார்த்தார். புரட்சித்தலைவர் பார்வையின் பொருள் அவர்களுக்குப் புரியும். அமைதியாகக் கூட்டத்தில் மக்களோடு கலந்த உதவியாளர்கள், குறிப்பிட்ட அந்த இடத்திற்குச் சென்றனர். அங்கிருந்த ஓர் இளைஞரைப் பிடித்தனர். அங்கேயே அந்த இளைஞரை நிறுத்தி வைக்குமாறு எம்.ஜி.ஆர். குறிப்புச் செய்தார்.
அந்த இளைஞரை உதவியாளர்கள் பின்னர் அழைத்து வந்தனர். ‘‘பெண்கள் நிரம்பிய கூட்டத்தில் நீ எப்படி நடந்து கொள்கிறாய்? உன்னுடைய தாய், தமக்கை அல்லவா அவர்கள்?'' என்று கேட்டவாறே இளைஞரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார் புரட்சித்தலைவர். பொறி கலங்கிப்போய் நின்ற இளைஞரிடம், ‘‘இனிமேல் இப்படி நடக்கக் கூடாது'' என்று ஆத்திரம் பொங்கக் கடிந்து கொண்டார். ‘‘சத்தியமா இனி இப்படி நடந்துக்கொள்ள மாட்டேன் தலைவரே. என்னை மன்னித்து விடுங்கள்.'' என்று காலில் விழுந்து கெஞ்சிய இளைஞரிடம், ‘‘இனிமேல் என் கூட்டம் எங்கு நடந்தாலும் உன்னை நான் பார்ப்பேன். கூட்டத்தை நீயே ஒழுங்கு செய்யும் வேலையைச் செய்ய வேண்டும்'' என்று கூறியனுப்பினார். இப்படி தாய்க்குலத்திற்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்ற மனம் கொண்டவர் புரட்சித்தலைவர்.
எங்குச் சென்றாலும் தாய்மார்கள்தான் தன்னை வாழ்வித்தவர்கள் என்ற அடிப்படையில், தாயையும், உடன் பிறப்பையும், தலைவர் அண்ணாவையும் மூன்று தொடர்கள் அமைந்த கண்ணியாக பேச்சைத் தொடங்குவார்.
மகளிர் மாட்சியை மதித்த மனத்தோடு அவர் ஆற்றிய பாரதியார் நூற்றாண்டு தொடக்க விழாச் சொற்பொழிவின் சில பகுதிகளைக் காணலாம்...
‘‘நேற்றைய நிகழ்ச்சியையும் இன்றைய நிகழ்ச்சியையும் எடை போட்டுப் பார்க்க வேண்டும். நேற்றுப் பேசிய பெண்களின் பேச்சு போராட்டத்திற்குத் தயாராக இருந்தது. இன்று இங்கே பேசிய ஆண்களின் பேச்சு, சமாதானத்துக்கு வழிவகுப்பதாக இருந்தது.
நேற்று எழுச்சியுடன் நடை பெற்ற மகளிர் பேரணியை ஊர்வலம் என்று சொல்வதா? பேரணி எனச் சொல்வதா? போராடச்செல்லும் வீராங்கனைகளின் அணிவகுப்பு என்று சொல்வதா? என்று எண்ணிப்பார்க்கும் போது எந்தப் பெயர் சொல்லி அழைத்தால் பொருத்தமாக இருக்குமோ அந்தப் பெருமைக்கு வழிவகுத்த அந்த வீராங்கனைகளுக்கு நான் தலை வணக்கம் செலுத்துகிறேன்.
அவர்களை ஊர்வலத்தில் கலந்துகொள்ள அனுமதித்த அவர்களது குடும்பத்து ஆண்களுக்கு நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எவ்வளவு பெரிய நம்பிக்கையில் பெண்களை அவர்கள் அனுப்பியுள்ளார்கள் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால் அவர்களது தகுதியை உணர முடியும்.
என் வாழ்நாளில் இதுபோன்ற ஊர்வலத்தை இதுவரை நான் கண்டதில்லை. அதிகப் பொதுமக்களும் அரசில் வேலை செய்யும் அதிகாரிகளும் தங்களை ஊர்வலத்தில் இணைத்துக்கொண்டு சில கிலோமீட்டர் தூரம் நடந்து வரும் நிகழ்ச்சியை இதுவரை நான் கண்டதே இல்லை. நேற்று, வங்கியில் பணிபுரிவோர், தனிப்பட்ட மகளிர் அனைவரும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று சட்டம் எதுவும் போடவில்லை. அவர்கள் தாங்களாகவே வந்து கலந்து கொண்டது, எதிர் காலத்தைப் பற்றி நம்பிக்கை தரும் வகையில் அமைந்திருக்கிறது.
நேற்று செல்வி ஜெயலலிதா அவர்கள் இங்கே ஒரு பயங்கரமான கருத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றார். அது பத்திரிகைகளில் எல்லாம் வந்திருக்கிறது. ‘‘வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்துபவர்களை தூக்கில் போட வேண்டும்'' என்று சொன்னார். அதையும் உடனே போடவேண்டுமாம், காலதாமதம் கூடாதாம். கருணை மனு போடுவதற்குக் கூட நேரம் தரக்கூடாதா? என்ன கோபம்? என்ன ஆத்திரம்? நேற்று இதுபற்றிச் சிந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது.
திருமணம் செய்து கொள்ள வரும் ஆண்கள், தட்சணை கேட்பது என்றால் அது நியாயமில்லை. நான் சொல்வதெல்லாம் பெண்கள் ஆண்களிடம் தட்சணை கேட்க வேண்டும் என்பதுதான்.

‘‘நான் படித்தவள்; பணியாற்றுகிறேன்! எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்?'' என்று பெண்கள் கேட்க வேண்டும். ஸ்ரீதனம் என்கிறார்கள். ஸ்திரீ தனமா, ஸ்திரீ தானமா, எது எப்படி ஆயிற்று என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பெண்களைத் தானமாகக் கொடுத்து, சொத்துகளையும் கொண்டு செல்கிறார்கள். அப்படிக் கொண்டு செல்பவர்கள் பெண்களை வாழ வைக்க வேண்டாமா? அரைப் பவுன் நகை குறைந்து விட்டது என்பதற்காக ஒரு பெண் தற்கொலை செய்து கொள்ளும் நிலை வந்துவிட்டால், அதை அனுமதிக்கலாமா?'' என்று தாய்க்குலத்துக்கான குரலாக ஒலித்தார் புரட்சித்தலைவர்.


தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

தேமொழி

unread,
Jul 15, 2020, 10:16:34 PM7/15/20
to மின்தமிழ்


தினசெய்தி நாளிதழில் இன்று (13.07.2020) வெளியான கட்டுரை


மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்

(பகுதி -43)


ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்

===============================


சிந்தனைக் கிளைகளில்தான் சீர்திருத்தக் கனிகள் கிடைக்கும் கிரேக்க மாமேதை அரிஸ்டாடில்தான் அறிவுத்துறைகள் அனைத்திலும் ஆழமாகத் தோய்ந்து ஆராய்ச்சிகள் நடத்தியவர். அவருடைய நூல்களே ஐரோப்பிய அறிவு வளர்ச்சியின் அடி நிலைகளாகும். அதனாலேயே ஐரோப்பியர்கள் அவரையே தம் இனத்திற்கு கிட்டிய பேரறிவுப் பிழம்பாகப் போற்றுகிறார்கள். மனிதனுடைய சிறப்பியல்பு எதுவாக இருக்கும் என்பது பற்றி நல்லறிஞர் அரிஸ்டாடில்தான் முதலில் ஆராய்ந்தார். ‘‘மனிதன் சிந்தனை செய்யும் திறத்தால் சிறப்படைகிறான்'' என்று முடிவுரைத்தார்.

நாம் நாள்தோறும் எளிதாகச் சொல்லும் ‘மனிதன்' என்னும் சிறு சொல்லும் ஆழ்ந்த பொருளைக் காட்டுகிறது. மனிதன் என்பதன் வேர்ச்சொல்லான ‘மன்' என்பதன் பொருள் சிந்தித்தல் என்பதாகும். ஆகவே, சிந்திப்பவனே மனிதன் என்று கருத வேண்டும்.

ஆனால், விழித்திருக்கும் நேரம் முழுவதும் இது நடைபெறுவதில்லை. இடையிடையே நாம் ஏதேனும் ஒரு பொருளை அறிய விரும்புவதும் ஏதேனும் ஒரு செயலைப் பற்றி முடிவு செய்ய வேண்டியதும் நேர்கிறது. அப்பொழுது நாம் அவற்றில் நம்முடைய மனத்தை அதிக நேரத்தை நிலைத்து நிற்கும்படிச் செய்கிறோம். ஆனால், நாம் சிந்திக்கும் முறையில் நம்முடைய மனம் அவற்றில் அதிக நேரம் ஆழ்ந்துவிட வேண்டிய தேவையில்லை. நாம் அறிய வேண்டிய பொருளைப் பற்றியோ முடிவு செய்ய வேண்டிய செயலைப் பற்றியோ நுழைந்து ஆராயப் புகுந்தால் மட்டுமே நம்முடைய மனம் நெடு நேரம் அவற்றில் நிற்க வேண்டிய நிலை உண்டாகும். ஆனால், நாமோ காத்திருக்காமல் பலவற்றை விரைந்து முடிவு செய்து விடுகிறோம்.

நாம் நன்றாக அறிந்த ஒரு நிகழ்வை நினைவில் கொள்ளலாம். இங்கிலாந்து நாட்டில் நியூட்டன் உலக அறிவியல் பேரறிஞராகத் திகழ்ந்தார். அவர் ஒருநாள் தோட்டத்தில் அமர்ந்தபடி இயற்கை எழிலைக் கண்டு களித்திருந்தார். அப்பொழுது செழித்த ஒரு மரத்திலிருந்து ஓர் ஆப்பிள் பழம் கீழே விழுந்தது. அதைக் கண்டதும் அவர், ‘‘இப்படிப் பழம் கீழே வந்து விழக் காரணம் என்ன?'' என்று சிந்திக்கலானார். பொதுவாக நாம், அதைப்பற்றி நினைப்பதற்கு ஒன்றுமில்லை. சிந்திக்க வேண்டிய தேவையும் அதில் என்ன இருக்கிறது; பழம் விழுவதற்குக் காரணம் பழுத்ததுதான் ; பழம் பழுத்துவிட்டால் தானே கீழே விழாமல் என்ன செய்யும்? என்று எண்ணி விட்டுவிடுவோம். அல்லது யாரேனும் சிந்திக்க வேண்டுமென்று சொன்னால் இதைச் சொல்லிக் காட்டி, அவர்களை எள்ளி நகையாடுவோம். ஆனால், நியூட்டனோ அதைப் பற்றி ஆழ்ந்து தொடர்ந்து சிந்தித்தார். பழம் பழுத்துவிட்டதனால் மரத்தில் தங்கியிருக்க முடியாது. அதை விட்டுப் பிரிந்துவிட வேண்டியதுதான். ஆனால், அதற்காக அது கீழே நிலத்தில் விழுவானேன்? மரத்தை விட்டுப் பிரிந்த இடத்திலேயே தங்கி நின்றால் என்ன? அப்படி நிற்காவிட்டாலும் அது மேலே போகலாம் அல்லவா? இறங்கிக் கீழேதான் வர வேண்டுமென்ற கட்டாயம் என்ன? என்ற எண்ணங்கள் அவர் மனத்தில் படர்ந்தன. இப்படி ஆராய்ந்து பழத்தைக் கீழே விழும்படிச் செய்ய வேண்டுமானாற் நிலத்திடம் ஒரு கவர்ச்சிச் சக்தி ஈர்ப்பாற்றல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இந்த முடிவே இயற்பியல் வளர்ச்சி அனைத்திற்கும் அடிப்படையான உண்மையாகும். இவ்விதம் நியூட்டன் சிந்தனையைச் செலுத்தியதால் புவி ஈர்ப்பாற்றலை உலகு கண்டு வியந்தது. அதன் பயனாக விளைந்துள்ள நாகரிக வளர்ச்சிக்கு எல்லையில்லை.

மனம் ஆயிரம் எண்ணும். “கருதுப கோடியும் அல்ல பல” என்பது திருக்குறள். ஒரு முடிவை ஓராயிரம் முறை திரும்பத் திரும்ப எண்ணினால்தான் நினைவு என்ற இழை வன்மை பெறும். எண்ணியர் திண்ணியராக முடியும். ‘சிந்தனைக் கிளைகளில்தான் சீர்திருத்தக் கனிகள் குலுங்கும்' என்ற தொடரை நாவலர் மேடையில் சொல்லாத நாளில்லை. இப்படி சிந்தனையாற்றலில் கனிந்தவர்களையே அறிஞர், கலைஞர், கவிஞர், எழுத்துத் திலகம் என்று கூறலாம்.

‘நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்' என்று மணிவாசகர் தற்சிந்தனை செய்ததுபோல, தமிழ் எழுத்தாளர்கள் நாம் யார்? நம் பரம்பரை எத்தகையது? நம்மொழி எத்திறத்தது? நம் வாசகர்கள் எவ்வண்ணர்? நம் எழுத்து நோக்கங்கள் யாவை? அவற்றின் எதிர்கால விளைவுகள் என்ன இவற்றையெல்லாம் நாம் தற்சிந்தனை செய்ய வேண்டும்.

நம் எழுத்து முன்னோர்கள் யார் என்று சுழி வேகமாக எண்ணினாலும், தொல்காப்பியர் சங்க சான்றோர் திருவள்ளுவர், இளங்கோ, திருத்தக்கதேவர், சேக்கிழார், கம்பர், வீரமாமுனிவர், உமறுப்புலவர், இளம்பூரணர், சிவஞானமுனிவர், பவணந்தியார், காரைக்காலம்மையார், ஆண்டாள், வள்ளலார், வேதநாயகம், உ.வே.சா. மறைமலையடிகள், திரு.வி.க., பண்டாரத்தார், மு.வ., ஔவை துரைசாமி, பாவாணர், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், வ.வே.சு., புதுமைப்பித்தன், கல்கி, மௌனி, சோமலெ என ஆயிரக்கணக்கான முன்னோடிகள் பலர் தமிழ் வானத்தில் ஒளிர்ந்தனர். இப்பெருமைப் பரம்பரையில் நாம் தமிழ்ப் பிறப்பு எடுத்திருப்தற்குப் பெருமிதம் எய்துகின்றோம். அதுவும் எழுத்தாளராகப் பிறந்து சிந்தனை செய்து தமிழ்ப்பணி செய்வதற்கு மகிழ்கின்றோம். நம் முன்னோரை நாம் மதிப்பது போல, நம்பின்னோர் நம்மை நல்ல முன்னோர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்ற அவலக் கவலையும் நமக்கு இல்லாமல் இல்லை என்று மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் எழுத்தாளர் மாநாட்டில் எடுத்துரைத்தார்.

‘மாவண் தமிழ்த்திறம்' என்பது மணிமேகலையில் சாத்தனார் மொழிந்தபடி, தமிழுக்குப் பல துறைகளிலும் சொல்லும் திறமுண்டு; எழுத்தாளர்களாகிய நமக்குத் தமிழாக எழுதும் ஆற்றலும் உண்டு. தவறான மொழிக் கொள்கைப் போக்கால் நம் படைப்புகள் வலுவிழக்கின்றன என்று வ.வே.சு.ஐயர் குறித்ததைக் காணலாம்.

‘கடைசிக் கதையாவது எங்கள் ஊர் குளத்தங்கரை அரச மரத்தால் சொல்லப்பட்டது. அது நன்னூல் முதலிய இலக்கணங்கள் படித்ததில்லை. கிட்டத்தட்ட அது பேசியபடியே எழுதியிருக்கின்றேன். படிப்போர் அக்கதையில் செந்தமிழை எதிர்பார்க்க மாட்டார்கள் என நம்புகின்றேன். இருப்பினும் முற்றிலும் அது பேசியபடியே எழுதினால் இன்று, போதும் என்பன போன்ற வார்த்தைகளை இன்னு, போரும் என்று எழுத வேண்டி வரும். படிப்போர் பொருள் கண்டுபிடிப்பது கடினமாகப் போய் விடும் என நினைத்து அவை போன்ற மொழிகளை இலக்கணப்படுத்தியே எழுதியிருக்கின்றேன்.'

ஒரு நூற்றாண்டுக்கு முன் தமிழ் மொழிச் செம்மை குறித்து வரைந்த கோட்பாடு இன்றைய எழுத்தாளர்கட்கு வேண்டிய அறிவுரையாகும். ‘நிலை பெறுமாறு எண்ணுதியேல்' என்று திருநாவுக்கரசர் கேட்டபடி நம் புதுமைப் படைப்புக்கள் எதிர்கால மன்பதைக்குச் சென்று இயக்க வேண்டுமானால் தமிழ் எழுத்தாளர்கள் பெயருக்குத் தகுந்த தனித் தமிழ் எழுத்தாளர்களாக சிந்தனை வளம் மிக்கவர்களாக ஒளிபெறல் வேண்டும். இதுவே நிலைபேறும் வழிப்பேறும் ஆகும். இதுவே நம் வேண்டுகோள் என்பது மூதறிஞரின் முன்மொழியாகும்.

புலவர், கவிஞர், கலைஞர், பேராசிரியர் என்றால் புரட்சித் தலைவர் அவர்களைக் கண்டு பேச பெரிதும் விரும்புவார். அவர்கள் பேச்சைக் காது கொடுத்துக் கேட்டதோடு குறுக்கே எதனையும் சொல்ல மாட்டார். திரைக்கதை, பாடல், காட்சி மாற்றம் முதலியவற்றைப் பற்றி பலமுறை எண்ணிப் பார்த்து காட்சிகளை எடுத்த பின்னாலும்கூட செலவைப் பற்றி கவலைப்படாமல் பொருத்தமாக மாற்றுவாராம். அலைமோதும் எண்ணங்களில் அமிழாமல் தனக்கு வேண்டிய கருத்தை சிந்தித்து முடிவு காண்பார். கதைகளாலும், காட்சிகளாலும் மக்கள் திருந்த வேண்டும் என்பது அவரின் நோக்கமாகும். பாடல்களையும் அப்படியே திருத்துவார். அப்படி ஒரு கதையைத் திருத்தியபோதுதான் தமிழறிஞர், எழுத்தாளர் முதலிய கலைஞரின் மக்கட் செல்வங்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இரண்டு இடங்களை ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டாராம்.

திருவனந்தபுரத்தில், இப்போதும் வாழ்ந்து வரும் கலைத்திலகம் நீல பத்மநாபன் அவர்கள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற பழம் பெரும் எழுத்தாளர் ஆவார். கேரளத் தமிழ் நடையில், தமிழ் நெடுங்கதைகளை எழுதி நிலைத்த புகழ் பெற்றவர் திருவனந்தபுரத்தில் நான் அவரைக் கண்டு பேசி இல்லத்தில் மதிய விருந்து அருந்தியதை இப்போதும் எண்ணிப் பார்த்து மகிழ்கிறேன்.

மின்னியல் பொறியாளராக பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற நீல பத்மநாபன் அவர்களை நேரில் காணாமலேயே நூலை வெளியிட்ட பெருமை புரட்சித்தலைவரைச் சாரும். அந்த உரைதான் தொடர்கிறது...


1977ஆம் ஆண்டு நடைபெற்ற நீல பத்மநாபன் எழுதிய ‘உறவுகள்' என்னும் தமிழ் நாவலுக்கு நினைவுப் பரிசு வழங்கி ஆற்றிய உரை...


‘‘சில நேரங்களில் ஒரு சிலருக்குக் கிடைப்பதற்கரிய வாய்ப்புக் கிடைப்பதுண்டு. அதைப்போன்ற ஒரு வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்திருக்கிறது.

சில நேரங்களில் நேரடியாக எழுத்துலகில் பங்கு பெற முடியாவிட்டாலும், சில பரிதாபத்துக்குரியவர்கள் தாங்கள் எழுதி, யாருடைய பெயரிலோ வெளியிடுகிறவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், அப்படிப்பட்ட நிலை இங்கே இல்லாமல், தகுதி உள்ளவர் எழுதி, அதை நல்லோர் மத்தியில் பாராட்டக்கேட்டுப் பரிசு பெறுகிற இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

விஞ்ஞான வளர்ச்சியில் எப்படி எல்லாம் மாற்றம் ஏற்படுமோ என்று கருதத்தக்க நிலையில் விளையும் உணர்வுகள் - விளைவுகள் - அத்தனையும் தமிழால், அதன் சுற்றுச் சார்புள்ளனவாக இருக்கும் என்பதைக் கவனிக்கும் அவசியத்தில் இந்த நாடு உங்களைப் பாராட்டியே தீரும்.

ஒரு கதாசிரியர், ஒரு கதாநாயகனை உருவாக்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். பிறகு ஒரு வில்லன் பாத்திரம் ஒன்றை உருவாக்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

கதாசிரியர் எதை நியாயம் என்று கருதுகிறரோ, அது நீதிக்கு மாறுபட்டது அல்ல என்று கருதுகிறரோ அதனை அந்தக் கதாநாயகன் பாத்திரத்தில் வைப்பார். அதற்கு எதிர்மாறான கருத்தை-குணாதிசயத்தை-எதிரியின் பாத்திரத்தில் வைப்பார். அப்படி அவர் சொல்கிறபோது இந்தச் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் அந்த எழுத்தில் கூறுகிறார் என்று அர்த்தமாகிறது.

நான் எழுத்தாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன், எழுதும்போது எங்களையும் மறந்து விடாதீர்கள் என்று. இப்படி நான் கூறுவது உங்கள் உள்ளத்தை ஈர்ப்பதற்காக அல்ல நான் அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் கிடையாது. மக்களின் வாழ்வைப்பற்றிக் கவலைப்படுகிறவன்!

இந்த மூன்று மாதக் காலத்தில் நான் பல பேர் கூறிய பிரச்சினைக்கு வாதம் செய்து அதைப் பெரிதுபடுத்தாமல் மக்களின் பிரச்சினைகளையே கவனித்து வருகிறேன். மக்களுக்கு நானும், எனது நண்பர்களும் சரியாகக் கடமையாற்றுகிறோமா என்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன்.

எப்படிக் கடமையாற்றினால் தமிழர்களின் வாழ்வு பின்னால் மேன்மையுறும் என்று ஆய்ந்து பணிபுரிகிறோம். நீங்கள் சுட்டிக்காட்டும் குறைபாடுகளை எங்களுக்கு வழிகாட்டுகிறவைகளாக ஏற்போம்.

இந்த நாட்டின் பண்பாட்டை, யாரும் தகர்க்க முடியாத அளவுக்கு உங்கள் எழுத்துகள் பயன்பட வேண்டும்.

ஒரு பக்கம் நீதிபதி-மறுபக்கம் வழக்கறிஞர்-இடையில் நான். இங்கே சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அனைவரும் கூடியிருக்கிறீர்கள்.

இந்த உறவுகள் தொடரட்டும்-வளரட்டும்.

இந்த உறவுகளின் சொந்தக்காரர் - சிறந்த நாவலாசிரியர் நீல பத்மநாபன் இன்னும் பல்லாண்டு எழுத்துச் சேவையாற்றிட என் அன்னையை இறைஞ்சுகின்றேன்.''

தேமொழி

unread,
Jul 24, 2020, 6:15:43 PM7/24/20
to மின்தமிழ்
source - https://www.facebook.com/permalink.php?story_fbid=4727198540627362&id=283386165008644&__tn__=K-R


தினசெய்தி நாளிதழில் இன்று (20.07.2020) வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 44)

‘‘தலைமைச் செயலகத்தின் தகைமையும் திறமையும்..!’’


ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்

===============================


ஓர் அரசு சிறப்பான ஆட்சி நடத்தி மக்களின் உரிமைகளை நிலை நாட்டும் என்றால் அந்நாட்டின் ‘அரசியலமைப்பு’ போற்றத்தக்க வகையில் அமைந்த திறமுடையதாகும்.

ஏறத்தாழ முப்பது மாநிலங்களின் ஒருங்கிணைப்பில், கூட்டாட்சி முறையில் இயங்கும் நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தினைப் பொதுமக்களும், மாணவர்களும் வாய்ப்பு நேரும்போது அறிந்து தெளிவடைய வேண்டும்.

நமது அரசியல் அமைப்புச் சட்டம் பல்வேறு நாடுகளின் அடிப்படைச் சட்டங்களில் உள்ள கருத்துகளையும் உள்ளடக்கியது. அமெரிக்கா, அயர்லாந்து, சோவியத்து ருசியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, செருமனி, ஆத்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அடிப்படை சட்டங்களிலிருந்து நமது அரசியல் அமைப்புச் சட்டத்திற்குத் தேவையான கருத்துகளை நம் நாட்டிற்கு ஏற்ற வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் வல்லவர்கள் அமைத்தனர்.

சட்ட மாமேதை அறிஞர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று உணரலாம். மேலும், தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள பல தரப்பினருக்கும் குறிப்பாகச் சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் கேள்வி பதில் வடிவில் ஓய்வுபெற்ற உயர் அலுவலர் என்.எம்.பெருமாள் தனது நூலில் இச்சட்டத்தின் பல்வேறு நுணுக்கங்களைத் குறிப்பிட்டு உள்ளார்.

எழுத்துத்திலகமாக வாழ்ந்த சுஜாதா மூளையின் செயற்பாடுகளைப் பற்றிக் கேள்வி பதிலாக எழுதிய நூலுக்குப் பெயர் தலைமைச் செயலகம் என்பதாகும். தலைமைச் செயலகம் என்பது மிக அழகான தலைப்பு. உடம்பின் செயற்பாட்டுக்கெல்லாம் ஒரு முதன்மைச் செயலகமாக மூளை விளங்குவது போல அரசின் செயற்பாடுகள் அனைத்திற்கும் மாநில அளவில் தலைமைச் செயலகம் உருவாயிற்று.

பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பின்னர், தலைமைச் செயலகத்தில் பெருங்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது நீங்களும் நானும் அடிக்கடி தொட்ட, தொடுகிற கோப்பு இருக்கிறதே, அதற்கு ஆங்கிலத்தில் File என்று பெயர். அந்த நான்கு எழுத்துகளையும் நீங்கள் கொஞ்சம் மாற்றிச் சேர்த்தால் Life என்று வரும். எனவே, கோப்பினை தொடுகிறபோது, ஓர் ஏழையின் அழுகுரல் கேட்கும். இல்லாதவரின் குமுறல் கேட்கும். ஊரார் தனக்குத் தேவை என்று கேட்ட வேண்டுதல் கேட்கும். எனவே, கோப்பினைத் தொடுகிறபோது ஓர் ஏழையின் அழுகுரல் கேட்கும். இல்லாதவரின் குமுறல் ஒலிக்கும். ஊரார் தனக்குத் தேவை என்று கேட்ட வேண்டுதல் இரங்கி நிற்கும். எனவே, தொடுகிற போதெல்லாம் நடுங்குகிற குரல் உங்கள் காதில் கேட்பது போல, உங்கள் விரல்களும் அதை விரைந்து அனுப்பி, எப்படி நிறைந்த பலனை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளவும் அவர்கள் சிந்துகிற கண்ணீரைத் துடைக்கலாம் என்பதற்கு முற்படும் கரங்கள்தான் தலைமைச் செயலகத்தின் அலுவலர் கரங்கள் என்று குறிப்பிட்டார்.

இந்திய நாடு விடுதலை அடைந்தபோதே சென்னை புனித ஜார்ஜ் கோட்டைதான் தலைமைச் செயலகமாகச் செயற்பட்டு வந்ததை நாமறிவோம். உத்தமர் ஓமந்தூரார் தான் விடுதலைக் கொடியை ஏற்றி வைத்த பெருமை கொண்ட முதலமைச்சர் என்று அனைவரும் சொல்வார்கள். அப்போது, அவருக்கு பெயரேகூட பிரதமஅமைச்சர் என்றுதான் இருந்தது.

தலைமைச் செயலகத்தில் முதன்மைக் கட்டடம் மூன்று தளங்களைக் கொண்டது. இரண்டாம் தளத்தில், தலைமைச் செயலாளர் இருப்பது போலவும், பிறகு சுற்றி வருகிற வட்டத்தைப் பார்த்தால், முதலமைச்சர் அறையும், அமைச்சர்களின் அறைகளும் வகுத்து வைத்திருந்தார்கள். சட்டப் பேரவையும், மேலவையும் முதல் தளத்தின் வட முனையில் பேரவைகளாக அமைந்துள்ளன.

தலைமைச் செயலகத்தில் இந்த மூன்று தளங்களில் பணியாற்றிய அலுவலர் எண்ணிக்கை காலந்தோறும் பல்கிப் பெருகியதால் பத்து மாடிக் கட்டடத்தை முதன்மை அலுவலகத்துக்கு எதிர்ப்புறத்தில் கட்டி அந்தக் கட்டடத்தை நாமக்கல் கவிஞர் மாளிகை என்ற நற்பெயரை முத்தமிழ் அறிஞர் கலைஞர் சூட்டினார். இக்கட்டடத்தை முதன்மை கட்டடத்துடன் இணைக்க ஓர் இணைப்பு நடை பாலம் கட்டப்பட்டது புதுமையும், பொலிவுடையதாகும்.

விடுதலை அடைந்த பிறகு, அரசு அலுவலரை Writer என்று குறித்தனர். கொல்கத்தாவின் தலைமைச் செயலகம் எழுத்தர் கட்டடம் என்றே அழைக்கப்படுகிறது.

இப்போது முப்பத்து ஆறுக்கு மேற்பட்ட துறைகளும், ஏழாயிரத்துக்கு மேற்பட்ட பணியாளர்களும் பணியாற்றுகின்றனர்.

தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவது ஒரு பெருமிதமான பணியாகும். தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவதற்குத்தான் தேர்வாணையத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை பணியமர்த்தம் செய்யும் நிலை இருந்தது. இந்நிலையில்தான் அரசு செயலாளர்கள் எல்லாம் ஆட்சிப் பணித் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்வு பெற்ற அலுவலர் பெருமக்கள் செயலாளர்களாக இருந்தார்கள். தமிழகத் தலைமைச் செயலக முடிவை இந்திய அரசு எப்போதும் பாராட்டும்.

புரட்சித் தலைவர் ஆட்சிக்கு வந்த பின்னர், அவரைக் கண்ணாரக் காண வேண்டும் என்ற பேரார்வத்துடன், கொடுத்துச் சிவந்த குமணனே இப்போது கோலோச்சி வந்திருக்கிறார் என்று அவரை தலைமைச் செயலக அலுவலர் சங்கத்திற்கு அழைத்து வந்தார்கள்.

அவர் ஆட்சிக்கு வந்தபோது, சில குறிப்புகளைக் கேட்டாராம். எத்தனை துறைகள் உள்ளன? அலுவலர்கள் எத்தனை பேர்? பணியாளர்கள் எத்தனை பேர்? என்று கேட்டுவிட்டு, அவர் கேட்டதிலே புதுமையானது என்னவென்றால், அந்தந்த மாநிலத்தில் தலைமைச் செயலகத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? தமிழகத்தின் தலைமைச் செயலகத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை என்ன? என்ற ஒரு குறிப்பையும் தனியாக வைத்திருந்தார்.

ஆட்சித்திறம் என்பது, தன் நுண்ணறிவால், சிந்தனையால், உடனிருக்கும் உயர் அலுவலர்கள் சொல்வதைக் கேட்டு, தன் கருத்து வளத்தால் திருத்தி மேம்படுத்துவதுவதாகும்.

பெருந்தலைவர் காமராசர் தன்னுடைய சிந்தனை வளத்தாலும், தன் இயல்பான சமூக அக்கறை காரணமாகவும் சிறப்பாக செயற்பட்டதை ஒரு சான்றின் மூலம் அறியலாம். எங்களுக்கு பள்ளிக்கூடம் இல்லை. நாங்கள் பள்ளிக்கு போவதென்றால், ஐந்து கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, எங்களுக்கு ஒரு பள்ளியை உருவாக்கித் தர வேண்டும் என்று சிற்றூர்ப்புரத்தைச் சார்ந்த மக்கள் அருப்புக் கோட்டையிலிருந்து ஒருமுறை அவரைக் கேட்டார்களாம். பெருந்தலைவர் உடனே, பள்ளிதானே கேட்கிறீர்கள், நான் உடனே செய்கிறேன். படிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு தராமல் நான் பதவியில் இருப்பதில் என்ன பயன் என்று அவர் மறுநாள் தன்னுடைய அலுவலகத்திற்கு வந்தபோது கேட்டாராம். எங்கே பள்ளி வைக்கலாம் என்றாராம். அதற்கு அரசு செயலாளர், ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் இரண்டு மேநிலைப் பள்ளிகளை வைப்பது அரசின் விதிகளுக்கு புறம்பானது என்றாராம். அதற்கு பெருந்தலைவர், நீங்கள் சொல்லும் விதி சரிதான். அந்தப் பள்ளியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் நடந்த பிறகு வழியில் உள்ள வாய்க்காலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெள்ளம் வருவதால், அவர்கள் நீந்திக் கடக்கிறார்கள். இது எப்படிப் பொருந்தும் என்றாராம்.

அரசு செயலாளர் போய்த் திரும்பி வந்து, விதியில் மாற்றம் செய்யலாம். நடுவில் வாய்க்காலோ, தடையோ, வனப்பகுதியோ இருந்தால், ஐந்து கிலோ மீட்டருக்குள் இரண்டு பள்ளிகளை வைப்பதற்கு தடையில்லை என்றாராம். உடனே பெருந்தலைவர் கையெழுத்திட்டார்.

அதேபோல்தான் புரட்சித்தலைவர், தன்னைச் சூழ்ந்தவர்கள் கூறும் கருத்தை நிதானமாக கேட்டுக், கண்ணால் கண்டதைக் கையால் செய்வார்கள் என்று கூறும் திறமையைக் கொண்டிருந்தார். அந்த வகையில், எந்த அரசிலும் மாறாது நின்ற மதிநலம் மிகுந்த உயர் ஆட்சிப் பணி அலுவலர்கள் புகழ் சேர்த்திருக்கிறார்கள். சான்றாக, பன்னிரண்டு ஆண்டுகளாக நான்கு முதலமைச்சர்களிடம் ஒப்பற்ற நிதிச் செயலாளராகத் திகழ்ந்து எவர் மனமும் எள்ளளவும் கோணாமல் உயரிய திட்டங்களை உருவாக்கி வெற்றி கண்டதோடு இன்றைய தலைமைச் செயலாளர் க.சண்முகம் புகழோடு தலைமை தாங்குகிறார் என்பது பாராட்டத்தக்கது.

தேமொழி

unread,
Jul 28, 2020, 12:47:52 AM7/28/20
to மின்தமிழ்
source  - https://www.facebook.com/permalink.php?story_fbid=4760904917256724&id=283386165008644&__tn__=K-R


தின செய்தி நாளிதழில் இன்று (27.07.2020) வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 45)

‘‘மதி நுட்பம் நூலோடுடையார்..!’’


ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்

=======================================


பச்சையப்பன் கல்லூரியில் பயிலும்போதே, மாணவர் மன்ற நிகழ்வுகளில் தலைவர்கள் பலரை உரையாற்ற அழைப்பது வழக்கம். அந்த வகையில்தான் புரட்சித்தலைவரை அழைத்து அவரை பேச வைத்து கல்லூரிப் பருவத்திலே நான் சிறப்படைந்தேன். அதேபோலதான் நான் விரும்பி அழைக்க முயன்றது மூதறிஞர் இராஜாஜியைத்தான்.

மூதறிஞர் இராஜாஜி மீது எப்படி ஈடுபாடு என்று கேட்டால், தந்தை பெரியாரும் அவரும் நெருங்கிய நண்பர்கள். பலமுறை தந்தை பெரியார் தன்னுடைய விடுதலை, குடியரசு இதழ்களில் மூதறிஞர் இராஜாஜி வெளியிடுகின்ற ஒவ்வொரு கருத்துக்கும் மறுப்புரை வழங்குவார். மிக இயல்பாக தந்தை பெரியார் சொன்னது, ‘‘மூதறிஞர் எது சொன்னாலும் கண்ணை மூடி மறுத்தால், சிந்திக்கும் பழக்கம் அனைவருக்கும் வளரும்.'' அதனாலோ என்னவோ அவர் மீது தனியார்வம் வளர்ந்தது. மூதறிஞர் இராஜாஜி 10.12.1878-ல் பிறந்தவர். தந்தை பெரியார் 17.09.1879-ல் பிறந்தவர். மூதறிஞர் மறைந்த தேதி 25.12.1972. பெரியார் மறைந்த தேதி 24.12.1973.


தந்தை பெரியாரின் புரட்சிப் புதுமை திருமணத்தை முழுமையாக ஆதரித்து நல்வாழ்த்து வழங்கியவர் மூதறிஞர்தான். மூதறிஞரின் பெயரன் இந்திய அயலகத் துறையின் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய இராஜ்மோகன் காந்தி ஓர் அழகான ஆங்கில நூலை எழுதியுள்ளார். அந்நூலில் அண்ணல் காந்தியடிகளுக்கு ஏறக்குயை ஐம்பது கடிதங்களையும், அவருடைய மாப்பிள்ளை தேவதாசு காந்திக்கு இருபது கடிதங்களும் அவருடைய பெயரன் இராஜ்மோகன் காந்திக்கு இருபது கடிதங்களையும் மிக செவ்விய முறையில் மூதறிஞர் எழுதியதை வெளியிட்டிருக் கிறார்கள்.

இந்த நூலைப் படித்த பிறகுதான் மூதறிஞரின் சிந்தனை ஆழம் பொருந்திய கருத்துகளை மேலும் காண முடிகின்றன. மூதறிஞர் எழுதிய “குறை ஒன்றும் இல்லை” என்ற இசைப்பாடல் உலகப்புகழ் எய்தியது. அவர் எழுதிய சோக்ரதர், வாழ்வியல் சுருக்க நூல் அறிவாழம் கொண்டது.

மூதறிஞர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ஆட்சியில் இருந்தபோது, ஒவ்வொரு அரசுக் கோப்பிலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் குறிப்புகளை எழுதி விளக்கம் பெறாமல் அந்த கோப்பை நிறைவு செய்வதில்லை.

அந்நாளில், இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களில் முதற்பணி நிலையே Under Secretary என்பதாகும். பணியில் மூத்தவர்கள், பதவியுயர்வு பெற்று வருகிறபோது, இருவருக்கும் வேறுபாடு காட்ட இரு சொற்கள் Assistant Secretary, Under Secretary பயன்பட்டன. அது ஏன், வேறுபாடு காட்ட வேண்டும் என்று அப்போது பணி மூப்பு பெற்றோர் ஒரு முறையீடு வைத்திருந்தனர். மூதறிஞரின் செயலாளர்களில் ஒருவர் பணிமூப்பு கொண்டவர்களுக்கும், இந்தப் பெயர் மாற்றத்தை நீக்குவது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் கருதிப் பார்க்க வேண்டும் என்று விண்ணப்பம் வைத்திருந்தார். ஆங்கிலத்தில், மூதறிஞர் எழுதிய குறிப்பு சார் செயலாளர் எப்போதும் செயலாளராவதில்லை, ஆனால், முதல் படி நிலையில் சேர்ந்த ஆட்சிப் பணி அலுவலர் குறைந்தது பத்தாண்டுகளில் செயலாளராகி விடுவார்கள். (They are under study for the Secretary Post. For Assistant Secretaries it is a high attempt to think about Secretary Post) என்று எழுதியதை ஆட்சி மொழிக் காவலர் கி.இராமலிங்கனார் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டுவார்.

சென்னை இராஜாஜி மண்டபத்தில் 08.12.1977 அன்று மூதறிஞர் இராஜாஜி அவர்களின் 100ஆவது பிறந்த நாள் விழாவில், அன்னாரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து புரட்சித்தலைவர் ஆற்றிய உரை...

“தன் மனத்தில் தோன்றுவதை வெளிக்காட்டி அதைச் செயல்படுத்தப் பின்வாங்குபவன் பொறுப்பேற்கத் தகுதியற்றவன்'' என்று மூதறிஞர் இராஜாஜி அவர்கள் சொன்னார்கள்.

இராஜாஜி அவர்களின் நேர்மையைப் பற்றியும், நிருவாகத் திறனைப் பற்றியும் இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். யாருக்கும் அஞ்சாமல், விட்டுக்கொடுக்காமல், கருத்தை எடுத்து வைப்பதில் வல்லவர் இராஜாஜி அவர்கள்.

அதுபோல என் உள்ளத்தில் எழுந்த கருத்தைச் சொல்வது அவரைப் பின்பற்றுகிற நீங்களும், மேடையிலே அமர்ந்திருப்பவர்களும், விரும்புவார்கள் என்று நம்புகிறேன்.

ஒருமுறை இராஜாஜி அவர்கள் தில்லியில் ஒரு கூட்டத்தில் பேசியபோது, அசம்பாவித நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மரியாதை தெரியாத ஒருவன் - இங்கிதம் தெரியாத ஒருவன் - பெரியவர்களை மதிக்கத் தெரியாத ஒருவன் - அழுகிய கோழி முட்டையை அவர் மீது எறிந்துவிட்டான்.

அந்த அழுகிய கோழி முட்டை அவர் சட்டையில் பட்டுவிட்டது. ஆத்திரப்படாமல் துடைத்துக் கொண்டார். அப்போது அவர், “நான் எதற்காகப் பாடுபடுகிறேன், உழைக்கிறேன் என்றால், இப்படிப்பட்ட அழுகிப் போனவர்களின் உள்ளத்தைத் திருத்த வேண்டும் என்பதற்காகத்தான்'' என்றார்.

இராஜாஜி அவர்களின் பணிகளை எண்ணி, அமரர் பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளை நிறைவேற்ற செயல்பட்டு வருகிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன். மக்கள் நாணயமாக வாழ வேண்டும் என்று இராஜாஜி அவர்கள் விரும்பினார்கள். மக்கள் நாணயமாக வாழ்வதற்குப் பாதுகாப்புத் தர வேண்டியது அரசின் கடமை என்பதை நான் உணருகிறேன்.

இங்கே பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களும், புத்தகங்களும் வழங்கப்பட்டதைப் பார்த்தீர்கள்.

எதற்காக இவைகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. இவர்களின் பேரன், பேத்திகள் இவர்கள் பெற்ற பரிசுகளைப் பார்க்கும்போது, மூதறிஞர் இராஜாஜியின் 100ஆவது பிறந்த நாள் விழாவில் பெரியவர்கள் மற்றும் ஆளுநர் முன்னிலையில், முதலமைச்சர் வழங்கினார் என்ற செய்தியைப் பார்க்கும்போது அவர்களுக்குப் பெருமையாக இருக்கும்.

அதற்கு மாறாகத் தனது தாத்தா வெடிகுண்டு வைத்தார்; தீ வைத்தார்; பஸ்ஸைக் கொளுத்தினார்; கல்லெறிந்து பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தினார்; பெண்கள் என்றும் பாராமல் கல்லெறிந்து, அவர்களைக் காயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார், கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற செய்தியைப் பார்ப்பார்களேயானால், அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட நிலை ஏற்படாமல் இருக்க, அவர்கள் ஆக்க முயற்சியில் ஈடுபட, ஊக்கம் அளிக்கும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டுகிறேன்.

இன்றைக்கு மூதறிஞர் இராஜாஜி அவர்களை எதற்காகப் பாராட்டுகிறோமோ, அந்த மூதறிஞர் பிறந்த நாட்டில், நாட்டின் முன்னேற்த்திற்காக யார் தடையாக இருந்தாலும் - அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள். ஆட்சியில் இருக்க உரிமை வழங்கும் மக்களின் நம்பிக்கையை பெற்ற மூதறிஞர் இராஜாஜி அவர்கள் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் செயல்பட்டார்கள். இராஜாஜி அவர்கள் பதவிக்குச் சென்று சட்டமன்றத்தில் பேசும்போது ஒன்றை அடிக்கடி குறிப்பிடுவார்கள் என்பதை நான் கூறியிருக்கிறேன்.

“நான் தொலைநோக்குப் பார்வையோடு 100 ஆண்டுகளுக்குப் பயன்படும் திட்டத்தைப் போடுகிறேன். ஆனால், அதே நேரத்தில் அடுத்த வினாடி பதவி விலக இராஜினாமா கடிதத்தை சட்டைப் பையில் வைத்திருக்கிறேன்'' என்று குறிப்பிடுவார்கள். மாஜிஸ்திரேட்டாக இருந்து, நீதிபதியாக, உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

மூதறிஞர் இராஜாஜி அவர்கள் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக, உயர்ந்த பதவியில் இருந்தவர். ஆனாலும்; இராஜாஜி அவர்கள் உயர்ந்த பதவி, சின்னப் பதவி என்று கணக்குப் பார்க்காமல், மக்களுக்கு தொண்டாற்றுவதில் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார்.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜாஜி அவர்கள் மேற்கு வங்கத்தின் கவர்னராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

அதற்குப்பிறகு, தமிழகத்தில் பல மாநிலங்கள் ஒன்றாக இருந்த சென்னை மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் குறைவாக இருந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக - வேறு கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்காக - முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

அப்போது திறமையான நிருவாகத்தால், தூய்மையான ஆட்சியை நடத்தினார். தனக்கு கெட்ட பெயர் வரும் என்று கருதாமல் மக்கள் நலனுக்காகத் துணிச்சலோடு செயல்பட்டார். கட்சி நலன் கருதாமல், பொதுமக்களின் நலனையே முக்கியமாகக் கருதிச் செயல்பட்டார்.

தமிழகத்தில் மீண்டும் உண்மையான மதுவிலக்குக் கொண்டு வர வேண்டும் என்று இராஜாஜி அவர்கள் கூறினார்கள். இராஜாஜி அவர்கள் கண்ட கனவை நனவாக்க மதுவிலக்கு கண்டிப்பாக அமல் நடத்தப்படும்.

உறவு, கட்சி, ஜாதி, மதம், வசதி படைத்தவர்கள், வேண்டியவர்கள் என்று எதைப்பற்றியும் பாராமல், இராஜாஜி அவர்களின் கொள்கையான மதுவிலக்கு அமல் நடத்தப்படும். மூதறிஞர் இராஜாஜி, பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கையை நிறைவேற்ற எது குறுக்கே நின்றாலும் அது அகற்றப்படும்.'' என்றார்.

அதேபோல, 24.12.1979 ஆம் நாளன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராஜாஜி முழு உருவச் சிலைத் திறப்பு விழாவில் உரையாற்றிய புரட்சித்தலைவர்,

‘‘அ.இ.அ.தி.மு.க-வை நான் தொடங்கியதும் முதல் முறையாக மூதறிஞர் இராஜாஜியைச் சந்தித்தேன். அவர் ஆசி கூறி என் கையைப் பிடித்து, அவரது உறுதியினால் கண்ணீர் விடவில்லை-என்னைப் போன்றவர்கள் என்றால் கண்ணீர் விட்டுப் பேசியிருப்பார்கள்-கண்ணீர் விடாமல் உறுதியோடு பேசினார்.

‘‘மதுவிலக்கு ரத்தினால் நாட்டு மக்களை எங்கேயோ அழைத்துச் செல்கிறார்கள்: அவர்கள் நல்வழியில் வாழ உத்தரவாதம் அளிக்க வேண்டும்'' என்று என்னிடம் சொன்னார்கள் காலம் நிச்சயம் செய்யும் என்றேன். அந்தக் காட்சியைப் பார்க்க நான் உயிரோடு இருக்க வேண்டுமே என்றார். அவர் உயிரோடு இல்லாவிட்டாலும் இந்தச்சிலை நாம் செய்யும் கொள்கைத் திட்டங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

தமிழக அரசு எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியை ஆட்சிமொழியாக ஏற்காது. எந்த வகையிலும் அதை அனுமதிக்காது. நாலே முக்கால் கோடி தமிழக மக்களின் சார்பில் இராமச்சந்திரன் என்ற முறையில் இல்லாமல், முதலமைச்சர் என்ற முறையில் இதைக் கூறுகின்றேன்.

மூதறிஞர் இராஜாஜி அவர்கள், தியாகத்தால் - அறிவாற்றலால் - மக்கள் தொண்டால் - உயர்ந்து நின்றார். அவரின் அறிவாற்றலை உலகம் போற்றியது. அவருக்குச் சிலை நிறுவப்பட்டுள்ளது. வடக்குக் கடற்கரைச் சாலைக்கு இராஜாஜி சாலை என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இராஜாஜியின் பிறந்த ஊர்ப்பக்கத்தில் இருக்கும் ‘‘சிப்காட்'' நகருக்கு ‘‘இராஜாஜி நகர்'' என்று பெயர் மாற்றப்படும்.'' என்றார்.

தேமொழி

unread,
Aug 3, 2020, 1:12:27 AM8/3/20
to மின்தமிழ்
source - https://www.facebook.com/permalink.php?story_fbid=4796104837070065&id=283386165008644&__tn__=K-R


தினசெய்தி நாளிதழில் இன்று (03.08.2020) வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 46)

"தென்னாட்டின் மன்னாதி மன்னவனே!"


ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


ஆந்திர நாட்டின் மாபெரும் நடிகர் கண்ணன் பெருமகனாகவே மக்களால் போற்றி வணங்கப்படும் தெய்வ வடிவமாக என். டி. ஆர் கருதப்பட்டார். திரைப்பட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் என்.டி.ஆர். அவர்களுக்கு புரட்சித் தலைவர்தான் உற்ற நண்பராகவும், ஒளிவிளக்கு தரும் அறிஞராகவும், எல்லா வகையிலும், பெரும் பேராசிரியராகவும் திகழ்ந்தார் என்று சொன்னால் மிகையாகாது.
திரு.என்.டி.ஆர் அவர்கள் தான், முதன்முதலாக அரசியல் கட்சி தொடங்கப்போகிறேன். அதற்கு நீங்கள்தான் பெயர் சூட்ட வேண்டும் என்றும், அதில் தெலுங்கு என்ற பெயரும் இடம்பெற வேண்டும் என்று என்.டி.ஆர். அவர்கள் புரட்சித்தலைவரிடம் கேட்டார்.
புரட்சித்தலைவருக்கு எவ்வாறு இரட்டை இலை சின்னம் கிடைத்ததோ, அதுபோல் என்.டி.ஆர். அவர்களுக்கு இரட்டை சக்கரங்கள் கொண்ட சைக்கிள் சின்னம் கிடைத்தது.
அக்கால கட்டத்தில் என்.டி.ஆர். எது செய்தாலும், அதில் புரட்சித்தலைவரின் ஆலோசனை இருக்கும் என்று ஆந்திரம் மற்றும் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுவது வாடிக்கையாகும்.
தெலுங்கு கங்கை திட்டத்தை அறிமுகம் செய்வதற்காக ஒரு மாபெரும் ஒப்பந்தத்தில் தமிழ்நாடுஆந்திராகர்நாடகமராட்டிய அரசுகள் கையெழுத்திட்டன. ஆந்திராவிலிருந்து, தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வர வேண்டும் என்ற மாபெரும் கனவை நனவாக்க வித்திட்ட தூண்களாக என்.டி.ஆர். அவர்களும் புரட்சித்தலைவர் அவர்களும் விளங்கினர். இந்த கிருஷ்ணா நதி நீதி திட்டம் ஏறக்குறைய 406 கிலோ மீட்டர் தொலைவில் தண்ணீரை தமிழகத்திற்கு கொண்டு வரும் ஒரு நுட்பமான திட்டமாகும். இத்திட்டத்திற்கு தமிழக, ஆந்திர மற்றும் மந்திய அரசும் பேரூக்கம் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணா நதிநீர் திட்ட தொடக்க விழாவிற்கு வருகை புரிந்தபோது, நான்கைந்து மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருந்த காட்சி, இன்றைக்கும் மாட்சி தரும் காட்சியாக என் கண்முன்னே நிற்கிறது.
ஆந்திரப் பெரு நடிகர் என்.டி.ஆர். தன் உரையைத் தொடங்கும்போதே, புரட்சித்தலைவரைப் பார்த்து,” The King Maker of South India” என்று விளித்து மாபெரும் கைத்தட்டலைப் பெற்றார். அதே சமயத்தில் என்.டி.ஆர். அவர்களின் ஆங்கில உரையை தமிழாக்கம் செய்யும் பணி எனக்குக் கிட்டியது. நான் உடனே புரட்சித்தலைவரையும், ஆந்திரப் பெரு நடிகர் என்.டி.ஆர். அவர்களையும், மேடையில் உள்ளவர்களையும், எதிரில் அமர்ந்திருந்தவர்களையும் பார்த்து
“ தென்னகத்தின் மன்னாதி மன்னனே” என்று கூறினேன்.
அந்த ஆங்கிலத் தொடருக்கு ஏற்ப தமிழ்த் தொடரைக் கூறியவுடன் இடி போல் கைத்தட்டலும், புரட்சித்தலைவரும் இரண்டு முறை தன்னுடைய கருப்பு கண்ணாடி மூலம் ஏறிட்டு பார்த்த காட்சியும், அவருக்கே உரிய வெட்கமான புன்னகை பூத்ததும், என்.டி.ஆர். சிலிர்த்ததும் அன்றைக்கு நடைபெற்ற மாபெரும் காட்சிகளாகும்.
அந்த உரை வருமாறு....

(25.05.1983 ஆம் ஆண்டு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற
தெலுங்கு கங்கைத் திட்ட தொடக்க விழாவில் பங்கு கொண்டு ஆற்றிய உரை)
இந்த நிகழ்ச்சி என் வாழ்நாளில் மறக்க முடியாத மகத்தான நிகழ்ச்சியாகும்.
ஒரு வரலாற்றுச் சிறப்பான சாதனையை எதிர்கொண்டு நிற்கிறேன் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1976ஆம் ஆண்டு, சென்னையில் இது போன்ற கூட்டத்தில் பிரதமர் அவர்கள் தெரிவித்த அறிவிப்புகள் தான் இந்தக் கிருஷ்ணா நதி நீர்த் திட்டம் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அவர் கூறும் நல்ல கருத்துகள் நிறைவேறுவதைச் சிலர் தாமதப்படுத்தினாலும், அந்த நல்ல திட்டங்கள் என்றேனும் நிறைவேறியே தீரும் என்பது உண்மையாகும்.
இந்த மாநிலத்தின் ஒரு மாவட்டம் என்கிற அளவுக்குச் சென்னையில் மக்கள் தொகை 35 இலட்சத்திலிருந்து 40 இலட்சம் வரை கணக்கிடப்பட்டுள்ளது. இங்குக் குடிநீர்ப் பிரச்சினை எவ்வளவு பெரிது என்பது நமக்குத் தெரியும். நான் எப்போதும் ஒருமைப்பாடு பற்றிப் பேசுபவன் என்பதையும், ஒருமைப்பாடு நாட்டில் இருக்கவேண்டும் என்றால் உள்ளத்தில் பரந்த போக்கு உருவாக வேண்டும் என்றும் சொல்வேன்.
இந்த மேடையில் வீற்றிருக்கும் மாநில முதல்வர்கள் எந்தக்கட்சியைச் சேர்ந்தவர்கள், நான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன்? கர்நாடக முதல்வர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்? இங்கு நான்கு கட்சிகளைச் சேந்தவர்கள் இருக்கிறோம் இதைப்பார்க்கும் போது ஒருமைப்பாடு மகத்தானது என்பதும், அதை நிறைவேற்ற விரிந்த உள்ளம்தான் வேண்டும் என்பது நன்கு புரியும். இந்தியாவில் ஒருமைப்பாடு என்பது பிரிக்க முடியாததாகும். இங்கு ஒருமைப்பாடு சிக்கல் இல்லாத ஒன்றாகிவிட்டது.
இந்தத்திட்டம் நிறைவேற எவ்வளவு உழைக்க வேண்டும் என்று உணராமல் இல்லை. கருநாடக மாநில முதல்வர் இங்கே பேசும் போது, காவிரிப் பிரச்சினை குறித்து மனம் விட்டுப் பேசவேண்டும். அப்படி பேசினால் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடக்கூடியதுதான் என்று குறிப்பிட்டார். அதற்காகக் கர்நாடக முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நாங்கள் எவ்வளவு காரியமாற்றினாலும் மத்திய அரசின் ஆதரவும் ஊக்கமும் இருந்தால்தான் இந்தத்திட்டம் வெற்றி பெற முடியும், இந்தத்திட்டம் தனிப்பட்டவர்களுக்காக அல்ல ஆனால் பணம் வீணடிக்கப்பட்டதாகச் சிலர் குறை கூறுகிறார்கள். வாழமுடியாதவர்கள் வாழ்கையில் ஏமாற்றமடைந்தவர்களின் வயிற்று எரிச்சல் அது. இந்தத் திட்டம் காலத்தையும் மீறி நிலைத்து நிற்கும்.
மாராட்டிய முதல்வர் கூறும்போது, “நான் கஷ்டப்படுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் பிறர் துயரப்படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமுடியாது. முதலில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்” என்று கூறினார்கள். இதைத்தான் நாமும் சொல்கிறோம். காந்தியடிகளும், அண்ணாவும் இதனையே கூறியுள்ளார்கள்.
“பிறரை நேசி., அவர்கள் உங்களை நேசிப்பார்கள்” என்றார், விவேகானந்தர். மாண்புமிகு முதல்வர் அருமைத் தம்பி என்.டி.ஆர். அவர்கள் நீண்ட உரையாற்றினார். அதற்கு இப்போது பதில் சொல்ல வேண்டுமா என்று எண்ணுகிறேன். நாட்டு நலனுக்காக அவருக்குச் சில ஆவல், ஆதங்கம் இருக்கிறது அதைப் பிரதமர் உணர்வார். அதன் அடையாளம் தான் 20 அம்சத் திட்டம்.
20 அம்சத்திட்டம், அதைத்தான் சொல்கிறது 1976 ஆம் ஆண்டு நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது 20 அம்சத் திட்டத்தைத் தெருத்தெருவாகச் சென்று பரப்பிய போது, சிலர் கேலி பேசினார்கள். அவர்களைப் பார்த்து இந்தக் கூட்டம் கேலி செய்கிறது இந்த விழா தனிப்பட்ட மனிதருக்கோ தனிப்பட்ட கட்சிக்கோ சாதிக்கோ நடக்கும் விழா அல்ல இது மக்களுக்காக நடத்தும் மக்கள் விழா.
முன்பு விளக்கு இருந்தது. திரியும் இருந்தது. எண்ணெய்யும் இருந்தது, ஆனால் அதை ஏற்றிவைக்க ஆளில்லாமல் இருந்தது. இன்று அந்த விளக்கை ஏற்றி வைக்கிறார், பிரதமர். இந்த நாடு முழுவதும் இதுபோல் பல விளக்குகள் பிரதமரால் ஏற்றிவைக்கப்பட வேண்டும். தமிழக மக்கள் மீது பிரதமருக்கு நல்லெண்ணமும் அனுதாபமும் எவ்வளவு இருக்கிறது என்று புரிகிறது. நீங்கள் பல்லாண்டு வாழ்க! நாட்டிற்கு நல்லது செய்யுங்கள்.
சித்திரா பௌர்ணமியில் நடக்கும் இந்த அடிக்கல் நாட்டுவிழா ஆந்திர மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் உள்ள சகோதர பாசத்திற்கு எடுத்துக் காட்டாக நடக்கின்ற விழாவாகும். இத்திட்டத்தால், ஆந்திராவில் உள்ள இராயலசீமா போன்ற பகுதிகளில் இருக்கிற விவசாயப் பெருங்குடி மக்களுக்கு எவ்வளவு நம்மை என்று இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
தமிழகத்தில் 65 இலட்சம் ஏழைக் குழந்தைகளுக்கு அரசு மூலம் இலவசச் சத்துணவு அளித்து வருகிறோம். அதேபோல் இங்கே எனது தம்பி, ஆந்திர முதல்வர் என்.டி.ஆர் அவர்கள், ஏழை எளிய குழந்தைகளுக்கு ரொட்டியும் பாலும் அளித்து வருவதை நான் மனமாறப் பாராட்டுகிறேன். இன்றைய குழந்தைகள் நல்ல ஊட்டச் சத்தோடு வாழ்ந்தால்தான், எதிர்காலத்தில் இத்தேசம் ஒளிமயமாகும். இத்தகைய திட்டம் இந்தியா முழுவதும் வரவேண்டும்.
எங்கே போனாலும் வேலை இல்லை; போதுமான ஊதியம் கிடைக்கவில்லை; சொந்தமாகக் குடியிருக்க வீடில்லை என்கிறார்கள். இது தமிழகத்திலோ, ஆந்திராவிலோ மட்டுமல்ல; இந்தியா முழுவதும் இருக்கிறது. இந்த நிலை மாறப் புதிய திட்டங்கள் தீட்டப்படவேண்டும். படித்தவர்கள் நூற்றுக்கு நூறு என இருக்க வேண்டும். தாய்மார்கள், நூற்றுக்கு எழுபது சதவீதத்துக்கும் குறைவாகவே படித்தவர்களாக இருப்பதை வருத்தத்தோடு குறிப்பிடுகிறேன்.
ஆந்திர முதல்வர் அவர்கள் இத்திட்டத்திற்கு ஒத்துக்கொண்டது ஏன் என்று சிந்திக்கிறேன். வெறும் விவசாயத்திற்கு மட்டுமல்ல தண்ணீர். இத்திட்டத்தின் மூலம் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலையும் தரவிருக்கிறார். இந்த அணைக்கட்டு கட்டும் போது இலட்சக்கணக்கான வேலையற்றோர் வேலை பெற இருக்கின்றனர். அதுபோலவே தான் கோடிக்கணக்கான ரூபாயில் நீர்ப்பாசனத்துக்காக கால்வாய் வெட்டும் திட்டமும்.
பாசனத்திற்குத் தண்ணீர் குடிப்பதற்குத் தண்ணீர்மக்களுக்கு வேலை எல்லாம் இத்திட்டத்தில் இருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியாக கிடைக்கும். அதேநேரத்தில் பல தொழில்கள் பெருகும். இதைச் சுற்றிச் சிறுசிறு தொழில்கள் இங்கு தோற்றுவிக்கப்படும். வேலைவாய்ப்பு உறுதியிருந்தால், மக்கள் வாழ்வு உத்தரவாதத்தோடு மேம்படும். காப்பீடு போல வாழ்க்கை உத்தரவாதம் கிட்டும்.
மாண்புமிகு ஆந்திர முதல்வர் அவர்கள் இங்கே பேசுகிறபோது ஒன்றைக் குறிப்பிட்டார்கள். “சொன்னதை நிறைவேற்றுகிறேன்” என்றார். எந்த மாநிலத்திலும், மூன்றே மாதத்தில் இப்படித் திட்டமிட்ட வரலாறே கிடையாது. அது என்.டி.ஆர் ஒருவரால்தான் முடிந்திருக்கிறது, நாட்டு மக்களாகிய உங்கள் துணையுடன். இந்த துணை அவருக்கு எப்போதும் இருக்க வேண்டுமென என் தாயாம் தெய்வத்தை வேண்டுகிறேன்.
இந்திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள 45 இலட்சம் மக்களுக்குக்குக் குடிநீர் கிடைக்கவிருக்கிறது. அங்கே தமிழ் பேசுவோர் மட்டுமல்ல; தெலுங்கு பேசுவோரும் இருக்கின்றனர். இதுமட்டுமல்ல; கர்நாடக மக்களும், குஜராத், பஞ்சாப், மகாராட்டிரம் இப்படிப் பல மாநில மக்களும் அங்கே இத்தண்ணீரைக் குடிக்க இருக்கின்றனர். இதை இங்கு நான் கூறக்காரணம், சகோதரர் என்.டி.ஆர். ஆந்திராவுக்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் சொந்தம். அவ்வகையில் அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். அண்ணா நாமம் வாழ்க!

தேமொழி

unread,
Aug 13, 2020, 1:33:35 AM8/13/20
to மின்தமிழ்
source - https://www.facebook.com/permalink.php?story_fbid=4830537943626754&id=283386165008644&__tn__=K-R


தினசெய்தி நாளிதழில் இன்று (10.08.2020) வெளியான கட்டுரை


மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்  (பகுதி - 47)

‘‘கண்ணீர் வெள்ளமும் கவிதை உள்ளமும்’’


ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


தமிழகத்தில் மாபெரும் அளவில் வெள்ளம் சூழ்ந்து தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களும் வெள்ளக் காடாகவே காட்சி தந்தது. அந்நேரத்தில் புரட்சித் தலைவர் முதலமைச்சராக ஆட்சி நடத்திக் கொண்டிருந்த காலமது. தன்னால் இயன்றவரை தன் ஆட்சியாளர்களை அருகில் வைத்துக் கொண்டு தக்க உதவிகளை, காப்புப் பணிகளை உடனுக்குடன் விரைந்து அவர் செய்து வந்த அந்த மாபெரும் தொண்டுப் பணியைக் கண்டு தமிழக மக்களே பெருமிதமடைந்தனர். மத்திய அரசு நாள்தோறும் மாண்புமிகு முதலமைச்சருடன் உரையாடி தக்க உதவிகளையும் செய்தது.

12-11-77க்கும் 20-11-77க்கும் இடைப்பட்ட நாட்களில் வெள்ளக் கொடுமைகள் பற்றி அந்நாளைய புலவர் பெருமக்கள் பலர் பல்வேறு பாடல்களை இந்தக் கோரப் புயலை தலைப்பாக மனத்தில் வைத்து படைத்தார்கள். அந்தப் பாடல்களையெல்லாம் ஒருமுறை என்னை பார்க்கச் சொல்லி சில பாடல்களை தெரிவு செய்து அந்நாளைய செந்தமிழ்ச் செல்வி இலக்கிய இதழில் வெளியிடுவதற்கு ஆவன செய்தேன். கோரப் புயலின் பாடல்களின் உருக்கத்தையும் கலக்கத்தையும் படித்தீர்களென்றாலே அந்த கொடும் புயல், தாண்டவப் புயலின் கொடுமைகளை நீங்கள் நன்குணர்வீர்கள்.

முதல் பாடலை எழுதியவர் அந்நாளைய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத் துறையின் இயக்குநர் பெருந்தகை பேரறிஞர் தேவநேயப் பாவாணர் ஆவார்.

வெள்ளச் சேத விளரி

-----------------------------------

[ஞா. தேவநேயப் பாவாணர் ]

-----------------------------------------------

எத்தனை வெள்ள மோநாம் இதுவரை கதையிற் கேட்டோம்

இத்தனை கொடுமை யாக எவருமே கண்ட தில்லை

அத்தனார் கோயி லுள்ளும் அனைவரும் நசுங்கிச் சாகப்

பித்தமா வெறியின் வேகம் பிடித்தது, காற்றுப் பூதம்.

வெள்ளமென்றறிவிப்பின்றி, வீட்டினுள் உறங்கும் வேளை

கொள்ளையர் வருதல் போலக் கூடிய இரண்டு பூதம்

பொள்ளெனக் கேடு செய்யப் பொடித்தன பணிச்சா லைகள்

நள்ளிர வன்றே நாகை நத்தப்பா ழாயிற் றந்தோ !

கண்ணினுக் கெட்டு மட்டும் கண்டது வெள்ளக் காடு

மண்ணியல் ஊர்தி யொன்றும் மற்றவூர் சென்ற தில்லை

உண்ணவோர் உணவு மில்லை உரைக்கவோர் வழியு மில்லை

விண்ணவர் உதவி போலூண் வீழ்ந்தது, மூன்றாம் நாளே.

தமிழ் நிலந் தலையாஞ் சென்னை தாவியே, தெலுங்க நாட்டில்

இமிழ்கடல் எரியுந் தோன்ற எழுமலை யலைக ளாலே

அமிழ்கரை யூர்கள் மாய்ந் தார் ஆயிரம் பத்தோடைந்தும்

குமிழ் நுரை வெள்ளம் வந்து குடிகொண்ட தூர்க ளெல்லாம்.

ஆருயிர னைய என்றன் அன்பனை யிழந்தேன் என்பார்

கார்பணி கற்பின் செல்வக் கண்ணகி யிழந்தேன் என்பார்

சீரிய அறிவு வாய்ந்த சேயரை இழந்தேன் என்பார்

ஊரினில் உள்ள எல்லா உறவையும் இழந்தேன் என் பார்.

இரவிலே தந்தை தாயை இழந்தபிள் ளைகள் காலை

அருவிபோற் கண்ணீர் சிந்தி அம்மையப் பனையே கூவி

வெருவியே யழுது தேம்பி வெந் தழல் மெழுகு போல

உருகியுள் வெந்த கோலம் உள்ளுவார் குலையும் வேகும்.

அருந்த லாய் விற்ற காலை அரும்பெரும் பாடு பட்டு ‘

வருந்தியே தேடிப் பெற்ற வளம்படு பொருளும் வீடும்

பருந்தடி குஞ்சு போலப் பசக்கென மறைந்து போக

இருந்துபின் அழுது நைந்தார் எத்தனை பேர்க ளம்மா !

அரசனே கொடுமை செய்யின் ஆரிடம் சொல்வ தென்பர்

பரசுறு கடவுள் காப்பும் பறந்திடின் நாமென் செய்வாம்

துருசினில் மாயும் மக்களின் தொல்லைகள் தீரும் வண்ணம்

கரிசொடு செருக்கொ ழிந்து காவல்பூண் அமைச்சர் ஆள்க.

பெருங்கவிஞரும், நாடக ஆசிரியரும், புரட்சித் தலைவரை மிகவும் கவர்ந்த உரையாசிரியருமான கவிஞர் புத்தனேரி சுப்பிரமணியன் படைத்தப் பாடலை பதிவு செய்துள்ளேன்.

கோரப் புயலே!

==============

(கவிஞர் புத்தனேரி ரா.சுப்பிரமணியம்)

====================================

கோரப் புயலே! - கொலை

காரப் பயலே!

கோடிக் கணக்கில் சேதம்விளைத்த

கொடுமையும் ஏனோ? - நீ

கூற்றுவன் தானோ?

நாகப்பட்டினம் கரையைத் தாக்கி

நாட்டில் புகுந்தாயே!

நன்செய் புன்செய் தோப்பும் துரவும்

நாசம் செய்தாயே!

வேகத் தாலே கடலும் குமுறி

விண்ணும் கொட்டியதே!

வெள்ளம் புரண்டு பிரளயம் போலே

வேதனை முட்டியதே!

உன்வெறி யாட்டம் எத்தனை எத்தனை

உயிரைக் குடித்ததுவே!

வன்முறை யாலே மக்களை வதைக்கும்

வஞ்சகம் ஏன் கொண்டாய்?

அந்தக் காலம் லெமூரி யாவை

ஆழியும் விழுங்கியதே! - அந்த

அவலத் தாலே செந் தமிழ் நாட்டின்

அளவும் சுருங்கியதே!

மாபெரும் எழுத்தாளர் திரு.நாரண துரைக்கண்ணன் அவர்கள் உணர்வு பூர்வமாக எழுதிய பாடலையும் இணைத்துள்ளேன்.

அறந் தானோ ? இறைவா!

=============================

(நாரண - துரைக்கண்ணன்)

////////////////////////////////////////////////////////////

ஐயகோ! என்ன சொல்வேன் ?

ஆற்றொணாக் கொடுமை! அந்தோ !

பையவே சுழன்ற காற்று

புயலாக மாறி நம்மைக்

கையறவு கொள்ள வைத்த

கொடுமையைக் கூறப் போமோ?

வையத்தில் விளைந்த பச்சைப்

பயிரெலாம் பாழாய்ப் போச்சே !

'வான் மழை அமிழ்த' மென்றே

வள்ளுவர் குறளில் சொன்னார்;

தேன்துளி போன்று வானம்

சொரியாது புயலாய் மாறின்,

நாற்றிசை நடுங்கி நிற்கும்;

நஞ்சாகி நாசஞ் செய்யும்;

மாண்பயன் கெட்டே போகும்;

மக்களும் மாண்டு போவார்.

இருநாட்டில் இதுதான் கண்டோம் ;

என் னன்ன கொடுமை கேட்டோம்?

தருநிகர் தஞ்சை, நாகை,

தென் திசை முற்று மாகப்

பெரும்புயல் காற்று வீசிப்

பல்பொருள் நாச மாக்கிக்

கருங்கடல் போல நஞ்சைக்

கொட்டியே கெடுத்தது; அம்மா!

பெய்துமே கெடுக்கும் வானம் ;

பெய்யாதுங் கெடுக்கும் என்பார்;

கொய்கதிர் சூறைக் காற்றில்

கொத்தாகக் கொட்டிப் போச்சே!

மெய்யாக மழைதான் இன்று

மேதினி குலுங்க வைத்து

நைவித்த துயிர்கள் தம்மை;

நாசமே பலவாய் ஆச்சே!

கவிஞர் அரு.சோமசுந்தரன் அவர்கள் உணர்வுக் குவியலாக பாமாலை படைத்ததையும் இணைத்துள்ளேன்.

மடப்புயல்

==========

(கவிஞர் அரு. சோமசுந்தரன்]

-----------------------------------------------

பல்லாண்டாய் மழையின் றிப் பரிதவித்த

பாரதத்தின் தென்பகுதி மக்க ளுக்குச்

சொல்லாமல் இருமாதம் பெய்து கெட்டுச்

சொத்தெல்லாம் அரித்ததுடன் சூறை யாடிக்

கொல்லாமல் கொன்றதெலாம் நவம்பர் மாதம்

கொட்டாத மழையெல்லாம் கொட்டித் தீர்த் தாய் !

வில்லாக இரும்பெல்லாம் வளைத்து விட்டாய்

வீடெல்லாம் மேடாக விளைத்து விட்டாய்.

கடல் நாகை எனஎண்ணிப் புகழ்ந்த மண்ணைக்

கண்மூடித் திறவாமுன் மிதக்க வைத்துத்

திடமான வீடெல்லாம் நொறுக்கி விட்டுத்

தெருவெல்லாம் பிணக்காடாய் மாற்றி மண்ணை

முடமாக்கும் மடப்புயலே! வங்க மென்னும்

முத்தான கடலுக்குள் தோன்றி இங்கே

இடம்பிடிக்க வந்தாயோ ? மழையைக் கொட்டி

இடி இடிக்க வந்தாயோ ? எதற்கு வந்தாய் ?

பாலாற்றில் பேருந்து வீழ்ந்த தாலே

பலபேரின் உயிர் கொண்டாய் ; வேடசெந்தூர்

நாலாறு திசைவீழக் குடக னாற்றின்

நாற்கோடி அணைபேர்த்துப் பலரைக் கொன்றாய்

சேலாறு காவிரியும் சீரங் கத்தில்

சேராத கொள்ளிடமும் சேர்த்து வைத்தாய்

கோளாறு புயலாகி வருவ துண்டு

கூற்றாகி மண்ணெல்லாம் குடிப்ப துண்டோ !

சாலை யெலாம் உடைத்ததனால் போக்கு மில்லை

சலசலக்கும் வெள்ளத்தால் வரத்து மில்லை

ஆளை யெலாம் கொன்றதனால் மூச்சு மில்லை

அடைமழையாய் நின்றதனால் பேச்சு மில்லை

காளை முதல் கோழிவரை மிதக்க விட்டாய்

கட்டடங்கள் குடிசையெலாம் பறக்க விட்டாய்

பாளைவிடும் தோப்பெல்லாம் பலியா டாக்கிப்

பயிர் விளையும் நிலமெல்லாம் மண்மே டாக்கி.

எளியோரின் உயிர்குடித்தாய் தமிழர் நாட்டில்

இருநூறு கோடிக்குச் செலவு வைத்தாய்

வளியாக வந்தெம்மை வதைத்த தோடு

வங்கத்தில் மறுபுயலாய் வடிவெ டுத்துச்

சுழியாகிச் சூறையென ஆந்தி ரத்தில்

சுற்றுலா மேற்கொண்டு குண்டூர், கிருஷ்ணா

வழியான மாவட்டம் விரைய மாக

வெறியாட்டம் போட்டதெல்லாம் வெற்றி தானா?

கண்ணான தென்னாட்டைச் சாடு தற்கே

கடலோடும் முகிலோடும் கைகள் கோத்துப்

பண்ணான இடிபேச மின்னல் கூசப்

படையெடுத்து வந்தகடும் புயலே ! எங்கள்

புண்ணான நெஞ்சத்தால் பாடு கின்றோம்

புயலே நீ வாராதே ! பொறுமை பூண்டு

மண்ணான தனுக்கோடி பூம்பு காரை

மறவாமல் எண்ணிக்கொள் மறைந்தே போ போ !

அதேபோல், கவிஞர் கோ.வே.பெருமாள் அவர்கள் இயற்றிய பாடலையும் இணைத்துள்ளேன்.

வழங்கிடுவோம், வருவீரே !

============================

(கோ. வே. பெருமாள்]

======================

தேனூறும் ஆறுபல செழிப்பூட்டும் தென்னாடு,

வானூறும் கதிர்மதியம் வயங்குகின்ற பொன்னாடே!

இணனூறும் உழைப்பினையே உன்னுகின்ற இந்நாடு,

கானூறும் கவின்செல்வம் கனிவிக்கும் நம்நாடே!

இன்னமுதத் தமிழகத்தே ஏர்தஞ்சை திருச்சியிலே,

என்னென்போம்? முன்பொருகால், இருபத்தைந் தாண்டுகள்முன்

பன்னியவா யிரத்துத்தொள் ளாயிரத்தைம் பத்திரண்டில்,

மின்னுங்கார்த் திகைத்திங்கள் மிக்கபுயல் தாக்கியதே!

வங்கப்புயல் இப்போதும், வந்திருமுறை சூறையாகி,

அங்கங்கே மழைவெளத்தால், அது நிலைமை தந்ததுவே!

மங்காத ஆந்திரமும் மலையாளம் கன்னடமும்

எங்குமிலா இத்துயர்க்கே இலக்காகி நொந்தனவே!

மாட்டைக் கன்றினை மனிதரைமிக

வாட்ட வந்ததிப் புயலடா !- காலன்

காட்ட வந்ததிச் செயலடா!

உள்ளங் காடெனத் துயரம் மண்டிட

வெள்ளக் காடென் மாறியே-கெட

வீறு புயலது சீறியே !

கொள்ளை கொண்டது வளமும் உயிர்க்குலக்

கொத்த ழிந்திடச் செய்ததே - அழிவுக்

கூத்து மழையெனப் பெய்ததே !

மாலைமாலையாய் மனிதர் கண்களும்

வற்றி டா தகண் ணீருமே-வடிக்க

வாழ்வு கெட்டதைக் கூறுமே !

காலப் புயலுடன் ஓலமிடுமழை

கனத்த தீனியைத் தந்த தாய்-கொடுங்

கழுகுக் கூட்டமும் வந்ததே !

வீழ்ந்த பிணமலை அழுகி நாறிட

விரைந்து போயின கழுகெலாம்-கொத்த

விண்ப றந்தன பொழுதெலாம் !

வாழ்ந்த மானிட வாழ்வு தானொரு

மாயக் கன வென லானதே -உயிர்

மாயக் கன வென லானதே !


தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…


- ஔவை நடராசன், தொடர்புக்கு: thamiz...@gmail.com

---



தேமொழி

unread,
Aug 24, 2020, 11:25:12 PM8/24/20
to மின்தமிழ்
தினசெய்தி நாளிதழில் 17.08.2020 அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்  (பகுதி - 48)
‘‘ஓங்கி வெல்லும் உலகப்புகழ் அண்ணா புகழ் என்றும் வாழ்க!!’’

ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

‘‘ஓங்கி வெல்லும் உலகப்புகழ்
அண்ணா புகழ் என்றும் வாழ்க!!’’

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி எண்ணும்போது புறப்பாடல் நினைவுக்கு வருகிறது. சேரமான் கோக்கோதை மார்பனைச் சங்கப்புலவரான பொய்கையார் பாடிய பாடலில், “நாடன் என்கோ ஊரன் என்கோ பாடிமிழ் பனிக் கடற்சேர்ப்பன் என்கோ! யாங்ஙனம் மொழிகோ ஓங்குவாட் கோதையை” என்று வியக்கிறார்.
அண்ணாவைப் பற்றியும் இப்படித்தான் சொல்ல வேண்டும். அவரை அரசியல்வாதி என்பதா, சீர்திருத்தவாதி என்பதா, பகுத்தறிவுவாதி என்பதா, சிறுகதையாசிரியர் என்பதா, நாவலாசிரியர் என்பதா, நாடகாசிரியர் என்பதா, நடிகர் என்பதா, இதழாசிரியர் என்பதா, இலக்கியவாணர் என்பதா கட்டுரையாளர் என்பதா, சிந்தனையாளர் என்பதா பேச்சாளர் என்பதா, கவிதைச் சுவைஞர் என்பதா, ஆங்கிலப் புலவர் என்பதா, வரலாற்றறிஞர் என்பதா, பொருளாதாரப் பேராசிரியர் என்பதா? எல்லாவற்றுக்கும் எல்லாமாகத் திகழ்கிறார். எனவேதான் பாவேந்தர் பாரதிதாசன் “அண்ணாத்துரை எண்ணாத்துறை இல்லை” எனக் குறித்தார்.

அண்ணாவின் நினைவு குறுந்தொகைப் பாடலையும் நினைவூட்டுகிறது. நாடறிந்த அந்த நல்ல பாடல்

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.!

எனத் தலைவி, தலைவனிடம் தான் கொண்ட தொடர்பைப் போற்றியுரைக்கும் பொன்னார்ந்த பாடலாகும்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘பேசா நாளெல்லாம் பிறவா நாளே’ எனக்கருதி, நாளெல்லாம் பேசிவந்தவர். நாடெல்லாம் பேசி வந்தவர், ஏறத்தாழ 1937 முதல் 1968 வரை முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்து மேடைகளில் வீசிய மெல்லிய பூங்காற்றாக, சீறியெழும் புயலாக வீசி, ஈடிணையற்ற பேச்சாளராக ஒளிர்ந்தார்கள்.
“சினமிகுதானை வானவன் குடகடல் பொலந்தறு நாவாய் ஓட்டிய அவ்வழி பிறர்கலம் செல்கலாது அனையேம்” என்ற புறப்பாடல் வரிகளைப் போல, அண்ணா பேசிய மேடையில் பிறர் பேச்சு எடுபடாமல் போகும் என்ற நிலையிலே அவர் ‘பேச்சுலகப் பெருமலை’யாகத் திகழ்ந்தார்.

“துணித்த நறுந்தேனென்று சொல்லும் சொல்லைத்
தொடங்குகுரல் முழங்குகடல்” என்ற பாவேந்தரின் பாட்டுவரிகளுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தது அவர் பேச்சு. திரு.வி.க. எழுதுவது போலப் பேசினார் என்றால், அண்ணா பேசுவது போல எழுதினார் என்று கூறலாம்.
‘வேலைக்காரி என்னும் வியப்பான நாடகத்தை
வேலை மறந்துவிட்டு விருப்பாகப் பார்த்திடலாம்!
மாலைச் சந்திரோதயத்தில் மங்காத நல்ஒளியில்
மலர்ச்சிபெறும் மனக்குமத மணமாகும் எழுத்துக்கள்
பால்போன்ற கைச்சுவைக்கு பர்னாட்ஷா என்பார்கள்
மேலான அறிவியலில் எம்.என்.ராய் என்பார்கள்
கோலக் குளிர்நடைக்கு கோல்ட்ஸ்மித்தே என்பார்கள்
அவரெல்லாம் உரைகல்தான்! அண்ணா ஓர் அசல் தங்கம்’

என்பது அந்தக் கவிதை.
என்னுடைய அப்பாவாக நான் பாராட்டிப் பெருமைப்பட்ட திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம், திருவாசகத்தையும், திருக்குறளையும் தன்னுடைய செம்மாந்த ஆங்கிலத்தில் உரைவிளக்கம் தந்த பெருமகனாவார். 1930-களிலேயே South Indian Celebrities (Volume-I & II) என்ற ஆங்கில நூலில் அன்னாளைய நீதிக்கட்சித் தலைவர்களைப் பற்றி ஆங்கிலத்தில் மிக நுணுக்கமான ஆழ்ந்த கட்டுரைகளை எழுதியிருந்தார். தந்தை பெரியாரைப் பற்றிய அவருடைய ஆங்கில விளக்கம் மிகப் பிரம்மிப்பாகவும், மறுமலர்ச்சியாகவும் திகழ்ந்து ஆங்கிலேயர்களே வியந்து பாராட்டும் வண்ணம் இருந்தது. அவர் ஒருமுறை, புரட்சித்தலைவரிடம் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி ஓர் ஆங்கிலத் தொடரைத் தன் வெண்கலக் குரலில் சொல்ல, “The Dravidian Demosthenes has inaugurated a new era of Tamil eloquence which is original and wonderful but unorthodox. Tons of thousands of speakers on the modern political platform are found at 30 many echoes of C.N.A. reverberating throughout Tamil Nadu day and night. They also echo and recreate the same dragging, drugging, sing song periods with rhythmically interposed jerks the refreshing and alliterative epithets and double and triple negatives and dramatised questions etc., all of which are the hall mark of Annadurrayan pattern of oratory. The people throng to his meetings in thousands and get thrilled and feasted on the felicitous and rhythmic flow of the ambrosial spear of ornamental Tamil.” அந்த மேற்கோளைக் கேட்டு புரட்சித் தலைவர் பெருமகிழ்ச்சியடைந்து, ‘ஔவை... உங்களை ‘தமிழ்... தமிழ்...’ என்று நான் அழைப்பதுபோல, இனிமேல் திருவாசகமணியை ‘ஆங்கிலம் .... ஆங்கிலம்...’ என்று சொல்லித்தான் அழைத்து மகிழ்வேன்’ என்று பெருமைப்பட்டார்.
உலகத்தில் பல தலைவர்களான, பொதுவுடைமைத் தந்தை கார்ல் மார்க்சு, பொதுவுடைமை ஒளிவிளக்கு எங்கில்சு, அண்ணல் காந்தியடிகள், பண்டிதர் நேரு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றோர் பிறந்து வெற்றி பெற்றனர்.

ஒவ்வொரு தலைவரும் அடுத்த தலைவரையோ தலைவியையோ கொள்கை, கோட்பாடு அவைகளை விட்டுச் சென்று வழிநடத்த பாதை அமைத்துத் தந்தனர். குறிப்பாக, புரட்சித் தலைவர் மட்டும், தான் கண்ட, கொண்ட ஒரே தலைவரான பேரறிஞர் அண்ணாவை மட்டும் என்று சொன்னால் மிகையாகாது. அவரை வாழ்த்துவது, வணங்குவது, போற்றுவது, எந்த நேரத்திலும் அவர் பெயரையே உச்சரிப்பது என்பதைத் தன் வாழ்நாளின் தவமாகவே மேற்கொண்டார். புரட்சித் தலைவர் தன் திரைப்பாடல்களிலும், வசன உச்சரிப்புகளிலும், கதைப் பாத்திரங்களிலும், பேரறிஞர் அண்ணாவை என்றென்றும் நினைத்து நினைத்துப் படமெடுத்து மக்களுக்குப் பாடமாக்கினார்கள். அதனால்தான், அப்பொழுதே பேரறிஞர் அண்ணா புரட்சித் தலைவரை என் இதயக்கனி என்று பாராட்டி அழகு பார்த்தார். அண்ணா எந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கம்போதும், பொன்மனச் செம்மல் கூட்டத்தின் நடுவில் நடந்து வரும்போதே மக்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியைக் கண்ணுற்று அரசியல் எழுச்சியாக மாறுவதை பேரறிஞர் அண்ணா அறுபதுகளிலேயே கண்டு பெருமைப்பட்டார்.

ஓராயிரம் மேடைப்பேச்சும், பலபக்கக் கட்சிக் கொள்கை விளக்கங்களையும்விட புரட்சித் தலைவர் நடித்த படக்காட்சிகளும், பாடல்வரிகளும் பேரறிஞர் அண்ணாவின் புகழை ஓங்கி விஞ்சி நிற்க வைத்தது.
அண்ணா அவர்கள் 1937 ஆம் ஆண்டு முதல் பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டுப் பேசியும் எழுதியும் வந்தார். அந்நாள் முதல் 1969ஆம் ஆண்டு, பிப்ரவரி 2ஆம் நாள் அவர் மறையும் வரை, 32 ஆண்டுகளை, “அண்ணாவின் யுகம்” என்றே அழைக்கலாம். இந்த நெடிய காலப்பகுதியில், வாரந்தோறும் அவர் ஏடுகளில் தொடர்ந்து எழுதி வந்தவை, நாள் தவறாமல் அவர் ஆற்றிய ஆற்றொழுக்கான பேச்சுகள் யாவற்றையும் தொகுத்தால், அவை ஒரு லட்சம் பக்கங்கள் கொண்ட கருத்துக் குவியல்களாகும். கலைக் களஞ்சியம் போல் அவற்றைத் தொகுத்து, ஒரு சீராக வெளியிடுவதானால் 60 தொகுதிகளைச் சிறப்பாக உருவாக்க முடியும்.

தந்தை பெரியாருடைய சிந்தனைகளை 3 தொகுதிகளாகவும், அரவிந்தருடைய சிந்தனைகளை ஆங்கிலத்தில் 30 தொகுதிகளாகவும், ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளைத் தமிழில் 8 தொகுதிகளாகவும், ஆங்கிலத்தில் 13 தொகுதிகளாகவும், காந்தியடிகளின் சிந்தனைகளைத் தமிழில் 13 தொகுதிகளாகவும் ஆங்கிலத்தில் 70 தொகுதிகளாகவும் நேருவின் சிந்தனைகளை ஆங்கிலத்தில் 7 தொகுதிகளாகவும் வெளியிட்டுள்ளனர். இப்படி, பல்வேறு வெளிநாட்டுப் பேரறிஞர்களுடைய சிந்தனைகளையும் பல்வேறு தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். அந்த நிலை அண்ணாவின் கருத்துக்கும் ஏற்படும் பொன்னான சூழலை நமது அரசு உருவாக்க வேண்டும் என்று நான் தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக இருந்தபோது, 1986-87-ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகக் கூட்டமொன்றில் கேட்டுக் கொண்டேன். இதைத்தான் புரட்சித் தலைவர் மிகவும் விரும்பி பேரறிஞர் அண்ணாவின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று நெடுநாள் நினைந்து நினைந்து இதே சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1979-ஆம் ஆண்டு விதை தூவினார். அதைச் செயலாக மாற்றிய பெருமை புரட்சித்தலைவி அம்மாவைச் சாரும். 1994-ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் நாளன்று (அரசாணை நிலை எண்.190, தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை) ரூ.75 லட்சம் அண்ணா குடும்பத்திற்கு வழங்கி நூல்களை நாட்டுடைமையாக்கினார்கள்.
என்னுடைய இனிய நண்பரும் பதிப்புத்துறையிலேயே ஆழங்கால்ப்பட்டவருமான பெரும்பதிப்பாசிரியர் ‘தமிழ்மண்’ பதிப்பக உரிமையாளர் திரு. இளவழகனாரின் அரிய முயற்சியில், பேரறிஞர் அண்ணாவின் 50,000 பக்க உரைகளை 64 தொகுதிகளாக அண்மையில் வெளியிட்டுள்ளார். இந்த வெளியீடு பெருமிதந் தந்தாலும் நான் குறிப்பிட்டவாறு பேரறிஞர் அண்ணாவின் இன்னும் காணக்கிடைக்காத ஆங்காங்கே சிதறிய முத்துக்களையும் பவளங்களையும் வைரங்களையும் தொகுத்து மாபெரும் அண்ணா நூல்மாலையாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோளாகும்.
கடந்த ஏழாண்டுகளாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பேரறிஞர் அண்ணாவின் கனவுகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருவதைப் பார்க்கும்போது, நிறுவனத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆய்விருக்கை வாயிலாக வெளியிடுவதன் மூலம், பேரறிஞர் அண்ணாவின் அனைத்துச் சிந்தனைகளையும் அண்ணாவின் முழுமையான தொகுப்பாக வெளியிட வேண்டும் என்ற புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவும் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.
பேரறிஞர் அண்ணா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவது குறித்து புரட்சித் தலைவர் அவர்கள், (15.09.1979 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்) ஆற்றிய உரை வருமாறு:-
“இங்கே எழுத்தாளர் ஜெகசிற்பியன் துணைவியாருக்குப் பரிசு அளிக்கப்பட்டது. அதனை பரிசு என்பதா?காணிக்கை என்பதா? இந்தக் காணிக்கையை ஜெகசிற்பியன் உயிரோடு இருந்து பெற்று இருந்தால் மகிழ்ச்சி அதிகமாக இருந்திருக்கும். தமிழகத்தின் துரதிருஷ்டம் பல நல்லவர்களை அவர்கள் மறைந்த பிறகுதான் மதிக்கிறோம். இந்த அம்மையாருக்குத் தந்த காணிக்கை, அவர் இழந்த இழப்புக்கு ஈடு ஆகாது.

பல எழுத்தாளார்கள் நூல்களை எழுதுகிறார்கள். அதை வெளியிட எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நான் அறிவேன். அச்சகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்குகிறார்கள். இதனால் நல்ல எழுத்தாளர்கள் சோர்ந்து விடுகிறார்கள். நிறைய பணம் பெற வேண்டியவர்கள் சில ஆயிரத்தைப் பெற்றுக் கொண்டு கொடுத்து விடுகிறார்கள். யாரோ இலட்சக்கணக்கில் பெறுகிறார்கள். இந்த நிலையைத் தடுக்க எழுத்தாளர்களுக்குப் பாதுகாப்புத் தர அரசால்தான் முடியும்.

எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய நூல்களை அச்சடிக்க விரும்பி, அதனை அரசிடம் ஒப்படைத்து, அதன் பலனை அரசும் எடுத்துக் கொண்டு, எங்களுக்கும் கொடுங்கள் என்று கேட்கும் நிலை ஏற்படவேண்டும்.
இதனைச் செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்படும், இதைச் செய்ய அரசுக்கு ஆசை இருக்கிறது. இதற்கு அறிஞர்களும், ஆன்றோர்களும் ஆசியும் ஒத்துழைப்பும் தரவேண்டும்.

அண்ணா அவர்கள் எழுதிய நூல்களை அரசே உரிமைபெற்று வெளியிட ஆவல் கொண்டுள்ளது. இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். அது போல் பலருடைய நூல்களையும் வெளியிட முயல்வோம்.
அதேபோல் காஞ்சியில் அண்ணா அவர்கள் வாழ்ந்த இல்லத்தை அண்ணா நினைவாலயமாக ஆக்க ஆர்வம் கொண்டிருக்கிறோம்.

இதனைச் செயல்படுத்த நல்ல விவரம் தெரிந்தவர்-இதில் நம்பிக்கை உள்ளவர்களைக் கொண்ட சிறுகுழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா வாழ்ந்த இல்லத்தை விலைபேசி, விலைக்கு வாங்க இருக்கிறோம்.
தமிழகத்திலே ஒரு புது மலர்ச்சியை ஏற்படுத்த முயன்று வெற்றிபெறுவோம் என்ற என் ஆவலையும் நம்பிக்கையையும் தெரிவித்துக் கொண்டு நல்லுள்ளங்களுக்கு வணக்கம் கூறி, அண்ணா நாமம் வாழ்க என்று சொல்லி விடைபெறுகிறேன். வணக்கம்.”
தொடர்வோம் பொன்மனச்செம்மலின் பொன்னான நினைவுகளை...


- ஔவை நடராசன், தொடர்புக்கு: thamiz...@gmail.com

---

தேமொழி

unread,
Aug 31, 2020, 11:17:26 PM8/31/20
to மின்தமிழ்
source -  https://www.facebook.com/283386165008644/photos/a.718844068129516/4906279802719234/ 
 
தினசெய்தி நாளிதழில்  24.08.2020 அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்  (பகுதி - 49)
‘‘இமயம் வளர்ந்த வரலாறு’’

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

என்னுடைய இனிய நண்பர் நாகை தருமனை புரட்சித்தலைவரின் இணையற்ற அறிவுத் தொண்டராகவும், ஆற்றல் வாய்ந்த எழுத்துத் திலகமாகவும், பெரும் நூலாசிரியராகவும் நாடே கண்டு வியந்தது. புரட்சித் தலைவர் தொட்டால் பொன்னாய் மிளிரும் என்பதற்கேற்ப 'எழுத்துச் சுடர்' நாகை தருமன், எளிய குடும்பப் பிண்ணனியில் இருந்து வாழ்வைத் தொடங்கி, திரைப்படம், நாடகம், ஊடகம் மற்றும் பத்திரிக்கையில் பணியாற்றுவதே பெரும் பணியாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அண்மையில் தமிழக அரசு, புரட்சித் தலைவரின் நூற்றாண்டு விழாவைப் பெருவிழாவாகக் கொண்டாடியபோது, என்னுடைய மகன் அருள், அவரைத் தேடி அவர் வாழும் லாயிட்சு குடியிருப்பில் சென்று அளவளாவியதை மிக நெகிழ்ச்சியாக என்னிடம் தெரிவித்தான். தருமன் அவர்கள் என் மீது கொண்ட அந்த அளப்பறிய அன்பை என் மகன் கன்னத்தை தடவி, முத்தமிட்டு அவனை வாழ்த்தி வழியனுப்பியபோது, என்னுடைய பொன்னான நினைவுகள் மலரத் தொடங்கின.

பொன்மனச் செம்மல் மிக நுணுக்கமாகத் தன்னுடைய அறிவுத் தொண்டர்களைத் தெரிவு செய்வதை நான் பல்லாண்டுகளாக நன்கறிவேன். எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும், அந்த எழுத்தால் என்ன விளைவு வரும் என்பதை நுண்மாண் நுழைபுலத்துடன் சிந்தித்த பெரும் சிந்தனையாளர் நம் புரட்சித்தலைவர் என்று சொன்னால் மிகையாகாது. பேரறிஞர் அண்ணாவிடம் படிப்படியாகப் பயின்று, எழுத்தெண்ணி இதழ் பணியில் முத்திரை பதித்தார். 'மறைந்த மாமேதைக்கு தலைவர்கள், அறிஞர்கள் இதய அஞ்சலி' என்று எழுபதுகளில் ஒரு அருமையான நானூறு பக்கங்கள் கொண்ட நூல் வெளியானது. அந்நூல், பேரறிஞர் அண்ணா மறைந்த பிறகு, அனைத்து தலைவர்களின் அறிக்கைகள், கடிதங்கள் மிக நுட்பமாக தொகுக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஒரு அருமையான நூலாகும். அதைத் தொகுத்து வெளியிட்ட பெருமை தருமனைச் சாரும்.

அவ்வரிசையிலேதான் புரட்சித்தலைவரைப் பார்த்துப் பார்த்து, பழகிப் பழகி, உணர்ந்து உணர்ந்து அவரைப் பற்றி ஏராளமான புத்தகங்களை தமிழகத்திற்கு அறிமுகம் செய்தவர்களில் அறிஞர் தருமனுக்குத்தான் முதலிடம். 'புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.’, 'பாரத ரத்னா எம்.ஜி.ஆர்.’, 'இதயக்கனி எம்.ஜி.ஆர்.’, 'திரைக்கலைஞர்கள் பார்வையில் எம்.ஜி.ஆர்.’ என்று வெளிவந்த படைப்புகளே பல நூறாகும்.

புரட்சித் தலைவரிடம் பழகி திரையுலகத்தில் தன்னைத் தோய்த்துக் கொண்டு அவர் நடித்த 'மீனவ நண்பன்’, 'நவரத்தினம்' போன்ற படங்களுக்குக் கதை-வசனம் எழுதி, துணை இயக்குநராகப் பணியாற்றியதெல்லாம் என் நினைவுக்கு வருகிறது.

சமயம் சார்ந்த திரைப்படங்களின் ஒளி விளக்கான திரு.ஏ.பி.நாகராஜனுக்கு உதவியாக பல பக்திப் படங்களுக்கும் இவர் வசனம் எழுதியதையும், பாடல் எழுதி வழங்கியதையும் என்னிடம் பலமுறை சொல்லிப் பெருமைப்பட்டார்.

நடிகர் திலகம் நடித்த 'துணை' படத்திற்கு கதை-வசனம் எழுதிப் புகழ் பெற்றார். அண்ணா பத்திரிக்கையின் பெரும் தூணாய் பணியாற்றி புரட்சித் தலைவரே 'நாகை தருமன் கட்டுரைகளைப் பார்த்தால் போதும் நான் பார்க்கத் தேவையில்லை' என்று கூறும் அளவிற்கு மாபெரும் நம்பிக்கையைப் பெற்றார். பிறகு, 'நவமணி’, 'தாய்' பத்திரிகைகளில் பணியாற்றியதை நான் நன்கறிவேன். எனக்கு மிகவும் நெருக்கமாக, 'வீடுதோறும் வள்ளுவர்' என்ற மிகப்பெரிய இலக்கியத் திட்டத்தை வகுத்துக் கொண்டு திருவள்ளுவர் படங்களை ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அவர்களுக்கு வழங்கி, குடும்பத்தில் மூத்தவர்கள் படத்தையும் வழிபடும் தெய்வங்கள் படத்தையும் வைத்திருப்பது போல, இல்லத்தின் வாயில்களில் வள்ளுவப் பேராசானின் படத்தைப் பொருத்த வேண்டும் என்று பல்லாண்டுகளுக்கு முன்பே புரட்சி செய்த பெருமை இவரைச் சாரும். இன்றைக்கும் அவருடைய வீட்டு வாயிலில் திருவள்ளுவர் படம் மிளிர்வதைக் காணலாம். அவருடைய இனிய தொண்டர்களாக இளவர் தேனி ராஜா தாசனும், திருப்பூர் இரவிச்சந்திரனும் திகழ்கிறார்கள். எழுத்துச் சிகரம் நாகை தருமன் பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றாலும், இதுவரை நிறைவேறாத ஒரு பரிசு உள்ளது. வயதான ஔவை சொல்வதைக் காட்டிலும், யார் பரிந்துரைக்க வேண்டும் என்றால், எந்த விருதுக்கு என்றால், இளமைக்கு இளமையும், திறமைக்குத் திறமையும், புலமைக்குப் புலமையுமான மேனாள் பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை அமைச்சர், நாடறிந்த பேச்சாளர், சிந்தனையாளர், மேனாள் அவைத்தலைவர், என் இனிய மாணவர் டாக்டர் காளிமுத்துவின் தலைமாணாக்கரான முனைவர் வைகைச்செல்வன், தமிழக அரசின் 'பேரறிஞர் அண்ணா' விருதை எழுத்துச் சிகரம் நாகை தருமனுக்கு வழங்குமாறு தமிழக அரசிடம் பரிந்துரைக்க வேண்டுகிறேன்.

நண்பர் நாகை தருமன் புரட்சித் தலைவரைப் பற்றி ஒரு அரிய தொகுப்பை என் மகனிடம் வழங்கியிருந்தார். அந்த கையெழுத்துப் படியில் 1951 முதல் 1987 வரை முப்பத்தாறு ஆண்டு காலம் நம்மை மீள் பார்வை பார்த்து மலைக்க வைக்கிறது.

புரட்சித்தலைவர்தான் அவருடைய ஒவ்வோர் படி வளர்ச்சிக்கும் காரணம். அவரைப் பற்றிய சில அரிய செய்திகளை தொடர்ந்து என் பகுதியில் நான் வெளியிட்டு மகிழ்கிறேன்.

புரட்சித்தலைவர் வளா்ந்த வரலாறு

- நாகை தருமன்

1951: மர்மயோகி வெளிவந்து. ‘சர்வாதிகாரி’ ‘ அந்தமான் கைதி’, 'என் தங்கை’, ‘குமாரி’, 'நாம்', ‘ஜெனோவா’ போன்ற திரைப்படங்கள் படங்கள் வெளிவந்தன.
1953 - 1963: நாடகக் குழு தொடக்கம்.
1953: அன்னை சத்யா மரணம் அன்னை வாழ்ந்து மறைந்த லாயிட்ச்சு சாலை வீட்டை அவர் விரும்பியபடி வாங்கினார். புரட்சித்லைவர் 'சத்யா இல்லம்’ என்று பெயரிட்டார்.
4-1-1958: பண்டித நேருவுக்குக் கருப்புக்கொடி காட்டக் கழகம் முடிவு. கழகத் தலைவர்கள், புரட்சித்தலைவர் கைது.
1959: தமிழ் நடிகர் சங்கத் தலைவரானார். ‘தென்னிந்திய நடிகர் சங்கம்' என்று பெயர் மாற்றம் செய்தார்.
16-10-1959: தங்க வாள் மதுரையில் பரிசளிப்பு
1959: சீர்காழியின் நாடகம் நடந்தபோது எலும்புமுறிவு காலில் ஏற்பட்டது.
1959-64 சென்னை மாநகராட்சித் தேர்தல்களில் கழகம் வெற்றி பெற அயராது அரும் பணியாற்றினார்.
1957-62 பொதுத்தேர்தல்களில் சூறாவளிச் சுற்றுப்பயணம். ‘கழகத்திற்கு நிதியளிப்பதைவிட, உன் முகத்தைக் காண்பித்து இலட்சோபலட்சம் மக்கள் ஆதரவைத் திரட்டு’ என்று பேரறிஞர் அண்ணா கூறினார்.
1963 தமிழ்நாடு சட்டப்பேரவை மேலவைக்கு பேரறிஞர் அண்ணா விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1964 - ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்புக்கு முதன்முதலாக எம்.ஜி.ஆருடன் இணைந்து கதாநாயகியாக நடிக்க புதிய இளம் பெண் வருகிறார்.
1967 பரங்கிமலைத் தொகுதியில் வெற்றி! அண்ணா ஆட்சி! தமிழ்நாடு சிறுசேமிப்புத் திட்டத் துணைத் தலைவராகிறார்.
12.1.1967 துப்பாக்கியால் எம்.ஜி.ஆர் வீட்டில் எம்.ஆர்.ராதா அவரைச் சுட்டுவிட்டு, தானும் சுட்டுக் கொண்டார்.
1.1.1968: இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் உலகமே வியக்கும் அளவுக்குப் பிரமாண்டமாகப் பிரமாதமாக... பேறிஞர் அண்ணா முதல்வராக இருந்த இந்தச் சமயத்தில் நடந்தது.
1968: ‘அடிமைப்பெண்’ படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகராகச் சிங்கப்பூர் சினிமா இரசிகர் சங்கம் தேர்ந்தெடுத்தது.
3.2.1969 பேரறிஞர் அண்ணா மறைவு. இராஜாஜி மண்டபத்தில் அண்ணாவின் உடலை அவர் தாயாருக்கும் காண்பித்தல். ஊர்வலத்தில் சோகமாக வேனில் வருவது.
1971: பொதுத்தேர்தலில் கழக வெற்றிக்காக இரவு, பகலாகப் பல நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம். மீண்டும் அவர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
10.7.1972 : ‘பாரத்’ விருதுபெற்ற எம்.ஜி.ஆர் சிங்கப்பூருக்குக் கலைக்குழுவுடன் பயணம். செல்வி ஜெயலலிதா சென்றார்.
1.10.1972: எம்.ஜி.ஆர் மன்றங்களின் ஆலோசனைக் கூட்டம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கருத்து முழக்கம்.
8.10.1972: திருக்கழுக்குன்றத்தில் வரலாறு படைத்த மாபெரும் கூட்டம். புரட்சித்தலைவர், கழகத் தலைமையிடம் கணக்குக் கேட்டு, ஊழலை ஒழிக்கத் திட்டம் தருகிறார்.
10.10.1972: புரட்சித்தலைவர் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம். நாடு முழுதும் கொந்தளிப்பு. பல்லாயிரக் கணக்கானவர்கள் கைது
16.10.1972 : அண்ணா தி.மு.கழகம். தொடக்கம். கழகக் கொடியின் அமைப்பைப் புரட்சித்தலைவர் வெளியிடுகிறார்.
22.5.1973 அண்ணா தி.மு.கழகம் பெற்ற முதல் வெற்றி! திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி!
1.7.1973 சோவியத்து ரசியா, இலண்டன், பாரீசு, நைரோபி உலகப் பயணம் சென்று 18.8.1973 தாயகம் திரும்பினார்.
29.9.1973 ‘அண்ணாயிசம்’ அறிவிப்பு.
4.1.1974 கழகப் பொதுச் செயலாளராக ஏகமனதாகத் தேர்வு.
22.2.1974 புதுவையில் 11 இடங்களில் வெற்றி! கோவை சட்டசபைத் தேர்தலில் வெற்றி!
16.4.1974 புதுவையில் கழக அரசு பதவி ஏற்பு.
25.10.74: அமெரிக்காவில் உள்ள தலைசிறந்த பல்கலைக் கழகங்களான விசுகான்சின், சிகாகோ, பெர்க்லி, கலிபோர்னியா, பெனிசில்வேனியா, ஆகியவைகளின் அதிகாரப்பூர்வமான அன்பழைப்பு!
31.1.1976: புரட்சித் தலைவர் தர்மயுத்தம் வெற்றி! கலைஞர் கருணாநிதி அமைச்சரவை- சட்டசபை கலைப்பு! குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம்
1977: பொதுத் தேர்தல். புரட்சித் தலைவர் தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம். பிரதமர் இந்திரா காந்தியுடன் கலந்து கொண்ட கூட்டங்கள்
20.3.1977: புதுவை உள்பட 40 இடங்களில் புரட்சித் தலைவர் தலைமையில் போட்டியிட்ட கழக முற்போக்குக் கூட்டணி 36 இடங்களில் வெற்றி!
15.6.1977: அருப்புக் கோட்டை தொகுதியில் 29,378 வாக்கு வித்தியாசத்தில் புரட்சித் தலைவர் வெற்றி.
16.6.1977: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 195 இடங்களில் போட்டியிட்டு, 127 இடங்களில் வென்று, தனிப் பெரும்பான்மை பெற்றது கழகம்.
17.6.1977: புதுவை சட்டமன்றத் தேர்தலில் 14 இடங்களில் வெற்றி! 2.7.77-ல் எஸ்.ராமசாமி முதல்வராகப் பதவி ஏற்பு
30.6.77: புரட்சித் தலைவர் தமிழக முதல்வராகப் பதவியேற்பு!
“ஒரு இயக்கத்தைப் புதிதாகத் தொடங்கி, 56 மாதங்களில் ஆட்சியைப் பிடித்த மக்கள் செல்வாக்கு பெற்ற மகத்தான தலைவர் என்ற அறிவிப்பு!
18.9.77: தந்தை பெரியார் சிலை திறப்பு. பாபு ஜெகஜீவன் ராம் சிலையைத் திறந்து வைக்கிறார். நாவலர் நெடுஞ்செழியன் கழகத்தில் இணைகிறார்.
1981: அனைத்திந்திய அண்ணா தி.மு.கழக ஆட்சி நீக்கப்பட்ட்து. குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி கண்ட கழகம் அழிந்தது என்று கணக்கு போட்டவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டினர். மே மாதம் நடந்த தேர்தலில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மதுரையில் போட்டியிட்டு வென்றார். கழகம் அமோக வெற்றி பெற்றது. மீண்டும் முதல்வரானார்.
1982: அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகத்தில் செல்வி ஜெயலலிதா உறுப்பினராகச் சேர்ந்தார். கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம்
1983: சென்னைப் பல்கலைக் கழகம், புரட்சித் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது
1984: தன் வளர்ச்சியை விரும்பாத சிலரால், புரட்சித் தலைவருக்கு இக்கட்டான நிலை ஏற்படுவதைத் தவிர்க்கப் புரட்சித் தலைவி நினைத்தார். இதனால் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

தேமொழி

unread,
Aug 31, 2020, 11:45:31 PM8/31/20
to மின்தமிழ்


தினசெய்தி நாளிதழில்  31.08.2020 அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்  (பகுதி - 50)
‘‘இமயம் வளர்ந்த வரலாறு’’
தொடர்ச்சி ... 

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

எழுத்துச் சிகரம் நாகை தருமன் புரட்சித் தலைவரைப் பற்றி 1951 முதல் 1987 வரை தொகுத்த பட்டியலினை சென்றவாரம் வெளியிட்டேன். அதன் தொடர்ச்சியை பார்ப்போம் ..... 
2.10.1984: அண்ணல் காந்தியடிகள் சிலைக்குப் புரட்சித் தலைவர் மாலை அணிவித்தார். 
6.10.1984: அப்பல்லோ மருத்துவமனையில் புரட்சித் தலைவர் அனுமதிக்கப்பட்டார். பிரதமர் இந்திராகாந்தி, முதலமைச்சர் உடல் நலம் குறித்து மருத்துவமனைக்கு தொலைபேசி வாயிலாக அறிகிறார். 
16.10.1984: பிரதமர் அன்னை இந்திராகாந்தி நேரில் சென்னை வந்து புரட்சித் தலைவரைப் பார்த்து விட்டுச் செல்கிறார். வாழ்த்து கூறுகிறார். எழ முயல்பவரைப் படுக்கச் சொல்கிறார் அன்னை இந்திரா 
“உங்களுக்காக தமிழ்நாடு மட்டுமல்ல இந்த நாடே பிரார்த்திக்கிறது. முன்பு சங்கடங்களைச் சமாளித்தது போலவே இந்த நெருக்கடியையும் நீங்கள் சமாளிப்பீர்கள்” 
அன்னை இந்திராகாந்தியின் ஆசி இது. இதுதான் அவர்கள் இருவரது கடைசி சந்திப்பு புரட்சித் தலைவரைப் பார்க்கக்கூடப் புரட்சித் தலைவியை அனுமதிக்காமல் மறுக்கின்றனர். வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பிரெட் மேன் என்ற டாக்டர் மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்றார். 

∙   ஜப்பானிலிருந்து டாக்டர் கானு வந்தார். 
∙   தமிழகம் முழுதும் வழிபாடு. 
∙   மக்கள் கலக்கம் - கவலை- கண்ணீர் 
∙   பிரதமர் இந்திரா சுட்டுக்கொலை! 

நவம்பர் 1984: பிரதமர் ராஜீவ் காந்தி உதவியினால், தனி விமானத்தில் டாக்டர்கள் துணையோடு புரட்சித் தலைவர் அமெரிக்கா செல்கிறார். புரூக்ளின் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். 
27.11.1984: ஆண்டிப்பட்டியில் போட்டியிடப் புரட்சித் தலைவர் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. 
19.12.84: மாற்று சிறுநீரகம் பொருத்தப்படுகிறது- புரட்சித் தலைவருக்கு, பெரியவர் சக்ரபாணி மகள் லீலாவதி சிறுநீரகம் கொடுத்து உதவுகிறார். 3 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்து முடிகிறது! 
24.12.1984: பொதுத் தேர்தலின் அனைத்திந்திய அண்ணா தி.மு.க வெற்றி! 

∙   மூன்றாவது முறையாகப் புரட்சித் தலைவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

2.2.1985: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சென்னை வருகை 

∙   பரங்கிமலை இராணுவ மைதானத்தில் தமிழகமே வரவேற்கிறது 
∙   அதிகாலையில் தலைவரைக் காண முதல் நாளிலிருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது 
∙   முதல்வராகப் பதவியேற்பு! 
∙   பேசும் திறனில் பெரும்பகுதியை இழந்திருந்த புரட்சித் தலைவர் தன் மன உறுதியால், விடாமுயற்சியால் ஓரளவு தேர்ச்சி பெற்றார். 

புரட்சித்தலைவரின் சாதனை வரிசை: 
∙   மேல்சபைக் கலைப்பு 
∙   25 ஆயிரம் பேருக்கு வேலை. ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி. சத்துணவுத் திட்டத்துக்கு 200 கோடி 

13.7.1986: எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் மாநாடு. மதுரையில் கூடியது. புரட்சிச் செல்விக்கு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீண்டும் முக்கியத்துவம். கொள்கை பரப்புச் செயலாளராக ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். புரட்சித் தலைவர் மனம் திறந்து பாராட்டு! இரண்டாவது நாள் ஆறு அடி நீளமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிச் செங்கோல் முதல்வர் எம்.ஜி.ஆரிடம். புரட்சிச் செல்வி வழங்கினார். 
செப்-1986: அமெரிக்காவுக்குப் புரட்சித் தலைவர் பயணம், மருத்துவப் பரிசோதனை முடிந்து திரும்பினார். 
அக்டோபர்-1986: புரட்சித் தலைவரே கழகப் பொதுச் செயலாளரானார் 

ஆட்சியின் சாதனைப் பட்டியல்:
சூலை- 1987: கடற்கரைக் கூட்டம். புரட்சித் தலைவருக்குப் பிரதமர் இராஜீவ் காந்தி புகழ்மாலை! 
ஆகத்து- 1987: அமெரிக்கா சென்று, பரிசோதனையை முடித்துக் கொண்டு செப்டம்பர் மாதம் திரும்பினார். 
22.12.87: நேரு சிலையைப் பிரதமர் இராஜீவ் காந்தி திறந்து வைத்தார். புரட்சித் தலைவர் கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சியாகும். 
24.12.87: புரட்சித் தலைவர் அதிகாலை நேரத்தில் உடலால் மறைந்தார். உணர்வுகளால் மக்களோடு ஒன்றிவிட்டார். 

∙   இராஜாஜி மண்டபத்தில் நல்லுடல் வைக்கப்பட்டு பிரதமர் இராஜீவ் காந்தி, மத்திய, மாநிலங்களின் அமைச்சர்கள் அஞ்சலி, பிரமுகர்கள், மக்கள் அழுகை 
∙   அலைகடல்கள் யாவும் ஆர்ப்பரித்துச் சென்னைக்கு வந்தது போல் கூட்டம் அதிர்ச்சியால் மாண்டோர்…. தீக்குளித்துச் செத்தவர்கள்…. விஷமருந்திப் பலியானோர்….. நெரிசலில் சிக்கி உயிர் துறந்தோர் ஏராளம்…. 

25.12.87: பீரங்கி வண்டியில் புரட்சித் தலைவர் உடல் வைக்கப்படுகிறது. இறுதி ஊர்வலம். மாலை 3 மணியளவில் தான் பின்பற்றிய தலைவர் பேரறிஞர் அண்ணா உறங்கும் நினைவிடம் அருகில் புரட்சித் தலைவர் ஓய்வு கொள்கிறார். துப்பாக்கிக் குண்டுகள் முழங்குகின்றன! இராணுவத்தினர்… முப்படையும் இதோ மரியாதை செய்கின்றன! மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்குகிறது 

எழுத்துச் சுடர் நாகை தருமன் எழுதிய வரிகள் வருமாறு:- 
புரட்சித் தலைவர் இறந்துவிட்டாரா? மறைந்து விட்டாரா? சரியாத சரித்திரம் படைத்து, சகாப்தமாகத் திகழ்பவரை….. சாவு தொடமுடியுமா? வற்றாத வரலாறாகத் திகழ்ந்த வானமளந்த புகழ்கொண்ட…. வள்ளலை நம்மிடமிருந்து அள்ளிச்செல்ல காலனும் மனம் கலங்குவானே! புரட்சித் தலைவர், உலகம் முழுதும் உள்ள கருணை உள்ளங்களில் குடி கொண்டுள்ளார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றார் அண்ணா. மக்கள் மத்தியில் அண்ணாவுடன் புரட்சித் தலைவர்! அந்த ஏழை எளிய மக்களின் சிரிப்பில் அண்ணாவும், அவரது அருமைத்தம்பி, இதயக்கனி புரட்சித் தலைவரும் இணைந்து தோன்றுவதைக் காணுங்கள். அண்ணா புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி மக்கள்! இயேசு நாதர்’ ”மூன்று நாளில் மீண்டும் உயிர்த்தெழுவேன்! தோன்றுவேன் என்றார். இதோ….. முதல்வர் புரட்சித் தலைவி மக்கள் மத்தியில் புரட்சித் தலைவர்……. நம் எம்.ஜி.ஆர்…. பிறந்துவிட்டார்….! முதல்வராகப் பதவியேற்பு! மக்களுக்கு உதவி. வடிவத்தால் - வேறுபட்டாலும், செயல்களால் ஒன்றுபடுவதைக் காணுங்கள்! 

சாதனைகள்:
புரட்சித் தலைவர் சத்துணவு உண்ணும் குழந்தைகளுடனும் தாய் உள்ளம் கொண்டவரைத் தலைவராக - முதல்வராகக் கண்டோம்! அவர்…. புரட்சித் தலைவர்! ‘பாரத ரத்னா’ டாக்டர் புரட்சித் தலைவர்! புரட்சித் தலைவி மக்களுக்குப் பரிவுடன் பொருள்கள் வழங்குதல் தாயே- தலைவியாக - முதல்வராகக் காண்கின்றோம்! இதோ… புரட்சித் தலைவி! புத்துலகம் படைக்கப் புறப்பட்ட புதுமைப்பெண்….. எழுச்சி மிக்க இணையற்ற தலைவி- முதல்வி- புரட்சித் தலைவர் கண்ட கனவுகளை நனவாக்க, அவர் வாரிசாக அவராலேயே அறிமுகப்படுத்தப்பட்ட தலைவி….. மதுரையில் நடைபெற்ற வீரவரலாறு கூறும் வெற்றி மாநாடு, ஊர்வலம்! புரட்சித் தலைவி மகிழ்ச்சி மக்கள் ஆதரவெனும் மகத்தான சக்தி பெற்ற தலைவி…. டாக்டர் புரட்சித் தலைவி! ஆமாம்…. அதே கனிவு….. அடடா… அதே கருணை….. கண்டிப்பு…. தூங்காமை... கல்வி… துணிவுடமை…. சட்டப்பேரவையில் அண்ணா படம் அருகில் புரட்சித் தலைவர் படத்தைத் திறந்து வைத்தார். நீங்காது கொண்டு, தமிழகம் தழைத்து வளர தளராது பாடுபடும் தனிப்பெரும் தலைவி! தமிழ்நாடு முதன்முதலாகத் தேர்ந்தெடுத்த தமிழக முதல்வர்! பொதுத் தேர்தலில் புதிய சாதனையாக அமோக ஆதரவு பெற்ற வீராங்கனை தமிழக மக்கள் கூட்டம் எம்.ஜி.ஆர் நடை….. புரட்சித் தலைவர் நடப்பது 

∙   உற்று கவனியுங்கள்…. தமிழகத்தை….. தமிழக முதல்வரை! 
∙   இதோ!.....எம்.ஜி.ஆர் பிறந்து விட்டார்… வந்துவிட்டார் 
∙   எம்.ஜி.ஆர் பிறந்தார் 
∙   தமிழ்நாட்டில் 65 லட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு 9.12.78: புரட்சித் தலைவர் அயல்நாட்டுப் பயணமாக 40 நாட்கள் சென்று திரும்புதல் 

24.9.1979: பெரியார் மாவட்டம் தொடக்கம் 
25.5.1983: கிருஷ்ணா நதிநீர்த் திட்டத் தொடக்கம் 
20.9.1983: புரட்சித் தலைவருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு டாக்டர் பட்டம் வழங்குதல் 
20.11.1983: புரட்சித் தலைவருக்கு கலை உலகம் பாராட்டுப் பெருவிழா 
2.3.1984: அன்னை தெரேசா மகளிர் பல்கலைக் கழகம் தொடக்கம் 
15.7.1984: காமராசர் மாவட்டம் தொடக்கம் 
16.7.1984: இராமநாதபுரம் மாவட்டம் தொடக்கம் 
17.7.1984: பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் தொடக்கம் 
16.9.1984: தஞ்சையில் மாமன்னர் ராஜராஜனின் ஆயிரமாவது முடிசூட்டு விழா 
15.9.1985: அண்ணா மாவட்டம் தொடக்கம் 
15.9.1985: புரட்சித் தலைவருக்கு அண்ணா விருது வழங்குதல் 
5.2.1986: போப் ஆண்டவருக்கு வரவேற்பு 
14.4.1986: மதுரை உலகத்தமிழ்ச் சங்கம் தொடக்கம் 
19.10.1986: வ.உ. சிதம்பரனார் மாவட்டம் தொடக்கம் 
4.2.1987: தில்லியில் பாரதி சிலை திறப்பு 
25.3.1987: திருவரங்கம் குடமுழுக்கு 
14.4.1987: தஞ்சையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்தை இராஜீவ் காந்தி தொடங்கி வைத்தார். 
12.12.1987: பிரதமர் இராஜீவ், குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், சென்னையில் பண்டித நேருசிலை திறப்பு விழாவில் பங்கேற்பு 

தேமொழி

unread,
Sep 10, 2020, 5:46:30 PM9/10/20
to மின்தமிழ்
source - https://www.facebook.com/283386165008644/photos/a.718844068129516/4976733762340504/

தினசெய்தி நாளிதழில்  07.09.2020 அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 51)
“சந்தனப்பேழை என்னதவம் செய்ததம்மா!”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தமிழக முதல்வர், புரட்சித்தலைவர் டாக்டர். எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் 24-12-87 காலை மறைந்தது தமிழ் நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். கலைத்துறையில் சிறந்து விளங்கிய அவர் தமிழக அரசியலில் முனைப்பாக இறங்கி ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். மக்களிடையே தம் கலைத்திறமைக்கு இருந்த நல்லாதரவைப் பயன்படுத்தி அரசுப் பொறுப்பை ஏற்றார். தாம் ஏற்றுக்கொண்ட பொறுப்பைத் தம் உடல் நலம் குன்றியபோது கூடக் கைவிடாது இறுதிவரை ஆட்சிப் பொறுப்பிலேயே இருந்து உயிர் நீத்தார்.

1984-இலிருந்து கடுமையான நோயினால் தாக்கப்பட்டார். அவருக்குள்ள பொருள் வசதிக்குத் தொடர்ந்து அரசுப் பொறுப்பில் நீடிக்க வேண்டுமென்பது அவசியமில்லை. இருப்பினும் மக்களுக்கும் நாட்டுக்கும் மொழிக்கும் தொண்டாற்ற வேண்டுமென்ற நல்லெண்ணம் குன்றிவரும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாது அரசுப் பொறுப்பில் அவரை இருக்க வைத்தது.

புரட்சித் தலைவர் முதல்வராக இருந்து தொடர்ந்து பத்தாண்டுகள் நிலையான அரசைத் தமிழகத்திற்கு அளித்ததே முதல் சாதனை, ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக உதவி சென்று சேரும் வகையில் சத்துணவு, வீட்டு வசதி போன்ற நல்ல திட்டங்களைச் செயற்படுத்தியது அவருடைய பெரும்பணியாகும். மொழிக்காக அவர் தம் தலையான பணியென்று தமிழ்ப்பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்ததைப் பொன்வரிகளாகக் குறிப்பிடலாம். இலங்கைத் தமிழர்கட்கு அவர் செய்த பல்வேறு உதவிகளில் பல வழிகளிலும் தாய்த் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களைக் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கதாகும். விடுதலைப் புலிகள் அவரிடம் பெற்ற உதவி எழுத்தில் வடிக்க முடியாதது.

இத்தகைய அரும்பணிகள் ஆற்றிய அவர் மக்களிடம் நேரடித் தொடர்பு வைப்பதையே பெரிதும் விரும்பினார். இரத்தத்தின் இரத்தமான 'உடன் பிறப்புகளே' என்று இளைய தலைமுறையினரை அரவணைத்த பாங்கும் இளமையில் தாயால் வளர்க்கப்பெற்ற காரணத்தால் தமிழ்த் தாய்க்குலத்தின் மீது அவர் காட்டிய பாசமும் பரிவும் அவரை மக்களோடு மக்களாக இணையச் செய்தது. நலிவுற்ற பிரிவினர் மீது அவர் காட்டிய பற்று மறக்க முடியாதது.

மொத்தத்தில் மக்கள் தலைவராக வாழ்ந்து மறைந்த எம். ஜி. ஆர். அவர்களின் மறைவு தமிழ்மக்களின் எதிர் காலத்திற்கு ஒளி குறைந்ததாகவே அமையும்.

டாக்டர். எம். ஜி. ஆர். இலங்கையில் உள்ள கண்டியில் 1917 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 17 ஆம் நாள் மருதூர் கோபால மேனன் - சத்தியபாமா என்னும் பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர். திரு. மேனன் கண்டியில் குற்றவியல் நடுவராகப் பணியாற்றினார். அவர் திடுமென மறையவே அன்னை சத்தியபாமா தம் மக்களை அழைத்துக்கொண்டு கும்பகோணத்தில் குடியேறினார். இரண்டு வயதில் தமிழகம் வந்த எம். ஜி. ஆர். தம் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியுடன் பள்ளிக்குச் சென்றார். வறுமை காரணமாக மூன்றாம் வகுப்பின் இடையிலேயே எம்.ஜி.ஆர். படிப்பை முடித்துக்கொண்டு நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். தம் வாழ்க்கையில் ஏற்பட்ட இந் நிகழ்ச்சியே எம்.ஜி.ஆர். அவர்களை மிகவும் உந்தியது. தமிழகத்தின் ஏழை, எளிய சிறுவர் அனைவருக்கும் சத்துணவு அளித்து வறுமை காரணமாக யாரும் கல்வியை விட்டு விடக் கூடாது என்று திட்டமிடச் செய்தது. இதனை உலகமே இன்று போற்றுகிறது. எந்த ஆட்சி வரினும் இத்திட்டத்தை இனி, கைவிட முடியாத அளவு நிலையான பணியாக அமைந்து விட்டது.

நாடகங்களில் நடித்து வந்தவர் 1936 இல் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இத் துறையில் 1948 முதல் 1978 வரை கொடிகட்டிப் பறந்தார். 136 திரைப்படங்களில் நடித்துப் பெயரும், புகழும், பெருஞ் செல்வமும் சேர்த்த பின் தமிழக அரசியலில் முழுமையாக நுழைந்தார். தொடக்கத்தில் காங்கிரசுக் கட்சியில் ஈடுபாட்டுடன் திகழ்ந்தாலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் கொள்கைகளில் ஈடுபட்டுத் தி.மு.கவில் சேர்ந்து அண்ணா வின் இதயக் கனியாகத் திகழ்ந்தார்.

பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் 1972 இல் அவர் அனைத்திந்திய அண்ணா தி.மு.கவைத் தோற்றுவித்தார். 1977 தேர்தலில் வென்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். 1984 இல் முதன் முதலாகக் கடுமையான நோய்க்கு ஆளானார். அதிலிருந்து மீண்டவர் முழு நலமடையாதிருப்பினும் தமிழக முதலமைச்சர் பணியில் ஒரு சிறிதும் வழுவாது இறுதி வரை பணியாற்றி வந்தார். இந்திய நாட்டு விடுதலைக்குப் பின்னுள்ள தமிழக வரலாற்றில் அவருக்கு ஒரு முக்கியமான சிறப்பிடம் என்றென்றும் உண்டு.

புரட்சித் தலைவர் அவர்களை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவர் தாமரைத் திரு. வ. சுப்பையா பிள்ளையிடம் மாறாத அன்பு கொண்டிருந்தார். 1968 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சங்கவிலக்கியங்கள் அனைத்தையும் ஒரு பொன்னான பேழையில் வெளியிட்டது. அதனை புரட்சித் தலைவர் தம் பொற்க்கரங்களால் முதலில் வாங்க வேண்டுமென்று தாமரைத் திரு வ. சுப்பையா பிள்ளை விரும்பினார்கள். கலைமாமணி, கவிஞர், புத்தனேரி ரா. சுப்பிரமணியம் உதவியுடன் பொன்னாலான பேழையைப் புரட்சித்தலைவர் இல்லத்திற்கு எடுத்துச் சென்றனர். நூற்பேழையைக் கண்டவுடன் புரட்சித் தலைவர் மகிழ்ந்து வ.சு. ஐயாவைப் பாராட்டி உடனே அதற்குரிய தொகையைத் தன் அன்பளிப்பாக வழங்கிச் சிறப்புத்தார். அதற்குப் பிறகு தாமரைத்திரு வ. சுப்பையா பிள்ளையை கண்டபோதெல்லாம் பாராட்டி மகிழ்வார்.

புரட்சித் தலைவர் முதல்வரான பிறகு தாமரைத்திரு வ. சுப்பையா பிள்ளைக்குத் தமிழக அரசின் சார்பில் 'செந்தமிழ்ச் செல்வர்' என்ற விருதையும் ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கப் பதக்கத்தையும் வழங்கிப் பெருமைப்படுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.

புரட்சித் தலைவர் மறைந்தவுடன் செந்தமிழ்ச் செல்வி இதழில் பெருங்கவிஞர் 'கலைமாமணி' டாக்டர் புத்தனேரி. ரா. சுப்பிரமணியம் வடித்த இரங்கற்கவிதை பின்வருமாறு:-
புகழ் வரலாறு படைத்த புரட்சித் தலைவர்
துடிக்குதே உள்ளம்! ஆறாத் துயரினால் வெப்பக் கண்ணீர் வடிக்குதே கண்ணும்! எங்கள் மக்களின் திலகம் ஆவி நொடிக்குளே மீளாத் தூக்கம் நுகர்ந்திடக் கால தேவன் பிடிக்குளே சிக்கிக் கொண்ட பேரிடி விழுந்த தையோ ! அதிர்ச்சியால் அகத்திற் குள்ளே அரற்றினேன்!
நெடிய நட்பின் முதிர்ச்சியால் சோகச் சொற்கள் முந்தியே வந்தும்
கண்ணீர் உதிர்ச்சியால் பொங்கும் பாச உணர்ச்சியால்
தளதளக்கும் நெகிழ்ச்சியால் இரங்கல் பாடல் நிகழ்த்தினேன் அடக்கத் தோடே!
பலமுறை எமனை ஓட்டி மூன்று நற்பிறவி கண்ட பொன்மனச் செம்மல் அன்புப் புன்னகை மன்னன்
தன்னை இம்முறை இரக்கம் இன்றி இரவிலே கால தேவன் வன்முறைக் கொள்ளை கொண்டான் மாரடைப் பென்னும் பேரால் சேரமான் ஆட்டன் அத்தி திருமுகக் காந்த ஈர்ப்பை
நேரிலே எம். ஜி. ஆரின் நிகரிலா வடிவில் கண்டோம்: பாரியை மிஞ்சும்
வள்ளல் பரிவுடன் அனைவருக்கும் மாரிபோல் வழங்கி வந்தார்
மக்களின் இதய தெய்வம். மக்கள்ளன் பக்கம் என்றே
வையகம் வியக்க வைத்த மக்களின் திலகம் பூமி
வாழ்வினை நீத்த செய்தி திக்கெலாம் நடுநடுங்கத் தீயெனப் பரவி
ஆறாத் துக்கமாம் கடல் நெருப்பாய்ச் சுடுவதால் துடிக்கின்றோமே!
தாயினை இழந்து சேய்கள் தவிப்பதைப் போலே
அன்புத் தாய்க்குலம் போற்றும் ஈகைத் தமிழ்க்கலைப் புரட்சி வீரர்;
தாயவர் தமைப் பிரிந்த துன்பமே புவனம் எங்கும் ஆயிரம் கோடி
வாயால் அரற்றினும் தீரா தம்மா!
சத்துண வளித்த பாசத் தாயினை இழந்தோம் என்றே
எத்தனை இலட்சம் சேய்கள் ஏங்கியே தவிக்கும் அம்மா!
'ரத்தத்தின் ரத்தம்' என்றே இன்மொழிக் குரல்
கொடுத்த பத்தரை மாற்றுத் தங்கம் பாரினைத் துறந்தார்
அந்தோ! பேரறிவாளர் அண்ணா பெருமிதக் கொள்கை
ஏந்தித் தேர்தலில் வெற்றி கண்டு திறல்மிகும் முதல்வரானார்;
பாரத ஒருமைப் பாடும் பைந்தமிழ் இனப்பண் பாடும்
சேரவே ஈரைந் தாண்டு சிறந்த நல்லாட்சி செய்தார்.
சாதனை வீரர் ஏழை தமக்கெலாம் தெய்வமாக
ஆதரவளித்த வள்ளல் அருள் முகப் பொலிவு மிக்கார்
பூதலம் அதனில் மங்காப் புகழ் வரலாறு கொண்ட
மேதையின் மறைவு தந்த வேதனைக் கெல்லை ஏது?
முத்தமிழ்த் தலைவ ரோடு முப்பத்தைந் தாண்டுக் காலம்
எத்துணை நெருக்கமாக இணக்கமுற் றிருந்தேன்!
அந்த உத்தமர் ஒரு சகாப்தம்;
உயரிய வாழ்வு கண்டு சத்தியம் நேர்மை காத்த தமிழக முதல்வர் எங்கே?
பாரதிதாசன் மேன்மைப் பரிசினை எனக்கு நல்கி மார்புறத் தழுவிச்
செம்மல் வழங்கினார் பொன் பதக்கம்; பார்புகழ்த் தமிழின் கீர்த்திப்
பழங்கலை இயக்ககத்தின் ஓர் இயக்குநராய் என்னை உயர்த்தினார்
எம். ஜி. ஆரே. எத்தனை அந்தரங்கம் என்னுடன் பகிர்ந்து கொண்டார்!
எத்தனை விழாக்களுக்கே என்னையும் அழைத்துச் சென்றார்!
எத்துணைப் பாசத் தோடே என் தமிழ்க் குடிலைத் தேடி உத்தமர் வந்தார்
அந்த உறவெலாம் மறக்கப் போமோ! பல்கலைக் கழகம் ஏழு படைத்த
ஓர் முதல்வர் இந்தத் தொல்புவி யதனில்
வேறே சுட்டு தற் கெவரும் இல்லை!
நல்லறக் கொடையி னாலே நாடெலாம் போற்றும்
வள்ளல் இல்லையே இந்நாள் என்னும் ஏக்கமே தீர்வ தெந்நாள்?
இலங்கையில் தமிழ் இனத்தின் இணையிலா உரிமை
காக்கக் கலங்கிடா நெஞ்சால் இராசீவ் காந்தியின் ஆற்றல் எல்லாம்
துலங்கிடும் ஒப்பந்தத்தின் சுடர்ஒளித் தூண்டு
கோலாய்க் கலங்கரை விளக்குப் பாதை காட்டினார் எம். ஜி. ஆரே.
புயலாய் மாறிப் புரட்சியின் தலைவராக யாவரும்
வியந்து போற்றும் அறக்கொடை முதலமைச்சர்!
சாவது பிச்சை கேட்கத் தன்னையே தந்த வள்ளல்;
நாவதன் பயனே வெற்றி நாதரைப் பாடல் அன்றோ !
இடமன வலிமை வெற்றிச் சின்ன மாய் ஓங்கி என்றும்
கடமையும் கட்டுப் பாடும் காத்தவர் எம். ஜி ஆரின் இடம்
அதை நிரப்ப வல்லார் எவர் எனும் கேள்வி
விம்மிப் படர்வதால் மக்கள் உள்ளம் பதைத்திடும் துயரம் அந்தோ !
பெரும்புகழ்ப் பெரியார் மாண்ட பேர்பெறும் திசம்பர்த் திங்கள்
இருபத்து நாலாம் நாளில் இணையிலா எம். ஜி ஆரின் திருமுகம்
உயிரை நீத்த செய்தியே சமதர்மத்தின் ஒருபெரும் விந்தை தானோ?
உழலுதே சிந்தை தானே ! சென்னையில் எழிலார் வங்கத் திரைகடற்கரையின்
ஓரம் தன்னிக ரில்லா அண்ணா சமாதியின் இதயப் பக்கம்
பொன்மனச் செம்மல் மேனி, புகழ்மணம் ஏற்ப தற்கே
சந்தனப் பேழை என்ன தவத்தினைச் செய்த தம்மா!
பொன்மனச் செம்மல் இந்தப் புவியினைப் பிரிந்தார்
என்றே என் மனம் நம்ப வில்லை!
எத்தனை கோடி மக்கள் நன்மனம் கோயில் கொண்ட
நாயகர் எம். ஜி. ஆரின் புன்னகை என்றும் வாழும் புகழெனும் பொலிவினாலே.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை...

- ஔவை நடராசன்; தொடர்புக்கு:- thamiz...@gmail.com
----


தேமொழி

unread,
Sep 21, 2020, 12:26:39 AM9/21/20
to மின்தமிழ்

தினசெய்தி நாளிதழில்  14.09.2020 அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்  (பகுதி - 52)
“மண்ணைத் தோண்டி தங்கத்தைப் புதைத்தோம்!”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

     என் மகன் அருளிடம் பேராசிரியர் அறிஞர் தெ. ஞானசுந்தரம் தொலைபேசியில் கூறிய செய்தியைப் பகிர்கிறேன். 

     “ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு மதுரையில் 1981-ஆம் ஆண்டு சனவரித் திங்களில் நடைபெற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நேரமது. அப்போது தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறையின் செயலாளராக இருந்த முனைவர் ஔவை நடராசன் அவர்கள் என்னைச் சந்தித்து, உலகத்தமிழ் மாநாட்டு விழாவில் பட்டிமன்றத்தில் என்பெயரைச் சேர்த்திருப்பதாகக் கூறினார். நான் மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். 

     சில தினங்கள் கடந்த நிலையில் எனக்கு அரசிடமிருந்து கடிதம் வந்தது. அதில் பட்டிமன்றத்தில் ஓர் அணிக்குத் தலைவராக என்னை அமர்த்தியிருந்தார்கள். பட்டிமன்றத்தின் தலைப்பு "திருக்குறள் வற்புறுத்துவது அறத்தின் செழுமையே! பொருளின் வளமே! காதற் சிறப்பே!" என்பதாகும். தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமை வகித்தார். 

     முன்தினமே மதுரைக்குச் சென்றுவிட்டேன். அன்று மாலை விழா பொறுப்பாளரான வட்டாட்சியர் வண்டி ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினார். ஆனால், மறுநாள் காலை வந்த அந்த வண்டியில் தமிழறிஞர் திரு.சோமலே அவர்கள் சென்றுவிட்டார். எனக்கு வேறு ஒரு வண்டியை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். 

     பட்டிமன்றம் தொடங்கியது. அமைச்சர்கள் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டியார், ஜேப்பியார், ஆகியோர் அமர்ந்திருந்தனர். புரட்சித்தைலைவர், ஜானகி அம்மாவுடன் வந்து அமர்ந்தார். அவர் வந்தவுடன் பட்டிமன்றம் தொடங்கியது.

     அறம் அணியில் பேராசிரியர் அறிவொளி பேசினார். பொருள் அணியில் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் பேசினார். காதல் அணியில் நான் பேசத் தொடங்கினேன். 

     "மாண்புமிகு முதலமைச்சர், அடிகளாருக்கு வணக்கம். எதிர் கட்சியினர் காதல் அணியை விமர்சித்தனர். இவர்களுக்குக் காதல் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அது உடல் உடலோடு சேர்வதன்று. அது கண் கண்ணோடு கலப்பது. வள்ளல் இராமச்சந்திரன் ஜானகியைப் பார்த்ததுதான் காதல்" என்று நான் கூறியவுடன் அரங்கத்தில் பெரும் கரவொலி. புரட்சித்தலைவர் துள்ளிக் குதித்தார். 
     கரவொலி முடிந்தவுடன் "நான் இராமாயணத்தில் வரக்கூடிய இராமச்சந்திரன், ஜானகியைப் பார்த்ததுதான் காதல் என்று சொன்னேன்" என்றவுடன் மீண்டும் கரவொலி. 

     பட்டிமன்றம் முடிந்தது. முனைவர் ஔவை நடராசன் என்னிடம் வந்து, "ஞானசுந்தரம்! சி.எம். முகம் குங்குமமாகச் சிவந்து போனது. நீங்கள் கவனித்தீர்களா?" என்று கூறினார். மறுநாள் தினத்தந்நி, இந்து நாளிதழ்களில் ‘புரட்சித் தலைவர் துள்ளிக் குதித்த நிகழ்ச்சி’ என்று செய்தி வந்திருந்தது. 

     சென்னையில், நக்கீரர் கழகத்தில், ஆசிரியர்கள் பாடம் எடுப்பார்கள். நச்சினார்க்கினியர் என்பவர் ஆண்டு முடிவில் ஒரு விழா எடுத்துப் பரிசு கொடுப்பார். அந்த ஆண்டு விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். அந்த விழாவில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொகுத்த "சங்க இலக்கியத்தொகை" என்னும் நூலில், "அன்புக் காணிக்கை எம்.ஜி.ஆர்" என்று கையெழுத்திட்டுக் கொடுத்த நூல் இன்றும் என்னிடம் உள்ளது.”

     பேராசிரியர் அறிஞர் தெ. ஞானசுந்தரத்தின் ஆழ்ந்த புலமையும், செறிவார்ந்த கருத்து நயமும், தமிழுலகமே கண்டு வியப்படைகிறது. எப்பொருண்மை குறித்தும், ஆழ்ந்த அறிவுடன் பேசும், எழுதும் திறம் பேராசிரியர் ஞானசுந்தரத்திற்கே வாய்த்த தனிப்பேறாகும். பேராசிரியரின் இரங்கல் வரிகள் வரலாற்று வரிகளாகும். “திடீரென்று புரட்சித் தலைவர் மறைந்தபோது, முதல்நாள் திருப்பூரில் பேசிவிட்டு வந்ததிருந்தேன். இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். 
     அன்று காலை, எனக்கு அகில இந்திய வானொலியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இயக்குநர் கோ.செல்வம் அழைத்து புரட்சித் தலைவரின் இறுதி ஊர்வலத்தை நேர்முக உரை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் சம்மதித்தேன். காலை 05.00 மணிக்கு வரச் சொன்னார்கள். இருசக்கர வண்டியில் கருப்புக் கொடியைக் கட்டிக்கொண்டு வானொலி நிலையத்திற்குச் சென்றேன். 
     என்னையும், தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களையும் சவப்பெட்டியை வைக்கும்போது வர்ணணை செய்ய அழைத்துச் சென்றார்கள். எழிலகத்தின் மாடியில் இருந்து வர்ணனை செய்தோம். அமைச்சர்கள் ஆர்.எம்.வீ., கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன், ஆகியோர் புதை தோண்டுவதை மேற்பார்வை செய்துவிட்டுச் சென்றனர். 

     இந்தக் காட்சியைக் கண்ட நான், *"கண்டியில் பிறந்து, காவிரிக்கரையில் வளர்ந்த ஒரு கதாநாயகனின் இறுதி அத்தியாயம் கடற்கரையில் எழுதப்பட்டிக்கொண்டிருக்கிறது. அண்ணாவின் இதயக் கனிக்கு அண்ணா சமாதி அருகில், மீனவ நண்பனுக்குக் கடற்கரை அருகில், ஓடி ஓடி உழைத்த உத்தமருக்கு உழைப்பாளர்கள் சிலை அருகில் நினைவிடம் உருவாகிக்கொண்டுள்ளது"* என்றேன். 

     அதைத் தொடர்ந்து, *"இங்கிருக்கக்கூடிய குழந்தைகளுக்கு சத்துணவு போட்டுவிட்டாய், இங்குப் பசியால் வாடக்கூடியவர்கள் எவருமில்லை என்பதால் வானுலகத்திற்குப் பசியைப் போக்கச் சென்றுவிட்டாயா?" *  என்றேன். 

     *"கடலில் பத்துப் பதினைந்து கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன" என்று தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்னார். நான், "இங்குக் கரையில் கப்பல் கவிழ்ந்தது போல் மக்கள் அழுகையில் உள்ளனர்"* என்றேன். 

     *"மண்ணைத் தோண்டித் தங்கத்தை எடுப்பார்கள். ஆனால், இன்று மண்ணைத் தோண்டித் தங்கத்தைப் புதைக்கிறார்களே"* என்று குரலுணர்ச்சி பொங்கக் கூறினேன். 

     இதைக் கேட்டு வானொலி நிலைய இயக்குநர் கோ.செல்வம், "இறுதியில் நீங்களே நிகழ்ச்சியை நிறைவு செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். 

     *“தங்கத்தமிழ் மகனே, வங்கக்கடல் ஓரத்தில் அலைகள், தங்கத் தமிழ்மகனே வாழ்க வாழ்க என்று வந்து தாலாட்டுகின்றன" என்று நிறைவு செய்தேன்.”* 

     புரட்சித் தலைவரின் மறைவுக்கு பேராசிரியர் தெ. முருகசாமியின் இரங்கற்கவிதை வருமாறு:- 
     “நல்ல முதலமைச்சர் 
     நாடுபுகழ் எம். ஜி. ஆர் 
     மெல்ல உயிர் நீத்த காரணத்தால் - 
     வல்லமைசேர் செந்தமிழ் நற்றாயும் 
     சேர்ந்தே அழுகின்றாள் 
     சொந்தமுறு சோகத்தில் ஆழ்ந்து. 
     எங்கள் வருத்தத்தின் ஏக்கத்தை 
     எம்மிதயப் பங்காக நாங்கள் பகரவோ - தங்கமன 
     நல்ல முதலமைச்சர் நல்லுயிரை யீந்திட்டார் 
     வல்ல அவர் நாமம் வாழ்க!
     தஞ்சைத் தமிழ்ப்பல் கலைக்கழகம் கண்டதுடன் 
     நஞ்சைசூழ் மாமதுரை நன்னகரில் - கொஞ்சு 
     தமிழ்ச் சங்கம் உருவாக்கிச் சாதனைகள் செய்திட்ட 
     தங்கமகற் கிங்கில்லை சாவு. 
     வங்கக் கடலோர வான்புகழ் அண்ணாவாம் 
     சிங்கத் தமிழ்த்தலைவன் சீரிடத்தில் - தங்கு புகழ் 
     தங்கத் தமிழ்ச்சிறுத்தை தானுறங்கப் 
     போயிற்றோ எங்கினிமேல் காண்போம் எழில்.”

     ‘கவிப்பேரரசு’ வைரமுத்துவை மாணவப் பருவத்திலிருந்தே அறிவேன். அணுவணுவாக அவரின் ஒவ்வொரு பருவத்தையும் பார்த்துப் பார்த்து எல்லையில்லாத விம்மிதம் அடைகிறேன். உள்ளங்கால் தொட்டு உச்சந்தலை வரை பாட்டுவெள்ளம் உணர்வின் உயிர்ப்பாக எப்போதுமே அவரிடம் ஊறித்ததும்பிக் கொண்டிருப்பதை நான் கண்டு வியந்திருக்கிறேன். புரட்சித் தலைவருடன் பல விழாக்களில் கலந்து கொண்ட வைரமுத்துவின் நெஞ்சத்திலிருந்து, புரட்சித் தலைவரின் மறைவுக்கு, அலைகடல் கரைகடந்து புரண்டு கொண்டிருப்பதைப் போல வெளிவந்த இரங்கற்கவிதை குறிப்பிடத்தக்கதாகும். 

     “சந்தனப் பேழையே சந்தனப் பேழையே
     எத்தனை தவங்கள் செய்தாயோ
     சந்திரன் முகத்தைக் கண்ணால் பார்க்க
     ஒருமுறை நீயும் திறவாயோ
     ஏழைகள் நெஞ்சில் நிறைந்தவனை
     எளியவர் வீட்டின் ஒளிவிளக்கை
     மரணம் என்ற பெயரால் உந்தன் 
     மடியில் வாங்கிக் கொள்வதற்கு
     சந்தனப் பேழையே சந்தனப் பேழையே
     எத்தனை தவங்கள் செய்தாயோ
     மண்ணும் அழுதது விண்ணும் அழுதது
     மன்னவன் மறைகையிலே - நகக்
     கண்ணும் அழுதது கவிதையும் அழுதது
     காவலன் பிரிகையிலே
     இப்படி ஒருவன் பிறந்ததில்லை
     இனியும் ஒருவன் பிறப்பதில்லை.
     எத்தனை மாலைகள் எத்தனை ஆடைகள்
     தோள்களில் வாங்கியவன் - இன்று 
     அத்தனை மாலையும் அத்தனை மாலையும்
     கால்களில் விழுகிறதே
     இப்படி ஒருவன் பிறந்ததில்லை
     இனியும் ஒருவன் பிறப்பதில்லை.
     சந்திரர் சூரியர் வாழ்கிற வரையிலும்
     சந்திரன் புகழிருக்கும் - ராமச்
     சந்திரன் என்னும் பெயருக்குள்ளே
     சரித்திரம் ஒளிந்திருக்கும்
     இப்படி ஒருவன் பிறந்ததில்லை
     இனியும் ஒருவன் பிறப்பதில்லை.” 

     திரு சீனிவாசன் மற்றும் தலைமையாசிரியர் திருமதி வசந்தா சீனிவாசனின் கடைக்குட்டி சதீஷ் என் உள்ளம் கவர்ந்த இளைஞர். ஈடில்லா பாரதியின் பாடல்களை பாடிக் காட்டும் பாவலர். கவிதைகள் பல எழுதிய கவிஞர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக மிளிரும் சதீஷ் தன்னுடைய 18-ஆவது வயதில், புரட்சித் தலைவர் மறைந்தபோது, உடனுக்குடன் நாட்டுப்புற மெட்டில் பாமரர்களுக்குப் புரியும் வண்ணம் எளிய நடையில் புரட்சித் தலைவரை அமெரிக்க அதிபர் ரீகனுடன் ஒப்பிட்டு எழுதிய பாடலை என் மகன் அருள் இப்பொழுதுதான் காட்டினான். அதையும் தங்கள் பார்வைக்கு வெளியிடுகிறேன். 

     வருசம் முடியும் நேரம்- 
     வரலாறு முடிஞ்சி போச்சு - நம்ம
     வாத்தியாரு வாழ்க்கையில வயசு முடிஞ்சு போச்சு.. - எங்க
     காத்துபைல ஓடுதெல்லாம் அவுரு உசுரு மூச்சு..
     எங்க வூட்டு புள்ள.. அவரு மனசு ரொம்ப வெள்ள - அந்த 
     தங்கராசா உடம்பு இப்போ சந்தனபொட்டிக்குள்ள - அவரு
     தூங்கறார்னு நான் நினைச்சேன்மனசு தாங்கவில்ல..
     எழுத படிக்க நோட்டு - சோறு 
     வயிறு நிறைய போட்டு - எங்க
     ரத்தத்தோட ரத்தமுன்னுகூப்பிடும் குரல் கேட்டு -
     நாங்க போட்டோம் ராசா! ஓட்டு...
     எங்க உசிர தாரோம் - இல்ல
     நாங்களும் கிளம்பி வாரோம்..
     ஆறு கோடி பேரு அழுத கண்ணீர் 
     கடலா மாறும் -
     எங்க மனசு எப்புடி ஆறும்??
     அமெரிக்க நாட்டு தலைவர் யாரு ?
     அந்த ரீகனுக்கே குரு எம்ஜியாரு.. 
     ஆன வயசு அறுபதிலும் ஆடிப்பாடினாரு.. 
     அவரு போனதால நம்ம தமிழ்நாடு சுக்கு நூறு..

தேமொழி

unread,
Sep 24, 2020, 5:16:26 PM9/24/20
to மின்தமிழ்


தினசெய்தி நாளிதழில்   21.09.2020 அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்  (பகுதி - 53)
“மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி!”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

என் இனிய நண்பர், நாகை தருமனையும், புரட்சித் தலைவரின் நெருங்கிய தொண்டராகவும், புரட்சித் தலைவரின் திரைப்படக் கதை வசனத் துறையின் துணையாசிரிராகவும், ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்திற்கு துணைக் கதையாசிரியராக கவிஞர் கண்ணதாசனுடன் இணைந்து பணியாற்றியவரும், புரட்சித் தலைவரின் ‘கலையரசி’, ‘பாக்தாத் திருடன்’ ஆகிய திரைப்படங்களின் கதையாசிரியராகவும் பணியாற்றியவருமான நாகூர் கே. இரவீந்திரனையும் கொண்டு, 1992-ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மண்டபத்தில் வாரந்தோறும் திருமலை நாயக்கர் மன்னரைப் பற்றிய ஒலிஒளிக் காட்சி சிறப்பாக நடைபெறுவதைப்போல, புரட்சித் தலைவரைப் பற்றி ஒரு சிறப்பான ஒலிஒளிக் காட்சி நடத்தத் திட்டமிட்டார். அதற்காக புரட்சித் தலைவரை முழுமையாக அறிந்த இவர்கள் இருவரையும், ஒலிஒளிக் காட்சியை எழுதித் தருமாறு ஆணையிட்டார். அவ்வாணைக்கிணங்க காட்சித் தொடரை எழுதிக் கொண்டிருந்த வேளையிலேயே திரு.கே. இரவீந்திரன் மறைந்து விட்டார். ஏனோ சில காரணங்களால், ஒலிஒளிக்காட்சி நடைபெறாமலேயே போய் விட்டது. நாகை தருமன் கைப்பட எழுதிய காட்சித் தொடர் தினசெய்தி வாசகர்களின் பார்வைக்கு.

தொடக்கம்:
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
                      (குறள் - 72)
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சித்தன்
மெய்வருத்தக் கூலிதரும்.”
                      (குறள் - 619)
வள்ளுவன் தந்தத் தெள்ளுதமிழ்க்குறட்பா
ஒலிக்கிறது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பத்மாசனம்
போட்டு அமர்ந்திருக்கின்றார்.
(பல்லாண்டு வாழ்க படக்காட்சி, பாடல்காட்சி)

•        தந்தை பெரியார் உருவச்சிலை திறப்பு-
அண்ணா மேம்பாலம் அருகில், திரு. பாபு ஜெகஜீவன்ராம் அருகில் எம்.ஜி.ஆர்.
தந்தை பெரியார் குரல்:-
எம்.ஜி.ஆருக்குப்பாராட்டு! (பெரியார் சிலை)
“எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பெரிய மனசு. என் மேலே ரொம்பப் பிரியம், ஏழைகளுக்கு உதவும் கருணை உள்ளம் கொண்டவர்”.
•        பேரறிஞர் அண்ணா சிலை திறப்பு
டாக்டர் ஏ. ராமசாமி முதலியாருடன் எம்.ஜி.ஆர்.
பேரறிஞர் அண்ணாவின் குரல்:-
எம்.ஜி.ஆருக்குப் புகழ்மாலை!
“எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பை நாடறியும்.
எம்.ஜி.ஆரைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வதாகக் கருதப்படும். உண்மைதானே! எம்.ஜி.ஆர் என்றால் அவர் தாங்கியுள்ள கொள்கை எதுவென்பதை நாடு அறியும். முல்லைக்கு மணம் உண்டென்பதைக் கூறவா வேண்டும்? இந்தக் கனி நாங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தனர். என் மடியில் வந்து விழுந்தது. என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்.”
•        மூதறிஞர் இராஜாஜி சந்திப்பு- (இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள்.)
இராஜாஜி குரல்:-
“தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர்.
அவரை அப்படியே விட்டு விடாதீர்கள்.
அர்ச்சுனனைப் போல் வெற்றி வீரர் ஆக்குங்கள்”
•        (முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியுடன் எம்.ஜி.ஆர் காட்சியளிக்கும் படங்கள்)
(உலகத்தலைவர்கள், தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ள மேதைகளுடன் எம்.ஜி.ஆர் உள்ள புகைப்படங்கள்)
(மக்களிடம் கருணை உள்ளம் கொண்ட மகத்தான தலைவர் என்பதை வெளிப்படுத்தும் படங்கள்)
(மழைக்கோட்டு வழங்கியது….. ஏழைகளுக்கு உணவளிப்பது…. முதியோர்…… குழந்தைகளிடம் உண்மையான பரிவு காட்டும் படங்கள்)
(மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குத் தங்க வாள் வழங்கியது, பாராட்டு, பரிசளிப்பு முதலிய படங்கள்)
இவைகளின் மீது பெயர் பட்டியல் (title) காண்பிக்கப்படுகின்றது.

படத்தின் தொடக்கக் காட்சி:
திருக்கோயில்கள் விண்ணைத் தொட்டபடி உயர்ந்து நிற்கின்றன. ஆலயமணி ஓசை எங்கும் எதிரொலிக்கின்றது. பறவைகள் அங்குமிங்கும் பறக்கின்றன.
கிருத்தவ மாதா கோவில் மணியோசை
‘பரம மண்டலத்திலிருக்குக்
எங்கள் பிதாவே…’
பிரார்த்தனை!
இசுலாமிய மசூதி: தொழுகை
“லா இல்லா இல்லல்லா
முகமது ச்சூலில்லா…’ என்று
நமாஸ் ஓதப்படுகின்றது. சென்னை, அப்போலோ மருத்துவமனை வெளியில் கார்கள் வந்து நிற்கின்றன. உள்ளேயும், வெளியேயும் பரபரப்பு டாக்டர்கள் வேகமாக நடந்து செல்கின்றனர். வெளியில்கண்ணீரும் கம்பலையுமாகப் பெண்கள் சிலரும், கவலையுடன் ஒரு இளைஞனும் நிற்கின்றனர். மருத்துவமனையிலிருந்து வெளியே வருகின்ற ஒருவரைத் தடுத்து நிறுத்துகின்றனர். அய்யா.. தலைவரு எப்படி இருக்காரு? நல்ல சேதி சொல்லுங்க அய்யா! எங்க ஆயுசையெல்லாம் எடுத்துக்கிட்டு அந்த மகராசன் நல்லா இருக்கனும்.” என்கின்றான் ஒரு தாய்.

தொலைபேசியில் ஒரு நிருபர் செய்தியைக் கூறுகிறார்.
“M.G.R Born at Kandi.
Learnt at Kumbakonam”.
இன்னொரு நிருபர் கூறுகிறார்,
“முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 1917 ஆம் ஆண்டு, சனவரி மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். நாடாளப் பிறந்த அவர், இரேவதி நட்சத்திரத்திற்கு உரியவர். எம்.ஜி.ஆருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், இரண்டு அண்ணன்மாரும் உடன் பிறந்தவர்கள். மூத்த அக்காள் பெயர் காமாட்சி, அடுத்துப் பிறந்த மூத்த அண்ணன் பாலகிருஷ்ணன். மூன்றாவதாகப் பிறந்த சகோதரி சுமித்ரா. நான்காவதாகச் சக்ரபாணியும் அடுத்து எம்.ஜி.ஆரும் பிறந்தனர். பாலகிருஷ்ணனும், சுமித்ராவும் இலங்கையில் கோபாலனும், சத்யபாமாவும் வாழ்ந்த போதே இறந்துவிட்டனர்”.

எம்.ஜி.ஆர் தந்தை திரு. கோபாலன் கண்டியில் மாஜிஸ்திரேட்டாகவும், கல்லூரி முதல்வராகவும் பணிபுரிந்தார். எம்.ஜி.ஆருக்கு இரண்டு வயதாகும் போது பெற்றோர் திரும்பினர் தாயகத்திற்கு! உறவினர் உதவி புரியாத நிலையில் தந்தை கோபாலன் மரணமடைந்தார். மனம் வெதும்பிய சத்தியபாமா கணவரை இழந்த நிலையில், தன் உறவினர்கள் சிலர் முன்னதாகவே கும்பகோணத்தில் இருந்ததால் அங்கே செல்கிறார். வேலு நாயர், நாராயண நாயர் ஆகிய இருவரும் சத்யபாமா குடும்பத்துக்கு ஆதரவாக இருந்தனர். சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் குடந்தையில் ஆனையடி பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை படிக்கின்றனர். அதற்கு மேல் படிப்பைத் தொடரக் குடும்ப வசதி இடம் கொடுக்கவில்லை. பள்ளியில் கல்வி பயிலும் போதே முதன் முதலில் ‘லவகுசா’ நாடகத்தில் லவனாக நடித்தல். (ராமன் பெயர் கொண்டவர் அவன் மகன் வேடத்தில் முதலில் நடித்தார்). பள்ளியில் மாணவர்களுக்காக வாதாடி, வகுப்புக்கு மாணவர்த் தலைவராதல். தண்ணீர்ப் பானைத் தகராறு சம்பவம்.

மீள்பார்வை:
நாடகத்தைக் கண்டு ரசித்தவர்கள் எழுப்பும் ஆரவாரம் கரவொலி! சத்யபாமா அம்மையார் அடுத்த வீட்டு வாசலில் நிற்கிறார். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு முறத்தில் அரிசி நொய் கொண்டு வந்து போடுகிறார். முந்தானையில் அதனை ஏந்தியபடி மறைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். இதனை எம்.ஜி.ஆர் கவனித்துக் கொண்டிருக்கிறார். அன்னை சத்தியா நொய் அரிசியைக் களைந்து, கஞ்சி காய்ச்சிக் கொண்டு வருகிறார். பிள்ளைகள் இருவருக்கும் கொடுத்துவிட்டு, தான் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிப் பருகுகிறார். எம்.ஜி.ஆர் இதனைக் கூர்ந்து கவனிக்கின்றார். அவர் கண்கள் கலங்குகின்றன.
“ராமு….. சக்கு….. வயிறு நிறைஞ்சுதா……? தாய் கேட்கிறார்.
“எங்க வயிறு நிறைஞ்சுதம்மா……!
எங்களைப் பெத்த வயிறு காயுதே…!”

எம்.ஜி.ஆர் கண்கள் கலங்குகின்றன. அன்னை சத்யா கண்ணீர் விட்டபடி வாரி அணைத்துக் கொள்கிறார். நாராயணன் நாயர் உள்ளே நுழைகிறார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆர், சக்ரபாணியைச் சேர்க்கலாம். என்று யோசனை. அன்னை சத்யா கலக்கம். நாடகக் கம்பெனியில் சிறுவயதில் சேருகிறார். முதன்முதலில், ‘மகாபாரதம்’ நாடகத்தில் அர்ச்சுனன் வேடத்தில் ‘அபிமன்யு” படத்தில் நடித்தார்.

கலையுலகிலும், அரசியலிலும் அர்ச்சுனனாக பல வியூகங்களைத் தகர்த்துத் தன்னிகரற்று விளங்கினார்.
(துரோணர் வில்வித்தை. அர்ச்சுனன் அம்பு எய்தல். கனி மட்டும் தெரிவதாகக் கூறுவது கனி விடுவது)

நாடகக் கம்பெனியில் 4½ ரூபாய் சம்பளம். ‘சத்தியவான் சாவித்திரி” போன்ற பல நாடகங்களில் நடித்தார். அன்னை சத்யா தன் இரு பிள்ளைகளையும் நாடகப் பேராசிரியர், எம். கந்தசாமி முதலியாரிடம் (நடிகை எம்.கே. ராதா தந்தையார்) ஒப்படைக்கிறார். “எனக்கு இதுவரை ஒரே பிள்ளைதான். இனிமேல் மூன்று பிள்ளைகள்” என்கிறார்.

நாடக மேடையில் உடற்பயிற்சி, நடனம், பாடல், குஸ்தி முதலியவை கற்றுக் கொடுக்கப்படுதல். நடிக்கத் தொடங்குகிறார். எதிர்வீட்டு பெண் காதல். தினந்தோறும் தண்ணீர் எடுப்பதற்கும், குழாய் பக்கம் வந்து அந்தப் பெண் நிற்பார். தண்ணீர் எடுக்கின்ற சாக்கில் ஜன்னல் வழியாக எம்.ஜி.ஆரைப் பார்ப்பார். அந்தப் பெண் வருகின்ற நேரத்தில் எம்.ஜி.ஆர் ஜன்னல் அருகில் அமர்ந்து கொள்வார். ஒரு ஆர்மோனியப் பெட்டியை வைத்துக் கொண்டு உச்ச ஸ்தாயியில் பாடுவார். பாட்டு சாதகம் செய்வது போல் பாவனை!
(காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே………… பாடல் காட்சி)

அன்னை சத்யா ஒருமுறை பார்க்கிறார். மறுமுறை அந்தப் பெண்ணையும் கவனித்து உண்மையை அறிகிறார். ஒரு நாள் குடம் நிறையத் தண்ணீர் கொண்டு வந்து எம்.ஜி.ஆர் தலையில் கொட்டுகிறார். “படவா…… பாடுவேடா பாடுவே…! காதலா?” என்று சிரிக்கிறார். எம்.ஜி.ஆர் நாணத்தோடு எழுந்து போகிறார்.

1938: மூத்த மகன் சக்ரபாணியிடம் பேசி, எம்.ஜி.ஆருக்குத் திருமணம் உரிய பருவத்தில் செய்ய முடிவெடுக்கிறார். அவர் பாலக்காடு-ஒலவக்கோடு செல்கிறார். தாய்க்கு உடல்நலமில்லை என்று ஊருக்கு எம்.ஜி.ஆர் செல்கிறார். தாய் வற்புறுத்தலின் பேரில் பார்கவி (தங்கமணி) திருமணம். கதராடை அணிவேன் என்று எம்.ஜி.ஆர் பிடிவாதம். திருமணத்திற்குப் பின்பு மனைவி மீது அன்பு. இரண்டாம் உலகப் போர் காரணமாகச் சென்னை நகரை விட்டுச் செல்கின்றனர் பலர். அன்னை சத்யா மருமகள்களையும், பேரக்குழந்தைகளையும் அனுப்பி வைக்கிறார் பாலக்காட்டுக்கு. கணவரைப் பிரிந்து செல்ல மனமின்றி (பார்கவி) தங்கமணி கண்ணீர்.

கணவரைப் பிரிந்து சென்ற தங்கமணி இரண்டு மாதங்களில் மாரடைப்பினால் காலமானார். விரைந்து சென்ற எம்.ஜி.ஆர் தன் மனைவியின் உடலைக் கூடக் கடைசி முறையாகப் பார்க்க முடியவில்லை. மனம் வெறுத்து ஒலவக்கோட்டில் இரண்டாவது முறையாகத் தற்கொலை செய்ய முயற்சி. சக்ரபாணி தடுத்து விட்டார். (முதல் தடவை தற்கொலை செய்ய முயன்றது வீட்டுப் பீரோவில் மதுபாட்டில் இருப்பதைக் கண்டு, தாயுடன் சண்டையிட்டுக் கடற்கரை சென்றது.)

1947: ஜூபிடர் பிக்சர்ஸ் ‘ராஜகுமாரி’ திரைப்படம் வெளிவந்தது. அப்போது தான் ‘சந்திரலேகா’ படம் இந்தியா முழுதும் திரையிடப்பட்டது. பி.யு. சின்னப்பா, எம்.கே.டி . பாகவதர், கே.ஆர்.ஆர், டி.ஆர்.ஆர், எம்.கே.ராதா, ரஞ்சன் போன்றோர் புகழ்பெற்ற நடிகர்கள் முன்னணியில் இருந்த போது முதன் முதலில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘ராஜகுமாரி’ போட்டி போட்டு ஓடி, வெற்றி பெற்றது. கதாநாயகனாக நடித்த பின்பும், இரண்டாவது கதாநாயகன் வேடங்களில் அபிமன்யு, ராஜமுக்தி, ரத்னகுமார், மோகினி போன்ற படங்களில் நடித்தார்.

திரைப்படங்களின் அணிவகுப்பு:
1951-ல் மர்மயோகி வெளிவந்து. ‘ சர்வாதிகாரி’ ‘ அந்தமான் கைதி’ என் தங்கை, ‘குமாரி’, நாம், ‘ ஜெனோவா’ திரைப்படங்கள் வந்தன.
1953: அன்னை சத்யா மரணம்
அன்னை வாழ்ந்து மறைந்த இலாயிட்ச் சாலை வீட்டை அவர் விரும்பியபடி வாங்கினார். எம்.ஜி.ஆர்! ‘சத்யா இல்லம்’ என்று பெயரிட்டார்.

‘மலைக்கள்ளன்’ மகத்தான வெற்றி! நாடோடி மன்னன் படம் தயாரிப்பு-வெளியீடு. பேரறிஞர் அண்ணாவின் இயக்கக் கொடியைப் படத்தின் தொடக்கத்தில் நிறுவன அடையாளமாகக் காண்பித்த இயக்கப்பற்று! மலைக்கள்ளன் படத்திற்கு 1954 இந்திய அரசு வெள்ளிப்பதக்கம் பரிசு!

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை...

- ஔவை நடராசன்

தேமொழி

unread,
Sep 28, 2020, 10:21:09 PM9/28/20
to மின்தமிழ்

தினசெய்தி நாளிதழில்   28.9.2020  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 54)
“மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி (II)”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

என் இனிய நண்பர், நாகை தருமனையும், புரட்சித் தலைவரின் நெருங்கிய தொண்டராகவும், புரட்சித் தலைவரின் திரைப்படக் கதை வசனத் துறையின் துணையாசிரிராகவும், ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்திற்கு துணைக் கதையாசிரியராக கவிஞர் கண்ணதாசனுடன் இணைந்து பணியாற்றியவரும், புரட்சித் தலைவரின் ‘கலையரசி’, ‘பாக்தாத் திருடன்’ ஆகிய திரைப்படங்களின் கதையாசிரியராகவும் பணியாற்றியவருமான நாகூர் கே. இரவீந்திரனையும் கொண்டு, 1992-ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மண்டபத்தில் வாரந்தோறும் திருமலை நாயக்கர் மன்னரைப் பற்றிய ஒலிஒளிக் காட்சி சிறப்பாக நடைபெறுவதைப்போல, புரட்சித் தலைவரைப் பற்றி ஒரு சிறப்பான ஒலிஒளிக் காட்சி நடத்தத் திட்டமிட்டார். 

அதற்காக புரட்சித் தலைவரை முழுமையாக அறிந்த இவர்கள் இருவரையும், ஒலிஒளிக் காட்சியை எழுதித் தருமாறு ஆணையிட்டார். அவ்வாணைக்கிணங்க காட்சித் தொடரை எழுதிக் கொண்டிருந்த வேளையிலேயே கே. இரவீந்திரன் மறைந்து விட்டார். ஏனோ சில காரணங்களால், ஒலிஒளிக்காட்சி நடைபெறாமலேயே போய் விட்டது. நாகை தருமன் கைப்பட எழுதிய காட்சித் தொடர் தினசெய்தி வாசகர்களின் பார்வைக்கு.

காட்சி தொடக்கம்: உலகம் சுழன்று கொண்டுள்ளது. அதன் முன்னே தமிழ்த்தாய் நிற்கின்றாள்
தமிழ்த்தாய் வாழ்த்து: பாடல் ஒலிக்கிறது. “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்……” உலகம் சுழன்று, இந்தியாவின் முன்பு வந்து நிற்கின்றது. தமிழ்த்தாய் நிற்கிறாள். பாடல் தொடர்கின்றது. “தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும் அத்திலக வாசனை போல் அனைத்துலகம் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே - உன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!”
காட்சி மாற்றம்: முதலமைச்சர் டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள் ராஜீவ் காந்தி அவர்களைக் கொண்டு புரட்சித்தலைவர் சிலையைத் திறந்து வைக்கும் காட்சி.....
ஏழை, எளியோருக்கு உதவி செய்தல், தொழிற்சாலைகள், திட்டங்களைத் தொடங்கி வைத்தல்.....
நேரு விளையாட்டு அரங்கம் புதுப்பிக்கப்பட்டு, பிரதமர் நரசிம்மராவுடன் அமர்ந்திருக்கும் காட்சிகள்....
‘சமூக நீதி காத்த வீராங்கனை’ பாராட்டு விழா... காட்சி... வீடியோ மூலம் காண்பித்தல்! ஒலி இல்லாமல்!
பாடல் கடைசி வரிகள் மீண்டும் ஒலிக்கின்றன “எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும்      தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்ததுமே! வாழ்த்ததுமே!”

காட்சி: முதலமைச்சர், டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் உருவம் வீடியோ மூலம் காண்பித்தல்....

டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள் குரல் ஒலித்தல் ‘தியாகத்தின் திருவுருவங்களாகத் திகழ்ந்த, உத்தமர்களால்.... தனக்கென வாழாமல், உலகம் உயர்வடையத் தங்களையே அர்ப்பணித்துக்கொண்ட பெரியோர்களால்... பேரறிஞர்களால்... பெரும்புலவர்களால்... புரட்சித்தலைவர்களால்.... இந்த உலகம் வாழ்கின்றது! ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு’ என்ற பாட்டுக்கொரு புலவன் பாரதி....

‘கம்பனைப் போல், வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை...’ என்றார் உறுதியாக.... அதைப் போல- ‘தந்தை பெரியார்போல் பேரறிஞர்                      அண்ணாவைப்போல் புரட்சித்தலைவரைப் போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை’ என்று பூரிப்புடன் கூறுகின்றோம்.

மலர் என்றால் தாமரை! மன்னன் என்றால் கரிகாலன்! அண்ணல் மகாத்மா என்றால் காந்தியடிகள்! ஆசியாவின் ஜோதி என்றால் நேரு! தந்தை பெரியார் என்றால்.... தன்மான  இயக்கம் கண்டு தமிழர் மானம் காத்த ஈரோட்டு வேங்கை, வெண்தாடி வேந்தர்... ஈ.வே.ராமசாமிப் பெரியார்!

பேரறிஞர் (அண்ணா) என்றால்.... தந்தை பெரியாரின் வீரத்தளபதியாய்.... ‘சாமானியன்’ என்றுகூறி சரித்திரம் படைத்து, திராவிட இயக்கத்தின் முதன் முதலமைச்சராய்ச் சட்டப் பேரவைக்கு எழிலூட்டியவர்! ‘தமிழ்நாடு’ தன்னைத் தமிழ் நாடென்று அழைத்துக் கொள்ளக் காரணமானவர்! சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லுபடியாக்கியச் சுடரொளி! இருமொழித் திட்டம் கொண்டு வந்து, தமிழுக்கு அரியாசனம் தந்த பெருமகன் அண்ணா! ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் வேத வாக்கின்படி- அண்ணாவின் பெயரை அனைத்திலும் கண்டு, நம் அன்னையாக, அனைத்துமாக இதயத் தெய்வமாகத் திகழ்ந்தவர்.... நமது புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்கள்! தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், மூதறிஞர் இராஜாஜியும், அன்னை இந்திராவும் போற்றிப் புகழ்ந்த அரும்பெரும் தலைவர்.... மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், நமது இதயதெய்வம் புரட்சித்தலைவர்!

காட்சி: தந்தை பெரியாருடன் புரட்சித் தலைவர் வீடியோ காட்சி அல்லது புகைப்படம்.

பெரியார் குரல் ‘எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு உதவும் கருணை உள்ளம் கொண்டவர். எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பெரிய மனசு. என் மேலே ரொம்பப் பிரியம்.’

காட்சி: பேரறிஞர் அண்ணாவுடன் புரட்சித் தலைவர் வீடியோ காட்சி, அல்லது புகைப்படங்கள்.

பேரறிஞர் அண்ணாவின் குரல்  - ‘கலைஞர்கள் எல்லோருமே கலையுலகை நான்கு பக்கங்களும் இரும்பு திரைகளிட்ட ஒரு வீடாகக் கருதி, அதற்குள் வசித்து வந்தனர். அவர்கள் அரசியல் உலகை மட்டுமல்ல, வெளியுலகைக்கூட எட்டிப் பார்த்தும் அறியார். இது தமிழகத்தின் தொன்று தொட்ட வழக்கமாகும். அந்தக் கலைஞர்களுக்கெல்லாம் ஒரு ‘வழிகாட்டி’யாக இருந்து விட்டவர் புரட்சி நடிகர். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ‘கலை வீட்டிலிருந்து’ எட்டிப்பார்த்ததுடன் நில்லாது- அரசியல் உலகுக்கும் தாவிப்புகுந்தார். அந்த எண்ணம், வருங்காலத்தில் மற்ற கலைஞர்களுக்கும் மறுமலர்ச்சி தருவதாகும். அவருடைய அந்தச் செயல் புரட்சிகரமானது. இரத்தினச் சுருக்கமாக ஒன்றைக் கூறவேண்டுமானால், எண்ணமென்பது ‘அக’மென்றும், செயலென்பது ‘புற’மென்றும் கூறலாம். இதனை நம் நடிகர்கள் மேற்கொள்ள வேண்டும். அகம், புறம் இரண்டிலும் சிறந்து விளங்க வேண்டும். நடிகரும் மக்கள் இனமே. வாழ்வின் வளத்துக்கே கலை உதவ வேண்டும் என்ற சீரிய நோக்கம் கொண்டவர் புரட்சி நடிகர். இந்த நோக்கம் தனக்கு மட்டும் இருந்தால் பயனில்லை ஏனைய கலைஞர்களுக்குள்ளும் புக வேண்டும், தான் பெற்ற இன்பத்தை அவர்களும் அடைய வேண்டும் - அதற்குத் தானே முன்னோடியாக இருக்க வேண்டும் என்று, தடுத்தவர் - பகைத்தவர் - வெறுத்தவர் மத்தியில் அரசியலில் தாவிப் புகுந்தார். மக்களுக்கு உதவுகிறார் - இன்னும் உதவ வேண்டுமென்று துடிக்கிறார் - செய்து கொண்டே இருக்கிறார். ஆக, அகத்திலும் (நடிப்பிலும்), புறத்திலும் (அரசியலிலும்) ஒருங்கே சிறப்பை எட்டிப் பிடிக்கிறார். எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இருக்கிற தொடர்பை நாடு அறியும். எம்.ஜி.ஆரைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வதாகக் கருதப்படும். உண்மைதானே! 

எம்.ஜி.ஆர் என்றால் அவர் தாங்கியுள்ள கொள்கை எதுவென்பது நாடு அறியும். முல்லைக்கு மணம் உண்டு என்பதைக் கூறவா வேண்டும்? இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தனர். அது என் மடியில் வந்து விழுந்தது. என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன். வளமான கருத்தும், வாழ்க்கை நெறியும் உள்ள உணர்ச்சியும், எழுச்சியும் தரும் அழகான வடிவம் கவிதை என்று கவிதையைப் பற்றி எம்.ஜி.ஆர் கூறினார். எம்.ஜி.ஆரே வளமாகக் கருத்துகள் உள்ள அவர் கூறியதைப் போல் வாழும் அழகான கவிதைதான்!’

மூதறிஞர் இராஜாஜி குரல் இராஜாஜியுடன் புரட்சித்தலைவர் புகைப்படம் ‘எம்.ஜி.இராமசந்திரனைக் கட்சியிலிருந்து விலக்கியது, மறைந்த அண்ணாவையே விலக்கியது போலாகும். தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர் அவரை அப்படி விட்டு விடாதீர்கள். அர்ச்சுனனைப் போல அவரை வெற்றிவீரர் ஆக்குங்கள்...’ முன்னாள் பிரதமர்... அன்னை இந்திரா காந்தியுடன் புரட்சித்தலைவர் நிகழ்ச்சியில் பங்குகொண்ட வீடியோ படம்... அல்லது புகைப்படங்கள்....

அன்னை இந்திரா குரல் ‘தேச ஒன்றுமைக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் தங்களையே ஒப்படைத்துக்கொண்டு, பாடுபடுகின்ற நல்ல தலைவர்களில் எம்.ஜி.ஆர் முக்கியமானவர். ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் வாழுகின்ற அவர் தலைமையில் தமிழகம் முன்னேறுவது உறுதி’

(பிரதமர்) ராஜீவ் காந்தி குரல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் புரட்சித் தலைவர் வீடியோ படம். கடற்கரைக் கூட்டத்தில் புரட்சித் தலைவர் கையை உயர்த்திப் பிடிப்பது... மற்றவை... !

காட்சி மக்கள் குரல் எதிரொலிப்பது அண்ணாவின் இதயக்கனி வாழ்க! மக்கள் திலகம் வாழ்க! பொன்மனச் செம்மல் வாழ்க! தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் வாழ்க! முதல்வர் புரட்சித் தலைவர் வாழ்க!

காட்சி தமிழக ஆளுநர் மேதகு பட்வாரி அவர்கள் முதல்வர் புரட்சித் தலைவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தல்!

புரட்சித்தலைவர் (குரல்) எம்.ஜி.இராமசந்திரன் என்கிற நான் இந்திய அரசியல் சட்டத்தின் பால் பற்றுடனும், இந்திய ஒருமைப்பாட்டுக்காகவும்... ஆளுநருக்கு வணக்கம் தெரிவித்து, கைகுலுக்குதல். எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்தல். (30.06.77)

காட்சி சென்னை, அண்ணா சாலையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறார், புரட்சித் தலைவர். அதன் பின்பு மக்களை நோக்கிக் கையசைத்தல்... வணக்கம் தெரிவித்தல் செய்திப் படப் பிரிவுப் படத்தை வீடியோ படமாக்கித் திரையிடலாம். அல்லது புகைப்படத்தைக் காண்பிக்கலாம்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை...

- ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamiz...@gmail.com
----

தேமொழி

unread,
Oct 12, 2020, 2:52:14 AM10/12/20
to மின்தமிழ்

தினசெய்தி நாளிதழில்   05.10.2020  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 55)
“மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி (III)”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

என் இனிய நண்பர், நாகை தருமனையும், புரட்சித் தலைவரின் நெருங்கிய தொண்டராகவும், புரட்சித் தலைவரின் திரைப்படக் கதை வசனத் துறையின் துணையாசிரிராகவும், ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்திற்கு துணைக் கதையாசிரியராக கவிஞர் கண்ணதாசனுடன் இணைந்து பணியாற்றியவரும், புரட்சித் தலைவரின் ‘கலையரசி’, ‘பாக்தாத் திருடன்’ ஆகிய திரைப்படங்களின் கதையாசிரியராகவும் பணியாற்றியவருமான நாகூர் கே. இரவீந்திரனையும் கொண்டு, 1992-ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மண்டபத்தில் வாரந்தோறும் திருமலை நாயக்கர் மன்னரைப் பற்றிய ஒலிஒளிக் காட்சி சிறப்பாக நடைபெறுவதைப்போல, புரட்சித் தலைவரைப் பற்றி ஒரு சிறப்பான ஒலிஒளிக் காட்சி நடத்தத் திட்டமிட்டார். அதற்காக புரட்சித் தலைவரை முழுமையாக அறிந்த இவர்கள் இருவரையும், ஒலிஒளிக் காட்சியை எழுதித் தருமாறு ஆணையிட்டார். அவ்வாணைக்கிணங்க காட்சித் தொடரை எழுதிக் கொண்டிருந்த வேளையிலேயே கே. இரவீந்திரன் மறைந்து விட்டார். ஏனோ சில காரணங்களால், ஒலிஒளிக்காட்சி நடைபெறாமலேயே போய் விட்டது. நாகை தருமன் கைப்பட எழுதிய காட்சித் தொடர் தினசெய்தி வாசகர்களின் பார்வைக்கு.

காட்சி:
தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

-அல்லது-

புரட்சித்தலைவர் முதல்வரானதும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசுவதுபோல் காட்சி... பேட்டி!

பத்திரிக்கையாளர்: முதலமைச்சராகத் தமிழகம் தங்களைக் கண்டு அகமகிழ்கின்றது. பத்திரிக்கையாளர்கள் சார்பில் எங்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல்வர்: எங்களுக்கும்... மக்களுக்குமிடையில் நல்லுறவுப் பாலமாகத் திகழும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி! எங்கள் வெற்றியிலும், இனி நாங்கள் செய்ய நினைக்கின்ற அரிய பணிகளிலும் உங்களுக்கும் பங்குண்டு.

பத்திரிக்கையாளர்: ஒரு இயக்கத்தைத் தொடங்கி, 56 மாதங்களில் ஆட்சியைப் பிடித்த ஒரே அரசியல் தலைவர் தாங்கள்தான். இந்தச் சாதனையை எப்படிச் செய்தீர்கள்?

முதல்வர்: நீங்கள் என்னுடைய சாதனை என்கிறீர்கள். நான் மக்களின் மகத்தான வெற்றி என்று கருதுகிறேன்.

பத்திரிக்கையாளர்: தாங்கள் போட்டியிட்ட அருப்புக்கோட்டை தொகுதியில், 29 ஆயிரத்து 378 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றீர்கள். உங்களை எதிர்த்துப் போட்டியிட்ட 11 பேர்களும் சேர்ந்து மொத்தமாக வாங்கியுள்ள வாக்குகளே 9 ஆயிரத்து 548 தான். மிக அதிக வாக்கு வித்தியாசம். 195 இடங்களில் போட்டியிட்டு 127 இடங்களில் தனிப் பெரும் பான்மையை உங்கள் கட்சி பெற்றிருக்கிறது. தோழமைக் கட்சிகளையும் சேர்த்து 144 இடங்களைப் பெற்றிருக்கின்றீர்கள். இது சாதாரணமான ஒன்றல்ல. மக்கள்தான் வெற்றியைத் தரக் காரணம் என்று நீங்கள் கூறினாலும், அந்த வெற்றி இயக்கத்திற்குக் கிடைக்கத் தாங்கள் தானே காரணம்?

முதல்வர்: நான் சார்ந்துள்ள இயக்கத்தின் மீதும், எங்கள் அணியினர் மீதும் மக்கள் கொண்ட நம்பிக்கைதான் காரணம். (புன்முறுவல்)

பத்திரிக்கையாளர்: கலைத்துறையிலிருந்து அதாவது சினிமாவிலிருந்து வந்ததால்தான் இவ்வளவு ஆதரவு என்கிறார்களே...!

முதல்வர்: கலைத்துறையில், சினிமாவில் நான் மட்டும் பணிபுரியவில்லை. அப்படி உள்ளவர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள்.

பத்திரிக்கையாளர்: கலைத்துறையிலிருந்து வந்தவர் தாங்கள், என்பதும் ஒரு சாதனைதானே!

முதல்வர்: அந்தச் சாதனையைச் செய்தவர் எங்கள் அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணாதான். நான் நடிப்புத் துறையை மட்டுமே சின்னஞ்சிறு வயதுமுதல் நம்பியிருந்த நடிகன். நான் மற்ற துறைகளைப் பற்றி அறிந்தவன் என்றாலும் எனது ஏழாவது வயது முதல் நான் நடிப்புத் தொழிலில் இருந்தவன்.

பத்திரிக்கையாளர்: நடிப்புத் துறையிலிருந்து ஒருவர், நாடாளுவது தமிழகத்தில் - இந்தியா……. ஏன் உலகத்திலேயே முதன்மையானவர் நீங்கள் தான். அந்தப் பெருமை உங்களுக்குத்தான்.

முதல்வர் : மிக்க நன்றி! இந்தப் பெருமை கிடைக்கக் காரணமானவரும் பேரறிஞர் அண்ணாதான். அரிதாரம் பூசி நடிப்பவர்கள் கூத்தாடிகள், நாடகமாடிகள் என்று இழிவாகப் பலர் பேசிய போது அதனைப் போக்கியவர் அவர்தான். நடிப்பவர்களைக் கேவலமாக நினைப்பதை மாற்ற, எம்.ஏ பட்டம் பெற்ற பேரறிஞரான அவரே அரிதாரம் பூசி நடித்தார். நடிப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படச் செய்து, மக்கள் நலனுக்காக அவர்கள் பாடுபடுவார்கள் என்பதை உணர்த்தினார்.

பத்திரிக்கையாளர்: எதைச் சொன்னாலும், நீங்கள் அண்ணாவைப் பற்றியே கூறுகிறீர்களே…..

முதல்வர்: வந்த வழியையும், வளர்த்தவர்களையும் மறந்தவர்களை மக்களும் மறந்துவிடுகிறார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டதனால் மட்டுமல்ல….. என் இயல்பே அதுதான்.

பத்திரிக்கையாளர்: மக்களுக்கு……….. இவ்வளவு மகத்தான வெற்றியைத் தந்தவர்களுக்கு என்னென்ன செய்யப் போகின்றீர்கள்?

முதல்வர்: எங்களை நம்பி ஆட்சிபீடத்தில் அமர்த்திய அவர்களுக்கு நம்பிக்கையானவர்களாக இருந்து நன்மையைச் செய்வது! என்னைப் பெற்ற தாயும், அரசியல் ஆசான் அண்ணாவும் என்னை அப்படித்தான் உருவாக்கியுள்ளனர். அவர்கள் ஆசியோடு தமிழக மக்களையும் தமிழகத்தையும் வாழ வைக்கப்பாடுபடுவோம்.

நன்றி வணக்கம்.

(கைகூப்பி வணங்குகிறார்)

காட்சி:
தொலைக்காட்சி அல்லது வானொலியில் முதல்வர் புரட்சித்தலைவர் ஆட்சி பொறுப்பேற்ற வர்ணனையை ஒரு குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

“30.06.1977 தமிழ்நாடு முதலமைச்சராக எம்.ஜி.ராமச்சந்திரன் பதவி ஏற்றார். மேதகு ஆளுநர் பிரபுதாசு பட்வாரி அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நகரப் பிரமுகர்கள் கூடியிருந்தனர். சென்னை, அண்ணா சாலையில் அண்ணா சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்தபோது தமிழகமே தலைநகரில் கூடி வாழ்த்தியதைப் போலிருந்தது!”

அந்தக் குடும்பத்தினர் தாய், தந்தை பிள்ளைகள் பேசிக் கொள்கின்றனர்:

பெண்: அடி… ஆத்தாடி….. எம்மாம் பெரிய கூட்டம். என் சென்மத்திலே இப்பிடி ஒரு சனத்தை நான் பார்த்ததில்லே…!

ஆண்: நாடு பூராவும் இதைத்தான் புள்ளே அதிசயமா பேசிக்குது! எம்.ஜி.ஆர் நடந்தால் ஊர்வலம்; நின்றால்….. பெருங்கூட்டம்; பேசினால்….. மாநாடு! அவர் வர்றாருன்னேலே சனங்க கூட்டம் அலைமோதும். அதனாலேதான் அவருக்கு மக்கள் திலகம்னு பேரு. புரட்சித் தலைவர் முகத்தைப் பார்க்கணுமுன்னா தமிழ்நாடு என்ன, இந்தியாவே இங்கே இருக்குமே!

பெண்: ஏனுங்க…….. இவ்வளவு பேரு மனசிலே இடம் புடிக்கிறதுன்னா… அது சாதாரணமா? அவரைப் பெத்தவுங்க பேரும் புண்ணியம் செஞ்சிருக்கனும்….

ஆண்: ஹூ…ம்… அவுங்க மட்டுமா? நாமும் தான், இல்லேன்னா அவரு முதலமைச்சரா வருவாரா?

ஒரு சிறுமி: அப்பா…..! முதலமைச்சர் எம்.ஜி.ஆரோட அப்பா… அம்மா…. யாருப்பா?

ஒரு சிறுவன்: சொல்லுங்கப்பா…! அவரைப்பத்தி முழுக்கத் தெரிஞ்சிக்கணும்னு ஆசையா இருக்குபா….

ஆண்: (சிரித்தபடி பாடுகிறார்)

சின்னப்பயலே சின்னப்பயலே

சேதி கேளடா…… நான்

சொல்லப்போகும் வார்த்தையை

எண்ணிப்பாரடா………

ஆளும் வளரணும்

அறிவும் வளரனும்

அது தான்டா வளர்ச்சி….

சிறுவன்: ஆசையோடு ஈன்றவனுக்கு - அதுவே (பாடுகிறான்) நீ தரும் மகிழ்ச்சி

பெண்: இப்பிடி புத்தி சொல்லிப்பாட இப்ப யாரு இருக்காங்க…… அவரு மாதிரி! முதல்வர் எம்.ஜி.ஆரு பொறந்தது, வளர்ந்தது, வாழ்ந்தது மத்தவுங்களை வாழவைச்சது…….. பூரா விவரத்தையும் புரியும் படியா சொல்லுங்க……………….

சிறுமி: சொல்லுங்கப்பான்னா………..

ஆண்: சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டாத்தான் இனிக்கும். அவரைப்பத்தி நினைச்சாலும், சொன்னாலும் நெஞ்சமெல்லாம் இனிக்கும். அயோத்தியிலே பிறந்த ராமன் சரிதத்தை அழியாத காவியமா படைச்சான் கம்பன். நம்ப ராமச்சந்திரன் தானே சரித்திரமும், காவியமுமாகத் திகழ்கின்றார். நம்ப எம்.ஜி.ஆர் பிறந்த ஊரு இலங்கையிலே உள்ள கண்டி. அவுங்க அப்பா பேரு மருதூர் கோபாலன். இதைத்தான் ‘எம்.ஜி’ என்று இனிஷியலாகச் சொல்கிறோம். அவுங்க அம்மா பேரு சத்தியப் பாமா.

பெண்: மருதூர் கோபாலன்னு சொல்றீங்க…! அப்புறம் கண்டியிலே எம்.ஜி.ஆர். பிறந்ததா சொல்றீங்களே…!

ஆண்: அவசரப்படுறியே…! மருதூர் கோபாலன் அது தான்.. எம்.ஜி.ஆரு அப்பா இங்கே திருச்சூர், அரூர், எர்ணகுளத்தில் மேஜிஸ்ட்ரேட்டா இருந்திருக்காரு. நீதிக்கும், நேர்மைக்கும் புறம்பா நடக்கும்படி வற்புறுத்தியிருக்காங்க…..!

அப்படிப்பட்ட வேலையும் வேண்டாம், இந்த ஊர்களும் வேண்டாம்னு உதறித்தள்ளிவிட்டு இலங்கைக்குப் போனாரு, அவுங்க அப்பா!

பெண்: வாத்தியாரு நடிச்ச படத்துக்கு ‘நீதிக்குத் தலைவணங்கு’ன்னு பேரு கூட இருக்கே! அவுங்க அப்பான்னா……. எப்படி இருப்பாரு? நீதியும் நேர்மையும் அப்பா…. சத்யம் தான் தாய்!

ஆண்: அங்கே கண்டியிலே கல்லூரி முதல்வராக மருதூர் கோபாலன் இருந்திருக்காரு. அவர் பேராலே அங்கே ஒரு தெரு கூட இருக்குதாம். எம்.ஜி.ஆர் கூடப் பொறந்தவுங்க நாலுபேர். மூத்த அக்காள் பெயர் காமாட்சி. அடுத்துப்பிறந்தவர் பாலக் கிருஷ்ணன். மூன்றாவதாகப் பிறந்தவர் சுமித்ரா. நான்காவதாகச் சக்ரபாணியும், ஐந்தாவதாக எம்.ஜி.ஆரும் பிறந்தனர். பாலகிருஷ்ணனும், சுமித்ராவும் இலங்கையிலேயே கோபாலனும், சத்யபாமாவும் இருக்கும் போதே இறந்துவிட்டனர்.

பெண்: அட..டா… பரிதாபமே…!

ஆண்: எம்.ஜி.ஆருக்கு அப்போது இரண்டு வயசு. அவுங்க அப்பா கோபாலன் எதிர்பாராவிதமாக உடல்நலமின்றிக் காலமானார். ஹூம்…. அவரு.. தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சொத்து சுகம் எதையும் விட்டுச் செல்லவில்லை. நல்லவர் குடும்பம் என்ற மரியாதையும், மதிப்பும் மட்டுமிருந்தது. சத்யபாமா உறுதிமிக்கவர். குழந்தைகளை அழைத்துக் கொண்டு குமுறும் இதயத்துடன்… கணவனுடன் இலங்கை சென்றவர், தனியாகத் திரும்பினார். நெருங்கிய உறவினர் எவராவது உதவி செய்வார்கள என்று எதிர்பார்த்தார். எல்லோரும் விலகிச் சென்றனர். குழந்தைகளைக் காப்பாற்ற ஒரு பிராமணக் குடும்பத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பலரைத் தனக்குப் பணிபுரிய வைத்திருந்தவர், பிள்ளைகளுக்காக உழைப்பது என்ற முடிவிற்கு வந்தார். அங்கே……. தனது கைக்குழந்தையான எம்.ஜி.ஆரையும் எடுத்துச் சென்றார். அப்போது…………

காட்சி:
சத்யபாமா தனது (2 வயது) மகன் எம்.ஜி.ஆரைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வருகிறார். வீட்டுச் சொந்தக்காரி ஏற இறங்கப் பார்த்துவிட்டு அலட்சியமாகப் பேசுகிறாள்.

வீட்டுக்காரி: வேலைக்கு உன்னை வைச்சா.. நீ…. உன் கை குழந்தையையும் தூக்கிக்கிட்டு வர்றியேடி..! இங்கே நீ வேலையைப் பார்ப்பியா? உன் குழந்தையைக் கவனிப்பியா?

சத்யபாமா: (கோபமாக) எனக்குச் சத்யபாமா, சின்னம்மா, கண்ணச்சியம்மான்னு மூணு பேரு இருக்கு! ஏதாவது ஒரு பேரைச் சொல்லிக் கூப்பிடுங்க. இப்படி….. வாடி.. போடின்னு கூப்பிட்டா நானும் சொல்லும்படி இருக்கும்.

வீட்டுக்காரி: அம்மாடியோ…. நான் இப்படி……. என்னடி……. ஹூம்… இல்லே தப்புமா…….. சத்யா…! என்ன சொல்லிட்டேன்.

சத்யா: வழியத்துப்போயி, வேலைக்காரியா வந்தவதானே, நாம வசதியா இருக்கோம்ங்கிற எண்ணத்திலே வார்த்தைகளைக் கொட்டீட்டீங்க…! நானும், உங்களைவிட வசதியா வாழ்ந்தவதான். ஏதோ என் போதாத காலம், இந்தக் கோலத்தோட வேலை செய்யத்தான் வந்திருக்கேன்…….. மானம், ரோஷத்தையெல்லாம் விட்டுவிட்டு வரலேம்மா……….

வீட்டுக்காரி: சரி…. சரி… சத்யபாமா…. நான் ஒண்ணு கேப்பேன்….. கோவிச்சுக்கமாட்டியே…

சத்யா: என் கோபம் உங்களை என்னம்மா செய்துடும். இல்லாதவ நான், இருக்கிறவுங்க நீங்க. சொல்லாலே கொல்லாமே இருந்தாச்சரி!

வீட்டுக்காரி: ஆமா… கண்ணச்சியம்மா…. சத்யபாமா…. ஏம்மா வைச்சுண்டு படாதபாடுபடுறே! இந்தக் குழந்தை அழகா…. லட்சணமா இருக்கு. நேக்கும் பிடிச்சிருக்கு. உனக்குக் கை நிறைய பணம் தர்றேன்…. இந்தக் குழந்தையைக் கொடுத்துடேன்.

சத்யா: கை நிறைய பணம் கொடுத்தாலும் இந்தப் பிள்ளையைப் பெத்தவ மனம் நிறையாது. விக்கிறதுக்கு நான் பிள்ளையைப் பெக்கலை. ஏதோ…. கஷ்டமா இருக்கேன்னு உங்க வீட்டு வாசல்படியை மிதிச்சேன். நீங்க என்னை மதிக்காதது மட்டுமில்லே, நெஞ்சிலே மிதிக்கிறீங்க. போதும்மா….. உங்க சகவாசம்! நீங்களும்… உங்க வேலையும்…..

தேமொழி

unread,
Nov 3, 2020, 2:16:28 AM11/3/20
to மின்தமிழ்

தினசெய்தி நாளிதழில்   I2.10.2020  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 56)
“மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி (IV)”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


என் இனிய நண்பர், நாகை தருமனையும், புரட்சித் தலைவரின் நெருங்கிய தொண்டராகவும், புரட்சித் தலைவரின் திரைப்படக் கதை வசனத் துறையின் துணையாசிரிராகவும், ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்திற்கு துணைக் கதையாசிரியராக கவிஞர் கண்ணதாசனுடன் இணைந்து பணியாற்றியவரும், புரட்சித் தலைவரின் ‘கலையரசி’, ‘பாக்தாத் திருடன்’ ஆகிய திரைப்படங்களின் கதையாசிரியராகவும் பணியாற்றியவருமான நாகூர் கே. இரவீந்திரனையும் கொண்டு, 1992-ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மண்டபத்தில் வாரந்தோறும் திருமலை நாயக்கர் மன்னரைப் பற்றிய ஒலிஒளிக் காட்சி சிறப்பாக நடைபெறுவதைப்போல, புரட்சித் தலைவரைப் பற்றி ஒரு சிறப்பான ஒலிஒளிக் காட்சி நடத்தத் திட்டமிட்டார். அதற்காக புரட்சித் தலைவரை முழுமையாக அறிந்த இவர்கள் இருவரையும், ஒலிஒளிக் காட்சியை எழுதித் தருமாறு ஆணையிட்டார். அவ்வாணைக்கிணங்க காட்சித் தொடரை எழுதிக் கொண்டிருந்த வேளையிலேயே கே. இரவீந்திரன் மறைந்து விட்டார். ஏனோ சில காரணங்களால், ஒலிஒளிக்காட்சி நடைபெறாமலேயே போய் விட்டது. நாகை தருமன் கைப்பட எழுதிய காட்சித் தொடர் தினசெய்தி வாசகர்களின் பார்வைக்கு.

சத்யபாமா குழந்தையுடன் குமுறியபடி வெளியேறுகிறாள்

காட்சி:
சத்யபாமாவின் கணவர் கோபாலன் நீதிபதியாக இருந்தபோது, காவல்துறையில் பணிபுரிந்தவர் வேலுநாயர். அவர் பணிஓய்வுபெற்ற பின்னர் பார்க்க வருகிறார். சக்ரபாணி தாயிடம் அவர் வந்திருப்பதைக் கூறுகிறார். சத்யா வரவேற்கிறார்.

வேலுநாயர்: அம்மா… நீங்க பட்ட கஷ்டமெல்லாம் கேள்விப்பட்டேன். எப்படி இருந்தவங்க….. அதெல்லாம் எதுக்கும்மா, நீங்க ரெண்டு பேரும் நல்லதையே நினைச்சு நல்லதையே செய்தவுங்க. உங்களுக்குக் கடவுள் ஒரு குறையும் வைக்க மாட்டான். நம்ப உறவுக்காரவுங்க மத்தியிலே கஷ்டப்படத்தயாரா இருந்தாலும் சரியான மரியாதை இல்லேன்னா சங்கடமாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்காக வாழணும்னு நினைக்குறீங்க. நான் ரிடையராகிட்டேன். பிழைப்பைத் தேடிக் கும்பகோணம் போறேன். நமக்குன்னு உள்ள உறவுங்க விலகிப்போனாலும், ஈரமுள்ள மத்தவுங்க உதவி செய்வாங்க. தமிழ்நாடு நம்மை வாழவைக்கும். பிள்ளைங்களை உருவாக்க நானும் உங்களுக்கு உதவியா இருப்பேன்.

சத்யபாமா: நீங்க சொல்றது சரிதான். வளமாக வாழ்ந்த இடத்திலே வறுமையிலே வாடுறதை விட, நம்மைப்பத்தி தெரியாதவுங்க மத்தியிலே எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சு, கால் வயித்துக் கஞ்சி குடிச்சாலும் மனசுக்கு நிம்மதிதான்.

வேலுநாயர்: நீங்க… பிள்ளைகளை அழைச்சுக்கிட்டு தயாராகுங்க… கும்பகோணம் புறப்படலாம். நம்பிக்கையோட வாங்க… அந்தத் தெய்வம் நல்வழிக்காட்டும்.

சத்யபாமா: சரிங்க…! மனுஷங்க கைவிட்டாலும் தெய்வம் காப்பாத்தும்ங்கிற நம்பிக்கையிலேயேதான் என்னைப் போல ரொம்பப் பேரு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க….

காட்சி மாற்றம்
குடும்பத்தினர் அமர்ந்துள்ளனர்.
ஆண்குரல்: பாலக்காட்டிலிருந்து சத்யபாமா தனது பிள்ளைகளுடன், வேலுநாயரோடு கும்பகோணம் வந்து சேர்ந்தார். வேலுநாயர் மிகவும் நம்பிக்கையுடன் உறவுக்காரர் இல்லத்திற்குச் சென்றார். அவர்கள் சரியானபடி உபசரிக்காததால் அவருக்குக் கோபம் வந்து விடுகிறது. அவரது உறவினர் நாராயணன் நாயர் மட்டும் ஆதரவாக இருக்கிறார். குறைந்த வாடகையில் ஒரு வீட்டை வாடகைக்கிப் பிடித்துச் சத்யபாமா அம்மையாரையும் குழந்தைகளையும் அங்குத் தங்க வைக்கிறார். சத்யத்தாய் பணிபுரிகிறார். வயோதிகரான வேலுநாயரும் வேலைபார்த்து முடிந்த அளவு உதவி செய்கிறார். கஷ்டங்களுக்கிடையில் குடும்பம் நடக்கிறது. எம்.ஜி.ஆர் தவழ்ந்து, நடந்து வளர்கிறார். தனது பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டுமென்று தாய் சத்யபாமா விரும்புகிறார்.

கும்பகோணத்தில் ஆனையடி பள்ளியில் எம்.ஜி.சக்கரபாணியையும், எம்.ஜி.ஆரையும் சேர்க்கிறார்.

காட்சி
காலை நேரம்,
சின்னஞ்சிறிய வீடு.

வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடுகிறார் சத்யபாமா. பின்பு வீட்டிற்குள் வருகிறார்.

சிறுவர்களான சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் பாயைச் சுருட்டி வைக்கின்றனர்.

சக்ரபாணி வீட்டின் கொல்லைப் புறத்தில் சாம்பல் எடுத்துப் பல் துலக்குகிறார். சிறுவன் எம்.ஜி.ஆருக்குத் தாய் சத்யபாமா பல் துலக்கி விடுகிறார்; குளிப்பாட்டுகிறார்.

சத்யபாமா: (செல்லமாக)உன் வயசுப்பிள்ளைங்க தானா பல் துலக்கி, குளிச்சு முழுகிட்டும் பள்ளிக்கூடம் போகுது! கால கண்டா நீ மட்டும் ஏன்டா இப்படி அடம் பிடிக்கிறே!

எம்.ஜி.ஆர்: (சிணுங்கியபடி) அம்மா… உன் கை பட்டாத்தாம்மா பல்லு பளிச்சுன்னு இருக்குது.உடம்பு தங்கம் மாதிரி தகத் தகன்னு ஜொலிக்குது! ஏம்மா…. எங்கம்மா கை என் மேலே பட்டுக்கிட்டே இருக்கணும்-நீ எப்போதும் என்னோடவே இருக்கணும்னு நான் நினைக்கிறது தப்பாம்மா…

சத்யபாமா : (கண்கலங்கியபடி) நான் எப்பவும் உன் பக்கத்திலேயே தான் இருப்பேன்.
குஷியோடு குளித்துவிட்டுச் செல்கின்ற எம்.ஜி.ஆர்.
கொல்லைக் கொடியில் தன் கோவணத்தைக் காணாமல் குதிக்கிறார்.

எம்.ஜி.ஆர்: அம்மா…என் கோவணத் துணியை அண்ணன் எடுத்துட்டுது.

சத்யபாமா: என்ன..சொன்னே..?

எம்.ஜி.ஆர்: என் கோவணத் துணியையும் துண்டையும் அண்ணன் எடுத்துட்டுதும்மா…

சத்யபாமா: (கோவமாக) சின்னப்பிள்ளை நீ…! இப்பவே என்னுது…உன்னுதுன்னு பிரிச்சுப் பேச ஆரம்பிச்சுட்டியா…? அவன் மட்டும் யாரு….உன்னோட அண்ணன் தானே! இனிமே ‘என்னோடது’ என்கிற வார்த்தையே வரக்கூடாது! என்ன…இந்த மாதிரி சொல்லுவியா?

ஆத்திரத்தோடு மகன் எம்.ஜி.ஆர் முதுகில் தாய் சத்யா ஒரு அடி கொடுக்கிறார். எம்.ஜி.ஆர் அழுகிறார். அவர் கண்ணீரோடு ‘என்’ என்கிற தன்னலமும் கரைந்து, மறைந்து போகிறது.

சக்ரபாணி: அம்மாவோட கை எப்போதும் உன் மேலேயே பட்டுக்கிட்டு இருக்கணுமுன்னு சொன்னீயில்ல….அதான்…! போதுமா..?
சக்ரபாணி சிரிக்கிறார்.
தாய்சத்யபாமாவும் அழும் எம்.ஜி.ஆரும் தன்னை மறந்து சிரிக்கின்றனர்!

காட்சி
எம்.ஜி.ஆருக்கு அடர்த்தியான நீண்ட முடி, தலைவாரிப்பின்னி விடுகிறார் தாய். பின்னர்ப் பூச்சூட்டி, பொட்டு வைத்து, திருஷ்டிப்பொட்டு வைக்கிறார். சக்ரபாணி பின்னல் போட்டு, பூ வைத்துப் பொட்டு வைத்து நிற்கிறார். பின்னர்த் தட்டில் சோறு போட்டு அவரே சாப்பிடுகிறார். எம்.ஜி.ஆருக்கு மட்டும் அவருடைய தாயே சோறு ஊட்டி விடுகிறார்.

காட்சி
பிள்ளைகள் இருபுறமும் வர, சத்யபாமா அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச்செல்வது காண்பிக்கப்படுதல்

காட்சி
பள்ளியில் மூன்றாவது வகுப்பில் ஆசிரியர் ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்று அழைக்க….. “உள்ளேன்… அய்யா…” என்று எம்.ஜி.ஆர்.கூறுவது.

காட்சி
சடுகுடு, பச்சைக்குதிரை, கிட்டிப்புல், கோலி விளையாட்டு அனைத்திலும் எம்.ஜி.ஆர். வெற்றி பெறுவது தனித்தனியே காண்பித்தல்.

காட்சி
பள்ளிக்கூடம்
மாலைநேரம்
பள்ளிக்கூடத்தின் வாசலில் பள்ளியில் படிக்கும் சிறுவனின் புத்தகப்பையை இன்னொரு மாணவன் பறித்துக் கொண்டு செல்கிறார். பறி கொடுத்த அப்பாவி அழுகிறான். சிறுவன் எம்.ஜி.ஆர் பாய்ந்து ஓடிச் சென்று துரத்திப் பிடித்து அவனைப் பிடித்து விடுகிறான். அவனது கையிலிருந்த பையை வாங்கி வந்து, பறி கொடுத்த பையன் கையில் கொடுத்து அவன் கண்ணீரைத் துடைத்துச் சமாதானப்படுத்துகிறார். அழுதவன் சிரிக்கிறான்.

காட்சி
பள்ளிக்கூடம்
காலை நேரம்
மூன்றாவது வகுப்பில் தண்ணீர்ப்பானை வைப்பதற்கு ஒவ்வொரு மாணவனிடமும் வகுப்புத் தலைவன், காலணா வீதம் வசூல் செய்கிறான். காலணா கொடுக்காத ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனை, வகுப்புத் தலைவன் அடிக்கிறான். எம்.ஜி.ஆர்., இந்த மாணவனைக் காப்பாற்றி, வகுப்புத் தலைவனுடன் சண்டை போடுகின்றார். இந்தச் சமயத்தில் வகுப்பு ஆசிரியர் வந்துவிடுகின்றார். மாணவர்த் தலைவன் வசூல் செய்த பணத்தில் எதிரில் கடையில் உருண்டை வாங்கித் தின்றதாகக் கூறி எம்.ஜி.ஆர். நிரூபிக்கிறார். உடனே, தர இயலாத ஏழை மாணவனை அடித்ததை, தான் தடுத்துச் சண்டையிட்டதைத் தெரிவிக்கிறார். வகுப்பு மாணவர்கள் அவருடைய பக்கம் நிற்கின்றனர். ஆசிரியர் அந்த வகுப்புக்கு எம்.ஜி.ஆரைத் தலைவராக்குகிறார்.

காட்சி
காலை நேரம்
தாய் சத்யா அடுத்த வீட்டு வாசலில் நிற்கிறார். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு முறத்தில் அரிசி நொய் கொண்டு வந்து போடுகிறார். சத்ய பாமா அதனை முந்தானையில் வாங்கிக் கொள்கிறார். அப்படியே மடித்து, முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு வீட்டிற்குள் வருகின்றார்.
இதனை எதிர்பாராதவிதமாக எம்.ஜி.ஆர்.கவனித்துக் கொண்டு, நிற்கிறார் கண்கலங்கியபடி.

காட்சி
மதிய வேளை
அன்னை சத்யா அடுத்த வீட்டிலிருந்து வாங்கி வந்த நொய் அரிசியில் கஞ்சி காய்ச்சுகிறார். இருதம்ளர்களில் கஞ்சி ஊற்றிப் பிள்ளைகளிடம் கொடுத்து விடுகிறார். தான் குடித்து விட்டதாகத் தெரிவித்து, தண்ணீரை அருந்துகிறார்.
எம்.ஜி.ஆர்.இதனையும் கவனித்து விடுகின்றார்.
தாய் சத்யா சர்வசாதாரணமாகப் பிள்ளைகளிடம் வருகிறார்.
சத்யா: ராமு…சக்கு…வயிறு நிறைஞ்சுதா?

எம்.ஜி.ஆர்: எங்க வயிறு நிறைஞ்சுட்டுதும்மா. ஆனா…நாங்கக் குடியிருந்த வயிறு காயுதே.

எம்.ஜி.ஆர் கண்கலங்கியபடி கையிலிருந்த தம்ளரை நீட்டுகிறார். அதில் பாதி கஞ்சி இருக்கிறது.
கஞ்சி உள்ள தம்ளரைத் தாயின் வாயில் வைத்து குடிக்கும்படி வற்புறுத்துகிறார்.

சத்யா: பெத்த வயிறு மட்டுமில்லே, என்னைப் போல எத்தனையோ தாய்களுடைய……
மத்தவுங்களுடைய வயிறும், மனமும் உன்னாலே குளிரும்.
கஞ்சியைக் குடித்தபடி பிள்ளைகள் இருவரையும் வாரியணைத்துக் கொண்டு கண்ணீர் விடுகின்றார்.

காட்சி
பள்ளி ஆண்டு விழாவில், மூன்றாம் வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணசாமிராவ், ’லவகுசா’ நாடகத்தில், லவன் வேடத்தில் எம்.ஜி.ஆரை நடிக்க வைக்கிறார். அப்போது அவருக்கு வயது ஏழு. சத்ருக்குனன் வேடம் போட்டவனுடன் மேடையில் சண்டை. எம்.ஜி.ஆர்.நடிப்புக்குப் பாராட்டு.
எம்.ஜி.ஆர்.மூன்றாம் வகுப்பு (7வயது)
சக்ரபாணி ஏழாவது வகுப்பு (11 வயது)
நாடகத்தைக் கண்டு ரசித்தவர்கள் கரவொலி. எதிரொலி.

காட்சி
மதுரை(பாய்ஸ்) நாடகக் கம்பெனிப் பாடகரான நாராயணன் நாயர், வேலுநாயர் இருவரும் உள்ளே நுழைகின்றனர். ‘லவகுசா’ நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பைப் புகழ்கின்றனர். நாடகக் கம்பெனியில் சேர்க்கலாம் என்று நாராயணன் யோசனை கூறுகிறார். அன்னை சத்யா மகன்களைப் பிரியக் கலங்கி, பின்னர்ச் சம்மதிக்கிறார். அண்ணனும் தம்பியும் நாடகக் கம்பெனியில் சேர்ந்தால்தான் அவர்களும், தாயும் பசியும், பட்டினியுமாக இல்லாமல் வாழ முடியும் என்கின்ற நிலை.
சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர முடிவு செய்கின்றனர்.

தேமொழி

unread,
Nov 7, 2020, 9:04:19 PM11/7/20
to மின்தமிழ்

தினசெய்தி நாளிதழில்   I9.10.2020  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 57)
“மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி (V)”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


காட்சி - 25:

அண்ணன் சக்கரப்பாணியும் எம்.ஜி.ஆரும், குடந்தையிலிருந்து புதுவைக்குப் புறப்படுகின்றனர். நாராயணன் நாயர் அழைத்துச் செல்கிறார். தாயின் பிரிவை எண்ணிச் சகோதரர் இருவரும் கண்ணீர். தாய் சத்யா அழுகை, இரயிலுடன் கூடவே….“ராமு…சக்கு…” என்றபடி ஓடி வருகிறார். எம்.ஜி.ஆர். தாயின் கையைப் பிடித்துக் கொள்கிறார். ரயில் அவர்களைப் பிரிக்கிறது.

காட்சி - 26:

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆரும், சக்கரப்பாணியும் சேருகின்றனர்.

காட்சி - 27:

நடன ஆசிரியர் ஸ்ரீராமுலு நடனம் சொல்லிக் கொடுக்கும் போது பிரம்பினால் எம்.ஜி.ஆரை அடிக்கிறார். அண்ணனிடம் தனிமையில் எம்.ஜி.ஆர். அழுகிறார்.

எம்.ஜி.ஆர்: (அழுதபடி) இப்படி அடிபட்டுக்கிட்டு என்னாலே இனி மேல் இங்கே இருக்க முடியாது. வா…நாம்ப…ஊருக்குப் போயி அம்மா கூடவே இருக்கலாம்.

சக்கரப்பாணி: அம்மா கூடவே இருக்கலாம்…… சரிதான்! அம்மாவுக்குப் பாரமா எத்தனை காலத்துக்குத்தான் இருக்கிறது. இவ்வளவு காலமா நமக்காக அவுங்க எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டாங்க. அவுங்களுக்காக இனிமே நாம்ப இதையெல்லாம் சகிச்சுக்கத்தான் வேணும்.சம்பாதிச்சு அம்மாவை நல்லா வச்சுக்கணும்.

எம்.ஜி.ஆர்: எப்படி…? மாதம்…நாலணா சம்பளம்..அதோட ..அடி உதை…திட்டு வேறு. இதில் எதை அம்மாவுக்குக் கொடுக்கிறது?

சக்கரப்பாணி: பயிற்சி முடிஞ்சதும் அஞ்சு ரூபாய் சம்பளம் கொடுப்பாங்க. நம்பப் பாடுபட்டா அது மேலும் மேலும் அதிகமாகும்.

எம்.ஜி.ஆர்: சரி…அண்ணே! எப்படியோ அம்மா நல்லபடியா இருக்கிறதுக்காக எத்தனை கஷ்டமாக இருந்தாலும் பொறுத்துகிறேன்.

எம்.ஜி.ஆர். முகமலர்ச்சியோடு செல்கிறார்.

காட்சி - 28:

எம்.ஜி.ஆருக்குப் பாடல், சண்டைப்பயிற்சி முதலியவை அளிக்கப்படுவதை ஒளி-நிழல் காட்சியாகக் காண்பித்தல்

காட்சி - 29:

பயிற்சி முடிந்ததும் முதன்முதலாக அர்ச்சுனனுக்கு அம்புகள் எடுத்துத்தரும் உத்தர இளவரசனாக எம்.ஜி.ஆர் முதன் முதலில் நடிக்கிறார்.

அர்ச்சுனன் மீது கால் தடுக்கி விழுந்து, “ஐயோ பாம்பு…. காப்பாத்துங்க” என்று கூறியதும் மக்கள் கையொலி எழுப்புகின்றனர்.

காட்சி - 30:

‘நல்ல தங்காள்’ நாடகத்தில் கடைசி மகனாக நடிக்கிறார். அழுகை வராததால், திரை அருகில் நின்று கொண்டிருந்த காளி என் ரத்தினம், நாராயணன் நாயர் ஆகியோர் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று கொண்டு தலையில் குட்டுகின்றனர். எம்.ஜி.ஆருக்கு அழுகை தாங்க முடியவில்லை. அழுது கொண்டே சுற்றி வந்தார் நாடக மேடையை…!

எம்.ஜி.ஆர்: எள்ளும் தண்ணீரும் இரைப்பதற்கும் கொள்ளி வைப்பதற்கும் என்னையாவது உயிரோடு விட்டு விடம்மா…! என்று கண்ணீர் விட்டுக் கதறுகிறார். மக்கள் கைதட்டுகின்றனர். “பலே…பேஷ்..”என்று குரல்.

காட்சி - 31:

‘தசாவதாரம்’ நாடகத்தில் பரதனாக நடித்து வந்த பி.யு.சின்னப்பாவுக்கு குரல் கம்மியதால், நாடகப்பேராசிரியர் எம்.கந்தசாமி முதலியார் எம்.ஜி.ஆரை. பரதன் வேடத்தில் நடிக்க வைக்கிறார். அன்று நாடகம் பார்க்க வந்த எஸ்.ஜி. கிட்டப்பா, எம்.ஜி.ஆரைப் பாராட்டி, கட்டித் தழுவுதல்.

காட்சி - 32:

அன்னை சத்யா தன் இரு பிள்ளைகளையும் எம்.கந்தசாமி முதலியாரிடம் ஒப்படைத்தல்.

எம்.கந்தசாமி முதலியார்: எனக்கு இதுவரையில் ஒரே பிள்ளை (எம்.கே.ராதா) தான். இனிமேல் உங்கள் பிள்ளைகளையும் சேர்த்து மூன்று பிள்ளைகளாகக் கருதி வளர்ப்பேன். கவலைப்படாதீர்கள்.

காட்சி - 33:

நாடகக் குழுவினருடன் எம்.ஜி.ஆர், சக்கரப்பாணி பர்மா செல்கின்றனர். உறையூர் மொய்தீன் நாடகக் கம்பெனியுடன் இரங்கூனில் ஆறு மாதங்கள் தங்கி நடித்தனர். அப்போது அவருக்கு வயது 15. மீண்டும் தமிழகம் திரும்பியதும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆர் சேர்ந்தார். ‘பதிபக்தி’ என்ற சமூக நாடகத்தில் முக்கியமான வேடமேற்று நடித்தார்.

காட்சி - 34:

‘சதி லீலாவதி’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகராகக் காலடி எடுத்து வைத்தார். இன்ஸ்பெக்டர் வேடத்தில் தான் முதன் முதலில் அவர் படத்தில் நடித்தார்.

படம் காண்பிக்கப்படுதல்.

‘சதிலீலாவதி’ படத்தின் கதையை எழுதியவர் கலை மேதை எஸ்.எஸ்.வாசன். எம்.கே.ராதா, டி,எஸ்.பாலையா, கலைவாணர்.என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய பலர் நடித்து அறிமுகமான படம் அது. 1936 ஆம் ஆண்டு அந்தப்படம் வெளிவந்தது.

தொடர்ந்து பல படங்கள்…..

ஆனால், சின்னச்சின்ன வேடங்கள்!

இரு சகோதரர்கள், தஷ்யக்ஞம், வீராஜெகதீஷ், மாயமச்சேந்திரா, பிரகலாதன், அசோக்குமார், சீதாஜெனனம், தாசிப்பெண், தமிழறியும் பெருமாள், அரிச்சந்திரா, மீரா, சாலிவாகனன், ஸ்ரீமுருகன், பைத்தியக்காரன் போன்றவை அவருடைய திரையுலக வளர்ச்சிக்குப் படிக்கட்டுகளாக அமைந்த படங்கள்

ஒளிப்படங்கள் காண்பிக்கலாம். நடனக்காட்சி (சிவ-பார்வதி) காண்பிக்கலாம்

காட்சி - 35:

‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பல தடைகள், தூக்கு மேடையில் உண்மையில் தொங்கி, மூச்சு திணறி உத்தரம் உடைந்து விழுந்ததால் உயிர் பிழைக்கிறார்.

காட்சி - 36:

எதிர் வீட்டுப் பெண் மீது எம்.ஜி.ஆர்.காதல். அந்தப் பெண்ணும் விரும்புகிறது. இதனைத் தாய் சத்யா கவனித்து, திருமணம் முடிக்கத் தீர்மானிக்கிறார்.

காட்சி - 37:

ஊருக்குச் சென்ற தாய்க்கு உடல்நலமில்லை என்று அண்ணன் சக்கரப்பாணி கூறியதைக் கேட்டு, எம்.ஜி.ஆர்.பதறிக்கொண்டு புறப்படுகிறார். தாய் வற்புறுத்தலின் காரணமாக (பார்கவி) தங்கமணியைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறார். ஒரேயொரு நிபந்தனை விதிக்கிறார். ‘கதராடைதான் திருமணத்தின் போது அணிவேன்’ என்று! அவர் பிடிவாதத்திற்கு அன்னை சத்யா சம்மதிக்கிறார்.

திருமணம் முடிந்து, சென்னை திரும்பினர். எம்.ஜி.ஆர். தனது முதல் மனைவி மீது அன்பைப் பொழிகிறார். உயிருக்குயிராக விரும்புகிறார். (1938)

அண்ணல் காந்தியடிகள், சுபாஷ் சந்திரபோஸ் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் எம்.ஜி.ஆர்.

காட்சி -38:

இரண்டாம் உலகப்போர் காரணமாகச் சென்னை நகரை விட்டுச் செல்கின்றனர் பலர்.மருமகள்களையும் பேரக்குழந்தைகளையும் அன்னை சத்யா பாலக்காடுக்கு அனுப்பி வைக்கிறார். கணவரைப் பிரிய மனமின்றித் தங்கமணி அழுகை.எம்.ஜி.ஆர்.கண்ணீர்.

காட்சி - 39:

தங்கமணி இரண்டு மாதங்களில் மாரடைப்பினால் இறந்து போனார். விரைந்து சென்ற எம்.ஜி.ஆர்.தன் மனைவியின் முகத்தைக் கூடக் கடைசியாகக் காண முடியவில்லை. மனம் வெறுத்துத் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். சக்கரப்பாணி தடுத்து, காப்பாற்றி விடுகிறார்.

காட்சி - 40:

ஜுபிடர் பிக்சர் ‘ராஜகுமாரி’ படம் வெளிவந்தது. பி.யு.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், எம்.கே.ராதா, கே.ஆர்.ஆர். போன்ற முன்னணி நடிகர்கள் மிகவும் பிரபலமாக இருந்த போது, எம்.ஜி.ஆர். முதன்முதலில் கதாநாயகனாக நடித்த படம் வெற்றிவாகை சூடியது (1947)

‘ராஜகுமாரி’ படத்தில் முக்கியக் காட்சி திரையிடலாம்.

காட்சி - 41:

கதாநாயகன் வேடத்தில் நடித்த பின்பும் ‘அபிமன்யு’, ’ராஜமுக்தி’, ’ரத்னகுமார்’, ‘மோகினி’ ஆகிய படங்களில் இரண்டாவது கதாநாயகன் வேடங்களிலும் நடித்தார்.

‘ரத்ன குமார்’, ‘மோகினி’ படக் காட்சிகள் அல்லது ஒளிப்படங்கள் காண்பிக்கலாம்.

காட்சி - 42:

தாய் சத்யா வற்புறுத்தலின் காரணமாகச் சதானந்தவதியை மணக்கிறார், எம்.ஜி.ஆர். பெண் பார்க்கச் செல்லவில்லை. தாயே பார்த்து முடித்த திருமணம். சதானந்தவதி கருத்தரித்தார். காசநோய் பற்றிக் கொள்கிறது. சிகிச்சையின் பலனாகக் கருச்சிதைகிறது. இருமுறை (1950) இவ்வாறு நேரிடுகின்றது. அவர் படுத்த படுக்கையாக இருந்து 1962 இல் காலமானார். இதற்கிடையில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் நடிக்கும் போது, படத்தின் நாயகி, வி.என்.ஜானகி மீது எம்.ஜி.ஆருக்குக் காதல் அரும்புகிறது. இருமனமும் ஒரு மனமாகி, டைரக்டர் கே.சுப்ரமணியம் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டனர்.

காட்சி - 43:

எம்.ஜி.ஆர்.கதராடை அணிந்து, கழுத்தில் மணிமாலை அணிந்திருப்பார். நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்தார். போஸ் காங்கிரசிலிருந்து பிரிந்து விட்டார் என்றதும் மனம் வருந்தினார்.

காட்சி - 44:

பேரறிஞர் அண்ணாவை 1952 ஆம் ஆண்டு டி.வி. நாராயணசாமியுடன் சென்று சந்தித்தார். ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ நாடகத்தில் சிவாஜி வேடத்தில் நடிக்கும்படி அண்ணா கூறினார். எம்.ஜி.ஆர்.ஏற்றுக் கொண்டார். திரைப்படங்களில் ஓய்வின்றி நடித்ததினால் நாடகத்தில் நடிக்க முடியாமல் போயிற்று.

காட்சி - 45:

அண்ணாவின் எழுத்தும், பேச்சும் எம்.ஜி.ஆரை அரசியலைக் கூர்ந்து நோக்க வைத்தன. ‘பணத்தோட்டம்’ போன்ற நூல்கள் பலவற்றைப் படித்தார். அவருடைய பண்பும், அரசியல் நோக்கும் எம்.ஜி.ஆரையும் அண்ணாவின் இயக்கத்தில் இணைத்தன.(1953) கலைவாணர் என்.எஸ்.கே. இயக்க ஆதரவாளராக இருந்தார். கே.ஆர்.ஆர். ‘நடிப்பிசைப்புலவர்’ என்று போற்றப்பட்டார்.

காட்சி - 46:

‘மர்மயோகி’ படம் 1951 வெளிவந்தது. கரிகாலன் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பும், சண்டைக்காட்சிகளும் பாராட்டப்பட்டன. பெரும் புகழ் சேர்ந்தது.

‘மர்மயோகி’ படக்காட்சிகள் காண்பிக்கலாம்.

‘சர்வாதிகாரி’, ‘அந்தமான் கைதி’, ‘என் தங்கை’, ‘குமாரி’, ‘நாம்’ ஆகிய படங்கள் வெளிவந்தன.

’சர்வாதிகாரி’ படக்காட்சி… ‘அந்தமான் கைதி’ படத்தில் ‘காணி நிலம் வேணும் பராசக்தி’ பாரதியார் பாடலை இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன் பாடியது… ‘என் தங்கை’யில் சோக நடிப்புக்காட்சி ஆகியவை காண்பிக்கலாம். இல்லையேல் ஒளிப்படங்கள்.

காட்சி - 47:

அன்னை சத்யா (1953) மரணம். எம்.ஜி.ஆர். துயரம். அன்னையின் விருப்பத்தின்படி, அவர் வாழ்ந்து மறைந்த இலாயிட்சு சாலை இல்லத்தை விலைக்கு வாங்கி அன்னையின் பெயர் சூட்டினார்.

காட்சி - 48:

‘மலைக்கள்ளன்’ படம் மகத்தான வெற்றியடைகின்றது (1954). இந்திய அரசு வெள்ளிப்பதக்கத்தைப் பரிசாகப் பெறுகின்றது.

’மலைக்கள்ளன்’ படக்காட்சி காண்பிக்கலாம்.

காட்சி - 49:

எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த முதல் படம் (ஒரே படம்) ‘கூண்டுக்கிளி’ வெளிவந்தது. ‘கூண்டுக்கிளி’ காட்சி

காட்சி - 50:

‘குலேபகாவலி’, முதல் வண்ணத்தமிழ்ப் படமான ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, ‘மதுரை வீரன்’, ‘தாய்க்குப்பின் தாரம்’, ‘சக்கரவர்த்தித் திருமகன்’, ‘மகாதேவி’, ‘புதுமைப்பித்தன்’, ‘ராஜராஜன்’ ஆகிய படங்கள் அவருடைய புகழுக்குப் புகழ் சேர்த்தன. பல படங்கள் சாதனை படைத்தன. படக்காட்சிகள் அல்லது ஒளிப்படங்கள்

காட்சி - 51:

நேருவுக்குக் கருப்புக்கொடி காட்ட அண்ணா முடிவு. கழகத்தலைவர்கள், எம்.ஜி.ஆர். கைது. (4.1.1958) முதல் சிறைவாசம். சில நாட்களில் விடுதலை.

காட்சி - 52:

‘நாடோடி மன்னன்’ படத்தைத்தயாரித்து இயக்கி, நடித்து வெளியிட்டார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் திட்டங்களை வெளியிடும் காட்சி. ‘சும்மாக்கிடந்த நிலத்தை’- பாடல் காட்சி திரையிடலாம்.

காட்சி - 53:

மதுரையில் 110 சவரன் கொண்ட மணிகள் பதித்த தங்க வாள் பரிசளிப்பு. நாவலர் வழங்குகிறார். மதுரை முத்து நடத்திய மாபெரும் விழா.(16.10.59) காட்சி அல்லது ஒளிப்படம்

காட்சி - 54:

சென்னையில் ‘நாடோடி மன்னன்’ பாராட்டு விழா. 5 ½ அடி உயர மிகப்பெரிய வெள்ளிக் கோப்பை பரிசளிக்கப்படுகின்றது. பேரறிஞர் அண்ணா பாராட்டுகிறார். நிகழ்ச்சியின் காட்சி அல்லது ஒளிப்படம்

காட்சி - 55:

தமிழ் நடிகர் சங்கத்தலைவரானார். தென்னிந்திய நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்தார். ‘நடிகன் குரல்’ மாத இதழ் தொடங்கப்பட்டது. இதழின் ஆசிரியரானார்.


தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை...

- ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamiz...@gmail.com 
-----

தேமொழி

unread,
Nov 9, 2020, 10:07:30 PM11/9/20
to மின்தமிழ்


தினசெய்தி நாளிதழில்   2.11.2020  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 58)
“மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி (VI)”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

காட்சி - 56:
புரட்சி நடிகர், கலைச்சுடர், நடிக மன்னன், கலை மன்னன், மக்கள் நடிகன், மக்கள் கலைஞன், மக்கள் திலகம், நிருத்தியச் சக்கரவர்த்தி, பொன் மனச்செம்மல் என்ற பட்டங்களும் பரிசுகளும் பல ஊர்களில் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்படுவதை அரங்குகளில் மாற்றி மாற்றி காண்பிக்கலாம். புகைப்படங்களையும் பயன்படுத்தலாம். சென்னை மாநகராட்சி, பல நகராட்சிகள் பாராட்டு. உதாரணம்: ’பொன் மனச்செம்மல்’ பட்டத்தை வழங்கியவர் திருமுருக கிருபானந்த வாரியார்.

காட்சி - 57:
தாய் மகளுக்குக்கட்டிய தாலி, பாக்தாத் திருடன், மன்னாதி மன்னன், ராஜா தேசிங்கு, அரசிளங்குமரி, நல்லவன் வாழ்வான், சபாஷ் மாப்பிளே, தாய் சொல்லைத்தட்டாதே, திருடாதே, குடும்பத்தலைவன், மாடப்புறா, பாசம், ராணி சம்யுக்தா, தாயைக்காத்த தனையன், விக்கிரமாதித்தன் ஆகிய படங்கள் வெளிவந்தன. படக்காட்சிகள் அல்லது ஒளிப்படங்கள்.

காட்சி - 58:
நாடகக்குழுவைத்துவங்கி,’இன்பக்கனவு’, ‘இடிந்த கோயில்’, ‘அட்வகேட் அமரன்’ ஆகிய நாடகங்களைத் தமிழகம் முழுவதும் நடத்தினார். 1953 முதல் 1963 வரையில் பல பொது நல அமைப்புகள் நாடகங்கள் நடத்திப் பயன்பெற்றன. கல்லூரிகள், பள்ளிகள் உயர்ந்தன. இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார். தியாகராயர் கல்லூரிக்கு நிதி திரட்ட உதவினார். பம்பாய்த் தமிழ்ச்சங்கக்கட்டிட நிதிக்கு உதவி. மழைக்கோட்டு ரிக்‌ஷாத்தொழிலாளர்களுக்கு எம்.ஜி.ஆர். வழங்கினார்.

காட்சி - 59:
சீர்காழியில், நாடக மேடையில் குண்டுமணியைத் தூக்கிப்போட்டபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. (1959)நாடக மேடையில் கண்ணீர் விட்டு அழுதவர்களை எம்.ஜி.ஆர். தேற்றிய மன உறுதி. 

காட்சி - 60:
செய்தி கேள்விப்பட்டு, வி.என்.ஜானகி பதறியபடி ஓடிவந்தார். அப்போது இரண்டாவது மனைவி சதானந்தவதி உயிரோடு இருந்தார். எம்.ஜி.ஆருடன் ஒரே இல்லத்தில் அவருக்கும் சதானந்தவதிக்கு உதவியாக இருந்தார்.

காட்சி - 61:
பொதுத்தேர்தலில் சூறாவளி சுற்றுப் பயணம். (1957)“கழகத்திற்கு நிதியளிப்பதைவிட, உன் முகத்தைக்கண்டால் லட்சோப லட்சம் மக்கள் வாக்களிப்பார்கள். அப்படி ஆதரவைத்திரட்டு” என்று அண்ணா கூறினார்.இயக்கம் 15 இடங்களில் வெற்றி. பேரறிஞர் அண்ணா தலைமையில் கழகம் சட்டப்பேரவையில் புகுந்தது.

காட்சி - 62:
மாநகராட்சித்தேர்தல்களில் கழகம் வெற்றிபெற எம்.ஜி.ஆர். அரும்பணி. (1959-1964)

காட்சி - 63:
பொதுத்தேர்தலுக்காகப்பிரச்சாரம். (1962) 50 பேர் தேர்வு. 

காட்சி - 64:
தமிழ்நாடு சட்டப்பேரவை மேலவை உறுப்பினராக ( MLC) அண்ணாவின் விருப்பத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். (1963)கருத்து வேறுபாடு கொண்ட மற்றவர்கள் சொற்களால் ஆத்திரம் கொண்டு பதவியை உதறி எறிந்தார்.

காட்சி - 65:
ஆனந்த ஜோதி, தர்மம் தலைகாக்கும், கலை அரசி, காஞ்சித்தலைவன், கொடுத்து வைத்தவள், நீதிக்குப்பின் பாசம், பணத்தோட்டம், பரிசு, பெரிய இடத்துப்பெண், தெய்வத்தாய், என் கடமை, படகோட்டி, பணக்காரக்குடும்பம், தாயின் மடியில், தொழிலாளி, வேட்டைக்காரன் ஆகிய படங்கள் வெளிவந்தன.படக்காட்சிகள் அல்லது ஒளிப்படங்கள் காண்பிக்கலாம்.

காட்சி - 66:
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடிக்க மலர்களால் அமைந்த ஆடை அணிந்து மங்கை ஒருவர் வருகிறார். அவர்தான் புரட்சிச்செல்வி ஜெயலலிதா அவர்கள்.புதுமுகமான அவரை மக்கள் திலகம் அரங்கத்திற்குள் நுழைந்ததும்… ‘நல்வரவு’… ‘WELCOME’ என்று கூறி வரவேற்கிறார். அவர் வணக்கம் தெரிவிக்கிறார்.

காட்சி - 67:
‘ஆயிரத்தில் ஒருவன்’ படக்காட்சி. பாடல்காட்சி!

காட்சி - 68:
ஆசைமுகம், எங்க வீட்டுப்பிள்ளை, கலங்கரை விளக்கம், கன்னித்தாய், பணம் படைத்தவன், தாழம்பூ, அன்பே வா, நான் ஆணையிட்டால், முகராசி, நாடோடி, சந்திரோதயம், பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா, தாலி பாக்கியம், தனிப்பிறவி, அரசக் கட்டளை, காவல்காரன், தாய்க்குத்தலைமகன், விவசாயி, ரகசியப்போலீஸ் 115, தேர்த்திருவிழா, குடியிருந்த கோயில், கண்ணன் என் காதலன், புதிய பூமி, கணவன், ஒளிவிளக்கு, காதல் வாகனம், அடிமைப்பெண், நம்நாடு…படக்காட்சிகள்… பாடல்காட்சிகள் தொகுப்பு காண்பிக்கலாம்.

காட்சி - 69:
துப்பாக்கியால் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டு, தானும் சுட்டுக்கொண்டார். (12-1-1967) இராமாவரம் தோட்டத்திலிருந்து இருவரையும் இராயப்பேட்டை மருத்துவ மனைக்குக் கொண்டு வருகின்றனர். எம்.ஜி.ஆர். அருகிலேயே டாக்டர்கள்எல்லோரும் சூழ்ந்து கொண்டு, அவரைக் காப்பாற்றப் போராடுகின்றனர். “அண்ணனைப்போய் கவனியுங்கள். அவரைக்காப்பாற்றுங்கள்” என்று டாக்டர்களிடம் வேண்டுகோள் விடுத்த அரிய பண்பு. மறுபிறவி எடுத்தார். குண்டு ஒன்று, பிரிய மனமின்றி அவரது தொண்டையில் தங்கிவிட்டது.

காட்சி - 70:
அவரது படத்தை ஒட்டித் தேர்தல் பிரச்சாரம். 

காட்சி - 71:
பரங்கிமலை தொகுதியில் எம்.ஜி.ஆர் அமோக வெற்றி. பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சி மலர்கிறது. ஆட்சியை அண்ணா பெரியாருக்கும் காணிக்கையாக்குவதாக அறிவிக்கிறார்.

காட்சி - 72:
எம்.ஜி.ஆரை, தமிழ்நாடு சிறுசேமிப்புத் திட்டத் துணைத்தலைவராக நியமிக்கிறார். அண்ணா.

காட்சி - 73:
இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடைபெறுகின்றது. தமிழ் மாநாடு மலர் வெளியிடும் குழு உறுப்பினராக எம்.ஜி.ஆர் பணிபுரிகிறார். அண்ணா பாராட்டு. சென்னை அண்ணா சாலையில் எம்.ஜி.ஆர் தன் சொந்தச் செலவில் பேரறிஞர் அண்ணா சிலை அமைத்தார். டாக்டர். ஏ. ராமசாமி முதலியார் திறந்து வைக்கிறார். தமிழ் மாநாடு ஊர்வலம் மற்ற கட்சிகள்… அண்ணா சிலை திறப்பு படம் காண்பிக்கலாம்.

காட்சி - 74:
‘அடிமைப்பெண்’ படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகராக சிங்கப்பூர் சினிமா ரசிகர் சங்கம் எம்.ஜி.ஆரைத் தேர்ந்தெடுத்தது. பிலிம்பேர் பரிசு கிடைக்கிறது. தமிழக அரசு பரிசு வழங்குகிறது. (முதன் முதலாகப் புரட்சித்தலைவி பாடிய திரைப்படப்பாடல்) “அம்மா என்றால் அன்பு” பாடல் காட்சி (அடிமைப்பெண்) இடம்பெறலாம்.‘நம்நாடு’ படத்திற்குச் சினிமா ரசிகர் சங்கம் பரிசு பாடல் காட்சி 

காட்சி - 75:
பேரறிஞர் அண்ணா மறைவு.(3.2.1969) இராஜாஜி மண்டபத்தில் அண்ணாவின் உடலை, அவரது அன்னையருக்குக் (எம்.ஜி.ஆர்.) காண்பித்தல். இறுதி ஊர்வலத்தில் வேன் மீது சோகமாக அமர்ந்து செல்வது. அண்ணா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது மயங்கி விழுகிறார். படக்காட்சித்தொகுப்பு திரையிடலாம்.

காட்சி - 76:
கலைஞர் கருணாநிதியை முதலமைச்சராக்கப் பாடுபடுகிறார். அவர் முதல்வராகிறார். 

காட்சி - 77:
டாக்டர் நாவலர் பொதுச்செயலாளராகவும், கலைஞர் கருணாநிதி இயக்கத்தலைவராகவும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

காட்சி - 78:
பொதுத்தேர்தலில் (1971) கழக வெற்றிக்காக இரவு பகலாகத்தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்டுகின்றார். மீண்டும் கழகம் அமோக வெற்றி! பரங்கி மலைத்தொகுதியில் எம்.ஜி.ஆர். வெற்றி பெறுகிறார்.

காட்சி - 79:
எம்.ஜி.ஆருக்கு ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ பரிசு வழங்கப்படுகிறது.(1971)

காட்சி - 80:
சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் புரட்சிச்செல்வி, மக்கள் திலகத்தைப் பாராட்டுகிறார். 

காட்சி - 81:
சிங்கப்பூரில் பாராட்டு. புரட்சிச்செல்வி மக்கள் திலகத்தைப் பாராட்டுகிறார்.(10.7.72)

காட்சி - 82:
எம்.ஜி.ஆர். மன்றங்களின் ஆலோசனைக்கூட்டம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முழக்கம்.

காட்சி - 83:
மாட்டுக்கார வேலன், என் அண்ணன், தலைவன், தேடிவந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம், குமரிக்கோட்டம், ரிக்‌ஷாக்காரன், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள், சங்கே முழங்கு, நல்ல நேரம், ராமன் தேடிய சீதை, அன்னமிட்ட கை, நான் ஏன் பிறந்தேன், இதய வீணை படக்காட்சிகள்… பாடல்காட்சிகள்… காண்பிக்கலாம்!“செத்துபிழைச்சவன்டா” எங்கள் தங்கம் படப்பாடல் இடம்பெறலாம்.

காட்சி - 84:
திருக்கழுக்குன்றத்தில் கணக்குக்கேட்டு புரட்சித்தலைவர் முழங்குகிறார். (8.10.72) கும்பகோணம் பள்ளியில் பானைக்கு வசூல் செய்த பள்ளி மாணவத் தலைவனிடம் கணக்குக்கேட்ட சிறுவன் எம்.ஜி.ஆர். இரு காட்சிகளை இரு அரங்குகளில் மாற்றி, மாற்றிக் காண்பிக்கலாம்.

காட்சி - 85:
புரட்சித்தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்.(10.10.1972) அவரது பேச்சு, அறிக்கையை ‘தென்னகம்’ இதழில் வெளியிட்டதற்காகக் கே.ஏ.கே. நீக்கம். நாடு முழுதும் கொந்தளிப்பு. பல்லாயிரக்கணக்கானோர் கைது.

காட்சி - 86:
அண்ணா தி.மு. கழகம் துவக்கம். கழகக்கொடியின் அமைப்பைப் புரட்சித்தலைவர் வெளியிடுகிறார். அமைப்பாளராகக் கே.ஏ.கே.யை நியமிக்கிறார். கழகத்தில் லட்சக்கணக்கானோர்.

காட்சி - 87:
‘உலகம் சுற்றும் வாலிபன்’ வெற்றியைத் தடுக்க முயற்சி. சுவரொட்டி ஒட்டத்தடை. சென்னையிலும் தமிழகம் முழுதும் படம் மாபெரும் வெற்றி !‘சிரித்து வாழவேண்டும்’ பாடல் காட்சி காண்பிக்கலாம்.

காட்சி - 88:
பட்டிக்காட்டு பொன்னையா, நேற்று, இன்று, நாளை, உரிமைக்குரல், சிரித்து வாழவேண்டும், நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே, பல்லாண்டு வாழ்க , இதயக்கனி, நீதிக்குத் தலைவணங்கு, உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் படக்காட்சிகள்….“நாளை நமதே எந்த நாளும் நமதே”(நாளை நமதே)“நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற…” (இதயக்கனி) பாடல் காட்சிகள் இடம் பெறலாம்.

காட்சி - 89:
அண்ணா தி.மு.கழகம் பெற்ற முதல்வெற்றி. திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி புரட்சி தலைவர் தலைமைக்கு ! (22-5-1973) மாயத்தேவர் தேர்வு.

காட்சி - 90:
சோவியத் ரஷ்யா, லண்டன், பாரீஸ், நைரோபி ஆகிய வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் புறப்படுதல் - (1-7-1973)

காட்சி - 91:
தாயகம் திரும்புதல். சென்னையில் அமோக வரவேற்பு. (18-8-1973) படக்காட்சி காண்பிக்கலாம்.

காட்சி - 92:
கட்சியின் கொள்கை ‘அண்ணாயிசம்’ அறிவிப்பு. (29-9-73) 
கழகப் பொதுச்செயலாளராக ஏகமனதாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தேர்வு.  (4-1-74)

காட்சி - 93:
புதுவையில் 11 இடங்களில் கழகம் வெற்றி. (22.2.74) கோவை சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி. புதுவையில் கழக அரசு (16.4.74) பதவி ஏற்பு.

காட்சி - 94:
அமெரிக்காவில் உள்ள மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களான விஸ்கான்சின், சிகாகோ, பெர்க்லி, கலிபோர்னியா, பெனிசில்வேனிய ஆகியவைகளின் அதிகாரப்பூர்வமான அழைப்பு. (25.10.74) புரட்சி தலைவர் அமெரிக்கா சென்று திரும்புகிறார். மக்கள் மகத்தான வரவேற்பு.

காட்சி - 95:
குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் 31.1.76.

காட்சி - 96:
பொதுத் தேர்தல், புரட்சி தலைவர் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம். பிரதமர் இந்திராவுடன் கலந்துகொண்ட பொதுக்கூட்டங்கள். (படக்காட்சி) 

காட்சி - 97:
புதுவை உள்பட 40 இடங்களில் புரட்சி தலைவர் தலைமையில் போட்டியிட்ட கழக முற்போக்குக் கூட்டணி 36 இடங்களில் வெற்றி. (20.3.77)தொடர்வோம். 

தேமொழி

unread,
Nov 11, 2020, 10:37:46 PM11/11/20
to மின்தமிழ்


தினசெய்தி நாளிதழில்   9.11.2020  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 59)
“மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி (VII)”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

காட்சி - 98
அருப்புக் கோட்டை தொகுதியில் சட்டப்பேரவைக்குப் போட்டியிட்ட புரட்சித்தலைவர் 29 ஆயிரத்து 378 வாக்கு வித்தியாசத்தில் ( தமிழகத்திலியே அதிக வாக்கு வித்தியாசம் ) வெற்றி !

காட்சி - 99
அண்ணா நினைவிடத்தில் புரட்சித்தலைவர் அஞ்சலி. ( 30.6.77 )

காட்சி - 100
சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் பாபு ஜெகஜீவன்ராம் தந்தை பெரியார் சிலை திறந்துவைக்கிறார். விழாவில் டாக்டர் நாவலர் அ .தி மு கழகத்தில் இணைகிறார்.

காட்சி - 101
புரட்சித்தலைவர் அரசு சாதனைகள். பெரியார் எழுத்துச்சீர்திருத்தம், தந்தை பெரியார் நூற்றாண்டு விழா ஓராண்டு முழுதும் கொண்டாடியது. நினைவுநாள் நிறுவியது, சத்துணவுத் திட்டம், தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைத்தது. ராஜராஜ சோழன் இலக்கிய விருது வழங்கச் செய்தது… காமராசர், பாவேந்தர் பாரதிதாசன் ,அன்னை தெரசா பெயரால் கல்லூரி… அண்ணா பல்கலைக்கழகம், மதுரையில் உலகத் தமிழ் மாநாடு, உலகத்தமிழ்ச்சங்கம்…. ( 14.4.86 )
சென்னைக்குக்குடிநீர் - தெலுங்கு கங்கைத்திட்டம்…
காட்சிகள் காண்பிக்கலாம்.

காட்சி - 102
கழக ஆட்சி கலைப்பு (பிப்ரவரி,1980 ) நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி. ( மே,1980 ) நடந்த பொதுத்தேர்தலில் மதுரையில் போட்டியிட்டு, புரட்சித்தலைவர் அமோக வெற்றி. கழகம் தனிப் பெரும்பான்மை பெற்றது. புரட்சித் தலைவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். (9.6.80)

காட்சி - 103
புரட்சித்தலைவர் முன்னிலையில் புரட்சி செல்வி ஜெயலலிதா அவர்கள் கழக உறுப்பினராகச் சேர்ந்தார். (1982)
கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

காட்சி - 104
சத்துணவுத் திட்டச் செயற்பாட்டுக் கண்காணிப்பு உயர் மட்டக் குழு உறுப்பினராக புரட்சி செல்வி ஜெயலலிதா நியமனம்.

காட்சி - 105
புரட்சி செல்வி ஜெயலலிதா தனது சொந்தச் செலவில் ஒரு லட்சம் ரூபாயில் அன்னை சந்தியா பெயரில் சத்துணவுக் கூடத்தை உருவாக்கித்தருகின்றார்.

காட்சி - 106
மாநிலங்கள் அவைத் தேர்தலில் புரட்சிச் செல்வியைப் போட்டியிடச்செய்து, நாடாளுமன்றத்துக்கு புரட்சி தலைவர் அனுப்பி வைக்கிறார்.
அண்ணா அமர்ந்து கொள்கை முழக்கமிட்ட இருக்கை ( 185 )ல் அமர்ந்து செயல்படுகிறார்.
அண்ணாவின் குரல்… புரட்சித்தலைவி குரல்… ஆங்கிலப்பேச்சு.

காட்சி - 107
சென்னைப் பல்கலைக்கழகம் புரட்சி தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி, பெருமை கொள்கிறது. ( 1983 )

காட்சி - 108
கலை உலகம் பாராட்டு (20.11.83 படக்காட்சி

காட்சி - 109
அண்ணல் காந்தி சிலைக்குப் புரட்சி தலைவர் மாலை அணிவிக்கிறார். (2.10.84)
படக்காட்சி அல்லது ஒளிப்படம்

காட்சி - 110
இன்றுபோல் என்றும் வாழ்க, நவரத்தினம், மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன். படக்காட்சிகள், பாடல்காட்சிகள்

காட்சி - 111
புரட்சித் தலைவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல். ( 6.10.1984 ) பிரதமர் இந்திரா தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் உடல் நலம் குறித்து அறிந்து கொள்ளுதல்.

காட்சி - 112
பிரதமர் இந்திரா நேரில் சென்னைக்கு வந்து புரட்சித் தலைவரை பார்க்கிறார். வாழ்த்து கூறுகிறார். அவரைக்கண்டதும் எழமுயன்றவரை படுக்கச் சொல்கிறார்.
அன்னை இந்திரா குரல்... “உங்களுக்காகத் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடே பிரார்த்தனை செய்கிறது. முன்பு சங்கடங்களைச் சமாளித்ததைப் போலவே இந்த நெருக்கடியையும் நீங்கள் சமாளிப்பீர்கள்.”

காட்சி - 113
வெளிநாட்டு மருத்துவ நிபுணர் பிரெட்மேன் என்ற டாக்டர் மாற்று சிறுநீரகம் பொறுத்த வேண்டும் என்கிறார்.

காட்சி - 114
ஜப்பானிலிருந்து டாக்டர் கானு வந்து சிகிச்சையளிக்கிறார்.

காட்சி - 115
இந்து மதக்கோவில் பிரார்த்தனை.

காட்சி - 116
கிருத்துவ மதம் கோவிலில் பிரார்த்தனை.

காட்சி - 117
இசுலாமிய மசூதியில் பிரார்த்தனை.

காட்சி - 118
மருத்துவமனையில் கவலையுடன் மக்கள் புரட்சித்தலைவரைக் குறித்துக் கேட்பது.

காட்சி - 119
பிரதமர் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி, மக்கள் துயரம் (நவம்பர், 84) வானொலிச் செய்தி அல்லது தொலைக்காட்சி படக்காட்சி.

காட்சி - 120
பிரதமர் ராஜீவ் காந்தி பேசுவதுபோல் காட்சி .தனி விமானத்தில் டாக்டர்கள் துணையோடு, புரட்சித்தலைவர் அமெரிக்கா கொண்டு செல்லப்படுகிறார். ஒளிப்படம் காண்பித்தல் அல்லது படக்காட்சி.

காட்சி - 121
ஆண்டிப்பட்டியில் போட்டியிடப் புரட்சித்தலைவர் வேட்புமனு தாக்கல் செய்யப்படுதல் (27-11-84)

காட்சி - 122
புரட்சித்தலைவருக்குப் பெரியவர் சக்ரபாணி மகள் லீலாவதி சிறுநீரகம் (மாற்று சிறுநீரகம்) பொருத்தப்படுகிறது. 3 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. செய்தி வாசித்தல் (குரல்)

காட்சி - 123
பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் வெற்றி. 24.12.84
மூன்றாவது முறையாகப் புரட்சித்தலைவர் முதல்வராகின்றார்.
தொலைக்காட்சியில் செய்தி வாசித்தல்.

காட்சி - 124
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சென்னை திரும்புகிறார். சிகிச்சை முடிந்தது. (2.2.85)
பரங்கிமலை இராணுவ மைதானத்தில் தமிழகமே வரவேற்கின்றது. புரட்சித்தலைவர் மகிழ்ச்சி... மக்கள் ஆரவாரம்.
படக்காட்சி காண்பிக்கலாம்.....

காட்சி - 125
முதலமைச்சராகப் பதவியேற்பு. (10.2.85) மூன்றாவது முறை.
படக்காட்சி காண்பிக்கலாம்.....

காட்சி - 126
பேரறிஞர் அண்ணா பவளவிழா மலர் வெளியீடு முதல்வர் சிகிச்சைக்காகச் செலவிட்ட ரூ.96 லட்சம் நிதியமைச்சர் நாவலரிடம் வழங்குதல். (30.6.85)

காட்சி - 127
சாதனைகள்.....
மேல்சபைக் கலைப்பு,
25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.
ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி கோரிக்கை!
சத்துணவுத் திட்டத்துக்கு 200 கோடி.

காட்சி - 128
எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற மாநாடு மதுரையில் கூடியது. கொள்கை பரப்புச் செயலாளராகப் புரட்சிச்செல்வி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார் . புரட்சித்தலைவர் பாராட்டுரை! (13.7.86)
ஆறு அடி நீளமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிச் செங்கோலை முதல்வர் புரட்சித் தலைவரிடம் புரட்சிச் செல்வி வழங்குதல். (14.7.86)
புரட்சித்தலைவர் பாராட்டுரை.... குரல், படக்காட்சி காண்பிக்கலாம்.

காட்சி - 129
மருத்துவப் பரிசோதனைக்காகப் புரட்சித்தலைவர் அமெரிக்கா பயணம். பரிசோதனை முடிந்து திரும்புகிறார். (செப்.86) படக்காட்சி அல்லது செய்தி.

காட்சி - 130
புரட்சித்தலைவர் கழகப் பொதுச்செயலாளராகிறார். அக்டோபர் 1986.

காட்சி - 131
கடற்கரைக் கூட்டம், புரட்சித்தலைவருக்குப் பிரதமர் ராஜீவ் காந்தி புகழ்மாலை. (சூலை, 1987) படக்காட்சி

காட்சி - 132
அமெரிக்கா சென்று, பரிசோதனையை முடித்துக் கொண்டு புரட்சித்தலைவர் திரும்புகிறார். (ஆகஸ்ட், 1987)

காட்சி - 133
சென்னை, கத்திப்பாராச் சந்திப்பில் நேரு சிலையைப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொண்டு முதல்வர் புரட்சித்தலைவர் திறக்கச் செய்கிறார்.
நிகழ்ச்சி..... படக்காட்சி.....

காட்சி - 134
புரட்சித்தலைவர் சாதனைகள்.
இலவசப்பாடநூல் வழங்கும் திட்டம்,
காவல்துறையினருக்கு விருது வழங்குதல்,
தமிழ் அறிஞர்களுக்கு விருது,
பெரியார் மாவட்டம் தொடங்கியது (24.9.1979)
காமராஜர் மாவட்டம் தொடக்கம் (15.4.84)
இராமநாதபுரம் மாவட்டம்... (16.7.84)
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம் ... (17.7.84)
சிதம்பரனார் மாவட்டம் தொடக்கம் (19.10.85)
அண்ணா மாவட்டம்
ஏழை இசுலாமியர் மற்றும் விதவைகளுக்கு இலவசமாகப் புத்தாடைகள் வழங்குதல்...
நலிந்த பிரிவினருக்கு இஸ்திரிப் பெட்டி போன்றவை வழங்குதல்...

காட்சி - 135
குடும்பத் தலைவர்.... வயது கூடிக் காணப்படுதல் ( தொடக்கக் காட்சி )
குடும்பத் தலைவர்: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றார் அண்ணா. அந்த ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிரிப்பில் அண்ணாவும், புரட்சித் தலைவரும் இணைந்து தோன்றுகிறார். சரித்திரம் படைத்த சாமானியர்களின் தலைவர், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் புகழ் இந்த மண்ணும் விண்ணும் உள்ளவரை நிலைத்திருக்கும். புரட்சித்தலைவர் பேசும்போது ‘என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே’ என்பார்.
தாயைப் போற்றும் தன்னிகரற்ற தலைவர்களைத் தாய் தமிழகமும் தாய்மொழி தமிழும் மறக்காது.
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க.
புரட்சித்தலைவர் மக்களுடன் தோன்றும் காட்சிகள்
‘தாயில்லாமல் நானில்லை’ - பாடல் ஒலிப்பது.
‘நாளைய வெற்றியைச் சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’- பாடல்
புரட்சித்தலைவர் வணக்கம் கூறும் காட்சி மக்களுக்குள் மறைவது.

காட்சி - 136
கலவையில் காஞ்சி மாமுனிவரைச் சந்தித்தது.
‘நல்லவனாக, மக்களுக்காக வாழ்ந்து மறைய வேண்டும்’ என்று வேண்டுகோள்.‘

காட்சி - 137
காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா சந்திப்பு.

காட்சி - 138
டாக்டர் பிரீட்மேன், டாக்டர் கானு ஆகியோருக்குப் பரிசளித்தது.

காட்சி - 139
கல்பாக்கம் அனல் மின்நிலையத் தொடக்க விழா. பிரதமர் இந்திராவுடன், புரட்சித்தலைவர்.

காட்சி - 140
அறிஞர் அண்ணா விருது பெறுவது (15.9.85)

காட்சி - 141
தவத்திரு குன்றக்குடி அடிகளார், பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார்,எழுதுவேங்கை கோவி.மணிசேகரனுக்கு விருது வழங்குதல்.

காட்சி - 142
போப் ஆண்டவருக்கு நினைவுப்பரிசு வழங்குதல் (5.2.86)

காட்சி - 143
திருவரங்கம் ராஜகோபுரம் குடமுழுக்குத் திருவிழா (25.3.87)

காட்சி - 144
ஒலிம்பிக் வீரர் பாஸ்கரனுக்கு சிறப்பு செய்தல்.

காட்சி - 145
மேட்டூர் அனல் மின் நிலைய விழா.

காட்சி - 146
தஞ்சையில் ராஜ ராஜன் 1000வது முடி சூட்டு விழா. (16.9.84)
பிரதமர் இந்திராவுடன் பங்கேற்பு.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை...

தேமொழி

unread,
Nov 19, 2020, 1:53:48 AM11/19/20
to மின்தமிழ்


தினசெய்தி நாளிதழில்   16.11.2020  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 60)
“காயாத கதிரும் - தேயாத நிலவும்”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

காட்சி-147
முதலமைச்சர் புரட்சித் தலைவர். உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். (05-10-1984) குடியரசுத்தலைவர் செயில்சிங் புரட்சித் தலைவர். குணமடைய வாழ்த்துத் தந்தி அனுப்புகிறார்.

காட்சி-148
புரட்சித் தலைவர் கோப்புகளைப் பார்வையிடுகிறார். உடல்நிலை நன்கு தேறி வருகிறது என்று மருத்துவ அறிக்கை வெளியிடுகிறது. தமிழ்நாடு ஆளுநர் குரானா, புரட்சித் தலைவரை நேரில் சந்திக்கிறார். ஆளுநருடனும் மருத்துவருடனும் புரட்சித் தலைவர் பேசிக் கொண்டிருக்கிறார். இரவு வேளையில், அவருக்குப் பக்கவாதம் வந்து உடலின் வலது பக்கம் செயலிழந்து, மூளையில் வீக்கம் ஏற்படுகிறது. (12.10.1984) சிகிச்சையளிக்க அமெரிக்க மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. புரட்சித் தலைவரைச் சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்ல ஒரு இராணுவ விமானம் தயார் நிலையில் வைக்கப்படுகிறது.

காட்சி-149
பிரதமர் இந்திரா காந்தி, அப்பல்லோ மருத்துவமனை வந்து புரட்சித்தலைவர் பார்த்து விரைவில் குணம் அடைய வாழ்த்து கூறிச் செல்கிறார். அமெரிக்க டாக்டர்கள் பிரீட்மென், கிறிஸ்டோபர் பிளாக், ஸ்ரீபாதராவ், ஜான் ஸ்டிர்லிங் மேயர் ஆகியோர் சென்னை வந்து புரட்சித் தலைவரைப் பரிசோதனை செய்கிறார்கள். “அவரது மூளையில் உள்ள வீக்கம் குறைந்து இருக்கிறது. எனவே அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார். ஆனால் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் மாற்று சிறுநீரகம் பொருத்த அமெரிக்கா கொண்டு செல்ல வேண்டும்” என்று அமெரிக்க மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஜப்பான் டாக்டர்கள் கானுவும் நக்கமோராவும் சென்னை வந்து 2 மணிநேரம் பரிசோதனை செய்த பின்னர், “மூளையில் ஏற்பட்ட வீக்கத்தை (ரத்தக் கட்டி) அகற்றச் சில நாட்கள் கழித்து அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்” என்று கூறுகின்றனர்.

காட்சி-150
“புரட்சித் தலைவருக்கு மூளையில் ஏற்பட்ட கட்டியினால் ஆபத்து இல்லை. அவரின் உடல் நிலையில் மகிழ்ச்சி தரும் அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று ஜப்பான் டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள் (22.10.1984). புரட்சித் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது. ‘டேப்’பில் ஒலிபரப்பப்பட்ட கருநாடக இசையைக் கேட்டு மகிழ்கிறார்.

காட்சி-151
பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்படுகிறார் (31-10-84). புதிய பிரதமராக, இராஜீவ் காந்தி பதவி ஏற்கிறார். அதிர்ச்சியைத் தாங்க மாட்டார் என்பதால், இந்திரா காந்தி மரணச் செய்தியை எவருமே புரட்சித் தலைவரிடம் தெரிவிக்காது மறைத்து விடுகிறார்கள்.

காட்சி-152
புரட்சித் தலைவரை சென்னை டாக்டர்கள் பரிசோதனை செய்கிறார்கள். மூளை வீக்கம் அடியோடு குறைந்தது தெரியவருகிறது. (1-11-84). புரட்சித் தலைவர் படுக்கையில் இருந்து எழுந்து நடக்க முயல்கிறார். ஜப்பான் டாக்டர் கானு மீண்டும் சென்னை வந்து புரட்சித் தலைவரைப் பரிசோதனை செய்கிறார். “மூளையில் இருந்த வீக்கம் முழுவதும் நீங்கி விட்டதால் மூளையில் ஆபரேஷன் தேவை இல்லை” என்றும், “சிறுநீரகச் சிகிச்சைக்காக இனி அமெரிக்கா கொண்டு செல்லலாம்” என்றும் கூறுகிறார்.

காட்சி-153
இரவு 10.45 மணிக்குப் புரட்சித் தலைவர், சிறிய மருத்துவமனைபோல் அமைக்கப் பட்ட தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். (5-11-84) மனைவி ஜானகி அம்மாள், அமைச்சர் ஹண்டே, தனிச் செயலாளர் பரமசிவம், செவிலியர்கள், மருத்துவர்கள், உதவியாளர்கள் உள்பட 21 பேர் உடன் செல்கிறார்கள். நியூயார்க் நகரம் புரூக்ளினில் உள்ள டவுன் ஸ்டேட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார். அமெரிக்காவில் புரட்சித் தலைவர் நன்றாக இருப்பதாக டாக்டர் பிரீட்மென் தெரிவிக்கிறார். புரட்சித் தலைவருக்குச் சிறுநீரக மாற்று ஆபரேஷன் தேவையா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்கிறார்கள்.

காட்சி-154
கோட்டு, சூட்டு அணிந்து சென்ற அமைச்சர் ஹண்டேயைப் பார்த்துப் புரட்சித் தலைவர் சிரிக்கிறார். (14-11-84). புரட்சித் தலைவருக்கு அவர் நடித்த திரைப்படப்படங்களை வீடியோவில் போட்டுக் காட்ட ஏற்பாடு செய்யப்படுகிறது. தேர்தலில் போட்டியிடப் புரட்சித் தலைவர் சம்மதம் தெரிவிக்கிறார். புரட்சித் தலைவர் உடல் நிலையில் விரைவான முன்னேற்றம் ஏற்படுகிறது. அவர் தானாகவே எழுந்து நடக்கிறார். சக்கர நாற்காலியில் அமர்ந்து புரூக்ளின் ஆஸ்பத்திரியை 20 நிமிடம் சுற்றிப் பார்க்கிறார்.

காட்சி-155
புரட்சித் தலைவரின் வேட்புமனுவை அமெரிக்காவில் இருந்து அமைச்சர் ஹண்டே சென்னைக்குக் கொண்டு வருகிறார். ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடப் புரட்சித் தலைவர் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. அமெரிக்க மருத்துவமனையில், புரட்சித் தலைவர் உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காட்டும் புரட்சித் தலைவரின் 3 புகைப்படங்களை அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் சென்னையில் வெளியிடுகிறார். (6-12-84). அமெரிக்க மருத்துவமனையில் புரட்சித் தலைவர் சாப்பிடுவது, கைகுலுக்குவது போன்றவற்றை விளக்கும் காணொலியைச் சென்னையில் அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் வெளியிடுகிறார். (09.12.84).

காட்சி- 156
புரட்சித் தலைவருக்கு மாற்றுச் சிறுநீரக அறுவைச்சிகிச்சை 3 மணிநேரம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கோவில், மசூதி, தேவாலயங்களில் வழிபாடுகள் நடைபெறுகின்றன (19.12.84). மாற்று சிறுநீரகம் நன்றாக இயங்குவதாகவும், புரட்சித் தலைவர் உடல்நிலையில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் அறிவிக்கிறார்கள். புரட்சித் தலைவர் தானாக நின்று டாக்டர்களுடன் கைகுலுக்கும் காட்சிகளைக் கொண்ட காணொலியை அமைச்சர் ஆர். எம். வீரப்பன் வெளியிடுகிறார்.

காட்சி-157
தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. (24-12-84). ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. 234 இடங்களில் 132 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை அ.தி.மு.க. கைப்பற்றுகிறது. ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் 31,484 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைக் கேட்டுப் புரட்சித் தலைவர் மகிழ்ச்சியடைகிறார். அமெரிக்க ஆஸ்பத்திரியில் நிருபர்களைச் சந்திக்கிறார்.

காட்சி-158
சட்டசபை அ.தி.மு.க. தலைவராக (முதலமைச்சராக) மீண்டும் புரட்சித் தலைவரை அ.தி.மு.கழக எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்து எடுக்கிறார்கள். புரட்சித் தலைவரைச் சந்திக்க அமைச்சர் நெடுஞ்செழியன், தலைமைச் செயலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறார்கள். (4-1-85) அமெரிக்காவில் நெடுஞ்செழியன் புரட்சித் தலைவரைச் சந்தித்துப் பேசுகிறார். விரைவில் தமிழகம் திரும்பி முதலமைச்சராகப் பதவி ஏற்பதாகத் தமிழ்நாடு ஆளுநருக்குப் புரட்சித் தலைவர் எழுதிய கடிதத்துடன் நெடுஞ்செழியன் சென்னை திரும்புகிறார்.

காட்சி-159
தொலைக்காட்சியில் திருமதி இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலக் காட்சியைப் பார்த்துப் புரட்சித் தலைவர் கண்கலங்குகிறார்.

காட்சி-160
இடைக்கால முதல் அமைச்சர் நியமிக்கலாம் என்று யோசனை தெரிவித்து, கவர்னர் குரானா எழுதிய கடிதத்துக்கு (25-1-85), புரட்சித் தலைவர், “நான் விரைவில் தமிழகம் திரும்பிப் பொறுப்பு ஏற்விருப்பதால், தற்காலிக முதல் அமைச்சரை நியமிக்க அவசியமில்லை” என்று பதிலனுப்புகிறார்.

காட்சி-161
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள், புரூக்ளின் மருத்துவமனையில் புரட்சித் தலைவருக்கு வரவேற்பு விழா நடத்துகிறார்கள். புரூக்ளின் ஆஸ்பத்திரிக்குப் புரட்சித் தலைவர் ரூ 3 லட்சம் நன்கொடை வழங்குகிறார்.

காட்சி-162
அமெரிக்காவில் இருந்து புரட்சித் தலைவர். உடல் நலத்தோடு தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். (2-2-85). காலை 5-45 மணிக்கு முதல் அமைச்சர் புரட்சித் தலைவர், தன் மனைவி ஜானகி அம்மாளுடன் சென்னை வந்து சேருகிறார். பரங்கிமலை இராணுவ மைதானத்தில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின் முதல்வராகப் பதவியேற்கிறார்.

காட்சி-163
புரட்சித் தலைவர் ரசிகர் மன்றங்கள் மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. (13.7.1986) புரட்சித் தலைவிக்கு, புரட்சித் தலைவர் மீண்டும் முக்கியத்துவம் தருகிறார். கொள்கை பரப்புச் செயலாளராக ஊர்வலத்தைத் தொடங்கி வைக்கிறார். புரட்சித் தலைவர் மனம் திறந்து பாராட்டுறார். இரண்டாவது நாள் ஆறு அடி நீளமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிச் செங்கோல் முதல்வர் புரட்சித் தலைவரிடம் புரட்சித் தலைவி வழங்குகிறார்.

காட்சி-164
அமெரிக்கா சென்று, மருத்துவப் பரிசோதனையை முடித்துவிட்டுப் புரட்சித் தலைவர் நாடு திரும்புகிறார். (செப்-1986) புரட்சித் தலைவரே மீண்டும் கழகப் பொதுச் செயலாளராகிறார்.

காட்சி-165
கடற்கரைக் கூட்டத்தில் புரட்சித் தலைவருக்குப் பிரதமர் இராஜீவ் காந்தி புகழ்மாலை சூட்டுகிறார். (சூலை 1987).

காட்சி-166
அமெரிக்கா சென்று, (ஆகத்து 1987) மீண்டும் மருத்துவப் பரிசோதனையை முடித்துக் கொண்டு தாயகம் திரும்புகிறார். சென்னையில் நேரு சிலையைப் பிரதமர் இராஜீவ் காந்தி திறந்து வைக்கிறார். அதுவே புரட்சித் தலைவர் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாக அமைகிறது.

காட்சி-167
புரட்சித் தலைவர் அதிகாலை நேரத்தில் உடலால் மறைந்தாலும் (24.12.87) உணர்வுகளால் மக்களோடு ஒன்றிவிடுகிறார். இராஜாஜி மண்டபத்தில் அவர் நல்லுடல் வைக்கப்படுகிறது. பிரதமர் ராஜீவ் காந்தி, மத்திய, மாநிலங்களின் அமைச்சர்கள் அஞ்சலி, பிரமுகர்கள், மக்கள் அழுகை. அலைகடல்கள் யாவும் ஆர்ப்பரித்துச் சென்னைக்கு வந்தது போல் கூட்டம். மறுநாள் பீரங்கி வண்டியில் புரட்சித் தலைவர் உடல் வைக்கப்படுகிறது. இறுதி ஊர்வலம். மாலை 3 மணியளவில் தான் பின்பற்றிய தலைவர் பேரறிஞர் அண்ணா உறங்கும் நினைவிடம் அருகில் புரட்சித் தலைவர் ஓய்வு கொள்கிறார். துப்பாக்கிக் குண்டுகள் முழக்கத்துடன் இராணுவத்தினர் மரியாதை. மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்குகிறது.
பல ஒளிப்படங்களுடன் ஒலிஒளிக்காட்சி 167 காட்சிகளுடன் நிறைவடைகிறது. இந்த ஒலிஒளிக்காட்சி எழுத்தால் திரு. நாகைத் தருமனால் எழுதி முடிக்கப்பட்டது. புரட்சித் தலைவரின் வாழ்க்கைப் பாடத்தை வளரும் நல்லிளைஞர்கள் ஒலிஒளிக்காட்சிகளைக் கொண்டு படமாகவே எடுக்க முனையலாம். வெற்றி காணலாம்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை...


- ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamiz...@gmail.com
-----

தேமொழி

unread,
Dec 7, 2020, 3:31:56 AM12/7/20
to மின்தமிழ்

தினசெய்தி நாளிதழில்   23.11.2020  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 61)
“அண்ணன் காட்டிய அறம் !”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தம்பியின் பெரும்புகழில் அண்ணனுக்கு அவ்வளவு பெருமை இருந்ததென்றால் எம் ஜி சக்கரபாணி அவர்களுக்கே அது பொருந்தும் .சிவந்த மேனியும் நரைத்த முடியும் பற்கள் தெரியச் சிரித்தபடி எப்போதும் இலக்கியச் சிந்தனை உடையவராகப் பெருமிதமாக இருந்தார் என்று உவமைக் கவிஞர் சுரதா சொல்லக் கேட்டிருக்கிறேன் . தமிழை வனப்பாக ஒலிப்பதில் எம் ஜி சக்கரபாணி அவர்கட்கு நிகரே இல்லை என்று சொல்லலாம் இன்னும் கூட 80 வயது கடந்தவர்கள் இருந்தால் அவர்களுக்கெல்லாம் " மருதநாட்டு இளவரசி " திரைப்படத்தில் அவர் பேசும்போது " நடக்கும் பொன்வண்டே ஏன் நடுங்குகின்றாய் " உன்னைப் படைத்த கடவுளே வந்து உண்மையைச் சொல் என்றாலும் நீ ஊமையாக இருக்கவேண்டும் தெரிகிறதா என்று அவர் எழுத்துக்கு எழுத்து அழுத்தம் கொடுத்துப் பேசுவதை கேட்டு நடுங்காதவரில்லை .எப்போதுமே எதிர்வினை ஆற்றும் நடிப்பில் வில்லனாகவே தான் அவர் வருவார் ,அவர் பற்கள் தெரிய உரக்கச் சிரிக்கும் போது கொடுமையும் - கொலைவெறியும் ஒரே வடிவத்தில் தெரியும் .இலக்கியம் போலவே அவருக்கு இசையிலும் நுணுக்கம் தெரியுமாம் .அந்நாளில் சுப்பையா நாயுடு இசைத் துறையில் புகழ் பெற்றவர் . அவர் புரட்சித் தலைவர் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் .எம் ஜி சக்கரபாணிக்கு நெருங்கிய நண்பர் அந்த வகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உவமைக் கவிஞருக்கு நூற்றாண்டு விழாக் கொண்டாடும் இந்நாளில் சுரதா அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன் .

உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா 
உவமைக் கவிஞர் ஒரு பாடல் எழுதிய போது " முன்னேற்றம் இவனது உயிராகும் " என்று முதல் வரி அமைந்தது .நாயுடு அவர்கள் எம் .ஜி .சக்கரபாணியுடன் சேர்ந்து உயிருக்குத் திருவள்ளுவர் சொல்லுகிற எதுகை வரக்கூடாது என்றார் .உடனே நம் உவமைக்கவிஞர் நூறு ரூபாய் கட்டுங்கள் என்றாராம் .

" முத்தமிழ் இவன் நாவில் பயிராகும் " என்றாராம் .பெரியவர் பெரிதும் மகிழ்ந்து இருநூறு ரூபாய் மகிழ்வோடு தந்தாராம் .புரட்சித்தலைவரைச் சின்னவர் என்றும் அண்ணனை பெரியவர் என்பது வழக்கம் .

நாடக உலகத்தில் வியப்பான நிகழ்ச்சிகள் உண்டு நாடகத்தில் திருடனாக முரடனாக எதிர்வினை ஆற்றுபவர்கள் வாழ்க்கையில் மிகவும் அடக்கமானவர்கள் ,பொறுமைசாலிகளாகக் கோபம் கொள்ளாதவர்களாக இருப்பார்களாம் .அதற்குச் சான்று வேண்டும் என்றால் எம் ஜி சக்கரபாணி ,பி .எஸ் .வீரப்பா , நம்பியார் மூவரையும் நினைத்துப் பார்க்கலாம் ஆனால் மூவருக்கும் எப்போதுமே வில்லன் வேடம் தான் பொருத்தமாக இருக்கும் அவர்களின் கண்களே அச்சத்தைத் தரும் அதுபோல வீரப்பாவுக்கே உரிய வெடிச் சிரிப்பும் வில்லன்களில் நம்பியாரின் துள்ளலும் துடிப்பும் சொல்லலாம் .

ஆனால் மூவரும் இயல்பில் மிக நல்லவர்கள் .எவரிடத்திலும் வெகுண்டு ஒரு சொல்கூடக் கூறாதவர்கள் அப்படி அமைதியான வடிவம் கொண்டவர்களுக்குக் கொடிய குணம் கொண்ட வில்லன்கள் வேடம் எப்படிப் பொருந்தியதோ ? நிஜவாழ்வில் எம் ஜி சக்கரபாணி அவ்வளவு அமைதியானவர் அவர் யாரையும் பகைத்துக் கொண்டதே இல்லை.

ஏழ்மை ,எளிமை ,நட்பினிமை பெருமிதம்,வேதனை ,வெற்றி ,வியப்பு முதலியன என்று அடுக்குவதால் எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் பலதிறப்பட்டன . எந்தவொரு செயலிலும் , திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் அண்ணன் காட்டும் வழியையும் முடிவையும் கேட்ட பின்பே நிறைவேற்றுவது வழக்கம். அண்ணன்-தம்பி என்ற உறவுக்கும் - ஒருமைக்கும் நல்லிலக்கணமாக இருந்தனர்.

திரு. சக்கரபாணி தேர்ந்த கலைஞர் மட்டுமன்று ; முதிர்ந்த உலகியல் அனைத்தும் தெரிந்தவர் ; ஆராய்ச்சியில் வல்லவர்; கூர்மையான மதிநுட்பம் படைத்தவர்; தொழில்துறையில் வருங்கால நிலையை முன்னதாகவே வகுத்துணரும் ஆற்றல் மிக்கவர்.தம்பியிடம் எல்லையற்ற அன்பும் பரிவும் உடையவர். திரு.சக்கரபாணி அவர்கள், வித்வான் வே. இலட்சுமணனிடம் பகிர்ந்துகொண்ட அரிய தகவல்கள் அவருடைய சொற்களிலேயே அவர் குறிப்பிட்டதால் சிலவற்றை இங்கே காணலாம்.

" என் தந்தையார் திரு. கோபாலன் , சட்டத்துறையிலும், ஆசிரியத் துறையிலும் மிகவும் தேர்ந்த நிபுணராக விளங்கினார். பத்திரிகைகளில் தேவையெனக் கேட்டு வெளிவரும் விளம்பரம் பார்த்துப் , பல ஊர்களுக்கு விண்ணப்பித்து, பல ஊர்கள் சென்று வரும் அலுவல் புரிந்தார். அவ்வாறு பல ஊர்களைச் சுற்றிப் பார்ப்பதில் என் தந்தையாருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியிருந்தது . உங்கள் அப்பாவுடன் நானும் பல ஊர்கள் சென்று அலைந்து சுற்றியுள்ளேன் என்று என் தாயார் சத்யா அடிக்கடி கூறுவார்கள். அம்முறையில் தான் எங்கள் தந்தையார் கண்டி மாநகர் சென்றதும், கண்டியில்தான் எம்.ஜி.ஆர். பிறந்தார்.

பின், கேரளா வந்து தான் என் தந்தையார் காலமானார். தந்தை இறந்த பின்னர்தான், நாங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து நிலையாகத் தங்கிவிட்டோம். நாடகம் நடிக்கும் பொருட்டும் கேரளாவில் பல ஊர்களுக்குச் சென்றுள்ளோம் . என் தந்தை இறந்த தருணம் எனக்கு நன்கு நினைவில் உள்ளது. சிறிது நோய்வாய்ப்பட்டிருந்தார். ஒருநாள் மாலைநேரம் அவரே மருந்தின் பெயரை எழுதி கடைக்கு ஒரு பணியாளரை அனுப்பினார்.பின்னர் சிறிது தூரம் நடந்தார். தன்னால் முடியவில்லையென்று கூறி வீட்டுக்குள் வந்து கட்டிலில் படுக்காமல், கீழே போட்டிருந்த மெத்தையில் படுத்தார். மூன்றுமுறை நாராயணா என்று முணுமுணுத்தார் நான்காம் முறை நாராயணா என்று சொல்லும் போதே உயிர் பிரிந்தது. அவர் தீவிர வைணவ பக்தர். எனக்கு முதலில் நீலகண்டன் என்று பெயர் வைத்து விட்டார்கள். இவ்வாறு சிவன் பெயரை வைத்ததால், இரண்டு நாள்கள் எவரிடமும் அவர் பேசாமல் இருந்தார். பின் என் பெயர் சக்கரபாணி என்ற வைணவப் பெயராக வைக்கப்பட்டது. எங்கள் தந்தைக்கு மூன்று மனைவியர் . மூத்த மனைவியை மணவிலக்குச் செய்து விட்டார். இரண்டாம் மனைவிக்கு இரண்டு ஆண் மக்கள், அவர்களில் மூத்தவர் பெயர் நாராயண மேனன். அவர்கள் இருவரையும் எங்கள் தாயார் சத்தியபாமா அவர்கள்தான் வளர்த்தார்கள். எனக்கு இரண்டு மனைவியர். மூத்த மனைவி தங்கம்மா 1942-இல் காலமானார். மூத்த மனைவிக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. என் இரண்டாம் மனைவி மீனாட்சியம்மாவுக்கு 8 குழந்தைகள் பிறந்தன. என் தாயாரின் ஊரான வடவலூரில் ஓர் இடம்வாங்கி சத்திய விலாசம் என்று பெயரிட்டுள்ளோம். கோவைப் பகுதியிலிருந்து செல்லும் மக்கள் அங்கு நின்று வணங்கிச் செல்வார்கள் "தம்பியைப் பற்றிச் சொல்லவேண்டும் .ஆயிரத்தில் ஒருவன் என் தம்பி .

புரட்சித் தலைவர் நாடக நடிகராக இருந்தபோதே, 'மணிக்கொடி' இலக்கிய வட்டம் பற்றியும் இலக்கிய வளர்ச்சி குறித்தும் செய்திகள் அறிவதிலும், அவற்றைப் பற்றி விவாதிப்பதிலும் மிக ஆர்வங்கொண்டிருந்தவராவார். எம்.வீ. மணி மூலமாக மணிக்கொடி பற்றிய செய்திகளை நன்கறிந்திருந்தார். இலக்கிய இதழ்களையும், வெளியீடுகளையும் ஊன்றிப் படித்து வந்தார். பின்னாளில், நடிகன் குரல், சமநீதி போன்ற கலை இலக்கிய சமுதாய அரசியல் இதழ்களைப் புரட்சித் தலைவர் இலக்கிய மணம் கமழும் வகையில் தீந்தமிழில் நடத்தியதற்கு அவருக்கு இருந்த தமிழிலக்கிய ஆர்வமே சிறந்த காரணமாகும்.

1959 - ஆம் ஆண்டு இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்களுடன் தமிழ் நடிகர் சங்கம் அமைக்க முற்பட்டார். புரட்சித் தலைவரின் பெருமுயற்சியால், தென்னிந்திய நடிகர் சங்கம் எனப் பின்னர் அது அமைக்கப் பட்டது.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், பலர் இவரிடம் உதவிகள் பெற்றுள்ளனர். இவரால் படித்து முன்னேறிய மாணவர் பட்டியல் நீளமானது. புரட்சித் தலைவரால் உதவிபெற்று எழுந்து நிற்கும் பள்ளிகள் , கல்லூரிகள் , மருத்துவமனைகள் , அறநிலையங்கள் , ஆலயங்கள் கணக்கற்றவை. புயல் வெள்ளம் விபத்து போன்ற இயற்கைச் சீற்றமும் - பேரிடரும் சூழ்ந்த காலத்தில் புரட்சித் தலைவரின் கொடைக்கரங்கள் நீளும்; துயர் துடைக்கும்.

மறைந்த திரைப்படக் கலைஞர்கள் குடும்பத்தை ஆதரித்து, அவர்கள் மக்கட்செல்வங்களுக்குத் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்து அதன்மூலம் அவர்கள் இல்லங்களில் விளக்கேற்றி வைத்தவர் புரட்சித் தலைவர்.

'ரிக்க்ஷாக்காரன்' திரைப்பட வெற்றிவிழாவின்போது, சென்னையிலுள்ள 6000 ரிக்க்ஷாகாரர்களுக்கு மழைக்கோட்டுக்கள் அளித்து அவர்கள் உள்ளத்தில் நீங்காத இடப்பெற்றிருக்கிறார் .

ஐந்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மதுரை மாநகரில் நடந்தது பற்றி நான் முன்னரே குறிப்பிட்டுள்ளேன் அதற்கென ஒரு சிறப்பான கவியரங்கம் அமைக்க வேண்டும் என்று கருதினோம் .அப்போதிருந்த அரசியல் சூழலுக்கு ஏற்பத் தலைவருக்கு மனதில் நெருடல் வரக்கூடாது என்ற நிலையில் தலைமை தாங்கக் கவியரசர் வாலியை அழைக்கலாம் என்று சொன்னேன்.

அது சரி ! வாலி நாடக நடிகர் படங்களுக்குப் பாடல் எழுதுவார் .அவ்வளவு பெரிய கவியரங்கத்துக்குத் தமிழ்ப் புலவர்கள் நிரம்பிய அவையில் எடுபடுமா என்று கேட்டார் .அண்ணா நான் நம்புகிறேன் சூழுலுக்கேற்றபடி திறமையாகப்பாடுவார் என நான் கூறியபோது கூடப் புரட்சித்தலைவரிடம் கேட்டு அவர் சரியென்றால் நான் இசைகிறேன் என்றார் கவியரங்கம் ஒப்பற்ற கவியரங்கமாக அமைந்தது .

கவிஞர் வாலி அன்றைய தலைமை உரையில் புரட்சித்தலைவரின் படங்களில் பெயரைத் தொடருக்குத் தொடர் அடுக்கிக்காட்டினார் . அரங்கம் தவிடுபொடியானது .பல்லாயிரம் மக்கள் புரட்சித்தலைவர் வாழ்க புரட்சித்தலைவர் வாழ்க என்ற முழக்கமிட்டனர் எம் ஜி ஆருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி .கவிஞர் வாலியையும் என்னையும் ஒருசேரத் தழுவிக்கொண்டு ஒளவை நீங்கள் வாலியைப் பற்றி எழுதவேண்டும் என்றார் . நான் கவிஞர் வாலியின் நூலுக்கு அணிந்துரை எழுதினேன் ."அருமையில் எளிய அழகே போற்றி " என்ற திருவாசகத் தொடர்தான் கவியரசர் வாலியின் கவிதை வரிகளுக்கு நான் வரைகின்ற புனை கோலமாகும்.

மொழியை உளியாக்கிக் கற்பனை விரல்களால் செதுக்கிய கலைத் தேரை திரை வீதிகளில் ஒட வைத்துத் தேரோட்டம் நடத்தியவர் கவிஞர் வாலி. ஏட்டில் இருந்த ஏராளக் கருத்துக்களைப் பாட்டில் கொண்டு வந்த பாவலர், வாலி, நாட்டில் இருந்த கவிஞர்களில் எதுகை மோனையோடு திரைக் கூட்டில் இருந்த கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இலக்கியம் ஒரு சிறகாகவும், இசைப் பாடல்கள் மறு சிறகாகவும் கலை வானில் பறந்த கவிக்குயில் வாலி. வீட்டில் தங்கிய பொழுதுகளை விடவும் பாட்டில் தங்கிய பொழுதுகளே அதிகம். 

முறைப்போரிடம் துணிவும், பழகுவோரிடம் பணிவும் காட்டுவதே அவர் பழக்கம் கவிஞருக்கு. கவிச் சக்கரவர்த்தியே நீ மரபில் பாடியதை நான் புதிதில் பாடுகின்றேன். என்னுள் புகுந்து எழுது, இறைஞ்சுகின்றேன்.தொழுது விதைப்பது என் வேலை; விளைவிப்பது உன் மூளை என்ற அவையடக்கம் அவருடைய அன்பு நெறியைப் பிழிந்து பொழிகிறது. வாலியின் வைர வரிகள் இழையோடாத இதழ்களே இல்லை .குதித்தோடும் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியவர்கள் வரை வாலியின் பாடல் முணுமுணுக்காத வாயே இல்லை. அவ்வளவு ஏன், ' அம்மா என்று அழைக்காத உயிரில்லையே ' என்ற பாடல் வெல்வெட்டில் பொறிக்கப்பட்டது போல் திருச்சி ஐயப்பன் கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறதாம் .

இது காவியக் கவிஞரின் வைர வரிகளுக்கு கோயிலே நடத்தியிருக்கிற குடமுழுக்கு. வீட்டுப் புத்தகத்தில் எழுதப்பட வேண்டிய எத்தனையோ வரிகளைத் தன் பாட்டுப் புத்தகத்தில் தந்திருப்பவர் அவர் " தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்லை " , " எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே " , " இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் ,இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் " " நட்பைக் கூட நான் கற்பைப் போல எண்ணுவேன் " இப்படித் திரைக் குரலிலேயே திருக்குறள் எழுதிப் பார்த்தவர் வாலி.

பாட்டில் மட்டுமல்ல; ஏட்டில் எழுதிய விதைகளிலும் வார்த்தைகளால் வலை விரிக்க வல்லமை உண்டு வாலியிடம். பாண்டவர் பூமியும், அவதார புருஷனும், கிருஷ்ண காவியமும், தமிழ்க் கடவுளும், இராமானுஜ காவியமும், ஆறுமுக அந்தாதியும் நூல்களால்ஆன வலை மாதிரி தாள்களால் ஆன வலை தான் என்பது அவற்றை வரிக்கு வரி விடாமல் படித்தவர்களின் வாக்குமூலம்.

முத்தமிழ்க்கலைஞர் அவர் தலைமையில் வருமாறு அழைத்து தலைவருக்குப் பெரும் புகழ் பெற்றது .பதிப்பகத்து வரலாற்றில் நூறாண்டுகள் நெடிய வரலாறாகும். நாட்டுப் பற்றும், கலைப் பற்றும் நரம்புகளில் முறுக்கேற்றும் நிலையில் பெரிய சிந்தனையாளர்களைக் கொண்டு, அரிய நூல்களைத் தருகின்ற அல்லயன்ஸ் பதிப்பகத்தாரின் பயணம் நூறாண்டுகளைத் தாண்டுகிறது.

இப்படிப் பாட்டுப் பயணத்தில் வாகை சூடியவரும் ஏட்டுப் பயணத்தில் எதிரெ எவருமில்லாத நிலையில் என்றும் புகழ் வளர்ப்ப வரும் சந்திக்கும் இடம்தான், 'வாலியின் வைரவரிகள்.

எழுதுவது ஒரு வகை; எண்ணுவது ஒரு திறம் பழகுவது ஒரு பண்பு; பரிவை வளர்ப்பது ஒரு தனிக் கலை; இவ்வளவும் இணைந்து நின்றால் இவர்தான் கவியரசர் வாலி.

நூற்கடலுக்குள் நீந்தும் நண்பர் பண்பாளர் அல்லயன்சின் அதிபர் திரு. சீனிவாசன் அவர்கள் மதித்தும் தொகுத்தும் மலரச் செய்திருப்பதுதான் வாலியின் வைர வரிகள்.

பதிப்பகத்தைப் புகழ்வதா ? பாடியவரைப் புகழ்வதா ? மதித்துத் தொகுத்தவரைப் போற்றுவதா ?' என்று எண்ணி என் அணிந்துரையை வாலிக்கு நான் அணிவிக்கும் வைர மாலையாகப் படைக்கின்றேன் என்று எழுதியதை இப்போது நினைக்கிறேன்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை...

- ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamiz...@gmail.com
=========

தேமொழி

unread,
Dec 15, 2020, 3:06:05 AM12/15/20
to மின்தமிழ்


தினசெய்தி நாளிதழில்   30.11.2020  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 62)
“‘ஆயிரம் நிலவே வா!’”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

புரட்சித்தலைவருக்குப் பிடித்தமான கவியரசர் புலமைப்பித்தன் அவரோடு அடிக்கடி உரையாடி மகிழ்பவர் .ஈழத் தமிழர் உணர்வில் தன்னையே தணலாய் மாற்றிப் பொங்குபவர். எதிர்பாராமல் புலவர் தேர்வில் முதனிலை பெற்றவர் திரைத்துறைக்கு வந்ததே ஒரு விபத்து என்று, தான் பாடல் எழுத வந்தது பற்றிப் புலவர் புலமைப்பித்தன் என்னிடம் ஒருமுறை கூறினார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் தொடங்கி இன்று அஜீத், விஜய் வரை திரையுலகில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் புலமைக்கனல். அவர் எந்தச் சூழ்நிலைக்கும் இலக்கியத் திறமாகவே பாடல்கள் எழுதுவதில் முன்னோடி என்று இவரைச் சொல்வார்கள். பிறவிப் பொதுவுடைமையாளர். ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் போராடும் எழுச்சிவீரர். சமூக அநீதி கண்டு பொங்கும் போராளி. பாரதியார், பாரதிதாசன் வழியில் வந்த தொடர்ச்சியில், பொது உடைமையும் சம உரிமையும் விரும்புபவர். “படத்துக்காகப் பாட்டெழுதுவது என் இலட்சியம் அல்ல. பாடலாசிரியன் என்பது மட்டுமே என் முகவரி அல்ல. என் முகங்களில் ஒன்று” என்று புன்னகைப்பவர் புலமைப்பித்தன்.

1960 களில் புலவர் புலமைப்பித்தனும் நானும் ஒரே மேடையில் மதுரை மகளிர் கல்லூரியில் இலக்கிய இன்பம் பற்றிப் பேசினோம். புலவரின் பேச்சு மகளிர் கூட்டத்தில் பெரிய ஆரவார அலைகளை எழுப்பியது. அன்று முதல் எங்கள் நட்பை நாங்கள் போற்றி வருகிறோம். புலமைப்பித்தன் உடுத்துகிற சட்டை-வேட்டி, முறுக்கேறிய மீசை, அவர் சிரிப்பு என அத்தனையும் பால் வெள்ளை!

“பஞ்சாலைக் கூலித் தொழிலாளி தான் நான். புலவர் படிப்பை முடித்துவிட்டுக் கோவையில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். 1966 - ஆம் ஆண்டு இயக்குநர் கே. சங்கர் என்னைச் சென்னைக்கு அழைத்தார். திடீரென வந்தது திரைப்பாடல் வரையும் வாய்ப்பு. யார் யாரோ எழுதிச் சரி வராமல் போக, கடைசியில் என்னை எழுதச் சொன்னதாக நினைவு. மாம்பலம் மின் பணிமனை அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே 'குடியிருந்த கோயில்' படத்துக்காக நான் எழுதியபாடல்தான்-

நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார் - யார்?
தாய் யார் ? மகன் யார் ? தெரியார்;
தந்தை என்பார் அவர் யார் - யார் ?
உறவார் ? பகை யார் ?
உண்மையை உணரார்;
உனக்கே நீ யாரோ ?
வருவார்; இருப்பார்;
போவார்; நிலையாய்
வாழ்வார் யார் யாரோ ?

‘ஒரு பித்தன் பாடுவது போல் எழுதுங்கள் !’ என்று சொன்னதும் எனக்குத் தோன்றியது 'நான் யார்?' என்ற கேள்விதான். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி இது. பட்டினத்தானைக் கேட்டாலும் இதைத்தான் கேட்பார்.

பட்டினத்தானும் இவனும் ஒன்று தானே... இந்தப் பாடலுக்குக் கிடைத்த பெரும் வெற்றியால் நான் தொடர்ந்து பாடல்கள் எழுதலானேன். எந்தச் சூழல் கூறினாலும் அதற்குப் பொருந்துகிற மாதிரி என் முற்போக்கான கருத்துகளை, புரட்சி எண்ணங்களை எழுதிக் கொடுக்கத் தொடங்கினேன். எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் கருவியைப் பயன்படுத்தி வீரமான இளைஞர்களுக்கு நான் விடுத்த அறைகூவல்தான் 'உழைக்கும் கரங்கள்' படத்தில் இடம்பெற்ற

நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும்
புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே - ஒன்றாய்
சேருங்கள் தோழர்களே !

என்ற பாடல். இன்றைக்கும் கேட்ட நொடியில் சிலிர்ப்பூட்டுகிற ஒரு பாடல்.

நிலம், தீ, நீர், வளி, வான் என்ற ஐந்து அடிப்படைப் பொருள்களில் மண் மட்டும் தான் மனிதர்களால் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அவலத்தைத் தான்-

காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது - மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கிடக்குது..
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம்
மனித இதயமே - உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே...

என்று 'இதயக்கனி' படத்தில் எழுதினேன். இன்று மண்ணை மட்டுமல்ல.. நீரையும் பிரித்து விட்டார்கள் என்பது பெரும் வேதனை. என் பாடல்களின் மீது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மதிப்பும் மயக்கமும் உண்டு. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே. என்ற, 'நீதிக்குத் தலைவணங்கு' பாட்டு வரிகளைக் குடும்பநலத் துறை சார்பாக மாநிலம் முழுக்க எழுதி வைக்கச் செய்தார். ஒரு திரைப்படப் பாடலுக்கு ஓர் அரசாங்கம் தந்த உச்சகட்டப் பாராட்டு இதுவாகத்தான் இருக்கும் என்று கூறலாம்.

எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய இளமை கொப்பளிக்கும் காதல் வரிகள் இன்றைக்கும் வாழ்பவை. சாகாவரம் பெற்றவை.

'அடிமைப் பெண்' படத்தின் 'ஆயிரம் நிலவே வா' பாடலில் வரும்,

பொய்கையெனும் நீர்மகளும் பூவாடை போர்த்து நின்றாள்
தென்றலெனும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீயுணர மாட்டாயோ
அந்த நிலையில் தந்த சுகத்தை நான் உணரக் காட்டாயோ?

என்ற வரிகள் காதலின் தவிப்பை விளக்கினால், ஆண் - பெண் உறவை இலக்கியத்தரமாக வடித்த பாடல்.

சந்தன மேனிகளின்
சங்கம வேளையிலே
சிந்திய முத்துகளைச்
சேர்த்திடும் காலமிது
தேன்கனிக் கோட்டையிலே
சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில்
தோன்றிய கோலமிது

என்ற வரிகள், காதலோடு நிறுத்திக்கொண்டுவிட முடியாதபடி என் சமூகச்சிந்தனை என்னைத் தூண்டிக்கொண்டே இருந்தது. அதுதான் என்னை இயக்குவது. புண்ணியப் பூமி என்று இந்தியாவைச் சொல்கிறோம். இங்கு இல்லை என்பதே இல்லை. இந்தத் திருநாட்டில் கங்கை உண்டு. ஆனால் தண்ணீர் இல்லை. வயல் எங்கும் உண்டு. உண்ணச் சோறு இல்லை. இந்த நாட்டைத் துன்பங்கள் ஆள்கின்றன. வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன. இதுதான் புண்ணியப் பூமியா? இந்த ஆதங்கத்தில்தான்,

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு
மாறவில்லை - நம்
பாரதத்தின் சோத்துச் சண்டை
தீரவில்லை.
இது நாடா, இல்லை வெறும்
காடா ? - இதைக்
கேட்க யாரும் இல்லை தோழா...

என்று 'உன்னால் முடியும் தம்பி' படத்தில் எழுதினேன்.

வயித்துக்காக மனுஷன் இங்கே
கயித்தில் ஆடுறான் பாரு;
ஆடி முடிச்சு இறங்கி வந்தா
அப்புறம்தாண்டா சோறு

என்று 'நல்லநேரம்' படத்துக்குப் புலவர் எழுதிய பாடல் பற்றிப் பேசியபோது திரையரங்குக்கு வெளியே கேட்டாலும் கண்ணீரை வரவழைப்பதற்கு என் சமூக அக்கறைதான் காரணம். இரும்பாக இறுகுகிற நான்தான் மெழுகாகக் குழையவும் முடியும். எரிமலை வரிகளை எழுதிவிட்டு, பாடும்போது நான் தென்றல்காற்று

என்றும் எழுதமுடிகிறது.

தனிப்பட்ட முறையில் எந்த உணர்வு மனதை ஆட்கொண்டிருந்தாலும் பாடல் எழுதுவதற்கான சூழல் சொல்லப்பட்டவுடன் மன்னனாலும் மாடோட்டும் சின்னவன் ஆனாலும் என்ற பழைய தொடர் சொல்வார்களே அதுபோல மாறித்தான் எழுதுவேன். பள்ளிப்பக்கமே எட்டிப் பார்த்திராத ஒருவன், தனக்குத் தெரிந்த மொழியில் தன் துயரத்தைச் சொல்ல வேண்டிய சூழலில்,

வட்டுக் கருப்பட்டியை வாசமுள்ள
ரோசாவை
கட்டெறும்பு மொச்சுதுன்னு
சொன்னாங்க
கட்டுக்கதை அத்தனையும்
கட்டுக்கதை -
அதைச் சத்தியமா நம்ப மனம்
ஒத்துக்கல்லே...

என்று ' ரோசாப்பூ ரவிக்கைக்காரி 'படத்துக்காக எழுதினேன். தன் மனைவி பற்றி ஊருக்குள் ஏதேதோ பேசுவதை நம்ப முடியாமல் தன் நெஞ்சை அறுக்கிற கொடுங் குமுறலைக் கண்ணீர் வழியக் கதைநாயகன் பாடுவதைப் பார்க்கும் போதே நமக்கும் நெஞ்சு விம்மிப் போகும்.

'அழகன்' படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று இயக்குநர் கே.பாலச்சந்தர் குறிப்பிடும் 'சாதி மல்லிப் பூச்சரமே..' பாட்டின் சரணத்தில்,

எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா ?
இருக்கும் நாலு
சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா ?

என்று எழுதியிருப்பேன்.

அதே படத்தில் மொழி விளையாட்டாக,

தத்தித்தோம் வித்தைகள்
கற்றிடும்
தத்தைகள் சொன்னது
தத்தித்தோம்
தித்தித்தோம் தத்தைகள்
சொன்னது
முத்தமிழ் என்றுளம்
தித்தித்தோம்
கண்ணில் பேசும் சங்கேத
மொழியிது
கண்ணன் அறிய
ஒண்ணாததா ?
உன்னைத் தேடும் ஏக்கத்தில்
இரவினில்
கண்ணுக்கிமைகள்
முள்ளாவதா?

என்றும் எழுதியிருப்பேன்.

என்னை மதித்துப் போற்றும் - இசைஞானி இளையராஜா ஒருமுறை என்னை அழைத்து விட்டிருந்தார்.

பாரதியின் வழித்தோன்றலாக என்னைக் கருதிக்கொண்டிருக்கிறேன். அதே பாரதியார், தனக்குப் பிடித்த, வேறாருவர் எழுதிய பாடலைப் பாடுவதுபோலக் காட்சிஅமைப்பு. அதற்கு என்னை எழுதச்சொன்னார். என் முப்பாட்டனையே கவர்ந்த பாடலை எழுதும் உணர்வோட்டத்தில் நான் எழுதினேன்.

வரிப்புலி அதள் தரித்தவன் எழில்
கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன்
துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்
தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனை தரத்தகும் நெறி
வகுத்திடத் துணை வேண்டும்

என்று நாத்திகனான நான், ஆத்திகம் பேசும் ஒரு பாடலை எழுதினேன். 'பாரதி' படத்தில் இடம்பெற்ற 'எங்கும் எதிலும் இருப்பான் அவன் யாரோ ?' என்ற பாடல் பெற்ற வரவேற்பைப் பெற்றது.

எனக்குள் ஒரு தணல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.

சில பொழுது எரிந்து கொண்டும் சில பொழுது கனிந்து கொண்டும். அதனால்தான் இருபத்தொன்பது வயதில் தத்துவப்பாடலும், அறுபத்திரண்டு வயதில்,

உன்னைப் படைத்த பிரம்மனே
உன்னைப் பார்த்து ஏங்கினான்
காதல் பிச்சை வாங்கினான்

என்றும் எழுத முடிந்தது.

அந்த நெருப்பு இருக்கும்வரை என் பாடல்கள் பிறந்து கொண்டு தான் இருக்கும்!''

புலமைக்கனலாக வாழும் புலமைப்பித்தன் இலக்கிய வாய் திறந்தாள் குமரகுருபரரின் பிள்ளைத் தமிழைத் தேன் போலக் கூறுவார் .அவரும் பிள்ளைத்தமிழ் எழுதிய பெருமையுடையவர்.

அரசவைக்கவிஞர், சட்டமன்ற மேலவைத் துணைத்தலைவர் என்ற பொறுப்புக்களுக்குப் பொலிவூட்டினார்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை...

-- ஔவை நடராசன்

தொடர்புக்கு:- thamiz...@gmail.com
---

தேமொழி

unread,
Dec 21, 2020, 4:01:05 AM12/21/20
to மின்தமிழ்


தினசெய்தி நாளிதழில்   7.12.2020  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 63)

“‘ஒருகொடியில் இரு மலர்கள் - கலையும், அறிவியலும்’”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

ஏன்? எப்படி? என்ன? எங்கே? எது? யார்? என்ற ஆறு வினாக்களும் தான் அறிவியற் சிந்தனையை வளர்க்கும் செம்பயிரின் நாற்றங்கால்களாகும். பிறந்து தவழ்ந்து நிற்கப் பழகி நடக்கும்போதே இந்தக்கேள்விகள் குழந்தைகளின் உள்ளத்தில் உருவாகும் எனவே இளம்பருவத்தினர் கேள்விகள் கேட்டால் விரும்பி வரவேற்கவேண்டும். பெரும்பாலும் எதிர்த்துப் பேசாதே ஏன் என்று கேட்காதே என்று அதட்டியும் அடக்கியும் பிள்ளைகளை வளர்ப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இயல்பாகக் கலை உணர்வு கொண்டவர்களுக்கு அறிவியல் போக்கும் மனமும் அமையா என்று ஒரு காலத்தில் கருதினர். இந்நாளின் கல்வி அறிவால் சுற்றுச்சூழல் எழுச்சியால் கருவிகளின் தொழில் நுணுக்கத்தால் எல்லாக் கல்வியும் எல்லோர்க்கும் வரும் என்ற நிலை அமைந்தது நமக்குப் பெருமையாகும்.

மழலையர் நரம்பியல் மருத்துவர் மெய்கண்டான் அறிவியலுக்குத் தந்த விளக்கம். இளம்பிள்ளைகள் மனனம் செய்ய வேண்டிய வரிகளாகும் .

அறிவியல் என்றவுடன் அஞ்ச வேண்டாம்
இது பாடப்புத்தகங்களின் ஒரு பகுதி அல்ல!
சிந்தனைக்குரிய ஒரு வழி
அறிவியல் கலைகளுக்குக் காலன் என எண்ணியவர் உண்டு
கலைகளுக்கு இன்னொரு கண்ணோட்டம்
அறிவியல் என்பதில் ஒரே ஒரு கஷ்டம்
யார் எதைச் சொன்னாலும் உடனே ஏற்றுக் கொள்ளாது?
மனதளவில் நிரூபணம் தேவை!
பரிசோதனை செய்து பார்க்கச் சொல்லும், எதையும் கேள்வி கேட்கும்?
மேகங்கள் மிதப்பதை!
மழைத்துளியின் உருவத்தை!
வானவில்லின் நிறப்பிரிகையை!
உலக உருண்டையின் உண்மையை!
சூரிய ஒளி குவி ஆடியில் காகிதத்தை எரிப்பதை!
தண்ணீருக்குள் குச்சி உடைந்ததாய்த் தெரிவதை!
நிழல்கள் நீண்டு போவதை!
கனமான கப்பல் கடலில் மிதப்பதை!
பாறையில் தெரியாத முகம் பளிங்கில் பளபளப்பாகத் தெரிவதை?
மூளை தலைக்குள் இருக்கும் சதை
பயிற்சி செய்யச் செய்ய வலுவடையும் உரம்பெறும்
அறிவியல் என்பது தேர்வுக்காக
மனனம் செய்து மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல
வாழ்வுக்காக உள்வாங்கிக் கொண்டு வருவதை
யோசித்து வரவேற்கும் சிந்தனை வளர்ச்சி
மெய்ப்பொருள் காணவும்
நுண்பொருள் தேடவும்
நுணங்கிய கேள்வியும்
இழைத்து உணர்ந்து ஈட்டவும்
நுண்மான் நுழைபுலம் போற்றவும்
நுழையும் செய்தியை வடித்துப் பிரிக்கவும்
விழையும் உள்ளத்தை விரிக்கும் புதுப்புலன்!
விதிகள் பல கொண்டவைதான் விஞ்ஞானம்,
அறிவியல் ஒரு வித்தை!
அறிவியல் ஆனந்தம்!
அறிவியல் இன்பம்! அறிவியல் வியப்பு!
அறிவியல் அறிவு! அறிவியல் வாழ்க!

நாடகத்தில் திரைப்படத்தில் நடித்துத்தான் தன் வாழ்க்கையைப் பயனுடைய உயரிய வாழ்க்கையாக மாற்றிக் கொண்ட தனிச்சிறப்பு புரட்சித்தலைவருக்குப் புகழ் சேர்த்ததாகும். ஆனால் நடிப்புக்கு வந்த பிறகு கலை, காட்சி, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, தொடர்பாக்கம், இசையமைவின் நுணுக்கங்களைக் கூரிய கண்களோடு கண்டறிந்து எந்தக் கருவியையும் பொலிவாக இயக்கிக்காட்டும் அறிவியல் மனம் புரட்சித்தலைவரிடம் பொதிந்திருந்தது.

அந்தந்தத் துறைகளிலேயே ஊறிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தொகுப்பாளர் புரட்சித்தலைவரைக் கண்டு அண்ணாந்து வியந்தனர். புத்தாக்க அறிவியல் ஆய்வு மனப்பான்மையை வளர்த்து அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்று இந்நாளில் அறிவியல் தொழில்நுட்ப மையங்கள் பல ஊக்குவிப்புத் திட்டங்களை வழங்குகின்றன.

புரட்சித்தலைவர் ஒருமுறை கோவையில் 20-11- 1979 அன்று நடைபெற்ற மாநில அறிவியல் கண்காட்சி நிறைவு விழாவில் ஆற்றிய நல்லுரையை இப்போது காணலாம்.

“மேடையிலே வீற்றிருக்கின்றவர்கள் பேசிய பேச்சுகளால் மட்டுமோ அல்லது நான் உள்ளே சென்று அறிவியல் துறையிலே தங்கள் திறமையை உலகுக்கு எடுத்துக் காட்டுகின்ற மாணவ மாணவிகளைச் சந்தித்து அவர்களுடைய ஆற்றல்மிகு விளைவுகளைப் பார்த்ததினாலேயோ ஏற்படுகின்ற ஒரு மகிழ்ச்சி மட்டுமல்ல!

மாணவ மாணவியர்களை நான் பார்க்கும் பொழுதெல்லாம் என் உள்ளத்திலே எந்த அளவிற்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றதோ, அந்த அளவுக்கு அச்சமும் ஏற்படுகிறது என்பதை இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும். காரணம், இவ்வளவு தெளிந்த நீரோடைபோல் இருக்கின்ற மனதுக்குச் சொந்தமான - மாணவ மாணவியர்கள் இந்த நாட்டின் எதிர்காலத்தைக் காத்துப் புதுமையோடு உருவாக்க வேண்டிய மாணவ - மாணவியர்கள் இதே களங்கமற்ற கலக்கமற்ற, குழப்பமற்ற மனத்தோடு தொடர்ந்து வாழ வேண்டும், வளர வேண்டுமே என்பதில் தான் என் உள்ளம் அச்சப்படுகின்றது. காரணம், உங்களுக்கே தெரியும்.

நாகரிகம் என்ற பெயரால், எங்கோ, நாம் இழுத்துச் செல்லப்படுகிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போதுதான், இவ்வளவு தெளிவான ஆராய்ச்சி ஆர்வமிக்க தொண்டு செய்ய வேண்டும் என்ற துணிவுமிக்க எண்ணத்திற்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்ற நீங்கள் எவ்வளவு நல்ல சூழ்நிலையில் வளர்க்கப்பட வேண்டும் என்பதை நான் எண்ணிப் பார்க்கின்றேன். உங்களுடைய உள்ளத்திலே இருக்கின்ற நல்ல எண்ணம்நல்ல குணம் - நல்ல ஆற்றல் அறிவு இவை அத்துணையும் இந்த இந்தியத் துணைக் கண்டம் முழுவதற்கு மட்டுமல்ல உலகத்திற்கே சொந்தம் என்பதை இங்கே நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

அறிவியல் என்பது பொதுக்கல்விக்கு மேலாக நுணுக்கத்தின் ஆழத்தைக் கண்டறிய உலகுக்கு வாய்த்த நுழைவாயிலாகும். மின்விளக்கை என்று கண்டறிந்தாரோ அந்த அறிவியலாளர் தனக்கோ தன் குடும்பத்துக்கோ மரபுக்கோ வாரிசுக்கோ உரிமை கோரவில்லை. அதை உலகுக்கே அளித்துள்ளார். எரிகிற விளக்கெல்லாம் எடிசனை நமக்கு நினைவூட்டுகிறது.

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
- உன் நரம்போடு தான் பின்னி வளரணும் அறிவு வளர்ச்சி

அதுதான் அறிவியல் எழுச்சி
என்று பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் வரிதான் என் நினைவுக்கு வந்தன.

அறிவியற்பேரறிஞர் ஐன்ஸ்டீனுடைய உருவத்தை எனக்குப் பரிசு தந்திருக்கிறார்கள். எங்கே பிறந்தார், எந்த மொழிக்குச் சொந்தக்காரர் என்று எண்ணிப் பார்த்து இந்த ஐன்ஸ்டீனை இன்றைய தினம் எத்தனை பேர் பாராட்டுகிறார்கள். இந்தச் சிலையை இங்கே எனக்குத் தருகின்ற நேரத்தில், இங்கே இருக்கின்ற மாணவ, மாணவியர் யாராவது ஒருவருடைய சிலை ஒரு காலத்தில் மேடையில் வழங்கக்கூடிய தகுதியை என்றாகிலும் ஒரு நாள் பெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன். உங்களுக்குச் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்.

அப்படியானால் இந்த ஐன்ஸ்டீன் யாருக்குச் சொந்தமென்றால் உலகுக்குச் சொந்தம். அறிவியல் துறைக்குச் சொந்தம். ஆகவே உங்களுடைய அறிவும், ஆற்றலும் இந்த வட்டத்திற்கு மட்டுமல்ல உலகம் என்ற கோளத்திற்கே சொந்த மென்பதை இங்கே நான் மீண்டும் குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ஒரு காலத்தில் தொடங்கிய சிந்தனை சீர்குலைந்து தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டது. மதம் என்பது ஏதேனும் ஒரு சிலரின் போக்கின் அடிப்படையில் தான் உருவாயிருக்க வேண்டும் என்பதை இங்கே நான் சொல்ல விரும்புகிறேன். இதில் ஏதோ ஒரு பிரச்சினையை வைத்துக் கொண்டு வீணாகக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். மதம் எதற்காக ஏற்பட்டது என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தால், ஒரு மனிதனை நல்லவனாக இருக்க வேண்டும் நல்ல குணங்களுக்குச் சொந்தக்காரனாக இருக்க வேண்டும் நல்ல பண்புள்ள மனிதனாக இருந்தாக வேண்டும் என்பதற்காகத்தான் சில நெறிப்பாடுகளைத் தோற்றுவித்தார்களே தவிர, அந்த எண்ணம் உங்களுடைய உள்ளத்திலே தோன்றிப் பிரிவினையை உருவாக்க வேண்டுமென்று விரும்பியிருப்பார்களேயானால், அதில் நாட்டில் உள்ள நிலைமைகளைப் பகுத்துப் பார்த்து, இது கெட்டது, இது தீமை பயக்கத்தக்கது இதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற வகையில் பகுத்தறிவு என்ற அந்தப் பகுத்துப் பார்க்கும் அறிவைப் பயன்படுத்தி,அது எந்தக் காலத்திலே தோன்றியது யாருக்காக உண்டாகியது என்பதைப் பற்றிய விவரத்திற்குப் போகும் போது தான் பிரச்சினைகள் வருகின்றன. ஆனால் நோக்கம் என்னவென்றால் மனிதனை நல்லவனாக, நல்லவர்களாக வாழவைக்க வேண்டும் என்பதற்காகத் தான் பெரியவர்கள் அந்தக் காலத்தில் மதத்தை உருவாக்கினார்கள் என்பதை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

ஏதோ அறிவியல் துறையிலே நடைபெறுகின்ற ஒரு நல்ல நிகழ்ச்சியில் ஒரு நெறியை நல்லதா? கெட்டதா? அது பகுத்தறிவுக்குச் சொந்தமானதா? இல்லையா? என்ற பிரச்சினையை ஏன் எடுத்துக் கொண்டேனென்றால் நீங்கள் இங்கு என்ன தான் அறிவியல் துறையிலே திறமை வாய்ந்த பொருள்களைக் கருவிகளை உக்திகளைக் கண்டுபிடித்தாலும் வீட்டிற்குப் போகும் போது சுற்றுப்புறத்திலிருக்கின்ற சூழ்நிலையைச் சந்திக்கும் பொழுது சுற்றுச் சார்புகள் எங்கே இழுத்துச் செல்கிறது என்பதை எண்ணுகின்ற பொழுது நீங்கள் குழப்பம் அடைய வேண்டிய நிலைமைகூட ஏற்படலாம்.

அதை நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றால், ஒரு மாணவன் அல்லது மாணவி தன்னைப் பற்றி எண்ணுகின்ற நேரத்தில், அந்த நாட்டினுடைய நிலைமையைப் பற்றியும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்ற அளவிற்குத் தான் வெறும் பாடப் புத்தகத்தைப் படித்தால் போதாது. அந்தப் படிப்பினால் கூடிய அறிவைச் செயல்படுத்திப் பார்ப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்று இங்கே சொல்லியிருக்கின்றார்கள். இந்த அரசுதான் இதில் அக்கறை கொள்கின்றது.

எந்த மனிதனும் புத்தகப் புழுவாக இருந்து பயனில்லை. அதற்கு - என்ன உதாரணம் சொல்வார்கள் என்றால், சில புழுக்கள் அல்லது பூச்சிகள் புத்தகத்தை அப்படியே அரித்துத் தின்றுவிடும். அதனால் அந்தப் புத்தகத்திற்கும் பயனில்லை. அந்தப் புத்தகத்திலே இருந்த கருத்துக்கும் பயனில்லை. அந்தப் புழுவினுடைய வாழ்விற்கு உணவாக இருந்தது. அவ்வளவு தான். அதற்காகத்தான் பெரியவர்கள், “நீ புத்தகப் புழுவாக இருக்காதே - புத்தகப் பூச்சியாய் இருந்துவிடாதே” என்று சொல்லியிருக்கிறார்கள். நான் அறிவியல் துறையைப் பற்றிப் பேசும் பொழுது இயற்பியல், வேதியல், உயிரியல் இதைப்பற்றியெல்லாம் உங்களுக்கு ஆசிரியர்கள் சொல்லித் தருகின்றார்கள். அதைப்பற்றி நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள்.

எனக்குள்ள மகிழ்ச்சி, உள்ளே நான் சென்று பார்க்கும் பொழுது எனக்கு விளக்கம் தர முயன்ற உடன்பிறப்புகள், தமிழிலே எவ்வளவு அழகாக - சுத்தமாக, கலப்பில்லாமல் இனிப்பான தமிழில் சொன்னார்கள் என்பதை எண்ணிப் பார்த்து, பார்த்து நான் பெருமையடைகிறேன்; பூரிக்கின்றேன். ஏதோ ஆங்கிலம் இல்லாவிட்டால் விஞ்ஞானம் வளராது. ஆங்கிலம் இல்லாவிட்டால் மனிதன் வளரவே மாட்டான், ஆங்கிலம் இல்லா விட்டால் மனிதனுக்கு அறிவே இல்லாமல் போய்விடும் என்றெல்லாம் சொல்லுகின்ற நிலைமை மாறி, மற்ற நாடுகள் போல அவரவர்களுடைய மொழியில் குறிப்பாக ஜப்பானைப் போல், அவரவர்களுடைய தாய்மொழியில், என்கின்ற திறமையைத் தகுதியை, தரத்தை இங்கே மற்றவர்கள் முன்னிலையில், மற்றவர்கள் புரிந்து கொள்கின்ற வகையில் செய்து காட்டியதையும், சொல்லியதையும் நான் பெருமையோடு இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.”

தேமொழி

unread,
Dec 28, 2020, 6:51:45 PM12/28/20
to மின்தமிழ்

தினசெய்தி நாளிதழில் 14.12.2020  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 64)

“‘ஒருகொடியில் இரு மலர்கள் - கலையும், அறிவியலும்’”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த நல்லதம்பி திரைப்படம் கலைவாணர் வழங்கிய அருமையான சிந்தனைப் படைப்பாகும். பெருமைக்குப் பெருமையாக பேரறிஞர் அண்ணாவின் கதை - கருத்து - உரையாடல் - பாடலமைப்பு முதலியன பேரெழுச்சியை உருவாக்கியது. கலைவாணரும் டி.ஏ.மதுரமும் சேர்ந்து பாடிய பாடல் இப்படித் தொடங்கும்

"விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி
வெளிநாட்டாரை விருந்துக்கழைச்சுக்
காட்டப்போறேண்டி
அஞ்ஞானத்தை அழிக்கப்போறேண்டி-
அணுசக்தியால ஆயுள் விருத்தி
பண்ணப் போறேண்டி "

இந்த வரிகள் அறிவியற் சிந்தனை வளர்வதற்குப் பேரூக்கத்தைத் தந்தது. என் இனிய நண்பர் கு. மாஸ்கோ என்னோடு பச்சையப்பர் கல்லூரியில் உடன் பயின்றவர். பேராவூரணி குழந்தை புகழ்வாய்ந்த பெரியார் தொண்டராவார். அவர் திருமகன்தான் மாஸ்கோ. கலைவாணர் குடும்பத்துக்குப் பெரிதும் வேண்டியவர்கள்.

ஒருமுறை கலைவாணரைக் காண நண்பர் மாஸ்கோ அழைத்துப்போனார். கலைவாணர் அப்போது சிறிது நலிந்திருந்தார். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது "அண்ணா நீங்கள் பகுத்தறிவுத்தணல்" என்று சொன்னேன். கலைவாணர் சிரித்துக்கொண்டே "இந்தத் தணல் மேல்தான் தண்ணீர் ஊற்றி விட்டார்களே, நான் கனல் அல்ல கரித்துண்டு, இதோ வந்து போனாரே - அவர் தான் எரிமலை" என்றார். எரிமலையா என்று வியப்போடு கேட்டோம். அவர்தான் உடுமலை நாராயணகவி என்றார். எத்தனையோ முறை அவர் கொட்டிய நெருப்புக்குழம்பை ஆறவைப்பதற்குப் படாத பாடுபட்டேன். அப்போது உடனே இந்தப் பாட்டைப் பாடினார், .

"பொய்யும் புரட்டும் எரிக்கப் போறேண்டி
புராணத்தின் வாலை நறுக்கப் போறேண்டி"

அப்போது தணிக்கைக் குழுவில் இருந்தவர் பெயர் ஆஞ்சநேயலு. அவரைத்தான் குறிக்கிறது என்று போய் கதை கட்டிவிட்டார்கள். பிறகு பாட்டை மெதுவாக மாற்றினோம். அஞ்ஞானத்தை அழிப்பதற்கு அறிவியல்தான் பெரிய கருவியாகும் என்ற பாடலை நாம் இன்றும் மறக்க முடியாது. அந்த வகையில்தான் புரட்சித்தலைவருக்கு எந்தப் புதிய கருவியை உடனே வாங்கி முன்னும் பின்னும் திருப்பி ஒருமுறை கழற்றிச்சேர்க்கிற திறமையிருந்தது.

புரட்சித்தலைவரின் இளம் பருவத்தில் கைக்கடிகாரத்தை பழுது பார்த்த ஒருவரை எப்போதும் நினைப்பதாகும். அவர் பெயர் எனக்கு நினைவில்லை என்றார். எழுதியதை நம்பினார்களே தவிர செய்து பார்த்ததற்குப் பலர் முயலவில்லை.

மாபெரும் சிந்தனையாளராகத் திகழ்ந்த அரிஸ்டாட்டில் ஆடவர்களைக் காட்டிலும் மகளிருக்குப் பற்கள் குறைவு என்று எழுதினார். இந்த அழகில் அவர் இரு மனைவியரோடு வாழ்ந்தார். ஒருமுறையாவது வாயைத் திறக்கச் சொல்லி எண்ணிப் பார்த்திருக்கலாமே என்று நம்பிக்கையில் வாழ்ந்ததை பெட்ரண்ட் ரசல் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில்தான் பல்வேறு நினைவலைகளோடு புரட்சித்தலைவரின் அறிவியல் கண்காட்சியில் ஆற்றிய உரை மேலும் தொடர்கிறது.

---------------------------------------------

"...அறிவியல் துறை என்றால், மனிதன் வாழ்க்கையைப் பற்றியும், சிந்திக்கிறான். தன் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்கின்றான். அங்கே ஒரு கூடத்தில் மருத்துவத் துறையிலே, சில அனுபவங்களைப் பெற்றவர்கள் படித்தவர்கள், அந்த சகோதரிகள் மாணவியர் எங்களுடைய ஆற்றலை இந்தத் தமிழகத்திற்காகப் பயன்படுத்த வேண்டும். அதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்குப் பின்னணியிலே ஒரு கேள்வி இருக்கிறது. வாழ்க்கைக்கு நம்பிக்கை வேண்டும். வாழ்வதற்கு உறுதிப்பாடு வேண்டும் என்னும் கேள்வியும் அதுயொட்டிப் பின்னாலே இருக்கிறதென்பதை நாம் சிந்தித்துப் பார்க்க முடிகிறது.

ஒரு மாணவன், மாணவி பயின்ற பிறகு, அந்தப் பயின்றதை எதற்குப் பயன்படுத்துவது என்று எண்ணும் பொழுது வேலையில்லையென்றால் வேலை இருந்தாலும் போதிய வருவாய் இல்லையென்றால், அவன் எவ்வளவு உள்ளத்திலே சிதைந்து போகிறான். இங்கே சொல்ல வேண்டியது எனது கடமையாகும். அங்கே அவர்கள் சொன்னார்கள் எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கு வாய்ப்புத் தாருங்கள் கிராமப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் நாங்கள் என்று அவர்கள் சொல்லிக் கருவிகளை இயக்கிக் காட்டிய போது, நாம் கற்பனை செய்த தமிழகம் நிச்சயமாக எங்கோ இல்லை. எனது அருகாமையில் வந்து கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படுகிறது என்பதை நான் பூரிப்போடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இன்னொன்றையும் நான் நிச்சயமாகக் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு மாணவன் கண்டுபிடிக்கின்ற புதிய விஞ்ஞான உத்தி இந்த உலகத்திற்கு எந்த அளவுக்கு நல்லது செய்யப் போகிறது, அல்லது தீமையைச் செய்யப்போகிறதா? அது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் வேறு யாராவது உபயோகிக்கும்போது, அவர்கள் அதை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்று எண்ணும்போது தான் நமக்கும் சிறிது அச்சமும் ஏற்படுகிறது. மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. நான் ஓரிரு மாணவரிடம் கேட்டேன். கண்டு பிடித்திருக்கிறீர்களே. உங்களுடைய பெயர்கள் அங்கே இல்லையே என்று கேட்டேன்.

இல்லை இராமன் தியரி என்கிறார்கள், ஐன்ஸ்டீன் தியரி என்கிறார்கள். ஒவ்வொன்றிற்கும் தியரி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் கண்டுபிடிப்புகளுக்கு. ஆனால் இளைஞர்கள் - கண்டுபிடித்ததையெல்லாம் யாருக்கோ சொந்தமாக்குகின்றார்கள். அவர்கள் பெயர் வெளிவரவில்லை. இதில் எனக்கு வருத்தம் தான். மாணவராக இருந்தாலும் சரி, மாணவியாக இருந்தாலும் சரி, புதியது எதையாவது ஒன்றைக் கண்டுபிடித்து இந்த நாட்டிற்குப் பயன்படக்கூடியதாகக் தருவார்களேயானால் அவர்களுடைய பெயர் கண்டிப்பாகப் பொறிக்கப்பட்டாக வேண்டும். அதைப் பயன்படக்கூடிய அளவிற்கு நாட்டிற்காகச் சொந்தமாக்கும் போது "காப்புரிமை" நிச்சயமாக அந்த மாணவனுக்கோ, மாணவிக்கோ கொடுக்கப்பட்டாக வேண்டுமென்பதை இங்கே நான் வற்புறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ஒரு மனிதனுக்கு இருக்கின்ற மகிழ்ச்சி எங்கே இருக்கின்றது? எத்தனையோ உக்திகளைக் கண்டுபிடிக்கலாம். எளிதாக வாங்கிக் கொடுக்கக் கூடிய புத்தகங்களாக இருந்தாலும் கூட, மேடையிலே அழைத்து, இந்தக் காரியத்திலே வெற்றி பெற்றவர்கள் இந்தப் புதிய உத்தியினைக் கண்டு பிடித்தவர்கள் புதிய தத்துவத்தை அளித்து விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவியவர்கள், அதற்காகக் கொடுக்கிறோம் என்னும்போது, அந்தப் புத்தகத்தை வாங்குகின்ற நேரத்தில் அவர்களுடைய முகத்திலிருக்கின்ற மகிழ்ச்சியையும், உள்ளத்துடிப்பையும் நாம் மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும். அது தான் அந்த உள்ளத்திற்குத் தருகின்ற மிகப் பெரிய பரிசே தவிர, பணமோ அல்லது அவ்வப்போது சொல்லுகின்ற பாராட்டுரைகளோ மட்டுமல்ல. இந்தக் கல்விக்காக நாங்கள் செலவழிக்கின்ற பணம், அரசின் சார்பாக எவ்வளவு என்பதை இங்கே சொல்வதில் தவறில்லை என்று நான் கருதுகிறேன்.

அறிவியல் ஆய்வுக் கூடங்கள் அமைப்பதற்கான இத்திட்டத்தில் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அரசு உயர்நிலைப் பள்ளிக்கும் ரூபாய் 55,000 - செலவிடுகிறது என்பதை இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும். ஆய்வுக்கூடக் கட்டிடத்திற்காக ரூபாய் 37,000-ம் கருவிகளுக்கான ரூபாய் 18,000 ஆகும். தனியார் மற்றும் நகராட்சி மேனிலைப்பள்ளிகள் ஒவ்வொன்றும் பெறும் மானியம் ரூபாய் 40,000 எதற்காகக் குறிப்பிடுகின்றேன் என்றால், இவ்வாறு செலவு செய்கின்ற பணம் மக்கள் தருகின்ற வரிப்பணம் ஆகும். மக்கள் தருகின்ற வரிப் பணத்தை, எதற்காகச் செலவிடுவது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். ஏதோ விளம்பரத்திற்காகத் தெரிவித்துவிடலாம். பத்துப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தோம். இரு நூலகங்களைக் கட்டிக் கொடுத்தோம் என்று சொல்லலாம். அங்கு வைக்கப்படுகின்ற நூல்கள் எவையென நாம் சிந்திக்க வேண்டும். முன்னொரு முறை கூறியிருக்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நான் சென்றேன். அங்கு நூலகத்தைத் திறந்து பார்க்க வேண்டுமென்றேன். திறந்து பார்த்தால் புத்தருடைய புத்தகம் இருக்கிறது. முசோலினியுடைய புத்தகங்கள் இருக்கின்றன. அந்த மதுரை மீனாட்சியம்மன் கோயிலைக் கட்டியவர் யார்? எந்தக் கல்லில் கட்டினார்கள்? எந்த மண்ணில் கட்டினார்கள்? எத்தனை ஆண்டுகளாயிற்று? என்னென்ன வேலைப்பாடு களமைந்த தூண்களெல்லாம் உருவாக்கினார்கள்? எப்படிச் செய்தார்கள்? அந்த மண்டபங்களை உயர்த்து வதற்கு எந்த இயந்திரங்கள் இல்லாத காலத்தில் எப்படி அவைகளை நிறுவினார்கள் என்பதைப்பற்றி எந்தப் புத்தகத்திலும் காணோம். இட்லரைப் பற்றித் தெரிந்து கொள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்கா போக வேண்டும். இப்படிச் செலவழித்துப் பயனில்லை. செலவழிக்கின்ற பணம் இந்த நாட்டிலுள்ள மக்கள் நல்வாழ்விற்கு எதிர் காலத்திற்குப் பயன்படும்படியாகச் செலவழிக்கப்பட்டாக வேண்டும்.

இங்கே துயரப்படுகின்ற ஏழைகளை அல்லது துன்பத்திற்கு ஆளானவர்கள் வசதியுள்ளவர்களாக இருந்தாலும் கூட இயற்கையின் தாக்குதலால் துன்பத்திற்கு ஆளானவர்களைச் சந்திக்க வேண்டியது என்னுடைய கடமை. சந்திக்கும்போது நான் என்னனாலான நிதி வசதிக்கேற்ப நான் உதவி செய்தாக வேண்டும். அந்த உதவி செய்யும் பொழுது அதைப் பெறுகின்றவர்கள் தங்களுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர அந்த நேரத்தில் வெளியே இருந்து யாராவது போய் உன்னிடம் 30 கிலோ அரிசியிருக்கிறது அதை எனக்குக் கொடுத்துவிடு; இருபத்தைந்து ரூபாய் கையில் வாங்கிக்கொள் என்கிற நிலையில் யாராவது இருந்தார்களேயானால் 30 கிலோ அரிசி கொடுத்தும் பயனில்லை. வேட்டி, சேலை வாங்கிக் கொடுப்பதிலும் பயனில்லை என்பதையும் நான் உணர்கிறேன்.

அதுபோல் இங்கு இருக்கின்ற இந்த இளம்பிஞ்சு உள்ளத்திற்கு ஏற்ற கொள்கைகள், இலட்சியங்கள், உணர்வுகள் பண்புகள் ஆகியவற்றை அறிந்து அவைகளின் அடிப்படையிலே தான் நாங்கள் கல்வியை உருவாக்க வேண்டும் என்று கருதுகின்றோம். நண்பன் யார் என்பதை நாம் தெரிந்து கொண்டால் இந்தப் பையன் எப்படியிருப்பான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆகவே சேர்க்கை எப்படி என்று தெரிய வேண்டும். அந்தச் சேர்க்கையை உருவாக்குவதில் நீங்கள் அத்தனைபேரும் நல்ல உணர்வோடு சேர்க்கையை உருவாக்கிக் கொள்ளக் கூடியவர்களாக அமைந்தாக வேண்டும். இந்தப் பொறுப்பு ஆசிரியர்களிடம் அதிகமாக இருக்கிறது."

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை...

- ஔவை நடராசன்

தொடர்புக்கு:- thamiz...@gmail.com 
-----

தேமொழி

unread,
Jan 6, 2021, 2:36:50 AM1/6/21
to மின்தமிழ்


தினசெய்தி நாளிதழில் 21.12.2020  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்  (பகுதி - 65)

“‘நல்லவர்கள் வல்லவர்களாக வேண்டும்’”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

விக்டோரியா பேரரசியார் இங்கிலாந்து நாட்டின் பெருமதிப்பிற்குரிய இணையில்லாக் கோப்பெருந்தேவியாக விளங்கினார்.  ஒருமுறை அரசியார் அங்காடிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில் ஒரு பள்ளியின் பெயர்ப் பலகையைப் பார்த்தார். உடனே அந்தப் பள்ளியின் வாயிற்கதவைத் திறக்கச்சொல்லி அரசியார் இறங்கினார். தலைமையாசிரியர் திக்குமுக்காடிப்போனார்.

அரசியார் மெல்லப் பள்ளி முதல்வரின் வணக்கத்துக்கு நன்றி கூறிவிட்டு வகுப்பறைகளை ஒன்றுவிடாமல் பார்த்துவிட்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தியதையும் கேட்டுத் திரும்பினார்கள். உடனே பள்ளி முதல்வர் அரசியார் என்னை மன்னிக்க வேண்டும். என் அலுவலக அறைக்கு வருமாறு வேண்டினார். அரசியார் புன்முறுவலோடு அறைக்குள் நுழைந்தார். முதல்வர் அறையின் கதவுகளைத் தாளிட்டார். அரசியாருக்கு முன் மண்டியிட்டுப் பேரரசியாரின் இடதுகை மோதிரத்தை முத்தமிட்டு மேன்மை மிளிரும் அரசியார், எங்கள் பள்ளிக்கு வந்தது எங்களுக்கு வாய்த்த பெரும்பேறு என்றுகூறி வணங்கினார்.

ஆங்கிலேயர்களுக்கு எல்லாவற்றுக்குமே ஒரு மரபுண்டு. வணங்குவுதற்கு - வாழ்த்துவதற்கு ஒரு நெறிப்பாடு உண்டு. அதில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். அரசியார் முதல்வரைப் பார்த்து ஆமாம் என்னை வாயிலில் பார்த்த போதே நீங்கள் அரச வணக்கத்தை மரபாகச் செய்திருக்க வேண்டுமே! அறையைத் தாளிட்டுக்கொண்டு மரபைப் பின்பற்றுகிறீர்களே என்று கேட்டார். அந்தத் தலைமை ஆசிரியர் - பள்ளி முதல்வரின் பெயர் அர்னால்டு என்பதாகும்.

மேதகு அரசியாரே என் பள்ளிப்பிள்ளைகளை எல்லாம் நான் என் குழந்தைகளாக வளர்க்கிறேன். ஆசிரியர்கள் தான் எவருக்கும் மேலான தெய்வங்கள் என்று சொல்லியிருக்கிறேன். வாயிலில் அரசியார் வந்த போதே நான் மரபைக் காத்திருக்க வேண்டும். என் மாணவர்கள் கண்ணில் படும்படி நான் அரசியார் முன் மண்டியிட்டதைக் கண்டால் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து மரபை மீறினேன், மன்னிக்கவும் என்று சொன்னார். அன்று முதல் உயர்ந்த ஆசிரியர்களை ஆர்னால்டு மரபைக் கடைபிடிப்பவர்கள் என்றொரு தொடரே அமைந்துவிட்டது. பள்ளிப்பிள்ளைகள் நல்லவர்களாகவும் - அதே வேளையில் வல்லவர்களாகவும் விளங்க வேண்டும் என்று நாடு எப்போதும் விரும்பும்.

இந்த உணர்விலேயே பள்ளிப்பிள்ளைகளைப் பார்த்தவுடன் தன் ஆழ்மனத்தில் புதைந்திருந்த பள்ளிக்கல்வி - பசித்தொல்லை - தீய பழக்கங்களின் கொடுமை - நல்ல நண்பர்களைச் சுற்றி வைத்துக்கொள்ளல் என்ற கருத்தை, தன் உரையில் தொடர்வதைக் காணலாம்.

--------

“ஆசிரியர்களை மதித்துப் போற்றி வாழ வேண்டிய மிகப்பெரிய கடமை மாணவ, மாணவியர்களுக்கு இருக்கிறது என்பதையும் நாம் இங்கே குறிப்பிடவேண்டும். பெரியவர்களை மதிக்கின்ற அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போய்க் கொண்டிருக்கிறது. அதை மாற்றி அமைத்தாக வேண்டும். பெரியவர்களை மதிக்கின்ற பண்பு நமக்கு வேண்டும். ஆமாம் போடுகின்றவர்கள் நம்மோடு அதிகமாக இல்லாமல் இருப்பது நல்லது.

நம்மைக் கண்டிக்கிறவர்கள், நம்மைத் திருத்த முயல்கின்றவர்கள் நம்மோடு இருந்தாக வேண்டும். அப்படிப் பட்டவர்களைத் தான் இங்கிருக்கின்ற மாணவ மாணவியர்களாகிய நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இரு நண்பர்கள் இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நண்பர் ஒரு தவறான காரியத்தைச் செய்யப்போகும் பொழுது இன்னொரு மாணவ நண்பர் நான் சொன்னால் என்ன ஆகும்? அவருக்கோ அதில் ஆசை இருக்கிறது. நாம் வேண்டாமென்றால் அவர் கோபித்துக் கொள்வாரோ என்று கருதி நமக்கேன் வீண்வம்பு இருக்கட்டும் என்று கருதினால், அவர் உண்மையான நண்பர் அல்லர். நாம் சொல்வதின் விளைவாக எனக்கு அந்த மாணவன் விரோதியானாலும் பரவாயில்லை அவன் திருந்தியாக வேண்டும். தவறு செய்யக்கூடாது என்று நினைத்து, கண்டிக்கின்ற மனோபாவத்தோடு எவன் நண்பனாக இருக்கின்றானோ அவன் தான் உண்மையான நண்பன்.

உள்ளே போனால், சிகரெட்டு பிடித்தால் என்ன நோய் நடிப்புக்கு வரும் பகை என்பதை இங்கே அழகாக விஞ்ஞான ரீதியில் குறிப்பிட்டுக் காண்பித்தார்கள்.  இதை நான் சொல்ல வேண்டிய காரணம், ஒரு பக்கம் சிகரெட்டுப் புகைக்காதே என்று விஞ்ஞான ரீதியில் சொல்லிவிட்டு வெளியே போனவுடன் விளம்பரத்தைப் பார்த்து விட்டு, இப்படிப் புகை பிடிப்பதா? சாய்த்துப் பிடிப்பதா? அல்லது ஒரு கையால் பிடிப்பதா என்பதையெல்லாம் ஆசைக்குச் சொந்தக்காரர்களாக ஆக்கிக் கொண்டோமானால் படித்ததற்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லாமல்போகிறது. என்ன நோய் வரும் என்று கேட்டேன். புற்று நோய் வரும் என்றார்கள். இன்னும் ஏதாவது நோய் வருமா என்றேன். ஈரல் துளைக்கப் பட்டுவிடும் என்றார்கள். ஆனால், சிகரெட் பிடிப்பவர்களிடம் சொன்னால் ஒப்பு கொள்ளப்போகிறார்களா? அவர்கள் ஒப்பு கொள்ளமாட்டார்கள்.

வேண்டுமென்றால் நமக்குச் சிபாரிசு செய்வார்கள். ஏனென்றால் அவர்களைக் குறை கூறாமல் இருக்க வேண்டுமே அதற்காக இது போன்றவைகளுக்குத்தான் சொல்லுகின்றேன். பகுத்தறிவு என்ற முறையிலும் அல்லது பழைய வழக்க முறைகளிலும் நமக்கு நல்லது எவை என்பதை நாம் தெரிந்து கொள்ளக்கூடிய அளவுக்குப் பெரியவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களோ அதைச் சொல்லித் தருகின்றார்கள். அவைகளைக் கல்வி என்று மட்டும் நாம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஏதோ ஒரு பொருளைக் கண்டு பிடிக்கின்ற அறிவு நமக்குக் கிடைத்துவிட்டது என்று மட்டும் நாம் நிம்மதி அடைந்துவிடக் கூடாது. இதை நாம் செயலாற்றிச் செல்ல வேண்டும்.  இதைச் செயல்படுத்தித் தீர வேண்டும். நாம் எந்த அளவில் கல்வி கற்றுக் கொள்கின்றோம் என்பதை நாம் செயலில் காட்டியாக வேண்டும்.

அதன் எடுத்துக்காட்டாக நாம் வாழ்ந்தாக வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு மாணவ மாணவியரும் கடைப்பிடித்தாக வேண்டும். அதற்குப் பெரும்பணியை ஆசிரியர்களும் ஆசிரியைகளும் செய்தாக வேண்டும். அந்தப் பெருங்காரியத்தைச் செய்வதற்குத் தாய் தந்தையர்கள் உண்மையிலேயே ஒத்துழைக்க வேண்டும்.

உங்களுடைய அறிவு - ஆற்றல் அத்தனையும் இந்த நாட்டுக்குச் சொந்தம் என்பதை மறந்து விடாதீர்கள். அமரர் அண்ணா விழா, பெரியார் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் நடக்கிறது. பெரியார் மாவட்டம், மூதறிஞர் இராஜாஜி பெயரிலே இடம், காமராஜருடைய பெயருக்குப் பல்கலைக்கழகம் இதெல்லாம் அவர்கள் இருக்கின்ற போதல்ல, இல்லாதபோது உருவாக்கப்படுகின்றன. மறந்து விடாதீர்கள். அதுபோல் தான் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு முறையில் நம்மாலான தொண்டை இந்தப் பாரதத்திற்கும், நம்மை வாழவைக்கும் தமிழகத்திற்கும் செய்ய வேண்டும் என்ற உணர்வோடு இந்தக் கல்வி கற்க வேண்டும். இந்த மாணவன் கல்வியைக் கற்று முடிந்து வந்த பிறகு இந்த நாட்டின் குடும்பத்தின் தலைவர்கள், மறந்து விடாதீர்கள்.

ஒரு மருத்துவர் இந்த ஜாதிக்குத்தான் நான் மருத்துவம் செய்வேன் என்று சொல்ல முடியாது. உதாரணத்துக்குச் சொல்லப் போனால் கொலை செய்துவிட்டு, வெடிகுண்டு வைத்துவிட்டுத் தப்பி வருகின்ற ஒரு நோயாளி ஆபத்திலே இருக்கின்றான். அவனுக்கு உதவி செய்தால் சட்டப்படி குற்றம். ஆனால் ஒரு மருத்துவருடைய மாபெரும் கடமை அந்த மனிதனின் உயிரைக் காப்பாற்றுவது. அவன் யாரென்பதைப் பற்றிக் கவலையில்லை. தனக்கு எந்த ஆபத்து வந்தாலும் கவலையில்லை. அந்த உயிர் பிழைத்தாக வேண்டும். இது அவனுடைய இலட்சியம். அதுபோல் தான் ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்தாக வேண்டும். நம்முடைய இலட்சியம் இந்த நாடு வாழ்ந்தாக வேண்டும். ஒவ்வொருவரும் வாழ்ந்தாக வேண்டும். ஆகவே பிறரை வாழவைத்து, அதன் விளைவாக நம்மையும் வாழவைத்துக் கொள்கின்ற அளவுக்குக் கல்வி பயன் தரவேண்டும். அதிலும் அறிவாய்ந்த துறையில், அறிவியல் துறையில் அந்தப் பயிற்சி பெறுகின்ற நீங்கள் இந்த நாட்டிற்கு எவ்வளவு தனிச் சொத்தாக இருக்கின்றீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

நீங்கள் இப்போது மழையெல்லாம் வருவதைப் பார்க்கிறீர்கள். எவ்வளவு ஆபத்துகள் வருகின்றன என்று உங்களுக்குத் தெரியும். ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்களைப் போடவேண்டும். இப்படியெல்லாம் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். விஞ்ஞான அறிவிலே நமக்கு வளர்ச்சியும், தகுதியும் இருக்குமானால் இப்படிப்பட்ட அணைக்கட்டுகளை இன்னமும் உடைந்துபோகாமல், இடிந்து போகாமல் காப்பாற்றக் கூடிய அளவுக்குப் பலமுள்ளதாக எப்படி ஆக்குவது என்பதைப் பற்றி இன்னும் பத்தாண்டு கழித்து இங்கே இருக்கின்ற இளைஞர்கள் கண்டு பிடிக்கக்கூடிய திறமைக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்.

அது இந்த நாட்டிற்குத் தகுந்தது. ஆகவே அப்படிப்பட்ட கல்வியைப் பெறுகின்ற நீங்கள் நல்லவர்களாக இருந்தாக வேண்டும். நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் கண்டுபிடிக்கின்ற அந்த உத்திகள் இந்த நாட்டின் ஆக்கப்பூர்வமான காரியத்திற்குப் பயன்படுவதாக அமைய வேண்டுமே தவிர அழிவுப் பொருளாக அமைந்துவிடக்கூடாது. ஆகவே நான் கருத்துகளைச் சொல்லும்போதெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லுகின்றேன். வல்லவர்களாக இருங்கள்; நல்லவர்களாக இருங்கள். தனக்கு மட்டும் அல்ல. மற்றவர்களுக்கும் நல்லவர்களாக இருங்கள்.

குறிப்பாகப் பெற்ற தாய், தந்தையருக்கும், ஆசானுக்கும், நீங்கள் நல்லவராகவே இருந்தால் இந்த உலகம் நல்லவர்களால் தான் மதிக்கப்படுகின்ற நிலைமையை உருவாக்க முடியும் என்று கூறி இந்த அறிவியல் துறையிலே நீங்கள் பெற்றிருக்கின்ற அறிவைச் சாதனையாக மாற்றி, இந்தப் பெருமை தமிழகத்திலிருந்து உலகத்துக்கெல்லாம் பரவி, தமிழகத்திற்கு மாபெரும் புகழை ஏற்படுத்தக்கூடிய நல்ல விஞ்ஞான அறிவாளிகளாக நீங்கள் திகழுங்கள். வாழும் நாட்டிற்குப் பெருமை தேடித் தாருங்கள். தமிழகத்தை உயர்த்துங்கள் என்று கூறி உங்கள் தொண்டுள்ளத்திற்கு நான் ஆசியும், பெரியவர்களுக்கு வணக்கத்தையும் கூறி அமைகின்றேன்.”

தேமொழி

unread,
Jan 11, 2021, 1:37:30 AM1/11/21
to மின்தமிழ்

தினசெய்தி நாளிதழில் 28.12.2020  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் ( பகுதி - 66 )

“கலைவாணரிடம் கற்ற பாடம் கொடை மனம்”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


அப்போது தந்தை பெரியார் நூற்றாண்டு விழா சிறப்பாக நடந்துகொண்டிருந்தது.  மாவட்டம் தோறும் கருத்தரங்கம், கவியரங்கம், சிந்தனை மேடை, தலைவர்கள் பேருரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புரட்சித்தலைவர் முதல்வர் என்ற நிலையில் ஏறத்தாழ அனைத்துக் கூட்டங்களிலும் பங்குகொண்டார். நாவலருடைய சீர்திருத்தப் பொறி பறந்த பொழிவுகள் நாடு முழுவதும் எதிரொலித்தன.  ஈரோடு மாநகரில் காலை ஒன்பது மணிக்குத் தொடங்கிய கருத்தரங்கம் முழுவதும் புரட்சித்தலைவர் மனம் தோய்ந்து  கேட்டுக்கொண்டிருந்தார்.  பெரும்பாலும் ஏதேனும் நிகழ்ச்சிக்கு வந்தால் நடுவில் எழுந்து போவதில்லை .
எத்தனை மணி நேரமானாலும் .

மதியம் ஒரு மணி அளவில் நாவலர் பேருரை முடிந்தது. பிறகு கூட்டத்தில் களைப்பும் சோர்வும் படியத்தொடங்கின. நிறைவுப் பேச்சாளர் திருக்குறளாராவார் ! திருக்குறளாருக்கு ஈடாக நகைச்சுவை மிளிர நற்கருத்துக்களைப் பேசுவதற்கு இன்றுவரை எவரும் பிறக்கவில்லை. திருக்குறளார் பேச்சு தேனாய்த் தித்திக்கும் திருக்குறளின் ஆழ்ந்த பொருளை எத்திக்கும் சென்று சிரிக்க வைத்த சிந்தனைச் செம்மல் அவர் . மேடைக்கு வந்து நின்றார் திருக்குறளார். அப்போது " பெரியார் பெருமை " என்ற தலைப்புக் கொடுத்திருந்தோம் .
அவர் பேசத் தொடங்கினார் .

தந்தை பெரியார் யாழ்ப்பாணத்துக்குப் போயிருக்கிறார். தந்தை பெரியாருடைய பெருமிதமான தோற்றம் - செக்கச்சிவந்த மேனி - மார்பில் விழும் தாடி - ஆடையைப் போர்வையாகப் போர்த்திருந்த அழகு, இவைகளையெல்லாம் வருணித்த திருக்குறளார் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார்.  தந்தை பெரியாருடைய தோற்றத்தைப் பார்த்து யாரோ ஒரு மகரிஷி வந்திருக்கிறார். இமயமலையில் தவத்தை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் என்று சரடு விடுவதற்கு ஆட்களா இல்லை !  பெரியார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மூடப் பழக்கங்களைக் காலில் போட்டு மிதித்துத் தேய்த்தார். கூட்டம் முடிந்தது. எல்லோரும் சென்ற பிறகு ஒரு பெண்மணி ஓரமாக வந்து கை குவித்தார் .

"என்னம்மா நான் தான் எல்லாம் பேசி முடிச்சாச்சே !, நம்பிக்கையால தானே நாடே நாசமாகப் போயிற்று , உங்களுக்கு என்ன வேணுமென்று கேட்டார்.  அந்த அம்மையார் கைகளைக் கட்டிக்கொண்டு , வாய் புதைத்துப் தந்தை பெரியார் காலடியில் விழுந்து சாமி ! எனக்கு திருமணம் ஆகிப் பத்து வருடம் ஆயிற்று , பிள்ளை பாக்கியம் இல்லை. சாமி தான் ஆசீர்வதிக்க வேண்டும் என்றாராம். பெரியார் மனசுக்குள் நமக்கே குழந்தை பிறக்கவில்லை, இது என்னடா பெரிய தொல்லை, திருந்தவே மாட்டார்கள் முணுமுணுத்துக்கொண்டே , சரிம்மா உனக்குக் குழந்தை பிறக்கும் - நல்ல பேரெடுப்பான் என்று அனுப்பிவிட்டார் ..

இப்படித் திருக்குறளார் பேசியதைக் கேட்டு அலைமோதிய கூட்டம் நகைத்து நகைத்து வயிற்றைப் பிடித்துக்கொள்கிற அளவிற்கு களிப்புக்கடலில் மிதந்தது.  புரட்சித்தலைவர் கைக்குட்டையை வாயில் வைத்துக்கொண்டு நாற்காலி சாய்ந்துவிடுதே என்ற நிலைக்குத் திருக்குறளார் பேச்சில் திளைத்துப் போனார்.  இன்னும் பேச்சு முடியவில்லை.  பதினைந்து ஆண்டுகள் கழித்துப் பெரியார் மீண்டும் யாழ்ப்பாணம் போனார்.  பேசி முடித்தார்.  ஓர் அம்மையார் தன் மகனோடு வந்து காலில் விழுந்து - சாமி வரம் கொடுத்தபடியே மகன் பிறந்து பள்ளிக்கூடத்தில் நல்ல பேர் வாங்கி வருகிறான் என்று கண்களில் நீர் துளிர்க்க மீண்டும் காலில் விழுந்தார்களாம். போதும்மா ஒரு பையன் போதும், நல்லா இருங்க, நல்லா படிக்க வைங்க என்று சொன்னாராம்.  மகரிஷி சொன்னா நடக்குமோ - நடக்காதோ தந்தை பெரியார் சொன்னால் நடக்கும், அவர் வழியில தான் நாடு நடக்கும் என்று முடித்தார் .

இது கற்பனை நிகழ்ச்சியாகக் கூட இருக்கலாம். ஆனால் திருக்குறளார் தெரிவித்த செய்தி தந்தை பெரியாருடைய பெருமைக்கு வைரமுடி சூட்டியதாகும் .  இது நடந்து சில மாதங்கள் கழிந்த பிறகு புரட்சித்தலைவர் ஒருமுறை என்னிடத்தில் பேசிக்கொண்டிருந்த போது திருக்குறளார் சொன்னது உண்மைதானா என்று பேசிக்கொண்டார்களாம்.  பெரியார் பேச்சு உண்மை தான், தந்தை சொல்மிக்க மந்திரமில்லை, எனக்கு அப்படி நடந்திருக்கிறது என்றார். நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டு நின்றேன், என்ன அண்ணா அப்படி நடந்தது என்று கேட்டேன்.  நாடக உலகிலும் - திரையுலகிலும் என்னையும் என் அண்ணனையும் தந்தை போல் அரவணைத்து வளர்த்து ஆளாக்கியது மட்டுமில்லாமல் எனக்கு உடன்பிறக்காத உத்தம அண்ணனாக எம் கே இராதாவும் வாய்த்தார்.

உங்கள் பிள்ளைகளைக் குறித்து நீங்கள் கவலைப்படாதீர்கள் அம்மா ! அவர்களையும் சேர்த்து எனக்கு மூன்று பிள்ளைகள், அவர்கள் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு உயர்ந்து வர நான் பொறுப்பு என்று கூறி என் அன்னை சத்தியபாமா அம்மாவுக்கு சத்தியவாக்குக் கொடுத்தார். கலை உலகத்துக்கே ஆசிரியராக நடிப்புக்கலைஞர்கள் அனைவரும் " வாத்தியார் " என்று வணங்கி அழைத்த கந்தசாமி முதலியார் வாக்கு எனக்குப் பலித்திருக்கிறது. திருக்குறளார் பேசும்போது பெரியாரை நினைத்தேன், அவர் நிழலாக ஆசிரியர் கந்தசாமி முதலியாரை எண்ணிக் கலங்கினேன் என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக்கொண்டார்.  தான் வளர்ந்தபோது தன்னை வளர்த்தவர்களை, நண்பர்களை , உடன் இருந்தவர்களை எப்போதும் நினைத்து நெகிழ்வது புரட்சித்தலைவரின் இயல்பு.

மேடையில் தமிழக முதல்வரான நிலையில் என் அண்ணன் என்று சொல்லிப் பெருந்தகை எம் கே இராதாவின் முன்னிலையில் விழுந்து வணங்கியதைத் திரண்டிருந்த கூட்டம் திகைப்போடு பார்த்து விம்மிதம் அடைந்தது .  அரசத் தோற்றமும் - அமைதி படிந்த திருமுகமும் கொண்ட அழகனாக விளங்கியவர் எம் கே இராதா, அந்தப் புகழோங்கிய குடும்பம் இன்றும் செழிப்போடும் - சிறப்போடும் வாழ்ந்து வருகிறது .

எம் கே இராதாவின் பெயரன் அவர் குடும்பப்புகழ் மிளிரப் பெருமிதத்தோடு தொழிலதிபராக சுற்றுலாத் தலங்களில் அழகிய வியன் மாளிகை விடுதிகளை அமைத்திருப்பதும் - அயல்நாட்டவர்கள் பாராட்டிப் போற்றுவதுமான திருப்பெயர் கொண்டவர் குமார் சீதாராமன்.  அவர் கலைவாணர் குடும்பத்தை எங்கள் சிற்றப்பாவின் குடும்பம் என்று நாங்கள் அப்படி நெருங்கிய உறவு கொண்டு வாழ்ந்தோம் என்று அண்மையில் என் மகன் அருளுக்கு அனுப்பிய ஒரு சுட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.  நாங்கள் திருவண்ணாமலை சென்றபோது அவர் கட்டியிருந்த கற்கோட்டை போன்ற கவினார்ந்த விடுதியில் தான் தங்கியிருந்தோம்.  என் மகன் அருள், குமார் சீதாராமின் குண நலங்களைச் சொல்லச் சொல்லி கேட்டுக் கேட்டு நானும் என் துணைவியாரும் - அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தைத்தான் நினைவிற்குக் கொண்டுவந்தோம்.

மரபார்ந்த குடும்பத்தின் மாட்சி குமார் சீதாராமின் முகத்தின் பொலிவாக ஒளிர்கிறது.  திரு குமார் சீதாராமன் அயல்நாடு ஒன்றுக்கு மதிப்பியல் தூதுவராக நியமனம் பெற்றிருந்தார்.  கலைவாணர் பற்றிப் புரட்சித்தலைவர் 1957 இல் வரைந்த கட்டுரையின் ஒரு பகுதியைக் காணலாம் .

கலைவாணர் என். எஸ் கே. அவர்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்து பல நாட்கள் ஆயின. ஆயினும் எதை எழுதுவது ? எப்படி எழுதுவது ? என்ற கேள்விக்குப் பதில் கிடைக்காத காரணத்தால் இந்தப் பல நாட்களாக நான் எடுத்த முயற்சிகள் அத்தனையும் வீணாயின. ஆனாலும் நான் அந்த மகத்தான சக்தியை- அறிஞர் அண்ணா அவர்கள் கூறியபடி, சகாப்தமாக விளங்கிய கலைவாணரைச் சந்தித்த முதல் கட்டத்திலே நடந்த ஓரிரு நிகழ்ச்சிகள் அவருடைய நெஞ்சுரத்திற்கும், நேர்மைத் திறனுக்கும், சிந்தனைச் சிறப்பிற்கும், சீர்திருத்த ஆர்வத்திற்கும் கொடை மனத்துக்கு எடுத்துக்காட்டாக அமைவதால் இங்கே குறிப்பிட முயலுகிறேன்.

முதன்முதலாக 1934 - ஆம் ஆண்டில் தான் கலைவாணரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. திரு. எஸ். எஸ். வாசன் அவர்கள் எழுதிய " சதிலீலாவதி " என்ற கதையைப் படமெடுத்தபோது அதில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நான், படக் கம்பெனியார் ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தங்கியிருந்த சமயம்.

காலஞ்சென்ற எம். வி. மணி அவர்கள் எங்களிடம் என் தமையனாரிடமும் நெருங்கிப் பழகுபவர். அவர்தான் முதன்முதலாகக் கலைவாணரைப் பற்றி அதிகமாக எங்களிடம் தெரிவித்தவர். கலைவாணரின் திறமையைப் பற்றியும், அறிவைப் பற்றியும் மணி அவர்கள் சொல்லும்போது, இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று சொன்னால் அது மிகையே அல்ல.  இப்படிக் கலைவாணர் எங்களைச் சந்திப்பதற்கு முன்பே மணி அவர்களின் புகழுரை காரணமாக எங்கள் உள்ளத்தில் ஓர் இடத்தைத் தனதாக்கிக்கொண்டு விட்டார். என். எஸ். கே. எப்போது வருவார், அவருடைய நடிப்பை எப்போது பார்க்கலாம் என்ற ஆர்வம் கரை மீறி இருந்தது. நான் அடிக்கடி கேட்பேன், கம்பெனி நிர்வாகியிடம் " என் எஸ் கே எப்போது வருவார் ? " என்று. இப்படிக் கேட்டுக் கேட்டு அலுத்துவிட்ட நிலையில் இருந்தேன்.

ஒரு நாள் மாடிமீது உட்கார்ந்து மணி, நான், தமையனார் மற்றும் சிலரும் சீட்டாடிக் கொண்டிருந்தோம்.  திடீரென மாடிக்கு வந்தார் என். எஸ். கே.  ஆவலும் ஆச்சரியமும் கலந்த நிலையில் அவரையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிரில் இருந்தவர்கள் " சீட்டைப் போடு, ஆட்டத்தைக் கவனித்து ! " என்று சொன்ன பிறகுதான் போட்டேன். இல்லை; நான் போடவில்லை . என். எஸ். கே. அவர்கள் தான் என் கையிலிருந்த சீட்டைப் பறித்துப் போட்டார். நான், " அதுவல்ல துருப்பு " என்று சொல்வதற்குள் சீட்டு விளையாட்டில் கலந்திருந்த மற்றவர்களும் ' அதுவல்ல ! ' என்று சொல்லவே, என் கையிலிருந்த சீட்டுகளை வாங்கிக் கீழே விரித்து, இதில் எதைப் போடுவது ? நீங்களே போட்டுக்கொள்ளுங்கள் ! " என்று சொல்லி என் கைச்சீட்டுகளை விரித்து வைத்துவிட்டார்.  எல்லோரும் தங்களை மறந்து வயிறு குலுங்க, வாய் வலிக்கச் சிரித்தார்கள். காரணம், என் கையிலிருந்த சீட்டுக்கள் அத்தனையும் ஒரே ஜாதிச் சீட்டுக்களாக ( டைமன்களாக ) இருந்தன.

கம்பெனி முதலாளி முதல் சாதாரண ஊழியன் வரை யார் தவறு செய்தாலும் கண்டிக்க அவர் பின் வாங்கியதில்லை.  எப்போது பார்த்தாலும் மணி அவர்களின் நடிப்பையும், அவர் வசனம் பேசும் முறையையும் கற்பனைத் திறனையும் போற்றிப் புகழ்ந்து கொண்டேயிருப்பார். மணி அவர்கள் மீது அத்தனை பற்றுக்கொண்டிருந்தாராயினும் மணி அவர்கள் செய்யும் சில செயல்கள், தவறு என்று கண்ட நேரத்தில் எதிர்க்கவும் தவறமாட்டார்.

பயங்கரமான சாதி வேற்றுமையுணர்ச்சியை நாட்டிலிருந்தே ஓட்டி, மக்களினத்தின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் போக்கை அடியோடு களையவேண்டும் என்பதிலே கலைவாணருக்கு அந்தக் காலத்திலேயே இருந்த தீவிரமான உணர்ச்சியைக் காணுகிறோம்.

அவர் மற்றவர்களுக்கு யோசனை சொல்பவராகத்தான் பெரும்பாலும் இருந்திருக்கிறாரே தவிர மற்றவர்களின் யோசனையைக் கேட்டு நடக்கும் நிலை அநேகமாக ஏற்பட்டதேயில்லை .  கொடையும் தயவும் பிறவிக்குணம் என்பார்கள் . கலைவாணருக்கு அது பிறவிக்குணம் .  என் வாழ்வில் கொடுக்கும் மனத்தை கலைவாணரிடம் கற்றுக் கொண்டேன் .


தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை...

- முனைவர் ஔவை நடராசன்

தொடர்புக்கு:- thamizhavvai[at]gmail.com
---

தேமொழி

unread,
Jan 16, 2021, 3:46:41 AM1/16/21
to மின்தமிழ்


தினசெய்தி நாளிதழில் 4.1.2021  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 67)

“விருப்பு வெறுப்பை  விலக்கி வைப்பதே கலை !”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

புரட்சித்தலைவர் குறிப்பிட்ட “ கலைவாணர் ஒரு சகாப்தம் ” என்ற பேரறிஞரின் கட்டுரையின் சில பகுதிகளைக் காணலாம்.

கலைவாணர் வெறும் நடிகர் மட்டுமல்ல. அவர் ஒரு சின்னமாக விளங்கினார். நகைச்சுவைத் துறை என்பது நாட்டு மக்களைச் சிரிப்பு மூட்டும் வெறும் வெட்டி வேலை என்ற நிலையை விட்டுக் கடந்து, நற்கருத்துக்களை மிக நயமாக நாகரிகமாகப் புகுத்தும் நிலை பிறந்து விட்டது என்பதை விளக்கும் சின்னமாக என்.எஸ்.கே. விளங்கினார்.

உண்ணும்போது சுவைதரும் பண்டம் பல, உண்டு முடித்த பிறகு நெடுநேரம் உமிழ்நீர் உள்ளே செல்லும் போதெல்லாம் சுவைதரும் பண்டம் சில. அத்தகைய நகைச்சுவையை நாட்டு மக்களுக்குத் தந்தார் கலைவாணர். எந்த ஒரு நடிகரும் மக்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்க முடியும், கைதட்டல்களையும், கவர்ச்சியான மாலைகளையும் பெற முடியும், நல்லதோர்ப் புகழையும் பெற முடியும், ஆனால் நம் கலைவாணருக்குக் கிடைத்த புகழுக்கும் மற்றவர்களுக்குக் கிடைக்கும் புகழுக்கும் வேறுபாடு உண்டு.

மக்களின் மன அழுக்கு நீங்க - மூட நம்பிக்கை அகல - குருட்டுப் பழக்க வழக்கங்கள் ஒழிய - தாழ்ந்த மக்கள் தன்னுணர்ச்சி பெற இதுவரை எந்த ஒரு நடிகரும் கலைவாணரைப் போல் பணியாற்ற முனைந்ததில்லை. இந்த நாட்டில் மட்டுமல்ல, மேலை நாடுகளிலும் கூட இப்படிப்பட்ட ஒரு கலைஞன் இருந்ததில்லை. கலைவாணர் தனி மனிதரல்ல, ஒரு சகாப்தம், தமிழ்நாட்டின் நல்முத்து, மலடி வயிற்றிலே பிறந்த மகன், புதையல் எடுத்த தனம், தென்னகத்துக்குக் கிடைத்த தேன் விருந்து, தமிழகம் தந்த கலைச்செல்வம், கதியற்றுக் கிடந்த தமிழ் மக்களைச் சீர்திருத்துவதற்காகத் தோன்றிய புத்தொளி !

இந்நிலையில் கலைவாணர் மலரில் இயக்குநர் தலைவர் டாக்டர் கே. சுப்பிரமணியம் எழுதிய ஒரு கட்டுரையில் நாம் அறியாத ஒரு தகவலை வழங்கியுள்ளார். இயக்குநர் கே.எஸ். தன் இல்லத்தைக் கலைவளர்க்கும் பண்ணையாகக் கொண்டிருந்தார். அவர் தந்த ஊக்கம் கலை மறுமலர்ச்சிக்குப் பேரொளியை - புத்தெழுச்சியை அளித்தது. 

அவரால் வளர்ந்த அவருடைய கலைமணிகள் என்று ஆயிரம் பேரைச் சொல்லலாம். கலை மேதையாக அவர் வாழ்ந்தார். நன்மக்கள் நாடறிந்த கலைச்செல்வங்கள் அவருடைய திருமகள் நாட்டியச்சிகரம் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் ஆவார். டாக்டர் கிருஷ்ணசாமி கலை, பண்பாட்டு, நாகரிக நிலைகளைக் கருத்துப்படங்களாக வழங்கிப் பெரும்புகழ் கொண்டவராவார்.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் உள்ளந்தரங்க தேசிய உணர்ச்சியும், அரசியல் பண்பாடும் என்னளவுக்குப் பிறர் அறிந்திருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்திருக்க முடியாதென்றே நான் நம்புகிறேன். இதில் ஒரு, வெகு ரசமான விஷயத்தை அவர் இறந்தபின் வெளியிடாதிருக்க என் மனம் இடம் தரவில்லை.

“நம் நாட்டில் எவ்வளவு கட்சிகள் இருந்தாலும், கட்சித் தலைவர்களுக்குள் எவ்வளவு மன வேற்றுமை இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி ஒருவன் தனக்கு உயர்வோ, புகழோ தேடிக்கொள்வது முறையல்ல ” என்ற சீரிய பண்பாட்டை அவரிடம்தான் நான் கண்டிருக்கிறேன்.

அந்தச் சமயம்தான் நமது முதல் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எங்களிடம் மிகவும் நட்பும் அன்பும் கொண்டவர்களும், பிரதமர் நேரு அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களும் ஆன திருமதி துர்க்காபாய் அம்மையார் அவர்களுக்குக் கலைவாணர் அவர்களின் சமூகச் சேவையில் அபாரமான நம்பிக்கை உண்டு.

சென்னை சட்டசபைக்குக் கலைஞர்களின் சார்பில் கலைவாணர் அவர்கள் போட்டியிட்டால் பிரதமர் நேருவின் ஆதரவும் கிடைக்கச் செய்யக்கூடும் என்று அம்மையார் அவர்கள் நம்பினார்கள். அதற்காகவே எங்கள் ரஷ்யப் பிரயாணத்தில் முதலிலே போட்ட திட்டப்படி பல வாரங்கள் அங்கே தங்காமல், அதற்கு இரண்டு வாரங்கள் முன்பாகவே எங்களை மாத்திரம் வந்து சேரும்படி சொல்லியிருந்தார்கள். 

அதனால்தான் துர்க்கா கோட்டே முதலிய வட இந்தியக் கலைஞர்கள் ருஷ்யாவை விட்டுக் கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்பாகவே கலைவாணரும் - நாங்களும் நாங்கள் மூவரும் கிளம்பி இந்தியா வந்துவிட்டோம். ருஷ்யாவில் கலைவாணர் பல விருந்துகளிலும் பேசும்போது தான் தேர்தலில் அபேட்சகராகச் சென்னையில் நிற்பதற்காகவே அவசரமாகத் திரும்ப வேண்டியிருப்பதை எடுத்துச் சொல்ல, அங்குள்ள பொதுமக்களும் அதற்கு ஆசி கூறி ஆரவார முழக்கம் புரிந்து அனுப்பினார்கள்.

நமது மதிப்பிற்குரிய டாக்டர் இராதாக் கிருஷ்ணன் அவர்களும் கலைவாணருக்கு அன்புடன் வாழ்த்து கூறி அனுப்பினார். நாங்கள் மாஸ்கோவிலிருந்து காபூல் வந்து சேர்ந்தவுடன், நாங்கள் வந்து சேர்ந்த அதே தினத்தில் பாகிஸ்தான் பிரதம மந்திரியாக இருந்த லியாகத் அலிகான் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனால் கைபர் கால்வாய்ப் போக்குவரத்து மூடப்பட்டுவிட்டது. 

ருஷ்யாவிலிருந்து அவசரப்பட்டுக் கிளம்பியும் கூட, காபூலில் நான்கு நாட்கள் தாமதிக்க நேரிட்டது. பிறகு அங்குள்ள இந்திய ஸ்தானிகரும் பாகிஸ்தான் ஸ்தானிகரும் கலைவாணர் தேர்தல் விஷயத்திற்கு அவசரமாய்ச் செல்ல வேண்டுமென்பதை நன்குணர்ந்து, பிரத்தியேகமான முயற்சி எடுத்து, தக்க இராணுவப் பாதுகாப்புகளுடன் எங்களைப் பிஷாவர் பிரதேசத்திற்கு அனுப்பினார்கள். அங்கிருந்து டில்லியும் வந்து சேர்ந்தோம். டில்லி வந்து சேர்ந்த உடனேயே துர்க்காபாய் அம்மையார் அவர்களுக்கும், அதுசமயம் வெளிநாட்டு இலாகா உபமந்திரியாக இருந்த டாக்டர் கேஸ்கர் அவர்களுக்கும் எங்கள் மரியாதைகளைச் செலுத்தி, அவர்கள் தலைமையிலேயே ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டி ருஷ்ய ஸ்தானிகர் அவர்களுக்கு, எங்களை சோவியத் அரசாங்கம் விருந்தினர்களாக அழைத்துச் சென்றதற்காக நன்றி கூறி ஒரு பெரிய வெள்ளிக் கேடயத்தையும் பரிசளித்தோம். 

அக்கூட்டத்திற்குப் பிறகு துர்க்காபாய் அம்மையார் அவர்கள், கலைவாணர் சென்னையில் அபேட்சகராக நிற்கும் விஷயத்தைப் பற்றி ஆலோசிக்கவும், ஆதரவு பெறவும் பிரதமர் நேரு அவர்களை இரவு 11 மணிக்குப் பிரத்தியேகப் பேட்டிகாண்பது என்ற ஏற்பாட்டைச் செய்து, கலைவாணர் அவர்களிடமும் என்னிடமும் தெரிவித்துவிட்டார்கள். அம்மையார் அவர்களும் எங்களுடன் கூட இருந்து பிரதமரிடம் விஷயங்களை எடுத்துச் சொல்லச் சம்மதித்தார்கள்.
 கலைஞர்களுள் சமூகச் சேவை செய்து சட்டசபையில் தகுதி அடையும் கலைஞர் ஒருவர் இருந்தால், அவர் கலைவாணர் அவர்களாகவே இருக்கவேண்டுமென்று நம்பினார்கள். 

அன்றைய தினம் மாலை என்.எஸ்.கே. அவர்களுக்குத் தமிழ் நாட்டிலிருந்து பல வரவேற்புக் கடிதங்களும், தந்திகளும் வந்து சேர்ந்தன. அவற்றில் திருச்சியிலுள்ள கலைவாணரின் முக்கியமான நண்பரிடமிருந்து ஒரு விளக்கமான கடிதமும் வந்திருந்தது. நாங்கள் ருஷ்யாவிலிருந்து திரும்புவதற்கு முன்னதாகவே - எந்தவிதமாகவோ கலைவாணர் சென்னையிலுள்ள ஒரு தொகுதியில் அபேட்சகராகச் சட்டசபைக்கு நிற்க எண்ணியிருக்கிறார் என்ற செய்தி பொதுமக்களிடையே பரவியிருந்தது. மேற்கூறிய திருச்சி அன்பர், கலைவாணர் தேர்தலில் நிற்பதை வரவேற்று எழுதினார். அத்துடன் திருச்சியில் இரண்டு தினங்கள் முன்பு ஒரு பொதுக்கூட்டம் நடந்தது பற்றியும், அதில் தமிழ்நாடு காங்கிரஸ் பிரதம தலைவர்களில் முக்கியமான ஒருவர் பேசியதையும் குறிப்பிட்டிருந்தார்.

சென்னையிலிருந்து ஆகாய விமானத்தில் பிரதமருக்குக் கொடுப்பதற்காக ஜரிகை மாலையும் வந்திருந்தது. ஆனால் இரவு ஒன்பது மணி சுமாருக்கு, திடீரென்று கலைவாணர் என்னைக் கூப்பிட்டு, “ நாம் இன்று பிரதமரைப் பார்க்கப்போகிறதில்லை. நாளை காலையில் சென்னைக்குப் பிரயாணமாகிவிடுவோம். விமான டிக்கட் வாங்க ஏற்பாடு செய்துவிடுங்கள் ! ” என்றார். இது மாதிரியான சமயங்களில் அவரை உடனடியாகக் காரணம் சொல்லும்படி கேட்டால், அவர் சொல்லுகிற வழக்கமில்லை. அதனால் ஏதும் கேட்கவில்லை. பிறகு அவர், நாங்கள் தங்கியிருந்த போர்டிங் ஹவுஸ் நாராயண ஐயர் அவர்களின் குழந்தை ‘அம்புலு'வுடன் ‘பதினைந்தாம் புள்ளி’ ஆடிக்கொண்டு காலத்தைக் கழித்தார். நான் மெதுவாகப் பத்து மணி சுமாருக்கு அவரிடம் மெல்லக் கேட்டேன்.

“ துர்க்காபாய் அம்மையார் அவர்களிடம் நாம் ஏதாவது காரணம் சொல்ல வேண்டாமா ? அவர்கள் காத்திருப்பார்களே!” என்று சொன்னேன். “ நாம் எந்தக் காரணத்தைச் சொன்னாலும் அம்மையாருக்குச் சரியாகப்படாது. அவரிடத்தில் காரணம் சொல்லுவதில் பிரயோசனம் இல்லை. உங்களைப் பற்றி அவர் தப்பாக எண்ண வேண்டாம். என்ன செய்வது! என்.எஸ்.கே. திடீரென்று பிரதமர் பேட்டிக்கு வரமாட்டேன் என்று சொல்லுகிறார். மன்னித்து விடுங்கள் ! என்று நீங்களே சொல்லிவிடுங்கள். சரி, என்.எஸ்.கே. ஒரு கிறுக்கு! என்று எண்ணிக்கொள்வார்களே ஒழிய உங்களைப் பற்றி ஏதும் குறையாக எண்ண மாட்டார்கள் என்றார்.” நான் மெதுவாக, “என்னிடத்திலாவது காரணத்தைச் சொல்லக்கூடாதா?” என்றேன். அதற்கு அவர், “உங்களிடத்தில் நான் காரணத்தை இப்போது சொன்னால் உங்கள் வாதத் திறமையைக் காட்டி, என் மனதை மாற்றப் பார்ப்பீர்கள்! என் மனதை நான் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. நாளை விமானத்தில் போகும்போது காரணத்தை உங்களுக்குச் சொல்லுவேன்!” என்று கூறிவிட்டார்.

உடனே நான் துர்க்காபாய் அம்மையாரிடம், டெலிபோன் மூலம் விஷயத்தைச் சொல்லி, மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். என் அவர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது என்று நினைக்கிறேன்.
 “இதுபோல் பிரத்தியேகமான பேட்டி கிடைப்பது மிகவும் அரிது. ஒவ்வொரு அரசாங்க மந்திரிகள் கூட அவரிடம் பேச மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன இப்படிச் செய்துவிட்டார்களே.. என். எஸ். கே. ! ” என்று மிகவும் வருந்தினார்கள்.

மறுநாள் விமானத்தில் செல்லும்போது என்.எஸ்.கே. விபரமாக இந்த விஷயத்தை விளக்கிக் கூறும்போது உலகத்தில் இப்படிப்பட்ட பண்புடைய, மனித உணர்ச்சியுடைய ஒருவர் இருப்பது சாத்தியமா ? என்று நான் ஆச்சரியப்பட்டேன் ! அவர் கலைவாணர் சொன்னவற்றை என் நினைவுக்கு எட்டிய மட்டில் அப்படியே வரைகிறேன்: 
“நான் தாஜ்மஹாலைப் பற்றிப் புத்தகங்களில் படித்துப் படங்களிலும் பார்த்து என் மனக்கண்ணில் ஒரு பிரமாதமான சித்திரம் - அமைத்துக்கொண்டிருந்தேன். நான் இந்தத் தடவை தாஜ்மஹாலை நேரில் போய்ப் பார்த்தவுடன் என் மனக் கோட்டைக்கும் அதற்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருந்தது. “அடடா! நாம் ஏன் தாஜ்மஹாலை நேரில் போய்ப் பார்க்கப் போனோம்?” என்றே என் மனம் வருந்திற்று. பண்டித நேரு அவர்களை நான் பார்க்காததற்கு இதுவும் ஒரு காரணம். எனக்கோ அவரை நேரில் தெரியாது. துர்க்காபாய் அம்மையாரிடம் அவர் வைத்திருக்கும் மதிப்புக்காக நமக்குப் பிரத்தியேகப் பேட்டி அளிக்க இசைந்துள்ளார். 

அம்மையார், மேலும் மேலும் நமக்காகப் பேசுவதை முன்னிட்டு ஒருவேளை நேரு அவர்கள் தேர்தலில் எனக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் வாக்கும் அளித்து விடலாம். ஆனால் நான் ஊர் திரும்பிய பின் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். உலகிலேயே ஏசுநாதர், புத்தர், மகாத்மா காந்தி இவர்களைப் போல் மனிதன் இருக்கிறான் என்றால் அவர் பண்டித நேருதான் என்று என் மனதில் தீர்மானமாக வைத்திருக்கிறேன். என் இதயத்தில் என்றும் பண்டித நேரு ஒரே விதமாக இருக்க வேண்டும். அந்த ஸ்தானத்திலிருந்து நான் அவரைத் தாழ்த்தவே கூடாது. எனக்குத் தேர்தல் வேண்டியதில்லை; பிரச்சாரம் வேண்டியதில்லை; சட்டசபைப் பதவியும் வேண்டியதில்லை!” என்று கூறி முடித்தார் கலைவாணர்.

இந்த உண்மையை யாருமே அறியமாட்டார்கள். எதிர்க் கட்சியானாலும், எதிர்வாதம் செய்பவர் ஆனாலும் அவர்களிடமும் அவருக்கு அன்பும் இரக்கமும் உண்டு. "காந்திஜியின் அன்பான மொழிகளைப் போல நான் பரிகசிக்கும் விஷயங்களையும் ஓர் அன்பின் அடிப்படையிலேதான் செய்கிறேனே தவிர எனக்கு விரோத மனப்பான்மை கிடையாது!” என்று அவர் (கலைவாணர்) அடிக்கடி சொல்லுவதுண்டு. இத்தகைய விருப்பு வெறுப்பு அற்ற கலைவாணரை, இந்நாடு என்றென்றும் மறவாது என்பது உறுதி.

(‘ நடிகன் குரல் - கலைவாணர் மலர்’, 30-9-1957 )
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை...

- ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamiz...@gmail.com
----

தேமொழி

unread,
Jan 16, 2021, 10:54:03 PM1/16/21
to மின்தமிழ்

தினசெய்தி நாளிதழில் 11.1.2021  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 68)

“‘நீண்ட தமிழால் நெஞ்சில் நின்றவர்!’”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


புரட்சித்தலைவரின் பொன்மனத்தில் மாறாத மதிப்புடன் போற்றப்பெற்ற அரசியல் தலைவர்களிடையே தனிச் சிறப்பைப் பெற்றிருந்தவர் நாவலர் தான். நாவலருடைய நூற்றாண்டுக் கடந்த நினைவு கூரும் நல்லாண்டாகத் தைத்திங்கள் பிறக்கிறது.

"அகலாது அணுகாது" என்ற தொடருக்கு விளக்கம் தருபவராக எந்நிலையிலும் எவரிடத்திலும் அவையறிந்து நின்ற தகைமை அணிகலனாக இருந்தது. தன் நெஞ்சில் பட்டதை அஞ்சாமல் ஒருமுறை கூறுவார், மறுப்பு வந்தால் விடையளிப்பார் - விளக்கம் கேட்பார் - பிறகும் பிடிவாதமாக நின்றால் மெல்லிய அவலத்தோடு இசைவார்.

பொருந்தாதவர்கள்,திருந்தாதவர்கள் பலராக இருக்கும் நிலையில் நான் வருந்தாத நாளில்லை, இப்படித்தான் உலகியல் உள்ளதென்று மனம் நிறைவடைய வேண்டியுள்ளது. முத்தமிழ்க்காவலர் திருமண விழாக்களில் அறிவுறுத்தியவாறு "அடக்கிப்பார்" , இல்லை என்றால் " அடங்கிப்போ " என்பதையும் நாவலர் அடிக்கடி சொல்வதுண்டு.

மூட நம்பிக்கையை வெறுப்பதிலும் பழம்போக்குகளைப் பழிப்பதிலும் தந்தை பெரியாரின் தன்மான உணர்வில் எப்போதும் தளராமல் நிற்பதும், வெண்தாடி வேந்தர் படையில் வெற்றியுலா நடத்திய இளந்தாடி ஏந்தலாக- எழுச்சி வீரராக - மேடைப் புயலாக நாவலர் ஒளிர்ந்தார்.  மேடைத்தமிழில் நகைச்சுவை நிறமும் - உடல் மொழியும் பூசி அவர் உரையாற்றியதை நாடு உச்சிமேல் வைத்து மெச்சியது .என்றும் நாவலர் பேச்சை - ஆர்ப்பாட்டப் போர்ப்பட்டை ஆரவாரத்துடன் மக்கள் கேட்டு மகிழ்ந்தார்கள்.

சும்மா , அதெல்லாம் எதற்கு ஏன் , என்று கேட்கலாமா ! என்று வாழும் மக்களின் நிலையை விரிவாக நையாண்டியாகச் சுட்டிக் காட்டும் போது அவை குலுங்கும்.  பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது ," சிறுத்தையே வெளியில் வா ! பேரன்பு கொண்டோரே ,பெரியோரே பெற்ற தாய்மாரே, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் முதலிய புரட்சிக்கவிஞரின் கனல் வரிகளுக்குத் தன் காந்தக் குரலால் புது மெருகேற்றிய பெருமை நாவலருக்கு மட்டுமே அமைந்திருந்த நயப்பாடாகும்.

ஊது ஊது சங்கே என்ற ஒலி எங்கே கேட்டாலும் நாவலரின் நிமிர்ந்த தோற்றமும் ,நேர்கொண்ட பார்வையும், நெடுங்கடல் ஆரவாரமும் எவர் நினைவையும் விட்டு நீங்கா ...

மாணவ நிலையிலேயே பல்கலைக்கழக மாமன்றங்களில் வரவேற்பாகவும் - நன்றியுரையாகவும் அவர் தீட்டி வந்த சொல்லோவியங்கள் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்து, அவருடைய பேச்சாற்றலின் பெருமையை அப்போதே அனைவரும் உணருமாறு செய்து வந்தன. பல்கலைக்கழகத்தில் வேறு மன்றங்கள் பல இருந்தாலும் அவற்றுள் தமிழ்மன்றமே அவர் காலத்தில் தலைசிறந்து விளங்கியது. துணைவேந்தரும், மற்ற துறைப்பேராசிரியர்களும் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளில் கலந்து களிக்கும் காலமாக அப்போது போற்றப்பெற்றது.

நாவலர் பேச்சு ஒரு தனிப் பாங்குடையது. தமக்கெனத் தனியே உரியதான ஒரு தனித்திறத்தோடு அவர் பேசுவார். செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பழமொழிக்கிணங்க அவர் மாணவராக இருந்த காலத்திலேயே, கேட்டார்ப் பிணிக்கும் தகையதாய்க் கேளாரும் வேட்ப மொழிகின்ற ஆற்றல் படைத்திருந்த அவர் பின்னர் நாளாக நாளாக மட்டில்லாத வகையில் பேச்சு வளமை பூண்டு விளங்கலானார்.

இன்றும் அவரது பேச்சைக் கேட்பதற்காகவே பல்லாயிரக்கணக்கானோர் ஆவல் கொள்ளும் பான்மையில் அவர் பேச்சு அமைந்திருக்கின்றது. எடுத்தலும், படுத்தலும் விரவிய அவர்தம் குரல்வளம் எல்லோர் உள்ளத்தையும் களிப்பிக்கும் பெருமையினதாகும்.  அடுக்கடுக்காகத் தொடர்ந்து சொற்களை அமைத்துக் கொண்டே வந்து கேட்பவர் வியக்கும் வண்ணம், அழகு மிளிர முடித்து மகிழ்விப்பார் என்று சிதம்பரத்தில் நகராட்சி ஆணையராக அப்போது பணியாற்றிய ஆட்சிமொழிக்காவலர் வரைந்த குறிப்பு எப்போதும் நினைக்கத்தக்கது .

‘வாகீச கலாநிதி’ கி வா ஜ நாவலரைப் புகழ்ந்த பாராட்டுரை தான் எனக்கு இக்கட்டுரைக்குத் தலைப்பாகவே அமைந்தது. “நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் '' என்று கம்பன் அகத்தியரைப் பற்றிச் சொல்வான். அங்கே தமிழை ‘ நீண்ட தமிழ் ' என்கிறான் என்பதை நினைக்கும் போது எனக்கு ஒரு தமிழருடைய நினைவு வருகிறது. அவர் உருவத்திலும் நெடியவர்; பெயரிலும் நெடியவர்; பேச்சிலும் நெடியவர்.

நாவலர் நெடுஞ்செழியனாரைத் தான் சொல்கிறேன். தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை, நீர்மை, மென்மை என்ற பொருள் உண்டு. அந்த மூன்றையும் நாவலர் தமிழில் காணலாம். 'அதோடு நெடுமையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும், அவர் பேசுவது நீளும் தமிழ்; குலுங்கும் தமிழ் ; இனிய தமிழ் ' என்று எழுதினார் .

ஆலையில் கரும்பை அழுத்திப் பிழிவதைப் போல எழுத்தையும் கருத்தையும் அழுத்தம் திருத்தமாக அவர் எடுத்துப் பேசிய அழகுக்குச் சில தொடர்களைக் காணலாம்.

கவிஞனும் - புரட்சிக்கவிஞரும்
எதற்கும் அஞ்சாமல், விளைவைப் பற்றிக் கவலைப்படாமல், உண்மையைத் துணிவுடன் வெளியிடுபவன் தான் உண்மையான கவிஞன் ஆகிறான்.  சிந்தையால், சொல்லால், செயலால் எதற்கும் அச்சப்படாமல், பணியாமல், வளையாமல் நெளியாமல், விழாமல் சாயாமல் உள்ளதை உள்ளபடியே எடுத்துச் சொன்னவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆவார்.

வேலைக்காரியும் - வீட்டுக்காரியும்
வேலைக்காரி நம் வீட்டுக்கு வருகிறாள். நமக்கு வேண்டிய வேலையைச் செய்து விட்டுத் தன் வீட்டுக்குப் போய்விடுகிறாள்.  பிற மொழிகளை நாம் வேலைக்காரியை நடத்துவது போல நடத்தவேண்டும். நமக்கு வேண்டிய வேலையை வாங்கிவிட்டு, வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும்.  தமிழ்மொழி நம் மனைவியைப் போல் இருக்கிறது. நம்மோடு ' எப்போதும் கூடவே இருக்கவேண்டும் . நம் மடிமீது கூட நம் மனைவி அமரலாம் . ஆனால், வேலைக்காரியை அப்படி உட்கார வைக்க முடியாது.

அறிவியல் அறிவு போதாது
நம்முடைய நாட்டிலுள்ள படித்த பட்டதாரிகள் பலரிடையே 'விஞ்ஞான அறிவு' ( Scientific Knowledge) இருக்கிறது.  ஆனால், “அறிவியல் அணுகுமுறை ( Scientific approach) இல்லை . சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் எப்படி ஏற்படுகின்றன என்று மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் விஞ்ஞான ஆசிரியர்களே, தங்கள் சொந்த வாழ்க்கையில் அவற்றிற்கு மாறாக மடமையாளர்களாக இருக்கிறார்கள்.

'சும்மா' என்னும் சொல்
நம்முடைய நாட்டில் பலர் சும்மாவே இருக்கிறார்கள். “ ஏன் வேலையில்லையா ? " என்று கேட்டால், சும்மாதான் இருக்கிறேன் என்கிறார்கள்.  வெளியூருக்கு எதற்காகச் சென்று வந்தீர்கள் ? ” என்று கேட்டால், “ சும்மா தான் போய் வந்தேன் '' என்று சொல்கிறார்கள்.

நண்பரோடு என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் ” என்று கேட்டால், “ சும்மா தான் பேசிக் கொண்டிருந்தேன் ; என்று கூறுகிறார்கள்.  இப்படி எதைக் கேட்டாலும் சும்மா, சும்மா ' என்றே நம்முடைய நாட்டவர்கள் சொல்வதை நீங்கள் பார்க்கலாம். எனக்குக் கூட ஓர் ஐயம், இந்த வார்த்தை அகராதியில் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன்.   'சும்மா ' என்ற வார்த்தையே அகராதியில் இல்லை. அதற்குச் சமமான சொல்லாவது இருக்கிறதா என்று சொற்களஞ்சியம் போன்றவற்றில் தேடிப் பார்த்தேன். அதிலும் இல்லை. ஏனென்றால் சும்மா என்ற வார்த்தையே அமெரிக்காவில் இல்லை. ஏனென்றால், அங்கே எவனும் சும்மாவே இல்லை .

ஒரு முறை அண்ணா சொன்னாராம் " நாவலர் பேச்சைக் கேட்டு நிஜமாகவே சிறுத்தை கதவைத் திறந்து வந்துவிடப் போகிறது, ஏனென்றால் கூப்பிடும் தூரத்தில் தான் இந்த ஊரில் சர்க்கஸ் நடந்து கொண்டிருக்கிறது" என்றார்,  நாவலர் சொற்களிலேயே குறிப்பிடவேண்டுமென்றால் பொங்கும் உணர்ச்சியோடு "வலிவோடும், பொலிவோடும், எழுச்சியோடும் ,உணர்ச்சியோடும், ஆக்கத்தோடும் ,ஊக்கத்தோடும் , தெளிவோடும்,திட்பத்தோடும், அறிவோடும் ஆற்றலோடும்" என்று அவர் அடுக்கிக் காட்டியதை இளைஞர்கள் கேட்டுக் கிறுகிறுத்துப் போனார்கள்.

உணர்வுப்பிழம்பாக உரையாற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நாவலரின் நாவன்மையைப் பற்றிப் பாராட்டிக் கூறியதையும் நினைவு கூர்கிறேன் .

'நாவலர்' என்றால் நாவன்மை படைத்தவர் என்று பொருள். சொல்வல்லார் அனைவரையும் குறிக்கும் பொதுச்சொல் அது.ஆனால் தமிழ்கூறும் நல்லுலகில் ‘நாவலர்' என்றால் அது நடமாடும் பல்கலைக்கழகமென நம் அண்ணா போற்றியது நமது நாவலரை மட்டுமே குறித்து நிற்கும். அந்தச் சொல்லுக்குச் சொந்தக்காரர் அவர் ஒருவரே. அச் சொல்லுக்குப் பெருமை சேர்த்தவரும் அவரே.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்று அவர் முழங்கும்போது நாடே முழங்குவது போல அது எதிரொலிக்கும்.  நடை மிடுக்கும், நகைச்சுவை - எடுப்பும், மோனை எதுகைகளில் மூழ்கித் தோய்ந்து மொத்தமாய்க் கலந்து மெத்தச் சுவைக்கும் அவரது பேச்சும் நாட்டோரைக் கவர்ந்தது. அவருக்கு நீடுபுகழ் சேர்த்தது.

கவியரசர் புலவர் இளஞ்செழியன் நாவலருக்கு மணிவிழா மலரை ஈடில்லாத முத்துமலராக வடிவமைத்ததால் "மலர் மாமணி" என்றே அவரைத் தமிழகம் அழைத்தது.  ஒப்பரிய கவிதைகளாலும் - உயரிய கட்டுரைகளாலும் - கண்ணைக்கவரும் ஒளிப்படங்களாலும் மலரை எழில் மலராக - எண்ணக் குவியலாக - மணியாரமாகவே தொடுத்த திறமையைக் கண்டு அரசியல் தலைவர்கள் பலர் மலர் வெளியிட விரும்பிய பொழுது புலவர் இளஞ்செழியன் அமைத்த மலர் போல என்று தான் எடுத்துக்காட்டி அறிவுறுத்துவார்கள்.

பக்கத்துக்குப் பக்கம் கவியரசரின் கைவண்ணம் நாவலரை மதித்துப் போற்றியபடியே இழைத்து வழங்கிய பளிங்குப்பேழையாக அமைந்தது. சீர்திருத்த மனமும் - சிக்கனப் போக்கும் கொண்ட நாவலர் நிதியமைச்சராகத் திகழ்ந்தபோது நானும் தலைமைச் செயலகத்தில் செயலராகப் பணியாற்றியிருக்கிறேன்.  முத்தமிழறிஞர் கலைஞரும் , புரட்சித்தலைவரும் ஒரே முகமாக ஒரு கருத்தை வேறுவேறு காலங்களில் கூறினார்கள்.  நமக்கு எதிர்க்கட்சியே வேண்டாம் , நாவலர் ஒருவரே போதும் , நம்மை எதிர்ப்பதற்கு என்று பாராட்டுகின்ற வகையில் எதற்கும் நேர்மையாக மறுத்து நின்ற அவரது போக்கை நினைத்துக் குறிப்பிட்டார்கள்.

நிதியமைச்சருக்கு ஏதேனும் கோப்பு சென்றால் அதுவும் நிதி கேட்டுச் சென்றால் நாங்கள் கதிகலங்கி விடுவோம்.  அத்தனை கேள்விக்கணைகள் .அவர் எழுத்தும் கூட நிமிர்ந்து நிற்கும் ,.குறைந்தது பத்து வரிகளாவது தம் கைப்பட குறிப்புரை எழுதியிருப்பார்.  

ஒரு மாநிலத்திலிருந்து தமிழ் மன்றத்துக்கு நிதி நல்கை கேட்டிருந்தார்கள்.  என்னளவில் பரிந்துரைத்து அனுப்பினேன்.  வளர வேண்டிய இந்த இடத்திலேயே வளரவில்லை .இதிலென்ன அடுத்த மாநிலத்துக்கு நிதி நல்கை , ஏற்கவே முடியாது , வந்து பேசுக! என்று எழுதியிருந்தார்.  சென்று பேசினேன். நிதியமைச்சர் ஏற்க முடியாது என்று கூறிவிட்டார்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை....

- ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamizhavvai[at]gmail.com

------

தேமொழி

unread,
Jan 20, 2021, 12:17:14 AM1/20/21
to மின்தமிழ்


தினசெய்தி நாளிதழில் 11.1.2021  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 69)

“‘பதற்றமில்லாத பண்பாளர்!’”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

நாவலர் எப்படித் தமக்கு வந்த கோப்பினை ஆராய்ந்து முடிவு கட்டினார் என்பதற்கு மேலும் சில சான்றுகள் நினைவில் நிற்கின்றன .

" பெயர் குறிப்பிடப்பெற்ற நால்வரும் இலண்டன் மாநகர் சென்று சிலை கடத்தல் வழக்கில் அரசின் சார்பில் பங்குபெற வேண்டியுள்ளது , செலவை ஏற்க இசைவுக்குப் பணிந்தனுப்புகிறோம் " என்பது மற்றொரு கோப்பு .

நால்வர் சென்று திரும்பும் செலவுக்கு இங்கிலாந்து நீதிபதியை இங்கே வரவழைத்து வழக்கை முடித்துவிடலாம் , இரண்டு நிலையிலும் எந்தச் செலவு குறைவோ அதற்கு மட்டும் இசையலாம் என்று கோப்பு திரும்பி வந்தது .

கிள்ளித்தருபவர் நிதியமைச்சர் ஆனால் அள்ளித்தருபவர் முதலமைச்சர், பிறகு அந்த நால்வரும் மூன்று முறை சென்று திரும்பினர் .

ஒருமுறை என்ன அண்ணா ! எதற்கும் இல்லை என்று எழுதி விடுகிறீர்களே , எங்களுக்கு அச்சமாக இருக்கிறது என்று பணிவோடு சொன்னேன் , என்னை ஏற இறங்கப் பார்த்தார் , இது மக்கள் பணம் , ஒவ்வொரு காசையும் சுண்டிப் பார்த்துத் தான் செலவிடுவதைப் பற்றி முடிவு செய்வேன் என்றார் .

ஆமாம் , நீ தமிழ் படித்திருக்கிறாயே பழைய ஒளவைப் பாட்டி எனக்கு ஒரு பாட்டை நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறார் .என்று அந்த வெண்பாவை அவிநயத்தோடு சொல்லிக் காட்டினார் .

"வாதக்கோன் நாளை என்றான், வையக்கோன் பின்னை யென்றான்
ஏதக்கோன் யாதொன்றும் இல்லை என்றான் - ஓதக் கேள்
வாதக்கோன் நாளையினும் வையக்கோன் பின்னையினும்
ஏதக்கோன் இல்லை இனிது "

இந்தப் பாடலை நிதிச் செயலாளராகத் திகழ்ந்த அறிஞர் குகன் இ ஆ ப - நிதித்துறையின் கருத்தரங்கக் கூடத்தில் எழுதி வைத்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன் .

முத்தமிழறிஞர் கலைஞர் நான் கோரிக்கை ஆற்றைக் கடப்பதற்குக் குகன் தான் படகோட்ட வேண்டும் என்று ஒருமுறை நயமாகக் குறிப்பிட்டார்.

ஒருமுறை புரட்சித்தலைவர் ஒரு காகிகத்துண்டைக் காண்பித்து விட்டுப் படியுங்கள் என்றார். தமிழ்த்தாய் வாழ்த்தினை இசைக்க மறுத்த இசையரசிக்கு இந்த நல்கை வழங்க இசையலாமா என்று தங்கள் இசைவைக் கேட்கிறேன், புரட்சித்தலைவர் கைக்குட்டையை வாயில் வைத்துக்கொண்டு ஒரு இசைக்கு நாலு இசை எழுதி வேண்டாம் என்று நாவலர் சொல்லப்போகிறார், நல்ல நிதியமைச்சர் என்றார் .பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை .

உரைவேந்தர் தம் மாணவர் என்ற பெருமிதத்தோடு பொன்விழாவில் வரைந்த கட்டுரையில் வரைந்த பகுதிகளைக் காணலாம் .ஆசிரியர் - மாணவர் உறவுக்கு இது சான்றாகும் .

நெடுஞ்செழியனார்க்குப் பொன்விழா என்ற செய்தியை அறிந்ததும் என் முதுமையுள்ளம் பெருவியப்பில் ஆழ்ந்தது. அவரை நினைக்கும் போதெல்லாம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வகுப்பில் " கடாஉருவும் கண்ணஞ்சா " நெஞ்சமும், தெள்ளிய செந்தமிழ் வழங்கும் செந்நாவும், சிவந்து தோன்றும் செம்மல் மேனியும் பீடுநடையும் கொண்டவுருவமே என் மனக்கண்ணில் தோன்றுவது வழக்கம்.

இன்ப இளஞாயிறுகளான புலவர் கோவிந்தனார், நாவலர் நெடுஞ்செழியனார், மதியழகனார், மாதவனார் ஆகிய இவர்களை இதனை எழுதுங்கால் என் மனக்கண் முன் கொணர்ந்து நிறுத்துகிறது.

இவர்களுடைய கூர்த்த நோக்கமும் சீர்த்த முகமும் அன்று பார்த்த இளமை வளமே கொண்டு என் முன் தோன்றி இன்பம் செய்கின்றன.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியவர்கள் அன்று கோவை மாநாட்டில் " மணிப்பயல் '' என்று மன மகிழ்ந்து பாராட்டிய என் சிறு செந்நா '' இப்போதும் அதனையே கூறி மகிழச் செய்கிறது. அன்று என் உடன் இருந்து என் கருத்திற் பங்கு கொண்டு உவகை மீதூர்ந்து " நீங்கள் பல மாணவரை அறியும் ஆசிரியர் '' என்றார்க்கு, “ இந்த மணிப்பயலால் நம் தமிழகம் சிறந்து ஒளிபெறும்; இவனைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்க்க வேண்டும் ” என்று தமிழ்த்தாய் எனக்குள் உணர்த்த யான் அறிஞர் அண்ணாவின் துடையை நன்கு தட்டி வற்புறுத்தினேன்.

மணிப்பயலின் தமிழ் நாட்டரசு மாட்சியை நெஞ்சு கலங்கிக் கண்ணீர்க் கண்களை, மறைக்கினும் துடைத்துக் கொண்டு சொல்லுகிறேன் அறிஞர் அண்ணா இன்று இருந்து காண்டல் வேண்டும்; அவரது கருத்துரையைக் கேட்கும் தவப்பேறு யான் இல்லாதவனாயினேன்.

மிடுக்கான தோற்றமும் கள்ளமில்லாத உள்ளப் பொலிவும், தெளிந்த நாநலமும் உடையவராய் பொன்போன்ற மேனியராய், “ அறக்கட்டளையின் மாண்புகளை முன் மொழிந்து பின்னை அதன் சார்பில் அழைத்தது அவர் ஒரு சிறந்த நாவலராவர் என்பதை வற்புறுத்திற்று. பல்கலைக் கழகத்தின் நீங்கிய சில்லாண்டுகளில் அவர் இயற்பெயர் முன்னர் நாவலர் என்ற சிறப்புப் பெயர் சேர்ந்து கொண்டது ; இன்று “ நாவலர் '' என மொழியின் தமிழ்நாடு முழுவதும் அச்சொல் இரா. நெடுஞ்செழியனைக் குறிப்பது தொடக்கப் பள்ளிச் சிறுவர்  சிறுமியரிடத்தும் நன்கு தெரிந்திருக்கிறது.

பின்பு, அவர் புது மணவாளராய்த் தமது துனைவி திருமதி விசாலாட்சியம்மை யாருடன் '' சோழவந்தான் புகை வண்டி நிலையத்தில் நான் இருந்த பெட்டியில் வந்து அமர்ந்தார். அவரவர் நலங்களை அளவளாவி மகிழ்ந்திருக்கையில் எதிரில் இருந்தவர் பேச்சுக் கொடுத்தார். அவர் வேலூர் மாவட்டக் கூட்டுறவுத் தலைமை யலுவலகத்தவர் என்று அறிமுகம் செய்து கொண்டு சமயச் சார்பாகச் சில கருத்துக்களை வினவத்தலைப்பட்டார். நெடுஞ்செழியனார் அவர்க்கு விடை கூறித் தாம் வேறு வினவத் தொடங்கியதும் அக்கூட்டுறவுத் தலைமையலுவலர்க்கு விடையிறுக்கும் திறம் குறையலுற்றது.

அதனால் அவர் “ அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நாத்திகம் தானே வளர்க்கிறது; வேறு என்ன செய்கிறது ? '' என வெகுண்டார். அப்போது நன்கு சிரித்த நெடுஞ்செழியனார், மிக்க பரிவுடன் உங்கட்கு நாத்திகம் ஆத்திகம் என்ற இரண்டும் நன்கு விளங்க வேண்டும்; என்று சொன்னதும் அவர் அயர்ந்துவிட்டார்.என் ஆசிரியர் ஒளவை எனக்குக் கற்றுத்தந்தது சைவ சித்தாந்தம் .  முடிவில் அவர் நாவலர் சொல்வதை அமைவுறக் கேட்பவராகி, " இன்றைய சமயம் மக்களின் அறியாமை மேல் நிற்கிறது ; அறிவாராய்ச்சி தோன்றிப் பரவும் போது நமக்கு சீர்திருத்தத் தெளிவு பிறக்கும் " என்றது அவரது நா நலத்தை நான் கண்டு மனம் மகிழ்ந்து வியக்கச் செய்தது.

அறிஞர் அண்ணாவின் அருமந்த அமைச்சரவையில் நாவலர் நல்ல கல்வியமைச்சரானார். மதுரைத் தியாகராசர் கல்லூரியில அவர் உரை நிகழ்த்திய போது அரசியல் எந்திரத்தை ஒரு குதிரை வண்டியாகவும் அமைச்சரவையை அதனை ஓட்டுவோனாகவும் உருவகம் செய்தது இன்றைய அரசியலமைப்பை மக்கள் நன்கு உணர்ந்து மகிழச் செய்த துடன் அவருடைய நா நலம் கிளர்ந்து நின்று இன்பம் செய்தது.

புரட்சித்தலைவர் நாவலரைப் போற்றிய நலத்திற்காக இக்கட்டுரை நீண்டது - புரட்சித்தலைவர் வரைந்த கட்டுரையை நாம் இனிக் காணலாம் ...

பேரறிஞர் அண்ணா அவர்களாலேயே ' நடமாடும் பல்கலைக்கழகம் ' என்று அழைக்கப் பெற்றவர் நமது மதிப்பிற்குரிய நாவலர் அவர்கள் !

பகுத்தறிவுப் பகலவன் - சீர்திருத்தச் செம்மல் நமது அய்யா அவர்களின் நூற்றாண்டு விழா ஆண்டிது. இந்த ஆண்டில் வருகின்ற நாவலர் அவர்களின் பிறந்தநாள் விழாவானது - அதனையொட்டி அமைகின்ற மணிவிழாவானது வேறு எந்த ஆண்டின் விழாவிலும் நனிசிறந்து அமைவதாகும்.

அறியாமை இருள் அகன்றிட, அறிவு ஒளி பரவிட, வளம் பெருகி வறுமை நீங்கிட, துன்பம் போக, இந்நாட்டு மண்ணில் இன்பம் மிக, வாட்டம் நீங்கி வாழ்வு மலர, அய்யா அவர்கள் சுயமரியாதைச் சுடர் கொளுத்திக் குரல் கொடுத்த நேரத்தில், அப்பெரியாரின் பாசறையிலே இளந்தாடி வேந்தராக -- பாசமிகு நல்தொண்டராக விளங்கியவர் தாம் நமது நாவலர் அவர்கள் !

பேரறிஞர் அண்ணா அவர்கள் நாவலர்தம் அறிவுக்கு - ஆற்றலுக்கு -- உழைப்புக்கு நேர்மைக்கு - - நாணயத்திற்கு ஒழுக்கத்திற்கு - உயர்விற்குஅன்புக்கு அடக்கத்திற்கு என்றுமே பெரும் மதிப்பளித்து வந்தார்கள்.

அந்தக் காரணத்தினால்தான் 1956 மேத் திங்களில் நடைபெற்ற திருச்சி மாநில மாநாட்டிலே தாம் வகித்துவந்த பொதுச்செயலாளர் பொறுப்பினை நாவலர் அவர்களுக்கு அளித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் அகமகிழ்ந்த
“ தம்பி வா, தலைமை ஏற்று நடத்த வா ! உன் ஆணைக்கு நாங்கள் எல்லோரும் அடங்கி நடப்போம் ! '' என்று குறிப்பிட்டார்கள்.

அப்படி மனப்பூர்வமாகத் தாம் சொன்னதைப் பிற்காலத்தில் எவரேனும் திருத்திச் சொன்னாலும் சொல்லக்கூடும் என்ற காரணத்தாலோ என்னவோ மறுநாள் நிகழ்ச்சியின்போது அண்ணா அவர்கள் அதுபற்றிய விளக்கமும் தந்தார்கள் :

'' நேற்று நான் நமது பொதுச்செயலாளரை தம்பி வா ! தலைமை தாங்க வா ! உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறேன் வா ! '' என்று கூறியது வெறும் அலங்காரத்திற்காக அல்ல. அந்த நிலை, நம்முடைய கழகத்தில் கொண்டு வருகிறது. அது மேலும் வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய உண்மையான நம்பிக்கை. அப்படி வளர்ந்தால்தான் நம்முடைய நல்ல சனநாயகப் பண்போடு திகழ முடியும் ! '' என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

அந்தப் பெரிய இதயத்தாலே இப்படிப் போற்றிப் புகழப்பட்ட நான் அவர்களை இன்றைய தினம் நாம் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பெற்றிருக்கிறோம். இந்தக் காரணத்தாலோ... நாம் நம்மோடு எல்லாச் சீரும் சிறப்பும் பெற்றிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.

1939 - ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக இடைநிலை வகுப்பு மாணவராகப் பயின்ற பட்டுக்கோட்டை இரா. நாராயணசாமி அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைப் பிரச்சாரத்தாலே கவர்ந்திழுக்கப்பட்டு, அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி அவர்களின் வாதத்திறத்தை அடியொற்றி நடந்து, 'நெடுஞ்செழியனாகி ', மண்டும் மதங்கள் அண்டா நெருப்பாய் படரும் சாதிப் படைக்கு மருந்தாய்- செந்தமிழ்த் தேனீயாய்பைந்தமிழ்த் தேர்ப்பாகனாய் வளர்ந்து இன்று நம் இதயம் கவர்ந்தவராய்நல்ல தமிழ் நாவலராய்க் காட்சியளிக்கிறார்கள்.

"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் ''

என்று திருவள்ளுவப் பெருந்தகை அவர்கள் சொன்னதற்கேற்ப, நாவலர் அவர்கள் சொல்லாற்றல் மிக்கவர். வாதத் திறமையில் அவரை வெல்ல அவராலேயே முடியும் என்கிற அளவிலே ஒப்பாரும் மிக்காரும் அற்றுத்திகழும் உயர்வாளர்.

தனக்கெனத் தனிப்பாணி வகுத்துக் கொண்டு பேச்சையும் எழுத்தையும் கையாளும் பெருந்தன்மையாளர் !

நாவலரின் எழுத்துக்களிலே இதமான தென்றலை மட்டுமல்ல ; எரிமலையின் வேகத்தையும் உணரலாம். அவர்தம் பேச்சிலே புயலை மட்டுமல்ல; பைந்தமிழ் இலக்கியத்தின் பாங்கையும் உணரலாம்.

தேனியில் அவர் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்ட பின்னாலேயும், ஏற்றுக் கொண்டிருந்த கொள்கைக்காக எதையும் தாங்கும் இதயத்தோடு தொண்டுப் பயணத்தை தொடர்ந்து நடத்திப் பெருமை கொண்ட நாவலர் அவர்கள் பதவிப்பற்று சிறிதும் அற்றவர். ஒன்பதாண்டுக் காலம் அமைச்சராக இருந்தவரென்றாலும், இப்போது நமது நிதியமைச்சராக இருப்பவரென்றாலும், பதவியில்லாத காலத்திலும் அமைதியாக அடக்கமாக பழைய நினைவுகளை அசை போடாமல் மக்கள் மன்றத்தில் மங்காப் புகழோடு திகழ்கிறார் .

புரட்சித்தலைவரின் எண்ணத்துக்கு வடிவம் கொடுத்த வகையில் இந்தக் கட்டுரை எண்ணிப் பார்த்து என் எதிரில் திருத்தி வழங்கினார் என்று மலர்மாமணி புலவர் இளஞ்செழியன் நாவலர் நினைவு நாளில் குறிப்பிட்டார் .

தொடர்வோம் ...

பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை

- ஒளவை நடராசன்
---

தேமொழி

unread,
Feb 8, 2021, 4:05:47 AM2/8/21
to மின்தமிழ்



தினசெய்தி நாளிதழில் 25.1.2021  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 70)

“மாளிகையில் மணி விளக்கு”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


" மாந்தருக்குள் ஒரு தெய்வம் " என்று ஆண்ணல் காந்தியடிகளைப் போற்றிய பேராசிரியர் கல்கி எழுதிய தொடர் நூலாகவும் வெளி வந்துள்ளது.மாந்தர் என்று சொன்னால் உலக மக்கள் அனைவரையும் குறிக்கும்.

நாமும் மனிதர்கள் தான்.காந்தியடிகள் நம்மோடு தான் பிறந்தார்- வளர்ந்தார், அதனாலேயே அவரையும் நம்மைப் போன்ற மனிதர் என்று அழைக்க முடியுமா, அதனால் தான் மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்று தலைப்பிட்டேன் என்றார்.தியாகத்தால் - திறமையால்- வள்ளன்மையால் மன்னிக்கும் மனஉறுதியால் புத்தாக்கத்தால் உலக மக்களினத்திலிருந்து வேறுபட்டுச் சிலர் தெய்வங்களாகின்றனர்.வாழ்வாங்கு என்று வரும் ஒரு திருக்குறட்சொல்லில் ஆயிரம் உயர் பண்புகளை நாம் அடைத்துக்கொள்ளலாம்.

அவ்வாறு வாழ்ந்து தன் புகழை நிறுவியவர் பொன்மனச்செம்மல்." மானுடம் இவர்தான் அல்லர் என்றும் மனிதருள் தலையாய மனிதர் தாமே"என்று இலக்கியங்களில் மாமுனிவர் அரவிந்தர், மீமனிதர் என்றே எதிர்காலத்தில் அமையும் சமுதாயம் பற்றிக் கருத்துரைத்தார் .

" ஒளிவிளக்கு" என்ற திரைப்படத்தில் புரட்சித்தலைவர் தீக்கிரையாகும் ஒரு குழந்தையைச் சுற்றி எரியும் நெருப்பு வளையத்திலிருந்து பாய்ந்து காக்கும் ஒரு நிகழ்ச்சி வருகிறது.அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவதற்காகத் தீக்குள் பாய்ந்த நிலையில் இவரும் ஆட்பட்டு உயிருக்குப் போராடுவார்.அப்போது அவர் குணமடைய வேண்டும் என்பதற்காக உருக்கமான ஒரு பாடல் அமைவதாகக் காவியக் கவிஞர் எழுதிய பாடல் கோடிக்கணக்கான மக்கள் துதித்துப் போற்றும் வாழ்த்துப் பாடலாக விளங்கியது.

ஒருமுறை கவியரசர் வாலி புரட்சித் தலைவரைக் காணச் சென்ற போது ஜானகி அம்மையார் கவிஞர் வாலியின் வரி தான் எமனிடத்திலிருந்து உங்களை மீட்டுத்தந்தது என்று கண் கலங்கக் கூறியதைப் பொறியாளரும் புகழ் வாய்ந்த கவித் திலகமாகவும் வாழும் நெல்லை ஜெயந்தா என்னிடம் ஒருமுறைகுறிப்பிட்டார்.

அந்தப்பாடல் பின் வருமாறு:
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு, 
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு,
ஆண்டவனே உன் பாதங்களை- நான் கண்ணீரில் நீராட்டினேன் 
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன்..
முருகையா...
பன்னிரண்டு கண்களிலே,ஒன்றிரண்டு மலர்ந்தாலும்,
என்னிரண்டு கண்களிலும்,இன்ப ஒளி உண்டாகும், 
உள்ளமது உள்ளவரை,அள்ளித் தரும் நல்லவரை,
விண்ணுலகம் வாவென்றால்,மண்ணுலகம் என்னாகும்..
மேகங்கள் கண்கலங்கும்,மின்னல் வந்து துடிதுடிக்கும்,
வானகமே உருகாதோ, வள்ளல் முகம் பாராமல்,
உன்னுடனே வருகின்றேன்,என் உயிரைத் தருகின்றேன்,
மன்னன் உயிர் போகாமல்,இறைவா நீ ஆணையிடு.

புரட்சித்தலைவரோடு நெருங்கிப் பழகியவர்கள் என்ற வகையில் தம் நெஞ்சங்களையே கோயிலாக்கி அவர் திருவுருவைத் தெய்வமாக்கி வழிபட்டார்கள் பலர். பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயராக மிளிர்ந்து மனித நேயச் செம்மலாக இளமையோடும், புகழோடும் திகழும் பெருந்தகை சைதை துரைசாமி. அவர் தொடங்கிய பயிற்சிக்கல்லூரியில் பயின்று நூறு பேராவது இந்திய ஆட்சிப் பணியில் வெற்றி பெற்று அவரை நினைவு கூர்கிறார்கள்." இந்தப் பணியெல்லாம் எனக்கு என் தலைவர் காட்டிய வழியாகும்" என்று எப்போதும் சொல்வார். புரட்சித்தலைவரை அவதார புருஷர் என்றே அவர் நினைவு நாளில் எழுதிய வரைவு என்னைக் கவர்ந்தது.

அக்கட்டுரையின் சில பத்திகள் வருமாறு: 
'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி 
மக்களின் மனதில் நிற்பவர் யார் 
மாபெரும் வீரர் மானம் காப்போர் 
சரித்திரம் தனிலே நிற்கின்றார்'
 – என்று 'மன்னாதி மன்னன்' படத்தில் பாடியபடியே, புரட்சித்தலைவர், மரணத்துக்குப் பிறகும் மக்களின் மனதில் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.இன்றும் சமாதியில் காது வைத்து,எம்.ஜி.ஆரின் கடிகாரச் சத்தம் கேட்கும் இளம் தலைமுறைகளின் ரத்தத்தில் கலந்துள்ளார்.புரட்சிதலைவர் பிறந்த தினத்தில் நினைவில் கொண்டு வந்து பதிவு செய்துள்ளார்.

திரையரங்குகளில் எல்லோரும் வணிக ரீதியாக பொழுதுபோக்குப் படங்களை வெளியிட்டு வந்த நேரத்தில்,புரட்சித்தலைவர் மட்டும் மனித நேயச்சிந்தனை,நேர்மை,வாய்மை,உழைப்பு,குடும்ப உறவு,முதியோருக்கு மதிப்பு என வாழ்வியல் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படங்களை வெளியிட்டார்.ஏழைகளுக்கும் உழைப்பாளிகளுக்கும் மதிப்பு கொடுப்பதில் புரட்சித் தலைவருக்கு இணையாக வேறு எவரையும் சொல்லவே முடியாது.உழைக்கும் மக்கள் மீதான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உழைப்பாளி,தொழிலாளி,விவசாயி,ரிக்க்ஷாக்காரன்,மீனவ நண்பன் என்று படங்களுக்குப் பெயர் சூட்டித் தன்னை ஏழைகளில் ஒருவன் என்று அனைவரையும் இணைய வைத்தார். உலகிலேயே ஒரு தனி மனிதரின் கொள்கைக்காக திரைப்படம் எடுக்கப்பட்டு,அது வெற்றியும் அடைந்தது என்றால், அது புரட்சித்தலைவரின் படங்கள் மட்டும் தான்.

தன்னுடைய ஒவ்வொரு சோதனையையும்,சாதனையாக மாற்றிக்காட்டியவர் புரட்சித்தலைவர்.அதனாலே,எம்.ஜி.ஆரை தெய்வப் பிறவியாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.ஏழை மக்களுக்காக எதையும் செய்வதற்குப் புரட்சித்தலைவர் தயாராக இருந்தார்.பங்கீட்டு அரிசி வழங்குவதைப் புரட்சித்தலைவரின் அரசு ஏற்கவில்லை என்ற காரணத்தால்,மத்திய தொகுப்பிலிருந்து அரிசி தருவதை மத்திய அரசு நிறுத்தியது.உடனே,பொங்கியெழுந்து அண்ணா நினைவகத்தில் புரட்சித்தலைவர் உண்ணாவிரதம் இருந்தார்.மத்திய அரசுக்கு எதிராக முதன்முதலாக உண்ணாவிரதம் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.தான். உடனே மத்திய அமைச்சர் ஓடோடிவந்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தது வரலாறு.

ஒருமுறை எம்.ஜி.ஆர்.தூத்துக்குடி அருகே,கைக்குழந்தைகளுடன் சில தாய்மார்களைக் கண்டார் . 'காலையில் சாப்பிட்டீர்களா' என்றார்.இல்லை.காலையில் சமைக்க நேரமில்லை.மாலையில் சென்று ஒரே வேளையாகச் சமைத்துச் சாப்பிடுவோம் என்றனர்.அதிர்ந்தார் புரட்சித்தலைவர்.
சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தினார்.சத்துணவுத்திட்டம் பிறந்தது.பெண்கள் தங்கள் குழந்தைகளை பட்டினி போடாமல் உண்ண வழி வகுத்தது சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து,பணிப் பாதுகாப்பின்றி புறக்கணிக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தின் மீது முதன்முதலாக அக்கறை காட்டிவர் புரட்சித்தலைவர்.

ஒழுங்குபடுத்தப்படாத தொழிலாளர்களாக இருந்த  மீனவர்,நெசவாளர்,பனையேறுவோர்,கட்டிடத்தொழிலாளர்,கைவண்டி இழுப்போர்,மாட்டுவண்டி ஓட்டுவோர்,பீடி சுற்றுவோர்,சுமை ஏற்றி இறக்குவோர்,மண்பாண்டத் தொழிலாளர்கள் என 60 வகையான தொழில் செய்து வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களை ஒன்றிணைத்து இந்தியாவிலேயே முதன்முதலாக நலவாரியங்கள் அமைத்து,குறைந்தபட்ச ஊதியம்,குடும்ப ஓய்வூதியம்,திருமண உதவி,கல்விஉதவி,விபத்து நிவாரணம்,சேமிப்பு பலன் போன்ற நல உதவிகளை வழங்கி,அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றினார் புரட்சித்தலைவர்.

நான் இப்படி நினைக்கிறேன் என் மனதுக் கேற்றவகையில் நலத்திட்ட உதவிகளுக்கு வடிவம் தர வேண்டும் என்று அரசுசெயலாளர்களை ஒன்றாகக் கூட்டி விவாதித்து அதற்குரிய திருத்தங்களை ஏற்றுக்கொண்டு பிறகுதான் அதற்கு வடிவம் தருவார்.எந்த வகையிலாவது எள்ளளவும் அத்திட்டம் முடிந்துவிடக் கூடாது என்று விழிப்பாகவும் இருந்தார் .

முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும், முதியோர்களுக்கு உதவித்தொகை கொடுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்ததும் புரட்சித் தலைவர்தான்.சாதி,மதத்தின் பெயரால் மக்களுக்குக் கொடுமைகள் நடப்பதை அனுமதிக்கவே மாட்டார்.'உரிமைக்குரல்' படத்தில், 'தாழ்த்தப்பட்ட சாதி உயர்த்தப்பட்ட சாதிங்கிறது எல்லாம் இந்த கேடுகெட்ட சமுதாயம் செய்து வைத்த கொடுமை,என்னைப் பொறுத்தவரை எல்லோரும் ஒரே சாதி தான்,அது மனித சாதி' என்று வசனம் பேசுவார்.மேலும், தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 49 சதவிகிதம் என்று இருந்த இடஒதுக்கீட்டை 68 சதவிகிதம் என உயர்த்தி சமூக நீதியை நிலை நாட்டியதும், புரட்சித்தலைவர் தான்.'நாடோடிமன்னன்' படத்தில், 'வேலை செய்ய முடியாத முதியோர்கள், கூன்,குருடு,முடம் போன்றவர்களின் வாழ்வுக்காகவும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கத் தொழில் நிலையங்கள் அமைக்கவும்,பள்ளிகள் கட்டுவதற்காகவும் என்னுடைய சொந்த சொத்தில் பாதியை அளிக்கிறேன் என்று சொன்னது போலவே தன்னுடைய சொத்துக்களை அனாதை ஆசிரமத்துக்கும் உயில் எழுதி வைத்தார். நடிகர், முதல்வர் என்பதைவிட ,புரட்சித் தலைவர் என்றாலே ஞாபகத்துக்கு வருவது,அவரது வள்ளல் தன்மைதான்.'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' – என்று'பணம் படைத்தவன்' படத்தில் பாடியது போலவே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.

புரட்சித்தலைவரின் வள்ளல் தன்மைக்கு எத்தனையோ சான்றுகளை சொல்ல முடியும் .அவை எல்லாவற்றையும் அடுக்குவதை விட,1961 ஆம் ஆண்டு ரிக்க்ஷா தொழிலாளர்களுக்கு புரட்சித்தலைவர் மழைக்கோட்டு வழங்கும் விழாவில் பேரறிஞர் அண்ணா பேசியது மட்டுமே போதுமானது.'புயல் மழையால்– சேதம் வரும் இடங்களில் எல்லாம்,எங்கள் புரட்சிநடிகர் உதவியினைக் காணலாம்.தன்னைத் தேடி வருகிறவரின் கண்ணீரைத் துடைக்கிறவன் வள்ளல்.தன்னைத் தேடி வருகிறவரின் துன்பத்தைப் போக்குகிறவன் வள்ளல்.ஆனால், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.அப்படியல்ல,சமுதாயத்தில் துன்பப்படுபவன் எங்கே இருக்கிறான் என்று தேடிப் போய்,அவன் கண்ணீரைத் துடைத்துக் கை கொடுக்கிற எம்.ஜி.ஆர்.வள்ளலுக்கெல்லாம் வள்ளல்' என்று பாராட்டினார் பேரறிஞர் அண்ணா.

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த நேரம் ஒரு நாள் மராட்டிய மாநிலத்திலிருந்து, விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் பேரன் அப்போது தமிழ்நாடு மேல் சபைத் தலைவராக இருந்த சிலம்புச்செல்வர் மூலம் எம்ஜிஆரைச் சந்திக்க வந்தார் .மராட்டிய மாநிலம் புனே நகரில் திலகருக்கு வெண்கலச் சிலை அமைக்க வேண்டும்.அதற்கு தமிழக அரசின் சார்பில் நிதியுதவி செய்ய வேண்டும் என திலகரின் பேரன் எம்ஜிஆரிடம் வேண்டினார் .

உடனே , தன் உதவியாளரை எம்ஜிஆர் அழைத்து அவர் காதில் ஏதோ சொன்னார் .சிறிது நேரத்தில் உதவியாளர் ஒரு காசோலைப் படிவத்தை எடுத்து வந்தார் .அதை வாங்கிய எம்ஜிஆர் ரூபாய் ஐம்பதாயிரத்துக்குக் காசோலை எழுதி கையெழுத்துப் போட்டு அதை சிலம்புச்செல்வர் மூலமாக திலகரின் பேரனிடம் கொடுத்தனுப்பினார்.

நான் அரசாங்கத்திடமிருந்து தான் நிதி எதிர்பார்த்து வந்தேன்.முதலமைச்சர் அவரது சொந்தப் பணத்திலிருந்தே இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து விட்டாரே எனத் திலகரின் பேரன் ஆச்சர்யத்துடன் நின்றார் . இதைக் கேட்ட எம்ஜிஆர் அரசாங்க நிதியிலிருந்து கொடுக்க வேண்டுமென்றால், அதற்காக நான் எழுதும் கடிதம் கோப்பாக உருவாகி ,முறைப்படி பல்வேறு துறைகளுக்குச்- சுற்றாகப்போய், அந்தக் கோப்பு என் கைக்குத் திரும்புவதற்குப் பல மாதங்களாகும்.அதைத் தவிர்ப்பதற்காகவே நானே அளித்து விட்டேன் என்று கூறினார்.முகமறியாதவர்களுக்கும் - முகமலர்ச்சியுடன் அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவே எம்ஜிஆர் வாழ்ந்து வரலாறு படைத்தார்.

இப்படியொரு தனி மனிதப்பண்பு,கலைத்திறன்,நிர்வாகத்திறன்,ஏழைகளிடம் கனிவு,ஊழல் இல்லாத மக்களாட்சி,தனக்கென சொத்து சேர்க்காத குணம்,வள்ளல்தன்மை,அறம் சார்ந்த வாழ்க்கை,உழைத்து சம்பாதித்த சொத்தை மக்களுக்கு எழுதிக் கொடுத்தது போன்ற அரிய பண்புகளை ஒரு சாதாரண மனிதனிடம் காண இயலாது என்பதால் தான்,புரட்சித்தலைவரை அவதார புருஷர் என்கிறேன்.

தொடர்வோம் ...

பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை

- ஒளவை நடராசன்
thamizhavvai[at]hotmail.com See Less
---

தேமொழி

unread,
Feb 27, 2021, 11:37:55 PM2/27/21
to மின்தமிழ்


தினசெய்தி நாளிதழில் 15.2.2021  அன்று  வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 71)

“வினாவுக்கு என்ன விடை !”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

ஊழல் இல்லாத மக்களாட்சி, தனக்கெனச் சொத்து சேர்க்காத குணம், வள்ளல் தன்மை, அறம் சார்ந்த வாழ்க்கை, உழைத்து ஈட்டிய செல்வத்தை மக்களுக்கு எழுதிக் கொடுத்தது-அவருக்குப் பிறகும் இவ்வித உயரிய பண்புகளைக் கொண்ட அரசியல் தலைமுறையை உருவாக்கவில்லையே , இது ஒரு குறையல்லவா ? என்ற நுணுக்கமான வினாவைக் கேட்டு அறிஞர் ப.ஸ்ரீ .இராகவன் எனக்கொரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் .

அறிஞர் இராகவன் இந்திய ஆட்சிப்பணியில் ஈடிணையற்ற பெருமிதங்களைப் பெற்றவர் .மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளராக - மைய அரசில் நேருவுக்கு நெருக்கமான பல்வேறு உயரிய துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுச் சென்னையில் வாழ்ந்து வருகிறார் .

தென்சொல் கடந்தான்,வடசொற் - கலைக்கு எல்லை தேர்ந்தான் என்ற தொடருக்கு மேலும் மெருகூட்டி ஆங்கிலப் புலமையில் தலைமை பெற்றான் என்ற நிலையில் தகுதி மிகுதி பெற்றவர் அறிஞர் இராகவன் .தன் வாழ்வில் அவர் அறியாத முதலமைச்சர்கள் இல்லை - மாநில அரசுகளும் இல்லை ,ஒரு தலைமுறையைத் தொடர்ந்து அதே நிறைவிலேயே வழிமுறை அமைவதைப் பற்றி நாம் எப்போதும் கருதியது இல்லை .விதிவிலக்காகச் சிலர் ஒளிவிளக்கேற்றியுள்ளனர் .

மன்பதை காக்குந் தென்புலங் காவல் துன்பம் அல்லது தொழுதகவு இல் என்று சேரன் செங்குட்டுவன் மொழிந்ததாக அரசு பதவி துறந்த இளங்கோவடிகள் குறிப்பிட்டது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது .தேர்ந்து தெளிதல் - தெரிந்து செயல்வகை , தெரிந்து வினையாடல் என்ற மூன்று அதிகாரங்களும் திருக்குறளிலேயே தேங்கி நடைமுறைக்கு இயலாதவை போல உள்ளன .

நேரு பெருமகனாருக்கு நெருக்கமாக இருந்தவர்களை மகளார் அரசுப் பொறுப்பேற்றதும் விலக்கினார் .வெறுத்தார் .என்றே சிலர் எழுதியுள்ளனர் .தகுதி கூட ஒருவரைப் பள்ளத்தில் தள்ளி விடுமென்பார்கள் .
திறமையாளர்கள் பலர் சோர்ந்தனர் .தகுதியை நிறுத்திப் பார்க்கும் எடைக்கல்லே கூட ஏமாற்றமளித்தது .அப்படி வாழ்ந்தவர் உண்டு .

நல்லறிஞர் சொல் கேட்பது - நம்பி வாழ்வது - ஒற்றித் தந்த பொருண்மையை வேறொரு ஒற்றினால் உணர்ந்து தெளிதல் என்ற இலக்கணங்கள் எப்படியோ செல்லாக் காசாகிவிட்டன .பல்கலைக் செம்மல் பழ .கருப்பையா நிரம்பிய படிப்பாளி ,கையில் நூலில்லாமல் அவரைக்காண முடியாது .அவருடைய பல்கலை வித்தகத்தை அரசியலாளர்கள் முறையாகப் பயன்கொள்ளவில்லை.

பிரிட்டன் பிரதமர் கூறியதைக் குறிப்பிட்டு இந்தியாவுக்கு அவர் வந்திருந்தால் இந்த அங்கலாய்ப்புக்கு இடமிருக்காது என்று நகைச்சுவை மிளிர சிந்தனை ஒளிர ஒரு கட்டுரையை " குமுதம் " இதழில் எழுதினார் .

" அண்மையில் இங்கிலாந்தின் நிகழ்காலத் தலைமையமைச்சர் போரிசு சான்சன் ( Borris Johnson ) தன்னுடைய பதவியை விட்டு விலக நேரம் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் , தலைமையமைச்சருக்கான ஊதியம் தனக்குப் போதுமானதாக இல்லை எனவும் , குடும்பம் பெருகி விட்டதாகவும் , தன்னுடைய பிள்ளைகளின் உயர்படிப்புச் செலவு கூடி விட்டதாகவும் ,ஏற்கனவே தான் பெரும் பொருள் ஈட்டிக் கொண்டிருந்ததாகவும் , இப்போது இந்தக் குறைந்த ஊதியத்தில் தன்னுடைய பெருங்குடும்பத்தைக் கொண்டு செலுத்த முடியவில்லை என்றே வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் !

தலைமையமைச்சருக்கான ஊதியம் மோசமானது என்று கூற முடியாது .அவர் கூடுதல் வருவாயில் கூடுதலான வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டிருக்க வேண்டும்;இதைப் படித்த போது நமக்கு வியப்பாக இருந்தது .

இந்திய சமுதாயத்தில் இருக்கும் இன்றைய நிலை , பின்னடைவு , தாழ்வுக்கூறுகள் , உழைப்பு , ஊதியம் சார்ந்த இறுக்கங்கள் இவற்றை உடைத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் சிந்தித்து வழிநடத்திச் செல்லும் சிந்தனைப்போக்கு உருவாக வேண்டும் .

மக்கள் வாழ்வில் பொருளாதாரத் தேவைகள் காலம் மாறுவதற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டு வருகின்றன .வாழ்க்கை உன்னதமானதாக மலர வேண்டும் ,மகிழ்ச்சி ததும்புவதாக அமைய வேண்டும் எனப் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகள் , கனவுகள் , குறிக்கோள்கள் விரிந்துகொண்டே போகின்றன .ஆனால் அந்த கனவுப் பாதையில் தடுமாற்றங்களும் - தடைகளும் நம்மை நிலைகுலையச் செய்கின்றன .கட்டில்லாத ஆளுமை சார்ந்த கல்வியறிவின் பயனாக ஊருக்கு உழைக்கும் சிந்தனை உருவாக வேண்டும் .உருவாக்கித்தரும் வழிகாட்டுதல் வேண்டும் .இதுவே புரட்சித்தலைவரின் போக்காகத் தொடங்கியது .அவரைத் தனிப்பிறவி ஆக்கியது .

இலஞ்சம் , வஞ்சம் , ஏமாற்று ,தீப்பிடிக்கும் தீவிரம் ,படைக்கருவிகள் என எண்ணாமல் பொறுப்புணர்வு இணைந்த விழிப்புணர்வு வரவேண்டும் என்று அண்ணல் காந்தியடிகள் எழுதி எழுதி விரல் தேய்ந்தார் .

சமுதாயத்தை ஒரு முகமாகக் காணும் நோக்கம் மாற்றவேண்டும் பிற்போக்கான எண்ணங்களை அஞ்சத்தக்கக் கிளை விளைவுகளை எதிர்க்கவேண்டும் .ஏற்கக்கூடாது என்ற உறுதிமொழியினைச் செயற்படுத்தும் தலைமைப்பண்புகளால் ஆளுமை உருவாக வேண்டும் .மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டித் தன்னல ஆதாயத்தைத் தேடிக் கொள்ளும் செயல் தான் இயல்பாகவே உலகெங்கும் பரவி வருகிறது ..ஏற்றதாழ்வின் இடைவெளி மிகுதியாகச் செல்லாத வாழ்க்கை முறையை உருவாக்கும் கல்வி வளம் மேலும் பரவலாக வேண்டும் , காலம் தான் வழிகாட்ட வேண்டும் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை .

தலைமை - ஆளுமை முதலிய அரிய பண்புகளைப் பாடமாகக் கற்றுக் கொடுத்துப் பயிற்சி அளிக்கலாம் என்ற கருத்தாடலையும் சில நாடுகள் முன்வைத்துக் காட்டியுள்ளன . அண்மையில் நியூசிலாந்தில் நோக்கர் என்ற இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை நம் கவனத்தை ஈர்க்கும் .அந்தக் கட்டுரை அங்கிங்கெனாதபடி எங்கும் இலஞ்சம் தருகிற பழக்கம் மரபு வழியாகவும் - பக்திப் போக்காகவும் பண்பாட்டு இழையாகவும் இந்திய நாட்டில் படிந்திருப்பதை கட்டுரையாளர் சுட்டிக் காட்டியிருக்கிறார் .

இலஞ்சம் கொடுப்பதை ஒரு வழக்கமாகவே இந்தியர்கள் கருதுவதோடு தருவதும் - பெறுவதும் இயல்பானது என்று எண்ணுகிறார்கள் .மதம் சார்ந்த கடவுள் வழிபாட்டை எடுத்துக்கொண்டால் அது கூட கொடுக்கல் - வாங்கலாகவே முடிகிறது .செல்வ வளம் மிக்க - பணபலம் கொண்டவர்கள் கோயிலுக்குச் சென்றால் மொத்தமாக பணம் , காசுகளைத் தருவதைக் காட்டிலும் பொன்னாலும் - வைரத்தாலும் - மாணிக்கங்களாலும் புதிய அணிகலன்களைக் கடவுளுக்கு அளிக்கிறார்கள் .

2009 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் இந்து நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டிருந்த .கருநாடக மாநிலத்தின் அமைச்சர் ஜி .ஜனார்த்தன ரெட்டி , தங்கத்தால் ஒரு மகுடத்தையும் - நாற்பத்தைந்து கோடி ரூபாய் பெறுமதியான வைரக்கற்களையும் திருப்பதிக்கு வழங்கினார் . இந்தத் தொகையைப் பெற்ற பெருங்கோயில்களும் தொகையை என்ன செய்வதென்று தெரியாமல் தூசும் - மாசும் படிந்த கோயிற்சுவர்களைக் காணும் போது நமக்குத் தோன்றும் .

ஐரோப்பியர்கள் இந்த நாட்டுக்கு வந்த போது பள்ளிகளையும் - மருத்துவமனைகளையும் கட்டினார்கள் ,ஆனால் இந்தியர்கள் ஐரோப்பிய - அமெரிக்க நாடுகளில் கோயில்களைக் கட்டியுள்ளனர் .கடவுளே நம்மிடத்தில் உண்டியலைக்காட்டி நம்மிடத்தில் கையேந்தும் போது நாமும் நமக்குள்ளே அதைக் கடைபிடித்தால் என்ன தவறு என்று நினைக்கிறார்கள் .

இந்திய வரலாற்றில் கூட சிற்றரசுகளையும் - மாநகரங்களையும் ஆங்கிலேயர் கைப்பற்ற முனைந்த போது காவலர்களுக்கு இலஞ்சம் கொடுத்தும் - படைத்தலைவர்களுக்கு கையூட்டினை வழங்கியும் வெற்றி பெற்றதாக எழுதியுள்ளனர் .வரலாற்று நிகழ்வுகள் பலவும் இலஞ்சம் கொடுத்து வாங்கிய வணிகப் பரிமாற்றமாகவே அமைந்துள்ளன .மேலும் இந்திய மக்கள் சாதியாலும் - மதத்தினாலும் பிரிந்திருந்ததால் எளிதாக பணத்துக்கு ஏமாந்தனர் .

இந்திய நாட்டில் ஒருவருக்கொருவரிடம் நம்பகத்தன்மை இல்லாததால் சமுதாயத்தைக் கையூட்டுக்குக் கவலைப்படாத மக்களாக மாற்றிவிட்டது .கடவுளுக்கும் இந்த கதி தான் என்று அவர் எழுதியது நமக்கு வேதனையாக உள்ளது .

இப்படிப்பட்ட சிந்தனைகள் நமக்கெல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தும் , அந்த மாற்றத்தை தோற்றுவித்த வகையில் தனக்கே உரிய வள்ளன்மையால் செல்வச் செழுமையால் புரட்சித்தலைவர் தன் பங்கை விரிவாக எளியவர்களுக்கு ஆற்றினார் .அதே வகையான அணிவரிசை அமைவது அரிதாகும் .அது குறையாகாது .மக்களாட்சி நாளுக்கு நாள் மாற்றங்களைக் காண்பது மக்களும் மருள்நிலையில் இருந்து மீள்வது ஒரு நாள் நடைபெற்றே தீரும் .
.
ஒரு நாட்டினை அது பெற்றிருந்த இயற்கை வளங்களைக் கொண்டு மலைவளம் , கனிவளம் ,கனிமவளம்,வனவளம் ,வயல்வளத்தால் போற்றினோம் .செயற்கையான மனவளத்தைக்கொண்டு தான் நாடுகள் இனி மதிக்கப்படவேண்டும் என்ற நிலை வளர்ந்துள்ளது .அந்த நாளிலேயே காடாகவோ - மேடாகவோ - நாடாகவோ - பாலையாகவோ எப்படி இருந்தால் என்ன வாழ்கிற மக்களின் திறத்தால் எந்த இடரையும் எதிர் கொண்டு வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முடியும் என்ற கருத்தில் ஒளவையார் பாடிய பாடலை அனைவரும் அறிவர் ." எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே " என்பது புறநானூற்றுத் தொடராகும் .

இப்போது தங்கள் நாட்டை நம்பத்தன்மை கொண்ட நாடு - வாய்ப்புக்களை வழங்கும் நாடு - வந்தாரை வரவேற்கும் நாடு - நினைத்ததை முடித்து வைக்கும் நாடு என்று அறிமுகப்படுத்தும் போது மக்கள் மனம் எப்படி மாற்றங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள முடிகிறது என்று அறியலாம் .இந்த நினைவுகளோடு தான் புரட்சித்தலைவர் ஆட்சியில் அமர்ந்தார் .

" எனக்கொரு மகன் பிறப்பான் - அவன் என்னைப்போலவே இருப்பான் " என்ற அவர் கனவு தொடர்ந்து வரும் தலைமுறையைத் தொட்டுக் காட்டியது.மாபெரும் மக்கள் தொகை கொண்ட பாரத நாட்டில் மக்களாட்சிக் கோட்பாட்டால் நல்ல மாற்றங்கள் மெல்ல மெல்ல வரும் .புதுமைகளைப் போற்றி பாராட்டுவார்கள் .

கவியரசர் தாகூர் எழுதிய கவிதை தான் நமது வேண்டுகோளாகும் . அந்தக் கவிதையின் மொழியாக்கத்தைக் காணலாம் .

எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ
தலை நிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே உலகம் சிறு சுவர்களால்
பிரிக்கப்படாமல் அமைகிறதோ

எங்கே சொற்கள் வாய்மையின்
ஆழத்திலிருந்து
வடிவம் பெறுகிறதோ
எங்கே உழைப்பு நிறைவை
நோக்கி நகர்கிறதோ

எங்கே சரியான முடிவு
மூடவழக்கப் பாலையில்
தொலையாமல் இருக்கிறதோ

எங்கே எண்ணங்கள் உயர்ந்த செயல்களால்
கட்டற்ற இன்ப உலகத்தை நம்
கண்முன் காட்டுகிறதோ

அங்கே என் நாடு விழிக்கட்டும்
அங்கே என் நாடு விழிக்கட்டும்....

எந்த மேடையிலும் அறிஞர் துணைவேந்தர் சை வே சிட்டிபாபு தன் ஆங்கில உரையை முடிக்கும்போது நோபல் கவியரசர் தாகூர் வரிகளை உணர்வு ததும்பச் சொல்லி முடிப்பார் .

புரட்சித்தலைவரிடத்தில் வங்க மொழிப் பேராசிரியரை அவர் அறிமுகப்படுத்தியபோது தமிழாக்கத்தைச் சொல்லி அவரை வங்க மொழியிலும் அந்தப் பாடலைக் கூறச் சொல்லுங்கள் என்று புரட்சித்தலைவர் கேட்டு நெகிழ்ந்தார் .அவருக்கு ஏலக்காய்ச் சரிகை மாலையை அணிவித்து பாராட்டினார் என்பதை சொல்லவா வேண்டும் . .

தொடர்வோம் ...

பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை

- ஒளவை நடராசன்
thamizhavvai[at]hotmail.com
---

தேமொழி

unread,
May 13, 2021, 11:09:21 PM5/13/21
to மின்தமிழ்



மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 72)

“அன்புக்கு நான் அடிமை!”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

புரட்சித்தலைவரின் நெஞ்சில் நிலையான இடம் பெற்றவர் கவியரசர் முத்துலிங்கம்.  மேலவை உறுப்பினராகவும் அரசவைக் கவிஞராகவும் மிளிர்ந்த பெருமையோடு நம்மிடையே வாழ்ந்து வருகிறார். அன்பு - அடக்கம் - அறிவு - ஆற்றல் - கற்பனை வளம் - கவிதைப்பெருக்கு - அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாடு முதலிய பண்பு நலங்களின் பெட்டகமாகக் கவிஞர் முத்துலிங்கம் இன்றும் ஒரே நிலையில் ஒப்புரவு மனத்தோடு பாடற்பணியும் - தமிழ்ப்பணியும் பல தளங்களில் ஆற்றுகிறார் .

பாவேந்தர் விருது வழங்கிப் கவிஞர் முத்துலிங்கத்தைப் பற்றிப் பேசிய உரை கவிஞரை நம் கண் முன் காட்டும்.  புரட்சித்தலைவரின் பாராட்டுரை பற்றிய கவிஞரின் கருத்து வருமாறு "சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தமிழக அரசு விருதை 1978 - 79 ஆம் ஆண்டில் பெற்றேன். பின்னர் கலைமாமணி விருது பெற்றேன். அதன் பிறகு பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றேன்.பாவேந்தர் விருதை எனக்கு வழங்கும்போது என்னைப் பற்றித் தலைவர் பேசியது என்றும் மறக்கமுடியாத ஒன்று. 

ஒரு முறை தலைவர் அலுவலகத்திலிருந்து தலைவரின் ஆணைப்படி எனக்கு நிதி வழங்க முன் வந்தார்கள்.  நானோ பாடல் எழுதும் பணியைக் கொடுங்கள் என்று தான் கேட்டேன், நிதி வேண்டாம்.  வாய்ப்பினைத் தலைவரே வழங்குவார் என்று கூறி அனுப்பினேன்.  அதை நினைவுகூர்ந்து புரட்சித்தலைவர் பேசியதை என் இலக்கிய நினைவுகள் மணங் கமழ " ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே " என்ற நூலில் காணலாம் .

" நான் அவரிடம் பணம் வேண்டாம் என்று சொன்னது 1974 - ஆம் ஆண்டு . முதல்வர் புரட்சித்தலைவர் எனக்குப் பாரதிதாசன் விருது வழங்கியது 1981 - ஆம் ஆண்டு.  இடையில் ஏழாண்டுக் காலம் இடைவெளி. ஏழாண்டுகள் வரை நான் சொன்னதைத் தலைவர் நினைவில் வைத்திருந்து பேசியது தான் வியப்பு.

அவரோ முதலமைச்சர் எத்தனையோ நிகழ்ச்சிகளை ஏழாண்டுகளில் சந்தித்திருப்பார்.  அப்படியிருந்தும் நான் மறுத்துக்கூறிய நிகழ்ச்சியை மறந்து விடாமல் பேசினார் என்றால் என்னை அவர் மனத்தில் வைத்திருக்கிறார் என்றுதானே பொருள் !. என்னைப் பற்றி அவர் பேசியது இதுதான்.

"படத்துறைக்கு வருவதற்கு முன் முத்துலிங்கம் பத்திரிகைத் துறையில் இருந்தார். எந்தப் பத்திரிகையில் அவர் பணியாற்றினாரோ அந்தப் பத்திரிகையிலிருந்து அவர் விலகிவிட்டார். அதனால் சிரமப்படுவாரே என்றெண்ணிக் கொஞ்சம் பணம் தருகிறேன் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். பணம் வேண்டாம். அதற்குப் பதில் வேலை கொடுங்கள் என்றார். வேலை கொடுக்கும்போது கொடுக்கிறேன் இப்போது பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். அப்போதும் மறுத்து விட்டார் .

படத்துறையில் என்னிடம் பணம் வாங்காத எழுத்தாளர்கள், கவிஞர்கள் பெரும்பாலும் குறைவு. அதுவும் அவர்கள் கேட்டுத்தான் அளித்திருக்கிறேனே தவிர, நானாக யாருக்கும் கொடுக்கவில்லை.

முத்துலிங்கத்திற்கு மட்டும் தான் நானே வலியக் கொடுக்க முன்வந்தேன். ஆனால் அவர் வாங்க மறுத்துவிட்டார். உழைக்காமல் யாரிடத்திலும் இனாமாக எதையும் வாங்கக் கூடாது என்ற தன்மானமுள்ள கவிஞராக இருக்கிறார் என்பதை அப்போது புரிந்து கொண்டேன். அதன்பிறகுதான் என்னுடைய படங்களுக்குப் பாடல்கள் எழுத வாய்ப்பளித்தேன்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் தன் காலைக் கீழே, தான் குனிந்து பார்ப்பது கூடச் சுயமரியாதைக் குறைவு என்று கருதுவார் எனச் சொல்வார்கள். அப்படிப்பட்ட தன்மானம் உள்ள கவிஞர் பெயரிலே கொடுக்கக்கூடிய விருதைத் தன்மானமுள்ள கவிஞராகவும், தன்மானமுள்ள மனிதராகவும் விளங்குகின்ற கவிஞர் முத்துலிங்கத்திற்குக் கொடுக்காமல் யாருக்குக் கொடுப்பது ? " என்று பேசினார்.

சிவகங்கை அருகே ஒரு சிற்றூரில் பிறந்த கவிகங்கை தான் நண்பர் முத்துலிங்கம். கவிஞர் முத்துலிங்கம் முரசொலியில் பணியாற்றியபோதே நான் கண்டு பேசியிருக்கிறேன். அன்று முதல் எங்கள் தோழமை தொடர்ந்து வருகிறது . இளமையிலேயே கவிதை புனையும் வளம் அவர்பால் திகழ்ந்ததை என் இனிய நண்பர் கவிஞர் மீரா பலமுறை அவரைப் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார் .

"கடம்பங்குடியில் பிறந்த எனக்கு எட்டு வயதிலேயே கவிதை உணர்வு படிந்திருந்தது. என் தம்பி, தங்கைக்கு என் தாய் பாடிய தாலாட்டைக் கேட்டுத்தான் எனக்குக் கவிதை உணர்ச்சியே ஏற்பட்டது. சிற்றூர்ப் புறங்களில் எழுதப்படிக்கத் தெரியாத தாய்மார்கள் பாடுகிறார்களே தாலாட்டுப் பாடல்கள். அதற்கு இணையான கவிதை இலக்கியங்கள் உலகமொழிகளில் இருக்குமா என்பது என் கருத்து.

"மல்லிகையால் தொட்டில் இட்டா எம்புள்ளெ மேலே
வண்டுவந்து மொய்க்கு மின்னு மாணிக்கத்தால்
தொட்டிலிட்டா எம் புள்ளையோட மேனியெல்லாம்
நோகுமின்னு வயிரத்திலே தொட்டிலிட்டா வானிலுள்ள
நட்சத்திரம் ஏங்குமின்னு நெஞ்சத்திலே தொட்டிலிட்டேன்
நித்திலமே நீயுறங்கு பொன்னே உறங்கு பூமரத்து
வண்டுறங்கு கண்ணே உறங்கு கானகத்துச் செண்டுறங்கு"
என்று என் தாய் பாடுவார்.

இதைக் கேட்கும் காலத்தில் எனக்கு வயது எட்டு. இதைப் போல நானும் குளத்தைப் பார்க்கையில், அலையைப் பார்க்கையில், கொக்கு, குருவிகளைப் பார்க்கையில் அன்றிலைப் பார்க்கையில் (இன்றைக்கு அன்றில் என்ற பறவை இனமே அழிந்துபோய்விட்டது) பனைமரங்களைப் பார்க்கையில் நானே இட்டுக்கட்டி ஏதாவது பாடிக்கொண்டிருப்பேன். இப்படித்தான் சிறுவயதில் பாட்டுணர்ச்சி எனக்கு ஏற்பட்டது.

என் தாய் கூறிய வரிகள் நான் பின்னர் எழுதிய தாலாட்டுப் பாட்டில் அங்குமிங்குமாக மிதந்து வருவதைக் கேட்டிருக்கலாம் .

தாம் பாடும் பாடல் வரிகளில் சொற்களை எல்லாம் தேர்ந்து தெளிந்து பொதுநலத்தை வலியுறுத்தும் போக்கில் தான் பாடல்கள் அமையவேண்டும் என்பதில் புரட்சித்தலைவர் பேரார்வம் காட்டினார்.  நுணுக்கமான திருத்தங்களைச் சுட்டிக் காட்டுவார் ன்றும் கவிஞர் முத்துலிங்கம் பெருமிதமாகப் பாராட்டியுள்ளார். 

திரையுலகில் பாடல் எழுதுவது எளிதானதில்லை. படத் தயாரிப்பாளர், இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர், இசை வடிவாக்கும் இசையமைப்பாளர், குறித்த பாடலைப் பாடும் இசைவாணர், அனைத்துக்கும் மேலாகப் பாடலை முணுமுணுக்கும் நடிகர் இவர்களுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு பல எரிச்சல்களை ஏற்றுக்கொண்டு ஒரேமுகமாக எல்லோரையும் இசைய வைப்பது ஒரு சோதனையாகும் .

பழங்காலத்தில் முகமது சந்திர பிம்பமோ என்ற பாட்டு வரியில் இசுலாமியக் கருத்திருக்கிறது உடனே மாற்றுங்கள் என்று ஒரு நடிகர் சொல்லி "வதனமோ சந்திர பிம்பமோ" என்று மாற்றியதைக் கவியரசர் சுரதா ஒரு கதையாகச் சொன்னார்.

மொழிப்புலமை கூடப் பெரிதில்லை. மொழி தெரியாதவர்கள் கூடப் பாடலைத் திருத்துவார்கள்." 'பாயும் ஒளி நீ எனக்கு - பார்க்கும் விழி நான் உனக்கு' என்ற பாரதியார் பாடலைப் பாட வராது என்று ஓர் இயக்குநர் சொன்னாராம். மிக உயரிய பாடல் அது என்று உடனிருந்தவர் சொன்னாராம். எதற்கும் சுப்பிரமணிய பாரதியாரை நாளைக்கு அழைத்து வாருங்கள் என்றாராம். அது சரி அவர் எந்த ஊரில் இருக்கிறார் எனக் கேட்டுச் சொல்கிறேன் என்றாராம் கதையாசிரியர். 

இப்படிப் பலவற்றைத் திரையுலகில் நிகழ்ந்ததாகச் சொல்வார்கள். எழுத்தில் எண்ணிக்கையில் அதிட்டமில்லை என்று சொல்லும் ஆரூடம் நாடறிந்தது. ஆனால் எந்த நம்பிக்கையும் கொள்ளாமல் தன்னம்பிக்கையோடு இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் "நீர்க்குமிழி" என்ற பெயரைத்தான் தன் படத்துக்கு வைத்தேன் என்று குறிப்பிட்டார். 

மேலும் பாடல் எழுதுகிறவன், கவிஞன் கற்றுத் தெளிந்தவன் என்ற மனப்போக்கை நிலை நிறுத்துவது அரிய செயலாகும்.  ஒரு நிகழ்ச்சியைக் கவியரசர் முத்துலிங்கம் சுட்டிக்காட்டியதை அவர் சொற்களிலேயே படிக்கலாம்.

தலைவர் படத்தில் ஒரு பாடல் ஒலிப் பதிவும் ஆகிவிட்டது. ஆனால் தலைவர் இப் பாடலைக் கேட்டுவிட்டு ஆயலோட்டுவது போல் வருகின்ற இப்பாடலில் பொதுக்கருத்துகள் எதுவும் வரவில்லை. ஆகவே வேறு இசைக்கோலம் போட்டு வேறு பாடலை எழுதுங்கள் என்று அவரே சில கருத்துக்களை எழுதி எந்தெந்த வகையில் வரிசைப்படி அவை வரவேண்டும் என்று அவர் கைப்படவே எழுதிக் கொடுத்திருந்தார்.

அதன்பிறகு நான் எழுதி அவர் ஒப்புதல் பெற்ற பிறகு ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்தான் படத்தில் இடம் பெற்றது.

"பழத் தோட்டம் என் தோட்டம் பறவைக்கிங்கே கொண்டாட்டம்
கவணெடுத்தா திண்டாட்டம் கன்னி நானொரு அம்பாட்டம்
கனிதேடும் குயிலினமே கதை சொல்லும் கிளியினமே "
என்று பாட்டு தொடரும்

இப்பாடலில் "கனிதேடும் குயிலினமே கதை சொல்லும் கிளியினமே" என்றொரு வரி வரும். "குயில் என்ன கனிகளையா தின்னும்? கனிதேடும் கிளியினமே" என்று எழுதியதை மாற்றுங்கள் என்று இயக்குநர் சங்கர் கூறினார். பலபேர் "குயில் கனி தின்னாது" என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது தவறு.

தமிழ்க்கடல் உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியரான திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். அதுபோல் குயிலுக்கும் மாங்கனி என்றால் மிகவும் பிடிக்கும். குயில் விரும்பி உண்ணும் கனிகள் மாங்கனியும், நெல்லிக்கனியும்தான். பறவைகளின் உணவுப் பழக்கம் என்ற நூலில்கூட இது குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றேன்.

கனிகள் இல்லாத நேரத்தில் எதைத் தின்னும் என்று மடக்கினார். மாங்கொழுந்தைத் தின்னும் என்றேன். அவர் மலர்ச்சியை முகத்தில் காட்டினார். இப்படியெல்லாம் கேட்டால் கவிஞர் என்ன பதில் சொல்வார் என்பதை அறிந்துகொள்ளச் சில நேரத்தில் இப்படிக் கேள்விக் கொக்கியைப் போட்டு இழுக்கப் பார்ப்பார்கள். சாமர்த்தியமாகப் பதிலுரைத்தால் தட்டிக் கொடுப்பார் இயக்குநர். இல்லையென்றால் நீ லாயக்கில்லை என்று பட்டென்று சொல்லிவிடுவார். நான் எழுதிப் புகழ்சேர்ந்த பாடல்களில் ஒன்றிரண்டு பாடல்களுக்கு இந்த இயக்குநரே முதலடியை எடுத்துக் கொடுத்திருக்கிறார். நல்ல தமிழார்வம் உள்ள இயக்குநர்.

பாடல்களுக்கான காட்சியைப் படமாக்குவதில் சிறப்புக்குரிய இயக்குநர்களில் கே. சங்கர் குறிப்பிடத்தக்கவர்.  திரு சங்கர் இயக்கிய பல படங்களுக்கு நான் பாடல் எழுதியிருக்கிறேன். அதில் புரட்சித்தலைவர் நடித்த "இன்று போல் என்றும் வாழ்க" என்றொரு படம். அதில் இரண்டு பாடல்கள் எழுதினேன்.

நாகரிகம் என்ற பெயரில் பண்பாட்டைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்தில் தலைவர் பாடுவதுபோல ஒரு காட்சி. "பாதை மாறிப் போனவரே பயணம் எங்கே சொல்லுங்கள்" என்றொரு பல்லவி எழுதி அதற்கு இசை மீட்டினோம். பெருந்தகை எம்.எஸ்.விசுவநாதனைப் பார்க்க வந்த இயக்குநர் ஸ்ரீதரிடம் காட்சியைச் சொல்லி இந்தப் பல்லவியைச் சொல்லிப் பாடிக் காட்டினார். 

அதன்பின் வேறு இரண்டு பல்லவிகள் எழுதி இசையமைத்துக் காட்டினோம். "பாதை மாறிப் போனவரே" என்று சொல்லக் கூடாது. நான் பாடுவதில் அப்படிப்பட்ட பாதை மாறியவன் என்ற கருத்து வரக் கூடாது என்றார். பல்லவிகள் எழுதி டியூன் போட்டோம். அதில் ஒன்றை மிகவும் நன்றாக இருக்கிறது என்று தேர்ந்தெடுத்தார். 

தலைவர் தேர்ந்தெடுத்த அந்தப் பாடல் தான், நாடெங்கும் பாடப்பட்டது .

" அன்புக்கு நான் அடிமை -
தமிழ்ப்பண்புக்கு நானடிமை -
நல்ல கொள்கைக்கு நானடிமை -
தொண்டர் கூட்டத்தில் நானடிமை"

இந்தப்பாடலை அரசப்பெருமிதம் வாய்ந்த புரட்சித்தலைவர் பாடியபோது நாடே அவருடைய பணிவின் சிறப்பை பலபடப் பாராட்டியது. பணியுமாம் என்றும் பெருமை என்ற திருக்குறள் எதிரொலிக்க முத்துலிங்கத்துக்கு இப்பாடல் முத்து மாலையாக அமைந்தது .

ஒருமுறை தமது பாடலில் கோட்டையில் பறக்கும் நமது கொடி என்ற தொடரைப்பார்த்துப் புரட்சித்தலைவர் நமது கொடி என்றால் கட்சிக்கொடி என்றாகிவிடும். தணிக்கைக் குழுவினர் அதனை எடுத்து விடுவார்கள். மீன் கொடி என்று மாற்றுங்களேன் என்று வேண்டுமானால் மீன் கொடி என்று எழுதலாமே என்றாராம். மீன்கொடி என்பதை விட மகரக்கொடி என்பது தத்தாகாரத்திற்குப் பொருந்தி வருகிறது என்றார் கவிஞர் முத்துலிங்கம் மேலும் தலைவர் பாடிய பாடல் வரியைத் தணிக்கையாளர் எடுக்க மாட்டார் என்று சொல்லித் திரும்பினார்.

தணிக்கையாளரிடமே நேரில் சென்று எனது பாடல் வரியைக் கூறினேன். நமது கொடி என்ற சொல் நன்றாக அப்படியே இருக்கட்டும் என்றார் என் மனம் குளிர்ந்தது. புரட்சித்தலைவர் மனம் அன்பால் நனைந்தது.

அவர் எனக்காக நீங்கள் செய்த இந்த முயற்சியை நான் என்றும் மறக்கமாட்டேன். யார் இப்படித் தணிக்கை அலுவலகத்துக்கே சென்று வாதாடுவார்கள் என்று நன்றியோடு என்னைப் பாராட்டினார்.

அவர் நெஞ்சில் நான் இருப்பதைப் போலவே என் நெஞ்சிலும் புரட்சித்தலைவர் நிலையாக அமர்ந்துள்ளார் என்றார் .

புரட்சித்தலைவர் கையில் இருப்பது ரேகையல்ல ஈகை என்று எழுதியவரும் கவிஞர் தான்.

கவிஞர் முத்துலிங்கம் பல்லாண்டு வாழ்க !

தொடர்வோம் ...

பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை

- ஒளவை நடராசன்

தேமொழி

unread,
May 14, 2021, 8:19:06 PM5/14/21
to மின்தமிழ்
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 73)

“புரட்சித்தலைவர் பொன்மனத்தில் பூத்த புதுத்துறை !”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

பாரத நாடு விடுதலை பெற்றதும் மாணச் சிறந்த மக்களாட்சியை நாமே அமைத்துக் கொண்டு அதற்கேற்ற அரசியல் அமைவை அறிஞர்கள் வரைந்தளித்தனர். தலைமை அரசும் அதன் கிளைகளாக மாநில அரசுகளும் , துணை மாநில அரசுகளும் அமைந்தன. ஆறு மலை எல்லைகளைக் கொண்டோ மக்கட் தொகையைக்கொண்டோ மாநில எல்லைகளை அமைப்பது பற்றி ஆராய்ந்தபிறகு மொழிவழியாக மாநிலங்கள் அமைவது தக்கதென்று முடிவு செய்தனர் .

ஒருமொழி பேசும் மாநிலமே ஒரோ வழி இரண்டு மாநிலங்களாகவும் பிரிந்தன.  மக்களைக் காக்கும் நெறிப்பாடுகளாகக் கல்வி - நல்வாழ்வு - உணவு - வேளாண்மை - தொழில் - கூட்டுறவு - சுற்றுச்சூழல் - போக்குவரவு - சிற்றூர் - பேரூரைக் கொண்ட ஊராட்சி - இடர் நேராத வண்ணம் மக்களைக் காக்கும் காவல் முறை - சட்டம் ஒழுங்கு நெறி - குடிசைமாற்று மின் திட்டங்கள் - வடிகால் - நீர் மேலாண்மை எனத் துறைகள் அமைந்தன. நாளும் புதிய பிரிவுகள் தோன்றி மாநில அரசுகள் தம்மைச் செழுமைப்படுத்தின . .

இத்துறைகளைத்தாண்டி அனைத்திலும் உயிரோட்டமாக மொழி - கலை - பண்பாடு முதலிய உயிர்நரம்பாகிய மேம்பாட்டுக் கிளைகள் கல்விப் பிரிவிக்குள்ளேயே முதலில் இணைந்திருந்தன.  ஆங்கில ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் - மக்கள் தொடர்பிலும் ஆங்கிலமே முதன்மை பெற்றிருந்தது.  அந்நிலையிலும் கூட எளிய மக்களுக்கு நாட்டின் நடப்புக்களை அறியுமாறு செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் மக்களுக்கு வாழ்வோடு பின்னியிருந்த அவரவர் தாய்மொழியில் அரசின் ஆணைகளும், விதி முறைகளும் ஊடகங்களின் செயற்பாடுகளும் தாய்மொழியில் வடிவம் பெற்றன. அப்படி அமைந்தவோர்ப்பிரிவு தான் மொழிபெயர்ப்புத் துறையாகும்.

நமது மாநிலத்தில் மக்களுக்கு இயல்பாகவே ஓங்கி ஒளிர்ந்திருந்த தமிழ்க்காதல் தமிழ் வளர்ச்சித்துறையின் தனி வளர்ச்சியாக உருவாயிற்று. தமிழ் வளர்ச்சியே கலைகளையும், பண்பாட்டு நிலைகளையும் வரையறை செய்து மக்களுக்கு வாழ்வியல் வளம் ஊட்டும் பிரிவுகளாகவும் அமைந்தன .

புரட்சித்தலைவர் இந்த நிலையில் 1984 ஆம் ஆண்டு முதன் முறையாக தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையைத் தோற்றுவித்து அரசு செயலாளராக ஒரு தமிழறிஞரை அமர்த்தம் செய்ததும் கண்டு தமிழ் மனங்கள் பெருமை பெற்றன. இந்நிலையில் மொழிப்பற்று குறுகிய நாக்குடையதென்று சிலர் பேசி வந்த போது தமிழ் கூறும் நல்லுலகமே மகிழ்ச்சியில் திளைத்தது. அந்த மகிழ்ச்சியின் நெகிழ்ச்சியில் ஆட்சி நாட்டுப்பற்றும் ,மொழிப்பற்றும் மாந்தநேயத்திற்கு ஊட்டம் அளிப்பன. விடுதலைப்போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய அண்ணல் காந்தியடிகள் உலகளாவிய பரந்தநோக்கில் எண்ணினாலும் இந்திய விடுதலை போலத் தம் வாழ்க்கை வரலாற்றைத் தாய்மொழியாலேயே வரைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

சான்றாக வால்டர் ஸ்காட் எழுதிய கவிதை ஆங்கில நாட்டு மக்கள் நாளும் சொல்லி மகிழும் பாடலாகும்
"ஈதென் சொந்த ஊர்; ஈதென் பிறப்பிடம் 
எனத் தன்னுள்ளே எப்போதாயினும்
உன்னுதற்கு ஒண்ணாத் தன் உணர்வில்லா
ஒருவனேனும் உயிருடன் உளனோ ?
அந்நிய நாட்டினில் அலைந்து பின் தன்னூர்
நோக்கிக் காலடி போக்கிய காலையில்
உள்ளம் குளிரா ஒருவனும் உளனோ ?
இத்தகை ஒருவன் இருப்பனே ஆயின்
சென்று 'அவன் யாவன் ?' என்று நன்கு அறிதி !
உயரிய பட்டம் உடையோன் ஆயினும்
பெயரால் அவன்மிகப் பெரியவன் ஆயினும்
ஆசையே விரும்பும் அளவிலா நிதியம்
படைத்தவனாயினும் பரவசத்துடன்
எப்பாணரும் அவன்புகழ் பாடுதல் ஒழிவர் !
தன்னையே யாவுமாய் உன்னும் இப்புன்மையோன்
இடம்பொருள் ஏவல் இவை இருந்தும் தான்
இருக்கையிலே நல்லிசையெலாம் இழப்பன்.
இவ்வாறு இருமுறை இறந்து இப்பதடி
புலம்புவார் அற்றும் புகழ்சிறிது மற்றும்
பாடல் பெறாதும் பண்டுதான் தோன்றிய
இழிய புன் புழுதிக்கு இழிந்து செல்குவனே !
( மொழிபெயர்ப்பு : கோபால கிருஷ்ணமாச்சார்யார் )

முனைவர் பேராசிரியர் ப மருதநாயகம் எழுதிய பாரதி பதினாறு நூலிலிருந்து .....
இனத்தையும், மொழியையும், நாட்டையும் போற்றிப்பாடிய பாங்கிலேயே உலகநோக்கில் தமிழ்மக்கள் பரந்த மனம் கொண்டவர் என்பதற்குப் பல சான்றுகள் காணலாம். உலகம் என்ற சொல் தமிழ் நூல்களின் தொடக்கமாகும் . "எந்தன் பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திடவேணும் " என்று பாரதியார் பாடினார், அதே மனத்தோடு இத்தாலி நாட்டு மாஜினி பற்றியும், ஜெர்மனியால் தாக்குண்ட பெல்ஜியம் பற்றியும் சோவியத் புரட்சிபற்றியும் கவின்மிகுந்த கவிதைகளை வரைந்ததை நாடு நன்கறியும். இந்த நிலையில் தமிழ் வளர்ச்சி, நாட்டு வளர்ச்சி, உலக ஒருமைக்கு உரமூட்டுவதாகும் என்பதை நாடு முழுமையாக உணர வேண்டும்

"மொழி ஒரு கருவி தானே என்று சிலர் பேசியதுண்டு. உடலும் ஒரு கருவி தானே. உடல் நலவாழ்வுக்கு ஒரு கணம் தவறாமல் விழிப்பும் செலவும் நாட்டில் எத்தனை கோடிகள் செலவாகின்றன. மொழி உயிரோடு பின்னிய உணர்வுச் செறிவாகும்" .

மொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் அப்போது வரைந்த தமிழ்க் கட்டுரை என்னைப் பற்றியதே என்றாலும் தமிழ் வளம் பற்றிய கருத்தை எப்படி அறிஞர்கள் எதிர்நோக்கினர் என உணரலாம்.

புரட்சித்தலைவரின் பொன்மனத்தில் இக்கட்டுரை பெரிதும் கவர்ந்தது என்பதை நாணணிந்து குறிப்பிடுகிறேன். இந்தச் சூழலில் தான் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை என்ற புதிய துறை புரட்சித்தலைவரின் பொன்மனத்தில் பூத்தது .

தமிழ் புரிந்த தனித்தவம் என்றெழுதிய கட்டுரை எந்நாளும் போற்றத்தக்கதாக விளங்குகிறது. தமிழ் வளர்ச்சி - பன்பாடு என்ற பெயரில் தமிழக அரசு இதற்கொரு புதிய அமைச்சகத்துறை ( secretariat ) அமைத்திருப்பது, நமது தமிழக அரசு செய்துள்ள பெரும் புரட்சி, நம் பெருந்தலைவர் மேதகு ம. கோ. இராமச்சந்திரன் அவர்கள் தம் தண்தமிழ்ப் பாங்கினால், தமிழ் மக்களுக்கு அளித்துள்ள, இச் சித்திரைப் புத்தாண்டின் , இதயம் குளிர்விக்கும் நற்பரிசு இதுவாகும் .

அரசின் கீழுள்ள பல துறைகளுக்குரிய கொள்கைகளை வகுத்து வழங்கப் பல அமைச்சகங்கள் ( Ministries ) உண்டு.  அமைச்சர் பெருமக்களின் கருத்தின் படி செயலாற்றப் பல செயலாளர்கள் ( secretaries ) இருக்கின்றனர். அமைச்சர் என்னும் சொல் மந்திரியைக் குறிக்கும். அதே சொல் செயலாளரையும் குறிக்கும். எனவே, அமைச்சர்கள், செயலாளர்களில் துணை கொண்டு ஆட்சி புரிந்து வரும் அலுவலகத்தை அமைச்சகம் ( secretariat ) என்கிறோம். அரசின் உச்ச நிறுவனம் இது.

அரசுத் துறை பலவற்றில், மொழி பெயர்ப்புத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, பழங்கலைத்துறை, அகர முதலித்துறை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பண்பாட்டுத்துறை, இயலிசை நாடக மன்றம், ஓவியக் குழு , சிற்பக் கல்லூரி , இசைக் கல்லூரி ஆகிய துறைகளும் பலவாண்டுகளாக இருக்கின்றன.  உலகத் தமிழ்ச் சங்கமும் விரைவில் இத்துறையின் முயற்சியினால் மலரவுள்ளது.

இந்நாளில், தமிழ் பல வகையில் வளர்ச்சியுற்றுள்ளது என்றாலும், தமிழ்ப் பண்பாடு நிறைந்த மனிதனாகத் தமிழன் வாழ்கின்றான் என்று சொல்வதற்கில்லை. உலக மக்கள் ஒருவருக்கொருவர் கருத்தறிந்து கொள்வதற்குத் திட்டமிடும் நினைப்பை உதறித் தள்ளிவிட்டு மனிதப் பண்புடன் வாழ்வதற்கு வகை செய்வதோ,  உலகத்தின் மிகப் பழம் பண்பாடான தமிழ்ப் பண்பாட்டின் குறிக்கோளாகும்.

பண்போடு வாழ வழி காட்டும் தமிழ்க் கொள்கைகளை, நம் மக்கள் கடைப்பிடிக்கவும், உலகம் ஏற்று மனம் மாறவும், ஆவன புரிவதற்கு இன்னும் சில துறைகளையும் இவ்வனைத்துத் துறைகளையும், ஒருங்கிணைத்துத் தமிழ்ப் பண்பு விளங்கும் தகை சான்ற நோக்கத்துடன் அமைக்கப் பெற்றிருப்பதே, தமிழ் வளர்ச்சி - பண்பாடு அமைச்சகம் ஆகும். புரட்சி மனம் பூண்டு இயங்கும் நம் அரும்பெறல் முதல்வர் பெருமானாரின் அரும் படைப்பு.

'நாடறிந்த நடராசனைத் தவிர, வேறு எவரையும் , இவ் அமைச்சகத்தின் செயலாளராக அமர்த்தியிருந்தால், இவ்வளவு பொருத்தமாக இருந்திருக்காது.  டாக்டர் ஒளவை. நடராசன் அவர்கள், தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு முதலியவற்றிற்கு ஒரு பல துறைப் பண்டகம் (super Market) இவர் பற்றி எந்தச் செய்தியையும் எந்த நேரத்திலும் இரு மொழியிலும் எடுத்தியம்பும், ஆற்றல் மிக்கவுர்; தமிழ்ப் பண்பாட்டின் திருவடிவம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, என் உழுவலன்பின் உடன் பிறந்தாரென நான் போற்றிவந்த, முது பெருந்தமிழ்ச் சான்றோர், உரை வேந்தர் திருமிகு ஔவை சு. துரைசாமி அவர்களின் முதல் திருமகனார் எனக்கு அரும் மகனாரென இயங்குபவர்.

இவரை இவ்வரிய பணிக்குத் தேர்ந்திருப்பது எனக்குத் தனி வகையாக தொரு மன நிறைவையளிக்கிறது. முதல்வர் பெருந்தகையாரின் முழு நம்பிக்கைக்கும் உரியவரென இச்செல்வத் திருவினார், இப்புது அமைச்சகத்தின் புகழ் எங்கெங்கும் மணம் கமழ்ந்து பெரும் பயன் விளையுமாறு பணியாற்றி வர இறைவன் அருள் புரிய இறைஞ்சுகிறேன் .

நமது தவத்தில் தகு பயனாக நமக்கு வாய்த்துள்ள நம் தமிழக அரசு நீடு நிலவுக ! - அதனை உலகம் போற்ற இனிது இயக்கிக் கொண்டு, இந்தப் புது அமைச்சகத்தை அமைக்கும் அருட்பெருஞ்செயலைப் புரிந்துள்ள மாண்புயர் புரட்சித்தலைவர் பெருமானார், பொன்மனச் செம்மலார் பல நலங்களுடன் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி வணங்குவோமாக !

22.4.1984.

தமிழ் வளர்ச்சி பலநிலைகளில் தழைத்தோங்கி ஒளிர்வதும் அறிஞர்களும் - நூலாசிரியர்களும் - மொழிக்காவலரும் - அகவை முதிர்ந்தோரும் - சிந்தனையாளர்களும் நூற்றுக்கணக்கில் புலமைப்பரிசில்களைப் பெற்று மகிழ்வதை நாம் நாளும் கண்டு போற்றுகிறோம் .

ஆயிரக்கணக்கில் அரிய கருவூலங்களை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் - தமிழ்ப் பல்கலைக்கழகமும் - அகர முதலித் திட்ட இயக்ககமும் தமிழின் சீரிய இலக்கியங்களை அயல் மொழிகளில் உரியாரைக்கொண்டு மொழிபெயர்த்து வெளியிடும் மொழிபெயர்ப்புத்துறையும் செயலாற்றுகின்றன .

ஒரு மொழியை எப்படித் தம் நுழைபுலனால் நுணுகி ஆங்கில அறிஞர்கள் நோக்குகின்றனர் என்பதை பொறியாளரும் தமிழ்ப் புதையலுமாக விளங்கும் கனடா அறிஞர் செல்வகுமார் எனக்கு அனுப்பிய ஒரு குறிப்பை அவிழ்பதமாகக் காட்டுகிறேன் .

ஒருமொழியில் ஆளப்பெறும் சொல் வகைகளின் (பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல் முதலானவை) வீதம் மொழிக்கு மொழி மாறுபடும். பேச்சுமொழிக்கும், எழுத்துமொழிக்கும் இடையே கூட மாறுபடும். ஆங்கிலத்தில் சில படைப்புகளை எடுத்துக்கொண்டு அவற்றில் எவ்வளவு பங்கு வினைச்சொல், பெயர்ச்சொல் என்று சிலர் அலசி இருக்கின்றார்கள். ஆபிராகாம் இலிங்கன் அவர்களின் கெட்டிசுபெர்கு உரையை அலசி அதில் உள்ள 272 சொற்களில் கீழ்க்கண்டவாறு சொல்வகைகள் உள்ளன என்று காட்டியுள்ளார் ஒருவர்

ஒன்பது படைப்புகளை எடுத்துக்கொண்டு அவற்றில் இவை எப்படி அமைந்துள்ளன என்று சிறு ஆய்வும் செய்துள்ளார்.

இதுபோலத் தமிழிலும் செய்ய வேண்டிய பணிகள் எண்ணற்றவையாக உள்ளன. அமைச்சர் பாண்டியராசன் சொற்குவைத்திட்டம் தொடங்கியிருப்பது மொழிக்கு வளம் சேர்க்கும் நற்பணியாகும் .

தேமொழி

unread,
May 16, 2021, 2:53:56 AM5/16/21
to மின்தமிழ்
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 74)

“தன்னேரிலாத தமிழ்ப்பல்கலைக்கழகம்”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


மனித வாழ்வு, சுழன்று சுழன்று வரும் வளையம் போன்றதன்று, தொடர்ந்து சிகரத்தை நோக்கிச் செல்லும் முடிவில்லாத முன்னேற்றப் பேருலாவாகும். தானும் ஒருவன் என்ற நிலையில் உலகமக்கள் இணைகிறார்கள். தனி மனிதரை நேற்றினும் இன்று வளர்ச்சியில் மேம்பட்டவன். இன்றினும் நாளை மேலும் மேம்படுபவன் ! இந்த மேம்பாடு நாம் கோல் கொண்டு அளக்க இயலாதது. ஆனால் தொடர்ந்து நிகழ்ந்து வருவது !

வளர்ச்சிக்கு மாற்றம் தேவை. இந்த மாற்றம் தொடர்ந்து தேக்கமில்லாமல் நடைபெறும். தவழும் நிலையிலும் தத்தி நடப்பதாகவும் தாவிக்குதிப்பதாகவும் மாற்றம் விளையலாம். தாவிக்குதித்து முன்னேறுவது போன்ற மாற்றங்கட்கு அடிப்படை அமைப்பது கட்டிடமன்று, திரளும் கூட்டமன்று. தனி மனித மாட்சியாகும் .

எண்ணாயிரம் ஆண்டுகட்கு முன்பு கலப்பையைக் கண்டு பிடித்து வேளாண்மையைத் தொடங்கிய ஒரு தமியன் முதல், இந்த நூற்றாண்டின் நடுவில் கணிப்பொறியைப் படைத்துக் கல்வியுகத்தை உருவாக்கிய அறிவியலாளர் வரை, எண்ணற்ற தனி மனிதச் சிந்தனைச் செம்மல்களுக்கு இந்தச் சமுதாயம் இன்றும் என்றும் கடன் பட்டிருக்கிறது. இனியும் நாம் கடன் படத்தக்க மாற்றங்கள், புரட்சிகள் உருவாகும் என்றே ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறோம் .

புதிய பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் தோன்றிய வரலாற்றுக் குறிப்பை பேரறிஞர் வா செ குழந்தைசாமி அவர்கள் தொடங்கி வைத்ததை அவர்களின் நடையில் காணலாம். ' புதிய பல்கலைக் கழகங்கள் ' என்ற தலைப்பில் பல சான்றுகளையும், புள்ளி விபரங்களையும் திரட்டி ஒரு நீண்ட அறிக்கை தயாரித்துக் கல்விச் செயலரிடம் நான் கொடுத்தேன்.

பின்னர், சில வாரங்கள் கழித்து அன்றைய கல்வி அமைச்சரிடமும் அதைக் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. எனவே, சில மாதங்கள் கழிந்த பின் 1975 இல் விடுதலை ஆசிரியரிடம் கொடுத்தேன். அவர் விடுதலையில் 6.3.75 இல் ஒரு தலையங்கம் எழுதினார். அத்தலையங்கம் எழுதப்பட்ட சில நாட்களில் அன்றைய முதல்வர் அவர்களின் கவனத்திற்கு அது வந்தது. அவர் 13.3.75 இல் திருச்சியில், பெரியார் கல்லூரியில் பேசும்போது திருச்சியிலும், கோவையிலும் இரண்டு புதிய பல்கலைக் கழகங்கள் நிறுவப்படும் என அறிவித்தார். ஆனால் அடுத்த ஆண்டு ( 1976 ) தொடக்கத்திலேயே ஆட்சி கலைக்கப்பட்டது - அறிவிக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள் உருவாகவில்லை .

1978 இல் நான் மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்தபொழுது, அப்பொழுது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த உயர்திரு. ஆர்.எம். வீ அவர்களிடம் கட்டுரையின் படியைக் கொடுத்தேன். மதுரையிலிருந்து திருநெல்வேலி சென்ற அவர், அங்குச் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, கட்டுரையில் இடம் பெற்றிருந்த புள்ளி விபரங்களை விரிவாக எடுத்துக் கூறியிருந்தார்.

அன்றைய தமிழக முதல்வரிடம் தாம் நேரிலும், கல்வி பற்றிய பேச்சு வந்த பொழுது அமைச்சரவையிலும் இப்பொருள் பற்றிக் குறிப்பிட்டதாகவும், பின்னர் பல்கலைக் கழக விரிவாக்கத்திற்கு இக்கருத்துரை பெருந்துணையாக அமைந்தது என்றும் 1980 வரை புதிய பல்கலைக் கழகங்கள் அமைப்பதில் எப்படியோ தவறி விட்ட நாம், அதற்குப் பின் குறுகிய காலத்தில் பல பல்கலைக் கழகங்களை அமைத்தோம். இவை பழைய தேக்கங்களை ஈடு செய்வதற்கே யாகும். அந்த அளவிற்கு அது பாராட்டத்தக்கதே .

தோற்றுவிக்கப்படும் ஒரு புதிய பல்கலைக்கழகம் ஒரு கட்டடம் போலவோ, தொழிற் சாலை போலவோ தொடங்கிய ஒரு சில ஆண்டுகளில் கட்டி முடிக்கப் படுவது அன்று. அது உயிர்ப் பொருள் போல விதையிலிருந்து முளைத்து, கன்றாகி, கொம்பாகி, மரமாக வளர்வது. அதற்குப் பண்பட்ட நிலத்தொடு, நீரும், உரமும் தேவை; காலமும் தேவை. மனத்திட்பமும், வினைத்திட்பமும் இருந்தால் வளர்ச் சியை ஓரளவு விரைவுப் படுத்தலாம். ஆனால் இன்று நட்டு, நாளை மரமாக்குவது இயல்வதன்று. பல்கலைக் கழகங்களை எண்ணிக்கை அளவில் ஈடு செய்யலாம்.

பயனளவில் ஈடு செய்வது எளிதன்று. பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் ஆகிய துறைகள் சார்ந்த பல்கலைக் கழகங்கள் தவிர, மற்ற புதியவை அனைத்தும் குழந்தைப் பருவத்தைத் தாண்ட வில்லை. மேலும் அவை சத்துணவு பெறும் குழந்தைகளாகவும் இல்லை என்று எழுதினார் .அந்த நிலையில் தான் பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகம் புரட்சித்தலைவரால் தோற்றுவிக்கப்பட்டது .

இந்தியப் பண்பாட்டில், நாகரிகத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும் தொன்றுமுதல் இன்றுவரை நமது நாட்டின் கலை, இலக்கியம், சமயம், வாழ்வியல் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புக்கு உரிமையுடையதாகவும் பிறங்குவது நம் தமிழ்மொழியாகும்.  தமிழ் மொழியின் மரபுவழி அமைந்த வாழ்வியல், கலை, பண்பாடு சார்ந்த துறைகளுக்குப் பொலிவும் ,வலிவும் ஊட்டத் தனி நிலையில் பல்கலைக்கழகம் அமைவது பெருமை தருவதாகும் என்று அரசு கருதியது.

தமிழையொத்த தொன்மையும், இந்தியப் பண்பாட்டிற்கு முதன்மையும் கொண்ட வட மொழிக்குப் பல்கலைக்கழகங்கள் சில நிலைகளில் அமைந்துள்ளன. இந்திய அரசின் உதவியும் பல்கலைக்கழக நல்கைக்குழுவின் இசைவும் பெற்று வடமொழிப் பல்கலைக்கழகங்கள் வட மாநிலங்களில் இருந்தன .

இந்த நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதென தமிழக அரசு மேற்கொண்ட முடிவைத் தமிழர்கள் மட்டுமன்றி, இந்திய நாகரிகத்தின், பண்பாட்டின் ஊற்றுகள் அனைத்தையும் ஆழமாகவும், விரிவாகவும் ஆராய வேண்டுமென்ற எண்ணங் கொண்ட அறிஞர் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

' தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகமா ' என்று நயப்போடும், ' மொழிக்கென்று ஒரு பல்கலைக்கழகமா ' என்று வியப்போடும் பலர் வினவ, 1981 - ஆம் ஆண்டில் புரட்சித்தலைவரால் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பெற்றது.  இன்றைய 2021 ஆம் ஆண்டில் நாற்பதாண்டுகள் முடித்துச் செம்மாந்து மிளிரும் முகப்புக் கட்டடம் போல் பல்வேறு வனப்பும் எடுப்பும் வாய்ந்த மாடங்களும் - கூடங்களும் தலை நிமிர்ந்து நிற்கின்றன கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன்கள் போலவே இப்பல்கலைக்கழகத்தில் அமைந்த;
1. கலைப்புலம் 
2. சுவடிப் புலம்
3. வளர் தமிழ்ப்புலம்
4. மொழிப்புலம்
5. அறிவியற்புலம்
என்ற ஐந்து புலங்களும், தத்தமக்குள் பல்வேறு துறைகளைப் பெற்றுள்ளன.

1. சிற்பத்துறை
2. நாடகத்துறை
3. அரிய கையெழுத்துத் துறை
4. நீரகழாய்வு மையம்
5. இசைத்துறை
6. ஓலைச்சுவடித்துறை
7. கல்வெட்டுத்துறை
8. அயலகத் தமிழ் வளர்ச்சித்துறை
9. மொழியாக்கத்துறை
10. சமுதாயவியல் துறை
11. தொகுப்பியல் துறை
12. அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறை
13. இலக்கியத்துறை
14. மொழியியல் துறை
15. தத்துவ மையம்
16. மலைவாழ் பழங்குடி மக்கள் ஆய்வு மையம்
17. நாட்டுப்புறவியல் துறை
18. இந்திய மொழிகள் பள்ளி
19. சித்த மருத்துவத்துறை
20. தொல்லறிவியல் துறை 
21.தொழில் - நில அறிவியல் துறை 
22. கனிப்புறவியல் துறை
23. கட்டடக்கலைத்துறை
ஆகிய இவற்றோடு தனித் திட்டங்களாக அறிவியல், வாழ்வியற் களஞ்சிய மையம்,
பெருஞ்சொல்லகராதித்துறை, நாடகக்களஞ்சியம், தூயதமிழ்ச் சொல்லாக்க அகரமுதலித்துறை ஆகியனவும், பதிப்புத்துறை, கணினி மையம், நூலகம், அருங்காட்சியகம்
ஆகியனவும் அமைந்துள்ளன.

மற்றைய பல்கலைக்கழகங்களைப் போன்ற செயலமைப்பையும், முழுமையான கட்டணக் கல்வி முறையையும், பட்டப்படிப்புக்குப் பயிற்றுவிக்கும் நோக்கையும் கொண்டதன்று இப்பல்கலைக்கழகம்.

இப்பல்கலைக்கழகக் கட்டமைப்பின் அது ஒவ்வொன்றிலும் ஆய்வு உயராய்வு என்ற ஆய்வு மணியே முழங்கும். உலகளாவி வருவோர்க்கெல்லாம் தமிழ் மொழியை, இலக்கிய நலனை, பண்பாட்டை, நாகரிக நலக் கூறுகளை கலை வளங்களைக் கற்பிக்கும் நிறுவனமாக, பண்பாட்டுப் பலகணியாக, ஆய்வரங்காக இப்பல்கலைக்கழகம் திகழ்கிறது.

சீனம், சப்பான், போலந்து, செக்கோசுலோவேகியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா முதலிய பல நாடுகளிலிருந்து வந்த ஆர்வலர்களுக்குத் தமிழ்மொழி, கலை இலக்கியம், பண்பாட்டுக்கல்வி பயிலும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இவ்வாறே தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் உலக நாடுகளுக்குச் சென்று தமிழ் வகுப்பு நடத்துவதும் அயலகப் பல்கலைக்கழகங்களோடு பரிமாற்ற நல்லுறவு கொண்டும் உள்ளது.

ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர் விரிந்து பரந்த நிலப் பரப்பில் தஞ்சைக்கு மேற்கே திருச்சிச் சாலையில் வரலாற்றுப் புகழ் வாய்ந்த வல்லத்தின் கிழக்கில் அமைந்த இப்பல்கலைக்கழகம் அறிவுலகமும் ஆய்வுலகமும் பாராட்டிப் போற்றும் பல்வேறு பயனுள்ள பணிகளை நிறைவேற்றியுள்ளது. வியக்கத்தக்க படைப்புகளையும் ஆய்வு முடிவுகளையும் அறிஞர்கள் வழங்கியது போலவே எளியோர்க்கும் ஏதேனும் செய்ய இயலுமா என்ற நோக்கில் சித்த மருத்துவத்துறை, பொதுமக்களின் நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடு வகைத் தன் வழியாகவும் தொண்டாற்றுகிறது.

நாடகக் கலைத்துறை தேசிய விழாக்களில் ஈடுபடுவதோடு சிற்பக்கலை விழாக்களையும் சிறப்புற நடத்துகிறது. அறிவியல் தமிழ் வளர்ச்சித்துறை, தொழிற்கல்வியில் தமிழ் பயிற்றுமொழியாகப் பெருந் துணைசெய்யும் நூல்களைப் படைப்பதோடு எளிய மக்களுக்கும் அறிவியல் கருத்துகளைப் பரப்பும் பணியையும் கணிம வழியாகவும் ஏற்றுள்ளது.

இலக்கியத்துறை மக்கள் பதிப்புக்களாகப் பேரிலக்கியங்களை எளிய நடையில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அரிய விலையில் பழம் பதிப்புகள் வெளிவந்தமையும் குறிக்கத்தக்கது. பிற துறைகளும் மக்கள் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளத் திட்டங்களை உருவாக்குகின்றன. தொல் கடல் விளிம்பு நிலையை வரையறுத்த வகையில், தேசிய அறிவியல் தகுதியைப் பெற்றதும் இப்பல்கலைக்கழகமேயாகும்.

தமிழ் என்பது மொழி மட்டுமன்று, கலை, நாகரிகம், பண்பாடு, வாழ்க்கை முறை, வழிகாட்டும் நெறி ஆகிய அனைத்தையும் விரிந்த முறையில் தன்னகத்தே அடக்கிக் குறிப்பிடும் குறியீடாகும். இக் குறியீட்டிற்குரிய அனைத்தையும் பேணுதலை இப்பல்கலைக்கழகம் தன் கடனாகக் கருதுகிறது.

இருபது நூறாண்டுக் கால மொழி வளர்ச்சியோடு பண்பாட்டு வரலாற்றையும் சமூக , இலக்கிய , கலை, அறிவியல் மாட்சியையும் கொண்டும் கொடுத்தும் உலகம் முழுதும் இப்பல்கலைக்கழகம் உறவு கொள்ளும் வாயிலாகவும் முற்பட்டுள்ளது.

ஆயிரம் வேலி மனைப் பரப்பென்பது தமிழ் மொழியின் பரந்துபட்ட தன்மையையும், உயர்வுள்ளிப் பணியாற்றும் நிமிர்ந்த அலுவலக மாடம் இம்மொழியின் நிலை உயர்ச்சியையும், கட்டட மாட்சியின் கலையழகையும் பண்ணார் தீந்தமிழின் கவினையும் உருவகப்படுத்துவ தோடு இந்நாளைய அறிவியற்கலைகள் அனைத்தையும் தன்பால் ஏற்கும் தன்மை, புதியனவற்றை உவந்தேற்றுக்கொள்ளும் மாறா இளமைத் தன்மையைக் காட்டுகிறது.

அருமை உடைத்தென்று அசா அவதோடு அறிவறிந்த ஆள்வினையால் முயன்று உரிய குறிக்கோளை எய்தி மகிழ்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னோக்கி நடை பயில்கிறது.
         அறத்தாறாய்ச் செந்தமிழை ஓம்பின்
         புறத்தாற்றின் போஒய்ப் பெறுவ தெவன்.

நான் அப்போது வழங்கிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 1993 - 94 ஆம் ஆண்டுச் செயன்மைகளை இந்த வரைவு குறிப்பிட்டுள்ளது .

இருபதாண்டுகளுக்கு முன்னால் இது வரையப்பட்டது, இன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது.  பெரும் புகழ் பெற்றவர்களால் பொலிவோங்கி வருகிறது. தஞ்சைக்குப் பெருவுடையார் திருக்கோயில் பெரிய கோயிலாக விளங்குகிறது. புரட்சித்தலைவர் தமிழகத்துக்குக் கட்டிய தனிப்பெருங்கோயில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமாகும் .

தொடர்வோம் ...

பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை

- ஒளவை நடராசன்
thamizhavvai[at]hotmail.com
---

தேமொழி

unread,
May 17, 2021, 11:54:40 PM5/17/21
to மின்தமிழ்
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 75)

“ஆக்சுபோர்டுக்கு அவனியே தலை வணங்குகிறது !”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தமிழகத்தின் கடந்த ஐம்பதாண்டுக் கல்வி வளர்ச்சியை மதிப்பிடுவோமாயின், ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் பள்ளிக் கல்வியில் ஆர்வம் செலுத்தினோம். எழுபதுகளிலும் அதன் பின்னரும் புதிய கல்லூரிகள் பல நிறுவினோம். எண்பதுகளிலும், அதற்குப் பின்னும் பல்கலைக் கழகங்களை உருவாக்குவதில் ஈடுபாடு காட்டினோம். இவை மூன்றும், அதனதன் அளவில் முதன்மை வாய்ந்தவை. பல்கலைக் கழக வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்கத்தை ஈடு செய்ய நாம் முயன்று செய்ய வேண்டிய திட்டங்கள் பல. அவற்றுள் முதலாவது நிதி நிலையைச் சீர்ப்படுத்துவதாகும்.பல்கலைக் கழகத்திற்கு நிதி வரும் வழிகள் பின் வருமாறு - இப்போது நடைமுறையில் இருப்பவை சில :
1. மாநில அரசின் திட்டம் சாராத நிதி ஒதுக்கீடு (Block Grant )
ii. மாநில அரசின் திட்ட நிதி ஒதுக்கீடு.
iii. பல்கலைக் கழக நல்கைக் குழுமத்தின் ( ப.ந .கு. ) திட்ட நிதி ஒதுக்கீடு.
iv. மாணவர்கள் பயிற்சிக் கட்டணம்; தேர்வுக் கட்டணம்.
v. பல்வகை நிறுவனங்கள், ஆய்வுத் திட்டங்கட்காக அவ்வப்போது வழங்கும் நிதி
vi. அயல்நாட்டு அரசு மற்றும் அயலக நிதி நிறுவனங்களிடமிருந்து மைய அரசு வழியாக பெறும் நிதி உதவி.

அயலக உதவி அத்தி பூத்தாற் போல் வருவது. இவை இரண்டும் வருவாயில் சேர்வன அல்ல. மேலும் இவை வளர்ந்த பல்கலைக் கழகங்கட்கே வாய்ப்பவை. வளரும் நிலையிலுள்ளவற்றிற்குக் கிடைக்கும் வசதிகள் அன்று. மாணவர் பயிற்சிக்கான வருமானம் மிகக் குறைவானது தேர்வுக்கட்டணமும் அளவால் குறைந்தது .. எனவே பெருவாரியாகப் பல்கலைக் கழகங்கள் மாநில அரசின் நிதி உதவியைத் துணைக்கொண்டுதான் செயற்படுகின்றன.

பல்கலைக்கழக நல்கைக் குழுமம் ( ப.ந.கு ) ஒரு புதிய பல்கலைக் கழகத்தைத் தொடர்வதற்கோ , தொடக்க கால வளர்ச்சிக்கோ நிதியுதவி அளிப்பதில்லை. பல்கலைக்கழகச் சட்டத்தின் 12.B பிரிவின் படி நிதி உதவிக்குத் தகுதியுளது என இசைவு பெறுவதற்கே ஒரு பல்கலைக்கழகம் ஓரளவு வளர்ந்திருக்க வேண்டும்.

மேலும் பல்கலைக்கழக நல்கைக் குழுமம் காப்புச் செலவை ஏற்பதில்லை. அதற்கு நிதி அளிப்பதில்லை. பல்கலைக்கழக மேம்பாட்டிற்காக மட்டுமே ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்திலும் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு ( Plan Grant for Development ) செய்கிறது. திட்ட கால மேம்பாட்டின் அடிப்படையில் வரும் தொடர் செலவைத் திட்ட காலத்திற்குப் பின் மாநில அரசு ஏற்க வேண்டும். ப.மா.கு. உயர் நிலை ஆய்வு மையம் ( Centre of Advanced Studies ), சிறப்புதவி ஆய்வுத் துறை ( Department of Special Assistance ) மற்றும் சில வகைகளில் நிதியுதவி வழங்குகிறது. இவை ஒரு சில பல்கலைக் கழகங்களிலுள்ள அனைத்திந்திய அளவில் தகுதி பெற்ற துறைகள் மட்டுமே பெறத்தக்கன. தேசிய அளவில் இசைவு பெறும் அளவிற்கு வளர்ந்த துறைகளே இவ்வாய்ப்புகளைப் பெறுகின்றன.
பல்கலைக் கழகத்தின் கட்டுமானக்காப்பு, ஆசிரியர் ஊதியம், நிருவாகச் செலவு, நூல் நிலையச் செலவு, சோதனைச் சாலைகட்கான நடைமுறைச் செலவு, ஆய்வு மாணவர்களைப் பெரிய எண்ணிக்கையில் ஊக்குவிப்பதற்கான ஆய்வுப் புலமைத் தொகை, புதிய துறைகளை உருவாக்குதல், மற்றும் மாணவ, மாணவியர் விடுதி, ஆசிரியர் குடியிருப்பு போன்றவற்றில் பெரும் பகுதி, போன்றவற் றிற்கான நிதி உதவி மாநில அரசின் திட்டம் சாரா நிதி ஒதுக்கீடு (Block Grant), திட்டம் சார்ந்த நிதி ஒதுக்கீடு இவற்றின் மூலம்தான் வரவேண்டும்.

இதற்கான நிதியை மற்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கணிசமான அளவில் ஒதுக்குகின்றன. ஆனால் என்ன காரணத்தாலோ ஆளும் கட்சி எதுவாக இருந்த போதிலும், வேறுபாடின்றிப் பல்கலைக் கழகத்திற்கு நிதி ஒதுக்குவது மாநில அரசின் பொறுப்பு அல்ல என்பது போன்ற மனநிலையிலேயே தமிழக அரசு நடந்து வந்திருக்கிறது. நாம் கூறுவது பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற தொழில் சார்ந்த பல்கலைக்கழகங்கள் தவிர்த்து, மற்ற பொதுப் பல்கலைக் கழகங்கள் அனைத்திற்கும் பொருந்தும் என்று பேரறிஞர் வா செ குழந்தைசாமி எழுதிய கட்டுரையில் சுட்டியிருப்பதைக் காணலாம். ஒரு பல்கலைக்கழகம் தான் வைத்துள்ள நிதி வளத்தால் தான் நிலைபெற்று விளங்கும். தனியார் நிதியத்தால் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் வற்றாத வளத்தோடும் வலிமையோடும் விளங்குகின்றன.

வளரும் நாடுகளில் இது ஒரு பெரிய தொல்லை தான். சான் ஏறினால் முழம் சறுக்கும் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பான எழுச்சி ஊட்டவேண்டும், விதியை மாற்றுவது நிதி தான். இந்நிலையில் உலகையே கலக்கி நம்மை ஒடுக்கிருக்கும் தீநுண்மிக்குத் தடுப்பூசியை உருவாக்க ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட அயராத முயற்சியையும் விளைவையும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்ட அறிக்கையும் நம்மை கை கூப்ப வைக்கிறது. இதன் மொழிபெயர்ப்பு வருமாறு :
இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்காவில் பல்வேறு இனஞ்சார்ந்த புவியியல் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சோதனைகள் இப்போது நிறைவடையும் ஆய்வினை நோக்கித்தொடந்து நடத்தப்படுகிறது. மேலும் அமெரிக்கா, கென்யா, ஜப்பான் மற்றும் இந்தியாவிலும் இச்சோதனைகள் நடத்தப்படுகின்றன.  மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 60,000 பேர் சோதனை முயற்சியாக பங்கேற்பார்கள் என மருத்துவஆய்வுக் குழு எதிர்பார்க்கிறது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசியேற்றுக் கொண்டவரிடம் செயல்படும் திறன் மற்றும் பாதுகாப்புப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கும், இனி COVID-19 பரவுவதற்கு எதிராகவும் தடுத்து நிறுத்துவதற்கும் திறனைக் கொண்டிருக்கும்.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ( ChAdOxt nCov-19 ) ஒரு தீநுண்மிக்கலப்பால் உருவாக்கப்படுகிறது, சிறு இயல்பான சளிக்குக்காரணமான வைரசின் ( அடினோவைரஸ் ) வகைப்பாடு சார்ந்தது ஆகையால் இதன் மரபணு மாற்றப்பட்டிருப்பதால் நம் உடலில் வளர இயலாது.

கடந்த பல பத்தாண்டுகளாக அடினோவைரஸ் தடுப்பூசிகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு விரிவாக மருந்துகள் பயன்படுகின்றன, மேலும் அவை நிலையானவை, எளிதாக உற்பத்தி செய்யப்படுபவை, எளிதாகக் கொண்டு செல்லப்படுபவை மற்றும் நம் இல்லங்களில் பயன்படுத்தக்கூடிய குளிர்சாதன பெட்டியின் வெப்பநிலையில் (2-8 டிகிரி சி) சேமிக்கப்படகூடியவை. இந்த தடுப்பூசி அனுமதிக்கப்படுமாயின் அதாவது இது மருத்துவரின் அறுவை சிகிச்சைகள் மற்றும் உள்ளூர் மருந்தகங்களின் மருத்துவ வசதிகளைப் பயன்படுத்தி மிக விரைவாகப் பயன்படுத்தப்படக்கூடும். ஆஸ்ட்ராசெனெகாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்த செயற்பாடு தடுப்பூசி வெற்றி காணும் வளர்ச்சிக்கு முதன்மை பெற்றது உலகளாவிய உற்பத்தி மற்றும் பயன்பட்டுக்கு இது எளியதாகும்.

அஸ்ட்ராசெனெகா முப்பதுக்கும் மேற்பட்ட விநியோகத்திற்கான ஒப்பந்தங்கள் மூலமாகவும் இணைய வழிப் பங்குதாரர்கள் வாயிலாகவும் ஏற்கனவே மூன்று பில்லியன் அளவிலான தடுப்பூசியை மேலும் வழங்க அனைத்துலக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்நாள் குறிப்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கும் பொதுவாக நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சிறந்த நன்னாளாகும். உலகெங்கிலும் உள்ள நுண்ணியல் அறிஞர்களிடம் இணைந்து நம்முடைய ஆக்கத்தினை அறிவின் மன்பதையினை நல்வாழ்வுக்காகப் பொதுவாக பயன்படுத்துவதை நாங்கள் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றுகிறோம்.

" பாஸ்கல் சொரியட் நுண்ணுயிர்த் துறைகளின் பேராண்மைத்தலைவர் இது தொடர்பாகக் குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது :
இன்றைய நாள் தொற்றுநோய்க்கு எதிரான எங்கள் தொடர் போராட்டத்தில் வெற்றி விடியலைக் காட்டுவதை முதன்மைனயாதாகக் குறிக்கிறது. இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு COVID - 19 க்கு எதிராக பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பதையும், நம் நல்வாழ்வின் நெருக்கீட்டுக்கு பெரும்பயன் ஏற்படுத்தும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

மேலும், இத்தடுப்பூசி மலிவானது மற்றும் உலகளவில் கிடைக்கக்கூடியதாக அமையும் எனவும் ஒப்புதலின் பேரில் நூற்றுக்கணக்கான மில்லியன் அளவுகளை நிறுவனம் வழங்கும் எனவும் தடுப்பூசியின் உருவாக்க விற்பனைகளை தொடரும் அணுவளவும் ஆதாயமற்ற உணர்வோடு உரிய நேரத்தில் நம் கைக்கு நற்பேறாய் அமைந்துள்ளது. ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்துக்கு அவனியே தலை வணங்குகிறது.

உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் நுண்ணியிரியல், மரபணுவியல், தீநுண்மித் திறனாய்வியல், மருந்தாக்கவியல், உடலாய்வியல் முதலிய துறைகளைச் சேர்ந்த பேரறிஞர்கள் வேண்டிய பொதுநல மேம்பாட்டையும் இந்த ஆய்வுக்கு ஓயாத உழைப்பாற்றியுள்ளனர். பேராய்வறிவின் பிழம்பாகத்தான் தடுப்பூசி மருந்து நம் கைக்கு நம் கைக்கு நற்பேறாய் அமைந்துள்ளது.

20 - 9 - 1983 - ஆம் நாளன்று அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அன்னைப் பல்கலைக்கழகமாகிய சென்னைப் பல்கலைக்கழகம் புரட்சித் தலைவருக்கு அவருடைய பொதுப்பணிகளைப் போற்றி Doctor of Laws ( Honoris Causa ) `டாக்டர் ` பட்டம் வழங்கிச் சிறப்பித்தது .
30 - 10 - 1983 அன்று மாலை ஏவிஎம் திருமண மண்டபத்தில் தமிழக மக்களின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்து அன்னையார் கவியரசி திருமதி. சௌந்தரா கைலாசம் பாராட்டிச் சூட்டிய பாமாலை இங்கே நினைவு கூரலாம் .இந்தப்பாடல் பொன்னெழுத்தால் பொறிக்கத்தக்க புகழுரையாகும் .

பேருலகில் வாழ்கின்ற மனிதர் யாரும்
பெரும் பயனை முயற்சியினால் அடையு மாறு
சீருடைய கலையறிவு வழிகள் கூறும் ;
சிறத்தபுகழ்க் கோபுரத்தில் ஏற்றி வைக்கும் ;
காரியங்கள் யாவையிலும். வெற்றிப் பெண்ணைக்
கைகோத்து நடக்கின்ற வாய்ப்பை நல்கும் !
கூரிய நல் லறிவாலே எய்து தற்குக்
கூடாத தொன்றிந்தப் புவியில் உண்டோ ?
அத்தகைய நல்லறிவை அனைவ ருக்கும்
ஆர்வமுடன் தருகின்ற அரிய தொண்டில்
இத்தரையில் மிகச்சிறந்து விளங்கு கின்ற
எழிலார்பல் கலைக்கழகம் நமக்குச் சொந்தம் !
மெத்த நலம் உண்டாக்கி மானு டத்தை
மென்மேலும் மிளிர்கின்ற வண்ணம் செய்யும்
எத்துணையோ கழகங்கள் இருந்த போதும்
எம்சென்னைக் கழகத்துக் கீடும் ஏது ?
சென்னைப்பல் கலைக்கழகப் பட்டம் பெற்றார்
திறமைய தன் மறுபெயராய்த் திகழ்வார் என்று
மன்னுலகில் அறிஞரெலாம் சொல்வா ரென்றால்
மாட்சியினை உரைப்பதற்கு வார்த்தை இல்லை !
பொன்னுலகாய் இவ்வுலகைச் செய்யப் போந்த
பொன்மனத்துச் செம்மலுக்கு முனைவர் பட்டம்
நன்னயமாய் அக்கழகம் தந்த தென்றால் -
நம் தலைவர் பெருமையினை அளக்கப் போமோ ?
குமிழ் சிரிப்பால் புவிமுற்றும் கொள்ளை கொண்டு
கும்மாள மிடுமிளைய பிராயம் தன்னில்
உமிழ்கின்ற எச்சிலதும் உலர்ந்து போக,
உணவின்றி மிகவாடும் சிறுவர்க் கெல்லாம்
அமிழ்தென்ற சத்துணவை அளிக்கும் தூய
அன்புக்கும் பெரும்பட்டம் தந்தா ரன்றித்
தமிழ் நாட்டு முதல்வரெனும் பதவி யிங்கே
தாங்குகின்ற காரணத்தால் தந்தா ரில்லை !
மனிதருளே மனிதரென யாரும் போற்றும் 
மனிதாபி மானியிவர் ஆத லாலே
முனைவரெனும் பெரும்பட்டம் தேடி வந்து
முறுவலித்துப் பெயர்முன்னம் இணையக் கண்டோம் !
அனைவருமே நெஞ்சத்தில் பொங்கிப் பாயும்
ஆனந்த வெள்ளத்தில் திளைத்த வாறு
மனம் நிறையப் பாராட்டித் தமிழாற் செய்த
மாலையினைச் சூட்டுகின்றோம் ! வாழி ! வாழி !

தேமொழி

unread,
May 21, 2021, 1:00:46 AM5/21/21
to மின்தமிழ்
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி -  76)

“புரட்சித்தலைவருக்கு ஒரு புகழாரம்”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

வங்க மாநில நீதியரசர் அசுதோசு முகர்சி பேரறிவாளர். கணக்குத்துறையில் கற்றறிந்த ஆய்வுப் பெருந்தகை தமது கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணக்கியல் ஆய்வுப் பேராசிரியராக வாழ்க்கையை நிறைவு செய்ய விரும்பினார்.  அப்பேராசிரியர் இருக்கைக்குரிய நிதியத்தைப் பெறமுடியாது போனதால் பின்னர் சட்டத் துறையில் சேர்ந்தார்.  தொட்ட அந்தத் துறையில் பெரிய வெற்றிகளைப் பெற்றார்.  வங்கத்தில் புகழோங்கிய நீதியரசரானார். தாம் பயின்ற பல்கலைக்கழகத்தை அவர் எப்போதும் கண்ணாகப் போற்றினாராம். 

அமெரிக்கக் குடியரசுத்தலைவராக மாபெரும் புகழோடும் பெருமையோடும் விளங்கிய பல்கலை வித்தகர் தாமசு செபர்சன் தனது மறைவுக்குப்பிறகு தன் கல்லறையில் "வர்ஜினியா பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவர்" என்றெழுதினால் போதும் என்றாராம்.  குடியரசுத்தலைவர் பதவியை விட ஒரு பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் என்ற புகழே பொன்றாப் பெருமையுடையது என்றார். 

அறிஞர் பல்கிவாலா முகர்சியின் 125 ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய போது இவ்வாறு குறித்தார்.  ஒரு பல்கலைக்கழகம் அந்த வகையில் அறிவின் ஊற்றாக, கலைக் கருவூலமாக, சிந்தனை வயலாக ஒரு நாட்டின் மணிமகுடமாக மிளிர்கிறது. 

தாம் தொடங்கிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நாளும் புரட்சித்தலைவர் நினைவு கூர்ந்தார். விமானத்தில் பறந்து வரும்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முகடுகளில் தமிழ் என்ற பெயர் தெரியவேண்டுமென்று விழைந்தார்.
அமெரிக்கத்தமிழர், கனடாத்தமிழர், தென்னாப்பிரிக்கத்தமிழர், மோரிசுத்தமிழர், மலேசியத்தமிழர், சிங்கப்பூர்த்தமிழர் என்ற பெயர்களில் பிரிவுகள் அமைய வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்துகிற நிகழ்வுகளில் அந்த நாடுகள் பங்கு பெற வேண்டும் என்று ஒருமுறை கூறி அதற்குரிய பெருந்திட்டத்தை வகுக்கவேண்டும் என்று கருதினார்.  புரட்சித்தலைவரின் புகழேட்டில் தமிழ்ப் பல்கலைக்கழகம் பெருஞ்சிறப்பைத் பெறுவதாகும்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராகிய அறிஞர் வி ஐ சுப்பிரமணியம் அவர்களிடம் இதுபற்றிப் புரட்சித்தலைவர் பேசினார். அறிஞர் வி ஐ சு பல்வேறு பல்கலைக்கழகங்களையும் பன்னாடுகளையும் நன்கறிந்தவர். தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் தங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்விருக்கையைத் தொடங்குவார்கள், முனைவார்கள். சிலர் முயன்று பாதிவழி தாண்டியுள்ளனர். ஏக தேசம் முழு வெற்றி பெறுவார்கள் என்றார்.  புரட்சித்தலைவரின் முன் அவர் மொழிந்ததை வியப்போடு பார்த்தார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்திலேயே அயல்நாடு தமிழர் ஆய்வுத்துறை என்ற ஒரு துறையைத் தொடங்கியிருக்கிறேன் என்று கூறினார். உலகத்தமிழர்களின் ஒருமையை அவர் எப்போதும் விரும்பியிருந்தார். மாநிலங்களாக, நாடுகளாக இனத்தவராகப் பிரிந்தாலும் அவரவர்களின் மொழி உரிமை, பெருமை, பன்னாட்டு - நலத்தை வளத்தைக் காக்க வேண்டும் என்று எப்போதும் கூறி வந்தார்.

வார்சா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் - திராவிடப் பல்கலைக்கழகத்தில் இணை வேந்தராகவும் பணியாற்றிய பெருமை கொண்டவர்தான் இப்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தை அணி செய்யும் துணைவேந்தர் கோ பாலசுப்ரமணியன் ஆவார். துணைவேந்தரின் வழிகாட்டுதலின்படி அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறையில் பேராசிரியராகப் புகழோடு திகழும் இரா குறிஞ்சிவேந்தன் இளமையும் - புலமையும் - தலைமையும் கொண்டு பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்தந்த நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ்க்கல்வி வளர்வது பற்றி எழுச்சியூட்டி ஆர்வம் காட்டி அரும்பணியாற்றுகின்றனர். 

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுடன் தொடர்பினை வலுப்படுத்துதல் – அதன் மூலம் அவர்களின் இலக்கியம் மற்றும் பண்பாட்டினைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள துணை நிற்றல் – அயலகத்தில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு இலக்கிய – இலக்கணப் புத்தாக்கப் பயிற்சிகளை வழங்குதல் – அயலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க உதவுதல் – இன்ன பிற கல்விப்பணிகளோடு புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில், தமிழ்ப் பள்ளிகளை ஏற்படுத்தி அதன்வழி தமிழ்க்கல்வியை மேம்படுத்துதல் ஆகிய பணிகளைத் துறை சார்பாகத் தமிழ்ப்பல்கலைக்கழகம் ஆற்றி வருகிறது.

நாடாளுமன்ற பேரவைத்தலைவராக இருந்த பலராம் ஜாக்கர் புரட்சித்தலைவரைப்போற்றியுரைத்த உரை சிறப்பானது.
மிகவும் உன்னதமான இந்த நாட்டில், உன்னதமாக நடைபெறுகிற இந்த விழாவில், உன்னதமான நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கொரு பேறு என்று நான் கருதுகிறேன்.  நீங்கள் தமிழக முதல்வர் எம். ஜி ஆர். அவர்களை மிக நன்றாக அறிந்தவர்கள். தெரிந்தவர்கள் மட்டுமல்ல நீங்கள் அவரை நன்றாகப் பார்த்தவர்கள். ஒன்றாக உங்களுக்குள் கலந்தவர்.
இன்று முதல்வராக இருக்கிறார் என்பது மட்டுமல்ல அவரைப் பல்லாண்டுக் காலம் தமிழ் நாட்டு மக்கள் அறிந்திருக்கிறார்கள். முதல்வரை இரு வேறு நிலைகளில் தமிழக மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். உன்னதமான ஒழுக்கம் நிறைந்த குண இயல்புகளையே நடித்துப் புகழ்பெற்ற நடிகராகத் திரைப்படங்களிலே அவரைப் பார்த்திருக்கிறீர்கள்.  அதேபோல அரசியல் வாழ்க்கையில் தன் ஆற்றலைக் காட்டுபவராகவும் அவரை நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். 

என்னுடைய கல்லூரி முதல்வர் நாங்கள் கல்லூரி நாடகங்களில் நடித்த போது சொன்னதொன்றை இப்போது நினைவு கூர்கிறேன். ''நடிப்பது என்று சொன்னால், அதுவும் உண்மையானவராக நடித்துக் காட்டுவது என்று சொன்னால், வாழ்க்கையில் அந்த உண்மை ஒளி உள்ளவர்களால் தான் உண்மையானவராக நடித்துக் காட்ட முடியுமே தவிர, நடிப்பு வேறு வாழ்க்கை வேறு என்று அமைத்துக் கொண்டவர்களால் அப்படி நடிக்க முடியாது " என்று அவர் கூறினார் .
நாடகத்தில் நடித்தார். படங்களில் நடித்தார் என்பது மட்டுமல்ல. இந்த உலகத்தையே நாடக மேடை என்று தான் அறிஞர் பெருமக்கள் சொல்வார்கள்.  நாமெல்லாம் இந்த உலகத்தில் பிறந்த நடிகர்கள் தாம். இந்த நடிகர்களுக்குள் மாட்சிமை தாங்கியவராய் மக்கள் திலகம் திகழ்ந்தார் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் !

எனக்கொரு வடமொழி சுலோகம் நினைவுக்கு வருகிறது.  மனிதர்களை விலங்குகள் என்று எடுத்துக்கொண்டு பார்த்தால், பசி, தூக்கம், விருப்பம் இவைகளெல்லாம் இருவருக்கும் ஒன்று தான். ஆனால், மனிதர்களை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால் அறம் சார்ந்த ஒழுக்கம் தான் மனிதனை மாட்சிமைப்படுத்துகிறது.
அந்த வகையில் அறம் சார்ந்த ஒழுக்கத்தில் நம்பிக்கையும், உறுதிப்பாடும் கொண்ட மனிதன் தான் உலகத்தில் விலங்குகளிடமிருந்து வேறுபட்ட உயர்ந்த மனிதனாக - தலையாய மனித னாகத் திகழ்வான் என்று அந்தப் பாடல் சொல்கிறது.

அந்த வகையில் தான் மனிதர்களிலிருந்து வேறுபட்ட தலையாய மனிதராகப் - புகழ் வாய்ந்த சிகரமாகத் தமிழக முதல்வர் திகழ்கிறார்கள். அவர் நாட்டு மக்களை எந்நாளும் வாழ்க்கையில் மறந்ததில்லை. அவர்களுக்குக் கடமையாற்றுவது. அவர்களுக்கு நலம் செய்வது தான் வாழ்க்கையின் " உயிர்ப்பு என்ற உறுதியில் உங்கள் முதல்வர் இருக்கிறார். அவர் அதிகாரத்தைத் தேடிவந்ததில்லை. அதிகாரம் அவரையே தேடி வந்திருக்கிறது என்பதனால்தான்-அரசு அவரை நாடி - வந்திருக்கிறது. மக்களின் கரவொலியே அதற்குச் சான்றாகத் திகழ்கிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

வாழ்க்கையில் ஏழ்மை நிலையிலேயிருந்து நடிப்புத்துறையில் படிப்படியாக வளர்ந்து, நாட்டு மக்களின் மனங்களைக் கவர்கின்ற மகத்தான நிலைக்கு அவர்கள் உயர்ந்திருக்கிறார்கள்.  இது தான் இந்திய அரசியலின் நோக்கமும் ஆகும். எளிமையில் இருக்கிறவர்கள், வறுமையில் உழல்பவர்கள், மக்களின் துயரங்களைக் காண்பவர்கள், தங்களுடைய நேர்மையினாலும், நெஞ்சுரத்தினாலும், அஞ்சாத கடமை உணர்ச்சியாலும், எவ்வளவு பெரிய உன்னத நிலைமையை அடையலாம் என்பதற்குக் அவரே சான்றாகத் திகழ்கிறார்.  

எல்லா வகையிலும் முன்னிலையில் நிற்கிற உங்கள் தமிழகம் மகத்தான இந்திய வீரர்களை, அரசியல் தலைவர்களை, ஆன்றோர்களை, சான்றோர்களை ஈன்றெடுத்திருக்கிறது- அந்தப் புகழ் வாய்ந்த வரிசையிலேதான் உங்கள் முதல் வரும், முன்னணியில் திகழ்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுகிறேன்.

மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவரோடு நான் உரையாடிக் கொண்டிருக்கிறபோது சொன்னார்கள் : 
தமிழக அரசு தன்னுடைய பதவி ஏற்ற காலத்திலிருந்து நாடறிந்த பொதுமக்களுக்கும், தியாக சீலர்களுக்கும் பிறந்த நாள் விழாக்களை மிகச் சீரோடும் சிறப்போடும் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
உங்கள் முதல்வர் எந்த இயக்கத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், நாட்டுக்கு நலம் செய்த நாயகர்கள் என்கிற அடிப்படையில் எல்லா வேறுபாடுகளையும் மறந்து அத்தனை பேரையும் உத்தமர்கள் அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டும் என்ற உணர்வோடு தியாகச் சுடர்களுக்கு விழாக்களை நடத்தி வருகிறார் என்பதை நான் கேள்விப்பட்ட போது அனைவரையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற நன்மனம் முதல்வர் அவர்கள் பெற்றிருப்பதை என்னால் உணரமுடிகிறது.

நான் சென்ற முறை உங்கள் முதல்வரோடு மிக நெருக்கமாகவும் மனங்கனிந்தும் உரையாடியபோது அவருடைய உணர்வோ நாட்டு மக்களை ஏழ்மையிலிருந்தும், வறுமையிலிருந்தும் ஈடேற்ற வேண்டுமே என்ற ஒரே அடிப்படையில் ஆழ்ந்து கிடப்பதை, நான் காண முடிந்தது. மக்களையெல்லாம் நாடாளுகின்ற மன்னர்கள் என்று சொல்வோம். அந்த மன்னர்களுக்கெல்லாம் மன்னர். ஒரு மன்னாதி மன்னன் யார் ? என்று இந்த மக்களைக் கேட்டால், உழவரைத் தான் குறிப்பிடுவார்கள்.

வேளாண் குடியில் பிறந்தவன் தான் அத்தனை பேருக்கும் உணவு தருகிறான் என்பதால் அந்த மன்னாதி மன்னனாகவே, உங்கள் முதல்வர் ஐம்பது நாடுகளுக்கு மேற்பட்ட வர்கள் கலந்து கொண்ட  காமன் வெல்த் என்னும் பொதுநல நாடுகளின் தலைவர்களோடு நான் உரையாடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. காமன்வெல்த்து நாடுகளின் தலைவர்களுக்கெல்லாம் நடைபெற்ற ஒரு விருந்தில் மூன்று பிரதமர்களோடு நான் உரையாடினேன். ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர், கயானா நாட்டுப் பிரதமர், பிரான்சு பிரதமர் ஆகிய மூவரும் என்னிடம் உரையாடினார்கள். 

அவர்கள் உரையாடி இந்திய தேசியத் தலைவர்களையெல்லாம் புகழ்ந்து, நமது பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் நிர்வாகத் திறமையையும் பாராட்டிப் பேசினார்கள் . இவர்களெல்லாம் பேசியதற்கு விடை தந்து பாரதப் பிரதமர் உரையாற்றுகிற போது "எங்கள் நாட்டுத் தலைவர்களையெல்லாம் பாராட்டினீர்கள் என்பது உண்மைதான். அவை மகிழ்ச்சி தருவது உண்மைதான் என்றாலும் கூட இந்த நாட்டின் வளர்ச்சி, இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றம் எல்லாம் ஏழை உழவனுடைய கைகளிலே தான் இருக்கிறது '' என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறினார்கள்.

அம்மையார் அவர்கள் கூறிய கருத்தை நான் எண்ணிப் பார்க்கிறபோது எந்தெந்தக் கட்சிகளிலே நாடு இருந்தாலும், உண்மையான உணர்வுகள் என்ற அடிப்படையில் அத்தனை பேரும் ஒன்றுபட்டிருக்கும் வாய்ப்பு இருக்கிறது.  அவர்கள் பல்வேறு துறைகளிலே இருந்தாலும் அவர்கள் ஒரே வகையான கருத்தை உடையவாராகத்தான் இருக்கிறார்கள்.  ஏழை உழவனின் மேம்பாடுதான் சிறந்த பண்பாடு என்பதை சுட்டிக் காட்டுகிற வகையில் அனைவருடைய கருத்தும் ஒன்றாக இணைந்திருக்கிறது !

நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புவதெல்லாம் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரையில் உள்ள நெடும்பரப்பை எடுத்துக் கொண்டால் தேசிய ஓருமைப்பாட்டுக்காகவும், நாட்டு நலங்களை ஒட்டுமொத்தமாகக் காண வேண்டும் என்ற நல்ல குறிக்கோளுக்காகவும் பாடுபடுகின்ற பெருமக்களின் வரிசையில் உங்களுடைய முதல்வர் முன்னிலையில் நிற்கிறார்கள். இந்தத் தமிழகம் என்பது தான் பாரத நாட்டின் பண்பாட்டையும் பாரத நாட்டின் மரபுக் கவசத்தையும் காக்கின்ற சிறந்த பகுதியாக இருக்கிறது.

நான் இந்தப் பகுதிக்கு வருகிற போது தான், என்னுடைய வழக்கமான மேலை நாகரிக உடைகளையெல்லாம் விட்டுவிட்டு அழகான வேட்டியோடும் ஜிப்பாவோடும் மகிழ்ச்சியாக வந்து நின்று பேச முடிகிறது. இப்படிப் பண்பாட்டைப் பாதுகாத்து வருகிற இந்தத் தமிழகப் பகுதியில் உண்மையின் உன்னதமான நோக்கத்தை நிறைவேற்றுகிற அந்த ஒருமைப்பாட்டு உணர்ச்சி ஓங்க வேண்டும்.
உங்கள் தமிழக முதல்வர் அவர்களுக்கு ஆண்டவன் எல்லா நலன்களையும் அருள வேண்டும்.
 இன்றல்ல நாளையல்ல பல்லாண்டு காலத்திற்கு உங்கள் நடவடிக்கைகளும், செயல்களும், நல்ல பணிகளும் நாளும் நாளும், மேலும், மேலும் சிறக்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

சேலத்தில் புரட்சித்தலைவருக்கு நடத்திய பாராட்டு விழா மலரிலிருந்து ( 10 - 12 - 1983 ).

தேமொழி

unread,
May 22, 2021, 12:41:55 AM5/22/21
to மின்தமிழ்
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி -  77)

“எங்கெங்கு காணினும் இருக்கை !”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

எங்கெங்கும் அயல்நாடுகளில் தமிழாய்வுத் தவிசிட வேண்டும் என்ற பொருண்மை ஆர்வத்தோடு பேசப்படுகிறது. தமிழுக்கு வரும் பெருமை தமிழினத்துக்கு வரும் தகைமையாகும்.  இந்த வகையில் ஆர்வேடில், ஊசுடனில், பெர்கிலியில், பெனிசிலிவேனியாவிலும், கனடாவில், தொரோண்தோ ( துரந்தை ) என்றும் தமிழார்வலர்கள் எழுதி வழி காட்டுகின்றனர். தொரோண்தோ பல்கலைக்கழகத்திலும், செருமனியில் கொலோன் பல்கலைக்கழகத்திலும் , இலண்டனிலும் நெடுங்காலத்துக்கு முன்னரே தர்பனிலும் பேசப்பட்டு ஆர்வேடும் தொரோண்தோவும் வெற்றி பெற்றுள்ளன.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபொழுது, நிதி வழங்கல் தொடர்பான கூட்டங்கள் நடைபெறும்,  அலுவல் சார் உறுப்பினர்களாக நிதித்துறைச் செயலாளர் இடம்பெற்றிருப்பார். 
எனக்கு நினைவு தெரிந்து எந்தக் கூட்டத்திற்கும் நிதித்துறைச் செயலாளர் வருவதில்லை. வருவதற்கும் இயலாது, நிதிச் செயலாளர் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இடம் பெற்றிருப்பார். அவர்கள் சார்பாக, நிதித்துறையின் துணைச் செயலாளர்கள் பங்குகொள்ளும் பழக்கம் இருந்தது. நான் அவர்களிடம் தஞ்சைக்கு வாருங்கள், சுற்றிப் பாருங்கள், கூட்டத்தில் உங்கள் பங்கு தேவையில்லை என்பேன். காரணம்
நாங்கள் நடத்திய கூட்டக்குறிப்பைக் கூட, அவர்கள் எடுத்துச் செல்ல விழைய மாட்டார்கள். 

பல்கலைக் கழக துணைவேந்தர் பதவி என்பது நுண்ணறிவு வாய்ந்த எதிரதாக் காக்கும் அறிவார்ந்த பணியாகும். எந்தக் குறிப்பு அனுப்பினாலும், ஏன், எதற்கு என்று கேட்கலாம். ஆனால், பல நிகழ்வுகளில், இந்த நிதியொதுக்கீடே தேவையில்லை என்று நிதித்துறையின் உதவிப் பிரிவு அலுவலரே தனக்கு தெரிந்த நிலையிலேயே இலம் என்றெழுதும் எவ்வத்தைக் காணும்பொழுது நெஞ்சு பதறும்.  அரசின் கொள்கைக் குறிப்பாகவோ மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பாகவோ இருப்பவையெல்லாம் கண்ணெடுத்துப் பார்க்க விழையாமல் வேண்டாம் என இவர்களே மறுப்பதுதான் வருத்தமளிக்கும்.

வேறொரு வாய்ப்பில் மத்திய அரசின் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தபோது , நிதி வழங்குவதைப் பற்றி குறிப்புக் கண்டேன்.  மைய அரசு குறிப்பிட்ட தொகையை வேறொரு நிறுவனத்துக்கு அறக்கொடையாக ஈகை செய்வதற்கு முன் அந்நிறுவனமும், மத்திய நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு குறிப்பிட்ட தொகையை வங்கியியல் நிலையாக்க கணக்கீடு வைத்திருப்பார்கள். அதனை ஆங்கிலத்தில் ESCROW Account என்கிறார்கள்.

அந்த நிறுவனம், செலவுசெய்த பின் அறிக்கையாக வழங்கினால் தான் மத்திய நிறுவனம் அத்தொகையை வழங்குமாம்.  செலவுக் கணக்கு அனுப்பவில்லை என்றால், தொகையை வழங்கலாகாது என்பது பொருள்.
 எனக்குத் தெரிந்து தமிழகத்தில் இரண்டு மூன்று பல்கலைக்கழகங்களுக்கு கோடி ரூபாய்க்குத் தொகை வழங்கப்பட்டு இதுகாறும் பயன்படாமலேயே முடங்கியிருப்பதைக் காணும்பொழுது அவலமாக இருந்தது.

பேரறிஞர் அண்ணா இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது தமிழகத்திலுள்ள தலைசிறந்த நான்கு பல்கலைக்கழகங்களுக்கு திருக்குறள் ஆய்விருக்கை என்று அமைத்துக் காட்டினார். இன்றைக்குத் திருக்குறள் நிதியம் கடலில் கலந்தது.

அவ்வண்ணமே, என் இனிய நண்பர் முதுபெரும் தமிழறிஞர் சேக்கிழார் அடிப்பொடி தன் சொந்த நிதியத்திலிருந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை நிறுவி ஆண்டுதோறும் பொழிவாற்றுவதற்கு ஈந்து உதவினார்.

பல்கலைக்கழகங்கள் நிதியுதவி பெற்றபின் அவர்கள் செயற்படுத்தும் திட்டங்கள் எல்லாம் ஆண்டுதோறும் தெளிவாகத் தங்கள் ஆண்டறிக்கைகளில் வெளியிடுவதில் பெருமைப்படும் என்ற வண்ணம் தான் பல்கலைக்கழகங்கள் சிறந்து ஓங்கின. ஆனால், தொகை பல்கலைக்கழகத்திற்கு வழங்கும் பொழுதே ஐந்து நிபந்தனைகள் விதிக்கப்பட்டதைப் படித்து அயல்நாட்டிலுள்ள பெரும்பேராசிரியர் ஒருவர் வருந்திச் சொன்னார். தமிழகத்தில் வேண்டுமென்றால், இந்நிலைகள் நீடிக்கலாம். ஆனால், எங்கள் நாட்டில் அப்படியெல்லாம் நடைபெறாது. 
ஐந்து திங்களுக்கு முன்பு தீநுண்மித் தாக்குதல் பெருக்கத்திற்காக என்னால் இயன்றவரை ஒரு தொகை வழங்கினேன்.  அப்பல்கலைக்கழகம் அதற்கு எனக்கு இதுவரை பத்துமுறை நன்றி தெரிவித்து மடல் எழுதுகிறார்கள்.
 ஒவ்வொரு முறையும் உங்கள் தொகையினால் நாங்கள் எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் என்று பண்பாட்டுச் செறிவோடு அவர்கள் அனுப்பும் அறிக்கைகளைப் பார்த்தபொழுது இனிக்கிறது என்றார். ஆனால், நீங்கள் விதிக்கும் நிபந்தனைகள் வேதனையளிக்கிறது. சான்றாக
வழங்கிய தொகை நாங்கள் குறிப்பிட்ட ஆராய்ச்சிக்கு மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்ற நிலையே மாறிவிடுகிறது.

தமிழகப் பல்கலைக்கழகங்களில் வறுமை என்றே அறிஞர் வா செ குழந்தைசாமி வருந்தி எழுதினார். நமது நாட்டில் அரசியல்வாதிகள், நிருவாக அலுவலர்கள் என்ற இருவர் சேர்ந்த தனிக்குடும்பம் எவரையும் எளிதில் நுழைய இசைவதில்லை.  அழைக்கப்பட்ட விருந்தாளிகள் போல் வந்து திரும்பலாம்.  குடும்பத்தில் ஒருவர் போல செயல்பட முடியாது .

இந்த அமைப்பு நமது நிருவாக நிலையில் பல இடங்களில் முரண்பட்டிருக்கின்றன. எனவே நிதிப் பற்றாக்குறை நிலையான நோயாக நிறுவனங்களைப் பிணித்திருக்கிறது எனினும் காலம் மாறும் என்ற நம்பிக்கையில்:
என்னினும் மிஞ்சினோர் வளர்க ; எம்மிமினம்
எவரினும் மேலென எழுக; நாள்தோறும்
தன்னினும் மிஞ்சினோர் சமைவதற்கெனத்
தடம் அமைப்பவர் தம்புகழ் பாடுவேன்
என்று அறிஞர் வா செ கு எழுதிய கவிதை பல்கலைக்கழகங்களில் பளிங்கு மேடையில் பொறிக்கத்தக்க ஊக்க வரியாகும்.

கதை, புதினம், கட்டுரை இலக்கியக் கலைத்திலகமாக வாழும் அறிஞர் அ முத்துலிங்கம் தினக்குரலில் பாரதிசெவ்வியாக வழங்கிய நேர்காணல் இருக்கை தவிசுகளைப் பற்றி நமக்கு ஏற்படும் எதிர்பார்ப்புக்களை
வனப்பாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறது .
நான் கற்ற இன்பத்தை பகிர்ந்தளிக்க விரும்புகிறேன். பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் தொரோண்தோ ( துரந்தை ) பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் வாய்ப்பு ஒன்று வந்தது.  அப்பொழுது அதற்குத் தேவையான நிதி ஒரு மில்லியன் தாலர்கள் மட்டுமே. அதைத் திரட்டமுடியாமல் அந்த வாய்ப்பு நழுவிப் போனது. அது சோகமான கதை. 
பின்னர் 2017 ஆரம்பத்தில் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க Tamil Chair Inc எனும் அறக்கட்டளைக்கு அதிசயமாக சம்மதம் கிடைத்தது.

இந்த அறக்கட்டளையை ஆரம்பித்த நிறுவனர்களில் நானும் ஒருவன். இருக்கை அமைக்க தேவை ஆறு மில்லியன் அமெரிக்க தாலர்கள் என்றார்கள்.  உலகளாவிய ரீதியில் நிதி திரட்டலைத் தொடங்கினோம். எப்படி இவ்வளவு பணத்தைத் திரட்டப் போகிறோம் என்ற மலைப்பு ஆரம்பத்தில் இருந்தது.

அமெரிக்கா, கனடா, இந்தியா, கொரியா, ஹாங்காங், மலேசியா, பொஸ்ட்வானா ( ஆப்பிரிக்கா ) போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் பணம் வந்து குவியத் தொடங்கியது. இலங்கையில் இருந்துகூட 25,000 தாலர்கள் அனுப்பப்பட்டன என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள். தேவைப்பட்ட நிதிக்கு மேலாகப் பணம் சேர்ந்தபோது 'இனி போதும், நிறுத்துங்கள்' என்று அறிக்கை விட வேண்டி நேர்ந்தது.

இந்த ஆர்வத்தையும், தமிழர்களின் எழுச்சியையும் அவதானித்த ரொறொன்ரோ ( ஈழத்தவர் ஒலிப்பு முறை ) பல்கலைக்கழகம், இங்கே வதியும் தமிழ் மக்களை அணுகியது. கனடாவில் மூன்று லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழ் இருக்கை ஒன்றை இங்கே அமைப்பதற்கு ரொறொன்ரோ பல்கலைக்கழகம் சம்மதம் வழங்கியது. இதற்குத் தேவையான நிதி மூன்று மில்லியன் தாலர்கள் ( இலங்கை ரூ 39 கோடி ). ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தை அணுகுவதற்கு நாங்கள் நேரம் பார்த்துக் காத்திருந்த வேளை அவர்களாகவே எம்மை தொடர்புகொண்டது ஆச்சரியமான விசயம்.

ஆர்வேடுக்கு நேர்ந்ததுபோல உலகம் முழுக்க இருந்து பணம் வந்து குவியவில்லை.  ஆனாலும் தமிழ் மக்களின் ஆர்வம் வியப்பூட்டியது. கனடாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் பணம் வந்தது. இந்தியாவிலிருந்துகூட ஒன்றிரண்டு பேர் பணம் அனுப்பினார்கள்.  முதல் வருடத்தில் நாங்கள் வைத்த இலக்கு ஒரு மில்லியன் தாலர்கள். கெடு முடிவதற்குள் அந்தப் பணத்தைச் சேர்க்க முடிந்தது. மீதி இரண்டு மில்லியன் தாலர்கள்தான். அதையும் விரைவில் திரட்டிவிடலாம் என்ற நம்பிக்கை உண்டு.

இதிலே சுவாரசியமான விசயம் என்னவென்றால் நாங்கள் எத்தனை ஆயிரம் தாலர்கள் சேர்ந்தன என்று தினம் தினம் கணக்குப் பார்த்தோம். பல்கலைக்கழகத் தலைவர் விஸ்டம் டெட்டி மாத்திரம் எத்தனை பேர் நன்கொடை கொடுத்தார்கள் என்பதையே உன்னிப்பாகக் கவனித்தார். 'இது ஓர் இனக்குழு ஒன்றுசேர்ந்து உண்டாக்கும் இருக்கை. பணம் ஒரு நாள் இலக்கை எட்டும், ஆனால் எத்தனை பேர் பங்குபற்றுகிறார்கள் என்பதுதான் எங்களுக்கு முக்கியம்' என்று விளக்கம் கொடுத்தார்.

மூன்று மில்லியன் தாலர்களை இருப்பு நிதியாக வைத்து உருவாக்கப்படும் ரொறொன்ரோ தமிழ் இருக்கை, தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைக் கற்றுத்தருவதோடு பல்வேறு முக்கியமான ஆய்வுகளை முன்னெடுக்கும் மையப்புள்ளியாகவும் அமையும்.

 ஏனைய செம்மொழிகள் அனைத்துலகக் கல்வி மையங்களில் நிறுவப்பட்டு ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் மூலம் பல நன்மைகள் பெற்றுள்ளன.  இங்கே அமையும் தமிழ் இருக்கை தமிழுக்கான அங்கீகாரத்தை அளிப்பதோடு தொடர் பயன்பாட்டிற்கும், முன்னேற்றத்துக்கும் வலுச்சேர்த்து பல கல்வி நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும்.

ரொறொன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தின் முன்னாள் தலைவர், 'தமிழ் இருக்கையானது உயர் கல்வி நிறுவனத்தில் தமிழ் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்காக மக்களின் ஆதரவுடன் நிறுவப்பட்டு என்றென்றும் நிலைத்திருக்கப்போகும் ஒரு கல்வி அலகாகும்.  ஒரு மொழி பேசும் குழுவினரால் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் முதல் இருக்கை என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று.  இது வேறு இருக்கைகளுக்கு முன்மாதிரியாக அமையும். தமிழ் மொழியின் பாரம்பரியத்துக்கும், தொன்மைக்கும் அதன் மேன்மைக்கும் சாட்சியாக என்றென்றும் நிலைத்து நிற்கும்' எனத் தமிழ் இருக்கை ஆரம்பக் கூட்டத்தில் கூறி வாழ்த்தினார்.

ரொறொன்ரோவில் நிறுவப்படும் தமிழ் இருக்கை, இந்தியத் துணைக்கண்டத்தைத் தாண்டிய தமிழ்க் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு முதன்மையான இடமாக அமையும். அருகிவரும் தமிழ் இலக்கிய நூல்கள் மற்றும் ஆவணங்கள் எண்மியமாக்கப்பட்டு இங்கே பாதுகாக்கப்படும். கனடிய அரசு வழங்கும் நல்கைகளை தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தலாம். தமிழ் கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் ஒழுங்குசெய்வதுடன் வருகைப் பேராசிரியர்களுக்கும் வழி செய்யலாம். சிறந்த ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்கலாம். தமிழ் இருக்கை என்பது நுழைவாயில்தான். தக்க பேராசிரியர் அமைந்தால் முதல்தரமான பல்கலைக்கழகத்தில் ஒரு மொழிக்கு கிடைக்கக்கூடிய அத்தனை வாய்ப்புகளையும், பயன்களையும் நாம் முழுமையாக அடையலாம்.

ஆரம்பத்தில் ஆர்வேடு தமிழ் இருக்கை நிதி சேர்ப்பு சரியாகவே போகவில்லை. அதைப் பற்றிய புரிதல் மக்களுக்குப் போய்ச்சேர சில மாதங்கள் பிடித்தன.   அமெரிக்க, கனடா போன்ற நாடுகளிலிருந்து ஒரு சில செல்வந்தர்கள் பணம் சேர்த்தாலே இந்த இருக்கையை இலகுவில் உண்டாக்கியிருக்கலாம்.  அதை நாங்கள் விரும்பவில்லை. பல்கலைக்கழகமும் அப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை. உலக மக்களால் இருக்கை உருவாக்கப்பட்டு அது உலக மக்களுக்குச் சொந்தமாக வேண்டும் என்பதே பலரின் கோரிக்கை.

தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், வானொலி, முகநூல் என சகல ஊடகங்களிலும் பரப்புரை செய்தோம்.  தமிழ்நாடு அரசு நன்கொடை வழங்கியதை தொடர்ந்து நிதி சேகரிப்பு வேகம் பிடித்தது. ஆறு மில்லியன் தாலர்களை தாண்டியபோது, 'நிதி இலக்கை அடைந்துவிட்டது, மேலும் பணம் அனுப்பவேண்டாம்' என உலக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. இப்பொழுது பேராசிரியர் தேர்வு முயற்சியை ஆர்வேடு பல்கலைக்கழகம் தொடங்கியிருக்கிறது.  விரைவில் இருக்கை செயல்படத் தொடங்கும். 

ரொறொன்ரோவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மூன்று லட்சம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழியில் தேர்ச்சிபெற்றவர்கள். இங்கே வாரத்துக்கு பல தமிழ் கலாச்சார, கலை நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. வாரத்துக்கு ஒரு புத்தக வெளியீடாவது நடக்கிறது.

ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு இதை விடச் சிறந்த இடம் ஏது. ஒவ்வொரு சனவரி மாதமும் கனடாவில் தமிழ் மரபு மாதமாக கொண்டாடப்படுகிறது. ரொறொன்ரோ பல்கலைக்கழகம்கூட 2019 வருடம் முதல்முறையாக தமிழ் மரபு மாதத்தை கொண்டாடியது. தமிழின் மேன்மை பற்றி பல்கலைக்கழகத் தலைவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.  தமிழ் இருக்கை அமைய வேண்டும் என்ற ஆர்வம் தமிழ் மக்களுக்கு இருக்கும் அதே அளவுக்கு பல்கலைக்கழகத்துக்கும் இருக்கிறது. இது ஒரு வரம் என்றே எனக்குப் படுகிறது.

அமோகமான ஆதரவு கிடைத்துள்ளது. புலம் பெயர்ந்தவர்களுடைய ஆதரவு இல்லாமல் நிதி சேகரிப்பது சாத்தியமே இல்லை. திரட்டிய நிதியில் 99 வீதம் புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து கிடைத்ததுதான். புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால் அது கனடாவை மாத்திரம் குறிப்பிடவில்லை.  புலம்பெயர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் வசிப்பவர்களையும் சேர்த்துத்தான் பார்க்கவேண்டும். பெரும்பான்மையான கொடைகள் கனடாவில் கிடைத்தவை. இந்தியாவில் இருந்தும் சிலர் பணம் அனுப்பி உதவியிருக்கிறார்கள். அங்கே அனுமதி பெறுவதில் பல சிக்கல்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி பணம் வந்து சேர்ந்திருக்கிறது.

2700 கி.மீட்டர் தொலைவில் அல்பெர்ட்டா மாகாணத்திலிருந்து ஒரு சிறுமி அவருடைய பிறந்த நாளுக்கு கிடைத்த பணத்தை அப்படியே அனுப்பியிருந்தார்.
 நெகிழ்வாக உணர்ந்த சமயம் அது. சிறுமிக்கு நன்றிகூறிவிட்டு அவருடைய அப்பாவிடம் பேசினேன். அவர் சொன்னார்,'ரஜினியின் பேட்ட சினிமா 2 வாரம் ஓடியதற்காக விழா எடுக்கிறார்கள். தமிழ் 2500 வருடங்களாக ஓடுகிறது. அதையல்லவா நாங்கள் கொண்டாடவேண்டும்.' முதல் ஒரு வருடத்தில் 600 பேர் பணம் கொடுத்து ஒரு மில்லியன் டொலர் சேர்ந்துவிட்டது.

ஏற்கனவே சொன்னதுபோல இந்த தமிழ் இருக்கை தமிழர்களுக்கு சொந்தமானது. கனடா வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கு சொந்தமானது. தமிழ் மொழிக்கு சொந்தமாக ஒரு நாடு இல்லையென்றாலும் அந்த மொழி ஓர் உலகமொழி.  உலகத் தமிழர்களிடமிருந்து நிதி சேர்ப்பதுதான் நோக்கம். ஏற்கனவே சொன்னதுபோல கனடிய அரசு வழங்கும் நல்கைகளை தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.

சிறந்த ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்கலாம். ஒரு மொழிக்கு கிடைக்கக்கூடிய அத்தனை வாய்ப்புகளையும், பயன்களையும் நாம் முழுமையாக அடையலாம். கனடிய அரசிடம் தமிழ் இருக்கைக்கு பணம் கேட்கும் திட்டம் தற்சமயம் இல்லை. கணிசமான தொகை சேர்ந்த பின்னர் அரசாங்கத்தை அணுகலாம் என்ற எண்ணம் உண்டு. சமயம் வரும்போது அதற்கான முயற்சிகளை கைக்கொள்வதில் ஒரு தடையும் கிடையாது.

ரொறொன்ரோவில் இருக்கை ஒன்றை உண்டாக்குவதன் மூலம் தமிழை உலகமயமாக்கலாம். ரொறொன்ரோ பல்கலைக்கழகத்திலிருந்து இந்த வாய்ப்பு எங்களைத் தேடி வந்திருக்கிறது. கனடாவின் இரண்டாம் தலைமுறை இப்போது தலையெடுத்திருக்கிறது. முற்றிலும் கனடியச் சூழலில் வாழும் மூன்றாவது தலைமுறை தமிழை மறந்துவிடும். மிக முக்கியமான ஒரு சந்தியில் நாங்கள் நிற்கிறோம்.

இந்தத் தலைமுறை தாண்டினால் தமிழ் இருக்கை என்பது கனவாகிவிடும். இதுதான் தருணம். இப்பொழுதே செய்யவேண்டும். தமிழ்நாட்டிலும் - சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பதவியே இலாசரசு வழங்கிய நிதியத்திலிருந்து அமைந்த இருக்கையாகும். பிறகு அது பொது நீரோட்டத்தில் கலந்ததது. தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகம், ஈழப் பல்கலைக்கழகம் தமிழுக்கு ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன. இந்நிறுவனங்களை, பேராசிரியர்களை அணுகிக் கருத்துரைகளைப் பெறலாம்.

" செயத்தக்க செய்யாமையானும் கெடும் " என்பது திருக்குறள் ..

தேமொழி

unread,
Jun 1, 2021, 8:05:41 PM6/1/21
to மின்தமிழ்
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி -  78)

“இக்கரைக்கு அக்கரை சர்க்கரை !”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

ஒரு குடும்பத்தில் ஒரு மொழி, சிலருக்கு இரண்டு மொழிகள், இன வாழ்வியல் பண்பாட்டுக்கூறுகள் மக்களினத்தின் பெருமை கொழிக்கும் புதையலாகும். காலம் செல்லச்செல்ல மொழி பேசும் எல்லைகள் குறைந்து மாநிலங்கள், நாடுகள் என்ற அளவில் நின்றன. மக்களின் உறவு மரபார்ந்த உறவிலிருந்து தாம் கற்பித்திருந்த குலம், சமயம், ஊர் தாண்டி உலகளாவியதாக விரிந்தது.

மக்களுக்குக் குலம், ஊர், நாடுகள் தாண்டித் திருமணம் நிறைவேற்றியது. அனைவரும் மகிழ்ந்து வாழ்வதோடு மக்கட் செல்வங்களும் வளர்ந்துள்ளனர். தாய்மொழி வேறு, தந்தை மொழி வேறு, தாயின் வழக்கம் வேறு, தந்தையின் மரபு வேறு என்றாலும் பிள்ளைகள் தாய் தந்தையர் இருவரையும் முடிந்த வரையில் பின்பற்றுகின்றனர். இந்த நிலையில் வீட்டு மொழி, வாழும் நாட்டு மொழி, படிக்கும் கல்விமொழிகள் வேறாக அமைகின்றன.

இந்த நிலையில் வாழும் மூன்றாம் தலைமுறையினர் தம் மொழியை மரபைப் போற்றுவது ஒரு சிக்கலாக அமைகிறது. இனம், நிறம் கலந்து அமெரிக்கராக, ஐரோப்பியராக அமைவார்கள். இந்த எல்லையில் எந்த மொழியின் முதன்மையும் துறைதோறும் தாம் சார்ந்த தொழிலோடு இணைந்தால் தான் சிறப்புறும்.

என்னைப் பார்க்க இராமேசுவரம் அரசு கல்வி அறிவியல் கல்லூரியின் முதல்வராக இருக்கும் பேராசிரியர் இராமன் வந்திருந்தார். அவரோடு மாணவர் சிலர் வந்தனர். நலம் வினவிவிட்டு இந்த நால்வரும் தமிழில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். இருவருக்கு வேலை கிடைக்கவில்லை. எஞ்சிய இருவர் அமெரிக்கப் பணத்தில் திங்களுக்கு அறுபது டாலர்கள் கூடப் பெறமுடியவில்லை என்றார். என்னப்பா ! டாலர் கணக்கில் சொல்கிறீர்களே என்றேன்.

நீங்களும் அரசும் மில்லியன் கணக்கில் தானே மேலைநாட்டு இருக்கைகளுக்கு நிதியுதவி செய்கிறீர்களே! என்று சற்று உரத்த குரலில் வினவினார். இவர்கள் அயலக இருக்கையில் எப்படிச் சேர்வது என்று என்னைக் கேட்டார்கள் நான் உங்களை நினைத்தேன். அழைத்து வந்தேன் என்றார்.
வேண்டுமானால் என் தலைதனைக்கொண்டு விலைதனைப் பெறுக! என்று சிரித்தபடி சொன்னேன்.
அப்போது அந்த மாணவர் எழுதிய கவிதையைக் காட்டினார்,
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தனிலே
இருக்கை அமைக்கின்றார் தோழி!
கொடுக்கும் கோடிகளைக் கொழித்தவர் கைகளிலே
கொடுத்து மகிழ்கின்றார் வாழி!
தோற்கும் தமிழுணர்வைத் தாயகத்தில் வளர்க்காமல்
தொல்லைப்படுகின்றார் தோழி!
மேற்கிலா வளமில்லை எங்களையும்
மெல்ல நினையாரோ தோழி!
என்ற கவிதையைப் படித்துச் சிந்தித்தேன்.

ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு மதுரை மாநகரில் எவரும் மலைக்கத்தக்க வகையில் நடந்ததைப் பலமுறை குறித்திருக்கிறேன். மாநாட்டில் ஒரு கருத்தரங்கம் முடிந்த நிலையில் மூவர் அயல்நாட்டவர், இருவர் மாணவியர், ஒருவர் மாணவர் வந்து புரட்சித்தலைவருக்கு வணக்கம் கூறினர். 
அமெரிக்கா, போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன்.

அண்ணா! இவர்கள் தமிழில் ஆராய்ச்சி செய்கிறார்களாம். ஒருவர் செய்வது நாகர்கோயில் வழக்குச் சொற்கள், மற்றொருவர் திருவண்ணாமலை தெருக்கூத்து, மற்றொருவரோ மதுரை கரகாட்டம் என்றேன் இதைக்கேட்டுப் புரட்சித்தலைவர் வியப்போடு பார்த்தார். தமிழாராய்ச்சி என்றீர்களே! இதுதானா அது! ஏதோ ஒரு நாட்டிலிருந்து நிதி கூட என்னைக் கேட்டார்களே! என்றார்.

உடன் நின்றவர் அமைச்சர் நாவேந்தர் காளிமுத்து "அவர் மெல்ல என்ன செய்வது இலக்கியப்பயிற்சி இல்லாமல் போய்விட்டது. நாட்டுப்புறவியல்,மொழியியல் என்று இவர்கள் போக்கில் ஆராய்ச்சிகளை இப்படிச் செய்கிறார்கள்" என்றார். அமெரிக்கா போற்றும் வழக்காற்றியல் என்றேன். இப்போதெல்லாம் வழக்கு அளவீட்டுத் திட்டம் என்ற ஒரு பட்டப்படிப்பே வந்திருக்கிறது. இந்த அடிப்படையில் தான் மொழியியலில் ஒரு மொழியின் சொற்களைக் கண்ட துண்டமாக வெட்டி ஆராயும் புதுமையை அமெரிக்கரின் வழிகாட்டுதலோடு ஆய்வுப்பணிகள் தொடர்ந்துள்ளன. இலக்கிய மொழி - அலங்கார மொழி என்றும் அது மக்களிடமிருந்து விலகி நிற்கிறது என்று சொல்வது நமக்கு விளங்கவில்லை. மொழியியலை உயிரியல் துறையைப் போன்று பிரித்துப்பிரித்து ஆராயும் போக்கு மொழியியலில் நிலவுகிறது. இலக்கிய நயப்பாடே எல்லாவற்றுக்கும் அடிப்படை என்று விளக்கிக் காட்டி நம்மால் வெற்றி பெற முடியவில்லை.

செருமனியில் இருந்து வந்தவர் என்னை ஒருமுறை கண்டு பேசினார்.  அவர் பேச்சினூடே நான்கு பக்க வண்ணக் கையேடு ஒன்றை என்னிடம் வழங்கிச் சென்றார்.  செருமனியிலுள்ள லீப்சிக் பல்கலைக்கழகத்தில் பதினைந்து நாள் வடமொழிப் பேச்சுப் பயிற்சி வகுப்பினை முனைவர் சதானந்த தாஸ் நிகழ்த்தவிருக்கிறார் என்று அச்சிடப்பட்டிருந்தது. சதானந்த்தாஸ் இதுகாறும் வடமொழிப் பேச்சுப் பயிற்சியினை செருமனியிலுள்ள ஈடல்பெர்க் பல்கலைக்கழகத்தில் பதினேழு கோடை வகுப்புகளும், லாசான் பல்கலைக்கழகத்திலும், ஆஸ்திரேலியா தேசியப் பல்கலைக்கழகத்திலும் மூன்று கோடை வகுப்புகளும், அதுமட்டுமின்றி, வடமொழியில் உயர்நிலைப் பேச்சு வகுப்புகளை பிளாரன்சு பல்கலைக்கழகத்தில் ஐந்து கோடை வகுப்புகளும் மற்றும் அர்ஜெண்டினாவிலுள்ள வடமொழிப் பயிற்சி மையத்தில் வடமொழி கற்பித்தலையும், காசியிலுள்ள ஞான பிரவாகா பண்பாட்டு மையத்தில் பயிற்சியும், கோவாவில் சதுவாலா வடமொழிப் பயிற்சி மையத்திலும் கற்றுத்தருவதாக வெளியிடப்பட்டிருந்தது.

இதில் பாராட்டப்பட வேண்டிய தகவல் என்னவென்றால், அறிஞர் பெருமக்களும் மாணவ மணிகளும் வழக்கில்லாத வடமொழியைத் தன்னம்பிக்கையுடன் மீட்டுருவாக்கம் செய்து அன்றாடம் பயன்படுத்துவதற்காக இவ்வகுப்புகள் நடைபெறுகின்றன என்றும் அச்சிடப்பட்டிருந்தது. ஏறத்தாழ எண்பதாண்டுகளுக்கு மேலாக வடமொழிக்கல்வி உலகப் பல்கலைக்கழகங்களில் எப்படியோ இடம் பிடித்துள்ளது. யார், எவ்வளவு நிதியம் வழங்கினார்கள் என்பது வியப்பாகவே உள்ளது. தமிழறிஞர் என்று போற்றப்படும் ஜார்ஜ் ஆர்ட்டு  முதல் பெரும்பாலானோர் வடமொழிப்புலமை வழியாகத்தான் தமிழை அணுகினர்.

இந்த அழகில் அது எவருக்கும் தாய் மொழியில்லை. செம்மொழி என்று விரல்விட்டு எண்ணுகின்றவர்களின் முதல் விரல் வடமொழி என்றுதான் மடங்குகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள ஆர்வர்டு பல்கலைக்கழகம் உலகப் பல்கலைக்கழகங்களிலேயே 380 ஆண்டுத் தொன்மை பூண்ட தலையாய பல்கலைக் கழகமாக விளங்குகிறது.  இதுவரை இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கைக்கென வாய்ப்பு அமையவில்லை.

அமெரிக்க நாட்டின் புகழ்வாய்ந்த மருத்துவர், வி. ஜானகிராமனும் (நாவலரின் உறவினர்), மருத்துவர் திருஞானசம்பந்தமும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைப்பதற்காக, 2.7 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்டியதாகவும், ஒப்பந்தப்படி 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டியிருந்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் 2017-ஆம் ஆண்டு பத்து கோடி ரூபாய் இவ்விருக்கைக்காக நிதி ஒப்பளிப்புச் செய்யப்பட்டது.

28.06.2018 அன்று சட்டமன்றப் பேரவையில் விதியெண் 110-ன்கீழ் பின்வருமாறு அறிவிப்பும் செய்யப்பட்டது:-
"இந்தியாவிலுள்ள முன்னணிப் பல்கலைக்கழகங்களில் தமிழிருக்கை ஏற்படுத்தி தமிழ் வளர்க்க முயல்வது என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக இலண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவிலுள்ள ஜோகன்ஸ்பர்க் பல்கலைக்கழகம், மலேசியாவிலுள்ள மலேயாப் பல்கலைக்கழகம், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழர்கள் பெருகி வாழும் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலுள்ள கல்வி நிறுவனங்களிலும் தமிழிருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும். இதற்கென ஆண்டுதோறும் ஐந்து கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்படும்."

ஊசுடன் மாநகரம் அமெரிக்காவின் நான்காம் பெரிய நகரமாகும்.  50 ஆண்டுக்காலமாகத் தமிழர்கள் இந்நகரில் கடல் கடந்து தம் மொழி கலை பண்பாட்டு விழுமியங்களை வளர்த்து வருகின்றனர்.
ஊசுடன் பல்கலைக்கழகம் 1927- ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது என்றும் ஊசுடன் டெக்சாசிலுள்ள பெரிய பல்கலைக்கழகம் என்றும், ஆதாய நோக்கமற்ற நிறுவனமாக ஊசுடன் தமிழாய்வுகள் இருக்கை அமைப்பு 2019 - ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாள் அன்று தோற்றுவிக்கப்பட்டது. ஊசுடன் பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை நிறுவிட இந்திய மதிப்பில் 15 கோடி ரூபாய் ( இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ) தொகை செலுத்த வேண்டும்.

தமிழாய்வுக்குப் பயன்படும் வகையில், ஊசுடன் தமிழாய்வு நிறுவனத்தின் 75 விழுக்காடு தொகையினை டெக்சாசு அரசு உதவித் தொகையாக வழங்கும் என்றும், தமிழ்த்துறைக்கான ஒரு முழுப் பேராசிரியர் பதவியை ஏற்படுத்திட இப்பல்கலைக்கழகம் நிதிவழங்கும் என்றும், இந்த நிதி தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் பொருளாதாரத் திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் 7 கோடி ரூபாய் (ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்) நிதி உதவி வேண்டினர். அனைத்தையும் ஆராய்ந்து தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் மட்டும் நிதி ஒப்பளிப்பு செய்தது. அவ்வாறு தொகையை வழங்கும்பொழுது, ஆறு நிபந்தனைகளைத் தமிழக அரசு விதித்துள்ளது.

ஒப்பளிப்புச் செய்யப்படும் தொகை, தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் பொருளாதாரத் திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இருக்கை அமைப்பது தொடர்பான பணி முன்னேற்ற அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும்.
ஒப்பளிப்புச் செய்யப்படும் தொகைக்குரிய பயனீட்டுச் சான்றிதழை அப்பல்கலைக் கழகத்திடமிருந்து பெற்று அரசுக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் அனுப்ப வேண்டும்.
மேற்படி பல்கலைக்கழகம் செலவினங்கள் தொடர்பான ஆவணங்களையும் விவரங்களையும் அரசு வேண்டும் போது உடனுக்குடன் அளிக்க வேண்டும்.
எந்த நோக்கத்திற்காக நிதி ஒப்பளிப்புச் செய்யப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு மட்டுமே ஒப்பளிப்புச் செய்யப்பட்ட தொகை செலவிடப்பட வேண்டும்.
திட்டம் உரிய வரையறையில் நிறைவேற்றப்பட வேண்டும். காலத்தாழ்வு ஏற்படின் பெறப்பட்ட நிதயுதவித் தொகை உரிய வட்டித் தொகையுடன் அரசுக்குத் திரும்பச் செலுத்த வேண்டும்.

இதில் என்ன வேடிக்கையென்றால், ஊசுடன் பல்கலைக்கழகம் இதுகாறும் ஆறுகோடி நிதி திரட்டியதா?
இருக்கைக்குப் பேராசிரியர் அமர்த்தப்பட்டாரா? என்று இன்று வரை எவருக்கும் தகவலில்லை.
 
அள்ளித்தெளித்தாற்போல அடுத்த நிதியொதுக்கீடாக, கனடா பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் இதே தொகை நிதியுதவியாக வழங்கப்பட்டது. இன்னும் தவிப்பைக் காட்டுவது போல செருமனிக்கு ஏன் நிதியுதவி தரவில்லையென்று நண்பர்கள் சிலர் வினவிக் கொண்டிருக்கிறார்கள். நிதித்துறை இந்த நல்கைகளை நுணுக்கமாக ஆராய்ந்தனரா என்று அறிய முடியவில்லை .

தமிழ் வளர்ச்சி கலைப்பண்பாட்டுத் துறையின் அரசு செயலாளராக நான் இருந்தபொழுது பண்பாட்டுப் பொருண்மைகள் குறித்து மைய அரசை வினவும் பொழுதெல்லாம் மைய அரசின் ஓர் அமைப்பாக அமைந்திருந்த இந்தியக் கலைப்பண்பாட்டு நல்லுறவு நிறுவனத்திடம் தான் நாங்கள் எழுதிக் கேட்கும் வழக்கமிருந்தது. 1950 ஆம் ஆண்டில் ஆசாத் அவர்களால் உலக நாடுகளோடு கலை பண்பாட்டு நல்லுறவை வளப்படுத்தத் தோன்றியது.

ICCR வாயிலாக 1970 - ஆம் ஆண்டில் தமிழ்மொழிக்கென ஒரு துறையினைப் போலாந்து நாட்டில் வார்சா பல்கலைக்கழகம் உருவாக்கியது.  இப்பல்கலைக்கழகத்திற்கு அப்பொழுது தமிழ்ப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற பொருண்மை எழுந்தபொழுது ICCR வருகை தரு பேராசிரியர் என்ற முறைப்பாட்டில் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களிலுள்ள பேராசிரியப் பெருமக்களைத் தெரிவு செய்து போலந்துக்கு அனுப்பினார்கள்.

எனக்குத் தெரிந்து ஒரு பருவத்திற்கு 15 மாணவர்கள் பயில்வார்கள்.  ஆக நான்கு பருவங்கள் என்று கூட்டினால் 60 மாணவர்கள் மட்டும்தான் பயிற்சி பெறுவார்கள். ICCR பேராசிரியருக்கும் அவருடைய குடும்பத்தினர் ஒருவருக்கும் போய்வரும் வானூர்திப் பயணச் செலவினை மேற்கொள்வார்கள். அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் தங்கும் வசதிகளைச் செய்து தரவேண்டும். வருகை தரு பேராசிரியர் ஒவ்வொருவருக்கும் மூன்று லட்சம் ரூபாய் திங்கள் ஊதியம் வழங்கப்படும்.  போலந்திலிருந்து மாணவர்கள் சிலர் தமிழ் நாட்டிலும் புதுவையிலும் வந்து ஆராய்ச்சி செய்தார்கள்.  எழுத்தாளர் ஜெயகாந்தன் நாவல்களில் ஆய்வுசெய்த ஒரு போலந்து மாணவர் பல்கலைக்கழகத்தில் பதினைந்தாண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அதேபோல பேராசிரியர் யார்ஸ்லேவ் வாஸக், செக்கோஸ்லோவேகியாவில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவராவார்.  செம்மொழி நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதையும் அவர் பெற்றவர். அமெரிக்கா, கனடாவில் உருவாக்கப்படும் இவ்விருக்கைகளில், தமிழ் நாட்டில் பணியாற்றும் தமிழ்ப் பேராசிரியர்களை ICCR வகுத்த நெறிப்படி பேராசிரியர்களாக அந்நாடுகளுக்குச் சென்று பணியாற்றும் வாய்ப்பு நல்க வேண்டும் என்பது தமிழர்களின் அவாவாகும். முப்பதாண்டுகளுக்கு முன்பு அருமைப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் கலிபோர்னியா பர்களி பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதையும் நினைவுகூர விழைகிறேன்.  பேராசிரியர் மறைமலையின் அரும்பணியால் தனித்தமிழ் வீறு கொண்டு திராவிடப் பெருமிதம் தளிர்விட்டது.

மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பலர் தமிழ்நாட்டு இளைஞர்கள் இன்று உலகெங்கும் சென்று வெற்றி காண்பது போல நம்முடைய தமிழ்ப் பேராசிரியர்களும் இங்கேயே உழல்வதைக் காட்டிலும் அமெரிக்க வானில் சுழல வேண்டாமா?
இவைகளெல்லாம் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமாகாது!
இக்கரைக்கு அக்கரை சர்க்கரை !
---

தேமொழி

unread,
Jun 3, 2021, 11:37:09 PM6/3/21
to மின்தமிழ்
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி -  79)

“ஒலிப்பு நலமே மொழியின் உயிர் வளம் !”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழிலக்கியத்துறைத் தலைவராகத் திகழ்ந்த பொழுது பல்கலைக் கழகத்தில் நடைபெறும் அறக்கட்டளைப் பொழிவுகளைப் பற்றிய ஒரு கையேடு வெளியிட்டிருந்தார். அப்பொழிவுகளில் முதன்மையாக வருவது;  
1.  பேராசிரியர் கல்கி அறக்கட்டளை - 1968 - இல் நிறுவியது.
2.  பம்மல் சம்பந்த முதலியார் அறக்கட்டளை நாடகச்செம்மல் டி.கே. சண்முகம் சகோதரர்களால் 1971 - இல் அமைந்தது.
3. பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை தமிழக அரசால், 1979 - ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
4. கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அறக்கட்டளை தமிழக அரசால், 1982 - ஆம் ஆண்டும்
5. இசுலாமிய இலக்கியக் கழகத்தின் சார்பாகப் புரவலர் எஸ்.எம். சையது சலாவுதீன் பெயராலும் 
6. தந்தை பெரியார் பெயரில் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களால் அறக்கட்டளையொன்றும் உருவாயின.
7. பாரத ரத்னா சி. சுப்பிரமணியம் பெயரில் டாக்டர் கே. சுப்பிரமணியம் அறக்கட்டளை நிறுவினார் .
8.  முனைவர் திருமதி கிருஷ்ணா சஞ்சீவி பெயரில் 1982 - ஆம் ஆண்டிலும்,
9.  திருமதி கண்ணம்மாள் நடேசன் அறக்கட்டளையும், 
10. பேராசிரியர் சஞ்சீவி பெயரில் பேராசிரியர் ந. சஞ்சீவி மணிவிழா அறக்கட்டளை 1987- இல் நிறுவினர்.
11. மருத்துவர் கே. நடராசன் துணைவியார் சரோஜினி பெயரில் 1987- இல் அறக்கட்டளையும்
12. தமிழக மலேசியத் தமிழுறவு அறக்கட்டளை மலேசிய அமைச்சர் தத்தோ ஸ்ரீ சாமுவேலு அவர்களால் 1999 - இல் நிறுவப்பட்டது.
13. தொல்காப்பியர் அறக்கட்டளை திருவாளர் பி. முத்துவேல்ராஜ் அவர்களால் 2001 - இலும் 
14. அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அறக்கட்டளையை அவர் குடும்பத்தினரும் 2001 - இல் நிறுவினர்.
15. புதுமைப்பித்தன் அறக்கட்டளை 2006 - இல் வழக்கறிஞர் ச. செந்தில்நாதனால் உருவாக்கப்பட்டது.
16. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அறக்கட்டளை வடசென்னையில் இயங்கும் சிங்காரவேலர் சிந்தனைக் கழக அறக்கட்டளை 2009 - ஆம் ஆண்டில் நிறுவியது.
17. தோழர் ஜீவானந்தம் நூற்றாண்டு விழா அறக்கட்டளையை ' நியூ செஞ்சுரி ' புத்தக நிறுவனம் 2010 - ஆம் ஆண்டு நிறுவியது.
18. பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் அறக்கட்டளை 2017 - ஆம் ஆண்டு மாணவர்களால் உருவாக்கப்பட்டது.
19.பேராசிரியர் இரா பி சேதுப்பிள்ளை தம் அன்னையார் சொர்ன்னமாள் பெயரில் நிறுவிய அறக்கட்டளைப் பொழிவாக மூதறிஞர் வ சுப மா, அறிஞர் தனிநாயக அடிகள், இராவ்சாகிபு, கோதண்டபாணி முதலியோர் நல்லுரைகளை அமர்ந்துப் பல்கலைக்கழக சிற்றரங்கில் கேட்ட நினைவிருக்கிறது.
20. முனைவர் கே. எஸ். சுப்பிரமணியன் தம் மாமனார் பி.வி. தாசு அறக்கட்டளை நிறுவி வள்ளலார் பற்றிய சொற்பொழிவுகள் தான் நிகழ்த்தப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

அப்போதே அறுவர் - எழுவர் தான் அவையினராக இருப்பர். அறக்கட்டளைப் பொழிவென்றால் அறுவருக்கு மேல் வரக்கூடாது என்பது தடையா என்று  பேரறிஞர் மு வ நையாண்டியாகக் கூறினார். அறக்கட்டளைப் பொழிவுகள் இடையறாது நடந்தால் அதுவே தமிழ் வளர்ச்சிக்குப் பெருந்துணையாகும். மைய அரசின் கலைப் பண்பாட்டு நல்லுறவு அமைப்பின் வாயிலாக 1970 - ஆம் ஆண்டில் தமிழ்மொழிக்கெனத் துறையினைப் போலந்து நாட்டில் வார்சா பல்கலைக்கழகம் உருவாக்கியது. இப்பல்கலைக்கழகத்திற்கு அப்பொழுது தமிழ்ப் பேராசிரியர்களை அமர்த்த வேண்டும் என்ற பொருண்மை எழுந்தபொழுது ICCR வருகை தரு பேராசிரியர் என்ற முறைப்பாட்டில் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியப் பெருமக்களைத் தெரிவு செய்து போலந்துக்கு அனுப்பினார்கள்.

1.  15.04.1972- இல் அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இராமசுந்தரம் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் போலந்து சென்றார். அவர் ஒன்பது ஆண்டுகள் ( 1972 - 1981 ) பணியாற்றினார். அவருக்குப் பிறகு,  
2. முனைவர் இந்திரா பார்த்தசாரதி, தில்லிப் பல்கலைக்கழகம் ( 1981 - 1986 );
3. முனைவர் டி.எஸ். நடராஜன் ( 1986 - 1990 ); பிறகு 
4. டாக்டர் கே. சுப்பிரமணியம் (1990-1995); அடுத்து 
5.  முனைவர் கே. நாச்சிமுத்து (1995-1998); 
6. முனைவர் பி. நசீமுதீன் ( 1998 - 2001 ); 
7. முனைவர் கார்லஸ் ( 2001 - 2005 ); 
8. முனைவர் தி . மூர்த்தி ( 2005 - 2007 ); 
9. முனைவர் ஏ.மாரியப்பன், தில்லிப் பல்கலைக்கழகம் ( 2007 - 2009 ); 
10. ஜி. பாலசுப்பிரமணியன், இப்போது தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ( 2009 - 2011 ); 
11. முனைவர் ஏ. இராமசாமி ( 2011 - 2013 ); 
12. முனைவர் எஸ். ஆரோக்கியநாதன் ( 2014 ).  அவ்வண்ணமே;  
13. ஜகிலோனியன் பல்கலைக்கழகம், கிராக்கோவில் தில்லிப் பல்கலைக்கழக  முனைவர் கோவிந்தசாமி இராஜகோபால் ( 2011 - 2013 ), 
14. முனைவர் சுந்தர் பாலு, பாரதியார் பல்கலைக்கழகம் (2013 ) முதல். 

இதற்குப் பிறகு தமிழ்ப் பேராசிரியர்கள் இப்போது கிராக்கோவிலும், வார்சாவிலும் பணியாற்றுவதில்லை. எப்படித் தெரிவு செய்தனர் எந்தக் குழுவினர் எப்படிப் பரிந்துரைத்தனர் என அறிய முடியவில்லை.

பல்வேறு நாடுகளில் பண்பாட்டு நெறிகளையும் மொழிகளையும் பயிற்றுவிப்பதற்காக அமெரிக்க அரசு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி வழங்கத் திட்டமிட்டுள்ளதாம். அந்த வகையில் வங்காளம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளை முன்னெடுத்திருப்பதாகவும்,  இந்த நல்கை வழியாகவே பேராசியர் தெ பொ மீ 1962 ஆம் ஆண்டில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராக நான்கு மாதங்கள் சிகாகோவில் இருந்ததாகவும் குறிப்புள்ளது.  1962 ஆம் ஆண்டிலேயே ஜூன் மாதத்தில் குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களால் பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா மாநகரத்தில் பஞ்சாப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டதாகவும் அதுதான் மொழியின் பெயரால் தோற்றுவிக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் என்றும் பேசினார் . இத்தகவல்களை நண்பர்கள் எனக்கு நினைவூட்டியதால் எழுதினேன். எந்நிலையிலும் தமிழுக்குப் பெருமை சேர்ந்தால் நமக்கும் பெருமை. நிற்க இது ஒருபுறம் இருக்கட்டும் .

அமெரிக்கத் தேர்தலைப் பற்றி நான் ஒரு கட்டுரை படித்தேன். தேர்தலில் பரப்புரை செய்யும் முன்னணித் தலைவர்களின் நடை, உடை, எடை, பேசுகிற மொழிப்பாங்கு, ஆங்கில எழுத்துக்களை ஒலிக்கும் முறை
முதலியவற்றை எல்லாம் விழிப்பாக மக்கள் நோக்குவார்கள்.  அதனால் தெளிவாகவும் முறையாகவும் எப்படிப் பேசுவது என்பதற்கே பயிற்றுவிப்பவர்களை அணுகித் தம்மைத் திருத்திக்கொள்வார்கள் என்றிருந்தது. 

தமிழகத்தில் தேர்தல் அனல் திசையெங்கும் காயும் கனலோடு போட்டியிட்டு வெப்பம் பரவுகிறது. முன்னணித் தலைவர்கள் தங்கள் பரப்புரைகளைச் சிறப்பாக ஆற்றி வருவதோடு கட்சித்தலைவர்கள் சிலர் கடுங்கோபத்துடன் வரம்பு மீறிய சொற்களையும் வசையாகப் பொழிகிறார்கள். 
எந்தப் பேச்சையும் தீரத்தெளிந்து எழுதி வைத்துக்கொண்டு படிப்பதென்பது பெருமைக்குரியதாகும். ஒலிப்பு முறையில் தமிழ்ச்சொற்கள் படாதபாடு படுகின்றன.  குறை என்பது வல்லினமென்றாலும் பற்கள் தேயும் அளவுக்கு வல்லினச்சொற்களை ஒலிக்கும் போது எட்டு மாத்திரைகளைத் தொட்டுவிடுமோ என்ற அச்சம் உண்டாகிறது.

இந்திய நாட்டுக்கு மட்டுமே பெருமையூட்டும் ஆறு செம்மொழிகளாகிய தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா ஆகிய மொழிகளில் தேர்தல், வாக்கு, வேட்புமனு, விலக்களிப்பு, தேர்தல் அறிக்கை, திரும்பப் பெறுதல் முதலிய சொற்கள் பிற மொழிச்சொற்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொது வடசொல் கலவாத செஞ்சொற்களாகவே இனிமை தருகின்றன. இந்த நிலையில் தான் ஊடகங்கள் வானொலி உரைகள், தொலைக்காட்சியில் வழங்கும் சொற்கள், மேடையில் உதிர்க்கும் உரைகளைச் செப்பமாக அமைத்துக்கொள்ளலாம் அல்லவா ! 

குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிட்ட 99 பூக்களின் பெயர்களை நாவரசர் காளிமுத்து ஒலிப்பு நயங்குன்றாமல் அடுக்கி உரைப்பார். மேடை அதிர்ந்து ஆர்ப்பரிக்கும் ஒரு நிகழ்ச்சி. புரட்சித்தலைவர் எழுந்து போய்க் கட்டித் தழுவிக்கொண்டார். பூக்கள் மணங்கமழவும் பொன் வரிகள் மின்னித்திகழவும் அமைந்த தொடர்கள் காளிமுத்துவின் நாவில் துளிர்த்த ஒவ்வொரு சொல்லும் தேன் சொற்களாயிருந்தன.

"தொடங்கு குரல் முழங்கு கடல்"  என்று அன்று நான் நன்றி கூறினேன். தான் சொல்ல முடியாத நெருடலான சொற்களை நீக்கிவிட்டு எளிய சொற்களின் வசனங்களைப் புரட்சித்தலைவர் மாற்றச்சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. எழில் என்பதை அழகு என்று ஒருமுறை மாற்றினார். இன்றியமையாதது எடுத்துவிட்டுத் தேவையானது என்று திருத்தினார். அப்போது ஒலிப்பிழை வரக்கூடாது. எழுத்து விடாமல் எண்ணி ஒலிக்கும் இனிமை தமிழ்மொழிக்கே வாய்த்த தனிப்பெருமை.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது"  என்று பாடியதற்குத் தமக்குத் தாய்மொழி இனிமையாக வயப்படுவது என்று நயம் கூறுவார்கள்.
"மருள் கொண்டவர்கள் என்று மக்களை நினைக்கிறார்கள் மனம் வேறு, பணம் வேறு தெளிவு கொண்டது மனம், திகைப்பைத் தருவது பணம், வாக்களிக்கும் கை வாழ்வளிக்கும் கை - மக்களாட்சியைக் காக்கும் கை .இழிவுகளையும் அழிவுகளையும் நீக்கும் கை" என்று தென்கோடியில் அகத்தீசுவரம் முதல் திருத்தணிகை வட்ட அம்மாபேட்டை வரை அத்தனை மாவட்டங்களிலும் இந்தத் தித்திப்பு உரைகளைத்தான் பேரறிஞர் அண்ணா தேர்தலில் பேசி வந்தார்.

மக்களாட்சியைப் பேச்சினால் வெல்லும் ஆட்சி என்றே ஒரு பழமொழி உண்டு. எனவே திருந்திய மொழியில் பொருந்திய வகையில் உரையாற்றினால் தேர்தலில் வெற்றிக்கனிகளைப் பறிக்கலாம். பேசுவதைவிட எழுதும் போது சொற்கள் திருந்திய வடிவம் பெறும். எழுத்துரைகளில் மேடையில் பேசும் போது காட்டும் முறைப்பு, கடுகடுப்பு, பழித்துக் காட்டுதல் நிகழ வாய்ப்பில்லை. ஒலிப்பு முறையை வலியுறுத்திப் பல கட்டுரைகள் வந்துள்ளன.

சான்றாகப் பேராசிரியர் விஜயலட்சுமி இராமசாமி மனம் வருந்தி எழுதிய கருத்துரையை இனிக் காணலாம்.
இயல்பான நாக்கு :
தமிழ்மொழி இன்றைய மேடைகளிலே, ஊடகங்களிலே தவறாக ஒலிக்கப்படுகிறது.  தமிழ்மொழியின் உச்சரிப்பு நெறி சீர்குலைந்துள்ளது. குறிப்பாகக் காட்சி ஊடகங்களில் செய்தி வாசிப்பவர்கள், செய்தியாளர்கள், மொழியும் ளகரத் தமிழ் உச்சரிப்பு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. மேடையில் பேசும் இன்றைய இளைய தலைமுறைகளும் சரி, பலருக்குத் தமிழ் எழுத்துகளின் சரியான உச்சரிப்பு வருவதில்லை. பொதுவாக உச்சரிப்பில் தவறு செய்பவர்களுக்கு அவர்கள் செய்யும் பிழை அவர்களுக்கே தெரியாது. தெரிந்திருந்தால் அவர்கள் மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யக்கூடும்.

பள்ளியில் படிக்கும்பொழுதே ல, ள, ழ - ந, ண, ன - ர, ற - என்ற எழுத்துகளை ஒலிக்கும் பொழுது, சரியாக உச்சரிக்கப் பழக்க வேண்டும்.  சிறுவயதில் ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியாகப் பேசவைத்தும், படிக்க வைத்தும் பள்ளிப்பருவத்திலேயே சரியாகக் கற்றுக் கொடுத்தால், பிழை நிச்சயமாக வராது. ஒவ்வொருவரும் வாய்விட்டு உரத்தகுரலில் படிக்க வேண்டும் அல்லது பேச வேண்டும். அதை ஒலிப்பதிவு செய்து அவரவர்கள் கேட்க வேண்டும். கேட்கும்பொழுது பிழை நிச்சயமாகத் தெரியும், உடனே மாற்றிக் கொள்ளலாம். இது அறிவியல் வளர்ந்த காலம். கருவிகள் மூலமே கண்டுபிடித்துக் கருவிகளைக் கொண்டே சரியாகப் பயிற்சி செய்தும் நன்றாகப் பெறலாம். வளர்ந்த நிலையில் இருக்கக்கூடிய ஒருவரிடம், உங்கள் உச்சரிப்பு சரியில்லை என்று சொன்னால் அவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளாது.

உச்சரிப்பில் குழப்பம் தரும் இடங்கள் மூன்று. அவை:
1. ல, ள, ழ; 
2. ண, ந, ன;
3. ர, ற.
இவ்வெழுத்துகளைத் தவறாக உச்சரித்தாலும், ஓர் எழுத்துக்குப் பதிலாக வேறோர் எழுத்தை எழுதினாலும் பொருளே மாறுபடும். வேறு பொருளும் உண்டாகும். எனவே, இவற்றைத் தெளிவாக அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

ஐந்திலும் வளையும் ஆர்வம் கொண்டால் ஐம்பதிலும் வளையும் ஒலிப்பு முறை ஒருமொழிக்கு அழகூட்டுவது, ஆக்கம் சேர்ப்பதுமாகும் .

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை...... 
- ஒளவை நடராசன்
thamizhavvai[at]hotmail.com
----

தேமொழி

unread,
Jun 5, 2021, 10:52:34 PM6/5/21
to மின்தமிழ்
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி -  80)

“செந்தமிழும் நாப்பழக்கம் !”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

ஒருமுறை புரட்சித்தலைவர் தலைமைச்செயலகத்தில் திடுமென வரச்சொல்லியிருந்தார். போய் நின்றேன். ஒரு துண்டுத்தாளில் யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்த வரி அது அந்தத் துண்டுத்தாளை என்னிடம் கொடுத்தார். அப்போது நண்பகல் ஒரு மணியிருக்கும். புரட்சித்தலைவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அனைவரும் ஆயத்தமாக நின்றிருந்தனர்.

நான் உள்ளே நுழைந்ததும் என்னிடம் தந்த தாளைக் காட்டி முழுப்பாட்டையும் சொல்லுங்கள் என்றார். எதிர்பாராமல் அப்போதைய கல்வியமைச்சர் அரங்கநாயகம் உள்ளே வந்து நின்றார். அவரும் புரட்சித்தலைவரோடு செல்வது போலத் தெரிந்தது. அமைச்சரிடம் துண்டுத்தாளைக் காட்டினேன்,  சரியாகத்தான் கேட்டிருக்கிறீர்கள். இது ஒளவையார் பாடலின் வரி, அவ்வளவு தான் எனக்குத் தெரியும் என்றார். புத்தகத்தைப் புரட்டிப் பார்க்க வேண்டும். நல்ல வேளையாக எனக்குப் பாடல் நினைவுக்கு வந்தது.

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்."
என்று சொன்னேன்.

கல்வி மனப்பழக்கம் தான். அதனால் தான் உங்களுக்கு நினைவுக்கு வந்தது.  அது சரி கொடை என்பது பிறவிக்குணமா ? அது எப்படி அதுவும் பழக்கத்தால் வருவது தானே என்றார் புரட்சித்தலைவர். அப்படியில்லை எத்தனையோ பேர் கொடுப்பதற்குப் பழகிப்பார்த்தார்கள், ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. உங்களைப்போன்ற தனிப்பிறவிக்குத்தான் பசித்தநேரத்தில் ஒரு கவளத்தைக்கூடப் பாதியாகக் கொடுக்க முடியும் என்றார் கல்வியமைச்சர். எழுந்து இருவரும் பேசியபடியே சென்றனர். அதை நினைத்துத் தான் ஒலிப்புமுறையைக் கருதி செந்தமிழும் நாப்பழக்கம் என்று தலைப்பிட்டிருக்கிறேன்.  
    
மொழியின் அடிப்படைக்கூறுகள் ஒலிகள் அல்லது எழுத்துக்கள். தமிழ் ஒலிகளைக் கற்பிக்கின்ற பள்ளி ஆசிரியர்களும் சரியான ஒலிப்பு முறைகளைப் பணி முறைப்பயிற்சி மூலம் மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்று அறிஞர் வி .கோ.பரிதிமாற்கலைஞர் "தமிழ்ப் பாடசாலைகள்" என்ற கட்டுரையிற் பல ஆண்டுகளுக்கு முன் எழுதியதைக் காணலாம். இனி ஒலிப்பு முறைப் பழக்கத்தைப் பற்றிச் சிந்திக்கலாம்.

கிராமந்தோறும் தமிழ்ப்பாடசாலைகள் தொன்று தொட்டு நடந்து வருகின்றன. கிராமச் சிறார்கள் இவற்றில் கல்வி கற்று வருகின்றனர். இவற்றின் சரித்திரத்தை ஆராயுங்கால் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இப்பாடசாலைகளில் தமிழ் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு வந்தது என்றும் தற்காலத்தில் அத்தனை அளவுக்குப் பயிற்றுவிக்கப்படவில்லை என்பதும் எவரும் அறிந்த விசயமே! இதன் காரணம் யாது? தற்காலத்துத் தமிழ்ப்பாடசாலைகளில் வாத்திமைத் தொழில் நடத்துவோர் பெரும்பான்மையோர் தமிழறிவு நுட்பங்காணாதவரே! ஆங்கிலேயேப் பாடசாலைகளில் சில்லாண்டு கற்று ஆங்கிலமாயினும் - தமிழாயினும் சீர்பெறக் கல்லாமல் உதர வலி ஒழித்தற் பொருட்டுத் திரிபவர் வாழ்கின்றனர் என்று வருந்தி எழுதினார்! 

இவர்கட்கு இலக்கண இலக்கிய அறிவு இல்லை அன்றியும், இக்காலத்தில் சிறார் தமிழ்ப்பாடசாலைகளில் தங்கும் காலம் சிறிதேயாகும். தமிழ்மொழியைப் பிழையின்றி உச்சரிக்க, ஆர்வமூட்டல் ஆசிரியர்களின் தலையாய கடனாகும்.  ஆனால் ஆங்கிலத்தின் ஒலிப்பு முறையோ அவலத்துக்குரியது, எந்தக் காரண காரியத்துக்கும் கட்டுப்படாதது. 

ஆங்கிலேயர்க்குத் தம் மொழியின் மீது எந்தப் பெருமிதமும் இல்லை. ஆங்கில எழுத்துக்களை அவர்கள் ஒலிக்கும் முறை தாங்க முடியாத கொடுமையாகும். ஒருவர் ஒலிப்பது மற்றொரு ஆங்கிலேயனுக்கே விளங்காது. ஆங்கிலேயன் தன் வாயைத்திறந்து பேசும் முறையால் அடுத்தவனைப் புண் படுத்துவதாக - புறக்கணிப்பதாக இருக்கும். செருமன் மொழியும் - இத்தாலிய மொழியும் அயலவர்க்கும் வயப்படும். ஆங்கிலமோ ஆங்கிலேயர்க்கே வயப்படுவதில்லை. ஆங்கில ஒலிப்புமுறைத் திருத்தத்திற்காக ஒரு புரட்சியாளர் தேவைப்படுகிறார் என்று அறிஞர் பெர்னார்டு ஷா பிக் மாலியன் என்ற நாடகத்தில் எழுதியுள்ளார். அதற்காக ஒரு நிதியத்தையே அவர் அமைத்துச் சென்றார்.

ஒரு பூக்காரிக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஒலியியற் பேராசிரியரின் கதை தான். இது திரைப்படமாகவும் பிக் மேலியன், என் அழகிய சீமாட்டி என்ற பெயர்களில் வெற்றி வலம் வந்தன. பேராசிரியரும் இருமொழிப் புலமைச் செம்மலாகவும் திகழும் இராம.குருநாதன் எழுதியனுப்பிய கட்டுரை ஒலிப்பு முறை வலியுறுத்து காலத்திற் கனிந்த கனியாகும்.  

மனிதனின் முதல் மொழியே ஓசைதான்.  நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே அவன் மொழி பற்றிய உணர்வுடையவனாக இருந்திருக்க வாய்ப்பில்லை.  மனிதன், தன் உணர்ச்சிகளை ஓசை மூலமாகவும், புறச்செய்கையான சைகை மூலமாகவும் முதன்முதலாகக் கருத்துகளைத் தன்னைச் சார்ந்த குழுவுக்கும், மற்றவர்க்கும் தெரியப்படுத்தினான்.  அருகில் இருக்கும் போதும், சேய்மையில் இருக்கும்போதும் உணர்வுகளுக்கு ஏற்பத் தன் குரலைக் குறுக்கியும், உரத்தும், நீட்டியும் ஒலிக்கத்தலைப்பட்டான்.

நாகரிகம் வளர வளர உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்தான். ஒலியால் தன் கருத்தை உணர்த்தி வந்தவன், உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுக்கக் கோடுகளால் ஆன குறிகள், சித்திரங்கள் ஆகியவற்றின் மூலமாக வெளிப்படுத்தத் தொடங்கினான்.  ஒலியின் இயக்கமும், கோடுகளால் ஆன குறிகளும் கொண்டு எழுத்துருவை உண்டாக்கக் கற்றுக்கொண்டான். ஒலி வழியாகவே எழுத்துக்குரிய வரிவடிவங்கள் தோற்றம் கண்டன.

ஒலிகள் குறுகி ஒலிப்பனவும், நீண்டு ஒலிப்பனவும் கலந்து ஒலிப்பனவுமாகிய நிலைகளில் எழுத்துக்கள் உருவாகத் தொடங்கின. ஒலி என்பது காற்றின் இயக்கம்.  அது அகப்புறக்கட்டமைப்புடையது. ஒலியினால் ஆனதுதான் எழுத்து. மொழியின் கட்டமைப்பில் ஒலியை முதலாகக் கொண்டே எழுத்தும் சொல்லும் சொல்ல வரும் கருத்தை முறைப்படுத்தத் தொடங்கின. தொல்காப்பியப் பிறப்பியலில் உந்தி முதலா முந்து வளி தோன்றி என்ற நூற்பாவின் பொருளை அறிவியல்படி இன்றைய மொழியிலார் சுட்டிக்காட்டியிருப்பது எண்ணிப்பார்க்கத்தக்கது. மனிதன் தன் கருத்தைத் தெரிவிப்பதற்கு இலகுவான சூழலில் எழுந்த எழுத்தின் பிறப்பை இலக்கணிகள் கண்டு உணர்த்தியுள்ளனர்.

குறில், நெடில், என்ற அடிப்படையில், உயிரொலி, மெய்யொலி, உயிர்மெய்யொலி என்ற வகையில், எழுத்துகளை ஒலிப்பு முறையைப் பாகுபடுத்தினர்.  ஓசையால் எழுத்தும், எழுத்தால் சொல்லும் தோன்றத்தொடங்கியது. சொல் என்பது எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுத்தும் ஓசை என்று தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் கூறியிருப்பது நோக்குதற்குரியது.  மொழியே ஒலியினால் இயங்கும் இயக்கம் என்பது இதனால் பெறப்படுகிறது.

தமிழில் ஒலியமைப்பைப் புரிந்துகொள்ளாமல் இன்று தமிழ்ச்சொற்களைச் சரியாகப் பலர் ஒலிக்க இயலாதிருப்பதைக் காண்கிறோம்.  எழுத்துகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்ற சிந்தனை இன்றைய கல்விச்சாலையிலும், இளைஞரிடத்தும் செயலாக்கம் பெறாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.  ஒரு சொல்லைத் தேர்ந்தும் தெளிந்தும் சொல்லவேண்டும் என்பது கூடத் தெரியாமல் உச்சரிக்கின்றனர்.  எழுத்துகள் ஒலி அடிப்படையில் உச்சரிக்கவேண்டும் என்று தெரிய வேண்டாமா?  எழுத்துகளில் வல்லொலி, மெல்லொலி எவ்வாறு உச்சரிக்கப்பட வேண்டும் என்பதை அறிந்தால், சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்ற பாரதியின் உயர்ந்த நோக்கத்தை நாம் காணலாம்! 

தமிழில் ஒரு சொல்லைச் சொல்லும்போது அதன் பொருளறிந்து பேசவேண்டும்.  பேசும் முறையில் சரியாக உச்சரிக்கவேண்டும்.  புலி என்பதையும், புளி என்பதையும் உச்சரித்துப்பாருங்கள்.  வேறுபாடு தானாகவே புலப்படும். அதனை விடுத்து ல, ள என்ற எழுத்து உச்சரிக்கும் முறையை அறிந்துகொண்டு அச்சொல்லின் இயல்பு இன்னது என்ற தெளிந்து பேசவேண்டும். பல்லியும் பள்ளியும் ஒன்றா ? பள்ளி அறைக்கு மேலே பல்லி ஊர்கிறது. இதனைச் சொல்லிப் பாருங்கள்.  ஒலி அமைப்பில் உள்ள வேறுபாடு புரியவரும்.  கள்ளுக்கடையும் கல்லுக்கடையும் ஒன்றா? கள்ளுக்கடையில் கல் விற்குமா? என்பதைச் சொல்லிப் பாருங்கள்.  தமிழ் மொழியின் சிறப்பே அதன் எழுத்துகளின் உச்சரிப்பு அல்லவா! இதை இன்றைய தலைமுறையினர் உணர்வார்களா?

நாக்கின் போக்கில் சொற்களைக் கண்டபடி கையாளக்கூடாது.  நாக்கின் நகர்வு மேல் நோக்கி மேல் அண்ணம், கடையண்ணம், நடுஅண்ணம் போன்றவற்றை முன்னோக்கியும், பின்னோக்கியும், மடித்தும் , வளைத்தும் அமைக்கக் கூடியதாகவும், பற்களின் நுனியைத் தடவுவதாகவும், உரசுவதாகவும் இருப்பதால் எழுத்துகள் பிறக்குமாற்றை இலக்கணம் வற்புறுத்துகிறது. ஒவ்வோர் எழுத்தும் பிறக்கும் இடங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் வகுத்துரைத்துள்ளார்.

அவருக்கு முன்பே அவ்வாறு வழங்கி வந்திருப்பதை எடுத்துரைக்கிறார்.  பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், ய, ர, ல, வ, ழ, ள என்ற இடையின எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக்கொண்டு பிறப்பன. வல்லெழுத்துகளான க, ச, ட, த, ப, ற ஆகியன மார்பினை இடமாகக் கொண்டு பிறப்பன.  மூக்கினை அடிப்படையாகக்கொண்டு மெல்லின எழுத்துகளான ஞ, ங, ண, ந, ம, ன ஆகியன மூக்கை இடமாகக்கொண்டு பிறப்பன.
இவை எவ்வாறு ஒலிக்கப்படவேண்டும் என்பதை நோக்க,
1) வாயைத்திறந்தால் ஒலிப்பது – அ, ஆ
2) வாயைத் திறப்பதோடு மேல்வாய் பல்லை நாவிளிம்பு தொடுவது – இ, ஈ,  எ,  ஏ,  ஐ
3) உதடுகள் குவிவது – உ,  ஊ,  ஒ, ஓ, ஔ
4) நாக்கின் அடி மேல் அண்ணத்தைத் தொடுவது – க்,  ங்
5) நாக்கின் நடு மேல்வாய் நடுவினைத் தொடுவது –ச், ஞ்
6) நுனி நா அண்ணத்தைத் தொடுவது – ட், ண்
7) மேல்வாய் பல்லின் அடியை நா நுனி தொடுவது – த், ந்
8) மேல் உதடு, கீழ் உதடு பொருந்துவது – ப், ம்
9) நாக்கின் அடி மேல்வாய் அடியைப் பொருந்துவது – ய்
10) மேல்வாயை நாக்கின் நுனி தடவுவது –ர், ழ்
11) மேல்வாய் பல்லின் அடியை நாவினது ஓரங்கள் தடித்து நெருங்குவது – ல், ள்
12) மேல்வாய் பல்லைக் கீழ் உதடு பொருந்துவது – வ்
13) மேல்வாய் நாக்கின் நுனி மிகவும் பொருந்துவது – ற், ன 
14) தலையை இடமாக க்கொண்டு பிறப்பது ஆயுதம்  – ஃ

தமிழில் சில எழுத்துகளைத் தடுமாற்றத்தோடும், தவறாகவும் உச்சரிப்பது இன்று பெருகியிருக்கிறது.  தொடக்க வகுப்பிலிருந்தே எழுத்தின் ஒலிப்பைச் சரியாக உணர்ந்து பேசினால் தவறு நேர வாய்ப்பில்லை.  சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்று அன்றே நம் முன்னோர் நம் நெஞ்சில் விதைத்துச் சென்றதை நாம் மறந்துவிட்டோம்.

வல்லோசையை (க ச ட த ப ற) அழுத்தம் கொடுத்து உச்சரிக்கவேண்டும். மெல்லோசையை (ங ஞ ண ந ம ன) அழுத்தம் குறைந்து உச்சரிக்கவேண்டும்.  இடைப்பட்ட ஓசையை (ய ர ல வ ழ ற ன) மிதமான அழுத்தும் கொடுத்து உச்சரிக்கவேண்டும். தமிழ் எழுத்துகளில் மிகுதியும் கவனம் செலுத்தி உச்சரிக்கப்படும் ஒலிகள் ன ண ந ல ள ழ ர ற மேலே காட்டியுள்ள எழுத்துகளின் உச்சரிப்பைத் தவறாக ஒலிப்பதைக் கேட்கும் போது நாம் கேட்பது தமிழா ? என்று வினவத் தோன்றும்? இவை எப்படிப் பிறக்கின்றன என்பதை மீண்டும் நினைவு ப்படுத்திக் கொள்ளலாம்.
 பயிற்சியினால் மட்டுமே இத்தகைய எழுத்துகளைச் சரியாக உச்சரிக்க முடியும்.

எழுத்தின் மீது கவனத்தையும், பேசும்போது உச்சரிப்பு முறையை நன்கு அறிந்தும் சொல்வோமானால் எந்த உச்சரிப்பும் கேட்போர்க்கு நச்சரிப்பைத் தராது என்பதை நம்புவோமாக! தமிழ் மொழி இயற்கைப் படைப்பாக இலங்குவதைப் பாவேந்தர் பாடிக் காட்டுவதை எவரும் மறக்க முடியாது. 
பொருள் மிக்க தமிழ்மொழிக்குப்
புரிந்திடுவீர் நற்றொண்டு,
புரியீராயின்,
இருள்மிக்க தாகிவிடும்
தமிழ் நாடும் தமிழர்களின்
இனிய வாழ்வும்!
காக்கை "கா" என்றுதனைக்
காப்பாற்றச் சொல்லும்! ஒரு
கரு முகில்தான்,
நோக்கியே "கடமடா"
என்றேதன் கடனுரைக்கும்.
நுண்கண் கிள்ளை
வாய்க்கும் வகை "அக்கா" என்று
அழைத்ததனால் வஞ்சத்துப்
பூனை "ஞாம் ஞாம்" ( நாம் )
காக்கின்றோம் எனச் சொல்லக்
கழுதை அதை "ஏ" என்று
கடிந்து கூறும்.
"கூ" எனவே வையத்தின்
பேர் உரைத்துக் குயில் கூவும்
"வாழ் வாழ்" என்று
நாவினிக்க நாய் வாழ்த்தும்
நற்சேவல் "கோ" என்று
வேந்தன் பேரைப்
பாவிசைத்தாற் போலிசைக்க,
வருங்காற்றே "ஆம்" என்று
பழிச்சும் ! இங்கு
யாவினுமே தமிழல்லால்
இயற்கை தரும் மொழிவேறொன்று
இல்லை யன்றோ
என்ற பாவேந்தரின் பாடல் நம் நெஞ்சை நெகிழ்விக்கும்.

இலக்கணம் வழியாகக் கற்பது, கற்பிப்பது என்பது முறையான கல்வியாகும்  எனினும் அறிஞர் நூல்களைத் தொடர்ந்து படிப்பதாலும், பெருமக்கள் பேசும் உரைகளைக் கேட்பதாலும் எளிதில் இந்த இலக்கண நெறி நம் நாவில் இயல்பாகப் படிந்து விடும்.

பயிற்சி தான் பழக்கமாகும்.
பழக்கம் தான் வழக்கமாகும்.
வழக்கம் மரபாகும்.
மரபு நம் சிந்தை அணு ஒவ்வொன்றிலும் உறைந்துவிடும்.

தொடர்வோம் ...
பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை.

தேமொழி

unread,
Jun 9, 2021, 10:02:17 PM6/9/21
to மின்தமிழ்
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி -  81)

“பல்கலைக்கழகங்கள் படும் பாடு !”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தகுதி வாய்ந்த ஆசிரியர்களைப் பணியமர்த்தத் தவறியமையும், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையும் பல்கலைக்கழக வீழ்ச்சிக்கு வழிவகுக்கின்றன.
அன்மையில் தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வந்த ஒரு கட்டுரை அதிர்ச்சியை அளித்தது. நூற்றுக்கு நாற்பது விழுக்காட்டில் ஆசிரியர்களுடனும் வற்றி வரும் வருவாயுடனும் சென்னைப் பல்கலைக்கழகம் போராடி வருகிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜி.என்.இராமச்சந்திரன், இணைப்பு திசு வெண்புரதத்தின் முத்திருகு சுழல் நுண்ணிய வடிவை முதலில் கண்டுபிடித்தார்.  இங்கிலாந்திற்குச் செல்வதற்கு முன்னர், கணித மேதை இராமானுசன் நான்கு ஆண்டுகளைத் தம் ஆய்வில் இப் பல்கலைக்லைக்கழகத்தில் செலவிட்டார். பொருளாதாரத் துறையின் பேராசிரியரான பி.ஜே.தாமஸ் , 1930 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த மக்கள், தங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்தார்.

1857 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம், தென்னிந்தியாவிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகத்திற்கும் முன்னோடி அன்னைப் பல்கலைக்கழகமாக அமைந்தது. தொடர்ந்து செயற்படுவதற்காக மிகப் பெரிய நெருக்குச் சூழலில் பல்கலைக்கழகம் இப்போது தவித்துத் தள்ளாடுகிறது. ஒவ்வொரு மாதமும் பணியாளர்களுக்கு ஊதியம் அளிப்பதே அரிய செயலாக இருப்பது விந்தைக்குரியதாகும்; அறக்கட்டளைச் சொற்பொழிவுகளுக்காகவும், பரிசுகளுக்காகவும் வழங்கப்படும் அறக்கட்டளை நிதி பதினாறு கோடியாகக் குறைந்துள்ளது.

தரமான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை அமர்த்தம் செய்யாதது, உரிய ஆய்வுத் திட்டங்களைத் தெரிவு செய்ய முடியாதது, பல்கலைக்கழகத்திற்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கை குறைந்தது, வருவாய் குறைந்து வரும் நிலை மறந்து புதிய கட்டடங்களுக்குச் செலவு செய்தது முதலியவை வறட்சிக்கு வழி வகுத்தன.

58% ஆசிரியர் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன.  இதன் விளைவாக முதுநிலைக் கல்வி மையமாகக் கண்டறியப்பட்ட சில துறைகளுக்கு நிதியைப் பெற முடியாது போயிற்று. ஆசிரியர் பற்றாக்குறையால் நோயியல், மருந்தியல், சுற்றுச்சூழல் நச்சுயிரியல் ஆகிய துறைகளில், முதுகலைப் பாடப்பிரிவுகள் அடைபட்டுவிட்டன. கடந்த ஏழாண்டுகளாகப் புதிதாக ஆசிரியர்கள் எவரையும் நியமனம் செய்யாததாலும் மூத்த உயர் பேராசிரியர்கள் ஓய்வு பெற்றதாலும், இப்பல்கலைக்கழகத்திற்கு மிகப்பெரிய அரணாக விளங்கிய ஆய்வியல் துறையில் சரிவு ஏற்பட்டள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் எஸ் .பி . தியாகராசன் கூறிய கருத்துரை :-
"பன்னாட்டு அனுபவ மிக்க ஆய்வியல் திறன்மிகு ஆசிரியர்களால் இப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர இயலவில்லை. முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய உயராய்வு முறை வலுப்படுத்தப்படவில்லை. முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வினை மேற்கொண்டவர்களையே பன்னாட்டுப் பல்கலைக்கழகங்கள் தெரிவு செய்ய விரும்புகின்றன. சென்னை பல்கலைக்கழகத்தில், கல்லீரல் அழற்சிக்கான சிகிச்சைக்காக வைரோஹெர்ப் எனும் மருந்தைக் கண்டேன். 2001ஆம் ஆண்டு இதற்கான காப்புரிமையும் வழங்கப்பட்டது. தரமான ஆய்வியல் கருத்துருக்கள் வாயிலாக அதிகளவிலான நிதியத்தைப் பெற்றால் தான் ஆக்கபூர்வமான ஆய்வுகள் எவற்றையும் நாம் தொடர முடியும். கடந்த பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகளாகப் பல்கலைக்கழகத்தின் ஆய்வியல் மற்றும் புத்தாக்கச் சுற்றுச்சூழலமைவு முறை குன்றிவிட்டது" என்றும் அவர் கூறினார்.

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து, பணியாளர்களுக்கு ஊதியத்தை அளிப்பதற்குப் பதிலாக, ஓய்வூதியக் கடன் பொறுப்புகளிலிருந்து தொகையை எடுத்து மாதாந்திர அடிப்படையில், ஊதிய மானியங்களை அரசு வழங்கினால், பல்கலைக்கழகத்தின் நிதிநிலைமை ஓரளவு சீராகலாம் என்று பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

பல்கலைக்கழகம் தனது நிதிநிலைமையைச் சரிசெய்வதற்காக, மாணவர்களை இடர்ப்பாட்டிற்கு உள்ளாக்கக்கூடாது. "மாநில அரசு, குறைந்தது, 50 % வரவு செலவு நிதியொதுக்கீட்டைப் பல்கலைக்கழகத்திற்கு நல்கையாக வழங்க வேண்டும்." எனப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார் .

இங்குக் காணப்படும் நிலையில் உயர் அறிவியல் ஆய்வு மட்டுமே மன்பதைக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய பயனளிப்பதாக அமையும்,  மேலும் நிதி நல்கையும் அத்தகைய அறிவியல் ஆய்வுக்கே கிடைக்கும். இது பற்றி முரசொலி நாளிதழ் நடுப்பக்கத் தலையங்கமாகப் பல்கலைக்கழகச் சீர்குலைவை நிமிர்த்த வேண்டும் என்றும் எழுதியுள்ளது. "சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு என்று ஆண்டுதோறும் ரூ.82 கோடி சம்பளம்,  ஓய்வூதியம் ரூ.90 கோடி,  இதர செலவுகள் ரூ.30 கோடி என்று சுமார் 202 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.  மாநில அரசு ரூபாய் 40 கோடி ஆண்டுதோறும் சம்பளத்திற்கான மானியத் தொகையை வழங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பல்கலைக் கழகத்தின் மொத்த செலவுகளில் 20 சதவிகிதம் மட்டுமே வழங்கி வருகிறது. பல்கலைக் கழகத்தின் மூலம் ரூ.70 கோடி மட்டுமே கிடைக்கிறது.  இந்த மோசமான நிதிநிலையில் ஓய்வு பெறும் பல்கலைக் கழக ஊழியர்களுக்கு 2018 ஆம் ஆண்டு முதல் கடைசி நேர பலன்களை வழங்கி அவர்களுக்கு நிம்மதியான ஓய்வூதியத்தை நிறைவு செய்ய முடியாத நிலையே இருந்து வருகிறது".

உதவிப் பேராசிரியர், துணைப் பேராசிரியர், பேராசிரியர் எனப் பல்கலைக் கழகத்தில் மொத்தம் 513 பேர் இருக்க வேண்டும்.  ஆனால், 217 பேர் மட்டுமே பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.  ஆசிரியர்களின் நிலைமை இதுவென்றால் மாணவர்களின் நிலைமை அவர்களின் எண்ணிக்கை வருத்தம் தருகிற போக்கில்தான் அமைந்து இருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் 72 துறைகள் இருக்கின்றன. அவற்றில் ஆய்வு மையங்களும் இடம் பெற்று இருக்கின்றன. இதில் 18 துறைகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் பயில்கிறார்கள்.

நான் துணைவேந்தராகயிருந்த போது பல்கலைக்கழக நல்கைக்குழுக் கூட்டத்துக்குச் சென்றதுண்டு. நான், பதிவாளர், நிதி அலுவலர், துணைப்பதிவாளர், ஒரு புலத்தலைவர் என ஐவராகச் சென்றோம்.  நல்கைக்குழுவின் தலைவர் ஆக்ஸ்போர்டில் கற்றவர், வடமாநிலங்களில் துணைவேந்தராக இருந்தவர். அறிவியல் திட்டங்களைப் போல உங்கள் திட்டங்கள் இல்லையே, பழைய இலக்கியங்களை மொழிபெயர்ப்பது, ஓலைச் சுவடிகளை வெளியிடுவது, ஊர்ப்பெயர்களைத் தொகுப்பது, பட்டியலிடுவது, இவற்றைத்தவிர வேறு புதிய திட்டங்களையே காண முடியாது. இவற்றைத்தவிர மொழிப் பல்கலைக்கழகங்களுக்கு வேறு திட்டங்களே இல்லையா! உங்களைச் சொல்லவில்லை, பத்துக்கு மேற்பட்ட சமஸ்கிருதப் பல்கலைக்கழங்களிலும் இப்படித்தான் திட்டங்கள் அமைந்துள்ளன. குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள், எங்கள் குழு வகைப்படுத்திய அளவீடுகளுக்கு இவை சற்றும் பொருந்திவருவதில்லை, வந்து போனதற்காக ஊர்ப் பெயர்த்திட்டங்களுக்காக ஐந்து இலட்சம் மட்டும் ஒதுக்கலாம் என்றார்.

அறிவியல் பல்கலைக்கழகங்கள் கோடிக்கணக்கில் பெற்றுக்கொண்டிருந்தனர்.  இந்தப்போக்கில் தமிழாய்வாளர், மாணவர்கள், அயல்நாட்டுத் திசைகளில் கூட உயர்கல்விக்காகக் காலெடுத்து வைப்பதைக் கனவிலும் கருதிப் பார்க்கமுடியாது. மொழிக்கல்வி முறையை ஒற்றையாக இல்லாமல் அறிவியல் சார்ந்த கற்றையாக அமைக்க முனைய வேண்டும் என்று பிறர் சொல்லக் கேட்டு என்னால் எழுதத்தான் முடிந்தது.

பள்ளம் தெரிகிறது பாய்ந்து தாண்ட காலோ முடம்.  இந்த அவலத்தில் பின்னேயிருந்து பிடர் பிடித்துத் தள்ளுகிற முரட்டுக் கரத்தையும் உணர முடிகிறது. இந்த நிலை தான் தமிழ்க் கல்வியின் அவல நிலை 
புகழ் வாய்ந்த அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களை நெறிப்படுத்த வேண்டும்.  இந்த வகையில் ஐஐடி க்களின் வளர்ச்சி ஒளரவுக்கு நிறைவளிக்கின்றன .
பல்கலைக்கழகம் என்ற பெயரிருப்பதால் பல்வேறு மொழிகளிலும் பட்டம் பெறவும் ,பட்டயம் அளிக்கவும் மொழிப்பிரிவுகள் பல்லாண்டுகளாக உள்ளன.

சமஸ்கிருதம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், அராபியம்,  இந்தி முதலியன உள்ளன. எந்நாளிலும் இந்த மொழிப்பிரிவுகளில் மாணவர்கள் ஒற்றை இலக்கதிலேயே உள்ளனர். முனைவர் பட்ட ஆய்வுக்காகச் சிலர் சேர்கின்றனர். ஒரு மாநிலத்தில் எந்த மொழி பெரிய அளவுக்கு வழங்கு மொழியாக உள்ளதோ அங்கே அயல் மொழி மாணவர் ஆய்வுக்காகச் சேர்தல் அரிது. 

சிகாகோவில் தமிழில் ஆய்வு செய்வதற்காகச் சேர்கிறேன் என்பது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வியப்பு. ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள் வேண்டுமானால் அமெரிக்காவில் ஆர்வத்தால் தமிழாய்வுக்குச் சேரலாம். இதன் பயன் முழு நிறைவளிக்கவில்லை. அயல்நாட்டு ஆய்வு மாணவர் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழறிஞர் எழுதிக்கொடுக்கும் ஆய்வை ஆங்கில மொழியில் படைத்தது விடுகின்றனர்.   எவரை அணுகுகிறார்கள் - எப்படி முடிவுகளைப் பெறுகிறார்கள் என்பது சிக்கெடுக்க முடியாத பின்னலாக இருக்கிறது.       

இந்நிலையில் தமிழ் இளங்கலை, முதுகலைப் பேராசிரியராக விளங்கும் மூத்த பேராசிரியர் ஒருவர் தமிழ்க்கல்வியின் இன்றைய நிலையைப்பற்றி என்னிடம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
1. இளங்கலை(3),  முதுகலை(2),  ஆய்வியல் நிறைஞர் (1 or 2), முனைவர் பட்டம் (3) என்று ஒரு மாணவன் தொடர்ந்து பத்து ஆண்டுகள் தமிழ் படிக்க வேண்டும். இதற்குள் அவனுக்கு 27 அகவை ஆகிவிடும்.
2. இளங்கலை முடித்துவிட்டு B.Ed. படிப்பார்கள். அரசாங்கப் பள்ளியில் வேலை கிடைக்கவில்லை என்று எம்.ஏ. படிக்க வருவார்கள். 25 முதல் 30 வயதுக்குள் திருமணம் செய்து கொண்டு விடுவார்கள்.
பிறகுதான் முனைவர் பட்ட மாணவனாகச் சேருவார்கள். வாழ்க்கைப் போராட்டமே இவர்களுக்கு அதிகமாக உள்ளதால், ஒரு தமிழாசிரியராகத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள முடியாமல் இடர்ப்படுகிறார்கள்.
3. பிளஸ்-2 முதல் முனைவர் பட்டம் முடிப்பது வரையில், இடையறாது பத்து ஆண்டுகள் தமிழ் படிக்கும் யாரும் வெற்றி பெறாமல் போனதை நான் பார்த்ததில்லை.
4. பெரும்பாலும் அரசாங்கப் பள்ளிகளையும் அரசாங்கக் கல்லூரிகளையும் நம்பியே தமிழ் மாணவர்கள் இருக்கிறார்கள்.  இவற்றில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆயிரக்கணக்கில் தேர்வு செய்வார்கள். அடுத்த பத்து ஆண்டுகள் அப்படியே வெற்றிடமாக வைத்து விடுவார்கள். பல்கலைக்கழகங்களிலும் இதே நிலைதான். அரசாங்கப் பணி கிடைத்தால் தான் ஊதியம் நன்றாக இருக்கும். தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஐந்து மடங்குக்கும் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. ஆகவே இங்கே இலட்சியம் என்பதை அரசாங்கம் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஆசிரியர்களாகச் செல்வதுதான் என்று சுருங்கி விடுகிறது.
5. சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 40 ஆண்டுகளில் தமிழ்ப் பேராசிரியர்கள் பதின்மர் வேண்டுமானால் பணி நியமனம் பெற்றிருப்பார்கள். பிற பல்கலைக்கழகங்களிலும் இதுதான் நிலைமை. 20 பல்கலைக் கழகங்களில் இரு நூறு பேர், 100 அரசு கல்லூரிகளில் ஒரு 500 பேர், சுயநிதிக் கலைக் கல்லூரிகளில் தமிழ்நாடு முழுவதும் ஐயாயிரம் பேர். இவ்வளவுதான் இருக்கும் வேலை வாய்ப்பு. ஆனால் ஒவ்வொரு ஆண்டும், பிஏவும் எம்ஏவும் முடித்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியே வருகிறார்கள். பத்து வருடங்களில் 50 ஆயிரம் பேர் வந்து விடுவார்கள். பத்தாயிரம் பேருக்கு மட்டுமே பணி வாய்ப்பு இருக்கிறது. பிற 40 ஆயிரம் பேர் என்ன செய்வார்கள்? அது ஒன்றுதான், இதற்குத் தீர்வாக அமைய முடியும்.
6. பொருளாதார நிலையில் மிக மிகப் பிற்படுத்தப்பட்டவர்களே இன்று தமிழைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இவர்கள் தமிழில் உயர்கல்வி கற்க வேண்டுமானால், உரிய உதவித்தொகைகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். இதை ஏற்படுத்தாமல், மாற்றம் தமிழ்க் கல்வியில் வந்துவிடாது. அனைத்துத் தமிழ் கல்வியும் இலவசம் என்ற நிலையை அரசாங்கம் ஏன் கொண்டுவரக்கூடாது ?  அந்த நிலை வந்தால்தான், தமிழ் படிப்பவர்கள் நிம்மதியாகப் படிக்க முடியும்.
7. ஒவ்வோர் ஆண்டும் வருடமும் உயர்கல்வியில் பத்தாயிரம் பேர் தமிழ் படிப்பதற்கு அரசு உதவித்தொகை வழங்குவதாக அறிவித்தால், தமிழ்க் கல்வியில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அதற்கு முன் இந்த 10,000 பேருக்குப் பணி வாய்ப்புகளைப் பல நிலைகளிலும் உறுதிப்படுத்த
வேண்டும்.

-- முனைவர் ஒளவை நடராசன்
---

தேமொழி

unread,
Jun 13, 2021, 2:13:12 AM6/13/21
to மின்தமிழ்
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி -  82)

“தமிழால் தலைமை பெறலாம் !”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

ஆராய்ச்சியென்பது ஒரு பழஞ்சொல். திறனாய்ந்து தெளிதல் என்று விரிவாகக் குறிப்பிடுவார்கள்.  கீரையை ஆய்வது என்ற பழஞ்சொல் தளிர்களையும், துளிர்களையும், வேர்களையும் வேறுபடுத்துவதாகும்.  முதலில் தண்ணீரில் தோய்த்துப் பிறகு கீரைகளை ஆராய்வது மகளிரின் செயல்முறையாகும்.  அந்த வகையில் தான் பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்ற தலைப்பைத்தன் ஆய்வுக்குரியதாக அமைத்து மரஞ்செடி கொடிகளை, மலை, ஆறு, குளங்களைக் குறிப்பிட்டு அறிஞர் மு வ அழகுற எழுதினார்.

இயற்கையைப் பற்றி உலகம் என்ன எண்ணுகிறது. அயலவர்கள் இயற்கையை எப்படி நோக்கினார்கள் என்ற சிந்தனைப் புதையலாக தவத்திரு தனிநாயக அடிகளார் எழுதினார். சொல்லடைவினை மேலோட்டமாகத் தொகுத்தாருமுண்டு. அதனையும் ஆய்வு என்று அழைத்தார்கள். தனிநாயக அடிகள் தவிர எஞ்சியவர்கள் ஆய்வின் ஓரத்தில் கூட நிற்கத் தகுதியை பெறாது போயினர். அண்மையில் பேசிய பேராசிரியர் அரவிந்தன், அறிவியல் ஆய்வுக்கு ஒரு கோடி ரூபாயும்,  இலக்கிய ஆய்வுக்கு ஒரு லட்சம் ரூபாய்  தருவதற்குத் தயங்குவதாகவும் வருந்திக் குறிப்பிட்டார்.

நிறுவனங்கள், ஆய்வு மன்றங்கள், நடுவண் வனங்கள், கல்லூரித்துறைகள்,ப ல்கலைகழகத்துறைகள் அனைத்திலும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. அவற்றை ஆற்றுப்படுத்தும் பெருங்கடமையை அறிஞர் மேற்கொள்வர். எல்லையும், வரையறையும் வகுத்துத் திட்டமிடாமல் ஆய்வு நூல் புற்றீசல் போல ஆய்வுப்பெயரில் பொலபொலவென உதிர்கின்றன. மொழியைச் செம்மையாக, அழுத்தம் திருத்தமாக உச்சரிக்க, மொழிப்பயிற்சி முதன்மையாகும் .

இதனை நண்பர்கள் பலர் எழுதி வலியுறுத்தினர். சிறப்பு ழ கரத்தைச் சரியாக உச்சரிக்க, வாழைப்பழம் நழுவி அழுகிக் கொழுகொழுத்துக் கீழே விழுந்தது எனும் வாக்கியத்தைப் பயிற்சிக்காகக் கொடுப்பது நாம் அறியாததல்ல. இதைப்போல், தமிழில் ல, ள, ழ மூன்றும் அடுக்கிவரும் ஒரு சொல் தொழிலாளி ஆகும். உச்சரிப்பு முயற்சிக்கு இச்சொல்லைப் பயன்படுத்தினால், உழைப்பவரை நினைவு கூர்வதும் நிகழும். ல, ள, ழ ஆகிய எழுத்துகளின் நா ப் பழக்கமும் நன்கு கைகூடி வரும். "ழ" கரத்துக்கு அறிஞர் மன்றம் நடத்திய பெருமை தேவநாதனைச் சாரும்.

இசைச்செம்மல் திரு இரமணனும் - இசையரசி திருமதி உமா இரமணனும் தமது இசைக்குழுவில் ஒருமுறை சங்க இலக்கியப் பாடல்களைத் தெரிவுசெய்து அணுவளவும் ஒலிப்பிழை இல்லாமல் பாடி மகிழ்வித்ததை நான் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.  கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியில் சிகரப்பாடகருக்கான போட்டியில் பங்குபெற வந்தவர்கள் திறமையும் அருமையும் மிளிரப் பாடினார்கள். நடுவராக இருந்த இசைத்திலகம் அனுராதா ஸ்ரீராம் அவர்கள் பாடியதெல்லாம் சரி, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு குறையை நான் சொல்லத்தான் வேண்டும். பாடுகிறவர்கள் தாம் பாடும் பாடல் எழுத்து ஒவ்வொன்றையும் திருத்தமாக உச்சரிக்க வேண்டும். அது தான் இசைக்குப் பெருமை, தமிழுக்குத் தனிப்பெருமையாகும் என்றார்.

நாடு பாராட்டும் சிந்துவெளி ஆய்வாளராகவும், இந்திய ஆட்சிப் பணியாளராகவும் ஆய்வுப் பேரொளியாகவும் திகழும் திரு. ஆர். பாலகிருஷ்ணன். அவர் எழுதிய சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம், Journey of A civilization - Indus to vaigai ஆகிய நூல்கள் குறித்துப் பாராட்டாதவரில்லை. ஏப்ரல் மாதத்தில் நிகழும் அனைத்துலகப் புத்தக தினத்தை முன்னிட்டு பெருந்தகை அறிஞர் பாலகிருஷ்ணன் எழுதிய நூல்களின் பின்னணி குறித்து 'புத்தகம் பேசுது' இதழுக்காக டாக்டர்.சங்கர சரவணன் அவரை நேர்காணல் செய்தார். நேர்காணல் நமக்குப் பெருமிதமும் தமிழ் பயில்வோர்க்கு ஊக்கமும் அளிப்பன.

தமிழ்ப்படித்தால் வேலை கிடைக்காது - எதிர்காலம் ஒளிமயமாக இருக்காது என்பது போன்ற அச்சங்கள், தாங்கள் தமிழ் படித்த 1970 - களிலும் இருந்தனவா ? அவற்றை எப்படி எதிர் கொண்டீர்கள்?

எங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, எனது நெருங்கிய உறவுமுறையிலும் கூட நான் தான் முதல் பட்டதாரி. தமிழ் இலக்கியம் படிக்கத் தயங்கும் இன்றைய நிலவரத்திலிருந்து 1970 களின் கல்விச் சூழ்நிலை எந்தவகையிலும் வேறுபட்டிருக்கவில்லை. வீட்டுக்கொரு பொறியாளர் வளர்க்கப்படவில்லை என்றாலும் மருத்துவப் படிப்புக்கும், பொறியியல் கல்விக்கும்தான் அப்போதும் மவுசு அதிகம்.  வணிகவியல் படிப்பவர்கள் தங்களை ராயல் பி.காம் என்ற அடைமொழியோடு அழைத்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்ற அவநம்பிக்கை அப்போதும் இருந்தது.  தமிழ் வளர்த்த மதுரையில் தாடி வளர்த்துக் கொண்டிருந்தவர்களில் பாதிப் பேர் தமிழ் மாணவர்கள்தான் என்ற நையாண்டி வேறு. புகுமுக வகுப்பில் அறிவியல் படிப்பில் அவ்வளவாக எனக்கு ஈடுபாடு இல்லை. தவளையை மல்லாக்கப் போட்டு அறுப்பதிலும், அழகிய மலர்களின் அல்லி வட்டங்களைப் புல்லிவட்டங்களை அலசுவதிலும் மனம் ஒன்றவில்லை. அடுத்தது. இளம் அறிவியலா? இளங்கலையா? என்று தடுமாறினேன். பிடித்தது எது, பிடிக்காதது எது என்பது கொஞ்சம் பிடிபட்டது.

சுட்டுப்போட்டாலும் வராத கணக்கைத் தொட்டுப் பார்ப்பதில்லை என்று துணிந்தேன். தமிழ் பிடித்திருந்தது. தமிழ்க் கவிதைகள் பிடித்திருந்தன. அதனால் தமிழ் மாணவனாய் ஆனேன். வேலை எதுவும் கிடைக்காது என்று என்னைச் சுற்றியிருந்தவர்கள் பாட்டாய்ப் பாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நான் படித்து முடித்து ஒருநாள் கூட வேலையில்லாமல் இருக்கக்கூடாது என்று எனக்குள் சொல்லிக் கொண்டிருந்தேன், தமிழ் என்னைத் தாங்கியது.  முதுகலைத்தேர்வு முடிவு வரும் முன்னரே தினமணியில் வேலை தேடி வந்தது. பயிற்சிக் காலத்தில் மாத ஊதியம் 240 ரூபாய்தான். தினம் எட்டு ரூபாய் என்ற கணக்கு. சொந்த ஊரான நத்தத்திலிருந்து பேருந்தில் மதுரைக்குப் போய்வரவே ஐந்து ரூபாய் செலவு. மீதியில் தேநீர் குடிக்கலாம். இருந்தாலும் அது குறையாகத் தோன்றவில்லை. பத்திரிகைப் பணியில் மேலும் மேலும் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. கரும்பு தின்னக் கூலியும் கிடைத்தது. கசக்குமா ?

இலக்கியக் கல்வி பயின்றுவிட்டு இந்திய ஆட்சிப் பணிக்கு வந்துவிட்டீர்கள். இந்திய ஆட்சிப்பணியில் நுழைந்த முதல் தமிழ் இலக்கியப் பட்டதாரி நீங்கள் தான். நீங்கள் பயின்ற இலக்கியக்கல்வி இந்திய ஆட்சிப்பணியிலும் வழி நடத்துகிறதா ?

இந்திய ஆட்சிப்பணியில் இன்றும் என்னை வழி நடத்துவது எனது இலக்கியக்கல்வி தான்!  இப்படிப் பெருமிதம் ததும்பக் தமிழ்க்கல்வியைப் புகழ்கிறார் நாடு போற்றும் ஆய்வுச்சுடராகவும், இந்திய ஆட்சிப்பணியில் சிங்க நடை போட்டுக்கொண்டுச் சிகரத்தைத் தொட்டுக்கொண்டிருப்பவர் பெருந்தகை பாலகிருஷ்ணன். என்னென்று சொல்வேன் தமிழால் அவர் பெருமை பெற்றதும், தமிழ் அவரால் பெருமை பெற்றதும் என்று பாவேந்தரின் தொடரை இவருக்குப் பொருத்தமாகக் கூறலாம் .

"புலம் மிக்கவரின் புலமை தெரிதல் புலம் மிக்கவர்க்கே புலனாம்" என்ற பொன்மொழிக்கிணங்க அறிஞர் உதயச்சந்திரன் இ ஆ ப தமது மகத்தான நூலில் அறிஞர் பாலகிருஷ்ணனின் ஆற்றலைப் பாராட்டிக்கூறும் பகுதி நம் நெஞ்சை அள்ளத் தக்கதாகும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது அந்தச் சம்பவம். ஒடிசாவின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் அந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி.  மதுரையில் பிறந்து முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து, முதன் முதலில் தமிழிலேயே சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றிபெற்றவர். தமிழ்மேல் தீராக்காதல் கொண்டவரைக் காலம் கலிங்கத்தில் பணியமர்த்தியது. ஒடிசாவைப் புரிந்துகொள்வதற்காக அதன் உள்ளும் புறமும் சுற்றிக்கொண்டிருந்தவர் கண்ணில், கோராபுட் நகருக்கு அருகேயிருந்த ஒரு மைல் கல் புதிய தரிசனத்தைக் கொடுத்தது. 'தமிளி' என்று எழுதப்பட்டிருந்த அந்தக் கல் அவரது பயணத்தை மாற்றியது.

'தமிளி' என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கிராமத்திற்குள் நுழைந்தார். அந்தக் கிராமப் பழங்குடி மக்கள் பேசிக்கொண்டிருந்த 'குவி' எனும் மொழியின் வேரை ஆய்ந்து பார்க்கிறார். அது திராவிடப் பூர்வீகம் கொண்ட மொழியாக இருக்கிறது. அந்த மொழியின்மீது வேட்கை உருவாகிறது. குவியையும், கோயா போன்ற பழங்குடி மொழிகளையும் கற்றுத் தேறுகிறார். தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் குறிஞ்சித்திணை வாழ்வியலும் அந்தப் பழங்குடி மக்களின் வாழ்வியலும் அப்படியே பொருந்திப்போவது அவருக்கு வியப்பூட்டுகிறது. மாநிலம் கடந்து அவரது ஆய்வுகள் நீள்கின்றன.  மத்தியப்பிரதேசப் பழங்குடி கிராமங்களின் பெயர்களும் தேனி, பழனி, குமுளி, இடுக்கி போன்ற தமிழக-கேரள எல்லையோர நகரங்களின் பெயர்களும் ஒன்றுபோலிருப்பதை அறிந்ததும் அவரது ஆய்வின் தன்மை மாறுகிறது.

முப்பதாண்டுக் காலம், தன் வாழ்வின் பெரும்பகுதியைத் தமிழின் வேர் தேடி அலைந்த அந்தத் தமிழ் மகனின் பெயர் பாலகிருஷ்ணன் இ ஆ ப. தமிழ் தலைமை தாங்குவது நமக்குப் பெருமிதம் தருவதாகும் .

புரட்சித்தலைவர் ஒருமுறை என்னைப்பார்த்து ஆமாம் தமிழ் பக்திமொழி என்று சொல்கிறார்களே எப்படிக் கோயில்களில் தமிழே இல்லாமல் போய்விட்டது! என்றார். நான் விடை சொல்லாமல் ஒரு கணம் நின்றேன்.  பக்கத்திலிருந்தவர் சமஸ்கிருதம் தேவபாஷை என்று சொல்வார்கள் என்றார்.  நான் அப்போது தஞ்சையில் அறிஞர் டி என் ஆர் சமஸ்கிருதத்தைத் தேவபாஷை என்றால் தமிழை மகாதேவ பாஷை என்றல்லவா சொல்லவேண்டும் என்று கூறியதைத் திருப்பிச் சொன்னேன்.

திருவருளைப் பெறுவதற்காகத் தமிழால் வழி கண்டவர் என்று திருஞான சம்பந்தரை குறிப்பிட்டுள்ளார்கள்.  தமிழால் வழி கண்டவர் என்ற கருத்து ஆழமானது, தத்துவப் பேராசிரியராக விளங்கிய அறிஞர் டாக்டர் தேவசேனாபதி எழுதிய கட்டுரையை நான் என் கோப்பில் எடுத்து வைத்திருந்தேன். நான் இன்புற்றதை இந்தக் கட்டுரையைச் சுட்டிக்காட்டி மகிழ்கிறேன் . . . 

தமிழ்மொழி மிகச் சிறந்த சமய இலக்கியமுடையது என்று அறிஞர்களால் போற்றப்பெறுகிறது. மேலும் இறைவன் அருள் பெற்று வீடுபேற்றினை அடைவதற்கு இம்மொழி தான் துணைசெய்கிறது. சைவ நூல்களை முறைப்படுத்திய நம்பியாண்டார் நம்பிகள் என்னும் புலவர் பெருமான், இறைவனையடைந்து பேரின்பம் துய்த்தற்கு வாயிலாகவுள்ள அறிவு மொழி இத்தமிழ் மொழியெனக் கண்டு, அக்காட்சியைத் திருஞானசம்பந்தர் பிள்ளையார் பெருமைகூறு முகமாக,

''ஆறதேறுஞ் சடையான் அருள்மேவ அவனியர்க்கு வீறதேறுந் தமிழால் வழிகண்டவன்' 'என்று வெளியிட்டருளினார்.  ''சிவபிரானது திருவருட் பேற்றையடைய உலகத்தவர்க்குத் தமிழால் வழிகண்டவர்"  என்னும் இதனால் இது ஞானமொழி என்பதில் ஒரு சிறிதும் ஐயமின்றாம். ஈண்டுத் தமிழைச் சுட்டுங்கால், "வீறதேறுந்தமிழ்'' என்றார். வீறு என்னும் சொல் ''வேறொன்றற்கில்லா அழகு'' என்னும் பொருள் கொண்டது.  இப்பொருள் சீவக சிந்தாமணி யில் "வீறுயர் கலச நன்னீர்" என்புழி நச்சினார்க்கினியர் கண்டதாகும். வேற்று மொழி கட்கில்லாச் சுருங்கச் சொல்லல், விளங்கவைத்தல் முதலிய அழகுகள் இத்தமிழ்மொழிக்கண் மலிந்திருத்தலின், இச் சொற்பொருள் நச்சினார்க் கினியர் கண்ட அவ்விடத்திலும் இங்கு மிகவும் இயைபுடைத்தென்பது நன்கு விளங்கும்.

வீடுபேற்றுக்குத் தமிழால் வழி என்னும் கருத்து ஆராயத்தக்கதாம். வீடு பேற்றுக்கு வழியாக அறிவு நெறி ( பக்தி மார்க்கம் ), தன்னலமற்ற தொண்டுநெறி ( கர்ம மார்க்கம் ) என்பவை பேசப்பெறுகின்றன.

"எழுத்தறியத் தீரும் இழிதகைமை; தீர்ந்தால்
மொழித்திறத்தின் முட்டறுப்பானாகும் - மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்''

என்னும் வெண்பாவில் வரும் கருத்து, மொழியைச் சரிவர உணர்வதன் கட்டாயத்தை வற்புறுத்துகிறதெனினும், மொழி அறிவு அல்லது இலக்கண அறிவு, எம் மொழியிலும் கருவியாகக் கூறப்படுவதாகக் கொள்ளலாம். எனவே, தமிழ் மொழியின் வழி, வீடுபேறு என்பது மிகத் தெளிவாகத் தமிழ்மொழியின் முதன்மையைக் கூறுவது புதிய கருத்தாகத் தோன்றுகிறது.

மேலும், மொழியை முன்கூறிய மூன்று நெறிகளுள் யாதேனும் ஒன்றைக் கற்பிக்கப்    பயன்படுத்தலாமெனினும், முதன்மை மொழிக்கே தரப்பெறுவது வியப்பையுண்டாக்குகிறது. இதே கருத்து வேறு எங்கேனும் கூறப்பட்டுள்ளதா என்று எண்ணும்போது,

'' சித்தர் சித்தத் துறப்பற்றி மெத்தப் புகழ் செப்பு முத்தித் தமிழ்ப் பெருமாளே" என்னும் திருப்புகழ் நினைவுக்கு வருகிறது.  "முத்தித் தமிழ்ப் பெருமாளே"  என்பதற்கு "முத்தியைத் தரவல்ல தமிழாம் தேவாரத்தை அருளிய பெருமாளே (அல்லது )முத்தியைத் தரவல்ல பெருமாளே ! தமிழ்க் கடவுளாம் பெருமாளே"  என்று தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள் பொருள் கண்டுள்ளார்கள்.

'ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் வல்லார் எய்துவர் வீடெளிதே' என்னும் வரியையும் திரு. பிள்ளை அவர்கள் அடிக்குறிப்பாகக் கொடுத்துள்ளார்கள்.
'செஞ்சொல் சேர் சித்திரத் தமிழாலுன் செம்பொனார்வத்தைப் பெறுவேனோ'
'வாய்ப்புற்ற தமிழ் மார்க்கத்தின் பொருள் வாய்க்கும் சித்திர முருகோனே'
'குறுமுனிவ விருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற அறிவு நெறி தவ நிலைகள் செப்புத் தமிழ்க்கினிய குருகுமர பழனிவளர் வெற்புத்தனிற்றிகழும் பெருமாளே'
'அருண தள பாதபத்ம மது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தானளித்த மயில் வீரா' 
என்பன போன்ற திருப்புகழ் வரிகளும் ஆராயத்தக்கன.

"அவிழ்க்கின்ற வாறும் அது காட்டு மாறும் சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் எனு மிவ் விரண்டும் உணர்த்தும் அவனை யுணரலு மாமே'' என்பது திருமந்திரம்.
"ஆதியிற் றமிழ் நூல் அகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகனை வழுத்துதும் போதமெய்ஞ் ஞான நலம்பெறற் பொருட்டே" என்னும் தொல்காப்பியப் பாயிரம் தமிழுக்கும் மெய்ஞ்ஞான நலத்துக்கும் உள்ள தொடர் பினைக் காரண காரிய முறையில் குறிப்பதாக வும் கொள்ள இடமிருக்கிறது.

சிவன் திருமால் முருகன் இம்மூவரையும் வழிபடும் அடியவர்கள் இத் தெய்வங்களுக்குத் தமிழில் மிகுந்த ஆர்வமிருப்பதாகவும், தமிழுக்கே இவர்கள் உறைவிடமாக அல்லது தமிழே இவர்களுடைய உறைவிடமாக இருப்பதாகவும் நினைத்துப்பாடி மகிழ்கிறார்கள். ''அங்கண் முல்லையின் தெய்வம் என்றருந் தமிழ் உரைக்கும் செங்கண்மால்' என்று சேக்கிழார் கூறுவது நினைவுக்கு வருகிறது.

செந்தமிழ்ப்பின் சென்ற கொண்டலாகக் குமரகுருபரர் கூறுவது கணிகண்ணன் வரலாற்றினைக் குறிப்பதாகும். "தமிழ் ஞானசம்பந்தன்'' என்று பெருமிதத்தோடு ஞானசம்பந்தர் பாடுவதைப் போலவே, பூதத்தாழ்வாரும் "பெருந்தமிழன்'' என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறார். பொதுவாகத் திவ்வியப் பிரபந்தத்தையும், சிறப்பாகத் திருவாய் மொழியையும் திருமால் அடியார்கள் பாராட்டிப் போற்றுகின்றனர்.

'........... குருகூர் நிமலன் புனையுந் தமிழ்க்கவியா லிருணீங்கிப் பொருள்
விளங்கி வினையுந் திரிவுற்றன குற்ற நீங்கினவேதங்களே ''
மொழி பலவாயின செப்பம்
பிறந்தது முத்தியெய்தும் வழிபல வாயவிட்டொன்றா
யது வழு வா நரகக் குழிபல வாயின பாழ்பட்டன
குளிர் நீர்ப் பொருநை சுழிபலவாயொழு குங்குரு
கூரெந்தை தோன்றலினே ''

செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளியவோதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே '' என்று தேசிகப் பிரபந்தத்தில் வருவன ஈண்டு நினைவு கொள்ளத்தக்கன.

குறிப்பாகக் "குரு கூரெந்தை தோன்றலின் மொழிபலவாயின செப்பம் பிறந்தது., முத்தி யெய்தும் வழிபல வாயவிட்டொன்றாயது'' என்பதும் " செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளியவோதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே'' என்பதும் பெரிதும் இன்பம் பயன்பனவாகும். மறைகளுக்கெல்லாம் வித்தாயும் விளைவாயும் உள்ள பிரணவத்தின் பொருளை இறைவனுக்கு முருகர் தமிழில் கூறினார் என்னும் கருத்து, "கொன்றைச் சடையாற் கொன்றைத் தெரியக் கொஞ்சித் தமிழாற் பகர்வோனே"
என்று திருப்புகழில் காணப் பெறுகிறது. கூடலில் தமிழாய்ந்த சிவனைப் போல முருகரும் முத்தமிழை ஆயும் வரிசைக்காரராகப் போற்றப் பெறுகிறார்.

மேற்கூறியனவற்றால் வீடுபேற்றுக்குத் தமிழை வழியாக நம் முன்னோர்கள் கொண் டார்கள் என்பது விளங்கும். நம் மொழியைப் பற்றி விரிவான விஞ்ஞான முறையில் ஆராய்ச்சி மேல்நாட்டில் பல ஆண்டுகளாகவும், நாட்டில் சில ஆண்டுகளாகவும் நடந்து வருகிறது. மொழிகளின் ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராய்வதோடு தனிப்பட்ட முறையிலும் ஒரு மொழிக்கு என்ன சிறப்பு உளது என்று பார்ப்பது நலம். 
உலகியல் நுகர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் மொழி ஏற்பட்டதா? 
புறப் பொருள்கள் அல்லது வேற்று நிலை உண்மைகள் ( Abstract truth ) பற்றி விஞ்ஞான முறையில் விளக்கம் தரவும் மொழிக்கு ஆற்றலுண்டா?
மற்றும், அகவுணர்வுகளையும் புலன்களுக்கு எட்டா உண்மைகளையும் தெரிவிக்க மொழி உதவுமா?
உதவுமெனின் விஞ்ஞான முறைக் கட்டுப்பாட்டுடன் அவ்வாறு செய்யமுடியுமா?
இன்றேல் அவற்றின் மெய்ம்மை பொய்ம்மைகளை எவ்வாறு பிரித்தறிய முடியும்?
இன்னபல கேள்விகள் தற்கால மெய்யுணர்வியலில் மொழி பற்றி எழுகின்றன.

பண்டிதமணி அவர்கள், "வேற்றுமொழிகட்கில்லாச் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய அழகுகள் இத் தமிழ் மொழிக்கண் மலிந்திருத்தலின் இச் சொற் பொருள் நச்சினார்க்கினியர் கண்ட அவ்விடத் தினும் இங்கு மிகவும் இயைபுடைத்தென்பது நன்கு விளங்கும்'' என்கிறார்கள்.

சுருங்கச் சொல்லல் (Brevity), விளங்கவைத்தல் (Lucidity) இவற்றுடன் கருக்காகச் சொல்லல் (Precision ) என்பதும் விஞ்ஞானத்திற்கு மட்டுமின்றி மெய்யுணர்வியலிலும் சமய இயலிலும் வேண்டற் பாலன. ஆயினும் வெறும் அறிவு நிலைத் தெளிவுடன் நின்றுவிடாது உள்ளத்தை உருக்கும் தன்மையும் மொழிக்கு அமையவேண்டும்.

பகுத்துணர்வுக்கு விஞ்ஞான முறை தேவைப்படுவது போலத் தொகுப்புணர்வுக்கு உள்ளுணர்வு முறை வேண்டற்பாலதாகிறது. இவை ஒன்றற்கொன்று மாறுபட்டவையாகக் காணப்படுவதால், இரண்டின் நலத்தையும் ஒருங்கே எவ்வாறு ஒரு மொழியில் பெற முடியும்?

அறிவு விளக்கம் தருகிற 'தெள்ளு தமிழ் பாடத் தெளிவோனாக' முருகர் கூறப்படுகிறார். உளத்தின் உருக்கமும் தமிழுக்கு உண்டென்பது திருவாசகத்தைப் பற்றிச் சிவப்பிரகாசர் முதலியோர் கூறுவனவற்றால் அன்பர்களுக்குத் தெரியும். திருவாசகத்தைப் பாராட்டுவது போலவே திருவாய் மொழியையும் அறிஞர்கள் பாராட்டுவதற்கு எடுத்துக்காட்டாக, 
"உயிர்த்தாரையிற்புக்குறு
குறும்பாமொரு மூன்றனையுஞ் செயிர்த்தார் குருகைவந்தார்
திருவாய்மொழி செப்பலுற்றால் மயிர்த்தாரைகள் பொடிக்குங்
கண்கணீர் மல்குமாமறையுள் அயிர்த்தா' ரயிர்த்த பொருள்
வெளியா மெங்களந்தணர்க்கே'' 
எனக் கம்பர் கூறுவது நினைவுக்கு வருகிறது.

பண்டைக் கால முதல் தமிழ்மொழியின் பெருமை பலவாறாகப் பாராட்டப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் மொழி ஆராய்ச்சியில் அதன் சிறப்பு, எழுத்துக்களின் ஒலியால் ஏற்படுவதா?
சொற்களின் திறனால் உண்டாவதா? சொற்றொடர்களின் அமைப்பால் விளங்குவதா? இன்னபல கேள்விகளுக்கு விடை காண இம் மொழியைப் பிறமொழிகளுடன் ஒப்பு நோக்குவதுடன், இம்மொழியையே உலகியல், விஞ்ஞானம், மெய்யுணர்வு ஆகிய மூன்று நிலைகளின் தேவைகளுக்கேற்ப எவ்வாறு அமைந்துள்ளது என்று ஆராய்வதால் மிகுந்த பயன் உண்டாகும். 

அறிவு விளக்கத்தால் உருக்கம் ஏற்படுகிறதா?
உருக்கத்தால் அறிவு தெளிவு அடைகின்றதா? ( 'கண்கள் நீர்மல்க, மாமறையுள் அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம்' ) அறிவு வழி உருக்கம்-அல்லது உருக்கத்தின் வழி அறிவு என்னும் இவ்வரிய நிகழ்ச்சியை உண்டாக்கும் தமிழ் சித்தர் சித்தத்துறப் பற்றும் தமிழ் 'அருள்மேவ வழியாம் வீறதேறும் தமிழ்' என்பதனை இக்கால மொழி ஆராய்ச்சியாளர் நிலை நாட்டினால் 'என்றுமுள தென் தமிழ்' என்பது வலியுறுத்தப் பெறும்.

தொடர்வோம் ...... 

பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை

- ஒளவை நடராசன்
------

தேமொழி

unread,
Jun 19, 2021, 11:31:40 PM6/19/21
to மின்தமிழ்
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி -  83)

“மாநாட்டில் மகிழும் மனம்”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தமிழ் மக்களுக்குத் தம் மொழியின் மீது ஆறாக்காதல் ஊனிலும் உயிரிலும் கலந்த உணர்வாக நெடுங்காலமாகவே மிளிர்கிறது. தமிழைக் கடவுள், மாந்தர்க்கு உயிர் அனைத்து உறவுகளையும் விஞ்சிய ஒப்பற்ற உறவு என்று போற்றுவது மரபு. மேலும் தமிழ்மொழியும் தமிழ்மக்களும் தொன்மைப் பெருமையைத் தமக்கு வாய்த்த மிகப்பெரிய செல்வமாகக் கருதினர்.

வாழ்க்கை, கல்வி, அறிவு, இன்பம் இவற்றை விடத் தமிழ் மேலானது என்று மகிழ்ந்தனர். திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் பழங்குடியென்னும் சொல்லுக்குத் "தொன்று தொட்டு வருகின்ற குடி" என்று பொருள் கூறி "தொன்றுதொட்டு வருதல் சேர, சோழ, பாண்டியன் என்றார் போலப் படைப்புக்காலத் தொடங்கி மேம்பட்டு வருதல்" என்று விளக்கியுள்ளார். உலகத் தோற்றத்தின் போது தமிழ் மக்கள் இருந்திருத்தல் வேண்டுமென்பது அவர் கருத்தாக இதனால் தெரிய வருகிறது. புறப்பொருள் வெண்பா மாலை என்ற நூலுள் தமிழ்வீரரின் குடிநிலையை விளக்கவந்த வெண்பாவில் "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு , முன்தோன்றி மூத்தகுடி" என்று அதன் ஆசிரியர் குறித்துள்ளார். கடையூழி வெள்ளம் விட்டு நீங்க, முற்பட மலைதோன்றி நிலம் தோன்றாத நிலையில் வாளுடனே எல்லாரிலும் முற்பட மலையிடத்திலே தோன்றிப் பழையதாகிய குடி என்பது அவ்வடிகளின் பொருள்.  பரிமேலழகருக்குக் காலத்தால் முற்பட்ட இந்நூலாசிரியருக்குத் தமிழ்மக்கள் படைப்புக்காலந் தொட்டு மேம்பட்டு வருகின்றவர்கள் என்ற கருத்தின் உறுதியும் இங்கே காணலாம்.       

"மங்கை ஒருத்தி தரும் சுகமும் எங்கள் மாத்தமிழுக்கு ஈடில்லை" என்றார் பாவேந்தர். தன் மகவைக் கண்ணுக்குக் கண்ணாகப் போற்றி வளர்க்கும் தாய் எந்நேரத்தில், எங்கிருந்தேனும் இடர் வருமோ என்று ஏங்கி மார்போடணைத்து மடியை விட்டு நழுவாமல் கண்ணிமை போல் காத்து வருகிறார். கண்ணன் இள மகவாகத் தொட்டிலில் கிடந்த போது தொட்டிலைச் சுற்றிச் சுற்றி கூர்வேலோடு தந்தை நந்தன் விழிப்போடிருந்தான் என்பர். "கரும்பே, தீச்சாறே! கனியே, சுளையே, அரும்பின் நகையே, அணிதந்த செந்தமிழே, அன்பே" என்று கொஞ்சிக் குலவும் தாய்க்கு நெஞ்சம் பதறுகிறதாம். தமிழே உன் எழிலை ஈடழித்து வரும் கொடுமையை நினைத்தால் நெஞ்சு பதைக்கும். சாற்றவாய் பதைக்கும் என்று அன்னை பதறுகிறாளாம். புரட்சிக்கவிஞர் தாம் அன்னையாக நின்று தமிழ்க்குழந்தையை அப்படி அரவணைக்கிறார். நாளும் தன் குழந்தைக்குத் திருநாளாகவும், அனைவரையும் அழைத்துக் குழந்தைக்கு அணி மணி பூட்டிக் கொண்டாடுவதும் இயல்பு. அன்பு ஆர்வமாகி, ஆர்வம் உணர்ச்சியாகி, உணர்ச்சி எழுச்சியாகி - இயக்கமாக அமைய வேண்டும்.

புலவர்கள் ஒன்றாகக்கூடி நன்றாக எண்ணி நலம் செய்ய வேண்டும் என்பது தான் புலவர் கூடல் - தமிழ்ச்சங்கம் என்று மிளிர்ந்தது. இந்த நினைவில்தான் உலகத்தமிழ் மாநாடு காண அறிஞர் உலகம் விரும்பியது. பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ்க் கலைஞரும் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டைச் சென்னையில் வரலாற்று விழாவாக வடிவமைத்துப் போற்றினர். அந்தத் தொடரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை கூடல் மாமதுரையில், மக்கள் வெள்ளம் நிரம்பி வழிய மாட்சி பெருகிய மாநாடாகப் புரட்சித்தலைவர் நடத்தினார். அப்போது கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் கட்டுரை படித்தார். அறிஞர் பலரோடு கலந்துரையாடி, ஐம்பது முறையேனும் திருத்தமும் - வடிவமும் பெற்றுப் புரட்சித்தலைவர் பெயரில் வெளிவந்ததே இனிவரும் கட்டுரை . .

''தமிழுக்கும் அமுதென்று பேர் ! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!"
         என்று அழகாக எடுத்துச் சொன்னார் பாவேந்தர் பாரதிதாசன்.
''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்''
         என்று பெருமிதம் பொங்கிட முழங்கினார் மகாகவி பாரதியார்.
உலகத்தின் இருளை அகற்றுவதில் ஒப்பற்று நிற்பன ''மின்னேர் தனியாழி வெங்கதிர் ஒன்று, ஏனையது தன்னேர் இலாத தமிழ்'' 
         என்று ஒரு மேற்கோள் பாடல் குறிப்பிடுகின்றது.
"இருந்தமிழே உன்னால் இருந்தேன் - இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்'' 
         என்று 'தமிழ்விடு தூது' கோடிட்டுக் காட்டியது.
''இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்'' என்றும் 'தேனுறை தமிழ்' என்று கல்லாடமும், 'தமிழ் தழீ இய சாயல்' 
         என்று சிந்தாமணியும் போற்றுகின்றன.
''பொருப்பிலே பிறந்து தென்னன்
புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே இருந்து வையை
ஏட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர்
நினைவிலே நடந்து ஓர் ஏன மருப்பிலே பயின்ற பாவை
மருங்கிலே வளரு கின்றாள்''
         என்று வில்லிபாரதப் பாயிரம் வியந்து பாடியது.
''தண்டமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இக்
கொழி தமிழ்ப் பெருமை யார் அறிவார்?"
          என்று குமரகுருபரர் குறிப்பிட்டார்.
"எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந்தமிழ் அணங்கே'' 
         என்று மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை பாடலை நாளும் பாடி வருகிறார்.

இந்த நாட்டவர் மாத்திரமல்ல - தமிழின் அழகிலும் ஆழத்திலும் ஈர்க்கப்பட்டுத் தம்மை இழந்த அயல் நாட்டவர்களும் சூட்டிய புகழாரங்கள் பல. டாக்டர் கிரௌல் ''தமிழ் மொழியை அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளிக் கலன்'' என்றும், திருக்குறளை அதில் வைக்கப்பட்ட ''தங்கச் சொற்கள் ஆப்பிள்'' என்றும், ''தமிழ் என்னை ஈர்த்தது,  திருக்குறளோ என்னை அவர் பக்கம் இழுத்தது'' என்றும் புகழ்கின்றார்.

டாக்டர் கால்டுவெல் ''உலகில் மிகச் சிலவான மொழிகளுக்குத் தான் அறிவியல் அடிப்படையிலான இலக்கணம் அமைந்துள்ளது. அவற்றில் தமிழே முன்னிற்கிறது. தொல்காப்பியமும் நன்னூலுமே இதற்கு மாபெரும் சான்றுகள்'' என்று மொழிந்தார்.  அப்படிப்பட்ட அருமைக்கும் பெருமைக்கும் உரிய அன்னைத் தமிழுக்கு விழா நடக்கிறது. ஆராய்ச்சி அறிஞர்கள் பங்கு கொள்கிற அரங்கம் மாநாட்டின் இதயம் போன்ற இன்றியமையாத பகுதி என்றாலும், அந்த நிகழ்ச்சியைத் திருவிழாவாகப் பெருவிழாவாகக் கொண்டாடும் பொறுப்பினைத் தமிழக அரசு உவந்து ஏற்றுள்ளது.

தமிழ் நாட்டிலே மாத்திரமல்ல - தமிழ் பேசுகிற உலகின் எல்லாப் பகுதி மக்களும் எழுச்சியோடு எண்ணிப் பெருமிதம் கொள்கின்ற இனிய நிகழ்ச்சியாக இந்த உலகத் தமிழ் மாநாடு அமைந்துள்ளது. அறிவுலகப் பேராசான் - நமது ஆருயிர் அண்ணன் பன்னிரு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிற்குப் பிறகு, பாரிசிலும் யாழ்ப்பாணத்திலும் மாநாடுகள் நடைபெற்றன. அண்ணன் ஏந்திய ஒளிவிளக்கினைக் காலத்தின் கட்டளையாக அவருக்குப் பிறகு நான் ஏந்துகின்ற பொறுப்பினை ஏற்றுக் கொண்டு, அவரின் அன்புத் தொண்டனான நானும், வரலாற்றில் அழியாத இடம் பெற்றிடப் போகும் இந்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைக் கொண்டாடுவதில்-கோலாகலப் பெருவிழாவாகக் காண்பதில் மறைந்த தமிழகத்தின் புகழை மீண்டும் நிலை நாட்டிக் காட்டுவதில் தமிழன் தானும் தாழான்; எவரையும் தாழ்த்தான் என்பதனை அகிலத்திற்கு அறிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

மொழி மற்றவர்களுக்கு ஒரு வழியாக இருக்கலாம். அறிவு நிறை பகைப்பும் வாய்க்காலாக இருக்கலாம்;  மொழி எண்ணங்களை எடுத்துச் சொல்கிற ஊடகம் தானே என்றும் கூடச் சிலர் பேசலாம். தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்மொழி வெறும் வழி மட்டுமல்ல; அதுவே நமக்கு 'விழி', உணர்ச்சி வயப்பட்டு உற்சாகத்தில் உதிர்க்கின்ற சொற்களில்லை இவை. இரண்டாயிரம் ஆண்டுக் காலத் தமிழகத்தின் எழுச்சி - வீழ்ச்சி - வெளிச்சம் - இருட்டு - மேடு - பள்ளம் இவற்றை உற்றுப்பார்த்தால் - உணர்ந்து நினைத்தால் ஒன்று புலப்படும். தமிழனின், தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்வும் வளமும் அவனது மொழியோடு இரண்டறக் கலந்து இணைந்து இயைந்து நிற்பதைப் பார்க்கிறோம்.  மொழி வரலாற்றில் அவனது மொழிக்கு ஊறு நேர்ந்தபோதெல்லாம் அவனது அரசியல், பொருளாதார, பண்பாட்டின் அடித்தளங்கள் அசைந்திடக் காண்கிறோம். ஆகவே தான் தமிழன் தன்னுடன் ஊனில் - உதிரத்தில் - உணர்வில் - ஒடுங்கி ஒன்றிக் கலந்த தன் தாய் மொழியை உயிர் மூச்சாகப் போற்றிடத் தலைப்பட்டான்.

ஆங்கிலம் உலகின் பல பகுதிகளில் பரவியுள்ள மொழி; மறுக்கவில்லை. இருந்தும் அது ஆட்சி செய்வோரின் அருமை மொழியாகிச் சென்ற இடங்களில் எல்லாம் வார்த்தைகளை, வழக்குச் சொற்களை அள்ளிச் செர்த்துக் கொண்டது. ஆங்கில அகராதியில் 'மிளகுத் தண்ணீர்' என்ற சொல் கூட அரங்கேறியிருக்கிறது. தமிழ்மொழி மாத்திரம் அதற்கு நேர் மாறாகக் கலப்புச் சொற்களைக் களைந்து தனது தனித்தன்மைதனைக் காப்பதிலேயே கருத்தாக இருக்கிறது.  இந்திய மொழிகள் சிலவற்றில் தான் இந்த மொழித் தூய்மை இயக்கங்கள் அண்மைக் காலத்திலே தோன்றியிருக்கின்றன.

திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவை, வட மொழிச் சொற்களை விரும்பி ஏற்றுக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.  மலையாளச் சொல்லகராதியை உருவாக்கிய சுரானந்த் குஞ்சன்பிள்ளை, இக்கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அருகிலிருக்கிற மற்ற மொழிகள் வட சொற்களை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறபோது, தமிழ் மாத்திரம் வடசொற்களை மாத்திரமல்லாது பிறமொழிச்சொற்களைக் கூட ஏற்காமலேயே, தனது தனித்தன்மையோடு விளங்குவதைக் காண்கிறோம்.

தமிழ் மூத்த முதன்மொழி - மாற்றம் - வளர்ச்சி இவற்றிற்கான கூறுகளைத் தன்னகத்தே இயல்பாகவே கொண்ட தனி மொழி என் பதாலேயே இவ்வாறு முடிந்தது. உலகத்தின் பெரும் பகுதியில் ஆங்கிலம் வழங்கப்பட்டும், பெரும்பாலும் அதன் பயன் கருதி மாத்திரமே பலரும் அந்நாள் தொட்டு அதனைப் பயின்று வந்தனர். ஆனால் நமது தமிழ் மொழியைப் பொறுத்தமட்டில் மேற்கு நாட்டு அறிஞர்கள் பலரும் பெரும்பாலும் பயன்பாடு கருதி அல்ல - அதன் அழகிலும் ஆற்றலிலும் மயங்கியே கற்றனர்.

மேற்கு நாட்டவர்கள் தங்கள் சமயத்தைப் பரப்புவதற்காகவே தமிழ் கற்றனர் என்றால், திருக்குறளை - திருவாசகத்தை இலத்தீனிலும், ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் பெயர்ப்பானேன்? இந்தத் தமிழ் இலக்கியக் களஞ்சியத்திலே தம்மையே இழந்தனர் என்பது தான் உண்மை. ''சிந்து வெளி நாகரிகம்'' அழிந்து பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்த அறிஞர்கள் ஒன்றை உறுதியாகக் குறிக்கின்றனர்.  மாறி வரும் காலத்தோடு மாற இயலாத நாகரிகம் - வெளி நாகரிகத் தாக்குதல்களைத் தாங்க இயலாத நாகரிகம் - ஆகவே அது அழிந்துபட்டது என்பது அவர்களின் கருத்து.  

இது மொழி வரலாற்றுக்கு முற்றிலும் பொருந்துவதாகும். இலத்தீன், வடமொழி போன்றவை நடைமுறை மொழிகளாக இல்லாது போனதற்கே அடிப்படைக் காரணம், மக்களால் அது பேசப்படவில்லை என்பது மாத்திரமல்ல - மாறி வரும் காலத் தேவைகளுக்கு ஏற்ப அவைகளால் வளைந்து, நெளிந்து புதிய வடிவங்களைப்பெற இயலவில்லை என்பதுமாகும். ஆங்கிலம் இதற்கு ஒரு விதிவிலக்கு. 'கொச்சை மொழி' கூட, இலக்கிய உத்தியாக ஆங்கிலத்தில் இந்த நூற்றாண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 

கால வெள்ளத்தால் கரைக்க இயலாத தனி மொழியாகத் தமிழ் திகழ்வதற்குக் காரணம் - அது கவிதையாகப் பிறந்து - உரை நடையாகத் தவழ்ந்து - வசன கவிதையாக வளர்ந்துகொண்டிருக்கிறது. களவியலில் காணப்படுகின்ற 'பாண்டிய நாடு பன்னீராண்டு வற்கடம் செல்ல' என்னும் தமிழும், இன்று கடைக்காரர் பேசுகிற தமிழும் முரண்பட்டவை.

இருந்தும் எட்டு நூற்றாண்டுகளில் இத்தனை மாறுதல்களுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்ட தமிழ், இன்னமும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் பல மாறுதல்களுக்கு உட்பட்டாலும் அதன் தனித்தன்மை மாறாது விளங்கும் உயர் தனிச் செம்மொழி.

"'தமிழ் உருக்க உணர்வைக் காட்டும் இரக்கத்தின் மொழி'' என்றே குறித்தார் தனிநாயக அடிகளார். ஒவ்வொரு மொழிக்கும் ஓர் அடிப்படைக் கூறு உண்டு. அவ்வியல்பில் மாத்திரமே அது சிறந்தோங்கிப் பொன்றாப் பொலிவுடன் நின்று நிலை பெறும். ஒரு மொழி கவிதைக்குப் பொருத்தமாக இருக்கும்; மற்றொன்று கட்டளை பிறப்பிக்கவே பொருத்தமாக அமையும்.  'அம்மையே ! அப்பா ! ஒப்பிலா மணியே !' என்று உள்ளத்தை உருக்குகின்ற உணர்ச்சிப் பாடல்களே தமிழில் மிக நன்றாக வடிவம் பெறும் என்பது தனிநாயக அடிகளார் கருத்து. 

இருந்தாலும், ஆற்றலை வெளிப்படுத்துகின்ற 'கலிங்கத்துப் பரணி'.  அன்புணர்வை வெளிப்படுத்துகின்ற 'தேவாரம்', 'திருவாசகம்' இரண்டுமே தமிழிலே இடம்பெறக் காண்கிறோம். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சமநிலை என்கிற ஒன்பான் சுவைகளும்,  ஒருங்கே பரவி நிற்கிற அழகினைத் தொட்ட தொட்ட இடமெல்லாம் தமிழில் தட்டுப்படக் காண்கிறோம். இன்னது தான் இம் மொழியிலே சிறப்பாக வரும் என்ற பொதுவிதிக்கு மாறாகத் தமிழில் எந்த உணர்வினையும் வெளிக்காட்ட இயல்வதைக் காண்கிறோம்.

 மகாகவி பாரதியாரின் 'பாஞ்சாலி சபதம்' பல்வேறு சுவைகளின் களஞ்சியமாக இருப்பதே சான்றாகும்.
"வார்த்தைகள் நடந்தால் வசனம்; நடனமாடினால் கவிதை'' என்பார்கள். வசனம் என்பதோ கண்ணிலே பட்டுக் கருத்திலே தைக்க வேண்டும். கவிதையோ காதினைத் தொட்டுக் கருத்திலே நிலைத்தாக வேண்டும்.  'காதினைத் தொட்டு' என்று எண்ணும் போது கவிதைப் பெண்ணுக்கு ஓர் இசைச் சதங்கை எப்போதும் தேவை.  'இசையோடு சொல்லப்படாத கவிதையோடு இதயம் இசையாது; மனம் ஒன்றாது; கவனம் கலையாது,  கவிதையின் வெற்றி கலகலப்பான ஓசையிலே இருக்கிறது. ஒன்று துள்ளலாக விழும்; மற்றொன்று தழுவலாக வரும். எப்படி இருந்தாலும் ஓசை அமைதி இருக்க வேண்டும்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை

- ஒளவை நடராசன்
thamizhavvai[at]hotmail.com
---

தேமொழி

unread,
Jul 1, 2021, 1:33:02 AM7/1/21
to மின்தமிழ்
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி -  84)

“அறிவியல் நோக்கும் - அமைந்த போக்கும் !”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

ஒரு கவிஞர் என்ன நடக்கிறது என்பதை விரிவாகச் சொல்லத் தேவையில்லை, ஒலிக் குறிப்பிலும் ஓசைச்சிறப்பிலுமே நிலையை உணர்த்துவார். பந்தாடுகிற மகளிரைக் குறிக்கிற சிலப்பதிகாரப் பாடற்பகுதியும், உறங்குகின்ற கும்பகர்ணனை எழுப்பும் கம்பராமாயணப் பாடலும் சான்றுகள் என்று பாராட்டுவார்கள். கற்பனை இன்றேல் கவிதை இல்லை. அதையே தான் 'உள்ளதைச் சொல்வது அறிவியல்; உள்ளதை உணர்ந்து சொல்லுதல் இலக்கியம்' என்கிறோம்.  உணர்ந்து சொல்கிறபோது கற்பனை கூடவே சேர்ந்து கொள்கிறது.

தமிழில் கவிதை வரும்; கற்பனை வரும்; அறிவியல் வருமா? என்றும் சிலர் கேட்கிறார்கள். அறிவியலைச் சொல்லித் தர இயலுமா?  என்பது அவர்களது கேள்வி.  தங்களால் இயலாததைச் சில பேர் தமிழால் இயலாது என்று கருதிடவும் பேசிடவும் காண்கிறோம். அது தவறு.  ஒரு மொழி ஒரு துறையில் பயன்படுத்தப்பட்டால் தான், அதற்குரிய கலைச்சொற்கள் வரும். உதாரணத்திற்கு, 'காஸ்மோநாட்' என்ற ஆங்கிலச்சொல் எப்போது வந்தது ?  ஆங்கிலம் விண்வெளித்துறையில் பயன்படுத்தப்பட்ட பிறகு தானே வந்தது?  அதுபோலத்தான் தமிழும் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட வேண்டும்.  இதைத்தானே 1913 - ஆம் ஆண்டில் கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் 'நீரில் இறங்குகிற வரை நீச்சல் வராது' என்று குறித்தார்கள்! 

தமிழில் மருத்துவம் உண்டு; மருந்தியலும் உண்டு. சித்த மருத்துவத்தின் சிறப்பினைச் செர்மானியர் உணர்ந்த அளவிற்கு நாம் உணர்ந்தோமில்லை.  'ஆடாதோடை' என்ற நம் மூலிகை வெளிநாடு சென்று மருந்தாகி, 'இளைப்பிருமலுக்கு  இதுதான் அருமருந்து' என்று வந்ததால் தானே பாராட்டி வாங்குகிறோம்! மூலிகை - அவற்றின் குணம் - பயன்பாடு - அனைத்தும் அடங்கியது சித்தர்களின் இலக்கியக் கருவூலம். காணக்கிடைக்காத காட்டு மூலிகைபோல, எத்தனையோ மருத்துவ முறைகள் தமிழ் இலக்கியத்தில் உண்டு.

தமிழில் அறிவியல் கருத்துக்களும் இல்லாமல் இல்லை. 'வலவன் ஏவா வானவூர்தி' என்பதில் ‘விமானம் ஓட்டுதலைப் பற்றிய அறிவியல் சிந்தனை' வெளிப்படுகிறது. 'ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி' என்ற ஔவையார் பாடலில் பாஸ்கல் விதி வெளிப்படுகிறது.  'அணுவைப் பிளந்து' என்று வருகிறவரியில் அணுவைக் கூறிடலாம் என்கிற குறிப்பு மேலோங்கி வருகிறது.  'செஞ்ஞாயிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்' என் பதில் வானவியலில் வளர்ந்தமைந்த அறிவு புலப்படுகிறது. குறுந்தொகையில் வருகிற ‘சேமச்செப்பு' என்கிற சொற்றொடரில் ‘தெர்மாஸ் பிளாஸ்கின்' தத்துவம் தெரிகிறது. இப்படி வேதியியல், விலங்கியல் மாத்திரமல்ல - தமிழில் தாவரயியல், புவியியல், வானவியல் ஆகியனவும் ஒளிந்திருப்பதைக் காணுகிறோம்.

பழமைக்குப் பழமையான மொழி தமிழ் என்றால், புதுமைக்குப் புதுமையான மொழி தமிழ்.  அப்படிப்பட்ட ' என்றுமுள தென் தமிழுக்குத்தான் இன்று மாநாடு நடக்கிறது.  இந்துக்கள் ( வைணவர்கள், சைவர்கள், முதலானோர் ), சமணர்கள், பௌத்தர்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் - இப்படி எல்லாச் சமயத்தவர்களாலும் வளர்க்கப்பட்ட தனிப்பெருமை தமிழுக்கு மாத்திரமே உண்டு.   இது ஆங்கிலத்திற்கும், உலகிலேயே அதிகம் பேர் பேசுகின்ற சீன மொழிக்குங் கூட, இல்லாத பெருமையாகும்.

நெஞ்சிருக்கும் வரை நினைவிலிருக்கிற ஒரு பெருமை தமிழுக்கு என்னவெனில் - தமிழிலே கவிதை பாடியவர்கள் எந்தக் கவிப்பரம்பரைக்கும் வழி வழியாகச் சொந்தக்காரர்கள் அல்லர். வணிகர்கள், வள்ளல்கள், அரசர்கள், ஆளப்பட்டோர், கணக்கர்கள், கற்றறிந்த பெருமக்கள், இப்படி எல்லாத் தரப்பினரும் தமிழுக்கு அணி செய்தனர்.   இதுவே தமிழ் மொழிக்கு அமைந்திருக்கிற தலையாய சிறப்பு என்று நான் கருதுகிறேன்.

இத்தகைய தமிழுக்கு மாநாடு நடக்கிறது என்பதிலே தமிழர்களாகிய நாமெல்லாம் பூரிப்பும் பெருமையும் அடைகிறோம்.  உலகளாவிய பொது நெறித் தத்துவங்களை உடையது தமிழாகும்.  தமிழர்களின் நாகரிகமோ தொன்று தொட்ட ஒன்றாகும். உலக வரலாற்றினை உணர்ந்து பார்த்தால் - ஏறத்தாழ 1900 ஆண்டுகளுக்கும் முன்னர்-மேற்கில் டிராஜன் என்பவனது ஆட்சிக்காலத்தில் உரோமாபுரிப் பேரரசு உச்ச நிலை அடைந்திருந்தபோது - கிழக்கில் பசிபிக் சமுத்திரத்திலிருந்து காஸ்பியன் கடல் வரை - அட்லாஸ் மலைகளிலிருந்து இமாலயக் தொடர்வரை சீனப் பேரரசு எழுந்து சிறந்த போது, ஆழ்ந்த கருத்தமைந்த அழகான கவிதைகள், சிறந்த, உயர்ந்த- இலக்கியத் தகுதிகளோடு பாடப் பட்டுள்ளன என்பதனை உணருகின்றோம்.

கிரேக்க -உரோமானிய இலக்கியத்தின் இதிகாச காலம், சீனத்தின் உன்னத நேரம், போலவே சங்ககாலம்- தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று கருதப்படுகிறது.  அப்படிச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மரபிலே தான் -- சங்கம் கண்ட சரித்திரப் புகழ்பெற்ற மதுரை மூதூரில்தான்- ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெறுகின்றது.

அகம், புறம் என்று இலக்கியத்தின் கூறுகளைக் காட்டி, களவியல் கற்பியல் என்ற பிரிவுகளையும் நிலை நாட்டி நிற்பது தமிழ் இலக்கியம். மற்ற மொழிகள் காதலுக்கு இலக்கியம் படைத்திருக்கலாம்; தமிழ்மொழியோ காதலுக்கு இலக்கணம் கண்ட மொழி. அந்த மொழிக்குத்தான் - மூவாத-மூத்தும் முதிராத - தமிழுக்குத்தான் - இப்போது மாநாடு நடக்கிறது.

புதுமைக் கருத்துக்கள் மாத்திரமல்லாமல்- உலகம் அளாவிய பொதுமைக் கருத்துகளும் அடங்கியது தமிழ் இலக்கியம் என்று மொழிந்தால், அது மிகையாகாது.  'யாதும் ஊரே; யாவரும் கேளிர் ' என்ற கணியன் பூங்குன்றன், 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்று எடுத்துச் சொன்ன திருமூலர், தமிழில் எழுதப்பட்டும், 'தமிழ்' என்று கூட எங்குமே பேசாமல் மனித குலத்திற்கே பெருவிளக்காக எழுந்து வழிகாட்டும் ஏற்றமிகு தமிழாசான் திருவள்ளுவர் போன்றோரால், தமிழ் இலக்கியம் உலக அரங்கிலே இடம் பெறுகிறது.

புத்தம் புதிய புரட்சிக் கருத்துகளுக்குத் தமிழிலே என்றுமே வாய்ப்பு உள்ளது . தமிழ்மொழியின் வேர்கள் பழமையானவை. ஆனால் அதன் பூக்கள் புத்தம் புதியவை. 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்ற பாரதியாரின் பாட்டு வரிகளுக்குப் புகழ் சூட்டும் வகையில் உலகத்தமிழ் மாநாடு நடக்கிறது.

வருமானம் தேடும் வழிக்காக மாத்திரமே ஒரு மொழி பயிலப்படுகிறது என்ற நிலையில்லாமல் இலக்கியச் செழுமைக்காகத் தமிழ்மொழி பிற நாடுகளிலும் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.  பிற நாட்டுப் பல்கலைக் கழகங்களிலெல்லாம் தமிழுக்கென்று ஆய்வுத் துறைகள் தோன்றுவதற்கு அரசின் முயற்சி மாத்திரம் போதாது. தமிழின் பால் பற்றுடைய பலரது முயற்சிகளும் இதிலே இணைந்தாக வேண்டும்.

எல்லாமே தமிழில் உண்டு என்பதும், தமிழில் எதுவுமே இல்லை என்பதும் ஆகிய இரண்டும் மிகைக் கூற்றாகச் சிலருக்குப் படலாம்.  தமிழில் இருப்பதைப் பெருக்க வேண்டும்; இல்லாததை உருவாக்கவேண்டும்.  இதுவே நமது மொழி வளர்ச்சிக் கொள்கையாக அமைந்திட வேண்டும்.  இந்தச் சூழ்நிலைகளிலும் நமக்கு நம்பிக்கை தருகின்ற ஒன்று, நமது அரசு மேற்கொண்டுள்ள எழுத்துச் சீர்திருத்தமாகும்.

பேரறிஞர் அண்ணாவின் வழியில், தடை பல கடந்து, அவர் காட்டிய இலட்சியப் பாதையில் நடைபோட முற்படுகிறோம். அண்ணா நினைவாக எழுச்சிப் பணிகள் ஏராளம் இதுவரை நடைபெற்றிருந்தாலும், மதுரையிலே நடைபெறுகிற மகத்தான இந்தத் தமிழ் மாநாடு, அவர் நினைவிற்குப் பெரும் புகழைச் சேர்க்கிற பணியாக மிளிர வேண் டும் என்று புரட்சித்தலைவர் படித்த கட்டுரை முடிந்தது.  மக்கள் திரளாக நின்று எழுத்துப் படிகளை வரிசையில் நின்று வாங்கினர்.

தமிழின் பெருமையைப் பேசினாலும், நமக்குப் பலநிலைகளில் இடுக்கண்கள் அடுக்கி வந்தபடி தான் அறிஞர்க்கு அறிஞராகவும் - அறிவியல் மேதையாகவும் - மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகவும் புகழோங்கிய மாமணி டாக்டர் வா செ குழந்தைசாமி அவர்கள் பாரதியார் பாடலை வரைந்து காட்டி அதனைத் தொடர்ந்து ...
"விதியே, விதியே, தமிழச் சாதியை...?"

"விதியே, விதியே தமிழச் சாதியை
என்செயக் கருதி இருக்கின்றாயடா"
என்றொரு கேள்வியை எழுப்பினன் பாரதி
தென்றலும் புயலும் சேர்ந்த சிந்தையன்
மின்னணு மிஞ்சிய வேகமும் வலிமையும்
என்னருந் தமிழ்மொழிக்கேற்றிய பாவலன்
விதியெனும் பாவியின் வினை நமக் கெதிராய்ச்
சதியென மாறும் சாத்தியம் பற்றி
அஞ்சினன் போலும்; அன்றே தன்னுடை
நெஞ்சொடு வாதம் நிகழ்த்தினன்
என்று எழுதிய கவிதை வரிகளை இங்குச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.  

நாடிய துணையை, நடந்த பாதையை,
தேடிய இலக்கை, சேர்ந்துள தலத்தை
எண்ணினன்: முன்னாள் எம்மவர் அடைந்த
ஒண்ணிய பெருமைகள் என் உளத்தில் தோன்றின
பேரர சாகப் பிறங்கிய மூவர்தம் வாரிசாய்
வழிவழி வந்தவர் ஆண்டுள, நினைவில் வந்தன
அயலார் நீண்ட நாள் ஆண்டது நீங்கி நம்
வயமாய்த் தாய் நிலம் வந்தது. பன்மொழி
இனங்கள் கொண்டது இந்நிலம் என்பதை
மனங்கொண் டாட்சியர் மாநிலம் மொழிவழி
அமைத்து, வளர் கூட்டாட்சியை முறையொடு
சமைத்து யாவரும் சம மென்றாட்சி செய்
நிலைமை கண்டதாய் நினைத்தோம்: ஆயினும்
தலைமை ஓர் புறம் சாய்வது கண்டனம்!
பன்மையில் ஓர்மை நம் பாரத நாட்டின்
வன்மை யென் றெண்ணிய மனங்கள் மாறின
பன்மை போற்றிடும் பட்டறி வூறிய
தன்மை மிக்கவர் தலைமை ஏற்பது
நாள்தொறும் நாள்தொறும் நசிதல் கண்டனம்!
ஆள்வலி யுண்டெனின் ஆட்சியும் உண்டென
எண்ணுதல் பாமரர்க் கியற்கை யாயினும்
நுண்ணிய சிந்தையும், நுழைந்த பார்வையும்
ஒத்து வாழ்வதில், ஓர் பெரும் நாடெனும்
தத்துவம் ஏற்பதில், தயக்கம் எம்மவர்க்(கு)
அணுவும் இல்லை ; யாம் ஆயிரம் கோயிலில்
முணுமுணுத்திடோம்; முழங்கிக் கூறுவம்.
வெள்ளையர் நீங்கிய
பின்னர் இந் நிலத்தின் ஆட்சியில்
ஆங்கிலம் ஓர் தினம் அகன்று, தாய்மொழி
அதன்றன் மாநிலத் தனைத்துச் சூழலில்
பதவி யேற்றிடும்; பல்லாண் டிழந்த
வாய்ப்பு மீளவும், வளர்ச்சி காணவும்,
தாய்மொழி முந்தைய தலைமை கண்டதாய்ப்
பெருமைப் பட்டனம். பேறெனக் கூடிய
ஒருமைத் தொடர்புக் குதவ இந்தியைக்
கூறினர்.

ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சமாய்
மாறிய விடத்தில் வந்திவண் நிற்பது
நம்மொழி யென்றுநாம் நம்பினம்; காண்பது
நம்மொழி யன்றடா; நம்மொழி யன்று.
மய்ய ஆட்சியில் மாநில மெங்கணும்
பய்யப் பய்யப் பரவியும் விரவியும்
வருவ(து) அங்குள மக்கள் சொல்லல;
தரும மாகுமோ? தமிழம் ஏற்குமோ?
அற்பம் ஆனதோர்
அஞ்சல் அட்டையில் அருந்தமிழ் இல்லை
அஞ்சல் அட்டைக்கு அருகதை யில்லாப்
பஞ்சையர் மொழியா பைந்தமிழ்? இன்னும்
அஞ்சல் அட்டை போல் ஆயிரம் ஆயிரம்
சான்றுகள்: பட்டியல் தருவதில் பயனெதும்
தோன்றுவ துண்டோ? தொன்று தொட் டிதுவரை
ஒற்றுமை யற்றதால், உட்பகை மிக்கதால்
மற்றுள நாட்டினர் வந்தெதிர் கொண்ட நாள்
தொடர்ந்து நம் நிலம் தோல்வி கண்டது.
கடந்த நாளெலாம் கடந்த வாக நாம்
புதிய பாரதப் புத்துணர் வெங்கணும் -
எண்ணில் மிக்கவர் ஏற்றம் காண்பது
மண்ணில் இன்றுள மரபென் றோதுதல்
தரும மாகுமோ? தன் மொழி தாழவோர்
ஒருமை காண்பதில் ஊன், உயிர் ஒன்றுமோ?

"விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செயக் கருதி இருக்கின் றாயடா"
என்னுடல், என்னுளம், என்னுயிர் எல்லாம்
மன்னிய செந்தமிழ் மக்கட் கோதுவன்
நுண்பொருள் காணும், நுழைந்து தேடும்
பண்புகள் நம்மினப் பரம்பரைச் செல்வம்.
வழி வழி வந்தது: வளத்தில் மேலது
அழிவிலா நிதியம். ஆன்றோர் நன்கொடை.
நிலமும் நீரும் நிலம்தரு, நீர்தரு
வளமும் நிறைவுற வாய்த்தில வேனும்
அறிவுள ரென்போர் அனைத்து முளர் எனும்
நெறியினை அன்றே நிறுவிய வள்ளுவன்
பொய்யா மொழியினன்: புலமைஒன் றுளதேல்
எய்தா வளமென எதுவும் இன் றிலையால்
வேண்டுவ படைக்கும் மேதையின் வித்துளர்
யாண்டு தோன்றினும் யாவரே யாயினும்
போற்றுவிர்: நம்நிலப் புதையல்என் றவர் தமை
வேற்றுமை யறியா விழியொடு காணுவீர்!
தமிழுல கனைத்தும் தம்வழி ஈர்த்துத்
தமிழின முயர்த்தும் தலைவர் காணுவீர்.
நிலமும் நீரும் நிறைந்து காணினும்
வளமென வையகம் வகுத்த யாவையும்
நிரம்பி வழிந்து நிற்பினும், இயற்கை
வரம்பும் இகந்து வழங்குவ தாயினும்
பயனுள அனைத்தும் படைத்(து) அளிக்கினும்
நயனில: இந்த ஞாலத்(து) உயர்வுகள்
தலைமையின் தரத்தின் தகவால் அமைவன.
பாரத ஒன்றியம் பன்மையின் கூட்டெனும்
உண்மை உணரார் ஒற்றுமை குலைக்கும்
வன்கணர்; அவர்முன் வணங்குவ மல்லோம் !.


தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை
- ஒளவை நடராசன்  
thamizhavvai[at]hotmail.com
----

தேமொழி

unread,
Jul 2, 2021, 3:41:00 AM7/2/21
to மின்தமிழ்
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி -  85)

“அரசுகளின் உறவும் ஊடலும்”

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

கடந்த வாரக் கட்டுரையில் இழைத்துணர்ந்த அறிவியல் பேரொளி டாக்டர் வா செ கு - இந்திய விடுதலையால் நாம் எய்திய உரிமை வாழ்வையும் மொழிவழி அமைந்த மாநில அமைவையும் சுட்டிக் காட்டியிருந்தார்.  அரசியலையும் கவிதை வடிவில் உருக்கமாகக் காட்டியிருந்தார்.  தமிழ் மக்களுக்குத் தமிழ்க்காதல், தமிழினம் என்ற பற்று எப்போதும் மிகுந்திருந்தாலும், அயல் மாநிலங்களை மதிப்பதிலும் - இந்திய ஒருமையைப் போற்றுவதிலும் ஒருபடி மிஞ்சியவர்கள்.  யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற தொடர் உலகறிந்த தமிழர் அனைவரையும் மனவிரிவோடு பாராட்டுவதாகும்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்று பாரதியார் பாடினாலும் அவருடைய பரந்தமனம் வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர் வாழிய பாரதம் என்றே நிறைவுறும்.  வங்கப் பெருந்தகை பங்கிம் சந்திரர் எழுதிய வந்தே மாதரப் பாடலில் ஆறு கோடிக்கரங்கள் உன்னை வாழ்த்தும் என்று வங்கத்தை மட்டும் குறிப்பிட்டிருந்தாலும், பாரதியார் இந்திய நாடு முழுவதையும் அரவணைத்து அறுபது கோடித் தடக்கைகள் என்று மொழியெல்லையை இந்திய ஒருமைக்கேற்ப மாற்றினார்.

தமிழகத்துத் தலைவர்களைப் பற்றிப் பாரதியார் பாடிய பாடல்கள் உள்ளன.  பிற மாநிலத்து வீரர்களை அவர் போற்றியுள்ள பாடல்கள் மிகப்பல. 
"சத்ரபதி சிவாஜி", "கோக்கலே சாமியார் உடல்", "வாழ்க நீ எம்மான்", "குருகோவிந்தர்", "தாதாபாய் நவரோஜி", "பூபேந்திரவிஜயம்", "வாழ்க திலகன் நாமம்", "திலகமுனிவர்கோன்", "லஜபதி", "லாஜபதியின் பிரலாபம்”  போன்ற பாடல்கள் இதற்குச் சான்றுகள். பாரதியார் காலத்து வங்க அறிஞர்களிடமோ பிற மாநிலத்துக் கவிஞர்களிடமோ இத்தகைய பரந்த நோக்கைக் காணமுடியவில்லை?

தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு ஆகியவற்றை முற்றுமாக ஒதுக்கிவிட்டுப் பாரதநாட்டின் இதர பகுதிகளின் பெருமைகளை மட்டும் சொல்லும் பாரதியாரின் பாடல் உண்டு. "பாரதமாதா" எனும் தலைப்புடைய பாடலில் "முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்தவில் யாருடைய வில் ? ", "இந்திர சித்தன் இரண்டு துண்டாக எடுத்தவில் யாருடையவில் ?", "காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது கல்லொத்த தோள் எவர்தோள் ?", "சாகும்பொழுதில் இருசெவிக்குண்டலம் தந்த தெவர் கொடைக்கை ?", "பாரத நாடு பழம்பெரும் நாடு - நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதாதீர்" என்ற பொன் வரிகள் என்றும் நினைக்கத்தக்கன !.  "போர்க்களத்தே பர ஞானமெய்க்கீதை புகன்ற தெவருடைய வாய் ?", "புத்தன் மொழி எங்கள் அன்னை மொழி", "மிதிலை எரிந்திட வேதப்பொருளை வினவும் சனகன் மதி", "தெய்வீகச் சாகுந்தலமெனும் நாடகம் செய்த தெவர் கவிதை ?" என்றெல்லாம் இராமாயண, மகாபாரதத் தொன்மங்களும், புத்தனது அறிவுரையும், காளிதாசனின் சாகுந்தலமும், வேதங்களும், உபநிடதங்களும் காட்டப்பட்டன.  பாரதியாரின் பரந்த மனத்தை இப்பாடல் காட்டுகிறது .

இந்திய விடுதலைக்குப் பின்னர் மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒரே கட்சிச் சார்புடையதாகவே உருவாகியிருந்தன.  1967 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாநில அரசும், மைய அரசும் இருவேறு கட்சிகளால் தலைமை பெற்றன. பேரறிஞர் அண்ணா மாநில உரிமைகள் தடைப்படுவதாக முதல் முழக்கமிட்டு எடுத்துரைத்தார். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி எனத் தமிழக அரசின் முதலமைச்சர்கள் அனைவரும் மாநில சுயாட்சிக் குரலை - உரத்த குரலிலும் உண்ணாநோன்பு நடத்தியும் செயற்படுத்தினர்.  மாநில அரசுகளை நீக்கும் போக்கும் நிகழ்ந்தது.

மூதறிஞர் இராஜாஜி, உத்தமர் ஓமந்தூரார், பெருந்தலைவர் காமராசர் ஆகிய மூவரும் மைய அரசில் ஒரே கட்சியாக இருந்தும் அதட்டும் குரலில் மைய அரசின் போக்குக்கு மறுப்புரைத்த காட்சிகளும் உண்டு. புரட்சித்தலைவரின் உடல்நலம் குன்றியிருந்ததைக் காரணமாகக் காட்டித் தமிழக காங்கிரசு தமது கட்சியிலிருந்து ஒருவரைத் துணை முதல்வராக அமர்த்தலாம் என்ற ஆலோசனையை மத்திய அரசின் மூலம் கொடுத்தது.

அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் தன் செயல்களில் உறுதியாக இருந்தார்.  இரண்டாம் முறையும் அதுமாதிரியான ஆலோசனை வர அதையும் புறக்கணித்தார். மாநில - மத்திய நல்லுறவில் மாறுபட்ட நிலையிலும் தன்னுடைய பாதையிலேயே காய்களை நகர்த்தினார் என்று எழுதியதோடு ஒருமுறை என் நண்பர் எஸ் டி எஸ் - காளிமுத்துவோ என்னை மீறிப் பேசமாட்டார்கள். எங்களுக்குள் எப்போதும் கருத்தொற்றுமை உண்டு. பேசுகிற வார்த்தையில் வேகமிருக்கலாம்.  அப்படிக் கருத்தொற்றுமை இல்லையென்றால் இந்த அமைச்சரவையைக் கலைத்துவிட்டு வெளியேறுவோம் என்று ஒருமுறை புரட்சித்தலைவர் குறிப்பிட்டது அந்த நேரத்தில் மைய அரசுக்கும் - இலங்கை அரசுக்கும் மறுமொழியாயிற்று அதுவே புரட்சித்தலைவரின் பதிலாகவும் இருந்தது.  இந்தக் குறிப்பை அரசியல் ஆய்வுச்செம்மல் இரா.தங்கத்துரை எழுதியுள்ளார் .

இப்படி மாநில அரசுக்கும் - மைய அரசுக்கும் உறவும் - ஊடலும் தொடர்ந்தது.  இந்நிலையில் மாநில - மத்திய உறவு பற்றித்தான் நேற்றைய கவிதை காட்டியிருந்தது.  அரசமைப்பு எப்படி அமைந்தது என்பதைச் சிறிது காணலாம்.  உரிமை வாழ்வைக் கண்டு மக்கள் ஒன்றுபட்டுப் பெருங்களிப்பில் திளைத்தனர்.  பல்மொழிகள், பல இனங்கள். அவரவர்க்குரிய பண்பாடு, கலை பழக்க வழக்கங்களைக் கொண்ட தனித்தனிப் பகுதிகள் உள்ளன என்பதைக் காலப்போக்கில் உணரத் தலைப்பட்டனர் - வரலாற்றாலும் நில நூலாலும் வேறு காரணங்களாலும் பல நூற்றாண்டுகளாகச் சிற்றரசுகளாகவும் பிரிந்திருந்தது இன்று இந்நாட்டின் தனித் தன்மைகள், என்றாலும் அது பன்மையில் ஒருமை காண விரும்பிய கூட்டுக் குடும்பமாகவே திகழ்ந்தது .

பாரதக் குடும்பத்தின் ஒருமைப்பாடு தக்க வகையில் பேணிக் காக்கப்படல் வேண்டும்; சிதைக்கப்படக் கூடாது என்பதே ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் இலட்சியமாகும். வெள்ளையரின் அடக்கு முறையில் தோன்றி, இந்திய அரசமைப்புச் சட்டத்தால் கட்டிக் காக்கப்படும் பாரத ஒற்றுமை உளப்பூர்வமானதா ? முழுமையானதா ? நிலையானதா ? என்ற ஐயப்பாடுகள் அழுந்தியிருந்தன.  அடிமைத்தளை அகற்றப்பட்ட பின் இந்தியர் அனைவரும் போற்றுதலுக்குரிய அரசமைப்புச் சட்டத்தின் மூலமாக உணர்ச்சி பூர்வமாக ஒருங்கிணைக்கப்பட்டு விட்டனர் என உறுதியாகக் கருதினர்.  இல்லையில்லை, பாரத நாடு சுதந்திரம் பெற்றதேயன்றி, அதன் உறுப்புக்களான மொழித் தேசிய மாநிலங்கள் நிறைவான தன்னாட்சியைப் பெறவில்லை;  மெய்யானதொரு கூட்டாட்சி அரசின் கீழ் முழுத் தன்னாட்சி பெற்ற மாநிலங்களை இணைத்து, அதன் வழி எழும் இந்திய ஒற்றுமைதான் நிலையானது என
அரசியல் அறிஞர் எழுதி வந்தனர்.

இருசாராரும் தம் பக்கத்தில் நின்று பட்டிமண்டபம் போலப் பேசி வந்தனர். ஆதாரங்கள், அரசியல் வரலாற்றுச் சான்றுகள், அரசியற் சட்ட நுணுக்கங்கள் என்று ஆவணங்கள் பலவடிவெடுத்தன ! மாநிலத் தன்னாட்சிக் கோட்பாடு அரசியற் கோட்பாடே அரசியல் கட்சியின் கொள்கையன்று.  ஒரு காலத்தில் குடியாட்சிக் கொள்கையும், சமதர்மக் கொள்கையும் உலக அரங்கில் அரசியல் கட்சிகளின் குறிக்கோள்களாக மட்டுமே திகழ்ந்தன.  ஆனால் அவையிரண்டும் இன்றைய நாளில் உலகநாடுகள் பலவற்றில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. கூட்டாட்சித் தத்துவத்தின் உயிர்க்கூறான மாநில சுயாட்சிக் கொள்கையும் நம் நாட்டின் அரசியல் கட்சிகளின் பொருண்மைகளாக இருப்பினும் அக்கோட்பாடு உலகின் பல்வேறு நாடுகளால் அரசியல், பொருளாதார, சமுதாய அடிப்படைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடைமுறையில் உள்ளன .

இது பற்றி ஆய்ந்த வழக்கறிஞர் திலகம் கே எஸ் ஆனந்தம் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் "மலர்க மாநில சுயாட்சி " என்ற அரிய நூல் எழுதினார்.  நான் ஓர் எழுத்தாளனல்லன்; நாள்தோறும் சட்டம் பயிலும் ஒரு வழக்கறிஞன்; அரசியற் சட்ட நுணுக்கங்களை அவ்வப்போது ஆழ்ந்து நோக்கும் வாய்ப்பைப் பெற்ற சட்ட மாணவன்.  இந்திய நாட்டின் ஒருமைப்பாடு குன்றாமல், குறையாமல், அதன் பல்வேறு மாநில மக்கள், சமுதாயம், அரசியல், மொழி, பொருளாதாரத் துறைகளில் வளர்ச்சியையும் நல்வாழ்வையும் பெற இன்றைய இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே தேவையான வழிவகைகள் உள்ளனவா என்ற சிந்தனையோட்டத்தின் விளைவாகத் தான் இந்நூலை நான் எழுதத் துணிந்தேன் என்று அவர் தொடங்கிய வரிகள் நம் நெஞ்சைத் தொடுகின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளைப் பகுத்துப் பார்த்து, அதன் உட்கூறுகளைச் சரிவரப் புரிந்து கொள்வதற்காக இந்திய அரசமைப்பையும், அரசமைப்பு வரலாற்றையும், அரசியல் மற்றும் பொருளாதார நூல்களையும், பல்வேறு கூட்டாட்சி நாடுகளின் அரசமைப்புகளையும், இந்திய நாட்டின் மத்திய மாநில உறவுகள் பற்றிய ஆய்வு நூல்களையும் பயின்று அவற்றிலிருந்து திரட்டிப் பெறப்பட்ட அறிஞர்களின் கருத்துக்களைத் தொகுத்துத் தன் ஆய்வைப் படைத்தார்.

அரசமைப்பு வல்லுநர். திரு. கே. ஆர். பாம்வால் அவர்களது “இந்தியக் கூட்டாட்சியின் அடிப்படைகள்” என்ற ஆய்வு நூலில் காணப்படும் நடு நிலைக் கருத்துகளும், தமிழகத்தைச் சார்ந்த அரசமைப்பு அறிஞர் திரு. க. சந்தானம் அவர்களின் தெளிந்த ஆய்வு முடிவுகளும், ஓய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதிபதி. டாக்டர். இராசமன்னார் தலைமையில் நிறுவப்பட்ட மைய - மாநில ஆய்வுக்குழு அறிக்கையும் குறிப்பிடத்தக்கன,  இன்று இந்திய அரசியல் அரங்கில் மாநில சுயாட்சிக் கோரிக்கை, புது முறுக்குடன் எழுந்து நிற்கிறது.

1974 - ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டப் பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நான் முன் மொழிந்த நாளும், அந்தத் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பெற்ற நாளும் தமிழ் மாநில வரலாற்றில் மட்டுமின்றி, இந்திய நாட்டு வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க நாள்கள் என்று நான் பெருமைப்படுகிறேன் என்று பேரறிஞர் அண்ணா பேசினார்.  மண்டபத்தின் மேற்பகுதியில் பளு அனைத்தையும் வைத்து விட்டு, பலமற்ற தூண்களை மண்டபத்தைத் தாங்குவதற்காக அமைப்பது என்பது கேலிக்குரிய ஒன்று.  இன்றுள்ள மத்திய அமைப்பும் மாநில அமைப்பும் இந்த நிலையில் தான் உருவாக்கப்பட் டுள்ளன.  இதனை விவரித்து, விற்பன்னர் பலரும் மாநிலங்கள் அதிக பெற வேண்டு மென்பதற்கான சரியான வாதங்களை எடுத்து வைத்துள்ளனர். அவைகள்   அலட்சியப்படுத்தப்படக் கூடியவைகள் அல்ல.

பேரறிஞர் அண்ணா மாநிலங்கள் அவையில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.  அரசினுடைய 'இறைமை' (ஒப்புயர்வற்ற ஆட்சி அதிகாரம்) என்பதற்கு நாம் கொள்ளும் பொருள் என்ன?  அரசியல் இறைமையானது பொது மக்களிடம் நிலைத்துள்ளதென நமது அரசியலமைப்பின் முகப்புரை குறிப்பிடுகிறது.  சர்வாதத்யம் ,தனி முதன்மை, முழுமுதன்மை என்ற சொற்களை ஆராய்ந்து இறைமை, இறையாண்மை என்று சட்டச்சொல் மொழியாக்கம் பெற்றது.  சட்டம் சார்ந்த இறைமையானது கூட்டாட்சி ஒன்றியத்திற்கும் (மத்திய அரசு) அதன் அங்கங்களுக்குமிடையே (மாநிலங்கள்) முறையாகப் பிரித்துத் தரப்பட்டுள்ளது.  இன்னும் அதிகப் பயன்களை விளைவிக்கும் இறைமையைப் பெற்ற அங்கங்களாக, மாநிலங்களைத் திகழச் செய்வதற்கு அனைவரும் முயல வேண்டாமா!

முழுமையான இறைமை, குறிப்பிட்ட ஒரே ஓர் இடத்தில் எப்போதும் தங்கி விடுவதில்லை. "... நாம் ஒரு கூட்டாட்சியமைப்பை ஏற்றிருக்கிறோம்.  அரசமைப்பை உருவாக்கியவர்கள், ஒற்றையாட்சி அமைப்புக் கூடாது; கூட்டாசியமைப்பு முறை தான் வேண்டுமென்று விரும்பினார்கள்.  ஏனெனில், அரசியல் தத்துவஞானிகள் பலர் சுட்டிக் காட்டியபடி , இந்தியா மிகப் பரந்து கிடக்கின்றது.''

எஃகால் செய்த வரைவுச் சட்டத்தைப் போல் வலிவான ஓர் ஒற்றையாட்சியமைப்பை ஏற்க முடியாத அளவிற்கு, இந்நாடு மாறுபட்ட மரபுகளையும், வேறு பட்ட வரலாறுகளையும், பல திறப்பட்ட பழக்க வழக்கங்களையும் கொண்டுள்ளது."

நமது கூட்டாட்சி செயற்படும் தன்மையானது மாநிலங்களிடையே விரக்தி உணர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.  மாநிலங்கள், சுங்கத் தொகை வசூலிக்கக் கூடிய சாதாரண நகராட்சி மன்றங்களைப்போல் விரைந்து மாறி வருகின்றன.  அவை, இருக்கும் இடம் தெரியாமல் பின்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன.  அதிக அதிகாரங்கள் அளிக்க வேண்டுமென்ற இயற்கையான உணர்வுகள் மாநிலங்களிடம் தோன்றியுள்ளன.  நமது கூட்டாட்சியமைப்பின் இவ்வகையான நடைமுறை, மாநிலங்களை மேலும் மேலும் சோர்வடையச் செய்துள்ளது என்பதை நான் தெளிவாக்க விரும்புகிறேன்.  நமது அரசியல் சட்டம் ஆராயப்பட வேண்டும் - மறு ஆய்வும் செய்யப்பட வேண்டும் - இதனை மத்திய அரசு உணர வேண்டும் - என்பதே மாநிலங்களின் கோரிக்கையாகும் ...''

நாடாளுமன்றத்தின் அறிவுசான்ற உறுப்பினர்கள் (மாநிலங்களின்) இந்தச் சிக்கலை ஏன் விளக்க முயலக்கூடாது.  தற்போதைய கூட்டாட்சியை, ஒரு மெய்யான கூட்டாட்சியாக மலர வைப்பதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று அண்ணா வேண்டினார் .

துரிதமான நிர்வாகம்,
துணிச்சலான முடிவுகள்,
துள்ளியோடும் கோப்புகள்,
பயனளிக்கும் திட்டங்கள்,
பாதுகாப்பான சட்டம் ஒழுங்கு,
தொலைநோக்குப் பார்வை,
மக்கள் பங்குபெறும் நல உதவிகள்,
எளிமையான விழாக்கள்,
களப்பணியாற்றும் அலுவலர்கள்,
விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசாங்கம்,
விரைவு படுத்தப்படும் நீதி
ஆகிய அனைத்தும் சேர்ந்தால் மட்டுமே நிர்வாகம் நிமிரும், செழிப்பு சேரும், வளம் வாய்க்கும், புன்னகை பூக்கும், மகிழ்ச்சி மையமிடும் என்று குறிப்பிட்டது நெஞ்சைச் சிலிர்க்க வைக்கிறது.  நல்ல வலிமையான ஆட்சிக்கு நேர்மை நிருவாகத்துக்கு இந்திய ஆட்சிப்பணியின் அணிகலனாக விளங்கும் அறிஞர் இறையன்பு ஒரு வினாவுக்கு விடையளித்தார்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை.... 

நிறைவுற்றது 

- ஒளவை நடராசன்

------------------------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages