அற்புதக் கூத்து
இடுகை 1
பல அறிஞர்கள் மேனாட்டு அறிஞர்கள் உடபட, பாரதத்தின் அதிலும் குறிப்பாக சைவத்தின் நடராச பெருமானின் திருக்கூத்து வடிவத்தை ஆடவல்லான் வடிவத்தை, அது தன்னுள் அடக்கி இருக்கும் ஆழஞானத்தை ஓரளவு உணர்ந்து வியக்காதவர்களே இல்லை. எனது தத்துவக் கவிதைகளிலும் அழிவிலுண்மை எனும் பெரிய திருஞானப் பனுவலிலும் இதனைப் பற்றி நெடுக பாடியும் பேசியும் இருக்கின்றேன்
இப்பொழுது மீண்டும் அந்த திருகூத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் எழக்கூடிய ஆழ ஞானங்களை மகிழ வேண்டும் எனும் ஆர்வம் அகத்தெழுந்துள்லது, வந்துவிட்ட ஒர் உளச்சோர்வினைப் போக்கும் உத்தியாகவும் இது.
திருமூலர் தமது 9ஆவது தந்திரத்தில் திருக்கூத்து தரிசனம் என்ற பகுதியில் பல அற்புதமான பாடல்களில் இதனை பாடி இருக்கின்றார், அவற்றில் கடைசிப் பகுதியாக விளங்கும் அற்புதக் கூத்துப் பகுதிக்கு இன்னும் உரை எழுதவில்லை. அந்த எஞ்சிய பகுதிக்கும் உரை எழுதி மகிழ்வோமே என்ற நினைவில் இந்த தொடரை தொடங்குகின்றேன்
மூலம் பழநியப்ப பிரதர்ஸ் வெளியிட்டுள்ள G, வரதராசன் அவர்களின் பாடமும் உரையும்
உலகன் 17-9-13
அற்புதக் கூத்து
2763
குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம்
அருவுரு வாவது அந்த அருவே
திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்
உருவரு வாகும் உமையவள் தானே
உரை:
ஆம் நான் தொழ வேண்டியது ஆழச் சிந்திக்க வேண்டியது உருவாயும் அருவாயும் வெளிப்பட்டு நிறுகும் திரிபுரையாகிய பராசத்தியைத்தான், உமை அம்மையத்தான்
உடன் எனக்கு நினைவிற்கு வருவது ஏண் உடு அண்ணா எனும் அந்த சுமேரிய அம்மையார் எழுதிய ஈன்னனை சீர்பியத்தின் (கி. மு 2300) முதல் வரிதான்
நின் மெய் சர்வ உள் தெள்ளிய!
எல்லா மெய்களின் (தத்துவங்களின்) தலைவியாகிய(நின்) அம்மை தெள்ளிய ஒளியினாள்!
இந்த வரியைக் கண்டதுமுதல், அதன் பொருளை அறிந்தது முதல், அந்த அழகிய தொல்தமிழ் வரிகளை படித்தது முதல், கண்களில் நீர் ஆனந்தக் கண்ணீராக வழிந்தோடத்தான் தமிழ் ஞானத்தின் தொன்மையை அறிந்தேன் மகிழ்ந்தேன், மகிழ்ந்து கொண்டிருக்கின்றேன்
உடன் நான் ஒன்றை சொல்ல வேண்டும் : இது தமிழ் ஞானிகட்கு மாத்திரம் உரிய ஓர் தெரிசனம் அல்ல, உலகின் எல்லா ஞானிகளும் அனுபவித்த அனுபவிக்கின்ற ஓர் அற்புதமான தரிசனம் தான்.
ஆனால தமிழ் மொழியிலேயே உலகில் முதன் முதலில் பதிவு செய்யபட்ட்டது, அழகிய தமிழ் சொற்களால் வடிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை நாம் அறிய வர, அந்த சுமேருத் தமிழர்களின் வழித்தோன்றல்கள் என்ற முறையில் நாம் பெருமைபட்டுக் கொள்வதில் தவறில்லை,
ஆழ ஆழ பதிந்துவிட்டது பதிக்கப்படுள்ள தாழ்வு மனப்பான்மையிலிருந்து நம்மை விடுவிக்க இது பயன்படும்
இனி ஏன் குரு உருவன்றி குனிக்கும் (ஆழச் சிந்திக்கும்) வடிவமாக திருபுரையாகி திகழ் தரும் உமையம்மையாக இருக்க வேண்டும்?
மானிட குருவாக வந்தமையும் மாந்தர்களை நாம் வணங்கித் தொழுது தியானிக்கக் கூடாது. மனிதன் மனிதன் தான், தெய்வம் தெய்வம் தான். மும்மலத் தாக்கத்தால் பிறப்பெடுக்கும் ஓர் மாந்தன் எவ்வளவு தான் ஞானம் பெற்றாலும், அவன் தெய்வம் ஆகான். அவன் உள்ளத்தில் தெய்வம் இருக்கலாம். ஆனால் அவன் தெய்வம் அல்ல.
ஆக குருவாக யாரையும் ஏற்றுக் கொண்டு அவனுக்கு அடிமையாகி அவனை தெய்வமே என கும்பிடாதே, தெய்வத்தையே அதுவும் பராபரையாகிய உமையம்மையையே ஆழ சிந்திக்க வேண்டும், தொழ வேண்டும் என்கின்றார் திருமூலர்.
உடன் இப்படி இருக்க முடியாதே, குரு வழிபாட்டை வற்புறுத்தியவர் அல்லவோ திருமூலர் என்று மறுப்பு எழலாம். குரு வழிபாடு சிலருக்குத் தேவைப்படலாம். அகத்திலே நிலவும் ஓர் அச்சத்தால் துணிந்து புதியப் புதிய ஞான நிலங்கள் காணும் துணிவு இல்லாமையால், கண் முன்னே நிதரிசனமாகத் தோன்றும் ஓர் ஞான மாந்தனை குருவாக உயர்த்தி அவனை ஆழப் பற்றிக்கொண்டு ஓர் அமைதி காண்பவர்கள் உண்டு,
ஆனால் இவர்களால் உருவங்கள் அனைத்தைம் விட்டு அருவமாகிய ஒளி வடி தரிசனம் மகிழ முடியாது.
துணையாக வழிகாட்டியாக யாரும் வேண்டாம் எனக்கு இறைவனே போதும் அவனையே அல்லது அவளையே ஆழ சிந்தித்து தியானித்டு(குனித்து) மகிழ்வேன், அவளே காட்டும் அருவுருவாகிய ஒளி வடிவில் தெய்வத்தை கண்டு அற்புதமான ஆனந்தம் மகிழ்வேன் என்று தான் வாழ வேண்டும்
இதுவே திருமூலர் இப்படலில் சொல்ல வரும் கருத்து, உள்ளுறை பொருள் என்று நினைக்கின்றேன்
தொடரும்
உலகன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இடுகை 2
உலகின் எல்லா சமயத்தவர்களும் தான் ஏற்றுக்கொண்டு வாழும் சமயமே சன்மார்க்கம் என்று பறைசாற்றுவர். ஆனால் இந்த சன்மார்க்கம் தான் யாது? என்ற கேள்வி எழ, அடுத்து வரும் திருமூலரின் பாடல் நல்ல தெளிவு தருகின்றது
2763
திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவே
உருவரு வாவது முற்றுணர்ந் தோர்க்கு
அருள்வழி யாவதுமவ்வழி தானே
திருவழி என்றாலும் சம்பந்தர் பாடிய திருநெறி என்றாலும் திருமூலரே பிற இடங்களில் போற்றும் சன்மார்க்கம் என்றாலும் ஒன்றுதான். அப்படிப்பட்ட ஓர் நெறியைத்தான் நல்லவர்கள் அனைவரும் நாடிச் செல்கின்றனர். ஆனால் இதனைப் பற்றி கேள்விகள் கேட்டு உணமையான திருநெறி யாதென்றும் அறிந்து தெளிந்து அதன்வழிச் செல்வார் மிகக் குறைவே,
பிறப்பினால் எந்த சமயம் தன் சமயம் ஆகின்றதோ, அல்லது மதமாற்றத்தினால் எந்த சமயம் தன் சமயம் ஆகின்றதோ அதுவே திருநெறி திருவழி என்றெல்லாம் கொள்ளப்படும். தான் கொண்டிருக்கும் சமயத்தின் மேல் ஓர் வெறிபோன்ற பற்ரறு வந்துவிடுகின்றது. கோரமான சமயப் பூசல்களும் வெடிக்கின்றன
ஆனால் இங்கு திருமூலர் திருநெறிதான் யதென்று தெள்ளத் தெளிவாக வரையறை செய்து அதன் இலக்கணத்தை பகருகின்றார்.
இறைவன் இருக்கும் இடம் திருசிற்றம்பலம். சித்தாகிய தெள்ளிய உணர்வே எங்கும் வியாபித்து இருக்கும் அம்பலமே பரந்த வெளியே திருசிற்றம்பலமாகும். அங்குதான் இறைவனும் இருக்கின்றான. பல வடிவங்களில் இருக்கும் அவனை எல்லா வடிவந்களுக்குள் குருவடிவாக உள்ளதாக கொண்டு அந்த உள்ளுறை வடிவத்தையே குனிக்கும் அல்லது ஆழ தியானிக்கும் வழியே திருவழி என்கின்றார். ஒவ்வொரு இறைவடிவமும் ஞான போதமகம் பொருட்டு இறைவம் எடுக்கும் வடிவம் ஆகௌம், ஆழத்டில் அவனே குருவாக் இருக்கின்றான்
இது எல்லாருக்கும் உரியதாகிய நெறிதான் ஆனால் அனைவரும் அந்த உயர் நிலைக்கு உயர மிகவும் திணருவார்கள்,
இது உடன் நமக்கு மெய்கண்டாரின் எட்டாம் சூத்திரத்தை நினைவிற்கு கொண்டு வருகின்றது. அதில் இரண்டாம அதிகரணத்தில் ஓர் எடுத்துடுக்காட்டு:
எடுத்துக்காட்டு 8.2.1
மெய்ஞ்ஞானம் தானே விளையும் விஞ்ஞானகலர்க்கு
அஞ்ஞான அச்சகலர்க்கு அக்குருவாய் -- மெய்ஞ்ஞானம்
பின்
உணர்த்தும் அன்றி பிரளயா கலர்க்கு
முன்
உணர்த்தும் தன் குருவாய் முன்.
இங்கு ஆகமவுளவியல் சான்ற கருத்துக்க்ளைக் கான்கிண்றோம் ஆன்மாக்கள் அவர்கள் கற்கும் போக்கைக் கண்டு(கலர்) விஞ்ஞான கலர் என்றும் பிரளயாகலர் என்றும் சகலர் என்றும் வகைப்படுத்தப் படுவர்.
இங்கு சகலர் என்பார் ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களும் உடையவர்கள். பிரளயாகலர் மாயை நீங்கி மெய்ஞானம் யாது என்று விசாரிக்கும் திறம் வந்தவர்கள். விஞ்ஞானகலர் என்பார் ஆணவமலமே எஞ்சி இருக்கும் மலமாக இறைவனையே குருவாகக் கொண்டு சிவஞானம் தேடித் திரிபவர்கள் ஆகும்
சகலர்கட்கு இறைவடிவங்கள் போன்றவற்றில் இறைவன் குருவாக மறைந்து நின்று அல்லது பின் நின்று தொழ வைத்து அதன் வழி ஞானம் புகட்டுவான்
பிரளாயகலர்கட்கு ஞானபோதக ஆசிரியனாக ஓர் குருவாக முன் அமர்ந்து பல ஞான விசாரணைகளை முடுக்கி ஆழ சிந்திக்க வைத்து அதன் வழி சிவஞானம் புகட்டுவான்
ஆனால் ஆணவ மலமே எஞ்சியுள்ள விஞ்ஞானகலருக்கு அகத்தே ஞானம் தானே விளையுமாறு செய்து அவர்களை முற்றுணர்ந்தோர் ஆக்கி வீடுபேறு மகிழ அருள்பாலிப்பான்
மேலே நம் ஆய்விற்குரிய பாடலில், திருநெறி என்பது விஞ்ஞான கலருக்கு எப்படி அமையும் என்பதை திருமூலர் விளக்குகின்றார்.
இது நாம் மறந்து போய்விட்ட விசயமாகும். எங்கு பார்த்தாலும் குரு வழிபாடு. அடிமைப் படுத்தும் குருக்களும் அடிமைப்பட விரும்பும் கும்பிடுவாதிகளும் ஆக்கிரமிக்கும் சமயமாக இந்து சமயம் கீழிறங்கி விட்டது. மேலும் இது அரசியல் விளையாட்டும் ஆகிவிட்டது
இறை வடிவங்கள ஆரோபிதம் அத்டியாசம் ஆகவே கற்பிதம் என்றும் கூறி தெய்வங்களை இல்லாதாக்கிவிட்ட மாயாவாத வேதாந்த மார்க்கமே அந்த சூனியத்தை நிரப்பும் வகையில் காவி உடுத்திய சன்னியாசிகளை குருவாக அமைத்து தெய்வ வழிபாட்டை கீழே தள்ளி குருவழிபாட்டை முதனமை படுத்தி மக்களை அடிமைப் படுத்தியுள்ளனர் என்று நினைக்கத் தோன்றுகின்றது.
மனிதனை தெய்வமாக்குவதும் தெய்வத்தை மனிதனாக்குவதும் பெரும் தவறு. அது ஞான வளர்சிக்கு இட்டுச் செல்லவே செல்லாது.
தொடரும்
உலகன்
இடுகை 3
உணமையான சித்தர்கள் போற்றியது வாழ்ந்தது வேதாந்தம் அல்ல மாறாக மந்திராயணத்தை வற்புறுத்தும் நாதாந்தம் எனும் தரிசனமாகும். இந்த நாதாந்த கருத்து முதன் முதலில் பதிவாகுவது திருமூலரின் இந்த திருமந்திரத்தில் தான். கீழே வரும் பாடலிலும் இது விளங்குகின்றது
2764
நீருஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
ஓடும் உயிரெழுந் தோங்கி யுதிட்ட
நாடுமின் நாதாந்த நம்பெரு மானுகந்
தாடும் இடந்திரு அம்பலந் தானே
இப்பாடலில் நம்மை உடன் கவர்வது ‘நாதாந்த நம் பெருமான்” எனும் கிளவியாகும். நாதம் என்றால் மூல ஓசை தொனி என்றெல்லாம் பொருள்படும். நாதம் விந்து எனும் அடிப்படையான சிவ தத்துவங்களும் உண்டு,
நாதத்தின் அந்தமாகிய முடிவாகிய நாதாந்தம் ஓங்காரம் என்பாரும் உளர். அந்த ஓங்காரம் எனும் ஓரேழுத்து உணர்த்தும் ஞானத்தையே இறைவன் ஆனந்த கூத்தனாக அமமையோடு ஆடியவாறு மும்மலத்தால் தாக்குண்ட பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றான்.
உலகுக்கெல்லாம் மூல ஞானாசரியன் நம் கூத்தப்பிரான் தான். இதை உணராத அறிவிலிகளே ஓர் மானிடனைத் தேர்ந்து அவனை முடிவான தீர்க்கதரிசி என்றும் ஜகத்குரு என்றும் வீணாக தற்பெருமை பட்டுக்கொண்டு, அனைவரையும் இப்படிப்பட்டோருக்கு அடிமையாக்க முயல்கின்றனர்
மதமாற்ற எண்ணங்களும் அதனால் கோரமான மதப் பூசல்களும் வெடிக்கின்றன
எல்லா அசைவுகளுக்கும் மூல அசைவு ஓங்காரமாகிய இந்த நாதாந்த அசைவுதான். நடராச மூர்த்தத்தில் ஒடியாது துடிக்கும் துடி இந்த ஓங்காரத்தைத் தான் உணர்த்தும். இதுவே அந்த சின்னத்தின் உள்ளுறைப் பொரூள்.
சித்தர் திருவள்ளுவர், ‘ஞானவெட்டியான்’ போன்ற பெரும் சித்தர் நூலை எழுதியவர், 97 பாடல்களை உடைய ‘நாதாந்தத் திறவுகோல்’ எனூம் அற்புதமான மந்திராயண நூலை எழுதியுள்ளார். கால அநேகமாக் 16ஆம் நூற்றாண்டு
அதிலிருந்து ஓர்
பாடல்
5,
உச்சியின் இடமாய் நின்ற
உதையமாஞ் சோதிபாத
நச்சியே இருப்பான் அந்த
நாதாந்த வெளியிலேதான்
வச்சிர வெளி யானந்த
வாசியால் அடர்ந்த வன்னிக்கு
உச்சியால் உச்சத்தனைக்
குருவினால் தெரிந்து கொள்ளே
இங்கு உச்சி என்பது ஆறு ஆதாரங்களையும் கடந்த ஆயிரவிதழ் தாமரை சுடரும் திருத்தலமாகும். இதனை எட்டியோரே விஞ்ஞான கலர் எனப்படுவார். இவர்கட்குப் பரமசிவனே குருவாக வந்தமர்ந்து சோதிவடிவில் அகதே சுடர்ந்து சிவஞானம் புகட்டுவார். எஞ்சி இருக்கின்ற ஆணவம் இந்த சிவஞானத்தால்தான் போக்கப்படும்
எந்த மாந்தராலும் இருடிகளாலும் மற்றும் ஏனைய தெய்வங்களாலும் போதிக்க்ப்படாது சிவப்பெருமானாலேயே போதிக்கப்படுவதால் இது சிவஞானம் ஆகின்றது,
இதுவே ஞானத்டின் எல்லையுமாகும். இதற்கு மேலான ஞனாம் என்று யாதும் இல்லை,
அருட்பெருஞ்சோதியாய் சுடர்ந்தவாறு, என்றும் மாளாது வச்சிர வெளியில் ஆனந்தம் அல்லது பிற எவ்வித சுவையும் தோற்றாத தூய்மையின் தூய்மையை நிறுத்தும் அடர்ந்த் அக்நி தலம் அது,
இந்த உச்சிக்கும் உச்சியாய இருக்கும் ஓர் தலத்தில் (பிரம ரந்திரம்?) இருந்துகொண்டு தடிசிணாமூர்த்தி கோலத்தில் பரசிவன் எழுந்தருளி இந்த சிவஞானத்தை மௌன குருவாக சின்முத்திரை வழி போதித்துக்கொண்டே இருக்கின்றான
சிவசத்தி ஆனந்தக் கூத்தின் ஓர் கூத்டு வகையே ஞானக் கூத்தாகும். இது மூலத் தொனியாகிய அகாரமாகிய எழுத்தை அசைத்து அசைத்து கணக்க்கற்ற அக்கரங்களையும் அக்கர சக்கரங்களையும் தோற்றுவித்து அதன் வழி பல யந்திரங்களை உற்பவித்து அதற்கேற்ப பல தெய்வ மூர்த்தங்களையும் தோற்றி ஆடும் ஆட்டம் இது.
இதுவே சிவசத்தி யாடும் ஆனந்த சிவ தாணடவம். இதுவே மாந்தர்கள் ஓரளவு உணரும் வகையில் ஓர் கலையாக எழுந்த பரதநாட்டியம்
இந்த சொல் தூய தமிழ் சொல் ஆகும்/ ‘பரதம்’ என்றால் அசைவு (பர, பரவ)---- பாவம் ராகம் தாளம் என்ற மூன்று சொற்களின் முதல் எழுத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட சொல் அல்ல. அது கற்பனை வேர்சொல் ஆய்வு
‘நாட்டியம்’ எனும் சொல் சுமேருத் தமிழில் ‘நட; என்றே இருக்கின்றது.,
சிதம்பரமாகிய தில்முன் எனும் சுவர்க்கத்தில் ஏண்கி எனும் சிவன் நின்சுகில்ல(தூயவள்) எனும் அம்மையோடு புரியும் திருநடமே எல்லா இயக்கங்கட்கும் மூலம் என்று சுமேருத் தமிழ் இலக்கியங்கள் பகருகின்றன!
எவ்வளவு பழமையானது இக்கருத்து?
வியாப்பாக இல்லையா?
நான் வியந்துவியந்து மகிழ்ந்தவாறு அந்த சிந்தனையிலேயே ஆனந்தக் கூத்தாடியவாறு என் களைப்பையெல்லாம் போக்குகின்றேன்
தொடரும்
உலகன்
இப்படி எல்லாம் தடாலடியாக வார்த்தையை விட்டுவிடுவது சரியா?! ஒரே நேரத்தில் சுற்றிலும் சரமாரியாகக் குண்டுகளை வீசுகிறீர்.
அது மட்டுமல்ல ஐயா, இந்தக் கட்டுரையில் மட்டுமே ஏகப்பட்ட பொருட்பிழைகள் இருப்பதாகத் தெரிகிறது.
இது ஆய்வாகவே எனக்குத் தோன்றவில்லை.
குரு என்ற ஒரு சொல்லையே அவ்வளவு சுலபமாக விளங்கிக் கொள்ள முடியுமா?! திருமந்திரத்தில் உள்ள குருவைப் பற்றிய பாடல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டே பாருங்கள்.
திருமூலர் ஒரு பாடலில் சொல்வார்:
நான் திருமந்திரத்தில் சிவன் சிவன் என்று சொன்னதெல்லாம் என் குருநாதனான நந்தியைத்தான் என்று.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

இடுகை 4
இறைவன் மறைபொருள் அல்லது தன்னையே மறைக்கவல்லவன். பக்குவம் வரும்வரை அன்பர்கட்கு தன்னை அருட்பெருஞ்சோதியாகக் காட்டாது பிற வடிவங்களில் காட்டி பல ஞான போதகங்களை மெய்யாகுவான். அதனைப் பற்றி திருமூலர் கீழ் வரும் பாட்டில் பாடுகின்றார்.
2765
வளிமேல் மின்வில்லு வானக வோசை
தெளிய விசும்பில் திகழ்தரு வாறுபோல்
களியொளி யாறுங் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே
நல்ல ஓர் உவமையோடு வரும் எளிமையான பாடல். வானம் மேகங்களால் மூடப்பட்டும் காற்றினால் நிறைக்கப்பட்டும் அங்கு மின்னலும் பலவண்ணத்து வானவில்லும் இடியோசை போன்ற ஓசையும் திகழுமிடம்தான். ஆனால் அதே பொழுது இவை எல்லாம் இல்லாது தூய நீலவொளி வானமுமாக விளங்கும் தன்மையும் உடையது.
அதேபோலத்தான் இறைவனும்.
ஆறு ஆதாரத் தலங்கள் இருக்கின்றன. அவற்றில் மூலாதாரத்தில் கணபதியாக சுவாதிட்டானத்தில் அயனாக மணிபூரகத்தில் திருமாலாக அநாகதத்தில் உருதிரனாக, விசுத்தியில் மகேஸ்வரனாக ஆக்ஞையில் சதாசிவ மூர்த்தியாகத் தோன்றி, பின், உச்சிக் கமலத் தலத்தில் பேரொளி இரவிமதியாகத் தோன்றுகின்றான
ஆன்மாக்கள் விஞ்ஞானகலராகி அருட்பெருஞ்சோதியாய் இறைவனைக் காணும் திறன் பெருவதற்கு முன்னால பல்வேறு அங்கங்களும் கருவிகளும் பிறவும் சின்னமப் பொருட்களாய் விளங்கி உள்ளுறைப் பொருள் ஒன்றோ பலவோ உணர்த்தி நிற்க அதனை பெயர்த்து அறியுமாறு ஆன்மாக்களைப் படுத்துகின்றான் இறைவன்
இந்த இறைவடிவங்கள் எல்லாம் பொய்யல, உணமையே. ஆழமான மெய்ஞானம் ஒன்றின் சித்திர வடிவு. அதனை தொழுது வணங்கி பத்தி மேலிட அன்பு காட்டி நிற்க, அவ்வடிவம் ஆன்மாவை ஆட்கொண்டு அதன் உள்ளுறையாக புதைந்து கிடக்கும் ஆழ்ஞானத்தை ஆன்மா உணருமாறு அருள்பாலிக்கின்றது. முடிவில் புதையுருவாக இருக்கும் சோதி வடிவத்தைக் காட்டி சிவஞானம் போதிக்கின்றது
இது உண்மை என்றால், என் உள்ளத்தில் பல கேள்விகள் எழுகின்றன.
இந்த ஆறு ஆதாரங்களிலும் அதனைத் தாண்டி மேலேயுள்ள தலங்களிலும் தெய்வங்களே குடிகொண்டுள்ளன. உலகில் தோன்றியுளள எல்லாத் தெய்வங்களையும் இந்த மூர்த்தித் தலங்களில் ஒருவாறு நிறுத்தி விடலாம்.
ஆனால தெய்வம் அல்லாத ஆனால் சமயங்களில் விளங்கும் வடிவங்களை எந்த தலத்தில் எப்படி வைப்பது?
புத்த சமயத்தின் தியான புத்தர் சயன புத்தர் என்றெல்லாம் மானிடனாகப் பிறந்து மறைந்த சித்தார்த்தனின் வடிவங்களை எங்கே வைப்பது? அதேப் பொல மாவேந்தர்களாக திகழ்ந்த மகாவீரர் ரிஷபதேவர் ஆதிநாதர் போன்ற தீர்த்ங்கரர்களை எங்கே வைப்பது. அதேப் போல ஜகத்குரு என்று பாரட்டப்பட்டு தொழப்படும் ஆதி சங்கரை எங்கே வைப்பது?
தெய்வங்கள் அல்லாத இந்த மானிடர்களை தெய்வங்கள் ஆக்க முடியுமா? முடியாது என்றால் இந்த ஆதாரத்தலங்களில் அவர்கள் இல்லாது போவார்களே? அப்படி என்றால் அவர்கள் எப்படி சுயம்பிரகாசமாகக் சுடரும் இறைவனை அவ்வடிவில் ஆன்மாக்கள் உள்ளத்தில் எழுந்து சுடருமாறு செய்ய முடியும்?
முடியாது என்றால், அவர்களை ஏன் தொழ வேண்டும்?
இனி இவர்கள் தெய்வங்களாகிய மானிடர்கள். இந்த ஆறு ஆதாரக் கொள்கை தான் பொய் அதனை தூக்கி எறிய வேண்டும் என்று சொன்னால், அதுவும் ஏற்புடைத்து அல்ல,
ஆகமவுளவியல் பரிந்துரைக்கும் ஆழ்நுழைத் தருத்தேர்வு வழி ஓர் ஆன்மா எந்த ஆதாரத் தலத்தில் இருக்கின்றது என்பதை கண்டறிந்து கூற முடியும் என, அது ஓர் உலகியல் உண்மையாகின்றது.
அதனால் தான் மீண்டும் கூறுகின்றேன்: திருவழி திருநெறி சன்மார்க்கம் என்றெல்லாம் கூறப்படும் நெறியில் மானிடர்களை தெய்வம் ஆக்குதல் இல்லை, தெய்வங்களை மானிடர் ஆக்குவதும் இல்லை. தெய்வங்களையே தெய்வங்களாகத் தொழுது ஞானம் அருளப்பெற்று முடிவில் உச்சிக் கமலத் தலம் சென்று அருட்பெருஞ்சோதி தரிசனம் அருளப்பெற்று சிவஞானம் மகிழ்தலே யாகும்
தொடரும்
உலகன்
இடுகை 5
இந்த உலகை வைத்துத்துத்தான் இறைவன் ஆழத்தில் மூலத்தில் ஆடவல்லானாக இருக்கின்றான் என்று அறிய வருகின்றோம். பண்டே இந்த பரந்த விரிந்த பேரண்டத்தின் இயல்புகளை அறிந்தே இதற்கெல்லாம் மூல காரணமாக ஆனந்த கூத்து உதைத்தவாறு இறைவன் இருக்கின்றான் என்று உணர்கின்றோம். பிறக தக்க விசாரணை மூலம், நிதரிசனமாக இறைவனை அருட்பெருஞ்சோதியாய் ஒளிவடிவில் கண்டு மகிழ்கின்றோம்
இதனை எல்லாம் விளக்குவதாக அடுத்துவரும் பாடல்
2766
தீமுதல் ஐந்துரு திசையெட்டுங் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக் கப்புறம் ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடஞ்செய்யும் வாறே
தீமுதல் ஐந்துரு என்பது மிகப்பழைய கருத்து: நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்று தொல்காப்பியமும் கூறுகின்றது
திசை எட்டு என்பது இந்த பரந்த வெளியில் உளதாக இருக்கும் பொருள்களை நாம் வடக்கே தெற்கே கிழக்கே மேற்கே மற்றும் இடைப்பட்ட வடகிழக்கு வடமேற்கு தென்கிழக்கு தென்மேற்கு என்று எட்டுத் திசைகள் வழியாக நாம் சுட்டுணர்விற்றாய் இந்த அண்டத்தில் அடங்கிக் கிடக்கும் அனைத்டுப் பொருட்களையும் உணர்வதாகும்
இவற்றையே மேலே ஐம்புலன்களால் காணவரும் மேல் உரு அல்லது புறவுரு என்றும் இந்தப் புலகளுக்குப் புலப்படாது இருக்கும் கீழ் உரு அல்லது புதையுரு என்றும் இந்த உலகம் ஏரணச் சிந்தனையைத் தூண்டும் வகையில் பொய்யில்லா பேருண்மையாய் நிற்கின்றது.
இங்கு ஓர் அற்புதமான அழகிய ஆழமான பொருளை உடைய ஓர் கிளவி வருகின்றது: ‘ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்’ என்று அது வருகின்றது
இங்கு ஆய்தல் என்றால் என்ன?
வேதாந்திகள் போல நாம ரூப பேதங்களாக நாம் காணும் இவ்வுலகு வெறும் தோற்றந்தான், அத்தியாசம் ஆரோபிதம் கயிற்றை பாம்பெனக் காண்பது போல ஓர் மித்தியாக் காட்சி என்று ஒதுக்குவதுதான் ஆய்வதாக ஆகுமா? இந்த மாயா மயக்குகளிலிருந்து விடுபடுவதே அபவாதம் என்று கூறி ஓர் குரவன் உதவ இந்த மாயாமயக்காகிய அவன் அவள் அது எனும் அவை என்று பொதுவாக உலக மக்கள் அனைவரும் காணும் உலக காட்சியை விட்டு நீங்கிட, தான் உணமையில் பிரமம் என்ற ஞானம் உதிக்கும், அதுவே முத்தி அடைவது என்பர்.
கைவல்ய நவநீதம் எனும் புகழ்பெற்ற வேதாந்த நூலில், இவ்வாறு வருகின்றது
46.
அரவன்று கயிறு என்றாற்போல
ஆளன்று தறியென் றாற்போல
குரவன் தன் உபதேசத்தால்
கூறுநூல் வெளிச்சங் கொண்டு
புரமன்று புவனம் அன்று
பூதங்கள் அன்று ஞானத்
திர்மென்றும் பிரமம் என்றுய்ம்
தெளிவதே அபவாதம் தான்
இங்கு குரவன் தன் உபதேசத்தால் கூறு நூல் வெளிச்சம் என்பது உபநிடதங்களின் மகாவாக்கியப் பொருள், அதாவது ‘அகம் பிரமம் அஸ்மி’ ‘தத் துவம் அசி’ போன்ற வாக்கியங்களின் பொருள், அது கொண்டு வரும் ஞானத் தெளிவு
இந்த உலகை அவன் அவள் அது எனும் அவை என்றெல்லாம் அறிவது, கயிற்றை பாம்பென உணர்வது போல ஓர் கற்பித அறிவு. ஒர் பிரம்மஞானியாக ஓர் குரவன் மகா வாக்கியப் பொருள் உபதேசத்தால் இந்த மாய மயக்கு நீக்கி, அங்கே பரப்பிரம்மமே மெய்பொருளாக நிற்பதையும், ஆன்மாவும் உண்மையில் அந்த பிரம்மமே என்ற தெளிவும் மெய்யாகும் என்பதே இந்த பாட்டின் பொருள்
இந்த அபவாதத்தைத்தான் திருமூலர் “மாயை மாமாயை கடந்து நின்றார் கீழே மூலத்தின் நாயகனாக பரசிவன் அம்மையோடு இணந்து கூத்தாடியவாறு இருப்பதை ஆன்மாக்கள் கண்டுவக்கும்’ என்ற கூறுகின்றாரா?
இங்கு வேதாந்தமும் சித்தாந்தமும் அமைதி காண முடியா வகையில் மோதுகின்றன. இரண்டில் ஒன்றை நாம் தூக்கி வீச வேண்டும். எதை?எப்படி? ஏன்?
இந்த உலகம் பொய்யல, கயிற்றை பாம்பெனக் காண்பது போல ஓர் மித்தியா காட்சி அல்ல,
அவன் அவள் அது எனும் அவை என்பதாக உயர்திணை அஃறிணை என்றும் ஒன்றென்றும் பலவென்றும் உணரப்பட்டு சுட்டறிவாக விளங்கும் இவ்வுலகு தோன்றி நின்று அழியும் இயல்பிறாகவும் விளங்குகின்றது. சுட்டுணர்வாகிய பொருட்கள் காலம் வரும்போது அழியும் என்று உணர்வது பொய்யறிவு அல்ல, கயிற்றை பாம்பென அறிவது போல ஒன்றல்ல,
உலகம் இப்படி ஏன் மெய்யாக இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழ, ஓர் ஆன்மா தனது உலக அறிவையே ஆய்வுப்பொருளாகக் கொள்ள, அதனால் அறியாமை நீங்கி பொறிலியப் பார்வை நூலியப் பார்வை நுதலியப் பார்வை பரப்பார்வை அதீதப்பார்வை சிவப்பார்வை போன்ற மேலான பார்வைகளைப் பெற்று, கீழே கீழே மூலத்தில் இறைவன் சிவசத்தியாய் ஆனந்தக் கூடுவாதை கண்டு உவப்பர்,
இவ்வாறு கண்டு உவக்கும் ஆன்மா ஆடும் சிவசத்தி ஆகாது. ஒறைபமோடு முற்ரிலும் ஒத்டு ஆடும் ஆனால் இறைவன் ஆகாது
இந்த ஆடும் சிவசத்தியும் ஆரோபித ஆதாரமாக விளங்கும் பரப்பிரமம் ஆகாது.
வேதாந்திகள் இறைவனையேக் காணாத குருடர்களாவே விளங்குகின்றனர். இவர்கள் குரைவர்களாக் ஜகத் குருவாக அமைந்தால் குருடன் ஒன்னொரு குருடனை வழி நடாத்துவது போலத்தான், இப்படிப்பட்ட வேதாந்த நெறி திருமூலர் கூறும் சப்னார்க்கம் ஆகாது
இப்படித்தான் எனக்குத் தோன்றுகின்றது, அதனைத் துணிந்து சொல்லியும் வைக்கின்றேன்
தொடரும்
உலகன்
இடுகை 6
பல சித்தர் பாடல்கள் மேற்காக பார்க்கும் போது மிக எளிதான பாடல்களாக விளங்கும். ஆயினும் ஆழ சிந்திக்க அது உணமையல்ல என்று அறிய வருவோம். அந்த எளிமை தோற்றத்தில் ஓர் அற்புதமான ஆழம் இருப்பதை உணர்வோம். இப்படிப்பட்ட ஆழத்து பொருளைத் தான் உள்ளுறைப் பொருள் என்றும் அதனை உள்ளுறைப் பொருளியல்( Hermeneutic Semiotics) எனும் ஓர் ஆய்வுத் துறை யாக்குகின்றோம்.
‘
இது அடுத்து வரும் பாடலுக்கு மிகப் பொருந்தும்
2767
கூத்தன் கலந்திடுங் கோல்வளை யாளொடுங்
கூத்தன் கலந்திருங் கோதிலா ஆனந்தங்
கூத்தங் கலந்திடுங் கோதிலா ஞானத்துக்
கூத்தனுங் கூத்தியுங் கூத்ததின் மேலே
இப்பாடல் உடன் எனக்கு சுமேருத் தமிழ் சுவர்க்கபுரிப் பாடலை ( Paradise Hymn) நினைவு படுத்தியது. அங்கும் ஏறக்குறைய இதேக் கருத்துதான். அதன் சில வரிகளை இங்கே தருகின்றேன்,
>>>>>
7. as-ni-ne
(alone) dilmun (KI)-a (in Dilmun) u-ne-in-nad (they lay)
8. ki (The place) *en-ki (where Enki) dam-an-ni-da (with his
wife) ba-an-da-nad-a-ba (laid himself down)
9. ki-bi (that place) sikil-am (is clean) ki-bi (that place)
za(lag)-zalag-ga-am (is bright)
10. ki (the place) *en-ki (where Enki) nin-sikil-la (with
Ninsikilla) ba-an-da-nad-a-ba (laid himself down)
7. ஆஸ்நினே தில்முன் ஊனே நடியின்
8. கீழ் ஏண்கீழ் தாரம்- ஆனித்த பண்ணிடு நட அப்ப
9. கீழ் சுக்கில் ஆம் கீழ்பி சலங்குசலங்கு ஆம்
10. கீழ் ஏண்கீழ் நின்சுக்கில்ல பண்ணிடு நட அப்ப
>>>
இங்கு ‘nad’ எனும் சொல்லை பிழையாக மொழிபெயர்த்துள்ளனர். இது உறுதியாக தமிழ் ‘நட, நடி” என்ற சொல்தான, இந்த வேரிலிருந்தே ‘நடம், நடனம்’ என்ற சொற்களும் இன்னும் பலவும் வந்துள்ளன.
ஆக இக்கருத்து மிகப் பழமையானது, சுமேருத் தமிழ் காலத்திலிருந்தே வருவது
ஆயினும் பொருள்தான் என்ன? அதுவும் கூத்தனுங் கூத்தியுங் கூத்ததின் மேலே” என்றால் என்ன?
கூத்தியாக விளங்கும் உமை அம்மை உலகில் விளங்கும் பெண்மை நலதிற்கெல்லாம் மூலம. அதேப் போல கூத்தன் ஆன்மையின் நலத்திற்கெல்லாம் மூலம். ‘கோல் வளை’ வட்டமான வளையல், பெணமையின் சின்னம் ஆக இதுவே சிவத் தத்துவங்களில் ஒன்றாகிய விந்து. கூத்தி அந்த விந்துவே தானாக நிற்கும் இறைவன். இதனால் கூத்தன் நாத தத்துவம் தானேயாய் நிற்கும் இறைவன் ஆகின்றான்.
உலக உயிர்கள் அனைத்தும் ஆண் என பெண் என தோன்றுதற்கு காரணமே இவ்வாறு நாத விந்துக்களோடு ஒன்றித்து கூத்தன் கூத்தியாக இறைவன் எழுந்து ஆடுவதுதான்
இந்தக் கூத்தனாக ஆணும் கூத்தியாகியப் பெண்ணும் உடலோடு உடலும் உயிரோடு உயிரும் கலக்கும் போது ஆனந்தம் வருவதும் உணமைதான், இது எல்லா உய்ரிகளின் அனுபவமும் ஆகும்
ஆனால் அதெப்படி இந்த ஆண் பெண் புணர்ச்சியில் ஞானம் பிறந்திடும் என்பது?
ஞானம் என்பது தானே விளைவதும் அல்ல, ஞான சாத்திரங்களை வேதம் ஆகமம் போன்ற சுருதிகளை ஓதுவதால் மாத்திரம் வருவதல்ல. எவ்வளவு சிரத்டையோடு இவற்றை கேட்டும் மனனம் செய்தும் ஆழச் சிந்தித்தாலும் உடன் ஞானம் விளைந்துவிடாது.
ஞானம் என்பது குண்டிலினி சத்தியின் திரிபாகும். ஆணுமாய் பெண்ணுமாய் காதலில் கட்டுண்டு வாழ உடல் புணர்ச்சியின் உளத்துப் புணர்ச்சியின் எழுவதே குண்டலினிப் பாய்வு, இந்த அற்புதமான ஆற்றலே ஞானமாக பரணமித்து அகத்தே சுடர்ந்து வாலறிவாக எழுந்து அகத்தேச் செறிந்திருக்கும் அறியாமை இருளைப் போக்குகின்றது.
இந்த அறியாமை நீக்கத்தால் எழும் அறிவின் தெளிவே ஞானமாகி முடிவில் சிவஞானமாக சுடர்கின்றது
ஆயின் பின் ஏன் இருவரும் ‘கூத்ததின் மேலே’ என்று திருமூலர் பாட வேண்டும்?
குண்டலினி ஈட்டத்தின் கூத்து காமக் கூத்து, காதல் கூத்து. அது ஞானத்தை ஈட்டித் தர, ஞானமும் வளர்ந்து சிவஞானம் ஆக, கூத்தும் காமக் கூத்தாக அல்லாது எல்லா உயிர்கட்கும் பேதங்கள் பார்க்காது அன்பு காட்டும் அருள் காட்டும் ஓர் சிவானந்தக் கூத்தாகின்றது,
குண்டலினி ஈட்டத்தின் காமக் கூத்திற்கு மேலாக எல்லாம் ஆன்மாக்களும் ஆடக் கூடியது அருள் கூத்து எனும் ஆனந்த சிவத் தாணடவம். சிவனுக்கும் சத்திக்கும் காமம் இல்லை--- அவர்கள் அணுத்துவப்பட்ட உயிர்களிடையே இன்பமும் ஊக்கமும் தர, காமத்தை உற்பவிக்கின்றனர், அதில் சந்தான விருத்தியையும் புதைக்கின்றனர். ஆனால் சிவசத்தியை பிணைப்பது காமம் அல்ல என்று மாறா ஆழமான காதல் அன்பு. அந்த அன்பு மேலோங்கி நிற்க, மும்மலத்தில் சிக்குண்டு தவிக்கும் எல்லா ஆன்மாக்களையும் சுத்தமாக்கி வீடுபேறு மகிழ வைக்க அவர்கள் ஆடுவதே இந்த மாபெரும் ஆனந்த சிவத் தாண்டவம்
இது இப்படி இருக்க, காமத்தை வெறுத்து அதனை புதைத்து அழுத்தி இல்லாது ஆக்கும் வீணான முயற்சியின் பளபளக்கும் காவி ஆடையின் துறவு எதற்கு?
இந்த காம வெறுப்பின் துறவு இறைவனை அறியாத்தால் வருவது, இதனால் இறைவன் இல்லாத புத்தமும் சமணமும் துறவினை வற்புறுத்தின. இதனால் இறைவன் இல்லாத வேதாந்தமும் துறவினை வற்புறுத்தி மக்களுக்கு பிழையான வழியைக் காட்டி நிற்கின்றது
தொடரும்
உலகன்
இடுகை 7
சிவத் தாண்டவக் கருத்து மிகப் பழமையானது. வேதங்களுக்கும் முற்பட்டது. அது சுமேருத் தமிழ் இலக்கியங்களில் ஒன்றாகிய சுவர்க்கபுரி பாடல் ( Paradise Hymn) என்பதில் நலமே விளங்குகின்றது. இடைச் சங்க நூற்கள் நமக்கு இன்றளவு கிட்டாது போக, அந்த தொடர்சியினை நம்மால் வரலாற்றுப் பூர்வமாக காணமுடியவில்லை, ஆயினும் ஓர் தொடர்ச்சி இருப்பது உண்மையென சுமேருத் தமிழ் இலக்கியங்கள் வழி காண்கின்றோம்
2768
இடங் கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலுந் தாமாய்நின் றாடுகின் றானே
இப்பாடலில் என்ன கூற வருகின்றார்?
முதலில் நாம் காணவேண்டியது, இப்பாடல் விரிக்கும் திருநடம் இவர் கேள்விப் பட்டோ நூற்களில் படித்தோ கண்ட ஓர் உண்மை அல்ல. ஞானக் கண் திறக்க இவரே நிதரிசனமாக கண்ட அற்புதக் காட்சியே இந்த சிவசத்தி ஆனந்தத் தாண்டவம்
இடங் கொண்ட சத்தியாவது, சிவபெருமானின் இடப்பக்கம் சரி பாதியாக நிற்கும் அம்மை, இதனால் இறைவனை அம்மையப்பர் என்றும் மாதொருபாகன் என்றெல்லாம் ஆக்கும் நிலை, பெணமையும் ஆண்மையும் சரிபாதியாக கலந்து நிற்கும் நிலை. இதனால் உயிர்களாகிய நம் உடம்பில் இடது பக்க உடம்பும் வலது பக்க மூளையும் அம்மை மேம்பட்டிருக்கும் இடங்கள் ஆகின்றன
ஆயினும் எதற்காக இந்த அற்புத ஆனந்த சத்திசிவத் தாண்டவம்?
உலகத்து எல்லா உயிர்களும் படங்கொண்டு அறியாமையில் கிடக்கின்றன வாம்.
அது என்ன படங்கொண்டு கிடத்தல்?
அறியாமை எனும் திரையை, படத்தைக் கொண்டு அஞ்ஞான இருளில் கிடப்பது. இவரே பிற இடங்களில் கூறியுள்ளதுபோல, இந்த படம் ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலமாகும். உயிர்களை இந்த அஞ்ஞான இருளில் வீழ்த்துவது திருமூலரே கூறியுள்ளது போல மும்மல காரியம்
அதனை அடக்கி உயிர்களின் அகத்தே விளங்காது செய்வதற்காகவே இந்த அற்புதமான சிவத் தாண்டவம்!
இங்கு வியப்பு என்ன வென்றால் ஏற்கனவே இதே காரணம் தான் இந்த பிரபஞ்சக் கூத்திற்கு காரணமாக சுமேரிய சுவர்க்கபுரி பாடலிலும் பகரப்படுகின்றது
13. ur-gu-la (The lion) sag-gis-nu-ub-ra-ra (slew not)
14. ur-bar-ra-ge ( the leopard?) sil (the lamb) nu-ub-kar-ri
(carried not away)
15. ur-ku (the dog) mas-ga(m)-gam ( the crouching kids)
nu-ub-zu (knew not)
13. ஊர்கொல்ல சாங்கிஸு நா உப்உ அரி அரி
14. ஊர்பாரக்கே சினை நா உப்உ கரியே
15. ஊர்கூவ் மாஸ்கம்கம் நா உப்உ சூஉ
உயிர்கொல்லியாகிய அரிமா, பிற மிருகங்களை வேட்டையாடுதல் இலையாம இந்த தில்லையம்பதியில். மேலும் சிறுத்தைகள் ஆடுகளைக் கவர்வதில்லையாம். மேலும் கொடூர நாய்கள் ஆட்டுக் குட்டிகளை அறியாது விடுகின்றனவாம்
இப்படி கொடூர மிருகங்கள கூட சாதுவாகி அன்பேக் காட்டுகின்றன, இந்த தில்லையம் பதியில் நடக்கும் நடனத்தால் என்று இங்கு குறிக்கப்படுகின்றது.
மேலும் மாந்தர்களிடையே எவ்வித நோயும் இல்லாது போகுமாம்.
இந்த தில்லையம்பதி , தில்முன் அனைவரும் அணையக் கூடிய இடம். ஆனால் அது எளிதில் கிட்டக்கூடிய ஒன்றல்ல. ஆனால் யாருக்குக் கிட்டுகின்றதோ அவர்கள் சீவமுத்தராக நீடுவாழ்வர் என்பதாக தொடக்க வரிகளே சுட்டுவதை நாம் காணவேண்டும்.
3. ki-ku-ga( a pure place) e-ne (they (to whom) ba-am (it is given)
me-en-ze-en
எவனுக்கு (e-ne) இந்த தெய்வீக நிலத்தின் நுழைவு ( ki-ku-ga) அருளப்படுகிறதோ ( ba-am: ba=பா: பாத்தல், தருதல்). நீடு மன்னுவர் ( me-en-ze-en: மன் சேயன்)
இங்கு "மன்சேயன்" என்பதில் 'சேய்மை" என்று தொலைவினைக்காட்டி நெடுங்காலம் என்பதைச் சுட்டுவதாகலாம். அல்லது "சென்" என்று கொண்டு 'செம்மை' 'செவ்வை" என்றும் கொள்ளலாம். ஆயினும் இந்த உடலோடு இருக்கும்போதே நலமே செவ்வே நெடுங்காலம் வாழலாம் என்பதே குறிக்கப்படுகின்றது என்பதை இந்த நுழைவு பெற்றார் கண்வலி தலைவலி என்பனபோன்ற நோய்கள் இல்லாது வாழ்வர் என்று வரும் வரிகள் 18-19 சுட்டுவதைக் காண்க. இனி நீண்ட ஆயுளே வற்புறுத்தபப்டுகின்றது என்பது முதுமை அடைந்தோரும் தான் முதுமை அடைந்ததாகக் கூறார் என்று சொல்வதின் வழி மிகத் தெளிவாக விளக்கப்படுவதைக் காண்க. வரி 20, தமிழ் என்று யாரும் மறுக்க முடியாவகை இன்றும் நலமே பயிலும் சொற்களோடு திகழும் வரியும் ஆகும்.
20. um-ma-bi (an old woman there)
um-ma-me-en nu ((said)( not " I am an old woman') ab-ba-bi ( an old man
there ) ab-ba-me-en nu ( (said)not 'Iam an old man"
ஆக தில்லைமன்று இளமையைக் காப்பது முதுமையைத் துரத்துவது என்று விளக்கப்பட, இது சித்தரியக் கருத்து என்று கொள்வதில் தடை யாதும் இருக்கமுடியாது.
சைவர்கள் இதனையே என்றும் பதினாறாய் வாழ்வது என்று இன்றளவு சொல்லிக்
கொண்டிருக்கின்றனர்.
எவ்வளவு பழமையான கருத்து இது? மிக வியப்பாக இருக்கும் ஒன்றுதான். நெடுங்காலம் அழியாது இருக்க, அது உணமையும் ஆகும் போலும்
தொடரும்
உலகன்
இடுகை 8
சைவ சித்தாந்தம் பல ஆழமான உளவியல் விளக்கங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. சிவலிங்க வழிபாட்டை பண்டே ஓர் மையமான வழிபாட்டாக கொண்டிருக்கும் சைவம், காமத்தைப் பற்றி மற்றும் உயிர்களின் ஆனந்தங்களைப் பற்றி மிக விரிவாக ஆழமாக சிந்துள்ளது. அது கீழே வரும் திருமூலர் தம் அழகிய பாட்டில் ஓரளவு வெளிப்படுகின்றது.
இங்கு காமத்தின் வரும் இன்பங்களை விரிப்பதோடு, காமத் தூர்ப்பால் வரும் பேரின்பமும் விளக்கப்படுவதாகத் தெரிகின்றது
2769
சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாஞ்
சத்தி வடிவு சகளத்து எழுந்து இரண்டு
ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே
இதன் பொருள் என்ன?
உயிர்கள் உடம்பெடுத்து உலகில் வாழும்போது அனுபவிக்கின்ற எல்லா வகையான ஆனந்தங்களும், இன்பச் சுவைகளும் குண்டலினி சத்தியின் பல்வேறு வடிவங்கள் தாம், திரிபுகள் தாம். இது காம இன்பம் மாத்திரம் அல்ல, உலகில் இன்பத்தைத் தரும் அழகுணர்ச்சிகள் அனைத்தின் வழியாக பெறப்படும் இன்பங்களும் இந்த குண்டலினி சத்தியின் திரிபுகள் தாம்.
இதனைத் தான் திருமுலர் பிற இடங்களில் சத்தி நிபாதம் என்று கூறி அதனை மந்தம் மந்ததரம் தீவிரம் தீவிரதரம் என்றெல்லாம் வகுப்பர்.
இவற்றில் ஆழமான மனநிறைவைத் தருவது , அதாவது ஒத்த ஆனந்தம் ஆண்களுக்கு உமை அம்மையின் திருமேனியாக விளங்கும் பரவிந்துவினால் வருவதாகும். ஆகவே பெண்களுக்கு வருவது சிவபெருமான் காட்டி நிற்கும் ஆண்மையின் நாத தத்துவத்தால் வருவதாகும்
இனி பிரபஞ்ச வாழ்க்கை சகளம் என்று நிட்களம் என்றும் இருவகைப்படும் இவற்றில் சகளமாவது மும்மல தாக்கங்கள் இன்னும் இருக்கும் வகையில் வாழப்படும் வாழ்க்கையாகும். நிட்களமாவது இந்த மலங்களின் தாக்கத்திலிருந் விடுபட்டு சுத்தமாகி நிமல சொரூபங்களாக எழுந்து உடலோடு இருக்கும்போதே பரலோக சிந்தையில் ஆழப்பதிந்து வாழ்வது.
இனி சகளத்து வாழ்க்கையில் காமம் இருக்க அதனால் வரும் பலவகையான இன்பங்களும் இருக்கும்.
காமம் இங்கு எப்படி வருகின்றது?
ஆணெனப் பிறக்கும் உயிரில் நாதம் மிக்கிருக்க விந்து குறைந்திருக்க, ஆண்மை எடுக்கும் பிறப்பில் வருவதோடு விந்துப் பசியும் உடன் வர, அந்த விந்துப் பசியே காமப் பசியாக விளங்குகின்றது.
பெண்ணெனப் பிறக்கும் உயிர்கள் விந்து மிக்கிருக்க நாதம் குறைந்திருக்க, பெண்மை எடுக்கும் பிறப்பில் வருவதோடு, நாதப் பசியும் வர, அந்த நாதப் பசியே பெண்களுக்கு காமப்பசியாக எழுந்து அவர்களை அலைக்கழிக்கின்றது
இனி இரண்டும் ஒத்த வடிவு எது?
உயிரில் நாதமும் விந்துவும் சமமாகிட, விந்துப் பசியும் நாதப் பசியும் தூர்க்கப்பட, காமவேட்கையே எழாது போகின்றது, நாதமும் விந்துவும் சம அளவில் இருக்க நாதப் பசியும் விந்துப்பசியும் இல்லாதுபோக காம வேட்கையே இல்லாது போகின்றது.
இதுவே நிட்கள வாழ்க்கை--- பரலோகச் சிந்தனையின் சிவஞானம் தேடி வாழும் வாழ்க்கை.
இந்நிலையில் உயிர்கள் வாழும் வாழ்க்கையே ஆனந்த சிவத்தாண்டவ வாழ்க்கை,, அனபேத் தானாக எழுந்து இறைவனோடு முற்றிலும் ஒத்துப்போய் செய்வதெல்லாம் சிவச்செயலேயாக துய தொண்டேயாக வாழ்வது.
காமமே அகத்து இல்லாது போக, பெண்கள் ஆண்களைக் கண்டு அஞ்சுவதும், ஆண்கலள் பெண்களைக் கண்டு அஞ்சுவதும், காவி உடுத்தி அதனை உலகறிய பறைசாற்றுவதும் தேவை படாது போகின்றது.
இப்படிப்பட்ட காமத் தூர்ப்பு மனித யத்தனத்தால், உணவு கட்டுப்பாடு விரதம் யோகம் போன்ற பயிற்சிகளால் வருவதல்ல,
இறையருளால் மாத்திரம் மலர்வது.
எங்கு இறைவன் உண்டு என்றும் அவ்விறை நாதவிந்த்துக்களை அசைத்து அசைத்து ஆட்டுகின்றான் என்றும் அறியாதிருக்கின்றார்களோ அவர்களால் காமத் தூர்ப்பு அடையப் பெற்றாலும் அத எப்படி வந்தமைந்துள்ளது என்று அறியாதே இருப்பர்.
புத்தர்கள் சமணர்கள் வேதாந்திகள் இப்படிப்பட்டோர் என்றே நினைக்கின்றேன். அவர்கள் சந்நியாசத்தை முதன்மைப் படுத்தினாலும், அது எப்படி அமையும் என்று அறியாதே ஆக ஓர் அஞ்ஞானத்திலேயே இருக்கின்றனர் என்று தோன்றுகின்றது
தொடரும்
உலகன்
Dear Sir, Thank you very much for throwing light on my Understanding of Saiva Sidhantha. What is quite amazing to me is that all these inner minute details are known to every Saiva Sidhanthees. I do have missed few classes in the Saiva Sidhantha and when I intracted with my Guru Dr.SP. Arunachalam, retired Prof. of Tamil and Coordinator for Saiva Sidhantha Courses Devakottai, I got excellent points in this regard which made me think that how mankind was so sophisticated in the analysis of Body, Soul, Maya, Athitithal, that endeavours answering Who am I?, Who is infront of Us/ Who is Governing these laws?What is Athitithal, Mumalam, Inthozhil, 36 Thathuvams, quite amazing.Thanks once again
...
[Message clipped]
இடுகை 9
இந்திய சிந்தனை பாரம்பரியத்தில் தெரியங்களோடு (theories) சாதனங்கள் மிக அதிகம். அவற்றில் தியானம் போன்ற யோகப் பயிற்சிகளும் பல. இங்கு மிகப் பழங் காலத்திலிருந்தே சைவம் யோக வழியில் சென்றுள்ள ஓர் சமயமாகும். திருமூலரும் திருமந்திரத்தில் இதனைப் பற்றி மிக விரிவாக ஆய்ந்து பல கூறியுள்ளார்.
கீழே வரும் பாடலில் சத்திசிவத் தாண்டவத்தின் ஓர் கூறாக தியானம் என்பதை விளக்குகின்றார்.
2770
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்றுப் பார்க்க வொளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாய் பரமன் இருந்திடஞ்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே
ஆன்மா பரமனாக பரசிவன் இருக்கும் இடமாகிய சிற்றம்பலம் யாதென்று அறிந்து இறையருளால் அவ்விடம் சேர்ந்து வீடுபேற அடையமுடியும் என்கின்றார் திருமூலர். இது ஏதோவோர் மறைநூலில் அறிந்த விசயம் என்று கூறாது, தன் சுய அனுபவம் என்றும் கூறுகின்றார். இதனால யாராலும் திருசிற்றம்பலம் யாதென்று கண்டு இறைவனோடு இணைந்து ஒன்றாகி வீடுபேறு மகிழவும் முடியும் என்கின்றார்
இங்கு சாதி வர்ண பால் பேதங்களை எல்லாம் கடந்து ஓர் ஆன்மா சிற்றம்பலம் கண்டு புகுந்து இறைவனோடு ஒன்றித்து வாழமுடியும் என்று கூறுவதைக் காண்க.
ஆனால இது தானே அமையாது. அதற்கு ஓர் தக்க சாதனப் பயிற்சி வேண்டும்
அண்ட சராசரத்தின் தோற்றத்திற்கெல்லாம் மூலமாகிய திருசிற்றம்பலம் நம் சிரசிலும் இருக்கின்றது.
எங்கே எனில், நெற்றிற்கு நேரே புருவத்து இடைவெளி என்கின்றார் திருமூலர். இதனையே மெய்கண்டார் இலாடத் தானம் என்பார்.
அது என்ன இலாடத்தானம்?
வாலறிவு என்றும் தெள்ளறிவு என்றும் மாணறிவு என்றும் நாம் கூறும் எவ்வித மறைப்புபும் அஞ்ஞான இருளும் இல்லாத தெள்ளிய ஞானம் சுடரும் மூளையின் நுதல்விழி இருக்கக்கூடியப் பகுதி.
நம் உயிர் சாதாரண முறையில் ஐந்து அவத்தைகள் படும்--- சாக்கிரம் சொப்பனம், சுழுத்தி துரியம் துரியாதீதம் என்று, இவ்வாறான அவத்தைகளில் நாம் அறியவரும் விசயங்களை இந்த இலாடத்தானத்திற்குக் கொண்டு வந்து தெள்ளறிவு ஆக்கி அங்கே சுடரச் செய்தால் அங்கு அருட்பெருஞ்சோதியாக ஒங்காரம் சுடரும்
அந்த ஓங்காரத்தோடு ஒன்றித்து பரமன் ஒளிவடிவாய் தரிசனம் தருவான். பிற பற்றுக்களை எல்லாம் போக்கி தானே பற்றறுதற்குரியப் பொருளாய் நின்று இறைவன் ஆன்மாக்களை ஈர்க்க ஆன்மாக்களும் இறைவனோடு ஒன்றித்துத்து அவனே தானாக அமர்ந்து சிவாநந்தம் புசிக்கும்
இந்தக் கருத்டை மெய்கண்டார் மிக விரிவாகவும் நுட்பமாகவும் தனது நாங்காம் சூத்திரத்தில் விளக்கி உள்ளார். அதில் மிகவும் சிறப்பானது கீழே வரும் எடுத்துக்காட்டு ஆகும். அதனை என் உடையோடு இங்கே
எடுத்துக்காட்டு 4.3.2
இலாடத்தே சாக்கிரத்தை எய்திய வுள்ளம்
இலாடத்தே ஐந்தவத்தை எய்தும் -- இலாடத்தே
அவ்வவ் இந்திரியத்து அத்துறைகள் கண்டதுவே
அவ்வற்றின் நீங்கலது வாங்கு.
இதன் பொருள்:
இலாடத்தே (தெளி)சாக்கிரத்தை எய்திய உள்ளம்:
புருவ நடுவாகிய ஐயம்
திரிபு போன்ற
யாதுமில்லாத தெளிஞானத்தின் இலாடதானத்தே, மறைகள் விளங்கும் ஞானங்களை எல்லாம் தெளிஞானமாக்கி மாணறிவுகளாகப் பெற்று மகிழ்ந்தவாறு ஆன்மா இருக்கும் என்பதாம்.
அதாவது, சாதாரண
சாக்கிராவத்தைக்கு மேலான
சிந்தனைத் தெளிவின் வரு தெளிசாக்கிரமே பிற
அவத்தைகளைவிட , விழித்தவாறே அனுபவிக்கத் தருதலின், மிகவும் சிறப்புற்றிருப்பதாம். இந்நிலைக்கு எஞ்ஞானம் கொண்டு
வரப்படுகின்றாதோ, அதுவே
ஆன்மாவின் உடமைப்பொருளாக, அந்நியமிலாது அதுவே ஆன்மாவாக நிற்கத் தருவதாம். இப்படிப்பட்ட தெளிசாக்கிரத்தை அடைகின்ற ஆன்மா;
இலாடத்தே ஐந்து அவத்தை எய்தும்:
இத்தானத்தில், உலகத்
தொந்தனையிலிருந்து கழன்றிருப்பதால் வரும்
மேலான விழிப்பு நிலையில் இருந்துகொண்டு, பிறபிற அவத்தைகளில் எழும் ஞானங்களை அவற்றின் மறைபோக்கி, தெளிவாகும் விடயங்களை இன்னும் சிந்தித்து அலசி
தெளிஞானமாய் சமைத்து
மகிழும் என்றவாறு.
இங்கு பொறிலியப்பார்வையின் சாதாரண
சாக்கிரத்தில் எழும் அறிவுகளோடு ஏனைய பார்வைகளிலும் எழும்
ஞானங்கள் அனைத்தையும் சிந்தித்து ஐயம் திரிபறத் தெளிந்து தெளிஞானங்களாக்கி, உத்தேசங்கள் எடுத்தமொழிகள் என்றெல்லாம் விட்டகன்று மேற்கோள்களாக , நிகமனங்களாகக் கொண்டு
சிறப்பதாம். காட்டாக,
சொப்பனாவத்தையை இலாடத்திற்குக் கொண்டு வருவதென்பது, கண்ட
கனவுகளை மறந்திடாது நினைவில் இருத்தி, பிறகு
அஃதோர் பைசந்தி
மொழி வகையில்,
சின்னமொழி ஆட்டுவென , அதனை
பெயர்த்துப் பெயர்த்து (interprete) வழக்கியல் மொழிக்குக் கொண்டு வந்து,
காணுகங்களும் காருகங்களுமே (percepts and concepts) ஆடும் வகையில்
தெளிஞானமாக்கி (indubitable consciuosness) மகிழ்வதாகும். கனவில்
'புனலாடுதல்' என்று
வர, அதனை
ஓர் சின்னமொழி (symbolic language) எனக்
கொண்டு அது
உணர்த்த வருவதை
"இறையருட்பதிவின் காரணமாக உடல் நலம்
பெறுதல்" என்று பெயர்த்து மெய்ப்பொருள் காண்பது போன்றதாம். ஓர்
கனவும் அத்தகு
ஞானோதயங்களும் எப்பொழுது இவ்வாறு
பெயர்க்கப்பட்டு (interpreted) அவற்றின் மெய்ப்பொருள் இஃதென தெளியப்படுகின்றதோ அப்பொழுதே தெளிஞானப் பொருளாய், இலாடதானத்தின் விடயமாய் ஆக்கப்படுகின்றது. இப்படிப்பட்ட வளர்ச்சியே இலாடதானத்தில் ஐந்தவத்தை எய்துவதாகும்.
இலாடத்தே அவ்வவ் இந்திரியத்து அத்துறைகள் கண்டதுவே:
இவ்வாறு தெளிஞானத் தானமாகிய இலாடத்தே, சாதாரண சாக்கிராதி அவத்தைகளையும், அவ்வவ் அவத்தைகளைத் தரும் பசுகரணங்கள், சிவகரணக்கள் போன்றவற்றையும், மேலும் தென்படா
பற்பல மறைநிலங்கள் தென்படுமாறு ஒவ்வொரு அவத்தை
நிலையிலும் புதியப்புதிய நுழைவுகள் பெற்று, இதுவரை
காணாத முறையில் மறைக்கப்பட்டிருந்த ஆய்வுத் துறைகளை
இந்த அகயாத்திரையில் கண்டு, பிறகு தெளிசாக்கிரத்தில் அவற்றை
மறந்திடாது நினைத்து அலசி பெயர்த்து வழக்கியல் மொழிக்குக் கொண்டு வந்து தெளிஞானமாக்கி அறிந்து
மகிழும் அதுவே:
அவ்வவற்றின் நீங்கலது வாங்கு:
அந்தந்த அவத்தைகளில் மீண்டும் விழாமுறையில் கழன்று
விடுதி பெறுவதாகும்.
எது தொடர்ந்து தெளிவற்ற மறைஞானமாகவே தொடர்கின்றதோ, அதன்மேல் ஆன்மாக்களுக்கு ஆர்வங்
குறையாதேத் தொடரும்.
இவ்வாறான முறையில் ஞானதிரோதகம் நிற்க, அதனை
நீக்குவான் பொருட்டு ஆன்மா ஆங்காரப்பட்டு முனைந்தெழுந்து நிற்கும். இனி தெளிஞானத்தின் இலாட தானத்தில் இவற்றைக் கொண்டு வந்து, ஐயம்
திரிபு யாதுமில்லா தெளிஞானவிடயமாக ஆக்கிவிட, அதன்மேல் ஆர்வம் தானே கெடும்
என்பது. தொடர்ந்து அலசி விசாரித்து தெளிய
வேண்டியவொன்றாக அல்லாதுபோதலின் இவ்வாறான மாற்றம் என்பது.
தொடரும்
உலகன்
இடுகை 10
ஐரோப்பியர்கட்கு அண்டசராசரத்தை யெல்லாம் ஊடுறுவி ஊடுறுவி ஆழத்தின் ஆழத்தில் இருந்தவாறு ஆடவல்லானாக இறைவன் சத்தியோடு இணைந்து கூத்தாடுகின்றான் என்று தெரியாதே , புரிந்துகொள்ளவும் முடியாதே, ஆணவ மலத்தின் அழிப்பையும் சிதைப்பையும் கண்டு அண்டத்தில் CHAOS தான் இருக்கின்றது, ஒழுங்கு நியதி கட்டுப்பாடு போன்றவை இல்லை என்பதுபோல் கூறுகின்றனர் என்று தெரிகின்ரது
ஆனால் சைவர்கள், அனைத்தையும் சிதைக்கும் ஆணவ மலத்தையும் கண்டு, அதனை அடக்கும் இறைவனின் திருவருளையும் கண்டு, அனைத்துமே நியதி பிழையாது நடக்கும் ஓர் அற்புதமான த்ருக்கூத்தே பரதமே என்று கண்டு இறைவனை கூத்தபிரானாகத் தொழுகின்றனர்
அதனை மிக அழகாக விளக்குகின்றார் திருமூலர் கீழ் வரும் பாட்டில்
2771
அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவந்
தண்டினிற் சாத்தவி சாம்பவி யாதனந்
தெண்டினில் ஏழுஞ் சிவாசன மாகவே
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே
முதலில் ‘அண்டங்கள் தத்துவமாகி” என்று கூறி, இந்த அண்டங்களும் பல அண்டங்களை அடக்கியப் பேரண்டங்களும், பொய்யல மித்தியாக் காட்சிகள் அல்ல, உண்மையே தத்துவங்களே என்கின்றார். இந்த அண்டங்கள் எல்லாம் உறுதிப் பொருளாக உண்மைப் பொருளாக எத்தனையோ வின்மீன்களையும் கோள்களையும் சூரியர்களையும் சந்திரங்களையும் கொண்டு விளங்குகின்றது.
இதேப் போன்ற ஓர் பேரண்டம் ஒவ்வொருவர் உடம்பிலும் இருக்கின்றது.
இந்த பிண்டமாகிய உடம்பு தெய்வங்கள் வீற்றிருக்கும் ஓர் கோயில் மாத்திரம் அல்ல, இந்த அண்டமே புதைந்து இருக்கும் ஓர் பிண்டமும் ஆகும் அதேப் போல இந்த அண்டமும் மாபெரும் பிண்டந்தான், இறைவன் குடிகொண்டிருக்கும் ஓர் உடம்பு தான்
நம் உடம்பிற்கும் இந்த அண்டத்திற்கும் ஓர் அடிப்படை அமைப்பு ஒற்றுமை உண்டு.
இறைவன் இந்த உடம்பிலும் பேரண்டத்திலும் பரஞ்சோதி வடிவில் எழுந்து கூத்தாடிக் கூத்தாடி எல்லா உயிர்களையும் விடுபேறு அடையுமாறு அருளுகின்றான், ஊக்குகின்றான்
எப்படி?
இறைவன் அண்டமெல்லாம் உடம்பெல்லாம் பரந்திருக்கும் பெருந்தெய்வங்களாக்ய சத்தி சிவன் பிரம்மா திருமால் சதாசிவன் ஈசுரன் போன்ற வடிவங்களை மந்திரங்களோடு இணைத்து மூர்திகளாக எடுக்கின்றான் (Root Archetypes) ஏனைய தெய்வ வடிவங்கள் எல்லாம் இவற்றின் கீழ்தான்
சாத்தவி என்பது சாந்தவி யாகும். சாந்தத்தை இன்பத்தைத் தரும் சத்தியின் வடிவம், சாம்பவி என்பது அக்னி போன்ற தீய்த்து அழிக்கும் சத்தி வடிவம் ஆகும்.
இந்த ஏழு பெருந்தெய்வ வடிவங்களில் சாந்தவி சாம்பவி ஆகிய சத்திகளையும் துனையாகக் கொண்டும் அவர்களையே ஆசனமாக பீடமாகக் கொண்டு பரஞ்சோதி வடிவில் அதாவது சிவஞானம் அருளும் வடிவில் தனது அழித்தல் அருளல் என்ற கிருத்தியங்களைப் புரிந்தவாறு ஆடுகின்றான்!
நம் உடம்பிலும் முதுகந் தண்டு வழியாக நரம்பு மண்டலத்தில் மூளையில் பல்வேறு முடிச்சுகளில் இருந்தவாறு ஞானக் கூத்து உதைக்கின்றான
இந்த கூத்தெல்லாம் எந்த ஓர் முறையும் ஒழுங்கும் இல்லாது ஓர் பித்தனைப் போலவா ஆடுகின்றான்? இந்த அற்புதமான ஆனந்தத் தாண்டவத்தால் ஆகுவது என்ன? CHAOS எனும் சுத்தத் தாறுமாறுதானா?
தெண்டு என்றால் முறைமை, ஒழுங்கு.
இறைவன் இந்த பெருந்தெய்வ வடிவங்கள் எடுத்து சாந்தவி சாம்பவி எனும் சத்திகளையே ஆசனமாகக் கொண்டு அழித்தலையும் ஆக்கலையும் செய்யும் அழகிய திருத்தாண்டவம், ஓர் தாளத்தோடு ஓர் நியதியோடு ஓர் பண்னோடு ஆடப்படும் ஆட்டமாகும், தாறுமாறான பித்தக் கூத்தல்ல
தொடரும்
உலகன்
///இந்த கூத்தெல்லாம் எந்த ஓர் முறையும் ஒழுங்கும் இல்லாது ஓர் பித்தனைப் போலவா ஆடுகின்றான்? இந்த அற்புதமான ஆனந்தத் தாண்டவத்தால் ஆகுவது என்ன? CHAOS எனும் சுத்தத் தாறுமாறுதானா?
தெண்டு என்றால் முறைமை, ஒழுங்கு.
இறைவன் இந்த பெருந்தெய்வ வடிவங்கள் எடுத்து சாந்தவி சாம்பவி எனும் சத்திகளையே ஆசனமாகக் கொண்டு அழித்தலையும் ஆக்கலையும் செய்யும் அழகிய திருத்தாண்டவம், ஓர் தாளத்தோடு ஓர் நியதியோடு ஓர் பண்னோடு ஆடப்படும் ஆட்டமாகும், தாறுமாறான பித்தக் கூத்தல்ல///
சைவத்தின் வழி பொருள் விளக்கியதற்கு நன்றி ஐயா.
..... தேமொழி
--...
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இடுகை 11
ஆறு ஆதாரங்கள் வழி மானிட ஞானப் பயணத்தின் படிநிலைகளை விளக்குவது தமிழ் இலக்கியத்தில் திருமூலரின் திருமந்திரத்திலிருந்தே நாம் காண்கின்றோம். உடன் பலர் இதுவும் வடநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தமிழாக்கப்பட்ட ஒன்றாக இருக்கவேண்டும் என்பர். ஆனால இது தொல்காப்பிய திணைவழி மானிட ஒழுக்கங்களை விளக்குவதோடு தொடர்புடையது என்றும் இதுவே ஆறுமுக கந்தவேளின் அருளாக ஐம்முக சாதாசிவ மூர்த்தியின் அருளாக நடக்கின்ற ஒன்று என்பதை ஓர்ந்திலர்
இந்த ஆறு ஆதாரக் கொள்கை உள்ளபடியே மிகப் பழமையானது, ஓர் வகையில் சுமேரு எகிப்து போன்ற பண்டைய நாகரீகங்களோடு தொடர்புடையது என்றும் தெரிகின்றது.
இதைதான் நம் திருமூலர் ஆடவல்லானின் ஓர் திருக்கூத்தாக கீழ்வரும் பாட்டில் காண்கின்றார்.
2772
மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான் இதழ் நாலொடு நூறவை
சென்றது தானொரு பத்திரு நூறுள
நின்றது தானெடு மண்டல மாமே
இங்கு மன்று என்பது சுமேரியர்களின் தில்முன் அதாவது தில்லை மன்றுதான். இந்த அண்ட சராசரமே இறைவனது ஆடலரங்குதானே!
அங்கு அந்த மன்றத்தை நிறைக்கின்ற எல்லா இடத்திலும் சுடர்கின்ற வளக்கொளி சிவஞானத்தை ஆன்மாக்கள் உள்ளத்தில் ஒளிரச் செய்யும் ஞானவொளியே யாகும். இதுவே அருட்பெருஞ்சோதியுமாகும். ஞானத்தையும் அருளாகிய அன்பையும் ஆன்மாக்கள் அகத்தே சுடரச் செய்யும் வல்லமை உடைய ஒளி,
இந்த விளக்கொளியே மாமலராகிய தாமரை வடிவில் எல்லார் அகத்தும் ஆதார சக்கரங்களுக்கு ஏற்ப சுடரும் ஒன்றுமாகும்
திருமூலர் முதற்கொண்டு பிற்காலத்து போகர் போன்ற பல சித்தர்கள் இந்த அறிவினை பல்வேறு வகையில் வளர்த்துள்ளனர்.
இந்த ஞானமலர் அருள் மலர் ஆதார சக்கரங்களுகு ஏற்ப மாறும் என்பதைத்தான் திருமூலர் இந்த பாடலில் விளக்குகின்றார்.
மூலாதாரத்தில் 4 இதழ்களோடு தோன்றும் இது, சுவாதிட்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞை என்றெல்லாம் உயரும் போது இதழ்களும் பல்கி எட்டாகி பனிரண்டாகி பதினாறாகி பிறகு நூறாகி விளங்கும் இந்த ஆதார சக்கரங்கள் அனைத்தையும் கடந்து ஆக்ஞா சக்கரத்திற்கு மேலுள்ள ஆதாரத் தலங்களுக்கு, கற்றளிக்குச் செல்ல அங்கு இதே தாமரை ஆயிரவிதழ் தாமைரையாக மலர்ந்து வெடிக்கும்
இவ்வாறு எண்ணிக்கையில் கூடிக்கொண்டே செல்லும் இதழ்கட்கு ஏதாவது உள்ளுறைப் பொருள் இருக்கின்றதா?
இருக்கின்றது ஆனால் அது மறைமுகமாகவே சித்தர்களால் உணர்த்தப்படுகின்றது,
போகர் ஒவ்வொரு இதழுக்கும் ஓர் மந்திர எழுத்தை, அட்சரத்தை குறிப்பிடுவார். இதழ்கள் எண்ணிக்கையில் கூடக் கூட, அட்சரங்களும் ஆகவே மந்திர எழுத்துக்களும் ஆகவே அக்கர சக்கரங்களும் எண்ணிக்கையில் கூடியவாறே செல்லும்
இதன் பொருள் என்ன?
அதிகமான அக்கரங்களும் ஆகவே அக்கர சக்கரங்களும் இருந்தால் அதிகமான எந்திரங்கள் அகத்தே உண்டெனப் படும் அதிகமான எந்திரங்கள் இருந்தால் அதிகமான திறமைகள், செயல்பாடுகள் போன்றவை மலரும். மாமலராக ஆயிரவிதழ் தாமரையை அக்கத்தே கொண்டிருக்கும் ஓர் ஆன்மா, சாதாரண ஆன்மாக்கள் செய்ய முடியாத பல நற்காரியங்களை அவர்கள் செய்து முடிப்பர்.
இவற்றை எல்லாம் திருமூலர் எண் சித்திகள் வழியாக வேறோர் இடத்தில் விளக்குகின்றார்.
ஆனால இங்கு ‘நின்றது தான் நெடு மண்டலமாமே” என்றால் என்ன?
இதுவே சித்தர்கள் கூறும் பிரம்ரந்திரமாக இருக்கலாம். ஞானவொளியைத் தவிர்த்து வேறொன்றும் இல்லாத நிலை, இங்கேயே ஆன்மாவிற்கு சிவஞானம் அருளப்படுவதாகும் அதன் பிறகு ஆன்மாக்கள் வீடுபேறு மகிழ்வதாகவும் இருக்கலாம்
இறைவன் தில்லை மன்றில் சிவசத்தியாக எழுந்து ஆனந்தக் கூத்தாடுவதின் பொருளே இதுதான்--- ஆன்மாக்கள் அகத்தே ஞானத்தை வளர்த்து அஞ்ஞான இருளைப் போக்கி தூய்தாக்கி முடிவில் சிவஞானம் மகிழுமாறு செய்து வீடுபேறு அருளுவதுதான்
என்றும் அயராது தொடரும் ஆனந்த சிவத் தாண்டவத்தின் உள்ளுறைப் பொருள் இதுவே யாகும் என்று தெரிகின்றது
தொடரும்
உலகன்
இடுகை 12
வேதாந்திகளையும் idealists எனப்படும் கருத்துவாதிகளையும் தவிர்த்து மற்றவர்கள் அனைவருக்கும் இந்த பேரண்டம் ஓர் உண்மைப் பொருளே யாகும். ஆயினும் அது எப்படிப்பட்ட உண்மைப் பொருள்? இறைவன் அம்மையோடு இணைந்து ஆனந்தக் கூத்தாடுகின்ற ஓர் ஆலயம், ஓர் கோயில் என்கின்றார் திருமூலர் கீழ் வரும் பாட்டில். ஊன் உடம்பு ஆலயம் என்றவர் இப்பொழுது இந்த பேரண்டமே ஓர் ஆலயம் என்கின்றார்!
2773
அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்ட நடஞ்செயும் ஆலயந் தானே
இந்த பாட்டைப் புரிந்துகொள்ள இன்றைய நவீன Astropysics, Cosmology போன்ற அறிவியல் துறைகள் உதவும். ஆயினும் திருமூலர் விரிப்பது விஞ்ஞானம் எனப்படும் பொறிலிய அறிவியல் அல்ல, மாறாக இறைவனையும் அறியத் தரும் நூலிய அறிவியல் ஆகும்
முதலில் இந்த பேரண்டத்தைப் பார்க்கின்றார் -- பொறிலியக் கண் கொண்டு. அங்கு கோடிக்கணக்கான அண்டங்கள் பல்வேறு வடிவங்களில் தனியாகவும் தொகுப்புகளாகவும் விண்ணில் சுடர்வதைக் காண்கின்றார். அவற்றின் கணக்கில் அடங்கா எண்ணிக்கையைக் கண்டு வியந்து எழுகோடி என்கின்றார். எழுகோடி என்றால் கணக்கில் அடங்கா கோடிகள் என்று பொருள்
இவ்வாறு பெரும்பெரும் அண்டங்களாக இருப்பதில் உள்ளேப் புகுந்து பார்க்க அங்கே கோடிகோடியாக சிறு சிறு பிண்டங்கள, சீவராசிகள் இருப்பதைக் காண்கின்றார். அணுத்துவப் பட்டு ஓருயிர் என்றும் ஈருயிர் என்றுமாக ஆறுயிர் வரை அவற்றின் உட்பிரிவுகளாக எத்தனையோ கோடி உயிர்கள் இந்த அண்டங்களில் ஏதோ ஓர் வகையில் வாழ்வதைக் காண்கின்றார்.
அதேப் போல திசைகள் எழுகோடி என்கின்றார். உள்ளபடியே இங்கு சுட்டுப்பொருளாக விளங்கும் திசையுறு வெளியாகும். பொதுவாக எட்டுத் திசைகள் என்றாலும் அதற்குள் இன்னும் நுணுக்கமாக வகுத்துப் பார்த்தால் கணக்கற்ற திசைகள் உண்டு. அனைத்தையும் கொண்டிருக்கும் பரவெளி இவ்வாறு பகுக்கவும் இடந் தருகின்றது. இதன்வழி அது சுட்டுணர்வின் ஒரு பொருளாகிறது.
இனி இந்த எட்டு அதாவது எல்லா திசைகளிலும் சூழ்ந்த இலிங்கங்கள் எழுகோடி என்கின்றார். இலிங்கங்கள் என்றால் நாத விந்துக்களைக் கொண்டு மந்திரங்கள் வழியாக இறைவனால் எழுப்பப்பட்ட தோற்றப்பட்ட தெய்வ வடிவங்கள் அல்லது மூர்த்தங்கள் ஆகும்.
வியப்பாக இருக்கின்றதே!
பொறிபுலன்கள் வழியும் அவற்றின் வளர்ச்சியாகிய நுண்பெருக்கி தொலைநோக்கி பல நுணுக்கமான காமிராக்களைக் கொண்ட செயற்கைக் கோள்கள் போன்றவற்றால் காணவருபவை அல்லவே இந்த இலிங்கங்கள்? பின் எப்படி திருமூலர் இதனையும் பேரண்டத்தில் கான்கின்றார்?
இங்கு தான் ஐரோப்பிய பிரபஞ்சவியலுக்கும் தமிழர்களின் பிரபஞ்சவியலுக்கும் ஓர் அடிப்படை வேற்றுமை தெரிகின்றது
ஐரோப்பியர்கள் பொறிலியப் பார்வைக்குமேல் செல்லாது முடங்கிவிட, ஓர் வகையான ஞானக்குருடுகளாக்வே விளங்குகின்றனர். ஓர் உருஷிய அண்டசாரதி நிலவு நோக்கி பறந்த பொழுது அங்கு எங்கும் தெய்வங்களை நான் காணவில்லை என்று பகடி பேசியது போலத்தான் பெரும்பாலான ஐரோப்பியர்கள்.
திருமூலர் போன்ற தமிழர்கட்கு, சித்தர்கட்கு நூதலியப் பார்வை போன்ற மேலான ஞானப்பார்வைகளும் கைவர. அண்டமெல்லாம் பறந்து செல்லாது இந்த பூமியில் இருந்து கொண்டே அண்டமெல்லாம் நிறைந்த்திருக்கும் மூர்த்திகளை இலிங்கங்கலைக் கண்டு அவை பொருளே என்று உணர்ந்து ஓர் பரந்த விரி ஆழ்ந்த பிரபஞ்சப் பொருளதிகாரம் பகருகின்றனர்.
அதோடு நிற்கவில்லை.
இன்னும் ஆழமான பார்வைகளையும் பெற்று, பரப்பார்வை சிவப்பார்வை அதீதப் பார்வை காலாதீதப் பார்வை போன்றவற்றையும் மகிழ்ந்து, இவ்வாறு முதல் பொருட்களால் பலதிறப்பட்ட கருப்பொருட்களால் பல்வேறு உயிர்களாக அவற்றில் நிலவும் உரிப்பொருக்களால், மேலும் இவற்றையேக் ஆட்டிப்படைக்கும் மூர்த்திகளாக இப்பிரபஞ்சத்தைக் காண்டு இவற்றை எல்லாம் தோற்றுவித்து நிலைப்பித்து அழித்து மீண்டும் தோற்றுவித்து அதுபொழுது ஆன்மாக்களின் அகத்தே செறிந்திருக்கும் ஞான அந்தகாரத்தை அழித்து இல்லாது போக்கும் ஆனந்த சிவத் தாண்டவத்தையும் இறைவன் சத்தியோடு ஆடுகின்றான் என்றுங் காண்கின்றார்.
இப்படி கணக்கற்ற மூர்த்திகளும் அவற்றையெல்லாம் தோற்றுவித்து ஆட்டுவிக்கும் சிவன் தன் சத்தியோடு விளங்க, அந்த பிரபஞ்சம் ஓர் பெரும் கோயில் தானே, ஓர் பெரும் ஆலயந்தானே!
இதைத்தான் திருமூலர் கூறுகின்றார்,
இதில் எங்கே தவறுண்டு?
தொடரும்
உலகன்
இடுகை 13 ஆகாயத்தில் முயலகன்
திருமூலரைப் படிக்கப்படிக்க. அங்கு விளங்கும் சைவ சித்தாந்த கருத்துக்களை அறிய வர, சைவச் சிந்தனைகள் பழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் பேர்க்கும் பெற்றியதாய் விளங்குவது அதிசயமே. ஆயினும் இதற்கு ஓர் நல்ல காரணமும் சுமேருத் தமிழ் இலக்கியதிலேயே காணக் கிடக்கின்றது. சூருபாக்கு தம் நெறி எனும் நூலில் கூறுகின்றார் ‘ ‘நிகழ்.நம் கல்.கல்.இன் நிகவே மெய் கல்.கல்” என்று.
தமிழச் சிந்தனை பண்டே தன்னைச் சூழ்ந்து நடப்பனவற்றை பொய்யென ஒதுக்காது, மெய் எனவேக் கண்டு அவற்றை சோதித்துக் கற்று மேம்பட அகத்தே மெய்ஞானமே மேம்படும் என்று இதன் பொருளை எடுத்துக்கொள்ளலாம்
அகத்திலே தோன்றக்கூடிய தடைகளை எல்லாம் வென்று கீழ் தள்ளி வேண்டப்படுவது மெய்யறிவே என்று பண்பாட்டை வளர்த்து வந்ததால்தான் இன்றளவு அது அழிந்துவிடாது ஏதோவோர் வகையில் சுடர்கின்றது
இது கீழ் வரும் பாட்டில் வெளிப்படுகின்றது
2774
ஆகாச மாம் உடல் அங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை யெட்டுந் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடஞ் செய்கின் றானே
இந்த முதல் வரியே சைவத்திற்கே சிறப்பு சேர்ப்பது, இன்றைய Astrophysics Cosmology போன்ற அறிவியல் துறைகளோடும் ஒத்து வருவது.
அனைத்திற்கும் தாரகமாய் நிற்கும் இந்த ஆகாயம் கூத்தப் பிராணின் உடல. நிமலனாகிய இறைவனைப் பற்றாது, இந்த் ஆகாய உடலையேப் பற்றி நிற்பது கார் இருளைத் தரும் முயலகன்! அம்.கார் என்றால் மிக மிகுதியான துன்னிருள். யாதையும் விளங்கவொட்டாது உடன் விழுங்கிடும் ஓர் கரியப் பேய், கரும் பிண்டம், இந்த பேரண்டத்தையே விழுங்கி அங்கு கன்னங்கரிய இருளே விளங்கச் செய்வது.
மிக வியப்பாக இருப்பது என்னவென்றால் இது சுமேரு இலக்கியத்தில் மிகப் பரவலாக இருக்கும் ஒன்று என்பதுதான்
சூருபாக்கின் ‘நெறி’ எனும் அற்புதமான நூலில்( கி.மு 3000) கீழ்காணும் வரிகள் வருகின்றன
இங்கு ‘மை பண்டு அரிய’ என்பது தொல் இருளைக் குறிக்கும் சுமேருத் தமிழர்கள் வானசாத்திரத்தைக் கண்டு பிடித்து பெரிதும் வளர்த்தவர்கள், இது வேளாண்மைக் கலையோடு தொடர்புற்றதாக் இருக்கலாம்
அங்குதான் அன்றே The Dark Matter , Black Hole, Dark Force என்றெல்லாம் விஞ்ஞானிகளாக பகரப்படும் ஆணவ மலத்தை அனைத்தையும் விழுங்கி இருளையேத் தரும் ஓர் பொருளாகக் கண்டுள்ளனர்
இதுதான் இறைவனது உடலாகிய ஆகாயத்தில் இருக்கும் முயல்கன். ஆகாயத்த்ல் இருப்பதால் பஞ்சபூதங்களில் இருப்பதாகவும் படும், ஆகவே இந்த பஞ்ச பூதங்களால் இய்னற மானிட உடம்பிலும் உள்ளத்திலும் இருக்கும் ஒன்றாகிறது.
இறைவன் நிமலன் ஆனால் ஆன்மாக்கள் சமலன், அணுத்துவப் படுத்தும் ஆணவ மலத்தால் அன்றே பந்திக்கப்பட்டவர்கள்.
முயலகன் என்றால் என்ன?
நடராசப் பெருமான் திருவடிவில் குத்தியக்கால ஓர் குறு அசுரனை முயலகனை மிதித்த வண்ணம் ஆடுவதைக் காட்டும்
மிதிப்பது அவன் ஆதிக்கத்தைக் குறைப்பது--- இல்லாது போக்குவது அல்ல, இறைவனால் கூட உள்ளதை இல்லதாக்க முடியாது. உள்ளதாகிய மலத்தை ஒதுக்கி ஒடுக்கி வலுவிழந்து கிடக்கச் செய்யலாம், ஆனால முற்றிலும் அழித்து இல்லாது ஆக்க முடியாது
முயலகன் என்றால் ‘முயல். அகல்’ என்ற ஒட்டிலிருந்து பிறந்திருக்கலாம். அதாவது முயல் என்னும் எல்லாம் முயற்சிகளையும் விழுங்கி அகற்றி இல்லாது போக்கி மிடிமையை சோம்பலை ஆகவே மடமையைக் கொண்டு வருவதாகும். எல்லா முயற்சிகளையும் இழக்க மரணமும் வந்துவிடும் அல்லவா? ஆக பல்வேறு வகையில் மரணங்களையும் கொண்டு வருவது இந்த முயலகன் தான்
இந்த முயல்கனை வீழ்த்தத்தான் இறைவன மோகமாகிய பல்வேறு இச்சைகளை ஆகவே பலவகையான முயற்சிகளை ஆன்மாக்கள் அகத்தே எழுப்ப உதவும் மூன்று கண்களை அருளுகின்றான்.
யாவை இவை?
இடகலை பிங்கலை சுழிமுனை எனப்படும் நாடிகள், நாத விந்துக்களால எழுப்பபடுபவை. இந்த நாத விந்துக்கள் இரவிமதி என்றும் தனியாக இரவி என்றும் மதியென்று அகதே வெடித்து அதிகார வேட்கை இன்ப நாட்டம் ஞான நாட்டம் போன்றவற்றை உற்பவிக்க, பல வகையான முயற்சிகள் வெடிக்கின்றன முயலகன் வீழ்த்தப்படுகின்றான்!
இந்த மூன்று கண்களையே ஐந்தாகவும் ஆறாவதாகவும் அதற்கு பரசிவன் ஆறுமுக சதாசிவன், ஆறுமுக கந்தவேள் ஆகிய வடிகளிலும் உலகை ஆட்டுகின்றான் என்றும் கூறப்படும்
ஆனால் முயலகனை வீழ்த்தும் ஆட்டமே தனது அருள் ஆட்டமாக மாகாயமாகிய தில்லைமன்றுள் அம்மையோடு இணைந்து கூத்து உதைக்கின்றான் என்கின்றார் நம் திருமூலர்
எவ்வளவு அழகான அறிவியலுக்குப் பொருந்தி வருகின்ற ஓர் மெய்ஞானம்!
தொடரும்
உலகன்
இடுகை 14 அம்பலம் எங்கே?
சைவர்கட்கு தில்லை அம்பலம் திருசிற்றம்பலம் என்பவை மிக அடிப்டையானவை. இறைவனையே கூத்தப் பிரனாகக் கண்டு அவன் அம்மையோடு ஆனந்தத் தாண்டவம் ஆடும் இடந்தானே அம்பலம்?
சுமேரூத் தமிழில் ambar என்ற சொல் பரந்த வெளியை சதுப்பு நிலத்தைக் குறிக்கும். உயிர்கள் தோன்றிய இடம் அதுதானே? அந்த வேரிலிருந்து பிறகாலத்தில் சமயச் சிந்தனையில் ஆழ்ஞானங்கள் வெடிக்க அங்கு ‘அம்பலம்’ என்ற சொல் ஆழ்ஞானப் பொருளைக் கொண்ட ஒன்றாக, இந்த உலகத் தோற்றத்தையே விளக்கும் ஒன்றாக வந்திருக்கலாம்
இதனை இன்னும் ஆழமாக விளக்கப் புகுகின்றார் திருமூலர் கீழ் வரும் பாடலில்
2775
அம்பல மாவது அகில சராசரம்
அம்பல மாவது ஆதிப் பிரானடி
அம்பல மாவது அப்புத் தீ மண்டலம்
அம்பல மாவது அஞ்செழுத் தாமே
சரம் அசரம் அதாவது சராசரம் என்றால் அசையும் உயிர்ப் பொருட்களும் அசையாத பிற பொருட்களுமாகும். அதாவது உலகில் உள்ளதாய் தோன்றி நிற்கும் முதல் கரு உரிப்பொருட்கள் அனைத்துமாகும் தோன்றியவை தோன்றி அழிந்தவை, தோன்றிக் கொண்டிருப்பவை எதிர்காலத்தில் தோன்ற இருப்பவை என்பதே எஞ்சாது அகில சராசரம் ஆகும்.
இந்த அகில சராசரமே அம்பலம் என்கின்றார் முதல் வரியில்
இனி மூன்றாவது வரியில் அம்பலமாவது அப்புவாகிய நீர் தீ போன்ற பஞ்ச பூதங்களின் மண்டலங்கள் என்கின்றார்.
இதுவும் மேற்கூறிய அகில சராசரம் என்பதிலும் அடக்கலாம்.
ஆனால் ஏன் அம்பலமாவது ‘ஆதிப் பிரான் அடி’ என்றும் ‘அஞ்செழுத்தும்’ என்றும் கூற வேண்டும்?
அம்பலக் கூத்தாடும் பரசிவனே ஆதிப்பிரான். அனைத்தையும் தோற்றி அருள்பவனாக ஆனால் தன்னை தோற்ற யாரும் இல்லாதவனாக இருப்பவனே ஆதி யாகும். பிற பொருளை நோக்க ஆதியாக தன்னை நோக்க அநாதியாகும், அவனே பிரான் - அனைவராலும் பணிந்து தொழப்படும் காரணத்தால், இங்கு மந்திர சொரூபிகளாக அவனால் தோற்றுவிக்கப்ப்படும் பிற தெய்வங்கள் அனைத்து தெய்வங்களும் அடங்கும்
சைவர்கட்கு திருமால் பிரம்மா போன்ற தெய்வங்கள் பரசிவனால் மந்திர சொரூபிகளாக தோற்றுவிக்கப்பட்ட தெய்வங்கள். வைணவர்கள் மகாவிஷ்ணுவையே இந்த ஆதிப்பிரனாக கொள்வர், ஆனால் இங்கு ஓர் சிக்கல் உண்டு, மகாவிஷ்னு பலவேறு அவதாரங்கல் எடுப்பாரே ஒழிய நாத விந்துக்களை அசைத்து அசைத்து மந்திர சொரூபிகளாக தெய்வங்களை தோற்றுவதில்லை,
சைவச் சிந்தனையில் உயிர்களின் அறிவின் எல்லைக்கு ஏற்ப இறைவன் தெய்வ வடிவங்களை, சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்கள என்றவாறு தோற்றுவித்து அவர்களை ஆட்கொண்டு ஞானம் போதிக்கின்றான் என்பர்.
இவ்வாறு மூல ஓங்காரத்தை நாதம் விந்துவாக ஆக்கி பிறகு 51 அக்கரங்களை உருவாக்கி அவற்றின் வழி கணக்கற்ற அக்கர சக்கரங்களை உருவாக்கி யந்திரங்களைப் படைத்து அவற்றின் வழி பல திருவிளையாடல்கள் புரிந்து அதாவது அம்மையோடு இணைந்து ஆனந்தக் கூத்தாடியவாறு ஞானம் புகட்டுகின்றான்
நாதம் விந்து எனப்படும் திருவடிகளை அசைத்டது அசைத்து நாதவிந்து நர்த்தனம் ஆடப்படுவதால், இறைவனது திருவடிகளை சைவர்கள் சிறப்பாக ஓதுகின்றனர்,
இனி உலகில் நடக்கும் எல்லா திருவிளையாடல்களும் தோறுவித்ல் நிலைப்பித்தல் அழித்தல் என்றவாறு அருளலும் அதுபொழுது தன்னை மறைத்துக்கொண்டே செய்தல் என்பதாக பஞ்சகிருத்தியங்கள் இயற்றப்படுவதாக அவை நமசிவாய மந்திரமாகவே கொள்ளப்பட, இந்த ஐந்தொழில்கள் நடவாத இடமே இல்லை என்பதால் அம்பலமும் அஞ்செழுத்தாகின்றது! பஞ்சகிருத்தியங்கள் விடாது நடக்கும் இடம் ஆகின்றது!
தொடரும்
உலகன்
Interesting and thought provoking commentary. Acceptable and beautiful explanation about ‘ஆதிப் பிரான் அடி’ and ‘அஞ்செழுத்து’, not given by others. Thank you Dr Loga.Ganesalingam.
_________________________________________________________________________________________________________From: K. Loganathan <k.ula...@gmail.com>
To: vall...@googlegroups.com; mint...@googlegroups.com; meyk...@yahoogroups.com; Tolkaa...@yahoogroups.com
Sent: Sunday, 6 October 2013 7:18 PM
Subject: [meykandar] Re: [வல்லமை] Re: [MinTamil] Re: அற்புதக் கூத்து
__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (6) ............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
...................................![]()
__,_._,___
இடுகை 15 : பாண்டரங்கக் கூத்து
சைவர்கள் கண்ட இறைவன் அம்மையாய் அப்பனாய் மேலும் அம்மையப்பராய் தோன்றுவான் என்பது மாத்திரம் அல்ல. அம்மையோடு இணைந்து பல அற்புதக் கூத்துக்களில் ஆடுவான் என்பதும் அவற்றில் ஒன்று பாணடரங்கக் கூத்தும் ஆகும் , திருமூலர் இந்த பாண்டரங்கக் கூத்தைப் பாடாது விடுவாரா?
கீழ் வரும் அழகியப் பாடல் அது பற்றிதான்
2776
கூடிய திண்முழவங் குழல் ஓம் என்று
ஆடிய மானுடர் ஆதிப்பிரான் என்ன
நாடிய நற்கணம் ஆரம் பல்பூதங்கள்
பாடியவாறு ஒரு பாண்டரங்காமே
பாண்டர்ங்கக் கூத்தாவது திரிபுர சங்காரக் கூத்து. யாது இந்த முப்புரம்? திருமூலரே மிகவும் பிரசித்திப் பெற்ற ஓர் பாடலில் கூறுகின்றார்: முப்புரமாவது மும்மல காரியம். இதைதான் செற்றான் சிவபெருமான் தனது சங்காரத் தாண்டவத்தின் என்பார்
முப்புரம் மும்மல காரயமாக எப்படி எழுப்பப் படுகின்றது?
மும்மலமாவது ஆணவம் கன்மம் மாயை எனும் மலங்கள், பாசங்கள். எல்லா உயிர்களையும் பந்தித்து அவற்றை அணுத்துபடுத்தி அவர்களை அஞ்ஞான இருளிலில் வீழ்த்துவது. மூல மலமாகிய ஆணவ மல ஈர்ப்பிற்கு ஆளாகி பாவ காரியமாகிய வீழ்ச்சி வினைகளைச் செய்து அவற்றல் கர்மங்களை ஈட்டி அவதி உழக்கின்றான் மானிடன். இந்த உடமபும் ஆங்கு இருக்கும் அந்தக் கரணங்கள் புறக்கரணங்கள் போன்றவற்றை அருளுவது சுத்த மாயை அசுத்தமாயை எனும் மாயை. ஆன்மாவை வசித்து பல வகையான உலகியல் மயக்கங்களில் வீழ்த்தி ஞான சிந்தனை எழவொட்டாது தடுப்பது இந்த மாயை.
ஆதிசங்கரர் போன்ற வேதாந்திகள் இதனை உணராது, பிரமம்தான் பொருள் பிறவெல்லாம் மித்தை என்பதை நிறுத்த மாயாகாரியங்கள் அனைத்தையும் கயிற்றை பாம்பெனக் காண்பது போல ஓர் மயக்கக் காட்சி என்பர். ஆனால் சித்தாந்திகள் இந்த மாயை சுத்த மாயை அசுத்த மாயை பிரகிருதி மாயை என்றெல்லாம் ஆகி ஓர் விளக்கினைப் போல அறிவினை சுடர்விட்டு எரிய உதவும் ஒன்று என்பர்.
இப்படி இருந்தாலும் ஆணவம் கனமம் மாயை எனும் மூன்றும் கட்டிப்போடும் பாசங்கள் என்பதால் அவை அழிக்கப்பட வேண்டியவையே, சங்கரிக்கப்பட வேண்டியவையே.
இதைதான் இறைவன் தனது பாண்டங்கக் கூத்தால் நடத்திக்கொண்டே இருக்கின்றான், அதனால் ஆன்மாக்கள் சுத்தமாகிக் கொண்டே வருகின்றன.
இப்படி பாண்டரங்கக் கூத்திற்கு ஆளாகி மும்மலங்களிலிருந்து விடுபடடு சுத்தமாக வேண்டும் என்பதே விரும்பத் தக்கது என்று நிறுத்துவதே சைவர்கள் விரும்பிப் பூசும் திருநீறுவின் உள்ளுறைப் பொருளாகும்
இந்த ஆட்டத்திற்கு ஆளாகும் அணுத்துவ மானிடர் இறைவன் ஆடும் பாண்டரங்கக் கூத்தின் அருள்பெற்று தூயவர்கள் ஆகிட, அவனை ஆதிபிரான் எனத் தொழுகின்றனர்
ஆனால் இந்தக் கூத்துத்தான் எப்படி ஆடப்படுகின்றது? திருமூலர் தமக்கே உரிய ஆழத்தோடு விளக்கி அருளுகின்றார்.
கொடூர இசையின், இடியோசை போன்ற முழவோசையும் மெல்லிய குழல் ஓசையும் ஓங்கார நாத்தின் இருவேறு எல்லைகளாக திரித்து இறைவன் கொடூரமான தண்டங்களையும் இதமான அநுக்கிரகங்களையும் புரிந்து மானிடர்கள் தமது வினைகளையே சிந்திக்க வைத்து அவர்களை தூய்தாக்குகின்றான்.
இதற்குக் கருவியாக எல்லா தெய்வங்களும் பஞ்சபூதங்களும் உதவுகின்றன, எப்படி? நற்கணங்களாக தேவர் கணங்களும் ஆரவாரம் செய்ய, பல்பூதங்களாகிய பஞ்சபூதங்களும் இடியோசை போன்ற பல ஓசைகளை எழுப்பியவாறு பாட, இறைவன் அம்மையோடு இணைந்து (அவளே பாணியும் தூக்கும் தர) சிவன் பாண்டரங்கம் ஆடுகின்றான்!
மாயா காரியமாகிய பஞ்சபூதங்களால் இயன்ற இந்த உலகையும் உடம்பையும் வைத்துத்தான் பாண்டரங்கக் கூத்தாடி உயிர்களை இரட்சிக்கின்றான் இறைவன். அங்கணமிருக்க எவ்வாறு இந்த மாயா காரிய விருத்திகள் பொய்யாகும்?
உலகம் ஓர் மயக்கு எனும் வேதாந்தமே ஓர் பெரும் மயக்கம் என்றுதான் நாம் முடிக்க வேண்டும்
தொடரும்
உலகன்
இடுகை 16 சிவன் தேவாதி தேவன், மகாதேவன்
பண்டே தமிழர்கள் பொருலியல் ஆய்வில் ஈடுப்பட்டு திருமூலர் காலத்தில் அநாதிப் பொருளாக பதி பசு பாசம் எனும் முப்பொருளை கண்டுள்ளனர். இதுவே சைவ சித்தாந்தம் என தமிழர்கள் கண்ட ஓர் தரிசனத்தை அழைக்கவும் காரணமாகி உள்ளது. ஆனால் இங்கு ஓர் சிக்கல் உண்டு, பதியாகிய இறைவன் அநாதி என்றாலும், யாராலும் தோற்றுவிக்கப்படாது, தானே அனைத்தையும் தோற்றுவிப்பான் என்பதின் அவன் அநாதி யாகின்றான். அதேபோலத்தான் எண்ணிறந்த ஆன்மாக்களும் அந்த ஆன்மாக்களை பந்தித்து சமலன் ஆக்கும் மும்மலங்களும்
ஆனால் இங்கு தேவர்களை எங்கே வைப்பது என்ற கேள்வி எழ அதற்கு ஒர் விளக்கம் தருவதாக கீழ் வரும் பாடல் அமைகின்றது
2777
அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்திரை சூழ் புவிக்குள்ள தேவர்கள்
புண்டரிகப் பத பொன்னம்பலக் கூத்துக்
கண்டு சேவித்து கதி பெறுவார்களே
‘தேவர்’ என்ற சொல், சுமேருத் தமிழ் ‘திங்கிர்(>திங்கள்?) என்ற வேரிலிருந்து வந்த ஓர் சொல்லாகும் இதுவே அக்காடிய மொழியில் திம்மெர் என்றும் பின் திவர்> தேவர் என்றெல்லாம் திரிந்து வடமொழியிலும் தெந்தமிழிலும் வழங்கின்றது, விண்ணிலே சுடரும் கோள்கள் வின்மீன்கள் போன்றவை உண்மையில் மந்திர சக்திகளாக விளங்கும் தெய்வங்களைப் பற்றிய அறிவை மானிடர் உள்ளத்தில் எழுப்பியுள்ள்து.
இங்கு அண்டத்தில் அபாலுக்குகப்பால இருக்கும் பிற இடங்களில் மற்றும் தெள்ளிய நீர் சூழ்ந்த இந்த பூமிக்குள் என்றவாறு எஞ்சாது எல்லா இடங்களிலும் இந்த தெய்வங்கள் பல்வேறு வடிவங்களில் இருக்கின்றன, பலவாறு இயங்குகின்றன
இந்த தெய்வ சத்திகள் இல்லாவிட்டால் எங்கும் எதிலும் யாதுமே நடவாது
ஆனால் இங்கு இந்த தேவர்கள் மானிடர்கள் போல் பேசப்படுகின்றார்களே? அவர்கள் ஆன்மாக்களைப் போன்ற பிறிதொரு வகை ஆன்மாக்களா?
சில ஞானிகள் அப்படித்தான் நினைக்கின்றார்கள், அத்தோடு இன்னும் பலவகைய நித்தியசூரிகள் சித்தப்புருடர்கள் எல்லாம் தெய்வங்கள் போலவே இருக்கின்றார்கள் என்கின்றனர்.
ஆயினும் தேவர்கள் மூர்த்திகள் ஆகும், இறைவனது திருவிளையாடல்கட்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட மந்திர சொரூபிகள், பல செய்யும் யந்திரங்களாக செயல்படுகின்றன.
இத்னால் இந்த தேவர்கள் இரட்டுருவின் மந்திரத் திருமேனிகள் என்று கொண்டு இவர்களின் புறவுரு ஓர் தெய்வ வடிவம் என்றாலும் புதையுரு இறைவன ஒருவனே யாகும்.
எல்லா தேவர்களின் உள்ளே அவர்களை செலுத்தும் சத்தியாய் இருப்பது இறைவனே, சிவ பரம்பொருளே!
இறைவன் தாமரை மலராகிய வலது பாதத்தை எடுத்து இடது பாதத்தால் முயலகனாகிய ஆணவ மலத்தை மிதித்து அடக்கி உலகினை நடாத்த, தனது ஆனந்த கூத்தினை உதைத்து ஆன்மாக்களை இரட்சிக்க, தானே தன்னுளிருந்து இந்த மூர்த்திகளை தோன்றுமா சங்கற்பித்து அவர்களைக் கொண்டு தன் ஆனந்தக் கூத்தை உதைக்கின்றான்
இங்கு இப்படிப்பட்ட தேவர்களை தனி சீவன்கள் போல் கருதுதல் ஓர் உபசாரமே யாகும். உண்மையில் அவை இறைவனே யாகும்.
இவ்வாறு உண்மையில் இவர்கள் இறைவன் தரிக்கும் பல்வேறு வேடங்களே வேறல்ல என்பதை உணர்த்தவே இந்த பல்வேறு வடிவங்களும் முடிவில் இறைவனது மூல வடிவில் கரைந்து இல்லாது போய் சிவனே அங்கு விளங்குமாறு செய்வர் என்பதின் அவை சிவகதி உறும் எனப்படுகின்றது.
வேடங்களைக் கலைத்து தானே தானாக இறிவன் நிற்பதே சிவகதி உறுதல்
இறைவன் யாண்டும் இருக்க அவன் எடுக்கும் வடிவங்கள் தரிக்கும் வேடங்கள் மாறிக்கொண்டே வருமிந்த வேடங்ளை எல்லாம் உதறி தன் சொருபமாக நிற்கும் படியாக ஆகுவது சிவகதி உறுவதாகும்
இறைவன் இந்த உலகையே பொன்னம்பலமாக மாற்றினால்தான், கூத்தே பொன்னம்பலக் கூத்தாக ஆனந்தமே பயக்கும் கூத்தாக மாறினாலதான், தேவர்கள் சிவத்தில் ஒடுங்கி சிவகதி உறுவது மெய்யாகும்
தொடரும்
உலகன்
இடுகை 17 ஆனந்தத்து அமுது
சைவர்கள் மாத்திரம் அல்ல சிவஞானிகள் மாத்திரம் அல்ல, இந்த பேரண்டத்தை உள்ளவாக் கண்டு அங்கே நடக்க்கும் அற்புதங்களைக் கண்டுணரும் அனைவருமே நடராச பெருமானாக இந்த பிரஞ்சத்தைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் விடுவர், நம் மாணிக்கவாசகர் போல உளம் நெக்குருகி கரைந்து ஆனந்தக் கண்ணீர் விட்டு மகிழ்வர். அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஆற்றுப்பெருக்கென ஓட ஆனந்தத்தைத் தவிர்த்து வேறொன்றும் அறியாத அருஞ்சுவையினராக மகிழ்வர்.
இதைத்தான் திருமூலர் அன்றே கீழ் வரும் பாட்டில் கூறுகின்றார்.
2778
புளி கண்டவர்க்குப் புனல் ஊறுமா போல்
களிக்கும் திருகூத்துக் கண்டவர்கெல்லாம்
துளிக்கும் அருட்கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும்
ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே
தொல்காப்பியர் இன்பம் என்பது அவர் அவருக்கு தாம் தாம் மேவற்றாகும் என்பர். எதனை வேட்டுத் திரிகின்றார்களோ அதனை அடையும் போது உள்ளத்தில் மகிழ்ச்சித் தாண்டவமாடும். ஆயினும் இதுபோன்ற உள நெகிழ்வுகள் சிறிது நேரத்திற்கு பிறகு வீழ்ந்து இன்னொரு வேட்கை வெடிக்க அதனை அடைவான் பொருட்டு ஆன்மா புதிதாக உழைக்கத் தொடங்கும்
இவ்வகையில் காம இன்பங்கூட விதிவிலக்க அல்ல.
ஆயினும் தெவிட்டாத இன்பம் தருவதாய், காணும்தோறும் உடம்பெங்கும் அமுது ஊறுமா செய்து ஆனந்தச் சுவை அன்றி வேறு எச்சுவையும் தோன்றாவண்ணம் செய்வது இந்த திருகூத்துத் தரிசனமே என்கின்றார் அதனைக் கண்டு கண்டு மகிழ்ந்து அற்புதமான நூற்றுக்கணக்கான அழகிய பாடல்களை எழுதிய நம் திருமூலர்.
புளியை (புளிக்கும் மங்காயை) கண்டவுடன் வாயில் நீர் தானே சுரப்பதுபோல, இந்த அண்டப்பேரண்டத்தில் அயராது நடக்கும் அம்மையோடு சிவன் ஆனந்தத் தாண்டவத்தைக் காண உடம்பெங்கும் அமுதூறி ஆனந்தப் பரசவம் மகிழத் தரும்
இது எப்படி? ஏன்?
சிவசத்தியாக இறைவன் ஆனந்தமே தன் வடிவாக இந்த பேரண்டக் கூத்தை உதைக்கும்போது அதனைக் காண்போர் அகத்தே இறைவனது அற்புதமான அருளே பரங்கருணையே தூய்மையிலும் தூயஅன்பே வெளிப்பட, ஓர் நன்றி பெருக்கு மேலோங்க தனக்கு அருளப்படும் நன்மைகளை யெல்லாம் நினைத்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து மகிழ்கின்றனர்.
அயராது நில்லாது ஆனந்தமாக ஆடிக்கொண்டே இருக்கும் அற்புதத்தைக் காண, அதனால் தான் அடையும் நன்மைகளை எல்லாம், காண, பண்டே தன்னை பந்தித்துத் தன்னை ஓர் அணுத்துவ அஞ்ஞானியாக வடித்து அந்த மலங்கள் எல்லாம் தனை விட்டு நீங்கிட தான் அதனால் சுத்தமாக மெய்ஞானியும் ஆக இந்த அருள் ஆட்டத்டைக் கண்டு அருட்கண்ணீர் சொரிந்து நெஞ்சம் நெக்குருக ஆன்மா மகிழ்கின்றது ---- அற்புதமான அமுத தாரைகள் நாடி நரம்புகள் எல்லாம் ஓட!
அது பொழுது அங்கே ஓர் ஒளி! அதுவே ஞானவொளி, சிவஞான ஒளி!
அகத்தே செறிந்திருந்த எல்லா கசடுகளையும் போக்கி, ஆன்மாவை முற்றிலும் சுத்தமாக்கி சிவஞானமே சுடரும் படியாகச் செய்த அந்த அருட்பெருஞ்சோதி அகத்தே அமுதே வெள்ளப்பெருக்கென ஓட வைக்கின்றது.
இத்தகைய சிவஞானிகளே பிறப்பின் பயனையும் அடைந்து மீண்டும் பிறவாமையும் எய்துகின்றனர்
தொடரும்
உலகன்
இடுகை 18 சிவானந்த அனுபூதி
அற்ப உலகியல் ஆனந்தங்களுக்கு மேல், அதுவும் பேரளவில் உலகில் எல்லா சீவராசிகளிடமும் பயிலும் காம இன்பத்தையும் கடந்து சிவானந்தம் என்றவொன்று இருக்கின்றது. அது உலகை பொய் என ஓர் வேதாந்திபோல் வெறுத்து ஒதுக்காது தன்னுள் தானே ஒடுங்கி தானே பரப்பிரம் சிவன் என்றெல்லாம் பாடாது உலகை ஓர் கனவுபோல மாயை என்றும் நினைக்காது. உள்ளது என்று அதனை உள்ளவாக் கண்டு ஆழத்தின் ஆழத்தில் அங்கு இறைவன் சிவசத்தியாய் எழுந்து உதைக்கும் கூத்தினைக் காண சித்திக்கும் ஓர் இன்பமே அற்புதமான ஓர் இன்பம் என்றும் அதுவே சிவானந்தம் என்றும் விளம்புகின்றார் நம் திருமூலர் அடுத்து வரும் பாட்டில்
2779
திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தஞ் சித்திக்கும்
கொண்டாடு மன்றுள் குனிக்குந் திருகூத்துக்
கண்டார் வருங் குணங் கேட்டார்க்கும் ஒக்குமே
ஊனக கண்கள் பசுகரணங்களாக விளங்கி பொறிலியப் பார்வை போன்ற சாதாரணப் பார்வைகளையே மகிழ்வது விடுத்து இறையருளாள் ஆழமான பார்வைகளும் சித்திக்க, ஊனக் கண்களும் சிவகரணங்கள் ஆகிட, பார்வை ஊடுறுவி ஊடுறுவி ஆழம் ஆழஞ் சென்று அங்கே மூலத்தின் முலமாகிய திருசிற்றம்பலத்தில் இறைவன் சிவசத்தியாக எழுந்து அயராது ஆனந்தக் கூத்து உதைத்துக்கொண்டிருபதைக் தரிசிக்க, ஆனந்த மேலீட்டால் ஆன்மா பரசவப் பட்டு திண்டாடித் திண்டாடி நிலைகொள்ளாது விழும்
இந்த அற்புத அரிதிலும் அரிய காட்சி தரும் இன்பமே சிவானந்தமாகும்
இந்தக் காட்சியின் வரும் உணவாகிய ஞானத்தை உண்டு உண்டு வந்தால், மிகவும் சத்தி வாய்ந்த மதுவினை உண்டதுபோன்ற ஓர் உன்மத்தம் சித்திக்கும். வேறு எதிவும் தெரியாது , அனைத்தும் மாயமாய் மறைய பின்புலனாக சிவசத்தி கூத்தே கண்ணெல்லாம் நிறைந்து அற்புதமான ஓர் களிப்பைத் தந்தவாறு இருக்கும்!
இதே ஆனந்தம் இன்னொரு திறததார்ர்க்கும் உண்டு என்கின்றார் நம் திருமூலர்
ஆம் அவர்கள் நாதாந்தம் கேட்போர் ஆகும்
மொழிகள் வழியாகவே அறிவு சுடர்கின்றது, அந்த மொழியும் காதில் படு ஓசை வடிவத்து வைகரி என்றும் அதன் புதையுருவாக இருக்கும் கருத்துக்களின் தொகுப்பான பைசந்தி என்றும் அதன் புதையுருவாக இருக்கும் மத்திமை என்றும் அதன் புதையுருவாக இருக்கும் சூக்குமை என்றும் இருக்கும்.
இங்கு மத்திமைத் தொடங்கி அக்கரசக்கரங்கள் வர பிறகு எல்லா அக்கரங்களுமாகிய 51 அக்கரங்களும் வர, அவற்றைச் சூழ்ந்து அசபா மந்திரங்களும் வர, இவற்றிற்கெல்லாம் மூலமாகிய ஓங்காரம் வர. அந்த சிற்றம்பலத்து சிவக் கூத்தின் தாள,உம் பாணியமாக விளங்கும் ஓங்கார நாத்தையும் கேட்டோர், சிவசத்திக் கூத்தினை கண்ணாரக் கண்டோர் படும் சிவானந்தத்தை இவர்களும் படுவார்களாம்
சிவசத்திக் கூத்தே பார்வையெல்லாம் நிறைந்திருக்க ஓங்கார நாதமே செவி எல்லாம் நிறைதிருக்கும் என்று திருமூலர் சுய அனுபவத்தை விளக்குகின்றார் இங்கு!
தொடரும்
உலகன்
...
[Message clipped]
இடுகை 19: ஞானக் கூத்தே இம்மாநடம்
உலகு எனத் தோற்றுவித்து அதில் பல உயிர்களையும் உடம்பொடு வாழவைத்து அனைத்தையும் ஆட்டி ஆட்டி அசைவித்து இறைவன் ஓர் மாநடம் ஆடுகின்றான். அதுவும் மங்கையோர் பாகனாய அம்மையப்பனாய இந்த அற்புதைக் கூத்தை ஆடுகின்றான், மிக மிக ஆனந்தமாக.
அதைத்தான் கீழே மிக அழகாக விளக்குகின்றார் நம் திருமூலர். ஏன் இந்த மாநடம் அதுவும் இத்தனைக் கருவிகளுடன்?
2780
அங்கி தமருகம் அக்குமாலை பாசம்
அங்குசஞ் சூலங் கபாலமுடன் ஞானந்
தங்கு பயந்தரு நீலமும் முடன்
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே
இது பல கருவிகளோடு மங்கையோர் பாகனாய் சிவ தத்துவங்களாகிய நாதம் விந்து ஆகியவற்றோடு ஒன்றித்து ஆடும் ஞானக் கூத்தைப் பற்றிய பாடல்.
முதலில் நாம் கருத வேண்டியது ‘ஞானந் தங்கு பயன் தரு நீலம் உடன்’ எனும் கிளவியின் உள்ளுறைப் பொருளையே யாகும். சிவன் செம்மேனி வண்ணன், அழல் வண்ணன் செந்தீ வண்ணன் என்றெல்லாம் கூறப்பட இங்கு ஏன் நீல வண்ணம் கூறப்படுகின்றது?
நீல வண்ணம் அன்பே அருளே தானாக நிற்கும் திருமாலுக்கு உரியது. ஆனால இங்கு சிவபெருமான் உடம்பில் திருமால் தங்கும் அதே இடது பாகத்தில் தங்கும் அம்மை நீலாம்பிகையாய் இருக்க அவளோடு மங்கையோர் பாகனாய் ஆகவே அனபேத தானாய் அருளேத் தானாய் நிற்கும் வடிவம் ஆகும்.
இவ்வாறு இறைவன் ஆடும் கூத்து ஞானமே பயனாய் அம்மையோடௌ உடன் ஆடும் நற்கூத்து ஆகும். ஆனால் ஏன் இத்தனினை ஆயுதங்கள்? அவற்றின் பொருள் என்ன? ஆட்டம் பெரும்போர் போல் தெரிகின்றதே?
அங்கி என்பது அக்நி-- ஆணவத் துன்னிருளின் எல்லா வடிவங்களையும் எரிப்பது. உயர்ந்து விளங்காது அனைத்தையும் துன்னிருளில் ஆழ்த்திடும் வல்லிய ஆணவ் மலத்தை கடுந்தீயின் எரித்து அதன் ஆற்றலைக் குறைத்து வலுவிழக்கச் செய்து தோன்றாது புதையுண்டு கிடக்கும் அனைத்தையும் தோன்றிச் சுடர உதவுவதே இறைவன் செய்கின்ற பிரபஞ்சத் தீக்கை!
தமருகம் ஒடியாதும் விடாதும் துடித்துக் கொண்டே இருக்கும் உடுக்கை, இதுவே மூல நாதமாகிய ஓங்காரத்தை எழுப்ப அதுவே பல அக்கரங்களாக விரிய அவையே கலந்தும் புணர்ந்தும் பல அக்கர சக்கரங்களாக உருவெடுக்க இவையே பல யந்திரங்களாக எழுந்து உலகில் பலவாறான அசைவுகளை எழுப்புகின்றது. அவற்றில் மிக முக்கியமானது மொழியின் ஆகவே அறிவின் பலவேறு வடிவங்கள். வைகரியாய் பைசந்தியாய் மத்திமையாய் சூக்குமையாய் ஒன்றுக்குள் ஒன்றாக ஓர் அடுக்குப் பெட்டிபோல் இந்த மொழியின் பலவேறு வடிவங்களும் அவைத் தாங்கி வருகின்ற அறிவுகளும் இந்த உடுக்கையால் எழுவனதான்
அடுத்டு வருவது அக்கமாலை அல்லது ருத்திராட்ச மாலை, இது ஜபம் தவம் போன்ற சாதனங்கட்கு உதவுவது. சிவஞானம் சாதாரண சிந்தையினால் வரும் ஒன்றல்ல, மிக வருந்தி உழைத்து பல தவங்கள் செய்ய இறையருளால் அமைவது.
அதனைக் காட்டுவதே இந்த அக்க மால.
பாசமாவது கட்டுங் கயிறு, இங்கு கன்மம் மாயை எனும் இரண்டு. ஆணவ மலம் என்பது இயல்பான சகச மலம் என்பதால் அது ஆன்மாக்களை அநாதியே பந்திருப்பது, இடையே வருவதல்ல. ஆனால கன்மமும் மாயயையும் இடையே வரும் ஆகந்துக மலங்கள். இவை இல்லாவிட்டால் கூர்தலில் ஓர் பக்குவத்தை அடைதலும்ம் பின் மரணம் சம்பவிக்க விட்ட இடத்திலிருந்து தொடர்தலும் மேலும் ஒரு படி முன்னேறுதலும் மெய்யாகாது போம்
ஆக கன்மமும் மாயையும் ஓர் கட்டுபோல் தோன்றினாலும் அவை மிகவும் தேவையே. முடிவில் அவை இல்லாது போய்விட்டாலும் இடையே அவைத் தேவையே
அங்குசமாவது யானையையும் கட்டுப்படுத்தும் தோட்டி, ஓர் கூர் ஆயுதம். ஆன்மா கட்டுக்கடங்காத வேட்கையினால் தாக்கப்பட்டு அறத்திற்குப் புறம்பாக செயல்படும்போது அதனை கண்டித்து நல்வழிப் படுத்த இறைவன பயன்படுத்தும் ஆயுதமே இந்த அங்குசமாகும். அகத்தே அச்சம் வலி வேதனை குற்றவுணர்வு போன்றவற்றை எழுப்பி அறநெறியில் செல்லுமா ஊந்தும் ஆயுதமே அங்குசம்
சூலம் என்பது திருசூலம், இச்சை ஞானங் நற்கிரியை ஆகியவற்றை செய்யத் தூண்டும் சத்தியின் வடிவம்
கபாலம் என்பது உலக வாழ்க்கையில் யாண்டும் மரணம் உண்டு, அது அநித்தியமான ஒன்று என்று வாழ்வின் நிலையாமையை உணர்த்தி நித்தியமான ஓர் நிலையை தேடிக் கண்டு பிடித்து அந்த நித்திய சத்திய உலகில் வாழ சிவஞான வேட்கையைப் பதிவிப்பது.
இதுவே அந்த சுத்தமான நீலவொளியின் தெள்ளிய ஞானத்தின் அம்மையின் ஓர் அழகிய வடிவில் ஆன்மாக்கள் அழுந்தி ஞான இன்பமே தூய்த்து அலாதியா ஓர் இன்பம் அனுபவிப்பது.
அன்பேத் தானாகி நின்றால் தான் சிவஞானம் சித்திக்கும்
இந்த ஞான இன்பத்தை அருளுவதற்காகவே இறைவன் மங்கையோர் பாகனாய் எழுந்து மேலே விளக்கப்பட்ட ஆயுதங்களோடு அண்டசராசரக் கூத்தை, இந்த அற்புதக் கூத்தை ஞான்க் கூத்தாகவே ஆடுகின்றான்
உயிர்களும் இதனை அறிந்து தாமும் யாண்டும் எவ்விதத் தொய்வுமின்றி ஞானக் கூத்து ஆடிக்கொண்டே இருக்கவேண்டும், ஒடுங்கி விழக்கூடாது வாளா இருக்கவேக் கூடாது என்றும் உணர்த்துகின்றான், சும்மா இருக்கும் சுகம் என்ற ஒன்றில்லை, மங்கையோர் பாகனைப் போன்று ஒவ்வொரு உயிரும் ஆனந்தக் கூத்தாடினால் தான் வாழ்க்கையே ஆனந்தமாக இருக்கும்.
தொடரும்]
உலகன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நின்னா சங்கரிஇந்தக் கூத்தினை பொருள் உணர்ந்து உரை எழுதும்போது மங்கையோர் பாகனாய் இறைவன் ஆடும் ஆனந்தக் கூத்தினை யானும் ஆடுகின்றேன்!உலகன்
இடுகை 20: அகத்திலும் புறத்திலுமே ஆட்டம்
பண்டைய புத்தர்களில் ஒரு சாரார் தியானம் என்றோர் சாதனத்தை அறிமுகப்படுத்தி உயிரோடு இருக்கும்போதே படிப்படியாக மரணமடைந்து உடல் அழியாது கற்போல் ஆக்குவதே(mummification) செய்யக் கடவது என்று ஆட்டத்தையெல்லாம் அடக்கினர். இந்தப் பழக்கம் இன்றும் பல புத்த சமயிகளிடையே பழக்கத்தில் இருக்கின்றது. ஆணை பெண்ணை வெறுக்கும் ஆகவே காமத்தை வெறுக்கும் துறவும் இதனோடு வந்ததுதான் போலும். இதன் தாக்கத்தால்தான் பதஞ்சலி யோகம் என்பது சித்த விருத்திகளை அடக்குவது கொல்வது என்றெல்லாம் கூறிச் சென்றார்
இவர்கள் எல்லாம் அகத்திலும் புறத்திலும் ஆடிக்கொண்டே இருக்கும் ஆடவல்லானாக இருக்கும் நடராசபெருமானை அடக்கி ஒடுக்கி சிறை செய்யும் மூயற்சிகளாகும்
மங்கையோர் பாகனாகிய இறைவனுக்கு துறவும் இல்லை கூத்து உதைக்காத இடமும் இல்லை நேரமும் இல்லை,
இதனை உணர்த்துவதாக கீழே வரும் அழகியப் பாடல்
2781
ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக்
கூடிய பாதஞ் சிலம்பு கைக்கொள் துடி
நீடிய நாதம் பராற்பர நேயத்தே
ஆடிய நந்தி புறம் அகத்தானே
இங்கு ‘நந்தி’ என்பது அன்பே தானாய் அருளேத் தானாய் இருக்கும் சிவபெருமான் ஆகும். அன்பே சிவம் என்று திருமூலரே அழியா வகையில் இறைவனை அறிந்து கூறியுள்ளார். அன்பேத் தானாக இருக்கும் இறைவனால் உயிர்களை உய்விக்கும் பொருட்டு ஆடாது இருக்க முடியுமா?
அவன் ஆடுகின்றான், அம்மையோடிணைந்து மிக ஆழகாக ஆடுகின்றான்.
ஆனால் எப்படி ஆடுகின்றான்? எங்கே ஆடுகின்றான்?
அவன் ஆடலுக்கு பதினோரு உறுப்புக்கள் உண்டாம்.
இரபஞ்சமெல்லாம் ஆடும் இறைவனது ஆட்டத்தின் உறப்புக்கள் சுழல்தல் நீள்தல் துடித்தல் அடங்குதல் ஊர்தல் பாய்தல் பரத்தல் விரிதல் சுறுங்கல் குறுகல் அதிர்தல் என்றவாறு பதினோரு ஆட்ட வகையாக இருக்கலாம்.
பரதம் என்ற சொல்லே ‘அசைதல், பரத்தல் ‘என்றெல்லாம் பொருள்படும் ஓர் அழகியத் தமிழ் சொல்லாகும். இதன் அடியாகப் பிறந்ததே பரத நாட்டியம். இங்கு ‘நாட்டியம்’ என்ர சொல்லும் சுமேருத் தமிழ் ‘நட’ என்ற வேரிலிருந்து பிறந்தவோர் சொல்லாகும்
இறைவன் பிரபஞ்சத்தில் மேலே கூறப்பட்ட அசைவுகள் வகைகளோடு ஆடும் ஆட்டத்தை உடம்பின் வழியாக ஓர் கலை வடிவில் எடுத்துரைப்பதே பரத நாட்டியம் ஆகும்
அதுபொழுது பாதத்தின் அடைவுகள், சிலம்பு போன்ற அணிகள் அவற்றின் வழி ஆகும் சின்னமக் குறிப்புக்கள் கையிலே விளங்கும் துடியிலிருந்து தாளங்கள் பண்கள் வழியாக பிரபஞ்சக் கூத்தை ஓர் அரங்கில் ஆடி மக்கட்கு உணர்த்துவதே பரத நாட்டியம் எனும் கோயிற் கலை ஆகும்
சுமேரியக் காலத்திலிருந்து தமிழர்களால போற்றி வளர்க்கப்பட்ட கலையும் ஆகும்
ஆனால் இங்கு நாதமும் விந்துவும் எப்படி உதவுகின்றன?
வளர்ந்து வளர்ந்து செல்லும் ஒலியாகிய நாதமும் அந்த ஒலி தாங்கி வரும் பொருளாகிய விந்து அல்லது பராபரையும் ஆழமான அன்பில் நேயத்தில் கட்டுண்டு ஆடுவதே இந்த அவனி ஆட்டம். ஆக இதுவும் நாத விந்து நர்த்தனந்தான
ஆனால் இக்கூத்து எல்லா உயிர்களின் அகத்தும் புறத்தும் ஆடபடுகின்றதாக திருமூலர் கூறுகின்றாரே. அது எப்படி?
இந்தக் கூத்து அம்மையால் ஆடப்படும் பஞ்சகலைகள் என்றும் அப்பனால் ஆடபடும் பஞ்சகிரித்தியங்கள் என்றும் ஆகும்.
புறக்கூத்தாகிய பஞ்சகிரித்தியங்களாகிய தோற்றுவிதல் நிலைப்பித்தல் அழித்தல் எனும் முத்தொழிகள் ஊடே தன்னை மறைத்தல் தன்னைக் காட்டல் எனும் கிருத்தியங்ளும் சேர பஞ்சகிருத்தியங்கள் ஆகின்றன
ஆனால் அம்மையின் பஞ்சகலைகள் யாவை? எங்கே?
இவை ஒவ்வொருவர் அகத்தேயும் நிவிர்த்தி பிரதிட்டை வித்யை சாந்தி சாந்தியாதீதை என்றவாறு ஐங்கலஒகளாக ஆடப்படும், இவை எங்கே?
ஓர் திணையில் ஓர் கற்றளில் ஓர் ஆதார சக்கரம் போன்ற ஒன்றில் இருக்கும் ஆன்மாவை கழற்றி விடுவித்தல் நிவிர்த்தி ஆகும். பின் இருந்த திணைக்கு அல்லது சக்கரதிற்கு மேலாகிய ஒன்றில் வாழ வைப்பது பிரதிட்டை. இந்த புதியத் தளத்தில் உள்ளுணர்வாக பல ஞானக் கருக்களை பதிய வைப்பது பின் தூண்டி சிந்திக்க வைத்து ஞானம் மகிழச் செய்வது வித்யை ஆகும். அந்த ஞானத் தெளிவால் ஆனந்தச் சுவை மகிழத் தருவது சாந்தி. இனி இதற்கு மேலாக அம்மை அந்த ஆன்மாவை தன்னோடு ஒன்றித்து நிற்கும்படி செய்வதால் வரும் அலாதியான பேரின்பமே சாந்தியாதீதை யாகும்
இப்பொழுது புரிகின்றது, இறைவன் அப்பனாக புறத்தே அகிலமெல்லாம் பஞ்சகிருத்தியங்கள் ஆட, அம்மை வடிவில் அனைவர் அகத்தும் பஞ்சகலைகள் எனும் ஞானக் கூத்தை ஆடுகின்றாள்!
சைவத்தில் உயிரின் ஓட்டத்தை ஒடுக்கும் தியானத்திற்கும் சித்த விருத்திகளை ஒடுக்கும் யோகத்திற்கும், தானே பிரமம் என்றோர் மயக்கில் தன்னுள் தானே ஒடுங்கிடச் செய்யும் வேதாந்ததிற்கும் இடமில்லை,
ஆடிக்கொண்டே அதுவும் உள்ளும் புறமும் ஆடிக்கொண்டே அதன் வழி அம்மையப்பனாய் ஆடும் இறைவனோடு இணைந்து ஒத்து ஆடிக்கொண்டே இருக்க வேண்டும் அதுபொழுதே ஆனந்த சுவையைத் தவிற வேறு எச்சுவையும் அகத்தே தோன்றாது
தொடரும்
உலகன்
அற்புதம் ஐயா.. தெளிந்த ஞானம் அருளும் அற்புதம்! பகிர்விற்கு நன்றி பல.அன்புடன்பவளா
இடுகை 21 அன்பினை வளர்க்கவே ஆனந்தக் கூத்து
சைவம் அதுவும் திருமூலர் போற்றிய சுத்த சைவம் ஓர் அன்பு சமயம் ஆகும். ‘அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி கிழவோட்கு உரித்தே’ என்று தொல்காப்பியர் வழிகாட்ட அன்பினை வளர்க்கும் சமயமாகவே சைவம் வளர்ந்துள்ளது. சாதிபேதங்கள் பாராட்டாது ‘அன்பே சிவம்’ என்றவாறு தொண்டே வாழ்கையக வாழ்ந்தவர்கள் நாயன்மார்கள். பெரிய புராணம் இதனை நமக்கு நலமே உணர்த்தி நிற்கின்றது
இதனை விளக்குவதாக வருவதே கீழ் வரும் அழகியப் பாட்டு
2782
ஒன்பதும் ஆட ஒருபதினாறு ஆட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட
இன்புறும் ஏழினும் ஏழ் ஐம்பத்தாறு ஆட
அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே
சைவத்தில் அவதாரங்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை மணிபூரகக் சக்கரத்தின் அதிபதியாக இருக்கும் திருமால் அந்த சக்கரத்தில் எடுக்கும் வடிவங்களாக கூர்ம அவதாரம், வராக அவதாரம் வாமன அவதாரம் இராமர் அவதாரம் கண்ணன் அவதாரம் கல்கி அவதாரம் என்றவாறு பகரப்படும் தசாவதாரங்களைக் கூறுலாம். இவை எல்லாம் நுதலியப் பார்வையின் வரும் பல சித்திகளை மகிழத் தரும் தெய்வ வடிவங்கள் என்று கூறலாம. காட்டாக கலவி அவதாரம் எதிர்காலத்தை இன்றே அறியத் தரும் திரிகால ஞானத்தை தரும் வடிவமாக இருக்கலாம்
ஆனால் இங்கு பகரப்படும் நவபேதங்கள் பரதெய்வ வடிவங்களாகிய சத்தி சிவன் பிரமன் திருமால் ஈசன் சதாசிவன் உருத்திரன் ஈச்வரன் நடராசன் என்றெல்லாம் வரும் மூலமூர்த்திகளாகும்
பதினாறு என்பது எட்டு அடிப்படை திசைகளும் அவற்றோடு வரும் உள்திசைகள் எட்டுமாக 16 திசைகள், உள்ளபடியே கருத்து எல்லாத் திசைகளிலும் என்பதாம் இந்த அண்டசராசரம் முழுவதும் தன் ஆடரங்காகக் கொண்டு இறைவன் ஆடுகின்றான் என்றே பொருள்படும்
இங்கு அன்புறு மார்க்கங்கள் ஆறு என்றால் என்ன? திருமூலர் காலத்தில் இருந்த மக்களால பெரிதும் போற்றப்பட்ட சமயங்கள் ஆறு என்று கொள்வதே சிறப்பு. அவை சாங்கீயம் உலகாயதம் நியாயம் வைசேடிகம் புத்தம் சமணம் போன்றவையாக இருக்கலாம். இந்த சமயங்கள் ஆறும் மானிடர்கள் உள்ளத்தில் இறைவன் பல தெய் வடிவங்களை எழுப்பி இத்தகைய சமயங்களை உருவாக்கி சிந்தனையை முடுக்கி ஞானம் வளர்த்துள்ளான்.
இன்றும் புதியப் புதிய சமயங்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன, அறிவும் புதியப் புதிய வழிகளில் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
இன்புறும் ஏழு என்பது மூலாதாரம் தொடங்கி ஆக்னா வரை ஆறும் அதனைக் கடந்த உச்சிக் கமலதலம் உட்பட ஏழு கற்றலிகள் ஆகின்றன. மேலே விளம்பப்பட்ட நவபேத தெய்வங்கல் இக்கறிகலையே தமது அதிகாரத் தலமாக்க் கொண்டு ஆட்சி செய்கின்றனர்
இங்கு ஏழு என்பது ஒவ்வொரு ஆதார சக்கரத்திற்கு அமையும் வேட்கை வகைகளும் அவற்றால் எழும் குணங்களும் ஆகும். காட்டாக சுவாதிட்டானம் வந்தவர்கள் பிரமதேவன் கலைவாணி ஆட்சிக்கு ஆளாகி கல்விகேள்விகளில் சிறந்து நல்லவோர் கல்விமானாக சுடர்வதாகும், இவ்வகையில் முடிவான ஆயிரவிதழ் தாமரைத் தலம் வந்தடைந்தோர் எண் சித்திகளும் கைவரப் பெற்ற அகத்திய சித்தர்களாக விளங்குவர் என்பதாம்
இனி இவ்வாறு நவ பேதங்களாக பரதெய்வங்களையும் ஏழு ஆதார சக்கரங்களையும் அங்கு மந்திரங்களையும் யந்திரங்களையும் இருத்துவதற்கு மூலமாக இருப்பது பலவகையான அக்கர சக்கரங்களும் அவற்றிற்கு மூலமாகிய 51 அக்கரங்களும் மேலும் 6 அசபா மந்திரனக்களும் ஆக 57 அக்கரங்களும் ஆகும்
இவற்றை எல்லாம் கொண்டு இறைவன் ஞானக் கூத்து உதைத்து உயிர்களை சிந்திக்க வைத்து ஆணவ மலத்தின் அஞ்ஞான இருளைக் கடிந்து ஒளி பாய்ச்சி சிவஞானம் சுடரச் செய்கின்றான.
ஆனால் எதற்காக இந்த ஞானக் கூத்தாகியய மாநடம்?
அன்பது எல்லா உய்ரிகள் அகத்தும் மேலோங்கி நிற்கவே இந்த மாபெரும் பிரபஞ்சக் கூத்தை விடாது ஆடுகின்றான அன்பேத் தானாகி நிற்கும் பரசிவன் அருளேத் தன் திருமேனியாக இருக்கும் அம்மையோடு இணைந்து எல்லார் அகத்தும் அருளே மேலோங்கி நின்றவாறு அன்பே நிறைந்திருக்கும் வகையில் ஆடுகின்றான் இந்த அற்புத பிரபஞ்சக் கூத்தை என்கின்றார் நம் திருமூலர்.
எவ்வளவு அழகான கூத்து அதனை எவ்வளவு அழகாகப் பாடுகின்றார் நம் திருமூலர்!
தொடரும்
உலகன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இடுகை 22: இசையும் கூத்தும் இறைவனும்
இசைக்கலை தமிழ் பண்பாட்டில் பண்டே மிகப் பெரிய அளவின் வளர்க்கப்பட்ட ஓர் கலையாகும். இடைச் சங்க இசை நூற்களாக ‘இசை நுணுக்கம்’ போன்ற பல நூற்கள் நம்மை வந்து அடையாவிட்டாலும் இப்பொழுது சிலப்பதிகாரம் போன்ற் ஒரு சில நூற்களே தமிழர்கள் தம் பண்டைய இசை அறிவினைக் காட்டுவதாக இருந்தாலும். சுமேருத் தமிழில் மிக நுணுக்கமாக இசை வாய்பாட்டு ( கூவு> அகவு) என்றும் நாரதம் என்று அழைக்கப்பட்ட கருவி இசையும் மிக நுணுக்கமாக ஆயப்பட்டுள்ளது சூல்கியின் முதரீபியம்( Hymn B) மிகத் தெளிவாக காட்டுகின்றது. இவ்வரிகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. காண்க:
https://sites.google.com/site/sumerutamiltex/cumerut-tamil-icai
ஆயினும் சைவத்திற்கே உரிய தனிப் பெருமை, வேதாந்திகள் போல் உலகம் ஓர் கற்பிதம் என்றெல்லாம் அதனை புறக்கணிக்காது, அது மெய்யே இறைவன் தன்னை காணத்தரும் திருத்தலம் அதுவே என்று துணிந்து இறைவன் அங்கே நற்கூத்தனாக அம்மையோடு ஆடுகின்றான் என்று பிரபஞ்தையே ஓர் ஆன்ந்தக் கூத்தாக கண்டதுதான்,
இனி கூத்தோடு இசைந்து வரும் இசையையும் குறிப்பிட்டு அதனையும் எவ்வாறு பிரபஞ்வியலோடு திருமுலர் இணைக்கின்றார் என்பதை அடுத்து வரும்பாடல் விளக்குகின்றது
2783
ஏழினில் ஏழாய் இகழ்ந்து எழுத்து ஏழாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்து அமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழிசை நாடகத்தே இசைந் தானே
இங்கு ‘ஏழினில் எழாய்’ நிற்பது குரல் துத்தம் கைக்கிளை விளரி தாரம் உழை இளி என வரும் இசைக் குறிப்புக்கள் பாடல்வரிகளோடு வருவதாகும். எல்லா இசைகளும் இந்த ஏழ் வகையில் அடங்கும் என்பது பண்டோர் குறிப்பு, இப்படி வாய்ப்பாட்டினை எழுவகையான சுரங்கள் வழியாக கணக்கிடும் பழக்கம் சுமேருத் தமிழில் தொடங்கி படிப்படியாக வளர்ந்து வந்துள்ள ஒன்றாகும். இதனையே வடமொழிப் படுத்தி சட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்திமம பஞ்சமம் தைவதம் நிஷாதம் என்றும் கூறுவர்.
இனி இப்படிப்பட்ட இசை வகைகள் இழிந்து எழுத்து ஏழாய் நிற்பது ச-ரி-க-ம-ப-த-நி என்றவாறு எழுத்து எழாய் குறிக்கப்படுவதாகும். இது சட்ஜம் என்று தொடங்கும் இசை வகைஅயில் முதல் எழுத்டுக்களும் ஆகும். சொற்களைத் தவிர்த்து இந்த ஏழு எழுத்துவகையானே ஏழு இசைகளையும் குறிப்பது இங்கு சுட்டப்படுகின்றது
பிறகு இவையும் இகழ்ந்து அதாவது குறைந்து ஒன்றாகி நிற்பது ஓங்காரமாக நாத சொரூபமாக நிற்பதாகும்.
ஆக இங்கு திருமூலர் இசையின் மந்திராயண விளக்கத்தைத் தருகின்றார்.
எல்லா தாளங்களும் பண்களும் ஏழிசைகளின் விருத்திகளேயாக , இந்த ஏழிசைகளும் முடிவில் ஏழு எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டு முடிவில் ஓங்காரம் எனும் ஓரெழுத்தின் விருத்திகளேயாக கருதப்படுகின்றது.
ஆம் எல்லா பண்களோடு வரும் பாடல்களும் ஆடல்களும் ஓங்கார ஓரெழுத்தின் நாத சொரூபத்தின் பல்வேறு விருத்திகளே யாகும்
இது இப்படி இருக்க எப்படி ‘ஏழினில் சன்மார்க்கம் ‘ என்று கூற முடியும்?
சன்மார்க்கம் என்றால இறைவனை அருட்பெருஞ்சோதி வடிவில் தரிக்கத்தரும் மார்க்கமாகும். பள்வேறு உருவ மூர்த்தங்களில் கண்டு கண்டு தொழுது அம்மூர்த்தர்ங்கள் உணர்த்தும் ஞானங்களை எல்லாம் பெற்று பிறகு எல்லா மூர்த்தங்கட்கும் புதையுருவாய் நிற்கின்ற பரஞ்சோதி வடிவைத் தரிசிக்க அகத்தே சிவஞானம் சுடரும்.
இவ்வகையில் தேவாரத் தமிழ் என்பது திருஞான சம்பந்தர் பாடி அருளியதுபோல ‘திருநெறியத் தமிழ்’ அதாவது சாதாரண இசைப்பாடல்கள் அல்லாது மாறாக பண்ணோடு இசைந்துப் பாடப் பாட, அந்த ஓசையின் சிறபாலும் பொருளின் விளக்கத்தாலும் அறிவு ஆழம் ஆழஞ் சென்று அக்கர சக்கரங்கள் எல்லாங் கடந்து ஓங்காரதோடு ஒன்றி அகத்தே சிவஞானமே வெடித்து சுடரச்செய்யும் திறத்தவை யாகும்.
வேத பாராயணம் போன்ற பாராயணங்கட்கு இல்லாத சிறப்பு உள்ளத்தை உருக்கி உயிரைக் கவ்வி ஆழங் கொண்டு சென்று நாத சொரூபமாகிய ஓங்காரத்தொடு உயிரை ஒன்றச் செய்து சிவஞானம் மகிழத் தருவது இந்த தேவாரப் பாடல் போன்ற இசைப்பாடல்கட்கு உண்டு என்கின்றார் திருமூலர்.
ஏன் இப்படி?
உலகில் நடக்கும் இந்த ஏழிசை நாடகத்தில் ஓங்கார இசைப்பில் வெளிப்படும் பரஞ்சோதியாக இறைவன் இசைந்து நிற்பதால் இது மெய்யாகின்றதாம்
இப்பொழுது புரிகின்றல்லவா எத்தனையோ முறையியல்களும் சாதனங்களும் இருக்க ஏன் சைவர்கள் ஆடலையும் பாடலையும் வற்புறுத்தி தங்களது சமயத்தை வளர்த்துள்ளனர் என்று?
ஆடவல்லானாக இறைவன் இந்த ஆடல் பாடல்களில் விரும்பி இசைந்து நிற்கவேதான், ஆடியும் பாடியும் நாம் இறைவனை அடைய முடிகின்றது!
தொடரும்
உலகன்
இடுகை 23: மோகாந்தக் கூத்து
ஓர் கணக்குப் புதிர் போன்ற பாடல் இந்த மோகாந்தக் கூத்துப் பற்றிய கீழ் வரும் பாடல், இருக்கின்ற உரையைத் தழுவியும் புதியதாக சில கருத்துக்களைக் கொண்டும் எனது உரை செல்கின்றது
2784
மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற் பன்னீர் மூலமாய்
மூன்றினி லக்க முடிவாகி முந்தியே
மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே
இங்கு மோகாந்தக் கூத்து என்பது மோகத்தை எல்லாம் மடைமாற்றி சிவஞான மோகமே அல்லது நாட்டமே முடிவான நாட்டமாக அமையும்படி ஆன்மக்களை மாற்றி அமைக்கும் கூத்தாகும்
மோகமாவது பல்வேறு இச்சைகள் அல்லது மூல நாட்டங்கள் அல்லது ஆழிழுப்புக்கள் (instincts) இவை இடகலை பிங்கலை சுழிமுனை நாடிகளாகத் தோன்றி பிறகு ஒவ்வொன்றும் பலவாறு விரிந்து இலட்சம் என மலர்ந்து மோகமயமாயே உயிர்கள் வாழும்படி செய்வதாகும். காட்டாக இடகலை நாடியின் அதிகார வேட்கை இன்னும் பல வடிவங்கள் எடுத்து இல்லத்தில் தானே தலைவனாக ஆட்சி செய்வது, தொழில் துறையில் எதிர்ப்பும் போட்டியும் இல்லாதாக்குவது, அக்கம் பக்கத்துச் செல்வத்தை எல்லாம் தனதாக்குவது போன்றவை யாகும்
இப்படி பலவாறு விரிந்து மலரந்து வளர்ந்து ஆன்மாவை ஆக்கிரமிக்கும் மோகங்கள் அகத்தே முந்தி நின்று ஆன்மாக்களை விடாது பல உலகியல் சுகங்களை தேடுமா விரட்டியவாறு இருக்கும்
இதுவே மோகக் கூத்து, இந்த மோகங்களை எல்லாம் அந்திப்பது அல்லது சங்கரிப்பதும் ஓர் கூத்தாகவே நடை பெறும் அது என்ன கூத்து?
அதுவே சிவஞானக் கூத்து ஆகும். சிவஞானம் வளர வளர உலகியல் மோகங்கள் பட்டு விழும், பொருளற்றதாய் வீணானவைகளாய் விழும்
அது எப்படி ஆடப்படுகின்றது?
ஆறு ஆதாரங்கள் சக்கரங்கள் வழியாக ஆன்மாக்கள் உழைத்து உழைத்து மேலே மேலே செல்லுமா இறைவன் ஆடுகின்றான்
ஆனால் இங்கு ‘மூன்றினில் ஆறு’ என்றால் என்ன பொருள்?
சந்திர மண்டலம் சூரிய மண்டாம் அக்நி மண்டலம் எனவரும் மண்டலங்கள் மூன்றில் ஆறு ஆதாரத் தல்ங்கள் ஏறி உயர்ந்து உச்சிக் கமலத் தலம் சென்றடைவதாகும். அக்நி மண்டலம் இருக்கின்ற அறியாமையை ஆணவ மலத் தொடக்கை எரித்து சாம்பலாக்கிப் போக்கும். சந்திர மண்டலம் இந்த தீக்கையினால் வரும் அவதிகளை வேதனைகளை அமுதப் பால் பெய்து குளிர்விப்பதாகும் சூரிய மண்டலமாவது சிவஞானத் தெளிவை இன்னும் அதிகப்படுத்துவதாகும்
இந்த சிவஞானத்தை வளர்ப்பதே ஒன்று முதல் பன்னிரு கலைகளாக வளர்வதாகும். இங்கு கலை என்பது சிவஞானத் தெளிவின் ஓர் அளவு ஆகும்
இது எப்படி சாதிக்கப்படுகின்றது?
ஐந்தொழில்களாலும் அவை விடாது எல்லா நேரத்திலும் நடப்பதாலும் என்கின்றார் திருமூலர்.
இதுவே முதல் வரியின் பொருள் என்று தெரிகின்றது
‘மூன்றினில் அஞ்சாவது’ முத்தொழில்களாகிய தோற்றுவித்தல் நிலைப்பித்தல் அழித்தல் என்பதாகும். இவையே இறைவன் தன்னைக் காட்டல் எனும் அருளலும் மறைத்தல் எனும் திரோபவமும் சேர்ந்துகொள்ள ஐந்தாகின்றது
இங்கு முந்நூற்று அறுபது என்பது 360 பாகைகள் அல்லது இரேகைகள் உள்ள ஓர் முழு வட்டத்தைக் குறிக்கும். பொருள் என்ன?
இறைவன் தனது சூக்கும தூல பஞ்சகரித்தியங்களை விடாது எல்லா நேரத்திலும் இயற்றுகின்றான், அவனுக்கு ஓய்வே இல்லாத வகையில் தனது ஞானக் கூத்தை உதைக்கின்றான் என்றாகின்றது
மோகங்கள் பலகிப் பலகி விரிந்து இலட்சங்களாகி ஆன்மாக்களை விரட்ட இறைவன் விடாது ஆடியவா தனது பஞ்ச கிருத்திங்களால் ஆன்மாக்களை ஆறு ஆதார சக்கரங்களில் உயர்ந்து உயர்ந்து செல்லுமாக ஊக்கி தனது பஞ்ச கிரித்தியங்களால் மேலும் சிவஞனாம் அகத்தே சுடர்ச் செய்ய ஆன்மாக அற்ப உலகியல் மோகங்களை எல்லாம் இழந்து சிவஞானமே தேடுமொன்றாக ஆகின்றது என்பதே இப்பாடலின் பொருள் என்று தெரிகின்றது
தொடரும்
உலகன்
இடுகை 24: ஞாலங் கடத்தும் நற்கூத்து
எதற்காக இந்த பிரபஞ்சம்- அதன் தோற்றமும் அதனுள் நடக்கும் பல அற்புதங்களும்? இதனை எல்லாம் பொய் கற்பனை என்று வேதாந்திகள் போல் ஒதுக்கி நாம் மெய்யான ஓர் ஞான வாழ்க்கை வாழ முடியுமா? முடியாது. ஞாலத்தைப் பொய் என்று ஒதுக்குவது வேண்டப்படுவது அல்ல, ஞாலத்தைக் கடப்பதே வேண்டப்படுவது அதற்கு இறைவன் இந்த ஞால கடப்புக் கூத்தை ஆடுகின்றான் என்கின்றார் நம் திருமூலர் கீழ் வரும் பாட்டில்
2785
தாமுடி வானவர் தம்முடி மேலுறை
மாமணி ஈசன் மலரடித் தாளிணை
வாமணி யன்புடையார் மனத்துள் எழுங்
காமணி ஞாலங் கடந்து நின்றானே
தாமுடி வானவர்> தாம் முடிவானவர்: ஆம் அனைத்தையும் ஆட்சி செய்யும் பதியாகிய இறைவனே முடிவானவன், ஆதிக்கும் ஆதியாய் தனக்கு ஆதியாக யாதும் இல்லாத அநாதிப் பொருள் இறைவன். இதனைப் போன்றே என்னிரந்த பசுக்களும் ஆணவ்ம் கன்மம் மாயை எனும் பாசங்களும் என்பது திருமூலர் வாக்கும் ஆகும்
ஏனைய எல்லா தெய்வங்களும் அவன் முடிமேல் உறைகின்ற பலவேறு மூர்த்தங்கள்
ஏன் முடிமேல்?
அவன் முடிமேல் கங்கையும் உண்டு இளம்பிறையும் உண்டு. எவ்வாறு இந்த ஆகாய கங்கையும் பாதி மதியும் இறைவனது திருகூத்திற்கு கருவிகளோ அவ்வாறே இந்த முடிமேல் உறையும் மூர்த்தங்கள், அல்லது தெய்வ வடிவங்கள்,
இம் மூர்த்தங்களில் மிகச் சிறப்பான மூர்த்தம், ஓர் கிரீடத்தில் சுடரும் மாபெரும் வைரக் கல் போல விளங்குவது உயிர்கட்கு வீடுபேறு அளிக்க வல்லது ஈசன் எனும் வடிவம் ஆகும்
இது உடன் நமக்கு சதாசிவ மூர்த்தியை நினைவிற்கு கொண்டு வருகின்றது. வாமதேவம் அகோரம் சத்தியோசாதம் தத்புருடம் என்று வந்து முடிவில் ஈசானம் எனும் ஐந்து முகங்கள் சதாசிவனுக்கு உண்டு என்பர். கீழ்நோக்கும் அதோமுகமாக ஆறாவதோர் முகம்.
இந்த முகங்கள் ஒவ்வொன்றும் ஓர் ஆழிழுப்பை ஆன்மாக்கள் அகத்தே பதியவைத்து அந்த ஆன்மாக்கள் பலவேறு செயல்களின் ஈடுபடுமாறு செய்வதாகும்
காந்தம் இரும்பை வலிப்பது போல, இந்த வலிப்பு இருக்கும் என்பார் மெய்கண்டார். ஆக இந்த ஆழிழுப்புக்கள் ஆழ் ஈர்ப்புகளும் ஆகும்.
இவற்றில் வாமதேவ முகம் செய்வது உயிர்கள் உள்ளத்தில் காமவேட்கையை பதிவிப்பதாகும். அகோரம் என்பது அன்பினைக் காட்டும் பண்பினை பிற உயிர்களை நேசிக்கும் குணத்தை பதிவிப்பதாகும். வாமதேவம் இதற்கு இட்டுச் செல்லும். சத்தியோசாதமாவது மெய்ஞானமே வேண்டபப்டுவது என்றவாறு ஆன்மாக்களை உண்மைவிரும்பிகளாக ஆக்குவதாகும். இதன் அடிப்படையில் எழுவதே தன்னைப் பற்றியக் கல்வி. இது தற்புருடன் முகத்தால் ஆகுவது.
இவ்வாறு தற்கல்வி சிறக்க அதுபொழுது சிவஞானம் அகத்தே சுடருமாறு செய்து ஆன்மாக்கள் மாட்டு வீடுபேற்றை இச்சிக்கச் செய்வது இந்த மாமணியாகிய ஈசான முகமாகும்
ஆன்மாக்கள் கற்று கற்று மேம்பட்டு இனி வேண்டப்படுவது சிவஞானமே என்ற தெளிவிற்கு வர, அவர்கள் இந்த ஈசனையே ஆழ நேசிக்கும் பத்திமான்களாக எழுந்து அவனையே தொழுது அவனடியேச் சார்ந்து நிற்பர். அதுபொழுது காய்கின்ற மணியாகிய காமணி அதாவது சிவஞானத்தை காய்கின்ற சுடர்கின்ற இரவிமதி வடிவில் காய்கின்ற ஈசன், உயிர்கள் இந்த ஞாலத்டையேக் கடந்து சிவலோகமாகிய உச்சிக் கமலத் தலம் அடைய உதவுவன் என்பதாம்
சிவஞானம் அகத்தேச் சுடர, கற்றல் ஓர் முடிவிற்கு வர பிரபஞ்சச் செலவும் வேண்டாதாகின்றது, ஞாலக் கடப்பு மெயாகின்றது
தொடரும்
உலகன்
இடுகை 25: எரிந்தவன் ஆடல்
வேதீயத்திற்கு அடிப்படையான எரி ஒம்பல் சைவத்திற்கும் அடிப்படியான ஒன்றுதான். நடராசனாக ஓர் திருக்கையில் எரி ஏந்தியவனாக தன்னைக் காட்டுகின்றான இறைவன். சுமேரு பண்பாட்டில் ‘எரிது” ( Eirdu) என்ற ஓர் நகரே இருக்கின்றது, அங்கு தான் நாகரீகம் தோன்றியது என்றும் அங்குதான் ஏண்கீ( < ஏன்சீ) எனும் சிவனுக்கு ஓர் பெரும் கோயில் எழுப்பட்டது என்றும் வரலாறு கூறும்
இந்த எரி ஓம்பலுக்கு அடிப்படையாக இருந்தது சுமேரியர்களின் Solar Cosmology என்பார் Dr Alexandar Jacob அவர்கள். இதனைச் சார்ந்தே கீழ்வரும் திருமூலரின் பாட்டு அமைகின்றது
2788
புரிந்தவன் ஆடிற் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை
புரிந்தவன் ஆடிற் பல பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல் கண்டு இன்புற்றவாறே
இங்கு Hermeneutics எனப்படும் நூனெறி கருத்துக்கள் விரவி கிடப்பதைக் காண்க. புரிந்தவன் என்பது இறைவன் எல்லாம் அறிந்தவன், சர்வக்ஞன் என்பதாம் கற்று கற்று அறியாமை நீக்கி புரிந்துகொள்தல் மலத்தால் பந்திக்கப்பட்ட ஆனமாக்கள் இயலபு. அநாதி முத்த சித்துருவாகிய இறைவனுக்கு ஆணவ மலத் தொடக்கு இல்லை என்பதால் அவனுக்கு அறியாமை இல்லை.
இனி தெரிந்தவன் என்றால் அனைத்தும் தெரிந்தவன் அதாவது முக்காலும் தெரிந்தவன். உள்ளபடியே காலவுணர்வு அறவே இல்லாத இறைவன் அனைத்தோடும் அவையேத் தானாக நிற்பதின் சுட்டி அறியாது அனைத்தொடும் ஒன்றித்து நின்று காணாக கண்டு நோக்காது நோக்கி அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்கின்றவன்
அனைத்தையும் புரிந்துகொண்டு தனது சங்கற்ப மாத்திரையால் நொடித்து ஆட்ட , எல்லா புவனங்களும் உடன் ஆடும். அவன் ஆட்ட ஆடாதார் யார் உண்டு? அவனது அருளாணைக்கு விஞ்சிய யாதும் இல்லை என்றவாறு.
மேலும் நமது சிந்தையின் ஓட்டமும் அளவும் அவ்னது ஆட்டத்தை ஒட்டியே அமைகின்றன. அவன் ஆடாவிட்டால் நமது சிந்தை கற்போல் ஆகி உறைந்து விடும் நெகிழ்வே சலனமே இருக்காது
சிந்தனை யாண்டும் ‘அது நான் ஆக வேண்டும்’ என்றவாறு ஓர் நுதிப்பைப் பற்றியே (projection) செயல்படும். ஓர் ஆன்மா தனது சொந்த முயற்சியால் எப்படி தலைமுடியை இழுத்து தானே உயர முடியாதோ அதுபோல தானே ஓர் எதிர்நிலை ஒன்றை நுதித்து அடுத்த பக்குவத்திற்கு உயர முடியாது
எல்லாம் தெரிந்தவன் ஓர் ஆன்மாவையும் பிழையற தெரிந்தவனாக யாதை பதிவித்து ஓர் நுதிப்பினைத் தேற்றி “நான் அதுவாக வேண்டும்’ எனும் இச்சையை எழுப்புகின்றானோ அதற்குத் தகத்தான் ஆன்மாக்களின் செயல்பாடுகளும் கற்றலும்
இனி சிவன் ஆட ஏன் பல பூதங்கள் ஆடும் எனக் கூற வேண்டும்? யார் இந்த பூதங்கள்?
புவனமே ஆட, பஞ்ச பூதங்களும் ஆடும் என்பது கூறப்பட்டு விட, இங்கு பூதங்கள் என்பவை சிவகணங்கள் என்று கொள்வதே பொருந்தும்
சர்வக்ஞனாகிய இறைவன் ஆன்மாக்களையும் தன்னைப் போல எல்லாம் தெரிந்த ஆன்மாக்களாக எழச் செய்ய ஆடும் போது உலகில் பல திருவிளையாடல்கலை நடத்தி அதன் வழி ஞானபோதனைகள் நடக்க உதவுவனவே இந்த சிவகணங்களாகிய பூதங்கள் ஆகும்
இதெல்லாம் எதற்காக?
எல்லா ஆன்மாக்கள் ஆகத்தேயும் ஆணவ மல பந்தத்தால் செறிந்திருக்கும் அஞ்ஞான இருளை, ஞான அந்தகாரத்தை கடுந்திறல் ஒளி பாய்ச்சி அகற்றுவதே இங்கு எரிந்தவன் ஆடலாகும். அக்நி வடிவில் எரிந்து இருளைப் பாருவதாகும்
வாழ்க்கை என்பது கற்றலை அடிப்படையாகக் கொண்டது. உலகில் எல்லா இடத்திலும் எப்பொழுதும் போதனைகள் நடந்து கொண்டே இருக்கின்றன
ஞானம் என்பது வேதாகமங்கள் போன்ற மறைநூற்களில் புதைந்து கிடப்பது மாத்திரம் அல்ல, அவை பண்டையோர் புரிந்துகொண்டவாறு வரும் பதிவுகள், அவை சிவஞானம் தேற்றிக்கொள்ள உதவும். ஆனால் வாழும் குருவாக சிவநடராசனே ஆடி ஆடி அனைத்தையும் ஆட்டி ஆட்டி போதித்துக் கொண்டே இருக்கும்போது, அந்த போதனையை கண்டு ஞானத் தெளிவு அடையும்போது, வருகின்றதே ஒர் இன்பம், அதைதான் கண்டு இன்புற்றேன் என்கின்றார் நம் திருமூலர்.
தொடரும்
உலகன்
இது நன்றாக இருக்கிறது. எங்கிருந்து இந்த விக்ரமாதித்யன் பெரிய எழுத்துப் பிடித்தீர்கள், திரு. உலகன். நானும் பயன்படுத்திப்பார்க்கிறேன்.தமிழ்த்தேனீ சபேசன் மாதிரி நல்ல மூட்லெ இருக்காறு.
அன்புடன்தமிழ்த்தேனீ
2013/10/28 K. Loganathan <k.ula...@gmail.com>
உலகன்திரு தேனீ அவர்களேநிச்சயமாக செய்கின்றேன். பிரச்சினையே இல்லை
இடுகை 26 அருட் சத்தியின் ஆட்டம்
அருள் என்னும் சொல் சைவத்திற்கே உரிய ஓர் சொல்லாகிவிட்டது. அருள் முந்துறுதத் தான் மக்கள் அகத்தே அன்பு முந்துறும் என்று தொல்காப்பியத் தமிழர்கள் அறிந்திருந்தனர். இதன் வளர்ச்சியாக செல்வமாகியப் பொருளை உலக வாழ்க்கைக்கும் அருளை சமய வாழ்க்கைக்கும் உரிதாக்கினார் திருவள்ளுவர். ஆனால் காரைக்கால் பேயாரோ ‘அருளே உலகெல்லாம் ஆள்விப்பது’ என்று முழங்கி அருளை விஞ்சிய ஓர் சத்தி இல்லை என்ற் துணிந்து கூறினார்.
உலகெல்லாம் நடந்து கொண்டே இருக்கும் இந்த சிவக்கூத்தும் அருள் கூத்தே என்கின்றார் நம் திருமூலர்,. ஆனால் இதன் பொருள்தான் என்ன?
2787
ஆதி நடஞ் செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடஞ் செய்கை யாரும் அறிகிலர்
ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடமாடல் ஆம் அருட்சத்தியே
இங்கு ஆதர்கள் என்பார் ஞானதிருஷ்டி கைவந்த இருடி கணங்கள் ஆகும். இவர்கள் கூட ஆதிக்கும் ஆதியாய தான் அநாதியாய் நிற்கும் பரசிவன் தானே தனித்து உலகையெல்லாம் ஆட்டிப் படிக்கின்றான, தோற்றுவித்து நிலைப்பித்து அழித்து தன்னை அருளியும் மறைத்தும் ஆடுகின்றான் என்பர். ஆயினும் எதற்காக இந்த மாநடம் என்பதை இவர்கள் கூட அறிந்தாரில்லை யாம்.
இறைவன் கூத்தன் வேடம் எடுத்து கூத்து உதைப்பது உண்மைதான் என்றாலும் எதற்காக இக்கூத்தை உதைக்கின்றான என்று அதன் காரணத்தை இந்த ஆதர்கள் கூட அறிந்தார்கள் இல்லை, தனது ஆநந்தத்திற்காகவே ஆடியும் பாடியும் பலவாறு நொடிக்கின்றான் என்று கூறுவர்.
இயல்பாகவே சச்சிதாநந்த சொரூபியாக இருக்கும் இறைவன் தனது ஆனந்த மேலீட்டால ஆடியே களிக்கினிறான் என்று ஆனந்தக் களிப்பையே காரனமாக் கூறுவர்.
ஆனால் பரிபூரணனாகிய இறைவனுக்கு இப்படிப்பட்ட காரணங்களை கற்பிப்பது பொருந்தாது. அவன் தன்னுள் நிறைந்தவன், எவ்வித குறையும் இல்லாத பரிபூரணன் என்பதின் இப்படிப்பட்ட காரணங்கள் ஆதர்கள் உள்ளத்துளே எழுகின்ற கற்பிதக் காரணங்களேத் தவிற உணமையான அறிவு அல்ல வாகும்.
அப்படியானால் உணமையான விளக்கம் தான் என்ன?
இறைவன் நாதசொரூபமாக ஞான மயனாக மகாயோகியாக இருக்கின்ற போது அவன் தன்னுள் அடங்கி தானேத் தானாக இருப்பான். ஆனால் அதுபொழுது அருட்சத்தியாக விந்துவின் அம்மை அகதே வெடித்தெழ, அன்பே தானாக அன்பே சிவன் என்றவாறு சுடர்வான். அதுபோழுது இந்த அருட்சத்தியின் மேலீட்டால் அன்பின் மிகுதியால் ஆணவ மலத்தால் பந்திக்கப்பட்டு அஞ்ஞான இருளில் கிடக்கும் ஆன்மாக்களை ஈடேற்றும் பொருட்டு அஞ்ஞானம் போக்கி ஞானம் வளர்க்கும் இந்த அற்புத கூத்தை உதைக்கத் தொடங்குகின்றான்
அருட்சத்தியின் மேலீட்டால் இந்த ஆனந்த சிவத் தாண்டவம் ஆடப்படுகின்றது என்பதின் இந்த ஆட்டத்தின் விளைவாக ஆன்மாக்கள ஞானம் வளர்ப்பது மாத்திரம் அல்ல, அன்பினையும் வளர்த்து தாமும் அருட்சத்தியாகவே வளர்வர் அதனால தொண்டே வாழ்க்கையாகவும் வாழ்வர் என்பதாகும்.
சிவன் அருட்சத்தியின் காரணமாக மகாத் தொண்டனாக ஆடி ஆடி ஆன்மாக்களுக்கு ஞானம் புகட்டி அதே பொழுது அன்பே வடிவாக்கிட, அந்த ஆன்மாக்களும் சிறுதொண்டர்களாக நாயன்மார்களாக எழுந்து சிவன் அடியார்களாக தொண்டே வாழ்க்கையாக வாழ்வர் என்பதாம்
தொடரும்
உலகன்
இடுகை 27: வேதாந்த சித்தாந்தம்
திருமூலர் வேதமும் வல்லவர் வேதாந்தமும் வல்லவர். சைவ பாரம்பரியத்தில் எல்லா சமயங்களையும் கற்று அறிந்து அவற்றைப் பரபக்கமாக்கி யாது அதற்கு இடங் கொடுக்காது போகின்றதோ அதுவே சுபக்கமாக ஆகவே சித்தாந்தமாக கொள்ளப்படும். திருமூலர் வேதத்தையும் கண்டிக்கின்றார் வேதாந்தத்தையும் கண்டிக்கின்றார். அவர் கருத்து வேதாந்த சித்தாந்தமாகும்.. இது ‘தத் துவம் அசி” எனும் மகாவாக்கியப் பொருளை சைவத்தின் முப்பொருள் உணமையின் அநாதிபொருளியலுடன் காணபாதாகும். அதனால் அதுவரை போற்றப்பட்ட பிரம்மமே பொருள் எனும் எகாத்துவிதத்தைக் கண்டிப்பதாகும்
இந்த மகா வாக்கியமும் சிவக் கூத்தே என்பதாகச் செல்கின்றது திருமூலரின் கீழே வரும் பாடல்
2788
ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து
அன்புறு கோணம் அசிபதத்து ஆடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றி நின்று ஆடவே
அன்புறு எந்தை நின்று ஆடலும் உற்றானே
இங்கு ‘தத் துவம்” எனும் ‘அது நீ’ எனும் அவையே இருபதமாகும். இங்கு ‘அது’ எனும் சுட்டு ஒன்பது பேதங்களில் இறைவன் தனைக் காட்டி யருளும் மூர்த்தங்கள் ஆகும். அவை பரதெய்வங்கள் சத்தி சாதாக்கியங்கள் எனும் பிரமன் திருமால் உருத்திரன் மகேஸ்வரன் சதாசிவன் விந்து நாதம் சத்தி சிவன் ஆகிய மூர்த்தங்கள் ஆகும்
இனி ‘துவம்’ என்பது நீ எனும் முன்னிலை சுட்டின் நவ பேதங்கள் ஆகும். இந்த நவ பேதங்களாவன ஆணவ மல பந்தத்தால் அஞ்ஞான இருளில் கிடக்க அதனால் சார்ந்ததின் வண்னமாகவே திகழும் பண்பின் இந்த நவ மூர்த்தங்களைச் சார்ந்து நவ பேதங்கள் உடைய ஆன்மாக்களாக விளங்குவதாகம் திருமாலைச் சார்ந்து நாரண பத்தர்களாக விளங்குவதுபோல என்று கொள்க.
இனி அசி பதப்பொருள் ‘ஆனாய்” என்று ஆகவே “அது நீ ஆனாய்” என்றவாறு ஓர் ஆழமான நுதிப்பின் எழுகின்ற ஓர் கிளவி என்று குறிப்புக்கால பொருண்மையுடன் திகழும் ஒன்றாக இதன் சிதாந்தப் பொருள் விளக்கம் தப்படுகின்றது.
ஆன்மாக்கள் தமது அஞ்ஞான இருளின் காரணமாக சார்ந்ததின் வண்ணம் விளங்கும் இயல்பின் இங்கு இறைவன தனை பல மூர்த்திகளாகக் காட்ட ஆன்மாகள் அவற்றைப் பற்றி ‘அதுவேத் தான்” என்றுவாறு நுதிப்பினைப் பற்றி தன்னுள் இருக்கும் அஞ்ஞான இருளைக் கெடுக்கும் என்றவாறு
இங்கு ‘அன்புறு கோணம்’ ஆவது அளப்பரிய மெய்பத்தியின் எழும் இறைசார்பில் அழுந்துதல் ஆகும். ஆழமான அன்பினாலேயே இவ்வாறான அழுந்துதல் நடக்கும் சிவ பத்தி நாரண பத்தி சத்தி பத்தி போன்ற பத்திகள் இவ்வாறேத் தோன்றுகின்றன,
இங்கு ‘துன்புறு சத்தி” யாவது ஆணவ மலச் சத்தியாகும். இந்த இருள் சத்தி ஆன்மா அகத்திலே இருக்கும் வரை பலவகையான வேதனைகளும் துன்பங்களும் துயரங்களும் விடாது வந்துகொண்டே இருக்கும். அதனால் இந்த ஆணவ மலத்தின் வன்மையைக் கெடுக்கும் வகையிலேயே இறைவன் இந்த நவ பேத வடிவங்களை எடுத்து இந்த வல்லிய பொல்லாத மலச் சத்தையை இல்லாது போக்கவே இந்த பிரபஞ்சக் கூத்தை ஆடுகின்றான என்கின்றார் நம் திருமூலர்.
ஆக திருமூலர் கூற்ருப்படி ‘தத் துவம் அசி; என்ர மகா வக்கியப் பொருள் வேதாந்திகல் கூறுவது போல, ‘ஆன்மா பரப்பிரம்மமே வேறல்ல” என்றவாறு அத்டுவிதம் பகரவில்லைஅ, மாறாக தெய்வ மூர்த்ஹங்கலைச் சார்ந்து அவையே தானாக நின்றும் அதன்வழி ஆணவ மலத்டின் வலுவான பிடியைத் தளர்த்தி சுத்டமாகும் கருத்டதுவாகும். என்கின்றார் திருமூலர்.
இதுவே வேதாந்த சித்தாந்தம் அதாவது வேதாந்தமாகிய மகா வாக்கியங்களின் சிந்தாந்த மெய்ப்பொருள். இதனால திருமூலர் காலத்திற்குப் பிறகு தோன்றி இருக்கக்கூடிய ஆதி சங்கரரின் எகாத்துவ மாயா வாத வேதாந்தமும் கண்டிக்கப்படுவதைக் காண்க.
இனி எதற்காக இதையெல்லாம் இறைவன் செய்ய வேண்டும் ? இவ்வாறு வேதாந்தக் கூத்து உதைக்க வேண்டும்?
‘அன்புறு எந்தை ஆடல் உற்றானே” என்பதில் விளக்கம் கிடைக்கின்றது. இறைவன் தூர தூர ஆன்மாக்களின் தற்சொரூபமாக நிற்கும் பிரமம் அல்ல. மாறாக அனைவருக்கும் தந்தையாய் அன்பு மீதூற அவர்கட்கு நன்மை செய்யும் வககயில் இந்த வேதாந்தக் கூத்தை உதைக்கின்றான் என்றவாறு.
தொடரும்
உலகன்
இடுகை 28: சதாசிவ கூத்து
ஆறுமுகத் திருமுருகனோடு பெரிதும் தொடர்புடையது ஆறுமுக சதாசிவம் எனும் இறை வடிவம். திருமூலரே தமிழ் இலக்கியத்தில் சதாசிவ மூர்த்தியை முதன் முதலில் பாடியவராகத் தெரிகின்றது. பல சிவ மூர்த்தங்களில் மிகச் சிறப்பான ஒன்றாகத் தெரியும் இந்த மூர்த்தம் தொல் ஆகமங்களில் விளக்கப்பட்டிருக்க்லாம். ஆயினும் திருமூலரே ‘ச்தாசிவனைக் கண்டேன்’ என்று கூறுவதும் திருமந்திரத்தை ‘சதாசிவ ஆகமம்’ என்றே அவர் பெயரிட்டிருப்பதையும் காண, திருமூலர நேரடியாக சாதாசிவ தரிசனம் பெற்றவராக இருந்திருக்க வேண்டும். அந்த சாதாசிவ மூர்த்தத்தின் உட்பொருளை நலமே அறிந்தவராக இந்த பாடலையும் எழுதியிருக்க வேண்டும்
2789
தத்துவம் ஆடச் சதாசிவந் தானாடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட
வைத்த சராசரம் ஆட மறையாட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே
முதல் வரியை “சதாசிவன் தானாடச் தத்துவம் ஆட” என்று கொள்ள வேண்டும். இங்கு தத்துவங்கள என்பவற்றை சாங்கீயர்கள் 24 என்று கணக்கிட, சைவர்கள் 36 என்றும் அவற்றுள் உட்பிரிவுகளாக இன்னும் பல பகுப்புக்களை உண்டாக்கி 96 என்றும் கூறுவர். சில சித்தர்கள் இன்னும்பல தத்துவங்களை அனுமதித்து 106 என்றெல்லாம் கூறுவர். ஆயினும் அடிப்படையில் சித்தாயும் அசித்தாயும் விளங்கும் உலகப் பொருட்கள் அனைதிற்கு மூலத் தனிமங்களாகக இவையே இருக்கின்றன,
இவை தாமே ஆடாதாம். இங்கு ஆடுதல் என்பது பலவகையான தோற்ற மாற்றங்களை உடைத்தாகி பல உருவங்களைப் பெறுவதாகும் நியூட்டனின் Inertia விதி இங்கு பயில்கின்றது போலும்.
இவற்றை, தானே தனக்குத் தலைவனாகிய தற்பரனாகிய இறைவன் ஆட்டவே அவை ஆடுகின்றன, கலந்து புணர்ந்து பிரிந்து திரிந்து பிளந்து தனித்து மீண்டும் சேர்ந்து என்றெலாம் செய்து பல உருவங்களை உண்டாக்கி இந்த அண்டமாய அதற்குள் வதியும் சரரசரமாய் விளங்குகின்றன.
இவ்வாறு ஆட்டுவதற்கு எதற்காக சதாசிவ வடிவம் எடுக்க வேண்டும்?
சதாசிவ மூர்த்திக்கு அதோமுகத்தோடு ஆறு முகங்கள் உண்டு. அந்த ஐம்முகங்கள் முறையே வாமதேவம் அகோரம் சத்தியோசாதம் தற்புருடம் ஈசானம் ஆகியவை ஆகும்.
இந்த முகங்கள் ஒவ்வொன்றும் ஆழிழுப்புக்களை சித்து அசித்துப் பொருட்கள் அனுபவிக்குமா இருத்துவனவாகும். சித்துப் பொருட்களைக் காணும் போது வாமதேவம் காமவேட்கை, அகோரம் அன்பு, சத்தியோசாதம் மெய்யறிவு தற்புருடம் தன்னறிவு ஈசானம் வீடுபேறு அடைதல் என்றவாறு மிக ஆழமான வேட்கைகளை அகத்தே பதிவிப்பன வாகும். ஆன்மாக்களின் மல பந்தங்களைக் காணும் முகமே அதோமுகம் என்று புரிந்துகொள்ளலாம்
இப்படிப்பட்ட ஆழிழுப்புகள உலகெல்லாம் பதிய, அவை ஆன்மாக்கள் அகத்தேயும் பதிய, மனம் புத்தி ஆங்கரம் சித்தம் எனும் அந்தகரணங்களில் மூலமாகிய சித்தத்தில் பதிகின்றன, பலவேறு வேட்கைகளை எழுப்ப உயிர்கள் பல்வேறு தேடல்களில் விழுகின்றன. இவையே எல்லா உயிர்களையும் விரட்டி விரட்டி பல செயல்களை செய்து இச்சித்ததை அடையுமாறு தூண்டுகின்றன.
சித்தம் ஆடும் போது ஏன் சிவசத்து தானாட என்றும் கூறவேண்டும்?
சிவசத்தி என்பது விந்து நாதமாகிய சிவ தத்துவங்களோடு இறைவன் இணைந்து ஒன்றாகி சிவமாய் சத்தியாய் விளங்கி ஆடுவதாகும். இந்த நாத விந்த நர்த்தனத்தில் ஒரு கூறே சீவராசிகள் ஆனாய் பெண்ணாய் பிறப்பதுவாகும்
இதுவே உலகில் வாழ்வு பெற்று வாழும் வைத்த சராசரம் ஆகும். எல்லாமே மூலத்தில் நாத விந்து நர்த்தனம் கொண்டுள்ளவையே.
இது இறைவன் அம்மையோடு ஆடும் ஆனந்தக் கூத்து ஆகும். அது எப்படி? அது ஏன் ஓர் ஆனந்தக் கூத்தாகும்?
இந்த கூத்தினால் மறை ஆடுகின்றது. ஆணவ மல பந்தத்தால் ஞான அந்தகாரத்தில் கிடக்கும் ஆன்மாக்களும் பெரும்ப்பாலான அறிவுகள் எல்லாம் அவர்கட்கு கிட்டாத எட்டாத மறையாகவே (Unconscious) கிடக்க இந்த கூத்தினால தான் அவை மறைப்பிலிருந்து வெளிப்பட்டு தெள்ளிய ஞானமாக உயிர்களின் இலாடதானத்தே, முன்பக்க முளையில் தெள்ளத் தெளிந்த ஞானமாக சுடரும். இதுவே சிவஞானமாகி ஆன்மாக்களுக்கு வீடுபேற்றையும் ஈட்டித் தரும்
இப்படி ஒன்று நடக்க அது இறைவனுக்கு ஆனந்தத் தாண்டவமாகத்தானே இருக்க வேண்டும்?
தொடரும்
உலகன்
இடுகை 29: சித்தனார் ஆட்டம்
சுமேரு காலத்திலிருந்தே சிவத் தாண்டவம் சித்தரீயக் கருத்துக்களோடு தொடர்புற்றிருந்ததை சுமேரிய சுவர்க்கபுரி பாடலில் காண்கின்றோம். ஏண்கீ எனும் சிவன்( <ஏண்சீ) தூயவள் எனும் நின்சிக்கில்லாவுடன் நடம் பயிலவேதான், உலக மக்களும் மற்றும் ஏனைய உயிர் இனங்களும் அன்பு பாராட்டி நோய் நொடியின்றி நெடுங்காலம் நலமே வாழ்கின்றார்கள் என்ற குறிப்பு அங்கு உண்டு.
சுமேருத் தமிழில் ‘சித்து” (sid) என்றாலே ‘அறிவு ஞானம்’ என்று தான் பொருள்படும். ஆக சித்தர்கள் என்றாலே சிவஞானிகள் என்றறே பொருள்படும் என்று தெரிகின்றது.
இந்த சித்தர்கள் காண இறைவன் தானும் ஓர் எல்லாம் வல்ல சித்தனாகி ஆடுவதே இங்கு ‘சித்தனார்’ ஆட்டம் எனப்படுகின்றது
2790
இருவருங் காண எழில் அம்பலத்தே
உருவோடு அருவோடு ஒரு ரூபாரூபமாய்த்
திருவருட் சத்திக்குள் சித்தன் ஆனந்தன்
அருளுருவாக நின்று ஆடல் உற்றானே
இங்கு ‘இருவர்’ என்பது திருமூலரோடு அகத்தியருமாக இருக்கலாம். இவர்களே சிவக்கூத்து தரிசனம் கண்ட சித்தர்கள் என்பதற்கு பல குறிப்புக்கள் உண்டு. சிலர் பதஞ்சலி என்றும் புலிப்பாணி என்று கூறுவர். ஆனால் பதஞ்சலி யோக சூத்திரங்களில் சிவத்தாண்டவக் குறிப்புக்கள் இல்லை.
இவர்கள் காண உயிர்கட்கு அவர்களது அறிவுத் திறனுக்கு ஏற்ப. மனித மிருக உருவங்களோடு ஒருவாறு ஒத்து வருகின்ற முறையில் பல மூர்த்திகளாய் வடிவெடுத்தும், மேலும் மறையாக நின்றே பல செய்யும் அரூவ மந்திரத் திருமேனிகளாய் நின்றும் மேலும் பரஞ்சோதி வடிவம் போன்ற ரூபா அரூபமாக வெல்லாம் தோன்றி உயிர்கட்கு ஞான போதகம் நடத்துவான் இறைவன் என்ற கருத்து இங்கே காணக் கிடக்கின்றது.
இந்த திருகூத்துக்கள் அனைத்தும் ஓர் சித்தன் மனநோய் உடல் நோய் ஆகியவற்றை தக்க மருந்தின் வழியும் பிற வழிகளிலும் போக்கி நலம் பெற்று உய்ய உதவுவதுபோல உதுவனவாகும். அதனால் இந்த ஆட்டங்கள் திருவருள் சத்திக்குள் ஆடப்படுவதாக ஆகின்றது.
இறைவன் அருளே அன்பே வடிவாக நின்று கருணையே மேலிட நோய்களைப் போக்கி நலமே வாழவே இந்த சித்தனார் ஆட்டமாகும்
இங்கு ஆனந்தனாகவும் இருப்பதும் இதே காரணமாகத்தான். நோய்நொடிகள் அற்று உடலும் உள்ளமும் சிறப்பாக இயங்க ஆனந்தமும் கூடிவருவதின், இறைவன் சித்தனாகவும் ஆனந்தமே வடிவாகவும் எழுந்து நின்று இந்த உடல் மருத்துவ மனோ மருத்துவ ஆடல் புரிகின்றான் என்றவாறு
இங்கு மேலே விளம்பப்பட்ட உருவம் அருவம் ரூபாரூபம் போன்ற சொற்கட்கு இன்னொரு வகையிலும் பொருள் காணலாம். அருவம் என்பது எவ்வகையிலும் தோற்றம் இல்லாத மந்திர சொரூபம் ஆகும். உருவம் என்பது இந்த மந்திர சொரூபம் பொறிலியப் பார்வைக்கு வரும் வகையில் தோற்றம் அருளப்படுவது. ரூபாரூமாவது மந்திர சொரூபத்தில் இருந்தாலும் கனவு போன்ற அவத்தைகளில் தோன்றும் வகையில் இருப்பனவாகும்
இவ்வாறு தெரிய வைத்தும் மறைவாக விளையாடியும் இறைவன் உடல் உளநோய்கட்கு சிகிச்சை செய்யும் வகையில் ஆடுவதால் இது சித்தனார் ஆட்டம் ஆகின்றது போலும்
தொடரும்
உலகன்
இடுகை 30: நாதாந்த நற்கூத்து
கீழே வரும் பாடலில் திருமூலர் விளம்பும் சிவம் ஆடவே சத்தி ஆடுகின்றாள் எனும் கருத்து மிகத் தொன்மையானது, சுமேரிய காலத்திலிருந்து வருவது. அங்கு சிவன் ‘ஆண்’ என்றும் சத்தியாகிய அம்மை ஈனன்னா என்றும் அழைக்கப்பட, எல்லா ஆற்றலகளும் அம்மைக்கு ஆண் எனப்பட்ட சிவனாலேயே அருளப்பட்டது எனும் கருத்து அங்கு உண்டு.
காண்க:
14
an-ne me-si-ma nin ur-ra u-a
Endowed with me's by An lady mounted on a beast
ஆண்ணே மெய் சீயிம்ம நின் ஊர ஓவுஅ
15. inim-ku-an-na-ta inim-du-du
Who makes decisions at the holy command of An
எனம்கோ ஆண்ணத்த எனம் தூது
இங்கு அம்மையே கொற்றவையாக அரிமா மேல் வருவது , ஆண் எனபப்டும் சிவனாலேயே சத்தி அருளப்பெற்று அவன் ஆணையின் படியே செயல்புரிவது போன்றவை நலமே விளக்கப்படுகின்றது
2791
சிவம் ஆட சத்தியும் ஆடச் சகத்தில்
அவம் ஆட ஆடாத அம்பலம் ஆட
நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்
சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத்துள்ளே
ஆம் அசையாது யாதும் செய்யாது மகாயோகியாக சமைந்து விட்ட பரசிவன் கருணை வைத்து தான் அசைந்து ஆடத்தான் சத்தியும் அவன் ஆணைகட்கு ஏற்ப, அவன் அசைவுகட்கு ஏற்ப ஆடுகின்றாள். அசைவுகளின் மூலமெல்லாம் சிவனே, அவன் அசையத்தான் அம்மையும் அசைகின்றாள், ஆடுகின்றாள்.
ஏன் இந்த அசைவின் ஆட்டத்தின் தோற்றம்? தொடக்கும்?
இந்த பிரபஞ்சத்தில் நல்லது மாத்திரமே இருந்து நடப்பதெல்லாம் நல்லவையாகவே இருந்தால். அசைவும் பலவேறு ஆட்டங்களும் தேவையில்லையே?
இந்த பிரபஞ்சத்தில் அநாதிப் பொருட்களாக இறைவனோடும் ஆன்மாக்களோடும் ஆன்மாக்களைப் பந்தித்திருப்பதாக அவம் எனப்படும் மலங்களும் உண்டே? அவை அசைக்கப்படாது பலவகையான கிளர்ச்சிகட்கு ஆட்படுத்தப் படாது இருந்தால், ஆன்மாக்கள் எப்படி அவற்றின் வல்லியப் பிடியிலிருந்து விடுதலையாகி சுத்தமாக முடியும்? வீடுபேறு அடைய முடியும்?
அவையும் பலவாறு அசைக்கப்பட வேண்டும் ஆடல் உறவேண்டும் சிவன் ஆட சத்தியும் ஆட, அவமாகிய இந்த மலங்களும் அசைவுற்று பலவாறு ஆடுகின்றவாம், ப;அ மாற்றங்களை அடைகின்றனவாம்
இந்தப் பின்னணியில் ‘நவமான தத்துவ நாதாந்தம் ஆட’ என்ற வரி வழி என்ன பொருள் உணர்த்தப்படுகின்றது?
நவம் என்றால் ஒன்பது என்றும் புதிய என்றும் பொருள் படும். ஒன்பது சிவசத்தி உருவ பேதங்கள் என்று கொண்டால் ‘நாதாந்தம்’ என்பதற்கு பொருள் விளங்காது போய் விடுகின்றது. ஆதலால் ‘நவமான தத்துவ நாதாந்தம் ஆட; என்பதை புதிமையாக சிவஞானிகளால் பரிந்துரைக்கப்படும் நாதாந்தமாகிய ஓங்காரமும் அதனின்று எழும் எல்லா அக்கரங்களும் அக்கர சக்கரங்களும் ஆட என்று பொருள் கொள்வது பொருந்தும்.
அல்லது புதுமையான கருத்டுக்களைப் படைக்கும் மந்திரங்கள் என்றும் பொருள் கொள்ளலாம்
சிவன் ஆட சத்தி ஆடுகின்றாள் எனில் நாதத் தத்துவத்தோடு ஒன்றித்து சிவன் ஆகி ஆடிட, விந்து தத்துவத்தோடு ஒன்றித்தி சத்தியாக ஆடுவதாகும். ஆக இந்த கூத்து உண்மையில் ஓங்காரக் கூத்து அதாவது நாதாந்தக் கூத்து ஆகும்
ஆனால் இங்கு எப்படி மீண்டும் வேதாந்த சித்தாந்தம் வருகின்றது?
மேலே நாம் கூறியது போல வேதாந்த சித்தாந்தம் என்பது வேதாங்களாகிய உபநிடதங்களில் அதிலும் குறிப்பாக மகாவாக்கியங்களின் உள்ளுறைப் பொருளாக இருப்பது அத்துவித வேதாந்தத்தின் ஏகாத்துவிதம் அல்ல, மாறாக சைவ சித்தாந்த்தத்தின் முப்பொருள் உண்மையாகும் என்பதே. இவ்வாறு ‘தத் துவம் அசி’ வாக்கியப் பொருள் விளக்கம் தரப்பட்டது நம் திருமுலரால்,
அதுவே இங்கும் சிவனாகிய இறைவன் இவ்வாறு ஆடுவதெல்லாம் அநாதிப்பொருளியலாகிய முப்பொருள் உணமைக்குள்ளேயே என்றவாறு. அவமாகிய அதேபொழுது அநாதிப் பொருளாகிய மலங்களை அசைத்து ஆன்மாக்களிடமிருந்து அகற்றி அவற்றை சுத்தமாக்கவே இந்த நாதாந்த நற்கூத்து என்று விளம்புகின்றார் நாதாந்தத்தைக் கண்டு ஓர் பெரும் புதுமை செய்த நம் திருமூலர்.
தொடரும்
உலகன்
இடுகை 31 நாதப் பிரம நற்கூத்து
தமிழ் இலக்கிய வரலாற்றில் பல பழமைகள் அழிந்துவிடாது காத்த பெருமை திருமூலருக்கும் உண்டு. அவற்றில் ஒன்றே மந்திராயணம் சார்ந்த பண்டைய தமிழ்ச் சிந்தனைகளை அழிந்துவிடாது காத்ததோடு பல புதுமைகளையும் செய்தருளியதுவாகும். எப்படி திருமூலர் மிக விரிவாகப் போற்றும் ஆறாதாரக் கோட்பாடு சுமேருத் தமிழ் காலத்திற்கே செல்கின்றதோ அதே போலத்தான் மந்திராயணச் சிந்தையும். ‘நாதம்’ என்ற சொல் சுமேருத் தமிழில் ஆண்மையைக் குறிக்கும் ‘நீதா’ என்று பயில்கின்றது. ஒங்காரமும் அங்கு உண்டெனத் தெரிகின்றது.
காண்க : சுமேரிய கோயிற் பாட்டுகள்
5(400)
[umbin]-se-ba amar su-ti-a ( Who snatches the calf with (his) [cla]ws )
Ta. Ombi-in isaiba amar sootiya ( Who recites this mantra sound Om (Ombi-in-isai), lights up(sutiya) deathlessness (amar)
Or :
Those who recite the sound Om, (activates deathless Light in the body) and becomes radiant(amar su-ti-a)
ஓம்பி-இன் இசைப அமர் சோதிய
‘அமர் சோதி’ எனும் அதுவே ‘ நாத பிரமம்’ ஆகும். இங்கு ‘பிரமம்’ என்ற சொல் ‘பர் (> பருதி: சூரியன்)’ என்ற வேரிலிருந்து பிறந்த தமிழ்ச் சொல் என்றே நினைக்கின்றேன்
அதனைப் பற்றியப் பாடல் கீழ் வருவது
2792
நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய் சிவானந்தமுந்
தாதற்ற நல்ல சதாசிவ ஆனந்தத்து
நாதப் பிரமம் சிவ நடமாமே
நாத பிரமம் என்பது சுமேருத் தமிழ் கோயிற் பாட்டொன்றில் வந்தது போல, ஓம் ஓம் என்று விடாது செப்ப அல்லது இசைக்க அகத்தே எழும் அமர சோதி, இறவா அருட்பெருஞ்சோதி யாகும். சோதி என்றாலும் பிரமம் என்றாலும் ஒன்றுதான்.
இவ்வாறு மந்திர செபத்தியானம் செய்ய அதனால் அகத்தே எழுகின்ற அழியாத் திறத்தின் சோதியைக் காணும் சோதி தரிசனமும் சிவ நடனத்தால் ஆகுவதே என்று இந்த தரிசனத்தின் முடிச்சை அவிழ்க்கின்றார் நம் திருமூலர்.
எப்படி?
நாதத்தின் அந்தமாவது மந்திரங்களின் அதாவது அக்கர சக்கரங்களின் மூலம் 51 அக்கரங்கள் ஆகும். இவற்றின் மூலமே தூய ஓங்கார நாத ஒலி யாகும்.
நாற்போத அந்தமாவது மந்திரங்கள் பல்வேறு வகையில் விளையாடும் சரியா கிரியா யோகம் ஞானம் என்னும் நால்வகை சிவபோதங்களின் முடிவான சிவஞான மாகும்.
வேதத்தின் அந்தமாவது உபநிடதங்கள் அதிலும் குறிப்பாக தத்துவ மசி போன்ற மகாவாக்கியங்கள் உணர்த்தும் மெய்ஞானமாகும். இது வேதாந்த சித்தாந்தமாகிய முப்பொருள் உண்மையின் அநாதிப் பொருளியல் ஆகும். பதியினைப் போல பசு பாசம் அநாதி என்பதே திருமூலர் கருத்துப்படி மகாவாக்கிய விசாரணை உணர்த்தும் மெய்ப்பொருளாகும்
இந்த சிவானந்த தூய்ப்பே தாதற்ற அதாவது எவ்வித குறையும் இல்லாத தூய ஐம் முக சதாசிவ மூர்த்தியின் அருளாளன் இறைவன அருளுகின்ற ஆனந்தமாகும் என்கின்றார் திருமூலர்.
நாம் ஏற்கனவே விளக்கியவாறு இறைவன் சதாசிவ வடிவில் தோன்றி ஓங்காரத்தை ஆட்சி செய்து மந்திரங்களை உருவாக்கி அவற்றின் வழி ஆன்மாக்கள் அகத்தே காமம்(வாமதேவம்) அன்பு(அகோரம்) மெய்ஞான வேட்கை(சத்தியோசாதம்) தன்னறிவு(தற்புருடம்) என்பவற்றொடு வீடுபேறு அருளும் சிவஞானம் வேட்டுவது(ஈசானம்) என்றவாறு ஆழிழுப்புக்களை பதிவித்து உயிர்களை பல்வேறு வகையில் ஆட்டுவதே நாதப் பிரமத்து சிவ நடமாகின்றது.
இங்கு சாதாசிவனின் ஈசான முகத்தின் அருளால் ‘அகம் பிரமம் அஸ்மி” என்ற மகாவாக்கியதின் பொருளும் வெளிப்படுவதாகக் கொள்ளலாம். அதாவது ஓங்கார செபத் தியானத்தால் அகத்தே நாத பிரமமாகிய பிரமம் , அந்த அமர சோதி வெடிக்க, ஆன்மாக்கள் அகத்தே சிவஞானமும் சுடர வீடுபேறு கிட்டுவதாகவும் இது பொருள்படலாம். எல்லார் அகத்தும் நாத பிரமமாகிய அழியாப் பெருஞ்சோதி சுடரவல்லது வீடுபேறு அளிக்கவல்லது என்பதே இந்த மகா வாக்கியத்தின் மெய்ப்பொருளாக இருக்கலாம்.
தொடரும்
உலகன்
இடுகை 32 சிவானந்த ஞானக் கூத்து
இந்த அற்புதமான அற்புதக் கூத்துப் பாடல்களில் திருமூலர் எத்தனையோ வகையான கூத்துக்களை அடையாளம் கண்டு நலமே பாடி இருக்கின்றார். இவற்றில் ஒரு சிலவே பரதக் கலைபோன்ற நடனங்களில் ஆடப்பெற்றிருப்பதாகத் தெரிகின்றது. எஞ்சியவை இனிதான் நடனங்கலாக வகுக்கப்பெற்று ஆடற்கலைகளாக வளரவேண்டும்
கீழே வரும் பாட்டில் இறைவன் அம்மையோடு அல்லாது ஓர் பெருந் தவம் செய்வான் போன்று தமியனாய் ஆடுகின்ற கூத்து ஞானக் கூத்தாக ஆடப்படுகின்றது என்கின்றார் நம் திருமூலர்
2793
சிவம் ஆதி ஐவர் திண்டாட்டமுந் தீரத்
தவமார் பசுபாசம் ஆங்கேத் தனித்துத்
தவமாம் பரன் எங்குந் தானாக ஆடுந்
தவமாஞ் சிவானந்தத்தோர் ஞானக் கூத்தே
இங்கு மிக அடிப்படையான வரி ‘தவமாம் பரன் எங்குந் தானாக ஆடும்’ என்பதேயாகும். இந்த வரியின் பொருளை நாம் அறிந்துகொண்டால் எனைய வரிகளின் பொருள் தானே வெளிப்படும்
‘தவமாம் பரன்’ எனும்போது பரசிவன் மகாயோகியாக உமை அம்மையிடமிருந்து பிரிந்து எவ்விதக் காம எண்ணமும் இன்றி தனியாக ஆகவே தானாக ஆடுகின்றான் இந்த ஞானக் கூத்தை என்கின்றார் திருமூலர். உயிர்கள் அகத்தே சிவஞானம் சுடரச் செய்யும் கூத்து முடிவில் சிவன் பரசிவனாய் பரநாதமே தன் வடிவாக ஆகவே ஓங்காரமேத் தன் வடிவாக இருக்கும் வகையில் ஆடும் கூத்தாகும்,.
இது தவமாகிய சிவயோகத்தில் ஆழ வீழ்ந்தோர் அகத்தே சிவனாந்தமே புசிக்கவரும் வகையில் சிவஞானத்தை இன்னும் இன்னும் தெளிவாக சுடரச் செய்யும் ஞானக் கூத்தாகும்.
சிவஞனாம் கற்றுத் தேர்வது அல்ல. அது ஏற்கனவே எல்லார் உள்ளத்திலும் இருக்கும் ஒன்று என்ற போதிலும் அது சுடராதே இருக்க உயிர்களின் அறிவில் தெளிவாக இல்லாது போய்விட, அது தெள்ளிய ஞானமாக வாலறிவாக மாணறிவாக சுடரச் செய்யும் திருக்கூத்தே இந்த ஞானக் கூத்தாகும்.
இதனால் அமையும் சுவையே ஆனந்தத்தில் யாண்டும் திகட்டாத பேரானந்தமாகிய சிவானந்தம் ஆகும்.
இது ஐவராகிய பரதெய்வ வடிவங்களாகிய அயன் மால் உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் போன்ற வடிவங்களி திண்டாட்டங்கள் தீர எப்படி இக்கூத்து ஆடப்படுகின்றது?
பிரமன் திருமால் போன்ற இறைவடிவங்களும் ஞானம் போத்திப்பனவே யாகும் என்பதொடு அவையும் பரன் எடுக்கும் வடிவங்களே யாகும். ஆயினும் இவ்வடிவங்களில் வீடுபேறு நல்க வல்ல சிவஞானம் போதிக்கப்படாது அதற்கு இட்டுச் செல்லும் ஞானமே போதிக்கப்படும் என்பதால், உயிர்கட்கு சிவஞானம் போதிப்பதில் இந்த வடிவ தெய்வங்கட்கு ஓர் திண்டடட்டம், தடுமாற்ரம் உண்டு,
அந்த திண்டாட்டம் காலவுணர்வு எழாது உயிர்களை சுட்டுணர்வு நிலையிலிருந்து உயர்த்தி சுட்டற்ற, சுட்டு கழன்ற சுட்டுணர்வு இறந்த நிலைக்குக் கொண்டு செல்வதே யாகும்.
அதுவே இங்கு அம்மையோடும் கலவாது அவ்வடிவையும் ஆகவே விந்து தத்துவத்தையும் தன்னுள் அடக்கி தமியனாய் தவத்தின் மகாயோகியாய் பரசிவன் ஆடும் ஞானக் கூத்தாகின்றது,
இதில் ‘பசுபாசம்’ தனித்தல் எவ்வாறு மெய்யாகின்றது?
சிவஞானம் சுடரும் வரை பசுவாகிய ஆன்மா பாசங்களாகிய சுத்த அசுத்த மாயைகளிடமிருந்து விடுபடாதும் இறைவனைச் சார்ந்தே அவனே தானென நிற்பது நடக்கும். சிவஞான போதகம் நடக்கும் போது பாசங்கள் எல்லாம் தனிக்கப்பட்டு ஆகவே பசுவாகிய ஆன்மாவும் சுத்தமாக்கப்பட்டு அதுவும் பதியினைப் போல அநாதியே, படைக்கப்பட்ட தோற்றுவிக்கப்பட்ட ஒன்றல்ல என்ற தெளிவும் போதிக்கப்பட, முத்தி முடிவிலும் மும்முதல் உண்டு எனும் ஞானம் கைவர, வீடு பேறும் அனுபவம் ஆகின்றது
பொய் காட்டிப் பொய் அகற்றி போதானந்த மெய்காட்டி பதியினைப் போல பசு பாசமும் அநாதி என்று தெளிவுறுத்துவதே முடிவான இந்த ஞானக் கூத்து ஆகும்.
தொடரும்
உலகன்
இடுகை 33 ஆட்கொண்ட ஆட்டம்
‘ஆட்கொள்ளல்’ என்பது ஞானிகள் வாழ்க்கையில் நாம் கேள்விப்படும் ஒன்றாகும். இறைவன் பல வடிவங்களில் தோன்றி ஆன்மாக்கள் அகத்தே ஆவேசித்து அவர்களை ஆட்கொண்டு அவர்களது செயல் சிந்தனை போன்றவற்றை தமதாக்கி அந்த ஆன்மாவை நல்வழிப்படுத்துகின்றான். இப்படிப்பட்ட ஆவேசிகம் என்பது புதியதன்று, தொல்காலத்திலிருந்து சமயவாழ்கையின் அடிப்படையாக அமையும் ஒன்றாக ஆய்வுகள் காட்டுகின்றன.
இங்கு இதுபோன்ற ஆவேசிகங்கட்குச் சான்றாக சுமேரு இலக்கியத்திலிருந்து ஓர் சான்று.
>>>>
இங்கு ஆயப்படும் வரிகள் சூல்கியின் முதரீபியம் எனும் பாட்டிலிருந்து (Sulgi Hymn B) எடுக்கப்பட்டவை யாகும்.
132. mas
su-gid-gid dadag-ga-me-en (I am ritually pure baru-diviner)
மாஸ் சூகீதகீத தாக்தாக்குமான்
Ta. maas suu kiit.akiit.a taaktaakumaan ( I am the one whom can utter divine
words in trance?)
இங்கு பல வரலாற்று சிறப்புமிக்க சொற்கள் இருக்கின்றன.
மாஸ்> மாய், மயக்கு: இது ஓர் வகையான சாமியேறிய நிலை, சாமியாடிகள ஆடியும் உடுக்கு போன்ற இசைக்கருவிகளை இசைத்தும் trance எனப்படும் ஓர் மயக்க நிலைக்குச் செல்வதாகும். இதுவோர் தன்னிழப்பு நிலை, இதனை அடைந்தவர்களே தெய்வங்கள் ஆழத்திலிருந்து வெளிப்பட்டு அருள் வாக்கு தரும் முறையில் தங்களை காட்டுகின்றனர். இது இன்றளவு நடக்கும் ஒன்றுதான.
மாஸ்> மதம்?
இப்படிப்பட்ட மயக்க நிலையே தெய்வங்கள் வெளிப்படும் வெறியாட்டு ஆவதும் உண்டென ‘மதம்’ என்ற சொல் இதனடியாக பிறந்திருக்கலாம
சூகீதகீத
மிகத் தெளிவாக gid என்பது வடமொழியில் இன்றும் இறவாது பயிலும் ‘கீதம்’ தான். இதன் வேர் gis> கீச்சு ஆக இருக்கலாம. சூகீதம் என்பது தேவ வாக்கு ஆகும். இரட்டைக் கிளவி இங்கு பன்மையை குறிப்பதாக இருக்கலாம்
சூ> கூ> கோ: தெய்வீகமான. ஆக ‘சூகீதம்’ என்றால் ‘அருள் வாக்கு’ ஆகும் இதையே வடமொழியில் ‘பகவத் கீதை’ என்கின்றனர் போலும்
தாக்தாக்குமான்
இங்கு ‘மான்’ என்பது நமக்குத் தெரிந்த ஓர் தமிழ் சொல்லே, சேரமான் அதிகைமான் என்பன போன்ற சொற்களில் பயில்வது, உய்ரதிணை ஒருமை சுட்டு
‘தாக்கு தாக்கு’ உள்ளபடியே ‘தூக்கு தூக்கு’ (dug-dug) எனும் சொல்லாக இருக்கலாம். பாடுதல் என்ற கருத்தது, கடைச் சங்கத் தமிழில் இப்பொருளில் பல இடங்கலின் பயிலின்றது. பரதவர் ‘தன் சீர் தூக்குந்து’ என்றெல்லாம் வரும் , இங்கு அடுக்கு தொடர்ந்து பாடுதலைக் குறிக்கலாம.
குறிப்பு:
சுமேரு காலத்தில் இவ்வாறு அரச பெருமக்களே தன்னிழப்பு நிலைக்குப் பெயர்ந்து தெய்வமேறவிட்டு அதுபொழுது தெய்வ வாக்காக வருவதையே உண்மையென மேற்கொண்டு அரசாட்சி செய்தனர் போலும். மாஸு என்ற சொல்லிருந்தே ‘மாயம், மயக்கம், மதம்’ போன்ற சொற்கள் தோன்றி இருக்கலாம.
>>>
திருமூலர் இங்கு தன் சுய அனுபவமாக முச்சுடர் அல்லது முக்கண் சிவன் எவ்வாறு தன்னை ஆட்கொண்டான் என்பதை விளம்புகின்றார்.
2794
கூடி நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள்
வீட நின்றான் விகிர்தா வென்னு நாமத்தைத்
தேட நின்றான் திகழுஞ் சுடர் மூன்றொளி
ஆட நின்றான் என்னை ஆட்கொண்டவாறே
சிறு சிறுதெய்வங்களாகியப் பல தேவர்கள் என்னுள் ஆவேசித்து எனை ஆட்கொள்வது விட்டு விலக இறைவனே யாம் செய்த தவத்தால் என்ணுள் ஆவேசித்து என் உயிரோடு கலந்து கூடி நின்றான்.
‘விகிர்தன்; என்றால் மேலான கிருத்தியன் என்று பொருள் படும். அப்பொருளுக்கு உரியவனாக எவ்வாறு எனை ஆட்கொண்ட சிவன் அமைவான் என்பதை நான் தேடி அறியுமாறு என்னுடன் கூடி உடன் நின்றான. அதுபொழுது திகழுஞ் மூன்று சுடர்களை உடைய முக்கண்ணனாகத் தனைக் காட்டி அருளி, ‘விகிர்தன்’ எனும் நாமத்தின் பொருளை நான் அறியுமாறு பலஞான காட்சிகளைக் காட்டி ஆடியவாறு என் அகத்தே நின்றான். இப்படிததான் அவன் ஆட்கொண்டதின் பொருளை நான் அறிந்தேன் என்கின்றார் தன் சுய அனுபவமாக நம் திருமூலர்.
திருமூலரின் பாடல்களை, அதிலும் குறிப்பாக இந்த அற்புதக் கூத்துப் பாடல்களை நாம் பாடி அவற்றின் பொருளை அறியும் போது, அவை இறையருளாலேயே மலர்ந்திருக்க வேண்டும் என்றே படுகின்றது, பிற்காலத்தில் சைவ சித்தாந்த ஞானப் பெருநூற்களில் விளங்கும் பல ஆழமான உண்மைகள் இந்த பாடல் தொகுதியில் நலமே விளங்குவது ஓர் வியப்பான ஒன்றே.
இங்கு ‘சுடர் மூன்றொளி’ என்றால் யாதாக இருக்க முடியும்?
முக்கண்ணான் என்பது தொல்காலத்தில் சிவனுக்கே உரிய ஓர் திருநாமாக விளங்கிற்று. ‘நுதல்விழி நாட்டத்து இறைவன்’ என்றால் சிவனே யாகும். சந்திர சூரியர் அக்நி என்றும் இம்முச் சுடரை கூறுவதுண்டு. இவற்றை நாம் இடகலை பிங்கலை சுழிமுனை என்றும் கொள்ளலாம், குண்டலினி சத்தி சிவ தத்துவங்களாகிய நாத விந்துக்களின் ஆட்சிக்கு ஆளாக இந்த மூன்று கண்கள் வாய்க்கின்றன.
இவற்றில் நுதல்விழிப் பார்வையைத் தரும் நெற்றிக் கண் பார்வையே மிக அரிதான ஒன்றாகும். அந்தப் பார்வை அமைந்தால்தாம் பல தெய்வங்களை உருவாக்கி உலகில் இறைவன் நடாத்தும் திருவிளையாடல்களை அறிய முடியும். அவற்றை அறிந்தே அவை ஏன் என்றெல்லாம் விசாரித்து முடிவில் இறைவன் ஏன் மேலான திருச்செயலின் ‘விகிர்தன்’ ஆகின்றான் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
முக்கண்ணின் சிவபெருமானே சிவஞானம் புகட்டி வீடுபேறு அளிக்க வல்லவன் என்பதின் அவனே விகிர்தன் ஆகின்றான் என்ற தெளிவும் பிறக்கின்றது
தொடரும்
உலகன்
இடுகை 34: அத்துவித ஆட்டம்
திருமூலர், அப்பர் திருஞானசம்பந்தர் போலல்லாது, புத்தம் சமணம் என்றெல்லாம் பேசாது வேதாந்தத்தைப் பற்றியே மிகப் பேசுகின்றார். ஆயினும் அது ஆதி சங்கரரின் மாயா வாத வேதாந்தம் அல்ல, அதற்கு முன் உபநிடதங்களாகிய வேதாந்தம் எனப்படும் நூற்களில் வரும் மகா வாக்கியங்களைப் பற்றியே அவர் வேதாந்த சித்தாந்தம் என்று கூறி, மகா வாக்கியங்களின் உள்ளார்ந்த அர்த்தமாக முப்பொருள் உண்மையின் அநாதிபொருளியலைச் சார்ந்தே விளக்கம் தருகின்றார்.
கீழே வரும் பாட்டில் உபநிடதங்களில் பகரப்படும் நேதித்தல் பற்றி தனது சித்தாந்தப் பொருளை தந்து தெளிவு படுத்துகின்றார்.
2795
நாதத்துவங் கடந்து ஆதி மறை நம்பி
பூதத்துவத்தே பொலிந்து இன்பம் எய்தினர்
நேதத்துவமும் அவற்றொடு நேதியும்
பேதப்படா வண்ணம் பின்னி நின்றானே
நாதத்துவம் ஆவது மந்திரங்கள் சார்ந்த மந்திராயணம் ஆகும். ஐம்பத்தொரு அக்கரங்களிலிருந்து பல அக்கர சக்கரங்களை உருவாக்கி தன்னை பல மூர்த்தி வடிவங்களில் காட்டி அருளுவதையும் கடந்து நாதாந்தமாகிய ஓங்காரமும் கடந்து எல்லா மறை நூற்களும் வெளிப்படும் ஆதி மறையாகிய எழுதாமறையின் தலைவனாக சிவபெருமானே இருக்கின்றான. இவ்வாறு தூரந் தூரம் நின்று தொடக்குறாது பல மந்திரங்கள் வழி ஐம்பூதங்களை இயக்க, மலத்திற் செறிந்து அஞ்ஞான இருளில் கிடக்கும் ஆன்மாக்கள் ஓரளவு அறிவு பெற்றவர்களாக உலகப் பொருட்களை நுகர்ந்து இன்பம் எய்தி மகிழ்கின்றனர்.
இனி இவ்வாறு இறைவன் உலகப் பொருட்கள் அனைத்தொடும் அவையேத் தானேயாய் நின்று ஒன்றாய் உடனாய் வேறாய் நின்று அவர்கட்கு அருள்புரிந்தவாறு இருக்க, ‘இது அவன் அல்ல” என்றவாறு சுட்டுணர்விற்கு வரும் அனைதையும் சுட்டி இது அவன் அல்ல, அது அவன் அல்ல என்று அவன் சுட்டுணர்வு கடந்து நிற்பதால், இல்லை என்று கூறினாலும் அவன் எல்லா உயிர்களோடும் பேதப்படாது வேறாகாது தொடர்ந்து அன்பின் அவையேத் தானாக நின்று அருள்பாலித்த வண்ணம் இருக்கின்றானாம். எவ்வாறு வேதாந்திகள் போல நேதி செய்து அவன் இதில் இல்லை, அதில் இல்லை, இங்கு இல்லை, அங்கு இல்லை என்று கூறினாலும் இறைவன் பரசிவனாக பேதப்படாது அனைத்தொடும் அவையேத் தானாய் தொடர்ந்து நின்று அவர்கட்கு அருள்பாலித்த வண்ணம் இருக்கின்றானாம்
நேதித்டல் அவன் சுட்டுணர்வு கடந்து நிற்கின்றான் என்று காட்டுமே ஒழிய அவன் ஆங்கில்லை என்று காட்டாது.
பேதப்படா வண்ணம் பின்னி உயிர்கள் அனைத்தும் அவையேத் தானேயாய் நிற்கின்றானாம்
இதுதானே வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்? இதுதானே ‘அத்துவிதம்’ என்ற சொல்லின் மெய்ப்பொருள்? இப்படிக் கூறித்தான ஆதி சங்கரரின் மாயாவாத வேதாந்தத்தைக் கண்டிக்கின்றார் நம் ஞானபானுவாகிய மெய்கண்டார்.
காண்க:
எடுத்துக்காட்டு 2.1.3
பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணுஞ் சுவையும் போல் எங்குமாம் -- அண்ணல்தாள்
அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்று என்னாது
அத்துவிதம் என்று அறையும் ஆங்கு
இங்கு அருமறைகள் உபநிடதங்களாகிய வேதாந்த நூற்கள் ஆகும். இங்கு ‘அத்துவிதம்’ என்றால் என்ன?
பாட்டோடு வருகின்றப் பண், பழத்தோடு வருகின்ற சுவை என்பன போன்ற அனுபவங்களை பொருளாக்கி சிந்திக்க, ஒன்றைவிட்டு ஒன்று நிலவா நிலையைக் காண்பம், புறவுருவாக அனுபவமாகும் அவற்றின் புதையுருவாக இறைவன் இருப்பதைக் காண்பம். பிரிவின்றி யாண்டும் உடன் இருப்பதாகிய இவ்வுறவு முறையை, யாங்கு ஓர் பொருள் ஒன்றென சுட்டும் அளவிற்கு வடிவெடுத்து நிற்கின்றதோ, ஆங்கெல்லாம் இறைவனது திருக்கூத்தால் வரும் மந்திரங்களின் தொழிற்பாடு இருப்பதை, அண்ணல்தாள் ஆங்கு இருப்பதை, எங்கும் எதிலும் அவனது திருநட்டம் ஆகவே இறைவன் இருப்பதைத் தான் அருமறைகள், ஏகத்துவப் பொருள் வேறன்மை என்று சுட்டாது யாதும் எதுவும் இறைவன் இன்றிநில்லாமையை உணர்த்தும் 'அத்துவிதம்' என்ற சொல்லால் சுட்டும், அறையும் என்பதாம். எங்கும் பரந்தும் விரிந்தும் கரந்தும் உள்ள இறைவனை, ஒவ்வொன்றிற்கும் வேண்டுருவைத் தான் கொடுத்து ஒன்றாய்த் திகழுமாறு பற்பல மந்திர வடிவங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும் இறைவனை, எவ்வெவ்வொன்றும் இந்த மந்திர சொரூபங்களின்றி தான் ஒன்றாக நிற்க முடியாமைச் சுட்டியே 'அத்துவிதம்' என்ற சொல்லாட்சி என்பதாம்.
தொடரும்
உலகன்
இடுகை 35 தானந்தம் அற்ற இடம்
எல்லா உயிர்களும் இன்பத்தையே நாடித் த்ரிகின்றன. ஆனால இனபம் என்பதுதான் என்ன? இன்பம் என்பது எல்லா உய்ரிகட்கும் தாம் தாம் மேவற்று ஆகும் என்பார் தொல்காப்பியர். வாழ்க்கையில் மொழி வழியும் செய்கை வழியும் ஆய்ந்து தெளிந்த அவர் இதுவோர் உலகியல் உணமையாகக் கண்டு சூத்திரம் யாத்தார்.
ஆனால் இவையெல்லாம் உண்மையான ஆனந்தம் அல்ல, இதுவே ஆனந்தம் என்பார் அறிவிலார்களே என்கின்றார் திருமுலர் அவருக்கே உரிய பாணியில்.
அப்படி என்றால உண்மையான ஆனந்தம்தான் என்ன? இதற்கு விளக்கம் தருவதாக கீழ் வரும் பாடல் அமைகின்றது.
2796
ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலார்
ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின்
தானந்தம் அற்றிடம் ஆனந்தமாமே
இச்சித்ததை அடைவதால் வருகின்ற இன்பமும் அதனால் வருகின்ற ஆனந்தம் எனும் சுவையும் நிரந்தரமானது அல்ல என்பதால் சிவஞானம் அற்ற அறிவிலாரே அவற்றை எல்லாம் ஆனந்தம் என்று கூறி மதி மயங்கி கூத்தாடுவர். இப்படிப்பட்ட இனபங்கள் ஆனந்தங்கள் தற்காலிகமே. சிறிது நேரம் ஆனந்தம் எனும் உணர்வை எழுப்பி உற்சாகப்படுத்தி பிறகு தானே மறைந்து விடும். இச்சித்ததை அடைய அதனால வரும் இன்பங்கள் இன்னொரு இச்சை பிறக்க அது இல்லலதுபோய் விழுந்து விடும்
இச்சைகள் விழாது அடுதடுத்து எழுந்துகொண்டே இருக்க, இப்படிப்பட்ட இன்பங்கள் ஆனந்தங்கள் நிரந்தரம் இல்லை, எல்லாம் தற்காலிகமே.
இந்த சூழ்நிலையில்தான் தன்னை யார் இவ்வாறு தன்னுள் பல இச்சைகலஈ பதிவித்து எழுப்பி இதனை நாட அதனை நாட விரட்டுகின்றது என்று தன்னுள் நடக்கும் இந்த அகக் கூத்தையே மறித்து நோக்கி விசாரிக்க, உலகில் எல்லா இடத்திலும் தன்னுள்ளத்தில் ஓர் மாநடம் நடந்து கொண்டே இருகின்றது, நாத விந்துக்களை அசைத்து அசைத்து இறைவன் அம்மையோடு இணந்து ஆனந்தமாக ஆடிகொண்டே இருக்கின்றான என்ற ஆழுண்மை அறிவிற் படுகின்றது
இந்த கருத்து தமிழச் சிந்தனையில் மிகப் பழமையானது, சுமேரு இலக்கியத்திலேயே இருப்பது. சுமேரிய சுவர்கபுரி பாட்டில்( Paradise hymn) இது பகரப்படுகின்றது, காண்க
7. as-ni-ne (alone) dilmun
(KI)-a (in Dilmun) u-ne-in-nad (they lay)
8. ki (The place) *en-ki (where Enki) dam-an-ni-da (with his wife)
ba-an-da-nad-a-ba (laid himself down)
9. ki-bi (that place) sikil-am (is clean) ki-bi (that place)
za(lag)-zalag-ga-am (is bright)
10. ki (the place) *en-ki (where Enki) nin-sikil-la (with
Ninsikilla) ba-an-da-nad-a-ba (laid himself down)
7. ஆஸ்நினே தில்முன் ஊனே நடியின்
8. கீழ் ஏண்கீ தாரம்- ஆனித்த பண்ணிடு நட அப்ப
9. கீழ் சுக்கில் ஆம் கீழ்பி சலங்குசலங்கு ஆம்
10. கீழ் ஏண்கீழ் நின்சுக்கில்ல பண்ணிடு நட அப்ப
இங்கு ஏண்கீ தன்னுடையத் துணை நின்சுக்கில்லாவுடன் ஆடும் நடம் நலமே பல வரிகளின் சொலப்படுகின்றது
ஆனால் இந்த சிவசத்தி ஆனந்த நடன தரிசனம் எவ்வாறு ஆன்மா அகத்தே அற்புதமான ஓர் ஆனந்தத்தை எழுப்புகின்றது?
இந்தப் பாட்டின் மையப் பொருளே அதுதான். அது ‘ தான் அந்தம் அற்ற இடம்’ என்ற கிளவியில் அடங்கிக் கிடகின்றது. உண்மையான ஆனந்தம் இதுதானாம் ஆனால் இந்த வரியின் பொருள்தான் என்ன?
எந்த ஆன்மா உலகில் நடப்பதெல்லாம் சிவசத்தி கூத்தே ஆனந்த நடமே என்று அறிய வருகின்றதோ அங்கு ஓர் ஞானம் உதிக்கின்றது. அதுதான் என்ன?
தன்னை விட்டு எல்லாம் அகற்றப்பட்டு அழிக்கபட்ட்டாலும் தான், தன் ஆன்மா அந்தமில்லாது என்றும் இருப்பதாய் அழிவின்றி நிலவும் என்று உதிக்கும் ஞானமே உறுதியே அற்புதமான ஆனந்தம் உதிப்பிக்கும் ஓர் உணமையாகின்றது.
தனது உடலும் பிற உடமைகளும் உறவுகளும் அழிந்து இல்லாது போகும். ஆனால் இந்த முடிவான ஞான வளர்ச்சியின் எல்லைக்கு வந்த பிறகு அங்கு சிவசத்தி ஆனந்த கூத்தே உலகெல்லாம் என்று அறிகின்ற போது, தனக்கு அந்தம் இல்லை முடிவு இல்லை ஆகவே தான் ஓர் அநாதிப் பொருள் இறைவனது திருத்தாண்டவத்தை யாண்டும் கண்டுகொண்டே ஆகவே ஆனந்தித்துக் கொண்டே இருக்கக்கூடிய ஓர் பொருள் என்று அறிவர, அதுவே உணமையான ஆனந்தமாகி விடுகின்றது
மேலும் இதுவே இச்சை எல்லாம் அழிக்கப்படும் இடம் என்பதால். இதற்கு அழிவு இல்லை. இதுவே நிர் அதிசய ஆனந்த நிலையும் ஆகும்
தொடரும்
உலகன்
இடுகை 36 சிவாயநம கூத்து
திருவுருவச் சிந்தனை(Icon Thinking) என்றோர் சிந்தனா மார்க்கம் சைவ மரபில் மிகப் பழமையான ஒன்றாக விளங்குகின்றது. இதுவோர் நூலிய அறிவியல் துறையாகும். உருவ வழிபாட்டின் தனிச் சிறப்பு இதுவே. இந்தக் கலை மங்கிப் போய்விட, திருவுருவ வழிபாடு வெறும் காரணமற்ற நம்பிகையாக விளங்க, சமயப் பூசல்கள் பல வெடிக்க, திருவுருவங்களே வேண்டாம் எனும் பிழையான போக்கும் வருகின்றது.
திருமூலரின் கீழ் வரும் பாட்டு இறைவன் தன்னை நடராசப் பெருமானாக ஆடவல்லானாக காட்டியருளும் போது, எத்தகைய ஆழமான மெய்களையும் உணர்த்துகின்றான் என்பதை விளக்குவதாக அமைகின்றது
2797
திருந்து நல் சீ என்று உதறிய கையும்
அருந்தவர் வா என்று அணைத்த மலர்கையும்
பொருந்த அமைப்பில் யவ்வென்ற பொற்கையுந்
திருந்த நல் தீயாம் திருநிலை மவ்வே
நடராச பெருமான் முயலகனை மிதித்து ஊன்றிய காலொடும் , நான்கு கரங்களோடும் விளங்கும் திருவுருவத்தில் அடங்கி இருக்கும் பல உள்ளுறைப் பொருட்களில் ( metaphysical meanings) சிலவற்றை இப்பாட்டில் மிக அழகாக் திருமூலர் விளம்பி மகிழ்விக்கின்றார்.
நாங்கு கரங்கள்- ஒன்று துடியொடு விளங்கும் திருக்கை, அடுத்து செந்தாமரை மலரொடு விளங்கும் மலர்க்கை, பின் பொற் காசுகள் கொட்டும் பொற்கை என்றும் முடிவாக தீ எந்தும் நற்கையாகும் என்றவாறு வரும். இவை சிகாரம் வகாரம் யகாரம் நமகாரம் மமகாரம் எனும் ஐந்தெழுத்து சிவாயநம எனும் மந்திரத்தோடு தொடர்பு படுத்தியும் செல்கின்றார்.
இங்கு இந்த கரங்களில் விளங்கும் துடி செந்தாமரை பொன் எரிக்கும் தீ ஆகியவையே உள்ளுறைத் தரும் பொருட்களாக விளங்குகின்றன.
துடிக்கும் உடுக்கையின் சிகாரம் ஆணவ மலதால் விழுங்கப்ப்ட்ட இவ்வுலகை மீண்டும் தோற்றிவித்தலைக் காட்டும் . இந்த ‘சி, சீ’ எனும் சொல்லும் எழுத்தும் சுமேருத் தமிழில் தோற்றத்தையே சுட்டும். சீ என்றால இருளைக் கிழித்து ஒளி பரப்புவதாகும். இவ்வாறு செய்வதாலேயே இறைவன் ‘சி-வன்’ ஆகின்றான
காண்க:
8.SH(B) 160
si-ag-NE-da nu-mu-e-si-ib-gaz-e
(And in their preparation I did not bungle anything )
சீ ஆக்NE இடம் நா மே ஈ சீ யிப்பு கழியே
(si> Ta. cI: to fill up; ag>Ta. Akku: to make ; gaz> Ta. kazi : to let
go)
இங்கு ‘சீ ஆக்.உ” என்பது சுடரும்படி ஆக்குவது அதாவது ‘தோற்றுவித்தல்’ ஆகும். உடுக்கையின் துடிப்பு ஓங்கார நாதமாக இவ்வாறு நாதத்தை இயக்கியே இறைவன் இருளைக் கிழித்து மல மறைப்பால தோன்ற முடியாது கிடந்த பொருட்களை வெளிச்சத்தில் தோன்றிச் சுடருமா விளங்குமா செய்வதால் இது துடிக்கும் உடுக்கையின் பொருளாக கருதப்படுகின்றது
அடுத்து வருவது மலர்க்கை அதாவது செந்தாமரை சுமக்கும் அழகியத் திருக்கை ஆகும். இங்கு செந்தாமரை என்றாலே அன்பு கருணை போன்ற உணர்வுகளைக் காட்டும். அரிய சிவத் தவங்கள் புரியும் அன்பர்களைக் கண்டு இறைவன் அன்பு மீதூர அவர்களை அனைத்து வேண்டிய நலன்களைத் தந்து அவர்களை ஓம்புவான் என்ற குறிப்பு உடையது என்கின்றார். இந்த அருந்தவதோர் தொண்டே வாழ்க்கையாக கொண்டு மக்கட்கு நல்லதே செய்யும் திறத்தின் சிவனடியார்கள் ஆகும். இவர்களது சிவத்தொண்டு நலமே வளர்ந்திட ஆவன எல்லாம் உதவுவான் இறைவன் என்பது பல அடியார் வாழ்க்கையில் காணவரும் உண்மையாகும்.
இனி அடுத்து வருவது இந்த அற்ப மானிட உடம்பை பொன்னாக்கும் பொற்கையாகும். இதுவும் மிகப் பழமையான கருத்துமாகும். பண்டைய எகிப்தில் பாரோ மன்னர்கள் இந்த அற்ப சதை பிண்ட உடலை மரணத்தின் போது விட்டு விட்டு மீண்டெழும்போது பொன்னுடல் எடுத்தவாறு விழிப்பார்கள் என்ற நம்பிகையில் வாழ்ந்தார்கள், ஆயின் பொன்னுடல் என்பது ஆனந்தமே தரும் அழுக்கிலாத சுத்ததமான நல்லுடல், ஆணவ மலம் செறிந்து முதுமையையும் நோயையும் கொண்டு வரும் ஆணமலம் எனும் அழுக்கினைப் போக்கி சுத்தம் செய்து ஓர் அற்புதமான நீண்ட இளமைப் பொலிவின் நல்லுடலைத் தருவதே இந்த பொற்கையாகும்.
கடைசியாக வருவது அக்நி ஏந்து தீக் கரமாகும். இதுவே வேறு எந்த சத்தியாம் அசைக்க முடியா வன்மையின் ஆணமலமாகிய மமகாரத்தை நசிப்பதாகிய நமகாரத்தைச் செய்வதாகும். திருந்தா உயிர்களை திருந்த வைப்பதும் தீக்கை பல செய்யும், வாழ்க்கையில் வேதனைகள் பல தரும் செந்தீயும் இதுவாகும். சுட்டுப் பொசுக்கி வாழ்க்கையில் பல சோதனைகளைத் தந்து மலமெல்லாம் போக்கி திருநிலையாகிய தெய்வ நிலை சுத்நிலை படுத்துவது இந்த அக்நி கரமே யாகும்
ஆக இந்தப் பாடலில் உணர்த்தப்படுவது பஞ்சகிரித்தியங்கள் போன்ற ஓர் சிவாயநம எனும் கூத்து என்று கூறுகின்றார் நாதாந்தம் கண்டு நல்லதையே சொன்ன நம் திருமூலர்.
தொடரும்
உலகன்
இடுகை 37 உருவில் சிவாயநம
இறைவனது நடராச மூர்த்தத்தில் எவ்வாறு சிவாயநம கூத்து ஆடபப்டுகின்றது என்று மேலே விளக்கப்பட்டது. இது உலகத்தின் அசைவுகளை தோற்ற மாற்றங்கள் வளர்ச்சிகள் சுழற்சிகள் போன்றவற்றை தூல பஞ்சாக்கரத்தின் செயல்பாடுகளாக பல்வேறு மூர்த்தங்களால் ஆகுவன என்று விளக்கி அருளினார். இவை பூதவுலகில் மாத்திரம் அல்லாது சித்துலகிலும் நடப்பதால் மூர்த்தங்கள் வழி ஆடப்படுவதாக பாடப்பெற்றது. இப்பாட்டில் இந்த நடராச மூர்த்தத்தில் எல்லா உருவங்கட்கு மூலமாகிய சிவாய நம மந்திரங்கள் எவ்வாறு அடங்குகின்றன என்பதை விளக்குகின்றார். இதனை சூக்கும பஞ்சாட்சரம் என்றுங் கூறுவர். மேலே தூல பஞ்சாக்கரமாக உலகத்து அசைவுகளை விளக்க இங்கு சூக்கும பஞ்சாட்கரங்களின் செயற்பாடுகளாக ஆழ்வுளத்துறையும் உடலின் பல அசைவுகளும் விளக்கப்படுகின்றன
2798
மருவுந் துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையுங்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நம வென ஓதே
துடிக்கும் துடியோடு கூடிய யாண்டும் பலவாறு வீசிக்கொண்டே இருக்கும் கரம், அகத்தே அறிவினைத் தாக்க பல சிந்தனைகளை உற்பவித்து அவற்றை சொல்லாக்கி பாடுமா உதவும். இந்தத் துடியே எல்லா மொழிகளும் தோன்றுதற்கு மூலமாகிய அறிவின் அசைவும் ஒலி பலவாக உற்பவிக்கும் திறனும் இவை இரண்டும் கலந்து மொழி உருவாகும் பண்பையும் நிறுத்தும் என்பதாம்
மன்னியபடி இந்தத் துடியை ஏந்திய கரம் வீசாவிடில் உலகில் மொழி என்ற ஒன்றில்லையாம்
இதுவே மொழியை உற்பவிக்கும் சிகாரம் ஆகும். இங்கு மூல நாதவொளியாகிய ஓங்காரம், மொழியின் அறிவின் தோற்றத்தைத் தரும் சிகாரத்தோடு ஒன்றாக்கி காணப்படுகின்றது
அப்பு என்பது தூய நீர், ஆகாய கங்கை என்று ஞானிகள் கூறுவர். அனல் என்பது அக்நி ஆகும், தீயதை எல்லாம் எரித்து சாம்பலாக்கி இல்லாது போக்குவது. எரிப்பது நீர் கொண்டு குளிர்விப்பது இறைவன் ஆன்மாக்கள் அகத்தே செய்கின்ற பரகிருத்தியங்கள் ஆகும். சிந்திக்க வைத்து அதன் வழி அகத்தே வேள்வித் தீயை மூட்டி கசடுகளை எரித்து ஆன்மாவை சுத்தமாக்கி பளிங்கெனச் சுடரவைத்து அதன்வழி சிவஞானம் தானே எழுந்து அகத்தே சுடருமா செய்வதாகும். இந்த அக வேள்வித் தீயில் இருந்து சக்தியெல்லாம் வெட்மாகி வீணாக இந்த இழப்பினைப் போக்கவே வீர்யத்தைத் தரும் கங்கை நீரின் குளிர்மை அமுதமாக பெய்யப்படும். பல வகையான இன்பத் தூய்ப்புகள் வழி இழந்த குண்டலினி சத்தி ஈட்டப்படும். இதனை சத்தி நிபாதம் அதாவது அருளது வீழ்ச்சி என்பார் திருமூலர்.
இவை இங்கு ‘வ’காரத்திற்கும் ‘ய’காரத்திற்கும் உரித்தானவைகளாக கருதப்படுகின்றது
இனி ‘கருவில் மிதித்த கமலப் பதம்(பாதம்)’ என்ற கிளவியின் உள்ளுறைப் பொருள் யாதாக இருக்க முடியும்?
மேலே தூல பஞ்சாக்கரத்தில் பிரபஞ்சம் என ஒன்று தோன்றா வகையில் அனைத்தையும் விழுங்கி இருள் பரப்பும் ஆணவ மலத்தின் ஆட்சியைக் கெடுப்பது குத்திய பாதத்தின் முயலகனை கீழ் வீழ்த்துதல் ஆகும். இதுவே மலமாகிய மமகாரத்தை நசித்தலாகிய நமகாரம் ஆகும். ஆனால் இங்கு சூக்கும பஞ்சாக்கர நிலையில், இதன் பொருள் யாதாக இருக்க முடியும்?
முயலகன் ஓர் அசுரன், குறுவடிவ அசுரன். ஆன்மா அகத்தே அசுரத்தன்மையை விளவிப்பவன் ஆகும். குண்டிலினி சத்தியை ஆணவமலம் ஊடுறுவி கசடாக்க கருணை என்பதும் அன்பு நிறைந்த போக்கு என்பதும் கெட்டு கொடூரம் என்ற பண்பு வந்து ஆன்மாவை மேவுவதே இங்கு முயலகன் செய்யும் சேட்டைகள் ஆகும். இறைவன் அகத்தே பல இன்னல்களைக் கொடுத்து இந்த அசுரத்தன்மை எழாதவாறு அதனை நசுக்கி, கொலைவெறி போன்றவை எழாவாறு காப்பதே இங்கு ‘கருவில் மிதித்த கமல பாதம்’ என்பதின் உள்ளுறை பொருளாகின்றது. ‘கருவில்’ என்பதை பிறப்பில் என்று கொள்ளலாம். பிறவிக் குணமாகிய கொடூரத்தை வளரவொட்டாது தடுத்து கருணையே மேவர செய்து நலமே வாழத் தருவது இங்கு குத்திய பாதத்தின் பொருள் ஆகின்றது.
இதுவே ‘நம’ எனும் அக்கரங்களின் பொருளும் ஆகின்றது.
‘உருவில்’ என்பது உருவாகிய பல மூர்த்த வடிவங்கள் இல்லாது ஆகவே மந்திரவடிவில் செயல் படுவதைக் குறிக்கும். அதனால் இங்கு விளக்கப்ப்டும் பொருள் சூக்கும பஞ்சாக்கரமும் ஆகின்றது.
தொடரும்
உலகன்
இடுகை 38: விழிதிறப்பு
மேலே மாந்திராயணத்தின் கூறுகளாக இருக்கும் தூல பஞ்சாக்கரம் சூக்கும பஞ்சாக்கரம் ஆகியவை விளக்கப்பட்டன, கீழ் வரும் படலில் இவற்றொடு தொடர்புடைய விழிதிறப்பினை மையமகக்கொண்ட பஞ்சகிரித்தியங்கள் விளக்கப்படுகின்றன. கீழே வரும் திருமூலர் பாட்டைத்தை தழுவியே கீழ் வரும் ‘உண்மை விளக்கம்’ எனும் மெய்கண்ட சாத்திரத்தில் வரும் பாடல் அமைதிருக்கின்றது
இப்பாடல் ‘ஊன நடனம்’ என்ற தலைப்பில் வருகின்றது. இரண்டையும் ஒத்து பார்க்க வேண்டும்
செய்யுள் 35
தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்-- ஊற்றமா
ஊன்று மலர்பதத்தில் உற்ற திரோதகம் முத்தி
நான்ற மலர்பதத்தே நாடு
2799
அரன் துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரன் அங்கி தன்னைல் அறையிற் சங்காரம்
அரனுற்ற அணைப்பில் அமருந் திரோதாயி
அரனடி என்றும் அநுக்கிரகம் தானே
இந்தப் பாடலின் பொருளை நாம் செவ்வே புரிந்துகொள்ள அடிப்படையான திரோதகம் அநுக்கிரகம் ஆகிய இரண்டு பஞ்ச கிருத்தியங்களையும் எவ்வாறு இவை தோற்றம் திதி சங்காரம் ஆகியவற்றோடு ஒன்றுபடுகின்றது என்பதையும் எவ்வாறு இந்த உள்லுறைப் பொருள்கள் நடராச திருமூர்த்தத்தில் உணர்த்தப்படுகின்றது என்பதையும் அறிய வேண்டும்
ஒரே நடராச மூர்த்தம் பலவகையான தொடர்புடைய ஆனால் வெவ்வேறு உள்ளுறைப் பொருளைக் கொண்டிருக்கும் அதிசயத்தை நாம் இங்கே காண்கின்றோம்
இங்கு முதலில் நாம் அறிய வேண்டியது ஊன்றிய பாதத்தின் வழி உணர்த்தப்படுவது இறைவன் தன்னை இங்கு முயலகனாகக் காட்டப்படும் ஆணவ் மலத்தால் அணுத்துவப்பட்ட சிற்றறிவின் ஆன்மாவிற்கு தன்னைக் காட்டாது மறைத்து அதனால் அந்த ஆன்மாவிற்குப் பல அவலங்களைத் தருவதாகும். இது ஆணவ் மல மறைப்பால் வரும் செருக்கினால் பொறிலியப் பார்வையேப் பார்வை என்றும் கூறித் திரிந்து தக்க பக்குவம் வரும் வரை நாத்திகம் போன்ற தத்துவம் பேசி அல்லற்பட வைப்பதாகும். ஐம்புலன் நுகர்ச்சியையே அதன் விருத்திகளையே அனுபவிக்கத் தந்து அசித்துப் பொருட்களையே காணவைத்து சித்துப்பொருட்களை காண முடியாத மடமையைத் தருவதாகும்.
இனி இந்த தன் மடமையை உணரும் ஆன்மாவிற்கு கண் விழிப்பித்து பொறிலியப் பார்வைக்குள் புதைந்து கிடக்கும் நூலியப் பார்வை நுதலியப் பார்வை போன்ற ஞானப் பார்வைகள் அமையும்படி செய்வதே அநுக்கிரகம் ஆகும். இவ்வாறான விழி திறப்பே முடிவில் முத்திக்கு இட்டுச் செல்லும் அருள் என்றும் ஆகும். இதுவே எடுத்த பாதத்தின் வழி உணர்த்தப்படுகின்றது
ஆனால் விழிதிறப்பு நடக்கும் போது அருளப்படும் போது, அது தோன்றிய கணமே ஓர் கனவுபோல மறையாதிருக்க வேண்டுமே? ஞான விழிப் பார்வைகள் அரிதானவை தோன்றியவுடன் மறைந்து பயனற்றுப் போகலாம். அவ்வாறு ஆகாது அதனை ஆன்மாவிற்கு உரியதாக நிறுத்துவதே தோற்றம் என்பதைக் குறிக்கும் துடியின் பொருள் ஆகின்றது
அகத்தே இந்தத் துடி துடித்துக்கொண்டு இருக்கத்தான் அருளப்படும் புதிய விழிகள் ஆன்மாவிற்கு உரியதாக அமைகின்றது. இதுவே திதி எனப்படும். ‘தி’ அல்லது ‘தில்’ எனும் சுமேருத் தமிழ் சொல், நிலைத்தல் வாழ்தல் எனப்படும். இங்கு இரட்டிப்பு தொடர்ந்து இருத்தல் என்ற பொருளைத் தரும்
இதை உணர்த்துவதே அருட்கரமாகிய மலர்க்கரத்தின் குறிப்பாகும்.
அப்படி என்றால் அக்நி கரம் உணர்த்தும் சங்காரம் யாதாக இருக்கும்?
பார்வைக்குள் பார்வையாக பல பார்வைகள் புதைந்து கிடக்கின்றன. ஆழப்பார்வைகள் தோன்றவொட்டாது தடைசெய்யும் ஆணவ மலத் தாக்கம் இருக்கின்றதே, அதனை அழித்தால்தானே புதிய ஆழப்பார்வை சித்தியாகும்? இதனை செய்வதே சங்கரிப்பதே அக்நியின் தொழிலாகும். இதனை கீழ் வரும் பாட்டில் ‘களிம்பு அறுப்பது’ என்பார் திருமூலர்,
திருமந்திரம்
114
களிம்பு அறுத்தான் கண்ணுதல் நந்தி
களிம்பு அறுத்தான் கண் விழிப்பித்து
களிம்பு அணுகாத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே
இங்கு ‘களிம்பு அறுத்தல்’ அதாவது மலத்தின் தாக்கத்தை அகற்றல் சங்காரமாக, ‘கண் விழிப்பித்தல்’ என்பது தோற்றம் என்றும் திதி என்றும் கொள்கின்றோம்
உலகன்
தொடரும்
இடுகை 39: உள்ளொளிக் கூத்தனே வேதத்தில்
வேத மரபில் வைதீக சைவ சித்தாந்தம் என்றோர் மரபு இருக்கின்றது. வேதியர்கள் பலர் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் வேதங்களில் இருக்கின்றன என்பர். வேதங்களை ஓரளவாது தெரியாதிருந்த காலத்தில் இது ஓர் புதிராகவே இருந்தது. ஆயினும் அக்நி வழிபாடு சுமேருத் தமிழில் பரவலாக இருப்பதைக் கண்டும், வேத மொழியே சுமேருத் தமிழின் திரிபு என்று அறிய வந்த பிறகும் வைதீக சைவ சித்தாந்தம் என்ற மரபில் ஓர் உண்மை இருக்கின்றது என்று எனக்குப் புர்ய வந்தது.
அதனையே திருமூலர் இப்பாடலில் விளக்குகின்றார் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
2800
தீத்திரட் சோதி திகழொளி யுள்ளொளி
கூத்தனைக் கண்ட அக்கோமளக் கண்ணினள்
மூர்த்திகள் மூவரும் முதல்வ னிடை செல்லப்
பார்த்தனள் வேதங்கள் பாடின தானே
இங்கு திருமூலர் வேதங்களில் எவ்வாறு கூத்தப் பிரனாகிய சிவன் இருக்கின்றான் என்பதைப் பற்றி தன் கருத்தைக் கூறுவதாகத் தெரிகின்றது. ‘வேதங்கள் பாடின” என்பது ‘வேதங்கள் பாடினள்’ என்றவாறு பாடபேதம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
‘கோமளக் கண்ணினாள்’ என்பது பராபரை அல்லது பராசத்தியாகும். இவள் பார்த்தனள என்று கூறப்படுவது யாதை? எனும் போது இந்த பரரபரை சிற்சத்தியாக ஞானவுணர்வின் மூலமாக கொளப்படுகின்றாள் என்று தெரிகின்றது.
ஞானவுணர்வின் மூலமாகிய இச்சிற்சத்தி உணர்வதுதான் யாது எனும்போது, அது தீதிரள் சோதியாகிய அக்நி இடத்தில் அதன் ஒளி பிரகாசத்தின் உள்ளொளியாக இருக்கும் சிவத்தை காண்கின்றாள் எனப்படும். இந்த தூய அக்நியின் உள்ளொளியே சிகாரமாகிய சிவமாம்.
சுமேருத் தமிழில் ‘சீ, சி” என்றாலே இந்த தூய ஒளிதான். இந்த தூய உள்ளொளியாக தனைக் காட்டி அருளும் இறைவனே சிவன் ஆகும். இச்சொல் சுமேருத் தமிழில் ‘சிப, சிப்’ என்றெல்லாம் விளங்கும்.
ஆயின் ஏன் இங்கு இந்த சிவன் கூத்தன் எனப்படவேண்டும்?
இங்கு கூத்தன் என்பது ஞானக் கூத்தன் ஆகும். எல்லார் அகத்தும் இந்த ஞானவொளியாகிய தூய ஒளியை சிவஞானத்தை எழுப்புவதற்கே இந்த உலக மாநடம் இருப்பதின் இது ஓர் கூத்து எனப்படுகின்றது. எல்லார் அகத்தும் இந்த சிவவொளி எழவொட்டாது தடுத்து நிற்கும் பலவகையான மலங்கள் வலுவாக செறிந்திருக்க, அந்த மலங்களை போக்கி ஆன்மாக்களை சுத்தமாக்கும் ஞானநடனமே இங்கு சுட்டப்படும் கூத்து ஆகும்.
பராசத்தியாகிய பராபரை உள்ளே அதன் உள்ளொளியாக சிவவொளி இருப்பதின் அதனை அவள் காண்பதாக கூறப்படுகின்றது போலும். பராசக்தி உள்ளே அதன் உயிராக இந்த சிவவொளி இருக்கின்றது.
இங்கு மூர்த்திகள் மூவரும் முதல்வனிடை செல்வது என்றால் என்ன?
மூர்த்திகள் மூவர் படைப்பின் அயன் காத்தலின் திருமால் அழித்தலின் உருத்திரன் ஆகும். இந்த மூர்த்தங்களும் ஏனைய மூர்த்தங்களும் சிவசத்தி மூர்த்தத்தின் பிற விகற்பங்களே யாகும். தூய சிவவொளி நாத விந்து எனும் தத்துவங்களின் ஏற்றங்குறை எனும் ஏறுபாடுகளால இந்த மும்மூர்த்திகள் தோன்றுகின்றன. ஆயினும் இவை தற்காலிக வடிவங்களே. ஆன்மாக்களை சுத்தஞ் செய்யும் ஞானக் கூத்தில் இறைவன் எடுக்கும் வேடங்களே யாகும். எடுக்கப்படும் வேடத்தின் நடிப்பு முடிய அவை தூய சிவவொளியாகிய உள்ளொளியில் ஒடுங்கி விடுகின்றன. மூர்த்தங்கள் அநாதிப் பொருட்கள் அல்ல- இறைவனே அநாதி. ஆக இந்த ஞானக் கூத்தின் முடிவில் மூர்த்தங்கள் எல்லாம் அந்த தூய சிவவொளியில் ஒடுங்கி விடுகின்றன.
இனி திருமூலர் இதனை எல்லாம் வரலாற்றுப் போக்கில் ஏன் ‘வேதங்கள் பாடின” என்று கூற வேண்டும்?
திருமூலரின் தனிச் சிறப்பு சிவனை நன்றாக தமிழ் செய்தவர் என்பதொடு வேதத்தையும் சித்ததந்தம் செய்தவர் ஆகும். வேதமொழி தொல்தமிழின் திரிபு என்று அவர் அறியாதிருக்கலாம். ஆனால அக்நி வழிபாட்டை மையமாகக் கொண்ட யாகத் தீ வளர்த்து சிவனை தொழுவதை மையமாகக் கொண்ட வேதம் இந்த பரையொளிக்குள்ளே இருக்கும் உள்ளொளியாகிய சிவனைத்தான் அக்நி என்று அழைத்து பாடுகின்றன என்பதே திருமூலர் வேதத்தை சைவம் செய்த வரலாறு என்று தோன்றுகின்றது.
தொடரும்
உலகன்
May be we have to refer to poems before and after this or the whole context... may be the poets refers to himself, visualizing... may be seeing how veda evolve or evolved or may be he is referring to already known story it may also interest to note what veda stanza refer to how it evil ed
__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (36) ............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
...................................![]()
__,_._,___
இடுகை 40: சுந்தரக் கூத்து
தமிழில் மிகப் பழமையான மந்திராயணத்தை வளர்த்தவர் திருமூலர். தொல்காப்பியத்தில் மந்திரங்களைப் பற்றி ஓர் குறிப்புத்தான் உண்டு, சுமேருத் தமிழ் இலக்கியத்தில் ஓங்காரத்தைப் பற்றியும் ஓர் குறிப்புண்டு. ஆயினும் இதன் பிறகு வந்திருக்கக்கூடிய மந்திராயண நூற்கள் இறந்துவிட்ட நிலையில் இந்த தொல்கால மந்திரக் கலையை நமக்கு மிக விரிவாக அறியத் தருவ்து திருமூலரின் திருமந்திரம் தான். நான்காம தந்திரம் இதனை மிக விரிவாகப் பாடும். இவரே கீழ்வரும் இப்பாட்டில் இறைவன் இந்த மூல ஓங்காரத்தையும் கடந்த ஓர் பரபுரத்தில் இருந்தவாறு கூத்து உதைக்கின்றார் என்கின்றார்.
2801
நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி யதுகடந்து
அந்தர வானத்தின் அப்புரத்து அப்பர
சுந்தரக் கூத்தனை என் சொல்லுமாறே
இங்கு அடிப்படையான வரி இரண்டாவதே யாகும். அதில் சிவன் ஓங்காரம் எனும் ஓரெழுத்து மந்திரம மருவி அதுவே தானாக நிற்பதோடு அதனை கடந்து நின்றவாறு கூத்து உதைக்கின்றான் என்று காண்கின்றார் திருமூலர். இது திருமூலருக்கு இறைவனே போத்தித ஒன்றாகத் தெரிகின்றது.
நந்தி என்றும் எந்தை என்றும் அன்பின் மேலீட்டால சிவப்பரம்பொருளை விளிக்கும் திருமூலர், ஞானத் தலைவன் என்றும் கூறுவதால், திருமூலர் அனுபவித்த ஞானத் தெளிவுகள் எல்லாம் அவர் பாடல்களில் வரும் பல ஆழ் ஞானங்கள் எல்லாம் இறைவனே அகத்து ஞானகுருவாக எழுந்து போதித்ததால் வந்தது என்று தெரிகின்றது.
ஒங்காரத்தையும் கடந்து இருக்கின்ற இறைவன் எங்கு தான் இருக்கின்றான் எனும் போது, அந்தர வானத்து அப்புரம் என்றோர் இடம் குறிக்கப்படுகின்றது.
அந்தர வானம் என்பது காணவரக்கூடிய வானத்தின் மூலம்,. அதன் உள்ளே இன்னும் ஆழத்தில் இருப்பது. ஆக வான்வெளி தோன்றுவதற்கு மூலமாக இருக்கும் ஓர் பரவெளி என்று தெரிகின்றது.
ஆயினும் இறைவன் இந்த மூல வான்வெளியிலும் இல்லையாம். இதற்கு அப்புரமாகிய ஓர் இடத்தில் இருக்கின்றானாம்
விந்தையாக இருக்கின்றது அல்லவா?. ஐரோப்பியர்கள் Space-Time Matrix என்பதைத்தான் மூலம் என்பர். இதிலிருந்து கால தத்துவமும் பரவெளியும் தோன்றுகின்றது என்பர். ஆயினும் திருமூலர் கருத்துப்படி இதனையும் கடந்து ஓர் புரம் இருக்கின்றதாம். அத்னோடு ஒன்றித்து நின்றே காலம் இடம் போன்ற உணர்வுகளை உயிர்கள் மாட்டு எழுப்புகின்றானாம்
இவ்வாறான எல்லையின் எல்லையாகிய அப்பரவெளியில் இருந்தவாறு அவன் ஆடும் திருநடம் சுந்தரக் கூத்து என்கின்றார் திருமூலர்.
இது ஏன் சுந்தரக் கூத்து ஆகின்றது?
இடுப்பில் புலித்தோல் உடுத்தி கழுத்தில் பாம்பு புரளத் தோன்றுவது சுந்தர வடிவம் அல்ல, அது அச்சந்தரும் வடிவம். இறைவன் மீனாட்சி அம்மையை திருமணம் புரிய அழகிய திருமணகோலத்தில் எழுந்தருளுவதே சுந்தரக் கோலம். ஆனால இங்கு இப்படி சுந்தர்க் கோலத்தில் எழுந்து ஆடுவதால கூத்து சுந்திரக் கூத்து ஆகுவில்லை,
எல்லா உயிர்களும் அகத்தே செறிந்திருக்கும் அழுக்குகளை ஆகவே கோரத்தைப் போக்கி சுத்தமாக்கி அழகே அன்பே நிறைந்திருக்குமாறு இறைவன அவர்களை எல்லாம் ஆட்டுவதே சுந்தர்க் கூத்து எனப் படுகின்றது. எல்லா உயிர்களையும் சுந்தரமாக்குவது, அழுக்குப் போக்கி அழகாக்கும் கூத்தே சுந்தரக் கூத்து.
தொடரும்
உலகன்
இடுகை 41: நீறு பூத்த நெருப்பு
உண்மையான புரட்சியாளர்கள், உலக வரலாற்றையே மாற்றி அமைக்கின்ற வல்லமையின் புரட்சியாலர்கள் அனைவரும் நீறு பூத்த நெருப்பு. தீயதைக் கண்டு கடுஞ் சினத்தோடு எழும் அவர்கள் அவ்வாறு எழுவதற்குக் காரணமே அவர்கள் அன்பேத் தானாகி நிற்பதுதான். இறைவனும் அப்படித்தான். அவனும் நீறு பூத்த நெருப்புத்தான். அவனும் அன்பின் காரணமாகத்தான் உருத்திரத் தாண்டவம் ஆடி தீயதை அழித்து நல்லதை வளர்கின்றான்.
இதனைத்தான் மிகச் சிறப்பாக திருமூலர் கிழ்வரும் பாட்டில் விளக்குகின்றார், இவ்வாறான இறைவன் வடிவத்தை மக்கள் உணராது இருக்கின்றார்களே என்று வருந்தியவாறு
2802
சீய குரு நந்தி திரு அம்பலத்திலே
ஆயுறு மேனியை யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மை
ஆயுறு மேனி அணை புகலாமே
என்னக் கூறவருகின்றார் இப்பாட்டில்?
எல்லா உயிர்களும் ‘அணை புகலாம்’ என்று எல்லா உயிர்களையும் அணைத்து தன்னுள் இருத்திக்கொள்வான் இறை என்பதுதான். ஆனால இது அனைவருக்கும் அல்ல, அவனது உண்மையான திருவுருவத்தை அறிந்தவர்க்கே இந்த அருள்.
அவனது திருவுருவம் தான் என்ன?
‘சீய குரு நந்தி” என்பது சீ ஆகிய தூய ஒளி வடிவில் அனைவருக்கும் சிவஞானம் போதிக்கும் தெள்ளிய குருவாக திருஅம்பலத்திலே இருக்கின்றான். நந்தி என்பது விடலை வெள்லேறுவை வாகனமாக உள்ளவன் என்றும் பொருள் படும். குருவாக ஞானம் போதிக்கும் அவன் எல்லா உயிர்கட்கும் அளப்பரிய வீரியத்தையும் அருளுகின்றவன் ஆகும். உடம்பில் வீரியம் இல்லையென்றால், அகத்தே போராடிப் போராடி ஆழ் நுழைவுகளைப் பெறுதல் முடியாது. குருவாக எழுந்து ஞானம் போதிக்கும் இறைவன் அளப்பரிய குண்டலினி சத்தியை வீரியத்தை அருளுகின்றவனும் ஆகும்
ஏன் இப்படிச் செய்கின்றான்? அவனது இயல்புதான் என்ன?
அவனது உணமையான திருமேனி, யாரும் அறியாத உண்மையானத் திருமேனி ‘நீறு பூத்த நெருப்பு’ போன்றதோர் வடிவம் ஆகும்.
இதன் பொருள் என்ன?
புறத்திலே தூயவொளி. அன்பே தானாக தனைக் காட்டும் நிலை. இது எல்லா உயிர்களயும் இறைவன் பால் ஈர்க்கும் தன்மைய ஓர் வடிவம். அன்பிற்கு ஆளாகாதார் யாருண்டு?
ஆனால் வெளுப்பாகிய இந்த புறவுரு உள்ளே இன்னொரு உருவும் இருக்கின்றது. அதுதான் சுட்டெரிக்கும் செந்தீ வடிவம், தீயுறு செம்மை வடிவம். சுட்டெரித்து தீய்க்கும் வடிவம.
ஏன் இப்படி முரண்பாடுடைய இரண்டு வடிவங்கள்?
நந்தியாக அளப்பரிய குண்டலினி சத்தியை தான் குருவாக எழுந்து ஞானம் போதிக்கும் போது அருளும் இறைவன், அன்பினால எல்லா உயிர்களையும் தன்பால் ஈர்க்கும் இறைவன் அவற்றை சுத்தம் செய்யும் வகையில் தீக்கையும் செய்கின்றான் என்று பொருள்படும்.
அகக் கசடுகளை எல்லாம் தீய்த்து எரித்து அழித்து இல்லாது போக்கி ஆன்மாகளைத் தூயதாக்கியே அன்றே எல்லார் அகத்திலும் இருக்கும் சிவஞானத்தை சுடரச் செய்ய முடியும்
சிவபோதம் என்பது இதுவரை இல்லாத ஓர் ஞானத்தை அகத்தே இருத்துவது அல்ல. மாறாக அன்றே அகத்தே இருக்கின்ற சிவஞானத்தை சுடரச் செய்வதாகும்- இந்த சுடர்தலுக்குத் தடையாக இருக்கும் கசடுகளை எரித்து சுத்தமாக்க , இந்த சிவஞானம் தானே மிகச் சிறப்பாக சுடரத் தொடங்கி ஆன்மாவை ஆட்கொள்ளும்
தொடரும்
உலகன்