நான் நேற்று வெ சாமிநாத சர்மாவின் பிளேட்டோவின் அரசியல் என்ற நூலை இணைத்தேன்.
இன்று அதே வரிசையில் அறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் மற்றொரு நூலான மகனே உனக்கு - மகனுக்கு எழுதிய கடிதங்கள் என்ற அருமையான நூலை பி.டி.எப் கோப்பையாக இணைத்துள்ளேன்.
இணையத்தில் சாண்டில்யன், கல்கி போன்ற ஜனரஞ்சகமான - இதற்கு சரியான தமிழ் வார்த்தை எது என்று உடனே நினைவுக்கு வரவில்லை - எழுத்தாளர்களின் நூல்களே அதிகம் கிடைக்கின்றன. வெ. சாமிநாத சர்மா போன்றோரின் நூல்கள் கிடைப்பதே இல்லை. வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்ட போதிலும் ஓரிரண்டு நூல்களே - அபிசீனிய சக்ரவர்த்தி - இணையத்தில் கிடைக்கின்றன எனக்குத் தெரிந்தவரை.
வேறெதாவது நூல்கள இணையத்தில் கிடைத்தால் தெரிவிக்கவும்.
நாளை அல்லது ஓரிரு நாட்களில் என்னிடமுள்ள மற்றொரு நூலான வெ. சாமிநாத சர்மாவின் வரலாறு கண்ட கடிதங்கள் என்ற நூலை பி.டி.எப். வடிவில் தரலாமென்றிருக்கிறேன்.
வெ சாமிநாத சர்மாவின் எனக்குப் பிடித்த எழுத்தாளர் மட்டுமல்ல நெறிப்படுத்திய எழுத்தாளருமாவார். மற்றவர்கள் விந்தன் போன்றோர். சாமிநாத சர்மா அவர்களின் மற்றொரு அருமையான நூல் ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள். கல்லூரி நாட்களில் படித்த நூல் அது.
சுந்தரராஜன் ஜெயராமன்
கோயம்புத்தூர்