உயரத்தில் தீப்பந்தம் ஏன்?
நூ த லோ சு
மயிலை
மசால் (p. 830) [ mcāl ] --மஷால், s. [Arab.] A flambeau, a torch,
தீவர்த்தி.
மசால்ச்சி--மஷால்ஜி, s. a torch bearer.
மசால் திசைச்சொல் என்று தெரிகிறது
தேவ்
On Jan 27, 5:06 pm, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> நூ த லோகசுந்தரம்
> மயிலை
>
> கீழ்கண்ட கட்டுரை
> '*வல்லமை'* மின்இதழ் பதிவினுக்கு அனுப்பினேன்
> இம் மடலிலும் நகலைக் காணலாமே என ஈங்கு
> - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
> - - -
>
> * மீமிசால்*
> **
> மாணிக்கவாசகருடன் தொடர்புடைய திருப்பெருந்துறை கோயிலுக்கு
> திருவாதிரை அன்று சிறப்பு வழிபாடு எவ்வாறு நடக்கின்றது என அறிய
> இம்முறை அங்கு சென்றபோது புதுக்கோட்டை அருகுள்ள அறந்தாங்கி
> என்னும் ஊரிலிருந்து திருப்பெருந்துறை ஆகிய ஆவுடையார் கோயிலுக்கு
> பேருந்தில் சென்றேன். அங்குசெல்ல ஒருபேருந்து மீமிசால் எனும்
> பெயருடைய கடற்கரை அருகுள்ள ஊர்வரை செல்கின்றது அதில்
> செல்லுங்கள் என்றார்கள். சென்றேன். வழிபாடும் செய்தேன்.
>
> ஆனால்,
> ஓர் ஊரின் பெயர் *மீமிசால்* என்பது எனக்கு மிக வியப்பளிக்கும்
> வண்ணம் சொற்களை உடையதாகக் காணப்பட்டது. அது என்ன
> மீமிசால் என ஒரு ஊர்ப்பெயர்? அச்சொல்லுக்கு பொருள் ஏதும்
> அறிவீர்களா? என பேருந்தில் உடன் வந்தோரைக் கேட்டேன்
> சாதாரண மக்களாகிய அவர் வாயில் *இம்முறை* வேண்டிய
> பதில் கிடைக்காமல் போகவே என் தமிழ்மொழி பயிற்சித்
> திறனை பயன் கொண்டு விடைகாண முயன்றேன்.
>
> ' மீ ' என்றால்
> 'மேல்நோக்கும்'
> 'வானத்தை பார்க்கும்'
> 'உயர் நிலையைக்
> காட்டும்'
>
> * ஓர் சொல். *சிலபோது *மேற்கு*த் திசைதனையும்
> *("மீகொங்கில் காஞ்சிவாய்" =தேவாரம்) *குறிக்கும் எனவும்
> அறிவேன். பிறகு, *மிசால்* என்ன என்று விளங்கவில்லை.
> சிலமணி நேரம் கடந்த பின் பொன்னியின் செல்வன் கதையில்
> கல்கி அவர்கள் *மசால் *என்றால் தீப்பந்தம் என எழுதியது
> ஞாபகம் வந்தது. அதற்கு *சுளுந்து* என்னும் சொல்லும் உண்டு
> என எழுதுவார்.
>
> உயரத்தில் தீப்பந்தம் ஏன்?
> இன்னாளில் 3 கூட்டுச்சொற்களால் விளிக்கப்படும் சொல்
> *கலம் + கரை + விளக்கம்*
> மீமிசால் கடற்கரை ஊர்ஆதலால் *உயரத்தில் தீப்பந்தத்தை*
> *(மசால்) வைக்கும் இடம் *என்னும் பொருளில் மீமசால் என்பது
> மீமிசாலாகத் *திரிந்தது* போலும் எனத்தோன்றிது. .சிறுவயதில்
> மாமல்லபுரத்திகு சென்றபோது புதிய கலங்கரை விளக்கத்திற்கு
> அருகுள்ள மற்றொரு *அறையின் (பாறையின்) மேல் ஓர் உயரமான*
> *கல்மண்டப அமைப்பு*த்தான் மின்சார ஆற்றல்வழி விளக்குகள்
> இல்லாத முற்காலத்தில் உயரத்தில் தீப்பந்தத்தை ஏற்றி, கார்த்திகை
> தீபத்தன்று, திருவண்ணாமலையில் தீ ஏற்றி வைப்பதுபோல், ஐயப்பன்
> கோயிலில் பொன்னம்பல மேட்டில் ஏற்றும் மகரவிளக்கு போல்
> முன்நாளில் *தீ மூட்டி கலங்கரை விளக்காக* பயன்பட்டது என அறிந்தது
> நினைவு வரவே 'மீமிசால்' என்பது 'மீமசால்' என்பதாகும் எனவும்
> அச்சொல்லுக்கு 'கலங்கரை விளக்கம்' என்னும் பொருளாகும் எனவும்
> சுயவிளக்ககம் அளித்துக் கொண்டேன்.
>
> எனவே *மீமிசால் > மீமசால் > கலங்கரை விளக்கம்* எனலாம்.
> இச்சொல்லே அது நின்ற ஊரின் பெயரும் ஆகியது பேலும்.
>
> சிறிதே,ஆய்வினை *மேலும் *சொடுக்கிவிட
> *'மசால் வடை*' என்பதில் வரும் *மசா*லும் தீயைத்தான் குறித்தது போலும்
> ஆனால் இன்னாளில் அவ்வடையை *எள்நெய்* போன்று ஓர் நெய் கொண்டு
> பொரித்து எடுகிறோம். ஒருகால் தீயில் நேரடியாக சுட்டு எடுக்கும் *'கபாப்'*
> எனும் நல்ல மணமுள்ள தாளித பொருள்கள் சேர்த்து செய்யும் *உண் / தின்*
மீமிசால் கடற்கரை ஊர்ஆதலால் உயரத்தில் தீப்பந்தத்தை(மசால்) வைக்கும் இடம் என்னும் பொருளில் மீமசால் என்பது
On Jan 27, 6:41 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> ஐயா அவர்களுக்கு வணக்கம்.
>
> 2012/1/27 N D Logasundaram <selvindl...@gmail.com>
>
> > மீமிசால் கடற்கரை ஊர்ஆதலால் *உயரத்தில் தீப்பந்தத்தை*
> > *(மசால்) வைக்கும் இடம் *என்னும் பொருளில் மீமசால் என்பது
>
> பாரட்டுகள் ஐயா.
> மீமசாலுக்குக் காரைக்குடியிலிருந்து பேருந்துகளில் ‘மீமிசல்‘ என்று இருக்கும்.
> மீமசாலின் பெயருக்குப் பொருளுணர்ந்து கூறியதற்கு நன்றி ஐயா.
>
மசால் என்ற உர்துச் சொல்லுடன் சேர்ந்த பெயராக
இது தெரியவில்லை.
மீமிசை அழகான தமிழ்ச் சொல். அல் விகுதி சேர்ந்து
ஊர்ப்பெயர். அடுத்துள்ள இடங்களுக்கு மேடாக
இருக்கிறதா? அல்லது கலங்கரை விளக்காலா? என்று
பார்க்கவேண்டும்.
ஆனால், நிச்சயம் தமிழ் முன்னொட்டு மீ- உர்து மசாலுடன்
சேர்ந்ததாக எண்ணமுடியவில்லை.
நெயதல் நிலத்தில் பிறந்த பட்டினத்து அடிகள்
மீமிசை என்ற சொல்லைக் கழுமலம் என்னும்
சீகாழிக்கு எத்தனை முறை பாடுகிறார் எனப் பார்க்கவும்.
பட்டினத்து அடிகள்
அருளிச் செய்த
திருக்கழுமல மும்மணிக்கோவை
அகவற்பா
திருச்சிற்றம்பலம்
850.
திருவளர் பவளப் பெருவரை மணந்த
மரகத வல்லி போல ஒருகூ(று)
இமையச் செல்வி பிரியாது விளங்கப்
பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த
அலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த
வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக்
கதிர்விடு நின்முகங் காண்தொறுங் காண்தொறும்
முதிரா இளமுலை முற்றாக் கொழுந்தின்
திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின்
தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை
இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின்
செவ்வாய்க் குமுதஞ் செவ்வி செய்யநின்
செங்கைக் கமலம் மங்கை வனமுலை
அமிர்த கலசம் அமைவின் ஏந்த
மலைமகள் தனாது நயனக் குவளைநின்
பொலிவினொடு மலர மறையோர்
கழுமலம் நெறிநின்று பொலிய
நாகர் நாடு மீமிசை மிதந்து
மீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங்(கு)
ஒன்றா வந்த குன்றா வெள்ளத்(து)
உலகம்மூன் றுக்குங் களைகண் ஆகி
முதலில் காலம் இனிதுவீற் றிருந்துழித்
தாதையொடு வந்த வேதியச் சிறுவன்
தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த
‘அன்னா யோ’வென் றழைப்பமுன் நின்று
ஞான போனகம் அருளட்டிக் குழைத்த
ஆனாத் திரளை அவன்வயின் அருள
அந்தணன் முனிந்து ‘தந்தார் யார்’என
‘அவனைக் காட்டுவன் அப்ப வானார்
தோஒ டுடைய செவியன்’ என்றும்
பீஇ டுடைய பெம்மான் என்றும்
கையில் சுட்டிக் காட்ட
ஐயநீ வெளிப்பட் டருளினை ஆங்கே.
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மீன்மசியல் அல்லது மீன்மசால் என்பதன் மரூஉவாக இருக்கலாமோ?
அன்புடன்,
தி.பொ.ச
On Feb 2, 4:10 am, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wrote:
> மீன்மசியல் அல்லது மீன்மசால் என்பதன் மரூஉவாக இருக்கலாமோ?
>
:-)
வாழ்க வளமுடன்,
நா. கணேசன்
> அன்புடன்,
>
> தி.பொ.ச
>
> 2012/2/2 N. Ganesan <naa.gane...@gmail.com>
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> மீன்மசியல் அல்லது மீன்மசால் என்பதன் மரூஉவாக இருக்கலாமோ
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Feb 2, 4:10 am, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wroteட்:
> மீன்மசியல் அல்லது மீன்மசால் என்பதன் மரூஉவாக இருக்கலாமோ>
அன்புடன்சொ.வினைதீர்த்தான்
On Feb 3, 9:41 pm, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wrote:
> நூதலோசு ஐயா,
>
> அடியேனது சின்ன விண்ணப்பம். தங்களைப் போன்ற பெரியவர்கள் தமிழுக்கு செய்ய
> வேண்டிய எவ்வளவோ நல்ல வேலைகள் உள்ளன. அதை விடுத்து இத்தகைய ஆராய்ச்சியில்
> ஈடுபட்டு உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குவது குறித்து எனக்கு கவலையே.
>
> பொதுவாக ஓர் ஊரின் பெயர் அமைப்பிற்குப் பல வகையான காரணங்கள் உண்டு. அவற்றை
> எல்லாம் நூல் பார்த்துப் பிடிப்பது கடினமான வேலை ஆகும்.அப்படியே
> கண்டறிந்தாலும் அவற்றை ஏற்க மாட்டார்கள்.
>
> இந்த ஊர் விசயத்தில் மீமிசால் என்ற ஊர் பெயரை மீமசால் என தாங்கள் மாற்றிக்
> கொண்டு அதற்குப் பொருள் உரைத்தீர்கள். அதைப் போல நான் எனது கருத்தை
> முன்வைத்தேன் அவ்வளவே. மற்றவர்களும் அவரவர் கருத்தை முன்வைக்கட்டும். என்னதான்
> முட்டி மோதினாலும் இறுதியில் எதுவும் ஏற்கப்பட போவதில்லை, உங்கள் 'கரிகால்'
> ஆராயச்சியைப் போலவே.
>
திருத்தம் ஐயா,
மீமிசால் என்றோ, மீமசால் என்றோ மீன்மசால் என்றோ
அவ்வூர்ப்பெயர் இல்லை. நூதலோசு ஐயா தொண்டைநாட்டார்.
அவர் அவ்வூருக்குச் சென்ற பயணம்.
மீமிசல் என்பது ஊர்ப்பெயர் என்று அவ்வூர் அருகே சொந்த ஊர் கொண்டோர்
சொல்வதைக் கருத்தில் எடுத்தல் நன்று.
வினைதீர்த்தான் மீமிசல் பற்றி எழுதினார், காளைராசன் பஸ்களில் மீமிசல் என
எழுதியிருப்பதைச் சொன்னார்.
மீமிசல் = மீமிசை + அல் என நினைக்கிறேன் என்று இவ்விழையில் குறிப்பிட்டது
தங்களுக்கு நினைவிருக்கலாம்.
நா. கணேசன்
> ஆகவே மீண்டும் அடியேனது சிறு விண்ணப்பம்.
மீமிசல் என்பது ஊர்ப்பெயர் என்று அவ்வூர் அருகே சொந்த ஊர் கொண்டோர்
சொல்வதைக் கருத்தில் எடுத்தல் நன்று.
வினைதீர்த்தான் மீமிசல் பற்றி எழுதினார், காளைராசன் பஸ்களில் மீமிசல் என
எழுதியிருப்பதைச் சொன்னார்.
மீமிசல் = மீமிசை + அல் என நினைக்கிறேன்
நீங்கள் நினைப்பது போல் லெமுரியா போன்றவற்றிற்கும் மீமிசாலுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது
எந்த ஒரு ஆறு கடலில் சேரும் இடதில் கடலுக்குள் சிறு திட்டுபோல் நீட்டிக்கொண்டு காணப்படும்கூகாள் நிலப்படங்களைக் காண்க
மக்கள் வாய்வழி வருவதைக் கேட்டுக்கொள்ளலாம் ஆனால் அறிவு வழி தான் ஆயப்படவேண்டும்
On Feb 9, 5:40 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> நீங்கள் நினைப்பது போல் லெமுரியா போன்றவற்றிற்கும் மீமிசாலுக்கும்
> ஒரு தொடர்பும் கிடையாது
>
>
ஊரின் பேர்: மீமிசல். காளைராசன் அனுப்பிய செவ்வி கேட்டீர்களா?
அந்த ஊர்க்காரர்கள் மீமிசல் என்று எழுதுவதைக் காண:
https://www.google.com/#hl=en&output=search&sclient=psy-ab&q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D&psj=1&oq=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D&aq=f&aqi=&aql=&gs_sm=3&gs_upl=5459l13720l0l14414l20l20l6l1l2l0l152l939l10.3l13l0&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.,cf.osb&fp=580d903cc5acc20c&biw=1366&bih=667
பிற பின்னர்,
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
முதலில் உங்கள் ஒலிப்பதிவு முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் முனைவர் காளைராசன்.
இப்படி பல பதிவுகளைச் செய்து நாம் தகவல் கரூவூலத்தை அமைக்கலாம் . உங்கள் உதவியுடன் மேலும் பல தகவல் தொகுப்பைச் சேகரிப்போம்.
தூமழை பொழிந்து வாழ்க, துன்னிய[2] பயிர்கள் வாழ்க,
பூ[3] மலி உயிர்கள் வாழ்க, பூதி[4] சாதனங்கள் வாழ்க,
மீ[5] மிசை[6] சைவம் வாழ்க, வேந்தர் மெய்ச் செங்கோல் வாழ்க.
[1] மகவிசேடம் = மாசி மகத்தில் நடைபெறும் திருவிழா
[2] துன்னிய = உழுது பயிரிட்ட . (செந் .iv,213)
[3] பூ = பூமி
[4] பூதி = (1) விபூதி, (2) செல்வம். (பிங்.) பூதிதருமிலிங்கபூசனை (காஞ்சிப்பு. மகாலிங்க. 21).
[5] மீ = (1) உயரம், (2) ஆகாயம். (பிங்.) மீப்பாவிய விமையோர் குலம் (கம்பரா. நிகும்பலை. 149).
[6] மிசை = (1) உயர்ச்சி. (சூடா.), (2) மேலிடம். (பிங்.) களிற்று மிசையோனே (புறநா. 13).
இதன் வழியாக, “மீமிசல்“ என்ற ஊரின் பெயருக்கு, “உயரமான இடம்“ என்று பொருள் கொள்ள முடிகிறது.
அன்பன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மீமிசை சைவம் வாழ்க.
மீமாம்சம் எனும் சமய தத்துவமாக
இருக்குமோ?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.