எச்சிலும் பத்தும் ...

763 views
Skip to first unread message

rajam

unread,
Apr 2, 2012, 8:43:21 PM4/2/12
to மின்தமிழ்
"எச்சில்" "பத்து" என்ற
சொற்களைப் பற்றியும்
அவற்றின் குறிப்பு முறை
பற்றியும் தெரிந்துகொள்ள
ஆவல்.

முன்னுரை
-------------
நான் பிறந்து வளர்ந்த
சூழல் மிகவும் "ஆசாரமானது."
அதாவது ... ஏதாவது ஒரு
காரணத்துக்காக நான் என்
நாக்கைத் தொட்டுவிட்டு
அதே வீச்சில் இன்னொரு
பொருளைத் தொட
அனுமதியில்லை. அதோடு,
"பத்து" என்பது "பழையது"
என்று நினைக்கிறேன்.
ஆனாலும் தெளிவில்லை.

படிப்புரை
------------
"எச்சம்" என்ற சொல் ஆதிகால
தமிழ் இலக்கியத்தில்
இருப்பது எனக்குத்
தெரியும். எனவே அதையே
திரும்பவும் இங்கே இந்த
இழையில் சொல்லத்
தேவையில்லை.

வேண்டுகோள்
------------------

நான் வேண்டிய
கேள்விகளுக்கு உதவும்
வகையில் மட்டுமே உங்கள்
குறிப்பைக் கொடுங்கள்.

என் கேள்விகள்:

1. "எச்சில்" என்றால் என்ன?

2. "பத்து" என்றால் என்ன?

3. யார் யார் எங்கே எங்கே
இந்த எச்சில்/பத்து
சமாச்சாரத்தைச்
சரியாகப் புரிந்துகொண்டு
கடைப்பிடிக்கிறார்கள்?

4. நீங்கள் இந்த எச்சில்/
பத்து சமாச்சாரத்தைக்
கடைப்பிடிக்கிறீர்களா?

மேலே கேட்ட
கேள்விகளுக்கு விடை
சொல்லும் முறையில்
மட்டும் பதில்
சொல்லுங்கள், பயனடைவேன்.

அன்புடன்,
ராஜம்

செல்வன்

unread,
Apr 2, 2012, 9:23:59 PM4/2/12
to mint...@googlegroups.com
பத்து என்பதை பழையது என்ற பொருளில் பயன்படுத்தி நான் கேள்விபட்டதில்லை. அதனால் எச்சிலை பற்றி எழுதுகிறேன்.

எச்சில் மேலான அறுவறுப்பு யுனிவர்சல் ஆனது. ஆனால் நம் கலாசாரத்தில் எச்சிலுக்கும் புனிதமான, ஆச்சரமான இடம் உண்டு.

1) நம் ஊரில் கடும் ஆசாரம் பார்க்கும் பெண்கள் கூட கணவன் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுவதை பெருமையாக எண்ணுவார்கள். 

2) காரமடை ரங்கநாதர் கோயிலில் கவ்வாளம் என்ற நடைமுறை உண்டு. ரங்கநாதர் சிலையை தூக்கி கொண்டு ஆடிபாடிகொண்டு வரும் பாகவதர்களுக்கு பக்தர்கள் வாழைபழத்தை கொடுப்பார்கள். அதை வாயில் போட்டு குதப்பி பக்தர்கள் கையில் துப்புவார்கள். அதை பிரசாதமாக உண்டால் குழந்தை பிறக்காத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. (சிறுவயதில் இதை கேட்ட பாதிப்பில் காரமடை தேர் வருது என தெரிந்தாலே ஓடிவிடுவேன்)

3)தினமும் நாம் உண்ணும் உணவை கடவுளுக்கு படைத்து, அதை பிரசாதமாக உண்ணுவதும் எச்சில் தான்.ஆனால் ஆச்சாரமான, சுகாதாரமான எச்சில்.

எத்தியோப்பியா உனவகங்களுக்கு போகும்போது எத்தனை பேர் போனாலும் அனைவருக்கும் ஒரே தட்டில் தான் உணவு பரிமாறுவார்கள்.அரேபியா, எத்தியோப்பியாவில் அது தான் கலாசாரம். நம் பேமிலி என்றால் இதை பொருட்படுத்துவதில்லை.ஆனால் நண்பர்களுடன் போகும்போது "என்னதான் நட்பை வளர்க்கும்" என்ற கலாசாரமாக இருந்தாலும் அதை செயல்படுத்த முடிவதில்லை. தனி பிளேட் வாங்கி கொள்வது வழக்கம்.

நெருக்கமானவர்களுக்கிடையே எச்சில் பார்ப்பது நட்பை குலைக்கும் செயல். இப்பவும் சில நண்பர்கள் உரிமையோடு சிப்சை சல்சாவில் டபிள் டிப் செய்யும்போது எனக்கு பற்றிகொண்டு வரும். சிலசமயம் பார்ட்டிகளில் ஐஸ்க்ரீமை எடுக்கும்போது சில நண்பர்கள் "ஒரு வாய் டேஸ்ட் பார்க்கிறேன்" என வாங்கி ஸ்புனில் எடுத்து நக்கிவிட்டு "நல்லா இல்லை, நல்லா இருக்கு" என சொல்லி அதை மீண்டும் என் கையில் கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். அவர்கள் தலை மறைந்த அடுத்த வினாடி அதை குப்பையில் கொட்டிவிடுவேன். 

--
செல்வன்

Geetha Sambasivam

unread,
Apr 2, 2012, 9:28:03 PM4/2/12
to mint...@googlegroups.com

1. "எச்சில்" என்றால் என்ன?

கையை வாய்க்குள்ளே செலுத்திச் சாப்பிடுவதைத் தான் எச்சில் என்று சொல்வார்கள்.  என்னுடைய சில சிநேகிதிகள் சாப்பிடுகையில் உணவை உருட்டி வாய்க்குள்ளே போடுவார்கள். எனக்கு அப்படிச் சாப்பிட வராது.  கீழே விழும். அதோடு சாப்பிட்டு முடித்த பின்னர் உள்ளங்கை, விரல்களைச் சிலருக்கு/பலருக்கும்:))) நக்கிக் கொடுக்கும் வழக்கமும் உண்டு.  அப்போது அது எச்சில் கையாகிவிடுகிறது.  அதை நன்குஅலம்பி விட்டே மற்றப் பண்டங்களைத் தொடவேண்டும்.  இது சுகாதார அடிப்படையில் ஆனதே.  ஆனால் சின்னக் குழந்தைகளுக்கு இதை ஒரு ஆசாரம் எனத் தோன்றும்படி அந்தக் காலப் பெரியவர்கள் செய்துவிட்டனர்.

2. "பத்து" என்றால் என்ன?

சமைக்கும் பொருட்களான சாதம், குழம்பு, ரசம், காய்கள் போன்ற அனைத்தையும் தான் பத்து என்பார்கள்.  சப்பாத்தி பத்தில்லை என்பார்கள்.  என் அப்பாவின் சித்தி ரவா உப்புமா செய்கையில் உப்பை முதலிலேயே சேர்க்க மாட்டார்கள்.  உப்புமாவைக் கிளறிக் கீழே இறக்கி வைத்த பின்னர் உப்புச் சேர்ப்பார்கள்.  முன் கூட்டி உப்புச் சேர்த்தால் அவங்க அதை உண்ண மாட்டார்கள்.  உப்புச் சேர்த்த எல்லாப் பொருட்களையும் பத்து என்று சொல்ல முடியாது.  உப்புச் சேர்த்த ஊறுகாய் வகைகள் பத்தில்லை.  அடுப்பில் வைத்துச் சமைப்பவையே பத்து.  அதிலும் பொரித்து எடுப்பவை பத்தில்லை.  என் மாமியார் மாவு கரைத்து ஊற்றும் பொருட்களும் பத்து என்பார்.  உதாரணமாகச் சப்பாத்திக்குச் செய்யப்படும் சைட் டிஷ்கள்.  சில வீடுகளில் உருளைக்கிழங்கில் செய்யப்படும் உணவுகளுக்குப் பத்துப் பார்ப்பதில்லை. :)))) இது ஓரளவுக்கு நம் மனதைப் பொறுத்தது என்று சொல்லலாம்.

3. யார் யார் எங்கே எங்கே இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கிறார்கள்?

சரியாப் புரியறதானு சொல்ல முடியலை.  ஆனால் மேற்சொன்ன முறையில் கடைப்பிடிக்கிறேன். ஏனெனில் இவை கலக்கும்போது உணவுப் பொருட்கள் கெட்டுப் போவதை நன்கு உணர்ந்திருக்கிறேன்.  கூடியவரையில் சமைத்த அன்றாட உணவுப் பொருட்களோடு, (சாதம், சாம்பார், ரசம், காய்கறிகள்) தயிர், பால், மோர், ஊறுகாய்கள், மற்றத் தின்பண்டங்கள் சேர்த்து வைப்பதில்லை.  அதோடு சாப்பிடும் தட்டில் உணவு ஏதானும் அதிகம் போட்டுவிட்டால் அதைத் திரும்ப எடுத்துச் சமைத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் போடுவதில்லை. அதைத் தனியாக வேறொரு கிண்ணத்தில் எடுத்து வைத்துவிடுவோம்.  பின்னர் சாப்பிடும்போது பயன்படுத்திக் கொள்வோம்.

ஒரு சிலர் தின்பண்டங்களையும் நேரடியாக மொத்தமாக இருப்பதில் இருந்து அப்படியே எடுத்துக் கொண்டு சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை அதில் போடுகின்றனர். எனக்கு அதுவும் சரியாக வரவில்லை.  காரமானால் அதன் கரகரப்புத் தன்மை குறைகிறது.  இனிப்பானால் சுவை மாறுபடுகிறது.  ஆகவே வேண்டிய அளவுக்குத் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதிகமாய்ப் போனால் அதைத் தனியாகவே வைக்கிறேன்.  அப்படி இருந்தும் தனியாக வைப்பது கொஞ்சம் சுவை மாறுபட்டுத் தான் தெரியும்.

4. நீங்கள் இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா?

எச்சில்/பத்துக் கடைப்பிடிப்பது உண்டு.  எச்சில் நிச்சயமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.  மற்றவரின் எச்சில் கைகளோடு கொடுத்த உணவு அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. 

எச்சத்தின் பொருள் வேறு; எச்சிலின் பொருள் வேறு, இல்லையா?

On Tue, Apr 3, 2012 at 6:13 AM, rajam <ra...@earthlink.net> wrote:
"எச்சில்" "பத்து" என்ற சொற்களைப் பற்றியும் அவற்றின் குறிப்பு முறை பற்றியும் தெரிந்துகொள்ள ஆவல்.

முன்னுரை
-------------
நான் பிறந்து வளர்ந்த சூழல் மிகவும் "ஆசாரமானது." அதாவது ... ஏதாவது ஒரு காரணத்துக்காக நான் என் நாக்கைத் தொட்டுவிட்டு அதே வீச்சில் இன்னொரு பொருளைத் தொட அனுமதியில்லை. அதோடு, "பத்து" என்பது "பழையது" என்று நினைக்கிறேன். ஆனாலும் தெளிவில்லை.

படிப்புரை
------------
"எச்சம்" என்ற சொல் ஆதிகால தமிழ் இலக்கியத்தில் இருப்பது எனக்குத் தெரியும். எனவே அதையே திரும்பவும் இங்கே இந்த இழையில் சொல்லத் தேவையில்லை.

வேண்டுகோள்
------------------

நான் வேண்டிய கேள்விகளுக்கு உதவும் வகையில் மட்டுமே உங்கள் குறிப்பைக் கொடுங்கள்.

மேலே கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லும் முறையில் மட்டும் பதில் சொல்லுங்கள், பயனடைவேன்.

அன்புடன்,
ராஜம்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

360.gif

Geetha Sambasivam

unread,
Apr 2, 2012, 9:29:20 PM4/2/12
to mint...@googlegroups.com
நெருக்கமானவர்களுக்கிடையே எச்சில் பார்ப்பது நட்பை குலைக்கும் செயல். இப்பவும் சில நண்பர்கள் உரிமையோடு சிப்சை சல்சாவில் டபிள் டிப் செய்யும்போது எனக்கு பற்றிகொண்டு வரும். சிலசமயம் பார்ட்டிகளில் ஐஸ்க்ரீமை எடுக்கும்போது சில நண்பர்கள் "ஒரு வாய் டேஸ்ட் பார்க்கிறேன்" என வாங்கி ஸ்புனில் எடுத்து நக்கிவிட்டு "நல்லா இல்லை, நல்லா இருக்கு" என சொல்லி அதை மீண்டும் என் கையில் கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். அவர்கள் தலை மறைந்த அடுத்த வினாடி அதை குப்பையில் கொட்டிவிடுவேன். //

செல்வனோடு ஒத்துப் போகவேண்டி இருக்கே!  அட தேவுடா!!!!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
333.gif

Hari Krishnan

unread,
Apr 2, 2012, 9:34:16 PM4/2/12
to mint...@googlegroups.com

2012/4/3 rajam <ra...@earthlink.net>

"எச்சில்" "பத்து" என்ற சொற்களைப் பற்றியும் அவற்றின் குறிப்பு முறை பற்றியும் தெரிந்துகொள்ள ஆவல்.

என் பாட்டி காமாட்சி (அம்மாவின் அம்மா) சொன்ன விளக்கம்:

‘எதையெல்லாம் சாப்பிடப் பயன்படுத்தியிருக்கிறோமோ, அதெல்லாம் எச்சில். எதையெல்லாம் சமைக்கப் பயன்படுத்தினோமோ அதெல்லாம் பத்து (பற்று). வச்சா கெட்டுப் போகறது பத்து; வாயில் பட்டோ, படாமலோ சாப்பிடப் பயன்பட்டுவிட்டு, இன்னமும் கழுவாத நிலையிலிருப்பது எச்சில்.‘

இறைவனுக்குப் படைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களில் ‘எச்சப் பாத்திரத்தை’ பயன்படுத்த மாட்டார்கள். அதாவது, நாம் சாப்பிடப் பயன்படுத்தப்ட்டு, கழுவப்பட்டானதன் பிறகும், நாம் பயன்படுத்திய பாத்திரத்தில் இறைவனுக்கும் பித்ருக்களுக்கும் படைப்பதில்லை.

உபரித் தகவல்: காமாட்சி பாட்டி மன்னார்குடியைச் சேர்ந்தவர்   தஞ்சை நீடாமங்கலத்தில் வாழ்க்கைப்பட்டவர். இது தஞ்சை விளக்கம். மத்த ஏரியா விளக்கம் எனக்குத் தெரியாது. (எச்ச, பத்து எல்லாம் கடந்துவிட்ட சமதிருஷ்டி சமபாவனா யோகத்தில் யாம் நிலைகொண்டு யாண்டுபல கழிந்தவால்!)

--
அன்புடன்,
ஹரிகி.

LK

unread,
Apr 2, 2012, 9:35:24 PM4/2/12
to mint...@googlegroups.com
இதேதான் என் அம்மாவும் சொல்வார்கள்

2012/4/3 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Thanks and Regards
Karthik L
http://www.atheetham.com
http://lksthoughts.blogspot.com

rajam

unread,
Apr 2, 2012, 10:41:14 PM4/2/12
to mint...@googlegroups.com, Hari Krishnan
(எச்ச, பத்து எல்லாம் கடந்துவிட்ட சமதிருஷ்டி சமபாவனா யோகத்தில் யாம் நிலைகொண்டு யாண்டுபல கழிந்தவால்!)

யாமோ ... இந்நிலை கடந்த யாண்டுகளுக்கும் மேற்பட்ட மோனத்திருக்க முயல்கிறோம், முடியவில்லை. எம் குறையில்லை, எம் குருவின் அருளிச் செயலில்தான் குறை என்க! :-) 
 
இப்படிக்கு,
ஒரு சாதனமான அடியாள் :-)

rajam

unread,
Apr 2, 2012, 10:59:54 PM4/2/12
to mint...@googlegroups.com

செல்வனோடு ஒத்துப் போகவேண்டி இருக்கே!  அட தேவுடா!!!!<333.gif><333.gif><333.gif><333.gif>

இந்த மாதிரிக் கருத்தைத் தூண்டவேண்டித்தானே இந்த இழையைத் தொடங்கினேன், கீதா! நன்றி, நன்றி!
என் அனுபவங்கள் பலவகை. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். :-) 

On Apr 2, 2012, at 6:29 PM, Geetha Sambasivam wrote:

நெருக்கமானவர்களுக்கிடையே எச்சில் பார்ப்பது நட்பை குலைக்கும் செயல். இப்பவும் சில நண்பர்கள் உரிமையோடு சிப்சை சல்சாவில் டபிள் டிப் செய்யும்போது எனக்கு பற்றிகொண்டு வரும். சிலசமயம் பார்ட்டிகளில் ஐஸ்க்ரீமை எடுக்கும்போது சில நண்பர்கள் "ஒரு வாய் டேஸ்ட் பார்க்கிறேன்" என வாங்கி ஸ்புனில் எடுத்து நக்கிவிட்டு "நல்லா இல்லை, நல்லா இருக்கு" என சொல்லி அதை மீண்டும் என் கையில் கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். அவர்கள் தலை மறைந்த அடுத்த வினாடி அதை குப்பையில் கொட்டிவிடுவேன். //

செல்வனோடு ஒத்துப் போகவேண்டி இருக்கே!  அட தேவுடா!!!!<333.gif><333.gif><333.gif><333.gif>

rajam

unread,
Apr 2, 2012, 11:26:00 PM4/2/12
to mint...@googlegroups.com
திருமதி கீதா என் கேள்விகளுக்கு மிக நல்ல பதிவுகள் கொடுத்திருக்கிறார்; மிகவும் நன்றி! பிறரும் படித்துத் தங்கள் கருத்தையும் பதிவு செய்யவும். நன்றி! :-)

On Apr 2, 2012, at 6:28 PM, Geetha Sambasivam wrote:

1. "எச்சில்" என்றால் என்ன?

கையை வாய்க்குள்ளே செலுத்திச் சாப்பிடுவதைத் தான் எச்சில் என்று சொல்வார்கள்.  என்னுடைய சில சிநேகிதிகள் சாப்பிடுகையில் உணவை உருட்டி வாய்க்குள்ளே போடுவார்கள். எனக்கு அப்படிச் சாப்பிட வராது.  கீழே விழும். <360.gif><360.gif> அதோடு சாப்பிட்டு முடித்த பின்னர் உள்ளங்கை, விரல்களைச் சிலருக்கு/பலருக்கும்:))) நக்கிக் கொடுக்கும் வழக்கமும் உண்டு.  அப்போது அது எச்சில் கையாகிவிடுகிறது.  அதை நன்குஅலம்பி விட்டே மற்றப் பண்டங்களைத் தொடவேண்டும்.  இது சுகாதார அடிப்படையில் ஆனதே.  ஆனால் சின்னக் குழந்தைகளுக்கு இதை ஒரு ஆசாரம் எனத் தோன்றும்படி அந்தக் காலப் பெரியவர்கள் செய்துவிட்டனர்.

2. "பத்து" என்றால் என்ன?

சமைக்கும் பொருட்களான சாதம், குழம்பு, ரசம், காய்கள் போன்ற அனைத்தையும் தான் பத்து என்பார்கள்.  சப்பாத்தி பத்தில்லை என்பார்கள்.  என் அப்பாவின் சித்தி ரவா உப்புமா செய்கையில் உப்பை முதலிலேயே சேர்க்க மாட்டார்கள்.  உப்புமாவைக் கிளறிக் கீழே இறக்கி வைத்த பின்னர் உப்புச் சேர்ப்பார்கள்.  முன் கூட்டி உப்புச் சேர்த்தால் அவங்க அதை உண்ண மாட்டார்கள்.  உப்புச் சேர்த்த எல்லாப் பொருட்களையும் பத்து என்று சொல்ல முடியாது.  உப்புச் சேர்த்த ஊறுகாய் வகைகள் பத்தில்லை.  அடுப்பில் வைத்துச் சமைப்பவையே பத்து.  அதிலும் பொரித்து எடுப்பவை பத்தில்லை.  என் மாமியார் மாவு கரைத்து ஊற்றும் பொருட்களும் பத்து என்பார்.  உதாரணமாகச் சப்பாத்திக்குச் செய்யப்படும் சைட் டிஷ்கள்.  சில வீடுகளில் உருளைக்கிழங்கில் செய்யப்படும் உணவுகளுக்குப் பத்துப் பார்ப்பதில்லை. :)))) இது ஓரளவுக்கு நம் மனதைப் பொறுத்தது என்று சொல்லலாம்.

3. யார் யார் எங்கே எங்கே இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கிறார்கள்?

சரியாப் புரியறதானு சொல்ல முடியலை.  ஆனால் மேற்சொன்ன முறையில் கடைப்பிடிக்கிறேன். ஏனெனில் இவை கலக்கும்போது உணவுப் பொருட்கள் கெட்டுப் போவதை நன்கு உணர்ந்திருக்கிறேன்.  கூடியவரையில் சமைத்த அன்றாட உணவுப் பொருட்களோடு, (சாதம், சாம்பார், ரசம், காய்கறிகள்) தயிர், பால், மோர், ஊறுகாய்கள், மற்றத் தின்பண்டங்கள் சேர்த்து வைப்பதில்லை.  அதோடு சாப்பிடும் தட்டில் உணவு ஏதானும் அதிகம் போட்டுவிட்டால் அதைத் திரும்ப எடுத்துச் சமைத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் போடுவதில்லை. அதைத் தனியாக வேறொரு கிண்ணத்தில் எடுத்து வைத்துவிடுவோம்.  பின்னர் சாப்பிடும்போது பயன்படுத்திக் கொள்வோம்.

ஒரு சிலர் தின்பண்டங்களையும் நேரடியாக மொத்தமாக இருப்பதில் இருந்து அப்படியே எடுத்துக் கொண்டு சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை அதில் போடுகின்றனர். எனக்கு அதுவும் சரியாக வரவில்லை.  காரமானால் அதன் கரகரப்புத் தன்மை குறைகிறது.  இனிப்பானால் சுவை மாறுபடுகிறது.  ஆகவே வேண்டிய அளவுக்குத் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதிகமாய்ப் போனால் அதைத் தனியாகவே வைக்கிறேன்.  அப்படி இருந்தும் தனியாக வைப்பது கொஞ்சம் சுவை மாறுபட்டுத் தான் தெரியும்.

4. நீங்கள் இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா?

எச்சில்/பத்துக் கடைப்பிடிப்பது உண்டு.  எச்சில் நிச்சயமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.  மற்றவரின் எச்சில் கைகளோடு கொடுத்த உணவு அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.  <360.gif><360.gif><360.gif><360.gif>

எச்சத்தின் பொருள் வேறு; எச்சிலின் பொருள் வேறு, இல்லையா?<360.gif><360.gif>
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Tthamizth Tthenee

unread,
Apr 2, 2012, 11:32:07 PM4/2/12
to mint...@googlegroups.com
ஒரு  பந்தியில் உட்கார்ந்து உணவு உண்ட ஒருவனின் வாயில் கடிபட்ட மாம்பழம் தெறித்து  அடுத்து இருக்கும் பத்து பேருடைய இலைகளைத் தழுவிச் சென்றது
 
அவன் அழத் தொடங்கினான்
 
மற்றவர்கள்  எங்கள் இலையில் உன் எச்சில் பட்டது  நாங்களல்லவா அழவேண்டும் என்றார்கள்
 
அதற்கு அவன்  என் தந்தையார் உண்ணும்போது  அவர்  மாம்பழம் கடித்தால்  குறைந்த பக்‌ஷம்  ஐம்பது இலைக்காவது அவருடைய  மாம்பழம் போகுமாம்
 
அதை நினைத்தேன்  அழுகை வந்தது  என்றானாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2012/4/3 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Apr 2, 2012, 11:48:21 PM4/2/12
to mint...@googlegroups.com
தேனீயாரின் கருத்து எனக்குப் புரியவில்லையே.
"எச்சில்" என்றதுக்கும் "பத்து" என்றதுக்கும் இந்த நிகழ்ச்சியின் விரிவுரைக்கும் என்ன தொடர்பு என்று கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் எனக்குத் தெளிவாக இருக்கும்.
மிக்க நன்றி! 

Geetha Sambasivam

unread,
Apr 2, 2012, 11:56:10 PM4/2/12
to mint...@googlegroups.com
இறைவனுக்குப் படைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களில் ‘எச்சப் பாத்திரத்தை’ பயன்படுத்த மாட்டார்கள். அதாவது, நாம் சாப்பிடப் பயன்படுத்தப்ட்டு, கழுவப்பட்டானதன் பிறகும், நாம் பயன்படுத்திய பாத்திரத்தில் இறைவனுக்கும் பித்ருக்களுக்கும் படைப்பதில்லை.//

சரிதான்.  அந்தப் பாத்திரங்கள் சமைக்க மட்டுமே.  பிறவற்றிற்குக் கிடையாது.  அதோடு சிராத்தம், சுமங்கலிப் பிரார்த்தனை போன்ற விசேஷ தினங்களில் சமைக்கும் பாத்திரங்களே தனியாகவும் வைத்திருப்போம்; இன்றளவும் வைத்திருக்கிறோம்.

On Tue, Apr 3, 2012 at 7:04 AM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

என் பாட்டி காமாட்சி (அம்மாவின் அம்மா) சொன்ன விளக்கம்:

‘எதையெல்லாம் சாப்பிடப் பயன்படுத்தியிருக்கிறோமோ, அதெல்லாம் எச்சில். எதையெல்லாம் சமைக்கப் பயன்படுத்தினோமோ அதெல்லாம் பத்து (பற்று). வச்சா கெட்டுப் போகறது பத்து; வாயில் பட்டோ, படாமலோ சாப்பிடப் பயன்பட்டுவிட்டு, இன்னமும் கழுவாத நிலையிலிருப்பது எச்சில்.‘

இறைவனுக்குப் படைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களில் ‘எச்சப் பாத்திரத்தை’ பயன்படுத்த மாட்டார்கள். அதாவது, நாம் சாப்பிடப் பயன்படுத்தப்ட்டு, கழுவப்பட்டானதன் பிறகும், நாம் பயன்படுத்திய பாத்திரத்தில் இறைவனுக்கும் பித்ருக்களுக்கும் படைப்பதில்லை.

உபரித் தகவல்: காமாட்சி பாட்டி மன்னார்குடியைச் சேர்ந்தவர்   தஞ்சை நீடாமங்கலத்தில் வாழ்க்கைப்பட்டவர். இது தஞ்சை விளக்கம். மத்த ஏரியா விளக்கம் எனக்குத் தெரியாது. (எச்ச, பத்து எல்லாம் கடந்துவிட்ட சமதிருஷ்டி சமபாவனா யோகத்தில் யாம் நிலைகொண்டு யாண்டுபல கழிந்தவால்!)

--
அன்புடன்,
ஹரிகி.

--
360.gif

rajam

unread,
Apr 3, 2012, 12:06:58 AM4/3/12
to mint...@googlegroups.com
நன்றி, நன்றி!
பாருங்கள்! ஒரு சின்ன கேள்வி எவ்வளவு முக்கியமான பரம்பரைச் செய்திகளைச் சொல்ல இடம் தருகிறது! :-)

On Apr 2, 2012, at 8:56 PM, Geetha Sambasivam wrote:

இறைவனுக்குப் படைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களில் ‘எச்சப் பாத்திரத்தை’ பயன்படுத்த மாட்டார்கள். அதாவது, நாம் சாப்பிடப் பயன்படுத்தப்ட்டு, கழுவப்பட்டானதன் பிறகும், நாம் பயன்படுத்திய பாத்திரத்தில் இறைவனுக்கும் பித்ருக்களுக்கும் படைப்பதில்லை.//

சரிதான்.  அந்தப் பாத்திரங்கள் சமைக்க மட்டுமே.  பிறவற்றிற்குக் கிடையாது.  அதோடு சிராத்தம், சுமங்கலிப் பிரார்த்தனை போன்ற விசேஷ தினங்களில் சமைக்கும் பாத்திரங்களே தனியாகவும் வைத்திருப்போம்; இன்றளவும் வைத்திருக்கிறோம். <360.gif><360.gif><360.gif><360.gif>

Santhanam Swaminathan

unread,
Apr 3, 2012, 12:52:02 AM4/3/12
to mint...@googlegroups.com
பத்து ,தீட்டு என்பனவற்றை ஆங்கிலத்தில்  மொழிபெயர்ப்பது கூட கடினம். ஓரளவு விளக்கித்தான் சொல்ல முடிகிறது. பத்து என்ற சொல்லின் பிறப்பியல் (எடிமாலஜி) என்ன? தீட்டிலும் பல வகைகள் உள்ளன. நல்லது, கெட்டது என்ற இரண்டிலும்.  இது ஒரு விநோதமான விஷயம். எவ்வளவு நாட்கள் என்பது பண்பாட்டுக்கு பண்பாடு வித்தியாசப்படுகிறது.   ஒரு தலைவர் இறந்தால் இந்திய அரசு இந்து முறையை ஒட்டி 13 நாட்கள் துக்கம் (தீட்டு காலம்) கடைப்பிட்க்கிறது. சில நாடுகள் 3 நாட்கள். நம் நாட்டிலும் கூட ஜாதிக்கு ஜாதி வேறுபாடு உண்டு. பத்து என்பது உப்பு போடாத உணவுப் பொருட்களுக்கு உண்டா? பிராமணர்களைத் தவிர வேறு ஜாதிகள் இதைக் கடைப்பிடிக்கிறார்களா? ஆராய்ச்சிக்குறிய ஒரு சுவையான விஷயம்
 
Swami
020 8904 2879
07951 370 697

From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, April 3, 2012 4:56 AM
Subject: Re: [MinTamil] எச்சிலும் பத்தும் ...
360.gif

rajam

unread,
Apr 3, 2012, 1:05:40 AM4/3/12
to mint...@googlegroups.com
Great! Go on! 

On Apr 2, 2012, at 9:52 PM, Santhanam Swaminathan wrote:

பத்து ,தீட்டு என்பனவற்றை ஆங்கிலத்தில்  மொழிபெயர்ப்பது கூட கடினம். ஓரளவு விளக்கித்தான் சொல்ல முடிகிறது. பத்து என்ற சொல்லின் பிறப்பியல் (எடிமாலஜி) என்ன? தீட்டிலும் பல வகைகள் உள்ளன. நல்லது, கெட்டது என்ற இரண்டிலும்.  இது ஒரு விநோதமான விஷயம். எவ்வளவு நாட்கள் என்பது பண்பாட்டுக்கு பண்பாடு வித்தியாசப்படுகிறது.   ஒரு தலைவர் இறந்தால் இந்திய அரசு இந்து முறையை ஒட்டி 13 நாட்கள் துக்கம் (தீட்டு காலம்) கடைப்பிட்க்கிறது. சில நாடுகள் 3 நாட்கள். நம் நாட்டிலும் கூட ஜாதிக்கு ஜாதி வேறுபாடு உண்டு. பத்து என்பது உப்பு போடாத உணவுப் பொருட்களுக்கு உண்டா? பிராமணர்களைத் தவிர வேறு ஜாதிகள் இதைக் கடைப்பிடிக்கிறார்களா? ஆராய்ச்சிக்குறிய ஒரு சுவையான விஷயம்
 
Swami
020 8904 2879
07951 370 697

From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, April 3, 2012 4:56 AM
Subject: Re: [MinTamil] எச்சிலும் பத்தும் ...

இறைவனுக்குப் படைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களில் ‘எச்சப் பாத்திரத்தை’ பயன்படுத்த மாட்டார்கள். அதாவது, நாம் சாப்பிடப் பயன்படுத்தப்ட்டு, கழுவப்பட்டானதன் பிறகும், நாம் பயன்படுத்திய பாத்திரத்தில் இறைவனுக்கும் பித்ருக்களுக்கும் படைப்பதில்லை.//

சரிதான்.  அந்தப் பாத்திரங்கள் சமைக்க மட்டுமே.  பிறவற்றிற்குக் கிடையாது.  அதோடு சிராத்தம், சுமங்கலிப் பிரார்த்தனை போன்ற விசேஷ தினங்களில் சமைக்கும் பாத்திரங்களே தனியாகவும் வைத்திருப்போம்; இன்றளவும் வைத்திருக்கிறோம். <360.gif><360.gif><360.gif><360.gif>

On Tue, Apr 3, 2012 at 7:04 AM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

என் பாட்டி காமாட்சி (அம்மாவின் அம்மா) சொன்ன விளக்கம்:

‘எதையெல்லாம் சாப்பிடப் பயன்படுத்தியிருக்கிறோமோ, அதெல்லாம் எச்சில். எதையெல்லாம் சமைக்கப் பயன்படுத்தினோமோ அதெல்லாம் பத்து (பற்று). வச்சா கெட்டுப் போகறது பத்து; வாயில் பட்டோ, படாமலோ சாப்பிடப் பயன்பட்டுவிட்டு, இன்னமும் கழுவாத நிலையிலிருப்பது எச்சில்.‘

இறைவனுக்குப் படைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களில் ‘எச்சப் பாத்திரத்தை’ பயன்படுத்த மாட்டார்கள். அதாவது, நாம் சாப்பிடப் பயன்படுத்தப்ட்டு, கழுவப்பட்டானதன் பிறகும், நாம் பயன்படுத்திய பாத்திரத்தில் இறைவனுக்கும் பித்ருக்களுக்கும் படைப்பதில்லை.

உபரித் தகவல்: காமாட்சி பாட்டி மன்னார்குடியைச் சேர்ந்தவர்   தஞ்சை நீடாமங்கலத்தில் வாழ்க்கைப்பட்டவர். இது தஞ்சை விளக்கம். மத்த ஏரியா விளக்கம் எனக்குத் தெரியாது. (எச்ச, பத்து எல்லாம் கடந்துவிட்ட சமதிருஷ்டி சமபாவனா யோகத்தில் யாம் நிலைகொண்டு யாண்டுபல கழிந்தவால்!)

--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Kamala Devi

unread,
Apr 3, 2012, 1:22:07 AM4/3/12
to mint...@googlegroups.com
கீதா,
எனக்கொரு சத்யம் தெரியணும். கீதா, தமிழில் . கீதா,--- பத்து என்றால் மரணசேஷம் வரும் பத்தாம் நாள் தானே பத்து என்பது. அப்படித்தான் இதுநாள்வரை ஞான் நம்பியிருந்தேன்.ஆனால் இது என்ன புதிதாய், பத்து,என்பதற்கு இப்படியெல்லாம் அர்த்தம் சொல்கிறீர்கள், எனக்குப்புரியவில்லை.இது பத்து என்ரால் அந்த பத்து, பற்றி தமிழ்நாட்டில்
ஞான் அறிந்தது என்ன பொருள் ?   எனக்கு உடனே யாராவது விளக்க வேண்டுகிறேன்
அன்பு கமலம்
http://www.kamalagaanam.blogspot.com

--- On Tue, 3/4/12, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:

From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
Subject: Re: [MinTamil] எச்சிலும் பத்தும் ...
To: mint...@googlegroups.com
Date: Tuesday, 3 April, 2012, 1:28 AM

1. "எச்சில்" என்றால் என்ன?

கையை வாய்க்குள்ளே செலுத்திச் சாப்பிடுவதைத் தான் எச்சில் என்று சொல்வார்கள்.  என்னுடைய சில சிநேகிதிகள் சாப்பிடுகையில் உணவை உருட்டி வாய்க்குள்ளே போடுவார்கள். எனக்கு அப்படிச் சாப்பிட வராது.  கீழே விழும். அதோடு சாப்பிட்டு முடித்த பின்னர் உள்ளங்கை, விரல்களைச் சிலருக்கு/பலருக்கும்:))) நக்கிக் கொடுக்கும் வழக்கமும் உண்டு.  அப்போது அது எச்சில் கையாகிவிடுகிறது.  அதை நன்குஅலம்பி விட்டே மற்றப் பண்டங்களைத் தொடவேண்டும்.  இது சுகாதார அடிப்படையில் ஆனதே.  ஆனால் சின்னக் குழந்தைகளுக்கு இதை ஒரு ஆசாரம் எனத் தோன்றும்படி அந்தக் காலப் பெரியவர்கள் செய்துவிட்டனர்.

2. "பத்து" என்றால் என்ன?

சமைக்கும் பொருட்களான சாதம், குழம்பு, ரசம், காய்கள் போன்ற அனைத்தையும் தான் பத்து என்பார்கள்.  சப்பாத்தி பத்தில்லை என்பார்கள்.  என் அப்பாவின் சித்தி ரவா உப்புமா செய்கையில் உப்பை முதலிலேயே சேர்க்க மாட்டார்கள்.  உப்புமாவைக் கிளறிக் கீழே இறக்கி வைத்த பின்னர் உப்புச் சேர்ப்பார்கள்.  முன் கூட்டி உப்புச் சேர்த்தால் அவங்க அதை உண்ண மாட்டார்கள்.  உப்புச் சேர்த்த எல்லாப் பொருட்களையும் பத்து என்று சொல்ல முடியாது.  உப்புச் சேர்த்த ஊறுகாய் வகைகள் பத்தில்லை.  அடுப்பில் வைத்துச் சமைப்பவையே பத்து.  அதிலும் பொரித்து எடுப்பவை பத்தில்லை.  என் மாமியார் மாவு கரைத்து ஊற்றும் பொருட்களும் பத்து என்பார்.  உதாரணமாகச் சப்பாத்திக்குச் செய்யப்படும் சைட் டிஷ்கள்.  சில வீடுகளில் உருளைக்கிழங்கில் செய்யப்படும் உணவுகளுக்குப் பத்துப் பார்ப்பதில்லை. :)))) இது ஓரளவுக்கு நம் மனதைப் பொறுத்தது என்று சொல்லலாம்.

3. யார் யார் எங்கே எங்கே இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கிறார்கள்?

சரியாப் புரியறதானு சொல்ல முடியலை.  ஆனால் மேற்சொன்ன முறையில் கடைப்பிடிக்கிறேன். ஏனெனில் இவை கலக்கும்போது உணவுப் பொருட்கள் கெட்டுப் போவதை நன்கு உணர்ந்திருக்கிறேன்.  கூடியவரையில் சமைத்த அன்றாட உணவுப் பொருட்களோடு, (சாதம், சாம்பார், ரசம், காய்கறிகள்) தயிர், பால், மோர், ஊறுகாய்கள், மற்றத் தின்பண்டங்கள் சேர்த்து வைப்பதில்லை.  அதோடு சாப்பிடும் தட்டில் உணவு ஏதானும் அதிகம் போட்டுவிட்டால் அதைத் திரும்ப எடுத்துச் சமைத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் போடுவதில்லை. அதைத் தனியாக வேறொரு கிண்ணத்தில் எடுத்து வைத்துவிடுவோம்.  பின்னர் சாப்பிடும்போது பயன்படுத்திக் கொள்வோம்.

ஒரு சிலர் தின்பண்டங்களையும் நேரடியாக மொத்தமாக இருப்பதில் இருந்து அப்படியே எடுத்துக் கொண்டு சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை அதில் போடுகின்றனர். எனக்கு அதுவும் சரியாக வரவில்லை.  காரமானால் அதன் கரகரப்புத் தன்மை குறைகிறது.  இனிப்பானால் சுவை மாறுபடுகிறது.  ஆகவே வேண்டிய அளவுக்குத் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதிகமாய்ப் போனால் அதைத் தனியாகவே வைக்கிறேன்.  அப்படி இருந்தும் தனியாக வைப்பது கொஞ்சம் சுவை மாறுபட்டுத் தான் தெரியும்.

4. நீங்கள் இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா?

எச்சில்/பத்துக் கடைப்பிடிப்பது உண்டு.  எச்சில் நிச்சயமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.  மற்றவரின் எச்சில் கைகளோடு கொடுத்த உணவு அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. 

எச்சத்தின் பொருள் வேறு; எச்சிலின் பொருள் வேறு, இல்லையா?

On Tue, Apr 3, 2012 at 6:13 AM, rajam <ra...@earthlink.net> wrote:

"எச்சில்" "பத்து" என்ற சொற்களைப் பற்றியும் அவற்றின் குறிப்பு முறை பற்றியும் தெரிந்துகொள்ள ஆவல்.

முன்னுரை

-------------

நான் பிறந்து வளர்ந்த சூழல் மிகவும் "ஆசாரமானது." அதாவது ... ஏதாவது ஒரு காரணத்துக்காக நான் என் நாக்கைத் தொட்டுவிட்டு அதே வீச்சில் இன்னொரு பொருளைத் தொட அனுமதியில்லை. அதோடு, "பத்து" என்பது "பழையது" என்று நினைக்கிறேன். ஆனாலும் தெளிவில்லை.

படிப்புரை

------------

"எச்சம்" என்ற சொல் ஆதிகால தமிழ் இலக்கியத்தில் இருப்பது எனக்குத் தெரியும். எனவே அதையே திரும்பவும் இங்கே இந்த இழையில் சொல்லத் தேவையில்லை.

வேண்டுகோள்

------------------

நான் வேண்டிய கேள்விகளுக்கு உதவும் வகையில் மட்டுமே உங்கள் குறிப்பைக் கொடுங்கள்.

என் கேள்விகள்:

1. "எச்சில்" என்றால் என்ன?

2. "பத்து" என்றால் என்ன?

3. யார் யார் எங்கே எங்கே இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கிறார்கள்?

4. நீங்கள் இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா?

மேலே கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லும் முறையில் மட்டும் பதில் சொல்லுங்கள், பயனடைவேன்.

அன்புடன்,

ராஜம்

Nagarajan Vadivel

unread,
Apr 3, 2012, 1:47:23 AM4/3/12
to mint...@googlegroups.com
இறைவனை வணங்கத் தனி மனிதத் தூய்மைக்கும் இறைவனை வழிபட அளிக்கப்படும் படையலின் தூய்மைக்கும்  எச்சில் மாசுப்பொருளாகக் கருதப்படும்
இறைவனுக்களிக்கப்படும்  படையல்  பொருட்கள் (தேங்காய் பழம்) மூடிய நிலையிலும் உணவு காய்ச்சல் முறையில் பொங்கியும் படைக்கப்பட வேண்டும் என்பது சாஸ்திர சம்ப்ரதாய மரபு
மற்ற சயங்களில் (இஸ்லாமிய கிரித்துவ) இந்த நிலை வேறுபடுகிறது
கத்தோலிக்கக் கோவிலில் ஹோலி கம்யுனியனில் மதகுரு ஒரே பாத்திரத்திலிருந்து ஒவ்வொருவரும் திராட்சைரசத்தை அருந்த அளிப்பார்
இஸ்லாமியர்கள் நெருங்கிய நட்பைக் காட்ட ஒருவரைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிடுவதும் விருந்தில் பொதுவாக வைக்கப்பட்டுல்ல உணவை எச்சில் கையால் எடுத்துச் சாப்பிடுவதும் வழக்கம்
பன்னாட்டு அனுபவத்தில் கட்டிப்பிடித்து முத்தமிடுவதும் எச்சில் கையால் பொதுவாக வைத்திருப்பதை எடுத்து உண்ட அனுபவமும் உண்டு
அதுபோலவே மிக ஆசாரமான குடும்பத்தில் நீர் அருந்தும் போதும் காபி அருந்தும்போதும் எச்சில்படாமல் அருந்த வேண்டும்
நான் மாணவனாக இருந்தபோது  மதுரைப்பக்கம் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு சாப்பிட்ட இலைய எடுத்துச்சென்று போட்டுவிட்டுக் கையலம்பவேண்டும்
அதுதெரியாமல் சிலர் பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு இலையை எடுக்காமல் பேருந்தில் அமர்ந்த பிறகும் தேடி ஆளைப்பிடித்து அவர் சாப்பிட்ட இலையை அவரையே எடுத்துப்போடச் செய்வர்
மற்றவர் உணவு அருந்திய எச்சில் இலையை எடுப்பதும் மற்றவர் உன்ட பத்திரங்களைச் சுத்தம் செய்வதும் (பத்துத் தேய்ப்பது) அருவருப்பான செயலாகக் கருதப்பட்டது
நாகராசன்

2012/4/3 rajam <ra...@earthlink.net>

Geetha Sambasivam

unread,
Apr 3, 2012, 2:54:41 AM4/3/12
to mint...@googlegroups.com
ஆமாம் கமலம், பத்தாம் நாளைப் "பத்து" என்றே சொல்வார்கள்.  அன்றைய தினம் இறந்தவருக்குப் பிடித்த உணவு வகைகளை உப்பிடாமல் சமைத்து(அதற்கெனத் தனி ஆள் உண்டு) பெரியதொரு மூட்டையாகக் கட்டி, பெரிய வெண்கலப் பானையில் சாதம் வடித்து வீட்டில் உள்ள அனைவரும் அந்த மூட்டையில் ஆளுக்கு ஒரு கரண்டி சோற்றையும் அதில் போடுவார்கள். முக்கியமாய்ப் பெண்களை விட்டுப் போடச் சொல்லுவார்கள்.  இதற்குப் பத்துக் கொட்டுதல் என்றே பெயர். இப்படிப் போடுகையில் பெண்கள் ஈர ஆடையை உடுத்திய வண்ணம் தலையையும் விரித்து போட்டுக் கொள்ளச் சொல்வார்கள். மகா வேதனையாக இருக்கும்.  இதனாலேயே வெறும் நாட்களில் உப்பிடாமல் சமைத்தலோ, அல்லது தலையை விரித்துப் போட்டுக்கொண்டு உணவு பரிமாறுவதோ, ஈர ஆடையுடன் உணவு பரிமாறுவதோ, சாப்பிடுவதோ தடை செய்யப் பட்டது.

எனக்கு ஒரு அதிர்ஷ்டம் என்னவெனில் கூட்டுக்குடும்பம் என்பதோடு எங்க அப்பா, பெரியப்பா, தாத்தா, மாமாக்கள் எல்லாரும் சமயம் வந்தப்போ இதை எல்லாம் எங்களுக்கு விளக்கிச் சொன்னது தான்.  பெரியவங்களுக்கு நன்றி சொல்லிக்கணும்.  அதனாலேயே ஓரளவுக்கு இந்தச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கையில் அதற்கான காரண, காரியங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

Geetha Sambasivam

unread,
Apr 3, 2012, 2:56:23 AM4/3/12
to mint...@googlegroups.com
இப்போது சொல்வது சமைத்த உணவுப் பொருட்களைத் தொட்டு விட்டுப் பிற பொருட்களைத் தொடுவது குறித்து.  சமைத்த உணவுப் பொருட்கள், முக்கியமாக அன்னம், குழம்பு, ரசம், காய்கள், பொங்கல், உப்புமா, தோசை, இட்லி போன்றவை வேக வைக்க, கொதிக்க வைக்கப் படுவதால் அவை பத்து எனப்படுகிறது.

On Tue, Apr 3, 2012 at 10:52 AM, Kamala Devi <saahi...@yahoo.com.sg> wrote:
கீதா,
எனக்கொரு சத்யம் தெரியணும். கீதா, தமிழில் . கீதா,--- பத்து என்றால் மரணசேஷம் வரும் பத்தாம் நாள் தானே பத்து என்பது. அப்படித்தான் இதுநாள்வரை ஞான் நம்பியிருந்தேன்.ஆனால் இது என்ன புதிதாய், பத்து,என்பதற்கு இப்படியெல்லாம் அர்த்தம் சொல்கிறீர்கள், எனக்குப்புரியவில்லை.இது பத்து என்ரால் அந்த பத்து, பற்றி தமிழ்நாட்டில்
ஞான் அறிந்தது என்ன பொருள் ?   எனக்கு உடனே யாராவது விளக்க வேண்டுகிறேன்
அன்பு கமலம்
http://www.kamalagaanam.blogspot.com

Hari Krishnan

unread,
Apr 3, 2012, 3:14:41 AM4/3/12
to mint...@googlegroups.com

2012/4/3 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

பிராமணர்களைத் தவிர வேறு ஜாதிகள் இதைக் கடைப்பிடிக்கிறார்களா? ஆராய்ச்சிக்குறிய ஒரு சுவையான விஷயம்
 
எல்லா இனத்தவருக்கும் தீட்டு உண்டு.  பத்து, பதின்மூன்று பிராமணர்களுக்கிருந்தால், மற்ற இனத்தவர்களுக்கு இந்த நாள் கணக்கு மாறுபடும்.  அபிதான சிந்தாமணியில் இந்தத் தீட்டுக் கணக்கு இன்ன இனத்துக்கு இத்தனை நாள் என்று விரிவாகக் குறிக்கப்பட்டிருக்கிறது.  (இதைப் பார்த்துதான் சென்னை தி. நகர் ஞானவாபியில் சுமார் 10-15 அடி நீளமுள்ள பலகையில் எழுதி வைத்திருக்கிறார்கள்.)

ஆனால் பத்தாம் நாள், பதின்மூன்றாம் நாள் எல்லாம் உண்டே தவிர எந்த இனத்திலும் பன்னிரண்டாம் நாள் அனுசரிப்பது கிடையாது.

“பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்“

என்று கண்ணன்-என் சேவகனில் பாரதி பாடுவதன் நக்கல் புரிகிறதா?  :)))

N. Kannan

unread,
Apr 3, 2012, 5:50:15 AM4/3/12
to mint...@googlegroups.com
2012/4/3 செல்வன் <hol...@gmail.com>:

> பத்து என்பதை பழையது என்ற பொருளில் பயன்படுத்தி நான் கேள்விபட்டதில்லை. அதனால்
> எச்சிலை பற்றி எழுதுகிறேன்.
>
> எச்சில் மேலான அறுவறுப்பு யுனிவர்சல் ஆனது. ஆனால் நம் கலாசாரத்தில்
> எச்சிலுக்கும் புனிதமான, ஆச்சரமான இடம் உண்டு.

உலகிலேயே மிக விரும்பப்படும் காதல் முத்தம் எச்சல் :-))

க.>

N. Kannan

unread,
Apr 3, 2012, 5:52:43 AM4/3/12
to mint...@googlegroups.com
2012/4/3 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> 2012/4/3 Santhanam Swaminathan <swam...@yahoo.com>
>>
>> பிராமணர்களைத் தவிர வேறு ஜாதிகள் இதைக் கடைப்பிடிக்கிறார்களா?
>> ஆராய்ச்சிக்குறிய ஒரு சுவையான விஷயம்

> எல்லா இனத்தவருக்கும் தீட்டு உண்டு.

யாழ்ப்பாணத்து நல்லூர் கந்தசாமி கோயிலில் கொடியேற்றிவிட்டால், பாரிசு,
லண்டன் ஈழத்தவர் வீட்டில் `மச்சம்` (கறியுணவு) தொட்ட பாத்திரங்களைத் தூர
வைத்துவிட்டு புதிய பாத்திரத்தில்தான் சமைப்பார்கள்!!

க.>

Sanathani

unread,
Apr 3, 2012, 6:18:05 AM4/3/12
to மின்தமிழ்

இந்தியாவில் தோன்றிய அஹிம்சை மார்க்கங்கள் வலுப்பட்டதன் விளைவு “பத்து”.

நெருப்பால் சமைக்கப்பட்ட உணவுகள் நுண்ணுயிரிகளைக் கொன்று உருவாகின்றன.
அதனால், இயல்பாகவே தீட்டு ஏற்பட்டு விடுகிறது.

சன்னியாசிகள் நெருப்பைப் பயன்படுத்தக்கூடாது என்று விதியே உள்ளது.
ஏனெனில், சன்னியாசிகளுக்கு அஹிம்சை கட்டாய விதி.

ஜைன சம்பிரதாயத்தில் இருந்து மற்ற சம்பிரதாயங்களுக்குப் ‘பத்து’
பரவியதாகக் கேள்வி.

.

Vijay Vanbakkam

unread,
Apr 3, 2012, 6:37:18 AM4/3/12
to mint...@googlegroups.com
தீட்டு என்பது எல்லா இந்தியர்களுக்கும், ஹிந்துக்களுக்கும் ஒரு செகன்ட் நேசர். அதில் பிராமணர்கள் ஒரு படி தீவிரமாகவே இருந்தனர் , இருக்கின்ரனர் முடிந்தவரை
 
இப்போது நாம் பார்க்கும் - அல்லது 50 வருடங்கள் முன்னால் பார்த்த தீட்டுகள் - எல்லாம் ஏதாவது தர்ம சாஸ்த்ரத்தில் வரையருக்கப்பட்டு இருக்கும். தமிழ்நாட்டு பிராமணர்களில் பெரும்பாலோர் ஆபஸ்தம்ப தர்மசாஸ்த்ரத்தை பின்பற்றுபவர்கள், அதில் தேடிப்பார்த்தால் இதைப்போல தீட்டு ரூல்கள் கிடைக்கும். தேடிப்பார்க்க
 
http://www.sacred-texts.com/hin/sbe02/index.htm
 
( நான் 200 ஆண்டுகள் முன் வாழ்ந்திருந்தால் ஆபஸ்தம்பத்தை சமஸ்கிருதத்தில் கோட் செய்திருப்பேன். கலியின் முன்னேற்றம் இப்போது பிராமனர்கள் கூட தங்கள் சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் கோட் செய்ய வேண்டியுள்ளது)
 
என் பார்வையில் இதைப்போல் ஆசார பிராமணர்களின் (orthodox brahmins) தீட்டு ரூல்கள்களின் மனோ தத்துவ அடைப்படை  உயிருள்ள உடலின் இருந்து பிரிபவை -உதாரனமாக  எச்சில், நகம், பெண்கள் மாதவிடாய், ரத்தம், பிரேதம். இப்படி உயிரில் இருந்து பிரிந்து போனவற்றின் அருகாமை பிராமணர்களின் Angst - anxiety level ஐ அதிகரிக்கிரது. இந்த Angst - anxiety level ஐ குறைக்க சடங்குகள் தேவைப்படுகிறன. இந்த சடங்குகளை செய்தவுடன் anxiety level குறைந்து சாதாரண வாழ்க்கைக்கு வரலாம் .
 
இதைப்போல் தீட்டு கருத்துகள் பல தலங்களில் இந்தியர்களிடையே பரவியுள்ளன.
 
வகொவி
 
Date: Mon, 2 Apr 2012 21:52:02 -0700
From: swam...@yahoo.com

Subject: Re: [MinTamil] எச்சிலும் பத்தும் ...
360.gif

Innamburan Innamburan

unread,
Apr 3, 2012, 7:13:15 AM4/3/12
to mint...@googlegroups.com

எச்சில், பத்து போன்ற நடைமுறை பண்புகளிலிருந்தும், ஆசாரம் மிகுந்தக் குடும்பங்களில் துறவு பூண்டு இயங்கும் மரபு ஒன்றொண்டு. சமராதனை (விருந்து) முடிந்த பின், விருந்தளித்த பிராமணோத்தமர், அந்த எச்சில் இலைகளில் விழுந்து, புரண்டு, நமஸ்கரிப்பது உண்டு. 

இன்னம்பூரான் 

Geetha Sambasivam

unread,
Apr 3, 2012, 7:40:34 AM4/3/12
to mint...@googlegroups.com
தமிழ்நாட்டு பிராமணர்களில் பெரும்பாலோர் ஆபஸ்தம்ப தர்மசாஸ்த்ரத்தை பின்பற்றுபவர்கள், அதில் தேடிப்
பார்த்தால் இதைப்போல தீட்டு ரூல்கள் கிடைக்கும். தேடிப்பார்க்க//

எங்க வீட்டில் இதைக் குறிக்கும் புத்தகமே உள்ளது.  வேறு எவருக்கானும் சந்தேகம் வந்தால் எங்களிடம் வந்து புத்தகத்தைப் பார்த்துச் சொல்லச் சொல்வார்கள்.

ஸ்ரீதிருமூர்த்தி வாசுதேவன் அவர்களிடம் ஆபஸ்தம்ப சூத்திரம் சம்ஸ்கிருதத்தில் இருக்க வாய்ப்பு உண்டு.

On Tue, Apr 3, 2012 at 4:07 PM, Vijay Vanbakkam <vcv...@hotmail.com> wrote:
தீட்டு என்பது எல்லா இந்தியர்களுக்கும், ஹிந்துக்களுக்கும் ஒரு செகன்ட் நேசர். அதில் பிராமணர்கள் ஒரு படி தீவிரமாகவே இருந்தனர் , இருக்கின்ரனர் முடிந்தவரை
 
இப்போது நாம் பார்க்கும் - அல்லது 50 வருடங்கள் முன்னால் பார்த்த தீட்டுகள் - எல்லாம் ஏதாவது தர்ம சாஸ்த்ரத்தில் வரையருக்கப்பட்டு இருக்கும். தமிழ்நாட்டு பிராமணர்களில் பெரும்பாலோர் ஆபஸ்தம்ப தர்மசாஸ்த்ரத்தை பின்பற்றுபவர்கள், அதில் தேடிப்பார்த்தால் இதைப்போல தீட்டு ரூல்கள் கிடைக்கும். தேடிப்பார்க்க
 
http://www.sacred-texts.com/hin/sbe02/index.htm
 
Geetha Sambasivam

unread,
Apr 3, 2012, 7:41:43 AM4/3/12
to mint...@googlegroups.com
ஆம், மதுரைப் பக்கம் ஐயப்ப சமாராதனை, வைக்கத்தஷ்டமி சமாராதனைகளில் இம்மாதிரிச் செய்வார்கள். பார்த்திருக்கிறேன்.  எங்க வீட்டிலேயே அப்பா, அண்ணாமார்கள் அங்கப் பிரதக்ஷிணம் செய்தது உண்டு. முதல் பந்தியில் மட்டுமே செய்வார்கள்.

On Tue, Apr 3, 2012 at 4:43 PM, Innamburan Innamburan <innam...@gmail.com> wrote:

எச்சில், பத்து போன்ற நடைமுறை பண்புகளிலிருந்தும், ஆசாரம் மிகுந்தக் குடும்பங்களில் துறவு பூண்டு இயங்கும் மரபு ஒன்றொண்டு. சமராதனை (விருந்து) முடிந்த பின், விருந்தளித்த பிராமணோத்தமர், அந்த எச்சில் இலைகளில் விழுந்து, புரண்டு, நமஸ்கரிப்பது உண்டு. 

இன்னம்பூரான் 

--

Tthamizth Tthenee

unread,
Apr 3, 2012, 8:56:09 AM4/3/12
to mint...@googlegroups.com
சகோதரி ராஜம் அவர்களே   எச்சில்  என்றதும்  என் மூதாதையர் எனக்கு சொன்ன சுவையான நிகழ்வு இது

இது எப்படி இந்த இழையோடு தொடர்பு கொள்கிறது என்றால்
 
பிராமணர்கள்  உண்ணும் மடங்கள் , மற்றும் பல  நிகழ்ச்சிகளில்  எச்சில் ,பத்து போன்றவைகளைக் கடைப்பிடிக்கும்  ஆசாரமான   பிராமணர்கள்   அன்னிய மதத்தினரை  தங்களோடு உட்கார்ந்து உண்ண அனுமதிக்க மாட்டார்கள்,
 
அப்படிப்பட்ட காலங்களில்  நிகழ்ந்த ஒரு நிகழ்வு இது
 
பிராமணர்கள் சாப்பிடும்போது மற்றவர்கள் இலையில் தெறிக்காமல் நாசூக்காக உண்ணும் வழக்கம் கொண்டவர்களாக இருந்தனர் . இப்போது எல்லாமே  இயல்பாக மாறிவிட்டது.  (  எல்லோரும் எல்லா இடங்களிலும் எல்லோருடனும் சேர்ந்து உண்ணும் நடைமுறைக்கு  மாறியாச்சு. )
 
அப்படிப்பட்ட  முற்காலத்தில்  
 
பிராமணர் அல்லாத ஒருவர் பிராமண வேடம் தரித்து பிராமணர்களிடையே
உட்கார்ந்து உண்ணத் தொடங்கினார். அவருடைய தந்தையும் அவ்வாறே ஏமாற்றி பல முறை உண்டதைக் கேள்விப்பட்டு அவரும் அதையே செய்து பார்க்க முயலும்போது.
 
பொது இடங்களில், மடங்களில்  உண்ணத் தொடங்கும்  முன்     பிராமணர்கள்  பரிசேஷணம்  செய்துவிட்டு  நாவில் படாமல்    (நாவில் பட்டால் எச்சில்) 
 
கிருஷ்ணாய ,வாசுதேவாய  என்றெல்லாம்  இறைவன் நாமம்  சொல்லி     தாம் உண்ணும் முன்னர்   தம் வாயாலேயே   அந்தப் பருக்கைகளை  நாவு படாமல்  தொண்டை வழியே வயிற்றுக்குள் அனுப்புவர். இறைவனுக்கு சில பருக்கைகளை
 மனப்பூர்வமாக அளித்துவிட்டு   பிறகு  உண்பர்.  
 
இந்த   நடைமுறைகள் தெரியாமல்  பந்தியில் வந்து உட்கார்ந்து அவசர அவசரமாக உண்ணத் தொடங்கி  மாம்பழத்தை நசுக்கி  அதன் கொட்டையை  எல்லோர் இலைக்கும் எச்சில் தூது அனுப்பி என்று ஒரு நிகழ்வைச் சொல்வர். அதைத்தான் எழுதினேன்
 
 இப்படி விவரமாக  எழுத நேரம் இல்லாததால் அப்படி எழுதினேன். மன்னிக்க

Tthamizth Tthenee

unread,
Apr 3, 2012, 8:57:40 AM4/3/12

2012/4/3 Geetha Sambasivam <geetha...@gmail.com>

rajam

unread,
Apr 3, 2012, 11:27:15 AM4/3/12
to mint...@googlegroups.com
எனக்கு இங்கே கிடைத்த
முதல் முத்தம் பத்தி (<
பற்றி) ... சொல்றேன்! ஒரு
மாணவியை அவளுடைய
குழந்தைக்குத்
தாய்ப்பால் கொடுக்க என்
வகுப்பில் அனுமதித்தேன்.
கொடுத்தாளே ஒரு முத்தம்
"சொள்" என்று! எனக்கு
நன்றி தெரிவிக்கும்
முறையாம்! வகுப்பை
எப்படா முடிப்பேன் என்று
காத்திருந்து, அவள்
போனவுடன் ஓய்வறைக்குப்
போய், மூஞ்சியைக் கழுவோ
கழுவு என்று
கழுவிக்கொண்டேன்.
அதுக்கப்புறம் அதெல்லாம்
பழகிப்போச்சு!
ஆனாலும், முத்தம்
கொடுப்பவர்கள் போன பிறகு
மூஞ்சி கழுவுதல்
தொடர்கிறது.

சாப்பாட்டில் எச்சில்
கலக்க விடமாட்டேன்.
சமைக்க உதவிசெய்கிறேன்
என்று வந்தாலும்
விடமாட்டேன். அது பத்தி
அப்றம் சொல்றேன்.

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

rajam

unread,
Apr 3, 2012, 9:38:17 PM4/3/12
to mint...@googlegroups.com
பாருங்கள், இது எவ்வளவு
புதிய செய்தி!
நன்றி!

>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

N. Kannan

unread,
Apr 4, 2012, 4:35:42 AM4/4/12
to mint...@googlegroups.com
2012/4/3 rajam <ra...@earthlink.net>:

> ஆனாலும், முத்தம் கொடுப்பவர்கள் போன பிறகு மூஞ்சி கழுவுதல் தொடர்கிறது.
>

ஏ.கே.இராமானுஜன் எழுதிய Poems of Love & War நூலில் ஒரு குறுந்தொகைப்
பாடலை மிகவும் சிலாகித்துப் பேசுவார். தலைவி தன் வீட்டில் ஆச்சாரமாகத்
தரும் பால் உணவை உண்டு களித்து வாழ்ந்தவள் காதலனுடன் ஒன்றிய பின் மலை
மடுவில் வன விலங்குகள் ஆடிக்களித்த சுனை நீர் இனிப்பதாகச் சொல்வாளாம்.

..............

முத்தம் எச்சில் என்றவுடன் Rain Man படம் நினைவிற்கு வருகிறது. தனியாக
லிப்ஃடில் போகும் போது ஒரு பெண் கதாநாயகனுக்கு (டஸ்டின் ஹாஃப்மேன்)
அழுத்தமாக முத்தம் கொடுத்துவிட்டு எப்படி இருந்தது என்று கேட்பாள். இவன்
ஒன்றுமே ஆகாமல், ‘it was wet' என்பான் :-)))

க.>

Nagarajan Vadivel

unread,
Apr 4, 2012, 11:17:31 AM4/4/12
to mint...@googlegroups.com
//முத்தம் எச்சில் என்றவுடன் Rain Man படம் நினைவிற்கு வருகிறது. தனியாக

லிப்ஃடில் போகும் போது ஒரு பெண் கதாநாயகனுக்கு (டஸ்டின் ஹாஃப்மேன்)
அழுத்தமாக முத்தம் கொடுத்துவிட்டு எப்படி இருந்தது என்று கேட்பாள். இவன்
ஒன்றுமே ஆகாமல், ‘it was wet' என்பான் :-)))//

தமிழ்நாட்டுக்கு வாங்க.  சங்க இலக்கியங்கள் களவுக்கும் கற்புக்கும் தொடர்பான நுண்ணிய உணர்வுகளைப் படம்பிடித்துக்கட்டுவன.
முத்தங்களில் பலவகை உண்டு
கலப்புத் திருமணத்தால் நான் உறவினர்களைச் சந்திக்கும்போது சிறு குழந்தைகள் பெரியவர்களுக்குக் கன்னத்தில் முத்தமிடுவதுண்டு.  இளம் பெண்டிரும் கன்னத்தில் முத்தமிடுவதுண்டு.  பெரியவர்கள் வயதில் இளையவருக்கு நெற்றியில் முத்தமிடுவதுண்டு.  சிலர் மரியாதை நிமித்தம் கையில் முத்தமிடுவதுண்டு
இல்வாழ்க்கையில்
1.பரத்தையர்  பிரிவு
2.ஓதற்பிரிவு
3.காவற்பிரிவு
4.தூதிற்பிரிவு
5.வினைவாயிற்பிரிவு
6.பொருள்வாயிற்பிரிவு
என பல பிரிவுகளை வரையறுத்தவர்கள்
பலவகை முத்தங்களை வரையறுத்துள்ளார்களா?
நாகராசன்

2012/4/4 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Swarna Lakshmi

unread,
Apr 4, 2012, 1:42:42 PM4/4/12
to mint...@googlegroups.com
:))  நல்ல விவாதம். கமலம் அம்மா, பத்து என்பது அடுப்பில் வைத்து சமைக்கப்பட்ட (முக்கியமாக உப்பு சேர்த்து) பதார்த்தங்களைத் தொட்டு விட்டு வேறு எதையும் தொடக்கூடாது என்னும் கட்டுப்பாடு - முக்கியமாக ஊறுகாய், பால், தயிர், மோர் போன்ற தொடர்ந்து உபயோகிக்கக்கூடிய பொருட்களைத் தொட மாட்டார்கள். இதன் அறிவியல் காரணம் என்னவென்றால், சமைக்கப்பட்ட பதார்த்தங்கள் விரைவில் கெடக்கூடியவை - அந்தப்பாத்திரங்களில் வெளியில் கொஞ்சம் சிதறியிருக்கலாம் அதைத் தொட்டு பின் விரைவில் கெடாத பதார்த்தங்களைத் தொட்டால் இவையும் கெட்டுவிட வாய்ப்பு அதிகம்.
 
முக்கியமாக சுத்தமும் ஒரு காரணம், எந்த உணவுப்பொருளையும் ஈரமில்லாத கையினால் கரண்டி போன்றவற்றை உபயோகித்தே பரிமாற வேண்டும் - அதிலும், கரண்டியின் கைப்பிடியில் கூட அழுக்கோ மற்ற உணவுகளின் மிச்சங்களோ இருக்கக்கூடாது என்பது...
 
இது எனக்குப் பழகி விட்டது - சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஒரு ரொட்டீன் ஆகிவிட்டது, அதை தானே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்... :)

From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, 3 April 2012 12:26 PM
Subject: Re: [MinTamil] எச்சிலும் பத்தும் ...
இப்போது சொல்வது சமைத்த உணவுப் பொருட்களைத் தொட்டு விட்டுப் பிற பொருட்களைத் தொடுவது குறித்து.  சமைத்த ன்ணவுப் பொருட்கள், முக்கியமாக அன்னம், குழம்பு, ரசம், காய்கள், பொங்கல், உப்புமா, தோசை, இட்லி போன்றவை வேக வைக்க, கொதிக்க வைக்கப் படுவதால் அவை பத்து எனப்படுகிறது.
On Tue, Apr 3, 2012 at 10:52 AM, Kamala Devi <saahi...@yahoo.com.sg> wrote:
கீதா,
எனக்கொரு சத்யம் தெரியணும். கீதா, தமிழில் . கீதா,--- பத்து என்றால் மரணசேஷம் வரும் பத்தாம் நாள் தானே பத்து என்பது. அப்படித்தான் இதுநாள்வரை ஞான் நம்பியிருந்தேன்.ஆனால் இது என்ன புதிதாய், பத்து,என்பதற்கு இப்படியெல்லாம் அர்த்தம் சொல்கிறீர்கள், எனக்குப்புரியவில்லை.இது பத்து என்ரால் அந்த பத்து, பற்றி தமிழ்நாட்டில்
ஞான் அறிந்தது என்ன பொருள் ?   எனக்கு உடனே யாராவது விளக்க வேண்டுகிறேன்
அன்பு கமலம்
http://www.kamalagaanam.blogspot.com

-- "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.comTo unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.comFor more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Apr 4, 2012, 1:47:55 PM4/4/12
to mint...@googlegroups.com
பத்து என்பது உப்பு போடாமல் சமைக்கப்பட்ட பதார்த்தங்களுக்கு இல்லை - ஆனால் இது ஜெனரல் ரூல் இல்லை - உதாரணம் சாதம், பாயசம் போன்றவை - உப்பில்லாவிட்டாலும் பத்து தான். இதற்கு சீக்கிரம் கெடக்கூடிய - அதிக நாள் இருக்கக்கூடிய என்ற பாகுபாடு பொருந்தும். தயிர், பால், நெய், ஊறுகாய், இனிப்பு வகைகள் (லட்டு, அல்வா போன்றவை), பட்சணங்கள் (முறுக்கு, சீடை, பூரி, சப்பாத்தி) போன்றவை பத்தில்லை.
 
Sent: Tuesday, 3 April 2012 10:35 AM
Subject: Re: [MinTamil] எச்சிலும் பத்தும் ...

Great! Go on! 

On Apr 2, 2012, at 9:52 PM, Santhanam Swaminathan wrote:

பத்து ,தீட்டு என்பனவற்றை ஆங்கிலத்தில்  மொழிபெயர்ப்பது கூட கடினம். ஓரளவு விளக்கித்தான் சொல்ல முடிகிறது. பத்து என்ற சொல்லின் பிறப்பியல் (எடிமாலஜி) என்ன? தீட்டிலும் பல வகைகள் உள்ளன. நல்லது, கெட்டது என்ற இரண்டிலும்.  இது ஒரு விநோதமான விஷயம். எவ்வளவு நாட்கள் என்பது பண்பாட்டுக்கு பண்பாடு வித்தியாசப்படுகிறது.   ஒரு தலைவர் இறந்தால் இந்திய அரசு இந்து முறையை ஒட்டி 13 நாட்கள் துக்கம் (தீட்டு காலம்) கடைப்பிட்க்கிறது. சில நாடுகள் 3 நாட்கள். நம் நாட்டிலும் கூட ஜாதிக்கு ஜாதி வேறுபாடு உண்டு. பத்து என்பது உப்பு போடாத உணவுப் பொருட்களுக்கு உண்டா? பிராமணர்களைத் தவிர வேறு ஜாதிகள் இதைக் கடைப்பிடிக்கிறார்களா? ஆராய்ச்சிக்குறிய ஒரு சுவையான விஷயம்
 
Swami
020 8904 2879
07951 370 697

Swarna Lakshmi

unread,
Apr 4, 2012, 2:05:56 PM4/4/12
to mint...@googlegroups.com
From: rajam <ra...@earthlink.net>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, 3 April 2012 8:56 AM
Subject: Re: [MinTamil] எச்சிலும் பத்தும் ...

திருமதி கீதா என் கேள்விகளுக்கு மிக நல்ல பதிவுகள் கொடுத்திருக்கிறார்; மிகவும் நன்றி! பிறரும் படித்துத் தங்கள் கருத்தையும் பதிவு செய்யவும். நன்றி! :-)

On Apr 2, 2012, at 6:28 PM, Geetha Sambasivam wrote:

1. "எச்சில்" என்றால் என்ன?

கையை வாய்க்குள்ளே செலுத்திச் சாப்பிடுவதைத் தான் எச்சில் என்று சொல்வார்கள்.  என்னுடைய சில சிநேகிதிகள் சாப்பிடுகையில் உணவை உருட்டி வாய்க்குள்ளே போடுவார்கள். எனக்கு அப்படிச் சாப்பிட வராது.  கீழே விழும். <360.gif><360.gif> அதோடு சாப்பிட்டு முடித்த பின்னர் உள்ளங்கை, விரல்களைச் சிலருக்கு/பலருக்கும்:))) நக்கிக் கொடுக்கும் வழக்கமும் உண்டு.  அப்போது அது எச்சில் கையாகிவிடுகிறது.  அதை நன்குஅலம்பி விட்டே மற்றப் பண்டங்களைத் தொடவேண்டும்.  இது சுகாதார அடிப்படையில் ஆனதே.  ஆனால் சின்னக் குழந்தைகளுக்கு இதை ஒரு ஆசாரம் எனத் தோன்றும்படி அந்தக் காலப் பெரியவர்கள் செய்துவிட்டனர்.
வழிமொழிகிறேன்... அதோடு வாயிலிருந்து வெளிப்படும் வஸ்து, தெறிக்கும் உமிழ் நீர், தும்மும்/ இருமும் போது வெளிப்படும் நீர் ஆகியவையும் எனக்குத் தெரிந்து எச்சில் தான்... இவையெல்லாம் மற்றவர் பகிர்ந்து கொள்வாரா? நன்றாக இருக்குமா? நாகரிகமா? சிலர் எச்சில் துப்பும் வாஷ் பேசினில் தான் சாப்பிட்ட தட்டுக்களையோ மற்ற பாத்திரங்களையோ போட்டு அலம்புவதைப் பார்த்திருக்கிறேன்... என்னால் இவை போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாதவை... ரொம்பக்கோபம் வருவது - வேண்டுமென்றே செல்லும் இடங்களில் எல்லாம் துப்பிக்கொண்டே செல்லும் மனிதர்களைப்பார்க்கும் போது - நான் சிறுமியாக இருக்கும் போது ஒரு திருவிழாவின் பந்தலில் ஒவ்வொரு மூங்கில் தூணாக விளையாடிக்கொண்டிருந்தேன். எந்தப் பெரிய மனிதரோ (மனுஷியோ) மூக்கில் இருந்து வடிந்த சளியை ஒரு மூங்கிலில் தடவி விட்டுச் சென்றிருந்தார் - அது என் கையில் பட்டது - இன்றும் எனக்கு அந்த அருவெறுப்பு போகவில்லை - ஒரு லட்சம் தடவை நான் அதற்குப் பிறகு கை அலம்பியிருப்பேன்...

2. "பத்து" என்றால் என்ன?

என் பதிலை இன்னொரு மடலில் பதிவு செய்திருக்கிறேன்

3. யார் யார் எங்கே எங்கே இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கிறார்கள்?

சரியாப் புரியறதானு சொல்ல முடியலை.  ஆனால் மேற்சொன்ன முறையில் கடைப்பிடிக்கிறேன். ஏனெனில் இவை கலக்கும்போது உணவுப் பொருட்கள் கெட்டுப் போவதை நன்கு உணர்ந்திருக்கிறேன்.  கூடியவரையில் சமைத்த அன்றாட உணவுப் பொருட்களோடு, (சாதம், சாம்பார், ரசம், காய்கறிகள்) தயிர், பால், மோர், ஊறுகாய்கள், மற்றத் தின்பண்டங்கள் சேர்த்து வைப்பதில்லை.  அதோடு சாப்பிடும் தட்டில் உணவு ஏதானும் அதிகம் போட்டுவிட்டால் அதைத் திரும்ப எடுத்துச் சமைத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் போடுவதில்லை. அதைத் தனியாக வேறொரு கிண்ணத்தில் எடுத்து வைத்துவிடுவோம்.  பின்னர் சாப்பிடும்போது பயன்படுத்திக் கொள்வோம்.

ஒரு சிலர் தின்பண்டங்களையும் நேரடியாக மொத்தமாக இருப்பதில் இருந்து அப்படியே எடுத்துக் கொண்டு சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை அதில் போடுகின்றனர். எனக்கு அதுவும் சரியாக வரவில்லை.  காரமானால் அதன் கரகரப்புத் தன்மை குறைகிறது.  இனிப்பானால் சுவை மாறுபடுகிறது.  ஆகவே வேண்டிய அளவுக்குத் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதிகமாய்ப் போனால் அதைத் தனியாகவே வைக்கிறேன்.  அப்படி இருந்தும் தனியாக வைப்பது கொஞ்சம் சுவை மாறுபட்டுத் தான் தெரியும்.
 
100% வழிமொழிகிறேன். 99% இன்றைக்கும் பின்பற்றுகிறேன். சுத்தம், tidyness, hygine என்கிற வகையில் நிச்சயமாக ஊக்குவிக்கிறேன் (இந்தத் தலைமுறையை சேர்ந்தவளாக இருந்தாலும்). பழகிப்போனதால் கஷ்டமாக இல்லை. பின்பற்றமுடியாத போதுதான் சற்று கஷ்டமாக இருக்கும் - ஏதோ உழப்பி குழப்புவதாக...

4. நீங்கள் இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா?

நிச்சயமாகக் கடைபிடிக்கிறேன். மிக நெருங்கிய நண்பர்கள்/ குடும்பத்தினர் (வெகு சிலர்) சிலர் தட்டிலிருந்து பகிர்ந்து கொள்வது போன்றது செய்தாலும் அது மிக அரிது... (இன்றைக்கு தான் நான் செய்த மசாலா தோசை எப்படியிருக்கிறது என்று கணவரின் தட்டிலிருந்து ஒரு வாய் சாப்பிட்டு டேஸ்ட் பார்த்தேன், அதற்குப் பிறகு அடுத்த தோசை வார்ப்பதற்கு முன் நன்றாக கையும் அலம்பிக்கொண்டேன்... :)))

On Tue, Apr 3, 2012 at 6:13 AM, rajam <ra...@earthlink.net> wrote:
"எச்சில்" "பத்து" என்ற சொற்களைப் பற்றியும் அவற்றின் குறிப்பு முறை பற்றியும் தெரிந்துகொள்ள ஆவல்.

முன்னுரை
-------------
நான் பிறந்து வளர்ந்த சூழல் மிகவும் "ஆசாரமானது." அதாவது ... ஏதாவது ஒரு காரணத்துக்காக நான் என் நாக்கைத் தொட்டுவிட்டு அதே வீச்சில் இன்னொரு பொருளைத் தொட அனுமதியில்லை. அதோடு, "பத்து" என்பது "பழையது" என்று நினைக்கிறேன். ஆனாலும் தெளிவில்லை.

படிப்புரை
------------
"எச்சம்" என்ற சொல் ஆதிகால தமிழ் இலக்கியத்தில் இருப்பது எனக்குத் தெரியும். எனவே அதையே திரும்பவும் இங்கே இந்த இழையில் சொல்லத் தேவையில்லை.

வேண்டுகோள்
------------------

நான் வேண்டிய கேள்விகளுக்கு உதவும் வகையில் மட்டுமே உங்கள் குறிப்பைக் கொடுங்கள்.

என் கேள்விகள்:

1. "எச்சில்" என்றால் என்ன?

2. "பத்து" என்றால் என்ன?

3. யார் யார் எங்கே எங்கே இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கிறார்கள்?

4. நீங்கள் இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா?

மேலே கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லும் முறையில் மட்டும் பதில் சொல்லுங்கள், பயனடைவேன்.

அன்புடன்,
ராஜம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

rajam

unread,
Apr 4, 2012, 10:14:37 PM4/4/12
to mint...@googlegroups.com
On Apr 4, 2012, at 1:35 AM, N. Kannan wrote:

> 2012/4/3 rajam <ra...@earthlink.net>:
>
>> ஆனாலும், முத்தம்
>> கொடுப்பவர்கள் போன
>> பிறகு மூஞ்சி கழுவுதல்
>> தொடர்கிறது.
>>
>
> ஏ.கே.இராமானுஜன் எழுதிய Poems
> of Love & War நூலில் ஒரு
> குறுந்தொகைப்
> பாடலை மிகவும்
> சிலாகித்துப் பேசுவார்.
> தலைவி தன் வீட்டில்
> ஆச்சாரமாகத்
> தரும் பால் உணவை உண்டு
> களித்து வாழ்ந்தவள்
> காதலனுடன் ஒன்றிய பின் மலை
> மடுவில் வன விலங்குகள்
> ஆடிக்களித்த சுனை நீர்
> இனிப்பதாகச் சொல்வாளாம்.

இதெல்லாம் "கலவிக்கும்"
"கல்விக்கும்" இடையில்
வரும் வேறுபாடப்பா! :-)

>
> ..............
>
> முத்தம் எச்சில்
> என்றவுடன் Rain Man படம்
> நினைவிற்கு வருகிறது.
> தனியாக
> லிப்ஃடில் போகும் போது
> ஒரு பெண் கதாநாயகனுக்கு
> (டஸ்டின் ஹாஃப்மேன்)
> அழுத்தமாக முத்தம்
> கொடுத்துவிட்டு எப்படி
> இருந்தது என்று கேட்பாள்.
> இவன்
> ஒன்றுமே ஆகாமல், ‘it was wet'
> என்பான் :-)))

This is deep, indeed!

>
> க.>

கொசுறு:

This posting somehow reminds me of a time in the past. It was a
Conference time in Wisconsin in the eighties. Shulman, A.K.R.,
Narayana Rao and others including me were walking along a lake. AKR
suddenly said to me, "I'm terrified of you." I just couldn't
understand what the heck he was talking about. Later in the next year
or so we met in Chicago and he asked me if I would go through his
translation of the manuscript for that "Poems of Love and War" and
said that he would feel diffident to send it to the Press if he
didn't have me check his translations for accuracy.

That was a time when real scholars existed!

Innamburan Innamburan

unread,
Apr 4, 2012, 10:35:05 PM4/4/12
to mint...@googlegroups.com
இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான், கண்ணனைப்போல் மாட்டிக்கொள்ளாமல், நழுவினேன்.
இன்னம்பூரான்

2012/4/4 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Apr 4, 2012, 10:40:40 PM4/4/12
to mint...@googlegroups.com
ஓஓ! ஸ்வர்ணாவுக்கு ஒரு கும்பிடு! நான் சொல்ல நினைத்த பல கருத்துக்களைச் சொல்லிவிட்டார்கள்! நன்றி! 
வீட்டில் நம் பழக்கத்துக்கும் வெளியில், அதுவும் இன்றைய கணினி உலகில், நாம் எதிர்ப்படும் பழக்கங்களுக்கும் ஒத்து வருவதில்லை என்பது உண்மையே.

1.  கணினித் தொழிலகத்தில், நான் எப்போதும் கவனமாக இருப்பேன். எவனும் என் கணினித் திரையைத் தொட்டுவிடாமல் இருக்க ஒரு பென்சில்/பேனா எதையாவது கொடுப்பேன். என் கணினித் திரையை நானே தொடமாட்டேன், அப்புறம் வேறு எவன் தொட்டால் எனக்குத் தாங்கும்?

2. அதே போல ... என் கணினியின் சுழற்சிக் கருவியை, அதாவது "எலி"யை யாராவது தொட்டாலும் எனக்குப் பிடிக்காது. 
3. பலரும் தும்மும்போதோ, கொட்டாவி விடும்போதோ, இருமும்போதோ, துப்பும்போதோ, ... பிறரைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

4. இதையெல்லாம் பற்றி, கணினித் தொழிலகங்களில் human resources department ஆட்களிடம் முறையிட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் பிற நாட்டவர்கள் என்பதால் என் புகார் காதில் ஏறின மாதிரித் தெரியவில்லை.   ஆனால் அவர்களே ... Flu season என்ற முறையில் ஏகப்பட்ட லீவுகளை அனுமதிக்கிறார்கள். சுத்தமாக, எச்சில், தும்மல், இருமல் மூலம் கிருமி பரவாமல் ... இல்லாமல் இருந்தால் எல்லாரும் நல்லா இருக்கலாம். 
5. அது கிடக்க ... இன்னும் சில கேள்விகள் இருக்கு. பிறகு எழுதுகிறேன்.

Swarna Lakshmi

unread,
Apr 5, 2012, 2:21:36 PM4/5/12
to mint...@googlegroups.com
 நன்றி ராஜம் அம்மா!! பல வீடுகளில் இந்த எச்சில் பத்து சமாசாரத்தினால் மஹாபாரதப்போரே வருவதுண்டு. சில பேருக்கு மரபு என்பது எச்சில் பத்தோடு நின்று விடுவது தான் வருத்தம் தருகிறது...
 
ஸ்வர்ணா

N. Kannan

unread,
Apr 5, 2012, 3:14:22 PM4/5/12
to mint...@googlegroups.com
2012/4/5 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>:

>  நன்றி ராஜம் அம்மா!! பல வீடுகளில் இந்த எச்சில் பத்து சமாசாரத்தினால்
> மஹாபாரதப்போரே வருவதுண்டு. சில பேருக்கு மரபு என்பது எச்சில் பத்தோடு நின்று
> விடுவது தான் வருத்தம் தருகிறது...
>
> ஸ்வர்ணா

இந்த மடி என்பதும் இத்தோடு தொடர்புடையதோ? சின்னப்பிள்ளையாய் இருக்கும்
போது பக்கத்து வீட்டுப் பாட்டி (அத்யான பட்டர் அம்மா) எங்களை அண்ட
விடமாட்டாள். மடியாய் இருப்பாள்.

க.>

பாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்கு பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வாரா மானமில்லாப் பன்றியாம்
தேசுடைத்தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே

நாச்சியார் திருமொழி 11-8-ஆம் பாசுரம்

rajam

unread,
Apr 5, 2012, 6:58:01 PM4/5/12
to mint...@googlegroups.com
ஆமாம், எச்சில், பத்து,
தீட்டு, மடி, விழுப்பு ...
எல்லாமே ஒன்றுக்கொன்று
தொடர்பு உடையதே!

நானும் சிறுபிள்ளைப்
பருவத்தில் வீட்டுப்
பெரியவர்களின்,
குறிப்பாகப் பெண்களின்,
திட்டுக்கு
ஆளாகியிருக்கிறேன்! என்
தலையை மட்டும் தொட்டுத்
தள்ளிவிடுவார்கள்!
அந்தப் பெண்களின்/
பாட்டிகளின் பாடு
உண்மையிலேயே பாவம்.
வீட்டில் உள்ள
கடவுளுக்குப் பூசை/
படையல் செய்யும்வரை
அவர்கள் "மடி"யாக
இருக்கவேண்டும்.
இல்லையென்றால் ...
மறுபடியும் போய்க்
குளித்துவிட்டு
வரவேண்டும். வெந்நீர்
எல்லாம் குளியலுக்குக்
கிடைக்காது!
அதுவும் மொட்டையடித்த
பாட்டி என்றால் ... பாவம்,
மகா பாவம். அந்த
மாதிரிப்பட்ட பெண்களின்
சாபம் கொடுமையானது.

நம்பினால் நம்புங்கள் ...
அவர்களிடம்தான் நான்
முதல் முதலாக "சனியனே" "பீடை"
"நாசமாய்ப் போக" ... இன்ன பிற
வசவுச் சொற்களைக்
கேட்டேன். அதுவே
பிற்காலத்தில் எனக்கும்
வசதியான வசவுச் சொற்களாக
அமைந்துவிட்டன! :-)

மற்றவர்களும்
சொல்லட்டும். நானும்
பிறகு சொல்கிறேன்.
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

N. Kannan

unread,
Apr 6, 2012, 4:11:09 AM4/6/12
to mint...@googlegroups.com
2012/4/5 rajam <ra...@earthlink.net>:

> அதுவும் மொட்டையடித்த பாட்டி என்றால் ... பாவம், மகா பாவம். அந்த மாதிரிப்பட்ட
> பெண்களின் சாபம் கொடுமையானது.
>

மொட்டையடித்தலே மகாக் கொடுமை. அந்தப்பாட்டி பாவம். என்ன செய்வாள்?
வழ்வின் மீதான அவளது வெறுப்பைக் காட்ட, ‘மடி’. பிறகு ஒளிந்திருந்து நான்
திண்ணையில் சொல்லும் கதைகளைக் கேட்பாள். அதுதான் உண்மையான குழந்தையுள்ளம்
கொண்ட பாட்டி.

> நம்பினால் நம்புங்கள் ... அவர்களிடம்தான் நான் முதல் முதலாக "சனியனே" "பீடை"
> "நாசமாய்ப் போக" ... இன்ன பிற வசவுச் சொற்களைக் கேட்டேன். அதுவே பிற்காலத்தில்
> எனக்கும் வசதியான வசவுச் சொற்களாக அமைந்துவிட்டன! :-)
>

எங்க ஊர் வசவு, ‘கடன்காரா! கட்டாலே போறவனே (கட்டையில் போகிறவனே), முண்டை’
போன்றவை. ஒருமுறை ஒரு பிரெஞ்சு ஆய்வாளர் வீட்டில் வந்து உங்க ஊர் கெட்ட
வார்த்தை வசவுகளைச் சொல்லுங்கள் என்றாள். வாய் கூசியதால் சொல்ல
முடியவில்லை. ஒரு ஆய்விற்கு வேண்டுமாம் :-)

நா.கண்ணன்

Geetha Sambasivam

unread,
Apr 6, 2012, 4:17:49 AM4/6/12
to mint...@googlegroups.com
எச்சில் துப்பும் வாஷ் பேசினில் சாப்பாடுத் தட்டுக்களை அலம்புவதை விடவும் கொடுமை; சமையல் அறையின் சிங்கில் சமைத்த பாத்திரங்களைப் போட்டிருக்கையிலேயே அதிலேயே கை கழுவி, வாய் கொப்பளிப்பது தான்.  இப்படிச் செய்பவர்களை நிறையப் பார்த்திருக்கிறேன்.  எங்க வீட்டில் செய்ய விடுவது இல்லை.  சமையல் பாத்திரங்களோடு சாப்பிட்ட பாத்திரங்களையும் போட்டு அலம்புவது என்பதை எனக்கு ஏற்கமுடியவில்லை.  சமையல் பாத்திரங்களின் சுத்தம் கொஞ்சம் கீழிறங்கும் என்பது என் கருத்து.  அது தனியாக இருக்க வேண்டும்.  சாப்பிட்ட தட்டுக்களை அலம்புவது என்பது தனி இடத்தில் செய்ய வேண்டும்.  இவற்றை ஆசாரம் என்று பார்ப்பதை விடவும், சுகாதாரம் என்ற நோக்கிலேயே பார்க்க வேண்டும்.  வாயில் போட்டுச் சாப்பிடுவோம்.  ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமான நோய்க்கிருமிகள் இருக்கலாம். அவை பரவ வாய்ப்புக் கொடுக்கக் கூடாது அல்லவா?

On Wed, Apr 4, 2012 at 11:35 PM, Swarna Lakshmi <lakshm...@yahoo.com> wrote:

Sent: Tuesday, 3 April 2012 8:56 AM
Subject: Re: [MinTamil] எச்சிலும் பத்தும் ...

திருமதி கீதா என் கேள்விகளுக்கு மிக நல்ல பதிவுகள் கொடுத்திருக்கிறார்; மிகவும் நன்றி! பிறரும் படித்துத் தங்கள் கருத்தையும் பதிவு செய்யவும். நன்றி! :-)

seshadri sridharan

unread,
Apr 6, 2012, 5:21:44 AM4/6/12
to mint...@googlegroups.com
2012/4/6 N. Kannan <navan...@gmail.com>
//எங்க ஊர் வசவு, ‘கடன்காரா! கட்டாலே போறவனே (கட்டையில் போகிறவனே), முண்டை’ போன்றவை. ஒருமுறை ஒரு பிரெஞ்சு ஆய்வாளர் வீட்டில் வந்து உங்க ஊர் கெட்ட வார்த்தை வசவுகளைச் சொல்லுங்கள் என்றாள். வாய் கூசியதால் சொல்ல முடியவில்லை. ஒரு ஆய்விற்கு வேண்டுமாம் :-)//

பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் 'கெட்ட வார்த்தை பேசுவோம்' என்றொரு கட்டுரை எழுதி அது இப்போது நூலக வெளிவந்துள்ளது. கெட்ட வார்த்தை ஆனாலும் அவை தமிழ், அவற்றை விட்டு பிறமொழிச் சொல்லை பயன் படுத்தலாகாது என்கிறார் பெருமாள் முருகன்.    
சேசாத்திரி
 
Subashini Tremmel

unread,
Apr 6, 2012, 6:18:26 AM4/6/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

எச்சில் .. பத்து ஆகியவற்றை ஐரோப்பிய மக்களின் சூழலில் நோக்கும் போது ...
இங்கே சமையல் முறை மிக மிக தூய்மையானதாகச் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து அடிப்படையில் அமைந்திருக்கின்றது. சமைப்பவரும் தூய்மையாக இருக்க வேண்டும்.. சமைப்பவர் அணிந்திருக்கும் உடைகளும் தூய்மையாக இருக்க வேண்டும்.. சமையலறை மிகத் தூய்மையாக இருக்க வேண்டும்.. சமைக்கும் கருவிகளும் தூய்மையாக இருக்க வேண்டும்.. பாத்திரங்களும் சமையல் பண்டங்களும் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும்.

சமைக்கப்பட்ட உணவைப் பரிமாறும் போது தனித் தனி தட்டுகள்.. சாப்பிடுவதற்கும் பரிமாருவதற்கும் கரண்டிகள்.. ஒவ்வொருவருக்கும் தனித்தனி க்ளாஸ். ஒருவர் பாத்திரத்திலிருந்து, க்ளாசிலிருந்து தட்டிலிருந்து எடுத்து மற்றொருவர் சாப்பிடுவது அநாகரிகமாகக் கருதப்படும் ஒரு செயல். கரண்டியை உப்யோகித்து சாப்பிடும் போது சாப்பிடுவது சிந்தாமல் சிதராமல் சாப்பிடுவவது நாகரிகமாக கருதப்படுகின்றது. சாப்பாட்டை மென்றுச் சாப்பிடும் போது உதடுகள் மூடிய வகையில் சாப்பிட வேண்டும் என்பதும் ஒரு நாகரிகத்தின் அம்சம். இதனால் உணவு வெளிப்பட்டு சிதறாது.

ஆக இங்கு தீட்டு/எச்சில் என்ற சொல்லை உணவின் அடிப்படையில் காணும் போது நாகரிகத்தின் அளவு கோள்களில் ஒன்றாக அடங்கி விடுகின்றது.

உணவு வழக்கம் இப்படியிருக்க.. ஒருவரை வரவேற்கும் போது அவர்கள் சற்று நெறுங்கியவ்ர்கள் என்றால் கட்டி அணைத்து இரண்டு கன்னங்களிலும் உரசிக் கொள்ளும் படி செய்வது வழக்கமாக இருக்கின்றது. இண்டஹ் வழக்கத்தில் தீட்டு அல்லது எச்சில் என்பது பெரிதாகக் பார்க்கப்படுவதில்லை.

மலேசிய வழக்கத்தில் மலாய்காரர்களிடையே திருமண விருந்துகளின் போது மிகப் பெரிய தட்டுக்களில் உணவை பரிமாறுவதும் பலர் ஒன்றாகக் கூடி அதனை பகிர்ந்து கொண்டு கைகளால் சாப்பிடுவதும் இன்றும் நடைமுறையில் இருக்கும் வழக்கம். இங்கு எச்சில் பார்க்கும் வழக்கம் இல்லை. 

கண்ணன் குறிப்பிடுவது போல ஐரோப்பிய இலங்கைத் தமிழர்கள் நல்லூர் முருகன் கோயிலில் காப்பு கட்டி விட்டாலும் சரி.. கார்த்திகை விரதத்திற்கும் சரி.. தனிப்பாத்திரம் வைத்து சமைத்துச் சப்பிடுவது அல்லது விரதம் இருப்பது என்பதை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். 

சுபா

2012/4/3 Vijay Vanbakkam <vcv...@hotmail.com>

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
360.gif

Swarna Lakshmi

unread,
Apr 6, 2012, 11:34:28 AM4/6/12
to mint...@googlegroups.com
கட்ட காலம்!! (கஷ்டத்தின் தனித்தமிழ்)

From: seshadri sridharan <ssesh...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Friday, 6 April 2012 2:51 PM
Subject: Re: [MinTamil] எச்சிலும் பத்தும் ...

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Venkatachalam Dotthathri

unread,
Apr 6, 2012, 12:19:03 PM4/6/12
to mint...@googlegroups.com

ஓம்
”எச்சில் பரிசுத்தம், இறந்தவன் போர்வை பரிசுத்தம், வாந்தி பரிசுத்தம்” இப்படி ஒரு முதுமொழியும் உண்டு
இது இந்த இழையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில் அன்று எனினும் எச்சில் என்ற ஒரு வார்த்தையை மட்டும் சொலி விட்டு அத்துடன் தொடர்பான பிற பதங்களுக்கும் விளக்கம் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்

எச்சில் பரிசுத்தம்:
பசுங்கன்று பால் குடிக்க விட்டு மடுவில் பால் இறங்கியவுடன் கன்றை இழுத்து அருகே மரத்தில் கட்டிவிட்டு பால்கறப்பர். மடுவைக் கழுவுவ்து முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. எனினும் அந்தக் கன்றின் எச்சில் பரிசுத்தம் ஆகக் கருதப்பட்டு அந்தப்பால் ஆண்டவன் அபிஷேகத்திற்கும் பயன்படுதப்படுகிறது.

இறந்தவன் போர்வை பரிசுத்தம்; அது தீட்டு இல்லை. பட்டு நூல் பட்டுப் பூச்சியின் உயிரை மாய்த்து எடுத்து நெசவு செய்யப்படுகிறது. சித்த வைத்தியர் நோயாளிகளின் நாடி பார்க்கும் போது பட்டுத்துணியை கையின் மீது இட்டு பின்னர் தொடுப் பார்ப்பது வழக்கம்

வாந்தி பரிசுத்தம்: தேன் கொணரும் ஈக்கள் மலர்களின் மகரந்தத்துடன் தன்னுடய உமிழ் நீரையும் சேர்த்தே  தேனை பாதுகாக்கிறது. எனினும், ஈக்களின் வாந்தியாகிய தேன் ஒரு சிறந்த நைவேத்யமாகிறது, அபிஷேகத்திற்கும் பயன்படுகிறது.
ஓம்
வெ.சுப்பிரமணியன்.

rajam

unread,
Apr 6, 2012, 1:08:41 PM4/6/12
to mint...@googlegroups.com
ஓம் ஐயாவுக்கு என் வணக்கம்! மிக மிக அருமையான, ஆழமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள். திருமதி சாரதா அவர்களும் இதே மாதிரிக் கருத்தைச் சொன்னார்கள், அவருடைய வீட்டில் அவர் கேட்டபடி. 

என்னைப் பொருத்தவரை இந்தக் கருத்துக்களை இரண்டு மூன்று வகையாகப் பார்க்கிறேன்.

(i) இயற்கையில் கிடைக்கும்/அமையும் பொருள்களையும் (பால், தேன், பட்டு போன்றவையும்) அதற்குத் தகுந்த மாதிரியான பழக்க வழக்கங்களையும் எப்படி எப்படி யார் யார் அனுபவித்து ... பிறகு எச்சில்/பத்து/தீட்டு/மடி என்று அவரவர் காலத்திற்கும் இடத்திற்கும் பழக்கத்திற்கும் ஏற்றபடி வகைப் படுத்துகிறார்கள் என்று.
(ii) புலம் பெயர்ந்தோர்க்கு மட்டுமில்லை ... அதாவது நாடு விட்டு நாடு மட்டுமில்லை, தாய் வீடு விட்டு இன்னொரு வீட்டுக்குள் குடி புகுந்து வாழ்க்கை அமைந்தவர்களுக்கும் இதே சிக்கல் உண்டு!

நன்றி! 

rajam

unread,
Apr 6, 2012, 2:24:57 PM4/6/12
to mint...@googlegroups.com
On Apr 6, 2012, at 8:34 AM, Swarna Lakshmi wrote:

கட்ட காலம்!! (கஷ்டத்தின் தனித்தமிழ்)

தப்பில்லை! நானும் என் மொழியியல் (linguistics) வகுப்பு மாணவர்களுக்கு ஒரு "வீட்டுப் பாடம் (assignment)" கொடுத்திருக்கிறேன் -- "கரிக் கிறுக்கல் (graffiti)" பற்றி எழுதச் சொல்லி.

அந்த வகுப்புக் கட்டுரைகளில் வெளிப்பட்ட கருத்துக்கள் பல! அருமையான கட்டுரைகள் கிடைத்தன! வகுப்பு/நூலக நாற்காலிகள், கல்லூரிச் சுவர்கள். கழிப்பறைச் சுவர்கள் ... இன்ன பிற இடங்களிலிருந்து அவர்கள் கொண்டுவந்த கருத்துக்கள் சிந்தனைக்கு உரியவை!  

N. Kannan

unread,
Apr 6, 2012, 3:52:47 PM4/6/12
to mint...@googlegroups.com
சுவாரசியமான நோக்கு! இன்னொருவகையிலும் நோக்கலாமென்று தோன்றுகிறது.

2012/4/6 Venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>:

எச்சில் பரிசுத்தம்:

சின்னப்பிள்ளையில் பார்த்தது. செட்டியார் விடுதியில் அமர்க்களமாக கல்யாண விருந்து நடக்கும். எச்சல் இலைக்காக வெளியே நரிக்குரவர் கூட்டம் அலை பாயும். இலை வந்து விழுந்ததுதான் தெரியும், ஒவ்வொருவரும் அறுசுவை உணவை அள்ளி, அள்ளி உண்பர். எச்சில் பரிசுத்தம்!

வாந்தி பரிசுத்தம்:

இதை வேறொரு வகையில் சொல்லத்தான் முத்தம் எனும் கருதுகோளைக் கொண்டு வந்தேன். முத்தம் எனும் வழக்கம் முதலில் தாய் மென்று அதைப் பிள்ளைக்கு இடுவதில் ஆரம்பிக்கிறது என்று படித்த ஞாபகம். முத்தம் செய்யும் போது கோடிக்கணக்கான கிருமிகள் பரிமாறப்படுகின்றன. ஆனால் அது சுவையாக பார்க்கப்படுகிறது. தேனின் எச்சல் சுவைப்பது போல் :-)

இறந்தவன் போர்வை பரிசுத்தம்; அது தீட்டு இல்லை.

எனக்கு பிதாமகன் படம் நினைவிற்கு வருகிறது. இறந்தவனை அசுத்தம் எனக்கண்டால் வெட்டியான் வேலை என்னாவது? இறந்தவன் பரிசுத்தம். அவ்வளவு ஏன் போக வேண்டும்? சவண்டியின் போது வந்து சாப்பிடும் ஏழைப்பிராமணனுக்கு இறப்பு பரிசுத்தம்! இன்னும் கூட ஒரு படி மேல் போய் சொல்ல வேண்டுமெனில், ஒரு ஆவணம் பற்றிப் பேச வேண்டும். அர்ஜெண்டினாவிலிருந்து தென் அமெரிக்க ஆண்டீஸ் மலைத்தொடரைக் கடந்து பெரு போகும் போது விமானம் பழுதாகி விழுந்து விடுகிறது. ஏறக்குறைய இருவாரங்கள். அங்கு பிழைத்தோர் இறந்தோரின் உடலை உண்டு உயிர் வாழ்ந்து மறுபக்கம் வந்து சேர்கின்றனர். கத்தோலிக்க குருமார்கள் இதைக் கனிபாலிஸத்துடன் ஒப்பிடவில்லை. இங்கு ஓர் உயிர் இன்னொரு உயிருக்கு உறுதுணையாக அமைவதாகவே காண்கின்றனர்.

கடைசியில் எல்லாம் மனசைப் பொறுத்த விஷயமாக இருப்பதை நோக்க வேண்டும். முன்பு சுப மங்களாவில் ஒரு கட்டுரை வந்தது. ஒரு குருட்டுப் பாட்டி பயணிக்கிறாள். சாப்பாட்டு பொட்டலத்தை அவிழ்கிறாள். அப்போது பார்த்து வண்டியைச் சுத்தம் செய்யும் சிப்பந்தி வந்துவிடுகிறான். இவள் தீட்டு என்று சாப்பிடாமல் முழுச் சாப்பாட்டையும் தூர எறிந்துவிடுகிறாள்.

யோசிக்க நிறைய விஷயம் உள்ளது உலகில் :-)

க.>

Swarna Lakshmi

unread,
Apr 7, 2012, 12:04:58 AM4/7/12
to mint...@googlegroups.com
:)) வித்யாசமான பார்வை - நீங்கள் சொல்வது நிஜம் தான், நாம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிம்மதியான வாழ்க்கையில் சாதாரண சுத்த அசுத்தங்களைப் பட்டியலிடுகிறோம்... இது எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் பொருந்தாது...

From: Venkatachalam Dotthathri <v.dot்hat...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Friday, 6 April 2012 9:49 PM
Subject: Re: [MinTamil] எச்சிலும் பத்தும் ...

Swarna Lakshmi

unread,
Apr 7, 2012, 12:09:55 AM4/7/12
to mint...@googlegroups.com
>>சித்த வைத்தியர் நோயாளிகளின் நாடி பார்க்கும் போது பட்டுத்துணியை கையின் மீது இட்டு பின்னர் தொடுப் பார்ப்பது வழக்கம்
இது எனக்கு புதிய செய்தி. ஒரு வேளை பட்டு நோய்க்கிருமிகளிலிருந்து மருத்துவரை காப்பாற்றுமோ??!!

Geetha Sambasivam

unread,
Apr 7, 2012, 12:21:22 AM4/7/12
to mint...@googlegroups.com
எனக்குத் தெரிந்து பட்டுக்கு தோஷம் இல்லை. அதோடு அந்தக் காலத்தில் பெண்களைத் தொட்டுப் பார்க்கையில் சரீரத்தில் வேறொரு ஆணின் கை படுவதைச் சில பெண்கள் விரும்ப மாட்டார்கள்.  வயதானவர்கள் மடி, ஆசாரம் என்று பார்ப்பார்கள்.  இது எல்லாவற்றுக்கும் சேர்த்தே பட்டுத் துணிக்கு தோஷம் இல்லை என்பதால் அதைப் போட்டு நாடி பார்ப்பார்கள் என (அப்பாவின் அப்பா) என் தாத்தா (பரம்பரை ஆயுர்வேத வைத்தியராக இருந்தவர்) சொல்லுவார் என என் அம்மா சொல்லிக் கேட்டிருக்கேன்.  இது வாய்வழிச் செய்தியே.

திரு ஓம் ஐயா அவர்களின் கூற்றையும் எங்க வீட்டுப் பெரியவங்க சொல்லிக் கேட்டிருக்கோம்.  சின்ன வயசிலே "கன்னுக்குட்டி மட்டும் எச்சல் பண்ணலாமாக்கும்"னு நாங்க வேணும்னே கேட்டிருக்கோம்.

On Sat, Apr 7, 2012 at 9:39 AM, Swarna Lakshmi <lakshm...@yahoo.com> wrote:
>>சித்த வைத்தியர் நோயாளிகளின் நாடி பார்க்கும் போது பட்டுத்துணியை கையின் மீது இட்டு பின்னர் தொடுப் பார்ப்பது வழக்கம்
இது எனக்கு புதிய செய்தி. ஒரு வேளை பட்டு நோய்க்கிருமிகளிலிருந்து மருத்துவரை காப்பாற்றுமோ??!!
 
Geetha Sambasivam

unread,
Apr 7, 2012, 12:23:15 AM4/7/12
to mint...@googlegroups.com
மேலும் ஒரு நோயாளியின் நாடியைப் பிடித்துவிட்டுப் பின்னர் இன்னொரு நோயாளியைப் பார்க்கையில் பட்டுத் துணியால் போர்த்துவதன் மூலம் சுகாதாரம் காக்கப்படுமோ?? தெரியலை.  நோயாளியின் மேல் போர்த்திய துணியில் நோய்க்கிருமிகள் ஒட்டிக் கொள்ளாதா? இதைக் கேட்டிருக்கேன்.  ஆனால் பதில் கிடைச்சதில்லை.     மடி, ஆசாரம், பிற ஆணின் தொடுகை ஆகியவையே ஒப்புக் கொள்ளக் கூடியதாய்த் தெரிகிறது.
360.gif

rajam

unread,
Apr 7, 2012, 12:29:03 AM4/7/12
to mint...@googlegroups.com
பட்டு என்பது ஹிம்சையே! தண்ணீரை/நீர்ப் பொருளை அது உடனடியாக ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எளிமையாகக்  கொண்டு போகாததால் அது பரவாயில்லை என்று நினைத்திருக்கலாம். ஆனாலும் பட்டு ஹிம்சைப் பொருளே. 

இன்னொன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். வைர நகைகளைப் பளபளக்க வைத்திருக்க, சிலர் வீடுகளில் "நாய்த் தோல்" வைத்திருந்தார்கள், சின்ன வயதில் நான் பார்த்தது! அப்போ எங்கே போச்சு அந்த ... சுத்தம், சுகாதாரம், அஹிம்சை ... எல்லாம்? !!!
பல விவரங்கள் எனக்குப் புரிவதில்லை.
சரி. இப்பொ தூங்கப் போகணும்! :-) 

Tthamizth Tthenee

unread,
Apr 7, 2012, 12:33:46 AM4/7/12
to mint...@googlegroups.com
மடி ,ஆசாரம், எச்சில் போன்றவை வெறும் மன உணர்வுகளே

அந்த மன உணர்வுகளுக்கு  ஆட்பட்டு வாழ்க்கையை கடைப்பிடிக்கும்போது வாழ்க்கை கலப்படமில்லாமல் இருக்கிறது
 
இந்த உணர்வுகளை விட்டுவிட்டு எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ுும் போக்கைக்    கடைப்பிடிக்கும்போது
 
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்னும் மனப்போக்கு உண்டாகிறது
 
என் தாயார் சொல்லுவார்கள்
 
இப்படி சில நியதிகளை வைத்துக்கொண்டு வாழாமல் இருப்போர்
 
பலவிதமான கலப்புகளுக்கு மனதில் சற்றும் அருவருப்பின்றி இடம் கொடுத்துவிட்டு
 
வாழ்க்கையில் மனதாலும் உடலாலும் ஆரோக்கியம்  கெட்டு அல்லலுறுகிறார்கள்  என்று
 
ஆகவே இந்த பத்து, எச்சில், மடி ஆசாரம்  எல்லாமே நம் மனதை உடலை,  சுத்தமாக வைக்கத்தான்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/4/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>
--
360.gif

Venkatachalam Dotthathri

unread,
Apr 7, 2012, 3:51:10 AM4/7/12
to mint...@googlegroups.com
On Sat, Apr 7, 2012 at 1:22 AM, N. Kannan <navan...@gmail.com> wrote:
சுவாரசியமான நோக்கு! இன்னொருவகையிலும் நோக்கலாமென்று தோன்றுகிறது.

2012/4/6 Venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>:

எச்சில் பரிசுத்தம்:  

சின்னப்பிள்ளையில் பார்த்தது. செட்டியார் விடுதியில் அமர்க்களமாக கல்யாண விருந்து நடக்கும். எச்சல் இலைக்காக வெளியே நரிக்குரவர் கூட்டம் அலை பாயும். இலை வந்து விழுந்ததுதான் தெரியும், ஒவ்வொருவரும் அறுசுவை உணவை அள்ளி, அள்ளி உண்பர். எச்சில் பரிசுத்தம்!
-=-=-=-=-=-

ஓம்
மிகவும் திருத்தமாக இன்னொரு உலகம் செயல்படுவருகிறது. இந்தியாவில் மட்டுமில்லை .வேறு பலநாடுகளிலும் நடைபெறுகிறது. தின்னும் பதார்த்தங்கள் பெரிய பெரிய உணவு விடுதிகளில்,  வந்து விழும் எச்சல் இலைகளில் இருந்து எடுத்து தரம் பிரித்து  மறு விற்பனைக்கும், சில இடங்களில் மிகக் குறைந்த விலைக்கும், இனாமாகவும் கொடுக்கப்படும் அவலம் மிகவும் கொடியது..

எச்சில் இலைகள் போடும் பெரியதொட்டியின் அருகில் ஒரு அன்பர் அமர்ந்து, கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு
விழும் பதார்த்தங்களை, குச்சியால் பிரித்து வேண்டியதையும் வேண்டாதையும் பிரித்து, தனித்தனி பாத்திரங்களில் சேகரிப்பார்..
தொகுதி உடன்படிக்கையும் உண்டு. அதாவது தனித்தனியாக ஒவ்வொரு விடுதிக்கும் வெவ்வேறு நபர்கள் பணிசெய்வர்..
சுத்தம் சுகாதாரம், விழிப்புணர்வு என்பதெல்லாம் அங்கே செல்லுபடியாவதில்லை..

எங்கிருந்து வந்த உணவு வகைகள் யாரால் மீத்து  எறியப்பட்டது என்பது  இங்கு அவசியமற்ற ஒரு கேள்வி..
 
வறுமையின் நிறம் சிவப்பு என்ற திரைப்படத்தில் சாக்கடையில் விழுந்த ஆரஞ்சுப் பழத்தை எடுத்து பசித்திருக்கும் கமல் துணியில் துடைத்துவிட்டு கடித்து பசியாறும் காட்சி உண்டு..

 ஒரு யூ டியூப் காணொளியில் கண்ட ஒரு  நிகழ்ச்சி:
இவ்வாறு ஹோட்டலில் வீசி எறியப்பட்ட உணவைச் சேகரித்து ஒரு நீக்ரோ குடும்பத் தலைவன்  மூன்று சக்கர வண்டியில் வீட்டுக்கு கொண்டுவருவான்.
அங்கே ஒரு பட்டினிப் பட்டாளம் தயாராகக் காத்திருக்கும். பதார்த்தங்களைப் பறிமாறியதும் ஒரு சிறுமி அவசரமாக ஒரு பதார்த்தத்தை எடுத்து வாயில் வைப்பாள்.
குடும்பத்தலைவன் அச்சிறுமியை அடித்துவிட்டு உணவு கொள்ளும் முன்பு ’இத்தகைய’உணவைக் கொடுத்த  இறைவனுக்கு வணக்கமும் நன்றியும் சொல்லிவிட்டு உண்னச் சொல்வான்!.

பசிவந்திடப் பத்தும் பறந்துபோம். நாகரிகம் பரிசுத்தம் என்பவைஎல்லாம் பசியின் முன்னர் மறைந்துவிடுகிறது.

எனவே தான்”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தேரே” என்ற் முதுமொழி வந்தது. தானத்த்ல் சிறந்தது அன்ன தானம் என்பதும் நடைமுறை சித்தாந்தம்..
”அன்னச் சத்திரம் இருப்பது எதனாலே?- பல திண்னைத் தூங்கிப் பசங்க இருப்பதாலே”,  என்று சக்கரவர்த்தி திருமகள் பட்த்தில் என்.எஸ்.கே.யும், எம்.ஜி.ஆரும் பாடுவார்கள்.

படிக்க வசதியில்லாத மக்களுக்காக படிப்பது அவசியம் எனறால், மதிய உணவு தந்துபடிக்க திட்டம் தந்தார். திரு காமராஜர்.
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழிக்கச் சொன்னார் பாரதி.
 பரந்து கெடுக இவ்வுல்கியற்றியான் என்று சாபம் தந்தார் வள்ளுவப் பெந்ருந்தகை..
 உண்டாலம்ம இவ்வுலகம்!!!
-=-=
அன்புடன்
வெ.சுப்பிரமணியன். ஒம்
Reply all
Reply to author
Forward
0 new messages