என்னது கால் சில்ம்புதானே விட்டுடு தாயீன்னா சொல்றே மவனே உன்னை ஒருகை பாக்காம விடமாட்டேன்
கண் மூடிக் கிடக்கும் ஒரு பெண் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்பதை அறிய ஒரு முரட்டு வைத்தியம்
ஒரு தங்க நகையை முகத்யுக்கு நேரே நீட்டு கொஞ்சம் ஆட்டு உடனே அந்தப்பெண்ண் ஆவென்று எழுவாள்
பொன்னுக்கும் பெண்ணுக்கும் உள்ள தொடர்பு மனிதனின் வரலாறு தொடங்கியதும் தொடங்கிவிடுகிறது. 1.75 ஆண்டுகளில் மனிதன் மண்மகளை மலைப் பாறைகளை அருவி மணற் படுகையில் சுரண்டிச் சுரண்டி மனிதன் சேர்த்தது சுமார் 1.50 லட்சம் டன்கள். யாருக்காக அது யாருக்காக
17 ஆம் நூற்றாண்டுக்குமுன் மொத்தம் இருந்த தங்கத்தில் 25% தங்கம் தமிழகத்தில் இருந்தது. பெரும்பகுதி கோவில்களிலும் அதற்கு அடுத்த அளவு பெண்களின் உடலில் அணிகலன்களாகவும் இருந்தது
தங்கத்தைச் சுரண்ட தங்கச் சுரங்கம் இல்லாத தமிழகத்த்தில் இவ்வளவு தங்கம் எப்படி ஏன் எங்கே
பழந்தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதி வள்மும் வனப்பும் மிக்கதாக இயற்கை அன்னை அதிகம் வேலை வைக்காமல் அள்ளிக் கொடுத்தாள். குறிஞ்சியிலும் முல்லையிலும் மக்கள் இயற்கைப் பொருட்களைத் தேட நெய்தல் மக்கள் அவற்றைத் திரைகடல் ஓடித் தங்கள் பொருட்களைத் தங்கத்துக்கு பண்டமாற்றாக விற்றார்கள் அவ்ர்களின் அயராத உழைப்பால் தங்கம் கிரேக்கத்திலிருந்தும் ரோமாபுரியிலிருந்தும் பருத்தி ஆடைகளுக்காகவும் உயிருடன் உள்ள கிளிகள் மயில்களுக்காகவும் அள்ளிக்கொணரப்பட்டு தமிழகத்தின் அளப்பரும் அளவில் சேர்ந்தது
பொன்னை நகையாக்கிஉம் பொற்கொல்லர்கள் பம்பரமாகச் சுற்றிப் பல வடிவங்களில் நகையாக மாற்ற எங்கெங்கு உடம்பில் இடம் உள்ளதோ எங்கெல்லாம் உடலில் தங்கத்தைத் தற்காலிகமாகவோ அல்லது நரந்தரமாகவோ இணைத்துக் கொள்ளலாமோ அங்கெல்லாம் நகையை இழைத்துக் கொண்டார்கள்
ஏற்ற்மதியில் ஈட்டிய பொற்காசுகள் எல்லாம் பெண்களின் ஆசைக்கு இயைந்து நகைகளாக ஆயிற்று. பிறந்த பெண்குழந்தைக்கு குன்றிமணியளவு தங்க்மாவது வேண்டும் என்று ஆண்களுக்கு நினைவுறுத்த தங்கள் பெண்குழந்தைகளைப் பொன்னே மணியே என்று அழைத்து நினவூட்டினார்கள். குடுகுப் பாட்டிகளும் காதுகொள்ளாமல் பாம்படம்போட்டு நடமாடினர்
17-ஆம் நூற்றாண்டுக்குப்பின் கூலித் தொழொலிலள்களாக் அடிமைகளாக் மாறியபோதும் தமிழ்ப் பெண்ணின் பொன்னாசைஅ அடங்கவில்லை
வெள்ளையர்களை எதிர்த்து விதவிதமாகப் போராடிய காந்தி போராட்டத்துக்கு நிதி தேடியபோது அவர் உண்டியல் ஏந்தவில்லை. மாறாக நிறைய நகை அணிந்த பெண்களைப் பார்த்ததும் இருகை ஏந்தி நகைகளைப் பறித்தார். அந்த நகைகள் எல்லாம் எங்கே என்று வீட்டில் கேட்டபோது அந்தப்பெண்கள் அதெல்லாம் காந்திகணக்கில் சேர்ந்துவிட்டது என்று சொன்னார்கள்
சுதந்திர இந்தியாவிலும் அவர்களின் பொன்னாசை அடங்கவில்லை. ஏங்கி ஏங்கிப் பொன்னுக்கு வீங்கி நகைகடைகளை முற்றுகையிட்டு மனங்கவர்ந்த மனாளனின் கையை முறுக்கிப் பையைக் குடைந்து காசுபறித்துப் பொன் சேர்க்கிறார்கள். பெண் ஆசையாம் பொன் ஆசைக்காக நூற்றுக்கணக்கான டன்களில் நகை வியாபாரம் தமிழகத்தில் கொடிகட்டிப் பற்க்கிறது
ஒரு பானிபட் யுத்தம் வரவேண்டும் என்றால் நகையை அடகுவைக்கவேண்டும் என்று மனைவியிடம் கேட்டால் போதும்.
கொஞ்சம் நகையைப் பங்கிக் கொள்ளலாம் என்று இருபெண்கள் பேச ஆரம்பித்தால் உலகமகாயுத்தம் ஆரம்பமாகும்.
உலகத்திலேயே வேறு எந்த நாட்டுப் பெண்களிடமும் இப்படிப்பட்ட பொன்னாசை அதுவும் சொக்கத் தங்கத்தில் சுத்தத் தங்கத்தில் தலையிலிருந்து கால்வரை பொன் வேண்டும் என்று பெண் ஆடைப்படுவது ஏன்?
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி

வல்லவனுக்கு வல்லவன்