49வது சென்னை புத்தக கண்காட்சி: ஜனவரி 7—19, 2026 சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்

13 views
Skip to first unread message

தேமொழி

unread,
Dec 5, 2025, 5:28:46 PM (8 days ago) Dec 5
to மின்தமிழ்
49வது சென்னை புத்தக கண்காட்சி: ஜனவரி 7—19, 2026 சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்
book fair.jpg
 சென்னை: 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள 49வது புத்தக கண்காட்சி எப்போதும்போலவே இந்தாண்டும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி 7 முதல் 19 வரை என 13 நாட்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் புத்தகக் காட்சி, இந்த ஆண்டும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெறவுள்ளது. இதில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்படும் எனவும் அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச நுழைவு டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்படலாம். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை புத்தக கண்காட்சி இயங்கும் எனவும் வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரை இயங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: தினகரன் - https://www.dinakaran.com/news/chennai-bookfair/
Reply all
Reply to author
Forward
0 new messages