கொங்கு தமிழ் சொற்கள் தொகுப்பு

1,986 views
Skip to first unread message

Raja sankar

unread,
Dec 5, 2010, 2:33:19 AM12/5/10
to minT...@googlegroups.com

சேலம், ஈரொடு, கோயமுத்தூர், கருர், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கின் தமிழ் மற்ற இடங்களை விட கொஞ்சம் வித்தியாசமானது. மரியாதையோடு அழைப்பதையும் அமங்கல சொற்களை சொல்லததும் இதன் தனி சிறப்புகள். விவசாயத்தை தொழிலாக கொண்டதால் பல சொற்கள் அதை மையப்படுத்தியே இருக்கும். 

இங்கு அட்டவனையாக இணைத்தும் மரபு விக்கியில் சேர்க்கவும் உள்ளேன். தவறுகள் இருந்தால் சுட்டவும்

அக்கட்ட

அந்த இடம்

அங்கராக்கு

சட்டை

அடசல்

அடைத்தல். "கோழி அடச போட்டு பொங்க வைக்கிறோம்"

அட்டாரி

அட்டாலி - பரண்

அண்ணாங்கால்

ஆடு,மாடுகளின் கழுத்தையும் முன்காலையும் சேர்த்து கட்டி விடுதல். இதன் பின் அவைகளால் ஓட முடியாது

அந்திக்கு

இரவுக்கு

அப்பச்சி

அப்புச்சி- தாய்வழித் தாத்தா

அப்பத்தா

அப்பாவின் ஆத்தாள்,அப்பத்தாள்

அப்பயும் குப்பையும் மாய்

சிதறுண்டு போதல். "அந்த காசு அப்பயும் குப்பையுமா போச்சு"

அப்பு

அறை. "அவன ஓங்கி ஒரு அப்பு அப்புடா, செவுனி திலும்பரப்பல

அம்மாயி

அம்மாவின் அம்மா

அருமைக்காரர்

சீர் சடங்குள் செய்யும் உரிமை பெற்றவர். அருமைச்சீர் எனும் ஒரு சீரை செய்தபினே அருமை ஆக முடியும். இதை அருமை வைத்துக்கொண்டார் எனவும் சொல்வார்கள்

ஆகாவழி

ஒன்றுக்கும் உதவாதவன்

ஆட்டம்

போல என்று பொருள்படும் ஒரு சொல்: (அக்காளாட்டம் சும்மா இரு - அக்காளைப் போல் சும்மா இரு)

ஆம்பாடு

காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)

இக்கட்டு

இந்த இடம்

இக்கிட்டு

இடர்பாடு

இட்டாரி (இட்டேறி),இட்டரை

தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)

இண்டம் பிடித்தவன்

கஞ்சன்

உண்டி

(sample) = உண்ணும் பதம்? - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்

உப்புசம் , உக்கரம்

புழுக்கம்

ஊக்காலி (?ஊர்க்காலி)

பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். ( ரவுடி )

ஊடு

வீடு

ஊளைமூக்கு

சளி நிரம்பிய மூக்கு

எகத்தாளம்

நக்கல், பரிகாசம்

எசிறி

போட்டி (அவுங்க எசிறி போட்டுடே கெட்டு போனாங்க)

எச்சு

அதிகம்.

எரவாரம்

கூரைக்கு கீழ் உள்ள இடம்

எறப்பாளி

இரந்து உண்டு வாழுபவன், அடுத்துவரை ஏய்த்து பிழைப்பவன்

ஏகமாக

மிகுதியாக,பரவலாக

ஒடக்கான்

ஓணான்

ஒட்டுக்கா

ஒரேயடியாக, இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்கா போயிட்டு வாங்க - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)

ஒந்தி

ஒதுங்கி

ஒப்பாரி

சத்தமாக அழுதல், பாட்டு பாடி அழுதல்

ஒப்பிட்டு, ஒப்புட்டு

போளி போன்ற ஒரு இனிப்பு

ஒருசந்தி

ஒரு வேளை மட்டும் விரதம் இருத்தல்

ஒறம்பற

உறவினர் (உறவின்மு்றை) - விருந்தினர்

ஒளப்பிரி

உளறு "இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்"

ஓரியாட்டம்

சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.

கடகோடு

கடைசி ( கோட்டுக்கடை - கடைசிக்கடை, அந்த கோட்டிலே பாரு - அந்த கடைசியிலே பாரு)

கடை போகுது

ஏரியில், குளத்தில் நீர் நிரம்பி வழிதல்

கடைகால், கடக்கால்

கட்டித்ததின் அடித்தளம்

கடையாணி

அச்சாணி

கட்டிச்சோற்று விருந்து

கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு விருந்து

கட்டுத்தரை

மாட்டுத் தொழுவம்

கதவைச் சாத்து

கதவை மூடு

கம்பம் நடுதல்

மூன்று பிரிவாக கிளைத்துள்ள மரக்கிளையை வெட்டி வந்து கோயில் மைதானத்தில் நடுவார்கள். திருவிழா முழுதும் அதை சுற்றி ஆடுவார்கள்

கரடு

சிறு குன்று

காரை

சிமெண்ட் போன்ற ஒரு கலவை. மண் வீட்டின் மேல் பூசப்படும்

குக்கு

உட்கார்

குந்தாணி

நெல் குத்தி அரிசியாக்க பயன்படும் உரல்

கூடப்பொறந்த பொறப்பு

உடன் பிறந்தவள்

கூதல்

குளிர், கூதகாலம்- குளிர்காலம்

கூம்பு

கார்த்திகை தீபம்

கொத்துகாரர்

ஊரின் நாட்டான்மை போன்ற பெரியவர்

கொரங்காடு

ஆடு,மாடுகள் மேய விட்டிருக்கும் காடு. இதில் ஏதும் விவசாயம் இருக்காது

கொழு

ஏர்மனை

கொழுந்தனார்

கணவரின் தம்பி

கோடு

அந்தக் கோட்டிலே உட்கார், பழைமைச்சான்று: "கோடுயர் அடுப்பு" - "பக்கம் உயர்ந்த அடுப்பு" (புறநானூறு 164),கடைசி ( கோட்டுக்கடை - கடைசிக்கடை, அந்த கோட்ல பாரு - அந்த கடைசில பாரு)

கோல்காரர்

இதுவும் ஒரு நாட்டாணமை போன்ற ஒரு பதவி

சப்பையா இருக்கு

சுவையில்லாமல் இருத்தல்

சர்க்கரை கத்தி

நாவிதனின் பெயர். மரியாதையாக அழைக்க பயன்படும்

சல்லை

தொந்தரவு, “இதோட ஒரே சல்லை”,

உயரமாக வளர்ந்தது.

சாங்கியம்

சடங்கு, சடங்கின் போது தேவைப்படும் பொருட்கள், “சாங்கியத்துக்கு கொஞ்சம் நெய் இருந்தா போதும்”

சாடை பேசுகிறான்

குறிப்பாகத் (மறைமுகமாகத்) தாக்கிப் பேசுகிறான்

சீக்கு

நோய்

சீரழி

நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)

சீராட்டு

கோபம். (கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகுல. அதுக்குள்ள புள்ள சீராடிட்டு வந்துடுச்சு)

சீவக்கட்டை

தொடப்பம், கூட்டி பெறுக்க பயன்படுத்துவது

சுல்லான் (சுள்ளான்?)

கொசு

செகுனி, செவுனி

தாடை/கன்னம்

செம்புலிகுட்டி

செம்மறியாட்டுக்குட்டி

சேந்துதல்

தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா )

சொல்லை

சீக்கடி-கொசு

தடுக்கு

இதுவும் தென்னையோலையால் பின்னப்பட்டது. தடுக்கு பின்னுதல்

தாரை

பாதை,

திரட்டி (திரட்டு)

பெண்ணின் முதிர்ச்சி விழா, பூப்பு நன்னீராட்டு விழா

துழாவு

தேடு

தொட்டுகிட்டு

போட்டுகிட்டு

தொண்டுபட்டி

மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் - ஆட்டைத் தொண்டுபட்டியிலே அடை

நங்கை, நங்கையாள்

அண்ணி, நாத்தனார், கணவனின் கூடப்பிறந்த பெண்களை சொல்வது

நசியம்

மாடுகள் சினையாகும் பருவம்

நலுங்கு

உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லைச் சொல்ல மாட்டார்கள் - அவர்கள் குழந்தை நலுங்கிவிட்டதாம்)

நாட்டுக்கல்

ஊர் மத்தியில் இருக்கும் கல். திருமணம் போன்ற காரியங்களில் இதின் அருகே நின்று சுத்தி போடுதல் உண்டு.

நாதாங்கி

தாழ்ப்பாள், நாதாங்கி போடு

நாயம்

பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் - அவன் நாயம் யாருக்கு வேணும், அங்க என்னடா பேச்சு - அங்க என்னடா நாயம் )

நோக்காடு

நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்னைக்கு வரக் காணோம்.

படப்பு

வைக்கோல்,சோளம் போன்றவற்றை சிறு குத்தாரி போல் சேமித்தல்

படல்

பனையோலையால் பின்னப்பட்ட கதவு, இது சுவராகவும் பயன்படுவதுண்டு

பட்டி நாய்

பட்டியில் காவல் இருக்கும் நாய்

பண்டம்

ஆடு மாடுகளை குறிக்க பயன்படுத்துவது.

பண்டுதம்

மருத்துவம் பார்த்தல், சிகிச்சை செய்தல்

பண்ணாட்டு

அதிகாரம் செலுத்துதல், வேலை வாங்குதல்

பன்னாடி

கணவன், முதலாளி (பண்ணைக்கு சொந்தக்காரன்)

பரம்பு

பரப்புதல், பரம்படித்தல் என்றால் சமன் செய்தல்

பள்ளம்

உபரி நீர் போக வைத்திருக்கும் வாய்க்கால்

பாடி

ஆடு மாடுகளை கட்டும் இடம்.

பாலி

குளத்தை விடச் சிறிய நீர்நிலை.

பால் பீச்சுதல்

பால் கறத்தல்

பிரி

கயிறு, பொதுவாக சிறிய கயிறையோ அல்லது வைக்கோல் வாழைமட்டை யால் செய்யப்பட்ட கயிறை யோ சொல்ல பயன்படுத்தப்படும்

புண்ணியாசனை

(< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா

பெரிய காரியம்

இறப்பை குறிப்பது. அமங்கல வார்த்தைகளை சொல்லாமல் இழவு விழுந்தால் அதை பெரிய காரியம் என குறிப்பர்

பொக்குன்னு

வருத்தமாக (முட்டாய் தரன்னு சொல்லிட்டு தராம இருந்தா குழந்தை பொக்குன்னு போயிடும்)

பொடக்காலி

புழக்கடை

பொட்டுச்சாமி

கருப்பசாமி போன்ற ஊரின் காவல் தெய்வம். திருவிழா ஆரம்பித்தலுக்கு முன் இவருக்கு தான் பொங்கல் வைக்கப்படும்.

பொறந்தவன்

உடன் பிறந்த சகோதரர்

பொறந்தவள்

உடன் பிறந்த சகோதரரி

பொழுது

சூரியன் இருக்கும் நிலை, பொழுது விடிய கிளம்பிடனும்.

பொழுதோட

மாலைநேரம்

மசையன்

விவரமற்றவன்

மச்சாண்டார்

மைத்துனர்

மண்ணுடையார்

மண் பாண்டம் செய்பவர்கள்

மரமணை

சாமி ஊர்வலம்.

மளார்

விரைவாக, சீக்கிரம் (மளார் என்று தனியாக சொல்லமாட்டார்கள். மளாரென்று வா\போ, மளாரென்று வேலையை முடி என்று அடுத்த சொல்லோடு இணைந்து தான் இச்சொல் வரும்)

மிஞ்சி

மெட்டி

முக்கு

முனை, முச்சூடும்- முழுவதும்,. மூலை, வளைவு

முட்டுவழி

முதலீடு

மூச்சு தெப்பு

மூச்சு பிடித்தல்

விளக்கு மாவு

அரிசிமாவும் சர்க்கரையும் பிசைந்து விளக்கு போல் செய்து திருவிழாவின் போது ஊர்வலமாக பெண்கள் எடுத்து போவார்கள்

வேகு வேகுன்னு

அவசரஅவசரமாய்

வேசகாலம்

வெய்யில்காலம்





ராஜசங்கர்

Mohanarangan V Srirangam

unread,
Dec 5, 2010, 2:52:22 AM12/5/10
to mint...@googlegroups.com
திரு ராஜாசங்கர், 

திரு பெருமாள் முருகன் தொகுத்துப் பதிப்பித்த கொங்கு வட்டாரச் சொல்லகராதி, குருத்து வெளியீடு மே 2000 என்ற நூலைப் படித்திருப்பீர்கள் தானே? இல்லையென்றால் அதை ஒப்பு நோக்கி அதனினும் விரிவாகச் செய்தல் நல்ல பயனைத்தரும். 

2010/12/5 Raja sankar <errajasa...@gmail.com>

coral shree

unread,
Dec 5, 2010, 3:22:27 AM12/5/10
to mint...@googlegroups.com
அன்பின் ராஜா சங்கர், இதில் சிறு எழுத்துப் பிழைகள் இருப்பதாகத் தெரிகிறது. சரி பாருங்கள்.

ஈரோடு என்றும் கோயம்புத்தூர் என்றும்தான் வழக்கில் உள்ளதாக நான் அறிகிறேன். தயவுசெய்து சரி பாருங்கள். நன்றி.

2010/12/5 Raja sankar <errajasa...@gmail.com>


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

tamil payani

unread,
Dec 5, 2010, 3:26:38 AM12/5/10
to mint...@googlegroups.com
அக்கட்ட        - என்பது இது வரை அறிந்தது இல்லை.
அருமைக்காரர்  - அரும்புக்காரர் என்பார்கள். பல இடங்களில் சாதரணமாக இந்த வார்த்தையை கேட்டதுண்டு. அருமைக்காரர் தான் மருவியுள்ளதா என்பதை விசாரித்து அறிந்துக் கொள்ளுங்கள்.
இட்டாரி (இட்டேறி),இட்டரை - இட்டேறி என்பதே பெரும்பாலும் பயன்படுத்த படுகிறது.
ஊர்க்காலி - இது தனியான ஆளை குறிப்பதாக வருவதில்லை. ஊர்க் காலிப் (ரவுடிப்) பையல்கள் எல்லாரும் என்பதா வரும்.
கட்டிச்சோற்று விருந்து - கட்டுச் சோற்று விருந்து. பருப்பு கலந்த சாதத்தை ஒரு துணியில் கட்டி (முடிந்து) வைத்து அதை பிரித்து பார்த்து அதன் மூலமாக குழந்தை ஆணா, பெண்ணா என்று நம்பிக்கை கொள்வார்கள்.


2010/12/5 Raja sankar <errajasa...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஊர் உலகம் – 04-11-2010

Jana Iyengar

unread,
Dec 5, 2010, 4:03:14 AM12/5/10
to mint...@googlegroups.com, iyengar.jana
1960. தந்தை மறைந்து நாங்கள் ஈரோட்டில் அண்ணாவுக்கு ஒதுக்கிய ரயில்வே காலனி வீட்டில் குடியேறினோம். மதுரை ஜில்லாவிலேயே வளர்ந்து வந்ததால் புது இடத்தின் பேச்சுவழக்கு புதிராக இருந்தது. ஒருன் நாள் அம்மா வெளியில் போய் காய்கறி வங்கிவரச்சொன்னர். ரோட்டில் கடை வைத்திருந்த ஒரு பெண்மணியிடம் கத்தரிக்காயின் விலை கேட்டேன். "ஒருயூறு nAlaNA " [நாலு அனா] என்றார். ஒன்றும் புரியவில்லை. யாரிடம் விடை கேட்பது என்று தெரியாமல் வீட்டுக்கு திரும்பினேன்.
பிறகு 1964 வரை கோவையில் தான் படிக்க நேர்ந்தது. ஐயா அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களின் ராமகிருஷ்ணா வித்யாலயத்தில் பொறியியல் பயின்று மும்பை வரும்வரை கொங்கின் தமிழின் அழகை ரசிக்கும் பேரு கிடைத்தது.
Thank you for taking me to those olden and golden days once again.
அடியேன் ஜனா ராமானுஜ தாசன் .
2010/12/5 Raja sankar <errajasa...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Jana

Raja sankar

unread,
Dec 5, 2010, 4:03:39 AM12/5/10
to mint...@googlegroups.com
பெருமாள் முருகன் எழுதிய கதைகள் படித்திருக்கிறேன். கொங்கு சொல்லகராதி பற்றி தெரியாது. இந்த வருட புத்த கண்காட்சியில் வாங்கிவிடுகிறேன். 

ராஜசங்கர்



2010/12/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

Raja sankar

unread,
Dec 5, 2010, 4:06:57 AM12/5/10
to mint...@googlegroups.com
அருமைக்காரர்  என்றுதான் சொல்லுவார்கள். திருமணபத்திர்க்கைளில் கூட இப்படித்தான். அருமைச்சீர் செய்தவர்கள் தான் அருமைக்காரர்கள்

கட்டிச்சோற்று விருந்து- கட்டிக்கொண்டு போய் சோறு போடுவது. பெண் வீட்டில் இருந்து போய் மாப்பிள்ளை வீட்டில் சோறு போடுவது. அதனால் கட்டுசோற்று விருந்து. 

ராஜசங்கர்



2010/12/5 tamil payani <tamil...@gmail.com>

Raja sankar

unread,
Dec 5, 2010, 4:08:09 AM12/5/10
to mint...@googlegroups.com
ஈரோடு தான் சரி. கோயமுத்தூர் என்றும் உண்டு. குனியமுத்தூர் போலவே

ராஜசங்கர்



2010/12/5 coral shree <cor...@gmail.com>

N. Ganesan

unread,
Dec 5, 2010, 4:43:28 AM12/5/10
to மின்தமிழ்

On Dec 5, 3:03 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> பெருமாள் முருகன் எழுதிய கதைகள் படித்திருக்கிறேன். கொங்கு சொல்லகராதி பற்றி
> தெரியாது. இந்த வருட புத்த கண்காட்சியில் வாங்கிவிடுகிறேன்.
>
> ராஜசங்கர்
>

இணையத்தில் வா. மணிகண்டன் (ஊர்: கோபி)
பெங்களூரில் இருந்து எழுதுபவர். பல கவிதைகள்
போன்றன, ... உயிர்மை இதழில் வந்துள்ளன.

வா. ம. கொங்குச் சொற்களைத் தொகுத்து பல
பதிவுகள் எழுதியுள்ளார்.

பெருமாள் முருகனின் அகராதிக்கு 100 ஆண்டுக்கு
முன் தி. அ. முத்துசாமி கோனார் நூல்களும்
துணை செய்துள்ளன. பெருமாள் முருகனின்
அகராதிக்கு முன்னர் ‘கொங்குத் தமிழ்’ என்று
தொகுத்தவர் துடியலூர் மு. காளியப்பா.
ஜெயா மீனாட்சிசுந்தரம் அவர்களின்
‘கொங்குப் பழமொழிகள்’, ஆர். சண்முகசுந்தரம்,
... போன்றோர் எழுதிய ஃஃபிக்சன், .. இவற்றிலும்
தொகுக்கலாம்.

நா. கணேசன்


> 2010/12/5 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > திரு ராஜாசங்கர்,
>
> > திரு பெருமாள் முருகன் தொகுத்துப் பதிப்பித்த கொங்கு வட்டாரச் சொல்லகராதி,
> > குருத்து வெளியீடு மே 2000 என்ற நூலைப் படித்திருப்பீர்கள் தானே? இல்லையென்றால்
> > அதை ஒப்பு நோக்கி அதனினும் விரிவாகச் செய்தல் நல்ல பயனைத்தரும்.
>

> > 2010/12/5 Raja sankar <errajasankarc...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 5, 2010, 4:50:05 AM12/5/10
to mint...@googlegroups.com
சிறந்த முயற்சி. தொடருங்கள்.
இவ்வகை முயற்சிகள் நம் தமிழ் மொழிக்கு வளம் சேர்ப்பவை.
எழுத்துப் பிழை மாற்றங்கள் செய்து மரபு விக்கியிலும் இணைத்து விடுங்கள்.
அன்புடன்
சுபா
2010/12/5 Raja sankar <errajasa...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Sathees Kumar

unread,
Dec 5, 2010, 11:20:20 PM12/5/10
to mint...@googlegroups.com
ஐயா நான் கொங்கு மண்டலத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து அங்கேயே இருப்பவன் ஆனால் கிழ் உள்ள வார்த்தைகள் நான் கேள்வி பட்டதே இல்லை சிறிது ஆராயுங்களே...........

அங்கராக்கு
அடசல்
ஆகாவழி
ஆம்பாடு

இட்டாரி
(இட்டேறி),இட்டரை

உண்டி
எசிறி
எறப்பாளி
குக்கு
நாதாங்கி

பண்டம்
பண்டுதம்
பன்னாடி
பாடி
மூச்சு தெப்பு
முட்டுவழி மிஞ்சி


மற்றும் மரவனை என்பது நான் கேட்டவரை அது மெரவனை என்பார்கள்



அன்புடன்,

sas.gif



சர்க்கரை கத்தி
2010/12/5 Raja sankar <errajasa...@gmail.com>
sas.gif

செல்வன்

unread,
Dec 5, 2010, 11:29:08 PM12/5/10
to mint...@googlegroups.com
ஆகாவழி என்ற சொல் கோவையில் புழக்கத்தில் உண்டு.உருப்படாத ஆளு என பொருள்.

அங்கராக்கு என்றால் சட்டை என பொருள் என நினைக்கிறேன்.

இட்டேரி என்றால் ஊர்பொதுவில் மல,சலம் கழிக்கும் காடு என்ற பொருளில் எங்கூரில் பயன்படுத்துவோம்.பன்னாடி என்றால் கணவர் அல்லது முறைமாமன் என்ற பொருள் வரு

2010/12/5 Sathees Kumar <satheesk...@gmail.com>



--
செல்வன்

சுதந்திர தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து

ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர்

மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்

தாவில் வானுல கென்னத் தகுவதே.


www.holyox.blogspot.com


sas.gif

Raja sankar

unread,
Dec 5, 2010, 11:30:32 PM12/5/10
to mint...@googlegroups.com
நண்பரே,

நானும் கொங்கு மண்டலம் தான். ஈரோட்டுக்கு அருகில் சிறு கிராமம். இவைகள் எல்லாம் எங்கள் ஊரில் பேசிகொண்டு இருப்பவைதான். 

எசிறி போடாத. அடசல், பண்டுதம் பண்ணியும் சரியாவல. என்பதெல்லாம் இன்றும் புழங்கும் சொற்கள் தான். ஊரில் இருக்கும் பெரியவர்களை கேட்டும் உறுதிப்படுத்திகொண்ட சொற்கள் தான். இன்னமும் அவர்களிடம் சொற்கள் இருகின்றன. ஒரு நாள் உக்கார்ந்து தொகுக்க வேண்டும். 



ராஜசங்கர்



2010/12/6 Sathees Kumar <satheesk...@gmail.com>
sas.gif

Nagarajan Vadivel

unread,
Dec 5, 2010, 11:35:29 PM12/5/10
to mint...@googlegroups.com
அங்கராக்கு சட்டை சரி
பன்னாடி தலைவர் ஊர்ப்பன்னாடி என்பதுபோல்
நாகராசன்

2010/12/6 செல்வன் <hol...@gmail.com>
sas.gif

செல்வன்

unread,
Dec 5, 2010, 11:37:46 PM12/5/10
to mint...@googlegroups.com
வாராங்க வாராங்க பன்னாடி வாராங்க என ஒரு நாட்டுபாடலே உண்டு நாகராசன் ஐயா.செந்தூரபூவே படத்தில் கூட வந்தது

2010/12/5 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
sas.gif

Nagarajan Vadivel

unread,
Dec 6, 2010, 12:29:25 AM12/6/10
to mint...@googlegroups.com
செல்வன்
செந்தூரப் பூவே படம் எடுத்ததே எங்க ஆளுங்க
sas.gif

நலம் பெறுக

unread,
Dec 6, 2010, 12:48:53 AM12/6/10
to mint...@googlegroups.com
/அங்கராக்கு என்றால் சட்டை என பொருள் என நினைக்கிறேன்.//

முதல்வன் படம்
அர்ஜுன் ஒரு நாள் முதல்வராகி கலக்கி பின்னர் மோட்டார் பைக்கில் மனிஷாவை பார்க்க கிராமத்துக்கு வரும் காட்சி
விவசாயிகள் அவருக்கு மரியாதை செய்ய ஆசையாக , "தம்பி ஒங்க அங்கராக்க நீட்டுங்க "
"அங்கராக்கா "
"அதான் தம்பி ஒங்க சட்டை "

நலம் பெறுக

2010/12/6 செல்வன் <hol...@gmail.com>
ஆகாவழி என்ற சொல் கோவையில் புழக்கத்தில் உண்டு.உருப்படாத ஆளு என பொருள்.
sas.gif

பழமைபேசி

unread,
Dec 6, 2010, 7:19:09 AM12/6/10
to மின்தமிழ்
சிவாண்ணே,

வாங்க. மொடக்கடி பேசிப் பார்த்தது இல்லீங்களா நீங்க? ஒரு லோட்டாக்
காப்பியக் குடுத்தா பேசாமப் போய்ருவான் அவன். இல்லீன்னாத்தான் கட்டுல
உழுவான். அக்கட்ட நவுறச் சொன்னா, இக்கட்ட வந்து அக்கப்போர் செய்யுற ஆள்
நானில்லை... கெழக்க வெளுத்துறுச்சு பாருங்க, வேலைக்குப் போகோணும்;
போய்ட்டு வந்து பாக்குறனுங்க...

On Dec 5, 3:26 am, tamil payani <tamilpay...@gmail.com> wrote:
> *அக்கட்ட*        - என்பது இது வரை அறிந்தது இல்லை.
> *அருமைக்காரர்*  - அரும்புக்காரர் என்பார்கள். பல இடங்களில் சாதரணமாக இந்த


> வார்த்தையை கேட்டதுண்டு. அருமைக்காரர் தான் மருவியுள்ளதா என்பதை விசாரித்து
> அறிந்துக் கொள்ளுங்கள்.

> *இட்டாரி (இட்டேறி),**இட்டரை* - இட்டேறி என்பதே பெரும்பாலும் பயன்படுத்த
> படுகிறது.
> *ஊர்க்காலி *- இது தனியான ஆளை குறிப்பதாக வருவதில்லை. ஊர்க் காலிப் (ரவுடிப்)


> பையல்கள் எல்லாரும் என்பதா வரும்.

> *கட்டிச்சோற்று விருந்து* - கட்டுச் சோற்று விருந்து. பருப்பு கலந்த சாதத்தை


> ஒரு துணியில் கட்டி (முடிந்து) வைத்து அதை பிரித்து பார்த்து அதன் மூலமாக
> குழந்தை ஆணா, பெண்ணா என்று நம்பிக்கை கொள்வார்கள்.
>

> 2010/12/5 Raja sankar <errajasankarc...@gmail.com>

> ...
>
> read more »

பழமைபேசி

unread,
Dec 6, 2010, 7:30:15 AM12/6/10
to மின்தமிழ்
சர்க்கரைக்காரரே,

கும்புடுறனுங்க; அங்கராக்கு தெரீலீங்ளா? போச்சாது போங்க...
இலவுக்கத்துணியுமு, துவால்த்துணியுமு தெரிஞ்சி இருக்கோணுமே?!

On Dec 5, 11:20 pm, Sathees Kumar <satheeskumar.r...@gmail.com> wrote:
> ஐயா நான் கொங்கு மண்டலத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து அங்கேயே இருப்பவன் ஆனால்
> கிழ் உள்ள வார்த்தைகள் நான் கேள்வி பட்டதே இல்லை சிறிது ஆராயுங்களே...........
>

> *அங்கராக்கு


> அடசல்
> ஆகாவழி
> ஆம்பாடு
> இட்டாரி (இட்டேறி),இட்டரை

> *
>
> * *
> *உண்டி


> எசிறி
> எறப்பாளி
> குக்கு
> நாதாங்கி
>
> பண்டம்
> பண்டுதம்
> பன்னாடி
> பாடி
> மூச்சு தெப்பு
> முட்டுவழி மிஞ்சி
>

> மற்றும் மரவனை என்பது நான் கேட்டவரை அது மெரவனை என்பார்கள்*
>
> *அன்புடன்,*


>
> [image: sas.gif]
>
> சர்க்கரை கத்தி

> 2010/12/5 Raja sankar <errajasankarc...@gmail.com>

> ...
>
> read more »
>
>  sas.gif
> 7KViewDownload

Raja sankar

unread,
Dec 6, 2010, 7:42:11 AM12/6/10
to mint...@googlegroups.com
பழமை,

நீங்கள் எழுதிய சொற்களையும் இதில் சேர்த்துக்கொள்ளலாமா?

ராஜசங்கர்



2010/12/6 பழமைபேசி <pazam...@gmail.com>

Raja sankar

unread,
Dec 6, 2010, 7:50:03 AM12/6/10
to mint...@googlegroups.com
சொற்களின் பயன்பாடு அல்லது விளக்கம் பற்றியும் இதிலேயே எழுதிவிடலாம் என நினைக்கிறேன். அகராதி போல் ஒரு சொல்லின் வேறு வடிவங்களையும் இணைத்து விடலாம் என நினைக்கிறேன். இது சரியாக வருமா அல்லது இப்போதிருக்கும் முறையே சரிதானா?

ராஜசங்கர்

2010/12/6 பழமைபேசி <pazam...@gmail.com>
Still, I have a lot and I will send them to you tonight!!!

Thanks,
Mani.


On Dec 6, 7:42 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> பழமை,
>
> நீங்கள் எழுதிய சொற்களையும் இதில் சேர்த்துக்கொள்ளலாமா?
>
> ராஜசங்கர்
>
> 2010/12/6 பழமைபேசி <pazamaip...@gmail.com>

பழமைபேசி

unread,
Dec 6, 2010, 7:53:29 AM12/6/10
to மின்தமிழ்
சரிங்க... இதுலயும் எழுதிட்டு, ஒரு கோப்பாகவும் சேமித்தல் நன்று;
அப்படியே, கொங்குவாசலையும் ஒரு முறை பார்த்திடுங்க.

நன்றி!

On Dec 6, 7:50 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> சொற்களின் பயன்பாடு அல்லது விளக்கம் பற்றியும் இதிலேயே எழுதிவிடலாம் என
> நினைக்கிறேன். அகராதி போல் ஒரு சொல்லின் வேறு வடிவங்களையும் இணைத்து விடலாம் என
> நினைக்கிறேன். இது சரியாக வருமா அல்லது இப்போதிருக்கும் முறையே சரிதானா?
>
> ராஜசங்கர்
>

> 2010/12/6 பழமைபேசி <pazamaip...@gmail.com>

> ...
>
> read more »

LK

unread,
Dec 6, 2010, 7:32:38 AM12/6/10
to mint...@googlegroups.com
எகத்தாளம்
ஒட்டுக்கா
ஒறம்பற
ஓரியாட்டம்

இவற்றை நானும் அதிகம் உபயோகித்து இருக்கிறேன்.


கம்பம் நடுதல்- கம்பம் போடுதல் என்றும் சொல்லுவர் .நான் சேலத்தை சேர்ந்தவன் 

2010/12/6 பழமைபேசி <pazam...@gmail.com>
சர்க்கரைக்காரரே,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com

Raja sankar

unread,
Dec 6, 2010, 8:05:28 AM12/6/10
to mint...@googlegroups.com
சொல்லும் போது போடுதல் எனவும், எழுதும் போது நடுதல் எனவும் சொல்வர். இரண்டும் ஒரே அர்த்தம் தான். 

செருப்பு தொடுதல், போடுதல் போல. 

ராஜசங்கர்

LK

unread,
Dec 6, 2010, 8:53:16 AM12/6/10
to mint...@googlegroups.com
நன்றி ராஜ ஷங்கர்

2010/12/6 Raja sankar <errajasa...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Mar 17, 2011, 12:48:37 PM3/17/11
to mint...@googlegroups.com, Raja sankar, Subashini Kanagasundaram
அன்புள்ள ராஜசங்கர், 
 
இந்த இழை ரொம்ப நாள் அப்படியே இருக்கின்றதே. தொகுப்பில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் செய்து அதனை நாம் பரபு விக்கியில் இணைக்க ஆரம்பிக்கலாமே?
-சுபா

2010/12/5 Raja sankar <errajasa...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Reply all
Reply to author
Forward
0 new messages