இன்றைய தினம் 2

140 views
Skip to first unread message

Innamburan Innamburan

unread,
Aug 13, 2010, 6:18:01 PM8/13/10
to mintamil, Innamburan Innamburan
ஆகஸ்ட் 14, 1880

632 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கொலோன் (Cologne/Koln) மாதாகோயில்
கட்டி முடிக்கப்பட்ட தினம். அந்த நிகழ்வை தேசீய விழாவாக ஜெர்மானியர்கள்
கொண்டாடினர். மாமன்னன் வில்லியம் I வந்து சிறப்பித்தார். உலக புகழ் பெற்ற
இந்த கதீட்ரலை 1990ல் கண்டு, அங்கு தொழுது, மகிழ்ந்தோம். எல்லாரையும் போல
குயில் கடியாரமும், இ-டி-கொலோனும் வாங்கி வந்தோம்.

இந்த வானளாவிய கதீட்ரல், இரண்டாம் உலக யுத்தத்தின் போது, பிரிட்டீஷ்
விமானப்படையால் தாக்குண்டு, சிறிதளவு பழுதடைந்தது. அதன் உயரமே, அடையாளம்
காட்டி, அதை பாதுகாத்தது எனலாம் யுத்தம் முடிந்த பிறகு, அந்தப்படையை
சேர்ந்த வீரர்கள், சொத்தப்பணம் போட்டு,நிதி திரட்டி, அதை புனர்நிர்மாணம்
செய்தார்கள்.

ஆகஸ்ட் 14, 1947: பாகிஸ்தான் பிறந்த தினம்.

இன்னம்பூரான்

N. Kannan

unread,
Aug 13, 2010, 10:17:40 PM8/13/10
to mint...@googlegroups.com
2010/8/14 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

> ஆகஸ்ட் 14, 1880
>
> 632 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கொலோன் (Cologne/Koln) மாதாகோயில்
> கட்டி முடிக்கப்பட்ட தினம்.

அடடா! அப்படியா?
அங்கு நம் சுபாவிற்கு மாதா ஒரு மேஜிக் காட்டியது தெரியுமோ?
நானும் சுபாவும் அங்கு போய் தரிசித்துவிட்டுத் திரும்பிய போது
வாசற்கதவைத் தாண்டியவுடன் சுபாவின் கைகளிலிருந்து ஒரு மலர் வந்தது :-))
எப்படி வந்தது என்று இன்னும்தான் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன்!


> ஆகஸ்ட் 14, 1947: பாகிஸ்தான் பிறந்த தினம்.
>

கெட்ட விஷயங்களை ஏன் நினைவு படுத்துகிறீர்கள்? :-(

க.>

Subashini Tremmel

unread,
Aug 14, 2010, 3:25:03 AM8/14/10
to mint...@googlegroups.com
திரு.இன்னம்பூரான் - நான் மிக மிக இரசிக்கும் ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த தேவாலயத்தின் சிற்பபு சேர்க்கும் இன்னொரு செய்தி -  பழுதடைந்த பகுதிகளை அதன் அசல் கெடாத வண்ணம் இக்கோயிலை புணரமைப்பு செய்துள்ளனர். ஜெர்மனி பல்கலைக்கழகங்களில்  கட்டிடக்கலை துறையில் கட்டிடக்கலை புணரமைப்புக்கு இந்த ஆலயமும் எடுத்துக் காட்டாக அமைந்திருப்பதாக ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழக மாணவி ஒருவர் ஒருமுறை  கூறியிருந்தார்.
 
இந்தச் சுட்டியில் கொலோன் கேத்திட்ரல்  தொடர்பான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
கண்ணன் குறிப்பிட்டிருப்பது போல எப்படி பூ என் கையில் வந்தது என்பது ஆச்சரியம் தான்..:-)
 
-சுபா
2010/8/14 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Sri Sritharan

unread,
Aug 14, 2010, 3:37:59 AM8/14/10
to மின்தமிழ்

புணரமைப்பு அல்ல புனரமைப்பு:)

கூகுளில் இப்போது புணரமைப்பு என்று தேடினால் நான்கு பதிவுகள் (தமிழில்: ஹிட்டுகள்) வந்து விடப் போகிறது:)

இன்னம்பூரான் அவர்கள் விக்கிப்பீடியா தகவல்களை நம்புவதில்லை என்று முன்னர் ஒரு மடலில் குறிப்பிட்டிருந்தார்களே.


http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D

அன்புடன்
சிறீதரன்

________________________________
> Date: Sat, 14 Aug 2010 09:25:03 +0200
> Subject: Re: [MinTamil] இன்றைய தினம் 2
> From: ksuba...@gmail.com
> To: mint...@googlegroups.com
>
> திரு.இன்னம்பூரான் - நான் மிக மிக இரசிக்கும் ஆலயங்களில் இதுவும் ஒன்று.
> இந்த தேவாலயத்தின் சிற்பபு சேர்க்கும் இன்னொரு செய்தி - பழுதடைந்த
> பகுதிகளை அதன் அசல் கெடாத வண்ணம் இக்கோயிலை புணரமைப்பு
> செய்துள்ளனர். ஜெர்மனி பல்கலைக்கழகங்களில் கட்டிடக்கலை துறையில்
> கட்டிடக்கலை புணரமைப்புக்கு இந்த ஆலயமும் எடுத்துக் காட்டாக
> அமைந்திருப்பதாக ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழக மாணவி ஒருவர் ஒருமுறை
> கூறியிருந்தார்.
>
> இந்தச் சுட்டியில் கொலோன் கேத்திட்ரல் தொடர்பான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
> http://en.wikipedia.org/wiki/Cologne_Cathedral
> கண்ணன் குறிப்பிட்டிருப்பது போல எப்படி பூ என் கையில் வந்தது என்பது
> ஆச்சரியம் தான்..:-)
>
> -சுபா
> 2010/8/14 N. Kannan>
> 2010/8/14 Innamburan Innamburan
>>:

Subashini Tremmel

unread,
Aug 14, 2010, 6:49:37 AM8/14/10
to mint...@googlegroups.com


2010/8/14 Sri Sritharan <ksth...@hotmail.com>


புணரமைப்பு அல்ல புனரமைப்பு:)
 
திருத்தம் குறிப்பிட்டமைக்கு நன்றி சிறீதரன். சில வேளைகளில் அறியாமலேயே தவறாக ன/ண குழப்பம் நிகழ்ந்து விடுகின்றது.  
 
ஹிட்டுக்களைக் குறைப்பதற்காக மீண்டும்.. புனரமைப்பு...:-)
 
-சுபா
 

Innamburan Innamburan

unread,
Aug 14, 2010, 7:50:05 AM8/14/10
to mint...@googlegroups.com
திரு சிறீதரன்,

'விக்கிபீடியாவிடம் ஒரு முறை விசாரிப்பதும், என் வழக்கம்.' என்று தான் சொன்னேன். இணையத்தேடலில் சுதாரித்து இயங்குவது என் வழக்கம். விக்கிபீடியாவிலும் பார்ப்பேன். அத்துடன் நின்று விடுவதில்லை. என் அனுபவத்தையும், கருத்தையும், மொழியாக்கத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் கடின உழைப்பைப் பார்க்கிறேன். 
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்


2010/8/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>


Innamburan Innamburan

unread,
Aug 15, 2010, 6:52:21 PM8/15/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
ஆகஸ்ட் 15, 1947: இந்தியா விடுதலை அடைந்த தினம். 'இன்றைய தினம் ஸ்பெஷல் எடிஷன்' பார்க்கவும்.

ஆகஸ்ட் 16, 1858:

மகாராணி விக்டோரியா, அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் புக்கனனுக்கு, உலகின் முதல் தந்தி அனுப்பினார். மேல் விவரங்கள், பிறகு, ஏற்புடைய வகையில்.


ஆகஸ்ட் 16, 1930:

ஃபிடில்ஸ்டிக்ஸ் என்ற அருமையான அனிமேட்டட் கார்ட்டூன் பிறந்த தினம். முதல் கார்ட்டூன், இணைப்பில்.
  

ஆகஸ்ட் 16, 1977 :

உலக புகழ் வாய்ந்த இசை மன்னர் எல்விஸ் ப்ரெஸ்லி மறைந்தார். இன்றும் மங்கையர் மயங்குகின்றனர்.

ஆகஸ்ட் 16, 2003 :


‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ ஒரு நன்மகளே என்றளவுக்கு, ஆயிர்க்கணக்கான மக்களை கொன்று குவித்து, உகண்டாவில் எட்டு வருடங்கள் கொடுங்கோல் ஆட்சி செய்த இடி அமீன் என்ற கிறுக்கன் [ஐந்து மனைவிகள், ‘பிக் டாடி’, ஸீ.பீ.ஈ என்ற சுயவிருதுகள், விக்டோரியா க்ராஸ் மெடல்!!!!], தான் புகலிடம் தேடி வசித்த செளதி அரேபியாவில், இறந்தான். அளவு கடந்த அட்டூழியமே, அவனது ட் ரேட் மார்க். பல இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்ட இந்திய வணிகர்கள், எல்லாம் இழந்து, தலை தெறிக்க ஓடினர். ஆங்கிலேய பாஸ்போர்ட் வைத்தவர்களுக்கு மட்டும் இங்கிலாந்து புகலிடம் கொடுத்தது. பெரும்பாலோர் குஜராத்திகள். விரைவில் வந்தவிடத்திலும், பலர் செல்வந்தர்கள் ஆனார்கள். சிலரிடம் பேசி இருக்கிறேன். தங்களுக்கு தாங்களே புனர்வாழ்வு கொடுத்துக்கொண்டு வாழ்ந்த அவர்கள், சுயநம்பிக்கை ஆற்றலுக்கு முன் உதாரணம். இடி அமீனை பற்றி அவர்கள் சொல்வதைக் கேட்டால் குலை நடுங்கும். கொடுங்கோலர் வரலாறு  என்று பார்த்தால், அவர்களால், லக்ஷக்கணக்கான மக்களை கொலைகாரர்களாக ஆக்கமுடியும் என்பது திண்ணம். எனவே, என்ன தான் இருந்தாலும், மக்களுக்குக்காக, மக்களால், மக்களாட்சி எக்காலமும் சிறந்ததே.

இன்னம்பூரான்

"தாயோ, தந்தையோ அல்லது எந்த ஒரு உறவினரோ, சீரிய வழியில் அழைத்து செல்லும் மனதைப் போல உதவ முடியாது" [தம்மபாதம் 43]


பி.கு. எல்லா தேதிகளும் எனக்கு நெட்டுரு அல்ல. பல இடங்களில் தேடியும் எழுதுகிறேன். இணைய தளமே, உனக்கு ஒரு கும்பிடு. நூல்களே உமக்கு ஒரு கும்பிடு. என் நினைவாற்றலை இன்று வரை பறிக்காத சாமியே! உனக்கு நெடுஞ்சாங்கிடை தெண்டன்.

மின் தமிழர்களே! நீங்களும் கூடி, இதை மேன்மை படுத்த இயலும்.

2010/8/14 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
Fiddlesticks.pages

Innamburan Innamburan

unread,
Aug 16, 2010, 8:14:54 PM8/16/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஆகஸ்ட் 17, 1945


Proklamasi!  என்ற சொல், இந்தோனேஷியாவின் தாரக மந்திரம். 

Kami, bangsa Indonesia, dengan ini menjatakan kemerdekaan Indonesia.

Hal-hal jang mengenai pemindahan kekoeasaan d.l.l., diselenggarakan dengan tjara saksama dan dalam tempo jang sesingkat-singkatnja.

Djakarta, hari 17 boelan 8 tahoen 05

Atas nama bangsa Indonesia

<<tanda tangan Soekarno/Hatta>>

Soekarno - Hatta”


{PROCLAMATION}

WE THE PEOPLE OF INDONESIA HEREBY DECLARE THE INDEPENDENCE OF
INDONESIA. MATTERS WHICH CONCERN THE TRANSFER OF POWER AND
OTHER THINGS WILL BE EXECUTED BY CAREFUL MEANS AND IN THE
SHORTEST POSSIBLE TIME.

DJAKARTA, 17 AUGUST 1945

IN THE NAME OF THE PEOPLE OF INDONESIA

SOEKARNO—HATTA}


[இணைக்கப்பட்டுள்ளது. காப்புரிமை விலக்கிக்கொள்ளப்பட்டது]

டச்சுக்காரர்களின் கலோனிய ஆட்சியை எதிர்த்து, ராஜதந்தரமும், வன்முறையும் கலந்த புரட்சி எழுந்த நாள். விடுதலை கிடைக்க நான்கு வருடங்கள் பிடித்தன. 2005ம் வருடம், டச்சு அரசே, இந்த நாளை, இந்தோனேஷியாவின் சுதந்திரநாள் என அறிவித்தது. இந்தோனேஷியாவின் முதல் ஜனாதிபதி ஸுகர்ணோ அவர்களுக்கு, பெயர், வடமொழியில்! அந்த அளவுக்கு, இந்தியாவின் தாக்கம். சுதந்திர போராட்டத்தின் போது, சுகர்ணோ அவர்கள், தப்பி ஓட வேண்டிருந்தது, ஒரு தனி விமானத்தில். மறைமுக உதவி, நேரு. விமான ஓட்டி, பிஜூ பட்னாய்க். [பிற்கால முதல்வர், ஒரிஸ்ஸா.]


ஆகஸ்ட் 17, 1947:

சர்ச்சைக்குரிய, ராட்க்லிஃப் தீர்வு, அள்ளித்தெளித்த கோலமாக, இந்தியா - பாகிஸ்தான் எல்லை வகுத்தது, மேற்கு திசையில். அதன் பலனை இன்றும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். 


ஆகஸ்ட் 17, 1982:

ஜெர்மனியில் வெளிவந்தது, முதல் சீ.டீ.

இன்னம்பூரான்


“ ஞானம் நாடும் போது, வன்முறை உதவாது.”

பிரம்மகுமாரி நாட்காட்டி: 17 08 2010


2010/8/16 Innamburan Innamburan <innam...@googlemail.com>
TEKSB.JPG - Wikipedia, the free encyclopedia.webarchive

Subashini Tremmel

unread,
Aug 17, 2010, 3:04:08 AM8/17/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
மலாய் மொழிதான் இந்தோனியா மலேசியா இரண்டுக்கும் பொதுவான தேசிய மொழி. இருப்பினும் எழுத்திலும், உச்சரிப்பிலும் சில தெளிவான வித்தியாசங்களைக் காண முடியும். உதாரணமாகக் கீழுள்ள பத்தியில் உள்ள ஒரு சில சொற்கள் மலேசிய மலாய் மொழியில் எப்படி எழுதப்படும் என்று கீழே வர்ணத்தில் குறித்திருக்கின்றேன். பாருங்கள்.

 
2010/8/17 Innamburan Innamburan <innam...@googlemail.com>

ஆகஸ்ட் 17, 1945


Proklamasi!  என்ற சொல், இந்தோனேஷியாவின் தாரக மந்திரம். 

Kami, bangsa Indonesia, dengan ini menjatakan kemerdekaan Indonesia.

Hal-hal jang  (yang) mengenai pemindahan kekoeasaan (kekuasaan) d.l.l., diselenggarakan dengan tjara (cara) saksama dan dalam tempo jang  (yang) sesingkat-singkatnja (singkatnya).

Djakarta, hari 17 boelan (bulan) 8 tahoen (tahun) 05

அன்புடன்
சுபா
 
 
 

Atas nama bangsa Indonesia

<<tanda tangan Soekarno/Hatta>>

Soekarno - Hatta”


{PROCLAMATION}

WE THE PEOPLE OF INDONESIA HEREBY DECLARE THE INDEPENDENCE OF
INDONESIA. MATTERS WHICH CONCERN THE TRANSFER OF POWER AND
OTHER THINGS WILL BE EXECUTED BY CAREFUL MEANS AND IN THE
SHORTEST POSSIBLE TIME.

DJAKARTA, 17 AUGUST 1945

IN THE NAME OF THE PEOPLE OF INDONESIA

SOEKARNO—HATTA}


[இணைக்கப்பட்டுள்ளது. காப்புரிமை விலக்கிக்கொள்ளப்பட்டது]

டச்சுக்காரர்களின் கலோனிய ஆட்சியை எதிர்த்து, ராஜதந்தரமும், வன்முறையும் கலந்த புரட்சி எழுந்த நாள். விடுதலை கிடைக்க நான்கு வருடங்கள் பிடித்தன. 2005ம் வருடம், டச்சு அரசே, இந்த நாளை, இந்தோனேஷியாவின் சுதந்திரநாள் என அறிவித்தது. இந்தோனேஷியாவின் முதல் ஜனாதிபதி ஸுகர்ணோ அவர்களுக்கு, பெயர், வடமொழியில்! அந்த அளவுக்கு, இந்தியாவின் தாக்கம். சுதந்திர போராட்டத்தின் போது, சுகர்ணோ அவர்கள், தப்பி ஓட வேண்டிருந்தது, ஒரு தனி விமானத்தில். மறைமுக உதவி, நேரு. விமான ஓட்டி, பிஜூ பட்னாய்க். [பிற்கால முதல்வர், ஒரிஸ்ஸா.]


ஆகஸ்ட் 17, 1947:

சர்ச்சைக்குரிய, ராட்க்லிஃப் தீர்வு, அள்ளித்தெளித்த கோலமாக, இந்தியா - பாகிஸ்தான் எல்லை வகுத்தது, மேற்கு திசையில். அதன் பலனை இன்றும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். 


ஆகஸ்ட் 17, 1982:

ஜெர்மனியில் வெளிவந்தது, முதல் சீ.டீ.

இன்னம்பூரான்


“ ஞானம் நாடும் போது, வன்முறை உதவாது.”

பிரம்மகுமாரி நாட்காட்டி: 17 08 2010


2010/8/16 Innamburan Innamburan <innam...@googlemail.com>

ஆகஸ்ட் 15, 1947: இந்தியா விடுதலை அடைந்த தினம். 'இன்றைய தினம் ஸ்பெஷல் எடிஷன்' பார்க்கவும்.

karthi

unread,
Aug 17, 2010, 3:27:15 AM8/17/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
சுபா,
 
இது இந்தோனேசிய மொழியின் பழைய வடிவம்.
இப்போது பல எழுத்துக்கூட்டல்களை அவர்கள் சீர்திருத்தம்
செய்திருக்கிறார்கள். மலாயும் இந்தோனேசியனும் கிட்டத்தட்ட
ஒரே மாதிரி எழுத்துக்கூட்டல் முறையையே பயன்படுத்துகின்றன.
 
Jang இன்று yang என்றே இந்தோவிலும் எழுதப்படுகிறது.
 
ரெ.கா.

Subashini Tremmel

unread,
Aug 17, 2010, 3:59:09 AM8/17/10
to mint...@googlegroups.com
அப்படியென்றால் இந்தோனிசிய மலாயும் இனி வாசிப்பதற்கு சுலபமாக இருக்கும். ஆனால் பேச்சின் ஒலியில் இன்னமும் வித்தியாசம் இருக்கும் என்று தான் நினைக்கின்றேன்.
-சுபா

2010/8/17 karthi <karth...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Aug 17, 2010, 4:19:22 AM8/17/10
to mint...@googlegroups.com
நன்றி, இருவருக்கும். இப்படி மேலதிக விவர்ங்கள் வந்தால், நலமே.
இன்னம்பூரான்

2010/8/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Aug 17, 2010, 9:19:08 PM8/17/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஆகஸ்ட் 18, 1920 :


பெண்பாலோருக்கு உரிமைகள் கொடுப்பது என்றால், ஆண்பாலோர்களில் பலருக்கு ஒவ்வாமை. அவர்கள் தான் முழநீளம் பேசுவார்கள், இல்லறத்தில் இற்செறிக்கப்பட்டதால். இந்தியாவில் பெண்ணியம் தலையெடுத்தது, வங்காளத்தில், ராஜா ராம் மோஹன் ராய். சென்னை மாகாணத்தில், ஜி.சுப்ரமண்ய அய்யர். இன்று வரை, நாடாளுமன்றத்தில், பெண்பாலோருக்கு அதிக இடம் கொடுப்பது பற்றி இழுபறி. மேதகு (!) அமெரிக்காவில், பெண்பாலோருக்கு வாக்குரிமை 1920 வரை இல்லை. இரண்டு வருட இழுபறிக்குப்பின், அதுவும்:


சாஸனம் கீழே. [காப்புரிமை கிடையாது]

pastedGraphic.pdf

pastedGraphic.pdf



ஆகஸ்ட் 18, 1997 :


77 வருடங்கள் கடந்த பின் ஒரு பெண்ணால், விர்ஜீனியா ராணுவ கல்லூரியில் இடம் பிடிக்க முடிந்தது. இந்தியா பரவாயில்லை எனலாம்.


“சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் மனிதன் சோம்பேறியல்ல. உழைப்பு புலன் படலாம், படாமலும் இருக்கலாம்.”

- விக்டர்   ஹ்யூகோ  

இன்னம்பூரான்


2010/8/17 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Aug 18, 2010, 6:47:37 PM8/18/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan


ஆகஸ்ட் 19, 1934 :


‘சிறு துளி பெருவெள்ளம்’. அன்னை காவேரியின் பிரவாகமாக பயணித்து, ஸர் ஹென்றி காட்டான் அமைத்த தஞ்சை டெல்டாவில் பாய்ந்து, வாடிய பயிர்களை உயிர்ப்பிக்கலாம். அல்லது சங்கமம் பிரவேசித்து சுனாமியாக ஆவேசம் கொண்டு, மூரி நிமிந்து, முழங்கி புறப்பட்டு பாழ் படுத்தலாம், மக்கள் சக்தி கொடுங்கோலர்களை ஆதரித்தது போல. இன்றைய தினம் வன்முறை பிரசாரத்தினால் மதி இழந்தோ அல்லது அரசியல் வஞ்சகத்தாலோ. ஜெர்மானியர் ஹிட்லரை சர்வாதிகாரியாக தேர்ந்தெடுத்தார்கள் - உலகப்போர், சர்வநாசம், பல்லாயிரமக்கள் சாவு. ஆனால், ஜெர்மனி நாடு புத்துயிர் பெற்று, கிழக்கும், மேற்கும் இணைந்து, தற்காலம் வளமுடன் வாழ்கிறது. அதுவும் மக்கள் சக்தி தான். அன்று ந்யூ யார்க் டைம்ஸ் கொடுத்தக் கணக்கு:45 மிலியன் வாக்காளர்களில், 43,438,378 பேர்கள் வாக்களிக்க, 38,279,514 பேர்கள் ‘ஆமாம்’ போட்டாலும், மனசாட்சியை மதித்து, 4, 287, 808 பேர்கள் ‘இல்லை’ என்றார்கள்.871,056 வாக்குக்கள் செல்லுபடி ஆகாமல் செய்யப்பட்டன. எந்த அளவுக்கு, ஆளுமை படைத்தவர்கள் மக்களை ஆட்டிப்படைக்கமுடியும் என்பதை சுட்டவே, துல்லிய கணக்கு. நமக்கும் ஒரு படிப்பினை.


ஆகஸ்ட் 19, 1989 :


55 வருடங்கள் கடந்த பிறகே, இதே தினத்தில், கிழக்கும், மேற்கும் இணையத் தொடங்கி, ஜெர்மனிக்கு நல்லகாலம் பிறந்தது.


“ ஆளும் சக்தியை தீ என்க. அருகில் சென்றால் பொசுக்கும்; முற்றும் விலகினால், உறைந்து போவீர்கள்.”  - டயோஜினஸ்: கிரேக்க ஞானி [412 கி.மு.? - 323 கி.மு.]


இன்னம்பூரான்


2010/8/18 Innamburan Innamburan <innam...@googlemail.com>

ஆகஸ்ட் 18, 1920 :






N. Kannan

unread,
Aug 19, 2010, 8:21:08 AM8/19/10
to mint...@googlegroups.com
2010/8/19 Innamburan Innamburan <innam...@googlemail.com>

> ஆகஸ்ட் 19, 1989 :
>
> 55 வருடங்கள் கடந்த பிறகே, இதே தினத்தில், கிழக்கும், மேற்கும் இணையத் தொடங்கி, ஜெர்மனிக்கு >நல்லகாலம் பிறந்தது.

விட்டுப்போன சேதி. நான் ஜெர்மனி போனதினால்தான் இரண்டும் சேர்ந்தது.
கார்பசேவ் எல்லோருக்கும் தெரியும். என்னைத் தெரியுமோ? :-))

நான் ஜெர்மனியில் வேலைக்குச் சேர்ந்தது ஜூன். ஆகஸ்டில் கிழக்கும்,
மேற்கும் சேர்ந்துவிட்டது. அங்கு போய், நம் கணக்கிற்கு சுவரை
இடித்துவிட்டு வந்தேன்! ;-)

க.>

pathykv

unread,
Aug 19, 2010, 9:03:02 AM8/19/10
to மின்தமிழ்
'aDa!'
Pathy

On 19 Aug, 17:21, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2010/8/19 Innamburan Innamburan <innambu...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Aug 19, 2010, 11:14:40 AM8/19/10
to mint...@googlegroups.com
கார்ப்பச்சேவ் வருவாரே! போவாரே!


2010/8/19 pathykv <pat...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Aug 19, 2010, 11:22:20 AM8/19/10
to mint...@googlegroups.com
தரிசித்தேனே என்பதற்கு தரிசனமே கிடைக்கவில்லையே.
‘வந்தாய் போலே வாராதாய்’
:--))

 

Innamburan Innamburan

unread,
Aug 19, 2010, 11:27:23 AM8/19/10
to mint...@googlegroups.com
குறிப்பால் உணர்த்திவிட்டீர்கள். காத்திருந்தேன்.
இன்னம்பூரான்


2010/8/19 srirangammohanarangan v <ranga...@gmail.com>
03D.gif

Innamburan Innamburan

unread,
Aug 19, 2010, 7:22:40 PM8/19/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஆகஸ்ட் 20, 1858 :

விஞ்ஞான உலகில் புரட்சிகரமான வரவு சார்லஸ் டார்வின்னின் உயிரினத்தோற்றத்தை/ வளர்ச்சியை பற்றி , ‘survival of the fittest’ கொள்கை, பல ஆண்டுகள் ஆய்வு செய்த பின். ஒவ்வாரு இனமும், தன்னுள் போட்டியிட்டு, அதில் பிழைத்தெழுந்தவர்கள் மட்டுமே இனம் பெருக்க இயலும் என்பது அந்த கோட்பாடு. அதே வருடம், ஆல்ஃப்ரெட் வாலேஸ் என்பவரும், அதே கோட்பாட்டை, சற்றே மாற்றிக் கூறினார், விதவிதமான இனங்களின் மேல், சூழலின் தாக்கத்திற்கு அழூத்தும் கொடுத்து.


ஆகஸ்ட் 20, 1940 :

ஆளுமைத்திறனில் நிகரற்றவரான இங்கிலாந்த்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அந்த நாட்டு விமானப்படையை புகழ்ந்து இன்றைய தினம் கூறிய வசனம், இன்றைய மேற்க்கோள். அந்த விமானப்படையின் அருமை, பெருமைகளை அறிய எனக்கு ஒரு நேரடி வாய்ப்பு கிடைத்தது. இந்திய விமானப்படையை தயார் செய்ததிலும், மரபுகளை அளித்ததிலும், அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு.


ஆகஸ்ட் 20, 1991: 

'மூன்று நாள் சூழ்ச்சி' ஸோவியட் ரஷ்யாவில் - ஆகஸ்ட் 19, 20, 21.- ஆகஸ்ட் 20 முக்யதினம். புரட்சி ‘தோல்வியுற்று’ போனாலும், சோவியட் ரஷ்யாவும், கம்பூனீஸமும் அழிவதற்கு, வித்திட்டது. ஆட்சியில் இருந்த கார்ப்பச்சோவ்வும் இறங்கிப்போய்விட்டதற்கு வைழி வகுத்ததது, இந்த புரட்சித்தனமான சூழ்ச்சி.


ஆகஸ்ட் 20, 2010


வரலக்ஷ்மி விரதம்.

விரிவான தகவல் உபயம்: திருமதி. ஸ்வர்ணலக்ஷ்மி.




“ ‘மானிட இனத்தின் அமர்க்களம்’ என்பதின் வரலாற்றில் என்றும் காணாத வகையில், மிக சிறுபான்மையோருக்கு (ஆர்.ஏ.ஃப்.) மிக அதிக பெரும்பாலோர் கடன் பட்டுள்ளனர்.”

வின்ஸ்டன் சர்ச்சில்

இன்னம்பூரான்

2010/8/19 Innamburan Innamburan <innam...@googlemail.com>


ஆகஸ்ட் 19, 1934 :





Innamburan Innamburan

unread,
Aug 19, 2010, 9:44:58 PM8/19/10
to mint...@googlegroups.com
ஆகஸ்ட் 19, 1887:

விட்டுப்போனதை, மரியாதையுடன், உரைப்பது தான் பண்பு.

தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் பிறந்த நாள். சட்டசபையில் ஆங்கிலேய
உறுப்பினர்கள் பயந்த இந்தியர் களில், ஸர் அஷுடோஷ் முகர்ஜியும்,
சத்யமூர்த்தியும் அடங்குவர். பெருந்தலைவர் காமராஜின் ஆசான்.
நாட்டுப்பற்று மிகுந்தவர். சென்னை மேயராக இருந்தபோது, தீர்க்கதரிசியாக,
பூண்டி நீர்த்தேக்கம் நிறுவியவர். தேவதாசி வழக்கத்தை ஒழிக்கவேண்டும் என
டா. முத்துலக்ஷ்மி ரெட்டி கொணர்ந்த தீர்மானத்தை, கர்நாடக பண்பு தன்னை
விட்டு விலகாததால், எதிர்த்து வாங்கிக்கட்டிக்கொண்டார். ஒரு ஆசைகள்
நிறைவேறாமல், மறைந்த மாமனிதன். 1. இந்தியாவின் விடுதலை; 2.அருமை பெண்
லக்ஷ்மியின் திருமணம். திருமதி.லக்ஷ்மி தான் வாசகர் வட்டம் நிறுவியவர்.
பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு பயிற்சி அளித்தார். திரு.நரசய்யா சமீபத்தில்
மறைந்த இவரை, என்னை விட நன்கு அறிந்தவர்.


இன்னம்பூரான்


2010/8/20 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
> ஆகஸ்ட் 20, 1858 :

Innamburan Innamburan

unread,
Aug 20, 2010, 7:27:40 PM8/20/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
ஆகஸ்ட் 21, 1940 :

சோவியட் ரஷ்யாவின் சர்வாதிகாரி லெனினுடன் கருத்து வேற்றுமையால் புலன் பெயர்ந்து மெக்சிகோவில் வசித்த கம்யூனிசத்தின் தலைமாந்தரில் ஒருவரான ட்ராட்ஸ்கி, ஒரு சூழ்ச்சிக்காரனால் கொல்லப்பட்டார். இன்றளவும் சில விசிறிகளைக் கொண்ட அவர் தப்பியிருந்தால், கம்யூனிசத்தின் போக்கு மாறியிருந்து இருக்கலாம்.

ஆகஸ்ட் 21, 1959 :


1893ல் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட ஹவாய், அமெரிக்கவின் 50 வந்த் மாநிலமாக, அதிபர் ஐஸன்ஹோவரால் பிரகடனம்.



ஆகஸ்ட் 21, 1995 :

உலகப்புகழும், நோபெல் பரிசும் பெற்ற வான் மண்டல விஞ்ஞானி டா. எஸ். சந்திரசேகர் மறைந்தார். அவருடைய தந்தை திரு. சி.எஸ். அய்யர் அக்கவுண்டட் ஜெனெரலாக பணியாற்றினார். இசை ஞானத்தில் வல்லுனர். ஒரு சமயம் அவருக்கும், அக்கால வெள்ளைய ஆடிட்டர் ஜெனரலுக்கும் ( பேடினாஹ்க் என்று ஞாபகம்) வாக்குவாதம் வலுத்தது. ‘என் தம்பி ஒரு நோபல், என் மகன் ஒரு நோபல் வாங்கப்போகிறவன். நீயும், உன் வேலையும் ஆச்சு’ என்றாராம். அவ்ர் சொல்ல மறந்தது, என் தம்பி ஸர்.சி.வி.ராமன் கூட அஸிஸ்டெண்ட் அக்கவுண்டட் ஜெனரலாக இருந்தவன் தான், என்பது.

ஆகஸ்ட் 21, 2006 :
ஷெனாய் வித்துவான் உஸ்தாத் பிஸ்மில்லா கான் மறைந்தார். 1916ல் பிறந்தவர். உலகளவில் அவரது புகழ் பாடப்படுகிறது. துல்லியமான வாசிப்பு. எப்போதும் ஒரு புன்சிரிப்பு. சிறிய வயதி அவர் ஷெனாய் வாசிக்கத் தொடங்கியது, கிருஷ்ணன் கோயிலில்.

நான் பேசுவது உண்மை. முடிந்த அளவு, துணிவுடன். வயது கூட, கூட, துணிவும் கூடுகிறது”
மைக்கேல் டெ  மான் டேய்க்ன் (1533 - 1592)


பி.கு. நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த தினம்; 20 08 1944. சந்தர்ப்ப வசமாக அரசியலுக்கு வந்த அந்த விமானஓட்டி சென்னை அருகே 21 05 1991 அன்று பயங்கரமாக கொலையுண்டார். நான் டில்லியில் இறுதி மரியாதை செலுத்த சென்றபோது, சோகமே உருவாக ராஹுல் காந்தி அமர்ந்திருந்த கோலம் இன்று கூட கண்முன் நிழலாடுகிறது.

இன்னம்பூரான்


2010/8/20 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
> ஆகஸ்ட் 19, 1887:

N. Kannan

unread,
Aug 20, 2010, 10:04:00 PM8/20/10
to mint...@googlegroups.com
2010/8/21 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

> பி.கு. நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த தினம்; 20 08 1944.
> சந்தர்ப்ப வசமாக அரசியலுக்கு வந்த அந்த விமானஓட்டி சென்னை அருகே 21 05 1991
> அன்று பயங்கரமாக கொலையுண்டார். நான் டில்லியில் இறுதி மரியாதை செலுத்த
> சென்றபோது, சோகமே உருவாக ராஹுல் காந்தி அமர்ந்திருந்த கோலம் இன்று கூட கண்முன்
> நிழலாடுகிறது.
>

அந்த வன்முறை கிளப்பிய பயம். இன்றளவும் தமிழகத்தில் நிழலாடுகிறது.
செம்மொழி மாநாட்டின் போது அது பூதாகார வடிவெடுத்து எல்லோரையும்
சிரமத்தில் ஆழ்த்தியது. தமிழ் மண்ணில் வன்முறைக் கலாச்சாரத்தின் வித்து
அந்நிகழ்வு.

க.>

Innamburan Innamburan

unread,
Aug 21, 2010, 6:55:20 PM8/21/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஆகஸ்ட் 22, 1631 :


சென்னை மாநகரம் பிறந்த நாள். நாயக்கமன்னர்களிடம் துண்டு நிலம் வாங்கிய ப்ரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனி, வாமன அவதாரம் போல, நம் தலையிலேயே கை வைத்தது. மேலதிக விவரங்களுக்கு, மின் தமிழர் திரு. நரசய்யாவின் ‘மதராச பட்டினம்’ படிக்கவும். அப்பெயரை கொண்ட சினிமாக்கதை எடுத்த கதை வேறு.


ஆகஸ்ட் 22, 1904 :


1977லிருந்து தன் மறைவு வரை 27 ஆண்டுகள் சைனா மீது ஆதிக்கம் செலுத்தி, சீர்த்திருத்தங்களை கொணர்ந்த சீன பெரும்தலைவர் டெங் க்ஸ்யாபிங்க் (உச்சரிப்பு மாறலாம், சைனாவிலேயே!) பிறந்த தினம்.


ஆகஸ்ட் 22, 1971 :


அமெரிக்காவின் உளவுத்துறையின் (எஃப்.பீ. ஐ) தலைவர் எட்கர் ஹூவர் பழி வாங்குவதிலும், வழக்கு ஜோடனை செய்வதிலும் மன்னர். ‘காம்டென் 28’ என்ற குழுவை கைது செய்து வியட்னாம் போரை எதிர்ப்பவர்களை முடக்குவதில் முனைந்தார். 20.05.1973 அன்று, இவரின் ஜோடனை வழக்கு நீதிமன்றத்தால் தூக்கி எறியபட்டது. அமெரிக்காவின் வரலாற்றில், சாக்கோ-வான்செட்டி வழக்கைப்போல இது ஒரு கரும்புள்ளி.


ஆகஸ்ட் 22, 1978 :


கென்யாவின் தந்தை எனப்புகழப்படும் ஜோமோ கென்யாட்டா தமது 89 வது வயதில், 

உறக்கத்திலேயே மறைந்தார். உலகளவில் போற்றப்பட்டவர், நேருவைப் போல. அவரது ஆட்சியில் கென்யா கொழித்தது -1963 - 1978.


ஆகஸ்ட் 22, 1996 :

அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டன், மிகவும் சர்ச்சைக்குள்ளான ‘மக்கள் நல” சட்டத்தை (The Personal Responsibility and Work Opportunity Reconciliation Act of 1996 (PRWORA, Pub.L. 104-193, 110 Stat.) கொணர்ந்தார்.


“ பூனை கருப்பா இருந்தா என்ன? வெளுப்பா இருந்தா என்ன? எலியை பிடித்தால் சரி.

 -டெங் க்ஸ்யாபிங்க்

இன்னம்பூரான்


2010/8/21 N. Kannan <navan...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Aug 22, 2010, 5:25:48 PM8/22/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஆகஸ்ட் 23, 1914:


ஜப்பான் ஜெர்மனி மேல் போர் தொடுத்து, சைனாவின் க்யிங்க்டோ பகுதி மேல் குண்டு விசியது.


ஆகஸ்ட் 23, 1926:


காதல் மன்னன் ருடால்ஃப் வாலண்டினோ தனது 31வது வயதில் இறந்தான். ஆயிரக்கணக்கான பெண்கள் மனம் கலங்கினர்.


ஆகஸ்ட் 23, 1927:


நேற்று தற்செயலாகச் குறிப்பிடப்பட்ட ஃபெர்டினாண்டோ நிக்கொலொ ஸாக்கோவும், பார்தலோமியோ வான்செட்டியும், சர்ச்சைக்கு உட்பட்ட வழக்கு விசாரணைக்குப் பிறகு, இத்தினம், மரணதண்டனையால் மின்சாரம் பாய்ச்சப்பட்டு உயிர் துறந்தனர், அமெரிக்காவில். கடைசி வரை அவர்கள் தாங்கள் நிரபராதி என்று வாதாடியும் பயனில்லை. செலஸ்டினோ.எஃப்.மடிரோய்ஸ் என்பவன் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டபோதிலும், பயனில்லை. அவனும் அன்றே, அங்கேயே, வேறு ஒரு கொலைக்குற்றத்திற்காக, மரணதண்டனையால் மின்சாரம் பாய்ச்சப்பட்டு உயிர் துறந்தான். வான்செட்டி, சிறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து, தனக்கு தீங்கு இழைத்தவர்கள்ஐ மன்னித்ததாகக் கூறினான். இந்த நிகழ்வு, சாக்ரட்டீஸ்சின் மரண தண்டனை போல உருக்கமான நிகழ்வு என்று சொல்வதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை. என் சிறுவயதில், இந்த வழக்கைப் பற்றிய புத்தகம் படித்தது நினைவில் இருக்கிறது.


“ மனிதர்கள் யாவரும் - அமெரிக்கனோ, ரஷ்யனோ, சைனாக்காரனோ, பிர்ட்டீக்காரனோ, மலாய்க்கரோ, இந்தியனோ, ஆஃப்பிரிக்கனோ - அவரவது நாட்டு ஆளுமையை கடந்து சென்ரு, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது அவர்களின் கடமை.” (நார்மன் கஸின்ஸ்  -எழுத்தாளர், இதழாசிரியர், நிருபர், பேராசிரியர்.[1915-1990]


இன்னம்பூரான்


2010/8/22 Innamburan Innamburan <innam...@googlemail.com>

ஆகஸ்ட் 22, 1631 :



Innamburan Innamburan

unread,
Aug 23, 2010, 8:29:39 PM8/23/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஆகஸ்ட் 24, 1200 :

     இங்கிலாந்தின் ‘தீய’ ஜான் என்ற மன்னன், பிரபுக்களின் கட்டாயத்தினால், முதல் ‘மாக்னா கார்ட்டா’ என்ற அரசியல் சாஸனத்தை பிரகடனம் செய்து விட்டு, போப்பாண்டவரை அதை ரத்து செய்யக்கோரி ‘புண்னியம்’ கட்டிக்கொண்டான். போப்பாண்டவரும் ஒத்து ஊதினார், 15 வருடம் கழித்து.

ஆகஸ்ட் 24, 1591 :

     ஆல்புகர்க் என்ற போர்த்துகீசியன் மலாக்காவை கைப்பற்றினான்.

ஆகஸ்ட் 24, 1608 :

     சூரத் துறைமுக நகரில் ஆங்கிலேயர் வந்து குந்தினர்.

ஆகஸ்ட் 24, 1690 :

     கல்கத்தவின் ஜன்ம தினம்.

ஆகஸ்ட் 24, 1759 :

     ஆஃப்பிரிக்க அடிமைகளை விற்கும் கொடுமையை எதிர்த்த வில்லியம் வில்பெர்ஃபோர்ஸ்ஸின் ஜன்ம தினம்

ஆகஸ்ட் 24, 1857 :

     அமெரிக்காவின் முதல் பொருளாதார வீழ்ச்சி.

ஆகஸ்ட் 24, 1891 :

     முதல் சினிமா கேமரா காப்புரிமை பெற்றது: தாமஸ் ஆல்வா எடிஸn.

ஆகஸ்ட் 24, 1954 :

     அமெரிக்காவிn கம்யூனிஸ்ட் கட்சி அம்பேல்!

ஆகஸ்ட் 24, 1995 :

     விண்டோஸ் 95 வருகை.


“ காலை தோறும், ஒவ்வொரு மனிதனும் நீதிக்கு முன்; மாலை தோறும் தீர்வு” - ராய்.எல்.தாம்ப்ஸன்.”


இன்னம்பூரான்


2010/8/23 Innamburan Innamburan <innam...@googlemail.com>

ஆகஸ்ட் 23, 1914:




Innamburan Innamburan

unread,
Aug 24, 2010, 9:10:54 PM8/24/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
ஆகஸ்ட் 25, 1609 :
    கலிலியோ தான் கண்டுபிடித்த முதல் டெலஸ்கோப்பை இயக்கி காண்பித்தார், வெனிஸ் நகரத்தில். மதவாதிகளிடம் இவர் பட்ட பாடு, வரலாறு அறிந்ததே.

ஆகஸ்ட் 25, 1912 :
    சைனாவில் மன்னர் ஆட்சியை தகர்த்த குவோமிண்டாங்க் தேசீயகட்சி பிறந்த தினம். அதை நிறுவிய சன் யாட் சென் மிகவும் மதிக்கபட்ட தலைவர். நேருவின் நண்பரான, அடுத்த தலைவர் சியாங்கே ஷேக் தன்னிச்சையாக செயல்படப்போய், கம்யூனிஸ்ட்டுகள், அவரை தைவானுக்கு துரத்தி விட்டனர்.

ஆகஸ்ட் 25, 1944 :
    இரண்டாவது உலகப்போரில், ஜெர்மானியர்கள், அமெரிக்க/ஃப்ரென்ச் படைகளிடம் சரணடைய, ஃபிரான்ஸின் மாபெரும் தலைவர் ஜெனெரல் டிகால் பாரீஸ் நகரப் பிரவேசம்.

ஆகஸ்ட் 25, 1948 :
     எல்லாநாடுகளின் வரலாற்றில் கரும்புள்ளிகள் உண்டு - இந்தியாவில் எமெர்ஜென்ஸி, சிஅனாவில் டியனாமன் சதுக்க படுகொலை, ஃபிரான்ஸ்ஸில் துரோகம் செய்த விச்சி அரசாங்கம், இங்கிலாந்தின் குடியரசு அரசுமுறைக்கு ‘தீய ஜானின்’ செல்லா அரசியல் சாஸனம்,ஜெர்மனியில் ஹிட்லர், இத்தாலியில் முசோலினி, ஜப்பானில் டோஜோ, ரஷ்யாவில், ரஸ்புடீன்,லெனின், ஸ்டாலின் வகையறா. இன்றைய தினம், அமெரிக்காவின் ‘அமெரிக்காவில் ஊடுருவிய முரண் கொள்கைகளை களைப்போம்’ என்ற பண்பற்ற    அமைப்பு, சட்டத்தை கையிலெடுத்துக்கொண்டு, இரு மனிதர்களை வேட்டையாடியதை (witch hunt) தொலைக்காட்சியில் காண்பித்தார்கள். அந்த கரும்புள்ளியின் ன முக்கிய உறுப்பினர்களில் ஒருவர், ‘வாட்டர்கேட் இகழ்’பின்னாள் அதிபர் நிக்ஸனும் ஒருவர். ஒரு ஆறுதல்: அதிபர் ட்ரூமன் அவர்கள், இந்தத் அமைப்புை தான் அமெரிக்காவின் முரண் என்றார். தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ‘கறுப்பு சதுக்கம்’ ஒன்று உண்டு. இந்த ‘முரணின்’ கட்டப்பஞ்சாயத்தின் பலிகடாக்களி பற்றியது. பார்த்தால், கண்ணீர் பொங்கும்.

ஆகஸ்ட் 25, 2003 :
மும்பையில் வெடிகுண்டு தாக்குதல். 44 மரணம்; 150 படுகாயம்.

“ நீ பேசும் மொழி ஒவ்வொன்றும், உனக்கு புது வாழ்வு அளிக்கிறது.”
- செக்கோஸ்லோவக்கிய பழமொழி


இன்னம்பூரான்


2010/8/24 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
> ஆகஸ்ட் 24, 1200 :


Innamburan Innamburan

unread,
Aug 25, 2010, 7:31:04 PM8/25/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஆகஸ்ட் 26, 1883 :

    தமிழ்காந்தி என்று அறியப்பட்ட தமிழ்த்தென்றல் திருவாளர். திரு.வி.கல்யாணசுந்தரனார் பிறந்த நாள். அவரது ‘வாழ்க்கைக்குறிப்புகள்’ ஒரு கருவூலம். அவரது வரலாற்று நூல் ஒன்று தான் உள்ளது -சாகித்ய அகாடமியின் வேண்டுகோள் படி, அவரின் மாணாக்கர் மு.வ. அவர்களின் சீடர் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்கள் எழுதிய சிறிய நூல். அவர் கோவையில் வாழ்கிறார். மற்றபடி திரு.வி.க. அவர்களைப்பற்றிய மற்ற நூல்கள் அரைத்த மா. சாகித்ய அகாடமி, இந்த நூலை மற்ற மொழிகளில் மொழிப்பெயர்த்திருக்கவேண்டும். தவறிவிட்டார்கள். ஆங்கிலத்தில் அவரின் அரசியல் நோக்கிய வரலாறு வரவேண்டும் என்பது என் அவா. தமிழ்ப்புலவர், சைவசமய சொற்பொழிவாளர், தொழிலாளர் இயக்கத்தலைவர், இதழாசிரியர், மார்க்ஸிஸ்ட், காந்தீயவாதி, அரசியல்வாதி,பெண்ணியவாதி, சீர்திருத்தவாதி, சமரசம் நாடுபவர், எழுத்தாளர். சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் மரபு கட்டளை அவரை போற்றி பதிவுகள் அமைத்தது, நமக்கு பெருமிதம்.


ஆகஸ்ட் 26, 1910 :

     அன்னை தெரசா பிறந்த தினம். அவரது நூற்றாண்டு வருடமிது. சான்றோர்களை தேடிப்போனால், கிடைக்காமல் போகலாம். அவர்க்ளே தேடி வந்தால்! ஒருமுறை சென்னையில், என் மனைவியின் தலையில் கை வைத்து ஆசி அளித்தபோது , அவள் புளகாங்கிதம் அடைந்தாள்.


ஆகஸ்ட் 26, 1920 :

       அமெரிக்காவின் அரசியல் சாஸனம் 19வது தடவையாகத் திருத்தப்பட்டது, பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க. அது வரை பெண்ணினம், அமெரிக்காவில், ஒரு படி கீழ்!


ஆகஸ்ட் 27, 1987 :

      அமெரிக்காவில் ‘911’ அவசர உதவி தொலைபேசி இலக்கம் என்று அறிவிப்பு.


“புவியாளவேண்டும் என்று வாழும்போது பறக்கிறோம்! இறந்தபின், வேண்டப்பட்ட நிலம் மிகக்குறைவு!”

  • மாஸிடோன்    மன்னரும், புவியாள அலைந்த அலெக்ஸாண்டரின் தந்தையும் ஆன   ஃபிலிப் (382 - 336  கி.மு) 


இன்னம்பூரான்


2010/8/25 Innamburan Innamburan <innam...@googlemail.com>



N. Kannan

unread,
Aug 26, 2010, 2:32:54 AM8/26/10
to mint...@googlegroups.com
2010/8/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
>
>      அன்னை தெரசா : ஒருமுறை

> சென்னையில், என் மனைவியின் தலையில் கை வைத்து ஆசி அளித்தபோது , அவள்
> புளகாங்கிதம் அடைந்தாள்.
>

ஆக! அவர் இந்தியராகிவிட்டார். கிறிஸ்தவ வழக்கப்படி தலையைத் தொட்டு
ஆசீர்வதித்தல் இல்லை என்று நம்புகிறேன் ;-)

க.>

Innamburan Innamburan

unread,
Aug 26, 2010, 7:27:45 AM8/26/10
to mint...@googlegroups.com
வசதி என்றும் இருந்திருக்கலாம். சின்ன மாதாக்கோயில். கூட்டம். கொஞ்சம் சலசலப்பு. எல்லை காந்தி அப்துல் கஃபார்கான் என் சிறு மகனை இப்படித்தான் ஆசீர்வதித்தார். நான் பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியில்ல் நாராக கிடந்தபோது, ஃபாதர் ஜாலி இப்படி தான் ஆசி கூறுவார். நான் படுத்து இருந்ததால் வசதியாக இருந்திருக்கலாம்.
இன்னம்பூரான்

2010/8/26 N. Kannan <navan...@gmail.com>

க.>

Innamburan Innamburan

unread,
Aug 26, 2010, 7:58:26 PM8/26/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஆகஸ்ட் 28, 1770 :

     ஜெர்மானிய தத்துவஞானி ஜியார்ஜ் வில்லியம் ஃப்ரெடெரிக் ஹெகெல் மறைந்தார். 

ஆகஸ்ட் 28, 1828 :

     தென் அமெரிக்காவின் உருகுவே நாடு சுதந்திரம் பெற்ற தினம். பிரேசிலும் அர்ஜெண்டினாவும் போட்டுக்கொண்ட போரில், இங்கிலாந்து தலையிட்டு, இதை சாத்தியமாக்கிற்று. விவசாயத்தை நம்பும் இந்த நாடு, செல்வம், வாழ்க்கைத் தரம், நேர்மை ஆகியவகைகளில் ஒரு முன்னோடி.


ஆகஸ்ட் 28, 1859 :

              அமெரிக்காவின் பென்ஸில்வேனியா மானிலத்தில் பெட்ரோலியம் கண்டுபிடிப்பு.

ஆகஸ்ட் 28, 1950 : 

      பீபீஸீயின் தொலைக்காட்சி கடல் கடந்தது.


ஆகஸ்ட் 28, 1957 :

       மலேஷியாவின் அரசியல் சாஸனம் அமல்.

ஆகஸ்ட் 28, 1975 :

      எத்தியோப்பியாவின் 3000 ஆண்டு பாரம்பரிய வம்சாவளியின் கடைசி மாமன்னர் ஹைல் சலீஷி மரணம். முதலில் முசோலினியின் பலிகடா. இங்கிலாந்தில் அடைக்கலம். அவரின்  கண்ணியம் யாவரையும் ஈர்த்தது. பிற்காலம், புரட்சியில் தூக்கி எறியப்பட்டு, வறுமையில். 

ஆகஸ்ட் 28, 1979 :

    இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனெரல் மெளண்ட்பேட்டன் பிரபு குணுவெடிப்புக்கு பலியானார். ராணி எலிசெபெத் திருமணத்துக்கு, அண்ணல் காந்தியின் பரிசு (அவர் நெய்த சிறிய கதர் துண்டுகள்) சுமந்து சென்று, ‘இதை முடி சூட்டும் விழா அணிகலன்களுடன், கோஹினூருடன், பத்திரமாக லண்டன் டவரில் வை’ என்றார்.

ஆகஸ்ட் 28, 1991 :

      மால்டோவா, சோவியட் ரஷ்யாவிடமிருந்த்உ பிரிந்தது.

ஆகஸ்ட் 28, 2008 :

      பாரக் ஒபாமா டெமாக்ரடிக் கட்சியின் சார்பாக, ஜனாதிபதி பதவிக்கு அறிவிக்கப்பட்டார்.


“பேச்சு மனிதனின் மொழி என்றால், இலக்கியம் சமுதாயத்தின் மொழி. 

- லூயி டெ போனால்ட்  (தத்துவ ஞானி, அரசியல்வாதி-1754/1840)

இன்னம்பூரான்


2010/8/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Aug 27, 2010, 8:56:01 AM8/27/10
to mint...@googlegroups.com
திருத்தங்கள்:

ஆகஸ்ட் 27, 1987 அல்ல : ஆகஸ்ட் 26, 1987 :
     அமெரிக்காவில் ‘911’ அவசர உதவி தொலைபேசி இலக்கம் என்று அறிவிப்பு.
ஆகஸ்ட் 28, 1770 அல்ல : ஆகஸ்ட் 28, 1770 :

    ஜெர்மானிய தத்துவஞானி ஜியார்ஜ் வில்லியம் ஃப்ரெடெரிக் ஹெகெல் மறைந்தார்.
ஆகஸ்ட் 28, 1828 அல்ல: ஆகஸ்ட் 27, 1828 :

    தென் அமெரிக்காவின் உருகுவே நாடு சுதந்திரம் பெற்ற தினம். பிரேசிலும் அர்ஜெண்டினாவும் போட்டுக்கொண்ட போரில், இங்கிலாந்து தலையிட்டு, இதை சாத்தியமாக்கிற்று. விவசாயத்தை நம்பும் இந்த நாடு, செல்வம், வாழ்க்கைத் தரம், நேர்மை ஆகியவகைகளில் ஒரு முன்னோடி.

ஆகஸ்ட் 28, 1859 அல்ல: : ஆகஸ்ட் 27, 1828

             அமெரிக்காவின் பென்ஸில்வேனியா மானிலத்தில் பெட் ரோலியம் கண்டுபிடிப்பு.
ஆகஸ்ட் 28, 1950 அல்ல  : ஆகஸ்ட் 27, 1950

     பீபீஸீயின் தொலைக்காட்சி கடல் கடந்தது.

ஆகஸ்ட் 28, 1957 அல்ல : ஆகஸ்ட் 27, 1957

      மலேஷியாவின் அரசியல் சாஸனம் அமல்.
ஆகஸ்ட் 28, 1975 அல்ல : ஆகஸ்ட் 27, 1975

     எத்தியோப்பியாவின் 3000 ஆண்டு பாரம்பரிய வம்சாவளியின் கடைசி மாமன்னர் ஹைல் சலீஷி மரணம். முதலில் முசோலினியின் பலிகடா. இங்கிலாந்தில் அடைக்கலம். அவரின்  கண்ணியம் யாவரையும் ஈர்த்தது. பிற்காலம், புரட்சியில் தூக்கி எறியப்பட்டு, வறுமையில்.
ஆகஸ்ட் 28, 1979 அல்ல :ஆகஸ்ட் 27,1979
   இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனெரல் மெளண்ட்பேட்டன் பிரபு குணுவெடிப்புக்கு பலியானார். ராணி எலிசெபெத் திருமணத்துக்கு, அண்ணல் காந்தியின் பரிசு (அவர் நெய்த சிறிய கதர் துண்டுகள்) சுமந்து சென்று, ‘இதை முடி சூட்டும் விழா அணிகலணங்களுடன், கோஹினூருடன், பத்திரமாக லண்டன் டவரில் வை’ என்றார்.
ஆகஸ்ட் 28, 1991 அல்ல : ஆகஸ்ட் 27,1991
     மால்டோவா, சோவியட் ரஷ்யாவிடமிருந்து பிரிந்தது.
தவற்றுக்கு மன்னிக்கவும்.
இன்னம்பூரான்

2010/8/27 Innamburan Innamburan <innam...@googlemail.com>:


Innamburan Innamburan

unread,
Aug 27, 2010, 7:20:39 PM8/27/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஆகஸ்ட் 28, 1749 :

     பிரபல ஜெர்மானிய எழுத்தாளரும், விஞ்ஞானியும் ஆன ஜோஹாண் ஒல்ஃப்காங் வொன் கதே பிறந்தார்.


ஆகஸ்ட் 28, 1828 :

     பிரபல ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் பிறந்தார். அண்ணல் காந்திக்கு மானஸீக குரு.


ஆகஸ்ட் 28, 1845 :

     அமெரிக்காவின் புகழ் வாய்ந்த ‘அமெரிக்க விஞ்ஞானி’ இதழ் தொடக்கம். அன்று ஒரு பக்கம். இன்று இணைய தளத்திலும்.


ஆகஸ்ட் 28, 1963 &  2008 :


     1963: 

     உலகவரலாற்றில் பொன் எழுத்துக்களில் பதிக்கவேண்டிய தினம். அமெரிக்காவின் இனவெறி ஒழிப்பு தினம். அடிமைகளாக இருந்த கறுப்பு நிற மக்கள் மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்ட தினம். தலைவர் மார்ட்டின் லூதர் கிங் அண்ணல் காந்தி வழி நடந்து, 200,000 நபர்களுடன், ‘என் கனவு யாதெனில்...’ என்ற அமரவாக்குடன் தொடங்கிய போராட்டம், வெள்ளையர் ஆதிக்கத்தை குலைத்தது. அந்த சொற்பொழிவை இங்கே காணலாம்.

http://www.nytimes.com/learning/general/onthisday/big/0828.html#article


       2008:

      பாரக் ஒபாமா என்ற கறுப்பர் டெமாக்ரடிக் கட்சியின் சார்பாக, ஜனாதிபதி பதவிக்கு அறிவிக்கப்பட்டார். முதலில் ‘நிக்கர்’ என்றும், பிறகு ‘நீக்ரோ’ என்றும் இகழப்பட்டு, ‘கறுப்பர்’ என்று இனங்க்காணப்பட்டவர்களை, தற்காலம், ‘ஆஃப்ரோ அமெரிக்கர்’ என்று தான் குறிப்பிடவேண்டும். அமெரிக்காவில் பெரும்பாலும் ஒழிக்கப்பட்ட இனவெறி, இந்தியாவில் இல்லை என்று சொல்ல இயலாது. தற்காலம் சாதி அடிப்படையில் தான் அரசியல், இந்தியாவில். ஒபாமாவின் சிறந்த சொற்பொழிவைக்கேட்க:

http://www.youtube.com/watch?v=Z-m0S1vJCb8


ஆகஸ்ட் 28, 1981:

      ஐட்ஸ்/ஹெச் ஐ வி. பற்றிய முதல் விழிப்புணர்வு ஆவணம் வெளியான தினம்.


“ சந்துஷ்டியும், ஜயமும் இருந்துவிட்டால், சுமுகம் தானாகவே வராதா? என்ன? 

- [மேடம் ஆன்  சொஃபி ஸ்வெட்ச்சின் - ஆன்மீகவாதி 1782 - 1857]


2010/8/27 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Thiruvengada Mani T.K

unread,
Aug 27, 2010, 9:24:18 PM8/27/10
to mint...@googlegroups.com
ஆகஸ்ட் 28, 1770 அல்ல : ஆகஸ்ட் 28, 1770 :   ??????????????
    ஜெர்மானிய தத்துவஞானி ஜியார்ஜ் வில்லியம் ஃப்ரெடெரிக் ஹெகெல் மறைந்தார்.
 

தவற்றுக்கு மன்னிக்கவும்.   !!!!!!
 
 

2010/8/27 Innamburan Innamburan <innam...@googlemail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dr.T.K.Thiruvengada Mani

Innamburan Innamburan

unread,
Aug 28, 2010, 7:47:22 PM8/28/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

29 08 1632

     இங்கிலாந்தின் தத்துவ ஞானி ஜான் லாக் பிறந்த தினம். சமுதாயவியலில், வால்டையர், ஹாப்ஸ், லாக் ஆகிய மூவரும் சோஷல் காண்ட்ராக்ட் கோட்பாட்டின் மூன்று கூற்றுக்களை, அவரவது, அறிவித்து பகழ் அடைந்தவர்கள்.


29 08 1831

     மைக்கேல் ஃபாரடே மின்சாரத்தின் பயனை (induction) கண்டு பிடித்த தினம்.


29 08 1833

     இங்கிலாந்து தன் சாம்ராஜ்யம் முழுவதிலும் அடிமை முறையஒ ஒழித்த தினம்.


29 08 1984

     மன்னராட்சிகள் ஒழியத்தொடங்கிய வரலாற்றில், எகிப்திய மன்னர் ஃபரூக்கை எதிர்த்து, மக்களாட்சியைக் கொணர்ந்த முகம்மது நஜீப் மறைந்த தினம். 


29 08 1986

     இங்கிலாந்தின் இரட்டையர் இருவரின் 100வது பிறந்த தினம்.


“ மனிதனுக்கும் சற்றே உயர்ந்திருக்கும் விலங்கினத்திற்கும் உள்ள வித்தியாசம், படினிலையில், தரத்தில் அல்ல.”

- சார்லஸ் டார்வின்    (1809  - 1882)


இன்னம்பூரான்


2010/8/28 Thiruvengada Mani T.K <tkt...@gmail.com>

Suresh sundaresan

unread,
Aug 29, 2010, 8:20:47 AM8/29/10
to mint...@googlegroups.com
அய்யா
தங்களின் இந்த நாள் பகுதி மிகவும் அருமை
இதை படிபவர்கள் கலெக்டர் தேர்வில் நிச்சியம் வெற்றி அடைவார்கள்
 
இன்னம்புரன் நண்பன்

2010/8/28 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Aug 29, 2010, 8:13:09 PM8/29/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஆகஸ்ட் 30, 1574 :

     குரு ராம்தாஸ் அவர்கள் நான்காவது குருவாக, அந்த குரு பரம்பரையில்.


ஆகஸ்ட் 30, 1918 :

     ஃபேன்னி காப்லான் லெனினை சுட்டு படுகாயப்படுத்தினார். 'சிவப்பு பயங்கரத்தின்' தொடக்கம்.


ஆகஸ்ட் 30, 1941 :

     நாஜிப்படைகள் லெனின் கிராட்டை முற்றுகையிட்டன. 30 மாதம் அது நீடித்தது.


ஆகஸ்ட் 30, 1945 :

     ஜப்பானில் ஜெனெரல் டக்ளஸ் மகார்தர் தலைமையில் அமெரிக்க மேலாண்மை.


ஆகஸ்ட் 30, 1957 :

     கலைவாணர் திரு.என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்தார். விஜயராகவாச்சாரி சாலையில் இருந்த அவரது இல்லத்தில் சென்று இறுதி மரியாதை செலுத்தினேன். அக்காலத்து ஆனந்த விகடனில் வந்த கட்டுரையை 25 08.2010 விகடனின் காலப்பெட்டகத்தில் படித்து பயன் பெறலாம்.


ஆகஸ்ட் 30, 1967 :

    அமெரிக்க உச்சனீதிமன்றத்தின் முதல் ஆப்பிரிக்கன்-அமெரிக்கன் நீதியரசர், தர்கொட் மார்ஷால், நியமனம்.

ஆகஸ்ட் 30, 1990 :

    அமெரிக்க அதிபர் ஜார்ஜ். ஹெச். டபிள்யூ. புஷ் வளைகுடா பிரச்னையிலிருந்து ஒரு புதிய உலக சீர்திருத்தம் வரும் என்றார். என்னே ஆரூடம்! உலக களேபரத்துக்கு சரம் வைக்க, அவரது திருமகனாரும், சர்ச்சைக்குரிய தேர்தலில் பதவிக்கு வந்த அதிபரும், குளறுபடி மன்னனும் ஆன ஜார்ஜ்  புஷ்  வெடி வெடி வைத்தார்.





“சீக்கியர்கள் வைகறையில் எழுந்து இறவனின் நாமத்தை மையமித்து தியானிக்கவேண்டும். ந்ழுந்தவுடன், காலைக்கடன்களை முடித்து, குளித்து, குருத்வாராவின் அமுதக்குளத்தில் நீராடி, ‘ஹர, ஹர‘ என்று ஜெபித்தால், தீயவை, பாவங்கள், வலிகள் எல்லாம் ஓடோடிவிடும்.

குரு ராம்தாஸ்

இன்னம்பூரான்


பி.கு.:

நன்றி, ஸுரேஷ். சொல்லப்போனால், ஐஏஎஸ் மாணவர்கள் இதை விரும்பிப் படிக்கிறார்கள். நான் எழுதுவது சில துளிகள். அதுவே நேரம் எடுத்துக்கொள்கிறது. மற்றவர்கள் இந்த இழையை மேன்படுத்தலாம். அது சரி. அது என்ன இன்னம்பூரான் நண்பன்! நாம் யாவரும் யாவருக்கும் நண்பர்களே. தேனியார் உம்மை தேடுகிறார். நமக்கு சாரத்தியம் செய்த ஸுரேஷ் எங்கே? என்கிறார், கண்ணன். திருவேங்கடமணி உம்மை குசலம் விசாரிக்கிறார்.  


2010/8/29 Suresh sundaresan <sunds...@gmail.com>


Innamburan Innamburan

unread,
Aug 30, 2010, 7:08:20 PM8/30/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
ஆகஸ்ட் 31, 1688 :
    ஜான் பன்யன் என்ற ஆன்மிக எழுத்தாளர் பிறந்த தினம். அவர் எழுதிய ‘ஒரு யாத்ரீகனின் பயணம்’ ஒரு நாவல் மட்டுமல்ல. உட்கருத்துக்கள் உள்ள ஆன்மிக நூல். அதை தமிழில் ‘இரட்சணய யாத்திரீகம்’ என்ற நூலை, தழுவலாக எழுதியவர், கிருஷ்ணப்பிள்ளை என்ற கிருத்துவனாக மாறிய வைணவர்.

ஆகஸ்ட் 31, 1897 :
     தாமஸ் ஆல்வா எடிசன் கினிடாஸ்கோப் என்ற சினிமா காட்டும் இயந்திரத்துக்கு காப்புரிமை பெற்றார்.

ஆகஸ்ட் 31,1907
            பிலிப்பைன்ஸ் நாட்டு ஏழாவது அதிபர் ராமோன் மேக்ஸேஸே பிறந்த தினம். அவரின் பெயரில் வழங்கப்படும் விருது புகழ் பெற்றது. இந்தியர்களில் சிலர் இவ்வாறு கெளரவிக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 31, 1997 :
    இங்கிலாந்து இளவரசி டயானா, தன்னுடைய நண்பனுடன் உல்லாச சவாரி செய்யும்போது கார் விபத்தில் உயிர் இழந்தார். என்ன தான் சர்ச்சைக்குரிய உறவாக அது இருந்தாலும், ஒரு இளம் பேரழகி அகாலமரணம் அடைந்தது, உலகையே அளவு கடந்த விசனத்தில் ஆழ்த்தியது. இங்கிலாந்தின் அரசகுடும்பம் அதை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கத்தை, அன்னாட்டு மக்கள் உணர்த்த, ராணி அரண்மனையிலிருந்து வெளி வந்து, லக்ஷக்கணக்கான மலர்கொத்துக்களை பார்வையிட்டார்.
     
ஆகஸ்ட் 31,1957/1962/1991
             முறையே, இங்ககிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து மலேய கூட்டமைப்பும் (பிற்காலம், மலேஷியா),  டிரினிடாட்& டொபாகோ என்ற கரிபியன் நாடும், இங்ககிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து,
கிரிகிஸ்தான் ரஷ்யாவிடமிருந்தும் விடுதலை பெற்ற தினம்.

“புரிதலுக்கு ஆன வேளை வந்துவிட்டது. 
இது சரி, இது தவறு போன்ற உமது கருத்துக்கள், ஒரு குழந்தையின் தள்ளுவண்டியைப் போல என்க. 
அவற்றை ஒதுக்கிவைக்கவும்.
 வாய்மைக்கும், அன்புக்கும் முன் அவை எம்மாத்திரம்?
- ஹஃபீஸ்,  கவிஞர் (1315-1390)


இன்னம்பூரான்


2010/8/30 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
> ஆகஸ்ட் 30, 1574 :


N. Kannan

unread,
Aug 31, 2010, 7:30:17 AM8/31/10
to mint...@googlegroups.com
2010/8/31 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

> இருந்தாலும், ஒரு இளம் பேரழகி அகாலமரணம் அடைந்தது, உலகையே அளவு கடந்த
> விசனத்தில் ஆழ்த்தியது.

விசனம் எனக்கும் உண்டு என்றாலும், தங்களது சரித்திரப் பேரேட்டில்
டயானாவைப் பேரழகி என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்க ஊர்
கருத்தம்மா, அவளை விட அழகி !!

க.>

Nagarajan Vadivel

unread,
Aug 31, 2010, 7:41:09 AM8/31/10
to mint...@googlegroups.com
உலகம் புற அழகுக்கு மயங்கி அழவில்லை.  கருணையோ கனிவோ கிஞ்சித்தும் இல்லாத மாமனார், மாமியார், கணவன், மனதை நோகடிக்கும் பட்டினி நோய், வ்ல்லூறுகளாக வட்டமிடும் ஊடகம் இவற்றின் நடுவில் நலிந்தோர்க்கென்று தோள் கொடுத்தும் நம்ம ஊர் கருத்தம்மாபோல் தன் குழந்தைகளை பரிவோடும் பாசத்தோடும் வளர்க்க முயன்ற தாய்மை உள்ளம்.  அதற்காகவே உலக்ம் அழுதது
நாகராசன்

2010/8/31 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

Innamburan Innamburan

unread,
Aug 31, 2010, 3:02:28 PM8/31/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
ஸெப்டம்பர் 1, 1715
எழுபத்திரண்டு ஆண்டுகள் தன்னிச்சையாக ஃபிரான்ஸ் நாட்டை (ஃபிரான்ஸ் என்றால் நான் தான்! ) ஆண்ட லூயி 14 மரணம் அடைந்தான். சொல்லப்போனால், அவன் யதேச்சதிகாரம் பிற்காலம் புரட்சிக்கு வழி வகுத்தது.

ஸெப்டம்பர் 1,1896
ஹரே கிருஷ்ணா பக்தி மார்க்கத்தை நிறுவிய ஏ.ஸீ. பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதாவின் ஜன்ம தினம். லண்டனுக்கு அருகிய வாட்ஃபோர்டில் இருக்கும் அந்த இயக்கத்தைச் சார்ந்த கோயிலுக்கு சென்றிருந்தோம். பிரபல பீட்டில்ஸ் பாடகர் ஜார்ஜ் ஹாரிஸனின் வீடு.

ஸெப்டம்பர் 1, 1902
‘சந்திரமன்டலம் நோக்கி’ என்ற முதல் விஞ்ஞானம் சார்ந்த கற்பனை புதினம், ஃபிரான்ஸ்ஸில் வளி வந்த தினம்.

ஸெப்டம்பர் 1, 1939
ஜெர்மனி போலண்டை தாக்கிய தினம். ‘வினாச காலே, விபரீத புத்தி!

ஸெப்டம்பர் 1, 1945
நிபந்தனையின்றி ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்த தினம். அணுகுண்டு போட்டால், வேறு என்ன செய்யமுடியும்?

ஸெப்டம்பர் 1, 1969
லிபியாவில் புரட்சி. மு உஅம்மர் அல் கட்டஃபி அன்று ஏறிய அரியணை கூடாரத்தில் இன்றும் அமர்ந்திருக்கிறார். சர்வாதிகாரி. ‘கிறுக்கன்’ என்பார்கள், மேல் நாட்டு வித்தகர்கள்.
அவர்களை கிறு 1,க்கனாக அடிக்கிறார், இந்த விசித்திர மனிதன்.

ஸெப்டம்பர் 1,2009
ஹார்வேட் பல்கலைக்கழகம் ‘வித்துவத்துவத்துக்காக’ DASH: Digital Access to Scholarship at Harvard; தொடங்கிய தினம்.
DASH (http://dash.harvard.edu)


“மனிதர்கள் கொஞ்சம் ஆமை வேகம் தான். நுட்பங்கள் புரிய பல தலைமுறைகள் எடுத்துக்கொள்கிறார்கள்.”
- ஸ்டனிஸ்லா. ஜே.லெக். கவிஞர்,(1909 -1966)


இன்னம்பூரான்

பி.கு.
1.எப்படி இருந்தால் என்ன? வருத்தம் வருத்தம் தான். இன்றளவும், அகால மரணம் எய்திய ஸில்க் ஸ்மிதா, 'பசி' ஷோபா, ஸ்மித்தா பாட்டீல் அவர்கள் இழந்த வாழ்க்கையை பற்றி எனக்கு விசனம். டயனாவும் அந்த ராஜ குடும்பத்தை உண்டு, இல்லை என்று பாடாய் படுத்தி விட்டாள். பட்டினி அவள் நோன்பு! ஊடகம் அவள் அழைப்பு! ஆனால் அதிகப்படி. கொன்னுப்புட்டாங்களே, படு பாவிகள்.

2. கண்ணன்: நீவிர் டயானாவை பார்த்தது இல்லையா? பேரழகி.

3. நான் மட்டும் தான் இந்த இழையை படிக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். வருக சான்றோர்களே.



2010/8/31 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
>

N. Kannan

unread,
Aug 31, 2010, 6:57:32 PM8/31/10
to mint...@googlegroups.com
2010/9/1 Innamburan Innamburan innam...@googlemail.com


 
பி.கு.
1.எப்படி இருந்தால் என்ன? வருத்தம் வருத்தம் தான். இன்றளவும், அகால மரணம் எய்திய ஸில்க் ஸ்மிதா, 'பசி' ஷோபா, ஸ்மித்தா பாட்டீல் அவர்கள் இழந்த வாழ்க்கையை பற்றி எனக்கு விசனம். டயனாவும் அந்த ராஜ குடும்பத்தை உண்டு, இல்லை என்று பாடாய் படுத்தி விட்டாள். பட்டினி அவள் நோன்பு! ஊடகம் அவள் அழைப்பு! ஆனால் அதிகப்படி. கொன்னுப்புட்டாங்களே, படு பாவிகள்.
 
வருத்தத்தில் பங்கு கொள்கிறேன். ஷோபா போனது ரொம்ப வருத்தம். இந்த அசடு சில்க் ஸ்மிதா பேசாம கொரியா வந்திருக்க வேண்டியதுதானே :-))
 
 

2. கண்ணன்: நீவிர் டயானாவை பார்த்தது இல்லையா? பேரழகி.
 
சரி! பார்த்த பெரியவா சொன்னாச் சரிதான்.
 
 

3. நான் மட்டும் தான் இந்த இழையை படிக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். வருக சான்றோர்களே.
 
எழுதும் எல்லோருக்கும் இந்தச் சந்தேகமுண்டு. கிசு, கிசு இல்லாத எந்த விஷயத்திற்கும் பின்னூட்டம் போடுவதில்லை என்று ஒரு கூட்டமே இருப்பது உமக்குத்தெரியாதோ? :-))
 
க.>

ஆராதி

unread,
Aug 31, 2010, 8:47:43 PM8/31/10
to mint...@googlegroups.com
வரலாற்றுப் பெட்டகத்தில்
கொட்டிக் கிடக்கும்
வைர வைடூரியங்களைப்
பார்த்துக் கொண்டே இருக்கும்
ஏழை எங்கே
பேசுவது?

அன்புடன்
ஆராதி

2010/9/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>

--

Sri Sritharan

unread,
Sep 1, 2010, 4:24:16 AM9/1/10
to மின்தமிழ்
 


Date: Wed, 1 Sep 2010 00:32:28 +0530
Subject: Re: [MinTamil] இன்றைய தினம் 2
From: innam...@googlemail.com


ஸெப்டம்பர் 1, 1902
‘சந்திரமன்டலம் நோக்கி’ என்ற முதல் விஞ்ஞானம் சார்ந்த கற்பனை புதினம், ஃபிரான்ஸ்ஸில் வளி வந்த தினம்.

முதலாவது அறிவியல் புனை திரைப்படம் (A Trip to the Moon) 1902 இல் பிரான்சில் திரையிடப்பட்டது என எமது விக்கி சொல்கிறது. நீங்கள் முதலாவது புதினம் எழுதப்பட்டது என்கிறீர்கள். எது சரி?
 
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_1
 
அன்புடன்
சிறீதரன்

 

Innamburan Innamburan

unread,
Sep 1, 2010, 8:54:35 PM9/1/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
ஸெப்டம்பர் 2, 1666
பெரிதும் பேசப்பட்ட லண்டன் தீவிபத்து, மூன்று நாட்கள் கொழுந்து விட்டு எரிந்தது. ஸையிண்ட் பால் கதீட்றல் உள்பட, பதிமூன்று ஆயிரம் கட்டிடங்கள் நாசம். 400 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு.
ஸெப்டம்பர் 2, 1752
இரண்டு நூற்றாண்டுகள் தாமதித்து இங்கிலாந்து க்ரகேரியன் என்ற புதிய காலெண்டரை (இன்று வரை நடைமுறையில் உள்ளது.) ஏற்றுக்கொண்டது. கொஞ்சம் லேட் லதீஃப்!
ஸெப்டம்பர் 2, 1789
அமெரிக்க அரசு பணம் பட்டுவாடா (ட் ரேஷரி) இலாக்காவை அமைத்தது. அதிகப்படி
லேட் லதீஃபோ!
ஸெப்டம்பர் 2, 1792
புரட்சிகள் கட்டுக்கடங்காமல் இராக்கத உரு எடுக்கும் என்பதற்கு சான்றாக, ஃப்ரென்ச் புரட்சிக்கு அபகீர்த்தி கொணரும் வகையில் ‘ஸெப்டம்பர் படுகொலைகள்’ தொடங்கின - வீறு கொண்டு எழுந்த மக்கள் கூட்டம் மூன்று பிஷப்கள்,200 பூசாரிகள், ராஜ விசுவாச கைதிகள் ஆகியோரை கொண்று குவித்தது.
ஸெப்டம்பர் 2, 1885
ராக் ஸ்ப்ரிங்க்ஸ் என்ற இடம், அமெரிக்காவில். தொழிற்சங்கம் அமைத்து கூலி அதிகம் கேட்கவேண்டி, 150 சுரங்கத்தொழிலாளிகள் (வெள்ளையர்) கிளர்ச்சி செய்யும் போது 28 சீனத்தொழிலாளிகளை கொலை செய்தனர். 15 பேர் படுகாயம். மற்றவர்கள் ஓடிப்போயினர். இதற்கும் கார்ல் மார்க்ஸுக்கும் சம்பந்தம் இல்லை. ஒண்ட வந்த பிடாரியை ஊர் பிடாரி விரட்டின கதை. ஆனால் பாருங்கள், செல்வன், எந்த அளவுக்கு பசிக்கொடுமை இருந்தால், தொலைக்கடல் கடந்து, சுதந்திரச்சந்தை பொருளாதாரம் கொடுத்த ‘அரைப்பட்டினி’ கூலிக்கு சீனர்கள் வந்திருப்பார்கள்?
ஸெப்டம்பர் 2, 1898
ஆம்டுரான் போரில் வாகை சூடி,சூடான் மீது ஆளுமை, இங்கிலாந்துக்கு.
ஸெப்டம்பர் 2, 1901
பிற்காலம் மக்களல் மதிக்கப்பட்ட அதிபரன தியோடார் ரூஸ்வெல்ட், உதவி அதிபராக இருந்தார். ஒரு போடு போட்டார், பார்க்கலாம்!
ஸெப்டம்பர் 2, 1945
ஜப்பான் சரண் அடைந்த தினம்: வியட்நாம் விடுதலை.
ஸெப்டம்பர் 2, 1946
இந்தியாவின் தற்காலிக அரசு அமைந்த தினம். நேரு உப அதிபர்.
ஸெப்டம்பர் 2, 1969
வடக்கு வியட்நாம் தலைவர் ஹோ.சின்.மீஹ் மறைந்தார். எளிமையாக வாழ்ந்தவர்.
ஸெப்டம்பர் 2, 1973
ஜே.ஆர்.ஆர்.டோல்கியான் என்ற ‘மாயா மச்சீந்திரா’ வகை தொடர்கதை ஆசிரியர் மறைந்தார்.

“பேச்சில் மென்மையும், கையில் குண்டாந்தடியும் வேண்டும்.”
- தியோடர் ரூஸ்வெல்ட், அமெரிக்காவின் உப அதிபர்.
இன்னம்பூரான்

பி.கு. நன்றி பல, சிறீதரன் ஐயா. ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கதை திரையிடப்பட்டது என்று சொல்கிறது,
என் இடுகை கோடி காட்ட, குறிப்பால் உணர்த்த. கனகச்சிதம் அல்ல. இதற்கே பலமணி நேரம். எனக்கு மேலும் ஒரு வாசகர் +

2010/9/1 Sri Sritharan <ksth...@hotmail.com>:


Innamburan Innamburan

unread,
Sep 2, 2010, 7:09:39 PM9/2/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
ஸெப்டம்பர் 3, 1658

இங்கிலாந்தில் சர்வாதிகாரம், வரலாற்றிலேயே ஒரு முறை தான். சார்ல்ஸ்  1 என்ற அரசன் சிரச்சேதம் செய்யப்பட்டான். அதற்கு காரணகர்த்தாவான சர்வாதிகாரி ஆலிவர் க்ராம்வெல் இறந்த தினம்.
ஸெப்டெம்பர் 3, 1783

அமெரிக்காவும், பிரிட்டனும் பாரிஸில் செய்துகொண்ட உடன்படிக்கை படி, அமெரிக்க புரட்சிப்போர் முடிவடைந்தது. இது ஜனநாயகத்திக்கு மாபெரும் வெற்றி.
ஸெப்டம்பர் 3, 1935

ஸர் மால்கம் கேம்ப்பெல் 304.331 மைல்கள் வேகத்தில் காரை செலுத்தி, 300 மைல் வேகத்தை கடந்து, சாதனை நிகழ்த்தினார்.
ஸெப்டம்பர் 3, 1939

ஜெர்மனி போலண்டை தாக்கியதின் விளைவாக, பிரிட்டன், ஆஸ்றேலியா, ந்யூஸிலாந்து ஆகிய நாடுகள் ஜெர்மனி மேல் போர் தொடுத்தன. பிரிட்டன், இந்தியாவையும் இணைத்து, சர்ச்சையை விளைவித்தது.
ஸெப்டம்பர் 3, 1971

இரண்டாம் தடவை கத்தாருக்கு (வளைகுடா) விடுதலை. இந்த தடவை, பிரிட்டனிடமிருந்து.
ஸெப்டம்பர் 3, 1978

ஜான் பால் I 264 வது  போப்பாண்டவராக பதவியேற்றார். போப்பாண்டவர் நியமனம் ஒரு விசித்திர நிகழ்வு.
ஸெப்டம்பர் 3, 1900

மாரிஸ் ஹெர்பெர்ட் டாப் என்ற பொருளியல் பேராசிரியர் பிறந்த தினம். சுதந்திர பொருளாதார சந்தையை பற்றி, இவருடைய நூல்களை படித்தும் தெளிவடைவது நலம்.
ஸெப்டம்பர் 3, 2010

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையில் கட்டுமான தொழில் செய்யும் அஸ்வின் ராம்குமாருக்கும் இன்று திருமணம் நடக்கிறது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மின் தமிழாளின் சார்பில் வாழ்த்துக்கள்.

“வாளாயிருப்பதின் இன்னல் என்னவெனின், நாம் இளைப்பாற இயலாது.”
ஹோகி கார்மைக்கேல்


இன்னம்பூரான்

பி.கு. டயானா ஸ்பெஷல்: http://www.vikatan.com/av/2010/sep/08092010/av0306.asp

2010/9/2 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

Sri Sritharan

unread,
Sep 2, 2010, 8:29:01 PM9/2/10
to மின்தமிழ்
தமிழைப் பிழையின்றி எழுதுவோம் வாருங்கள் இன்னம்பூரான் அவர்களே.

 
 
அன்புடன்
சிறீதரன்
 

Date: Fri, 3 Sep 2010 04:39:39 +0530
Subject: Re: [MinTamil] இன்றைய தினம் 2
From: innam...@googlemail.com
To: mint...@googlegroups.com
CC: innam...@googlemail.com

Dhivakar

unread,
Sep 3, 2010, 12:57:46 AM9/3/10
to mint...@googlegroups.com
>>ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையில் கட்டுமான தொழில் செய்யும் அஸ்வின் ராம்குமாருக்கும் இன்று திருமணம் நடக்கிறது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மின் தமிழாளின் சார்பில் வாழ்த்துக்கள்<< மற்றும் டயானா..

இளமையே
இனிமையே
இன்பமே
இன்னுயிரே
இன்னம்பூராரே

இனிய செய்திகளையும் ‘அரிய’ செய்திகளையும் அள்ளித் தரும் உங்கள் வள்ளல்
குணம் வாழ்க!!

தி

2010/9/3 Innamburan Innamburan <innam...@googlemail.com>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Innamburan Innamburan

unread,
Sep 3, 2010, 7:45:39 PM9/3/10
to mintamil, Innamburan Innamburan
ஸெப்டம்பர் 4, 1666
லண்டன் தீ விபத்து இன்றைய தினம் வரை பெரும் நஷ்டத்தை விளைவித்தது. அழிந்த வீடுகள் 10,000 என்று ஒரு இடத்திலும், 13,200 என்று மற்றொரு இடத்திலும், விக்கிப்பீடீயா அறிவிக்க, ந்யூ யார்க் டைம்ஸ் 13,000 என்று சொல்கிறது.

ஸெப்டெம்பர் 4, 1781
ஹிஸ்பானிய புலன் பெயர்ந்தோர், ‘போர்சின்குலா’ என்ற இடத்து தேவதை ராணி என்ற பொருளில் இன்றைய தினம் அமைத்த ஊர் லாஸ் ஏஞ்செலஸ். இன்றும் அங்கு ஸ்பானிஷ் மொழி செல்லுபடி ஆகிறது. ஒரு நாள் அது அமெரிக்காவில், ஆங்கிலத்துக்கு சமானமாக வரும்.

ஸெப்டெம்பர் 4, 1825
தாதாபாய் நெளரோஜி என்ற இந்திய தலைவரின் ஜன்ம தினம். பிரிட்டீஷ் பார்லிமெண்ட்டில் அங்கத்தினராக, அந்நாட்டு மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர். இதழாளர். இந்தியாவின் ஏழ்மையை பற்றிய முதல் ஆய்வு நூல் எழுதியவர். அஞ்சா நெஞ்சர் என்று யாவராலும் பாராட்டப்பட்டவர். அப்ரஹாம் லிங்கனைப் போல, இவரின் அழகும் தாடி.


ஸெப்டெம்பர் 4, 1888
கொடாக் கேமராவுக்கு காப்புரிமை பெற்றார், ஜார்ஜ் ஈஸ்ட்மன்.
ஸெப்டெம்பர் 4, 1894
அடிமாட்டுக்கூலியை எதிர்த்து 12,000 தையல்காரர்கள், ந்யூயார்க்கில் வேலை நிறுத்தம் செய்தனர்.

ஸெப்டெம்பர் 4, 1919
துருக்கி நாட்டுக்கு புத்துணர்ச்சி அளித்த யதேச்சதிகாரி முஸ்தாஃபா கமால் பாஷா , அனடோலியா, த்ரேஸ் பகுதிகளின் வருங்காலம் நோக்கி சிவாஸ் என்ற இடத்தில் ஒரு மாநாடு நடத்தினார்.

ஸெப்டெம்பர் 4, 1955
என் திருமண தினம். மிஞ்சியது நினைவு மட்டும்.

ஸெப்டெம்பர் 4, 1972
ஏழு மெடல்கள் ஒரே ஆளுக்கு - மார்க் ஸ்பிட்ஸ், ஒலிம்பிக் போட்டிகளில். இந்திய காமன்வெல்த் போட்டி 2010 ஐ நினைத்தல் மனம் பதறுகிறது.

ஸெப்டெம்பர் 4, 1975
அரப்-இஸ்ரேலிய தற்காலிக உடன்படிக்கை, சண்டை, சச்சரவை தணிக்க, சினாய் என்ற இடத்தில். என்ன பிரயோஜனம்???  நேற்று கூட, அமெரிக்காவின் தயவில், இரு தரப்பும் பேச்சு வார்த்தை செய்தன.
ப்டெம்பர் 4, 1998
கூகிள் நிறுவனம், லாரி பேஜ், ஸார்ஜி பிரின் என்ற இருவரால் ஸ்தாபிக்கப்பட்டது. சக்கை போடு போடுகிறது, நிமிடத்துக்கு ஒரு மேனியாக, வினாடிக்கு ஒரு வண்ணமாக.

“ என் பாட்டன் யார் என்று எனக்கு தெரியாது. எனக்கு தெரியவேண்டியது அவருடைய பேரன் என்ன செய்யக்கூடும்? என்பதே.

- அப்ரஹாம் லிங்கன்.

N. Kannan

unread,
Sep 3, 2010, 8:01:22 PM9/3/10
to mint...@googlegroups.com
2010/9/4 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

>
> ஸெப்டெம்பர் 4, 1955
> என் திருமண தினம். மிஞ்சியது நினைவு மட்டும்.
>

அடடா! எவ்வளவு முக்கிய நாள்!
அந்தக் காலத்துக் கதை சொல்லுமேன். வாஷிங்க்டனில் திருமணம் போல்!!

வாழ்த்துக்கள்!!

க.>

ஆராதி

unread,
Sep 3, 2010, 8:24:57 PM9/3/10
to mint...@googlegroups.com
திரு இன்னம்பூராரே
என் திருமண தினம். மிஞ்சியது நினைவு மட்டும்.“
நினைவுக்குள் நினைவாகி நீள்கின்ற சொந்தத்தை,
அன்புக்கு அன்பாகி ஆற்றலுக்குத் துணையாகிப்,
பிள்ளைக்குத் தாயாகிப், பெறாத சேயாக
நித்தம் நித்தம் அடைகாத்து
நிழல்போலப் பின்தொடர்ந்து
வாழ்க்கையின் அர்த்தத்தை
வழங்கிய பெரும்பேற்றை
வாராது வந்த மாமணியைத்
தொலைத்துவிட்ட துன்பத்தைச்
சொல்கின்ற நாளிது
நினைவு மணம் சுமந்து
நீண்ட நாள் நீர் வாழ்க.


அன்புடன்
ஆராதி

2010/9/4 Innamburan Innamburan <innam...@googlemail.com>

coral shree

unread,
Sep 4, 2010, 2:27:16 AM9/4/10
to mint...@googlegroups.com
உங்கள் கவிதையின் ஆழம் குத்தீட்டியாக என் நெஞ்சைத் தைக்கிறது.........நினைவு சுமந்த மணம் அந்த நினைவினாலேயே ஆறுதல் பெறுவதும் திண்ணம்..........நன்றிகள்.

2010/9/4 ஆராதி <aara...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Sep 4, 2010, 8:31:53 PM9/4/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஸெப்டம்பர் 5, 1698

தாடிக்கு வரி, ரஷ்யாவில். விதித்த புத்திமான்! பீட்டர், தி க்றேட்.

ஸெப்டெம்பர் 5, 1793


ஃப்ரென்ச் புரட்சி தீயாக மாறி, கொடுங்கோல் அராஜகமாக இயங்கத் தொடங்கிய தினம்.


ஸெப்டெம்பர் 5, 1839

சைனாவுக்கும் , பிரிட்டனுக்கும் முதல் ‘கஞ்சாப்போர்’ தொடங்கிய தினம். சைனாவுக்கு சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கஞ்சா கடத்துவதற்காக, கனம் பொருந்திய? ஆங்கிலேய அரசு இரு முறை போர் புரிந்து, சைனாவுடன் ‘ கட்டப்பஞ்சாயத்து உடன்படிக்கைகள் செய்து கொண்டது. அப்பாடா! காலம் மாறிப்போச்சு. ஒரு சமாச்சாரம் தெரியுமோ? அசல் கஞ்சா பார்க்கவேண்டுமானால், அரசு கஜானாவுக்குப் போகவேண்டும். யூ.பி.யில் நீமச் என்ற இடத்தில் அரசு கஞ்சா தொழிற்சாலை உள்ளது, உரிமம் பெற்ற கஞ்சா உறிஞ்சும் பெருமகனார்களுக்காக!


ஸெப்டெம்பர் 5, 1882

அமெரிக்காவின் தொழிலாளர் தினமாக தொடங்கிய தினம். அங்கு அது தொழிளாலர்களின் ஒற்றுமையை முன்வைக்கும் ஊர்வல தினம். அத்துடன் சரி. மே தினம் மாதிரி அல்ல.




ஸெப்டெம்பர் 5, 1888

இந்தியாவில், ஆசிரியர் தினம். 

தத்துவப்பேராசிரியரும், இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவரும் ஆன டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த தினம். அவர் புகழுடன் வாழ்ந்த காலத்தில் சென்னைவாழ் ஆர். நாகராஜ சர்மா என்பவர் ஹிந்து இதழில், விடாக்கொண்டனாக, டாக்டர். ரா. வைப்பற்றி, ஆதாரங்களுடன் குறை காண்பார். மற்றவர்கள் படைப்புகளை தனது என்று சொந்தம் கொண்டாடுகிறார் என்பார். நாங்கள் விரும்பி படிப்போம்.




ஸெப்டெம்பர் 5, 1937


ஸ்பானிஷ் உள்நாட்டுப்போர் தொடங்கிய தினம். இதழ்களும் மிக்க ஆர்வம் காட்டியதால், ‘முதல் மீடியா போர்’ என்பார்கள். எர்னெஸ்ட் ஹெமிங்வே போன்ற பிரபல எழுத்தாளர்கள் மக்கள் தரப்பை ஆதரித்தனர். 1984, அனிமல் ஃபார்ம் ஆகிய பிரபல நூல்களை எழுதிய ஜார்ஜ் ஆர்வல் நேரில் கலந்து கொண்டனர். நேருவும் ஆர்வம் காட்டினார். அங்குசென்றார், ஆனால் பங்கு கொள்ள இயலவில்லை என்று படித்ததாக ஞாபகம்.

இந்த கொடுமையான போரில் 300 ஆயிரம் மக்கள் இறந்தனர். அவர்களில் 120 ஆயிரம் பேர் இருதரப்பாலும் கொலை செய்யப்பட்டவர்கள்.


ஸெப்டெம்பர் 5, 1957

இங்கிலாந்து முதல் முறையாக பொது இடங்களில், ட்ரங்க் தொலைபேசி வசதி செய்தது - பிர்ஸ்டலில்.


ஸெப்டம்பர் 5, 

அரப்-இஸ்ரேலிய தற்காலிக உடன்படிக்கை, சண்டை, சச்சரவை தணிக்க, சினாய் என்ற இடத்தில் நடந்த தினமே 1972 ல்  ம்யூனிச் ஒலிம்பிக் கிராமத்தில் பாலஸ்டீனியர், இஸ்ரேலி விளையாட்டு வீரர்களை கொண்றனர்.  நேற்றுக்கூட, ‘மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி’ என்ற மாதிரி, அமெரிக்காவில் இரு தரப்பும் பேச்சு வார்த்தை.


ஸெப்டெம்பர் 5, 1990

ஶ்ரீலங்காவின் ‘கறுப்பு ஸெப்டம்பர’் தினம். கிழக்கு பல்கலைக்கழகத்தில் [வந்தருமூலை] என்ற இடத்தில் பாதுகாப்பு நாடி சரன் அடைந்திருந்த தமிழினத்தினரை, சிங்கள் ராணுவம் தாக்கி, 158 பேர்களை கொன்றது. அரசு அமைத்த விசாரணைக்குழு, ஆள் கடத்தலும், கொலையும் நடந்ததாக அறிவித்து, தவறு செய்தவர்களை சுட்டியும், மேல் நடவடிக்கஇ இல்லை என்று விக்கிப்பீடீயா சொல்கிறது. 


ஸெப்டெம்பர் 5, 1997

அன்னை தெரஸா மறைந்தார்.


ஸெப்டெம்பர் 5, 1957

‘சாலையில்’ என்ற ஜாக் கெரெளக் என்பவரின் பிரபல நூல் பிரசுரம்.


ஸெப்டம்பர் 5, 1958

ரஷ்யாவின் போரஸ் பேடர்னாக் என்பவரின் பிரபல ‘டாக்டர் ஷிவாகோ’ என்ற தடிமனான நாவல் வெளிவந்தது. அவருக்கு பல இன்னல்கள்.


“இசை அமைப்பது பெரிய விஷயமில்லை. மற்றவர்களுக்குத் தோன்றாத மெட்டு உனக்கு தோன்றவேண்டும். அவ்வளவு தான்.

- ராபெர்ட்  ஷூமன் (பிரபல இசையமைப்பாளர்)




இன்னம்பூரான்


2010/9/4 coral shree <cor...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Sep 5, 2010, 2:41:08 PM9/5/10
to mint...@googlegroups.com
ஸெப்டம்பர்  6, 1620
இங்கிலாந்தின் ப்ளைமத் என்ற துறைமுகத்திலிருந்து மேஃப்ளவர் என்ற கப்பலில், அமெரிக்காவில் குடிபுக யாத்ரிகர்க்குழு ஒன்று புறப்பட்ட தினம். புது நாட்க்காட்டியென்றால், தேதி 16. அவர்கள் தீவிரமான கிருத்துவக்கொள்கைகளை பின்பற்றியவர்கள். அந்த ஆலவித்து, இன்று மாபெரும் விருக்ஷம்.

ஸெப்டெம்பர் 6, 1776
ஜான் டால்டன் பிறந்த தினம். அவர் தான் அடாமிக் எண் பகுத்த வேதியல் வல்லுனர்.

ஸெப்டெம்பர் 6, 1847
அமெரிக்காவின் தத்துவஞானிகளில், ஹென்றி டேவிட் தோரோவும், ரால்ஃப் வால்டோ எமர்சனும் பெரும்புகழ் பெற்றவர்கள். வால்டன் பாண்ட் என்ற இடத்தில் ஆன்மிக நெறியுடன் வாழ்ந்த முன்னவர், பின்னவர் வீட்டுக்கே, குடியும் குடித்தனமாக வந்த தினம். இருவரும் அண்ணல் காந்திக்கு வழித்துணை.

ஸெப்டம்பர் 6, 1888
ஜோசஃப் கென்னடி பிறந்த தினம். பிரிட்டனில் அமெரிக்க தூதர், வங்கி முதலாளி. கள்ளச்சாராயத்தில் எக்கச்சக்கமாக சம்பாதித்தார் என்பர். படே கில்லாடி. அவரின் மகன் ஜான் கென்னெடி அமெரிக்காவின் பிரபல அதிபர்களில் ஒருவர். அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது உலகமே விசனித்தது. டில்லியில், நானும் என் மனைவியும், விசனபுத்தகத்தில் கையெழுத்து இட்டோம். அவ்வரிசையில் எங்களுக்கு முந்திய நபர் ராஜாஜி அவர்கள்.  

ஸெப்டம்பர் 6, 1901
லியான் சோல்கொஸ் என்பவன் (Leon Czolgosz) அமெரிக்க அதிபர் வில்லியம் மக்கின்லியை சுட்டுக்கொன்றான்.

ஸெப்டெம்பர் 6, 1943
தெற்கு அமெரிக்கவின் மெக்ஸிக்கோ நாட்டில் புகழ் வாய்ந்த தனியார் பல்கலைக்கழகம் - மான்டெறி டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்- தொடங்கிய தினம். அது நம்மூர் தனியார் கல்வி நிலையங்களைப்போல அல்ல.

ஸெப்டம்பர் 6, 1957
ஸாக்ரட்டீஸ் பிறந்த தினம்! நீங்க ஒண்ணு. இவர் கிரேக்க ஞானி அல்ல. போர்ச்சுகல் நாட்டு பிரதமர்- ஜோஸ் ஸாக்ரட்டீஸ்!


ஸெப்டெம்பர் 6, 1965
இந்தியா பாகிஸ்தானின் ஊடுருவலை எதிர்த்து போரிட்டு வாகை சூடியது. லாஹூரை கைப்பற்றி இருக்கமுடியும் என்பது திண்ணமாக இருந்தாலும்,
மேல்நாடுகளின் அழுத்தம் காரணமாக, அது நடக்கவில்லை என்றும் , டாஷ்க்கெண்ட்டில் ஒரு உடன்படிக்கை, பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரியின் அகால மரணம்...

ஸெப்டம்பர் 6, 1968
ஸ்வாஸிலாந்துக்கும் விடுதலை!

ஸெப்டெம்பர் , 1974
ஸெளந்தர்யா அஷ்வினுக்கு தாலி கட்டினது தெரிந்த விஷயம். ஹிந்துவில் போட்றுக்கானே, “Soundarya ties the knot...” என்று! கால் கட்டா?, கழுத்தில் நாணா? யான் அறியேன். அந்தக்காலமெல்லாம் அப்படியில்லை. சாங்கோபாங்கமாக, ஆனந்தி தந்தையின் மடியில் அமரிக்கையாக அமர, நின்ற கோலத்தில் கிருஷ்ணமாச்சாரி, அவளுக்கு நாண் அணிவிக்க, டும்! டும்! அவர் தான் ஸ்வாமி, தமிழ்த்தேனி. அந்த ரீங்கார தம்பதிகளுக்கு மின் தமிழாள் சார்பில் திருமண நாள் வாழ்த்துக்கள்.

ஸெப்டெம்பர் 6.1991
வேறு வழியில்லாமல், சோவியட் ரஷ்யா.எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகளின் விடுதலையை ஏற்றுக்கொண்டது.

ஸெப்டெம்பர் 6, 1997

இளவரசி டயானாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 2.5. பில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் கண்டு அழுதார்கள். இதனால், அன்னை தெரசாவைப்பற்ரிய செய்திகள் பின்னோக்கின.

ஸெப்டெம்பர் 6, 1998
உலக புகழ் வாய்ந்த ஜப்பானிய சினிமா டேரக்டர் அகிரா குரோசவா மறைந்தார். அவர் முழுமூச்சில் சினிமாவின் எல்லா துறைகளிலும் பணி புரிவார். அவருடைய ஏழு வீரர்கள் (செவென் சமுராய்) என்ற படம் அமரத்துவம் வாய்த்தது.

ஸெப்டெம்பர் 6, 2007
லூசியானோ பாவரோட்டி என்ற உலகப்புகழ் ஆபரா பாடகர் மறைந்த தினம். அவர் பாடி கேட்கவும் வேண்டும், பார்க்கவும் வேண்டும். அவ்வளவு தடபுடல்!

“ ஓய்வு எடுக்கவும். ஓய்வு கொடுக்கப்பட்ட நிலம் நல்ல மகசூல் தருகிறது.”
- ஓவிட்: ரோமன் கவி


இன்னம்பூரான்

2010/9/5 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

N. Kannan

unread,
Sep 6, 2010, 6:50:46 AM9/6/10
to mint...@googlegroups.com
2010/9/6 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

>
> ஸெப்டம்பர் 6, 1957
> ஸாக்ரட்டீஸ் பிறந்த தினம்! நீங்க ஒண்ணு. இவர் கிரேக்க ஞானி அல்ல. போர்ச்சுகல்
> நாட்டு பிரதமர்- ஜோஸ் ஸாக்ரட்டீஸ்!
>


அதானே! என்னடாது நம்ம மோகனரங்கன் பற்றி பேச ஆரம்பித்துவிட்டீர்களே என்று
பார்த்தேன் :-))
(அவர் ஏன் தாடி வைத்து இருக்கிறார் என்பது ஆய்விற்குரிய பொருள்). அவர்
தாடி வைத்த தினம் உங்கள் சரித்திர ஏட்டில் பதிவாகியுள்ளதா? ;-)

க.>

Innamburan Innamburan

unread,
Sep 6, 2010, 9:10:35 PM9/6/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஸெப்டம்பர் 7, 1533

இங்கிலாந்தின் மஹாராணி எலிசெபெத் 1 பிறந்த தினம். அல்லி ராணி. அந்நாட்டு மன்னர்களில் ஒரே ஆணவம் மிகுந்த, அரசியல் தந்திரியான ஆண் எனலாம், பெண்ணியம் புரியாதவர்கள்!


ஸெப்டெம்பர் 7, 1822

போர்ச்சுகலிடமிருந்து பிரேசில் விடுதலை. டாம் பெட்ரோ 1 இந்த பிரகடனம் செய்தார்.


ஸெப்டெம்பர் 7, 1916

அப்பாடா! அமெரிக்காவில் அரசு ஊழியர்கள் சட்டப்படி நஷ்ட ஈடு பெறும் உரிமை பெற்றனர். - (Federal Employers Liability Act (39 Stat. 742; 5 U.S.C. 751)


ஸெப்டெம்பர் 7, 1927

உருப்படியான எலெட்ரானிக் தொலைக்காட்சியை ஃபிலோ டேலர் ஃபார்ன்ஸ்வொர்த் இயக்கினார்.


ஸெப்டெம்பர் 7, 1940

வரலாறு காணாத அளவு லண்டன் மீது ஹிட்லரின் விமானப்படைகள் சரமாரியாக குண்டுகளை வீசி, நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்தனர். அஞ்சா நெஞ்சர்களான, ஆங்கில மக்கள், கொஞ்சம் கூட கவலைப்படாமல், அவரவர் வேலையை கவனித்தனர். தற்காலம், இந்த துணிச்சலை மும்பையிலும் பார்த்தோம்.




ஸெப்டெம்பர் 7, 1953

சோவியட் கம்யூனிஸ்ட் கட்சியின் காரியதரிசியாக ( அதாவது நாட்டின் சர்வாதிகாரியாக) நிகிடா க்ருஷேவ் பதவி ஏற்றார். கொஞ்சம் நம்ம லாலு மாதிரி. காரிய பைத்தியம்!


ஸெப்டெம்பர் 7, 1965


இந்திய எல்லையில் சைனா படைகளை குவிக்க தொடங்கியது. இன்றும் பிரச்னை. தீவிரம் கூடி விட்டது.


ஸெப்டெம்பர் 7, 1978

பல்கேரியன் ரகசிய போலீஸ்காரன் கியுல்லினோ, கார்ஜி மார்கோவ் என்ற பல்கேரிய எதிர்ப்பாளரை லண்டனில் கொன்றார், ஒரு குடையில் ரகசியமாக அமைக்கப்ப்ட்ட விஷ ஊசியால் குத்தி. பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்த வகையில் ப்ளேக் ஊசி போட்டு கொல்லப்பட்டதாக, ‘பவானி சன்யாசி வழக்கு’ என்றது வங்காளத்தில் பிரபலமாக பேசப்பட்டது.


ஸெப்டெம்பர் 7 , 1986

தென்னாஃப்பிரிக்காவின் ஆங்க்ளிகன் கிருத்துவ அமைப்பின் முதல் கறுப்பர் பிஷப், டெச்மாண்ட் டுடு.


ஸெப்டெம்பர் 7.2005

எகிப்தில் முதல் தேர்தல், அதிபருக்கு ஆக. அதற்கு பின்னணியில் வன்முறை இருந்தது.


ஸெப்டெம்பர் 7, 2008

உலக பொருள் சந்தை, ஆதாரம் இல்லாமல் ஒடிந்து, உடைந்து, லக்ஷக்கணக்கான மத்தியத்தர மக்களை உயிருடன் புதைத்த சுனாமி போன்ற சரிவுக்கு கட்டியம் கூறப்பட்ட நிகழ்வு - மிக பெரிய ஃபேனி மேய், ஃப்ரெட்டி மேக் என்ற பேராசையால் கட்டுப்பாடு இழந்த வீட்டுக்கடன் நிறுவனங்களை அமெரிக்க அரசு எடுத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.


“பாம்பேய் என்ற புராதன நகரின் இடிபாடுகளை ஆராய்ந்த போது, தாயக்கட்டைகள் கிடைத்தன. அவற்றில் சில முறைகேடாக்கப்பட்டிருந்தன. (லோடெட்). மனிதனின் கூறு கெட்ட குணத்திற்கு வேறு என்ன சான்று வேண்டும்?”

-லார்ட் கில்ம்யூர்.

[சகுனியும், காம்மன்வெல்த் கேம்ஸ்ஸும், கிரிக்கெட்டும் கண் முன்னே நிற்கின்றன.]


இன்னம்பூரான்


பி.கு. 

1.அன்பர் ஒருவர் தனி இழையில் சர்வபள்ளியை எள்ளி நகையாடினார், என்ன கிழித்து விட்டாரென்று. 'பாயிண்ட் மேட்.' என்ற தோற்றம்! இந்த விதண்டாவாதம், பரிமேலழகருக்கும், இளம்பூரணாருக்கும், பேராசியருக்கும், சிலப்பதிகாரத்துக்கு உரை கண்ட திருவாளர் வேங்கசாமி நாட்டாருக்கும், மேலும் திருவாளர்கள் திரு.வி.கல்யாணசுந்தரத்துக்கும், மு.வரதராசனுக்கும் பொருந்தும். தவிர, சர்வபள்ளி அவர்களின், பீ.டி.ராஜூ அவர்களின் நூல்களை படித்தால், இந்திய சித்தாந்தங்களை பற்றி தெளிவு பிறக்கும். 


2. வ.உ.சி அவர்களை பற்றிய பதிவு, மின்வெட்டார் வருகையினால் ( அது படுத்தும் பாடு சொல்லி மாளாது. இன்று காலையில் கூட), நடு நிசியில் சேமிக்க முடியாமல், தவறவிடப்பட்டது. தவறு எனது தான். அது கீழே:


“ஸெப்டம்பர் 5, 1872

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் பிறந்த தினம். ஸ்வாமி விவேகானந்தரை தரிசித்த சான்றோர்களில் ஒருவர். மேலதிக விவரங்களுக்கு இந்த நூலை முழுதும் படியுங்கள்.

http://www.noolaham.org/wiki/index.php/கப்பலோட்டி_-_செக்கிழுத்த_செம்மல்_வ._உ._சி


3. யானும் ஒரு காலம் தாடி வைத்துக்கொண்டு இருந்ததால், ரங்கனார் தாடி மூலம் தேட அச்சமாக இருக்கிறது.
2010/9/6 N. Kannan <navan...@gmail.com>


Innamburan Innamburan

unread,
Sep 7, 2010, 8:10:26 PM9/7/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஸெப்டம்பர் 8.


1664: டச்சுக்காரர்கள் ந்யூ ஆம்ஸ்டெர்டாம் என்ற நகரை பிரிட்டனிடம் கொடுத்தனர். அது கூகிள் படங்களில் அகப்படாது; அது தான் இன்றைய ந்யூயார்க்.


1913: தற்கால தமிழ் இலக்கியத்தில் சுவை பட எழுதி வந்த திரு. மஹாதேவன் (‘தேவன்’) பிறந்த தினம். மேலதிக விவரங்களை காண: 

http://ta.wikipedia.org/wiki/முதற்_பக்கம்

அவரது அருமையான படைப்புகளில் சில சுவைக்க:

http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=devan


1926: ஜெர்மனி லீக் ஆஃப் நேஷன்ஸ்ஸில் (அக்கால யூ.என்.) அனுமதிக்கப்பட்டது. வந்தது கேடு!


1933: பிரபல ஹிந்தி சினிமா பாடகி ஆஷா பான்ஸ்லே பிறந்த தினம். 12 ஆயிரம் பாடல்களாம்!


1941: லெனின் க்ராட் நகரை ஜெர்மானியர் முற்றுகையிட்டனர்: இரண்டாம் உலகப்போர்.


1943:  ஜெர்மன் ராணுவ மேலாண்மை தளத்தை (மெடிட்டரேனியன்) அமெரிக்க போர்விமானங்கள் தாக்கின; இரண்டாம் உலகப்போர்.

&

இத்தாலி, ஐந்து நாட்களுக்கு முன் சரணைடந்ததை, இன்று தான் ஜெனெரல் வைட் ஐஸன்ஹோவர் பிரகடனம் செய்தார். பிற்காலம் அமெரிக்க அதிபரானவர். உலகெங்கும் மதிக்கப்பட்டவர். 


1944: லண்டன் மீது ஜெர்மனி முதல் தடவையாக வீசிய வீ 2 ராக்கெட், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

&

மெண்டன் என்ற இடம் ஜெர்மனியின் பிடியிலிருந்து விடுவிக்கப்ப்அட்டது. 


1959: ஆசிய டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட் தொடங்கப்பட்டது.


1962: அல்ஜீரியா, மக்கள் கருத்துக்கேட்ட பிறகு, தன்க்கு அரசியல் சாஸனம் வகுத்துக்கொண்டது.


1974: எதிராளியின் கூடாரத்தை வேவு பார்ப்பது அரசியலருக்கு கை வந்த கலை. ஆனால், குற்றங்கள் பல - பொய், புனைசுருட்டு, திருட்டு -செய்த அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் பதவியிலிருந்து  விலக, சட்டப்படி அவருக்கு கடுமையான தண்டனைகள் காத்திருக்க, அவருக்கு பின் அதிபரான கெரால்ட் ஃபோர்ட் அவருக்கு பொது மன்னிப்பு அளித்தார், சட்டத்தின் ஒரு ஓட்டையை பயன்படுத்தி. அந்த அழியாக்கறை படிந்த தினம். பிற்காலம், பில் க்ளிண்டன், பதவி விலகும் போது, மார்க் ரிச் என்ற ஏமாற்றுக்காரனுக்கு பொது மன்னிப்பு அளித்தார். கறை மேலும் கறுத்தது.


“ சொற்கள் பயனிழந்தால், இசை பேசும்.”

ஹான்ஸ்  கிரிஸ்டியன் ஆண்டர்சன்

["ஏன்? என் ஃபோட்டோக்களும் பேசுகின்றனவே."

- நாவன்னா காவன்னா]




இன்னம்பூரான்


2010/9/7 Innamburan Innamburan <innam...@googlemail.com>

vadivelu kaniappan

unread,
Sep 7, 2010, 9:36:28 PM9/7/10
to mint...@googlegroups.com
அருமையிலும் அருமை. ஏனெனில் இதுவரை நான் அறிந்தேயிராத செய்திகளைத் தொகுத்து தருவதாலேயே அருமையிலும் அருமை எனக் கூறினேன். என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.

8 செப்டெம்ப்ர், 2010 5:40 am அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதியது:

Dhivakar

unread,
Sep 8, 2010, 12:51:29 AM9/8/10
to mint...@googlegroups.com
>>1913: தற்கால தமிழ் இலக்கியத்தில் சுவை பட எழுதி வந்த திரு. மஹாதேவன் (‘தேவன்’) பிறந்த தினம். மேலதிக விவரங்களை காண: <<

இ சார்
தேவன் அடியேனுடைய அபிமான எழுத்தாளர். அவர் பற்றி அடியேன் எழுதியுள்ளது
தமிழ் மரபு விக்கியில் சேர்க்கப்பட்டுள்ளது. என்னுடைய வலைப்பூவிலும்
உள்ளது. அடுத்த வருடம் தேவன் பிறந்தநாள் அறிவிப்பு எழுதும்போது
மறக்காமல் சேர்த்து விடும்படி இப்போதே கோரிக்கை......

தி


2010/9/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Innamburan Innamburan

unread,
Sep 8, 2010, 1:48:44 AM9/8/10
to mint...@googlegroups.com
பேசும் தமிழில் சொன்னால், 'கண்டிப்பா'. எனக்கும் தான். ஆமாம். 'ஆஹா!' என்பதற்கும், 'கண்டிப்பா' என்பதற்கு வித்தியாசம் என்ன?
நன்றி,
இன்னம்பூரான்
 பி.கு. 04 09 2011 அன்று ஞாபகம் படித்தினால் தேவலை.

2010/9/8 Dhivakar <venkdh...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Sep 8, 2010, 2:18:09 AM9/8/10
to mint...@googlegroups.com
அருமையான தகவல்கள். அளித்ததுக்கு நன்றி.

2010/9/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Sep 8, 2010, 7:47:59 PM9/8/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஸெப்டம்பர் 9


1839:

ஜான் ஹெர்ஷல் முதல் முறையாக கண்ணாடி ப்ளேட் ஃபோட்டோ எடுத்தார்.


1850:

கலிஃபோர்னியா அமெரிக்காவின் 31வது மாநிலமாக இணைந்தது.


1886:

இலக்கிய, கலை சார்ந்த படைப்புகளுக்கு காப்புரிமையின் முதல் கட்டம்: பெர்ன் கலந்தாய்வு.


1923: 

துருக்கிய மக்களாட்சிக்கு வித்திட்ட முஸ்தாஃபா கெமால் பாஷா மக்கள் கட்சியை தொடங்கினார். [நல்லது பல செய்த, அவர் பிற்காலம் சர்வாதிகாரியாக நடந்து கொண்டார்.]


1940:

ஜார்ஜ் ஸ்டிப்லிட்ஸ் முதல் முறையாக கணினியை வெகு தூரத்திலிருந்து இயக்கிக் காட்டினார்.


1947:

வந்தாரே, கணினியை குலைக்கும் வண்ணத்திப்பூச்சியின் கரு! பிறுகு சுண்டெலி, கிருமிகள் வகையறா.


1974:

கவனமாகப் படிக்கவும். பின்னூட்டத்தில் கருத்து தெரிவிக்கவும். கேப்டன் விக்ரம் 

பட்ரா பிறந்த சுபதினம். 25 வயது கூட ஆகாத இந்த வீர இளைஞன் கார்கில் போரில் ‘ஜய் மாதா தீ’ என்ற தாய் வணக்கம் கூறிய படியே, வீரமரணம் எய்தார், ஜூலை7,1999 அன்று.  அவரை, பாகிஸ்தானி ராணுவம் கூட ‘ஷேர்ஷா’ [சிங்கப்பெருமாள்] என்று தான் செல்லப்பெயரால் அறிந்திருந்தார்கள். இந்தியாவின் தலையாய ராணுவ விருது, ‘பரம வீர் சக்ரா’ அவருக்கு 15 08 1999 அன்று அளிக்கப்பட்டது. சோகமே உருவான அவரின் தந்தை பெற்றுக்கொண்டார்.

இம்மாதிரியான பிரிட்டனின் விருது, விக்டோரியா க்ராஸ் (செப்பு மெடல்). அந்த நாட்டு அரசு ‘ஜேக்கா’ என்ற வீரருக்கு அளித்த விக்டோரியா க்ராஸ் விருது வழங்கும் போது பிரகடனம் செய்யும் வருணனை ஹிட்லரைக்கூட உணர்ச்சி வசப்படவைக்கும்! ஒரு பேச்சுக்கு சொன்னேன். நம் ஷேர்ஷாவை பற்றி பக்கம் பக்கமாக எழுதவேண்டும் என்று ஆசை. உங்கள் பதிலை பொருத்து இருக்கிறது.


1976:

சைனாவின் அதிபர் மாஸேட்டுங்க் 82 வயதில் மறைந்தார். ஒரு சகாப்தம் ஓவர்.


1993:

அப்பாடா! ஒருபாடாக, பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை கணக்கில் சேர்த்துக்கொண்டது [ரெகனைஸ்ட்]. பதில் மரியாதையும் இஸ்ரேல் அளித்தது. ஆனால் சண்டை, சச்சரவு ஓயவில்லை.


1998:

இந்தியன் கிரிக்கெட் டூர் ரத்து. இங்கிலாந்தின் கேப்டன் கூச், மேலும் அவரது ஏழு சகபாடிகளுக்கு வீஸா மறுக்கப்பட்டது, இந்திய அரசால். காரணம்: அவர்கள் நிறவெறி தென்னாப்பிரிக்காவில் விளையாடினார்கள்.

இன்றைய நிலையில் கிரிக்கெட் கூறு கெட்டுவிட்டது. சகுனிகளுக்கு தான் காலம்!


“ஒரு குழந்தை மலரல்ல, பூ ஜாடியை அலங்கரிக்க! கொழுந்து விட்டு எரிய வேண்டிய கனல்.”

ஃப்ரான்கோ  ரபிலே



இன்னம்பூரான்


2010/9/8 Geetha Sambasivam <geetha...@gmail.com>

N. Kannan

unread,
Sep 8, 2010, 7:56:06 PM9/8/10
to mint...@googlegroups.com
2010/9/9 Innamburan Innamburan <innam...@googlemail.com>

> 1947:
>
> வந்தாரே, கணினியை குலைக்கும் வண்ணத்திப்பூச்சியின் கரு! பிறுகு சுண்டெலி, கிருமிகள் வகையறா.
>

என்ன? 1947-ல் கணினி வைரஸ்ஸா?

பிறுகு சுண்டெலி என்றால் என்ன? (பிருகு மகராஜ்?)

க.>

ஆராதி

unread,
Sep 8, 2010, 9:02:02 PM9/8/10
to mintamil
திரு இன்னம்பூராரே
கேப்டன் விக்ரம் பட்ராவைப் பற்றி மேலும் தெரிவிக்கவும்

அன்புடன்
ஆராதி

2010/9/9 N. Kannan <navan...@gmail.com>

vadivelu kaniappan

unread,
Sep 8, 2010, 9:18:19 PM9/8/10
to mint...@googlegroups.com
அன்புடையீர்! வணக்கம். ஷேர்ஷா என்கின்ற கேப்டன் விக்ரம் பட்ராவைப் பற்றி மேலதிகம் தகவல்கள் அளித்திடுங்கள். என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.

9 செப்டெம்ப்ர், 2010 6:32 am அன்று, ஆராதி <aara...@gmail.com> எழுதியது:

Geetha Sambasivam

unread,
Sep 9, 2010, 6:28:51 AM9/9/10
to mint...@googlegroups.com
ஷேர்ஷா விக்ரம் பட்ராவைப் பற்றிப் பத்திரிகைகளில் கொஞ்சம் கொஞ்சம் படிச்சதுதான். எழுதுங்க விபரமாய். தெரிந்து கொள்ளும் ஆவலுடன் காத்திருக்கேன்.

2010/9/9 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Sep 9, 2010, 1:47:06 PM9/9/10
to mint...@googlegroups.com

ஸெப்டம்பர் 10

1823:

சைமன் பொலிவர் பெரு நாட்டின் அதிபர் ஆன தினம். மற்ற நாட்டு தலைவர்களை பற்றி அறிவது நலமே -கரிபால்டி, மாஜினி, கவூர், டிகால், சர்ச்சில், அப்ரஹாம் லின்கன், பெரான், பிஸ்மார்க், லெனின்,ஃபிடல் காஸ்டரோ வகையறா. அது நமக்கு தன்னடக்கத்தையும் அளிக்கும். பொலிவர் மாவீரன்; நிகரற்ற நாட்டுப்பற்று கொண்டவர்; ஸர் ஆர்தர் க்வில்லர்-கூச் எழுதிய பொலிவரின் வரலாறு படிக்கவேண்டும்.

1846:

தையல் இயந்திரத்துக்கு காப்புரிமை பெற்றார், எலியாஸ் ஹோவ்.

1858:

’55 பண்டோரா’ என்ற வான் மண்டல அமைப்பை கண்டறிந்தார், ஜார்ஜ் மேரி ஸேர்ள்.

1918:

‘ரின் டின் டின்’ பிறந்த தினம். உலகப்புகழ் பெற்ற சினிமா ‘நாய்’கன்! நேற்று ஒருவர் என்னிடம் சொன்னார், ‘நாயை குளிப்பாட்டி நடுவீட்டீல் வைத்தாலும் நரகலை நாடும்’ என்று. முட்டாள். எங்கள் ‘மிஸ்டர் பிக்கிள்ஸ்’, 'லேடி' ‘ பாட்ச்’, ‘வில்ஸ்’ ஆகிய பட்டிகள் நேயத்தில், நன்றியில், மனிதர்களை மிஞ்சியவர்கள். ‘ரின் டின் டின்’ பல அவதாரங்கள் எடுத்த அதிசய நாய். காண்க, அவர் பெருமிதம்:

http://www.rintintin.com/


1967:

பூகோள அமைப்பு நாட்டுப்பற்றின் அடித்தளம், கலாச்சாரத்தின் வெளிப்பாடாக, பெரும்பாலும். ஆனால், ஸ்பெயின் நாட்டை அண்டிய ஜிப்ரால்டர் மக்கள் வாக்களித்தது, பிர்ட்டீஷ் மேலாண்மை நீடிக்கவேண்டும் என்று. இன்றும் அதே நிலைப்பாடு.

2000:

நேற்று கேப்டன் விக்ரம் பாட்ராவின் வீரமரணம் பற்றி பார்த்தோம். நாளை  மற்றொரு சாகசம் காண்போம். இன்று ஒன்று. ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் இனவெறி பேயாட்டம் ஆடும். (நாம் திருந்தாவிடில், தமிழ்நாட்டில் கூத்தாடும் இனபேதம் இனவெறியாக உரு எடுத்து கூளியாக மாறும், அரசியல் கட்சிகளின் தேர்தல் அணுகுமுறையால்; இது என் கருத்து.) அப்படிப்பட்ட இனவெறியாட்டம் ஸீரலியோன் என்று குட்டி நாட்டில் ஆறு ஆங்கில வீரர்களை பிணைக்கைதியாக்கினர். அது பெரிதல்ல. அவர்கள் சித்திரவதை மன்னர்கள். அசாத்திய துணிச்சலுடன் காட்டில் புகுந்து அவர்களை மீட்க சென்ற படையின் ‘வானிலிருந்து குதிப்போன்’ [பாராட்ரூப்பர்] வீர மரணம் எய்தினார். 11 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த ராணுவ வீரர்களுடன் இணைந்து பணியாற்றிய வீரர்கள் சிலருடன் எனக்கு அறிமுகம் உண்டு. நேரில் பல விஷயங்கள் கேட்டறிந்தேன்.  ஸீரலியோன் வைரச்சுரங்கம். அதை கைப்பற்றவே இராக்கதர்கள் ஆட்சி. அதனால் தான் வைரத்தை ரத்தக்கறைப்பட்டது என்பர். அது உண்மை.

2002: நடு நிலை நாயகனும், கறுப்புப்பண பொக்கிஷதாரும் ஆன ஸ்விட்சர்லாந்து,’ லேட் லத்திஃப்பாக’ ஐ.நாவின் 190வது அங்கத்தினாராக சேர்ந்தது.

2006: ‘டோங்கா’  ‘டோங்கா’  என்று கேள்விப்பட்டது உண்டோ? அது ஒரு தீவுக்கூட்டம். மன்னராட்சி. அதன் மன்னர் பிரான் தெளாஃபிகுவா மறைந்த தினம் அவர் இந்தியா வந்த போது, நாடே தலை உயர்த்தி அவரை பார்த்தது! அத்தனை உயரம்! பக்கவாட்டிலும் பார்த்தது; அத்தனை தடிமன். இத்தனைக்கும் ஸாஃப்ட். அவர் கூட வந்தவர்களும் ஜாம்பவான்கள். ரகசியம்: குலை குலையாக வாழைப்பழம் சாப்பிட்டார்கள்!

2008:

வரலாற்றிலேயே மாபெரும் விஞ்ஞான ஆய்வு என்று அறியப்பட்ட பெரிய ஹாட்றன் கொல்லைடர் [The Large Hadron Collider at CERN]என்ற சோதனை அமைப்பு உயிர்ப்பிக்கப்பட்ட தினம். சமீபத்தில் பழுது அடைந்து, சீர்திருத்தப்பட்டது.

“சின்ன சின்ன விஷயங்கள் தான் தொல்லை தருகின்றன. யானையிடமிருந்து தப்பலாம்; ஈயிடமிருந்து?

- ஜோஷ் பில்லிங்ஸ்

இன்னம்பூரான்

பி.கு: ‘பரமவீர் சக்ரா’ கேப்டன் விக்ரம் பட் ராவை பற்றி எழுதுகிறேன்; அந்த ஹார்வார்ட் அட்டேக்கர் ‘ப்யூப்பாவா? வைரஸ்ஸா’ என்ற விவரம் சரியாக எழுதப்படவில்லை. ஆய்வு செய்து சொல்கிறேன், கண்ணன்.


2010/9/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Sep 10, 2010, 7:47:59 PM9/10/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
ஸெப்டம்பர் 11
1773:
நம் குழுவில் வாதங்கள் பல, விதண்டாவாதங்கள் உள்பட, நிகழ்ந்தவண்ணம் உள்ளன. சுவை கூட்டுவதுடன், நட்பு பெருகி வருகிறது. ஆங்கிலத்தில் ‘பாலிமிக்ஸ்’ என்பார்கள், சுருக்கமான, விறுவிறுப்பான ‘காமன் எரிந்த கதை’ வகை கட்டுரைகளை. அவை அவையையே குலுங்கவைக்கும். பெஞ்சமின் ஃப்ரான்க்ளின் என்ற அமெரிக்க அரசியல் வல்லுனர் ‘சாம்ராஜ்யத்தை குறுநில அரசாக குலைப்பது எப்படி?’ என்ற எள்ளல் கட்டுரையை பிரசுரித்த தினம். அது அன்றைய பிரிட்டீஷாரை கேலி செய்தது. எனினும் என்றும் பொருத்தமானது; அதுவும் நமக்கு. முழுக்கட்டுரையை நிதானமாக படித்து, நம் பிரதமருக்கு, பின்னூட்டத்துடன் அனுப்பவும். கட்டுரை:

http://www.history1700s.com/articles/articicle1100.shtml

1893:
உலக சமய மன்றம் கூடிய தினம். கதாநாயகர் ஸ்வாமி விவேகானந்தர். ஆங்கிலத்தில் ‘எலெக்ட்றிஃபைட்’ என்பார்கள். தமிழாக்கம்: மகுடிக்கு மயங்கிய நாகம்’. மற்றொரு இடத்தில் (அதுவும் எழுதப்படவேண்டும்.) திரு.வி.க. அவர்களின் வாக்கு இது. மேலதிக விவரங்களை “தரிசித்தேனே!  ஸ்வாமி விவேகானந்தரை!’ என்ற இழையில் எதிர்பார்க்கலாம்.

1906:
தென்னாஃப்பிரிக்காவில் அஹிம்சை போராட்டத்திற்கு, ‘ஸத்யாக்ரஹம்’ என்று அண்ணல் காந்தி நாமகரணம் செய்த தினம்.

1917:
ஃபிலிப்பன்ஸ் அதிபரும், உலக ரிக்கார்ட் லஞ்ச மஹாபிரபுவும் ஆன ஃப்ர்டினாண்ட மார்கோஸ் பிறந்த தினம். அவருக்கேற்ற மனைவி இமெல்டா செருப்பு நாயகி. அவருக்கு ஏற்ற நண்பர், அமெரிக்க நடிகரும், அதிபரும் ஆன ரொனால்ட் ரீகன்! ஆண்டவா!

1921:
இன்றைய தினம், நாம் ஒரு பொக்கிஷத்தை பறி கொடுத்தோம். மஹாகவி சுப்ரமணிய பாரதியை இழந்தோம். அவரை காண கண் கோடி வேண்டும். கேட்க லக்ஷக்கனக்கில் திரளவேண்டும். புகழ திரை கடலோடவேண்டும். அவருக்கு அடி பணிய, புறப்பொருள் வெண்பாமாலையின் மறவனைப் போல, சிரம் கொய்து அர்ப்பணிக்கவேண்டும். ஆனால் என் செய்தோம்? தகனக்கிரியைக்குக் கூட எண்ணி சிலர் மட்டும் போகட்டும் என்று வாளாவிருந்தோம், சர்வேசா!

உங்களுக்கு மஹாகவி மகுடி ஊதிய கதை தெரியுமோ?

அன்று... என்றால் ஏப்ரல் 6, 1919. உலக வரலாற்றில் வேறு ஒரு தினமே இல்லை, ஐயா. சென்னை சத்யாகிரஹநாள் விழாக்கோலம் பூண்டது. [எழுத வேண்டிய நிகழ்வு] குஹானந்த நிலையத்தில் பெருங்கூட்டம். தற்செயலாக மஹாகவி வருகிறார். திரு.வி.க. அவர்கள் அவரை பாடச்சொல்கிறார். அவரும், நீர் மல்க, ‘முருகா! முருகா!’ என்று பாட, அவை வெல்லக்கட்டியாக உருகிவிடுகிறது. சத்தமில்லாமல், ரத்தமின்றி வரும் யுத்தத்திற்குத் தான் இந்த மகுடி.

1960:
வில்மா ருடால்ஃப் என்ற அமெரிக்க வீராங்கனை, ரோம் ஒலிம்பிக்ஸ்சில் மூன்றாவது தங்கமெடல் பெற்று உலகை அசத்தினார்.

1973:
இந்தியவரலாறு கூறும், முதல் குடியரசு தேர்தல் முறையில் வெற்றி கண்ட கம்யூனிஸ்ட் அரசு, கேரளாவில் என்று. சிலி நாட்டின் அதிபர் ஸால்வடார் அல்லெண்டெ தான் முதன்முதலாக குடியரசு தேர்தலில் கெலித்த மார்க்ஸிஸ்ட் தலைவர். ராணுவம் புரட்சி செய்து அவரை கொன்ற தினம். பின்னணி சூழ்ச்சிகளும், வெளியார் தலையீடும் அநாகரீகமானவை.

1982:
நடிகர் ஸ்ரியா பிறந்த தினம்.

1983:
ஏ.கே. செட்டியார் அவர்கள், நகரத்தார் சமுதாயத்திற்கு ஒரு அணி. அண்ணல் காந்தியை பற்றி அவர் தயாரித்த ஆவணப்படம் காணாமல் போனது. கலிஃபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்டது என்று ஞாபகம்.

2001:
9/11 என்றால் எல்லாருக்கும் புரியும். அல் க்வைதா ந்யூ யார்க் நகரின் உலக வணிக மையத்தின் இரு கோபுரங்களின் ஊடே விமானங்களை செலுத்தி, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை கொன்ற தினம். இந்த கொடுமை நிகழ்வின் கதாநாயகர்கள் அந்த நகரின் தீயணைப்பு படையினர். சாகசமல்ல; துணிவு அல்ல; வீரம் அல்ல. கடமை அல்ல. அவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய தியாகம். ஏதோ ஒரு தேவதை ஆணையிட்ட மாதிரி, உயிரை திரணமாக மதித்து, எதிர்பாராமல் வந்த ஆபத்தை எதிர்த்து, திறனுடன் போராடினர்- வரிசை: ஜேக்கா, கேப்டன் விக்ரம் பட்ரா, ஸியரோலியோனில் ஆங்கிலேய வீரர்கள், ந்யூ யார்க் தீயணைப்புப் படை வகையறா. நிச்சயமாக, நீங்கள் அன்றைய ந்யூ யார்க் டைம்ஸ் படிக்கவேண்டும். கீழே:

2003:
ஸ்வீடன் சாந்தமான நாடு; எனினும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர், அன்னா லிண்ட்ஹ் குத்திக்கொல்லப்பட்டார், இன்றைய தினம். பின்னணியில் போஃபோர்ஸ் பீரங்கி மர்மம் என்பர், சிலர்.

2005:
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் ஏழாம் பொருத்தம். காசா என்ற பாலஸ்தீன இடத்தை 38 வருட ஆக்ரமிப்புக்கு பிறகு, இஸ்ரேல் காலி செய்தது.

“பெரும்பாலும் சான்றோர்கள் தனிமையில் வாழ்கிறார்கள். ஒருகால், அந்த தனிமை தான் அவர்களின் படைப்பாற்றலுக்கு மூலகாரணமோ! ஒரு ஃபோட்டோவைப் போல, பக்குவத்திற்கும் இருள் தேவையோ?”
- யூசுஃப் கார்ஷ் - உலக புகழ் வாய்ந்த ஃபோட்டோகிராஃபர். 
இன்னம்பூரான்



2010/9/9 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

ஆராதி

unread,
Sep 10, 2010, 8:16:28 PM9/10/10
to mintamil
திரு இன்னம்பூராரே
உங்களுடைய இன்றைய தினச் செய்திகளைப் போல யூசுப் கார்ஷின் பொன்மொழியும் என்னைக் கவர்ந்தது. அது உங்களுக்கும் பொருந்துமோ?


அன்புடன்
ஆராதி

2010/9/11 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Tthamizth Tthenee

unread,
Sep 11, 2010, 12:40:44 AM9/11/10
to mint...@googlegroups.com
 நம்முடைய  புகைப்படங்களை காமிராவின் பின்னால் இருந்தே இயக்கி நம்மையெல்லாம் புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரர்   ,ஆனால் காமிராவின் பின்னால் இருப்பதால்  அவருக்கு  நம்மை விட அதிகமாக  தெரிகிறது,
 
அது போல  இன்னம்புரார் அனுபவம் என்னும் புகைப்படக் கருவியின்  பின்னால் நின்று கொண்டு  நம்மையெல்லாம்
 “விழிக்க“  சிரிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார்
 
தமிழ்த்தேனீ
அன்புடன் 
 
--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Innamburan Innamburan

unread,
Sep 11, 2010, 7:08:17 PM9/11/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஸெப்டம்பர் 12


1846

“எப்படி ஓடினரோ!” படித்தீர்களோ? ராபெட் ப்ரெளனிங்க் புகழ் வாய்ந்த கவிஞர். எலிஸெபெத் பேர்ரெட் மேலும் புகழ் வாய்ந்தவர்; கொஞ்சம் மாற்றுதிறனாளி. அதனால் என்ன? ராபெட் ப்ரெளனிங்குடன் ஓடிப்போய்விட்டார்.


1897

ஐரீன் ஜோலியட் க்யூரி பிறந்த தினம். தாய், தந்தை, கணவர், அம்மையார் எல்லாரும் நோபல் பரிசல் பெற்றவர்கள். மகவுகளும் விஞ்ஞானிகள். அடேயப்பா!


1913

உங்களுக்கு ஜெஸ்ஸீ ஓவன்ஸ் தெரியுமோ? 1936 ஒலிம்பிக்ஸ்சில் நான்கு தங்க மெடல் வாங்கிய ஆஃப்ரோ-அமெரிக்கன். அக்காலம், கறுப்பர்கள் அமெரிக்க ‘தலித்கள்’ தான். இருந்தும் பாருங்கள். இந்தியாவில், இப்படியெல்லாம் தருணம்  அளிக்கும் காலம் வருமோ, ஐயா? 


1919

அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மன் தொழிலாளிக்கட்சியில் சேர்ந்தார். வந்தது வினை.


1933

சிவப்பு விளக்கெல்லாம் பச்சை தான் என்று அறியீரோ? ப்ளூம்ஸ்பரி நகரில் சிக்னலுக்கு காத்திருந்த லியோ ஸ்ஸிலார்ட் என்பவருக்கு, ஒரு பச்சை விளக்கு மின்னலடித்தது, மூளையில்! அணுசக்தி தொடரியக்கம் இப்படி ஜென்மம் எடுத்தது அறிக. இதே மாதிரி தான் ஆர்க்கிமிடூசுக்கு ஒரு பொருளின் வால்யூம் பற்றிய தெளிவு, ஸ்னானம் செய்யும் போது! நிர்வாணமாக ( அப்டித்தான் குளிப்பாஹ.), ‘யுரேகா’ (கண்டேன்! கண்டேன்!) என்றுக்கூவிக்கொண்டு ஓடினாராம். அமெரிக்காவில் மன்ஹாட்டன் திட்டம் ரக்சியமான அணுசக்தி ஆய்வு. அணுவை பிளந்தால், அணுகுண்டு தயாரிக்க இயலும். அதற்கு, அந்த ஆய்வில் அணு குலையும் க்ஷணத்தை க்ரிடிகாலிட்டி என்பர். நிகழும் நேரம் அறியாத நிலை. ஒரே டென்ஷன். என்ரிகோ ஃபெர்மி என்றை இளம்விஞ்ஞானி தான் டீம் லீடர். இது லன்ச் உண்ட பிறகு தன் நிகழும் என்று உணவருந்த போய்விட்டார். அப்படித்தான் நடந்தது? கனவில் உதித்த விஞ்ஞான சூத்ரம் தெரியுமோ? கேட்டா...!


உடனே மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம் என்றெல்லாம்  பேச்சுப்படவேண்டாம். மறுப்பு எழுத, கை வலிக்கும்!


1943

மைக்கேல் ஒண்டாட்ஜி என்ற எழுத்தாளர் பிறந்த தினம். சிங்களத்தை சார்ந்தவர்.



1948

போலீஸ் ஆக்க்ஷன் என்பர். ஜின்னாவின் மறைவுக்கு காத்திருந்த மாதிரி, இந்தியா ஹைதராபாத் சமஸ்தானத்தின் மீது படையெடுத்தது. எனக்கு நினைவில் இருக்கிறது. ஒரே நாளில் மீர் லைக் அலி என்ற பொம்மை திவானும், ஸையத் ரஸ்வி என்ற ரஸாக்கர் அரக்கனும் பாகிஸ்தானுக்கு பறந்தோடி விட்டனர். இதன் ஹீரோ ஜெனெரல் செளத்ரியின்  அறிமுகம் பிற்காலம் கிடைத்தது. 

இரண்டு செவி வாய் செய்திகள்: 1. வருமுன் காப்போனாக, ராஜாஜி, சந்தேஹபோஸ்தமன எல்லையோர அதிகாரிகளை தென்கோடி சீமைக்கு அனுப்பி விட்டார். 2. ஆற அமர, நேரு ஹைதராபாத் வந்தார். விமான தளத்துக்கு மாநில அதிபரான (பேருக்கு) நைஜாம் வரவேண்டும். ‘His Exalted Highness’ தயங்கினார். பரவாயில்லை என்று நேரு விட்டு விட்டார். விடாக்கண்டரன படேல் வந்த போது, நைஜாம், நிர்பந்திக்கபட்டார். யாரவது ஆதாரம் இருக்கிறதா? என்று தேடவும்.


1974

எதியோப்பிய மஹாராஜாவும், ரஸ்தஃபரி என்ற இயக்கத்தலைவரும் ஆன ஹைல் ஸலீஷீ, 58 வருட ஆட்சிக்கு பிறகு, ராணுவ புரட்சியில் தூக்கி அடிக்கப்பட்டார். உலக சமுதாயத்தில் அவருக்கு மிக்க மதிப்பு உண்டு, பதவியில் இருந்த போது. அக்காலம் சென்னைக்கு வந்திருந்தார். வரவேற்கவேண்டிய மாநில அதிபர் ஶ்ரீ ஶ்ரீபிரகாசாவின் மகன் இறந்து போனதால், அவரால் அந்த கடமையை செய்யமுடியவில்லை. நேரு, எதிர்கட்சியின் தலைவராக இருந்து கொண்டு தனக்கு தீராத தலைவலி கொடுத்த ராஜாஜியை வேண்டினார். முன்னாள் கவர்னர் ஜெனெரல் அல்லவா. அருமையாக அந்த கடமையை செய்தார்.


1977


தென்னாஃப்பிரிக்கவின் கறுப்பர்களின் விழிப்புணர்ச்சி தலைவர் ஸ்டீவ் பிக்கோ போலீஸ் கஸ்டடியில் இருந்த போது இறந்தார்.


2007

'13'  தீநிமித்தமா? பிலிப்பைன்ஸ் 13 வது  (மாஜி)அதிபர் ஜோச்ஃப் எஸ்ட்றடா கொள்ளைக்குற்றத்துக்காக தண்டிக்கபட்டார். வழக்கம் போல, பிற்காலம் பொது மன்னிப்பு!


2009

மெடல் மன்னன் நார்மன் எர்னெஸ்ட் போர்லாக் என்ற வேளாண் விஞ்ஞானி மறைந்த தினம். இந்தியாவுக்கு பசுமை புரட்சி கொணர்ந்த மஹரிஷி. மெடல் வரிசை: நோபல், அமெரிக்காவின் ‘பாரத ரத்னா’வான அதிபர் அளிக்கம் விடுதலை மெடல், அமெரிக்க நாடாளுமன்றங்களின் தங்க மெடல், இந்தியாவின் ‘பத்மவிபூஷண்’.


“ஓ! நீ கூடவா? நான் மட்டும் தான் என்று நினைத்தேன்! “ என்ற கேட்பின், அது நட்பின் ஜனனம் என்று அறிக.”


- க்ளைவ் ஸ்டேபிள்ஸ் லூயி


இன்னம்புரான்


பி.கு.

பின்னூட்டங்களுக்கு நன்றி. திரு. ஆராதிக்கு இன்றைய மேற்கோள் பதிலளிக்கறதோ? 50/60 வருடங்களுக்கு முன் நான் தொகுத்து வைத்துக்கொண்டது ஒரு மாதம் முன் கிடைக்க, அதிலிருந்து இவை வரவு. அக்காலம், மனைவி, மக்கள், சுற்றம், நண்பர் குழு, ஆஃபீசு, டின்னர், க்ளப் என்றெல்லாம் தனிமையில்லாக்காலம். ஆனால், நான் என்றும் ‘தனித்து’ இருந்தததில்லை. நேரமும் போதவில்லை. மணிக்கணக்காக, ‘இன்றைய தினம்’ கிறுக்கும் இருக பிடித்துக்கொண்டது.



2010/9/11 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
 

ஆராதி

unread,
Sep 11, 2010, 8:14:33 PM9/11/10
to mintamil
திரு இன்னம்பூராரே
இன்றைதின்ம் போலவே இன்றைய அறிஞர் கருத்தும் அருமை. என்னுடன் எல்லோரும் இருக்கிறார்கள். ஆனாலும் மனத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்தத் தனிமை மிகச் சுகமானது. அதனை எவ்வளவு அருமையாகக் கிளைவ் சொற்களில் பிடித்துவிட்டார். நன்றி இன்னம்பூராரே

அன்புடன்
ஆராதி

2010/9/12 Innamburan Innamburan <innam...@googlemail.com>

S.Krishnamoorthy

unread,
Sep 11, 2010, 8:16:06 PM9/11/10
to mint...@googlegroups.com
இரண்டு செவி வாய் செய்திகள்: 1. வருமுன் காப்போனாக, ராஜாஜி, சந்தேஹபோஸ்தமன எல்லையோர அதிகாரிகளை தென்கோடி சீமைக்கு அனுப்பி விட்டார். 2. ஆற அமர, நேரு ஹைதராபாத் வந்தார். விமான தளத்துக்கு மாநில அதிபரான (பேருக்கு) நைஜாம் வரவேண்டும். ‘His Exalted Highness’ தயங்கினார். பரவாயில்லை என்று நேரு விட்டு விட்டார். விடாக்கண்டரன படேல் வந்த போது, நைஜாம், நிர்பந்திக்கபட்டார். யாரவது ஆதாரம் இருக்கிறதா? என்று தேடவும்.
கஷ்மீர் - அதை நான் பார்த்துக்கொள்ளுகிறேன் - இது நேரு.  இன்றும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஹைதராபாத் - இது உள்நாட்டு விவகாரம்.  கிட்ட வராதீர்கள்.  நான் பார்த்துக்கொள்ளுகிறேன் - வல்லபாய் படேல். பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
வழிப்போக்கன்

2010/9/12 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Tthamizth Tthenee

unread,
Sep 12, 2010, 10:48:03 AM9/12/10
to mint...@googlegroups.com

உடனே மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம் என்றெல்லாம்  பேச்சுப்படவேண்டாம். மறுப்பு எழுத, கை வலிக்கும்!


 
நான்  ஒண்ணுமே  மறுப்பே  சொல்லலையே
 
அணுவை பிளந்தால், அணுகுண்டு தயாரிக்க இயலும். அதற்கு, அந்த ஆய்வில் அணு குலையும் க்ஷணத்தை க்ரிடிகாலிட்டி என்பர். நிகழும் நேரம் அறியாத நிலை. ஒரே டென்ஷன். என்ரிகோ ஃபெர்மி என்றை இளம்விஞ்ஞானி தான் டீம் லீடர். இது லன்ச் உண்ட பிறகு தன் நிகழும் என்று உணவருந்த போய்விட்டார். அப்படித்தான் நடந்தது? கனவில் உதித்த விஞ்ஞான சூத்ரம் தெரியுமோ? கேட்டா...!
 
அப்பிடீன்னு  நீங்களே  ஒப்புக்கொண்ட பிறகு நான் சொல்ல  என்ன இருக்கிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Sep 12, 2010, 7:29:39 PM9/12/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஸெப்டம்பர் 13

122

இங்கிலாந்தில் ரோமானியர்கள் ‘ஹாட்ரியன் சுவர்’ எனப்படும் கோட்டைச்சுவர் எழுப்பத்தொடங்கினர். ரோமானிய சுவர்களில், குறிப்பிட்ட இடைவெளிகளில், கோட்டைக்கதவுகள்: கேட்: இடத்தை பற்றி நோட்டம் விடாமல்,அளவு மட்டும் பார்த்ததால், ஒரு கேட் அதல பாதாளத்தை நோக்கி!

1503

மைக்கேல் ஏஞ்செலோ என்ற அமரத்துவம் வாய்ந்த சிற்பி டேவிட் என்ற சிலையை வடிக்க தொடங்கினார்.

1592

மைக்கெல் மேந்தைய்ன் என்ற கட்டுரையாளர் மறைந்த் தினம். உரை நடை வகுத்தவர்.

1759

ஜேம்ஸ் வொல்ஃப் ஜெனரல் இறந்த தினம். இறக்கும் தருணம், ஒரு ஆங்கில கவிதை (An Elegy Written in a Country Churchyard) யை ஒப்புவித்து, ‘இந்த வீரமரணத்தை விட அந்த கவிதை பாடி இருந்தால் எனக்கு மேன்மை’ என்று சொன்ன ரசிகன்.

1766

ஜான் புல் என்றால் இங்கிலாந்து. அங்க்கிள் சாம் என்றால் அமெரிக்கா. இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன பெயர் வைக்கலாம்? ‘அங்க்கிள் சாம்’ என்ற அமரத்துவம் பெற்ற சாமுவேல் வில்ஸன் பிறந்த தினம். மேலதிக விவர்ங்களுக்கு சில நாட்கள் காத்திருக்கவும்.

1894

ஜே.பீ. பீரிஸ்ட்லி என்ற ஆங்கில கட்டுரையாளர்/நாடக ஆசிரியர்/ நாவல் ஆசிரியர் பிறந்த தினம்.

1898

ஹான்னிபால் குட்வின் ஸெல்லுலாய்ட் ஃபோட்டோ ஃபில்முக்கு காப்புரிமை பெற்றார்.

1992

உலக ரிக்கார்ட்: 57.8°C (136.04°F) வெப்பம். லிபியாவின் அல் அஸிஸியா என்ற இடத்தில்.

1940

இங்கிலாந்து பக்கிங்க்ஹாங்க் அரண்மனை மீது ஜெர்மானிய குண்டு வீச்சு.

1943

சியாங்கே ஷேக் சைனாவில் அதிபர் ஆனார். காலாகாலத்தில் இறக்கம் கண்டார்.


1971

கம்யூனிஸ்ட் சைனாவின் மார்ஷல் லின் பியோவ் (தலைவர் மா ஸே துங்க்க்கு அடுத்தபடி தலைவர்) நாட்டை விட்டு ஓடினார். அவர் சென்ற விமானம் நொறுங்கியது.

1989

மதத் தலைவர் டெஸ்மாண்ட் டுடு  நிறவெறியை எதிர்த்து மாபெரும் ஊர்வலம் நடத்தினார்.


1997

அன்னை தெரெஸாவின் உடல் நல்லடக்கம்

2001

9/11 அன்று நடந்த கொடுமையின் விளைவாக, நிறுத்தப்பட்டிருந்த விமானப்போக்குவரத்து மறுபடியும் தொடங்கப்பட்டது.

2007

பழங்குடியினரின் உரிமை சாசனம் பிரகடனப்பட்டது, அமெரிக்காவில். அப்றம், சப்பரம்!


“Standard English is tasteless stuff”

- J.B.Priestley


இன்னம்பூரான்



2010/9/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

உடனே மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம் என்றெல்லாம்  பேச்சுப்படவேண்டாம். மறுப்பு எழுத, கை வலிக்கும்!


 

Tthamizth Tthenee

unread,
Sep 12, 2010, 11:13:47 PM9/12/10
to mint...@googlegroups.com
இன்றைய தினம் இவ்வளவு  விசேஷமான  செய்திகளுக்கும் மேல் மிக விசேஷமான  செய்தி ஒன்று உண்டு 
 
திரு செல்வமுரளி அவர்களுக்கு  இன்றைய தினம் பிறந்த நாள்
 
ஆகவே   நண்பர் செல்வ முரளி அவர்களை  நாம் அனைவரும் வாழ்த்துவோம்
 
திரு செல்வமுரளி அவர்களும்,அவருடைய குடும்பத்தாரும்   பூரண ஆயுசுடனும்,ஆரோக்கியத்துடனும் இனிதே வாழெல்லம் வல்ல  இறைவனைப் ப்ரார்த்திப்போம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ஆராதி

unread,
Sep 13, 2010, 12:32:56 AM9/13/10
to mint...@googlegroups.com
செல்வ முரளி சிறப்பெல்லாம் பெற்றுயர்ந்து
வல்மை பெறல்என்றன் வாழ்த்து
 
அன்புடன்
ஆராதி

2010/9/13 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Sep 13, 2010, 12:43:20 AM9/13/10
to mint...@googlegroups.com
சொன்னால் பதிவு ஆகியிருக்குமே! வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

2010/9/13 ஆராதி <aara...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Sep 13, 2010, 12:56:43 AM9/13/10
to mint...@googlegroups.com
தொலைபேசியில்  தொடர்பு கொண்டு வாழ்த்தினேன் திரு செல்வ முரளி அவர்களை

Innamburan Innamburan

unread,
Sep 13, 2010, 8:16:43 PM9/13/10
to mint...@googlegroups.com

ஸெப்டம்பர் 14


786

‘ஆயிரத்து ஒரு கதைகள்’ என்ற அற்புத கதை சொல்லியும், இஸ்லாமிய காலீஃப் மன்னரும் ஆன ஹரூன் அல் ரஷீத் அரியணை ஏறிய தினம்.


1769

அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் என்ற விஞ்ஞானி/எக்ஸ்ப்ளோரர் பிறந்த தினம்.


1814

அமெரிக்க தேசீய கீதம் உருவெடுத்த தினம்.

1879

குடும்பக்கட்டுப்பாடு பற்றி உலகுக்கே விழிப்புணர்ச்சி அளித்த மார்கெரெட் ஸேங்கெர் பிறந்த தினம்.

1886

ஜான் மசர்யக் என்ற செக்கோஸ்லாவிய ராஜதந்திரியும், அரசியல் தலைவருமானவர் பிறந்த தினம்.


1917

ரஷ்யா ‘குடியரசாக’ பிரகடனம்.

1927

இஸடோரா டங்கன் என்ற அமெரிக்க நாட்டிய சிரோன்மணி மறைந்த தினம்.


1940

அமெரிக்காவில் சமாதானம் நிலவும் காலத்திலும் இளைஞர்களுக்கு ராணுவப்பயிற்சி அமலுக்கு வந்தது. இந்தியாவில் நினைத்து, விடப்பட்ட நல்ல ஆலோசனை. இங்கு இது அமலில் இருந்தால், நல்லொழுக்கம் கூடி இருக்கலாம்! 


1948

ஐநா கட்டிடத்துக்கு அடித்தளம் போட்டார்கள். செயல்பாடுகளுக்கு எப்போதோ?

1960

பெட் ரோலியம் ஏறுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு தொடங்கிய தினம். அன்றிலிருந்து உலகை ஆட்டிப்படைக்கிறார்கள்.

1982

க்ரேஸ் கெல்லி பேரழகி, சிறந்த நடிகர். Have you seen Alfred Hitchcock’s ‘The Man who knew too much’? மொனக்கோ மன்னரை மணந்தார். கார் விபத்தில் அவர் இறந்த தினம்.


2001

9/11 பலியானவர்களுக்கு ஆக மாபெரும் கூட்டுப்பிரார்த்தனை.

2003

எஸ்டோனியா யூரோப்பியன் யூனியனில் சேர்ந்தது.

2010

நேற்று தலை சிறந்த தமிழ் இலக்கிய ஆசிரியை ஆர். சூடாமணி மறைந்தார்.


“பட்டி மன்றத்தின் பயன், தன் கருத்து கண்டு கொள்வது. மற்றவரது அன்று.”

- ஆர்ஸன் வெல்லஸ் [ஐயா படா கில்லாடி. ஒரு நாள் அமெரிக்காவையே ஆட்டி படைத்துவிட்டார், தன் வாக்சாதுர்யத்தினால்; போதாக்குறைக்கு ரீட்டா ஹேவர்த் என்ற கனவழகியை மணம் புரிந்துக் கொண்டார்.


இன்னம்பூரான்

பி.கு. இந்திய/தமிழ் சான்றோர்கள், நிகழ்வுகள் பற்றி தேடி வருகிறேன். பொறுத்தாள்க.


2010/9/13 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Sep 14, 2010, 9:18:37 PM9/14/10
to mint...@googlegroups.com
ஸெப்டம்பர், 15

1254
உலகம் சுற்றிய வாலிபன் மார்க்கோ போலோ பிறந்த தினம். இந்தியாவும் வந்திருந்தார். அவரின் பயணக்கட்டுரைகள் மனித வரலாறு அளிக்கும் ஆவணம்.

1616
சமச்சீர் கல்வியாளர்களே! இத்தாலியில், பாமரர்களுக்காக இலவசப்பள்ளி ஃப்ராஸ்கெட்டி என்ற இடத்தில் தொடங்கிய தினம்.

1812
நெப்போலியனின் படை மாஸ்கோவின் க்ரெம்ளின் என்ற பகுதியை பிடித்த தினம். வந்தது வினை. ரஷ்யாவை தாக்கினால், தோல்வி நிச்சியம். குளிர் கொன்றுவிடும். ஹிட்லருக்கும் இந்த அதோகதி தான்.

1831
‘அங்கிள் சாம்’ மை (அமெரிக்காவை) தேடி வந்தார், ஜான் புல்! (இங்கிலாந்து), ஒரு ரயில் எஞ்சின் உருவில். 1831ல் இங்கிலாந்தில் தயாரித்த இந்த நீராவி எஞ்சின் 1981 ஓட்டப்பட்டது, கடைசியாக.

1835
விஞ்ஞான உலகின் அமர தினம். அவ்வுலகில் கொடி கட்டி பறந்த்/பறக்கும்/ என்றும் பறக்கப்போகும் சார்லஸ் டார்வின் தன் வாழ்நாள் ஆய்வு (மனிதன் வந்த வகை) கலகாபோஸ் தீவுகளில் தொடங்கிய தினம்; கப்பலின் பெயர் ஹெச்.எம்.எஸ் பீகில். ஐ.ஏ.ஏஸ்.க்கு படிப்பவர்கள் கவனிக்கவும்.

1851
கோஸ்டாரீக்கா, குடாமெலா, ஹொண்டுராஸ் ஆகியவை ஸ்பெயின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றனர்.

1857
தொண்டு மனப்பான்மையுள்ளவர்களுக்கு, பதவி உயர்வு ஒரு பொருட்டல்ல, ராஜாஜியை போல். வில்லியம் டாஃப்ட் என்ற அமெரிக்க அதிபர், பிற்காலம் தலைமை நீதிபதியாக செயலாற்றினார். அவர் பிறந்த தினம்.
ஐஸன்ஹோவர் என்ற ராணுவத்ததலைவர்், அமெரிக்க அதிபரானார். பிற்காலம் கொலம்பியா பல்கலைத்தலைவராகப் பணி புரிந்தார். அஷுடோஷ் முகர்ஜி தெரியுமோ?

1860
நாம் பொறியலாளர் தினமாகக் கொண்டாடும் தினம்; பாரதரத்னா ஸர்.எம் விஸ்வேஸ்வரையா ஸீ.ஐ.இ என்ற சான்றோனின் ஜன்மதினம். ஆயுள் காப்பீடு (இன்ஷூரன்ஸ்) கழகம், விதிகளை தளர்த்தி, ஒருவர் காலம் ஆனப்பிறகு தரவேண்டிய தொகையை, வீடு தேடி வந்து, இவருக்கு தந்து பெருமை தேடிக்கொண்டது. ஏனெனின், இவர் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து, இறுதி (102) வரை மும்முரமாகப் பணி புரிந்தவர்.  பொறியல் துறையின் தந்தை ஆகிய இவர் தான் கிருஷ்ணசாகர் ஸாகர் அணைக்கட்டு கட்டியவர். அவர் கட்டிய அணைக்கட்டுகள் பல; அவை இன்றும் பலத்துடன் இயங்குகின்றன. நாணயமான அரசியலுக்கு மைசூர் ராஜ்யத்தில், திவானாகவும் தொண்டு புரிந்து, வித்திட்டவர். அவர் தொட்டதெல்லாம் பொன்னாகும், சொந்த வங்கிக்கணக்கைத் தவிர. எளிய வாழ்க்கை. உன்னத நெறி. இவரின் வயது, சில இடங்களில் தவறாக பதிவாகி இருக்கிறது!

1876
பிரபல வங்காள கதாரிசிரியர் ஷரத் சந்திர போஸ் அவர்களின் ஜன்மதினம்.

1883
மும்பையில் பாம்பே இயற்கை ஆர்வல மன்றம் நிறுவப்பட்ட தினம். அடைப்பான், புல்புல், மைனா, தேன்சிட்டு தேடுவோர் அங்கு செல்க. அவர்களின் இலச்சினை ஹார்ன்பில் என்ற பறவை. அதன் அலகுக்கு மண்டையை பிளக்கு ஆற்றல் உண்டு. ஹெல்மெட் அணியவும். ஜே.ஸி.டேனியல் அங்கு பெரும்பணி புரிந்த என் நண்பர்.



1885
‘ஜம்போ’ என்றால் யானை. காரணப்பெயரா? அமெரிக்காவில் பீ.டீ. பார்னம் சர்க்கஸ்  புகழ் வாய்ந்தது. அவர்களின் சாகஸக் களிறு, ‘ஜம்போ’. இந்தியாவில் யானை கொன்ற ரயில் வண்டிகள் என்று கீர்த்தி. ஐயோ பாவம்!  ‘ஜம்போ’ ரயிலில் அடிப்பட்டு 24 வயதில் இறந்த தினம்.

1890
ஆங்கிலத்தில் துப்பறியும் நாவல்கள் புகழ் அகாதா க்றிஸ்டி பிறந்த தினம்.

1909

அறிஞர் அண்ணா பிறந்த தினம். தமிழக அரசியுல் வரலாற்றில் அழியா புகழ் பெற்றவர்.


1916
போரில் டாங்கிகள் முதன்முறையாக பயன்படுத்திய தினம்.

1935
யூதர்களின் குடியுரிமை ஜெர்மனியில் பறிக்கப்பட்டது. முரண் அமைப்பு ஸ்வஸ்திகா ஜெர்மனியின் இலச்சனை ஆனது.

1940
கும் குமா அடி! ராயல் ஏர்ஃபோர்ஸ் ஜெர்மனியின் விமானப்படையான லுஃப்ட்வாஃப் பை, மின்னல் வேகத்தில் முறியடித்தது. எல்லாம் சர்ச்சிலின் வியப்புக்குரிய மேலாண்மை.

1959
‘வந்தனன்! வந்தனன்’ என்று அமெரிக்காவுக்கு முதன்முறையாக  சோவியட் தலைவர் நிகிட்டா குருஷ்ஷேவ் வந்த தினம்.

2007
ஐ.நா. அகில உலக குடியரசு தினம் என இந்த தேதியை பிரகடனப்படுத்தி சொன்னதாவது:

“...
“ while democracies share common features, there is no single model of democracy and that democracy does not belong to any country or region...
democracy is a universal value based on the freely-expressed will of people to determine their own political, economic, social and cultural systems, and their full participation in all aspects of life.

எனக்கு புரியவில்லை. சைனாவும் முணுமுணுத்தது!

2008
‘லேஹ்மன் சகோதரர்கள்’ என்ற நிதி நிறுவனம், அமெரிக்காவில் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து, முதலாளித்துவத்தின் பலஹீனத்தை முன் வைத்தனர். சாய்ந்தது பொருளாதார கோபுரம்; கொழுத்தனர் பண முதலைகள்!

“நற்பண்பின் விலை சூன்யம்; அதை வைத்து எதையும் வாங்கலாம்.”
- மாண்டெஸ்க்யூ

இன்னம்பூரான்


2010/9/14 Innamburan Innamburan <innam...@googlemail.com>:


ஆராதி

unread,
Sep 14, 2010, 10:13:52 PM9/14/10
to mintamil
திரு இன்னம்பூராரே

நற்பண்பின் விலை சூனியமா?
சூனியத்திற்கு உள்ளே இருந்து
ராஜியத்தை ஆளுகிற சூட்சமமா?

உங்களுக்கு அந்தச் சூட்சமம் புரிந்திருக்கிறது.


அன்புடன்
ஆராதி

2010/9/15 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Dhivakar

unread,
Sep 15, 2010, 1:38:21 AM9/15/10
to mint...@googlegroups.com
திரு விஸ்வேஸ்வரய்யாவில் 150 ஆவது பிறந்த தினம் என்று இன்றைய ‘தி ஹிண்டு’
பேப்பர் பெரிய பெரிய கட்டத்தில் கட்டுரைளெல்லாம் எழுதித் தள்ளுகிறது..
(இவர்களையெல்லாம் ‘தி ஹிண்டு’ பத்திரிகை ஞாபகம் வைத்திருப்பதே பெரிய
விஷயம்தான்)

பாரதரத்னா வை நேரு கையால் வாங்கியவர். அவரது சிறு பால்யத்தில் மிக
ஒல்லியாக இருத்தலைப் பார்த்து, இந்தப் பையன் 30 வயசு தாங்காது என ஒரு
சமுஸ்க்ருத ஆசிரியர் சொல்லிவைத்தாராம். ஆனால் தனது நூற்றாண்டு விழாவைத்
தானே காணும் வாய்ப்பைப் பெற்றதாக இன்றைய நாளிதழ் கூறுகிறது. (1955 இல்
போட்டோவில் கூட (95 வயது) ஒல்லிதான். எப்படித்தான் அந்த உடம்பு அந்த
கனமான சட்டை மற்றும் கோட்டையும், இதையும் விட கனமான தலைப்பாகையையும்
தாங்கியதோ.. இஞ்சினீயர் மூளை என்பதால் இதற்கும் ஏதாவது சூட்சுமம்
வைத்திருப்பாரோ என்னவோ..

2010/9/15 ஆராதி <aara...@gmail.com>:

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Innamburan Innamburan

unread,
Sep 15, 2010, 8:43:30 PM9/15/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

ஸெப்டம்பர் 


1916

மாஜி என்றால் இளப்பம்! இந்திய மாஜி வீரர்களுக்கு அரவணைப்பு போதாது. [நம் தணிக்கைத்துறை அப்படியல்ல. நான் ஓய்வு பெற்று இருபது வருடங்கள் ஆயினும், என்னிடம் பயிற்சி பெற்றவர்களும் ஓய்வு பெற்றுவிட்டாலும், 150வது ஆண்டு விழாவுக்கு அழைப்பு! ஹூம்! ‘தணிக்கைத்துறையின் தணியாவேகம்’ என்ற இழை எனக்கு பிடிவாரண்டு வந்த கதையுடன் நற்றாற்றில் நிற்கிறது. அது நிற்க!] எங்கேயோ போகிறேன்! அமெரிக்காவின் 3 மிலியன் மாஜி ராணுவ அங்கத்தினர்கள் உள்ள அமெரிக்கன் லீஜன் தொடங்கிய தினம். இருந்தும் இன்னல்படும் மாஜிகளை அங்கு கண்டிருக்கிறேன். மேல்மட்டத்துக்கு ஒரு விதி;கீழ்மட்டத்துக்கு ஒரு அநீதி.


1916


பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மியின் ஜன்ம தினம். அதிகமாகப் பேசப்படாத செவிவாய் செய்தி;நம்பலாம். தேவதாசியாக, இந்த மதுரைக்கார பெண்ணை பொட்டு கட்டப்போகும் தருணத்தில், இவளை மீட்க, சதாசிவத்தையும், கல்கியையும், ராஜாஜி அனுப்பினார். ஒருவர் அவளை மணம் புரியவேண்டும். இருவரும் விரும்பினார்கள். ராஜாஜி ‘சதாசிவம்’ என்றாம். மேலதிக விவரங்கள், மின் தழிழர்கள் அளிப்பார்கள்.


1919


கத்தை கத்தையாக அர்ஜெண்டினா தூதரலுவலகத்திலிருந்து வரும் எனக்கு, புதுக்கோட்டையில். ஜூவான் பெரான், ஈவா பெரான் படங்களுடன்! மக்கள் நலம் விரும்பிகள் என்ற பிரசாரம். அக்காலத்து மார்க்கோஸ் தம்பதிகளைப்போல (ஃபிலிப்பைன்ஸ்), ஊர்ப்பணத்தை விரயம் செய்த ஆளுனர் இவர். ஒரு முகூர்த்தம் பார்த்து, மக்கள் இதுகளை இறக்கினர்.


1963


மலேயா, சிங்கப்பூர்,, பிரிட்டீஷ் வடக்கு போர்னியா (ஸபா) ஸரவக் (1975) இணைந்து மலேஷியா உருவான தினம்.


1975


ஆஸ்ட்றிலியாவிலிருந்து விடுதலை, பப்புவா ந்யூ கினியாவுக்கு.


1977


மரியா கல்லாஸ் என்ற பிரபல கிரேக்க-அமெரிக்க பாடகி மறைந்த தினம்.


1978


ஜீ பூம்பா என்பது போல், மூரி நிமிர்ந்து ஓ ஒ என்று முழங்கி புறப்பாடு செய்த ஆரவாரத்துடன் ஈரானின் தபாஸ் நகரைத்தை துவைத்து எடுத்தது, ஒரு 7.7 ரிச்டர் ஸ்கேல் பூகம்பம். மூன்றே நிமிடங்கள். 11,000 மக்கள் உயிரிழந்தனர்.40 கிராமங்கள் காலி.


1980 


Jean Piaget என்ற உலகப்புகழ் சிறார் உளவியல் ஆய்வாளர் மறைந்த தினம். அவர் அங்குமிங்கும் அலையவில்லை. தன் குழந்தைகளை வைத்து ஆய்வு செய்தார்.


1987


புவியன்பு: ஓசோ ஓட்டை, உலகை ஓட்டாண்டியாக்கிவிடும் என்ற கவலையில், அதிலிருந்து நம்மை உஜ்ஜீவிக்க, மோந்த்ரரியால் (Montreal) பிரகடனம் செய்யப்பட்ட தினம்.


1992


கறுப்பு புதன்கிழமை என்று ஆங்கில அரசு நடுநடுங்கிய தினம். ஜெர்மானிய மார்க், இக்கால இந்திய தங்கம் போல, அல்ல, பலமடங்கு ஏற, ஆங்கில பவுண்டு அதலபாதாளம் சென்றது: உபயம்: செல்வ சூதாட்டக்காரர்கள்.


“பயந்தாங்கொள்ளிகளுக்கு ஆயிரம் சாவு; வீரனுக்கு ஒன்றே ஒன்று”

 - வில்லியம் ஷேக்ஸ்பியர்


இன்னம்பூரான்


பி.கு. திரு. ஆராதி கேட்பது நியாயமே. அவசர மொழிப்பெயர்ப்பு. இது பரவாயில்லை: ‘ செலவில்லாமல் பெறலாம் நற்பண்பு. அது இலவசமாக பெற்றத்தரக்கூடியவை எல்லாமே”.


2010/9/15 Dhivakar <venkdh...@gmail.com>:


Dhivakar

unread,
Sep 16, 2010, 12:57:08 AM9/16/10
to mint...@googlegroups.com
பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மியின் ஜன்ம தினம். அதிகமாகப் பேசப்படாத
செவிவாய் செய்தி;நம்பலாம். தேவதாசியாக, இந்த மதுரைக்கார பெண்ணை பொட்டு
கட்டப்போகும் தருணத்தில், இவளை மீட்க, சதாசிவத்தையும், கல்கியையும்,
ராஜாஜி அனுப்பினார். ஒருவர் அவளை மணம் புரியவேண்டும். இருவரும்
விரும்பினார்கள். ராஜாஜி ‘சதாசிவம்’ என்றாம். மேலதிக விவரங்கள், மின்
தழிழர்கள் அளிப்பார்கள்.

Sorry for inturreption!!

There was no proof in this story, as I have read several articles on MS.

Only point Rajaji's interruption necessitated in MS life, asking her
to end the cinema career.

D

2010/9/16 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

karuannam annam

unread,
Sep 16, 2010, 10:57:14 AM9/16/10
to mint...@googlegroups.com

வணக்கம்.
அவருடைய சூட்சமம் 'TO DO LIST' என்று ஒரு கட்டுரையில் படித்தேன். அவர் எதனையும் தலையில் சுமப்பதில்லையாம். ஒரு தாளில் குறித்து அவற்றை PRIORTISE செய்துகொண்டு அதன்படி நடப்பாராம். இதுவே அவரது வெற்றியின் காரணம் எனக்குறித்துள்ளார்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
2010/9/15 Dhivakar <venkdh...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages