பண்ணாடி என்றால் என்ன பொருள் என இன்னம்பூரான் கேட்டிருந்தார். பழமைபேசி, ஈரோடு கதிர், செல்வன், துரை. சுந்தரம், பொன். வெங்கடேசன், .... இன்னும் பல கொங்குநாட்டினர் விளக்கலாம். பலகாலமாக மானேஜர் என்னும் பொருளில் பயன்படுவது பண்ணாடி. அதனை விளக்கும் முன்னர் 17 ஆண்டுகள் முன்பு எழுதிய மடல் கண்டேன். புழைக்கடை > புடக்களி/பொடக்காளி என மெட்டாதீஸிஸ் ஆகும் எனப் பார்த்தோம். பழைய மடலில் சில கொங்குச்சொற்கள். பேரா. பெருமாள்முருகன் தன் ப்ளாகில் பல சொற்களை எழுதியிருந்தார். திருச்செங்கோடு நாவல் பற்றி எழுந்த பிரச்சினையில் தன் பிளாகை மூடிவிட்டார்.கொங்கில் இட்டேரி என்போம். சிவகங்கைச்சீமையில் இட்டரை என்றார் டாக்டர் ஜேபி.ஜேய்பி மடலுக்கு என் மறுமொழி:
From Sat Oct 2 07:08:42 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
ஒரு அழகான கொங்குப்பழமொழி பண்ணாடி என்ற சொல்லின் பொருள்காட்டும்:ஆள் ஆளும் பண்ணாடி; எருது ஆர் மேய்க்கிறது?
--Delivered-To: listsaver-o...@egroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பண்ணாடி paṇṇāṭi, n. < பண்ணையாளி. The owner of a farm, landed proprietor; பண்ணைக்கு உரியவன்.
On Sunday, September 20, 2015 at 7:15:31 PM UTC-7, N. Ganesan wrote:ஒரு அழகான கொங்குப்பழமொழி பண்ணாடி என்ற சொல்லின் பொருள்காட்டும்:ஆள் ஆளும் பண்ணாடி; எருது ஆர் மேய்க்கிறது?எல்லோருமே அதிகாரம் செய்ய ஆசைப்பட்டால், யார்தான் மாடு மேய்ப்பது?நான் கொண்ட பொருள் சரியா திரு. கணேசன்?
..... தேமொழி
On Sunday, September 20, 2015 at 6:04:18 PM UTC-7, N. Ganesan wrote:
பண்ணாடி என்றால் என்ன பொருள் என இன்னம்பூரான் கேட்டிருந்தார். பழமைபேசி, ஈரோடு கதிர், செல்வன், துரை. சுந்தரம், பொன். வெங்கடேசன், .... இன்னும் பல கொங்குநாட்டினர் விளக்கலாம். பலகாலமாக மானேஜர் என்னும் பொருளில் பயன்படுவது பண்ணாடி. அதனை விளக்கும் முன்னர் 17 ஆண்டுகள் முன்பு எழுதிய மடல் கண்டேன். புழைக்கடை > புடக்களி/பொடக்காளி என மெட்டாதீஸிஸ் ஆகும் எனப் பார்த்தோம். பழைய மடலில் சில கொங்குச்சொற்கள். பேரா. பெருமாள்முருகன் தன் ப்ளாகில் பல சொற்களை எழுதியிருந்தார். திருச்செங்கோடு நாவல் பற்றி எழுந்த பிரச்சினையில் தன் பிளாகை மூடிவிட்டார்.கொங்கில் இட்டேரி என்போம். சிவகங்கைச்சீமையில் இட்டரை என்றார் டாக்டர் ஜேபி.ஜேய்பி மடலுக்கு என் மறுமொழி:
From Sat Oct 2 07:08:42 1999
Delivered-To: listsaver-o...@egroups.com
On Sunday, September 20, 2015 at 7:58:37 PM UTC-7, s.bala subramani B+ve wrote:பண்ணாடி என்பது உழு தொழிலில் ஈடுபடும் தேவந்திர குல இனத்தில் ஒரு பிரிவுகொங்கு நாட்டில் பல பிரிவுகளை கொண்டு வாழ்கிறார்கள் ,பேரூர் கோவில் இவர்களின் தாக்கங்களை கொண்டது
பண்ணாடி என்பது கொங்குநாட்டுச் சொல். ஜாதிச் சொல் அல்ல.முன்பு பேரூரில் நாற்றுநடும் திருவிழா நடக்கும். அப்போது இந்திரனும், அவன் மனைவியும்பள்ளன் பள்ளியாய் வந்து நாற்று நடுவதாய் பேரூர்ப் புராணத்தில் விரிவாகக்கச்சியப்பமுனிவர் பாடியுள்ளார். பள்ளு இலக்கியங்கள் தமிழில் பல.நா. கணேசன்
கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி.
| பழனித் தலத்தில் காணியாளனாகிய |
கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி. |
| ” | ||
—– பழனிப் பட்டயம், | ||
பண்ணுதல் என்றால் பயிர் தொழில் செய்பவர்கள் என்ற பொருள்அவர்களின் சான்றிதழில் பயிர் தொழில் செய்பவர்கள் என்றே சொல்கிறார்கள்ஒத்த பண்பாடை கொண்டவர்கள் இன்று ஜாதிய கட்டமைப்பில் வந்து உள்ளார்கள்கடல் கடந்த பயிர் தொழில் செய்பவர்கள் என்ற என் ஆய்வில் பல பண்ணாடி மக்கள் இன்று பாலக்காடு கணவாய் பொருந்தல் நாகரிக பகுதிகளில் பரவி உள்ளார்கள்கோவை வேளாண்மை கல்லூரி நிலம் அவர்களிடம் இருந்து வாங்கப் பட்டது தான்
--
என்ன செய்வது இன்று ஜாதி சொல்லாக மாறி விட்டது குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் சற்று அதிகமாக
--
--
பண்ணைத்தொழிலான வேளாண்மைச் (விவசாயம்) சூழலில் தலைமையாளர்(உரிமையாளர்) பண்ணாடி என அழைக்கப்பட்டுள்ளனர். வேளாளர் குடும்பங்களில் பெண்கள் தம் கணவரைப் பண்ணாடி என்றழைக்கும் மரபு நுழைந்திருக்கலாம். கொங்குப்பகுதியில் வேளாண் மக்களோடு பழகிய பிற மக்களும் ஊர் வழக்கைஒட்டி “பண்ணாடி” என்று கணவரை அழைப்பதைப்பார்க்கிறோம். சற்றே நகர்ப்பண்புகளோடு தொடர்புடையவர்கள் இவ்வாறு “பண்ணாடி” என அழைப்பதில்லை. நாட்டாரியல் சார்ந்தது இம்மரபு என நினைக்கிறேன்.“வீட்டுக்காரர்” என்னும் வழக்கினை ஒப்பிடுக. வீட்டுக்கு உரிமையாளரையும்,கணவரையும் ஒருசேரக் குறிக்கும் சொல் இது. கோவைப்பகுதியில் தெலுங்குபேசும் மக்கள் கூடத் தம் கணவன்மாரை “இண்ட்டிவாரு” என்றோ “இண்ட்டி ஆயன”என்றோ அழைப்பதை நான் கேட்டிருக்கிறேன். ”இல்லான்” என்பதில் மட்டும்இந்தக் கருதுக்கு இடமில்லை. பண் என்பதிலிருந்து பண்படுத்துதல், பிறகுநிலத்தைப்பண்படுத்தும் வேளாண்மைக்கும் இந்தப் “பண்” என்னும் வேர்ச்சொல்அடிப்படையாய் அமைந்து வேளாண் தலைவன் பண்ணாடி எனப் பெயர்பெற்றிக்கவேண்டும்.சுந்தரம்.
பண்ணாடி எப்போதுமே எல்லாருக்கும் பொதுவான சொல். மேனேஜர் என்ற பொருள்.இதனை ஒரு ஜாதிக்கு மட்டும் என கொங்குநாட்டில் யாரும் சொல்வதில்லை.
மண்ணை ஆள்பவர் மண்ணாடி என்னும் குறிப்பைப் பார்த்தேன். கொங்கு நாட்டுக்கல்வெட்டுகளில் மன்றாடி என்னும் சொல் பயில்கிறது. இச்சொல்லேமக்கள் வழக்கில் மண்ணாடி என மருவியிருக்கலாம். மன்றாட்டு என்னும் கல்வெட்டுச் சொல்லிலிருந்து மன்றாடி பெறப்படுகிறது. அரசனிடம் ஒரு தொகையைப் பொன்னாக வைத்து, அரசனிடம் மன்றாட்டு என்னும் உரிமையைஒருவர் பெறுவார். அதன்படி, அரசன் அவருக்கு நிலம் அளிப்பார். நிலம் பெறுபவர் மன்றாடி. நிலத்தை வேளாண்மை செய்து வரி செலுத்தினாலும் நிலத்தின் முழு உரிமையை மன்றாடி நுகர்வார். பெரிய நிலப்பரப்புகளை இவ்வாறு மன்றாடிகள்பெற்று உழுகுடிகளை வைத்து வேளாண்மை செய்தும், ஆடு,மாடு போன்ற கன்று காலிகளை இடையர் மக்களைக் கொண்டு வளர்த்தும் செல்வாக்காக இருப்பார்.இம்மன்றாடிகள் கோவில் நிருவாகத்திலும் பதவி வகிப்பர். கோவை மாவட்டக்கல்வெட்டுகளில் மட்டுமே இவ்வகையான மன்றாடிகள் பற்றியகுறிப்புகள் உள்ளன எனக்கல்வெட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தின்மற்ற பகுதிகளில் மன்று என்பது அவை(சபை)யைக்குறிக்கும் சொல்லாகும்.சுந்தரம்.
பண்ணாடி என்றால் என்ன பொருள் என இன்னம்பூரான் கேட்டிருந்தார். பழமைபேசி, ஈரோடு கதிர், செல்வன், துரை. சுந்தரம், பொன். வெங்கடேசன், .... இன்னும் பல கொங்குநாட்டினர் விளக்கலாம். பலகாலமாக மானேஜர் என்னும் பொருளில் பயன்படுவது பண்ணாடி. அதனை விளக்கும் முன்னர் 17 ஆண்டுகள் முன்பு எழுதிய மடல் கண்டேன். புழைக்கடை > புடக்களி/பொடக்காளி என மெட்டாதீஸிஸ் ஆகும் எனப் பார்த்தோம். பழைய மடலில் சில கொங்குச்சொற்கள். பேரா. பெருமாள்முருகன் தன் ப்ளாகில் பல சொற்களை எழுதியிருந்தார். திருச்செங்கோடு நாவல் பற்றி எழுந்த பிரச்சினையில் தன் பிளாகை மூடிவிட்டார்.கொங்கில் இட்டேரி என்போம். சிவகங்கைச்சீமையில் இட்டரை என்றார் டாக்டர் ஜேபி.ஜேய்பி மடலுக்கு என் மறுமொழி:
--சிவகங்கைச் சீமைக் "கோக்குமாக்கு" என்பது கொங்குநாட்டில் "கோப்புமாப்பு" எனச்
சொல்லப்படுகிறது. இவையெல்லாம் "குறைப்பு மறைப்பு" என்பதன் மரூஉவோ?
"இட்டரை" என்பதைக் கொங்குமண்ணில் "இட்டேரி" என்பர். அது "இரட்டைவேலி"
என்று பேராசிரியர்களிடம் கேட்டுள்ளேன். "அரைக்கீரை"யை "ரக்கிரி" என்பர்.
முக்கியமாக, மாடு காளைக்கன்றை ஈன்றால் "சேங்கண்ணு" போட்டிருக்கு என்பர்!
இது, அழிந்த இலக்கிய வழக்கு. சேதா = காளை என்றெல்லாம் சங்க இலக்கியத்தில் வரும்.
செம்பருதி, வஞசிக்கொடி, வஞ்சியம்மா போன்றனவெல்லாம் ஒரு தலைமுறைக்குமுன் பரவலாக
வழங்கிய பெயர். அண்ணியை "நங்கை", தம்பி மனைவி =கொழுந்தி(யா).
பாவாயி என்பது திருச்செங்கோட்டில் பொதுப்பெயர்; இது பாவை என்பதன் விளிச்சொல்.
இகர விகுதி பல கல்வெட்டுகளில் பெயர்ச்சொல்லுக்குத் தமிழகமெங்கும் காணலாம்.
பச்சாயி/பச்சையம்மாள் (மணிவண்ணன் சொன்னது) பேரூர்ப் பகுதியில் பொதுப்பெயர்.
பேரூர் அம்மன்: பச்சையம்மன்/மரகதவல்லி. (பார்வதி கருப்புதானே; 'ச்யாமளா)
சாமி என்பது கொங்குநாட்டில் தான் அதிகமாக வழங்கும் பெயர் விகுதி. பழனிசாமி, ராமசாமி,
மயில்சாமி, குயில்சாமி, ஆறுச்சாமி குழந்தைசாமி, பெரியசாமி, சின்னச்சாமி, ....என்று.
இது முதல் முதலாக, சாமி என்று, கொங்குமண்ணில் விளைந்த சமண இலக்கியத்தில்
காணலாம். சீவகசிந்தாமணியில் திருத்தக்க தேவர் "சீவகசாமி" என்று சொல்வார்.
தமிழின் பண்டைய கல்வெட்டுகள் பல கொங்குநாட்டில் சமண முனிவருக்கு
தானம் கொடுத்ததே. (புகழியூர், அறச்சலூர், ...) சங்க இலக்கியத்தில் வரும்
பல தமிழ்ப் பெயர்கள் கொங்குநாட்டில் குலப்பெயர்களாக இன்றும் விளங்குவதைப்
பின்னர் விளக்குவேன்.
நானும், பூபதியும் இணைந்தால் ஒரு வட்டாரச் சொல்லகரதியே தொகுத்துவிடலாம் :-)
வணக்கத்துடன்,
நா. கணேசன்
Dr. Jayabarathi wrote:
இதன் தொடர்பாக நாட்டு வழக்கு ஒன்று:
1. "இந்த கோக்குமாக்கு வேலய நெடுகவே செய்துக்கினு
வந்திருக்காங்கிரேன்!"
2. "நெடுக போய்க்கிட்டே இருங்க. அங்ஙின ஒரு சொமதாங்கிகிட்ட
வடக்கால ஒரு இட்டரை பிரியும். அப்பிடியே நெடுகப் போனா நம்ம
பெரிசுவோட பண்ணவீடு வரும்".
1.நெடுக = நீண்டகாலமாக; தொடர்ந்து
2.நெடுக = நேராக
செட்டிநாடு, சிவகங்கை வட்டாரவழக்கு.
>>>>
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தென்னை மரத்தின்; மட்டைகளின் இருவிளிம்புகளையும இணைத்து மரத்தோடு பலமாக ஒட்டிக் கொண்டு இருக்கும். சவ்வு போன்ற பாகம் சல்லடையாகவும், வலைபோன்று பின்னி பிணைந்திருக்கும். இதனை பன்னாடை என்று அழைப்பார்கள்.
இது திட்டு வார்த்தையாக பயன்படுத்தப்படுகிறது. நல்லதை விட்டு அல்லதை வைத்துக்கொள்வதால்.
பண்ணாடி = முதலாளி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
பண்ணாடி = முதலாளி
in charge - a person who is in charge (of something)boss - boss aroundகங்காணி(but not a leader or தலைவன்/தலைவி)
N. Ganesan
பண்ணாடி மண்ணாடி என்ற சொல்லை வைத்து மிகஅழகாக விரிவான பல தகவலக்ளை இந்த இழையில் காண்கின்றேன்.டாக்டர். கணேசனோ அல்லது ஆர்வமுள்ள யாரேனும் இந்த தலைப்பை வைத்து ஒரு முழு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். இவ்வாண்டின் இறுது மின்தமிழ் மேடை சஞ்சிகை விவசாயம் பற்றி கொண்டு வரலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். அதில் வெளியிட இத்தகவல் உதவும்.சுபா
On Monday, September 21, 2015 at 9:08:39 AM UTC-7, Suba.T. wrote:பண்ணாடி மண்ணாடி என்ற சொல்லை வைத்து மிகஅழகாக விரிவான பல தகவலக்ளை இந்த இழையில் காண்கின்றேன்.டாக்டர். கணேசனோ அல்லது ஆர்வமுள்ள யாரேனும் இந்த தலைப்பை வைத்து ஒரு முழு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். இவ்வாண்டின் இறுது மின்தமிழ் மேடை சஞ்சிகை விவசாயம் பற்றி கொண்டு வரலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். அதில் வெளியிட இத்தகவல் உதவும்.சுபாபண்ணாடி - கணவன் என்ற பொருளில் ஆளப்படும் கவிதை ஒன்று.கொங்குநாட்டில் விதவை ஆகும்போது வெள்ளைப் புடைவை அணிவது பழைய வழக்கம்.இப்பொழுது மாறிவருகிறது.
On Monday, September 21, 2015 at 9:08:39 AM UTC-7, Suba.T. wrote:பண்ணாடி மண்ணாடி என்ற சொல்லை வைத்து மிகஅழகாக விரிவான பல தகவலக்ளை இந்த இழையில் காண்கின்றேன்.டாக்டர். கணேசனோ அல்லது ஆர்வமுள்ள யாரேனும் இந்த தலைப்பை வைத்து ஒரு முழு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். இவ்வாண்டின் இறுது மின்தமிழ் மேடை சஞ்சிகை விவசாயம் பற்றி கொண்டு வரலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். அதில் வெளியிட இத்தகவல் உதவும்.சுபாபண்ணாடி - கணவன் என்ற பொருளில் ஆளப்படும் கவிதை ஒன்று.கொங்குநாட்டில் விதவை ஆகும்போது வெள்ளைப் புடைவை அணிவது பழைய வழக்கம்.இப்பொழுது மாறிவருகிறது.இந்தப் புதுக் கவிதை பற்றி ஒரு செய்தி சொல்லணும்.
புறநானூறு போன்ற பாடல்களில் போருக்குப் புறப்படும், இறக்கும் வீரர்களோடுவெள்ளை நிறம் தொடர்புபடுத்தப்பட்டு பாடல் முழுக்க ஒலிக்கும்.வெண்மையான வாகை மரத்தின் மலர் பார்த்திருப்பீர்கள். சிவப்பான பட்டுஉடுத்துக் கலியாணம் நடக்கும் வேளையிலும், ஈட்டி போன்ற கருமரத்தால்செய்யும் கொற்றவைப் பாவைக்கு வெள்ளை நூலும், வெள்ளையான வாகைமலரும்சார்த்தி வழிபாடும், அறுகு மணமும் நடப்பதை சங்க இலக்கிய திருமணப்பாடல்கள் காட்டுகின்றன. அப்போது, கொற்றவையின் கணவன் வருணன்.வருணன் என்னும் மகரவிடங்கருக்கான மந்திரமே திருமணங்களில்இன்றும் ஓதப்படுகிறது. அப்ப்போதெல்லாம் ஆகோள் பூசல்கள்அதிகம், குறுநில மன்னர்கள், ஏழு வேளிர்கள் இடையிலே தீராத பூசல்கள்,போர்கள். போருக்கான நிறம் வெண்மை. போரால் பட்ட கணவன் ஞாபகார்த்தமாகவெள்ளைச்சீலை வாழ்க்கை முழுதும் கணவனை இழந்தோர் அணிந்தார்கள்.
On Wednesday, September 30, 2015 at 8:49:25 PM UTC-7, N. Ganesan wrote:
On Monday, September 21, 2015 at 9:08:39 AM UTC-7, Suba.T. wrote:பண்ணாடி மண்ணாடி என்ற சொல்லை வைத்து மிகஅழகாக விரிவான பல தகவலக்ளை இந்த இழையில் காண்கின்றேன்.டாக்டர். கணேசனோ அல்லது ஆர்வமுள்ள யாரேனும் இந்த தலைப்பை வைத்து ஒரு முழு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். இவ்வாண்டின் இறுது மின்தமிழ் மேடை சஞ்சிகை விவசாயம் பற்றி கொண்டு வரலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். அதில் வெளியிட இத்தகவல் உதவும்.சுபாபண்ணாடி - கணவன் என்ற பொருளில் ஆளப்படும் கவிதை ஒன்று.கொங்குநாட்டில் விதவை ஆகும்போது வெள்ளைப் புடைவை அணிவது பழைய வழக்கம்.இப்பொழுது மாறிவருகிறது.இந்தப் புதுக் கவிதை பற்றி ஒரு செய்தி சொல்லணும்.இது மிக நல்ல கவிதை. நன்றி திரு. கணேசன்புறநானூறு போன்ற பாடல்களில் போருக்குப் புறப்படும், இறக்கும் வீரர்களோடுவெள்ளை நிறம் தொடர்புபடுத்தப்பட்டு பாடல் முழுக்க ஒலிக்கும்.வெண்மையான வாகை மரத்தின் மலர் பார்த்திருப்பீர்கள். சிவப்பான பட்டுஉடுத்துக் கலியாணம் நடக்கும் வேளையிலும், ஈட்டி போன்ற கருமரத்தால்செய்யும் கொற்றவைப் பாவைக்கு வெள்ளை நூலும், வெள்ளையான வாகைமலரும்சார்த்தி வழிபாடும், அறுகு மணமும் நடப்பதை சங்க இலக்கிய திருமணப்பாடல்கள் காட்டுகின்றன. அப்போது, கொற்றவையின் கணவன் வருணன்.வருணன் என்னும் மகரவிடங்கருக்கான மந்திரமே திருமணங்களில்இன்றும் ஓதப்படுகிறது. அப்ப்போதெல்லாம் ஆகோள் பூசல்கள்அதிகம், குறுநில மன்னர்கள், ஏழு வேளிர்கள் இடையிலே தீராத பூசல்கள்,போர்கள். போருக்கான நிறம் வெண்மை. போரால் பட்ட கணவன் ஞாபகார்த்தமாகவெள்ளைச்சீலை வாழ்க்கை முழுதும் கணவனை இழந்தோர் அணிந்தார்கள்.இது தமிழ்ப் பண்பாடு என்றா சொல்கிறீர்கள்? இது இந்தியா முழுவதுமே உள்ளது என நான் நினைத்தேன்.
--